சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். வனவாசிகளின் நலனுக்காக பல கல்விசாலைகள், மருத்துவ சேவை மையங்கள் ஆகியவற்றை நிறுவியவர் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்கள்.

anjali

வன்முறை தாக்குதல்கள் சுவாமிஜிக்கு புதிததல்ல. இதற்கு முன்பாக 1971 இலும் 1995 இலும் அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2007 டிசம்பர் 24 அன்று மீண்டும் ஒரு முறை அவர் மீது செய்யப்பட்ட கொலை முயற்சி கந்தமாலில் கலவரங்களை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுவாமிஜி கட்டாக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அண்மைக்காலங்களில் ஒரிஸாவில் மாவோயிச வன்முறை அதிகமாயுள்ளது. இதற்கான காரணங்களை ஆராயும் காவல் துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் விளக்குகிறார்: ” அரசு சாரா அமைப்புகளை (NGOs) பல்லாயிரக்கணக்கான டாலர்கள் நாட்டுக்குள் வனவாசிகளை மதமாற்ற வருகிறது. குறிப்பாக ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிஸா, ஆந்திர பிரதேசம், வடகிழக்கு ஆகிய மாநிலங்களில். மிஷனரிகளும் அவர்களது துணைவர்களுமாக இந்த பிரதேசங்களில் நிலவும் வறுமையை பயன்படுத்தி செயல்படுகின்றனர். வடகிழக்கு பிரதேசங்களில் பிரிவினைவாத அமைப்புகளில் இவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி பெறுகின்றனர். ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிஸா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளில் பயிற்சி பெறுகின்றனர்.”

கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறார். நேற்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் கொண்ட மாவோயிஸ்ட்கள் வனவாசி குழந்தைகளுக்கான இந்த கல்வி சாலை- ஆசிரமத்தை தாக்கியுள்ளனர். இதில் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதியும் அங்கு தங்கி படிக்கும் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வீடியோ

வனவாசிகளின் மேம்பாட்டுக்காகவும் ஆன்ம உரிமைக்காகவும் தன்னையே பலிதானமாக தந்திருக்கிறார் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி. நர சேவை எனும் நாராயண சேவையில் தன்னை ஈடுபடுத்தி அந்த கண்ணனின் ஜன்மாஷ்டமி அன்று கண்ணன் பாதம் சேர்ந்திருக்கும் அத்துறவியின் தியாகத்துக்கு தமிழ்இந்து.காம் தலை வணங்குகிறது. அவரது ஆன்மா கண்ணன் திருவடிகளை சேர்ந்துவிட்டது. மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள் அனைவரது ஆன்மாக்களும் நற்கதி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறது தமிழ்இந்து.காம். சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதியின் சேவையை முன்னேற்று செல்ல இந்து சமுதாயத்தை வேண்டுகிறோம்.

Tags: , , , , , , ,

 

11 மறுமொழிகள் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

 1. Jeyakumar on August 24, 2008 at 4:11 pm

  சுவாமிஜியின் மற்றும் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். கம்யூனிச தீவிரவாதக் குழுக்களின் இந்த பயங்கர வாதம் வேர்அறுக்கப்படவேண்டும்.

  ஜெயக்குமார்

 2. வேல்முருகன் on August 25, 2008 at 1:42 pm

  மற்ற மனிதர்கள் வாழ்வதற்காக தன் வாழ்க்கையை பலி கொடுக்கும் வீரர்களில் மேலும் ஒருவர்.

  உணவை சுவைக்கும்போதும், நல்ல ஆடை அணியும்போதும், எனக்கு மகிழ்ச்சி தரும் ஒவ்வொரு செயலிலும் ஈடுபடும்போதும், இந்த எனது மகிழ்ச்சிக்காக இவர்கள் தங்கள் வாழ்வையும், மரணத்தையும் விலையாகக் கொடுத்துள்ளார்கள் என்பது ஞாபகம் வருகிறது.

  சமீபத்திய அமர்நாத் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த பண்டி சிங்கும் என் ஞாபகத்திற்கு வருகிறார்.

  மானம் காத்த மனிதர்களே, எங்களது ஒவ்வொரு சுதந்திர சுவாசத்திலும் உங்களது சாம்பல் மணக்கிறது.

 3. தமிழ்செல்வன் on August 25, 2008 at 11:44 pm

  இந்தத துயரமான சம்பவம் மாவோயிஸ்டுகள் – கிறிஸ்துவ மிஷ’நரி’கள் இடையே உள்ள இணைப்பை உறுதி செய்கிறது.

  “வேர்ல்ட் விஷன்” என்கிற கிறிஸ்துவ நிறுவனத்தை சேர்ந்த பிரதேஷ் குமார் தாஸ் என்கிறவனும், லால் திகால் என்கிற கிறிஸ்துவ தீவிரவாதி வீட்டிலிருந்து விக்ரம் திகால், வில்லியம் திகால் என்கிற கிறிஸ்துவ-மாவோயிச தீவிரவாதிகளும், இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.

  “கிறிஸ்துவ-மாவோயிச-இஸ்லாமிய ஜிகாதி” கூட்டணி நமது இந்து தேசத்திற்கு எதிராகவும், இந்து மக்களுக்கு எதிராகவும் வேலை செய்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அந்தக் கூட்டணிக்கு போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் காவடி தூக்குகின்றன என்பதையும் இந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்து ஊடகங்களும் இந்துக்களுக்கு எதிராகவே வேலை செய்வதால், தமிழ் இந்து போன்ற இணைய தளங்கள் திறம்பட சேவை செய்து இந்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  தள்ளாத வயதிலும் ஹிந்துத்துவத்திற்காக போராடிக் கொண்டிருந்த அந்த உறுதி மனம் கொண்ட மாவீரர் ஆன்மாவும் அவருக்கு துணையாக இருந்த மற்ற நால்வரின் ஆன்மாக்களும் சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.

  தமிழ்செல்வன்,

 4. Srinivasan Venkataraman on August 26, 2008 at 12:09 pm

  Very SAD.
  VERY SHOCKING.
  Our Namaskarams to that SOUL.
  God Bless.
  Srinivasan.

 5. கந்தசாமி சு on August 26, 2008 at 11:51 pm

  இந்து என்றால் கிழவரையும் குழந்தைகளையும் கூடக் கொல்லும் அளவுக்கு வெறிபிடித்து கிறிஸ்தவ மிஷினரிகள். இதுவே ஆதிவாசிகளை போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றிக்கொண்டிருந்த ஒரே ஒரு வெள்ளைத் தோல் மிஷனரி கொல்லப்பட்டபோது உலகமே சேர்ந்து கண்ணீர் விட்டது. எத்தனை நூற்றாண்டுகளாக எத்தனை மகான்களும் சாதாரண இந்துக் குழந்தைகளும், குடும்பத்தினரும் இப்படிக் கொல்லப்பட்டு வருகின்றனர். இதை நமது ஊடகங்கள் பார்க்காத மாதிரி இருக்கின்றன.

  விழிப்புணர்ச்சியூட்டும் தகவல்களைத் தரும் தமிழ் இந்துவின் சேவை பாராட்டுக்குரியது. இதன் ஆங்கில வடிவத்தையும் வெளியிடுங்கள். உலகத்துக்கு உண்மை தெரியட்டும்.

 6. ரமேஷ் on August 27, 2008 at 2:37 am

  சாதுக்களைக் கொல்லும் துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும் ஸ்ரீ கிருஷ்ணன் தோன்றுவார்.

  மிஷ ‘நரிகளும்’, மாவோயிஸ்ட் ஓநாய்க் கூட்டமும், மதவெறி கொண்ட காட்டுமிராண்டிகளும் நரசிம்ஹத்தின் முன் ஒலி அடங்கி ஓலமிட்டு அழியப் போகின்றன.

  “..பரித்ரானாய ஸாதுனாம்; விநாசாய சதுஷ்கிருதாம்
  தர்ம ஸ்ம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே! யுகே!..”

 7. Raja.R.S on August 27, 2008 at 6:20 pm

  Some details are found in the below article ( published much earlier ) about what is going wrong in Orissa.

  http://www.rediff.com///news/2008/jan/08guest.htm

 8. ஆசிரியர் குழு on August 27, 2008 at 6:54 pm

  மறுமொழி அளித்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

  உங்கள் ஆதரவுடன் இந்துக்களுக்கு விழிப்புணர்வூட்டும் இப்பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

  தமிழ் இந்து ஆசிரியர் குழு.

 9. ஜடாயு on August 27, 2008 at 8:16 pm

  ஒரிஸ்ஸா நிலவரம் பற்றி தவறான, ஒருதலைப் பட்ச செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்கள் கண்டனத்திற்குரியவை.

  இந்தப் படுகொலை மற்றும் அதன் பின்னணி பற்றிய உண்மையான தகவல்களைத் தரும் சந்தியா ஜெயின் அவர்களின் கட்டுரை – http://www.vijayvaani.com/article_27au2.htm

 10. t.r.pattabiraman on April 8, 2009 at 2:26 pm

  தியாகம் செய்பவர்களால்தான் இந்த உலகம் இன்னும்நிலைபெற்றிருக்கிறது. அவர்கள் மனிதர்களல்ல. அவர்கள் தெய்வங்கள். ஏனென்றால் இறைவன் பெயரே தியாகேசன் என்று சில பேருக்குத்தான் தெரியும்.

 11. R.Sridharan on June 8, 2010 at 9:53 am

  மாவோயிஸ்ட் களால் கொல்லப்பட்டார் என்பது ஒரிசா அரசும் அதன் காவல் துறையும் அவசர அவசரமாக ஆராயாமல் சொன்ன புளுகு இதற்கு முன்னால் அத்துறவியின் மீது பல தாக்குதல்கள் நடத்த முயற்சிகள் நடந்தன
  அவற்றில் ஈடுபட்டவர்களில் சிலர் கிறித்தவர்கள்
  மேலும் அவருக்கு பல மிரட்டல்களும் வந்துள்ளன
  அவர் கிறித்தவர்களின் மத மாற்றங்களை தடுத்து நிறுத்தியது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதும் எல்லோரும் அறிந்தது
  எனவே இதில் சந்தேகம் உடனடியாக யார் மீது விழ வேண்டும் என்பது சாதாரண அறிவு உள்ள ஒருவனுக்கு கூட தெரியும் .

  இரா.ஸ்ரீதரன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*