Monthly Archives: June 2009

அரசியல், தொடர், பொது

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)

''தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?'' (நூல்:- தமிழும் தமிழரும்)

மேலும் »

நிகழ்வுகள், பிறமதங்கள்

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

June 17, 2009
-
மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்...

மேலும் »

அரசியல், தொடர், பொது

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழரா? ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா? ”கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர்” (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி) என்றும், ”நான் கர்நாடக பலிஜவார்...

மேலும் »

கலைகள், சமூகம், நிகழ்வுகள், வழிகாட்டிகள்

சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு

சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு

நாதஸ்வர இசையுடன் தான் தென்னிந்தியாவின் எந்தவொரு மங்கலமான மகிழ்ச்சிகரமான விசேஷங்களும் துவங்குகின்றன. தென்னிந்தியக் கோவில்களுடனும், தென்னிந்தியக் கலாச்சாரத்திலும் நாதஸ்வரமும் தவிலும் போல வேறு எந்த இசைக் கருவியும் இரண்டறக் கலந்ததில்லை. ஆண்டவனைத் துயில் எழுப்புவதில் இருந்து இரவு கோவில் நடை சாத்தும் வரை அனைத்து முக்கிய சடங்குகளும் நாதஸ்வர இசை இன்றி அமைவதில்லை.

மேலும் »

புதிய இந்து

புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்

புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்

..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.

மேலும் »

வரலாறு

ஓடிப் போனானா பாரதி? – 10

ஓடிப் போனானா பாரதி? – 10

'இந்தியா' பத்திரிகையின் - சர்ச்சைக்குரியதாக வண்ணம் தீட்டப்படும் - அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்துக்குத் திரும்புவோம். இந்தத் தலையங்கத்தின் சில துண்டுகளை மட்டும் ஆய்ந்த ஆய்வாளர்கள், எழுதியவனின் இதயம் வெளிப்படும் முக்கியமான பகுதிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆய்வுகளில் மேற்கோள் காட்டும்போது ஒரு சில பகுதிகளைத்தான் காட்டமுடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும், தான் காட்டும் மேற்கோளின் தன்மை, அந்தப் பகுதியைத் தனியாகப் படித்தால் உண்டாகக் கூடிய - மையப்புள்ளியின்று விலகக் கூடிய - கருத்து உருவாக்கம் போன்றவற்றை மனத்தில் கொள்ளாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க...

மேலும் »

சினிமா

அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

... இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

மேலும் »

அரசியல், தொடர், பொது

பெரியாரின் மறுபக்கம் – முன்னுரை

பெரியாரின் மறுபக்கம் – முன்னுரை

உங்களிடம் சில வார்த்தைகள்…! இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம்தான் முதலில் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கும் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். நான் முதன்முதலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்: * ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காகப் பாடுபட்டவர் * தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றியவர் * பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் * பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர் இந்த எண்ணத்தின் காரணமாக ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார்...

மேலும் »

பிறமதங்கள், வழிகாட்டிகள்

தாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி

தாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி

... அவர் சீன மற்றும் இந்திய தத்துவங்களை படிக்க ஆரம்பித்தார். இது அவரை இயற்கையில் இருக்கும் இறை குறித்த உணர்வினை அளித்தது. பின்னர் அவர் தன்னை இறையியலாளன் (theologian) என கூறுவதை தவிர்க்க ஆரம்பித்தார். தன்னை பூமியியலாளன் (Geo-logian) எனக் குறிப்பிட ஆரம்பித்தார். பாரத ஞான மரபு கூறும் "மாறும் பிரபஞ்சத்தின் பின்னால் இருக்கும் மாறா உண்மை" - எனும் உண்மையை அவர் தம்முடைய சூழலியல் பார்வையின் அடிப்படையாகக் கொண்டார்... மானுடத்தின் காயங்களை குணப்படுத்தி ஒருங்கிணைக்கும் அந்த சக்தி பாரதப் பண்பாட்டில் உள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அக்கரை விகசிப்பாக தாமஸ்பெரியை நாம்...

மேலும் »

இந்து மத மேன்மை

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை

"என் தினத்தை உன்னதமாக்கியது பகவத் கீதை. நூல்களில் முதல் நூல் அது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மகோன்னதம் நம்மிடம் உரையாடுவது போன்றதோர் மகத்துவம் அது - அதில் அற்பமானதென எதுவுமே இல்லை. ஆனால் மகா விசாலமானதும் அமைதி ததும்புவதும், சீரானதுமானதோர் ஆதி பேரறிவு மற்றோர் யுகத்திலிருந்து நாம் இன்று எதிர் நோக்கும் அதே கேள்விகளை உள்ளார்ந்து அறிந்து பதிலளித்துள்ளதாக அது அமைகிறது." அமெரிக்காவின் மிகச்சிறந்த தத்துவ மேதையான ரால்ப் வால்டோ எமர்ஸன் (1803-1882) பகவத் கீதையை குறித்து எழுதிய வார்த்தைகள் இவை.

மேலும் »