“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)
“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)
“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )
“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism – By M. K. Gandhi p. 205)
“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)
“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று
தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (“கீதை என் அன்னை” முன்னுரை)
“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்” (source: The Upanishads Translated for the Modern Reader By Eknath Easwaran. Nilgiri Press. 1987. pg 205)

அகமதாபாதில் ஒரு நாள்
காந்தியின் (கி)ராம தரிசனம்![[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்](http://www.tamilhindu.com/wp-content/uploads/sikhism_hinduism.jpg)
[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்![[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !](http://www.tamilhindu.com/wp-content/uploads/gandhi_and_ambedkar.jpg)
[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !
ரமணரின் கீதாசாரம் – 12
முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்
ஒரு தேசம், இரு உரைகள்
உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…
சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை
அச்சுதனின் அவதாரப் பெருமை
பிரார்த்தனைகளின் சங்கமம்
இந்துத்துவ முத்திரை
இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு
வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்
நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)
மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3
புனிதமான போர்க்களம்
ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்
சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
போகப் போகத் தெரியும் – 37
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …


“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (

அருமையான வாக்கியங்கள்….
hiduism is the very oldest religion.it is return by saints(nanikal),by hinduism “thiruvalluvar,kambar..many poets are made
இவர் ஹிந்து மதத்தை நேசித்தால் ஏன் பிரிவினைக்கு துணை போக வேண்டும்?
பிரிவினை பற்றி எனது கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை பதிவு செய்கிறன்:-
பிரிவினை என்ற பெயரில் இஸ்லாமிய வெறி கும்பல் நாடேங்கும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் கென்றனர். இந்துக்கள் தெய்வமாக பார்க்கும் பெண்களை கற்ப்பழித்தனர். பல சித்திரவதைகளை இந்துக்கள் அனுபவித்தனர். ஆனால், காந்தியோ இந்துக்களை கோயிலுக்குச் சென்று பிரத்தனை நடத்தச் சொன்னார்! ஏன் காந்தியின் அகிம்சை, இந்துக்களுக்கு மட்டும் தானா? அல்லது, இஸ்லாமியரை எதிர்க்கும் திராணி இந்துக்களிடம் இல்லை, என்று காந்தி நினைத்துவிட்டாரா? ஒருவேளை, காந்தியின் மனைவியை, இஸ்லாமியர்கள் வெட்ட வந்தாலும், அவர் அகிம்சை பேசி, கோகவிலுக்கு சென்று பிரத்தனை தான் நடத்துவாரா? “நம் உரிமையை மீட்டேடுக்க, அகிம்சை உதவினால், அதை ஏற்று நடக்கலாம். மாறாக,உரிமை அகிம்சையால் பரிபோகிறது” என்றால் அந்த அகிம்சை எதற்கு? அதனால், என்ன பயன்? பிரிவினையின் போது, இந்து மக்களை காப்பாற்ற அன்றைய, இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்-ம் எடுத்த முயர்ச்சியை இந்த தேசத்தில் வாழும் உண்மையான தேசபக்தர்கள் மறந்துவிடமாட்டார்கள்.
ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.