பலரும் இதுபோன்ற ஒப்பீடுகளின் சுமையை உணர்ந்திருப்பீர்கள். மனித வாழ்வின் ஒரு நிலையான அம்சம் இந்தச் சகோதர ஒப்பிடல். மனிதனாகவே வாழ்ந்த, மனிதனாகவே வடிக்கப்பட்ட, மனிதனாகவே காட்டப் பெற்ற கம்பனின் இராமனும் இதிலிருந்து தப்பவேயில்லை...
2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால்....
காந்தி வாழுமிடம். (காந்திநிகேதன் ஆஸ்ரமம்) 1980ம் ஆண்டு. மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி – திருநெல்வேலி. முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பிற்குள் நுழைகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரு கையால் “குட்மார்னிங் சார்” என கல்லூரி முதல்வருக்கு முகமன் கூறிக் செல்கின்றனர். ஒரே ஒரு மாணவர் மட்டும் நின்று “வணக்கம் அய்யா” என இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரை கல்லூரி முதல்வர் ஆரத்தழுவி “எந்தப் பள்ளியில் படித்தாய்?” எனக் கேட்கிறார். “காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, கல்லுப்பட்டி” எனக் கூறுகிறான் அந்த மாணவன். தற்போது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணிபுரிகிறார் அந்த மாணவர். வயதில் மூத்தவர்களிடம் யாராவது “வணக்கம் அய்யா”...
துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல்.
http://www.youtube.com/watch?v=55LfaohlYco
ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் 'பவத: நாம கிம்?' என்றார்...