கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.
மனம் உயர்ந்திட வாழ்வுயரும் – தனி
மனிதன் உயர்ந்திடக் குலம் உயரும்
இனம் உயர்ந்திட நாடுயரும் – இனி
என்றும் உயர்வென்று கும்மியடி.
வீரனவன் வாஞ்சி நாதனுடன் – வெற்றி
வில்வித்தை தேர்ந்தவன் துரோணகுரு
தீர விவேகானந்தன் உதித்த மதம் – இதை
தினந்தினம் போற்றியே கும்மியடி.
பார்புகழ்நோபல் பரிசுவென்ற – ராமன்,
பாடரிய மேன்மைச் சந்திரசேகர்
ஓர்தனி மேதை இராமானுஜம் – இவர்க்(கு)
உறவினர் நாமென்று கும்மியடி.
முத்துராம லிங்கத் தேவருடன் – அய்யா
வைகுண்டர், ரெட்டியா பட்டியாரும்
தத்துவச் செம்மல்கள் பற்பலரும் – வந்த
தனிமதம் இதுவெனக் இம்மியடி.
இசைக்குயில் எம்எஸ்சும் ரவிவர்மாவும் – கொடி
ஏந்தற் குயிர்தந்த குமரனுமே
வசையறு வ.உ.சிதம்பரனார் – இந்து
மாமக்கள் என்று நீ கும்மியடி.
தொழுநோய் கொண்டான் தொழத்தக்கவன் – தூயோன்
சுப்பிர மணிய சிவாவுடனே
வழுவிலா பரலி.சு. நெல்லையப்பர் – வந்த
மகத்துவம் பாடியே கும்மியடி.
பட்டி தொட்டிகள் மடாலயங்கள் – சுற்றிப்
பழந்தமிழ்க் காவியம் பிழைக்கவைத்தே
எட்டாப் புகழ்கொண்ட தமிழ்த்தாத்தா – அவன்
இந்துதான் என்றுநீ கும்மியடி.
ஆயிரமாண்டுகட் கோர்முறையே – வரும்
அற்புதனாம், பொங்கும் அனல்குழம்பைத்
தோய்த்துக் கவிசெய்த பாரதியும் – எங்கள்
தொல் மதத்தோனென்று கும்மியடி.
எவர்க்கும் இளைத்தவர் நாமில்லையே – இங்கு
எவரையும் இழிப்பது நாமில்லையே
தவறாத மானுட நேயத்தினால் – இந்து
தரணிவெல்வான் எனக் கும்மியடி.

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
ஹிந்து எழுச்சிப் பாடல்
சொற்றமிழ் சூடுவார்
திருமுறை இசையில் அழகியல் மாற்றம்
அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா
பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1
இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் சங்கமம்
மகான்கள் வாழ்வில் – 7: ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி
தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்
மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)
மதியும் காந்திமதியும்
வலம்புரி நாயகன்
தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி
தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா
ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!
வேட்டையாடி விளையாடும் அரங்கன்
முருகன் அலங்காரப் பாடல்:
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்
மகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்
தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதி
மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
அகரமும் ஓங்காரமும்
முருகா, முருகா பாடல் – வீடியோ












