சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.
1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது. 1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன. ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே!
கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன... உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது.
கலைஞர்களின் ஆதார சக்தி மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்று சொல்லப்படுவதுண்டு. அது அடங்காமல் பீறிடும் போது அது அவர்கள் உடலையே சீரழிக்கும், ஆளுமையை சிதைக்கும் என்பார்கள். எந்த ஒரு சமூகமும்/தனிமனிதனும் வீழ்ச்சி அடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆன்மிக வளம் மட்டுமே அந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியும்...
நம்பிக்கையும் ஆழ்ந்த வேட்கையும் கொண்ட மனிதனாக வண்ணிஹாமி, பிரசன்ன விதனாகே இயக்கிய "Death on a full moon day" திரைப்படத்தில் நம் கண்முன் தோன்றுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் சற்றே அதிகமாக ஓடும் படம். ஆனால் அதன் தாக்கம் அந்த ஒரு மணி நேரத்தையும் தாண்டியதாக இருக்கிறது - எந்த ஒரு சிறந்த திரைப்படத்தைப் போல.