பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே

நமது பாரதத்தின் எல்லையில் நமது தேசத்தின் பண்பாட்டையும் எல்லையும் காத்து நின்ற வாளேந்திய சமுதாயம் சீக்கிய சமுதாயம். இதற்காக அந்த சமுதாயம் கொடுத்த விலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.kaur1 ரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசின் சிற்றரசாக ஆப்கானிஸ்தான் மாற்றப்பட்டதுடன் பாரதத்தின் மீது இனி படையெடுப்பதில்லை எனும் ஒப்பந்தத்திலும் ஆப்கானிஸ்தானிய அமீர் கையெழுத்திட வைக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்னால் 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்புக்கு பின்னர் ஆப்கானிஸ்தானிய அப்தாலியின் படையெடுப்புக்களால் பஞ்சநதி பிரதேசமான பஞ்சாப் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் பஞ்சாபிய ஆண்களும் பெண்களும் அதனை பெரும் மனவலிமையுடன் அந்த சோதனைகளை எதிர்கொண்டார்கள்.

இந்த வரலாற்று அடிப்படையில் உருவானதுதான் சத்வந்த் கௌர் எனும் சீக்கிய இளம்பெண்ணின் வாழ்க்கை நிகழ்ச்சிகள். அவளது கிராமத்தை ஆப்கானிஸ்தானியர் சூறையாடுகின்றனர். ஆப்கானியரை சீக்கியர்கள் எதிர்த்துப் போராட அவர்கள் கொள்ளையடித்துவிட்டு ஓடிப்போகின்றனர். மாலையில் அபாயம் நீங்கிய பின்னர் கிராமமக்கள் வெளியே வருகின்றனர். அப்படி சத்வந்த் கௌர் வரும் போது ஒரு குழியில் ஆப்கானியன் ஒருவன் காயமடைந்து கிடப்பதை பார்த்து அவன் எதிரியேயானாலும் அவனுக்கு சிகிச்சை செய்கிறாள். அவன் உயிர் தப்புகிறான். அதே நேரத்தில் அவன் மனதில் ஒரு திட்டம் உருவாகிறது. சத்வந்த் கௌர் ஆப்கானிய அடிமை சந்தையில் நல்ல விலைக்கு போவாள் என கணக்கு போடுகிறான். எனவே தன் மனைவிக்கு சொல்லி அனுப்புகிறான். குடும்பத்துடன் கௌரிடம் நல்ல உறவை ஸ்தாபிக்கிறான். ஒருநாள் அவன் மனைவியிடம் உறையாடச் செல்லும் கௌரை அங்கு இருக்கும் ஆப்கானியர் கடத்தி செல்கிறார்கள். அமீரின் பொக்கிஷ அதிகாரி அவளை விலைக்கு வாங்குகிறான். அடிமையாக்கப்படும் அவளுக்கு மாட்டிறைச்சி உணவாக அளிக்கப்படுகிறது.

அவள் உண்ண மறுக்கிறாள். அவளை கசையால் அடிக்கிறார்கள். பொக்கிஷ அதிகாரியின் மனைவிக்கு சத்வந்த் கௌரின் அமைதியான முகமும் மனவுறுதியும் பிடித்து விடுகிறது. அவளை அடி உதையிலிருந்து காப்பாற்றுகிறாள். தன் அந்தரங்க தோழியாக வைத்துக்கொள்கிறாள். பின்னர் பொக்கிஷாதிகாரி ஊழலில் சிக்கி அமீரிடம் மரண தண்டனை பெறுகிறான். சத்வந்த் கௌர் தன் உயிரைப் பணயம் வைத்து அவனை அவனுடைய மனைவிக்காக காப்பாற்றுகிறாள். கௌரின் தியாக மனப்பான்மையையும், மன உறுதியையும், அழகையும் கண்டு அமீர் அவளை தன் மனைவியாக்க எண்ணுகிறான். ஆனால் கௌர் தன் தருமத்தை துறக்க தயாராகவில்லை. அவள் இருக்கும் அந்தப்புற அறையில் ஒரு தீவிபத்தை ஏற்படுத்தி தீக்காயங்களுடன் தப்பிவிடுகிறாள், பொக்கிஷ அதிகாரியின் மனைவி பாத்திமா அவளுக்கு அடைக்கலம் அளித்து ஒரு குகையில் வசிக்க அவளுக்கு ஏற்பாடுகள் செய்கிறாள். இதே காலகட்டத்தில் பாத்திமா கௌரிடமிருந்து சீக்கிய தருமத்தின் போதனைகளை கற்கிறாள். அவளுக்கு அது பெரும் மன நிம்மதியை தருகிறது. தனது குடிகார ஊழல் கணவனால் தாக்கப்பட்டு இருளில் அடைபட்டு வாழும் அவளுக்கு சீக்கியதருமம் ஒளிவிளக்காக அமைகிறது. இந்நிலையில் சத்வந்த் கௌர் பஞ்சாப் தப்பி செல்ல முடிவு செய்கிறாள். ஃபாத்திமா பிரியாவிடை அளிக்கிறாள். சத்வந்த் கௌர் ஆண் வேடத்தில் செல்கிறாள். ஆகாகான் எனும் பத்தானியன் பஞ்சாப் செல்கிறான் அவனது வண்டிகளில் அவளும் சேர்ந்து கொள்கிறான். ஆகாகான் சத்வந்த் கௌர் ஆகியோரிடம் நட்பு வளர்கிறது. “ஒரு சீக்கியரை நம்ப முடியும்” என்று சொல்லும் ஆகாகான் தன் குடும்பத்தில் ஒரு இரகசியம் இருப்பதாகவும் அது தன் செவிலித்தாய்க்கு மட்டுமே தெரியும் என்பதால் தனது தந்தை செவிலித்தாயை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் சொல்கிறான்.

சத்வந்த் கௌர் மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று அந்த செவிலித்தாயை சிறையிலிருந்து காப்பாற்றி கொண்டு வருகிறாள். ஆகாகான் உண்மையில் ஒரு சீக்கியர் என்றும் ஆப்கானிய கொள்ளையடிப்பின் போது அவனை கடத்தி வந்து குழந்தையில்லாத ஆப்கானிய தளபது ஹசன்கான் வளர்த்துவருவதும் தெரிகிறது. இறுதியில் அவர்கள் அமிர்தசரஸை அடைகின்றனர். அங்கு ஆகாகான் சீக்கியதருமமான தாய்மதத்துக்கு திரும்புகிறான். சத்வந்த கௌர் தன் பெற்றோர்களின் கிராமத்துக்கு செல்கிறாள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை சொல்கிறாள். விரைவில் அவளது கிராமம் மீண்டும் ஒரு ஆப்கானிய சூறையாடலை சந்திக்க நேர்கிறது. ஆனால் இம்முறை சீக்கியர்கள் தயாராக உள்ளனர். அப்போது நடக்கும் போரில் பெரும்பாலான பத்தானியர்கள் கொல்லப்பட்டு தோற்றோடுகின்றனர். சத்வந்த் கௌரும் கிராம பெண்களும் போரில் காயமடைந்து கிடக்கும் வீரர்களுக்கு நீரும் உணவும் மருந்தும் அளிக்கிறார்கள். ஆப்கானிய பொக்கிஷ அதிகாரியை சத்வந்த் கௌர் சந்திக்கிறாள். அவனுக்கு நீர் அளிக்கிறாள். கிராம வைத்தியர்கள் எதிரியான அவனைக் காப்பாற்ற முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. அவன் மரண தருவாயில் ஒரு கடிதத்தை கௌரிடம் அளிக்கிறான். தனது மரணத்துக்கு பின்னர் தன் மனைவி பாத்திமாவும் தன் மகனும் பண்பாடும் மனித நேயமும் நிறைந்த பஞ்சாபின் சூழலில் வாழ வேண்டும் எனும் வேண்டுகோளே அது.

டாக்டர். பாய்வீர சிங் எனும் பஞ்சாபிய இலக்கியகர்த்தாவால் பிரசித்தி பெற்ற வரலாற்று நாவலாக்கப்பட்ட சம்பவங்களே மேலே உள்ளவை. சத்வந்த் கௌர் பெண்மையும் வீரமும் தர்மத்தின் மீது உறுதிப்பாடும் கொண்ட பெண்மணி. அவளது உறுதி, எந்த சூழலிலும் மனிதர்களை வெறுக்காத தன்மை, எதிரிகளாக இருந்தாலும் அவர்களது அடிப்படை மானுட உணர்வுகளைத் தொட்டெழுப்பும் அவளது திறன் ஆகியவற்றை இந்த நாவல் காட்டுகிறது. ஆண் துணை நாடும் சாதாரண வரலாற்றுப் புதின கதாநாயகிகளிலிருந்து இதுவே அவளை வேறுபடுத்தி காட்டுகிறது. அத்துடன் எல்லைப்பகுதியில் வாழும் சீக்கிய சமுதாய மக்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள் நிச்சயமற்ற வாழ்க்கை அத்தகை வாழ்க்கையில் அவர்களுக்கு பற்றுக்கோடாக அமைந்த சீக்கிய தருமம் ஆகியவற்றையும் இது வெளிக்கொணருகிறது.

20 Replies to “பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே”

  1. நாவல் பெயரை குறிப்பிடவில்லையே? பஞ்சாபியர்களின் உயர் பண்பாட்டைப் பாருங்கள். இப்படிப்பட்ட பெண்களை உடனடியாக ஏற்று அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் தந்திருக்கிறார்கள். சீக்கியர்களின் தியாகமும், வீரமும், பண்பாடும் நிகரற்றது.

    அதே போன்று மராட்டியர்கள். ஆனால், துரதிர்ஷ்டமாக மராட்டியர்கள் சீக்கியர்களுடன் சேர்ந்து செயல்படாமல் விரோதித்துக்கொண்டார்கள். அதன் பலனாக சுதந்திரமாக இருந்திருக்க வேண்டிய இந்தியா மீண்டும் அந்நியர்களின் கீழ் வந்தது.

    சரித்திரத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

  2. நாவலின் பெயர் சத்வந்த் கௌர் என்பது.

  3. மற்றொரு முக்கியமான விஷயம். இஸ்லாமிய அடிமைச்சந்தை – அதன் விஸ்தீரணம் அதன் மத அடிப்படையிலான இயக்கம். அதில் இந்தியர்கள் விற்கப்பட்டது. இது குறித்து ஏறக்குறைய எவ்வித வரலாற்று ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. ஆனால் இஸ்லாமிய அரசர்களின் பல ஆணைகளில் பல ஆவணங்களில் இது குறித்து மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எப்படி ஐரோப்பிய அடிமைச்சந்தையின் அடிபப்டையாக தோல்நிறம் பிரதான இடத்தை வகித்ததோ அதே போல இஸ்லாமிய அடிமைச்சந்தையின் அடிப்படையாக மதம் பிரதானமாக விளங்கியது. தோல்நிறமும் (இந்தியர்கள் அவர்களைப் பொறுத்தவரையில் கறுப்பர்கள்) ஒரு இடத்தை வகித்தது. அலாவுதீன் கில்ஜி முதல் அவுரங்கசீப் வரை ஜிஸியா கொடுக்க முடியாத இந்துக்களை, விவசாயிகளை, கிளர்ச்சியாளர்களை அரேபியா,பாரசீகம், ஆப்கானிஸ்தான் என விற்றிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்த பரிமாணத்தை தொட்டதே இல்லை.

  4. சிலிர்ப்பூட்டும் வரலாறு சத்வந்த் கௌருடையது. இந்த முக்கியமான நூல் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.

    இந்த நாவல் பஞ்சாபியில் எழுதப் பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.

    Satwant Kaur
    by Bhai Vir Singh ; translated by Ujagar Singh Bawa.
    Published in 1988.
    Publisher: Bhai Vir Singh Sahitya Sadan, Bhai Vir Singh Marg, New Delhi.
    ISBN 10: 0942245008

  5. https://www.scribd.com/doc/13502374/Indian-Muslims-Who-Are-They

    இந்த புத்தகத்தில் கே.எஸ் லால் அவர்கள் இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது, மதம் மாற மறுத்தவர்களை எப்படி அடிமையாக்கினர் என்பதை பற்றி எழுதியுள்ளார்

  6. you need no praise but if you can give some excerpts from the book we will be delighted.

  7. Aravindan is a proven hand on these topics.

    As Sri Nesakumar rightly said, absence of the feeling of oneness among people (especiallay Hindus) belonging to various regions of Hindustan drove us to slavery repaeatedly . Sikhs were made to forget that their sect was originated to defend Hindu Dharma and those who followed it. Initially, in every Punjabi Hindu family, one boy was set to be a Sikh to safeguard the culture, tradition and faith of Hindu Nation. Chatrapati Shivaji Maharaj, the Great Maratta had a very clear Hindu awareness but the latter day Maratta Peshvas’ belonging was limited to their linguistic and community identity only. When their commanders set the Bhargava to flutter on the rampats of Dilli Red Fort, they saw it as the flag of Maratta and not that of Hindu. Under false prestige, they failed to seek the support of the Sikhs to defend Hindustan from the Afgan brute’s inhuman attrocities all through his route of invasion.. The naive Sikhs also felt that the attack on Dilli by an invader was not their concern. Had Marattas cared to seek the help of the Sikhs and tried to convince them to join hands to face the common enemy, the history of Hinduatan would have been different. Hindu Rashtra would have blosomed at Dilli then and there, humbling the weak Moghul. In those days, it should be remembered that various parts of Hindustan were ruled in the name of Moghul emperor by different Hindu princes, nawabs and sultans and the Moghul rein extended upto the southern tip, just as a formality. If the Moghul were humbled, then the whole concept of Mohmeddan supremacy would have faqllen to dust.

    It is a pity that Hindus miss the bus till date. For instance,

    There is a basic difference between earlier attacks by Mohmeddan terrorists from Pakistan and the Nov. 21 08 attack in Mumbai. Previous ones were unexpected stealthy bomb blasts. But the Nov. 08 Mumbai attack was a deliberate human intrusion from Pakistan with kill at sight guidelines. The casualities at Chatrapati Shivaji Terminus rly station is still kept a secret, God only knows why. We could have immediately used our full force to wipe out terrorist camps in Pak soil witrhout any warning at the time of Nov attack and the whole world would have approved it silently because the cassualities included many internatiomnal citizens. But we allowed that golden opportunity to lapse. I wonder had Hindustan ever acted or reacted to situations at the right time and in a right way. I pray my Master Sri Krishna to put some sense into the mind of Hindus. Is He NOT our Sarathy, committed to drive us on the right path? Has NOT his time arrived to take over the reins? In the past, though He knew what would be the final act, He made it to appear that He was trying every step to avoid the bloodshed.

    MALARMANNAN

  8. I forgot to mention another point. It was the Mullahs of Dilli who invited the Afgan brute to safeguard Islam on the soil of Hindustan, because the Moghul has become a weakling. During the unreasonable and totally unwarranted Kilafath Movement, Gandhi made a strange statement that he would not hesitate to invite the Afgan Ameer to invade Hindustan to drive out the British. And it was the same Gandhi, who admonished Netaji Subhash for seeking Japanese and German help to free Hindustan from the British! My Hindu Samaj, when are you going to learn the lessons from history, identify and recognise your real leaders?
    MALARMANNAN

  9. //There is a basic difference between earlier attacks by Mohmeddan terrorists from Pakistan and the Nov. 21 08 attack in Mumbai. Previous ones were unexpected stealthy bomb blasts. But the Nov. 08 Mumbai attack was a deliberate human intrusion from Pakistan with kill at sight guidelines. The casualities at Chatrapati Shivaji Terminus rly station is still kept a secret, God only knows why. We could have immediately used our full force to wipe out terrorist camps in Pak soil witrhout any warning at the time of Nov attack and the whole world would have approved it silently because the cassualities included many internatiomnal citizens. But we allowed that golden opportunity to lapse. //

    Yes Malarmannan that opportunity was missed. Even if we attack the camps inside POK, the world would not raise a finger against us and Pak cannot respond as technically that area is considered as an independent territory by Pakistan. For this same reason, I have a nagging doubt that Osama could be hiding in Pak Occupied Kashmir and not in Pushtun areas as it is widely believed. Pak could have allowed Osama to move in there due to this technicality.

    The world at this point of time doesn’t want safe havens for terrorists, be it within Pakistan or elsewhere. We should utilise this moment.

  10. // Even if we attack the camps inside POK, the world would not raise a finger against us and Pak cannot respond as technically that area is considered as an independent territory by Pakistan – Nesakumar.//

    I’m aware I should NOT make the esteemed columns of enlightening TamilHindu a place for exchange of opinions between two individuals but considering the nature of the topic, I hope TmailHIndu would NOT mind if this happens at times.

    In my earlier post, I did NOT mean just the POK area but the whole of West Pakistan, because the entire region is the haven of terorists, underworld thugs and criminals engaged in all sorts of anti social activities. Can you imgine any state printing currencies of another country to destroy her economy? Even Hitler’s Germany had NOT thought of it I believe. And Pakistan is printing our currencies and it has become a very big headache for our economy. Particularly in our rual side, currencies printed in Pakistan are pumped in and innocent people are put to unnecessary hardships, enquiry by police, CIDs etc. About three years ago, I was associated with a trade magazine named Motror India, as a freelancer. The cashier of the magazine received some money from some advertisers and there were two five hundred rupee notes found out at the bank later as counterfeit. The poor cashier could not recollect as to who gave those notes and it became a very big problem for the orgasnisation to get him relieved of the situation. .
    What happened in Nov last should have been considered by us as an open invasion by Pakistan in the guise of some individual terrorists, as it happened in Kashmir in 1947, the Pak army entering posing as tribesmen. WE should have made the Nov incident as mreceneries employed by Pakistan to invade Hindustan through sea route hitherto NOT tired . The modus operandi of terrorists is secretly planting bombs in places where high degree of human activity is present. The Nov.08 incident was quite diferent and it gave us very good opportubity to settle score.

    SORRY, I have drifted from the original topic that is about our Sri Aravindan’s review but Aravindan’s articles are always thought provoking, motivating readers to think further on matters related to the topic that was discussed. Find fault with Aravindan NOT me, for he is the person who makes readers to think and extend their faculty of thinking!

    MALARMANNAN

  11. திரு மலர்மன்னன் அவர்களே,

    உங்களுடைய கருத்துக்கள், விமரிசனங்கள், எதிர்வினைகள் கட்டுரைகளுக்கு அணி சேர்க்கின்றன. வாசகர்களான நாங்கள் உங்களுடைய விமர்சனங்களை ஆவலோடு வாசிக்கிறோம். எனவே, உங்களது கருத்துக்களை தொடர்ந்து அளிக்குமாறு வேண்டுகிறோம்.

    நீங்கள் சொல்லியுள்ள கருத்தும் எங்களை யோசிக்க வைக்கிறது. கேள்வி கேட்க வைக்கிறது.

    போர் தொடுத்திருக்கத் தேவையான வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பதும், இந்தப் போரில் இந்தியாவிற்கு ஆதரவாகவே உலக நாடுகள் செயல்பட்டிருக்கும் என்பதும் தெளிவாகிறது.

    ஆனால், காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லுவது வேறு. மக்கள் போரை விரும்பவில்லை என்றும் அதனால்தான் போரை தவிர்க்கக்கூடிய கட்சியான காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள்.

    வெளி நாட்டினர் போரை ஆதரிக்கலாம். ஆனால், நாட்டு மக்கள் போரை ஆதரிக்காவிட்டால் எந்த கட்சி துணிந்து இப்படி ஒரு முடிவை எடுக்கும்? மேலும், கார்கில் என்ற ஒரே ஒரு இடத்தில் நடந்த சண்டை ஒன்றிற்கே நமது பொருளாதாரம் தள்ளாடியது. போர் என்றால் பல இடங்களில் நடக்கும் சண்டை. எனவே, எந்த வகையிலும் நாம் தயாராகவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள்.

    அதாவது, மக்களாகிய நீங்கள் போரை விரும்பாததால்தான், தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டதால்தான் நாங்களும் உங்கள் விருப்பப்படியே செய்கிறோம் என்பது அவர்கள் வாதம்.

    இவர்கள் சொல்லுவதை எப்படி நாம் மறுக்க முடியும்?

  12. I may be excused for occupying the space normally meant for views on the esteemed columns of TamilHIndu.
    Dear Sri Ganapati,
    Kindly excuse me for my inability to write in Tamil and I thank you for the interest you have shown in my views. A good governance is to guide and lead the people appropriately., NOT to project them for the excuse and the lapses (listening to people and acting according to their expectations will apply to civilian matters only). Also, there was no mandate OR referendum on whether to go to war or NOT. And in matters like going to war cannot wait to get people’s consent. A good leadership is to act according to the needs without any hesitation. As far as Hindustan is concerned, our electorate do not weigh this kind of issues at the time of hustings but react to the momentary situations. Don’t you remeber even the so called knowlegeable electorate of Delhi voted against BJP just because of the scarcity of onions in 2001? I do NOT think on these matters considering the views of political parties, whether BJP or Congress. In such matters, I use to analyse options thinking what would be Veer Savarkarji’s course of action . For your info, I am a very harsh critic of BJP. As for Congress, I cannot even consider it a party of people with self respect. If war is inevitable, you have to take the lead. Let me tell you another fact about warfare: the economy stumbles only when you are defensive (example: Kargil). An intelligent nation, in situations like Nov 2008, plays offensive role. As for this particular incident (Nov. 2008), in order to ease our burden, we could have easily got support from nations like Israel and the US because the victims included jews. We need to discuss Kargil separately; I wish somebody writes on Kargil so that I can share my views on that. In my opinion, we did not play our cards wisely ( I’ve inside story because until recently, my son-in-law was in the defence holding a higher rank): there was wasteful expenditure and also unnecessary loss of life.

    MALARMANNAN

    .

  13. Since Sri Kalimiku Ganapati (Ah, what a beautiful name! The moment I utter the name, I have the vision of Dancing Vinayaka) has raised the subject of Kargil, let me say just one thing: We should have opened another war front erlsewhere to confuse and divert the enemy instead of concentrating in Kargil. Reemember what Sri Lalbahadurji did in 1965? Our army was knocking the doors of Lahore (Pak was active in Rajastan and West Bengal borders and we suddenly opened the war front at West Punjab, while arresting Pakis at Rajastan and WB). The result: The alarmed Pakistan immediately decided to give up hostilities! Our army is large enough to open several fronts; forget Pak’s nuclear capabilities. It can only show case those missiles. Testing them and using them properly are two different things.
    MALARMANNAN

  14. அண்ணா சூப்பர்
    ஆரியர் தானே நீங்கள்?
    தலிபான்களின் ஆட்சியில்
    கஷ்டப்ப்பட்டு இருக்கிறீர்கள் பாவம்
    குஜராத்தில் சூப்பர் ஆட்சி நடக்குது [உயர் நீதி மன்றம்]

  15. நான் கண்ட கனவில் முஸ்லிம்கள் சம தர்ம ஆட்சி நடத்துகிறார்கள்
    மசூதிக்கு போய் பாருங்கள்
    அங்கே எல்லாம் சமம்
    [குருடனுக்கு இருட்டு மட்டும் தான் தெரியும்.]
    முதலில் நீங்கள் …கனவு கண்டேன்…. என்பதே பொய்
    பொய் பித்தலாட்டம் எல்லாம் முஸ்லிம்களுக்கு தெரியாது.
    நீங்கள் கண்டதாக சொல்லும் கனவு இந்து ஆரிய ஆட்சியில் மட்டுமே நடக்க வாய்ப்பு உண்டு.
    நீங்கள் சொல்வதை நம்ப நங்கள் என்ன முட்டாள்களா.

  16. முதலில் இஸ்லாம் என்றால் என்ன அது வருவதற்கு முன் இவ்வுலகம் எப்படி இருந்தது சாதிய அடிமை முறை, பெண்கள் உடன் கட்டை ஏறுதல், தெவதாசி முறை இது போண்ற என்னெற்ற ஒழுக்க சீரழிவுகள் மிகைத்து நின்றது இந்தியாவில் ஆனால் இஸ்லாமியர்களின் கொடிய எதிரி அமெரிக்கா என்பது அறீந்ததே அப்படிப்பட்ட அமெரிக்கா தி 100 ஹெட்ஸ் என்ற புத்தகத்தில் முதலிடம் இறைவனின் தூதை எடுத்துசொல்லி வழ்ந்ட்து காட்டிச்சென்ற முஹம்மது நபி அவர்களுக்கு முதலிடம் கொடுத்திருக்கின்றது. ஏன்? எதற்கு? அனைத்து மக்களும் சமம் என்றும், யாருக்கும் யாரும் அடிமை இல்லையென்றும் இறைவன் ஒருவனே உயர்ந்தவன் என்பதையும் உண்ர்த்தியவர்கள் என்பதால் முடிந்தால் இஸ்லாத்தை தெரிந்து கொண்டு (மனிதர்களை அல்ல மார்க்கத்தை) பின் தவறுகலை சுட்டிக்காட்டவும்.

    (Comment edited & published)

  17. கிருஸ்தவர்கள் எப்படி மதம் மாற்றுகிறார்கள்,
    கிருஸ்தவர்கள் எப்படி இந்துக்களை அடிமைப் படுத்த திட்டம் தீட்டுகிறார்கள்,
    என்பதை சிந்தித்து பார்த்து,
    கிருஸ்தவர்களால் வர இருக்கும் மிகப்பெரிய ஆபத்தை தடுத்து நிறுத்த களம் காணவேண்டும்,

    (Edited.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *