Monthly Archives: April 2009

வரலாறு

போகப் போகத் தெரியும்-21

April 29, 2009
-
போகப் போகத் தெரியும்-21

தலைமுடியை நேர் வகிடாக எடுத்திக்கொள்வதும், உதட்டுக்கு மேலே ஒரு வரியாக மீசையை ஒதுக்கிக் கொள்வதும் தமிழ்ப் பற்றாகக் கருதப்பட்ட காலம் அது. மகாலிங்கங்களும் (டி.ஆர்), ஜெயராமன்களும் (சி.எஸ்) தமிழகத்தை மயக்கி வைத்திருந்தார்கள் அப்போது சினிமாவில் வருவதுதான் சிலப்பதிகாரம்; மைக்கில் பேசுவதுதான் மணிமேகலை என்று ஒரு கூட்டத்தால் பரப்பப்பட்டது. சத்தம் போடுவதுதான் சங்கத்தமிழ் என்றும் சிலர் நம்பினார்கள். படித்தவர்களுக்குத் தி.மு.க. மீது ஏற்பட்ட கவர்ச்சி பிறகு பாமரர்களையும் வீழ்த்தியது...

மேலும் »

அறிவியல்

மனிதமனம் ஓர் ஆற்றல் களஞ்சியம்

April 27, 2009
-
மனிதமனம் ஓர் ஆற்றல் களஞ்சியம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புது மனித யுகம் தோன்றியது. அப்போது மொழி (பேச்சு) என்றால் என்னவென்றே மனிதனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகையும், சிரிப்பும், பசியும்தான். பின்னர் வாயசைவின் மூலம் தமது செயல்களுக்கு மொழிவடிவம் கொண்டு வந்தனர், பின்னர் அவற்றைத் தங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்தனர். இதைத்தான் நாம் சிந்தித்தல் என்கிறோம். இந்தச் சிந்தனைக்கும், மனதிற்கும் தொடர்பு உண்டா என்றால், புதிய சிந்தனைகளுக்கு நம்முடைய மனமே பிறப்பிடமாகத் திகழ்கின்றது. நம் மனம் ஒருநிலைப்பட்டு இருக்கும்போது புதுப் புதுச் சிந்தனைகள் துளிர் விடுகின்றன. நம்முடைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கெல்லாம் இவ்வகையான ஆற்றல் கொண்ட மனமே காரணமாயிருக்கிறது. முதலில் மனம் என்றால்...

மேலும் »

வீடியோ

ஓம் சாந்தி!

April 26, 2009
-

அனைவருக்கும் அனைத்து மங்களமும் உண்டாகட்டும். அமைதி நிலவட்டும். நிம்மதியான வாழ்வு அமையட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி! http://www.youtube.com/watch?v=zNuHTG6TRfw

மேலும் »

வரலாறு

ஓடிப் போனானா பாரதி? – 06

ஓடிப் போனானா பாரதி? – 06

சரி. பாரதிதான் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் அரசாங்கத்தை விமரிசித்தான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். இது உண்மையானால், 'மிகவும் மிதமான போக்கை உடையவர்,' என்று அறியப்பட்ட ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதுசெய்யப்படுவானேன், 'வெதுவெதுப்பான வாக்கியங்களை' எழுதிவிட்டு, highly defamatory என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்துவின் ஆசிரியரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைதாகலாம் என்று அஞ்சப்படுவானேன்?

மேலும் »

பண்டிகைகள்

அக்‌ஷய திருதியையும் அசட்டு க்யூவும்

April 23, 2009
-
அக்‌ஷய திருதியையும் அசட்டு க்யூவும்

2009 ஏப்ரல் 27-ம் நாள் அக்‌ஷய திருதியை. இந்த நாளின் பெயரைச் சொன்னவுடனேயே நகைக் கடை க்யூ நினைவுக்கு வருமாறு செய்துவிட்டனர் நகை வியாபாரிகள், தங்கள் அதீத விளம்பரக் கூச்சலினால்! இதில் உலகத் தங்கக் குழுமத்துக்கும் (World Gold Council) பங்கு உண்டு என்பது வர்த்தக தினசரிகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையில் அக்‌ஷய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. சென்ற சில பத்தாண்டுகளில் வணிக நோக்கத்தில் கிளப்பி விடப்பட்ட மாயை இது. ஒரே நாளில் சந்தைக்...

மேலும் »

வரலாறு

உதம் சிங்கின் சபதம்

உதம் சிங்கின் சபதம்

பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்...

மேலும் »

வரலாறு

ஓடிப் போனானா பாரதி? – 05

ஓடிப் போனானா பாரதி? – 05

இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாள் முன்னால் - ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று - ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகிறது. 'இந்தியா' பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது.

மேலும் »

அரசியல்

ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1

ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1

இலங்கை அதிபர் ராஜபக்ஸே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று எவ்வளவுதான் உறுதி அளித்திருந்தாலும், அவர்களின் நிலைமையை நினைக்கும் போது நமது நெஞ்சம் துடித்துப் போகிறது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள இரண்டு லட்சம் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. முக்கியமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனையும், தப்பிச் செல்லும் மக்களைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள பொட்டு அம்மனையும் நினைத்துப் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று நம் மனது அடித்துக் கொள்கிறது.

மேலும் »

வரலாறு

போகப் போகத் தெரியும்-20

April 18, 2009
-
போகப் போகத் தெரியும்-20

இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு. இந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது... .... இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்...

மேலும் »

வீடியோ

டோக்கியோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

April 16, 2009
-

http://www.youtube.com/watch?v=ZP6iFtnYvGU

மேலும் »