வாழத் தெரிந்த வல்லவருக்கோ
வாழ்க்கை என்பது வரமாகும்
வழிதெரி யாமல் தவிப்பவருக்கோ
வாழ்க்கை முழுதும் வலியாகும்
தாழ்வும் உயர்வும் மனநிலை என்பது
தரணியில் சிலர்க்கே தெளிவாகும்
தாழ்ந்தால் தரிசன மாகும் குருவின்
தாளில் புதைவதே வாழ்வாகும்!
உடலுக் குள்ளே நம்மைத் தேடி
உளுத்துக் களைத்து நின்றோமே
உடலைத் தனது உயிருள் துகளாய்
உடையவன் சன்னிதி சேர்ந்தோமே!
கடலுக் குள்ளே கனலாய் நின்று
கனவை நனவைக் கடைந்தானே!
கட்டி வெண்ணையாய் மிதக்க விட்டுக்
கைகள் கொட்டிச் சிரித்தானே!
தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி
துரத்தத் துரத்தப் பறக்கிறது
தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம்
தொல்லை யுகமாய்த் தொடர்கிறது
வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே
வேட்டை யாடப் படுகிறது!
வீழும் கணத்தில் விடிந்த ஞானம்
வாழவா துணை வருகிறது?!
புலனால் தொட்டது மனதில் பட்டால்
புதிய உறவு பிறக்கிறது
காத்த உறவே கடுநஞ் சாகிக்
கனவிலும் நீலம் படர்கிறது!
உலகம் விலைமயம்! உறவும் பிரிவும்
ஒரேநர கத்தின் இருகதவம்!
உணர்ந்து நின்றால் உள்ளே விரியும்
குருவின் முறுவல் பொன்னுதயம்!
விண்ட இலைக்கு விதி கிடையாது
விண்ணில் வீதிகள் ஏது!
வெட்ட வெளியின் அப்பட்டத்தில்
வேட ஜோடனை ஏது?
கண்ணில் தெரியும் வானே போதும்
ககனம் அளத்தல் எதற்கு?
ககனம் முழுவதும் கண்ணில் எழுதியோன்
கண்ணில் பட்டது இதற்கு!

என்னை ஏன் மணந்துகொண்டாய்
பக்தியும் செல்வமும்![[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி](http://www.tamilhindu.com/wp-content/uploads/chitbhavananda-150x150.png)
[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2
தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1![[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்](http://www.tamilhindu.com/wp-content/uploads/Chitbhavanandar2-150x150.jpg)
[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்
ஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு![[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி](http://www.tamilhindu.com/wp-content/uploads/Chibhavanandar-150x150.jpg)
[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி![[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!](http://www.tamilhindu.com/wp-content/uploads/Chitbhavanandar2-150x150.jpg)
[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!![[பாகம் 2] குதி. நீந்தி வா !](http://www.tamilhindu.com/wp-content/uploads/swami_chidbhavananda_small.jpg)
[பாகம் 2] குதி. நீந்தி வா !
நிர்வாண சுகதாயினி
வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1
புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை
ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்
அமைதியின் ஓசை
கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்![பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/shakthi.jpg)
பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]
ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்
கோபிகா கீதம்
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4
இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1
புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு


