எம் தெய்வங்கள் – குலதெய்வம்

muneeswaranசென்ற வாரம் எங்கள் குலதெய்வத்தை கும்பிட சென்றிருந்தோம். ஆறு தலைமுறைகளுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள சிறிய ஊரிலிருந்து எங்கள் முன்னோர்கள் சோழவந்தான் வழியாக புலம்பெயர்ந்து கடைசியில் தேவகோட்டைக்கு வந்து சேர்ந்தபோது தம்முடன் கொண்டுவந்த பிடி மண்ணை அங்கே வைத்து வழிபடத் துவங்கியதுடன் எங்களது குலதெய்வ வழிபாடு தேவகோட்டையில் நிலை பெற்றது.

சொந்தங்கள் பலர் வந்திருந்தனர். பொங்கலுக்கு அடுத்த நாளில் இரவில் படையல் நிகழ்த்தி, அங்கிருக்கும் வீரனார் சாமிக்கு சைவப் படையலும், வீட்டு தெய்வங்களுக்கு (மரணமடைந்த முன்னோர்கள்) அசைவப் படையலும் நிகழ்த்துவது எங்களது வழக்கம்.

காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அங்கே எங்கள் குலதெய்வத்திற்கு பலி கொடுக்கப்படுவதாக அறிந்தோம். வீரனாரின் துணை, பாப்பாத்தி என்ற தெய்வம் என்றும் அங்கே அறிந்தேன். ஆனால், எங்கள் குடும்பங்களில் வீரனாருக்கு சைவப்படையல் மட்டுமே, அசைவம் ஆகாது.

பல தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாகவோ அல்லது முஸ்லீம் படையெடுப்புகளின் காரணமாகவோ தொண்டைநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் எங்களது முன்னோர்கள். இந்த இரண்டு காரணங்களை ஏன் யூகிக்கிறேன் என்றால், இந்தியாவில் பெருமளவில் புலம்பெயர்தலை தூண்டியது முஸ்லீம் படையெடுப்புகள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சங்கள். படையெடுப்புகளும், அந்நிய ஆட்சிகளும் பஞ்சங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

எனது மகன் தற்போது சண்முகாவில் இரண்டாமாண்டு பொறியியல் படித்துவருகிறான். எனது வற்புறுத்தலின் பேரில் அவனும் வேண்டாவெறுப்பாக வந்து கலந்து கொண்டான். பின்பு அவனைப் போன்றே சில இளைஞர்கள், பெண்கள் இருப்பதை கவனித்து அவர்களை தனியே அழைத்து உரையாடலை துவங்கினேன்.

அவர்களில் சிலர் நாத்திகர்களாகவும், பலர் ஆபிரகாமிய கருத்தியல்களை நம்பி ஒரே கடவுள் மற்றும் நாகரிக வழிபாடு என்று அவர்கள் கருதும் வழிபாடுகள் மீது நம்பிக்கை மற்றும் மதிப்பு வைத்திருப்பவர்களாக இருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ‘நமது முன்னோர்கள் அனைவரும் முட்டாள்கள்’ , நாகரீகமில்லாமல் நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள் என்ற போதனை அவர்களையும் அறியாமலேயே அவர்களுக்கு அந்நிய மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலிருந்து மூளைச்சலவை மூலம் உள்ளிறங்கியிருந்தது.

நான் அவர்களுக்கு சொன்ன விஷயங்களில் சில:

ஒரே கடவுளா பல கடவுளா?

1. ஒரே கடவுள் அதைத் தவிர மற்றதெல்லாம் சாத்தான் என்பதுதான் மிகவும் மோசமான சிலை/உருவ வழிபாடு. ஏனெனில், ஒரே கடவுள் என்பது கடவுளை மனிதர்களைப் போன்றே கருதுவதன் மூலமாக ஏற்படுகிறது. இது சில மனிதர்களின் மனதில் எழுந்த விபரீத கற்பனை மயக்கமாகும்.

2. ஒரே இறை நிலை என்பது உண்மையே. ஆனால் அப்படி கடவுளை ஒரு உருவமற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட இறை நிலையாகக் கருதும்போது, அந்த நிலை பல உருவங்களாகவும், உருவமில்லாததாகவும், இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டவையாகவும் கருதமுடியும். அதைத்தான் நமது இந்து மதமும், இந்து ஞானமரபும் சொல்கிறது. ‘ஏகம் சத் விப்ர பஹூத வதந்தி’ என்று ரிக் வேதம் இதையே குறிப்பிடுகிறது. அதாவது ‘சத்தியம் ஒன்றே, சான்றோர்கள் அதை பலவிதமாக விவரிக்கின்றார்கள்’. இதுவே சத்தியமான வாக்கு, கடவுள் நிலையில் இருந்த பல்வேறு மகான்கள் இதை அனுபவ பூர்வமாக தமது வாழ்வில் உணர்ந்திருக்கின்றார்கள்.

3. சுவாமி விவேகானந்தர் இது போன்ற ‘பகுத்தறிவு-மூடத்தனத்தை’ கொண்டிருந்தபோது மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் ஒரு மூதாட்டியை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த மூதாட்டி பரவசத்துடன் கண்ணன் தன்னிடம் சிறு குழந்தையாக வந்து விளையாடுவதை விவரித்தார். அதைக் கேட்டவுடன் விவேகாந்தருக்கு பேச நா எழவில்லை. ஏனெனில் அது சத்திய வாக்கு, அந்த மூதாட்டி நேரடியாக இறை அனுபவத்தை பெற்றவர் என்பதை அவர் உணர்ந்தார். பின்பு விவேகானந்தர் காளி தேவியையே நேரில் தரிசித்து தெளிவடைந்தது தனிக்கதை.

4. இப்படி தூய்மையான வாழ்வை வாழ்ந்து, ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு மிக நேர்மையான வாழ்வை வாழ்ந்த ஞானிகள் தெளிவாக கடவுளை எந்த ரூபத்திலும் , எந்த வடிவிலும் நாம் தரிசிக்க முடியும், நாம் விரும்பும் வடிவில் கடவுள் தோன்றுவார், நமது மனத்தூய்மையும் கடவுளின் மீதான நாட்டமுமே முக்கியம் என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டு போயிருக்கும்போது, எங்கோ அரேபியாவில் அல்லது இஸ்ரேலில் ஆன்மீக அறிவே இல்லாத மாக்களிடையே தோன்றி ஆசாபாசங்களுடனும் அரக்க குணங்களுடனும் சந்தேகத்துக்கிடமான வாழ்க்கை வாழ்ந்து, இன்னது என்று புரியாத, தெளிவில்லாத வாழ்க்கையையும் உபதேசங்களையும் வழங்கிச் சென்ற நபர்கள் சொல்வதை வைத்து ஒரே கடவுள் தான் இருக்க முடியும், அந்த கடவுளும் பொறாமையும், ஆணவமும், அஹங்காரமும் கொண்டு மற்ற மதங்களை பின்பற்றுபவர்களின் மீது போர் புரியச் சொல்லி தூண்டும் கடவுள் என்று பைபிளின் பழைய ஏற்பாடும், குரானும் சொல்வதாக சொல்வது எத்தனை அபத்தம்?

5. நான் இப்படி கேட்டவுடன் அவர்கள் திக்கித்து போனார்கள். பலருக்கும் எதோ புரிந்தது போன்று இருந்தது.

6. இந்த புரிதலை அவர்களிடையே ஏற்படுத்தியவுடன் அடுத்ததாக குலதெய்வத்திற்கு வந்தேன்.

குலதெய்வ வழிபாடு ஏன்?

1. நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை. ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை காணலாம்.

2.வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள். தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற வழிபாடுகளின் மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடையே அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம்.

3. முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய பெரியோர்கள். அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில் இறந்தவர்கள். இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது.

4. இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு – வேலைக்காக, திருமணம் நடக்க, வழக்கு தீர – இப்படி பலப்பல சொந்த, குடும்ப நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம். ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை நோக்கிய பாதையில் திருப்பும் மைல் கல்லாக இருக்கின்றன. இந்த வழிபாட்டிலிருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம் எதிர்பார்ப்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலையை அடைகிறோம்.

5. நன்கு ஆராய்ந்து பார்த்தால் இது போன்ற வழிபாடு இதை நிராகரிக்கும் ஆபிரகாமிய மதங்களிடையேயும் தோன்றிவிட்டதை கவனிக்கலாம். இதற்கு இறையியல் ரீதியாக எதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லப்படுவதையும் அல்லது இது அவர்களது மதத்திற்கு புறம்பானது என்று தெரிந்தாலும் சாதாரண ஜனங்கள் இந்த வழிபாடுகளை அங்கே செய்வதையும் கவனிக்கலாம். ஏனென்றால், இதுவே இயல்பான இறை பாதை. இஸ்லாம் மதத்தில் அவர்கள் போரில் இறந்தவர்களையும், நோயில் இறந்தவர்களையும், இறைவனை நோக்கி வழிபாடு செய்து இறந்தவர்களையும் கும்பிடுகிறார்கள். நாகூர் தர்கா, அஜ்மீர் தர்கா இன்னும் மூலைக்கு மூலை தர்காக்கள் இப்படியே ஏற்பட்டன. இது இந்தியாவில் மட்டும் இல்லை, மொரோக்கோ துவங்கி இந்தோனேசியா வரை இஸ்லாம் பரவியிருக்கும் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. கிறிஸ்துவ மதத்திலோ புனிதர்கள் என்ற பெயரில் பலரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. பைபிளில் ஆதாரமில்லாத போதும் ‘புனிதர்’ என்ற பெயரில் இயேசுவின் தாயாரை வழிபடுவது தொடர்கிறது. இதில் ஒவ்வொரு புனிதருக்கும் ஒவ்வொரு விசேஷ சக்தி இருக்கிறது என்ற கற்பனைவேறு. இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த மதங்கள் எல்லாம் நமது புனிதமான இந்து மதத்தை ‘பல கடவுள்களை வணங்கும் மதம், சிலை வழிபாடு உள்ள மதம்’ என்று நிராகரிப்பதுதான். மூடர்கள்!

6. எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை நம்பிக்கையோடு பிரார்த்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி, செம்மையாக்குவது என்று அவர்களுக்கு புரியவைத்தேன்.

புரிந்ததோ இல்லையோ மறுநாள் பூஜைகளில் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். சிந்திக்க சிந்திக்க அவர்களுக்கு இந்த உண்மை, நமது மதத்தின் பெருமை புரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு?…..

(தொடரும்)

Tags: , ,

 

15 மறுமொழிகள் எம் தெய்வங்கள் – குலதெய்வம்

 1. RS on January 24, 2009 at 10:52 am

  நா. மகேந்திரன் போன்றார் கதைப் பிரசங்கம் செய்யத் துவங்கினால்
  தமிழகத்தில் ஒரு கருத்து பூர்வமான மறுமலர்ச்சி ஏற்படும்.

 2. ஜயராமன் on January 24, 2009 at 11:21 am

  குலதெய்வ ஆராதனையின் மகத்துவத்தை மிகவும் அருமையாக விளக்கியுள்ளார். இளைய தலைமுறை அனைத்தும் அறிய வேண்டிய கட்டுரை. வழங்கியதற்கு மிக்க நன்றி.

  ஜயராமன்

 3. Soundar on January 24, 2009 at 10:17 pm

  ஒரே இறை நிலை என்பது உண்மையே. ஆனால் அப்படி கடவுளை ஒரு உருவமற்ற, குணங்களுக்கு அப்பாற்பட்ட இறை நிலையாகக் கருதும்போது, அந்த நிலை பல உருவங்களாகவும், உருவமில்லாததாகவும், இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டவையாகவும் கருதமுடியும். அதைத்தான் நமது இந்து மதமும், இந்து ஞானமரபும் சொல்கிறது. ‘ஏகம் சத் விப்ர பஹூத வதந்தி’ என்று ரிக் வேதம் இதையே குறிப்பிடுகிறது.

  மேலே சொல்லப்பட்டதைத் தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழியிலிருந்து:

  உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
  உளன் அலன் எனில் அவனுருவம் இவ்வருவுகள்
  உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
  உளனிரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே

 4. Raghu on January 27, 2009 at 3:19 pm

  ஆழமாக சொல்லியுள்ளீர்கள். இந்து நம்பிக்கை உடைய எனக்கு கூட பல சந்தேகங்கள் தெளிந்தன. நன்றி.

 5. Srithar on January 28, 2009 at 3:45 pm

  நன்பர் ரகு சொல்லியுள்ளதைப்போல எனக்கும் ஒரு தெளிவு கிடைத்தது.. மற்றும் பிற மதத்தினர் நம் மீது பரப்பும் அவதூறுகளுக்கும் பதில் கொடுத்துள்ளீர்கள். நன்றி. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 6. முடிவிலி on July 16, 2009 at 2:47 pm

  அருமையான கருத்துக்கள் …
  குல தெய்வ கோயில்களை குறித்து

  ”” குல தெய்வம் என்பது வெறும் கடவுள் அல்ல.. நம் முன்னோர்கள்.. நம் இரத்த பந்தங்கள் .. நம் வாழ்விற்காக தியாகம் செய்தவர்கள் .. குல தெய்வத்திற்கு என்னை தெரியும் .. என் முன்னோர்களை தெரியும் ..

  எனக்கு பிடித்த ஒரு கோயிலை எடுத்து கொண்டால் அங்கு நான் போய் இருக்கிறேன்.. என் தந்தை போய் இருக்கிறார் .. ஆனால் என் தாத்தா ..? என் பட்டன் முப்பாட்டன் மார்கள் ..? தெரியாது .. ஆனால் என் குல தெய்வ கோயிலுக்கு அனைவரும் வந்திருக்க கூடும் … என் பாட்டன் .. முப்பாட்டன் .. எம் குல கிழவிகள் … எல்லோரும் …

  நம் தந்தை உபயோக படுத்திய பழைய மிதி வண்டிக்கு நாம் கொடுக்கும் மதிப்பு .. நம் தலை முறைகளை கண்ட குல தெய்வ கோயிலுக்கு தருகிறோமா ..? நம் முன்னோர்களின் பாத சூடு உணர்ந்த தரைகளை .. நிலங்களை ., அவர்கள் மூச்சு காற்று நிறைந்த வளியின் வெளியை .. எவ்வளவு உதாசீன படுத்துகிறோம் ..?

  எங்கோ எவனுக்க்காகவோ மரணம் அடைந்த ”சே ”’ லெனின் ” போன்றவர்களின் கருத்துக்களை பறை சற்றி கூவி திரியும் இன்றைய இளைஞர்கள் ,,. ””நம் மக்களுக்காக”” தியாக மரணம் அடைந்த நம் முன்னோர்களின் இருப்பிடமான குல தெய்வ கோவில்களை புறந்தள்ளுவது கொடுமையிலும் கொடுமை ….

 7. Mohankumar on July 24, 2010 at 11:14 am

  அருமையான கருத்துக்கள் …
  குல தெய்வ கோயில்களை குறித்து

  நான் மதுரை இல் வசிக்கிறேன். என்னோட குலதெய்வம் ஸ்ரீ கலியுகவரத அய்யனார் என்று சிவகங்கை மாவட்டம் தமராக்கி என்னும் ஊரில் உள்ளது

  எங்க தாதா கருப்புசாமி அடி, அனால் எங்க அப்பாக்கு அதில் உடன்பாடு இல்லை. முன்பு எனக்கு என் குலதெய்வம் பத்தி எதுவும் தெயரியாமல் இருந்தேன்.

  சில வருடம் கலித்து என் தாதா இறந்த பின். அவர் மீது இருந்த சாமி இப்பொழுது என் மீது உள்ளது.

  எனக்கு இப்பொழுது என் குலதெய்வதின் மீது பற்று அதிகமாகி, அதை பற்றி பூர்வீகம், வரலாறு அனைத்தையம் அறிந்து புத்தகம் அமைத்து என் பங்களிகாளுக்கு கொடுத்தேன்.

  அபோது ஒரு முதியவர் இதுபோல் உன் தாதா செய்ய வேண்டும் என்று நினைத்தார் பரவஇல்லை பேரன் நீ செய்து காட்டிவிட என்று சொன்னார் . நான் சற்று திகைத்து நின்றேன் அப்போது தான் நினைத்தேன் நம் முனோர்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருகிர்ரர்கள் என்று.

  மேலும் என் தாதா என்ன சாமி கும்பிட என்ன செய்தாரோ அதை அப்படிஎ தொடருகிறேன் .

  இனிவரும் சந்ததிஇனருக்கு …..
  ஒரு அறிவுரை

  முதலில் தாய் தந்தை சந்தோசமாக வைத்துகொள்ளுங்கள் இரண்டாவது நம முனோர்கள முறையான வழிபாடுசெய்ய்ங்கள் மூன்றாவது நாம குலதெய்வம முறையான வழிபாடுசெய்ய்ங்கள்.

  இவாறு வழிபட்டால் நம் குடும்பத்தில் அகல மரணம், புத்தி சுவாதீனம், குடும்பம் பிரசனை, குடும்பம விருத்தியில்லாமல், செய்வினை, பேய், பிசாசு, குடும்பத்தில் திருமண தடை, குழந்தையின்மை போன்ற தொல்லை நம் வாழ்வில் இல்லை.

  இதை என் வாழ்வில் கண்கூட பார்துளேன்.

  மேலும் இதுபோன்ற குலதெய்வம் கருத்துகள் தெரிவிக்கவும்

  நன்றி

  ஜே . மோகன்குமார்
  செல்; 9944555991

 8. Mohankumar on July 26, 2010 at 11:19 am

  எங்க குல தெய்வம் ஸ்ரீ கலியுகவரத அய்யனார், தமராக்கி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

  அங்கு நடந்த உண்மை சம்பவம்….

  அக்காலத்தில் எங்க கோவில் முன் கோவில் சொந்தமான நிலத்தில் கத்திரிக்காய் தோட்டம் இருந்துள்ளது. ஒரு நாள் நல்ரவில் நான்கு திருடர்கள் அவளியாக வரும்போது கத்திரிக்காய பறித்து அவர்களது வேட்டியில மூட்டை கட்டி தலை மீது வைத்து கிளம்பும்போது அவர்களது கண்கள் தெரியவில்லயம், கால்கள் ஒன்றுடுன் ஒன்று பின்னி கொண்டதாம்.

  கோவில் முன்பாக அந்த திருடர்கள் கண்ணீர் விட்டு அலுது புலம்பி உள்ளனர்.

  கோவிலுக்கும் அங்குள்ள கிராமத்திற்கும் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

  அன்னளிரவில் கிராமத்தில் தூங்கி கொண்டு இருந்த கோவில் பூசாரியை சாமி கனவில் கோவில் முன்பாக அந்த திருடர்கள் கண்ணீர் விட்டு அலுது புலம்பும் காட்சியை கண்ணில் காட்டவும்.

  உடனே பூசாரி கோவில் வந்து பார்க்கும் போது பூசாரிக்கு சாமி இரங்கி அவர்கள் நான்கு பேரிடமும் உங்களுக்கு கண் தெரிய வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் வம்சம் வம்சம் உங்க பிள்ளை குடி பேரன் பேதி உங்க குடும்பத்தார் அனைவரும் இந்த கோவில் வந்து கார்த்திகை மதம் கத்திரிக்காய் மாலை போட்டு நீங்கள் கோவில் முன்பு நின்று ஆடவேண்டும் என்று கூறியதும் அந்த திருடர்களும் சமதிதனர்.

  இன்னும் எங்கள் கோவிலில் இது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

  நன்றி
  ஜெ. மோகன்குமார்

 9. சகோதரன் on August 17, 2010 at 11:03 pm

  முன்னோர்களை வழிபடுவது எல்லா மதத்திலும் உண்டு. ஆனால் வெளிப்படையாக வணங்குவது இந்துமதத்தில் மட்டுமே!

  – ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

 10. kannipoo on June 23, 2011 at 7:27 pm

  குலதெய்வம் வழிபாடு ஓவ்வொரு தனி மனிதனும் செய்ய வேண்டியது அவசியம் .

 11. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on June 24, 2011 at 12:31 pm

  அன்புக்குரிய நா மகேந்திரன் எழுதிய குல தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. அதற்கு திரு மோகன் குமார் எழுதிய மறுமொழி உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. இருவரும் பாராட்டிற்குரியவர்கள். குலதெய்வங்கள் வழிபாடு முன்னோர் வழிபாடு என்பது சரியே. பெரும்பாலும் நம் முன்னோர்கள், நம்மைக்காத்தவர்கள், நமது சமுகத்திற்காக உயரிய நோக்கங்களுக்காக தியாகம் செய்தவர்கள் ஆகியவர்களே குலதெய்வமாக வழிபடப்படுகிறர்கள. இது பெரும்பாலும் நம் பண்டைத்தமிழகத்தில் இருந்து தொடரும் நடுகல் வழிபாடே. கொங்கு நாட்டில் நடுகற்கள் ஈருகல் (வீரக்கல்) என வழங்கப்படுகின்றன. வீரமாசித்தி(வீரமாஸ்தி), தீய்பாய்ந்தாள், போன்ற தெய்வங்களும் இங்கே குறிப்பிடத்தகுந்தவை.
  குலதெய்வ வழிபாடு தவிர்க்கப்படக்கூடாதது என்பது காலம் காலமாக நம் மக்களின் நம்பிக்கை. குலதெய்வ வழிபாடு செய்யாது செய்யப்படும் இதரவழிபாட்டில் பயன் இல்லை என்பது உண்மை. குலதெய்வ வழிபாடு திருமணம் செய்வதற்கு முன் செய்யப்படுகிறது. புது மண தம்பதிகள் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் மிகவும் வலியுறுத்தப்படுகின்றன. குடும்ப அளவிலும் மொத்த குலம் முழுவதும் சேர்ந்து செய்யும் குல தெய்வ வழிப்பாடு குல மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. நமது குலதெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறையேனும் மறவாது வழிபட வேண்டும்.நல்ல செயல்களைத் தொடங்கும் போது குல தெய்வத்தின் ஆசியை வேண்டுதல் நன்மை பயக்கும் என்பது அனுபவத்தால் உணரலாம்.
  இன்றைய காலக்கட்டத்தில் ஹிந்து இளைஞர்கள் குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை மேன்மையை சிறப்பை உணரவேண்டும். குல தெய்வத்தின் வரலாறு கதைகள் ஆகிவற்றை திரட்டி நூல்களாக வெளியிட வேண்டும்(திரு மோகன் குமார் போன்று). முக்கியமாக குல தெய்வ வழிபாட்டு முறையை கேலி செய்யாமல் புரிந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக சாமியாடுதல் போன்ற நமது சமுகத்தில் ஆழ்ந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள முயலவேண்டும். நம் முன்னோர்களோடு தொடர்பு கொள்ளும் முயற்சியே சாமியாடுதல் என்பது எனது அனுபவம். அதில் ஆழ்ந்த உண்மை நம்பிக்கையோடு பின்பற்றுபவர்கள் மட்டும் உணரமுடியும்.

 12. mani on July 9, 2011 at 10:19 am

  யன் குல தெய்வம் புதுக்கடை அருள்மிகு அக்னி மாடன் எலாரும் அவங்க குல தெய்வம் கண்டிப்பா வணகுங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும்

 13. karuppusami on May 18, 2014 at 1:42 pm

  karuppusami thunaiyaga pappathi amman….. veeranarukku thunaiyaga pommiyamman, kummiyamman, ithuthan unmai purinjikonga nanbarkale.

 14. பாலசுப்ரமணியம் on January 11, 2017 at 1:55 pm

  அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

  குல தெய்வம் பற்றி அனைவரும் குறிப்பிட்டதுபோல் நானும் சில கருத்துக்களை பதிவிட விரும்புகிறேன்.
  ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை நாளில் முதலில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு பின்பு குலதெய்வ கோயில் சென்று அவரவர் விருப்பதிற்கு தகுந்தபடி 3,6,9 என்ற எண்ணிக்கையில் நல்லெண்ணை தாமரைத்தண்டு திரி மூலம் தீபம் ஏற்றி குடும்பத்தார் அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டு வர எல்லா நன்மைகளும் சிறப்பும் கிடைக்கும் என்பது உறுதி.

 15. BSV on January 11, 2017 at 9:49 pm

  ஒருவர் இங்கு குறிப்பிட்டதைப்போல முன்னோர்களை வழிபடல் எல்லாமதங்களிலும் இருக்கிறது. மதம் தாண்டி சில மக்கட்பண்பாடு இவ்வழிபாட்டுக்கு சிறப்பு அமசத்தைத் தருகிறது. ஜப்பானிய பண்பாடு ஓர் எடுத்துக்காட்டு. கிருத்துவத்தில் சாம்பல் புதன்கிழமை என்ற விழா முன்னோர் வழிபாடே.

  தமிழ்நாட்டு இந்துமதத்தில் குலதெய்வ வழிபாடு தனிச்சிறப்பு எனலாம். வடநாட்டு இந்துக்களிடையே முன்னோர் வழிபாடு இருப்பினும், எங்கோ ஒரு காட்டோரத்திலோ சிற்றூரிலோ குல தெய்வக்கோயிலுக்குப் போனார்கள் என்று ஹிந்திக்கதைகளிள்கூட‌ யான் படித்ததில்லை.

  குலதெய்வ வழிபாட்டைப் பற்றி எழுதியவரும் அதற்குப்பின்னூட்டக்கருத்துக்களை எழுதியோருக்கும் குலதெய்வங்கள் எல்லாருக்குமுண்டா? என்ற கேள்வி எழவே இல்லை. இருந்தால்தானே அதை வணங்குவதைப்பற்றிப்பேசலாம் என்ற நினைப்பும் இல்லை.

  தமிழரில் இருவகை: ஒன்று குலதெயவம் இல்லாதவர்கள். இன்னொன்று இருந்தும் அதை அலட்சியம் பண்ணுபவர்கள். இரண்டாமவரைப்பற்றித்தான் கட்டுரையாளர் சிரமேற்கொண்டு எழுதுகிறார். மற்றவர் நிலையென்ன? என்பதையும் சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அனாதை ஆசிரமங்களில் ஆயிரக்கணக்கான குழ்ந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகின்றன. அவர்க்ளுக்கு?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*