நகரம் நானூறு – 4

நகரம் நானூறு

ஹரி கிருஷ்ணன்

வேகத் தடை

வேகத் தடைசாலைக்குக் கூன்விழுந்தால் சர்ரென்று போவாயோ?
வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப்
போகத்தடை ஏனோ? புதையா(து) எரியாதென்றும்
ஏகத்தான் இத்தடையாம் இங்கு.

Tags: , ,

 

2 மறுமொழிகள் நகரம் நானூறு – 4

 1. mano on June 17, 2008 at 7:07 pm

  நகரக் காட்சிகள் கவிதைகள் பிரமாதம். முன்பு (தென்றல் புகழ்) வாஞ்சி சார் மேற்பார்வையில் வெண்பா வடிக்கலாம் வா என்ற ஈற்றடி கொடுத்து எழுதும் சவாலுக்கு சமர்ப்பித்த என்னுடைய சிறு கவிதையை இங்கே அனுப்புகிறேன்….

  (சிறைச்)சாலையர்

  தாரின் தகிப்பிற்கு காலுறை போட்டவர்
  காரில் நனையா தலைசணற் சாக்கினுள்
  சேற்றில் கிடக்கை சணற்பாயே மெத்தை
  இரவின் கொசுக்கோ வலைச்சிறைச் சாலை
  செவிக்கு விருந்திடும் வா’கன’ கீதம்
  நவில்தற் கியலாத இன்பத்தி லென்றும்
  கவின்மிகு சென்னையிற்ச் சாலை இடுவார்
  புவியினில் ஆரிவர் போல்?

 2. ஹரி கிருஷ்ணன் on June 20, 2008 at 11:44 pm

  திரு மனோ, மன்ற மையத்தின் வெண்பா வடிக்கலாம் வா திரியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நம் பாதைகள் ஒன்றையொன்று தொட்டதுண்டோ?

  நன்றாக வெண்பா எழுதுகிறீர்கள். உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*