பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்

பொங்கல் பண்டிகை தொடர்பாக இரண்டு நிகழ்வுகள்.

செய்தி – 1:

கலிஃபோர்னியா மாகாணம், அமெரிக்கா:

பொங்கலும் தேங்க்ஸ்கிவிங்கும் ஒன்றுதான்

இங்குள்ள வளைகுடாப் பகுதியில் (Bay Area) வசிக்கும் தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் , செயிண்ட் ஜோசப் சர்ச் வளாகத்தில், ஜனவரி 14 அன்று பொங்கல் என்ற “இந்திய நன்றி தெரிவிக்கும் நாள்” (Indian Thanksgiving) விழாவைக் கொண்டாடினர். இப்பகுதி தமிழ் கிறிஸ்தவத் தலைவரான சுந்தர் வின்சென்ட் பொங்கல் பற்றிக் கூறுகையில் “Pongal is a harvest festival, the Tamil equivalent of Thanksgiving” என்று குறிப்பிட்டார். விசேஷ சுவிசேஷ பிரார்த்தனை மற்றும் “விசேஷ இந்திய விளக்கு” ஏற்றுதல் மற்றும் இரவு உணவுடன் விழா முடிவடைந்தது. இதுபற்றி அவர் அமெரிக்கப் பத்திரிகைகளிடம் மேலும் கூறுகையில், “உலகெங்கும் பல தேசங்களில் 90 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அப்போஸ்தலர் புனித தாமஸ்தான் தமிழ் பேசும் இந்தியர்களுக்கு கடவுள் பற்றிய நற்செய்தியை முதன்முதலில் சொன்னார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அவர் கொல்லப் பட்டார்” என்றார்.

“சென்னையில் உள்ள புனித தாமஸின் கல்லறைக்கு ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தமிழ்ப் பொங்கல் (Tamil Pongal) புதிய நம்பிக்கையை அனைவருக்கும் அளிக்கும்” என்றார் அவர். இவ்விழாவில் Bishop Patrick J. McGrath, Father William Rosario, Father Oscar D. Tabujara, Father Robert B. Moran ஆகிய உள்ளூர் (அமெரிக்க) கிறிஸ்தவப் பங்குத் தந்தைகள் மற்றும் பல கிறிஸ்தவத் தலைவர்களும் பங்கு கொண்டனர்.

(நன்றி: https://www.dsj.org)

செய்தி 2:

பிள்ளையார்புரம், கன்னியாகுமரி மாவட்டம், இந்தியா.

வீட்டு முன்பு பொங்கல் வைக்க போலீஸ் அனுமதி மறுப்பு

நாகர்கோவில், ஜன 16: வீட்டு முன்பு பொங்கல் வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் பிள்ளையார்புரத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப் பட்டனர்.

pongal-pillaiyarpuram

(நன்றி: தமிழ்முரசு)

தடை போட்டதற்கு காரணம? அங்கு ஏன் “மீண்டும்” பதற்றம்? பின்னணி இதோ –

சென்னை, ஜன.2: கன்னியாகுமரியில் நீதிமன்ற உத்தரவை மீறி முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்திருப்பதைக் கண்டித்து வரும் 5ந் தேதி பிஜேபி சார்பில் நாகர்கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து பிஜேபி மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், மதுசூதனபுரம் பகுதி, ஆத்திகாட்டு விளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் எனும் சிறிய ஊரில் சுமார் 150 வீடுகள் உள்ளன. அதில் 8 வீடுகள் மட்டும் கிறிஸ்தவர்கள். இங்கு காலம்காலமாக முத்தாரம்மன் கோயில் கொடைவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

இந்த வருடம் புதியதாக பெரிய வாகனம் ஒன்று செய்யப்பட்டு வாகன பவனிக்கு ஏற்பாடாகியது. ஆனால் ஊர்வலப்பாதையில் சர்ச் இருப்பதாக கூறி, கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கோயில் ஊர்வலம் செல்லும் பாதையில் இருந்து 250 அடிக்கு கிழக்கில்தான் சர்ச் இருக்கிறது. அந்த சர்ச்சிற்கு முன் நாம் கொண்டுசெல்லும் வாகனம் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தெருவை சர்ச்சுக்கு சொந்தமான தெரு என்று கிறிஸ்தவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அந்த தெருவிற்கு பூமி கொடுத்தவர்கள் இந்துக்கள்தான். இந்த வருடம் திருவிழாவின்போது வாகனம் எடுக்க அரசு தடை விதித்தது. அதையும் மீறி வாகன பவனி அந்த தெரு வழியாக எடுக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி ரோட்டிற்கு வாகனம் கொண்டு வந்த பிறகு போலீஸ் தடியடி நடத்தி வழக்குத் தொடர்ந்தார்கள். அதன்பிறகு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது பொதுவழி என்றும் வாகன பவனி கொண்டு செல்ல அனுமதியும் பெறப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின்படி அது
பொதுப்பாதை என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் திருவிழா நடத்த முயன்றபோது காவல் துறை துணை கண்காணிப்பாளர் அது குறுகிய பாதை எனக் காரணம் கூறி மீண்டும் காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது. எனவே பிள்ளையார்புரம் மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை மீறி காவல்துறை தடுத்தது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகவே மீண்டும் அந்த வழியாக திருவிழா வாகனம் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் கண்டன ஆரப்பாட்டம் ஜனவரி 5 பிற்பகல் நடைபெறும். அதில் நானும் கலந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(நன்றி:மாலைச்சுடர்)

இந்தச் செய்திகள் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் தன் வீட்டின் முன் பொங்கலிடப் பொங்கல் அன்று தமிழ் இந்துவுக்குத் தடை. காரணம் கிறிஸ்தவர்கள். என்னதான் பொங்கல் கொண்டாடுவதாகக் கிறிஸ்தவ மதமாற்றிகள் மாய்மாலம் போட்டாலும் அந்தப் பழம்பெரும் இந்துப் பண்டிகை மீதுதான் எவ்வளவு வெறுப்பு! எவ்வளவு வன்மம்! எத்தனை எதிர்ப்பு!

நமது பாரம்பரியப் பண்டிகைக்கு அரசியல், இனவாதச் சாயம் பூசி அதன் புனிதத்தையும், கலாசாரப் பின்னணியையும் சீர்குலைத்து வரும் தற்போதைய தமிழக அரசும், அதன் காவல்துறையும் இதன்மூலம் பொங்கல் இந்துக்களின் பண்டிகையே என்று சந்தேகமின்றி நிரூபித்திருக்கிறது.

ஒரு புறம் இந்துக்களின் தனிப் பெரும் பாரம்பரியத் திருநாளின் அழகிய சமய, கலாசார, தத்துவ, வரலாற்றுப் பின்னணி அனைத்தையும் அமைதியாகக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, அது தாமஸ் உருவாக்கிய ஒரு கிறிஸ்தவப் பண்டிகை, அமெரிக்க “தேங்க்ஸ்கிவிங்” திருநாளின் மோசமான காப்பி என்று “ஞானஸ்நானம்” செய்வித்து “கொண்டாடும்” அமைதிக் கிறிஸ்தவம்.

இன்னொரு புறம், இந்துக்களின் மண்ணில் நமது மனித உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும், அம்மன் கோவில் விழாவைக் குலைக்கும், வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதைக் கூட எதிர்த்துத் தடை உத்தரவு கேட்கும் அன்புக் கிறிஸ்தவம்.

இவற்றுக்கு மத்தியிலும், உலகில் உண்மையான அன்பும், அமைதியும் தழைத்தோங்க இறையருள் துணை செய்யட்டும்.

18 Replies to “பொங்கல் பண்டிகையும், மதமாற்றக் கிறிஸ்தவத்தின் இரட்டை முகமும்”

  1. நன்றி ஜடாயு,

    பிள்ளையார்புரம், ஒட்டகத்தின் கதையை நினைவுபடுத்துகிறது, கூடாரத்தில் முதலில் தலைமட்டும் வைக்க அனுமதிபெற்ற ஒட்டகம் சிறிது சிறிதாக உடல் முழுவதையும் உள்ளே நுழைத்து, முதலாளியை வெளியே தள்ளியது. அதுதான் பிள்ளையார்புரமும். இங்கு மட்டுமல்ல, சில அடிகளே நடந்து சென்றால் ஆத்திக்காட்டுவிளை என்ற ஊர் உள்ளது, அங்கும் இதே நிலைதான் ஒட்டகம் அங்கே முழுவதுமாக நுளைந்து விட்டது. ஆத்திக்காட்டுவிளை இப்போது சியோன்புரமாகி விட்டது. ஆத்திக்காடு ஊரை சேர்ந்த பல இந்து குடும்பங்கள் இன்று ~~~வேதக்காரர்கள்!!!!?? ஆகிவிட்டனர், ஆகிகொண்டிருக்கின்றனர். என்னும் பத்தடி கீழே சென்றால் மேலகிருஷ்ணன் புதூர், அங்கிருந்த அரசு அனுமதி பெறாத தென்னை கீற்றுக்களால் வேயப்பட்ட சிறுவர் பால்வாடிக்கு அவர்களே தீ வைத்து விட்டார்கள். அரசும் காவல்துறையும் துணையுடன் இனிதே ஒரு சர்ச் வெற்றிக்கரமாக அமைக்கப்பட்டு விட்டது. இத்தனைக்கும் காரணம் இந்து மதத்திலிருக்கும் சில ஜாதிவெறி பிடித்த வெள்ளாடுகள்.

    இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் பலவிதங்களில் இந்துத்தன்மையை இழந்து வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமேரி மாவட்டமாக்க நடந்த முயற்ச்சிகள் பற்றி யாராவது ஒரு கட்டுரை போட்டால் என்ன?

  2. பொங்கல் எப்போதும் இந்துக்களோட பண்டிகைதான். ஆனால், இந்துக்கள் மீது இருக்கும் வெறுப்பில் பொங்கலை தடை செய்ய முடியவில்லை. அதனால், இப்படி பொங்கல் தமிழரோட பண்டிகை – இந்துக்கள் வடநாட்டிலிருந்து வந்து பூந்துகிட்டாங்க என்று ஒரு உடாண்ஸ் விட்டு க்கொண்டிருக்கிறார்கள். சாமி கும்பிட மாட்டோம், ஆனால் தமிழில்தான் சாமி கும்பிட வேண்டும் என்று உடாண்ஸ் இல்லையா, அது போல இதுவும். இப்படி கிறுக்கு நிறைய இருக்கு.

    பொங்கல் கொண்டாடக்கூடாது, அது இந்துக்களோட பண்டிகை என்று தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் ஃபட்வாவே போட்டு ரொம்ப நாளாச்சு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஃபட்வா). அதையெல்லாம் கண்டுக்க மாட்டோம், நாங்க. ஏனென்றால் அவிங்க மைனாரிட்டி ஓட்டு. அவிங்க என்ன செஞ்சாலும் அது ஓக்கே. அதுவும் இந்து விரோதம் என்றால் டபுள் ஓக்கே எங்களுக்கு!

    இன்னொரு பக்கம் தமிழ்பண்டிகையெல்லாம் கிருத்துவர்களோட ஒரிஜினல் பண்டிகைதான் என்று வேறு ஒரு கரடி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் இதுவரை அதை நம்பக்காணோம். அதனால், அதுவரை இப்படி பொங்கல் எல்லாம் தடை செய்துவிடுவோம். பின்னால், இந்து மதம் முழுசாய் அழிஞ்சபிறகு இந்த பொங்கலை கிருத்துவ thanksgiving ஆ கொண்டாடினால் போச்சு. அதுவரை கொஞ்சம் பொறுங்கள்.

    நன்றி

    ஜயராமன்

  3. Thanks Jatayu !
    Every one of us should forward this link to as many Tamilians as possible.

  4. தமிழ் இந்துக்களே இந்த கிறிஸ்தவ‌ வெறியர்கள் செய்யும் பாவங்களை மன்னித்தருளுங்கள் ‍ இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரிந்தே செய்கிறார்கள் என்ற போதிலும் கூட‌.

  5. அந்த கோணக்ராப்புக்காரி வந்தா, குடும்பமே குட்டிச்செவுராப்போச்சு என்று ஒரு கதையில் படித்தேன். அதுபோல், இத்தாலிக்காரி வந்தா, இந்தியாவே போகப்போகிறதோ என்னவோ? வந்தவரை வாழவைப்போம் என நாம் நினைத்து நல்லது செய்யப்போக நம் கழுத்துக்கே கத்தி வந்தால் நாம் முழித்துக் கொள்ள வேண்டாமா?
    அந்த‌ விழிப்புண‌ர்ச்சியை ஏற்ப்ப‌டுத்திய‌ ஜ‌டாயுஜிக்கு ந‌ன்றி.

    பார்த்த‌சார‌தி

  6. கிறிஸ்தவர்களின் திரிபுகளுக்கு ஒரு முத்தாய்ப்பு இந்த கட்டுரை https://jeyamohan.in/?p=621 இது உண்மையில் தலைப்பிற்கு ஏற்ப நகைச்சுவைக்காக எழுதப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை, அதற்கு அடுத்த கட்டுரை இது https://jeyamohan.in/?p=734 நகைச்சுவை என்ற பெயரில் எவ்வளவு இழிவாக கோயில்களைச் சித்தரித்திருக்கிறார் பாருங்கள், என்னால் இந்தக் கட்டுரைகளை முழுதும் படிக்க முடியவில்லை மனம் வெதும்புகிறது. இந்தக் கட்டுரைகளை ‘அழகியல் அரசியல்’க்கும் முன்னுதாரணமாக வைக்கலாம்.

  7. ராம்குமரன் அய்யா,
    \\\இது https://jeyamohan.in/?p=734 நகைச்சுவை \\\
    உண்மை கசக்கும்
    உண்மை கசக்கும்
    உண்மை கசக்கும்
    உண்மை கசக்கும்
    கோயில்க‌ளின் நிலை இன்று இதுதான்

    பாலாஜி

  8. நமஷ்காரம் முதலில் உஙகளது அற்புதமான பணிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.உஙக‌ளது இந்த அரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.கிறிஸ்தவம் என்ன புராணகாலத்தில் இதைவிட ஆயிரம் தடைக்கடற்கள் இருந்தன.அவற்றை எல்லாம் படிக்கற்களாக்கி நமது ஹிந்து மதம் வளர்ந்து நிற்கிறது.காசுக்காக மதம் மாறுவதும் தனது தாயை காசுக்காக விற்பதும் ஓன்றுதான்.இதை அறியாத சிலமுட்டாள்கள் செய்யும் வேலை மதமாற்றம்.வோட்டுக்காக வயசுபோயும் பதவிஆசை போகாத சில மனிதர்கள் செய்யும் வேலைகளால் ஒன்றும் ஹிந்து மதத்தை அழிக்க முடியாது.‌‌

  9. //……..நகைச்சுவை என்ற பெயரில் எவ்வளவு இழிவாக கோயில்களைச் சித்தரித்திருக்கிறார் பாருங்கள், என்னால் இந்தக் கட்டுரைகளை முழுதும் படிக்க முடியவில்லை மனம் வெதும்புகிறது..//

    ஜெயமோகன் கட்டுரைக்கான சுட்டி அளித்த ராமகுமரனுக்கு நன்றி. கட்டுரை படித்தேன்.

    நமது கோயில்களின் இழிநிலைகுறித்து எந்த உணர்வும் அன்றி அவற்றை வெறும் அர்த்தமற்ற சடங்குகளை நடத்தும் இடமாக மாற்றிக்கொண்டிருப்பதைப் பற்றி இதைவிட அருமையாக யாரும் சொல்லமுடியாது.

    நல்ல விஷயங்களை மட்டும் அல்லாது, தீய விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசி நன்மையை பெருக்கவும், தீமையை அழிக்கவும் முயலுவதுதானே இந்து மதம்?

    இடிப்பார் இல்லா எமரா மன்னன்……

    ஜெயமோகன் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  10. அய்யா, நானும் அந்த கட்டுரையை படித்தேன், முதல் கட்டுரை ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் கட்டுக்கதையை நகைச்சுவையாக, தமிழர்கள் சிந்திக்கவேண்டும் வரலாற்று திருபுகளை போலித்தனமான ஆதாரங்களுடன் பரப்பிவருவதை கண்டறிய வேண்டும் என்பதாக எழுதி உள்ளார்.
    இரண்டாவது கட்டுரை உண்மையை எழுதியுள்ளார். நாள் தவறாமல் கோயில் குளம் என்று சுற்றி வருவதால் இந்த அவலம் எனக்கும் அனுபவ பூர்வமானதுதான். மறுப்பதற்க்கில்லை.

  11. “நுழையும்போதுள்ள மண்டபங்களில் பெரிய தூண்களில் ஏராளமான கருங்கற்சிலைகள் பல அடி உயரத்துக்கு நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். யாளிகளின் குறிகளை பார்க்கும் இளம்பெண்கள் கிளுகிளுத்து சிரித்து தோழிகளை கிள்ளுவதில் தவறில்லையென்றாலும் குலமாதர் தத்தம் கணவர்களை அழுத்தமாக கிள்ளியோ நகம் இல்லாவிட்டால் ஊசியால் குத்தியோ கவன ஈர்ப்பு செய்து பளபளக்கும் உருண்டைமுலைகளில் இருந்து மீட்டு உள்ளே கொண்டுசெல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

    இதை நீங்கள் நகைச்சுவை என்கிறீர்களா இதையே கருணாநிதி பச்சையாக சொல்லி வாங்கி கட்டி கொள்வார், ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் கோவிலில் எல்லோரும் கீழாக நடக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்

  12. Jatayu avargalae, unmayil en kanngalukku Ramayanathhin Jatayu ponrae thondrugireergal!

  13. alivai nokkipoikondirukkirathu chiristhuv a matham pavam chiristhavarkal juses varuvar yeanru inevum yeathanai varudangal intha mathathinarai yeamatha pokirarkolo

  14. முன்பு நூற்றாண்டுகனக்காய் சமணமும் ,பௌத்தமும் பாரதம் முழுவதும் பறந்து கிடந்து .பின்பு ,நூற்றாண்டு கணக்கில் முகலாயர்களின் அராஜக ஆக்கிரமிப்புகள் அமர்க்களம் ஆயின .சில நூறு ஆண்டுகள் ஐரோப்பிய அதிகாரம் கோடி கட்டிப் பறந்தது .ஆனாலும் ,அழிந்து விட வில்லை சனாதன தர்மம் !!இது எப்போதும் வாழ்வது !சாஸ்வதமானது !மற்ற மதங்கள்மனிதனால் உருவாக்கப் பட்டவை .அவை அழியும் தன்மை உடையவை .சனாதன தர்மம் இறையால் உருவானது …மனிதனால் அழியாதது …

  15. நண்பரே அந்த டி.எஸ்.ஜே இணைப்பு வேலை செய்யலியே !

  16. //கோயில் ஊர்வலம் செல்லும் பாதையில் இருந்து 250 அடிக்கு கிழக்கில் சர்ச் இருக்கிறது//

    இருந்தால் என்ன? இருக்கட்டுமே! இந்த நாட்டின் ஒரு இடத்தில் வேறு மதத்தினர், கொஞ்சம் பேர் இருந்தாலென்ன, நிறையப் பேர் இருந்தால் தான் என்ன? ஒரு மதத்தினர் இருக்கும் இடத்துக்கு வேறு மதத்தினர் தங்கள் சமய வழிபாட்டை நிறைவேற்றச் செல்லக் கூடாது என்று சொன்னால், ஹிந்துக்கள் மட்டுமே வாழ்ந்திருந் இந்த நாட்டில், அவர்களின் சொத்துரிமையில், அவர்களுடைய எந்த ஒரு இடத்திலும் மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதே தவறாகிவிடுமே!

    பிள்ளையார் ஊர்வலம் தொடங்கி மகர மாதப் பிறப்பில் பொங்கல் வைப்பது வரை பொது இடங்களில் சமய வழிபாடு நடத்திக் கொள்ள எந்தப் பிற மதத்தினரும் தடை சொல்வதை அரசு ஏற்கவே கூடாது. நாம் என்ன பிறரின் வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று நம் வழிபாடு முறைகளை நிறைவேற்றுகிறோமா என்ன?

    பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் நாம் நமது வழிபாடுகளைச் செய்யக் கூடாது என அரசு சொல்லுமானால், நாம் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நாட்டில் மற்ற மதத்தினரின் வழிபாடுகளை அவரவர் வீடுகளுக்குள் கூட அனுமதிப்பது தவறாகவே இருக்கும்.

    பல ஹிந்துக்களின் வீடுகளில் ஹிந்து தெய்வங்களின் திருவுருவுக்கு நிகராக ஜீசசின் படத்தையும் வைத்திருப்பதைப் பார்க்கலாம். இதையெல்லாம் பார்த்தும் கூடத் தாங்களும் மாறாமல், நம்மையும் வாழ விடாமல் இடையூறு செய்யும் விஷமிகளை நிச்சயமாக இந்திய/தமிழக அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    வாழ்க பாரதம்..!

  17. Christians only motive is convertion, first they will say all are equal then they will say if we worship jesus, we sould not worship any god, they are like Multi Level Marketing (MLM). they will be very happy when all hidus are converted, but all the politicians wont support because of vote.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *