Comments on: காடென்னும் கடவுள்

By: பா. ரெங்கதுரை
வனம் பற்றிய இக்கட்டுரையிலும், இது தொடர்பான மறுமொழிகளிலும் ஜப்பானிய அனிமேஷன் பட இயக்குனர் Hayao Miyazaki அவர்கள் இயக்கிய Princess Mononoke படம் குறிப்பிடப்படாதது வியப்பைத் தருகிறது.

கிரீஷ் கர்னாட் போன்ற வக்கிர அறிவுசீவிகளின் படங்கள் தவறான உதாரணங்களாக (சரியாகவே) முன்வைக்கப்படும்போது, மியாஜகியின் படங்கள் சரியான சான்றுகளாக முன்வைக்கப்படுதல் அவசியம்.

By: சேதுபதி அருணாசலம்
அன்புள்ள சீதா,

நியாயமான விமர்சனம் முக்கியமானதுதான். ஆனால் அதே சமயம் நியாயமில்லாத, மேற்கின் கண்ணாடி வழியே எல்லாவற்றையும் பார்க்கும் அபத்தமான, நேர்மையில்லாத விமர்சனங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. கிரீஷ் க‌ர்நாட்டின் பார்வையிலிருக்கும் இட‌து சாரி பார்வை சார்ன்த‌ இந்தியா மீதான‌ ம‌திப்பீட்டையே மைத்ரேயா சாடுகிறார். கிரீஷ் க‌ர்நாட் இன்திய‌ சூழ‌லிய‌ல் குறித்து விம‌ர்சிப்பது, சாதிய‌த்தைப் ப‌ற்றி திராவிட‌க்க‌ட்சிக‌ள் பேசுவ‌தைப் போன்ற‌ ஒன்று. திராவிட‌க் க‌ட்சிக‌ளை விம‌ர்சிப்ப‌வ‌ர்கள் விம‌ர்ச‌ன‌மே கூடாது என்று சொல்கிறார்க‌ள் என்று அர்த்த‌மாகாது.

அன்புட‌ன்,

சேதுப‌தி

By: seetha
திரு மைத்ரரேயா,நஅமது சமுதாயத்தினை குறித்து சுய பரிசோதனை தேவையில்லை என்ஙீற்களா?இந்து மதம் என்றாலே எதையும் கேள்வி கேட்காமல் ஒத்துகொள்ள வேண்டாம் என்றும் ஒரு எண்ணமும் உண்டல்லவா?

By: t.r.pattabiraman
கீதா சாம்பசிவன் அவர்கள் கருத்து தொடர்பாக-

இப்போதும் சட்டம் இருக்கிறது பச்சை மரங்களை வெட்ட வேண்டும் என்றால் கோட்டாச்சியர் அனுமதி பெறவேண்டும் என்று. சட்டம் உள்ளது.

ஆனால் சட்டத்தை காலின் கீழ் போட்டு மிதிக்கும் சமூக விரோதிகளால் அது செயலிழந்து  போய் விட்டது.

By: மைத்ரேயா
காடு என்ற படத்தை எடுத்த கிரீஷ் கார்நாட் குறித்து கீதா சாம்பசிவம் ஒரு குறிப்பைப் பதித்தார். அந்தப் படம் காடு என்பதை ஒரு உருவகமாக மட்டும்தான் பயன்படுத்தியது.  அதில் காடு என்ற ஒரு உயிருள்ள பேருரு உடைய தூலமான எந்தப் பிரச்சினையும் மையப்படுத்தப்படவில்லை என்பது என் நினைவு.

அதன் மையக் கதை கிராமத்து இந்தியா வன்முறையிலும், மூடத்தனத்திலும், ஆணாதிக்கத்திலும், ஜாதிய அடக்குமுறையிலும் ஊறி இருக்கிறது. காட்டைப் போல இருள் மண்டிய சமுகவாழ்க்கை நிலவும் இடம் அது என்று சுட்டியது.

அக்கருத்தை நிலை நாட்டவோ என்னவோ துவக்க கால இந்திய கலைப்படங்களுக்கே உரித்தான கருமை மண்டிய படப் பிடிப்பு அதில். எடுத்தவர் சிறப்பான ஒளிப்பதிவாளர்தான். கோவிந்த் நிஹ்லானி. ஆனால் இயக்குநர் கிரீஷ் கார்நாட்.

இந்திய சமூகத்தையும், இந்தியாவையுமே மேற்கின் சிந்தனையாலும், அதன் மதிப்பீடுகளாலும் மட்டுமே பார்த்து அதன் மீது எப்போதும் தீர்ப்பு சொல்லவே முனைந்து நிற்கும் ஒரு கூட்டம் இந்திய மேல்தட்டு அறிவு சீவிகள் இந்தியாவில் நிரம்பவே உண்டு. இந்தியாவில் எல்லா சுதந்திரத்தையும் அரசு அதிகாரிகளுக்குத் தாரை வார்த்து மக்களை அரசிடம் கை ஏந்தும் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் முனைப்போடு நடந்த ஒரு மோசமான ஆட்சி முதல் 40 வருடங்கள் போல நடந்தது. அந்த வருடங்களில் கல்வித் துறையில் ஆட்சி செலுத்திய அரசியல் கருத்துகள் இன்றளவும் பெருமளவு (கல்லூரி வரை சென்ற) இந்தியரின் பார்வையில் சுயவெறுப்புப் புகையை ஊதி, அவர்தம் மொழியைக் கூட அன்னியமாக்கி இந்தியப் பண்பாட்டிலிருந்து அவர்களை வெற்றிகரமாகப் பிரித்து வைத்திருக்கின்றன.

இந்த வகைக் கருத்துப் பிரச்சாரத்தை நடத்திய சில முதல் கட்ட அறிவு சீவிகள் (நேருவைப் போலவே) அன்னிய மண்ணில் உயர்கல்வி பெற்றவர்களாக இருந்தனர். அந்த வரிசையில் வந்தவர் கிரீஷ் கார்நாட். கன்னடத்தில் எழுதினாலும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலம் போலவே அதையும் கையாண்டிருப்பார் என்பது என் ஊகம். ஏன் இப்படிச் சொல்கிறேன்? (எனக்கோ கன்னடம் தெரியாது). அவருடைய காடு படம் அப்படி ஒரு அன்னியப் பார்வையோடு இந்திய மக்களை அணுகியது என்பது பிற்பாடுதான் தெரிந்தது.

அதை ஒரு அன்னியர் உடனே இனம் காண்கிறார் என்பது எனக்கு இப்போது தெரிந்து அந்த அன்னியருடைய திறமை மீது வியப்பு வந்தது. அவருடைய ஒரு விமர்சனம் இங்கே கிடைக்கும்.

http://www.dogheaddevilbarking.com/3wc/kaadu.html

இந்தியாவையே ஒரு காடாகப் பார்த்து பீதியோடும், கவலையோடும்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டிருக்கின்றனர்.  இது இன்று அவர்களுடைய வாரிசுகளே தாம் இந்தியாவை எப்படி அணுகினோம் என்று விவரமாக சோதித்துப் பார்த்து எழுதும் வரலாற்றியல் நூல்களில் இருந்து புலப்படத் துவங்கி இருக்கிறது.

இந்த மோசமான அணுகுமுறை இந்தியாவில் இன்றும், மேல் தட்டு மக்களிடம் மறுக்கப் பட முடியாத பொது அறிவுத் தேற்றமாகவே புழங்குகிறது.  இந்தப் ‘பொது அறிவை’ பரவலாக பொதுமையாக்கியதில் ஆங்கிலேயர், ஜெர்மானியர், அமெரிக்கர் போன்ற வெள்ளைத் தோல் மக்களின் அறிவுத் தேட்டைக்கு நிறைய பங்களிப்பு உண்டு.

ஒரு மோசமான, இனவெறிப் பார்வையை மைய உந்து சக்தியாகக் கொண்ட இந்த வகை உலகப் பார்வையை, உலகமயமான மனிதாபிமானப் பார்வை என்று எடுத்துக் கொண்டு,  அப்படியே இந்தியாவை அணுகி ‘கலைப் படங்களை, படைப்புகளை’  ஆக்கிய  பல அறிவு ஜீவிகளில் திரு.கார்நாடும் ஒருவர் என்பதை வருத்தத்துடன் இங்கு குறிக்க வேண்டி இருக்கிறது. ஏதோ கன்னட மொழியில் எழுதி, நடித்து, திரைப்படம் எடுப்பதால் அவர் மண்சார் சிந்தனையாளராகி விடவில்லை. மேல்தட்டு காலனிய வாதம் இவரையும் பாதித்திருக்கிறது. மண்சார் சிந்தனை வேண்டும் என்று மேற்கின் பல்கலை அரங்க மேடைகளில் பேசும் அனந்த மூர்த்தி போன்றாருமே இப்படிப் பட்ட மேலைச் சிந்தனையின் போலியோ நோயால் அறிவு சூம்பியவர்கள்தாம்.

இந்தியா, இந்திய சமூக அமைப்பு ஆகியவற்றைக் காட்டுக்கு உருவகித்து இந்தாலஜி என்ற துறையில் எழுதித் தள்ளிய மேலைநாட்டவரின் குறுகிய இனவெறிப் பார்வையைச் சாடி ரானல்ட் இண்டன் ஒரு நீண்ட புத்தகம் எழுதி இருக்கிறார். ‘Imagining India’ என்ற இந்த நூலின் அனைத்துக் கருத்துகளையும் நாம் ஏற்கத் தேவை இல்லை எனினும், அதன் மையக் கருத்து‍‍ இந்தியர் தம்மை அறிய விடாமல், தம் வாழ்வைத் தாமே தொடர்ந்து மறு உருவமைக்க முடியாமல் அவர்களுடைய சிந்தனை மரபு, வரலாற்று ஞானம், மேலும் உளவியல் அறிதலைக் கூடப் பழுதாக்கிய சாதனை இந்த இந்தாலஜி வல்லுநர்களுடையது என்பது, அதை நாம் சுலபமாகவே ஏற்க முடியும்.

சேதுபதி அருணாசலத்தின் காடு குறித்த அவல அறிக்கை மேற்கண்ட குறியீட்டுலகக் காரிருள் பற்றிய நினைவுடன் சேர்ந்து விட என் மனதில் கசப்பு ஊறுகிறது. ஆனால் நொய் நம்மைப் பீடித்திருக்கிறது என்பதைப் பேசத் துவங்குவதே சிகிச்சையின் துவக்கப் படி. அடுத்தடுத்து நாம் எங்கெங்கே சென்று நோயைத் தீர்க்கலாம் என்று யோசிப்போம் என்று நம்புகிறேன். இதை ஏதோ அவரவர் ஓரிரு மரம் நடுவதில் தீர்க்க முடியாது. காடுகளைப் பெருமளவில் மறுதுவக்கம் செய்ய இந்திய சமுதாயமே பங்கெடுத்து இறங்கினால்தான் முடியும். அதை மேற்கு காடுகளை அணுகிய விதத்தில் நாமும் அணுகினால் அது மற்றுமொரு பெரும் சாபக் கேடான முயற்சியாகத்தான் முடியும்.

By: சேதுபதி அருணாசலம்
மறுமொழி இட்ட அனைவருக்கும் நன்றி.

உண்மைதான் ஹரிகி. பெங்களூரின் குளிர் இருள் சூழ்ந்த பல பகுதிகள் வெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றன. மரங்களில்லாத எம்.ஜி ரோடு, கோரமங்களா பகுதிகளைப் பார்க்கவே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. வேறு வழியில்லை. பெங்களூர் தன் சக்திக்கு மீறி வளர்ந்துவிட்டது. இத்தனை வாகனங்கள் செல்லவேண்டுமென்றால் சாலையை விரிவாக்கியே தீரவேண்டும்.

அதீதமான வளர்ச்சிக்கு நாம் தரும் அதீதமான விலை இது.

By: t.r.pattabiraman
மரம் இறைவன் தந்த வரம். மனித குலத்தை வாழ்விக்க வந்த தாவரம். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம்.

மண்மகள் மேல் முளைத்துள்ள பலவிதமான தாவரம்

மழையை மேகத்திடமிருந்து பெற்று தன் வேர்க்கால்களில் தேக்கி நீர்வீழ்ச்சியாகவும், நதியாகவும் பாய்ந்து வாழ்விக்க வந்த கண்கண்ட தெய்வம் மரங்களே அனைத்து உயிர்களும் வெளியிடும் கரிம வாயுமனைத்தையும் அனைத்து இயந்திரங்கள், மற்றும் சாதனங்களிளிருந்தும் வெளிவரும் நச்சு வாயுக்களையும் உட்கொண்டு பிராண வாயுவினை அளித்து உயிரினங்களையும் மனித குலமனைத்தையும் காக்கும் மரங்கள் எல்லாம் சிவபெருமானின் வடிவங்கள்தானன்ரோ.

இதிஹாச புராணங்களில் குறிப்பிட்டுள்ள ஆலகால நஞ்சுவினை தான் உட்கொண்டு அகிலத்து உயிரினங்களை காத்த அந்த சிவம் தாவரங்களாய் மரங்களாய் கண்ணுக்கெதிரில் நின்றிருந்தும் கண்ணிருந்தும் குருடராய் போய்விட்ட சிலர் கடவுள் கண்ணுக்கு தெரியவில்லை என்று பிதற்றுவது மடமையன்றோ?

பரந்தாமனை பச்சை மாமலை என்றும் அன்னை பார்வதியை பச்சை நிறமுடையாள் என்றும்

புராணங்களில் வர்ணித்திருப்பது அதனால்தானன்ரோ .

காண்பவை யாவிலும் அனைத்திலும் கலந்து

நம் கண் முன்னே நிற்கின்ற அவளை அறியாமல்

எங்கேயோ எதிலேயோ தேடிகொண்டிருக்கும் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

எல்லோரையும் ஈன்றவள், எல்லோரையும் காப்பவள் ,

முடிவில் எல்லோரையும் தன்னில் கொள்பவள்

அவள் யார் தெரியுமா? மரங்களூடே,மலைகளூடே கடல்களூடே, மற்றும் மண் முழுதும் படர்ந்தவள்

இலையாகவும் பூவாகவும் பிஞ்சாகவும் காயாகவும் கனியாகவும் விதையாகவும் உணவாகவும் மருந்தாகவும் அமைந்து அனைத்து உயிர்களையும் காப்பவள் தானும் இவ்வுலகில் இருந்துகொண்டு

அனைத்தையும் வாழ்விப்பவள்.

இதை அறிந்துதான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வம்கள் என போற்றி வழிபாடு செய்யும் நெறியை ஏற்படுத்தினரோ?

By: Jeyakumar
உங்களது வீட்டில் இருந்தது போலவே எங்களது வீட்டின் பின்புறம் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் பழமையான புளியமரம் இருந்தது. எங்கள் வீட்டின் ஓராண்டு உபயோகத்திற்கு எடுத்து வைத்தது போக கிட்டத்தட்ட முன்னூறு, நானூறு ரூபாய்க்க் விற்போம். அவ்வளவு பெரிய மரம். முப்பது மீட்டர் சுற்றளவுக்கு பறந்து விரிந்திருந்த மரம் அது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பழத்தைப் பறிக்கிறார்கள் என சொல்ல முடியாது.. ஏனெனில் அவர்களது வீட்டிலும் கிளைபரப்பி இருந்தது அது. என்ன காரணத்துக்காகவோ அது வெட்டப்பட்டு அந்த இடத்தை ஹோ என்ற வெட்டவெளியாகப் பார்த்தபோது ஒரு இனம் புரியாத பயம் வந்து  வயிற்றைப் பிசைந்தது. எதோ ஒரு பாதுகாப்பை இழந்துவிட்டது போன்ற ஒரு எண்ணம். அந்தப் பாவத்தையெல்லாம் எங்களது பள்ளியில் நாங்கள் வைத்து வளர்த்த மரம் மூலமாக தொலைத்தேன் என நினைக்கிறேன்.

நல்ல கட்டுரை.

அன்புடன்,

ஜெயக்குமார்

By: raja raman
சிந்தனையை தூண்டும் ந‌ல்ல பதிவு. பூனே மாந‌கரிலும் சாலையொர மரங்களை அழித்து சாலையை விரிவுபடுத்துகிறார்கள். அதை பார்க்கையில் வேதனையாகயிருக்கிறது. அய்யாசாமியின் பணி தொடர வாழ்த்துக்கள்

By: g ranganathan
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் மரங்களின் பெரிய கிளைகள் (நிழல் தந்துகொண்டிருந்தவை) கேபிள் ஒயர்கள் தடையின்றி செல்ல வெட்டப்பட்டன. யார் அனுமதித்தது என்று தெரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன் தான் இந்நாட்டு மக்களுக்கும் மரங்களுக்கும் துணை.