புனிதமான காலமிது
புரட்டாசித் திங்களிது!
மனிதகுலம் வாழ்ந்திடவே
மழைதொடரும் காலமிது!
மலைமகளும் அலைமகளும்
மகிழ்வுடவே கலைமகளும்
குலமகளிர் இல்லமெலாங்
குடியிருக்குங் காலமிது!
நவயிரவுப் பண்டிகையில்
நங்கையர்தாம் கொலுவமைத்துச்
சிவபாகத் துமையருளைச்
சிந்திக்கும் நேரமிது!
மாவிலையுந் தோரணமும்
மாக்கோலத் திருவழகும்
கோவிலென விளங்குகிற
திருவிளக்கும், கமழ்மணமும்,
இன்னிசையால் செவியினிக்கும்
இன்பநிலை கண்டிடவும்,
மன்னர்போல் மதலையுலா
வீதிகளை நிறைத்திடவும்,
பேதமின்றி மக்களெலாம்
பூஜையிலே மனமுவக்க,
கோதில்லாப் பக்தியிலே
கட்டுண்பாள் அன்னையவள்;
மந்திரத்தில் அடங்குபவள்
மகமாயி தேவியவள்,
தந்திரத்தில், யந்திரத்தில்
தனைவணங்க வருகுபவள்;
நாயகியை இவ்வாண்டும்
நாம்கூடி அழைத்திடுவோம்,
தாயவளின் தாள்நிழலில்
தவமுனிவர் பேறடைவோம்!

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4
ஓடிப் போனானா பாரதி? – 09
மகான்கள் வாழ்வில் – 8: ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? –
வீடியோ: தியானம்
பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) – ஸ்ரீ ராம்தேவ் – 2
Taken – தந்தைகளின் திரைப்படம்
கம்பராமாயணம் – 1
எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?
ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 4
சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…
”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!
ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா
புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!
சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்
மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்
சீன டிராகனின் நீளும் கரங்கள்
தாய்மதம் திரும்பும் சகோதரர்கள்
அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை
திராவிட இனம் – வரலாற்று உண்மையா?
ஓடிப் போனானா பாரதி? – 08
நல்வாழ்வு வேண்டுவோம்!
வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்
ரமணரின் கீதாசாரம் – 10



ஆறொடுமூன் றிரவினிலும்
அம்மையவள் திருப்புகழைக்
கூறிடவும் தொழுதிடவும்
கூறுகவி மிகஇனிது!
தலைமகளாம் தாயை மலைமகளாக – அலைமகளாக – கலைமகளாக விரித்துக் கூறி நவ இரவு எனத் தலைப்பு கொடுத்து உள்ளீர்கள். நவராத்திரியை நவ இரவு என தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளீர்கள். யாராவது நவ என்பதையும் உரிய முறையில் தமிழ் மொழியில் கூறினால் இன்னும் இனிமையாக இருக்கும். மொழி வெறி அல்ல. தொலைந்ததைத் தேடுகிறேன். அவ்வளவே. மிக்க நன்றி.