முகப்பு » அரசியல், சமூகம், பயங்கரவாதம், பிறமதங்கள், வரலாறு

நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

அச்சிட அச்சிட

அறிந்த தகவல் 1:

இருசொற்கள் சேரும்போது, வினைச்சொல்லில் அதன் வேர்ச்சொல் மட்டும் இருந்து,
காலத்தைக் காட்டும் பகுதி மறைந்து அதாவது ”தொக்கி” இருந்தால், அது வினைத்தொகை.

உதாரணம்: ஊறிய காய், ஊறும் காய், ஊறப் போகும் காய் என்று காலத்தை மறைத்து எப்போதும் வினை நடக்கும் வாய்ப்புள்ள ஊறுகாய் எனும் வார்த்தை வினைத்தொகை என அறிக.

அடுக்கு மொழித் தகவல்:

தெரிஞ்சுக்கோடா தொக்கின்னா அது கொக்கி
தொக்கித்தாண்டா வரும் தொகை
எனக்கும் தெரியும் அதோட வழிவகை
பரவிட்டுப் போகுதுடா பகை
கிடைக்கிற தொகைய வச்சு நாம விடுவோமுடா புகை

வள்ளுவர் சொல்லாத தகவல்:

உறுமீன் வரும்வரை
கொக்கிதேடி நிற்குமாம் அந்தக் கொக்கு
ஊறுகாய நக்குமாம் அதோட நாக்கு

அறிந்த தகவல் பற்றிய அறியாத தகவல்:

ஒரு வாக்கியத்தில் பல வார்த்தைகள் உண்டு. அவற்றில் வினைத்தொகையும் ஒன்றாக இருக்கலாம். வினைத்தொகை வார்த்தை ஒன்றில் காலம் மட்டும் அல்ல, வினை பற்றிய விவரமும் மறைந்தே இருக்கிறது. அந்த வாக்கியத்தில் உள்ள மற்ற வார்த்தைகள் தரும் தகவல்களைக் கொண்டு எப்போதும் நடக்கும் சாத்தியமுள்ள வினை பற்றிய விவரத்தை அறிய விரும்புபவர்கள் அறிந்து கொள்வர். எனவே, ஊறுகாய் என்ற வார்த்தை வெறும் ஊறுகாய் விவகாரம் இல்லை என நீவிர் அறியக் கடவீர்.

சினிமா தகவல் 1:

ஒரு தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவி பைக் மெக்கானிக்கைக் காதலிக்கிறாள். அவனை சந்திக்க தன்னுடைய ஸ்கூட்டியை வேண்டுமென்றே ரிப்பேர் செய்துகொள்கிறாள். அப்போது பக்கத்தில் இருக்கும் அவள் தோழி சொல்லும் வசனம்:

“உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா”

சினிமா தகவல் 2:

அந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்தபின் புனிதமான பெயரைக் கொண்ட எங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரை இந்தப் படம் கெடுத்துவிட்டது என்று பிரச்சினை செய்ததால் படம் மீண்டும் ஸென்ஸார் செய்யப்பட்டது.

சினிமா தகவல் 3:

இந்துத் தெய்வங்களைக் கேலி செய்தும், கிராமத்து உயர்நாகரீகத்தை மட்டம்தட்டியும், இந்துக்களின் பழக்கவழக்கங்களை இகழ்ந்தும் வருவதால் ஒரு நடிகருக்கு (?) பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

தெரிந்த, புரியும் தகவல் 1:

வினை [ viṉai ] , s. act, action, deed, work, தொழில்; 2. thought, temper (good or bad) கருத்து; 3. malignity, evil, misfortune, malice, தீவினை; 4. a verb, வினைச்சொல்; 5. war, போர்.

தெரிந்த, புரியும் தகவல் 2:

sec⋅u⋅lar⋅ism/ˈsɛkyələˌrɪzəm/ [sek-yuh-luh-riz-uhm] – noun

1. secular spirit or tendency, esp. a system of political or social philosophy that rejects all forms of religious faith and worship.
2. the view that public education and other matters of civil policy should be conducted without the introduction of a religious element.

Origin:
1850–55; secular + -ism
——
sec•u•lar•ism n. [sěk'yə-lə-rĭz'əm]

Religious skepticism or indifference.
The view that religious considerations should be excluded from civil affairs or public education.
——
Sec”u*lar*ism, n.

1. The state or quality of being secular; a secular spirit; secularity.
2. The tenets or principles of the secularists.
——-
secularism – noun

a doctrine that rejects religion and religious considerations

தெரிந்த புரியும் தகவல் 3:

Secular noun மதச்சார்பற்ற, சமயச் சார்பற்ற, உலகியல் சார்ந்த

தெரிந்தும் புரியாத தகவல்கள்:

1. கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி

2. செக்யூலரிசத்திற்காக என்று சொல்லிக்கொண்டு ஏற்படும் கூட்டணிகளில் எப்போதும் இடம் பெறும் கட்சி ஒன்றின் பெயர் “முஸ்லீம் லீக்”.

3. சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

4. இந்தியாவில் மிக மிக மிக மிக மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ஸிகளும், யூதர்களும் சிறுபான்மை அந்தஸ்து கோராவிட்டாலும் உயர்ந்த நிலைகளில் இருக்கின்றனர்.

5. இந்துக்களின் அன்பிற்கு மட்டுமல்ல மரியாதைக்கும் உரியவர்களான பார்ஸிகளும், யூதர்களும் “ஐயோ கொல்றாங்களே” வசனம் பேசாமல், “இந்துக்கள் எங்கள்மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்று சொல்லுகிறார்கள். தங்களின் உழைப்பால் உயருகிறார்கள். அடுத்தவர் வரிப்பணத்திற்கு ஆசைப்படுவதில்லை.

6. இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.

சமீபத்திய நற்செய்தி:

karuna_awardகத்தோலிக்க பிஷப் அமைப்பு தரும் “வாழ்நாள் சாதனை” விருது பெறும் கருணாநிதி

2009 தேர்தலுக்கு முன், இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:

பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் அறிந்ததும், அதிகம் தெரியாததும்:

பல இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள், ஆஸிட் வீச்சுக்கள், கொலைகள், கொள்ளைகள் இவற்றின் மூலமாகவும் “அமைதி மார்க்கம்” இந்தியர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. அமைதி மார்க்கத்தின் தீவிரவாதத்தால் அழிந்துபோன வங்கதேச மக்களைப் பற்றி, காஷ்மீரத்து மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், ”அன்பு மார்க்கம்”?

”அன்பே சிவம்” உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் கிருத்துவ கன்னியாஸ்த்ரீகள் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை உருக்கிக் கொள்வதாகக் காட்டப்படுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கிருத்துவர்கள் கிருத்துவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும் என்று ஒரு கிருத்துவக் கட்சி வேண்டுகோள் விடுப்பது முதலில் விசித்திரமாகவும், பின்னர் ஏளனமாகவும் தோன்றலாம். ஒரு சில கிருத்துவர்களின் தனிப்பட்ட வேலையாகத் தெரியலாம். தீர்மானத்தை நிறைவேற்றிய கூட்டம் கீழ்ப்பாக்கத்தில் நடந்திருப்பது ஞாபகம் வரலாம். கிருத்துவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது என்றும் நாம் நினைக்கலாம். சோனியா காந்தியின் தலைமையில் கிருத்துவர்களை எம்.பிக்களாக்க வேண்டும் என்று இந்தியாவெங்கும் வைக்கப்பட்ட ப்ரம்மாண்டமான கட்-அவுட்கள் புறக்கணிக்கத் தக்கவையாகத் தெரியலாம்.

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மதத்தின் ஆக்கிரமிப்பு முகம் நமக்குத் தெரியாது என்பதே.

அறிந்த தகவல் 2:

பத்திரிக்கைகள் என்பவை லாபத்திற்காக நடத்தப்படும் கார்ப்பரேட்டு கம்பெனிகள். மண்கலங்கள் உடைந்து போவது போன்ற உப்புச் சப்பில்லாத செய்திகளை அவை வெளியிடுவதில்லை.

அறிந்த தகவல் 3:

தென்னிந்தியாவில் பா.ஜ.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த மாநிலம் கர்நாடகம். அக்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிக்கைகள் வெங்கலப் பானைகள் உடைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

சினிமா தகவல் 4:

“நொங்ங்” என்று கொட்டினார் ப்ரூஸ் லீ.

ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

”It’s like a finger pointing away to the moon. Don’t concentrate on the finger, or you will miss all the heavenly glory”

பல அப்பாவிகளின் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கும் வில்லன் கூட்டத்தின்மீது வன்முறையை கட்டவிழ்க்கப் புறப்பட்டார் ப்ரூஸ் லீ.

அறிந்த தகவல் 4:

என்டர் தி எட்டியூரப்பா.

பா.ஜ.க ஆட்சியின்போது கர்நாடகாவில் சர்ச்சுகள்மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன. vandalised, vandalism போன்ற வார்த்தைகள் பக்கங்களை நிறைத்தன. சர்ச்சுகள்மீது கல்லெறியப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனராம். பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்களில் சேதாரங்களைக் காட்டும் பாதிரியாரும், பாதிரியாரின் விரலும், விரலை வேடிக்கை பார்க்கும் பேஜ்3 பிரபலங்களும் தெரிந்தனர். சேதாரங்கள் தெரியவில்லை.

ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

அறிந்த தகவல் 5:

இருசொற்கள் சேரும்போது, இடையே வேற்றுமை உருபு மறைந்து இருந்தால், அது வேற்றுமைத்தொகை.

உதாரணம்: கல்லெறி = கல்லை + எறி. இதில் ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது.

தர்க்கமாகிப் போன தகவல்:

காவிரியில் தண்ணீர் வருகிறது. ஒக்கேனக்கலிலும் தண்ணீர் வருகிறது. அதனால் ஒக்கேனக்கல் கர்நாடகத்திற்கே சொந்தம்.

அறியாத தகவல் 1:

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மத ஆக்கிரமிப்பின் கொடூரம் நமக்குத் தெரியாது.

அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம் யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுவும் நமக்குத் தெரியாது.

நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில் நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.

இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.

திரிபுராவில் இந்துக் கோயில்கள் அனைத்தும் மூடியே இருக்கின்றன. இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களையும், கோயில் பூசாரிகளையும் திரிபுரா தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள். அந்தத் தீவிரவாதிகளை வெளிப்படையாகவே சர்ச்சுகள் ஆதரிக்கின்றன.

நேபாளத்தில் இருந்து ஆந்திராவரை பரவியுள்ள நக்ஸலைட்டு அமைப்புகள் சீன அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துவ சர்ச்சினால் நடத்தப்படுபவை என்பதும் நமக்குத் தெரியாது.

நாகலாந்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களை அந்த மாநிலத்தை எப்போதும் ஆண்டுகொண்டிருக்கும் மந்திரிகள்தான் நடத்திவருகிறார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. இந்தக் குழுக்களில் மிகக் கொடிய தீவிரவாதக் குழுவின் சின்னம் சிலுவை. அவர்களின் கோஷம் “நாகலாந்தை கிருத்துவத்திற்கு மீட்போம்” என்பதை ஒத்தது.

ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.

இதுபோன்ற சூனியக்காரி வேட்டையை ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்து மகிழும் நமக்கு இதன் தீவிரம் தெரிவதில்லை. இந்துக்கள் அனைவரையும் சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.

இந்துத் தெய்வ வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று கிருத்துவமும் இஸ்லாமும் போதிக்கின்றன. எனவே, கிருத்துவர்கள் தமிழ் இந்துக்களையும் சைத்தானை வழிபடுபவர்களாகத்தான் கருதுகிறார்கள். இவர்களின் கைப்பாவையாக இருக்கிற திராவிட கட்சிகளின் தலைவர்கள் மஞ்சள் துண்டு அணிவது, கோயிலுக்குப் போவது என்று சாத்தானின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டு இருப்பதால் இப்போது இவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்துவதோடு, தங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை ஆட்சிபீடத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளார்கள்.

பைபிள் தகவல்கள்:

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

வெளி 20:7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,…

தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்.

அறிந்த தகவல் 3:

வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள் புணர்வதாம்.

உதாரணம்: சாத்தன்கை = சாத்தான்+அது+கை = சாத்தனதுகை

கவனிக்கப்படாத தகவல்:

ஒரிஸ்ஸா காடுகளில் பரிதாபகரமாக எரித்துக்கொல்லப்பட்ட ஒரு கிருத்துவ போதகரின் மனைவிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வாங்கிய பின்னர் எனது கணவரது பணியைத் தொடர்ந்து செய்வேன் என்று சொல்லிவிட்டு அம்மையார் ஆஸ்திரேலியா போய்விட்டார்.

தகவல் இல்லாத தகவல்:

இந்தியாவில் கிருத்துவப் போதகராக இருந்த ஒருவரின்மேல் ஆஸ்திரேலியாவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்லப்படும் செய்திகளை யாரும் மறுக்கவோ, ஆதரிக்கவோ, நிறுவவோ இல்லை.

கிசுகிசு தகவல்:

இந்துப் பெயரை வைத்துக்கொண்டு, ஆனால், இந்துக்களையும், இந்துத் தெய்வங்களையும், இந்திய கிராமத்துப் பழக்கங்களையும் ஏளனம் செய்து பிழைப்பவரின் தாயார் தன் இளவயதில் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்.

மற்றொரு சினிமாக்காரர் பற்றிய தகவல்:

இலங்கைத் தமிழர்களுக்காக சிறைக்குப் போவதாகக் காட்டிக்கொள்ளும் சீமானின் உண்மையான பெயர் சைமன் என்று சொல்லப்படுவதை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். ஆனால், அவர் எப்போதும் சட்டையில் காட்டும் சே குவாராவின் தேசத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மதம் கிருத்துவம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சர்ச்சுகள் நிறைந்த க்யூபாவில் ஒரு மசூதிகூட கிடையாது. அரசாங்க நிலைப்பாடு நாத்திகம் என்று காட்டிக்கொண்டாலும், சர்ச்சுகள் மிகச் செழிப்பாக மந்தைகளை மேய்க்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோவால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதிலிருந்து தப்ப யூதர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஆனால், அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார் போப்பாண்டவர்.

பழையவர் பற்றிய தகவல் 4:

விமானத்தில் இறங்கிய உடன் அந்த நாட்டு மண்ணை குனிந்து முத்தமிடுவது அவரின் கட்டுப்படுத்த முடியாத பழக்கம். க்யூபாவிற்குச் சென்றபோது அவருக்கு வயதாகிவிட்டது. குனிந்து முத்தமிட முடியாது என்பதால் க்யூபா நாட்டு மண்ணை ஒரு சட்டியில் போட்டு அவர் முத்தமிட ஏதுவாக உயர்த்தினார்கள். க்யூபா நாட்டு மண் கிருத்துவத்தின் வாய்க்குப் போனது.

தென்கொரியாவில் “வளர்ச்சி” பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)தென்கொரியாவில் வளர்ச்சி பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)

அனைவரும் மறந்துபோன தகவல்:

இந்தியா வந்திருந்த போப்பாண்டவர் இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் மற்ற இந்தியர்களை கிருத்துவ மதத்திற்கு அறுவடை செய்யச் சொன்னார்.

புதியவர் பற்றிய சமீபத்திய தகவல் 1:

கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப்.

On Africa trip, pope says condoms won’t solve AIDS.

YAOUNDE, Cameroon – போப் பெனடிக்ட் XVI சொன்னார் இவ்வாறு: எய்ட்ஸ் என்கிற ஆட்கொல்லி நோய்க்கு காண்டம்களால் பதில் சொல்ல முடியாது. உலகம் முழுவதும் 2007ம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு எய்ட்ஸ் வந்து இறந்த ஆப்பிரிக்கர்களால் ஏற்பட்டது. ஏறத்தாழ 22 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”எய்ட்ஸ் வியாதியை காண்டம்கள் வழங்குவதன் மூலம் தடுத்துவிட முடியாது”

The pope told reporters aboard the Al italia plane heading to Yaounde. ”அதற்கு மாறாக, காண்டம்கள் இந்த பிரச்சினையை அதிகரிக்கின்றன.”

Treatment Action Campaign in South Africaஐச் சேர்ந்த Rebecca Hodes இது குறித்துப் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: எய்ட்ஸ் வியாதியை தவிர்க்க உதவும் காண்டம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாமல், “அதற்கு மாறாக, காண்டம்களுக்கு எதிராக அவர் பேசி வருவது ஆப்பிரிக்கர்களின் உயிரைவிட அவருடைய மதக் கொள்கை அவருக்கு அதிக முக்கியம் என்பதையே காட்டுகிறது.”

”காண்டம்களை உபயோகப்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸை முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்பது உண்மையாக இருப்பினும், தற்போது எய்ட்ஸ் என்கிற இந்தக் கொடூரமான ஆட்கொல்லி வியாதியைத் தவிர்க்க வேறு எந்த வழிகளாலும் முடியவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை” என்று Rebecca Hodes சொன்னார்.

1982ல் இருந்து காமரூனை சர்வதிகாரியாக ஆண்டு வரும் ஜனாதிபதி Paul Biya போப்பாண்டவரை அரசு மரியாதைகளோடு வரவேற்றார். இவர் தனக்கு மாறான கருத்துச் சொல்பவர்களை அழித்துவிடுகிறார் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக் குறை சொல்லியுள்ளது. காமரூனில் நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து போப் நேரடியாக எதுவும் இதுவரை பேசவில்லை. ஆனால்,”நற்கதி அளிக்கும் நமது புனித நூலின் நற்செய்தியானது மிக உரக்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்கப்படுமானால் கிருஸ்துவின் ஒளியானது இருண்டுகிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்டும்” Benedict said as the president and other political leaders looked on.

இந்த நற்செய்தி உலகெங்கும் விமர்சனங்களை உருவாக்கிய வேளையில், ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் நற்செய்தி பரப்ப தனது ஒருவார பயணத்தைத் தொடர்ந்தார் போப்.

மருத்துவ வரலாற்றுத் தகவல்:

அம்மை, காலரா, மலேரியா, ப்ளேக் முதலான ஆட்கொல்லி வியாதிகள் காலனி ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலகட்டங்களில் ஏற்படவில்லை. காலனி ஆதிக்கத்திற்குப் பின்பே அடிமையாக்கப் பட்ட மக்களுக்கு இவை பரவின.

Aztec smallpox victimsAztec smallpox victims

தென்னமெரிக்க இன்கா இன மக்கள் அனைவரும் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த ஸ்பானிஷ்களிடம் இருந்து பரவிய இந்த வியாதிகளால் முற்றிலுமாக அழிந்தனர். சிகப்பு இந்திய பழங்குடிகளுக்கு சேவை செய்த கிருத்துவப் பாதிரிகள் அவர்களுக்குப் போர்வைகளைப் பரிசாக வழங்கினர். திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது.

“15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் நன்னம்பிக்கை முனையில் இருந்து மலபார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். உருவ வழிபாட்டு நம்பிக்கையாளர்களான பழங்குடியினரிடையே கிருத்துவத்தின் ஆசிகளை வழங்குவதே அவர்களுடைய மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்தப் புனிதமான நன்மைதரக்கூடிய மத சேவையை செய்ய ஒரு பாப்பல் புல் (போப்பாண்டவரின் புனிதக் கட்டளை) வழங்கப்பட்டிருந்தது. இந்த யூரோப்பிய ஊடுருவலின் முதல் விளைவாக ரத்தத்தைச் சிதறவைத்த போர்களும், வெறுத்து ஒதுக்கவேண்டிய வியாதிகளும் ஆசிய கண்டத்திற்கு ஏற்பட்டன. இவை மிக விரைவாகப் பரவி சொல்லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்தின. இந்த வியாதிகள் பரவியபோது சின்ன அம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வியாதிகள் முதன் முதலில் அறிமுகமானபோது சீன மற்றும் இந்துக் கோயில்களில் இந்த வியாதிகளைத் தவிர்க்கத் தேவையான தெய்வீக உருவங்கள் ஏற்படவில்லை.” – பக்கம் 34. The History of the Small Pox By James Carrick Moore.

அறிந்த தகவல் 5:

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருத்துவப் பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதாகத் தொலைக்காட்சிகளில் காட்டினர். அறுவடை செய்யப்பட்ட ஆடுகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

அறிந்த தகவல் 6:

அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். அது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப் பதினான்கு வகைப்படும்.

உதாரணம் 1: தலைவணங்கு = தலை+யால்+வணங்கு.

இங்கு `ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு மறைந்து வருவதால், இத்தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

உதாரணம் 2: பெட்டிப் பணம்.

இங்கு `இல்’ என்னும் ஏழாம் வேற்றுமை உறுபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

அறியாத தகவல் 2:

சுனாமி பாதிப்பின்போது வீடு வாசலை இழந்தாலும் மந்தைக்குள் மாட்டிக்கொண்டதால் கிடைத்த வீடுகள் மிக மோசமான தரமற்றவையாக இருப்பதாகவும், அந்த வீடுகளை “சில அமைப்புக்கள்” சுனாமி பாதிப்பின்போது கட்டிக்கொடுத்தன என்றும் தொலைக்காட்சி சேனல்கள் சில சமீபத்திய செய்திகளின் ஊடே தெரிவித்தன.

அறியாத தகவல் 3:

கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின் மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.

அறியாத தகவல் 4:

காஷ்மீரத்தில் இருந்த பண்டிட்டுகளின் அழிவை வெறும் பத்திரிக்கைச் செய்திகளாக ”ஓரளவு” மட்டும் அறிந்த நமக்கு நாகலாந்தில் வாழும் ரியாங்குகள் அகதிகளாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது. கிருத்துவ மதத்திற்கு மாற மறுப்பதால் லட்சக்கணக்கான ரியாங்குகள் வருடம் தோறும் அங்கே கொல்லப்படுகிறார்கள். இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இது தகவலாகக்கூட உங்களுக்குத் தெரியாது.

சோமாலிய வறுமையைப் போலக் காஷ்மீரத்து இன அழிப்பு நமக்கு வெறும் தகவல் மாத்திரமே. இலங்கையில் அழியும் நம் சொந்த ரத்தமான தமிழர்களின் அழிவு நமக்கு மரத்துவிட்டது. ரியாங்குகளின் அழிவு பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. காஷ்மீரப் பண்டிதர்களின் அழிவு நமக்கு எந்தக் கவலையையும் ஏற்படுத்திவிடவில்லை.

அறியாத தகவல் 5:

தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில் உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.

உணராத தகவல் 9000:

இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வராமல் உவமை உருபு, பண்பு உருபு முதலியன மறைந்துவரச் சொற்கள் புணர்தல் (வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணர்தல்) அவ்வழித் தொகை நிலைத்தொடர் எனப் பெயர் பெறும்.

உதாரணம்: கொள் சுரணை

எதிர்கால தகவல் 12:

வெளிப்படுத்தின விசேஷம் 0:0: நாளை தமிழகத்தில் நமது பிள்ளைகள் அகதிகளாகத் திரிவார்கள். அப்போது அவர்களின் உடம்பு துப்பாக்கிக்கு இரையாகும்போதும், நமது மகள்கள் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்படும்போதும், குண்டை வெடிக்கச் செய்தும், குண்டால் வெடிபட்டும், நடுத்தெருவில் அவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதறி சாகும்போதும், நாசமாப் போகும்போதும், ………………

இந்த உலகம் இப்போது போலவே அப்போதும் இப்படி நிம்மதியாகவே சுற்றிக்கொண்டிருக்கும். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

77 மறுமொழிகள் நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

  1. haranprasanna on July 5, 2009 at 5:06 pm

    ஸ் அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே…

    பனித்துளி என்னும் மென்மையான பெயருக்குள் இத்தனை அட்டகாசமா? என்னமோ போங்க.

  2. ganapathy on July 5, 2009 at 10:27 pm

    gurubhyo namaha

    though i am aware of most of these given here reading this makes me feel depressed. pl write about
    what an induvidual do about this. hichlight the points which has kept our dharma sustained all these
    millinea . WE HAVE TO EDUCATE OUR CHILDREN So EDUCATE OURSELVES FIRDT ABOUT OUR VALUES.THIS IS SLOW BUT SURE WAY>NEVERTHELESS TIME CONSUMING.
    PROPABLY WE ARE RACING AGAINST TIME>
    SAMBHAVAMI YUGE YUGE

  3. viswamitra on July 6, 2009 at 1:06 am

    Dear Paniththuzhi

    Are you really a drop of a snow or a outburst of a furious valcano? Your name and contents imply an oxymoron. All are hot bombshells. Let these grammatical bombardments wake up our sleeping laodiceans. Great work keep it up

    Thanks
    Viswa

  4. ஜடாயு on July 6, 2009 at 7:58 am

    // கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப். //

    பனித்துளி, எப்படி சார் இப்படி எல்லாம் உங்களுக்கு எழுத வருகிறது! சல்மன் ருஷ்டி மொழியாக்கத்தில் ஒருவித அல்ங்கார நடை என்றால் இதில் நறுக்குத் தெறிக்கும் நடை.

    மத அரசியல், மதமாற்றம் பற்றி இப்படி ”இலக்கணத் தரமான” அங்கத இலக்கியம் எல்லாம் கூட எழுத முடியுமா? அசத்துகிறீர்கள். படிப்பவர்கள் மண்டை காயப் போவது உறுதி (நோக்கமே அது தானோ?)

    தகவல்களைப் பொறுத்த வரையில், விஸ்வாமித்ரா சொல்வது பொல எரிமலை தான் !

  5. aravindan neelakandan on July 6, 2009 at 8:36 am

    கலக்கிட்டீங்க ஐயா…நாங்கதான் கலங்கி போய் நிக்கிறோம்…வெளிப்படுத்தின விசேஷ நாளைக்குள்ள தன் மதம் மட்டுமே வாழணும் தன் தேவனே உண்மை தேவன் அப்படீன்னு பிரச்சாரம் பண்ணுறவங்க மண்ணா போன உண்மையிலேயே விசேஷம்.

  6. ஜயராமன் on July 6, 2009 at 3:34 pm

    பையன் ஒரு பூனையைப் பிடித்து அதற்கு பைபிள் வாசித்துக்கொண்டிருந்தான். பார்த்த அம்மாவுக்கு சந்தோஷம். பத்து நிமிடம் கழித்து பூனை அலறியது. பூனைக்குட்டியை தண்ணீர்தொட்டியில் முக்கி முக்கி மூச்சு திணறியது பூனை. “பூனைக்கு ஞானஸ்னானம் செய்விக்கிறேன்” என்றான் மகன். “இல்லை, பூனைகளுக்கு தண்ணீர் பிடிக்காது!” என்றாள் அம்மா. “பின் எதற்காக என் சர்ச்சில் சேர்ந்தது!!” என்றான் பையன்.

    பிடிபட்ட பூனைகளாக நாம். பாரத தேசம்!!

    பனித்துளி கொடுத்த தகவல்கள் நம் தூக்கத்தை கலைக்குமா!!!

    பனித்துளிக்கு போனஸ் தகவல்… 1

    போன வாரம் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். பேரன்கள் மும்பையில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தயானந்த ஆங்கிலோ வேதிக் ஸ்கூல் (தயானந்தர் ஆங்கில வேதவழிப் பள்ளி) என்று முழுப்பெயர் போடக் கூடாது என்று சொல்கிறார்கள். வெறும் டி.ஏ.வீ என்றே சொல்ல வேண்டுமாம். மும்பையில் இருக்கும் ஐந்து டி.ஏ.வீ பள்ளிகளில் மூன்றில் கிருத்துவ பாதிரி பிரின்ஸ்பால் ஆகிவிட்டார்களாம். (நெருல், ஐரோலி இன்னும் ஒன்று). மீதியையும் மாற்ற முயற்சிகள் நடக்கிறதாம். பள்ளி பிரார்த்தனையிலிருந்து காயத்ரி மந்திரமும் சரஸ்வதி பாடலும் அகற்றப்பட்டுவிட்டதாம். அதற்குப் பதிலாக ஒரு மொக்ககையாக “ஹே பகவான்!” என்று ஒரு “செக்குலர்” இந்தி பாட்டு ஓடுகிறதாம்.

    பனித்துளிக்கு போனஸ் போனஸ் தகவல் – 1

    முடவனை நடக்க வைக்கும் சுவிசேஷ பிராத்தனை மேஜிக் கூட்டங்கள் இந்திய “மாஜிக் ரெமெடீஸ்” சட்டத்தின்படி தண்டனைக்குரியவை. இதில் கலந்து கொண்ட அத்தனை அரசியல்வாதிகளும் – நம்மூர் தீராவிடங்களிலிருந்து மனவாடு ரெட்டிகாரு வரை – தண்டனைக்கு உரியவர்களே.

  7. S Baskar on July 6, 2009 at 4:08 pm

    Dear Pani,

    Article is excellent. I was shoked when I saw Joshuaproject.net. We can keep talking but majority of Hindus are not aware of any of these and they are gullible.

    Artcile also helped me to revisit Tamil grammar ; Thanks for that.

    Regards

  8. ஓகை நடராஜன் on July 6, 2009 at 10:41 pm

    அட்டகாசம்! பனித்துளியின் பணி தொடரட்டும்!!

  9. கலவரக்காரன் on July 7, 2009 at 2:56 am

    இதில் ”உருபு” என்றும் “சொற்கள்” என்றும் முடியும் வார்த்தைகளை எவாஞ்சலிக்கர்கள் மற்றும் எவாஞ்சலிக்கர்களின் கையாட்கள் என்று இடத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டால் தமிழ் இலக்கணத்திற்குப் பதிலாக தரம்கெட்டவரின் இலக்கணம் தெரிகிறது.

  10. Tirunavukarasan on July 11, 2009 at 8:25 am

    Reading this article is a mind shattering intrigue !! Fascinating, attractive, and factitively addictive !!

    This non-linear writing is similar to genre followed by Ramesh-Prem, but very different to S. Ramakrishnan.

    It may be the first time in tamil that non-linear can be written without worrying about certain body parts and their functions, especially of the female species of homo erectus. ;) !

    One thing is sure. I am gonna visit the site every day from now !

  11. Geetha Sambasivam on July 11, 2009 at 2:39 pm

    //தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில் உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.//

    வயித்தை எரிகிறது நம்ம கையாலாகாத் தனத்தை நினைச்சு. இந்த நாட்டைக் கடவுள் தான் காப்பாத்தணும்! :(

  12. Rajanganesh on July 28, 2009 at 2:28 pm

    Dear Sir,.
    An excellent article. Just wanted to add a point on the Church not helping Harvested Souls.

    Last july my friend in coimbatore was came in touch with a Watchman in a Church through his friend in Sewa Bharathi. The gentleman was old person with 3 daughters. the first daughter had completed D.ED in a college in Tirupur, but was unable to get the certificates as she had not paid her hostel dues. This gentleman had approached the Father in the Church for help. the father right away rejected his request and said, ‘Viraluku Etha Veekam Venum’, you should not have sent her for studies if you are unable to pay her fees,

    When he narrated this to my friend, my friend contacted me and we had collected the required amount through our friends circle.

    i am just mentionuing this incident to reiterate the authors point.

    One thought: why cant we try to have trust to help the poor hindus and also propogate/educate our people on our sanathana Dharma. can we try to work with Missionary Zeal on this.

  13. baskar on August 24, 2009 at 10:22 pm

    அபாரம் பனித்துளி,
    இன்னமும் இங்கிலீஷ் பேசும் நபர்கள்தான் மேன்மக்கள், கான்வேண்டுதான் உண்மையான பள்ளிக்கூடம் என நம்பும் மக்களை இப்படி உண்மை நிலையை எடுத்துக்கூறி திருத்துங்கள்.

    இந்த உலகத்தில் கஷ்டப்பட்டு வாழும் மனிதர்களை ‘துன்பங்களில் இருந்து விடுதலை ‘ தந்து மேலே அனுப்பி வைத்த அன்பு மதம், அதை ஏன் தவறாக எண்ணுகிறீர்கள். விடுதலை தந்தார்களா இல்லையா? கொடுமை.

    அதெல்லாம் நமது மக்களுக்கு கவலை இல்லை, ஏனெனில் உப்புமாவிற்கு ரவை வாங்கினாலும் அது அமெரிக்கா தரத்தோடு இருக்கவேண்டும், அதைப்போலத்தான் எல்லாமும்.

    அரசாங்கமே ஆதரவு கொடுக்கிறது அவர்களுக்கு, என்ன செய்வது.

    நல்லபள்ளிகள் அரசு நடத்துவதாக இருந்தால் அதில் தரம் இருக்கும்.
    ஆனால் வடை தின்ன வரும் ஆசிரியர்கள் இருக்கும் வரை நம் நாடு இப்படித்தான் இருக்கும்.

    ஆரம்பக்கல்வியே கான்வெண்டில்தான் என மக்கள் நினைக்கும் அளவிற்கு நம் மக்கள் உள்ளனர், இதற்க்கு யார் காரணம்?

    ஆனால் அதில் இருந்தே மக்கள் விலை போகிறார்கள் என்பது அவர்களே அறியாத விஷயம்.

    சரி இது இப்படி இருக்க நமது நாட்டில் இந்து சமயம் சார்ந்த அறநிலையத்துறைக்கு உயர் அதிகாரியாக ஒரு கிருத்துவரை நியமித்து உள்ளார்களே அதை விட ஒரு நிலை நமக்கு வேண்டுமா. அவருக்கு நமது பாரம்பரியம் இந்து கலாசாரம் பற்றி என்ன தெரியும்.,

    நமது மக்கள் விழித்து எழும் நிலை எப்போது நிகழும்.

    கண்டிப்பாக அந்நிய மோகம் என்பது நமது மக்களை ஆட்டிவைக்கும் வரை இந்நிலை தொடரத்தான் செய்யும்.

  14. B.பாஸ்கர். on September 11, 2009 at 9:07 pm

    வணக்கம்,
    //அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம் யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுவும் நமக்குத் தெரியாது//

    வெறும் மத மாற்றம் என்ற பெயரில் இந்தியா விலை போய்க்கொண்டு இருக்கிறது. இதிலே மதம் மாறுவது குற்றமா என்ற சர்ச்சைகள் வேறு. எப்படியும் ஒருகாலத்தில் அவர்கள் ப்ரும்பான்மை ஆனவுடன் பாத்ரிகள் என்ற போர்வையில் வந்து நம்மை அடிமைப்படுத்த போகிறார்கள். என்னதான் கிறிஸ்துவராக இருப்பினும் நீ இந்தியன் தானே என்று இனவெறியால் மிதிக்கத்தான் போகிறார்கள்.

    நானும் கிருஸ்துவந்தான் என்று கண்ணீர் விட்டு கதறினாலும் எந்த ஏசுவும் வந்து மீட்கப்போவது இல்லை.

    அப்போதும் இரண்டு கைகளையும் விரித்தபடி ” என் கையில் என்ன இருக்கிறது ” என்ற பாணியில் நிற்ப்பார்.

  15. glady on September 12, 2009 at 12:49 am

    நண்பர்களே,
    தென்னிந்திய திருச்சபையாக இருக்கட்டும்; அல்லது
    அமெரிக்கன் அட்வென்ட் திருச்சபையாக இருக்கட்டும்;
    மற்ற எந்த திருச்சபை அமைப்பாக இருப்பினும் அவை முழுக்க முழுக்க இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டு இந்தியர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது;

    அதனால் தான் அந்த நிர்வாகத்தினருக்குள் கருத்துவேறுபாடுகள் வரும்போது இந்திய நீதிமன்றங்களை அணுகுகிறார்கள்; அவையெல்லாம் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்பினாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை;அது கத்தோலிக்க அமைப்பாக இருந்தாலும் சரி,கொள்கைரீதியிலான கட்டுப்பாடுகளைத் தவிர சொத்துநிர்வாகம் போன்றவை இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது;

    ஆனால் இவையெல்லாம் ஒரு காலத்தில் வெளிநாட்டு மிஷினரிகள் (தன்னார்வ இறைத் தொண்டர்களே தவிர அயல்நாட்டு அரசாங்கப் பிரநிதிகளல்ல) வசமிருந்தவை;

    “வெள்ளையனே வெளியேறு” எனப் போராடி வெளியேற்றினோம்;
    அது அரசியல் போராட்டம்.

    இவர்களோ தாங்களே இந்தியர்களிடம் அந்த நிர்வாகத்தினை ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்;

    இன்னும் பலர் தங்கள் சொந்த நாட்டுக்கும் செல்லாமல் தங்கள் வாரிசுகளையும் இங்கே அமர்த்தாமல் இங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டனர்; அவர்களில் பலருடைய கல்லறையும் இங்கே உண்டு.

    ஆனால் “பொருளாதார சீர்திருத்தம்” என்ற பெயரில் வெளிநாட்டு கம்பெனிகளுக்குக் கடைவிரித்த பாவத்தை ஒரு பாவமும் அறியாத இந்தியாவின் 6 இலட்சம் கிராமங்கள் சுமந்துகொண்டு இருக்கிறது.

    “டாஸ்மார்க்” கடைகளில் வெளிநாட்டு பிராண்டுகளில் இந்திய ஆலைகளில் மதுவை தயாரிக்கும் அரசு அந்த வெளிநாட்டு பிராண்டை பயன்படுத்தும் ஒரே காரணத்துக்காக பலகோடிகளை வெளிநாட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது;

    “ஹியுண்டாய்” “கோக்” “சாம்சங்” போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவை சுரண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது;
    அங்கெல்லாம் சென்று “காயத்ரி மந்திரம்” ஓத முடியாது..!

    ஆக மொத்தத்தில் இந்தியனுக்கு எதையாவது ஒன்றைத் தன் தோளில் சுமந்தாக வேண்டும்; என்ன செய்ய, வாஸ்துபடி இந்தியா அமைந்திருக்கும் இடமும் திசையும் சரியில்லை போலும்..!

  16. உமாசங்கர் on September 17, 2009 at 9:11 pm

    பனித்துளி நத்தையின் வயிற்றில் விழுந்து விளைந்த முத்து, இந்தக் கட்டுரை.

    வெகு சிறப்பு

  17. AGNIPUTHIRAN on October 7, 2009 at 8:00 pm

    கம்பனிகளின் வழியாக போகும் பணம் அதேபோல திரும்பி வரும். சற்று நினைத்துப்பாருங்கள் கன்னியாகுமரி மாவட்டம், கேரளா மாநிலம் இங்கெல்லாம் மலைப்பகுதியானாலும் சரி சமவெளிகளானாலும் சரி இன்றைய நிலையில் பாதிக்குப்பாதி நிலங்கள் பல்வேரு கிறித்துவ மிசினரிகளுக்குதான் சொந்தம். இந்நிலையில் திடீரென்று ரோமிலிருந்தோ இத்தாலி, இங்கிலாந்து வத்திக்கநிலிருந்தோ உலக கிரித்துவர்களே எல்லோரும் ஒன்றாகுவோம் நமது சொத்துக்களை எல்லாம் ஏசுவுக்கு சொந்தமாக்குவோம் என்றும் கடைசிநியாயதீர்ப்பு நாள் வருகிறது எல்லோரும் தேவ ஆட்டுக்குட்டியைக்கான ஆயத்தமாகுங்கள் என்று செய்தி வந்தால் இவர்களெல்லாம் சபை பிரிவு இல்லாமல் விட்டுக்கொடுக்கமட்டர்களென்று என்ன நிச்சயம். அப்போது மீண்டும் நாம் ஒரு சுதந்திரப்போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டிவரும்

  18. Ashok kumar Ganesan on October 7, 2009 at 11:02 pm

    நண்பர் அக்னிபுத்திரன்,
    கிறிஸ்துவர்கள் ரோம் மற்றும் இத்தாலிக்கும் அடிமை பட்டவர்கள் என்று யார் சொன்னது. பொப் சொன்னவுடன் எல்லோரும் அவர் சொன்னதை செய்துவிட போகிறார்களா? இயேசு வரப்போவது போப்பிடம் சொல்லிவிட்டுதான் வருவாரா? கொஞ்சம் அறிவாய் யோசியுங்கள் ஐயா.
    அன்புடன்,
    அசோக்

  19. Ashok kumar Ganesan on October 7, 2009 at 11:39 pm

    ஐயா பனித்துளி,
    நல்ல கட்டுரை (அல்லது கட்டுக்கதை). உமது அறியாமை உம்மை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. எனக்கு தெரிந்த மற்றும் உமக்கு புரியாத சில விஷயங்களை நான் இப்போது சொல்கிறேன்.

    //கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி//
    கிறிஸ்த்துவம் ஒரு மதம் அல்ல. அது ஒரு உறவு. ஆண்டவரிடம் நாங்கள் கொண்டுள்ள உறவே கிறிஸ்துவம். (நீர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இதுதான் உண்மை).

    //சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.//
    மதசார்பற்றவர்கள் சிறுபான்மையினருக்காக போராடகூடாதா?

    //இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.//
    நீர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்கார அம்மாள் மிட்டாய் தருகிறாள் என்பதற்காக தன் பிள்ளைக்கு ஒரு அன்னை சோறு போடா கூடாதா?

    //கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின் மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.//
    ஆண்டவரை ஏற்றுக்கொண்டால் நித்திய மரணமில்லை. அதாவது நரகம் இல்லை. மற்றபடி உலகப்பிரமான தொல்லைகள் நிச்சியம் உண்டு. முக்கியமாக உங்களை போன்றவர்களால். உலகபிரமானமான மரணமும் உண்டு. இவ்வளவு பேசும் நீங்கள், கன்னியாகுமரி சுனாமியில் மாறியபோது உங்கள் குமரி தெய்வம் என்ன செய்தது என்று யோசிக்கலாமே.

    தொடருவேன்,
    அசோக்

  20. Ashok kumar Ganesan on October 7, 2009 at 11:52 pm

    //நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில் நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.//
    கிறிஸதுவனுக்கு சொத்து வந்தால் உமக்கு ஏன் வயிறு எரிகிறது? எப்படி ஒரு இந்தியன் கிறிஸ்துவன் ஆன உடன் வெளிநாட்டுக்காரன் ஆனான்?

    //இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.//
    உமக்கு எப்படி இது தெரியும்?
    அவை இந்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து என்ன சாதித்தது? எத்தனை காலம் தான் அவர்கள் இருட்டுக்குள் இருப்பார்கள். இப்போதாவது ஒளிக்கு வரட்டும்.
    இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.

    தொடருவேன்,
    அசோக்

    (Edited.)

  21. AGNIPUTHIRAN on October 19, 2009 at 11:15 am

    அசோகா குமார கணேச சகோதரரே….!
    மதம் மாறி குணம் மாறி இனம் மாறிப்போனப்பின்னும் கணேசரின் பெயர் மாறாத பண்பாளரே ஒரு உண்மையை சொன்னதுமே இப்படி பொத்துக்கொண்டுவரும் உங்களுக்கு போப் அப்படிச்சொன்னால் நீங்கள் சொன்னால் நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். சீயோனிலிருந்தும் இஸ்ரவெலிலிருந்தும் ஆசீர்வதிக்கும் தன்னையே பாதுகாக்க துப்பில்லாமல் என் தந்தையே என் தந்தையே என்னை ஏன் கை விட்டீர் என்று அலறித்துடித்த இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் என்கின்ற கூக்குரலுக்கு முன்னால்தலை குனிந்து நிற்கின்ற நீங்கள் உங்கள் அப்பா பாட்டா முப்பாட்டா எல்லாம் வணங்கிய சக்தியுள்ள அசுரர்களைக்கண்டு பயந்து ஓடாத கடவுள்களை விட்டுவிட்டு ஓடிவிட்டீர்களே .
    ஐயா குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி அம்மன் பாதத்தில் இருந்த, விவேகானந்த பாறையில் இருந்த யாரும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியாதா ஏன் வேளாங்கண்ணியில் பிணமாக மிதந்தபோது உங்கள் மாதா தூங்கிக்கொண்டா இருந்தாள்

  22. armchaircritic on October 19, 2009 at 12:58 pm

    //கிறிஸ்த்துவம் ஒரு மதம் அல்ல. அது ஒரு உறவு. ஆண்டவரிடம் நாங்கள் கொண்டுள்ள உறவே கிறிஸ்துவம். (நீர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இதுதான் உண்மை).//
    So you have decided to hijack ‘Hinduism is not a religion but a way of life’ also!
    //
    //இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.//
    நீர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்கார அம்மாள் மிட்டாய் தருகிறாள் என்பதற்காக தன் பிள்ளைக்கு ஒரு அன்னை சோறு போடா கூடாதா?
    //
    So you agree that the government considers you as their own children and looks at Hindus as embarassments!?
    //மதசார்பற்றவர்கள் சிறுபான்மையினருக்காக போராடகூடாதா?//
    When secularism means religious considerations should not be given prominence where is the question of inequality in the name of religion??! That is why it is called as ‘sickularism’.
    //இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.//
    Tell this to Irish people!

  23. ந.உமாசங்கர் on October 19, 2009 at 5:30 pm

    //கொஞ்சம் அறிவாய் யோசியுங்கள்//
    //கிறிஸதுவனுக்கு சொத்து வந்தால் உமக்கு ஏன் வயிறு எரிகிறது? //
    //அவை இந்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து என்ன சாதித்தது? எத்தனை காலம் தான் அவர்கள் இருட்டுக்குள் இருப்பார்கள். இப்போதாவது ஒளிக்கு வரட்டும்.//
    //இந்தியா முழுவதும் கிறிஸ்துவ கட்டுபாட்டுக்குள் இருந்தால் நலமாயிருக்கும். அன்பு வாழும், சத்தியம் நிலைக்கும்.//

    ஒரே ஒரு அஷோக்குமார் க‌ணேச‌ன் கிறித்துவ‌த்தின் க‌ட்டுப்பாட்டுக்குள் வ‌ந்த‌த‌ற்கே இத்த‌னை அன்பு, ப‌ண்பு, ம‌னித‌நேய‌ம், ம‌ற்ற ம‌த‌த்தின்மேல் ச‌கிப்புத்த‌ன்மை எல்லாம் மிக்க‌ ந‌ல்ல‌ வாத‌ம் செய்கிறார். இதே பார‌த‌ம் முழுவ‌தும் கிறித்துவ‌த்தின் க‌ட்டுப்ப‌ட்டுக்குள் வ‌ந்துவிட்டால் சொல்ல‌வே வேண்டாம், அன்பு, ப‌ண்பு, ப‌ணிவு, பாச‌ம் தேடிப்பார்ப்போம், தென்ப‌டாது.
    சத்தியமா? அதைப்பற்றி கிறித்துவத்துக்கு என்ன கவலை?

  24. daniel on October 19, 2009 at 5:37 pm

    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம், அமெரிக்க செனட் சபையில் வேத மந்திரங்கள் ஓத சபை துவக்கம் என அமெரிக்காவில் சிறுபான்மை சார்பாக இருக்கும் போது சந்தோஷப்படும் நீங்கள் இந்தியாவில் மாத்திரம் சிறுபான்மை சார்பு நிலையை எதிர்க்கிறீர்கள்.

  25. ந.உமாசங்கர் on October 19, 2009 at 5:54 pm

    சத்தியமா? அதைப்பற்றி கிறித்துவத்துக்கு என்ன கவலை? என்ன சம்பந்தம்? அஷோக்கும‌ர் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே

    இங்கே பாருங்கள், கிளாடி சொல்வதை:
    ///தென்னிந்திய திருச்சபையாக இருக்கட்டும்; அல்லது
    அமெரிக்கன் அட்வென்ட் திருச்சபையாக இருக்கட்டும்;
    மற்ற எந்த திருச்சபை அமைப்பாக இருப்பினும் அவை முழுக்க முழுக்க இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டு இந்தியர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது;
    ///
    உதாரணத்துக்கு:
    Socoiety of Jesus என்று ஒரு சபை. Jesuits என்று இதன் உறுப்பினர்களக் கூறுவார்கள். அதாவது மிஷநரிகள்.

    http://en.wikipedia.org/wiki/Superior_General_of_the_Society_of_Jஎசுச்

    The Superior General of the Society of Jesus is the official title of the leader of the Society of Jesus—the Roman Catholic religious order, also known as the Jesuits. He is generally addressed as Father General. The position carries the nickname of Black Pope, after his simple black priest’s vestments, as contrasted to the white garb of the Pope. The current Superior General is the Reverend Father Adolfo Nicolás.

    1541 இலிருந்து தற்போது வரை 30 பேர் இந்தப் பத்வி வகித்து உலகமெங்கும் இருக்கும் இந்த சொசைடியை நிர்வகித்து வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் ஐரோப்பியர்களே.
    இப்ப‌டித்தான் ஒவ்வொரு ச‌பையும் புகுந்து புற‌ப்ப‌ட்டால், அத‌ன் இறுதிச் ச‌வுக்கு போப் அல்ல‌து ஒரு ஐரோப்பிய‌ ம‌த‌குருவிட‌ம் முடியும். புளுகியே எத்த‌னை நாள்தான் வாழ்வாரோ?

  26. ந.உமாசங்கர் on October 19, 2009 at 5:57 pm

    ஒரு முக்கியமான தகவல்

    மேற்கூறிய Superior General பற்றி

    The Superior General is invested with ordinary power over the members of the Society, similar to the power given to a bishop over the people of a diocese. Superiors General submit themselves to the direct authority of and service to the Pope, not local ordinaries.

  27. ந.உமாசங்கர் on October 19, 2009 at 6:03 pm

    //நீர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்கார அம்மாள் மிட்டாய் தருகிறாள் என்பதற்காக தன் பிள்ளைக்கு ஒரு அன்னை சோறு போடா கூடாதா?
    ///
    எமது கேள்வி இது அல்ல. பக்கத்துவீட்டுக்கார அம்மாள் தந்த எல்லா இனிப்பு மற்ற பலகாரங்களை உண்ட பின்னும் ஒரு பிள்ளைக்கு வ‌யிறுமுட்ட‌ சாப்பாடு போடும் ந‌ம‌து பார‌த‌ அர‌சு என்ற‌ அன்னை, இன்னொரு பிள்ளைக்கு எதுவுமே போட‌முடியாத‌ப‌டிக்கு, க‌ம்யூனிச‌, ம‌த‌வாத(பிரிவினை மதம், பக்கத்துவீட்டு அம்மாளின் மதம் உள்பட), அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌டுக்கிறார்க‌ளே அது ப‌ற்றித்தான் கேட்கிறோம்.

  28. ந.உமாசங்கர் on October 19, 2009 at 6:12 pm

    ////நண்பர் அக்னிபுத்திரன்,
    கிறிஸ்துவர்கள் ரோம் மற்றும் இத்தாலிக்கும் அடிமை பட்டவர்கள் என்று யார் சொன்னது. பொப் சொன்னவுடன் எல்லோரும் அவர் சொன்னதை செய்துவிட போகிறார்களா? இயேசு வரப்போவது போப்பிடம் சொல்லிவிட்டுதான் வருவாரா? கொஞ்சம் அறிவாய் யோசியுங்கள் ஐயா.
    அன்புடன்,
    அசோக்
    ///
    நான் மேலே கொடுத்திருப்பதுபோல ஒவ்வொரு சபைக்கும் கடைசி சவுக்கு பாரதத்தில் இல்லை என்பதை நிரூபிக்கமுடியும்.

    நமது ஊர் லயோலா காலேஜே போப்பின் ஆளுகைக்குத்தான் உள்பட்டது.

    போப் ஒரு வேற்று நாட்டு அரசின் தலைவர்.
    http://en.wikipedia.org/wiki/The_Holy_See
    The Holy See is the episcopal jurisdiction of the Bishop of Rome, commonly known as the Pope, and is the preeminent episcopal see of the Catholic Church, forming the central government of the Church. As such, diplomatically, and in other spheres the Holy See acts and speaks for the whole Catholic Church. It is also recognized by other subjects of international law as a sovereign entity, headed by the Pope, with which diplomatic relations can be maintained

    வேற்று நாட்டு அரசிடம் வேலை பார்த்துக்கொண்டு நம் அரசிடமும் subsidy போன்ற உதவிகளையும், UGC grant முதலியவற்றையும் வாங்குகிறார்கள்.

    அஷோக்குமார் கணேசன் அளவாய் யோசிக்காதீர்கள்.

  29. Ashok kumar Ganesan on October 19, 2009 at 7:35 pm

    Dear Umashankar,
    Try proving any Protestant Church is under Pope. Just because Loyola College is under someone’s authority, that doesn’t mean, entire Christian population is under the same authority. There are only few Catholic Churches under the autority of Pope (those churches too comes under the law of Indian Government). No Protestant is under any human being. Come on man, analyze properly before you comment on anything.
    With Love,
    Ashok

  30. ram on October 20, 2009 at 7:04 am

    ////////daniel
    19 October 2009 at 5:37 pm
    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம், அமெரிக்க செனட் சபையில் வேத மந்திரங்கள் ஓத சபை துவக்கம் என அமெரிக்காவில் சிறுபான்மை சார்பாக இருக்கும் போது சந்தோஷப்படும் நீங்கள் இந்தியாவில் மாத்திரம் சிறுபான்மை சார்பு நிலையை எதிர்க்கிறீர்கள்.//////////

    ஹலோ டேனியல்…

    மறுபடியும் அரைச்ச மாவையே அரைக்காதீங்க. இதுக்கெல்லாம் ஏற்கனவே பதில் சொல்லியாச்சு. ஒபாமாவை தீபாவளிக்கு விளக்கேற்ற வில்லை என்றால் நீ பாவியாகி நரகத்திற்கு போவாய் என்று எந்த இந்துவும் சபிக்கவில்லை. அப்படி ப்ரெயின் வாஷ் செய்யப்பட்டு இந்து தர்மத்தை பின்பற்றுபவர்கள் எவரும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நான் இந்துவாக மாற விரும்புகிறேன் என் பெயரை மாற்றுங்கள் என்று கேட்ட பல வெள்ளையருக்கு இந்து மடாதிபதிகள் அவனது கிறிஸ்தவ பெயரிலேயே இருக்கச் செய்து பெயரில் ஒன்றும் இல்லை. தர்மம் தான் முக்கியம். இந்த தர்மங்களை கடைபிடித்து நீ இந்துவாகவே வாழ் என்று மதம் மாற்றாமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் நீங்களோ ஒருவன் ஏசுவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவனது பெயரை மாற்றுவதிலும் மதம் மாற்றுவதிலுமே குறியாய் உள்ளீர்கள் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதனால் ஒபாமா விளக்கேற்றினாலும், புஷ் விளக்கேற்றினாலும் எங்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரு மனிதன் தெய்வீகத்தை உணர்கிறான் என்ற நிலையிலேயை அதை பார்க்க முடியும். அவன் நம் மதத்திற்கு வந்து விட்டான் என்று சந்தோஷப்பட அதில் ஒன்றும் இல்லை.

    அது சரி ஒபாமாவே தீபாவளி கொண்டாடுகிறாரே! நீங்கள் ஏன் இன்னும் சலித்துக் கொள்கிறீர்கள். நீங்களும் தீபாவளி பொங்கல், விநாயகர் சதுர்த்தி எல்லாம் கொண்டாடலாமே! டேனியல் என்ற பெயருடனேயே..நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். சரியா!

    நிஜ உலகத்திற்கு சீக்கிரம் வாருங்கள்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.