நகரம் நானூறு – 1

நகரம் நானூறு

ஹரி கிருஷ்ணன்


நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்.

பெய்த மழையினிலும் பேய்க்காற்றின் வீச்சினிலும்
தொய்ந்து மரக்கிளையில் தொங்குகையில் – நைந்திருக்கும்
காற்றாடி நெஞ்சில் கனக்கிறதோ வானெங்கும்
நேற்றாடிச் சென்ற நினைவு.

தொங்கும் மரக்கிளையில் தொங்குதே காற்றாடி

காதலுக்குப் பஞ்சமுண்டோ கான்க்ரீட் வனங்களிலும்?
ஆதரவா அன்பா அடைக்கலமா – போதெல்லாம்
கொஞ்சும் புறவினம்தான் கூறுவது கேட்கலையோ,
எஞ்சுவது அன்பொன்றே என்று.

போதெல்லம் கொஞ்சி திரி புறா போல்

Tags: , , ,

 

ஒரு மறுமொழி நகரம் நானூறு – 1

  1. AMARNATH MALLI CHANDRASEKARAN on August 1, 2010 at 8:06 am

    நகரம் நானூறு ஒரு புதிய சிந்தனை. அருமையான கவிதைகள். ஆறு பகுதிகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு இப்போது தான் கிடைத்தது. ஆசிரியர் கம்பராமாயணம் பற்றி தான் கட்டுரை எழுதுவர் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு பழைய பகுதிகளைப் புரட்டும் வாய்ப்பு இன்று கிடைத்து படித்த போது திகைத்தேன். ஆண்டவன் தங்களுக்கு வாரி வழங்கிய ஆற்றலை நன்றாகப் பயன்படுத்தி தமிழுக்கும் இறைப்பணிக்கும் பயன்படுத்தி நினைவில் நிற்கும் படைப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*