Monthly Archives: May 2009

ராமாயணம்

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான். அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?...

மேலும் »

பண்டிகைகள்

அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

அமெரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த விரோதி வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் கொண்டாடப் பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிகமாக தமிழ் நாட்டில் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டாலும், தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டின் அடியொற்றியும் தமிழ் முன்னோர்களின் மூத்த...

மேலும் »

அரசியல்

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை – 2

அடுத்தபடியாகத் தமிழ் நாட்டு வாக்காளர் கருத வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை இந்து விரோதப் போக்கு. கடந்த ஐந்து வருடங்களில் காங்கிரஸ் தி.மு.க. ஆட்சியில் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கடுமையான இந்து விரோத நடவடிக்கைகளும் இந்து மதத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் கூடிய சதித் திட்டங்களும் நடந்துள்ளன. ஒரு சிறிய பட்டியலில் அதை அடக்க முடியாதென்றாலும், முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடலாம்....

மேலும் »

வீடியோ

எங்கள் தாய்

May 12, 2009
-

“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார். http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4 பாடல் இதோ: தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பின ளாமெங்கள்தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு மேயெங்கள்தாய் – இந்தப் பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப் பயின்றிடு வாளெங்கள்தாய் முப்பது கோடி முகமுடை யாளுயிர் மொய்ம்புற வொன்றுடையாள் – அவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை யொன்றுடையாள். நாவினில் வேதமுடையவள் கையில் நலந்திகழ் வாளுடையாள் –...

மேலும் »

அரசியல்

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

தமிழர்கள் தமது தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆம், மே 13ம் தேதி நமது எதிர்காலத்தை நிச்சயிக்கும் நாள். நல்லவர்கள் கூடவே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் வந்து ஓட்டுக் கேட்கும் பொழுது யாருக்கு ஆதரவளிப்பது என்று வாக்களர் குழம்பிப் போவது இயற்கைதான். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பமில்லாமல் சிந்திக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்...

மேலும் »

சமூகம், வீடியோ

கட்டிப்பிடி திருமணம்!

May 11, 2009
-

கோட்டு, சூட்டு அணிந்து கொண்டு கண்டவனையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதுதான் பண்டைய தமிழ்க் கலாசாரமாம். இதனை ஆரியர்கள் வந்து கெடுத்துவிட்டார்களாம்! இந்தக் கட்டிப்பிடி கலாசாரத்தை மீட்டெடுத்து தமிழ்ச் சமுதாய மலுமர்ச்சிக்கு பெருந்தொண்டு புரிகிறார்கள் இந்தக் கிறிஸ்தவ தமிழ்க் கலாசார காப்பாளர்கள். ஆகா, இதுவல்லவா “டைனாமிக் திருமணம்”! http://www.youtube.com/watch?v=umojiUlVAso

மேலும் »

வரலாறு

ஓடிப் போனானா பாரதி? – 08

ஓடிப் போனானா பாரதி? – 08

முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள 'இந்தியா கேஸ்' என்ற தலைப்பிட்ட 'இந்தியா' பத்திரிகையின் தலையங்கத்தின் இரண்டு பகுதிகளும் அப்படித்தான் ஆகியிருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் - தலையங்கத்தின் மூன்றாவது பத்தியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தின் ஒரே ஒரு பகுதியும், கடைசிப் பத்தி முழுமையும் - உருவாக்கும் எண்ணம் என்வென்றால், 'சீனிவாசன் ஒரு தேசபக்த விரோதி. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததன் மூலம் தேச பக்திக்கு விரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டார். நாம் அப்படிச் செய்யக் கூடாது. (அல்லது, 'அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டோம்.')...

மேலும் »

பிறமதங்கள்

கிறிஸ்துவ – திராவிட மாயவலை

கிறிஸ்துவ – திராவிட மாயவலை

சென்னை சங்கமம் ஆரம்பிப்பதற்கு முன்னால், ஜகத் காஸ்பர் இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்....

மேலும் »

வீடியோ

ஹரஹர மஹாதேவ்

May 8, 2009
-

சிவோஹம், சிவோஹம். ருத்ர நாமம் பஜேஹம்! http://www.youtube.com/watch?v=THPsbvcXE30

மேலும் »

கவிதை

கவிதை: காலின் வலிகள்…

கவிதை: காலின் வலிகள்…

பட்டாம் பூச்சியின் சுவாசத்தில் பதறும் புல்நுனி நெஞ்சம் பாகை கட்டிப் பாண்டி விளையாடப் பரவெளி தேடிக் கெஞ்சும்! விட்ட மூலையில் சிலந்தி துறந்த வெற்று வலைகள் மிஞ்சும் வெளிறிப் போன விட்டில் சிறகை வீணே காற்று கொஞ்சும்!

மேலும் »