மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - மே.வங்கம்: இந்து பெண் விளையாட்டு வீராங்கனைகளை அடித்துத் தாக்கி மிரட்டினர் முஸ்லிம் பையன்கள்
முகப்பு » அரசியல்

பெரியாரின் மறுபக்கம் - பாகம் 5 (பெரியாரும் இஸ்லாமின் சாதியும்)

periyar_marubakkamஇஸ்லாமின் சாதியைப் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்:

ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்வதில் எவ்வளவு வல்லவர்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், இஸ்லாமில் ஜாதியைப் பற்றிய இவர்களுடையப் பிரச்சாரங்கள்.

இஸ்லாமில் சாதி இல்லையாம், ஈ.வே. ராவின் பிதற்றல்!

இந்துமதத்தில் பல ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதத்தில் மட்டுமே உயர்வு-தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன-என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? இதோ!

* இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன.
(குடியரசு 03.11.1929)

* தீண்டாமையை ஒழித்து மகமதிய மதமே! இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு-தாழ்வு இல்லை.

* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.
(குடியரசு 02.08.1931)

* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
(குடியரசு 23.08.1931)

* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
(குடியரசு 17.11.1935)

* இப்போது வரவர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும், சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லிம்களாக ஆகிவிட்டால் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.

* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.
(குடியரசு. 19.01.1936)

* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.
(குடியரசு 31.05.1936)

* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றன.

* இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.
(நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)

அதாவது இஸ்லாமில் ஜாதி இல்லை. இஸ்லாமில் உயர்வு-தாழ்வு இல்லை. அங்கு எல்லோரும் சமம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்து. இதுபோலவே வீரமணியும் ‘சங்கராச்சாரியார்’ என்ற நூலில் ‘சாதி என்று வரும்போது அது இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலே உண்டு?’ என்று கேட்கிறார். ஆக இந்து மதத்தைத் தவிர வேறு மதத்தில் ஜாதி இல்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் கூறுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள்.

இஸ்லாமில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்களே - இதுவாவது உண்மையா என்று பார்க்கலாம்.

இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!

‘Social Stratification Among Muslim - Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-

முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.

1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்

உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-

1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.

3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.

இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-

1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.

2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.

3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)

4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)

5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)

6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)

7. பஹாவீ

8. ஸனூஸி

9. கைதியானி

10. அஹ்மதியா

11. ஸீபிகள்

இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)

ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.

இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:

1. ஆந்திரா - மஹாதர்

2. அஸ்ஸாம் - மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.

3. பீஹார் - பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.

4. குஜராத் - பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்

5. ஜம்மு-காஷ்மீர் - பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்

6. கர்நாடகம் - அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்

7. கேரளம் - மோப்ளா (மாப்பிள்ளை)

8. பஞ்சாப் - பகிர், மேகாதி

9. ராஜஸ்தான் - ஜூலாஹா

10. உத்திரபிரதேசம் - அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா

11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்

மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?

இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே! இந்த சாதிகள் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் வீரமணிக்கும் தெரியாதா? தெரியாது என்று இவர்கள் சுலபமாகப் பொய் சொல்லிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு தெரிந்த மாதிரி மேலும் ஓர் ஆதாரத்தை நாம் காட்டலாம்.

இஸ்லாமின் சாதிப் பற்றி அம்பேத்கர்!

அம்பேத்கர்

அம்பேத்கர்

ஈ.வே. ராமசாமி நாயக்கரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாயணத்தின் இருபக்கங்கள் என்று சொல்கின்றார்களே, அந்த ஒரு நாணயத்தின் ஒரு பக்கமான டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர். 1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

மேலும் இஸ்லாமியர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாயத்து முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுவதாவது:-

”பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துக்களைப் போன்றே முஸ்லிம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லிம்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான். அவன் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றபடுகிறான்; இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது; அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாட முடியும். ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும்; இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.”

இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடி மதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.

ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத் தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கம் இடமில்லை. இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்தும் தீமைகளையும் வரிந்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லிம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.”

குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் கூறியதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகின்ற இந்த இஸ்லாமிய சாதிகள் கூட ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், வீரமணிக்கும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இஸ்லாமில் சாதி இல்லை என்று இவர்கள் மறுபடியும், மறுபடியும் பொய் சொல்வதற்குக் காரணமென்ன?

ஒன்று இஸ்லாமில் உள்ள சாதிகளை மூடிமறைத்து அம்மதத்துக்கும் இந்துக்களை மதமாற்ற உதவி செய்வதன் மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து தங்கள் அமைப்புக்கு பணம் பெறுவது.

இரண்டாவது, இஸ்லாமியர்களை விமர்சித்தால் தம் உயிருக்கு பாதகம் எற்படும் என்ற பயம்.

மூன்றாவது தங்களுடைய கருத்துக்கு எப்பொழுதும் யாராளும் மறுப்பு சொல்ல முடியாது என்ற ஆணவம்.

இவைகள்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறதல்லவா! உண்மைகள் அவர்களுக்கே வெளிச்சம்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய் ஒரு புறமிருக்கட்டும். வீரமணி என்ன சொல்கிறார்? இந்து மதத்தைத் தவிர வேறுமதத்தில் சாதி இல்லையாம். இஸ்லாமிலே சாதி இருக்கின்றது என்று பார்த்தோம். அடுத்து இவருடைய தந்தை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதை கவனியுங்கள்:-
பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். (குடியரசு 02-08-1931)

தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும், ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. கிருத்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை (குடியரசு 19-01-1936)

இதிலிருந்து தெரிவதென்ன?

கிறிஸ்துவ மதத்திலும், பவுத்த மதத்திலும், ஜைனமதத்திலும் தீண்டாமையிருக்கிறது என்பது தானே? வீரமணியுடைய தந்தைக்கு பல மதங்களில் உள்ள தீண்டாமை தெரிகின்றது. ஆனால் பிள்ளைக்கு தெரியவில்லை. இதில் யார் உண்மையை சொல்லியிருக்கின்றனர்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் தீண்டாமைதானே தவிர சாதி இல்லை என்று வாதிடலாம். ஆனால் சாதி இருப்பதால்தான் தீண்டாமையே இருக்கின்றது என்று இவர்கள்தான் சொல்லி வருகின்றனர். அதனால் தீண்டாமை இருக்கின்றது என்று சொன்னால் அங்கு சாதியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் வீரமணி சொல்வது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி திரியும் இவர்கள் பண்பாடுமிக்கவர்களாம்! இவர்களுடைய இதழுக்கு பெயர் ”உண்மை”யாம்! அதைவிட ”பொய்மை” என்று வைத்திருக்கலாம் அல்லவா!

- தொடரும்

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , ,

14 மறுமொழிகள் »

  1. அடப்பாவிகளா.. இத்தனை பிரிவுகளா இஸ்லாமிய மதத்தில்..?? நான் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நினைத்தேன். இது தவிர, டாக்டர்.அம்பேத்கரின் தீர்க்க தரிசனம் கூட சரியென்றே எனக்குப் படுகிறது. இஸ்லாமிய மார்க்கம் ஒரு வழிப்பாதை.. போனவர்கள் மீள முடியாது என்பதாலேயே அவர் தலித்களை பவுத்ததிற்கு மாறச்சொன்னதாக படித்திருக்கிறேன். ஜாதிக்கொடுமை இந்து மதத்தில் வேரறுக்கப் படும்போதோ அல்லது மாற்றங்கள் நிகழும்போதோ மீண்டும் இந்துவாக வாய்ப்பு இருக்கிறது நமது சகோதரர்களுக்கு.. இஸ்லாமில் அது சாத்தியம் இல்லையே… விரும்பினாலும், விரும்பாவிட்டலும் அவன் இஸ்லாமியனே..

    திரு.வெங்கடேசனின் இந்தக் கட்டுரைத் தொடர் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றால் அது மிகை இல்லை. நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  2. // 1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

    கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் …… …… …… …… ….. ….. …. //

    கன்னிகளா?

    அதெல்லாம் உடம்பில் குண்டைக் கட்டிக்கொண்டு தெருவில் உடல் சிதறிச் செத்தவர்களுக்குத்தான். அதற்கு முன்வரை அவர்களுக்கான பெயர் சரியாகவே வழங்கப்பட்டுள்ளது. அதை ஏன் தவறாகப் ப்ரிண்ட் செய்துள்ளீர்கள்?

    ஒருவரது பெயரையே தவறாகச் சொல்லுவது அநாகரீகம். புகழ் வாய்ந்த இந்தக் குழுவின் பெயரைத் தவறாகச் சொல்லலாமா? :) !

  3. நல்ல கட்டுரை. தொடர்ந்து இது சம்பந்தமாக எழுதுங்கள் வெங்கடேசன். நன்றி.

  4. EYE OPENER…. Wonderful…. very very informative… If I knew this earlier, I would have added these points too in http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905285&edition_id=20090528&format=html .

  5. I concur with Bharataputran. I too know only shia and sunny in Islam. Its an eye opener. I always used to think, if Christianity and Islam are really preaching equality and if people convert to these religions in the name of attaining equality, then why these religions are not categoriesed as ‘forward castes’ (FC) and why do they fight for OBC /SC/ST status? If all are equal in them, then all should be the upper caste and hence they should not get any reservation at all. But these days every govt. is inclined to give special quota to them, and first in line is EVR’s followers.

    I also read somewhere, that once Ambedkar was asked question on inter religious and inter caste questions. He replied, when it comes to religion, I am a Hindu first and I will not compromise on that. Any caste issue is our internal issue and we will fight it our own way, but when another religion tries to poke its nose in our affairs, I will first fight that interference. (not sure about exact context and words).

    Again Bharatputrans comment on why he converted to Buddhist and not to any other religion definitely makes sense.

    Kudos to Mr.Venkatesan for this wonderful article.

  6. //… …. அடப்பாவிகளா.. இத்தனை பிரிவுகளா இஸ்லாமிய மதத்தில்..?? நான் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நினைத்தேன்…..//

    பாரதபுத்ரன்,

    ஜாதி என்பது எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் இருந்த, இருக்கிற ஒரு சமூகப் பொருளாதார நிகழ்வு. எனவே இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பது இயல்பான விஷயம்தான்.

    ஆனால், ஜாதி என்பது இந்தியாவில் மட்டும் இருப்பதாகவும், ஜாதிக் கொடுமைகள் என்பது ஹிந்து மதத்தில் மட்டும் இருப்பதாகவும் உலக அளவில் பொய் சொல்லுகிறார்கள். உண்மை மறைக்கப்பட்டதால் நாமும் அதையே நம்பி வருகிறோம்.

    அதனால்தான், யூரோப்பாவிலும், அரேபியாவிலும் ஜாதி இருந்தது, இருக்கிறது என்று யாராவது சொன்னால் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைகிறோம். ஏனெனில், நம்மிடமிருந்து பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

    இப்படி மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்றுதான் ஜாதி என்பது எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் ஏற்படும் ஒரு சமூகப் பொருளாதார நிகழ்வு என்கிற உண்மை. ஜாதி வேறுபாடு என்ற ஒன்றைத் தவிர ஹிந்து மதத்தைக் குறை சொல்ல வேறு காரணங்கள் எதுவும் இல்லை. அதனால், இந்தப் பொய்யை பெரிதாகப் பேசி உண்மையைத் திரித்து ஹிந்து மதத்தில் மட்டுமே இந்த விஷயம் இருப்பதாகப் பொய் பிரச்சாரம் நடக்கிறது. ஹிந்து மதம் என்பது மட்டும்தான் இந்த கீழான பழக்கத்தைப் பின்பற்றுகிறது என்று நம்மை நம்ப வைக்கிறார்கள்.

    இந்த உண்மைகளை மறைப்பதன் மூலம் நம்மைப் பற்றி நாமே இழிவாகவும், தாழ்வாகவும் எண்ண ஆரம்பிக்கிறோம். தன்னம்பிக்கை இல்லாத சமூகமாக நாம் மாறினால், நம்மை அடிமைகளாக்குவதும், சுரண்டுவதும் ”அவர்களுக்கு” எளிதாகிவிடும். எனவே இந்தப் பொய்யை மீண்டும் மீண்டும் நம் மனத்தில் புகுத்தி வருகிறார்கள்.

    உலகம் முழுவதும் ஜாதி என்ற அமைப்பு இருக்கிறது என்ற உண்மை குறித்து இந்தியாவின் ஆகச் சிறந்த சமூகப் பொருளாதார விமரிசகர்களில் ஒருவரான திரு. அரவிந்தன் நீலகண்டன் ஒரு அருமையான கட்டுரையை எழுதியுள்ளார்.

    அந்தக் கட்டுரையில் ஜாதி என்னும் சமூகப் பொருளாதார நிகழ்வின் கொடூரங்களை இந்து சமூகம் மதரீதியாக எதிர்த்துப் போராடுவதையும், ஆனால், ஆபிரகாமிய மதங்கள் அதை எதிர்க்காமல் இருந்ததையும்/இருப்பதையும் மிக அழகாக, சார்பற்ற வகையில் ஆய்ந்தறிந்த முடிவுகளோடு முன்வைக்கிறார்.

    அந்தக் கட்டுரையை நீங்கள் இங்கே http://arvindneela.blogspot.com/2007/07/blog-post.html படிக்கலாம்.

    //….. இஸ்லாமிய மார்க்கம் ஒரு வழிப்பாதை.. போனவர்கள் மீள முடியாது என்பதாலேயே அவர் தலித்களை பவுத்ததிற்கு மாறச்சொன்னதாக படித்திருக்கிறேன்….//

    அம்பேத்கார் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்த காரணம் அதுவும் ஹிந்து மதம் போலவே ஒரு தார்மீக மதம். மேலும், பௌத்த மதமானது பல வகைகளில் ஹிந்து மதங்களில் ஒன்றுதான்.

    இஸ்லாம் ஒரு தார்மீக மதம் இல்லை. இஸ்லாம் குறித்து் அம்பேத்கார் உயர்வான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை.

    எனவே, இந்தியாவில் இருக்கிற உயர்ஜாதி ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற சடங்காச்சார போக்கிற்கு எதிராக நடந்த ஒரு ஹிந்து மதச் செயல்பாடாகத்தான், அம்பேத்காரின் அந்த மதமாற்றத்தை ஹிந்துக்கள் கருதுகிறார்கள்.

    மேலும், பௌத்த மதத்திலும் ஜாதிப் பிரிவுகள் உண்டு. பாரம்பரிய பௌத்த மதக்கொள்கையின்படி ஒரு பிராமணரோ அல்லது ஷத்திரியரோதான் போதிசத்துவராக (அதாவது, பௌத்த மதத்தில் மிக உயரிய நிலையை) அடைய முடியும். இந்த விஷயம் அம்பேத்காருக்கும் தெரியும். எனவேதான், அம்பேத்கார் பௌத்த மதத்திலேயே ஒரு புதிய தனியான போக்கை உருவாக்கி அதில் இந்த கீழான நம்பிக்கைகள் எதுவும் இல்லாதவாறு செய்து அதன் பின்னரே மதம் மாறினார்.

    மேலும், ஹிந்து பாரம்பரியத்தின்படியும், ஸமஸ்க்ருத மொழியின்படியும் “மதம்” என்பதன் பொருள் “ஒருவனது கருத்து” என்பதுதான். மதம் என்பது “அமைப்பு” என்ற பொருளில் எப்போதும் வழங்கப்படவில்லை. எனவே, ஒரு ஹிந்துவாக அவரது மத மாற்றமானது, வெறும் “கருத்து மாறுதல்” மட்டுமே.

    // …….. ……..ஜாதிக்கொடுமை இந்து மதத்தில் வேரறுக்கப் படும்போதோ அல்லது மாற்றங்கள் நிகழும்போதோ மீண்டும் இந்துவாக வாய்ப்பு இருக்கிறது நமது சகோதரர்களுக்கு.. …..//

    ஹிந்துக்களின் அனைத்து மார்க்கங்களின் படியும் மதம் என்ற ”அமைப்பே” கிடையாது. ஒருவர் தன்னை பௌத்தர் என்று அழைத்துக்கொண்டாலும், சைவர் அழைத்துக்கொண்டாலும், சமணர் அழைத்துக்கொண்டாலும், சாக்தர் என்று அழைத்துக்கொண்டாலும், வைணவர் என்று அழைத்துக்கொண்டாலும் அவர் ஹிந்துவே.

    ஹிந்து என்றால் இந்தியர். இந்தியர் என்றால் ஹிந்து. இந்தியாவின் இன்னொரு பெயர் ஹிந்துஸ்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    எனவே, இங்கே மன மாற்றம் மட்டுமே உண்டு. மத மாற்றம் கிடையாது.

    மற்ற மதங்களைச் சாத்தானின் படைப்பாகவோ, முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டிய கொள்கைகளாகவோ கருதாத, இந்தியாவில் தோன்றிய அனைத்து சமூக-ஆன்மிகப் போக்குகளும் ஹிந்து மதங்களே. அந்த மன மாற்றங்களையும் தனிமனித உரிமையாகவே ஹிந்து மதம் பார்க்கிறது.

    எனவே, பொன்னார் மேனியனையும், மரகத மேனியனையும் கண்டு கசியும் ஹிந்து மனம் சித்தார்த்த புத்தரையும், மகாவீரரையும் காணும்போதும் அதே பக்தியோடு பணிகிறது. புத்தரும், மகாவீரரும் தோன்றியிருக்காவிட்டால் நமது சமூகம் வெறும் சடங்குகளில் சீரழிந்திருக்கும். இந்த அளவு வளர்ந்திருக்காது.

    அதே போல ஒரு பௌத்த மதத்தவருக்கும், சமண மதத்தவருக்கும் ஹிந்து தெய்வங்களும், தெய்வங்களே.

    // …. ….. இது தவிர, டாக்டர்.அம்பேத்கரின் தீர்க்க தரிசனம் கூட சரியென்றே எனக்குப் படுகிறது. ….//

    ஹிந்து மதத்தில் தோன்றிய மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவராகவே அவர் மதிக்கப்படுகிறார்.

    அதனால்தான், ஆர். எஸ். எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவிக் கொடியின் முன்னின்று வணங்கிப் போற்றும் “ஒருமைப்பாட்டு வந்தனத்தில்” அம்பேத்காரும் வணங்கப்படுகிறார். பூஜிக்கப்படுகிறார்.

    அந்த வந்தனத்தை இங்கே தருகிறேன்:

    சுபாஷ: ப்ரணவானந்த: க்ராந்தி வீரோ விநாயக:
    டக்கரோ பீமராவஸ்ச ஃபுலே நாராயணோ குரு: (30)

    ….. நமஸ்தேப்யோ பூயாத் ஸகல ஸுஜனேப்ய: ப்ரதிதினம் (32)

    அந்த வந்தனத்தின் பொருள்:

    நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், வங்காளத்தில் தோன்றிய சுவாமி பிரணவானந்தர், புரட்சி வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர், தக்கர் பாபா, டாக்டர் பீமராவ் அம்பேத்கார் , மகாத்மா ஜோதிபா ஃபுலே, ஸ்ரீ நாராயண குரு (30)

    ….. போன்ற நாம் அறிந்த அறியாத அத்தனை பேரையும், ஒவ்வொரு நாளும் நாங்கள் நமஸ்கரிக்கிறோம்.

  7. //நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், வங்காளத்தில் தோன்றிய சுவாமி பிரணவானந்தர், புரட்சி வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர், தக்கர் பாபா, டாக்டர் பீமராவ் அம்பேத்கார் , மகாத்மா ஜோதிபா ஃபுலே, ஸ்ரீ நாராயண குரு (30)

    //

    Thank you Sri களிமிகு கணபதி .

  8. //# மகிழ்நன் June 29th, 2009 2:39 pm//
    // மசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்? //
    கோயில் நுழைவு போராட்டம் நடத்தும் கட்டாயத்தை, இந்து மதம்தான் ஏற்படுத்தியதேயல்லாமல்…..மசூதிகள் ஏற்படுத்த வில்லை.
    இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள்..
    இந்து மதத்தில் தேவர், பறையர்….
    உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தால், முதலில் இதை கண்டியுங்கள்….//

    என்ன சின்ன புள்ள தனமா எழுதறீங்க மகிழ்நன், முகமதியர்களிடம் பிரிவுகள் இல்லை என்று யார் உங்களுக்கு சொன்னது?

  9. // …. …. …. … கோயில் நுழைவு போராட்டம் நடத்தும் கட்டாயத்தை, இந்து மதம்தான் ஏற்படுத்தியதேயல்லாமல்…..மசூதிகள் ஏற்படுத்த வில்லை.
    இஸ்லாத்தில் அனைவரும் சகோதரர்கள்..
    இந்து மதத்தில் தேவர், பறையர்….
    உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தால், முதலில் இதை கண்டியுங்கள்….//

    மசூதியில் சம உரிமை தொழுகை நேரத்தில் மட்டுமே. மற்ற நேரங்களில் அரபிகள் போன்ற உயர்சாதியினருக்குத்தான் உரிமைகள் அதிகம்.

    இந்து மதத்தில் இதுபோன்ற கீழ்மைகளைப் போராடியாவது திருத்திவிடலாம். அழித்துவிடலாம். நமது காலத்திலேயே தாழ்ந்தவர்களாகக் காட்டப்பட்ட சில ஜாதியினர், உயர்ந்த ஜாதியினராக உயர்ந்துள்ளதை நாம் காணுகிறோம். ஆனால், இஸ்லாமிய மதத்தில் அது நடக்கவே நடக்காது என்பதுதான் நிதர்சனம். ஏனெனில், முகம்மது உயர்ஜாதியில் பிறந்தவர். ஆனால், இந்து மதத்தின் ரிஷிகள் அனைத்து ஜாதியில் இருந்தும் உருவானவர்கள். உருவாகிக்கொண்டிருப்பவர்கள்.

    எனவே, மேம்போக்கான சம உரிமையை நம்புவதைவிட, அடிப்படை உறுதியாக இருக்கிற ஆன்மீகப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது.

  10. Good article.
    But, what is the purpose?

  11. I have never seen such an article in my life before, really excellent man! And Mr.Kalimigu Ganapathy stole the show with his thunderous comment… I very well knew that Islam and Christianity are also affected by castes (besides their intolerance to ‘Unbelievers’). But however it is difficult to believe that Buddhism and Jainism are affected by castes, really unbelievable. The great masters’ images are deep-rooted in Indian soil, and my people, you need to read Swami Vivekananda’s “Buddhism- the fulfillment of Hinduism”. It is a very good work. However I can assure you of one thing:- Arya Samaj, Ramakrishna Mission & Math, Narayana Mission and recently Iskcon do not recognize castes nor untouchability.
    And where the hell is our Magizhnan? Hiding somewhere? Come out man! Refute this if you can…..

  12. //எனவே, பொன்னார் மேனியனையும், மரகத மேனியனையும் கண்டு கசியும் ஹிந்து மனம் சித்தார்த்த புத்தரையும், மகாவீரரையும் காணும்போதும் அதே பக்தியோடு பணிகிறது.//

    You stole the words from my mouth, sorry keyboard!

  13. இஸ்லாத்தில் எத்தனை ஜாதி இருந்தாலும் மசூதியில் இந்த ஜாதிக்காரன் மட்டும் தான் தொழுகை வைக்க வேண்டும் மற்ற ஜாதிக்காரன் எல்லாம் பின்னல் நின்று தொழ வேண்டும் இன்னும் சில ஜாதிக்காரன் மசூதிக்கு உள்ளே வரகூடாது போன்ற தீண்டாமை இல்லை.

    மேலும் நீங்கள் சொல்லும் ஜாதி எல்லாம் முஸ்லிம் மக்களுக்கே தெரியாது.. இவை எல்லாம் நடைமுறையில் கிடையாது.

    இஸ்லாமியர்கள் யாரும் திருமணத்தின் போது நீங்கள் பட்டியலிட்டுள்ள ஜாதியை எல்லாம் பார்பதில்லை. எந்த இஸ்லாமியரின் திருமண பதிரிகயிலாவது ஜாதி பெயர் உள்ளதா?

  14. இருப்பான்,
    அன்சாரி, குரேஷி எல்லாம் சாதிப்பெயர்தானே? சையது என்பதும் சாதிப்பெயர்தானே? சையது மேல்ஜாதி, நாசுவன் கீழ் சாதி என்று சொல்வதும், நாசுவர்களுக்கு தனி மசூதி, மரைக்காயருக்கு பெரிய மசூதி என்று இருப்பதும் தமிழ்நாட்டில்தானே? எதுக்கு இந்த வீண் ஜம்பம் எல்லாம்?

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள...

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

(Click this or Press Ctrl+g to toggle between English and Tamil)

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>