புதியது
நிகழ்வுகள், பொது

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது... மேலும் பல செய்திகள்.

மேலும் »

அரசியல், பயங்கரவாதம், பிறமதங்கள்

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12

மத்திய அரசின் உளவு பிரிவினர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை, இப்படி ஒரு தாக்குதல் வரும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, என உளவு பிரிவு கூறுவது இந்தியாவில் உள்ள உளவு அமைப்புகள் தூங்கி வழிகிறது என்பதற்கு நல்ல உதாரணமாகும். . . 7.05க்கு மக்கள் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குமிடமான தாதரின் கபுதர்கானாவிலுள்ள ஹனுமான் மந்திரிலும் ஒரு குண்டு வெடித்தது.  இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாத அமைப்பை கண்டு பிடிப்பதற்கு பதிலாக உள்துறை அமைச்சர் உதிர்த்த முத்துக்கள் வேடிக்கையானது...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம்.. ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது... நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி அளவும் குறைந்து கொண்டு இருக்கிறது.. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை அணுச்சக்தியால் மட்டுமே தீர்க்க முடியும்...

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன

மேலும் »

அரசியல், நிகழ்வுகள்

சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்... ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு? இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு?... அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்... நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது?...

மேலும் »

ஆன்மிகம், வைணவம்

வெண்ணைப் பானை

வெண்ணைப் பானை

எந்தப் பரமாத்மா இந்த உலகம் முழுவதையும் கட்டி வைத்திருக்கிறாரோ, அவரைக் கட்டி வைத்து விடலாம் என்று யசோதாம்மா நினைத்து விட்டார்கள். அவருடைய ஒப்புதல்லில்லாமல் அவரை யாராவது கட்ட முடியுமா? யார் தன்னுடைய மனதில் 'த்வதீய' பாவனையை விட்டு விட்டார்களோ, அவர்களுடைய கட்டுக்குள் மட்டும் தான் வருவார்; மற்றவர்களுடைய கட்டுக்குள் வர மாட்டார். த்வதீய என்பதன் அர்த்தம் 'எனது' 'உனது' என்கிற பாவனை. அதை விட்டாலொழிய அவர் கட்டுக்குள் வர மாட்டார்.

மேலும் »

வரலாறு

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

"பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்."

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், வழிகாட்டிகள்

[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

தம்மிடம் பயிற்சி பெற்ற கண்மணிகள் உலகுக்கு என்ன சமூக சேவை செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே கேட்டு மகிழ்வது சுவாமிக்கு பிடிக்கும். இதனால் சமூக சேவை செய்யாதவர்கள் கூட செய்ய ஆரம்பித்தனர். ஏதோ கூடினோம்; கும்மாளம் போட்டோம்;கலைந்தோம் என்று இல்லாமல் சேவை புரியும் பயிற்சி பெற்ற பட்டாளம் இந்த முன்னாள் மாணவர் சங்க பட்டாளம் ஆகும். வெளி உலகிலேயே உள்ள முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் திருப்பராய்த்துறை குருகுல பயிற்சி...

மேலும் »

அறிவிப்புகள்

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை (17 ஜனவரி, 2011) காலமானார். மதுரை புதூர் கற்பக நகரில் உள்ள தனது இளையமகள் பாலசுந்தரி வீட்டில் அவர் வசித்து வந்தார். சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், முதுமையின் காரணமாக காலமானார். எம்.எஸ். பொன்னுத்தாயின் கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்த பொன்னுத்தாய், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர்...

மேலும் »

இலக்கியம்

குழவி மருங்கினும் கிழவதாகும் -2

குழவி மருங்கினும் கிழவதாகும் -2

செங்கீரைப் பருவம்... தவழ்ந்த குழந்தை எழுந்து இருகைகளையும் ஊன்றிக்கொண்டு உட்காரத் தொடங்கும். தவழும்போதும் இருமுழங்கால்களையும் இருகரங்களையும் ஊன்றித் தலையை இருமருங்கும் ஆட்டும். வாயில் எச்சில் ஒழுக இனிய ஒலியெழுப்பத் தொடங்கும். தன்னுடைய தாய் எப்படியெல்லாம் தலையசைத்துப் பேசுகின்றாளோ அதைப்போல அதுவும் தலையை அசைத்து ஏதோ ஒலியை எழுப்ப முயற்சியைச் செய்யும். போலச் செய்தல் குழந்தையின் இயல்பு... இவ்வாறு தாம் பெற்ற குழந்தைகளுடன் உரையாடி மகிழ்தலையே தெய்வானுபவமாக மடைமாற்றம் செய்துகொள்ளும் வித்தகத்தினைப் பிள்ளைத்தமிழ் நூல்கள் கற்பிக்கின்றன...

மேலும் »