முகப்பு » பிறமதங்கள், புத்தக விமர்சனம்

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

August 8, 2009
-  
அச்சிட அச்சிட

அண்மையில் ஒரு மடலாடற்குழு விவாதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நண்பர் ஒருவர் எழுதினார் – “ நேற்றுதான் `Dogma’ எனும் படம் பார்த்தேன். அது கிறிஸ்தவ சமயத்தின் பின்நவீனத்துவ விமர்சனம் என்று காண்கிறேன். ஒரு சமயம் உலக அளவிற்கு பரவுகிறது என்றால் அதன் அடிப்படை அசைக்க முடியாத உண்மைகளைக் கொண்ட சத்யமதமாக இருக்க வேண்டும். இல்லை இழுபட்டு அழியும். இன்று கிறிஸ்தவத்திற்கு அந்த நிலைதான். அது `தத்துவங்களை` அடிப்படையாகக் கொண்டு அமையாமல், யார்,யாரோ சொன்ன கதைகளை வைத்து, தேவாலயம் எனும் மையம் செய்த நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக நடக்கிறது. அங்கு `சிந்தி` என்பதை விட `நம்பு` என்பதே பிரதானம். `அறிவு` என்பது கீழ் போய் `மூடநம்பிக்கையே` முன்வைக்கப் படுகிறது. இந்த ஆங்கிலப் படம் இது பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது… ஒரு சொற்பொழிவிற்கு நெதர்லாந்து போயிருந்தபோது, கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயம் போனால், ஆள் வராமல் தேவாலயம் மூடியே கிடந்தது. அங்கெல்லாம், கிறிஸ்தவத்தை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை. அது பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறது. அவ்வளவுதான்… இந்த நிலையை சரிகட்ட, தேவாலய நிறுவனம் புதிய சந்தையை எதிர்நோக்குகிறது. .. இந்தியா போன்ற நாடுகளில்தான் காசிற்காக சிறுநீரகத்தையே விற்கும் போது, காசிற்காக கட்சி மாறும் போது, காசிற்காக `மதம்` மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே? என்ற எதிர்பார்ப்பில் இச்சந்தை விரிவில் அது ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது தோல்வியுறும்”.

அவருக்குப் பதிலளிக்கையில் நான் குறிப்பிட்டேன் – ”ஆமாம், நீங்கள் கூறியது போல மேற்குலகில் கிறிஸ்தவம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. அதை ஒரு enlightened மார்க்கமாக சிந்திக்கும் மக்கள் யாருமே அங்கு நினைப்பதில்லை. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் இந்த விமர்சனங்களின் துளிகள் கூட வந்து சேர்வதில்லை என்பது தானே நிதர்சனம்? இங்கு ஊடகங்கள், அரசியல் அதிகார சக்திகள் எல்லாம் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் இருக்கிறது. ஒருபக்கம் அவை இந்த தேசத்தின் கலாசாரத்தின் மீதும், அதன் சமயங்கள், தத்துவங்கள் மீதும் அவதூறுகளையும், ஏளனத்தையும் பரப்பி வருகின்றன. இன்னொரு புறம், இதே கலாசாரத்தின் கூறுகளைத் திருடி, அவற்றின் மீது கிறிஸ்தவ முத்திரையைக் குத்த முயன்று கொண்டிருக்கின்றன. .. கிறிஸ்தவ பொய்மை இங்கு அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தைப் பற்றிய நேர்மையான விமர்சனம், ஏன் பிரான்ஸ் போன்ற “கிறிஸ்தவ” நாடுகளிலேயே தங்குதடையின்றி பொதுத்தளத்தில் கிட்டும் விமர்சனம் கூட இந்தியாவில் கிட்டுவதில்லையே??”

சொல்லப் போனால், கிறிஸ்தவம் காலூன்ற முயன்ற ஆரம்ப காலங்களிலேயே, அது இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருப்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த சீசன்பால்கு என்ற பாதிரியை தமிழறிஞர்கள் நேரடியாகவே எதிர்கொண்டு கிறிஸதவ மதத்தின் அடிப்படைகள் என்று சொல்லப் படும் கருத்துக்கள் குறித்து அறிவார்ந்த கேள்விகள் எழுப்பினர். நம் தரப்பில் அவற்றைப் பதிவு செய்யாததால், காலனிய வரலாற்றின் ஒரு பகுதியாக “ஹிந்து அக்ஞானிகளின் கேள்விகள்” என்ற முத்திரையுடன் அவை பாதிரியாரால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய “ஏசு மத நிராகரணம்” என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்தர், சுவாமி விவேகானந்தர் தொடங்கி “சைவதூஷண பரிகாரம்” எழுதிய ஆறுமுக நாவலர் வரை இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்.

expressions_bookஇந்தச் சூழலில், “Expressions of Christianity, with a Focus on India” என்ற தொகுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பிரசார நெடி சிறிதும் இல்லாமல், அதே சமயம் கசப்பான உண்மைகள் எதையும் மறைக்காமல் எழுதப் பட்ட பல அருமையான கட்டுரைகள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

நூலின் அமைப்பும் சிறப்பாக உள்ளது.

கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் முகங்கள், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் கிறிஸ்தவத்தின் முகங்கள், கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ் சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40 கட்டுரைகள் உள்ளன.

”கிறிஸ்தவம் தான் பீற்றிக் கொள்வது போல அச்சு அசலான மதம் கிடையாது. பழைய ஏற்பாடு ஏராளமான விஷயங்களை பழைய மெசபடோமிய, எகிப்திய மூலங்களில் இருந்து பெற்றது என்பது இப்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதே போன்று புதிய ஏற்பாடு தனது மையமான படிமங்களையும், நம்பிக்கைகளையும் அக்காலத்திய பன்முகப் பட்ட கிரேக்க கலாசாரத்திலிருந்தும் (Hellenistic – cosmopolitan culture), கிழக்கு மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அப்போது பரவியிருந்த இந்திய மதங்களிடமிருந்துமே பெற்றது. .. குறிப்பாக, உபநிஷத- பௌத்த சிந்தனைகள் கூறும் முக்தி பற்றிய *தத்துவக்* கோட்பாடு, மறுபிறவி மற்றும் பிறவிச் சுழல் பற்றி ஏதும் அறியாத யூத பின்னணியில் நுழைந்து, ஒரு இறையியல்-நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக உருமாறியது தான் கிறிஸ்தவத்தின் கதிமோட்சம் (liberation) என்கிற கோட்பாடு. பண்டைக் காலத்திய பலதெய்வ வழிபாட்டின் மறைமுக-சுவடுகள் தவிர்த்து இந்தக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தை இஸ்லாம், யூதம் ஆகிய “ஆபிரகாமிய” மதங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது..”

- ”Christianity, a Man made Religion indebted to India” என்ற தலைப்பில் பெல்ஜிய அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst)எழுதிய கட்டுரையிலிருந்து

இந்த அரிய கட்டுரையில், எல்ஸ்ட் கிறிஸ்தவத்தின் சடங்குகள், பண்டிகைகள், சமயக் கருத்துக்கள் உருவான விதம் பற்றி சுவைபட விளக்குகிறார். தன் இளமைப் பருவத்தில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றெல்லாம் இப்போது பிரசாரம் செய்யப் படும் “Jesus in India” என்கிற கருதுகோள் உருவாகி வளர்ந்தது பற்றிய முழுமையான சித்திரமும் இதில் உள்ளது.

கிறிஸ்தவத்தில் பெண்கள் (Women in Christianity) என்ற தலைப்பில் வரலாற்று அறிஞர் மிஷேல் டானினோ (Michel Danino) வின் கட்டுரை இன்னொரு முத்து. பெண்மையைக் கீழானதாக சித்தரிக்கும் ஆதியாகமம், செயிண்ட் பாலின் பெண்மை பற்றிய வசனங்கள், கத்தோலிக்க சர்ச் அதிகார பீடம் மதத்தின் பெயரால் ஏராளமான பெண்களைக் கொன்று குவித்த “சூனியக்காரி வேட்டைகள்” (Witch hunting), கிறிஸ்தவ இறையியலில் இன்று வரை தொடரும் பெண்மை மீதான அச்சம் ஆகியவை பற்றியது இந்தக் கட்டுரை.

ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா வில்லனாகவும், “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ) மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின் உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை முழுமையாக ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது இல்லையா?? மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள் இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை. கலவை வெங்கட் எழுதியிருக்கும் “From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.

பின்னர் காரைக்காலின் பாதிரி (Father Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். சுத்தியால் உடைத்தார். பின்னர் விஷ்ணு மற்றும் பிற திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார். சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர் பாதிரியிடம் சென்று அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு விஷயத்தை சீமாட்டி நடத்திக் காட்டியிருக்கிறாள்; பழங்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில் ஒருவர் தான் அவள் உருவில் வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.

சீதாராம் கோயல் (1921-2003)சீதாராம் கோயல் (1921-2003)

பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான். பிறகு அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும் என்னால் எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது… அவர்களுக்கு இதனால் என்ன விளையுமோ எனக்குத் தெரியாது.. ஆனால் தமிழர்கள் பிரளயமே வந்து விட்டது என்று எண்ணினார்கள். பாதிரிகளும், கிறிஸ்தவர்களாகி விட்ட தமிழர்களும், கவர்னரும், அவரது மனைவியும் அவர்கள் முன்பு எப்போதுமில்லாதது போல சந்தோஷமடைந்தார்கள் … “

- சீதாராம் கோயல் எழுதிய ”பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்” என்ற கட்டுரையிலிருந்து.

ஆனந்த ரங்கம்பிள்ளையின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, அனைத்து சாதி மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம் பிரெஞ்சு காலனிய அரசாட்சியாளர்களால் தகர்ப்பட்ட வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

தூய்மை, அன்பு, சேவை இவையே இந்தியாவில் கிறிஸ்தவத்தின் முகங்கள் என்று தீவிர பிரசாரம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. பாதிரி, மிஷநரி, பிஷப் எல்லாம் போய் இப்போது தமிழில் “அருட்பணியாளர்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். திரைப்படங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாவும் இத்தகைய சொல்லாட்சிகள் பரப்பப் பட்டு பிரசாரம் செய்யப் படுகிறது. எப்பேர்ப் பட்ட கொடுஞ் செயல்களையும், பயங்கரவாதத்தையும் பிரசாரம் மூலமாகவே வெள்ளைச் சுண்ணம் பூசி ம்றைத்து விடலாம் என்று காலனிய, சர்வாதிகார சக்திகள் கருதுவது போலவே கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் கருதுகின்றன.

சொல்லப் போனால் கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற விரிவான கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. இந்தியாவின் கோவா கடற்கரை தொடங்கி பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி அதன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது. (இதே பணிக்கரின் நூலின் அடிப்படையில் திண்ணை இதழில் புருஷ் அவர்கள் ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும் எனகிற விரிவான கட்டுரையை முன்பு எழுதியிருக்கிறார்).

கோவாவின் புனித விசாரணைகள், அதன் பின்னணி, அங்கு இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரங்கள் பற்றிய இரு முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. ஆல்ஃபிரடோ டிமெல்லோ (Alfredo De Mello) வின் “Pouncing on Goa”. ராதா ராஜன் எழுதிய ”Antecedents of the Goa Inquisition”.

”கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்” என்ற பகுதியில் தொகுப்பாசிரியர்களின் அயராத உழைப்பும், பரந்த வாசிப்பும், கூரிய பார்வையும் காணக் கிடைக்கிறது. ராபர்ட் இங்கர்சால் (Heretics and Heresies), பெட்ரண்ட் ரஸ்ஸல் (Why I am not a Christian) ஆகிய சிந்தனையாளர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதிய ”கிளாசிக்” கட்டுரைகளை சேர்த்திருப்பது நல்ல ரசனை. கலிலியோ, மார்க் ட்வெய்ன் உள்ளிட்ட மேற்குலகின் பல முக்கிய சிந்தனையார்களின் மேற்கோள்கள் களஞ்சியத்தை அளித்திருப்பது அருமை.

கிறிஸ்தவம் உண்மையிலேயே உண்மையாக இருக்கவேண்டும் என்று யாராவது விரும்புவார்களா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் அதன் புனிதநூல் மிக வெளிப்படையாகக் கூறுவதன் அடிப்படையில் விசுவாசிகளாக இல்லாதவர்கள் நிரந்தர நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்.. இந்தப் பட்டியலில் என் அப்பா, என் சகோதரர் மற்றும் என் உற்ற நண்பர்கள் எல்லோருமே வந்து விடுகிறார்கள்! இது முற்றிலும் கண்டனத்திற்குரிய கோட்பாடு இல்லாமல் வேறென்ன? (.. and this is a damnable doctrine).

- சார்லஸ் டார்வின்

கங்கையும், காவிரியும், இமயமும், பொதிகையும் பெருங்காடுகளும் சூழ்ந்த நிலப் பரப்பில் உருவாகியவை இந்து, பௌத்த, சமண மதங்கள். மாறாக அங்கங்கு சில சுனைகள் மட்டுமே கொண்ட வறண்ட பாலை நிலத்தில் தோன்றியவை ஆபிரகாமிய மதங்கள். இயற்கையின் இந்த விசித்திரமே இந்த இரு மத-கலாசாரங்களின் உலகத்தைப் பற்றிய பார்வையில் பங்கு வகிக்கிறதோ? பாரத மதங்கள் பன்முகப் பட்ட தன்மையும், இயற்கையின் கொடைகளைப் பற்றிய பிரக்ஞையும் கொண்டவையாக இருக்க, செமித்திய மதங்கள் ஒற்றைப் பார்வையுடனும், இயற்கையின் வதைக்கும் முகத்தையே அதிகம் கண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சிந்தனை இழையில் தொடரும் லோகேஷ் சந்திராவின் Theo Diversity and Human Values என்கிற சுவாரஸ்யமான கட்டுரை மதங்களின் உருவாக்கத்தில் இயற்கை மற்றும் பூகோள அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உருவாக்கும் பங்கு பற்றி ஆராய்கிறது.

இந்த அருமையான நூலை உருவாக்கியிருக்கும் பரமேஸ்வரன், அரவிந்தன் நீலகண்டன் ஆகிய தொகுப்பாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்தப் புத்தகம் கிறிஸ்தவத்தின் கருத்தியலையும், வரலாற்றையும் பற்றிய முதல் தொகுப்பு, இதைத் தொடர்ந்து ”Christianity: Proselytism and Conversion: with a focus on India என்ற தலைப்பில், நடைமுறையில், சமகாலத்திய கிறிஸ்தவத்தின் மதமாற்ற செயல்பாடுகள் பற்றிய இன்னொரு தொகுப்பும் வெளிவரப் போகிறது என்று முன்னுரை கூறுகிறது. அதையும் உடனடியாக அவர்கள் வெளியிடவேண்டும். இந்து அறிவியக்கத்தின் வளர்ச்சிக்கு இந்த இரு தொகுப்புக்களும் சிறந்த துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

——————

Expressions of Christianity With a focus on India
Paperback – 600 Pages (Year: 2007)
Vivekananda Kendra Prakashan Trust /Suruchi ~ ISBN: 8189248847

இணையம் மூலம் இங்கே (வெளிநாடு) மற்றும் இங்கே (இந்தியா) வாங்கலாம்.

சென்னையில் கிடைக்குமிடம்:

விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
தொலைபேசி: 44-2844-0042
மின் அஞ்சல்: vkpt@vkendra.org
இணையதளம்: http://www.vkendra.org 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 

299 மறுமொழிகள் இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

  1. ராம்குமரன் on August 8, 2009 at 10:42 am

    இணைய தளத்தை விட இந்துக்குகளுக்கு என்று ஒரு தினப்பத்திரிகையோ அல்லது வாரஇதழோ இருந்தால் நல்லது. எத்தனையோ பக்தி இதழ்கள் இருந்தும் அவை ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன் கிறித்துவத்தின் குள்ளநரித்தனத்தை பிரசுரிப்பதில்லை

  2. ராம்குமரன் on August 9, 2009 at 8:37 am

    ஈஷ்வர் ஷ‌ரன் எழுதிய தி மித் ஆஃப் செயின்ட் தாமஸ் என்ற புத்தகத்தின் திரு.பி.எம்.சுந்தரம் அவர்களின் தமிழாக்கம்

    http://hamsa.org/Myth.of.St.Thomas.Tamil.version.pdf

    hamsa.org has many other books read and get acquainted

  3. Kreshna on August 9, 2009 at 10:43 am

    Mr Jataayu, you doing a great service by letting us know various kind of books that we didn’t know. Do keep reviewing such books and let us know. We don’t mind buying this books. I have already ordered the book from indiaclub. Thank you.

  4. ராஜா. ஆர். எஸ் on August 9, 2009 at 11:21 am

    Thanks a lot Jatayu.
    Barring few typos, the article is a must read !

  5. கோ.ந.முத்துக்குமாரசுவாமி on August 9, 2009 at 9:39 pm

    நன்றி ஜடாயு. நேற்று நீங்கள் வாசீகப்ப்ரிந்துரைத்த புத்தகத்துக்கு ஆர்டர் பண்ணியுள்ளேன். நீங்கள் படித்துள்ள இது போன்ற புத்தகங்கள் பற்றி அவ்வப்பொழுது எழுத வேண்டுகின்றேன். உங்கள் வாசிப்பின் பரப்பை எண்ணி வியக்கின்றேன்.

  6. ஜடாயு on August 10, 2009 at 6:48 am

    நன்றி கிருஷ்ணா. நன்றி முத்துக்குமாரசுவாமி ஐயா.

    // ராஜா. ஆர். எஸ் August 9th, 2009 11:21 am
    Thanks a lot Jatayu.
    Barring few typos, the article is a must read ! //

    ராஜா, பிழைகளைத் திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  7. J Chandrasekaran on August 10, 2009 at 11:37 pm

    Dear All,
    Join hands with us to renovate lakhs of dilapidated heritage temples in India.
    read
    http://templesrevival.blogspot.com and
    http://reachhistoryblogspot.com
    and
    http://www.conserveheritage.org

    Great job is being done by Jatayu.

  8. tamil friends on August 11, 2009 at 2:14 am

    எழுதித்தள்ளிக் கொண்டிருக்காமல் உருப்படியா ஏதாவது செய்யப்பாருங்கள்

  9. subbu on August 11, 2009 at 1:57 pm

    dear jatayu,
    your article is worth its weight in gold. pl move over to the nearest copying machine and put yourself into it. we need many more like you.
    pl tell me about the tamil books available in this catagory.
    subbu

  10. திருச்சிக் காரன் on August 12, 2009 at 1:50 am

    //ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்//

    கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

    இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதுவும் நல்ல மதம்தான். அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

    இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

    ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

    என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

    நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

    உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

    இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

    சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

    அவர் தொடர்ந்து பல செய்திகளை , பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

    நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

    அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும் , அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

    அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

    ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

    “நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

    ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

    எனக்கு பைபிலில் இயேசு கிறிஸ்து, ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.

    இப்ப‌டியாக‌ பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்பைத் தொட‌ர்ந்து உருவாக்கித் தான் முன்பு புனித‌ப் போர்க‌ள் என்ற‌ பெய‌ரில் இர‌த்த‌ ஆறு ஓட‌ விட‌ப் ப‌ட்ட‌து. இப்போதும் வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து.

    இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.

    இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது!

    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது.

    நண்பர்களே நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால் நாம் மிகவும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க வேண்டும்!

    இந்துக்க‌ளின் வ‌ழி, அஹிம்சை வ‌ழி, அன்பு வ‌ழி, அறிவு வ‌ழிதான்!

    முர‌ட்டுத் த‌ன‌மும், மூட‌த் த‌ன‌மும் உடைய‌வ‌ர்க‌ளிட‌ம், முள்ளில் விழுந்த‌ சேலை போல‌ ந‌ம‌து ச‌முதாய‌ம் சிக்கியுள்ள‌து. சேலைக்கு சேதார‌ம் வ‌ராம‌ல் எடுப்ப‌தோடு, முள்ளை ம‌லராக்க‌ வேண்டிய‌ ப‌ணியும் ந‌ம்மிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

    செய‌ல் ச‌க்க‌ர‌த்தை உருட்ட‌ ந‌ம‌து தோள்க‌ளைக் கொடுத்து உத‌வுவோம்.

  11. siva on August 15, 2009 at 3:25 pm

    very great jadayu i am proud to be a hindu keep up your service

  12. akila on August 17, 2009 at 7:47 pm

    its really a great daring outburst.how long we call ourselves as”majority people” and behave like inferior people?

  13. baskar on August 18, 2009 at 10:35 pm

    “ஏசு மத நிராகரணம்” சைவதூஷண பரிகாரம்” indha books ippothu kidaikkuma enbathi thayavuseithu kooravum. nandri

  14. ஜடாயு on August 18, 2009 at 11:06 pm

    // baskar
    18 August 2009 at 10:35 pm
    “ஏசு மத நிராகரணம்” சைவதூஷண பரிகாரம்” indha books ippothu kidaikkuma enbathi thayavuseithu kooravum. nandri //

    அன்புள்ள பாஸ்கர்,

    சைவதூஷண பரிகாரம் இணையத்திலேயே கிடைக்கிறது. இங்கே –
    http://noolaham.net/project/19/1814/1814.pdf

    ஏசுமத நிராகரணம் தமிழில் அச்சிலேயே வரவில்லை என்று நினைக்கிறேன்.

  15. ஜடாயு on August 18, 2009 at 11:33 pm

    // இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?
    ….
    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது. //

    திருச்சி, பயங்கரமாகக் காமெடி பண்ணுகிறீர்கள். கான்ஸ்டாண்டைன் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு அது நிறுவனப் படுத்தப் படுகிறது, அப்போதே அதன் அதிகார வெறியும், பாகன் (pagan) மதங்களின் மீதான வெறுப்பும் ஆரம்பித்து விட்டது. ஆவணப் படுத்தப் பட்ட கிறிஸ்தவ வரலாறு முழுவதுமே அங்கு தான் ஆரம்பிக்கிறது. சொல்லப் போனால் “இயேசு கிறிஸ்து” என்ற மனிதரைப் பற்றீ இப்போது நீங்கள் அறிவது எல்லாமே இந்த நிறுவன மதம் சொன்னது தான். அதற்கு மாறாக உள்ள கருத்துக்கள் (உதாரணமாக, Da vinci code புதினம் சொல்வது போன்றவை) எல்லாம் கிறிஸ்தவ *மத* அமைப்பு ஒன்று கூட ஏற்றுக் கொள்ளாதவை – அவை கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளேயே புழங்குபவை.

    எனவே நீங்கள் செய்யப் போவதாக சொல்வது self-defeating circular logic. Good luck!

    பைதி வே, இந்த நூலில் சுவாமி தேவானந்த சரஸ்வதி (கனடாவில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து பிறகு இந்து தர்மத்தில் இணைந்தவர்) அவர்களின் அருமையான நேர்காணல் உள்ளது – ‘Christianity, a disaster in human history’. கண்டிப்பாக நீங்கள் அதைப் படித்துப் பார்க்க வேண்டும்.

  16. Satish Kumar A on August 18, 2009 at 11:47 pm

    Came across this in Rediff today. ‘palaivana solai’ enbathu ithuthano?? :)

    Americans slowly turning towards Hinduism, says report

    http://news.rediff.com/report/2009/aug/18/americans-we-are-all-hindus-now.htm

  17. திருச்சிக் காரன் on August 19, 2009 at 1:04 am

    ஜ‌டாயுஜி,

    கிருத்துவ‌ ம‌த‌ம் என்று “நிறுவ‌ப்” ப‌ட்டு, “ப‌ர‌ப்ப”‌ ப‌ட்டு, “செய‌ல்” ப‌ட்டு வ‌ரும் ம‌த‌த்தால், உல‌கிற்க்கு கிடைத்த‌ க‌ஷ்ட‌ங்க‌ள் , அழிவுக‌ள் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ ம‌ல்ல‌!

    ஆனால் யேசு கிரிஸ்து நிறுவ‌ நினைத்த‌ ம‌த‌ம் அதுவ‌ல்ல‌.

    ராம‌கிரிஷ்ண விஜ‌ய‌ம் இத‌ழைப் ப‌டியுங்க‌ள். நான்கு மாத‌ இத‌ழ்க‌ள பார்க்க‌வும். ஏதாவ‌து ஒரு இட‌த்தில் யேசு கிரிஸ்துவைக் Quote செய்து இருப்பார்க‌ள்!

    “யேசுவின் அன்பு முர‌சு” என்று புத்த‌க‌மே வெளியிட்டுள்ள‌து ராம‌கிரிஷ்ண ம‌ட‌ம்.

    I already wrote that,

    We, Hinduism, have motherly consideration towards all the religions. We want all the paths leading to God to be preserved. We dont want any religion to be obliterated or ostrasiced. We want to preserve and develop all the religions!

    // இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா?
    ….
    கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது. //

    உல‌கின் எல்லா ம‌த‌ங்க‌ளையும் செம்மைப் ப‌டுத்தி, நாக‌ரீக‌முடைய‌தாக்கி ச‌ரி செய்யும் அள‌வுக்கு, உண்மையும், முழுமையும், க‌ருத்துக்க‌ளும் உள்ள‌ ம‌த‌ம், இந்து ம‌த‌ம் ம‌ட்டுமே என்ப‌தே என் க‌ருத்து!

    தேளும் பாம்பும் வீட்டின் மூலையில் அலையும் போது, அவை அங்கேயிருந்து போகாது எனும் நிலையில் அவை வெறும‌னே அலைவைதை விட‌ அவ‌ற்றின் விஷ‌ப் கொடுக்கும், ப‌ல்லும் அக‌ற்ற்ப் ப‌ட்ட‌ நிலையில் அலைவ‌து தானே ந‌ல்ல‌து!

    I think this is a very serious matter. If we dont make clarifications, the warring followers of Abrahamic religions would- may god forbid- convert the entire earth into a mere cemetry.

    This is serious matter, is’nt it?

    But you have all the liberty to call my writings as comedy, because I give that liberty to my friends,and so for you also!

  18. திருச்சிக் காரன் on August 19, 2009 at 2:06 am

    ஜ‌டாயு அவர்களே,

    //சொல்லப் போனால் “இயேசு கிறிஸ்து” என்ற மனிதரைப் பற்றீ இப்போது நீங்கள் அறிவது எல்லாமே இந்த நிறுவன மதம் சொன்னது தான். அதற்கு மாறாக உள்ள கருத்துக்கள் (உதாரணமாக, Da vinci code புதினம் சொல்வது போன்றவை) எல்லாம் கிறிஸ்தவ *மத* அமைப்பு ஒன்று கூட ஏற்றுக் கொள்ளாதவை – அவை கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளேயே புழங்குபவை//

    இயேசு கிறிஸ்து என்பவர் உண்மையில் இந்த உலகில் இருந்தாரா, அவர் கன்னிக்குப் பிறந்தாரா, குருடர்களைப் பார்க்க வைத்தாரா, முடவர்களை நடக்க வைத்தாரா – என்பதை எல்லாம் நான் அறுதியிட்டுக் கூறவில்லை- சாட்சி குடுக்கவில்லை!

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இந்த உலகிலே பிறக்காமலே கூட இருந்திருக்கலாம். எனக்கு அவர் செய்த அதிசயங்கள் பற்றி அக்கறையில்லை!

    ஆனால் அவர் கூறியதாக சொல்லப் படும் கருத்துக்களில் நன்மை இருக்கிறதா, உபயோகம் இருக்கிறதா- அதாவது அவரின் மதத்தைப் பின்பற்றுவதாக கூறி காட்டுமிராண்டித் தனம் செய்பவரை திருத்தும் அளவுக்காவது நன்மை இருக்கிறதா, உபயோகம் இருக்கிறதா- என்பது தான் என் அக்கறை.

    “உன்னை ஒரு மைல் தூரம் வரக் கட்டாயப் படுத்தினால், அவனுடன் இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியதாகக சொல்லப் படும் ஒருவரின் பெயரை வைத்து, உலகின் பிற எல்லா தெய்வங்களையும் இகழும்படி என்னைக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

    “ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறி, சிலுவையில் இறந்ததாகக்” கூறப் படும் ஒருவரின் பெயரை வைத்து பல கோடிக் கணக்கான உயிர்களை, (பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உட்பட) கொன்று குவித்து இரத்த ஆறு ஓட விட்டார்கள்.

    அவர்களை திருத்த வேண்டாமா? அதற்க்கு என்ன செய்ய முடியும்?

    நாமும் வாளை உருவியா சொல்லித் தர முடியும்?

    இயேசுவின் பெயரை வைத்து பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழக்கையை Tragedy ஆக்கி விட்டார்கள்.

    இது காமெடியா?

    இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் இருப்பவர்கள் இந்த வேலையை செய்வார்களா? சீனர்கள் இந்த வேலையை செய்வார்களா?

    இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

    இது காமெடியா?

  19. ஜடாயு on August 19, 2009 at 8:04 am

    // இவர்களை மனிதர்களாக்க வேறு யார் இருக்கிரர்கள்?

    இது காமெடியா? //

    அன்புள்ள திருச்சிக்காரன், உங்கள் நல்ல உள்ளத்தையும், உலக அமைதி மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையையும் புரிந்து கொள்கிறேன்.

    நான் காமெடி என்று சொன்னது ”கிறிஸ்தவர்களூக்கு உண்மையான கிறிஸ்துவைப் பற்றி நான் (நாம், அதாவது இந்துக்கள்) சொல்லித்தர வேண்டும்” என்று நீங்கள் குறிப்பிட்டதைத் தான்.

    நாம் ஏதாவது சொல்லித்தர முடியும் என்று எண்ணினால், நம் இந்து தருமத்தைப் பற்றி சொல்லித் தரலாம், அதில் நமக்கு புரிதலும், அனுபவமும், பயிற்சியும் உள்ளது. நாம் கிறிஸ்தவத்தை விமர்சிக்க முடியும், அதன் பிரசாரகர்களே அதைப் பற்றி சொல்வதை வைத்தும், அதன் மதநூல்களை வைத்தும், உலகெங்கும் வெளிப்படையாகத் தெரியும் அதன் track record ஐ வைத்தும், நம் நாட்டில் நம் சமூகத்தில் அது என்ன செய்கிறது என்பதை வைத்தும். அது அறிவியல்பூர்வமானது. அதற்கு மேல் போய், நீ உண்மையான *கிறிஸ்தவன்* அல்ல, கிறிஸ்து சொன்னதை நீ கடைப்பிடிப்பதில்லை என்று கிறிஸ்தவனைப் பார்த்து சொல்ல நமக்கு என்ன உரிமை உள்ளது?அதற்கு அவசியம் என்ன உள்ளது?(அப்படிச் சொல்லும்போது “உண்மையான கிறிஸ்தவன்” என்ற இலக்கணத்துக்கு நமது இந்துப் பார்வையையும், இந்து நெறிகளையுமே நாம் பயன்படுத்துவோம். அதில் அடிப்படையிலேயே முரண் உள்ளது).

    ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஏசுவை *பல தெய்வ அவதாரங்களில் ஒருவராக* ஏற்றுக் கொண்டு அவரது கருத்துக்களைப் பிரசுரிக்கிறார்கள். அது மிகத்தெளிவான இந்துப் பார்வை. ஆனால் “ஏசு ஒருவரே உலக ரட்சகர்” என்ற கிறிஸ்துவப் பார்வைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது. எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ண மடத்தின் கருத்தை எந்த practicing கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்வதில்லை. மிஷனரிகளைப் பற்றீ சொல்லவே வேண்டாம் – “விவேகானந்தர் கண்ட ஏசு” என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் அடிக்கிறார்கள். ஏசுவைப் பற்றி சுவாமிஜி கூறியதில் ஒரு பாதியை மட்டுமே போட்டு, இப்பேர்ப்பட்ட ஏசுவின் பின்னால் மனம் திருந்தி வாருங்கள் என்று பிரசாரம்!

    கிறிஸ்வத்தின் இந்த உத்தியை ரா.கி மடம் இப்போது புரிந்து கொண்டு விட்டது என்பதையும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

    ஒப்பீட்டில் தலாய் லாமாவைப் பற்றிச் சொல்லவேண்டும்.. ஒரு BBC பேட்டியில் அகிம்சை, சமாதானம், திபெத் பற்றி எல்லாம் கேட்டுவிட்டு, “ஏசு கிறிஸ்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற தூண்டில் போடும் கேள்வியை பேட்டியாளர் கேட்டார். தலாய் லாமா “ஒன்றும் நினைக்கவில்லை” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். கேட்டவருக்கு ஷாக். ஒன்றுமே நினைக்கவில்லையா என்று பன்னிப் பன்னி இரண்டு மூன்று முறை கேட்டார், லாமா பிடிகொடுக்கவில்லை. அவரது வாயிலிருந்து ஏதாவது “நற்செய்தியை” பிடுங்க முயற்சித்த மேற்கத்திய கிறிஸ்தவ பேட்டியாளரின் முயற்சி படுதோல்வி அடைந்தது.

    அங்கு ஒரு சராசரி இந்து ஆன்மிகத் தலைவர் என்ன சொல்லியிருப்பார் போன்ற ஊகங்களை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்.

  20. முத்துக்குமாரசுவாமி on August 19, 2009 at 8:50 am

    ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று நாமும் கூறிக்கூறி இந்தக் கருணை உள்ளத்தைக் கிறித்தவர்களுக்கே உரிமையாக்கிவிட்டோம். ந்ம்முடைய மதநூல்களில் அருளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கங்கள் உள்ளன.

    “பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகள்க்கு
    அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
    பெறற்கருந் துறக்கந் தம்மினூஉங்கு
    இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்” என்று ஞானாமிர்தம் என்னும் சைவசித்தாந்தநூல் கூறுகின்றது. உயர்ந்த பண்பாவது யாது? நித்தியமான ஆன்ம வர்க்கத்துக்கு ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதான ரூப வடிவழகும் பெறுதற்கரிய சுவர்க்க போகமும், தம்மைக் காட்டிலும் மிகப்பெருக உண்டாக வேண்டும் என்னும் எண்ணுதற்கு அரிய பெருங்குணம் ஆகிய இதுவே உயர்ந்த பண்பு. இந்தக் குனத்தின் பெருமை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எல்லை கடந்த பெருமையை உடையதாக இருத்தலினால், இதனை ஞானாமிர்த ஆசிரியர் ‘எண்ணரும் பெருங்குணம்’ என்றார். போட்டிகள் மிக்க இன்றைய உலகில் எல்லாரும் எல்லாவற்றிலும் என்னைக் காட்டிலும் உயர்ந்து விளங்க வேண்டும் என விரும்பும் உள்ளம் தெய்வீக உள்ளமாகத்தானே இருக்கமுடியும்?

    அடித்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டு என்று பொறுத்தலை மட்டும் இயேசு கூறினார்.
    நம் சாத்திர நுல்கள் ஒருவன் ஒரு தீங்கிழைத்தானேயாயின், அத்தீங்கினைப் பொறுத்துக் கொள்வதோடு, இவன் நமக்கு இந்தத் தீங்கினச் செய்த காரணத்தினால் இனி இறைதண்டனைக்கு உட்பட்டுப் பெருந்துன்பம் அடைவானே என்று அவனுக்காகப் பரிவதும் சான்றோர் கடன் எனப் போதிக்கின்றன. ‘வாளிட்டு நோவன செய்யினும், மேவன ஆங்கு இழைத்தல்’ அதாவது, வாளால் அறுத்து நோய் தருவனவற்றைச் செய்தராயினும் சுகமாய் இருப்பனவற்றை அவர்க்கு அப்பொழுதே விரும்பிச் செய்தல், இது தான் நல்ல மனிதனின் பண்பு என்கிறது ஞானாமிர்தம்.

    பிற சமய நூல்களையும் அவற்றில் காணப்படும் அறங்களையும் நாம் படித்து ஒப்புமை காணலாம்.ஆனால் நம்முடைய நூல்களில் சொல்லப்பட்டனவற்றையே நாம் வலியுறுத்தி வெளியில் பேசுதல் வேண்டும். இல்லாவிட்டால் நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் அறவுணர்வுகளுக்கும் உரிய நன்றியைக் கிறித்துவ போதகர்களுக்குத் தாரை வார்த்துவிடும் கட்டாயம் ஏற்பட்டு விடும்

  21. முத்துக்குமாரசுவாமி on August 19, 2009 at 8:57 am

    ஏசுமத நிராகரணம் என்னும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் செய்யப்பட்டது. வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால், அவர் எழுதிய, சாந்தலிங்க சுவாமிகளின் நூலான, ‘கொலைமறுத்தல்’ உரையில் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது.

  22. ஜடாயு on August 19, 2009 at 9:09 am

    // வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. //

    அன்புள்ள முத்துக்குமாரசுவாமி ஐயா, இதற்கு ஆதாரம் உள்ளதா – வேறு நூல்களில், பதிவுகளில், ஆவணங்களில்?

    வீரமாமுனிவர் என்கிற ஜோசப் பெஸ்கி ஒரு உயர்ந்த தமிழ் அன்பர்,புலவர் என்று பயங்கர பிரசாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

  23. முத்துக்குமாரசுவாமி on August 19, 2009 at 12:57 pm

    அன்புள்ள ஜடாயு அவர்களே, நான் வீரமாமுனிவர் பற்றிச் சொன்ன இந்தச் செய்திக்கு வலுவான ஆதாரம் இல்லைதான். ஆனால்,துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகளோடு தொடர்புடைய அன்பர்களின் வழிவந்தவர்கள் கூறக் கேட்ட செவிவழிச் செய்திதான். இது அவர்களுக்கு எதிராக வைக்கத்தக்க ஆதாரம் இல்லைதான்.

  24. Malarmannan on August 19, 2009 at 5:23 pm

    Jesus did NOT contemplate to found any religion. According to the gospels, he himself declared that he had NOT come to destroy any existing system. He projected himself as a reformer only. In fact, Christianity is a misnomer. The correct term is Paulism after Saul alias Paul who was NOT a Jew!
    The Jewish belief is coming of another messiah amongst them and those who believed Jesus was the messiah, as reffered in their scriptures, acepted him so, within Judaism, the faith of Jews. There is a blank in the life of Jesus and that was the most important phase in his life. There is no record on this formative period of Jesus. There is a school of thought that he wandered in Hindustan and Tibet and learned Hindu thoughts during that period and returned home at the age of thirty. He lived just three more years on his soil to preach as a reformer, contradicting many of the commandments of Moses. He duly under went baptism according to Jewish custom and did NOT rebel.

    The proselyitisers might argue saying if Jesus had learnt from Hindu thoughts, then why should there be any objection to Hindus getting converted to Christianity. For this, our answer should be since Jesus learnt from Hindus, there is no need for any Hindu to become as Christian but any Chritian is welcome to become a Hindu.

    About a year ago, A Hindu boy was about to fall into the trap of proselytisers and become a Christian, and his worried sister brought him to me for advice. He came along with a Hindu turned evangelist named Sadhu Chellappa. Smt Radha Rajan is a witness to what had happend at my residence because she was also present on the occasion. Soon, that boy got over from the spell of Sadhu Chellappa and he is now perfectly alright! I had to put very embarassing questions to Sadhu Chellappaa at the conclusion, made him to refute his own words by quoting form the New Testament. When he started bluffing, I immediately threw my copy of the Bible before him and asked him to substantiate his claims. He never expected this and remained dumbfounded! Since Radha Rajan could not be patient to hear his nonsense, she had left earlier despite my request to stay. I have no patience to hear such ridiculous arguments, she said and excused. I patiently allowed Sadhu Chellappaa to empty what all he had and then started my questioning. I made him to admit that he receives money for his services of converting Hindus in front of that boy! My question regardiong this was indirect and that fake Sadhu, admitted wihtout his knowledge that he is being paid hefty for his proselytisation job! There were some more people present to enjoy the drama in the tiny room of mine, where Maryada Purushottam Sri Ramachandra Chandra Moorthi, Sri Anjaneya Prabhu, Bhagwan Sri Kridshna, Sri Shivji and Amba were also present. I do NOT want to disclose the names of the boy and his sister in public but people who know me also know that it was not the first time a boy or a girl saved from the traps of proselytisers when they were brought to my residence. Sri Anantha Narayana, a young industrialist who is a staunch Hindu known to Smt Radha Rajan was also present on that day till last. And he also knows that boy has been brought to his senses later on and the self styled Sadhu proselytiser had to retreat in haste on that occasion!

    I told Fake Sadhu Chellappa to come again and he agreed but I am still waiting for his second visit!

    MALARMANNAN

  25. baskar on August 20, 2009 at 2:03 am

    ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று நாமும் கூறிக்கூறி இந்தக் கருணை உள்ளத்தைக் கிறித்தவர்களுக்கே உரிமையாக்கிவிட்டோம். ந்ம்முடைய மதநூல்களில் அருளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கங்கள் உள்ளன.
    “பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகள்க்கு
    அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
    பெறற்கருந் துறக்கந் தம்மினூஉங்கு
    இறப்ப வேண்டுமென் றெண்ணரும் பெருங்குணம்”

    ரொம்பவும் எளிமையான ஒரு உதாரணம் , அதுவும் உலகறிந்தது
    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்– இதை விடவா ஒரு தத்துவம், பணிவு ஒழுக்கம் அன்பின் இலக்கணம் தேவை. நன்றி ஜடாயு அவர்களே தங்களின் தயவால்
    எனக்கு ஒரு புதையல் கிடைத்தது ( சைவ தூஷண பரிகாரம் ) மீண்டும் நன்றிகள். மேலும் தங்களின் இடுகைகள் மிகவும் அற்புதம்

  26. joseph on September 9, 2009 at 6:05 pm

    Please don’t make a propaganda that all christians in India have converted only because of money, I can show you a number of christians who stick on to their faith till they die, if you know anyone who got converted by getting money then there is no problem you can reconvert him by giving more money. He is well in your pocket.
    People like Elst are a disillusioned lot who have an aversion to christianity. European and American white christians are agnostic and atheistic because they do not want any accountability to their actions, do you think that a wayward drunkard, and a drug addict will be enlightened in his inner soul and that was why he left christianity,Comedy of all sorts
    If they think that they don’t believe in fables then does hinduism is any way inferior in having fables. Will a reasoning mind that rejected christianity because of fables accept the fables in hinduism.
    In western nations it is not the failure of christianity but the failure of church and christianity, the core teachings of christ stands the test of time and it continues to guide us till now and it will continue to do so.

  27. களிமிகு கணபதி on September 9, 2009 at 7:38 pm

    //….Will a reasoning mind that rejected christianity because of fables accept the fables in hinduism….//

    Only “A reasoning mind” can accept Hinduism and reject christianity. The fables of christianity has only sowed violence whereas the fables of Hinduism has brought amity and freedom.

    //…..In western nations it is not the failure of christianity but the failure of church and christianity, the core teachings of christ stands the test of time…//

    If it is true, then I can only respect church and christianity. Jesus is the first person in any theology to start the idea of “eternal hell” that has started all these violence and aggression, and brought down the humanity lower than animals.

    //….and it continues to guide us till now and it will continue to do so….//

    The goal of christians on the earth is to prepare for armageddon. As a christian you will prepare the earth for such one.

  28. joseph on September 10, 2009 at 12:13 pm

    என்னங்க கணமிகு கணபதி அவர்களே
    எமதர்ம ராஜன், வைகரணீ கரை, நரக லோகம் இதெல்லாம் இந்து மதத்தில் தானே இருக்கு, வசதியா அதை மறந்துட்டீங்களே.
    பைபிளில் உள்ள கதைகள் பிரிவினைகளை விதைத்தது என்கிறீர்கள், இதிகாசங்களில் பலமுறை நல்லவர்கள் எல்லாம் தேவர்கள், தீயவர்கள் எல்லாம் அசுரர்கள் என சதா இவர்களது சண்டையையே மேன்மைப்படுத்தி வந்துள்ளதை மறந்து விட்டீர்களா.
    ஏங்க அப்போ மதத்தை வைத்து குஜராத்தில் நடந்தது அர்மெகதோன் தானே. அதை ஜஸ்வந்த் சிங் தானே இப்போது புட்டு புட்டு வைக்கப்போகிறார், இந்த அக்கிரமங்களுக்காக தானே வாஜ்பாய் கண்ணீர் வடித்தார்.

  29. RAMGOBAL on September 10, 2009 at 1:08 pm

    திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் இணைந்தார் பாஸ்கர் அவர்களே. திருக்குறள் இந்து மறை கிடையாது. அது உலகப்பொதுமறை என்று தங்களுக்கு தெரியாதா. மதங்களை குறிப்பிடாத ஒரே மறை திருக்குறள். பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

  30. களிமிகு கணபதி on September 10, 2009 at 1:21 pm

    Dear Joseph,

    My emphasize is on “eternal” and not on “hell”.

    It is true that some of the Hindu scriptures talk about hell. But, the hell or heaven of Hinduism is not a “permanent” hell or heaven; they are not eternal.

    Jesus is the firs person who sowed this idea that there is an “eternal hell” and “eternal heaven” and caused the eternal misery called Christianity.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.