சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

‘தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு’ என்கிற பெயரில் 2008 ஆகஸ்ட் 14-15-16 17 ஆகிய நாட்களில், சென்னையில் மயிலை கத்தோலிக்க பாஸ்டோரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ‘மாநாடு’ உண்மையில் ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரக் கூட்டம் ஆகும். தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் மொழி – பண்பாடு, அதன் தொன்மை ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றினை பயன்படுத்தி எவ்வாறு தமிழரின் சமய வாழ்க்கையை கிறிஸ்தவப்படுத்தலாம்; எப்படி தமிழரின் உயர்ந்த ஆன்மிக இலக்கியங்களை கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என்பதே இந்த மாநாட்டின் உண்மையான உள்நோக்கமாக விளங்கியது எனலாம். எனவே இந்த மாநாடு உண்மையில் தமிழரின் மீது ரோம-கத்தோலிக்கத்தாலும் தமிழ்நாடு-மலேசியா-சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சில கிறிஸ்தவ மத மேன்மையாளர்களாலும் நடத்தப்படும் ஒரு ஆக்கிரமிப்பு முயற்சியே ஆகும்.

தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழே உலகின் முதல் மொழி’ ‘உலகின் முதல் மனிதன் தமிழனே’ எனக் கூறிவிட்டால் உள்ளம் புளகாங்கிதம் அடைந்துவிடுகிறது. உடனே அவ்வாறு கூறுபவர்களின் ஏனைய கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதனை எதிர்க்காமல் மௌனிக்கவோ தயாராகிவிடுகிறார்கள். உதாரணமாக, அங்கு வந்திருந்த ஒரு சில -கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்த- இந்துக்களான தமிழ் அறிஞர்களிடம் தனிப்பட்ட உரையாடலில் தெய்வநாயகத்தின் மையமான பிரச்சார கருத்தான ‘சைவமும் வைணவமும் புனித தாமஸ் கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் offshoot’ என தெளிவாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்; தாங்கள் இதனை ஏற்கவே இல்லை என அடித்துக் கூறினர். ஆனால் இவர்கள் எவருக்கும் தமிழரின் ஆன்மிக பண்பாட்டின் மீது நடத்தப்படும் இந்த வெளிப்படையான ஆக்கிரமிப்பை மேடையில் கண்டிக்க அல்லது மறுக்கத் தோன்றவில்லை. அவையடக்கம் காரணமாகவும் மாநாடு நடத்துபவரின் மனத்தை நோகடிக்க அவர்கள் விரும்பாத காரணத்தினாலும் அவர்கள் அதனை செய்யவில்லை போலும்! இதனை அந்த மாநாட்டின் நடத்துனர்களாக இருந்த முனைவர். தெய்வநாயகம்-தேவகலா அணி மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்த மாநாடு உண்மையிலேயே தமிழர் சமயம்-பண்பாடு ஆகியவற்றினை உலகறிய செய்வதற்காக நடத்தப்படும் ஒரு உன்னதமான முயற்சி என்பதாக எண்ணினர் வேறு சில வெள்ளந்தியான தமிழ் அறிஞர்கள். அவர்கள் பொதுவாக அளித்த பாராட்டினை தெய்வநாயகமோ தேவகலாவோ அல்லது கத்தோலிக்க மதச்சபையோ ‘தோமா கொண்டுவந்த ஆதி கிறிஸ்தவத்தின் offshoot தான் வைணவமும் சைவமும்’ என்கிற தங்களின் நிலைப்பாட்டுக்கான ஆமோதிப்பாகக் காட்டத் தான் போகிறார்கள். ஆனனல் அதைப் போல நேர்மையற்ற, கயமையான செயல் பிறிதொன்று இருக்க முடியாது.

எதுவாயினும் இந்த மாநாட்டில் பேசப்பட்ட பல கருத்துகள் ஆதாரமற்றவை; அவை கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்துக்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் கருத்துகள்; சில கருத்துகள் அப்பட்டமான வெறுப்பியல் பிரச்சாரமாகவும் இருந்தன. வேறு சில கருத்துகள் சிறுதும் அறிவியல் தன்மையற்றவையாகவும் இனமேன்மைவாதக் கருத்துகளாகவும் இருந்தன. முக்கியமாக முனைவர் தெய்வநாயகத்தின் பல கருத்துகள் சிறிதும் வரலாற்று அடிப்படை அற்றவையாகவும் தவறானவையாகவும் இருந்தன என்பதுடன் அவையே அவரது கோட்பாட்டின் ஆதார தூண்களாகவும் விளங்கின என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த சில இந்துக்கள் இந்த போலி பிரச்சாரத்தால் மிகவும் மனத்துயரடைந்து மாநாட்டின் மூன்றாள் நாள் (ஆகஸ்டு 16) தமிழ்இந்து.காம் இணையதளத்தை அணுகினர். அதற்கு முன்பே அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் எழுதிய தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ் என்ற இதுபற்றிய கட்டுரையைப் பற்றியும் தேடி அறிந்து அதனைப் படித்திருந்தனர் என்பதும் தெரியவந்தது. பொதுஜன ஊடகங்களில் வராத முக்கியமான கருத்துக்களைக் கொண்டு செல்வதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இணையம் கொண்டிருக்கும் அபரிமிதமான சக்தி நமக்கு வியப்பூட்டியது!

ஒரு இந்துத் தமிழர் அக்கட்டுரையையும், அத்துடன் அந்த மாநாட்டு நிகழ்வுகளில் செய்யப்பட்ட சில தவறான அணுகுமுறைகளை எடுத்துக்காட்டும் ஒரு சிறு கட்டுரையும் இணைத்து பல பிரதிகள் எடுத்து அதனை அந்த மாநாட்டில் விநியோகிக்கப் போவதாகவும் நமக்குத் தெரிவித்தார். அவர் அசோக்நகர் அனுமான் கோவிலின் அறங்காவலரும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருமான கணேசன் அய்யா அவர்கள்.

திரு. கணேசன் அய்யாவின் ஊக்கத்தையும், முனைப்பைக் கண்டு நாமும் பெரும் உற்சாகம் அடைந்தோம். அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். உடனடியாக தமிழ் இந்து தளம், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்களை நோக்கி சில ஆழமான கேள்விகளை எழுப்பும் முகமாக, போஸ்டர் வடிவில் சில display materials களையும் கணினியில் வடிவமைத்து அளித்தது. இந்த மாநாட்டில் கூறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து ஒரே இரவில் கோர்க்கப்பட்ட இந்தத் தொகுப்பு இது குறித்த ஆய்வினை முன்னகர்த்த மிகவும் தேவையானது என்பது நமது தாழ்மையான எண்ணம். “பரிணாம அறிவியல் வெறும் ஊகமா? சம்ஸ்கிருத கல்வெட்டுகளின் காலம் என்ன? கடவுள் மனிதனாக வருவார் என்னும் கோட்பாடு கிறிஸ்துவுக்குப் பின்னர் தான் இந்தியாவுக்கு வந்தததா? தெய்வநாயகத்தின் சைவ நூல் மேற்கோள் மோசடி” – இவை உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய நம் தரப்பு வாதங்கள் அதில் இருந்தன.

மாநாட்டின் முடிவு நாளான ஞாயிறு அன்று நிகழ்வு காலை 9:30க்கு மேலேதான் ஆரம்பித்தது. திரு.கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தனது கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க முடிவு செய்ததுடன், தாம் கொண்டுவந்திருந்த போஸ்டர்களைக் காட்டவும் மாநாட்டின் அதிகாரிகளில் ஒருவரான முனைவர் தேவகலாவிடம் அனுமதி கோரினார். ஆனால் தேவகலா அதற்கு ‘அங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும் இங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும்’ என்றும் கூறி தாமதித்துக்கொண்டிருந்தார். கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க ஆரம்பித்தார்.

திரு.ஜெயமோகனின் கட்டுரை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களின் மனசாட்சியினுள் வேலென நுழைந்திருக்கக் கூடும் என்பதனை ஊகித்த முனைவர் தெய்வநாயகம், ஒரு ஆராய்ச்சியாளருக்கு தகுதியல்லாத, ஆனால் கிறிஸ்தவத்தின் ஒரு மூன்றாந்தர பிரச்சாரகனின் வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பிரதி விநியோகத்தை விமர்சனம் செய்தார். மதிப்பிற்குரிய கணேசன் அய்யா அவர்களை பெயர் குறிப்பிடாமல் ‘சைத்தானின் பிள்ளை’ என சொன்ன கொடுமையை என்னவென்பது! தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது.

ஆனால் தமிழ் இந்து.காம் எழுப்பிய ஆணித்தரமான ஆதாரபூர்வமான கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் இந்த தெய்வநாயகம்-தேவகலா அணியினரால் பதிலளிக்கவோ, எதிர்வினை புரியவோ முடியவில்லை என்பதால், இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டு அங்கிருந்த தமிழறிஞர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விஷயத்தையே அங்கு வந்திருந்த அறிஞர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மறைத்து விட்டனர். இதுதான் இந்த மாநாட்டினை நடத்தி சென்று கொண்டிருந்தோரின் ‘ஆராய்ச்சி நேர்மை’.

அந்தக் கேள்விகள், வாதங்கள் இங்கே (.pdf கோப்பு வடிவில்).

இதன் முக்கியமான விளைவு என்ன? தெய்வநாயகம் மாநாட்டு மேடையில் தமது கருத்துகளுக்கும் கத்தோலிக்க சபைக்கும் தொடர்பில்லை என அறிவிக்க வேண்டியதாயிற்று. அதற்கு முந்தைய நாள் இருந்த துணிவும் வேகமும் வெளிப்படையான வெறுப்பியல் பிரச்சாரமும் விஷமத்தன தூண்டுதல்களும் இல்லமாலாயிற்று, மாநாட்டின் முழுக் கவனமும் இந்த மாநாடு சமய நல்லிணக்கத்துக்கு எதிரானது அல்ல என நிரூபிப்பதாக அமைய வேண்டியதாயிற்று.

தமிழர்களின் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மௌனம் காக்காமல் எதிர்த்து குரல் எழுப்பி அய்யா வைகுண்டரும், பாரதியும், சுவாமி சித்பவானந்தரும் உருவாக்கிய பண்பாட்டு பாதுகாப்பு சமுதாய அக்கறை எனும் பாரம்பரியத்தில் தன்னையும் ஒரு சிறு சேது பந்தன அணிலாக இணைத்துக் கொண்டதில் தமிழ் இந்து.காம் பெருமை அடைகிறது.

துணிச்சலுடனும் பொறுமையுடனும் விவேகத்துடனும் தன்னை இழிவாக விளித்த தெய்வநாயகத்திடமே ‘நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என உண்மை தமிழருக்கே உரிய மனித நேய பண்பாட்டுடனும் செயல்பட்ட அய்யா கணேசன் அவர்களுக்கும், இம்முயற்சியில் அவருக்கும் உறுதுணையாக இருந்த மற்றவர்களுக்கும், தமிழ் இந்து.காம் தனது பணிவான வணக்கங்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Tags: , , , , , , , , ,

 

39 மறுமொழிகள் சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

 1. Thamizhchelvan on August 21, 2008 at 12:32 pm

  தமிழ் மொழி-இலக்கிய-கலாச்சாரத்திற்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் மற்றும் இந்து மதமாகிய சனாதன தர்மத்திற்கும் மிகப் பெரிய சேவையை புரிந்துள்ளது தமிழ் இந்து இணைய தளம். நரிகளின் கூடாரத்திற்கே சென்று அவைகளை தன்னந்தனியாக எதிர்கொண்ட பெரியவர் கணேசன் அய்யா அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

  வெறித்தனமாக ஊளையிடும் இந்த நரிக்கூட்டத்தின் வாயை அடைத்து விட்டீர்கள். ஆனால் இந்த மாதிரியான வெட்கங்கெட்ட நரிகள் திரும்பவும் தங்கள் அக்கிரமங்களை தொடர முயற்சிக்கும். கடந்த பல வருடங்களாக அவற்றை தானே செய்து கொண்டிருக்கின்றன! வெளி நாட்டிலிருந்து கிறிஸ்துவ மிஷ’நரி’கள் வேண்டுமளவு டாலர்கள் அள்ளிக் கொட்டுகின்றன. பின்னர் கேட்பானேன் இந்த உள்நாட்டு நரிகளின் ஆட்டத்தையும் ஊளையையும்!

  இந்த நரிக்கூட்டத்திற்கு திராவிட இன வெறியூட்டும் பன்றிக்கூட்டமும் ஒத்து ஊதுகின்றன மறைமுகமாக. இந்த இரண்டு கூட்டமும் சேர்ந்து தமிழகத்தில் நாற்றம் வீசுகின்றன. தமிழ் இந்துக்கள் பொங்கி எழுந்து இவைகளை பூண்டோடு அழிக்க வேண்டும். அதற்கு தமிழ் இந்து இணைய தளமும் அதைச்சார்ந்த அறிஞர்களும் பல தகவல்களை அளித்து தமிழ் இந்துக்களிடையே ஒரு மிகப் பெரிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி, வணக்கம்.

  தமிழ்செல்வன்.

 2. Raja on August 21, 2008 at 1:11 pm

  Well Done tamilhindu.com !
  There should be a Hindu uprising in Tamil Nadu. That day is not too far.

 3. ஜயராமன் on August 21, 2008 at 1:34 pm

  கணேசன் ஐயா அவர்களின் தமிழ்ச்சேவையை மனதாற வாழ்த்துகிறேன். தமிழ்த்தாய் மதத்தினரின் சமுதாயம் அவர் போன்றோருக்கு எப்போதும் கடைமைப்பட்டிருக்கிறது.

  அழகாக சுருக்கமாக இந்த கிருத்துவ புரட்டுப் பிரசாரத்தின் ஆழத்தையும் வீச்சையும் அது செயல் படும் பாணியையும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள். இணையதளத்தினருக்கு என் நன்றிகள்.

  கத்தோலிக்க மதத்தினரில் பல்லாயிரக்கணக்கான தோழர்களே இந்த அருவருக்கும் புரட்டு “ஆராய்ச்சிகளை” ஏற்றுக்கொள்வதில்லை. தேவநாயகம் முதலானோர் மத நல்லிணக்கத்திற்கும், இந்தியாவின் சுமுகமான சமுதாய அமைப்பிற்கும் ஏற்பட்ட ஒரு பிணி.

  களம் இறங்கி இந்த ஏமாற்றுவேலைகளை முறியடிக்கும் முணைப்புள்ள இளம் செயல் வீரர்களையும் இங்கே அறிந்து நான் மனமகிழ்கிறேன்.

  உண்மை எப்போதும் இந்து மதத்தின் பக்கம்தாம். அதனால், ஐயமின்றியும் பயமின்றியும் நாம் இந்த உண்மைதீபத்தை ஏற்றுவோம். இருட்டில் தெரியும் ஆலேலூயா பூதங்கள் மறைந்துவிடும்.

  நன்றி

  ஜயராமன்

 4. Sreeni Rajagopalan on August 21, 2008 at 4:39 pm

  இதில் பங்கெடுத்து இந்த சதியை முறியடிப்பதில் உதவிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி தொடரட்டும். – ஸ்ரீனி

 5. வேல்முருகன் on August 21, 2008 at 4:49 pm

  சத்தியமாகச் சொல்லுகிறேன்.

  மகிழ்ச்சியில் என் கண்கள் கலங்கிவிட்டன.

  என் தமிழினத்தின் மரியாதையை காப்பாற்றியுள்ளீர்கள்.

  வேல்முருகன்

  ஈரோடு

 6. sathya on August 22, 2008 at 12:48 am

  தெய்வநாயகம pondra kizhtharamana madha prachrargalai nam veroda azhika vendum. tamizh ena veri kondu namidai ulavum atkaluku oru nala padam katru thara vendia neram vandhu vitadhu endru karudhugiren. miga chirandha pani idhu. anaivarukum nandri

 7. கந்தசாமி சு on August 22, 2008 at 3:24 am

  இத்தகைய பொய்ப் பிரசாரமும் மூளைச் சலவையும் பல நூற்றாண்டுகளாக எல்லா மீடியாக்கள் வழியாகவும் நடைபெற்றுத்தான் வருகின்றன. சோரம்போக ஏராளமான சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பிரபலங்களும் தயாராக இருக்கின்றனர். இவையெல்லாம் ‘மதச்சார்பின்மை’ என்ற போர்வையில் நடப்பன. (ஏதோ கிறித்தவமும் இசுலாமும் மதங்களல்ல என்ற பாவனையில்!). நீங்கள் இந்த முகமூடிகளைத் தொடர்ந்து கிழிக்க வேண்டும். நல்ல முயற்சி. தமிழ் இந்துக்கள் உங்கள் பின் உள்ளனர். வெற்றி வேலன் அருள் புரியட்டும்.

 8. Rama on August 22, 2008 at 7:01 am

  Fantastic effort on the part of Tamil Hindu. Please continue your good work!
  Jai Hind
  Ramji

 9. நோபிள் அமலதாஸ் on August 22, 2008 at 7:34 am

  பிற மதங்களை மதித்து வாழ வேண்டும். ‘என் வானகத்தந்தையின் உலகில் பல மாளிகைகள் உண்டு’ என்றார் ஏசு. இந்த உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவற்றினை எல்லாம் என் மதத்திலிருந்துதான் வந்தது என சொல்வது அறிவீனம். ஏசு கிறிஸ்து மக்களிடையே அன்பை போதிக்க வந்தார். ஆனால் இவர்கள் செய்வது சச்சரவை உண்டாக்கும். ஒரு கிறிஸ்தவன் என்கிற உரிமையில் இதனை எதிர்க்கிறேன். மிகவும் பண்புடன் கிறிஸ்தவர்கள் மனம் புண்படாதவாறு இதனை பொறுப்புடன் எதிர்த்துள்ள உங்களையும் பாராட்டுகிறேன். கர்த்தர் உங்களுக்கு நல்லது செய்யட்டும்.

 10. Srinivasan Venkataraman on August 22, 2008 at 8:16 am

  It is shocking to know why our mainstream Media is SO cunning in neglecting this attrocious attack on the common man in our country. My sincere respects & salutations to the team for the timely highlighting of Jeyamohan Article and the consequent EFFORTS of that noble soul GANESA Aiya. God Bless your team efforts and Good wishes, Anbudan, Srinivasan.

 11. வெங்கடேஷ் on August 22, 2008 at 10:37 am

  அருமை! ஆனந்தம்! இந்த பகுத்தறிவுப் பன்றிகள் நாட்டை ஆளும் வரை, இந்த அவலம் தொடரத்தான் செய்யும். தங்கள் முயற்சியை மிகவும் பாராட்டுகிறேன்.

 12. Naga on August 22, 2008 at 11:26 am

  தமிழ் மொழி-இலக்கிய-கலாச்சாரத்திற்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் மற்றும் இந்து மதமாகிய சனாதன தர்மத்திற்கும் மிகப் பெரிய சேவையை புரிந்துள்ளது தமிழ் இந்து இணைய தளம். நரிகளின் கூடாரத்திற்கே சென்று அவைகளை தன்னந்தனியாக எதிர்கொண்ட பெரியவர் கணேசன் அய்யா அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

  Pls Save the person and his famaly, becouse legal and illegal attackes from near

 13. Valli on August 22, 2008 at 6:13 pm

  Apologies for writing in English.
  You have done a commendable job.The almighty is with you.
  Please also read the article on the destruction of parts of the Tanjore big temple at this link.
  This is the physical aspect of the vandalism .
  http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=6999&SKIN=B
  The author says UNESCO should be notifified to save what can be saved.

 14. G.ரங்கநாதன் on August 22, 2008 at 10:25 pm

  தமிழர் சமயம் மாநாடு நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? தமிழர் சமயம் என்பது கிறிஸ்தவம் என்று “நிருபிக்கவா? தாமஸ் வந்த பிறகுதான் பக்தி இயக்கம் வந்ததா? மதமாற்ற மோசடிக்கும்பல் அதற்கு துணை போகும் மார்க்ஸ் போன்ற போலி அறிஞர் கூட்டம். இதுதான் இன்றைய மதச்சார்பற்ற அரசியல் நிலை. அமாவாசை முழு இரவு ஜபம், அக்கினி பெருவிழா, கிரிவலம் என்று இந்துக்களின் சாயலில் நாடகம் நடத்தும் டுப்ளிகேட் மிஷனரிகள். அன்னியப் பணம் அளவில்லா மல் வருகிறது. திராணியற்ற அரசு யந்திரம் வேடிக்கை பார்க்கிறது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் பாரதி.
  காலம் போடும் கணக்கு ஒன்று உண்டு. அதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் “சாத்தானின் புத்திரர்கள்” தான். இந்துக்களின் பொறுமை விடைபெறும் காலம் விரைவில் வரும்.

 15. kargil Jay on August 24, 2008 at 12:07 am

  This is Gold Winner!!

 16. Sitrodai on August 24, 2008 at 12:13 am

  Excellent job by Ganesan Ayya and tamil hindu.com team. We will always support your best efforts…

  Sorry for writing in English

  Sitrodai…

 17. ramesh on September 5, 2008 at 9:36 pm

  this news item should appear in all ours dailies and weeklies.
  Even vatican did not accept that thomas ever visited India.But these people to get foreign funds indulge in untruthful activities.

 18. katya on September 8, 2008 at 8:40 pm

  I don’t understand the language but would like to read it in English.
  If not the translation, then could someone give me the gist?

 19. SIVA on November 19, 2008 at 4:39 pm

  THANK YOU TAMILHINDU.COM AND GANESAN AYYA WE I ALSO READY TO WORK WITH PLEASE UTILIZE ME.

 20. Mahesh on November 24, 2008 at 4:43 am

  Please also read http://www.scribd.com/doc/3261220/Acharya-SThe-Christ-Conspiracy

  Makes interesting reading

 21. M.Chokkalinkom on December 10, 2008 at 12:55 pm

  Vanakkam. On behalf of my family and myself i submit our sincere thanks and Best Wishes for your Great Efforts to prevent spreading undigestable and untolerable religious activities in our homeland. This Cancer should be removed from the root cause. My Prayers to Arulmigu Nellaiappar Kandhimathi to Bless all those concern in this Holy activities with Good Health, Peace and Pleasant Life. Vazhga Valamudan.
  My Prayers,
  Anbulla
  M. Chokkalinkom

 22. seemachu on December 17, 2008 at 8:09 pm

  Thank u

  seemachu

 23. சீனு on February 26, 2009 at 1:43 pm

  தமிழ் இந்து தளம் அனைவரையும் சென்று சேறுகிறதா தெரியவில்லை. விளம்பரம் தேவை என்றே நினைக்கிறேன்.

  மற்றபடி இது ஒரு அருமையான தளம்.

 24. t.r.pattabiraman on March 6, 2009 at 10:47 am

  தீ பரவும்போது தீயை அணைக்க எடுக்கும் நடவடிக்கை எடுப்பது போன்ற இந்த செயல்களுடன் இந்த தீ மேற்க்கொண்டு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மெத்த படித்தவர்களே இந்த பொய் பிரச்சாரங்களுக்கு மதிமயங்கி இந்து மதத்தை அவர்களோடு சேர்ந்துகொண்டு குறை கூறுவது வேதனையிலும் வேதனை. இந்நிலையில் வாழ்வே போராட்டமாக இருக்கும் பாமரர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

 25. B. பாஸ்கர். on September 20, 2009 at 9:25 pm

  வணக்கம்,

  ஸ்ரீ கணேசன், மற்றும் தக்க தருணத்தில் சரியான நடவடிக்கை எடுத்த மற்றைய அன்பர்களுக்கும் மிக்க நன்றி, மேலும் அருமையான கேள்விகளை தொகுத்து உடனடி நடவடிக்கை எடுத்து போராடிய அன்பர்களுக்கு உதவிய தமிழ் ஹிந்து. காம் தளத்தை பாராட்ட சிறிய வார்த்தைகள் போறாது. கேள்விகள் அனைத்தும் அற்புதமானவை,

  தமிழ் பற்று என்ற பெயரில் இந்து தர்மத்தை விற்றுக்காசாக்கும் நரித்தன மனிதர்களை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை, நாம் மற்றவர்களை குறை சொல்வதினினும் நல்லது என்னவெனில் இயன்ற அளவுக்கு நமது பிள்ளைகள் மற்றும் நம்மை சார்ந்த பிள்ளைகளை தனிப்பட்ட முறையிலாவது ஸம்ஸ்க்ரிதம், வேதங்கள், மற்றும் தமிழிலும் உள்ள தேவாரம். திருவாசகம் போன்ற பலநூல்களின் விளக்கங்களையும் நல்ல அறிஞர்களிடம் விட்டு தெளிவு பெற செய்வது.

  நமது குழந்தைகள் நல்லபடி கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆங்கில கல்வி மைய்யமாக உள்ள கிறிஸ்துவப் பள்ளியில் பெரும்பாலானோர் சேர்த்து விடுகின்றனர்.
  ஆனால் அங்கே கல்வியை விட மதமே முன்னிருத்தப்ப் படுகின்றது என்பதை மக்கள் உணர வேண்டும். தற்போது இந்து சமயம் சார்ந்த பள்ளிகளே நிறைய உள்ளன, இருப்பினும் அதை விட கிறிஸ்துவ பள்ளிகளே ஆங்கிலப் புலமை மிக்கது என்ற மாயத்தன்மையினால் மக்கள் ஏமாந்து விடுகின்றனர், ஒரு சிறு குழந்தையின் மனதிலே இப்படியான தவறான வேதம், மதக்கருத்துகள் பதியப்படுமேயானால் நாளை நம்மால் அதை மாற்ற முடியாது.

  பூக்கடையாய் நம் மதமிருக்க சாக்கடை வழிகள் நமக்கு எதற்கு, மக்களிடம் நான் சொல்வது எல்லாம் ஒன்றுதான் அந்நிய மோகத்தை கைவிடுங்கள். நம் நாடு எங்கோ போய்கொண்டு உள்ளது, இன்று மத மாறுதல் உங்களுக்கு ஒரு மாறுதலாக மட்டுமே இருக்கும், ஆனால் பெரும்பாலான நிலங்கள் ஐரோப்பிய கிறிஸ்துவ அமைப்பிடம் சேர்ந்த பின்னர் மொத்த பாரதமும் அவர்கள் கையில் என்றாகி விட்ட பின்னர் நாம் கிறிஸ்துவர்கள் ஆயினும் இந்தியர்களே, கரடியாக கத்தினாலும் நமக்கு மீண்டும் சுதந்திரம் கிடைக்கப்போவது இல்லை. இந்துவாக அடிமைப்பட்டு இருந்த நாம் மீண்டும் கிறிஸ்துவ அடிமைகளாவோம்.

  நாம் மாற்றுவது நமது நம்பிக்கையை மட்டுமே, ஆனால் அவர்கள் மாற்ற நினைப்பது நமது நாட்டையே என்பதை நினைவு கொள்ளுங்கள்.

 26. கருப்பையா on September 28, 2009 at 10:43 pm

  திரு தெயவநாயகத்தின் மாநாட்டின் 2௩ம் நாள் இரண்டு நாளின் பெரும்பான்மையான நேரம் நானும் ஒரு ஆய்வு மாணவனாக உள்ளே இருந்தேன்.

  2ம் நாள் மத்யம் ஒருவர் இவர்- எம்பில் மற்றும் பிஎக்டி பட்டம் படித்தவர் ஆற்றிய உரை. நிகழ்ச்சிக்கு, சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.த்ய்வசுந்தரம் தலைமை. உரை படித்தபின் வந்திருநோர் கேள்விகட்கு உரையாசிரியர் பதில் தரவேண்டும், ஆனால் அவர் தனக்கு பதிலாக தெய்வநாயகமே பதில் தருவார் எனறிட தலைவர் அது தவறு என்றிடவும், கடைசியில் தெய்வநாயகம் தான் பதில்கள் உளறினார்.
  அவர்கள் இடைவேளையின் போது தனி பேச்சில் படிக்கப்பட்ட கட்டுரையின் மேற்கோள்கள், சொன்ன பதிலின் இவற்றில் பல தவறு என தெளிவாக மறுக்கப் பட்டவை, ஆனால் இது ஒன்றும் அறிஞர் சபையோ சிமினாரோ அல்ல, வெறும் சர்ச்சின் பண பலத்தால் பெருமைக்கு நடத்தப் படுவது, நான் பழகிய நண்பர் என வந்தேன் என்றார். முன்பெ தேர்ந்தெடுக்கப் பட்ட நண்பர்கள் தான் பெரும்பான்மையான கலந்து கொண்டவர்கள். கேள்விகளும் தெ தயாரித்தவை, வந்த ஒரு சில நடுநிலையாளர் நந்து கேள்வி எழுதித் தந்தாலும் அது நேரமின்மை என படிக்கப் படாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

  3ம் நாள் தெய்வநாயகத்தின் தலைமை உரை. தலைமை நாங்க திரு. ஒளவை.நடராசான் அவர்கள். தெய்வநாயகம் ஆன்மவியல் என்னும் தன் கட்டுரை வாசித்த பின், ஒளவை.நடராசான் அவர்கள் எழுந்து தெய்வநாயகம் கூறியவை பெரும் பாலும் தவறானவை. சமயம், ஆன்மா போன்ற அடிப்படை சொற்கள் சமஸ்க்ருதம் என்றார். உடனே தெய்வநாயகத்தின் தவறான் ஆய்வுக் கட்டுரை என முனைவர் பட்டம் ரத்துஆனதின் கைடான – தமிழ் பன்னாட்டுத்துறையின் அன்னி தாமஸின் கணவருமான திரு.ச.வே.சுப்ரமணியம் சில கூறினார். அவையும் தவறு என ஒளவை.நடராசான் தெளிவாகக் கூற, தமிழ் – சமஸ்க்ருதம் தமிழ்பற்று என்பதாக என்னவோ தெய்வநாயகம் உளறிட அத்தலைமை உரை விவாதமே செய்யப் படவில்லை. தலைவரே தவறு என்றதோடு. ஒளவை.நடராசான் உடன் இடைவேளை போது தனியாக பேசிய போது, மேலும் தொல்காப்பியத்க்தை தெய்வநாயகம் பயன்படுத்தியுள்ளவையும் அர்த்தமற்ற – எழுதப்ப்ட்ட முறைக்கும் ஒவ்வாதது என்றார், ச,வெ கூறியது தமிழ் நடைக்கே எவ்வளவு தவறு என்றும் சிறு விளக்கம் கொடுத்தார்.

  மாநாட்டரையில் நான் நண்பர் மூலைம் ஒலிப்பதிவு செதேன்.

  தேவகலா ஒளிப்பதிவு ஏற்பாடு செய்திருந்தார். அதன் VCD வேண்டும் என மின் அஞ்சல் அனுப்பினேன்
  விலைப் பட்டியல் அனுப்பினார் –தேவகலா.

  நான் மாநாட்டின் போது தருமபுர ஆதின மடத்தில் முன்பு தெய்வநாயகம் கலந்து கொண்ட கேள்விபதில் நிகழ்ச்சியின் VCD என விற்றதை வாங்கியதில் ஒரு சில நிமிடம் தவிர தேவகலா தன் அப்பாவை பற்றி வெற்று பேச்சுக்களெ இருந்தது.

  அந்த நிகழ்ச்சியில் த்திற்கு பைபிள் அறிவோ, சைவ சித்தாந்த அறிவோ வெகு குறைவு, பல கேள்விகட்கு மௌனம் என நடந்து வெளியேறினார். ஆனால் VCD பொய் கூறியது.

  நான் தேவகலாவிற்கு ஆய்வு மாணவன் எனக்கு முழுமையான பதிவு சற்றும் எடிட் செய்யாதது வேண்டும் நீங்கள் கொடுத்துள்ள விலைப் பட்டியல் VCD அப்படியா என மின் அஞ்சல் அனுப்பினேன், இரு நினைவூட்டலும் அனுப்பினேன்.
  பதில் இல்லை.

  இவர்கள் தராதரம் அவ்வளவு தான்.

  கருப்பையா.

 27. தேவப்ரியா சாலமன் on September 30, 2009 at 8:06 pm

  திரு தெயவநாயகத்தின் மாநாட்டின் 2ம், 3ம் நாள் இரண்டு நாளின் பெரும்பான்மையான நேரம் நானும் ஒரு ஆய்வு மாணவனாக உள்ளே இருந்தேன்.

  2ம் நாள் மத்யம் ஒருவர் இவர்- எம்பில் மற்றும் பிஎக்டி பட்டம் படித்தவர் ஆற்றிய உரை. நிகழ்ச்சிக்கு, சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.தெய்வசுந்தரம் தலைமை. உரை படித்தபின் வந்திருநோர் கேள்விகட்கு உரையாசிரியர் பதில் தரவேண்டும், ஆனால் அவர் தனக்கு பதிலாக தெய்வநாயகமே பதில் தருவார் எனறிட தலைவர் அது தவறு என்றிடவும், கடைசியில் தெய்வநாயகம் தான் பதில்கள் உளறினார்.
  அவர்கள் இடைவேளையின் போது தனி பேச்சில் படிக்கப்பட்ட கட்டுரையின் மேற்கோள்கள், சொன்ன பதில்- இவற்றில் பெரும்பாலும் தவறு என தெளிவாக மறுக்கப் பட்டவை, ஆனால் இது ஒன்றும் அறிஞர் சபையோ செமினாரோ அல்ல, வெறும் சர்ச்சின் பண பலத்தால் பெருமைக்கு நடத்தப் படுவது, நான் பழகிய நண்பர் என வந்தேன் என்றார். முன்பெ தேர்ந்தெடுக்கப் பட்ட நண்பர்கள் தான் பெரும்பான்மையான கலந்து கொண்டவர்கள்; கேள்விகளும் தெய்வநாயகம் தயாரித்தவை, வந்த ஒரு சில நடுநிலையாளர் கேள்வி எழுதித் தந்தாலும் அது நேரமின்மை என படிக்கப் படாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

  3ம் நாள் தெய்வநாயகத்தின் தலைமை உரை. தலைமை நாங்க திரு. ஒளவை.நடராசான் அவர்கள். தெய்வநாயகம் ஆன்மவியல் என்னும் தன் கட்டுரை வாசித்த பின், ஒளவை.நடராசான் அவர்கள் எழுந்து தெய்வநாயகம் கூறியவை பெரும் பாலும் தவறானவை. சமயம், ஆன்மா போன்ற அடிப்படை சொற்கள் சமஸ்க்ருதம் என்றார். உடனே தெய்வநாயகத்தின் தவறான் ஆய்வுக் கட்டுரை என முனைவர் பட்டம் ரத்துஆனதின் கைடான – தமிழ் பன்னாட்டுத்துறையின் அன்னி தாமஸின் கணவருமான திரு.ச.வே.சுப்ரமணியம் சில கூறினார். அவையும் தவறு என ஒளவை.நடராசான் தெளிவாகக் கூற, தமிழ் – சமஸ்க்ருதம் தமிழ்பற்று என்பதாக,தமிழே உலகின் முதல் மொழி’ ‘ என்னவோ தெய்வநாயகம் உளறிட அத்தலைமை உரை விவாதமே செய்யப் படவில்லை. தலைவரே தவறு என்றதோடு. ஒளவை.நடராசான் உடன் இடைவேளை போது தனியாக பேசிய போது, மேலும் தொல்காப்பியத்க்தை தெய்வநாயகம் பயன்படுத்தியுள்ளவையும் அர்த்தமற்ற – எழுதப்ப்ட்ட முறைக்கும் ஒவ்வாதது என்றார், ச.வே.சுப்ரமணியம் கூறியது தமிழ் நடைக்கே எவ்வளவு தவறு என்றும் சிறு விளக்கம் கொடுத்தார்.

  மாநாட்டரையில் நான் நண்பர் மூலம் ஒலிப்பதிவு செய்தேன்.

  தேவகலா ஒளிப்பதிவு ஏற்பாடு செய்திருந்தார். அதன் VCD வேண்டும் என மின் அஞ்சல் அனுப்பினேன்
  விலைப் பட்டியல் அனுப்பினார் –தேவகலா.

  நான் மாநாட்டின் போது தருமபுர ஆதின மடத்தில் முன்பு தெய்வநாயகம் கலந்து கொண்ட கேள்வி-பதில் நிகழ்ச்சியின் VCD என விற்றதை வாங்கியதில் ஒரு சில நிமிடம் தவிர தேவகலா தன் அப்பாவை பற்றி வெற்று பேச்சுக்களே இருந்தது.

  அந்த நிகழ்ச்சியில் தெய்வநாயகத்திற்கு பைபிள் அறிவோ, சைவ சித்தாந்த அறிவோ வெகு குறைவு, பல கேள்விகட்கு மௌனம் என நடந்து வெளியேறினார். ஆனால் முழுமையாக VCD பொய் கூறியது.

  நான் தேவகலாவிற்கு ஆய்வு மாணவன் எனக்கு முழுமையான பதிவு சற்றும் எடிட் செய்யாதது வேண்டும் நீங்கள் கொடுத்துள்ள விலைப் பட்டியல் VCD அப்படியா என மின் அஞ்சல் அனுப்பினேன், இரு நினைவூட்டலும் அனுப்பினேன்.
  பதில் இல்லை.

  இவர்கள் தராதரம் அவ்வளவு தான்.

  with minor corrections -Older post only.
  Another request- can you please add Reply numbers visible to respond

 28. தேவப்ரியா சாலமன் on September 30, 2009 at 11:43 pm

  Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars

  திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
  Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
  “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

  இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

 29. தேவப்ரியா சாலமன் on September 30, 2009 at 11:46 pm

  After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

  I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

  1. குறள் கூறும் சமுதாயம்
  2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
  3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

  The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
  The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

  Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

  “மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்

 30. dinesh on October 16, 2009 at 8:58 pm

  Karuppaiah,

  It is wonderful you have recorded the meeting proceedings, and how Who ever has been chosen by Deivanayagam could not support his frauds. One must congradulate Shri.Ovvai.Shanmugam for his bold sayings.

  Devapriya keeps good work and

  Deivanayagam’ proves that if he opens his mouth he shows his ignorance.
  //மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்//
  Nunalum than vaayal kedum.

  I Remember in the Last year “Tamilnadu History Congress” conducted at Thanjavur P.M.University, one A.V.G.Krishnan presented a Paper “St.Thomas in India- A Historical Analysis and after analysing all the provided so called evidences given by Christian side,
  clearly stated that
  //”History Congress in the past has been used and Papers read claiming of visit of St.Thomas. All evidence claimed has been analysed and the clear Conclusion is there is no Historicity behind the Alleged visit of St.Thomas.”//

  To this date there is no evidence available for so called Thomas visiting any part of India.

  Let them give proof for it.

  Devapriya, can you analyse whether Kural and Valluvar’s Ethics can accept Bible and David’s family tree

 31. தேவப்ரியா சாலமன் on October 19, 2009 at 7:22 am

  Dear Dinesh,

  Thanks for your kind words.

  I remember a old incidence and the result from a Christian Scholar.

  பல ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் ஒரு தமிழாசிரியர், அவர் திருக்குறள் ஆர்வலர், ஒரு திருக்குறள் மன்றத்தில் பல மாதங்கள் வாராந்திர்க் கூட்டங்களில் தொடர் சொற்பொழிவு செய்து வந்தார்.

  அஙுகு திருக்குறளையும் பைபிளையும் ஒப்பிட்டு பார்த்து சொற்பொழிவு ஆற்ற, திரு. ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தவர் பேசுவதாக ஏற்பாடு நடந்தது.

  என் நண்பர், தானே இரண்டையும் பொருத்தி வேறுபாடுகளை பல சொற்பொழிவுகளில் பேசினார். என்னிடம் சிலவற்றை விவாதிப்பார்.

  அந்தப் பேராசிரியர் ஒரு நூல் எழுத உள்ளார் என்ற செய்தி வந்தவுடன் நான் நண்பரிடம் நிறைய பேசிய போது, என் நண்பர் கூறினார்-முதலில் பைபிளோடு குறளை ஒப்பிட்டுப் பேச தெய்வநாயம் தொடர்பு கொள்ளப்பட, அவர் சற்றும் ஆர்வம் காட்டாததால் இந்தப் பேராசிரியர் தேர்ந்தெடுக்கப் பட்டார், இத்தலைப்பு வருகிறது என்பதால் பல வாரங்கள் நான் திருக்குறள் அறங்கள் கிறுஸ்துவத்துக்கு முரண் எனக் காட்டினேன், விவிலிய வாக்கியங்கள் தேர்ந்தெடுக்க உங்கள் உதவியும் ந்ன்றாகப் பயன்பட்டது ,அதையும் பேராசிரியர் கேட்டார் என்றார்.

  நான் மேலும் பல வரலாற்று ரீதியிலான நூல்களின் பக்கங்களின் ஜெராக்ஸ் எடுத்து; ரோம் சர்ச் வரலாற்றுப் பதிவுகளின் மிகவும் பழைமையானவைப்படி தாமஸ், மத்தேயூ, பிலிப் போன்ற சீடர்கள் மதப் பிரச்சாரப் பணியில் ஈடுபடானல் ஜெருசலேமில் சாதாரணமாக இறந்தனர் என்பதக் காட்டினேன். பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

  “திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
  பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

  முடிவாக –
  “திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
  பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

  That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL.

 32. தேவப்ரியா சாலமன் on October 20, 2009 at 7:04 am

  http://biblelamp.wordpress.com/1995/04/01/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

  இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.

  திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? கிறிஸ்தவமும் சைவமும் ஒன்றுதான் என்ற முறையில் சிலர் போதித்து வருகிறார்களே, திருமறையில் இதற்கு என்ன ஆதாரம் உண்டு?

  இப்போதனை இன்று தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிலர், இப்போதனை இந்துக்களைக் கவர ஓர் அருமையான வழி என்று நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சிறிது விளக்கமான பதில்கூற வேண்டியது அவசியம்.

  அ. இவர்கள் போதிப்பதென்ன?

  டாக்டர் மு. தெய்வநாயகம் (விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் ஒப்பாய்வு), ஞானசிகாமணி (அகத்தியர் ஞானம்) போன்றோர் வடவராகிய ஆரியர்களின் செல்வாக்கற்ற, கலப்பில்லாத திராவிட சமயங்கள், தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலனாகிய தோமாவின் (தோமா தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்படாத ஆதாரபூர்வமற்ற ஓர் ஊகம் மட்டுமே) கிறிஸ்தவப் போதனைகளின் செல்வாக்கினால், தனித்துவமுள்ள உருவவழிபாடற்ற, ஒரே தேவனைக் கொண்ட தமிழர்களின் சமயமாக இருந்தது என்றும், சைவசித்தாந்தமும், திருக்குறளும் சித்தர்களின் பாடல்களும் கிறிஸ்தவ செல்வாக்கினால் வளர்ந்த இவ்வாதி திராவிட சமயங்களைப் பற்றித்தான் போதிக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள். இப்போதனைகளை இன்னும் பெரிதுபடுத்தி சாது செல்லப்பா போன்றோர் இந்துக்களைக் கவரும் நோக்கில் கிறிஸ்தவப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் இவ்வளவு தொடர்பு இருக்கும்போது நான் ஏன் அவர்களோடு சமமானமுறையில் ஒரே மேடையில் அமர்ந்து இருபகுதியுமே பயனடையும் விதத்தில் அமைதியான கலந்துரையாடல்களை (Dialogue) நடந்தக்கூடாது? என்ற முறையிலும் தயானந்தன் பிரான்ஸிஸ் (தமிழ்ச் சைவம்) போன்றோர் எழுதி வருகிறார்கள். இப்போதனைகள் இன்று தமிழகத்தின் வேதாகமக் கல்லூரிகள்வரை போயிருக்கின்றன. இவர்களுடைய கூற்றுகளுக்கும் போதனைகளுக்கும் வேதத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

  ஆ. இவர்களுடைய போதனை ஏன் தவறானது?

  தோமா தமிழகத்திற்கு வந்தாரா? என்ற ஆராய்ச்சியை எல்லாம் உங்கள் கரத்தில் வைத்துவிட்டு இவர்களுடைய கருத்துக்களின் மூலமும், எழுத்துக்கள் மூலமும் எவ்வளவு தூரம் திருமறை தவறான முறையில் உண்மைக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது முக்கிய நோக்கம். அதை வைத்தே நீங்கள் உண்மை எங்கிருக்கிறது என்று கண்டு கொள்ள முடியும்.

  தோமா தமிழகம் வந்தாரா?

  தோமா இந்தியாவிக்கு வந்தார் என்று இன்றுவரை வரலாற்றினால் நிரூபிக்கப்படவில்லை. இது வழிவழி வந்த நம்பிக்கையே தவிர அதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. தோமாவின் வழியில் வந்ததெனக் கருதப்படும் சீரியக்கிறிஸ்தவம் திருமறையின் போதனைகளுக்கு முரணான காரியங்களைக் கொண்டிருப்பதால் அதைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது தவறானது. இது கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒன்று என்று கூறுவது போலாகும். மயிலாப்பூரிலும், கேரளத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலை வழிபாட்டிற்கான பல அறிகுறிகள் காணப்படுவதால் அதற்கும் திருமறை சார்ந்த கிறிஸ்தவத்திற்கும் தொடர்பிருக்க முடியாது. ஏனெனில் திருமறை சிலை வழிபாட்டை வற்புறுத்திக் கண்டிக்கின்றது (யாத்திராகமம் 20:1-7). அதேநேரம், வரலாற்றை வைத்து திருமறையை நிரூபிக்க முற்படுவதும் தவறான காரியம். வரலாற்றின் கண்டுபிடிப்புகளோடு திருமறையின் போதனைகளும் ஒத்துப்போகுமானால் அதை ஏற்றுக்கொள்ளலாம். வரலாறும் பாவத்தினால் கறைபடிந்து காணப்படுவதால் அதைக்கொண்டு பரிசுத்த வேதத்தை நிரூபிக்க முற்படுவது தவறு.

  திராவிட எழுச்சி இயக்கம்

  இவ்வாய்வுகள் தமிழரையும் அவர்களுடைய பண்பாட்டையும் ஆரியர்களுக்கு எதிராக உயர்த்திக் காட்டும் நோக்கத்தில் எழுந்தனவே தவிர திருமறையையும், கர்த்தரையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்தவையல்ல. இவ்வாய்வுகளின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் காணப்பட்ட திராவிட சமயங்கள் ஆரியக் கலப்பற்ற தளித்தன்மை கொண்ட சமயங்களாக இருந்தன என்று நிரூபிப்பதுதான். சித்தர்களின் பாடல்களும், திருக்குறளும் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்காமல் அவற்றைக் குறைகூறுகின்றன என்பதற்காக, அவை கிறிஸ்தவ செல்வாக்குப் பெற்றதால்தான் அப்படிப் போதிக்கின்றன என்ற வாதம் பொருத்தமற்றது. இது அக்காலத்தில் ஆரிய எதிர்ப்பினால் எழுந்த போதனையாகவும் இருக்கலாம். அதுமட்டுமல்லாது சைவசித்தாந்தத்திலும் திருக்குறளிலும் திருமறைக்கு ஒவ்வாத அநேக போதனைகள் உண்டு. திருக்குறளில் காணப்படும் தெய்வத்தைக் குறித்த பொதுவான வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பிட்டுக் கூறுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது தமிழ் மரபு என்று சிலர் வாதிட முற்பட்டாலும், திருமறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்தில் காணப்படாத வேறு பெயர்களை பயன்படுத்தி கர்த்தரை அழைப்பதை வேதம் அனுமதிப்பதில்லை. அதேநேரம் திருவள்ளுவர் இயேசுவை அறிந்திருந்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை. உண்மையிலேயே அவர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் தெளிவாக கிறிஸ்துவை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதோடு, திருமறையின் போதனைகளைத்தான் தன்நூலில் விளக்கியிருப்பார், வள்ளுவர் புலால் உண்ணலையும் வன்மையாகக் கண்டிக்கிறார். வேதம் அதைத் தடைசெய்வதில்லை (ரோமர் 14:1-4).

  திராவிட சமயங்கள்

  திராவிட சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் ஆகிய ஆறு சமயங்களும் கிறிஸ்தவ திருமறையின் அடிப்படையில் எழுந்த இந்தியத் திராவிட சமயங்கள் என்பது டாக்டர் மு. தெய்வநாயகத்தின் வாதம். கிறிஸ்தவத்திற்கே உரித்தான திரித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பிதா, குமாரன், ஆவியாகிய அதே தேவனைத்தான் திராவிட சமயங்களும் வேறு பெயர்களில், தமிழகத்திற்கேற்ற முறையில் பயன்படுத்தின என்று இவர் எழுதியுள்ளார். ஆனால் இது திருமறைக்கே புறம்பான ஒரு விளக்கம். எந்த ஒரு மனிதனும் திருமறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கர்த்தரைப்பற்றிய திரித்துவ விளக்கங்களைத் தாம் நினைத்த விதத்தில் எந்தவொரு இனம் அல்லது விளக்கங் கொடுக்க முடியாது. அது நம் பார்வைக்கு எவ்வளவுதான் கவர்ச்சியுள்ளதாகவும் நன்மை அளிக்கும் காரியமாகவும் தென்பட்டாலும் அது திருமறைக்கு விரோதமான காரியம். அதேநேரம் இவர்கள் கூறுவதுபோல் பரிசுத்த ஆவியைப் பெண்ணாக உருவகப்படுத்தி ‘அம்மையாக‘ அழைக்க திருமறை எவ்விதத்திலும் இடங்கொடுக்காது. இத்தகைய விளக்கங்கள் திருமறையைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் காரியங்களே தவிர, கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவரை மேன்மைப்படுத்தும் செயல்களல்ல.

  திருமறை, திருக்குறள், சைவசித்தாந்தம்

  திருக்குறள், சைவசித்தாந்தம் போன்ற சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களைக் கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிடுவது வேதத்திற்குப்புறம்பான காரியமாகும். திருமறை தேவ ஆவியினால் அருளப்பட்ட திருவசனமாக இருக்கின்றது. அதன் சத்தியங்களிலும், போதனைகளிலும் எந்தவித தவறிற்கும் இடமேயில்லை. அதை உலக நூல்களோடு ஒப்பிட்டு சமப்படுத்திப் பார்க்கக்கூடாது. டாக்டர் மு. தெய்வநாயகமும் மற்றவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள். அதேநேரம், திருக்குறள், சைவசித்தாந்தம் போன்றவற்றில் சில நல்ல கருத்துக்களும், போதனைகளும் காணப்படலாம். அவற்றை மட்டும் வைத்து, திருமறைக்கு சமமாக இப்புத்தகங்களை நாம் மதிப்பிடக்கூடாது. திருமறையைப் பொறுத்தவரையில் அதற்கு சமமான நூல்கள் உலகில் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் ஒருவனுக்கு சத்திய வசனமாகிய திருமறை மட்டுமே தேவையே தவிர, வேறு எந்தப்புத்தகத்தின் உதவியும் தேவையில்லை. ஆகவே திருமறையின் விளக்கத்தைத்தான் நாமனைவரும் நாடவேண்டும் வேறு சமயக் கோட்பாடுகளையோ சித்தாந்தங்களையோ அல்ல.

  கிறிஸ்தவமும் இனப்பாகுபாடும்

  திருமறையில் இனப்பாகுபாட்டிற்கு இடமில்லை. அப்படியிருக்க, திருமறை வழிவந்த சமயங்களாக திராவிட சமயங்கள் இருக்குமானால் அவை ஆரிய, பிரமாண வெறுப்புள்ளவைகளாக இருப்பதெப்படி? திருமறை எல்லா இனமக்களுக்கும் உரித்தானது. அதன் போதனைகளனைத்தையும் எல்லா இனமக்கள் மத்தியிலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். நம் இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவிதத்தில் நாம் திருமறையை மாற்றமுடியாது. ஆனால், நமது கலாச்சாரத்தில் இருந்து, தேவனுக்கும், திருமறைக்கும் பொருந்தாது காணப்படும் அம்சங்களைக் களைந்தெடுக்க வேண்டியது நமது கடமை. ஆகவே, ஓர் இனத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த திராவிட சமயங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் சொந்தமானதும் எல்லா இனங்களையும் பாவத்திலிருந்து விடுவிக்கும் வல்லமையுள்ள திருமறையின் அடிப்படையிலான கிறிஸ்தவத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

  கிறிஸ்தவத்தைத் திராவிட சமயங்களோடு ஒப்பிட்டுக் காட்டும் செயலின் பல்வேறு தவறுகளை நாம் அடையாளம் காணமுடிந்தாலும் முடிவாக சில உண்மைகளை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களும் அதை ஆதரிப்பவர்களும் பரந்த கொள்கையுடையவர்கள் (Liberal). இவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் பூரணத்துவத்திலும் அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையுள்ளவர்களல்ல. ‘தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியுள்ளது‘ என்ற பேதுருவின் வார்த்தைகளை இவர்கள் விசுவாசிப்பதில்லை. கல்வாரிச் சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இரட்சிப்பின் வழிமுறைகளிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. புற சமயங்களோடு கிறிஸ்தவத்தை சமப்படுத்தி கிறிஸ்துவின் பெயருக்கே இவர்கள் களங்கம் தேடித்தருகிறார்கள். இவர்களின் வார்த்தையில் மயங்கி, இப்போதனை மற்றவர்களை இலகுவாக கிறிஸ்துவிடம் கொண்டுவர உதவுமே என்று எண்ணிச் செயல்படுவது கர்த்தருடைய வார்த்தையை நம் காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். எரிச்சலுள்ள தேவன் இப்பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாராக.

  This Article is though saying too much as boasting for Christianity still worth reading for all.

 33. தேவப்ரியா சாலமன் on November 9, 2009 at 7:07 am

  திராவிட சான்றோர் பேரவை சென்ற ஆண்டில் நிகழ்ந்த விழாப் படங்கள்.
  By devapriyaji
  கிறிஸ்துவ சூழ்ச்சிகளைத் தகர்த்த பேரியோர் பாராட்டு விழாப் படங்கள்.
  சாந்தோம் சர்ச்சின் மற்றும் பல தமிழ்நாட்டு ச்ர்ச் சூழ்ச்சியான திருவள்ளுவரையும் திருக்குறளையும் கேவலப்படுத்தும் ஆய்வுகள் என்னும் பெயரிலான உளறல்கள்.
  திராவிட சான்றோர் பேரவை சென்ற ஆண்டில் நிகழ்ந்த விழாப் படங்கள்.
  இங்கே சாந்தோம் சர்ச்சிற்கு எதிராக கணேஷ் ஐயருக்கு வாதடிய வழக்கறிஞர். தி.ரு. T.N.ராமச்சந்திரன் -அனைத்துலக சைவ சங்கம் சார்பாக தருமபுர ஆதினத்தில் உளறல் தெய்வநாயகத்தை அழைத்து அவரை வெளிப்பட செய்தவர்.
  தெய்வநாயகம் உளறல் நூலிற்கு அற்புதமான மறுப்பு எழுதிய அருணை வடிவேல் முதலியாருக்காக அவர் மகன்.
  I.A.S. அதிகாரி. திரு.சுந்தரம் என அனைவரும் இவ்விழாவில் பாராட்டு பட்டனர்.
  Sri.Ganesh who distributed the Tamil Hindu fliers in Deivanayagam’ Conference and Mr.Natesan – Dravida Saanror Peravai Chief releasing books.
  You can see Mr.Haran in the back
  http://devapriyaji.wordpress.com/2009/11/09/dsp-phots/

 34. Aanandan on May 10, 2010 at 1:47 pm

  Any Decent Researcher must have recorded the response and replied them.

  Deivanayagam’s Silence proves he is talking without any actual basis and creating unwanted troubles.

 35. Aanandan on May 16, 2010 at 10:04 am

  இந்த கூட்டம் சாந்தோம் சர்ச்சினால் அதன் கல்லூரியில் சர்ச் செலவில் நடத்தப்பட்டுள்ளது.

  கூட்டம் போது ஆர்ச்பிஷப் மற்றும் பல சர்ச் ஊழியர்கள் இருந்துள்ளனர்.

  ஆர்ச் பிஷப் சின்னப்ப காதல் டூயட் பாடல் பாடி அனைவரையும் குஷிப் படுத்திய்ள்ளர்.

  ஆனால் ஏன் முறையான பதிலை இன்று வரை கொடுக்கவில்லை. தமிழ்ஹிந்துவும் தொடர்ந்து பதிலைப் பெற்றிருக்க வேண்டும்.
  தமிழ்ஹிந்து சர்ச்சிற்கும் உளறல் தெய்வநாயகத்திற்கும் தொடர்ந்து கடிதங்கள் மூலம் பதில் பெற வேண்டியதும் முக்கியமாகும்.

 36. Aanandan on May 24, 2010 at 9:00 am

  திருக்குறளும் இயேசு கிறிஸ்து சர்ச்சும்

  http://saintthomasfables.wordpress.com/2010/05/24/church-and-thirukural/

  பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்

  http://saintthomasfables.wordpress.com/2010/05/24/santhome-p-hd/

  Friends visit here and make your comments.

 37. […] வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், […]

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*