’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?

pub-bangaloreஅகில உலக மகளிர் தினம் வந்தாச்சு. நம்ம மகளிர் முன்னேற்றக் கழகத்துக்காரங்களுக்கெல்லாம் சொல்லவே வேண்டாம். என்னமோ இந்தியாவில் அனைத்துப் பெண்களும் கொடுமைப் படுத்தப் படுவதுபோலவும், அதைக் காக்க வந்த ரட்சகர்கள் தாங்கள்தான் என்பதாகவும் ஆரம்பிச்சுப் பேசுவாங்க. தொலைக்காட்சிகளில் நடிகைகள் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுப்பாங்க. இன்னும் நம்ம ஜனாதிபதியும் சொல்லுவார். அரசியல்வாதிகள் மறக்காமல் மகளிருக்கென இட ஒதுக்கீடுக்காகப் போராடுவோம்னு சொல்லிட்டு அடுத்த பார்லிமெண்டு தேர்தல் வந்து, இடம் பிடிச்சதும், மக்கள் சபையிலே அந்த மசோதாவைக் கொண்டு வருவதையே தள்ளியும் போடுவாங்க. இதிலே நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காட்டுகின்ற ஒற்றுமையை, நாட்டின் முன்னேற்றத்துக்குக் காட்டுவாங்களாங்கறதே சந்தேகம் தான். அவ்வளவு ஒற்றுமை!

சமீபத்தில் கர்நாடகத்தில் ‘ராம் சேனெ’ என்ற அமைப்பு ‘பப்’ கலாசாரத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கியது பெருமளவில் சர்ச்சைக்குள்ளானது. அனைத்து ஊடகங்களும் இதைப் பெரிது படுத்தியதோடு அல்லாமல், கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சிதான் இதற்குக் காரணம் என்றும் சொல்கின்றன. அப்போது மும்பையில் தாக்கரே நடத்தியதற்கு யாரைக் காரணம் சொல்லுவது என்பதைச் செளகரியமாய் மறந்துட்டாங்க. ராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்!) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.

காந்தியால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி, காந்தி எங்கள் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சி, பெண்களை இழிவுபடுத்தக் கூடாது, பெண்கள் அனைவரும் சமம், அவர்களின் நன்னடத்தையும், ஒழுக்கமும், தியாகமுமே முக்கியம் எனக் கூறிய தலைவரைப் பெற்ற ஒரு கட்சி இன்று இத்தனை தூரம் கீழ்த்தரமான போக்கைக் கடைப்பிடித்துப் பெண்களை இன்னும் இழிவு நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றது. பெண்கள் குடிப்பதையும், போதையில் ஆடுவதையும் காந்தி எப்போது ஆதரித்தார் என்பதை இவர்கள் சொல்லிவிட்டுப் பெண்களைக் கூப்பிடிருக்கலாமே? காந்தி ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார். ஏற்கெனவே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தைப் போட்டு அவரைக் கேவலப் படுத்தியது போதாது என்று இப்போது பப்களைப் பெண்களால் நிரப்பும் கலாசாரத்தைக் காங்கிரஸ்காரர் ஒருவர் ஆரம்பித்து வைக்கின்றார்.

Girls in pubநம் கலாசாரம் சீரழிந்து, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கமும் சீர்கெட்டு வருகின்றது. இவருக்கு உண்மையிலேயே பெண்கள் மீதும், பெண்களின் உரிமைகள் மீதும் நம்பிக்கை இருந்தால் பெண்களை உயர்நிலைக்குக் கொண்டு வர விரும்பினால், இதைக் கண்டித்திருக்கவேண்டும். அல்லது பெண்கள் ‘பப்’களுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்றாவது சொல்லி இருக்கவேண்டும். அந்த மாநிலத்தில் நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி என்பதாலேயே அதற்கு எதிராக சமுதாயம் எப்படிப் போனால் என்ன? சமூகம் எப்படிச் சீரழிந்தால் என்ன? பெண்கள் குடித்துக் கெட்டலைந்தால் என்ன? அங்கே நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி. ஆகவே இப்படித்தான் பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கண்மூடித்தனமாக இவர் பேசுவதை இவர் வீட்டினரே மன்னிக்க மாட்டார்கள். வெளிநாட்டுக் கம்பனிகளும், IT , அவுட் சோர்ஸிங் வேலைகளும் இன்றைக்கு இளம் பெண்களையும், இளைஞர்களையும் பல்வேறுவிதமான தவறான வழியில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

பெண்கள் ‘பப்’ நடனக் கலாசாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் ஒழுக்கம் கெடாதா? மது மயக்கத்தில் தங்களை மறந்து அவர்கள் தவறு செய்ய நேரிடும் அல்லவா? சுதந்திரம் என்ற பெயரில் எல்லை எதுவெனத் தெரியாமல் எல்லை தாண்டுபவர்களையே சமூகம் பாராட்டும்படியாக இன்றைய ஊடகங்களும், அரசும் அவற்றுக்குத் துணை போகின்றன. கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, அல்லது அவற்றை மீறி, தங்கள் இஷ்டத்துக்கு வாழ்வதுதான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை எந்தப் பெண்ணுக்கும் கிட்டவே வேண்டாம். படிப்பினால் பெண்களுக்கு அறிவு வளரும், நிலை உயரும், ஞானம் உண்டாகும் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பதாலேயே இத்தகைய உரிமைகள் தங்களுக்கு ஏற்றது எனத் தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

45 Replies to “’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?”

  1. அக்ஷர லக்ஷம் பெறும் அரிய கருத்துகள்.
    அரிவையரின் அறிவுக்கு எட்ட வேண்டும்.

    தேவ்

  2. உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆண்கள் குடிக்கலாம், பெண்கள் குடிக்கக் கூடாதா? ஆணும் பெண்ணும் சமமில்லையா? குடிப்பது, கூத்தடிப்பது என எல்லாவற்றிலும் பெண்களுக்குச் சம உரிமை வேன்டும். ஆண் இஷ்டப்படி இருக்கும் போது பெண் மட்டும் அவள் இஷ்டப்படி இருப்பது எப்படித் தவறாகும்?பெண்கள் மதுக்கடைகளை நிரப்ப வேண்டும். ஆணுக்குச் சமமாக சிறைச்சாலைகளை நிரப்ப வேண்டும். தாலி போன்ற வேலிகள் வேண்டாம். கற்பு வேண்டவே வேண்டாம். நினைத்த பொழுது நினைத்த மாதிரி சுதந்திரமாக வாழ வேன்டும். அப்போது தான் எங்கள் தலைவர், பெண்ணுரிமைவாதி ‘பெரியார்’ கண்ட கனவும், நவீன மணியம்மை ‘குஷ்பு’ சொன்னதும் நனவாகும். பாரதம் கலாசார வேர்களற்று அழியும். இந்தியா உருப்படாமல் மீண்டும் அடிமையாய்ப் போகும். இதுதானே எங்களுக்கு வேண்டியது.

    இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நீங்கள் கட்டுரையை ஒருதலைப்பட்சமாக‌ அதுவும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று எழுதியிருப்பதைப் பார்க்கும் போது மனம் வலிக்கின்றது. தயவு செய்து திருந்துங்கள்!

    வாழ்க பெண்ணுரிமை…. வளர்க பெண் சுதந்திரம்

  3. இந்தம்மா கீதா சாம்பசிவத்துக்கு ஒன்னுமே தெரியலையே… நீங்கள்ளாம் பெரியார் பள்ளியிலே பாடம் படிக்கலையா?? நம்ம கலாச்சாரத்தை அழிச்சிட்டு இத்தாலியிலிருந்து நமக்கேல்லாம் புதுசா ஒரு கலாச்சாரத்த ரேணுகா சவுத்ரி போன்ற முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அமைச்சர்களைப் பெற்ற கட்சியின் தலைவர்கள் கொண்டுவர இருக்கும்போது இப்படிப் பிற்போக்குத்தனமாய் எழுதி இருப்பது மனதுக்கு இனிக்கவில்லை. எனவே குனக்கேடிகள் வரிசையில் நம் குடும்பப் பெண்களையும் இழுக்க முயற்சிக்கும் ரேணுகா சவுத்ரிக்கு தோள் கொடுப்போம் என முழங்கி வாய்ப்புக்கு நன்றிகூறி முடிக்கிறேன்..

  4. //பெண்கள் ‘பப்’ நடனக் கலாசாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் ஒழுக்கம் கெடாதா? மது மயக்கத்தில் தங்களை மறந்து அவர்கள் தவறு செய்ய நேரிடும் அல்லவா?//
    ஆண்-பெண் இருபாலருக்கும் இது பொருந்தும். வீட்டில் உயர் ரக மதுவை வாங்கி தகப்பன் பருகினால் அதனை பார்த்து மனைவியோ அல்லது பதின்பருவ பெண்ணோ அருந்தினால் தவறு யாருடையது?
    //சுதந்திரம் என்ற பெயரில் எல்லை எதுவெனத் தெரியாமல் எல்லை தாண்டுபவர்களையே சமூகம் பாராட்டும்படியாக இன்றைய ஊடகங்களும், அரசும் அவற்றுக்குத் துணை போகின்றன.//
    இந்த விஷயத்தில் ஊடகங்கள் சார்புடன் நடந்து கொள்கின்றன என்பது இன்னபிற சக்திகள் இதைவிட மோசமாக பெண்களை கட்டுப்படுத்தும் போது அவை அமைதி காத்தன என்பதே. மற்றபடி தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும் போது ஊடகங்கள் பாதிக்கப்பட்டவருக்காகவே பேசமுடியும். பாதிக்கப்பட்டவர்களையே அரசும் காப்பாற்ற முடியும்.
    //கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, அல்லது அவற்றை மீறி, தங்கள் இஷ்டத்துக்கு வாழ்வதுதான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை எந்தப் பெண்ணுக்கும் கிட்டவே வேண்டாம்.//
    Pure rhetoric with no substance. மாற்றிப்போட்டால் இப்படிவரும். தெருவில் இழுத்து பெண்களை உதைப்பது அல்லது முக்காடு போட்டு பெண்களை வீட்டுக்குள் அடைப்பது, புருசன் ஊர் மேய அவன் செய்யும் அநியாயங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு அதற்கு தலையாட்டிக்கொண்டு ராப்ரி தேவி போல பதிவிரதையாக வாழ்வதுதான் பண்பாடு என்றால் அந்த பண்பாடு எங்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லலாமே.
    //படிப்பினால் பெண்களுக்கு அறிவு வளரும், நிலை உயரும், ஞானம் உண்டாகும் என்றெல்லாம் சொல்லுவார்கள்.//
    நெற்றியடி இது! படிப்பினால் அறிவு வளரும் நிலை உயரும் ஞானம் உண்டாகும் என்பதெல்லாம் கேள்விப்படுகிற விஷயமல்ல. பிரத்யட்சமாக நாம் காணும் உண்மை. உயிர் காக்கும் செவிலியர், பள்ளி ஆசிரியைகள் என நாம் காணும் பெண்கள் கல்வி இல்லையென்றால் ராப்ரி தேவிகளாகவோ பிரதிபா பட்டீல்களாகவோ தீமைகளுக்கு தலையாட்டியபடி கட்டுக்குள் இருக்கும் பொம்மைகள் ஆகியிருப்பார்கள். அக்னி எவுகணை செயல்குழுவில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு குறித்து பிரத்யேகமாக பாராட்டியிருந்தார் அப்துல்கலாம். இவர்களெல்லாம் கல்வியால் உருவானவர்கள்தாம். எனவே கல்வி பெண்களை உயர்த்தும் என்பது கேள்விப்படுகிற விஷயமல்ல. சத்யம்.
    //ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பதாலேயே இத்தகைய உரிமைகள் தங்களுக்கு ஏற்றது எனத் தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.//
    படிப்புக்கும், ஊதியத்துக்கும், பப் செல்வதற்கும் தொடர்பு என்ன? மன அழுத்தம் அல்லது உடனுள்ளோர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக இளைய தலைமுறை பப் செல்வது ஒரு phenomenon இது ஒரு சமுதாய பிரச்சனையா? ஏன்? இது இளைஞர்களிடையே நேர்மறை விளைவுகளை அல்லது எதிர்மறை விளைவுகளையா எவற்றை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் நாம் ஆராய வேண்டும். இதில் ஆண்பாலர் பெண்பாலர் பிளவுகளை பார்க்க வேண்டியதில்லை..

  5. பெண்கள் விடுதலை என்றும், முன்னேற்றம் என்றும் முழக்கமிடும் ஷோபா டே, ரேணுகா சவுத்திரி போன்றோரால் இந்தியப் பெண்களுக்கு உண்மையில் விளைந்த நன்மைதான் என்ன?

    தேசிய விழிப்புணர்வு இயக்கத்தைச் (ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்) சார்ந்த திரு. எஸ்.குருமூர்த்தி அடிக்கடி சுட்டிக் காட்டுவதைப் போல் நம் பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையை அழித்து, சந்தைக் காலாசாரத்தை வளர்த்து, சேமிக்கும் வழக்கத்தை குழி தோண்டிப் புதைத்து, அனைவரையும் பெரும் செலவாளியாகவும் கடனாளியாகவும் ஆக்குவதுதான் இத்தகைய பெண்ணியவாதிகளின் உயர்ந்த நோக்கம்! அமேரிக்காவில் இந்தச் சீரழைவை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிவிட்டனர். தற்போது பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் நம் பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்க முற்பட்டுள்ளனர்.

    ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Population Fund) புள்ளி விவரப்படி நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 2,45,000 மணமாகாத இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள்! ஆனால் இது முழுமையான எண்ணிக்கை அல்ல. உண்மையில் 18 வயதுக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் சட்டத்திற்கு பயந்து டுபாக்கூர் மருத்துவ நிலையங்களில் கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள். அத்தகைய கேசுகள் இந்தத் தரவில் இடம் பெறவில்லை. இதுபோன்ற கருக்கலைப்புகளில் பல பெற்றோர்களுக்குத் தெரியாமலேயே பெரு நகரங்களில் நிகழ்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஏனெனில் கருக்கலைப்பு நிலையங்களில் காப்பாளர் என்று யாரேனும் ஒருவர் கையெழுத்திட்டால் போதும் என்னும் நிலை.

    ”இளம் பெண்களே, ’பப்’களில் போய் இஷ்டப்படி குடியுங்கள்” என்று ஒரு பொறுப்புள்ள அமைச்சரே அறைகூவல் விடுக்கும் நம் நாட்டில் இத்தகைய கலாசாரச் சீரழிவுகள் இன்னும் பெருமளவில் நிகழத்தானே செய்யும்!

    இதுதான் பெண்கள் முன்னேற்றமா?

  6. திரு.எஸ்.கே அவர்கள் கூறிய புள்ளி விவரங்களை
    எழுதலாம் என நினைத்தேன்.எழுதவே கூசியது.
    விட்டு விட்டேன். அவர் என்னவோ தைரியமாக
    எழுதி விட்டார்.

    தேவ்

  7. எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தேசப்பற்று இல்லாத அரசியல் தலைவர்களும், வெளிநாட்டு அடிமைகளான ஊடகங்களுமே ஆகும். நம் நாட்டுப்பற்று, தெய்வப் பற்று கொண்ட நேர்மையான செய்தி தொலைகாட்சி ஒன்று தொடங்கப்படவேண்டும்.

    நாட்டுப்பற்று உள்ள இந்து சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்இந்து.காம் இனைய தளத்தை அமைத்ததைப் போல், ஒரு செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கவேண்டும்.

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    வீரசிவாஜி, திலகர், நேதாஜியின் வாழ்வை முழுமையாக தெரிந்து கொள்ளுதல் நம்மை உந்தி மேலே உயர்த்தும் சக்தியாகும்.

    தீயவர்களே வாழ்வில் வெற்றி பெறும்போது, நல்லவர்களால் ஏன் வெற்றி அடையமுடியாது?

    நாம் முயற்சிப்போம், ஈசன் வெற்றி தருவான்.

    வந்தே மாதரம்.

    வெங்கட் ராமன்
    சநாதன சேவா சத் சங்கம்

  8. thank you Geethaji. What’s bothering is that these pub going girls would be mothers some day and what kind of moral authority they would have in raising their own kids? Even those who support now, would they do so if their wives/daughters are involved? It’s matter of time this Renuka Chowdhury would be another Margarat Alwa? Here is an article that provides interesting reading:

    https://www.blogs.ivarta.com/Satire-Interview-Hon-Minister-Renu-Chowdry/blog-255.htm – Satire: An interview with Hon. Minister Renu Chowdry

  9. //நாட்டுப்பற்று உள்ள இந்து சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்இந்து.காம் இனைய தளத்தை அமைத்ததைப் போல், ஒரு செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கவேண்டும்.//

    யோகப் பயிற்சி, தர்சந நூல் ஓதுதல் இவற்றையே
    மையப்படுத்திச் செயல்பட்ட ‘மஹேஷ் யோகி’ சானல்
    இப்போது எங்கே?
    அதில் விளம்பரம்,அரசியல், சினிமா போன்றவை அறவே
    இடம் பெறவில்லை.

    தேவ்

  10. பப் கலாசாரம் அவசியமா? என்ற கேள்வி பப் கலாசாரம் **பெண்களுக்கு** அவசியமா என்பதைக் காட்டிலும் சரியான ஒன்றாக இருந்திருக்கும். விகடன், குமுதம் தொணியில் ஐ.டி, அவுட்சோர்ஸிங், கல்வி இதெல்லாம்தான் பப் கலாசாரத்துக்கும், சீரழிவுக்கும் காரணம் என்று எழுதப்பட்டிருக்கும் மிக மேலோட்டமான கட்டுரை இது. ராம்சேனா, சிவ்சேனா போன்ற விளிம்புநிலை அமைப்புகள்தான் இந்துமதத்தின் தூண்கள் என்று மீடியா பொதுப்படுத்துவது போல, ரேணுகா செளத்ரி, ஷோபா டே, அருந்ததி ராய் போன்ற பெயர்கள்தான் பெண்கள் சுதந்திரம், பெண்கள் கல்வி என்று சொல்லும்போது நமக்கு நினைவுக்கு வருவது மிகவும் துரதிர்ஷ்டம்!

  11. //ஆண்-பெண் இருபாலருக்கும் இது பொருந்தும். வீட்டில் உயர் ரக மதுவை வாங்கி தகப்பன் பருகினால் அதனை பார்த்து மனைவியோ அல்லது பதின்பருவ பெண்ணோ அருந்தினால் தவறு யாருடையது?//

    மன்னிக்கவும், ஆண் மட்டும் குடிக்கலாம் என்பதாக ஒரு கருத்து வருமாறு நான் எழுதவில்லை. இங்கே பப் கலாசாரத்தில் ஈடுபட்ட பெண்களைத் தண்டிக்க முயன்றதே பேசப் படுகின்றது. ஆண்களும் குடிக்கக் கூடாது என்பதே என்னுடைய கருத்தும். மனைவி, பதின் பருவ பெண்கள் குடிப்பது பற்றிக் கீழே ராம்ஜி எழுதி இருக்கின்றார் பாருங்கள். அதுவும் ஏற்புடையது அல்ல. இது நாகரீகம் என்றோ பெண்களுக்கு அளிக்கப் படும், அல்லது பெண்களாய் மனமுவந்து எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் எனச் சொல்ல முடியாது.

    //இந்த விஷயத்தில் ஊடகங்கள் சார்புடன் நடந்து கொள்கின்றன என்பது இன்னபிற சக்திகள் இதைவிட மோசமாக பெண்களை கட்டுப்படுத்தும் போது அவை அமைதி காத்தன என்பதே. மற்றபடி தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும் போது ஊடகங்கள் பாதிக்கப்பட்டவருக்காகவே பேசமுடியும். பாதிக்கப்பட்டவர்களையே அரசும் காப்பாற்ற முடியும்.//

    பாதிப்பு என்பதன் அர்த்தமே இங்கே மாறுகின்றது. ஒரு சமூகமே, ஒரு கலாசாரமே பாதிக்கப் படும்போது அதைக் காக்கவேண்டித் தான் நாம் பாடுபட வேண்டும். ராம்சேனா, அல்லது ராம்செனெ?? செய்தது சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டது. சாத்வீக முறையில் அவர்கள் தடுக்க முயன்றிருக்கலாம். தடுத்தது தவறு என்றோ தனி மனித உரிமை என்றோ சொல்ல முடியாது. தனி மரம் எப்படித் தோப்பாகின்றதோ அது போலத் தனி மனிதன் அல்லது மனுஷி இணைந்தே சமூகத்தை உருவாக்குகின்றார்கள். ஊடகங்கள் பரபரப்புக்குரிய செய்திகளை அதுவும் முக்கியமாய் ஆளுங்கட்சி சார்பில் நடக்கும் எத்தனையோ வன்முறைகளைக் கண்டு கொள்ளுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்றால் வாய் கிழியக் கூப்பாடு போடுகின்றன. இதே தனி மனித சுதந்திரம் வேறு வகையில் மும்பையில் தாக்கரே குடும்பத்தால் பறிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது இந்த ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன? அல்லது மத்திய மந்திரிகள் தான் என்ன செய்தனர்? பாதிக்கப்பட்டது அப்போவும் சாமானியர்களிலும் சாமானியர்கள். அவர்களுக்காக இந்த ஊடகங்களோ, தினசரிப் பத்திரிகைகளோ என்ன பேசின? எதுவும் இல்லை.

    //Pure rhetoric with no substance. மாற்றிப்போட்டால் இப்படிவரும். தெருவில் இழுத்து பெண்களை உதைப்பது அல்லது முக்காடு போட்டு பெண்களை வீட்டுக்குள் அடைப்பது, புருசன் ஊர் மேய அவன் செய்யும் அநியாயங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு அதற்கு தலையாட்டிக்கொண்டு ராப்ரி தேவி போல பதிவிரதையாக வாழ்வதுதான் பண்பாடு என்றால் அந்த பண்பாடு எங்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லலாமே.//
    “pure rhetoric with no substance”
    no comments. it is your opinion. opinion differes.
    கணவன் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டு ராப்ரி தேவி போல வாழவேண்டும்னு யார் சொன்னது?? “ரெளத்திரம் பழகு” னு சொன்னதன் உண்மையான அர்த்தமே இதுக்குத் தான். ஆகவே தேவையான இடத்தில், தேவையான சமயம் நம் கோபத்தைக் காட்டியே ஆகவேண்டும். சாது மிரண்டால்?? என்று தெரிவித்தே ஆகவேண்டும். இன்று இந்த ரெளத்திரம் பழகு என்பதன் பொருளும் மாறி விட்டது. என்னத்தைச் சொல்றது?

    //படிப்புக்கும், ஊதியத்துக்கும், பப் செல்வதற்கும் தொடர்பு என்ன? மன அழுத்தம் அல்லது உடனுள்ளோர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக இளைய தலைமுறை பப் செல்வது ஒரு phenomenon இது ஒரு சமுதாய பிரச்சனையா? ஏன்? இது இளைஞர்களிடையே நேர்மறை விளைவுகளை அல்லது எதிர்மறை விளைவுகளையா எவற்றை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் நாம் ஆராய வேண்டும். இதில் ஆண்பாலர் பெண்பாலர் பிளவுகளை பார்க்க வேண்டியதில்லை..//

    நீங்க சொல்லும் விஞ்ஞானிகளைப் பற்றிய பேச்சே அல்ல இது. இன்று இந்த ஐடி கலாசாரம் வந்ததும் நம் நாட்டிலே கலாசாரச் சீரழிவு ஏற்பட ஆரம்பித்து விட்டது என்றால் மிகை இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் நம் கலாசாரமும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையுமே நம்மைக் காத்துக் கொண்டிருந்தது, இனியும் ஓரளவுக்காவது அவை இருப்பதே மொத்தச் சீரழிவும் நிகழாமல் தடுக்கின்றது. படிப்பு முடிந்ததுமே வேலை, அதுவும் எடுத்த எடுப்பிலே ஐந்து இலக்கங்களிலே சம்பளம். பெண்கள் மட்டுமில்லை, ஆண்களுமே திணறுகின்றனர். சமீபத்திய வேலை நீக்கங்கள் பற்றிய பேட்டிகளைப் படித்தால் எங்கோ ஓரிருவர் தவிர மற்றவர்கள் ஆடம்பரச் செலவுகளிலேயே முழுச் சம்பளத்தையும் தொலைத்துவிட்டு இப்போ வேலை இல்லாமல் என்ன செய்யப் போகின்றோம் எனக் கலங்குகின்றனர். இதிலே ஒன்றிரண்டு தற்கொலைகள் வேறே, மண முறிவுகள் வேறே. இதுக்கெல்லாம் யார் காரணம்?? சம்பளத்தை அள்ளிக் கொடுத்த கம்பெனிகள் கூடவே அவங்க HRD மூலம் முதலீடுகள் செய்யவும் அறிவுரைகள், ஆலோசனைகள் சொல்லி இருக்கலாம். அல்லது பெற்றோர் சொல்லலாம்.

    இன்றைய பெற்றோர்கள் முழுதும் ஆண், பெண் இருவரும் உழைத்துக் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் குழந்தைகளே அதிகம் இந்தத் தடுமாற்றங்களில் வீழ்கின்றனர். திடீரெனப் பையனுக்கோ, பெண்ணுக்கோ அதிகச் சம்பளம் கையில் வர ஆரம்பித்ததும், அவங்க என்ன செய்தாலும் சரி என்னும் பெற்றோர், அதற்குத் துணை போகவும் ஆரம்பித்துள்ளனர். போன வருஷம்?? அல்லது 2007?? சரியா நினைவில்லை, சவேரா ஓட்டலில் மேடை இடிந்து விழுந்து பல இளைஞர்கள், இளம்பெண்கள் பலியானது. அதில் ஒரு அண்ணன், தங்கையும் இருவரும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள், தங்கள் பெற்றோருடன் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வந்தவர்கள். அப்பா, அம்மா அளவுக்கு மீறி கொடுத்த இடம் இன்றைக்கு அவர்களையே இல்லாமல் செய்துவிட்டது. அவங்க அப்பா, அம்மாவுக்கு இப்போப் பணம் இல்லைனாலும் பரவாயில்லை, குழந்தைகள் திரும்பி வந்தால் போதும்னுதானே இருக்கும். வருமா? அந்தக் குழந்தைகள்???

  12. //அத்தகைய கேசுகள் இந்தத் தரவில் இடம் பெறவில்லை//

    நாகரீகம் கருதிச் சிலவற்றை எடிட் செய்தேன். நன்றி எஸ்கே அவர்களே

  13. அன்புக்குரிய சகோதரர்களுக்கு

    பெண்கள் மட்டும் அல்ல, ஆண்கள் பெரும் கல்வி அறிவு கூட தவறுதான். இந்தகாலத்துக் கல்வி அறிவு வெள்ளையன் கொண்டுவந்த கல்வி அறிவு (லாட் மக்கலே ). அவன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு குறிப்புக்களில் உள்ளது. பாரதத்தை சீர்குலைக்கவே இப்படி ஒரு கல்வியை கொண்டுவருகிறான். அவன் கூறினான் : “பாரதத்தில் திருடன் என்றோ பிச்சைக்காரன் என்றோ யாரும் இல்லை. நல் அறிவும், நேர்மையும் உள்ள மக்கள். அவர்களை அடிமைபடுத்துவது மிகவும் கடினம். அவர்களை அடிமைப் படுத்த அவர்களின் கல்வி முறையை மாற்ற வேண்டும். நம் கல்வி முறையை அவர்கள் விரும்பவேண்டும். அப்போதுதான் அவர்கள் என்ன ஆகவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறு அவர்கள் ஆவார்கள்” என்று.

    நம் கல்விக்கொள்கை அறம், பொருள், இன்பம் மற்றும் வீடையும் சேர்த்தது. அவர்கள் கல்விக்கொள்கையோ பொருள் மற்றும் இன்பத்தோடு நின்றுவிடுவது. நாம் எது செய்தலும் வீடு பேரு தான் நம் வாழ்வின் லட்சியம். ஆதலால் இறை உணர்வையும், நேர்மையையும் மைய்யப்படுத்தியே நம் வாழ்வு அமைந்திருக்கும்.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் எனபது நமது சிந்தனை. மண்ணில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனபது அவர்கள் சிந்தனை.

    நமது கல்வி மனிதனை மாசுபடுதாதவை, அவன் கல்விக்கொள்கை மனிதனை மாசுபடுத்தி அதன் மூலம் மண்ணை மாசுபடுத்தி ஒட்டு மொத்த சீரழிவிற்கே வித்தாய் அமைந்தவை.

    தும்ப விட்டு வால பிடிக்கிறகதைதான் இப்போது நடக்கிறது.

    நாளை பள்ளி சிறுவர்கள் பப் நிரப்பும் போராட்டம் நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

    நம் நாட்டின் நிலைமை அப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது.

    பராசக்திதான் நம் நாட்டை காக்க வேண்டும்.

    வெங்கட் ராமன்
    http://www.sanadhanasevasathsangam.org

  14. அன்புக்குரிய சகோதரர்களுக்கு

    பெண்கள் மட்டும் அல்ல, ஆண்கள் பெரும் கல்வி அறிவு கூட தவறுதான். இந்தகாலத்துக் கல்வி அறிவு வெள்ளையன் கொண்டுவந்த கல்வி அறிவு (லாட் மக்கலே ). அவன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு குறிப்புக்களில் உள்ளது. பாரதத்தை சீர்குலைக்கவே இப்படி ஒரு கல்வியை கொண்டுவருகிறான். அவன் கூறினான் : “பாரதத்தில் திருடன் என்றோ பிச்சைக்காரன் என்றோ யாரும் இல்லை. நல் அறிவும், நேர்மையும் உள்ள மக்கள். அவர்களை அடிமைபடுத்துவது மிகவும் கடினம். அவர்களை அடிமைப் படுத்த அவர்களின் கல்வி முறையை மாற்ற வேண்டும். நம் கல்வி முறையை அவர்கள் விரும்பவேண்டும். அப்போதுதான் அவர்கள் என்ன ஆகவேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறு அவர்கள் ஆவார்கள்” என்று.

    நம் கல்விக்கொள்கை அறம், பொருள், இன்பம் மற்றும் வீடையும் சேர்த்தது. அவர்கள் கல்விக்கொள்கையோ பொருள் மற்றும் இன்பத்தோடு நின்றுவிடுவது. நாம் எது செய்தலும் வீடு பேரு தான் நம் வாழ்வின் லட்சியம். ஆதலால் இறை உணர்வையும், நேர்மையையும் மைய்யப்படுத்தியே நம் வாழ்வு அமைந்திருக்கும்.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் எனபது நமது சிந்தனை. மண்ணில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனபது அவர்கள் சிந்தனை.

    நமது கல்வி மனிதனை மாசுபடுதாதவை, அவன் கல்விக்கொள்கை மனிதனை மாசுபடுத்தி அதன் மூலம் மண்ணை மாசுபடுத்தி ஒட்டு மொத்த சீரழிவிற்கே வித்தாய் அமைந்தவை.

    தும்ப விட்டு வால பிடிக்கிறகதைதான் இப்போது நடக்கிறது.

    நாளை பள்ளி சிறுவர்கள் பப் நிரப்பும் போராட்டம் நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

    நம் நாட்டின் நிலைமை அப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது.

    பராசக்திதான் நம் நாட்டை காக்க வேண்டும்.

    வெங்கட் ராமன்

  15. கூட்டுக்குடும்பம் என்பது குறித்து பல நேரங்களில் யோசித்துப்பார்த்திருக்கிறேன். ஒரு குடும்ப அமைப்பு அந்த சமுதாயத்தின் உற்பத்தி முறையை பொறுத்தே அமைகிறது. (இது கொஞ்சம் மார்க்சிய தனமாக இருந்தாலும் பெருமளவுக்கு உண்மை என்றே நினைக்கிறேன்) மேலும் நம் பண்பாட்டில் கூட்டுக்குடும்பத்துக்கு எந்த அளவு பண்பாட்டு ஆதரவு இருந்தது என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. வனப்பிரஸ்தம் செல்வது என்பதே கூட்டுக்குடும்பத்தை உடைப்பதுதானே. சீதை கூட மாமியார்-மாமனாருடன் தங்கமாட்டேன் என்று கணவனுடன் கிளம்பியவர்தானே. விவசாய நாட்டின் இயல்பான அமைப்பு கூட்டுக்குடும்பம். அது தொழில் உற்பத்தி நாடாக மாறும் போது அந்த குடும்ப அமைப்பு சிதையலாம். நாளைக்கு ஓரின மணங்களும் கூட இயல்பாகலாம். இத்தகைய மேம்போக்கான சமுதாய அமைப்பு ஒழுக்கக் கோட்பாடு ஆகியவை சார்பியல் தன்மையுடையவை. எந்த சமுதாயமும் சிறந்து விளங்க இரண்டே அடிப்படைகள்தாம்: சுதந்திரம் பிறகு உண்மை நோக்கிய தேடல். கேவலம் ஐடியையும் ஐந்து இலக்க சம்பளங்களும் இந்த கலாச்சாரத்தை அழித்துவிடுமென்றால் that is not really something worth defending. ஆனால் உண்மை என்னவென்றால் ஐடிதான் இன்றைக்கு ஒரு விரிவான அளவில் இந்து தருமத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சென்றிருக்கிறது. ஆரிய திராவிட இனவாத பிரச்சாரங்களுக்கு எதிரான ஆகப்பெரிய எதிர்ப்பு குரல் ராஜாஜி சத்தியமூர்த்தி போன்ற ஆசார மாகானுபாவர்களிடமிருந்து வரவில்லை. இந்த ஐடி இளசுகளிடமிருந்துதான் வந்தன. ஐடி நிச்சயமாக சமுதாய கடைதலை உருவாக்குகிறது. அந்த கடைதல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அதிலிருந்து ஆ.லகால விஷமும் வரும் அதனை புன்முறுவலுடன் விழுங்கும் சிவத்தன்மை நம் பண்பாட்டுக்கு இருந்தால்தான் அடுத்து வரும் அமுதமும் சாஸ்வதமான பெருமையும். விஷத்துக்கு பயந்து கடைதலை நிறுத்தினால் அமுதம் கிடைக்காது.

  16. The women’s rights groups are as bad as the Human rights groups. Why aren’t they protesting the demeaning of women done by fairness commercials, for example?
    As a commenter quotes Gurumurthy here, it is very clear that the Multi national corporates want young Indians to spend-until they drop.
    Bharathi’s dream about Pudhumai penn was different. Honorable minister’s pub Bharo call is something else…

    The article rightly points out that the party that rules is connected to the man [ do they remember that?!] who believed in prohibition …

    The party bigwigs garland his pictures once a year but other than that, they are more interested in the notes that show his printed image…

  17. “சீதை கூட மாமியார்-மாமனாருடன் தங்கமாட்டேன் என்று கணவனுடன் கிளம்பியவர்தானே” என்ற அரவிந்த் அவர்களின் கருத்து சற்று வியப்பை ஏற்படுத்துகிறது. கணவனுக்கு பணிவிடை செய்யச் செல்கிறாளே தவிர வனப்பிரஸ்தம் செல்லவில்லை (அது வானப்ரஸ்தம், வனப்பிரஸ்தம் அல்ல). இன்றைய காலகட்டத்தில் இப்படி எடுத்துக்கொள்ளலாம், கணவன் வேறு நாட்டுக்கு மாற்றலாகிப்போனால், மனைவி உடன்செல்வதா இல்லை மாமனார், மாமியாருடன் இருந்துவிடுவதா? அரவிந்த் தான் பதில் சொல்லவேண்டும்.

    வானப்ரஸ்தம் எனபது தவ முயற்சியே தவிர மற்றேதும் இல்லை. துறவுக்கு முந்தின நிலை வானப்ரஸ்தம்.

    ஐ டீயும், ஐந்து இலக்க சம்பளமும் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாது. வேலை செய்யும் சுழல் மற்றும் வருமானம் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. பணம் பத்தும் செய்யும். மற்ற மதத்தினர் வேலை வாங்கித் தருவதாகவும், பண உதவி செய்தும்தான் மக்களை மதம் மாற்றுகின்றனர்.

    ஆரிய திராவிட இனவாத பிரசாரமே வெள்ளைக்காரனின் புளுகுமூட்டை. அவனே அதை ஒப்புக்கொண்ட பிறகு அதைத் திரும்பப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. ராஜாஜி, சத்தியமூர்த்தி பற்றி அரவிந்தன் அவர்கள் சரியாகத் தெரிந்து கொண்டால் நல்லது.

    பப்கள் வேண்டுமானால் ஆலகால விஷமாக இருக்கலாம் ஆனால் ஐ.டி. பாற்கடலல்ல.

    நன்றி
    வெங்கட் ராமன்

  18. sethupathi Arunachalam

    //விகடன், குமுதம் தொணியில் ஐ.டி, அவுட்சோர்ஸிங், கல்வி இதெல்லாம்தான் பப் கலாசாரத்துக்கும், சீரழிவுக்கும் காரணம் என்று எழுதப்பட்டிருக்கும் மிக மேலோட்டமான கட்டுரை இது.//

    மேலோட்டமாய் உங்களுக்குத் தெரிந்தால் அது உங்கள் பார்வையே காரணம். ஏனெனில் இதற்குக் காரணம்,
    நிச்சயமாய் ஐடியும், அவுட்சோர்ஸிங்கும் தான் நாட்டின் கலாசாரத்தையே மாற்றிக் கொண்டிருக்கின்றது. ஒரு பத்து வருஷம் முன்னால் நடுத்தர வர்க்கத்தினருக்கு இதுவெல்லாம் தெரியவே தெரியாது. மேல்மட்டத்தில் மிகச் சில இடங்களில் மட்டுமே நடந்து வந்த பார்ட்டி கலாசாரம், கெட் டு கெதர் எல்லாமும் இன்று நடுத்தர மக்களிடமும் பெருகிவிட்டது. அதிலும் பெண்கள் இரவு நேரம் வேலைக்குச் செல்லுவதற்குப் போக ஆரம்பித்ததும், அவங்களோட உணவுப் பழக்கம், உடை, எல்லாமே மாற ஆரம்பிச்சிருக்கு. ராம்சேனா, சிவசேனா போன்றவை தாக்குவதோ, அல்லது தாக்கியதோ நியாயம் எனச் சொல்லவில்லை. பெற்றோர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொண்டு குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை உணரவில்லை யாருமே. ஏனெனில் பெற்றோர்களே இப்போது ஒரு ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கின்றார்கள். நிதரிசனம் புரியவில்லை.

  19. Venkatraman,
    //அவன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு குறிப்புக்களில் உள்ளது. பாரதத்தை சீர்குலைக்கவே இப்படி ஒரு கல்வியை கொண்டுவருகிறான்.//

    நீங்க சொல்வது முற்றிலும் சரியே. இதைப் பற்றி https://www.samanvaya.com/dharampal/ இங்கே கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். நன்றி.

  20. //
    படிப்பு முடிந்ததுமே வேலை, அதுவும் எடுத்த எடுப்பிலே ஐந்து இலக்கங்களிலே சம்பளம். பெண்கள் மட்டுமில்லை, ஆண்களுமே திணறுகின்றனர். சமீபத்திய வேலை நீக்கங்கள் பற்றிய பேட்டிகளைப் படித்தால் எங்கோ ஓரிருவர் தவிர மற்றவர்கள் ஆடம்பரச் செலவுகளிலேயே முழுச் சம்பளத்தையும் தொலைத்துவிட்டு இப்போ வேலை இல்லாமல் என்ன செய்யப் போகின்றோம் எனக் கலங்குகின்றனர். இதிலே ஒன்றிரண்டு தற்கொலைகள் வேறே, மண முறிவுகள் வேறே. இதுக்கெல்லாம் யார் காரணம்?? சம்பளத்தை அள்ளிக் கொடுத்த கம்பெனிகள் கூடவே அவங்க HRD மூலம் முதலீடுகள் செய்யவும் அறிவுரைகள், ஆலோசனைகள் சொல்லி இருக்கலாம். அல்லது பெற்றோர் சொல்லலாம்.
    //

    அன்புள்ள கீதா சாம்பசிவம்,

    நீங்கள் குறிப்பிட்ட மேற்குறிப்பிட்ட பேட்டிகள் எங்கே படிக்கக் கிடைக்கும்? நம் பொது ஊடகங்கள் தொடர்ந்து ஐ.டி பற்றிய பிம்பத்தை பொதுமக்களிடையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பிரதிபலிப்புதான் நீங்கள் சொல்லும் இந்த விஷயமும். இங்கே தொடர்ந்து எழுதப்படும் பின்னூட்டங்களும் அதையே காண்பிக்கின்றன.

    நீங்கள் சொல்வது போல பெருஞ்செலவாளிகள் முதல் 2‍ (அ) 3 வருடங்களில் இருக்கும் ஐ.டி ஆட்கள். வாழ்க்கையில் பணம் கையில் கிடைத்த உற்சாகத்தில் மிதப்பவர்கள். அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக பணியின் பொறுப்பும், கையில் பணமில்லாமல் போவதன் ஆபத்தும் புரியும்.

    பெரும்பாலான 4 ‍முதல் 5 வருடங்கள் வரையிலான ஐ.டி ஆட்கள் பணத்தை எங்காவது முதலீடு செய்து வைக்கிறார்கள். பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில். வேலை போனபின் முதலில் இவர்கள் பாதிக்கப்பட்டது இ.எம்.ஐ விஷயத்தில்தான்.

    மேலும் ஐ.டி ஆட்களில் எத்தனை சதவீதம் பேர் ஆடம்பரமாக அலைகிறார்கள்? எத்தனை சதவீதம் பேர் பப், பாரில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் க‌லாசாரத்தை விட்டு விலகிப்போகிறார்கள்? நம்மிடம் புள்ளிவிவரம் கிடையாது. ஏனென்றால் நம் ஊடகங்கள் அதையெல்லாம் சொல்வதில்லை. அது நமக்குத் தெரிவதில்லை.

    சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில், கல்யாணம் ஆன ஆட்களை வேலையை விட்டு நீக்குகிறார்களாம், ஏனென்றால் அவர்களால் வேலையில் கவனம் செலுத்த முடிவதில்லையாம் என்றெல்லாம் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். ஐ.டியில் வேலை செய்பவர்களால் மட்டுமே அது எவ்வளவு பெரிய அபத்தமான ஒரு கட்டுரை என்று புரிந்துகொள்ள முடியும்!

    மிகப்பெரும்பாலான கம்பெனிகளில் தொடர்ந்து வரி சேமிப்பு, முதலீடு செய்வது போன்ற வகுப்புகள் நடைபெறுவது கூட நமக்குத் தெரிவதில்லை. ஏன் எச்.ஆர்.டி துறை எதுவும் சொல்லித்தருவதில்லை என்றெல்லாம் கேட்கிறோம்!

    சென்ற வருடம் நக்கீரனில் ஒரு ‘ஆய்வுக்கட்டுரை’ வந்திருந்தது. அதன்படி இருக்கிற பைக்குகளிலேயே ஆபத்தமானது பல்ஸர்தானாம். ஏனென்றால் அதுதான் நிறைய விபத்துகளில் சிக்குகிறதாம். இக்கட்டுரையை எழுதுவதற்காக அவர்கள் எத்தனை பேரிடம் ஆய்வு நடத்தினார்கள், எத்தனை போலிஸ் பதிவுகளைப் பார்த்தார்கள் என்ற எந்த விவரமும் இல்லை! அதைப் போல்தான் தொடர்ந்து ஐ,டி தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகளும் இருக்கின்றன!

    எப்படி தொடர்ந்து பிரசாரப்படுத்தி பிராமணர்களைப் பற்றியும், யூதர்களைப் பற்றியும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டனவோ அதுபோல்தான் இதுவும்! கொஞ்சநாட்களில் ஐ.டி ஆட்களைக் குறிவைத்து ராம்சேனா களத்தில் இறங்கினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்! அதை நியாயப்படுத்தி தர்க்கரீதியாய் எழுதிக்குவிக்கவும் ஆட்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்?

    இதோ இன்றைய டைம்ஸ் செய்திப்படி பெங்களூருக்கருகில் ஒரு ரேவ் பார்ட்டியில் போலிஸ் ரெய்ட் நடத்தி நிறைய பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி ஆட்கள், மாணவர்கள் மற்றும் பிஸினஸ் செய்பவர்கள். நாம் ஏன் மாணவர்களைப் பற்றியோ, பிஸினஸ் செய்பவர்களைப் பற்றியோ பேச வேண்டும்? ஐ.டி ஆட்கள் போதுமே? சொல்ல மறந்துவிட்டேன் கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் இருந்திருக்கிறார்கள். இன்னும் நிறைய கட்டுரைகள் விரைவில் வெளிவரும்!

  21. //வனப்பிரஸ்தம் செல்வது என்பதே கூட்டுக்குடும்பத்தை உடைப்பதுதானே. சீதை கூட மாமியார்-மாமனாருடன் தங்கமாட்டேன் என்று கணவனுடன் கிளம்பியவர்தானே//

    மன்னிக்கணும், அரவிந்தன், வனப்ரஸ்தம் என்பதற்கும், வானப்ரஸ்தம் என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சீதை சென்றது காட்டில் கணவனுடன் வாழவே. வனவாசம் செய்யப் போனாள் சீதை. அவள் மாமியார், மாமனாருடன் தங்க மாட்டேன் என்றெல்லாம் வாதிடவில்லை. கணவனுடன் சேர்ந்து வாழ்வதையே முக்கியமாய் நினைத்தாள். சீதைக்கும், ராமருக்கும் அப்போது நடக்கும் பேச்சு, வார்த்தைகளை வால்மீகியில் படித்துப் பார்க்கவும். இணையத்திலேயே கிடைக்கிறதே.

    வானப்ரஸ்தம் இல்லறத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு, பின்னர் மனைவி, பிள்ளைகளின் அனுமதியுடன், மனைவியுடன் அல்லது மனைவி இல்லாமல் ஆன்மீக வழியில் செல்ல, ஏறக் குறைய தவம் செய்ய, செல்லுவதைக் குறிக்கும். இதில் அரசர்கள் என்றால் அடுத்த பட்டத்துக்கு வருபவர்களிடம் அரசாட்சியை முறையாக ஒப்படைத்து விட்டே செல்ல முடியும். மனைவி இருந்தால், அவள் சம்மதித்தால் அவளுடன். அப்போவும் மனைவியின் சம்மதம் முக்கியம். கொஞ்சம் நல்லா கவனிச்சுப் பாருங்க, புரியும், மத்ததுக்கு இப்போ நேரம் இல்லை,

    சேதுபதி அருணாசலம்,

    மேற்கண்ட பேட்டிகள் பிரபல பத்திரிகைகளில் தான் படிக்க நேர்ந்தது. ஒன்று அவள் விகடன்??? சரியா நினைவில்லை, தேடி எடுக்கணும், சில புத்தகங்கள் வாங்குவதில்லை, அதனால் புரியலை, கல்கி பத்திரிகையிலும் , அல்லது மங்கையர் மலர்?? படங்களுடன் பேட்டி பார்த்த நினைவு.

  22. ஜோல்னாப் பை அறிவு ஜீவிகளின் கூற்றுப்படி தனிமனித சுதந்திரம் விலைமதிப்பற்றது. பப் கலாசாரமும் அவ்வாறே. “பப் ப்ரோ” புகழ் ரேணுகா சவுத்ரி தனது மகளைத் தறி கெட்டு ஆட அனுமதிப்பாரா? அல்லது மற்ற “பெண்ணுரிமை”ப் போராளிகள் “பலபேரைச்சேரும்” காதல் “சுதந்திர”த்தை தங்கள் மகள்களுக்கோ, மகன்களுக்கோ அளிப்பார்களா? ராம்சேனாவின் தாக்குதல்கள் ” நாகரிக”மற்றவை என்றால் இடையும் தொடையும் தெரிய ஆடிடும் பப் கலா(?)ச்சாரமும் நாகரிகமற்றவையே. நமது இளைஞர்களின் அறிவுதிறமைக்குச்சான்று ஐ.டியின் வளர்ச்சி சான்று என்றால் அவர்களின் கலாச்சார “தேடுதல்”களுக்கும் ஐ.டி அளித்த சம்பளமும் ஒரு காரணம்தான்.

  23. //“சீதை கூட மாமியார்-மாமனாருடன் தங்கமாட்டேன் என்று கணவனுடன் கிளம்பியவர்தானே” என்ற அரவிந்த் அவர்களின் கருத்து சற்று வியப்பை ஏற்படுத்துகிறது. கணவனுக்கு பணிவிடை செய்யச் செல்கிறாளே தவிர வனப்பிரஸ்தம் செல்லவில்லை (அது வானப்ரஸ்தம், வனப்பிரஸ்தம் அல்ல)//
    நான் சீதை சென்றதை வானப்பிரஸ்தம் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு தொனி ஏற்படுகிறது. மகன் குடும்பத்தை நிறுவி நடத்தும் பொறுப்பு வந்ததும் பெற்றோர்கள் சேத்திராடனம், வனத்தில் ஆஸ்ரமம் அமைத்து தியானம் போன்றவற்றில் எஞ்சிய நாட்களை கழிப்பது என்பதே கூட்டுக்குடும்பம் என்பதிலிருந்து மாறுபட்டதல்லவா? சீதை ராமனின் கட்டளையை மிக வெளிப்படையாக, இன்னும் சொன்னால் மிகக்கடுமையாக ராமனை சீண்டி, வனத்திற்கு உடன் வருகிறாள். “பிராணநாதா உங்களுக்கு சேவை செய்ய அடியாளுக்கு அனுமதி மறுக்காதீர்கள்” என நம் பக்தி படங்களில் வரும் டயலாக்கை ஆதிகவி சீதையால் சொல்ல வைக்கவில்லை. “என்னை இப்படி விட்டுவிட்டு போகிறாயே நீயெல்லாம் ஒரு மனிதனா” என்கிற பாணியில் இன்னும் கடுமையாக பேசுகிறாள். மாமனார் மாமியார்களுக்கு ஊர்மிளை மாதீரி சேவை செய்துகொண்டிருந்திருக்க வேண்டாமோ? கணவன் சொன்னதை கேட்டுக்கொண்டு ராப்ரி போல “பாரதீய நாரி”யாக இருந்திருக்க வேண்டாமோ? ராமாயணம் முழுக்க காட்டப்படும் சீதை has a will and way of her own. She is in no way submissive. She loves her husband fierecely and She is a rebel. I do not know how the poet gave in Sita infinite readings for generations to come. But the fact is She of Valmiki is not the submissive “ideal” housewife our victorian age renderings of Ramayan show her as. She loves Rama, She choses to walk with Rama despite him not wanting her to come with him, She endures Asoka vana, She refuses easy escape of Her ordeal, She volunteers to step into fire, She refuses to repeat it when Rama wants Her to do it. She valiantly parts Rama for ever in the end. And Ramayana itself is according to Valmiki “the Glorious history of Sita” not Rama. She is no shadow of a male serving him meekly.
    இந்த தேசத்தில் பெண்கள் விடுதலை என்பது அத்வைத புரட்சியாளர்களின் கடும் தியாகங்களால் உருவாக்கப்பட்டது. நிவேதிதை முதல் சாரதா, முத்துலஷ்மி ரெட்டி வரை. மங்களூர் பப் தாக்குதல் என்பது பாஜகவுக்கு எதிரான அரசியலால் தேசியமயமாக்கப்பட்ட உள்ளூர் ரவுடி கலாட்டா அவ்வளவே. ஆனால் இந்த தேசம் பெண்கள் விடுதலையில் பெண்களுக்கு கல்வியை கொண்டு செல்வதி; எவ்வளவோ மைல்கல்கள் செல்ல வேண்டியுள்ளது. இந்த தருணத்தில் ஏதோ ஐடி கல்வி ஆகியவற்றால் பெண்கள் கெட்டுவிடுவார்கள் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் இந்த கட்டுரை பெண்கள் தினத்தில் வெளியிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இன்றைய உடனடித்தேவை பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும். குறிப்பாக கிராமங்களில். அதனை ஐடி தொழில்நுட்பம் சாதிக்க முடியும். சுய உதவிக்குழுக்கள், சுற்றுச்சூழல் இயக்கங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கங்கள் ஆகியவற்றில் பெண்கள் மேலும் மேலும் வந்து பங்கேற்க வேண்டும். (பார்க்க: https://narendramodi.in/news/news_detail/124) பப் போகும் பெண்கள் போகட்டும். அது ஒரு நிழல் மட்டுமே. அதனை வைத்து ஐடியையும் அது ஏற்படுத்தும் வளத்தையும் சுதந்திரத்தையும் வைய வேண்டாம். இந்த விடுதலை சூழலின் மூலம் பெண்கள் சாதிக்க முடிந்த பெரும் இலட்சியங்களை முன்வைப்போம். அது இந்த பப் செல்லும் பண்பாட்டை தன்னாலேயே பொருளற்றதாக்கிவிடும். மாறாக நிழலுடன் யுத்தம் செய்து பெண்களை மீண்டும் கொட்டடியில் பூட்ட வேண்டாம்.

  24. அரவிந்தன் ஐயா,

    ‘ராமனிருக்கும் இடந்தான் அயோத்தி’ என்றல்லவா சீதாப்பிராட்டியார் காட்டுக்குப் போனார். அதைத்தான் இன்றைய அரை டிரவுசர் ஐடி நங்கையர் செய்கிறார்களா? அப்படியானால் விவாகரத்துக்கள் ஐடி துறைக்காரர்களிடம்தான் அதிகம் என்று செய்திகள் வருவது எப்படி? ‘உனக்கு உன் வழி, எனக்கு என் வழி’ என்று நீங்கள் கூறும் கொட்டடியில் அடைபடாதவர்கள் கூறுகிற பொறுப்பற்ற சுதந்திரத்தால் வரும் வினையல்லவா இது.

    எக்குத்தப்பாக ஏனய்யா இங்கே முத்துலட்சுமி ரெட்டியும் சாரதாமணி அம்மையாரும்? எனக்குத் தெரிந்து அவர்கள் மதுவருந்தி அரைகுறை ஆட்டம் போட்டதாகவோ போடச் சொன்னதாகவோ தகவல் இல்லை. பிசாசு திருமறையைத் துணைக்கழைப்பது பெருந்தவறு.

    கத்தியால் குத்திக் கொலை செய்கிறார்கள் என்று கூறினால் உடனே ‘அய்யய்யோ, கத்தியால் காய் நறுக்கலாமே’ என்று பேசுவதில் பொருளில்லை. எல்லாத் துறையும் போல ஐடி துறையிலும் பலவகைப் பட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சமூகக் கட்டுக்கோப்பை உடைப்பதற்கான கருத்து/செயல் சுதந்திரம் ஐடி துறை தரும் கற்பனைதாண்டிய சம்பளத்தால் வருகிறது. அர்த்த ராத்திரியால் குடை பிடிப்பது யாரென்பது உங்களுக்குத் தெரியும்தானே?

    ஒரு நல்ல விவாதம் பெண்கள் தினத்தன்னைக்கு வந்ததேன்னு சந்தோசப்படுங்க சாமீ. இதை வேற நாளில போட்டிருந்தா நீங்கள் நினைக்கிற ‘குடி, குதி’ சுதந்திரத்துக்கு இணக்கமா இருந்திருக்குமா? கீதா சாம்பசிவம் அம்மா மாதிரிச் சில பேராவது இன்னும் பாரம்பரியச் சிந்தனையோடு இருப்பது நல்லதே.

    பாரம்பரியத்தில் கால் பாவாத புதுமையும் சுதந்திரமும் ஆபத்தானவை.

  25. அரவிந்தன் மிகவும் குழம்பிப் போய் உள்ளார். ஐ.டி.யை குறை சொல்லக் கூடாது என்கிறார். கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டி விட்டது என்கிறார். ஆங்கிலத்தின் மூலம் ராமாயணத்தைக் காட்டுகிறார்.

    புரிதலில் உள்ள குழப்பம் இது.

    //ஐடி கல்வி ஆகியவற்றால் பெண்கள் கெட்டுவிடுவார்கள் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் இந்த கட்டுரை பெண்கள் தினத்தில் வெளியிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.//
    கீதாம்மா சரியாகத் தான் சொல்கிறார்.

  26. //
    மேற்கண்ட பேட்டிகள் பிரபல பத்திரிகைகளில் தான் படிக்க நேர்ந்தது. ஒன்று அவள் விகடன்??? சரியா நினைவில்லை, தேடி எடுக்கணும், சில புத்தகங்கள் வாங்குவதில்லை, அதனால் புரியலை, கல்கி பத்திரிகையிலும் , அல்லது மங்கையர் மலர்?? படங்களுடன் பேட்டி பார்த்த நினைவு.
    //

    என் யூகம் சரிதான். ஐ.டி பற்றிய உங்களுடைய புரிதலுக்கு **பிரபல** பத்திரிகைகள் உதவாது. உங்களுடைய உறவினர், அண்டை வீட்டார் குடும்பங்களின் ஐ.டி மக்களின் சேமிப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்வது நடைமுறை சார்ந்த பார்வைக்கு உதவியாக இருக்கும்.

    //
    ‘ராமனிருக்கும் இடந்தான் அயோத்தி’ என்றல்லவா சீதாப்பிராட்டியார் காட்டுக்குப் போனார். அதைத்தான் இன்றைய அரை டிரவுசர் ஐடி நங்கையர் செய்கிறார்களா? அப்படியானால் விவாகரத்துக்கள் ஐடி துறைக்காரர்களிடம்தான் அதிகம் என்று செய்திகள் வருவது எப்படி? ‘உனக்கு உன் வழி, எனக்கு என் வழி’ என்று நீங்கள் கூறும் கொட்டடியில் அடைபடாதவர்கள் கூறுகிற பொறுப்பற்ற சுதந்திரத்தால் வரும் வினையல்லவா இது.

    எக்குத்தப்பாக ஏனய்யா இங்கே முத்துலட்சுமி ரெட்டியும் சாரதாமணி அம்மையாரும்? எனக்குத் தெரிந்து அவர்கள் மதுவருந்தி அரைகுறை ஆட்டம் போட்டதாகவோ போடச் சொன்னதாகவோ தகவல் இல்லை. பிசாசு திருமறையைத் துணைக்கழைப்பது பெருந்தவறு.
    //

    இரா.கந்தசாமி ஐயா (இந்த ஐயா என்ற வார்த்தையும், உங்கள் எழுத்து முறையும் எனக்கு வேறு யாரையோ நினைவு படுத்துகிறது :‍‍‍) போகட்டும்)

    அரவிந்தன் ஐயா, எங்கேயுமே சீதாப்பிராட்டியும் இன்றைக்கு பப்புக்குப் போகும் பெண்களும் ஒன்று என்ற ரீதியில் எழுதவில்லை. அதைப் போலவே முத்துலட்சுமி ரெட்டியும் மதுவருந்தி ஆடியதாகவோ எழுதவில்லை. இவை இயல்பாக ஒரு விவாதம் ஐ.டி, பெண்கள் கல்வி, சுதந்திரம், பெண்ணியம் என்றெல்லாம் பல கிளைகளில் சென்றபோது ஆங்காங்கே எழுந்த கருத்துகள். ஒருவேளை இன்றைய தினசரியை நீங்கள் படித்தால் மங்களூர் மாவீரன் முதாலிக் நியூசிலாந்தில் சதம் அடித்ததற்கு ஒபாமா பாராட்டுத் தெரிவித்தார் என்று புரிந்து கொள்வீர்களாயிருக்கும். ஒருகாலத்தில் இப்படிப்பட்ட குதர்க்கங்கள் நையாண்டி என்று குதூகலித்து வரவேற்கக் கூடப்பட்டன. யார் கண்டது? இப்போதும் உங்கள் நையாண்டியை ரசித்து பின்னூட்டங்கள் வரலாம்!

  27. திரைபடங்களில் /தொலைகாட்சிகளில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் அரைகுறை ஆடைகளுடன் கூத்தடிப்பதை, வார பத்திரிக்கைகளில் அரைகுறை ஆடைகளுடன் ஓவியர்கள் வரைந்த படங்களை பார்ப்பது, உலக அழகிபோட்டி ,திருமணமானவர்கள் அழ்கிபோட்டி என இத்யாதி போன்றவற்றை ஆபாசம் ஆபாசம் என்றோ புலம்பிக்கொண்டே ரசிக்கும் சமூகம் நம் சமூகம்.
    திரைப்படங்களில் பார்த்தவற்றை கேட்டவற்றை நிஜ வாழ்க்கையில் அனுபவித்தால் என்ன என்று சமூகத்தில் ஒரு சாரார் கிளம்பியிருக்கிறார்கள் .அதில் ஒன்றுதான்பப் கலாசாரம்.
    அன்று பெண் பனியன் பெண்ட்ட்டுடன் ,நைட்டியுடன் தெருவில் வலம் வருவது ஆபாசமாக கருதப்பட்டது. இன்று அது அங்கிகரிக்கபட்டுவிட்டது.
    அதுபோல்தான் இதுவும்.இதில் உள்ள சாதக பாதகங்களை உணர்ந்த பின்னர் அவர்கள் அவர்களின் குழந்தைகளை இதில் அனுமதிக்கலாமா என்று முடிவு செய்து கொள்வார்கள்.
    நம் இந்து மத கலாசாரம் மீது நம்பிக்கை வைத்து அதை அனுசரிப்பவர்கள் அனுசரித்துகொண்டுதான் இருக்கிறார்கள்..
    ஐடீ துறையில் பணி புரிபவர்கள்தான் இதில் ஈடுபடுகிறார்கள் என்பது அபத்தமான குற்றச்சாட்டு.
    எந்த துறையும் பலூன் போல் வீங்கினால் ஒரு நாள் வெடித்து காணாமல் போகும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு தெரியும்.
    அதுபோல்தான் இந்த ஐடீ துறையும்.
    கலாசாரதாக்குதல்கள் ஒரு பக்கம் தொடர்ந்துகொண்டிருக்க நம்முடைய மேம்பட்ட கலாசாரத்தை நாடி லட்சகணக்கான மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பொறுமையாக சிந்தித்து பார்த்தால் புரியும்.
    பொதுவாக ஒழுக்கமாக இருந்து குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் குழந்தைகள் இது போன்ற பரிசோதனைகளில் ஈடுபடுவது இல்லை என்பது உண்மை.

  28. ஒருகாலத்தில் எங்கள் ஊர் பக்கங்களில் பெண்கள் கண் மைதீட்டினால் பவுடர் போட்டால் அவள் விலைமகள் என இழிந்து பேசப்பட்டதுண்டு. பரதநாட்டியம் கற்பது இந்த கலாச்சாரத்துக்கு எதிரானது பெண்களை கெடுப்பது என பேசப்பட்டது உண்டு. அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் ஹார்மோனிய பெட்டியை அனுமதித்தால் இந்திய பண்பாடும் இசையும் சீர் கெட்டுவிடும் என போர்கொடி உயர்த்தியவர்கள் உண்டு. ஐடி பெண்கள் அரை நிஜார் போடுகிறார்கள் – அது இந்திய பண்பாட்டுக்கு எதிர் என்று வருத்தப்படுபவர்களுக்கு ஒரு காலகட்டத்தில் பெண்கள் மாரை மறைப்பதே சனாதனதருமத்துக்கு எதிரானது என ஒரு நிலை திருவிதாங்கூர் பிரதேசத்தில் நிலவியது தெரிந்திருக்கவேண்டும். இந்த காலகட்டங்களில் நாம் வாழ்ந்திருந்தால் நாம் எந்த அணிக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்திருப்போம்? இதையெல்லாம் எதிர்த்து போராடிய பெண்களாலும் ஆண்களாலும் உருவானது பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் பெண்கள் கல்வி மற்றும் சமத்துவம். இதே பாதையில் நாம் செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. ஹிந்து தருமம் அதற்கு பயன்படட்டும். கோஷாவுக்குள் பெண்களை அடைக்கும் பழமை அழியட்டும். பெண் அவள் விடுதலையை பேசட்டும். அவள் சுதந்திரத்தை கொண்டாடட்டும். இது அவளுக்கு மட்டுமல்ல நம் மானுட சமுதாயம் அனைத்துக்குமே நலம் பயக்கும். அவள் சாதிக்க வேண்டிய சாதனைகள், அவளால் மட்டுமே கடக்கமுடிந்த தூரங்கள் எவ்வளவோ உண்டு. ஒரு பப் தகராறின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டியதல்ல பெண் விடுதலையும் பெண் கல்வியும் ஐடி தொழில்நுட்பம் அளிக்கும் மட்டற்ற வாய்ப்புகளும்.

  29. இந்த வலைத்தளத்துக்குள் வந்தபோது ஆச்சர்யமும், சந்தோஷமும் பட்டேன். எவ்வளவு விஷய ஞானமுடன் எழுத்துக்கள் எழுதுகிறார்கள் என்று. ஆனால் புப் கலாச்சார மறுமொழிகளை படித்த பிறகு என் கருத்தை மாற்றிகொள்கிறேன். நாத்திகமும், இந்து மத த்வேஷமும், அறியாமையும் ஹரிதாரம் போட்டுக்கொண்டு பேசுகின்றதை பார்த்து மிகவும் வேதனை அடைகிறேன். நாத்திகன் செய்ய முடியாததை இந்த மறுமொழிகள் செய்துவிடும் போலத் தெரிகிறது.

    விஷயம் தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு விஷயம் சொல்லலாம். ஆனால் விதண்டாவாதம் செய்பவர்களை என்ன செய்ய?

    தமிழ் ஹிந்து . காம் நல்ல முறையில் வளர ஈசன் தான் துணை செய்யவேண்டும்.

    மிகுந்த வருத்தத்துடன்
    வெங்கட் ராமன்

  30. சேதுபதி ஐயா, உங்களுக்கு ஏன் நான் அரவிந்தன் அவர்களை ஐயா என்று அழைப்பது பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. எல்லோரையும் ‘டாம், டிக், ஹாரி’ என்று இரட்டை எழுத்தில் நாய்க்குட்டியைப் போலக் கூப்பிடுகிற ஐ.டி. கலாசாரத்தில் எனக்கு ஒப்புதல் கிடையாது.

    அது போகட்டும். என்னை யாரோ என்று நினைத்துக்கொன்டு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டீர்களே. இப்படி ‘நக்கல்’, ‘நையான்டி’ என்று பொட்டுக்கட்டித் தூக்கி எறிவது அரசியல்வாதிகளின் வேலையல்லவா ஐயா! மிகவும் தீர்க்கமாக ஐடி தரும் பொருளாதார சுதந்திரம் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது என்பதை எழுதியிருந்தேனே. அதை கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே. சவுகரியமான கவனக் குறைவுதான்.

    அரவிந்தன் ஐயா, தொழில்நுட்பம் இருப்பதால்தான் இப்படி உட்கார்ந்துகொண்டு நாமெல்லாம் அலுவலக நேரத்தில் பெண்ணுரிமைச் சண்டை போட முடிகிறது என்பதை நானும் அறிந்திருக்கிறேன். தொழில்நுட்பமே வேண்டாம் என்று யாரோ சொல்லிவிட்டதாக நீங்கள் நொந்துகொள்கிறீர்களே. திசைதிருப்பல் என்பது இதுதானே!

    இதற்கும் பப்பையோ, அங்கே சென்று பெண்கள் தமது கோப்பைகளையோ, அல்லது சைகடெலிக் லைட் போட்ட நடன மேடைகளையோ நிரப்புவதற்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக என் போன்ற கர்நாடகங்கள் நம்ப வேண்டும் என்று நீங்கள் முயற்சிப்பது வீண். அதைவிட நீங்கள் ரேணுகா சவுதிரி அல்லது அருந்ததி ராயைத் திருத்த முயற்சித்தாலாவது பயன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய பிளவுஸ் அணியும் உரிமையைக் கைவிடும் போராட்டமாக அல்லவா இருக்கிறது இந்த இந்த பப் டான்ஸ் போராட்டம், இதையும் நீங்கள் ஆதரிப்புது எப்படி என்பதுதான் என் கேள்வி.

  31. //
    சேதுபதி ஐயா, உங்களுக்கு ஏன் நான் அரவிந்தன் அவர்களை ஐயா என்று அழைப்பது பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. எல்லோரையும் ‘டாம், டிக், ஹாரி’ என்று இரட்டை எழுத்தில் நாய்க்குட்டியைப் போலக் கூப்பிடுகிற ஐ.டி. கலாசாரத்தில் எனக்கு ஒப்புதல் கிடையாது.
    //

    இரா.கந்தசாமி ஐயா, நான் எங்கேயுமே நீங்கள் ஐயா என்று அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று எழுதவில்லை. என்னுடைய மறுமொழியை மறுமுறை படித்துப்பார்க்கவும்.

    //
    அது போகட்டும். என்னை யாரோ என்று நினைத்துக்கொன்டு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டீர்களே. இப்படி ‘நக்கல்’, ‘நையான்டி’ என்று பொட்டுக்கட்டித் தூக்கி எறிவது அரசியல்வாதிகளின் வேலையல்லவா ஐயா!
    //

    அடக்கடவுளே! நீங்கள் “எக்குத்தப்பாக ஏனய்யா இங்கே முத்துலட்சுமி ரெட்டியும் சாரதாமணி அம்மையாரும்? எனக்குத் தெரிந்து அவர்கள் மதுவருந்தி அரைகுறை ஆட்டம் போட்டதாகவோ போடச் சொன்னதாகவோ தகவல் இல்லை.” என்று சொன்னது நக்கலாக எழுதப்பட்ட விஷயம் இல்லையா? சீரியஸாகத்தான் சொன்னீர்களா? அப்படியென்றால் நீங்கள் அரவிந்தன் ஐயாவின் மறுமொழிகளை மீண்டுமொருமுறை படிக்க வேண்டும் ஐயா. படிக்கும்போது வேகமாக ஸ்க்ரோல் டெளண் செய்ய வேண்டாம். வாக்கியங்கள் ஒன்றின் மீது ஒன்று படிந்து குழப்பமாகிவிடும்.

    //
    மிகவும் தீர்க்கமாக ஐடி தரும் பொருளாதார சுதந்திரம் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறது என்பதை எழுதியிருந்தேனே. அதை கவனிக்காமல் விட்டுவிட்டீர்களே. சவுகரியமான கவனக் குறைவுதான்.
    //

    நீங்கள் எழுதிய நீண்ட மறுமொழியில் “சமூகக் கட்டுக்கோப்பை உடைப்பதற்கான கருத்து/செயல் சுதந்திரம் ஐடி துறை தரும் கற்பனைதாண்டிய சம்பளத்தால் வருகிறது.” என்பதுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பொருளாதாரம் தொடர்பான விஷயம். இதுதான் அந்த தீர்க்கமான விஷயமா? ஏன் ஐயா, பொருளாதார சுதந்திரத்தை வெறும் ஐ.டியோடு நிறுத்தி விட்டீர்கள்? பணக்காரர்கள் பல விதங்களிலும் இருக்கிறார்களே ஐயா? இப்படி பணத்தையும், சீரழிவையும் ஒன்றிணைத்துப் பொதுப்படுத்த ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்து “ஒரு ஊசிமுனைக்குள் ஒட்டகத்தை நுழைப்பதைக்காட்டிலும் கடினமானது ஒரு பணக்காரன் சொர்க்கத்துக்குள் நுழைவது” என்று சொன்னதிலல்லவா முடியும்?

    மேலும் ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டுமே ஒருவ‌ர் த‌ன் க‌லாசார‌த்தைச் சீர‌ழிக்க‌க் கார‌ண‌மாக‌ இருக்க‌ முடியுமா? பெற்றோர்க‌ளின் வ‌ள‌ர்ப்பு முறை, இன்த‌ ச‌மூக‌ம் முன்வைக்கும் சுதன்திர‌ம் குறித்த‌ பார்வை, தவறான புரிதல்கள் இதெல்லாம் அங்கே வ‌ராதா?

  32. //
    நாத்திகமும், இந்து மத த்வேஷமும், அறியாமையும் ஹரிதாரம் போட்டுக்கொண்டு பேசுகின்றதை பார்த்து மிகவும் வேதனை அடைகிறேன்.
    //

    மன்னிக்கவும் திரு.வெங்கட்ராமன். உங்கள் மறுமொழி மிகவும் கடுமையான தொணியில் உள்ளது. இங்கே நாத்திகமோ, இந்து மத துவேஷமோ எங்கே செய்யப்பட்டிருக்கின்றது என்பதை உங்களால் நிறுவ முடியுமா? உங்கள் கருத்துகளுக்கு எதிர்க்கருத்து சொல்பவர்களெல்லாம் இந்து மத த்வேஷிகளா? அதே போல் இங்கே சொல்லப்படும் ஒவ்வொரு மறுமொழிக்கும் முடிந்தவரை தன்னனுபவத்திலிருந்தோ, இலக்கியங்களில் இருந்தோ மேற்கொள்கள் தரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏதேனும் தவறிருந்தால் திருத்துங்கள். அதைவிட்டு விட்டு இப்படி நாத்திக, இந்து த்வேஷ, அறியாமை மறுமொழிகள் என்றெல்லாம் எழுத வேண்டாம். மேலும் இங்கே எழுதப்படுபவை வாசகர்களின் கண்ணோட்டங்கள் மட்டுமே. இதை வைத்து தளத்தை ப்ராண்ட் செய்ய வேண்டாம்.

  33. கால மாற்றத்தோடு கேளிக்கை சார்ந்‍த மனிதனின் பார்வையும் மாறுபடவே செய்யும், கோயில் சார்ந்‍து வளர்க்கபட்ட பரதத்தின் ஆதிக்கம், நவீன காலகட்டங்களில் எடுபடாமல் போனது புரிந்‍துகொள்ள கூடியதே.

    பரதம்/பப் இவற்றில் எது சரி, எது தவறு என்று மதிப்பிட ஒருவர் தயாரானால், அந்த முடிவு தனிமனித விருப்பு/வெறுப்பு சமபந்‍தபட்டதாக இருக்குமே ஒழிய, கேளிக்கை சார்ந்‍த சமூகத்தின் மனப்போக்கு அவ்வாறே அமையாது. பப் என்பதை பரதத்திற்க்கு நிகரான கலாச்சாரமாக‌ நான் முன்னிருத்தவில்லை. மாறாக சமூகம் எது சரி/எது தவறு என்று பாகுப்பாட்டினை உணர மறுத்து, தத்துவ/கலை விசாரங்களில் நம்பிக்கையற்று, பெரும்பாலான சமயங்களில் கேளிக்கை சார்ந்து மட்டுமே இயங்கும் இயல்புடையது என்றே கூற விழைகிறேன்.

    பப் கலாச்சாரம் நகரம் சார்ந்த மனங்களின் கேளிக்கை மையம். கிராமங்களிலும் இது போன்ற கேளிக்கைகள், அருவருக்கதக்க, ஆபாசமான நிலைகளில் நிலைபெற்றிருக்கின்றன. தற்கால கிராம கோயில் திருவிழாக்களில் பரதம் மற்றும் பிற கிராமிய கலைகள் பின்னுக்கு தள்ளபட்டு ரிக்கார்டு டான்ஸ் முன்னிலைபடுத்தபடுவது எதனால்? எந்த IT துறை சார்ந்த மனிதர் இந்த ரிக்கார்டு டான்ஸ் சமாச்சாரத்திற்க்கு ஏற்பாடு செய்கிறார்?

    அது போல பெண்கள் குடிப்பது என்பது மீண்டும் மீண்டும் IT துறையுடன் தொடர்புபடுத்தபடுவது எந்த வித அடிப்படையுமற்ற செயல். கிராமங்களிலும் சாராயம் அருந்தும் பெண்களை இன்றளவும் காணமுடியும். அவர்கள் IT துறையின் பாதிப்பால் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று கூறுவது எவ்வளவு அபத்தம்?

    மேலும், நமது கலாச்சாரம் தன் உன்னத நிலையில் நின்றதாக‌ அறியபடும் சங்ககாலத்தில் நிலவிய காமவேள் பண்டிகை குறித்தும், திருமணத்திற்க்கு முந்தைய உறவுகள்(களவு மணம்) குறித்தும் பலர் அறிந்திருக்கலாம்.

    நான் குடி/பப் போன்ற செயல்களை நியாயபடுத்த முயலவில்லை. மாறாக, இவையாவும் சமூகத்தின் பல்வேறு தளங்களின் வளர்ச்சிக்கேற்ப நிகழும் நிகழ்வுகள் என்று மட்டுமே கூற விழைகிறேன். இந்த நிகழ்வுகள் களையபட வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அதற்கான நடைமுறை என்ன என்பது தான் கேள்வி.

    ஈவேரா-வை போன்ற கடப்பாரை அணுகுமுறையும், சமூகத்தின் அனைத்து தவறுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினைரை குற்றம் சுமத்தும் இரட்டை பரிமாண பார்வையும் எந்த ஒரு நேர்மறையான, ஆரோக்கியமான பாதைக்கு நம்மை இட்டு செல்லாது. மாறாக, பிரச்சனையின் அடிப்படையை உள்ளபடியே உணர்ந்து, அதை களைய ஆரோக்கியமான நடவடிக்கைகளின் மூலமும், நம்மிடையே உள்ள தொன்மங்களை மீட்டு எடுப்பதன் மூலமாக செயல்படுத்த முடியும்.

  34. காமவேள் பண்டிகை / களவு மண உறவுகள், பப், சாராயம், ரிக்கார்டு டான்ஸ் இவை அனைத்தும் தனிமனிதன் தன் மனம் மற்றும் புலன்களை கட்டுக்குள் வைத்திருக்க வழிவகை அறிந்திருக்காததால் தான் நிகழ்கின்றது.

    பாரதப் பாரம்பரியம் மட்டுமே உபநிடம் வாயிலாக நேரடியாகவும், இதிகாசங்கள், புராணக்கதைகள் வாயிலாக மனித மனத்தை, புலன்களை மேம்படுத்த உதவிடும் உயர் தத்துவங்களை சொல்லி மனித வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க உதவிடுகிறது.

    இன்று தனிமனிதன் தன்னை ” காமவேள் பண்டிகை / களவு மண உறவுகள், பப், சாராயம், ரிக்கார்டு டான்ஸ் , சிகரெட், இன்னபிற மோசமான விஷயங்களில் வாழ்வைத் தொலைக்காமல் மெய்யான மகிழ்ச்சியை தனிமனிதன் பெற்று ஆக்கமாக மேம்படைய வைக்கும்.

    சமூகத்தின் இன்றைய பிரச்சினை மெக்காலே அடிமைக்கல்வியினால் விளைவிக்கப்ப‌டுகிறது இந்தியாவில்.

    இதன் நிரந்தர தீர்வு கல்விமுறையை பாரதப் பாரம்பரியம் சார்ந்ததாக ஆக்கவேண்டும். இருபத்தி இரண்டு வயதில் வேலைக்குச் செல்லும் கல்வி அறிவு பெற்ற எந்த இந்தியனும் இந்தியாவில் தான் கற்கும் கல்லூரிக் கல்வியின் அங்கமாக‌ உபநிடம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்களைக் கட்டாயமாக கற்று அறிந்தவராக இருத்தல் அடிப்படை ஆக்கப்பட வேண்டும்.

    அன்புடன்,

    ஹரிஹரன்
    குவைத்.

  35. அவரவர் மனதில் உள்ளதை அப்படியே கொட்டுங்கள்
    வேண்டாதனைத்தையும் நீக்கி/நீங்கி
    வேண்டுவதனைத்தையும் ஏற்று நன்மைஅடைவோம்
    எந்த கருத்துக்கும் எதிர்/ஒத்த கருத்துண்டு இவ்வுலகில்
    அது அவரவர் மனதின் முதிர்ச்சியை/சுயநலம் சார்ந்தது
    நடுநிலையுடன் பிரச்சினைகளை அணுகுவோம்
    சினம் வேண்டாம்
    சிந்தனை போதும்
    நிந்தனை வேண்டாம்
    எழுத்துக்களில் கடுமை வேண்டாம்
    இளம் பருவம் பயமறியாது
    எடுத்து சொன்னாலும் புரியாது.
    அறிவு அற்றம் காக்கும் கருவி
    ஏற்றுக்கொண்டு தன்னை பாதுகாத்து கொள்பவர்கள் நன்மை அடைவார்கள்
    மற்றவர்கள் அனுபவத்தில் தெரிந்துகொள்ளட்டும்
    கண்ணதாசன் எல்லோருக்கும் புரியும்படி எழுதி வைத்தான்
    கெட்ட பின் ஞானி. என்று
    நம் வரலாறுகளும் அதைத்தான் சொல்கின்றன (உம் ) அருணகிரிநாதர், துளசிதாசர்
    என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் உதாரணம் காட்ட.
    ஒரு தவறை தவிர்க்க மற்றொரு தவறை செய்வதுதான் வன்முறையில் இறங்குவது.
    அது எப்போதும் நல்ல விளைவுகளை தந்தது கிடையாது.
    வன்முறை வன்முறைக்குதான் வழிவகுக்கும் சங்கிலித்தொடர் போல.
    படிக்காதவன் தவறு செய்வதில் தவறில்லை
    படித்தவன் தவறு/பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்று
    அன்றே எழுதிவிட்டான் பாரதி.
    புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

  36. //../கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, அல்லது அவற்றை மீறி, தங்கள்
    இஷ்டத்துக்கு வாழ்வதுதான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை எந்தப்
    பெண்ணுக்கும் கிட்டவே வேண்டாம்.//

    அதை அந்தப் பெண் தீர்மானிக்கட்டும். நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். பப் கலாச்சாரத்தை விட இந்த ராமசேனா வானரங்களின் ஃபாசிசம் அதி பயங்கரமானது. அது தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியது. பிஜேபியின் சுஷ்மா ஸ்வராஜ் ஒரு பெண்ணைப் பற்றி அவளின் பெற்றோர் கவலைப்பட்டால் போதும் என்கிறார் கலாச்சார ரவுடிகள் அக்கறைப்பட வேண்டியதில்லை, அது பற்றி.

  37. Adult women going to the pub is not illegal in Karnataka. If you want to do something against women going to pub, please stand for election , form a Govt and change the law. Educating the women (and men )on the evils of alcohol is the right way to go.

    What right anyone has to say what our culture should be? Who defines our culture? How come everyone is jumping on the bandwagon claiming to represent our Hindu culture? If we all want to have the culture of the past,( I will love to live Lord Rama’s time) then, we all have to travel in a time machine to go back to that past.Whether we like it or not,society has changed. Educated women can make their own decesions reg drinking and going to a pub. Ram Senna should be punished .
    The sorry sight is to see our PS media targeting only this pub incident. This irks me the most.

    Please read this article in Idli vadai
    https://idlyvadai.blogspot.com/2009/03/mangalore-vs-kolkata.html

  38. //என் யூகம் சரிதான். ஐ.டி பற்றிய உங்களுடைய புரிதலுக்கு **பிரபல** பத்திரிகைகள் உதவாது. உங்களுடைய உறவினர், அண்டை வீட்டார் குடும்பங்களின் ஐ.டி மக்களின் சேமிப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்வது நடைமுறை சார்ந்த பார்வைக்கு உதவியாக இருக்கும்.//

    இப்போதைக்கு சேதுபதி அருணாசலத்துக்கு மட்டும் பதில் கொடுக்கிறேன். பிரபல பத்திரிகைகளை மட்டுமே படிச்சுட்டுச் சொல்றேன்னு நினைச்சால் நான் என்ன செய்ய முடியும்? அக்கம்பக்கம், உறவினர், அண்டை வீட்டார்னு எல்லோருடைய அனுபவங்களையும் பார்த்துக் கேட்டு, அனுபவித்தே தான் சொல்லுகின்றேன். பெண்கள் முக்கியமாய் இன்றைய வேலைக்குச் செல்லும் இளம்பெண்களின் தாய்மார்கள், தங்கள் பெண் பெரிய வேலையில் இருக்கின்றாள், ஐந்து இலக்கத்தில் சம்பாதிக்கின்றாள் என்று அலட்டும் அலட்டலை எல்லாம் நேரில் கண்டு அனுபவித்திருக்கின்றேன்.

    இன்னும் சொல்லப் போனால் அந்தப் பெண்களின் தாய்மார்களுக்குப் பெண் சம்பாதிப்பதால் கிடைக்கும் சுகபோக வாழ்க்கையும், வாரா வாரம் கிடைக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடும், (சில கம்பனிகள் மாசம் இவ்வளவு பேருக்குக் குடும்பத்திலே என்று கார்டு கொடுப்பதாயும் சொல்கின்றனர்.) நகை, புடவை போன்ற விலை உயர்ந்த பொருட்களும் கிடைப்பதால் மகள் தவறான வழிக்குச் செல்கின்றாளோ என விசாரிக்கவும் அஞ்சுகின்றனர் என்பதே உண்மை. சில சமயம் கை மீறிப் போன பின்னர் வருந்தும் பெண்களையும் பார்க்கின்றேன். கேட்டுவிட்டு, அதனால் அவமானப் பட்ட பெற்றோரையும் பார்க்கின்றேன். ஆண்களும் இதில் விதி, விலக்கல்ல.

    படிச்சுட்டு இந்த வயசிலே இவ்வளவு சம்பாதிக்கிறாளே, அவங்களைக் கேட்க முடியுமானு ஒரு தாய் என்னிடமே சொன்னார்கள். அப்போவும் நான் கண்டிச்சேன். எத்தனை சம்பாதித்தாலும் குழந்தை நம்மோடது, நாம் தான் முதலில் கண்டிக்க வேண்டும் என. ஒரு இளம் தம்பதி இன்னும் ஒரு படி மேலே போய்த் தங்கள் குழந்தைக்கு பிட்சா, பர்கர் கலாசாரம் அறிமுகம் செய்து வைக்க, இப்போ கணவனுக்கு ஆட்குறைப்பில் வேலை இல்லை. குழந்தைக்கு மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குள். திடீரென அம்மா, அப்பா, செய்யும் சிக்கனம் பற்றிப் புரியற வயசில்லை. குழந்தையைச் சமாதானம் செய்ய முடியலை. இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். வீடு வாங்கிட்டு லோன் கட்ட முடியாமல், கார் வாங்கிட்டு லோன் கட்ட முடியாமல், க்ரெடிட் கார்டு கலாசாரம் வந்ததும், அதனால் ஏற்படும் வட்டி?????? யாரும் க்ரெடிட் கார்டு வாங்கும் முன்னர் அது பற்றித் தீவிரமாய் யோசித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துட்டு வாங்கவே மாட்டாங்களோனு எண்ண வைக்கிறது.

    இன்னும் இருக்கு, மொபைல் தொலைபேசி, சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விவாதத்துக்கு முடிவே இல்லை.

    //ஒரு காலகட்டத்தில் பெண்கள் மாரை மறைப்பதே சனாதனதருமத்துக்கு எதிரானது என ஒரு நிலை திருவிதாங்கூர் பிரதேசத்தில் நிலவியது தெரிந்திருக்கவேண்டும்//

    திருவனந்தபுரம் பெண்கள் பற்றி அரவிந்தன் சொல்லி இருக்கின்றார். அந்தப் பெண்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அம்மாதிரி நடத்தப்பட்டார்கள். பெண் விடுதலையும், பெண் படிப்பதும் வேண்டாம் என யாரும் சொல்லவே இல்லை. படிக்கவே இல்லை என்றால் இங்கே நான் வந்து இம்மாதிரி எழுதிக் கொண்டே இருக்க முடியாது. படித்த படிப்பும், கொடுக்கும் சுதந்திரமும் சரியான முறையில் செலவழிக்கப் பட வேண்டும்.
    நிமிர்ந்த நன்னடை=தைரியமாய் எல்லாரையும், எல்லாவற்றையும் எதிர்கொள்ள,

    நேர் கொண்ட பார்வை= தவறு செய்பவர் யாரானாலும் கண்டிக்கத் தேவை.
    திமிர்ந்த ஞானச் செருக்கு= குடும்பத்தை வளர்க்கப் பயன்படவேண்டும். செருக்கோடு மற்றவரை அலட்சியம் செய்ய அல்ல.

    ஆனால் இன்று நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும் எவ்விதமோ பயன்படுகின்றதைப் பார்த்தால் பாரதி இம்மாதிரி எழுதினதுக்கு நொந்து போய்த் தற்கொலையே செய்து கொண்டிருப்பார்.

  39. யம்மா.. கீதா சாம்பசிவம் அம்மா.. ஏம்மா இப்புடி டென்ஷனாவுறீங்க… யார் வூட்டுப் பொண்ணுங்களோ பப்புக்கு போவுது.. குடிக்குது.. சீரழியுது.. நமக்கின்னா.. நம்ம அக்கா, தங்கச்சிங்களா போவுது… இல்ல அதுகள எவனாது அடிச்சானா.. இல்லை கையப் புடிச்சுத்தான் இழுத்தானா? எங்கயோ யார்க்கோ எதுனா நடந்தா நமக்கினாம்மா? அத அவங்க பாத்துப்பாங்கம்மா!

    சான்ஸ் கெடச்சிதா.. கூடப் போணாமா ரிலாக்ஸ் பண்ணினம்மான்னு இல்லாம என்னம்மா இது.. சொம்மா கலாசாரம் கலாசாரம்னு கூவிக்கிணு… என்னா ஆச்சு இப்போ கலாசாரத்திற்கு… இளவட்டங்க அவங்க ஆசைப்படி இருக்குறது தப்பா…அதைப் போய் குத்தம் சொல்லிக்கிணு… இந்த வயசான ஆளுகெல்லாம் வவுத்தெரிச்சல்னுதான் நான் சொல்லுவேன்.. ஆமா…

    ஆனா ஒண்ணும்மா… தெகிரியமான ஆளா இருந்த் சொல்லாக்கா,ஒரு பையன் தங்கச்சியக் கூட்டிகுணு, அக்காவைக் கூட்டிக்கிணு பப்புக்குப் போவணும். குடிக்கணும்.. கூத்தடிக்கணும்.. செய்வானா, மாட்டான். ஏன்??..

    பொண் சுதந்திரம்னா பொண்டாட்டியயும் கூட்டிகிணு போணும்… குடிக்கணும்.. கூத்தடிக்கணும்… செய்றாங்களா என்ன…. மாட்டானுங்க…காரணம் யார், எப்படி போனா என்ன.. எனக்கு அல்லாம் ‘ப்ரெஷா’ ‘சுத்தமா’ வேணும்ங்கறது தான். ஆனா மத்தவங்களப் பத்தி நானு கவலைப்பட மாட்டேன். இதுதாம்மா இப்போதைக் கலாசாரம்.. புரிதா.. நீ சொம்மா கலாசாரம், அழிவு, வீழ்ச்சினு கூவிகினு இருக்காதே.. அக்காங்..

  40. //அந்தப் பெண்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அம்மாதிரி நடத்தப்பட்டார்கள்.//
    இல்லை. மேல்சாதி பெண்களும் தாழ்த்தப்பட்ட பெண்களும் மேலாடை அணிய அனுமதிக்கப்படவில்லை.
    //பெண் விடுதலையும், பெண் படிப்பதும் வேண்டாம் என யாரும் சொல்லவே இல்லை.//
    தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி.
    //படித்த படிப்பும், கொடுக்கும் சுதந்திரமும் சரியான முறையில் செலவழிக்கப் பட வேண்டும்.// அந்த சரியான முறையை யார் சொல்லுவார்கள்? முதாலிக்? இல.கணேசன்? அச்சுதானந்தன், சீதாராம் யெச்சூரி, மதானி? ஸ்ரீ ராம் சேனை, மனித நீதி பாசறை, DYFI போன்ற அமைப்புகளை சேர்ந்த பாசிச வானரங்கள்? இன்றைக்கு வரை வரதட்சிணையை ஒழிக்க முடியாத பெற்றோர்கள்? யார்? மனு? மோசஸ்? முகமது? தனது பெண்கள் முன்னேற்ற துறையின் கையாலாகாதத்தனத்தை மறைக்க மங்களூர் பப் தாக்குதலை பெரிதாக்கி பப்புகளை நிரப்ப சொல்லும் ரேணுகா சௌத்ரி? பப்புகள் ஒரு சிறிதிலும் சிறிய எதிர்மறை பக்க விளைவு. பெண்கள் விடுதலை அடைய அடைய அவர்கள் இந்த சமுதாயத்துக்கு சிறந்த பார்வை அளிக்கும் பெரும் சக்தியாக வருவார்கள். இந்த பப் விஷயங்களை பெரிதுபடுத்தி மீண்டும் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டாம்.

  41. காமம்-உடலோடு நின்றுவிடும்
    காதல்- உள்ளத்தோடு நின்றுவிடும்
    அன்பு- உயிரோடு கலந்துவிடும்
    ஆணோ பெண்ணோ இந்த மூன்றில் எதை கொள்கிறார்களோ அது அவர்களின் வாழ்வில் இன்பத்தையோ துன்பத்தையோ தீர்மானிக்கும்.

  42. ஐ.டி யில் உள்ளவர்கள் பப் கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருப்பது உண்மைதான்.

    சேதுபதி அருணாசலம் சொல்லும் மறுப்பு வாதங்கள் அர்த்தமற்றவை. பார் களுக்குச் சென்றால் 100% மும் ஐ.டி யினர் இருந்தால்தான் ஐடியினரைக் குறை சொல்லவேண்டும், மற்றவர்களும் 1% மற்றவர்களும் இருக்கிறார்களே என்று கேட்க முடியுமா? நானே நேரில் சென்று பப்களில் ஐடியினர் அதிகமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஐடியினருக்கு அடுத்ததாக‌ இருப்பவர்கள் ‘கால் சென்டர்’ துறையினர். இவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
    இதோ சேதுபதியே அவர் கருத்துக்கு முரணையும் போட்டு இருக்கிறாரே : //டைம்ஸ் செய்திப்படி பெங்களூருக்கருகில் ஒரு ரேவ் பார்ட்டியில் போலிஸ் ரெய்ட் நடத்தி நிறைய பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி ஆட்கள், மாணவர்கள் மற்றும் பிஸினஸ் செய்பவர்கள். நாம் ஏன் மாணவர்களைப் பற்றியோ, பிஸினஸ் செய்பவர்களைப் பற்றியோ பேச வேண்டும்? ஐ.டி ஆட்கள் போதுமே? சொல்ல மறந்துவிட்டேன் கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் இருந்திருக்கிறார்கள் // ‍‍‍‍‍‍‍ >>கவனியுங்கள், பெண்கள், மாணவர்கள், ஐடியினராம்.. அதாவது ஐ.டி தொழில் செய்பவர்களைத் தவிர வேறு எந்தத் தொழில் செய்பவர்களையும் குறிப்பிட்டு அவரால் தன் கருத்தை நிறுவ முடியவில்லை.

    ஆகவே, ஐ.டி யில் உள்ளவர்கள் பப் கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருப்பது உண்மைதான்.

  43. இந்தக் கட்டுரை பலர் மனத்தை வெகுவாகக் கவர்ந்து சிறந்த கருத்துரைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. கருத்துக்களை பரிமாறிக்கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மனத்தில் மிகுதியான எண்ணங்கள் ஊற்றெடுத்தால் அவற்றை ஒரு தனிக் கட்டுரையாக வடித்து எங்களுக்கு அனுப்புங்கள் – editor [at] tamilhindu [dot] com என்ற முகவரிக்கு.

    நன்றி

    தமிழ் இந்து ஆசிரியர் குழுவினர்.

Comments are closed.