குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

பிப்ரவரி 27, 2002-ல் குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் வண்டியில் இரண்டு பெட்டிகளுக்கு ஜிகாதிகள் வைத்த தீயில் குழந்தைகள் பெண்கள் உட்பட 59 ஹிந்துக்கள் கருகிச் செத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு எதிர்வினையாக நடந்த கலவரத்தில் சுமார் 250 ஹிந்துக்களும், 750 முஸ்லீம்களும் உயிரிழந்ததும் நமக்குத் தெரிந்ததே.

ஆனால் அப்போது குஜராத்தில் ஆட்சி செய்தது பா.ஜ.க. அரசாங்கம் என்ற ஒரே காரணத்தினால், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், ஊடகங்களும், 3000-க்கும் அதிகமான முஸ்லீம்கள் ஹிந்துக்களால் கொல்லப் பட்டதாகவும், பல பெண்கள் கற்பழிக்கப் பட்டதாகவும், இன்றுவரை பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாகத் தேர்தல் சமயங்களில், பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில், படு தீவிர எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ஆனாலும் குஜராத் மக்கள் 2002 சட்டமன்றத் தேர்தலிலும், 2004 பாராளுமன்றத் தேர்தலிலும், 2007 சட்டமன்றத் தேர்தலிலும், பா.ஜ.க.வுக்கே அமோக ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

டீஸ்டா செதல்வாட் திருவிளையாடல்கள்:

குஜராத் கலவரம் சம்பந்தமாகப் போடப்பட்ட பல வழக்குகள், இந்தப் போலி மதச்சார்பின்மை வாதிகளால் வேறு மாநிலங்களுக்கு மாற்றப் பட்டுள்ளன. தொடர்ந்து பிரச்சாரம் செய்து, உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநிலக் காவல் துறைக்கு எதிராக வழக்குகள் போட்டு, ஒரு தனி ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ (Special Investigation Team) ஒன்றை உச்ச நீதிமன்றமே அமைக்குமாறு செய்தனர். இப்போலி மதச்சார்பின்மை வாதிகள். இவர்களில் முக்கியமானவராகவும், மோடிக்கும் குஜராத் ஹிந்துக்களுக்கும் எதிராகப் பல காரியங்கள் செய்பவராகவும் இருப்பவர், ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ (Citizens for Justice and peace) என்ற அரசு சாரா அமைப்பை (NGO) நடத்தி வரும் திருமதி டீஸ்டா செதல்வாட் என்பவர். ஒரு முஸ்லீமை மணந்த இந்துப் பெண்மணியான டீஸ்டா, தன்னை ஒரு மனித உரிமை இயக்கவாதியாகக் காண்பித்துக் கொள்கிறார்.

கடந்த ஏழு வருடங்களாக மோடிக்கு எதிராக இவர் விஷ(ம)ப் பிரசாரங்கள் செய்துவருவதோடு மட்டுமல்லாமல், கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லீம்களுக்கு உதவுகின்ற போர்வையில் பல வேலைகள் செய்து வருகிறார். குஜராத் காவல் துறையை அவதூறு செய்து, உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கக் காரணமாய் இருந்தவரும் இவரே. இந்தப் புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய உளவுத் துறை தலைவர் திரு ஆர்.கே. ராகவன் நியமிக்கப் பட்டார். இக்குழு உடனடியாகத் தன் வேலையில் இறங்கியது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர், குல்பர்கா சொஸைட்டி, நரோடா காவுன், நரோடா பாடியா, சர்தார்புரா ஆகிய இடங்களில் நடந்த கலவரங்களைப் புலனாய்வு செய்யத் துவங்கியது. புலனாய்வை முழுவதுமாகச் செய்து முடித்த இக்குழு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது. அவ்வறிக்கை டீஸ்டா செதல்வாட்டின் பல பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தியுள்ளது.

1. டீஸ்டா செதல்வாட்டின் அமைப்பின் மூலம் 22 சாட்சியங்கள் கொடுத்துள்ள கோர்ட்-மனுக்கள் (affidavits) அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்ட பொய் சாட்சியங்களே. அவை ஒரே மாதிரி தயாரிக்கப்பட்டு, ஒரே மாதிரி தட்டச்சு செய்யப்பட்டு, ஒரே கணினியிலிருந்து அச்செடுக்கப்பட்டவை என்பதும், சாட்சியங்கள் அனைவரும் பொய் சொல்லப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கலவரங்களின்போது நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அவர்களுக்குத் தெரியவில்லை என்பதும், பலருக்கு அச்சம்பவங்கள் நடந்ததாகவே தெரியவில்லை என்பதும் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் பொய் சாட்சியங்களானபடியாலும், சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் நடக்காத படியாலும், பாதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளவர்களும் பொய்யாகவே இருக்க வேண்டும்.

2. கௌஸர் பானு என்கிற கர்ப்பிணிப் பெண்ணை ஹிந்துக்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும், அவர் வயிற்றை வாளினால் கிழித்து உள்ளிருந்த பாதி வளர்ந்த கருவை வெளியே எடுத்துக் கொன்றதாகவும் ஒரு சம்பவத்தை டீஸ்டா செடல்வாட்டும், அருந்ததி ராயும், மற்றும் பல போலி மதச்சார்பின்மை வாதிகளும் ரத்தக் கண்ணீர் விட்டுப் பிரச்சாரம் செய்தனர். தற்போது அம்மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று தெரியவந்துள்ளது.

3. அகமதாபாத் அருகில் உள்ள நரோடா பாடியா என்ற இடத்தில் பல முஸ்லீம்களைக் கொன்ற ஹிந்துக்கள் அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் போட்டு மூடியதாக ஒரு சம்பவம் ஜோடித்துச் சொல்லப்பட்டது. அதற்கு சாட்சியங்களாக சிலரைத் தயார் செய்திருந்தார் ‘மனித உரிமைக் காவலர்’ டீஸ்டா! தற்போது அனைத்துச் சாட்சியங்களும் பொய் என்பதும் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

4. கலவரத்தின் போது ஆங்கிலேயர் ஒருவரைக் கொன்ற கொலையாளிகளுக்கு சாதகமாக குஜராத் காவல் துறை செயல்பட்டது என்ற குற்றச் சாட்டும் போலியானது என்று தெரியவந்துள்ளது.

5. அகமதாபாத் காவல் துறை ஆணையராக இருந்த பி.சி. பாண்டே என்பவர், குல்பர்கா சொசைடியில் நடந்த கலவரத்தின் போது, முஸ்லீம்களைத் தாக்கும் ஹிந்துக்களுக்கு பெரிதும் உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் பொய் என்று தெரியவந்துள்ளது. சொல்லப் போனால் அவரது பதவியைப் பறிக்கும் அளவிற்குப் பொய்ப் பிரச்சாரம் செய்தனர் டீஸ்டாவும் அவரது ‘மதச்சார்பற்ற’ கும்பலும். அக்குற்றச்சாட்டு தவறு என்பதும் வெளியாகியுள்ளது. உண்மையில் அவர் அச்சமயத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக மருத்தவமனையில் பல உதவிகள் செய்து கொண்டிருந்தார், பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப் பட்டவை குஜராத் காவல் துறையினால் சொல்லப் பட்டவை அல்ல. டீஸ்டாவின் வேண்டுகோளின்படி உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் சொல்லப் பட்டவை. எனவே டீஸ்டா இவ்வறிக்கையின் மீது அவதூறு சொல்ல முடியாது.

டீஸ்டாவின் மற்றோர் அசுர முகம்

ஐந்து மாதங்களுக்கு முன்னால், டீஸ்டாவின் மற்றோர் அசுர முகம் வெளியே தெரிந்தது. டீஸ்டாவின் அகமதாபாத் அலுவலகத்தை ரயீஸ் கான் என்பவர் நிர்வகித்து வந்தார். சாட்சியங்கள் தயாரிப்பதிலிருந்து, கோர்ட்-மனுக்கள் தயார் செய்வது வரை அனைத்தையும் டீஸ்டாவின் சொல்படி செய்து வந்தார். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், நரோடா காம் என்ற இடத்தில் நடந்த கலவரத்தைப் பார்த்ததாக கூறிய ஆறு சாட்சியங்கள் பொய்யானவை, அவர்களின் மனுக்களில் உண்மைக்குப் புறம்பாகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. புலனாய்வுக் குழு ரயீஸ் கானை நெருக்கியபோது, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது, டீஸ்டா செய்யச் சொன்னதைத் தான் செய்ததாகக் கூறிவிட்டார். மேலும் சாட்சிகளின் கோர்ட்-மனுக்களை டீஸ்டா மும்பையிலிருந்து கணினி வழியே அனுப்பியதாகவும், தான் அகமதாபாத் அலுவலகத்தில் அச்செடுத்துத் தயார் செய்து, சாட்சிகளிடம் கையொப்பம் இடச் சொன்னதாகவும் உண்மையைக் கக்கிவிட்டார்.

உடனே ரயீஸ் கானை போன் மூலமும், ஆள் வைத்து நேரிலும் மிரட்டியுள்ளார் டீஸ்டா. பின்னர் அகமதாபாத் வந்த டீஸ்டா, ரயீஸ் கானை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, அங்கு இருந்த ரயீஸ் கானின் கணினி மற்றும் பேக்ஸ் ஆகிய சாமான்களை எடுத்துச் சென்று விட்டார். ரயீஸ் கான் தனக்கு வரவேண்டிய இரண்டு மாதச் சம்பளத்தையும், கணினி, பேக்ஸ் ஆகியவற்றையும் கேட்டதற்கு, “திரும்பி வரமுடியாத இடத்திற்கு உன்னை அனுப்பிவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். டீஸ்டா அரசியல் பலம் வாய்ந்தவர், மத்திய அரசுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர், அவரிடம் பகைமை பாராட்ட வேண்டாம் என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறியதையும் கேட்காமல், ரயீஸ் கான் ரகியால் காவல் நிலையத்தில் டீஸ்டாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்.

பொய்ச் சாட்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அன்பளிப்பு

டீஸ்டாவின் மற்றொரு திருவிளையாடலும் சுவாரஸ்யமானது. குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி நிதி திரட்டியது. அந்நிதியைப் பட்டுவாடா செய்யும் பணியை டீஸ்டாவின் அமைப்பு ஏற்றுக்கொண்டது. டீஸ்டா தான் ஏற்கனவே பாதிக்கப் பட்டவர்களையும், சாட்சியங்களையும் தயார் செய்து விட்டாரே! உடனே அவர்கள் பெயரை மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து, டீஸ்டா, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரட், மற்றும் டீஸ்டாவின் உதவியாளர் ரயீஸ் கான் ஆகிய மூவரும் நிதியைப் பட்டுவாடா செய்தனர். எப்படி தெரியுமா? பாதிக்கப் பட்டவர்களுக்கு 5000 ரூபாயும், சாட்சியங்களுக்கு 50000த்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையிலும்! இதிலிருந்தே தெரியவில்லையா சாட்சியங்களும், பாதிக்கப் பட்டவர்களும் எப்பேர்ப்பட்டவர்கள், எப்படித் தயார் செய்யப்பட்டவர்கள் என்று?

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், “எனக்கு ஒன்றும் தெரியாது, நிதி மார்க்சிஸ்ட் கட்சி திரட்டியது, பட்டுவாடா செய்த அந்த விழாவில் நான் பங்கு கொண்டேன் அவ்வளவுதான்” என்று டீஸ்டாவும், “நாங்கள் நிதி திரட்டியது உண்மைதான். ஆனால் எந்த நீதிமன்ற வழக்கைப் பற்றியும் நாங்கள் கவலைப் படவில்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று பிருந்தாவும் பொன்மொழிகளை உதிர்த்ததுதான்! பணம் பெற்றுக் கொண்ட அனைவரும், டீஸ்டா, பிருந்தா, ரயீஸ் கான் மூவருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பதும் உண்மை தான். நல்லெண்ணத்தோடு மக்கள் அளிக்கும் உதவிப் பணம் எப்படி, யாருக்கு, யார் மூலம் போய்ச் சேருகிறது பாருங்கள்! இதில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் நிஜமாகவே கலவரத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்ததா, பாதிக்கப் பட்டவர்களும் சாட்சியங்களும் உண்மையானவர்களா, என்றெல்லாம் நீதிமன்றம் தீர்மானித்து, வழக்கு முடிவில் தீர்ப்பு வருவதற்கு முன்னால் உதவித் தொகை கொடுக்கப் பட்டுவிட்டது.

தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரனையில் மேற்கண்டபடி நிகழ்ச்சிகள் நடக்கவில்லை, சாட்சியங்கள் பொய் என்றெல்லாம் தெரியவந்துள்ள நிலையில், எதோ தங்கள் சொந்தப் பணம் போல பொதுமக்கள் பணத்தை அள்ளி வீசிய மூவரும் திருப்பித் தருவார்களா? எப்பேர்ப்பட்ட அயோக்கியத் தனம் இது?

இதனிடையே, மதச்சார்பின்மை, மனித உரிமை என்றெல்லாம் பேசிய இந்த செக்யூலர் கூத்தாடிக்கு, உலக மகா ஏமாற்றுப் பேர்வழிக்கு, கடந்த ஏழு வருடத்தில் என்னவெல்லாம் விருதுகள் கொடுக்கப் பட்டுள்ளன என்று பாருங்கள்:

2003
ந்யூயெர்ன்பர்க் மனித உரிமை விருது (The Nuernberg Human Rights Award)
ஜனநாயகக் காவலர் விருது (Defender of Democracy-Award) from Parliamentarians for Global Action

2004
எம்.ஏ. தாமஸ் தேசிய மனித உரிமை விருது (M.A.Thomas National Human Rights Award from the Vigil India Movement)
2006
நானி ஏ. பால்கிவாலா விருது (The Naani A Palkivaalaa Award)

2007
பத்மஸ்ரீ (Padmasri)

தற்போது ‘பத்மஸ்ரீ’ டீஸ்டாவின் மதச்சார்பின்மை, மனித உரிமை சாயங்களெல்லாம் வெளுத்துப் போன நிலையில், இவர் எப்பேர்பட்ட தேசத் துரோகி என்றும், ஹிந்துக்களுக்கு (குறிப்பாக குஜராத் மக்களுக்கு) எதிராக எவ்வளவு பயங்கரமான விஷப் பிரச்சாரம் செய்துள்ளார் என்றும் தெரிந்துவிட்ட நிலையில், விருது வழங்கியவர்கள் (இந்திய அரசாங்கம் உட்பட) விருதுகளைத் திருப்பி எடுத்துக் கொள்வார்களா? இந்திய அரசாங்கம் இவர்மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமா?

அவ்வாறெல்லாம் நடக்கும் என்று நினைத்தால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்று பாருங்கள்:

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை மீது உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்த போது நீதிபதி அரிஜித் பசாயத் அவர்கள், “இந்த மாதிரி கலவர வழக்குகளில் புகார்களும் எதிர் புகார்களும் வரத்தான் செய்யும். அதிலெல்லாம் நீதிமன்றம் நேரத்தை விரயம் செய்து கொண்டிருந்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது தாமதமாகும். எனவே சீக்கிரம் நீதி விசாரணை முடிக்கும் வழியைப் பார்க்கவேண்டும்” என்று சொல்லி வழக்கைத் தள்ளி வைத்துள்ளார். டீஸ்டாவைப் பற்றியோ, அவரின் பித்தலாட்ட அமைப்பைப் பற்றியோ, அவர் செய்துள்ள அயோக்கியத்தனத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

மேலும் டீஸ்டா மத்திய அரசாங்கத்திற்கும், குறிப்பாக சோனியாவிற்கும் மிகவும் வேண்டப் பட்டவர் என்று செய்திகள் வருகின்றன. அடுத்த முறை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர் அமைச்சராகக் கூட வாய்ப்பு உண்டு என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் இவர் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார் என்று நாம் எதிர்பார்க்கலாமா? ஆனால், பா.ஜ.க. மற்றும் ஹிந்து-தேசிய வட்டாரங்களில் இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் என்று பேசுவதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே இவரின் உதவியாளர் ரயீஸ் கான் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை இருக்கின்றபடியாலும், குஜராத் கலவர வழக்குகளில் இவரின் கூத்துகள் வெளிப்பட்டுள்ளமையாலும், குஜராத் நீதிமன்றத்திலேயே இவருக்குத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். தற்போது ‘தேசியப் பாதுகாப்புச் சட்டம்’ மிகவும் பிரபலமாக இருக்கின்ற படியால், அச்சட்டத்தின் கீழ் இவரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’, ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ போன்ற முதுமொழிகளில் நமக்கு நம்பிக்கை உண்டு. டீஸ்டா கடுமையாகத் தண்டிக்கப் படுவார் என்றும், இவர் போன்ற மதச்சார்பின்மை-மனித உரிமை கழைக் கூத்தாடிகளும் சாயம் வெளுக்கப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்றும் நம்புவோமாக.

கோத்ராவிலும் அதற்குப் பின்னும் என்ன நடந்ததென்பதை அறிய…

Tags: , , , , , , , , , ,

 

45 மறுமொழிகள் குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

 1. kargil Jay on April 16, 2009 at 5:20 pm

  இதுபோன்ற எழுத்தாளர்கள் மேல் மதவெறுப்புணர்வுகளைத் தூண்டி விட்டதாகவும், தவறான செய்தியை கலவரம் உண்டாக்கும் நோக்கத்தோடு பரப்பியதாகவும், தேசத்துரோகத்துக்காகவும் கடுங்காவல் தண்டனை அளிக்கப் படவேண்டும்.

  ஒருமுறை கார்கில் போரின் போது ஒரு ‘புர‌ட்சி பெண் நிருப‌ர்’ கார்கிலுக்கு சென்று அங்கு உயிரைக் கொடுத்து போரில் ஈடுப‌டும் இராணுவ‌த்தின‌ரைப் பேட்டி எடுத்தாராம். பெண் நிருப‌ர் புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ முய‌ற்சிக்க‌, இந்திய‌ ராணுவ‌ அதிகாரி ஃப்ளாஷ் வேண்டாம் என்றும், ஒளியைக் க‌ண்டு எதிரிப் படையின‌ர் இருப்பிட‌ம் நோக்கி தோராய‌மாக‌ச் சுட‌க்கூடும் என்றும் என்றும் கூறினார‌ம். எச்ச‌ரித்தும் கேளாம‌ல் ஃப்ளாஷுட‌ன் போட்டோ எடுத்த‌வுட‌ன் எதிரிப் ப‌டையின‌ர் ச்ட‌ ஆர‌ம்பித்து அதில் ஒரு இந்திய‌ வீர‌ர் உயிரிழ‌ந்தார‌ம். இந்த‌க் கொலைக்கு ஒரே காரணமான அந்த‌ நிருப‌ருக்கு கிடைத்த‌து என்ன‌ தெரியுமா? அந்த வருடத்தின் சிற‌ந்த‌ ப‌த்திரிகையாள‌ருக்கான‌ விருது!!!.

 2. kargil Jay on April 16, 2009 at 7:18 pm

  முதலில் அவசரமாக இந்தக் கட்டுரையைப் படித்தேன். பின்பு செங்கல் சிவப்பு நிறத்தில் இருப்பவை ஹைபர் லின்க் என்று புரிந்துகொண்டேன். இந்த ஹைபர் லின்க் கள் நீல நிறத்தில் அடிக்கோடுடன் இருந்தால் இன்னும் நன்றாகப் புரியும். அவை ஹைபர் லின்க் என்று புரிந்த பின், கட்டுரை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் எவ்வளவு நன்றாக சுட்டி மற்றும் ஆதாரங்களுடன் எழுதியுள்ளார் என்பது புரிந்தது.

 3. Suresh Ram on April 16, 2009 at 8:38 pm

  சகீரா சேக் ”நீதிமன்றத்தில் பொய் ” (PERJURY) செய்ததாக தண்டிக்க பட்டார். உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியது டீஸ்டா செதல்வாட் தான் . ஆனால் இந்திய நீதிமன்றங்கள் ”நீதிமன்றத்தில் பொய் ” (PERJURY) என்பதை சமூக சேவையாக கருதுகிறது.

  தவறு செய்பவருக்கு மட்டுமே துணை போகும் நிலையில் தன் நமது நீதிமன்றங்கள் இயங்குகின்றன .
  அரசியல்வாதிகள் நீதிமன்றங்களை பயன்படுத்தி தாங்களுக்கு “குற்றமற்றவர்” பட்டத்தை பெற்றுக் கொள்கிறார்கள்

  மக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் .எனவே கட்ட பஞ்சாயத்தை நாடுகின்றனர். அரசு Tribunal அமைத்து தனது வருவாய் அல்லது இதர வழக்குகளை கால தாமதம் இன்றி முடித்துகொள்கிறது

 4. தமிழ்ச்செல்வன் on April 16, 2009 at 8:39 pm

  ஐயா கார்கில் ஜே!
  வயிற்றில் பால் வார்த்தீர் ஐயா! முதல் மறுமொழியைப் பார்த்தவுடன் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை தான். இருந்தாலும், சரி நண்பரின் கருத்து மாறுபடுகிறது போல என்று நினைத்து தேற்றிக்கொண்டேன்.

  இப்போது தெளிவு படுத்திவிட்டீர்கள்.

  நன்றி.

  தமிழ்ச்செல்வன்

 5. எஸ்.கே on April 16, 2009 at 8:47 pm

  சுட்டி வண்ணத்தைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி!

  தற்போது அவை நீல வண்ணம் பூசி நிற்பதைக் காணலாம்.

  அன்புடன்,

  எஸ்.கே

 6. P. Deivamuthu on April 16, 2009 at 9:39 pm

  Hindu Voice (English) May 2009 issue will carry this news and related articles. Hindu Voice has continuously been exposing this charlatan.

 7. எஸ்.கே on April 16, 2009 at 9:50 pm

  Thanks, Mr. Deivamuthu.

  Your blog (http://hinduvoicemumbai.blogspot.com/) contains a good deal of information about “Hindu Voice” monthly and the books you publish. Great work.

  Regards,

  S.K

 8. g ranganathan on April 16, 2009 at 9:50 pm

  இதுபோன்ற பித்தலாட்டஙகளை எந்தவொரு “பெரிய பத்திரிக்கைகளும்” “நடுநிலை நாளேடுகளும்” தொலைக்காட்சிகளும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. பாராட்டுகள் திரு. தமிழ்ச்செல்வன்.

 9. N.S.Sankaran on April 16, 2009 at 10:54 pm

  Many thanks. Can you get this published in the newspapers of regional languages? The media esp. visual media has done irreparable damage on this issue. They have alienated a section of Indians from truth. Teesta setalvad should be tried under several sections of the law including NSA. In fact the court itself should initiate action. But all this is impossible under Congress rule, The English media which is subservient to the congress has blacked out the news. All the channelites like Prannoy Roy, Sardesai, Barka Dutt, and Goswami should apologise to the public for depicting Setalwad, a criminal as a heroine.

 10. mohanraj on April 16, 2009 at 11:39 pm

  அப்படி போ்டு

 11. S.R.Kuppuswamy on April 17, 2009 at 6:46 am

  IF THIS IS ALL FALSE PROPAGANDA WOULD IT NOT THE DUTY OF THE OTHER AFFECTED PARTIES TO GO TO COURTS APART FROM ACTING BY STRAIGHTAWAY FILING AN APPROPRIATE COMPLAINT WITH THE POLICE.

  EVERY CHANNEL HAS BLOWN UP THESE MATTERS OUT OF PROPORTION AND THE ENGLISH MEDIA CONTROLLED BY VESTED INTERESTS– BOTH DOMESTIC AND FORIEGIN– HAD DONE ENOUGH DAMAGE TO THE IMAGE OF THE COUNTRY. WHAT IS THE REMEDY NOW?

  TAKE A VOW NOT TO SUBSCRIBE TO THE ENGLISH MEDIA NEWSPAPERS WHICH ARE SPREADING FALSE INFORMATION AND ACT WITH UTMOST BIAS AND HAVE ANTI HINDU VIEWS

 12. t.r.pattabiraman on April 17, 2009 at 8:01 am

  மோடி ஒன்றும் பேடி இல்லை. அவர் ஒரு ஆம்பிள்ளை. ஆனால் அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைவர்கள் எட்டப்பன்களின் வாரிசுகள். அவருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, சென்ற தேர்தலில்
  அவர்கள் நடந்துகொண்ட விதம் அசிங்கமானது.
  புளுகு மூட்டைகளையே எப்போதும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும்,ஊடகங்களின் துணை கொண்டு அந்த தலைவர்களும், சேர்ந்துகொண்டு அளித்த இடையூறுகள் மற்றும் பிற கட்சிகளோடு ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டு மக்களை உறிஞ்சி வயிறு வளர்த்து கொண்டிருக்கும், கம்யூனிச மாயைகளும், செய்த அண்டப்புளுகுகளையும் மீறி மற்றும் பிறர் முதுகின் மீதே சவாரி செய்து ஆட்சியைப் பிடித்துக்கொண்டு கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் பெருச்சாளிகளை கொண்ட காங்கிரஸ் கட்சியின் அவதூறு பிரச்சாரங்களையும் முறியடித்து ஆட்சியைப் பிடித்தவர் அவர்.

  என்ன செய்வது நமக்கு வெளியில் எதிரிகளைவிட உள்ள இருக்கும்,கூடவே இருந்து நம்மை கொல்லும் நோய்கள் போல் இருந்து நம்மை அழித்துக் கொண்டிருக்கும் சுயநல சக்திகளை எதிர்கொள்ள இறைவன்தான் துணை நிற்க வேண்டும்.

 13. Brig VRP Sarathy on April 17, 2009 at 8:54 am

  This is an excellent article, well articulated, gives the facts of the case and shows the perverted attitude of the so called Human rights activists like Teesta for whom it is not National interest that is supreme but their own twisted agenda inimical to the interests of the Nation! The Supreme court should order suo moto trials against Teesta for interfering with justice and for poisoning the minds of Jehadis with false hood, motivating anti national elements to indulge in terrorism with foreign help!
  Brig (Retd) VRP Sarathy

 14. kargil Jay on April 17, 2009 at 9:13 am

  ஐயா தமிழ்ச் செல்வரே,
  முதலில் எழுதும் போது இவ்வாறு போட்டேன் :
  இதுபோன்ற எழுத்தாளர்கள் மேல் (தமிழ்ச் செல்வனைச் சொல்லவில்லை, டீஸ்டா போன்றோரை).

  பிறகு, நகைச்சுவை போன்று தோன்றக்கூடும் என அதை எடுத்துவிட்டேன். ஆனால் பாவம் அது உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

 15. சே. ராஜகோபாலன் on April 17, 2009 at 9:39 am

  இப்போது தான் நெஞ்சம் குளிந்தது. தமிழ்ச்செல்வனே! எம்து பணி போற்றுதற்குறியது. ஆங்கிலத்தில் படித்ததை விட உமது நடை மிக்க அருமை. வாழ்க உமது பணி.

  இபோது இந்த திருமதி டீஸ்டா செதல்வாட்டின் மீதுு நடவடிக்கை எடுக்கவேண்டுமே!. அவரை தண்டனைக்குட்படுத்த வேண்டுமே. அநேகரது ஆசை பூர்த்தியாகுமா?

  சேஷத்ரி ராஜகோபாலன்

 16. ஜயராமன் on April 17, 2009 at 1:53 pm

  லஷ்கர் முதலிய காட்டுமிராண்டி பயங்கரவாதிகள் பல வருடங்களாக இந்தியாவைப் பிளக்கவும், இந்துக்களை அழிக்கவும் முயன்று வருவதை சீராகவும், சிறப்பாகவும் வழி மொழிந்து அதே விளைவுகளை ஏற்படுத்திய இந்த தேசத்துரோகி டீஸ்டா அவர்களின் முகத்தில் காரி உமிழ்கிறேன்.

  தங்கள் கட்டுரையில் சொன்னதெல்லாம் ஒரு சாம்பிள்தான் போல. இந்த ரிப்போர்ட்டைப் படிக்கும்போது இன்னும் அதி பயங்கரமெல்லாம் தெரிய வருகிறது.

  உதாரணமாக, பெரிய கலவர இடங்களில் ஒன்றான நரோடா பாட்டியா பகுதியில் 28 பிப்ரவரி, 2002 அன்று கலவர கும்பல்காரர்கள் ஜரீனா மன்சூரி என்ற 30 வயது முஸ்லிம் பெண்ணைக் கொலை செய்து எரித்ததாக இந்த டீஸ்டா கும்பல் பொய் சொல்லி வந்தது.

  ஆனால், அந்த பெண் இந்த தேதிக்கு 4 மாதங்கள் முன்பாகவே டி.பி நோய் வந்து செத்துப்போய்விட்டார் என்று அந்த பெண்ணின் அண்ணன் இந்த விசாரணைக்குழுவிடம் தெரிவித்திருக்கிறான்.

  இந்த எஸ்.ஐ.டி என்கிற சிறப்பு விசாரணைக்குழு உச்ச நீதி மன்றத்தால் நேரிடையாக நியமிக்கப்பட்ட அமைப்பு. இந்த விசாரணைக்குழு உச்ச நீதி மன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக அமைப்பப்பட்டது. வேறு, யாருக்கும் இந்த குழு பதில் அளிக்க தேவையில்லை. இந்த விசாரணைக்குழு உயர்ந்த சீனியர் துப்பறியும் அதிகாரிகளால் உச்ச நீதி மன்றம் மூலமாக உருவாக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

  நான் மேலே சொன்ன வாக்குமூலம் டிசம்பர் 2008ல் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதே மிகச்சில பேப்பர்களில் வந்தது. இந்த பொய்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தாலும் பெரிய ஊடகங்களும், பத்திரிக்கைக்காரர்களும் இதை கண்டுகொள்ளவே இல்லை (வழக்கம்போல).

  அனிஷா என்ற பெண் தன் தோழி 15 வயது ஷபானா பலாத்காரத்தை நேரில் பார்த்ததாக சொன்ன சாட்சியும் பொய் என்பது தெரியவந்துள்ளது. அந்த தினத்தில் அனிஷா வேறு ஒரு மறைவிடத்தில் இருந்ததாக அவளே சொல்லியிருக்கிறாள்.

  இது போல எத்தனையோ. தேசத்துரோகி டீஸ்டாவின் முக்கிய (அதாவது பரபரப்பூட்டப்பட்ட பிரபலமான) முக்கிய கொலை நிகழ்ச்சி ஜஹீரா ஷேக் கொலை. அதில் அந்த பெண்மனி டீஸடாவுக்கு எதிராக மாறியபோதே இவளின் பொய் வெளியே வந்துவிட்டது.

  இது சம்பந்தமாக குருமூர்த்தி அவர்களின் பழைய கட்டுரை http://www.newindpress.com/Column.asp?ID=IE620041109064453&P=old

  இந்த டீஸ்டாவின் தில்லுமுல்லு திட்டமிட்டே நடத்தப்பட்ட பல வருட கால நாடகம். இதன் பிண்ணனியில் இருப்பவர்களும் அடையாளம் காணப்படவேண்டும்.

 17. Venkataraman Rajaraman on April 17, 2009 at 3:28 pm

  Dear Tamizhchelvan
  Obviously you have enlightened us. Please keep informing us. Do you have any hope that our Country will stand the test of these Teestas?

 18. kargil Jay on April 17, 2009 at 6:00 pm

  டி.ஆர். பட்டாபிராமன் ஸார்,
  நீங்கள் சொல்வது சரிதான். வாஜ்பாயி போன்ற பிஜேபி காரர்கள் கிட்டத்தட்ட ஹிந்துக்களுக்கு எதுவுமே செய்யாமல் ‘நல்லவர்’ பட்டத்தைப் பெறவேண்டும் என்பதற்காக ஹிந்துக்களுக்கு ஏமாற்றினர் என்றே சொல்லவேண்டும்.

  பாகிஸ்தானுக்கு பஸ்விட்டு டிரைவர் ஆனார்; முஷ்ரஃப்க்கு தாஜ்மகால் காட்ட டூரிஸ்ட் கைடு ஆக வேலை செய்தார்; கோடி கோடியாக கொள்ளையடித்த , இந்தியர்களின் காலத்தை விரயம் செய்யும் கிரிக்கெட் டீமுக்கு வரிவிலக்கு செய்து டேக்ஸ் ஏமாற்றும் அக்கௌண்டன்ட் ஆனார். ஆனால் ஹிந்துக்களுக்கு என்ன செய்தார் ?

 19. S V Badri on April 17, 2009 at 7:14 pm

  இவர்களிடம் வேறு என்ன் எதிர் பார்க்க முடியும்?

 20. Yagnasubramanian on April 17, 2009 at 7:18 pm

  Dear Tamizhchelvan,
  It is time the people woke up to the real picture and took the right course of action by properly exercising their vote.Like the overzealous photographer of Kargil who won award, another overzealous reporter who gave away the location of hostages to the Taj hotel terrorists should be shown the door. Among so many other people, I have given up seeing these media channels- which only corroborate the predictions of George Orwell and Andy Warhol.

  Your write up is an eye opener.

  Yagnasubramanian

 21. Ravikumar on April 17, 2009 at 8:47 pm

  இந்திய ஊடகங்கள் இடது சாரி சிந்தனை(!)யாளர்கள்; நாத்திகர்கள்; பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் பல இந்துக்களால் கற்பழிக்கப் பட்டதாக அலறினர். பின்னர் அவர்களில் பலர் கிறிஸ்தவர்கள் என்றதும் இந்த மீடியாக்கள் தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஒரு முஸ்லிம் கொலை செய்ய பட்ட போது, இந்துக்கள் கொன்று விட்டதாகக் நினைத்து தமிழக அரசு உடனடியாக நிவாரண உதவி அறிவித்தது. பின்னர் அவர் சொத்து தகராறில் உறவினர்களாலேயே கொலை செய்யப் பட்டது தெரிய வந்தது.
  உண்மையாக இந்தியாவில் இந்துக்கள் மீது நடந்த அக்கிரமங்கள், காட்டுமிராண்டி தாக்குதல்கள் இவர்களுக்கு தெரிந்தும் எழுதுவதில்லை.
  ஓளரங்கசீப் இந்துக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றி கண்காட்சி நடத்தியதை தடுக்க ஏ.சி. சேகர் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார் என்பதை இந்துக்கள் இன்னமும் மறைந்து விடவில்லை.
  ஜின்னாவின் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் நவகாளியில் முஸ்லிம்கள் இந்துக்களை கொன்று குவித்தது பற்றியோ, கேரளா மாப்ளா கலவரம் பற்றியோ, ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றியோ, இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற வேள்வியில் பலியான லட்சக்கணக்கான எனது சகோதர, சகோதரிகளை பற்றியோ, கேரள கடற்கரையில் இற‌ங்கிய கடற்கொள்ளையனான வாஸ்கோடகாமா நடத்திய படுகொலை பற்றியோ, பாக்கிஸ்தான் பிரிவினையின் போது கொல்லப்பட்ட, மானபங்கம் செய்யப் பட்ட நமது பல லட்சம் சகோதர, சகோதரிகளை பற்றியோ எழுத இவர்களுக்கு ஏன் தெரியவில்லை?
  நமது நாட்டு தியாக தீபங்களை மறந்து விட்ட இவர்கள் பேனா, செகுவரா பற்றியும், பாப்லோவின் கவிதைகளை எழுதுவதையும், மால்கம் லிட்டில்(எக்ஸ்) பெயர் மாற்றம் பற்றி சிலாகிப்பதையும் பெருமையாக நினைக்கிறதே!
  சுதந்திர போராட்டதில் கூட அன்னிய சுதந்திர போராட்டத்தை பெருமையாக நினைக்கும் அளவுக்கு இந்த மீடியாக்கள் அடிமை சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறது. இந்துக்கள் மீடியா துறையில் ஒரு கணமும் தாமதிக்காமல் ஈடுபட வேண்டும். அதை விட்டு விட்டு புலம்பி பிரயோஜனம் இல்லை.
  குறைந்த பட்சம் பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியாவது இந்துக்கள் தங்க‌ள் கண்டணத்தையோ, ஆதரவையோ தெரிவிக்கலாம்.
  நமது நண்பர்களிடம் பேசும் போது இந்து சமுதாயத்தின் பிரச்சினை பற்றி பேசி விவாதிக்கலாம். மாற்றம் வருமா என காத்திராமல், மாற்றத்தை உருவாக்க புறப்படுவோம்.

 22. நடராஜன் on April 18, 2009 at 7:09 am

  //பாகிஸ்தானுக்கு பஸ்விட்டு டிரைவர் ஆனார்; முஷ்ரஃப்க்கு தாஜ்மகால் காட்ட டூரிஸ்ட் கைடு ஆக வேலை செய்தார்; கோடி கோடியாக கொள்ளையடித்த , இந்தியர்களின் காலத்தை விரயம் செய்யும் கிரிக்கெட் டீமுக்கு வரிவிலக்கு செய்து டேக்ஸ் ஏமாற்றும் அக்கௌண்டன்ட் ஆனார். ஆனால் ஹிந்துக்களுக்கு என்ன செய்தார்?//

  கார்கில் ஜே அவ‌ர்க‌ளின் மேற்கண்ட‌ வ‌ரிகளை நான் க‌டுமையாக‌ எதிர்க்கிறேன். பாஜ‌க‌ அர‌சு ஒரு கூட்ட‌ணி அர‌சாக‌ மிக‌ வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அர‌சு. அர‌சு அர‌சியலமைப்பு ச‌ட்ட‌ங்க‌ளின்ப‌டியும் கூட்ட‌ணி க‌ட்சிக‌ளையும் அர‌வ‌னைத்து ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டிய‌ சூழ‌லில் வாஜ்பாயீ ஒரு சிறந்த‌‌ அர‌சை அளித்திருக்கிறார். அவ‌ர் ஆட்சியின் இறுதியில் வைக்க‌ப்ப‌ட்ட இந்தியா ஒளிர்கிற‌து என்ற‌ வாச‌க‌ம் உண்மைக்கு மிக‌ அருகில் இருப்பதாகும். அவ‌ர‌து ஆட்சியின் ப‌ல‌ன்க‌ளையே இப்போதிருக்கும் காங்கிர‌ஸ் ஆட்சி அறுவ‌டை செய்துகொண்டிருக்கிற‌து.

  வாய் புளித்த‌தோ மாங்காய் புளித்த‌தோ என‌ போகிற‌போக்கில் இன்றைக்கு இருக்கும் ஒரே இந்து ஆத‌ர‌வான‌ க‌ட்சியைப் ப‌ழித்துரைப்ப‌து பொறுப்ப‌ற்ற‌ செய‌லாகும்.

  ஒரு மிக‌ச் சிற‌ன்த‌ க‌ட்டுரையை வ‌ழ‌ங்கிய‌ த‌மிழ்ச்செல்வ‌ன் அவ‌ர்க‌ளுக்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.

  ந‌ட‌ராஜ‌ன்.

 23. kargil Jay on April 18, 2009 at 9:21 am

  நடராஜன் ஸார்,
  உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நீங்கள் சொன்னது உண்மையே. வாஜ்பாயி அரசு இந்தியர்களுக்கு நன்மை செய்தது. ஆனால் ஹிந்துக்களுக்கு என்ன செய்தது? அயோத்தியில் அகழ்வாராய்ச்சி செய்து அநத இடத்தில் விக்கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டவுடன் வாஜ்பாயி என்ன செய்தார்? ராமருக்கு கோவிலென்ற கொடுத்த வாக்கை மீறினார். தமிழகத்துக்கு காவிரிநீர் என்ற பேச்சு வார்த்தையில் கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்து ஜெயலலிதாவால் ‘மிஸ்டர் வாஜ்பாயி நான் உங்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குத் தாழ்ந்தார். அதையெல்லாம் விடுங்கள் ஸார்.

  //ஹிந்துக்களுக்கு என்ன செய்தார்?// என்பது மட்டுமே என் கேள்வி. அதற்குப் பதில் சொல்லுங்கள். நான் வேறு எந்த விஷயத்திலும் வாஜ்பாயியைக் குறை சொல்லவில்லை.

 24. ச.திருமலை on April 18, 2009 at 9:42 am

  தமிழ்செல்வன்,

  தமிழ் பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் வெளியிடத் தயங்கும் செய்திகளை அற்புதமாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். இந்த டீஸ்டா, அருந்ததிராய் போன்ற பொய்யர்கள் மீது குஜராத் போலீஸ் உரிய வழக்கு போட்டு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படிப் பட்ட ஒருவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது அதை வாங்கியுள்ள ஒரு சில தகுதியுள்ளவர்களையும் அவமானப் படுத்தியிருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்.

  உங்கள் எழுத்துப் பணி மேலும் தொடரட்டும்.

  அன்புடன்
  ச.திருமலை

 25. Suresh Ram on April 18, 2009 at 11:30 am

  “”//ஹிந்துக்களுக்கு என்ன செய்தார்?// என்பது மட்டுமே என் கேள்வி.
  அதற்குப் பதில் சொல்லுங்கள். “”

  கார்கில் ஜெய் அய்யா

  இந்த இடுகை டீஸ்டா செதல்வாட் எப்படி நீதிமன்றத்தையும் மக்களையும் நாட்டையும் பொய் சொல்லி ஊடகங்களின் துணையுடன் ஏமாற்றினார் என்பதை பற்றியது.
  எவ்வாறு இன பிரிவினையை ஊக்குவித்தார்? எவ்வாறு கற்பனை செய்யவே கூசும் “கர்ப்பை உருவல் ” கதைகளை பரப்பினார் ? என்ன ஆதாயத்திற்காக இதை எல்லாம் செய்தார்?
  தயவுசெய்து தலைப்பையும் செய்தியயும் முழுமையாக படியுங்கள் .

  அல்ல்து
  அதையெல்லாம் விடுங்கள் ஸார்.
  மன்மோகன் ஹிந்துக்களுக்கு என்ன செய்தார்? என்பது மட்டுமே என் கேள்வி. அதற்குப் பதில் சொல்லுங்கள். நான் வேறு எந்த விஷயத்திலும் உங்களை குறை சொல்லவில்லை.

 26. Ravikumar on April 18, 2009 at 11:44 am

  //ஹிந்துக்களுக்கு என்ன செய்தார்?/ என்பது மட்டுமே என் கேள்வி./
  திரு.கார்கில் ஜெய் அவர்களுக்கு. இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் சமமான வாய்ப்புகளை தருவது தான் பி.ஜே.பி.யின் நோக்கம். இந்துக்களை மட்டும் ஆளுவது அல்லது இந்துக்களுக்காக ஆளுவது என்ற நோக்கமல்ல. மன்மோஹன் சிங் மாதிரி இந்தியாவின் வளங்களில் முஸ்லிம்களுக்கு தான் முதல் உரிமை என்று பேசுவது என்பது பி.ஜே.பி.யின் பழ‌க்கமும் அல்ல. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் (அதாவது மதத்திற்கு ஒரு சட்டம் என இல்லாமல்) போன்றவை மூலம் உண்மையான மதசார்பின்மையை ஏற்படுத்த முனைவது தான் பி.ஜே.பி.யின் நோக்கம். காவிரி பிரச்சினை மத ரீதியான பிரச்சினை அல்ல. கர்னாடகத்துக்கு சாதகமாக நடந்தார் என்பது தவறான வாதம். வாதத்திற்காக அப்படியெ கூறினாலும் கர்னாடகம் என்ன முஸ்லிம் மானிலமா? அங்கும் இந்துக்கள் தானே அதிகம்.
  ராமர் கோவில் பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் எந்த அரசும் எதுவும் செய்ய இயலாது. ஆனால் ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரும்பான்மை மக்களின் விருப்பப் படியும், அங்கு ராமர் கோயில் கட்ட, பி.ஜே.பி. ஆதரவு தரும்.
  ஒன்று நிச்சயம். இந்துக்கள் ஒருங்கிணைந்து தயாரானால் ஒரு சில நாளில் கோயில் சாத்தியமே. எந்த அரசும் தடுக்க முடியாது. கோயில் கட்ட அனுமதிக்கும் அரசுக்குதான் ஓட்டு என்று இந்துக்கள் ஒரே குரலில் சொன்னால் போதும்! எல்லா கட்சிகளின் அஜெண்டாவிலும் அயோதியில் கோயில் என்பது இடம் பெற்று விடும்.
  பி.ஜே.பி.யை தவிர மற்ற கட்சிகள் அயோத்தி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு தான் ஆதரவாக பேசி வருவது தாங்கல் அறிந்த‌தே.
  ஆக பி.ஜே.பி.யின் ஆட்சி என்பது இந்தியர்களுக்கான கட்சி; இந்துக்களுக்கு மட்டுமே அல்ல. வந்தேமாதரம் என்று உணர்ச்சியுடன் சொல்பவரும், பாரத் மாதாகீ ஜெய் என்பவரும் தான் உண்மையான இந்தியன்.

 27. jebamani mohanraj on April 18, 2009 at 11:50 am

  Priyanka tells Varun to read The Gita and tells Modi to read gandhi. the indians should tell her read this first:-

  Decide godman’s plea without hearing CBI: HC to trial court

  NEW DELHI, NOV 6 (PTI)

  Pulling up the CBI for delay in concluding the investigation in former prime minister Rajiv Gandhi’s murder case, the Delhi High Court today directed a court here to decide the plea of Chandraswami, a suspect in the case, without entertaining the probe agency’s objections.
  The Court directed the Additional Chief Metropolitan Magistrate to decide Chandraswami’s plea seeking permission to go abroad without taking into consideration the CBI’s objections, which has been opposing the controversial godman’s application on the ground of pendancy of the investigation.
  “If CBI had been serious enough in the investigation and would have had any material, it would have requested the Centre to pass an order on the executive side, curbing the travel of the petitioner (Chandraswami) abroad,” Justice S N Dhingra said.
  “Had there been any additional evidence collected by Multi Disciplinary Monitoring Agency (MDMA) or CBI in the last nine years, CBI would have filed additional chargesheet before the court concerned,” the Court said.
  Expressing its displeasure over tardy progress of the investigation, the Court said, “it may take any number of more years, i.E., 16, 20 or 30 years in completing the investigation by the CBI and nobody knows what would be the ultimate result”.
  The former Prime Minister along with 17 others were killed in a bomb blast on May 21, 1991 and the investigations in the murder were carried on by the Special Task Force.
  The Centre had set up a Multi Disciplinary Monitoring Agency under the CBI in 1998 to further probe the conspiracy angle and Chandraswami has been held as one of the suspects in the case.

  Justice Dhingra, while directing the lower court to consider the plea of Nemi Chand Jain alias Chandraswami, said, “I consider that in the name of pending investigations against an alleged suspect, person’s liberty cannot be curtailed.”

  The Court further said, “ACMM while considering the application of the Chandraswami for going abroad, should not give hearing to CBI for opposing the application on the ground of pendancy of investigation in Rajiv Gandhi murder case.”
  The Court passed the order on controversial godman’s petition seeking release of his passport seized by the government agency and its permission to go abroad.
  In addition to being a suspect in former Prime Minister’s murder case, Chandraswami is also involved in several cases under FERA.
  While granting bail in FERA violation cases, the Supreme Court had put condition that he could go abroad only with the permission of the concerned court.
  He had filed several applications before the ACMM seeking its permission to go abroad but he was not allowed.
  Chandraswami then had approached the High Court for the relief in 2005.

 28. bala on April 18, 2009 at 12:09 pm

  நல்ல கட்டுரை தமிழ்செல்வன்.
  இது போல் அட்டுழியம் செய்பவர்க்கு விருது
  கொடுத்து, மரியாதை செயதால் எப்படி உருப்படுவது.

 29. jebamani mohanraj on April 18, 2009 at 2:05 pm

  BJP has done lot of damage to tamilnadu. Just to release the dreaded anti india and duplicate tamilan vaiko the BJP diluted the POTA Act. The SC was forced to tell that speaking in support of a banned organisation is not an offence. The judgement is now used by all the antinational elements and no court or police is able to take action against the offenders.

 30. t.r.pattabiraman on April 18, 2009 at 2:17 pm

  என்னுடைய நோக்கம் பி.ஜெ.பி அரசை பற்றி விமரிசிப்பது அல்ல.
  பெருவாரியான இந்துக்கள் வாழும் இந்த நாட்டில் தைரியத்துடன் போராடும் சக தலைவருக்கு உரிய ஆக்கமும் அளிக்காமல் இடையூறுகளை அந்த தலைமை அளித்தது பற்றித்தான் நான் குறிப்பிட்டேன்.
  இந்து மதத்திலே எண்ணற்ற பிரிவுகள் இருந்தாலும் அடிப்படை பண்பாடுகளை, தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் கலாச்சாரங்களை கடைபிடித்துகொண்டுதான் வருகிறாகள். மேலூட்டமாக நடக்கும் மத வெறியர்களின் செயல்கள் அடித்தளத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அது அப்படியே நிலத்தடி நீர்போல் இருந்துகொண்டு இருக்கிறது. பூமிக்கு மேலே இருக்கின்ற நீர் மாசுபாட்டது போல் மக்களில் சிலர் பாதைமாறி பொய்களுக்கு அடிமையாகி பேய்கள்போல் நடந்துகொண்டாலும் ஒரு கால கட்டத்தில் அவர்கள் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
  பொய்கள் புயல்காற்றாக வீசினாலும் வலுவிழந்து காணாமல் போகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இந்து விரோதிகளையே தொடர்ந்து ஆட்சியில் அமரவைக்கும் இந்து வாக்காளர்களை முதலில் திருத்த வேண்டும்
  அதை செய்யாமல் ஆட்சியாளர்களை குறை கூறுவது பேதமையாகும்.
  பொது வாழ்வில் இருப்பவர்கள்,நேர்மை, தியாகம், இவற்றை குணங்களாக கொள்ளாதவரை இந்த பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
  மீண்டும் சொல்லுகிறேன் நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை இன்னும் உறுதிபடுத்தும் செயல்களை செய்யவேண்டும்.

 31. bheema on April 18, 2009 at 2:27 pm

  excellent and very informative article. Thanks a ton Mr. Tamil selvan

 32. ஜடாயு on April 18, 2009 at 3:18 pm

  குஜராத் கலவரம் பற்றி ஒருதலைப் பட்சமான அபாண்டங்களையே கேள்விப் பட்டு வந்தவர்கள் தமிழ் வாசகர்கள். அவர்களுக்காக, உண்மைகளை அருமையாகத் தொகுத்து எழுதியுள்ளார் தமிழ்ச் செல்வன்.

  வழக்கமாக தெரு அரசியல் பேசாத காலச்சுவடு போன்ற தமிழ் இலக்கிய இதழ்கள் கூட குஜராத் கலவரம் பற்றிய கொடூர இன அழிப்பு சித்திரங்களையும், போலி என்று பலரால் கருதப் பட்ட தெஹல்கா ஆடியோவின் முழு வடிவத்தையுமே வெளீயிட்டன, அது ஏதோ உன்னத இலக்கியம் என்கிற மாதிரி. இப்போது நீதிமன்றமே இந்த அபாண்டங்களின் பொய்மைத் தன்மையை உறுதி செய்து விட்டபிறகு, தாங்கள் பதிப்பித்ததெல்லாம் தவறு என்று வாசகர்களுக்கு சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

  மதச்சார்பின்மை என்ற பெயரில் அடிப்படை ஊடக தர்மம், நெறிகள் ஆகியவற்றையே குழிதோண்டிப் புதைத்து விட்டவர்கள் இவர்கள்.

 33. reality on April 18, 2009 at 7:53 pm

  டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னை இதழீல் அறிக்கை சமர்பித்த விவரம் வெளியிடப்படப்படவில்லை.செதல்வாத் மீது வழக்கு நடத்த வேண்டும்.காங்கிரஸ் கட்சி மட்றும் கம்யுனிசஸ்ட் கட்சி போன்றன‌ சுதந்திர இந்திய வரலாற்றின் , அன்னிய அடிமைச்சின்னங்கள்.

 34. kargil Jay on April 18, 2009 at 7:59 pm

  ரவிக்குமார் ஸார்,
  பிஜேபி ராமர் பெயரைச் சொல்லி ஏமாற்றியது உண்மை. நீங்கள் எழுதியிருப்பது, என் கேள்வியில் உண்மை இருக்கிறது என்று சொல்லும் பதிலே. வாஜ்பாயிக்கு சற்றே நேர்மை இருப்பின், சி.பி.ஐ மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக் களை முடுக்கி விட முயற்சித்து இருக்கலாம். காலதாமதம் செய்து சீட்டை விடாமல் பிடித்திருப்பதுதான் அவரின் நோக்கம். ம‌ற்ற‌ப‌டி என் ம‌ன‌வ‌ருத்ததைச் சொன்னேனே த‌விர‌, நான் பிஜேபியின் ஆத‌ர‌வாள‌ன் தான்.

  டி.ஆர். பட்டாபிராமன் ஸார்,
  என் கேள்விக்கு பதில் கூறுங்கள். ஹிந்துக்களை அழிக்கும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதனால் நான் வாஜ்பாயியைக் கேள்வியே கேட்கக் கூடாது என்பது நேர்மையான வாதம் ஆகாது.

  சுரேஷ் ராம் ஸார்,
  மன்மோகன் என்ன செய்தார் என்று காங்கிரஸாரிடம் கேளுங்கள். என்னைப் பதில் சொல்லச் அறைகூவல் விடுப்பது மலிவுவான தந்திரம். வாஜ்பாயி ஹிந்துக்களை ஏமாற்றியது போல், மன்மோகன் தனக்கு ஓட்டளித்த முஸ்லீம்களை ஏமாற்றவில்லை.

 35. kargil Jay on April 18, 2009 at 8:20 pm

  மன்னிக்கவும். என் கடைசி பதிவை, தவறாக டி.ஆர். பட்டாபிராமனுக்கு பிரதி பதில் எழுதுவதாக பதித்துவிட்டேன். டி.ஆர். பட்டாபிராமன் சொல்வதையேதான் நானும் சொல்கிறேன். தனக்கு வாக்களித்த ஹிந்துக்களுக்கு நீதி வழங்கிய மோடியைப் போல் நேர்மையுடன் வாஜ்பாயி நடக்கவில்லை. மோடிக்கு பல விசாரணைகளை, எதிர்ப்புக்களை சந்திக்க ஸங்கல்பம் இருந்தது. வாஜ்பாயிக்கோ ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் ஸங்கல்பம் மட்டுமே. இதைத்தான் நான் அடிப்படை வாதமாக வைக்கிறேன்.

  மற்றபடி, காவிரிப் பிரச்னையில் வாஜ்பாயி தமிழர்களுக்கு துரோகம் செய்தார் என்பது அப்பட்டமான உண்மை. அதை நான் அடிப்படை வாதமாக வைத்தேன் என்று ரவிக்குமார் சொல்வதுதான் தவறான வாதம். காவிரிப் பிரச்னை ஒன்றே வாஜ்பாயி நாணயமற்றவர் என்று நிரூபிக்கிறது. பிறகு ராஜஸ்தான் எல்லையில் ராணுவத்தை அனுப்பி கோமாளித்தனம் செய்தது, சாம்சங் மொபைல் போனை ரிலையன்ஸ் நிறுவன லாபத்துக்காக வரி குறைத்து கொரியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்காக ஒரு போனுக்கு 4102 ரூபாய் வரியை வெட்டியது. (எத்தனை போன்கள் என்று கணக்கிடுங்கள்).

  மோடிமேல் இதுபோன்று முடிந்தால் குற்றம் சாற்றுங்கள். இல்லையென்றால் சுரேஷ் ராம் தவறை ஒப்புக்கொள்ளட்டும்.

 36. Suresh Ram on April 18, 2009 at 9:38 pm

  //மோடிமேல் இதுபோன்று முடிந்தால் குற்றம் சாற்றுங்கள். இல்லையென்றால் சுரேஷ் ராம் தவறை ஒப்புக்கொள்ளட்டும்.//

  என்னைத் தவறை ஒப்புக்கொள்ளட்டும் என்று அறைகூவல் விடுப்பது மலிவுவான தந்திரம்.

  “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு ரெண்டு ருபாய்” என்கிற கதையாக உள்ளது

  மோடி மீது தவறான குற்றம் சுமத்திய டீஸ்டா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருகிறேன். மோடி மீது குறம் சொல்லவில்லை என்பது எப்படித் தவறு ஆகும்

  // தனக்கு வாக்களித்த ஹிந்துக்களுக்கு நீதி வழங்கிய மோடியைப் போல் நேர்மையுடன் வாஜ்பாயி நடக்கவில்லை.//

  வாஜ்பாயிக்கு நீங்கள் சொல்லும் ஹிந்துக்கள் மோடிக்கு அளித்தது போன்று வோட்டு அளிக்கவில்லை. இயல்மைக்கும் நேர்மைக்கும் உள்ள அரசியல் சங்கடங்களையும் மீறி வாஜ்பாய் நாட்டுக்கும் மக்களுக்கும் பல நன்மை செய்துள்ளார்.

 37. ஜெயக்குமார் on April 19, 2009 at 8:46 pm

  தமிழ்செல்வனின் இந்தக் கட்டுரை உள்ளது உள்ளபடி ஆதாரங்களுடன் எழுதப்பட்டது. இங்கு அவர் சொல்லியுள்ள கருத்துக்களை ஆங்காங்கே படித்திருக்கிறேன். ஆனால் ஒரு அருமையாக வடிக்கப்பட்டு இன்றுதான் பஇத்தேன். நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள் தமிழ்செல்வன்.

 38. Sitrodai on April 23, 2009 at 1:22 pm

  இவை பற்றி எந்த ஒரு media-வும் வாய் திறக்கவில்லை. இந்த மீடியா-வின் நடவடிக்கைகள் வெட்ககேடு.

  உண்மைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் Tamilhindu.com-க்கு பாராட்டுகள்.

  – சிற்றோடை

 39. RK on April 27, 2009 at 1:49 pm

  Whoever reads this should paste the link in every possible site and give a link in their own web pages so it reaches the masses. As usual, Indian Hindus are the taken for granted masses. Neither the Government supports them, nor the media. It is themselves, who should come to their aid.

 40. t.r.pattabiraman on April 28, 2009 at 8:30 am

  மீண்டும் கோத்ரா புகைய ஆரம்பித்துவிட்டதே?
  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நேற்றைய செய்தி.

 41. தமிழ்ச்செல்வன் on April 30, 2009 at 12:21 am

  இக்கட்டுரையைப் படித்து மறுமொழி இட்ட / பாராட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வேலை பளு காரணமாக அவ்வப்பொழுது பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

  //மீண்டும் கோத்ரா புகைய ஆரம்பித்துவிட்டதே?
  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நேற்றைய செய்தி.//

  ஆம் பட்டாபிராமன். இது டீஸ்டா-கபில் சிபல் (சோனியாவின் ஆசியுடன்) வேலை என்று சந்தேகிக்கிறேன். அனால் இதனால் ஒன்றும் வேலைக்காகாது. மோடியும் இதெற்கெல்லாம் அஞ்சுகிற ஆசாமி இல்லை. அவர்தான் “நான் ஜெயிலுக்குப் போகவும், தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன்” என்கிறாரே!

  சட்டமன்றத் தேர்தலில் சோனியா மோடியை “மரணத்தின் தூதுவர்” (மோத் கா ஸௌதாகர்) என்று சொல்ல, அவர் அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள, படு தோல்வி அடைந்த பின்னும் காங்கரஸ் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது. இந்த உச்ச நீதிமன்ற வழக்கும் அதே போல் தவறு தான். மோடி உடனே தனக்கு சாதகமாகப் பயன் படுத்த ஆரம்பித்து விட்டார். குஜராத் கலவரத்தை வைத்து மோடியை தோற்க்கச் செய்ய முடியும் என்று காங்கரஸ் நினைக்குமேயானால் அதைப் போல ஒரு வடிகட்டிய முட்டாள் தனம் வேறு இல்லை.

  ஆனால் இருபத்தி ஐந்து வருடங்கள் ஆனாலும், சீக்கியர் கொலைகளும் சரி, போபஃர்ஸ் விவகாரமும் சரி, காங்க்ரசுக்கு ஒட்டிழப்பை உண்டாக்குகின்றன. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

  நன்றி.

  தமிழ்ச்செல்வன்

 42. lightink on September 1, 2009 at 10:12 am
 43. Krish on September 1, 2009 at 2:20 pm

  Great Article.

  Is there any way to file PIL at various courts against the award committees and against Teesta on submitting false evidences to court?

 44. R.Sridharan on June 15, 2010 at 8:05 pm

  என் ஜி ஒ க்கள் என்று சொல்லப்படுகின்ற பல அரசு சாரா அமைப்புகள் ,சமுக சேவை என்ற பெயரில் ஹிந்துக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகின்றன.
  இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து முக்கியமாக இஸ்லாமிய மற்றும் கிறித்தவ அமைப்புகளில் இருந்து ஏராளமான பணம் வருகிறது
  யாராவது ஹிந்துக்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டால் அவர்களைக் குறி வைத்து அவர்கள் மீது பலவித குற்றச்சாட்டுகளை கூறியும், நீதி மன்றங்களில் ஏராளமான வழக்குகளைப் போட்டும் அவரைத் திணற அடித்து அவர் ‘விட்டால் போதும்’ என்னும் நிலைக்கு ஆளாக்கப் படுவார்

  இவர்கள் வேலை மனித உரிமை என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது, ஊடகங்களை தங்களது பண பலத்தினால் விலைக்கு வாங்கி ஹிந்து விரோத கருத்துக்களைப் பரப்புவது, வெளி நாடுகளில் நமது ஹிந்து இயக்கங்களைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது முதலிய அயோக்யத்தனமாகும்.

  துரதிர்ஷ்டவசமாக நீதித் துறையும் இவர்களது பித்தலாட்ட கோஷமான மனித உரிமையை நம்பி பல முறை ஏமாந்து விடுகிறது
  இவர்கள் உண்மையிலேயே மனித உரிமைக்காகப் போராடுகின்றனர் என்றால் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட , விரட்டி அடிக்கப்பட்ட நான்கு லட்சம் ஹிந்துக்களுக்காக என் போராடவில்லை? மேற்கு வங்காளத்தில் நந்திக்ராம் முதலிய இடங்களில் மார்க்சிஸ்டுகளால் நடத்தப்பட்ட கற்பழிப்பு, கொலைகள் இவைகளுக்காக ஏன் கேஸ் போடவில்லை
  கேரளாவில் மாராடில் முஸ்லிம் வெறியர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மீனவர்களுக்காக ஏன் வழக்கு போடவில்லை?
  மேலும் கோத்ராவில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட ஐம்பத்து ஒன்பது ஹிந்துக்களுக்கோ,இதுவரை காஷ்மீர் மற்றும் பாரதம் முழுதும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட லட்சகணக்கான காவல் துறையினர், சீ ஆர் பீ எப் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், அப்பாவிப் பொது மக்கள் இவர்களுக்கெல்லாம் மனித உரிமை இல்லையா ?

  இவர்களுக்கு நரேந்திர மோடி அவர்களின் மீது ஏன் இவ்வளவு த்வேஷம் என்றால் ரொம்ப காலத்திற்குப் பிறகு ஒரு வீர ஷத்திரிய ஹிந்து பொய் கலவாமல் உண்மையைப் பேசி இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுக்க உறுதி பூண்டிருப்பதுதான்.
  ஒரு ஹிந்துவுக்கு இவ்வளவு தைரியம் வந்து விட்டதா ? என்று இவைகளின் எஜமானர்களுக்கு குமைச்சல்!
  வைத்த குண்டில் சாக வேண்டியதுதானே ? அவனுக்கு என்ன வக்காலத்து என்று நினைக்கிறார்கள் .
  ஆக இவர்களெல்லாம் ஹிந்து விரோத,தேச விரோதக் கும்பல்களின் கைப் பாவைகளே.

  மகாகவி பாரதி சொன்னது போல் ஹிந்துக்கள் இவர்கள் முகத்தில் உமிழ வேண்டும்

  இரா.ஸ்ரீதரன்

 45. R.Sridharan on June 19, 2010 at 9:48 pm

  மோடி ோடி மீது என் இவ்வளவு தாக்குதல்கள் என்றால், வெகு காலத்துக்குப் பிறகு ஹிந்துக்களுக்கிடையே ஒரு நாட்டுப் பற்றும் தர்ம உணர்ச்சியும், நேர்மையும் கொண்ட ஒரு தலைவராக அவர் உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை மையமாக வைத்து ஹிந்துக்கள் எழுச்சி கொள்வர்
  எதிர்காலத்தில் ஹிந்து ஒற்றுமை ஏற்பட்டு அதனால் பாரதம் பெரும் சக்தி மிகுந்த நாடாக மாறும்.
  இது பல நாடுகளுக்குப் பிடிக்காது.
  நமது தேசம் என்றுமே முஸ்லிம் நாடுகளுக்கும், கிறிஸ்தவ (மேலை) நாடுகளுக்கும் மண்டியிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
  .

  இரா.ஸ்ரீதரன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*