திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்

வருகிற 22/8/2009 அன்று குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய அனாரிய சமாஜ் அறக்கட்டளை சார்பில் “திராவிடரும் திராவிட இந்தியாவும்” என்ற தலைப்பில் ஒரு மொழிபெயர்ப்பு நூல் (உத்தரப் பிரதேசம் மயின்புரியைச் சார்ந்த திரு. எஸ்.எல். சாகர் என்பவரால் இந்தி மொழியில் எழுதப்பட்ட ‘திராவிட் அவுர் திராவிடஸ்தான்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு) வெளியிடப்பட இருப்பதாக அறிகிறோம். இந்நூல் வெளியீடு தொடர்பாக ‘Dravidians and Dravidian India’ என்ற தலைப்பில் ஒரு சிறுபிரசுரம் வெளியிடப்பட்டு, அந்த சிறுபிரசுரம் எமக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அ. கணேசன்  நாடார்
அ. கணேசன் நாடார்

நாகர்கோயில் சிதம்பரநாதன் தெருவிலுள்ள அனாரியன் பதிப்பகத்தாரால் அப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பிரசுரத்தில் எம். சுந்தர் யேசுவடியான் என்கிற எம்.எஸ். மங்காடு என்பவர் அந்நூலை அறிமுகப்படுத்துகிற வகையில் ஒரு குறிப்பினை எழுதியுள்ளார். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன உறுப்பினர் என்ற வகையில் அந்த அறிமுக உரையில் எழுதப்பட்டுள்ள அபத்தமான சில கருத்துகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது எம் கடமை என்று கருதுகிறேன்.

வட இந்தியர்களுக்கு, மூல நூலின் ஆசிரியர் எஸ்.எல். சாகர் என்பவரால் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதாக அறிவுரை குறிப்பிடப்பட்டுள்ளது.

1. வட இந்தியர்கள் தமிழைக் கட்டாயம் கற்க வேண்டும்.

2. வட இந்தியர்கள் ராம் லீலா கொண்டாடுவதையும் ராவணனின் கொடும்பாவியைக் கொளுத்துவதையும் நிறுத்த வேண்டும்.

3. பிராமணப் புரோகிதர்களையே பூசைப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உள்மன உந்துதலை வட இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

4. அனாரியர்களான திராவிடர்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்து வேதங்களில் உள்ள பகுதிகளையும் அவற்றின் உரைகளையும் நீக்கவோ திருத்தி எழுதவோ செய்யவேண்டும்.

5. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய அரசு சுயாட்சி வழங்கவேண்டும்.

இவற்றுள் முதல் அறிவுரையைப் பற்றிய எமது எதிர்வினை பின்வருமாறு:

இந்திய வரலாற்று ஆய்வில் ஈடுபடுவதற்குத் தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு அறிவு மிகவும் அவசியமானதாகும். அதே வேளையில், இந்தியாவிலுள்ள வெவ்வேறு மாநிலங்களின் மக்களிடையே ஒரு தொடர்பு மொழியாகத் தமிழை அறிமுகப்படுத்த முயல்வதென்பது சற்றும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். ஏன், திராவிட மாநிலங்களான கேரளத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் கூட தமிழைக் கட்டாயமாகக் கற்பிப்பது சாத்தியமா? திராவிட மொழிகளுக்குள் தலைமை வகிக்கக்கூடிய தகுதிபெற்ற மொழி தமிழே என்பதில் நமக்குச் சற்றும் ஐயம் இல்லை. ஆனால், அந்த உண்மையைக்கூட கேரள, ஆந்திர, கர்நாடகத்துச் சகோதரர்களீடம் நாம் நிலைநாட்ட முடியவில்லை. மலையாளமும், கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு இணையான செம்மொழிகளே என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்ட இன்றைய நிலையில் திராவிடத் தலைமை மொழி தமிழே என்பதை அவர்களுடைய சிந்தனையில் பதிய வைப்பதே இமாலய முயற்சி தேவைப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில், இது போன்ற வெற்று கோஷங்களால் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை.

இரண்டாவதாக, ராம் லீலா கொண்டாட்டங்களையும், இராவணனின் கொடும்பாவியைக் கொளுத்துவதையும் வட இந்தியர்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமன் சூரிய குல க்ஷத்திரியன். இராவணன் புலஸ்திய ரிஷி கோத்திரத்துப் பிராமணன். இது இராமாயண நூல்களில் மட்டுமின்றிப் பல்வேறு புராணங்களிலும் பதிவுபெற்றுள்ள உண்மையாகும். கரிகால் சோழன் தொடங்கிப் பிற்காலச் சோழர்களான இராஜராஜன், இராஜேந்திரன், குலோத்துங்கன் போன்றோர் சூரிய குல ராமன் தங்கள் குல முன்னோன் என்று பதிவு செய்துள்ளனர். சூர்ப்பணகை ராமனிடம் இச்சைகொண்டு அவனை அடைய முயலும்போது ராமன், ”சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன்” என்று குறிப்பிட்டு அவள் இச்சைக்குத் தடை போடுகிறான் என்று கம்ப ராமாயணத்தில் (ஆரண்ய காண்டம், சூர்ப்பணகைப் படலம், பா. 49) குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இராவணன் வம்சம் அந்தணர் குலம் என்றும், தனது வம்சம் க்ஷத்திரிய குலம் என்றும், தங்களுக்குள் இத்தகைய உறவு பொருந்தாது என்றும் ராமன் குறிப்பிடுவதாகப் பொருளாகும். கம்பர் உவச்சர் எனப்படும் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சேரமான் பெருமாள் மன்னரான குலசேகர ஆழ்வார் “எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ” என்று தம்முடைய பாசுரத்தில் (பெருமாள் திருமொழி 8ஆம் பதிகம்) குறிப்பிட்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இரகு வம்சத்துத் தலைவன் இராகவன் (இராமன்) தங்கள் குல முன்னவன் என்று க்ஷத்திரியச் சான்றோர் மரபினர் தங்கள் செப்புப் பட்டயங்களில் பதிந்து வைத்திருப்பதை அனாரிய சமாஜத்தார் உணர வேண்டும். சேரமான் பெருமாள் தங்கள் குல முன்னோர்கள் என்று உரிமை பாராட்டி அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் சான்றோர் சமூகத்தவர்கள் ஒரு விழா நடத்தி அதில் ஒரு சான்றோர் குடும்பத்தவரைச் சேரமான் பெருமாளின் வாரிசு என்றே அடையாளப்படுத்திப் பெருமை சேர்த்ததாகவும் அறிகிறோம். அந்த விழாவில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சான்றோர் சமூகத்தவர்கூட பெருமிதத்துடன் பங்கேற்றார்கள் என்றும் அறிகிறோம்.

இப்படிப் பெருமிதம் கொள்வது என்பதே பொய்யான பெருமை பாராட்டுதல் என்று அனாரிய சமாஜத்தார் சொல்லக்கூடும். சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும். எங்கள் முன்னோர் பெருமித உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிற ஒரு குழுவினருக்கும், கால்டுவெல் போன்றோர்கள் வந்து நாகரிகத்தைக் கற்பிக்கின்ற காலம்வரை எங்கள் முன்னோர்கள் உடை உடுத்துவதற்குக்கூட உரிமையின்றி அம்மணமாக அலைந்து திரிந்தார்கள் என்று கூச்சமின்றிச் சொல்லித் திரியும் குழுவினருக்கும் வரலாற்று உணர்வில் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்.

ramaleela01இராவணனைத் தங்கள் குல முன்னவனாக ஸ்ரீமாலி (திருமாலி) பிராமணர்கள் என்ற சாதிப் பிரிவினர் கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரில் இராவணனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். (ஆதாரம்: New Sunday Express 28/10/2007, p.13) இந்த ஸ்ரீமாலி பிராமணர்கள் ஒரிசா மாநிலத்திலும் மடம் அமைத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதே வேளையில், சூரிய குலச் சத்திரியர்கள் என உரிமை கொண்டாடும் சான்றோர் குலப் பிரிவினர்கள், தங்கள் சிற்றூர்களில் உள்ள கோயில்களில் இராமனை தெய்வமாக வைத்து வணங்கி வருகின்றனர். தங்கள் சமூகக் கோயில் விழாக்களில் இசைக்கப்படும் வில்லிசைப் பாடல்களில் இராமாயணத்தைத் தவறாமல் பாடிவருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இப்பிரிவினர் வலங்கை உய்யக்கொண்ட ரவிகுல க்ஷத்திரியர்கள் என்றும், மார்த்தாண்ட நாடாக்கள் என்றும், ஆதித்த நாடாக்கள் என்றும் பட்டம் புனைந்து தங்கள் பாரம்பரியப் பெருமிதத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இதற்குக் கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களும் உள்ளன. கொங்கு நாட்டு அவல்பூந்துறை சான்றோர் மடத்துச் செப்பேட்டில் இராமனைத் தங்கள் குல முன்னோனாகக் குறிப்பிடுவதோடு, வாலியைக் கொன்ற சூரியப் பிரதாபர்கள் என்றும், கெளசலை (இராமனின் தாய் கோசலையின் மரபினர்) நாடார்கள் என்றும், உத்தர தேசத்தில் அயோத்தி மாநகரில் தாயார் தமக்கு க்ஷத்திரிய வருணத்தினால் நாயக்கப் பட்டம் நலம்பெறப் பெற்றவர் என்று தங்கள் குலப் பெருமிதங்களை ஆவணங்களாகப் பொறித்து வைத்துள்ளனர். இவர்கள் யாருமே இராவணனைத் தங்கள் குல முன்னோனாகக் குறிப்பிட்டுக் கொள்ளவோ, வழிபடவோ செய்பவர்கள் அல்லர். இத்தகைய நடைமுறைச் சான்றுகள் இருக்கும்போது இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல ஆதாரமில்லாத கருத்துகளையே பிடிவாதமாகப் பேசிவருவது கண்டனத்துக்கு உரியதாகும். அல்லது, சோழர்களை ஆரியர்கள் என்றும், திருமாலி பிராமணர்களைத் திராவிடர்கள் என்றும் அனாரிய சமாஜத்தவர்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறீர்களா? இதற்கு அவர்களிடமிருந்து நேரடியான பதிலை எதிர்பார்க்கிறோம்.

மூன்றாவதாகத் தாங்கள் குறிப்பிடுகின்ற அறிவுரை குறித்து – பிராமணப் புரோகிதர்களை நியமித்துப் பூசைப் பணிகள் செய்வது என்பது இந்துக்களின் பிரச்சினை. அது பற்றி இந்துக்களுக்கு அறிவுரை கூறுவதற்கு வேற்று மதத்தவர்களுக்கோ, கடவுள் மறுப்பு இயக்கத்தவர்களுக்கோ எந்த உரிமையும் கிடையாது.

நான்காவது அறிவுரை குறித்து – இந்து மத வேதங்களில் அனாரியர்களாகிய திராவிடர்களை இழிவுபடுத்துகிற பகுதிகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக் குறித்து ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தஸ்யுக்கள் என்றும், தாசர்கள் என்றும், அநாச (சப்பை மூக்குக்காரர்கள்) என்றும் வேதங்களில் குறிப்பிடப்படும் சொற்கள் இன அடையாளம் கொண்டவைதாமா என்பதற்கு இன்னும் தெளிவான கருத்து இல்லை. ஆரிய இனத்தவரிலேயே தஸ்யுக்கள் இருந்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய சில பிராமணர்கள் தாசி புத்திரர்களாக (தஸ்யுக்களாக) இருந்தனர் என்பதையும் சற்றுப் பிற்பட்ட வேதப் பிரதிகள் குறிப்பிடுகின்றன என்றும், வைதிகப் பிராமண சாதிக்குள் ஆரியருக்கு முற்பட்டச் சமூகப் பூசாரி மரபினர் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர், “The theory of Aryan race, its history and politics” என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

agastyar-8x11-smபாண்டிய குலச் சான்றோர்களுக்குக் குல குருவாக இருந்து தமிழ் கற்பித்த அகத்தியர் திலோத்தமை என்ற நடன மாதுவின் மகன் என்ற வேதகால வர்ணனையை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, அகத்தியரைக் கோயில் கட்டி வழிபடுகின்ற, அகத்தியரால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவத்தைப் போற்றுகின்ற குமரி மாவட்ட மக்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள். மேலும், இந்தியாவிலேயே 5 வகை மனித இனங்கள் (race) காலம் காலமாகச் சண்டையிட்டும், கூடி வாழ்ந்தும் காலப் போக்கில் தனித்த அடையாளங்களைவிட்டுக் கலந்தும் விட்டனர். மொழியியல் மட்டத்தில் தனித்த அடையாளங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன என்பது மட்டுமே உண்மையாகும். அநாச என்று வேதங்களில் குறிப்பிடப்படும் சொல் இன அடிப்படையில் இந்தோ ஆஸ்த்ரலாய்டு அல்லது நெக்ராய்டு மக்களைக் குறித்திருக்கக்கூடும். மங்கலாய்டு இனக் கலப்புக் கூறுகளும் இதில் இருந்திருக்கலாம். ஆனால், மத்திய தரைக்கடல் பகுதி இனத்தவராக முடிவுசெய்யப்பட்டுள்ள்ள திராவிடர் இந்த ‘அநாச’ பட்டியலில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. நிலைமை இவ்வாறிருக்க 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியப் பாதிரிமார்களால் பிரசாரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட இத்தகைய வரலாற்று வியாக்யானங்களை அப்படியே பிரதி எடுத்து மறுபதிப்புச் செய்வதென்பது வரலாற்று ஆய்வாகக் கருதப்படாது. மாறாக, மக்களுடைய நியாயமான வரலாற்றுப் பெருமித உணர்வை இழிவுபடுத்தி, அதன்மூலம் ஆதாயம் தேடுகின்ற ஒரு வழிமுறையாகவே கருதப்படும்.

திரு அ. கணேசன் நாடார் அவர்கள் சென்னையிருந்து இயங்குகின்ற தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன உறுப்பினர். தமிழக சமூக வரலாறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவர்.

25 Replies to “திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும், பதிலடியும்”

  1. திராவிடனாவது ஆரியனாவது?

    இந்த மாய்மாலத்தை இன்னும் பறைசாற்றி கொண்டு இருப்பவர்கள் ரொமிலா தாப்பர், விட்சல் போன்றோர்தான்.

    ஆரிய படையெடுப்பு முதலான பொய்களை முதலில் களைய வேண்டும்.

    மெக்காலே போன்றோரின் பொய்மைகளை திரு கணேச நாடாரின் இந்த கட்டுரை மறுப்பது ஒரு நல்ல முன்னோடி.

  2. அருமையான ஆணித்தரமான கட்டுரை. கணேசன் நாடார் அவர்களுக்கு நன்றி.

  3. புரட்சியாளர் அம்பேத்கர் ‘சூத்திரர்கள் யார்?’ என்ற தமது நூலில் ஆரியர்கள் வெளிநாட்டவரல்லர்; இந்த ஆரிய வாத தியரியே குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டியவை என்று கூறியுள்ளார்.

  4. I appreciate the article.

    I request all the people to take the correct Hinduism to all the people in India.

    Let the people enjoy the pleasure in worshipping the God.

    Let them worship any God Murugan, Ayyaappan, Baalaaji, Ram, Krishnan, Siva, Viknesh…. as per their like.

    A true devotee will respect and be comfortable with all gods, though he has a special liking for his personal God.

    Give all the habit of devotional bakthi forgetting every all anxieties, pain and pleasure.

    Then all these ” disputes” will be vanished.

    Once they enjoyed the pleasure in worshipping the God, they will love all humans!

    Before we tell others, first let us involve in genuine spiritual activity, whenever we find time!

    Let us concentarte on the optimistic, forward looking future Hinduism.

    While we analyse the past, let us plan for future also, keeping the past as a Guidance!

  5. திரு.கணேசன் நாடார் போன்றவர்களை இறைவன் இந்து சமூகத்துக்கு அளித்த இணையற்ற செல்வமாக நான் கருதுகிறேன்! திராவிடன் என்றும் திராவிட இயக்கம் என்றும் முட்டாள் தனமான பொய் பிரச்சாரம் செய்யும் மானங்கெட்ட தீமையான போதனைகள் அழிந்து உண்மை பிறக்கப்போவது எப்பொழுது?

  6. The Real history of Chanror Kulam.

    The Copper plate of Avalpunthurai tells about Vettuvan,Vedar, Poovilan, Mavilan and Kaavilan.
    kannappa Nayanar lineage(Vedar King) is Vettuvan,Vedar, Poovilan, Mavilan and Kaavilan.

    Vettuvan,Vedar, Poovilan, Mavilan and Kaavilan are Chanror Kulam.

    Vettuvan,Vedar, Poovilan, Mavilan and Kaavilan are Vettuvar (Vettuva gounder) only.

    If anybody objects the above statement,you should explain here about the five families(Vettuvan,Vedar,Kaavilan,Maavilan and Poovilan) and 162 lines of the
    copper plate of avalpunthurai.

    Can anybody explain me Whether Vettuvar(Vettuvar gounder) got “Gounder titile” or Shanar(Nadar) got “Gounder title” from the copper plate of Avalpunthurai ?
    அவல்பூந்துறைச் சான்றோர் மடச் செப்பேடு
    எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

    ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம் அவல்பூந்துறையிலுள்ள சான்றோர் மடத்தின் மடாதிபதி செல்வரத்தினக் குருக்கள் வசமுள்ள செப்பேடு.

    பக்கம் – 1

    (சந்திர சூரியர், தாரகாசுரனை மிதித்த நிலையில் காளி, காளியின் வலப்புறம் ஏழு வீரர்கள், ஏணி, வடலிப் பனைமரம், காளியின் இடப்புறம் ஏழு மாதர்கள் ஆகிய உருவங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. காளியின் உருவம் நான்கு கரங்களுடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. முன்கரங்கள் டமரு ஏந்திய நிலையிலும் வரதத்திலும் பின்கரங்கள் பாசம், சூலம் ஏந்திய நிலையிலும் உள்ளன.)

    ஜிவமயம்

    1. வய்ய நீடுக மாமளு மன்னுக மெய்விரும்பிய அன்பர் விழங்குகை சய்வ நன்னெறிதான் தழைத்தோங்குக தெ

    2. ய்வ வெண்டிரு நீறு சிறக்க வே அருழால் ஆதிநந்திகசுரெனுக் கிரகத்துத் (திருவாய்) திருவாய் மொழி

    3. ந்தருழினபடி கிறெதத்திறேதத்துவாபரக் கலியுகம் இந்த நாலுயுகங் கொண்டது ஒரு சதுர்யுகம் இப்படி சது

    4. ர்யுகம் ஆயிரம் சதுர்யுகங் கொண்டது பிறமாவுக்கு ஒரு பகல் இந்த ஒரு பகலில் பதி நாலு மனுக்கள் சகார்த்

    5. தம் யிப்படி யிரவு பகல்க் கொண்டது பிறமாவுக்கு ஒருதினம் யிந்தத் தினம் முன்னுத்தறுபது கொ

    6. ண்டது ஒரு வருடம் இந்த வருடம் நூறு கொண்டது ஒரு பிரறம பிரளையம் இப்படி கோடி பிரளையம் கொண்டது விஷ்டுவு

    7. க்கு ஒரு பகல் இப்படியிரவு பகல்ரண்டு கொண்டது விஷ்ணுவுக்கு ஒரு தினம் இந்த தினத்தில் முன்னூற்றறுபதுகொண்

    8. டது ஒரு வருடம் இந்த வருடம் நூறு கொண்டது விஷ்ணு சகார்த்தம் இப்படி கோடி விஷ்ணு சகாற்த்தங் கொண்டது உமா.

    9. தேவிக்கி அவிழ்ந்த கூந்தல் முடிக்குநேரம் இப்படிப்பட்ட மகாப்பிரளைய காலத்தில் ஒரு பிறமப்பிரளையத்தில் துருவமண்

    10. டல பரியந்தம் சலப்பிரளையமான காலத்தில் வுலகமெல்லாமழியுங் காலத்தில் காஞ்சிபுரமென்னு நகரம் அழிவில்

    11. லாமல் தோணி போலேமிதந்து பிரளைய முடிந்த பின்பு பிறமதேவன் கரத்திற் பிறந்து லோகசிஷ்டிசெய்தபடியி

    12. னாலதற்கு பிரமபுர மென்றுந் தோணிபுரமென்று காஞ்சிபுரமென்று இப்படி பன்னிரண்டு திருநாமத்

    13. தையுடைய திருநகரத்தில் அனேகந் தேவாள் அனேகஞ் சதுர்யுகம் புசை செய்தருளிய தேவதேவன் தே

    14 வோற்றுமன் தேவதா சாறுவபுமன் பதிப்பிரியன் பாதஙற்சலன் பார்பதி வல்லபன் பார்வதி மனோகரன் பார்

    15 பதி பிராண நாயகன் முத்திக்கு வித்து முக்கணீசுரன் நின்ற கோலமழகிய நிமலனனுக்கிரகத்தினால்

    16. செம்புத்தீவில் திருவட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் சிவசுப்பிறமண்ணிய சுவாமியார் சுரலோகரட்ச

    17. கர் தெட்சண விப்பிரப் பிரியர் விசுவமூற்தி சரவணபவன் சண்முகப் பிறதாபன் குக்குடத்துவசன் குங்கு

    18. மவற்னன் குஞ்சிதாறூடன் கெளரி திருமகன் கணபதி சகோதறன் தெய்வானை வள்ளி மனோகரன்§

    19. தவர் சிறைமீட்ட தேவசேனாபதி அமரர்சிறை மீட்ட அமராபதி காவலன் பக்கரைப் பகட்டரக்கர் ப

    20. ட்டிடப் படைக் கெளத்திற் கொக்கரித்துடற்கிளித்த குக்குடத்துவ[ச]ன் சக்கிரவட்ட மெட்டிரட்டி

    21. தாவிச் சிரகாலடிக்குற தோகைப் பிரதாபதுரங்கன் சிஷ்டிக்கும் விறுமனைச் சிரசு திண்டாடக்

    22. குட்டிக் குடுமியை யெட்டி வாங்குங் கோல விறும பதங் கொடுத்தருளிய குமார கண்டி

    23. ரவன் பரமேசுரர் திருவுளப் படிக்கி காஞ்சி நகரத்தில் ஆதிசைவரில் கெளணிரிஷி கோ

    24. த்திரத்தில்ச்சிவபாதஇறுதையர் தேவியார் காமாச்சியம்மன் திருவவுதாறத்தில்

    25. திருவவு தாரம்(ஞ்) செய்து ஓதாதுணரவுமை தனவமுத மூட்ட வுண்டருளி

    26. ய சற்சனசுத்த சிவாசார சைவ சமைய பரிபாலகறாகிய திரிஞான சம்மந்த

    27. ப்பெருமாள் மடாதிபறான ஆதிசைவ ஆண்டகுருறாய சுவாமியாரவர்கள் அனுக்கிர

    28. கப்படிக்கி ஸெஸ்த ஸ்ரீ மன்மகாமண்டலேசுரன் அரியராயர் விபாடன் பாஷைக்குத்த

    29. ப்புவராயர் கண்டன் மூவராயர் கண்டன் முதல்வராய கண்டன் மேதினி மீசுர கண்ட

    30. ன்சமர கோலாகலன் வீரகஞ்சுகன் வீரப் பிரதாபன் மேதினி காவலன் கண்டனாடு கெ

    31. ¡ண்டு கொண்டனாடு கொடாதவன் ஒருகுடை நிழற்கீளுலகமுளுதாண்டவன் இராசாதி

    32. றாசன் றாசபரமேசுரன் றாசமார்த்தாண்டன் றாசபுங்கவன் றாசநாறாயணன் றாசகேச

    33. ரி அசுபதி கெசபதி நரபதி நவகோடி நாராயணன் பூறுவபட்சம தெட்சண உத்திர சத்த

    34. சமுத்திராதிபதி எம்மண்டலமுந்திறை கொண்டருளிய றாசப்பிரதாபன் றாசாக்க

    35. ள்தம்பிறான் றாசமன்னியன் றாசவற்த்தனன் றாசகிரிடி றாசசம்பிரமன் றாசகோலாகலன்

    36. றாசவுத்துங்கன் றாச கண்டீரவன் றாசபராக்கிரமன் றாசவுக்கிரமன் றாசசுரோத்துமன்

    37. துலுக்கர் தள வி(ய)பாடன் துலுக்கர் மொகந்தவுள்த்தான் ஒட்டிய தளவி(ய)பாடன் ஒட்டி

    38. யர்மோகந்தவிழ்த்தான் மட்டடங்காத மாற்றலர் தம்மை வெட்டியெ விரு(து*) கட்டிய சம

    39. ர்த்தன் கொட்டத்து மன்னர் குரும்பெலாந்தவிழ்த்துத் திட்ட மடக்கித்திறை கொழும் பெருமான்

    40. மன்னற் மன்னியர்கள் வந்தடி பரவப் பொன்முடி கவிழ்த்துப் புவி புரந்திடுவோன் நீ

    41. திசேரமைக்ஷர் நின் கொலுமுன்றில் கோதிலா மொழியைக் கொடுசெவிக்குறைக்க(வு*)

    42. ற்றது கேட்டுவொருகுடை நிழலிற் பெற்றரசாளும் பிறபல தீறன் ஐந்தரு நிகரோன் மந்தி

    43. ரகிரியோன் சந்திரவதனன் இந்திரலோலன் கங்கை மானதியோன் சங்கமானிதி

    44. யோன் பொங்கமாயு(ல*)க மெங்குமே யாழுவோன் நீதியாய்ச் செங்கோல்க் காதியாயமைந்

    45. தோன் தீது தானகற்றி யேதுவாய் யிரித்திப் பூதலந்தனிலே புண்ணிய மென்னு

    46. ம் ஆதுலசாலை அந்தணர் வேள்வி ஓதுவாற்குணவு உபையமடங்கள் இப்படிமு

    47. ப் பத்திரண்டரமும் வழுவா(ம*)ல் நடாத்திய வேதநான் மறையும் மிகுந்(த*)தோற்சைவம்

    48. ஆமெனுஞ் சமையம் ஆறுதானின்று போதவேயுலகில் பூற்தியாய் விழங்கத் தாழ்வ

    49. துகளைந்து தாஷ்டிக முடனே வாள்வது கொண்டு மனமிகுந்தன்பற் சேகரமா

    50. க செகந்தனை யாழும் கண்டர்கண்ட கட்டாரி க்ஷ¡ழுவ துஷ்டர் கண்டதுஷ்டர்

    51. மோகந்தவிழ்த்த ஒட்டியர் சுரதான றாசமனோ பயங்கர றாசதேவேந்திர வனதுர்க

    52. சல துற்ககிரிதுற்க பதிதுற்க மனுச்சக்கிறயீசுர ராயக்குலிங்கங் குச்சரங் குடகங் குருச்சேத்

    53. திரங்கலிங்கங் கற்னாடங் கலியாணங் கடாரங் கவந்தி கவுடங் கன்னோசி கம்பபடி முதலா

    54. ன அன்பத்தாரு தேசங்களுக்கு முதலான பிறதிஷ்டாபனாசாரி எண்டிசை முகம் புரக்குமி

    55. ந்திரசுரத்தன் அபகடறாய மகுடவிபாடன் அஷ்ட்டதிக்கு மனோபயங்கரன் அட்டலட்சுமி

    56. பொருந்திய மார்பன் திக்குவிசையங் கொண்ட சூரசிங்கன் துஷ்ட்ட நிக்கிர சிஷ்ட்டப

    57. ரிபாலன் அஷட்ட போகபுரந்தரன் நவரற்றின கெசித கிரீடமகுட நவரற்றின மாலையாபர

    58. பரன்ரற்றின சிம்மாசனாதீசன் சங்கீத சாயித்திய வித்தியாவினோதன் கொடிமன்னி

    59. யறாசதானன் பூலோக தேவேந்திரன் ந(¡)கலோகறாச கண்டன்ரணமுக சுத்தவீரன்

    60. சொக்கப்புவறாயகண்டன் புண்டரீக புருடோத்துமன் சகலசாம்பிறாச்சிய லட்சுமிவாசன்

    61. பூலோகநாதன் பூமண்டலாதீசுரன் சண்டப்பிறசண்டன் கண்டற்கொரு கண்டன் சத்து

    62. ருக்கள் மணவாழன் சமையகெம்பீரன் சமையநாராயணன் சமையத்துரோகர் கண்

    63. டன் தகமைபெறு சற்கார் தயவுழ சகாயன் தனகனக விஷ்திறாபரண கழதழ சத்திர

    64. ன் சாமரை வைபவேந்திரன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விசையன் அறிவு

    65. க்கு அகஷ்தியன் பொருமைக்குத் தற்மன் பரிக்கு நகுலன் கரிக்கு உதையன் ஞானத்துக்கு சகா

    66. தேவன் கோபத்துக்கு காலாக்கினி உக்கிரத்துக்கு நரசிம்மன் தேசத்துக்கு மாற்தாண்டன் செகத்து

    67. க்கறாவசல்லவன் ஆண்மைக்கு காற்த்திகேயன் ஆயிசுக்கு பிறமதேவன் ஸ்ரீகிஷ்ட்டணன் சங்க

    68. ¡ரத்துக்கு ருத்திரன் போகத்துக்கு இந்திரன் பிறதிக்கனைக்குப் பரசுராமன் பிறபைக்கு சூரியன் கா

    69. ந்திக்கு சந்திரன் சாந்திக்கு வீஷ்ட்டுமன் ஆசாரிக்கு வதிஷ்ட்டன் தானத்துக்கு கற்னன் மான

    70. த்துக்கு திரியோதினன் பிலத்தில் ஆதிசேஷன் விஷ்ட்டுமையில் விசுவாமித்திரன்

    71. சகாவில் விக்கிரமாதித்தன் சாயித்தியத்தி(ல்) வால்மீகற் போருக்கு வீமன் கெம்பீரத்தி

    72. ல் சமுத்திரன் சங்கீதத்தில் தும்புறு ஆக்கினைக்கு சுக்கிறீபன் சாமிகாரியத்தில் அனுமந்த

    73. ன் காவியத்திற் காளிதாசன் உச்சிதத்தில் போசன் சத்தியில் விரபத்திரன் சுத்தியில் ஆங்கா

    74. ரகன் பத்தியில் பிரகல(ந)¡தன் புத்தியில் விபூஷணன் புத்திரனிற் குரு புத்திரன் மதியிற்

    75. சறஷ்சுபதி சதிக்குப் பாஞ்சாலி ரூபத்தில் மன்மதன் வாலிபத்தில் மார்க்கண்டன் எ

    76.த்தினத்திற் பகீரதன் கெற்சிதத்திற் சத்த மேகம் தனத்திற் குபேரன் பிலவந்தத்தில்

    பக்கம் 2

    1. வாலி இரட்சண்ணியத்தில் நாறாயணன் இத்தினை சத்தியவாய்மையால் தத்துவக்கியான

    2. ராய் மனுவுக்கியான சாஷ்த்திரப் பிரமாணராய் வெகுவிதமான மேகப்பரிட்சையும் இதியா

    3. சந்தானும் இபலோக்கியமும் இரதவாதமும் இந்திரப்புஞாலம் ஆகம சாஷ்த்திரம்

    4. அஷ்டாங்கயோகம் அத்திப்பரி(ட்*)சை அசுவப்பரிட்சை முதலான அறுபத்துநாலுகலை

    5. க்கியான ரூடராய் ஒப்பாருமிக்காருமின்றச் சிராக்கியமானாபிரமானராய் அசுவத்தாமன் மாபெ

    6. லிவேதவியாசர் அனுமார் விபூடணன் கிறுபையாசாரியார் பறசுறாமன் இவற்களை

    7. ப்போல அதிய சிரஞ்சீவியாய் செம்பொன் மேருவுக்கிணையாய் நம்பினோர் க(ளு)

    8. பாயத்தம்பிரான் தனக்கொப்பாய் சத்ததீவும் சத்தசாகரமும் ஷட்பாலகரும் அஷ்டகுல

    9. பறுபதமும் அட்டவாரணமு மட்டமானாகமுஞ் சூழ்ந்தமையாலடங்கிய(ச*)த்த தீவுக்குஞ்ச

    10. ங்குதாமறை காமதேனு சிந்தாமணி யென்னும் ஐந்து தறுப்போல கெங்கை

    11. யமுனை கோதாவிரி சிந்து கிஷ்ணவேணி காவேரி சரஷ்பதி யென்னுஞ் சத்தமகா

    12. னதியும் படைத்துக் தராதலந்தனக்கு தானவனாக நரர்பதியாக நாற்றிசை யிரஞ்சரத

    13. கெசதுரகபதாதியென்னுஞ் சதுறங்க பலதாஷ்டீக வல்லவராய் விசைய நகற

    14. த்தில் வீறசிம்மாசனத்திலெழுந்தருளிய ஸ்ரீவிருப்பாச்சிறாயர் வீறவசந்தறாயர் போச

    15. றாயர் வீரநரசிங்க தேவமகாறாயர் தன்மறாயபூபதிறாயர் அகழங்கதேவமகாறாய தேவ

    16. றாயர் சூடும்புலி தேவ மகாறாயர் உச்சமவலி தேவ மகாறாயர் உத்துங்க மகாறாயர் கட்டாரிறாயர்

    17. அல்லமாப்பிறபு தேவ மகாறாயர் சென்ன வசவ தேவ மகாறாயர் யெரிதிம்மறாயர் திரும

    18. லைறாயர் சிக்கறாயர் ஆனைகுந்தி வெங்கிட்டறாயர் கஷ்த்தூரி றாயர் கதம்பறாயர் பிறவிட தேவம

    19. காறாயர் யீசுரப்பனாயக்கமகாறாயர் கிரு(ஷ்)ணதேவ மகாறாயர் வில்வறாயர் பவழேந்திற தேவ

    20. மகாறாயர் சதாசிவ மகறாயர் றாமறாயர் கிஷ்ணறாயர் விக்கிரம தேவ மகாறாயர் சீரங்கறா

    21. யர் பிறுதிவிறாச்சிய பறாக்கிற(ம*)ம் பண்ணியருழா நின்ற காலத்தில் தெட்சண சிம்மாசனாதிப

    22. தியாகிய பாண்டிய வம்மிஷத்தில் சந்திறகுல தீபறாகிய பாண்டியனென்பவன் மதுரை¨

    23. யயாண்டு(க்) கொண்டிருக்குங் காலத்தி[ல்] ஸொஷ்தஸ்ரீ விசையாற்புத சாலியவாகன சகாற்

    24. த்தம் ௩௱௨௰அ அப்போது கலியுக சகாற்த்தம் ௩௲௪௱அ௰௩ வருடமாயிற்று யிதின்மேற் செ

    25. ல்லானின்ற சித்தி[ர*]பானு வருடம் வைகாசி மீ பூருவ பட்சம் நவமி மிருகசீர நட்செத்திரம் சித்திய

    26. நாம யோமுங் கவலவாகறணமுங் கூடிய சுபதினத்தில் கொங்குமண்டலத்தில் மேல்க

    27. ரைப்புந்துரை நாட்டில் எழுந்தருளிய ஆண்டகுருசுவாமி யாறவற்கள் பாதசன்னிய் தானத்துக்கு

    28. கண்டனாடு கொண்டு கொண்ட நாடு கொடாதவறான மாட்டுதலையைமான்ந்தலையாக்கின மகாபெ

    29. ரியோறான மதுப்பானையைபால்ப் பானையாக்கினவற் அரிபூசை குருபூசை மயேஷ்வற பூசை மறவாத தீ

    30. றன் விபூதி ருத்திறாட்ச மாலிகாபரணறான பத்திரக்காளி பரிவுடன் வழர்த்த யீஷ்வர குமாறன் ஆண்டதம்பி

    31. றான்பாதத்தை அனுதினமும் மறவாதவன் மேதினியில் மேல்மிசை கொண்டவறான விகடாதிசூர

    32. னைவென்று நிமலி சிறைமீட்டவற் குபேரனற்க்குதவி செய்தவறான கருணாகடாட்சமுள்ளவ

    33. றான சம்பறாசூரனை வென்றவன் தேவற்சிறை மீட்டவன் தெய்வலோகங் குடியேத்தி தே

    34. வேந்திரனுக்கு முடிசூட்டி வைய்த்தவன் பார்பதி தேவிபுத்திரன் வாலியை வென்ற சூரியப்பிறதாபன் சேனா

    35. பதிப் பட்டமும் பெற்றவன் தெய்வலோகத்துக்குச் சென்று கருமல்லிகை பிடிங்கிக் குடுத்தவன் பூ

    36. வேந்தியசோளன் பிறவற நெரிகண்டவன் அறுபத்திமூவரிலொருவன் யேநாதி நாதனென்று பேறு

    37. பெற்றவன் சூறபாண்டி நாதரைச் சிறப்புடன் கண்டவன் வாது காத்தவன் தம்பித்துணை நாடகங்கட்டி

    38. வைத்தவன் சமற சங்கு சமையசங்கு மோகினிசங்கு மூன்று சங்கமுள்ளவன் மணிக்கெங்கைவ

    39. ழநாடன் உத்திர தேசத்தில் யயோத்தி மானகரில் தாயார் தமக்கு சத்திறவர்ணத்தினால் நாயக்கப் பட்டமு[ம்]

    40. நலம்பெற பெற்றவன் கொங்கு மண்டலமு(ம்*) குடகுறாச்சியமு(ம்*)சோழ மண்டலத்துக்கு சிவந(¡*)யக்க

    41. பட்டமும் பெற்றவன் சவுந்திற பாண்டியன் றன்னுடமண்டலத்தில் தாடாழ்வானென்று நாடாழ்

    42. வாரென்று சோழ மண்டலத்திற் கவுண்டு பட்டமும் பேறு பெற்றவன் சந்திற குலதீறச

    43. மைய நாறாயணப்பட்டமும்பேறு பெற்று விருதுமுடையவன் மாவிலிவாணன் வைகைக்கரை

    44. நாடு முகுந்தப் பட்டமும் பேறுபெற்றவன் கற்பகனாடு கடகரை நாடுமடைக்கிப் பட்டமுடையவன்

    45. அரிதான வடதிசை வேட்டைக்கருளிய(வ*)றான நாக கொடியு(ம்*)சிங்க கொடியு(ம்*)சமையவிசே

    46. ஷமுள்ளவன் நாகலோகத்தில் நவமணி தரித்த மணிமாற்பன் அன்னவன்னப் பாவா

    47. டையுமுள்ளவன் சந்தனமாலையு(ம்*) சதுரொளி மாலையு(ம்*) புஷ்கனியு(ம்*) பெறுமையுமுடையவன்

    48. யீழ நாடுயிலங்காபுரி வாழால்வழி திரந்த பெரியோற் மதியாத மன்னரை மகுடந்தகுத்து பரிசூ

    49. ரரைக்கொல்லு பாக்கியப் பிறதாபன் மதுறாபுரியில் பாண்டியனுக்கு வாளது பத்தி மதுரைமண்ட

    50. லிகர் சோழ மண்டலமுந் தொண்ட மண்டலமு கம்பமானதியுங் கலியாணபுறமு காணியு

    51. ம் பெற்றவன் வையகமளை பொழிய வைத்தவன் கொட்டுப்பிடித்து கூடையுமெடுத்து வெட்டிம

    52. ண்சுமந்ததில்லை யென்று வீரப்பிறதாபன் அகாசூரன் விக்கிறமாதித்தன் பொன்னுலோகமும்

    53. பெற்று புகள் கீற்த்தியு பெற்றவன் அற்சுனவலங்கை பிறதாபன் எழுநூற்று வங்கிஷமகா

    54. தேவர் பூசை பத்திப் பிரியாதவன் அருள்பெற பெற்றவன் தாழ்ந்தவற்கினிய தாபமாற்றினவற் வா

    55. ழைக்கிரண்டு குலை வறவளைத்தவன் காவேரி கரை கண்டவன் சத்த சமுத்திரமுமசையாத எழுநூத்

    56. துக்கோடி பேறுமுடையவன் பொய்த்தலைக்கி மெய்த்தலையரிந்து வெட்டினவன் குலமு முப்புரிநூலுமு

    57. டையவன் தாரை சின்னமும்றட்டை வெண்சங்கு அமுர்தமுடைய சிங்கத்தை வங்கத்திலேற்றி சேற

    58. சோழன் பாண்டியன் மூவறாசாகளுஞ் சிங்காசனத்தில் வைத்து வெள்ளவட்டக் குடையு விருதும் வெஞ்

    59. சாமறமும் வெள்ளப் புறவிய முள்ளவன் வெள்ளானை வேந்தன் செட்டியளபிமானமும் பட்டங்கா

    60. த்தவன் செட்டி தோளேறிய செல்வக் குமாற அமந்தியாசூரனையுத்த சத்திறாதிகளைய் வெட்டி நிலையிட்டவ

    61. ன்றாச மெச்சிய காளாஞ்சியு பலவரிசையு வெகுமானமும் பெற்றவன் வாடாத மாலையு வணங்கா முடி

    62. பட்டமும் பெற்றவன் ஒரு நொடியிலுலக மாண்டவன் வருவ துன்பமும் வண்மையாயிநீ(க்)கினோற் பத்திற

    63. மாத்துபசும் பொன்னுடையோற் உத்திர தேசத்திலுயர்ந்த பட்டமுள்ளோற் மாடக்காசு மறகத கொடியு.

    64. தனம் பெறகாசஞ் சறுவமும் படைத்தவன் கோட காலத்தில் குழுந்த வனத்தில் சிவனுமுமையு தாகத்துடநே

    65. தயங்கின வேளையில் வேதப்பனையை விரலால் வளைத்து போத அமுர்த்தத்தை புடிசொம்பிலிறக்கிநாத

    66. னுமைக்கு நன்றாய் கொடுத்து மனமகிழ்ந்த(ன்)னார் மந்திர வாழும் வரிசையுங் கொடுத்து துலங்கு மகுடமு

    67. டியதுசூடியிலங்காபுரி[க்]கி மீழந்தனக்குவணங்காதேயேன்று வைத்த வங்கிசத்தோறான மாந்துளிர்

    68. மேனியன் மகாதேவர் புத்திரன் கொங்கன் நாடான் ம(¡)துரையான் கலியாணியன் யிள யிந்த ஐந்து

    69. வகுப்பாருஞ்சேற்ந்து காஞ்சிபுரத்தில் நாடு கூடி நம்மளுக்கு சுவாமியாற் வேணுமென்று மேல்கரைப்

    70. புந்துரை நாட்டிலிருந்த ஆண்டகுருசுவாமியாறென்பவரை அழைத்துக்கொண்டுபோய் பட்டாபிஷேகஞ் செய்து எ

    71. ழுதிக் கொடுத்த த(¡*)ம்பிற சாசினமாவது ஆண்டகுரு சுவாமியாற் பாதத்துக்கு உடல்பொருழாவி மூன்றுந்தெத்தம்ப

    72. ண்ணி வருடமொண்ணுக்கு தலைகட்டு ஒண்ணுக்கு தன்காசிலே கால்க்காசும் கலியாணத்துக்கு இரண்டு சந்திரப்ப

    73. ணமும் எங்கள் வம்மிசத்தோற் எந்த தேசம் எந்த நாட்டிலேயிருந்தபோதிலும் யிந்தப்படிக்கிக் குடுத்துக்

    74. கொண்டு சுவாமியாரிட்ட கண்டினை தெண்டினை யாக்கினை ஆபறாதத்துக்கு உட்பட்டு நடந்துகொள்

    75. வோமாகவும் யிந்தப்படிக்கி நடவாமல் எங்கள் வம்மிசத்தில் ஆறாமொருவன் குருநிந்தனை சொல்குறா

    76. னோ அவன் கெங்கைக் கரையிலே காறாம் பசுவையு பிறாமணாளையு மாதா பிதாக்களையு கொன்ற தோச

    77. த்திலே போகக் கடவது யிதை யாதாமொருவன் பயபத்தியாய் பரிபாலினம் பண்ணி வருகுறானோ அவ

    78. னுக்குத் தனசம்பத்தும் பாக்கிய சம்பத்தும் புத்திர சம்பத்து மேமேலு முண்டாகி வளரும் படிக்கி அம்பலவா

    79. ண மூர்த்தியு ஆதிபறமேஷ்பரியுந் துணையாக லட்சிப்பாற் பத்திர காளியம்மன் துணை சுலோகம் தான

    80. பாலனை யோற்மத்தியே தானாத்து சிரேயோன் பானொதானாதுரே சற்கம் காப்புனோதி பாலனதச்சுதன்பதம்

    81. றாக்கிசனாடான் காளிநாடன் யிருளநாடான் மருதகாளி நாடான் குப்பநாடான் பழனிநாடான் பாண்டிய நாடன்

    82. பச்சநாடான் விரும நாடன் வீரநாடன் பெரியநாடன் சொக்கநாடன் சோமசுந்தர நாடன் சவுந்தற நாடன்கு

    83. ணவீரநாடன் சம்மநாடன் அகழங்க நாடன் சிதம்பறநாடன் வெங்கிடாசல நாடன் குலோதுங்கு

    84. நாடன் ரகுநாத நாடன் சிவமயம் கணபதிதுணை பத்திர காளியம்மன் துணை யிலங்காபுரி மாணிக்க

    85. த்தாள் னரலங்கறாயனுக்கு யேனாபதி உண்டு பண்ணினமாடப் பொன்காசில் கால்காசும் ஆலத்துக்கு கால்

    86. காசும் யிந்தபடிக்கு போட்டு எளுதிக் கொடுத்த தாம்பற சாசனம்

    ………………….

    முத்தரையர்கள் பற்றிய முதல் செப்பேடு கண்டெடுப்பு

    டிசம்பர் 07,2009,00:00 IST

    ஈரோடு: கோவை மாவட்டம் கணியூரில் கிடைத்த செப்பேடு முத்தரையர்கள் பற்றிய அரிய தகவல்களை கொண்டுள்ளது. கோவை மாவட்டம் கணியூரில் உள்ள பழனி முத்தரையர் மடத்தில் உள்ள செப்பேடு இதுவரை படித்து ஆய்வு செய்யப்படாமல் இருந்தது. முத்தரையர் தோற்றம், சமூக பெருக்கம், சோழர், பாண்டியர் தொடர்பு, தமிழகம் முழுவதும் அவர்கள் பரவியது,

    அனைவரும் ஒன்று கூடி பழனியில் ஒரு மடம் ஏற்படுத்தி, அதற்கு கொடையளித்த விபரம் ஆகியவை அந்த செப்பேட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு மையத்தலைவர் புலவர் ராசு ஆய்வு செய்தார். செப்பேட்டில் கூறியிருப்பதாவது:

    தேவேந்திரன் முதலான தேர்வர்களும், தெய்வ ரிஷிகளும், முனிவர்களும், கின்னரர், கிம்புருடர், அஷ்ட பைரவர், சித்தி வித்யாதரர், ஆயிரத்தொரு சக்திகள், கருட கந்தருவர், அட்ட திக்குப் பாலகர்கள் ஆகியோர் கூடி சிவபெருமானுக்கு தேரோட்டினர். அப்போது பேரண்டப்பறவை ஒன்று தேரை தடுத்து நிறுத்திவிட்டது.

    சிவபெருமான் வலது தோளில் ஒரு வியர்வை முத்து தோன்றியது. அந்த முத்தை பார்வதி பூமியில் விட, அது இரண்டு கூறாகப்பிரிந்து, அதில் இரண்டு வன்னிமுத்தரசர் தோன்றினர். அவர்கள் தேரை நிறுத்திய கண்டப்பேரண்டப் பறவையை கொன்றனர். பெரிய வன்னி முத்தரசன் தெய்வலோகக்

    காவலுக்கும், சின்ன முத்தரசன் ஸ்ரீரங்கம் காவலுக்கும் நியமிக்கப்பட்டனர்.

    கோப்புலிங்க ராஜாவின் மகளை திருமணம் செய்து கொண்ட சின்னமுத்தரசனுக்கு நல்ல நாச்சி என்ற மகளும், சென்னிய வளநாடன், சேமன், அகளங்கன், ராசாக்கள், நயினார் என்ற மகன்களும் பிறந்தனர். சகோதரி நல்ல நாச்சியைப் பாண்டியனுக்கு மணம் முடித்தனர்.

    சோழரிடம் பணியாற்றிய இவர்கள் வீரத்தை மதித்த பாண்டியர், ஆட்சிப் பொறுப்பு கொடுத்தனர். வன்னி முத்தரசர்கள் பல்கிப் பெருகி தமிழகம் எங்கும் பரவி வாழ்ந்தனர். சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு நாட்டை சேர்ந்த 300 ஊர்களை சேர்ந்த வன்னிமுத்தரசர்கள் அனைவரும் கி.பி., 1674ம் ஆண்டு தைப்பூசம் அன்று பழனியில் கூடினர்.

    திருஆவினன்குடிக்கும் கீழ்புறம், சரவணப்பொய்கையின் தென்மேல்புறம் முத்தரையர் மடம் ஒன்றை நிறுவி, குழந்தைவேலு உடையான் என்பவரை மடத்து நிர்வாகியாக நியமித்தனர். பெரிய ஊருக்கு பத்து பணமும், சின்ன ஊருக்கு ஐந்து பணமும், பண்ணையத்துக்கு இரண்டு பணமும், ஆள்காரர் ஒரு பணமும், திருமணத்தில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் இரண்டிரண்டு பணமும், தேருக்கு ஒரு பணம் என மடத்துக்கு கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

    குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராதப் பணத்தில், மூன்றில் ஒரு பங்கு மடத்துக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

    மடத்துக்கு வருவோருக்கு உப்பு, ஊறுகாய், நீராகாரம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

    புலவர் ராசு கூறுகையில்,செப்பேட்டை ராமசாமி கவிராயர் என்பவர் எழுதிய விபரமும், முத்தரையர்கள் வாழ்ந்த ஊர்கள், முக்கியமான தலைவர்கள் பற்றிய விபரமும் அதில் கூறப்பட்டுள்ளது. முத்தரையர் சிறப்புகளை பற்றி கூறும், இந்த செப்பேடு முத்தரையர் சமூகம் பற்றிய முதல் செப்பேடு,” என்றார்.
    Regards,
    ப.அனந்தகுமார்.

  7. Dear sir.

    I wish to point out that ” Chanror Kulam” mentioned in the Copper plate of Avalpunthurai and Thirumurugan poondi (Kongu Nadu) does not denote Sanaar(Nadar).

    It refers to Vettuvar (Vettuvan-Vettuva gounder,Vedan-Vettuva gounder,Kaavilan-Kaavili gounder,Poovilan-Pooluva vettuva gounder and Maavilan-Mutharaiyar) only.

    Verban,Silamban, Aienan,Kizhavan, Mazhavar,Kongar and Muthu Raja are Vettuvar only.
    Velirs are Vettuvar only.

    Reference: Vettuvar Samuga Avanamgal and History of Gurukulam.

    With Regards,
    P.Anandakumar

    (edited and published).

  8. ப.ஆனந்த குமார் கு எனது வாழ்த்துக்கள், வேட்டுவ கௌண்டர் சமுதாயம் மிகவும் பெருமை மிக்கது, இன்றளவும் கிராம புறங்களில் முதல் மரியாதையை வேட்டுவ கௌண்டர் இனத்துக்கு தான், தீரன் சின்ன மலை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது அவருக்கு ஆதரவு அளித்து தனது நிலத்தையும் வழங்கியவர் அரச்சலூர் கொமரபாலயத்தை சேர்ந்த கொமரசாமி கௌண்டர் வேட்டுவ கௌண்டர் இனதவரர். ஆனால் இது மறைக்க பட்டு விட்டது.

  9. நல்ல கட்டுரை
    திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். பல தமிழ் பற்றாளர்கள் (வெறியர்கள்) தமிழ் என்பது தமில் என்றும் பிறகு த்ரமில் என்றும் பிறகு த்ரவிட் என்று வடக்கே சொல் போனதாக கதை விட்டார்கள். கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதை. அது இருக்க திராவிடர் என்போர் ஆரியர் தெற்கே வாழ்பவர்தாம். வடக்கே இருப்பவர் கௌட தேசத்தார் என்றும் விந்திய மலைக்கு தெற்கே உள்ளவர் திராவிடர் என்பது பல காலமாக உள்ளது. திருஞான சம்பந்தர் தன்னை திராவிட சிசு என்றும் ராமானுஜர் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பதும் பலருக்கு தெரியும்.

    தற்போது உள்ள பித்தலாட்ட திராவிட கழகங்கள் (கலகங்களோ) இந்த சொல்லுக்கு பொய்யர்த்தம் கற்பித்து தமிழரை மயக்கி தவறான பாதையில் திருப்பி வெறுப்பை வளர்க்கிறார்கள். இதில் கிருத்துவர் பலர் செய்யும் சதியும் உள்ளது. இந்துக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற சதி. இதற்கெல்லாம் நாம் உடனே பதில் அளிக்க வேண்டும். மௌனம் ஆபத்து

    ஆரியம் என்பதும் திராவிடம் என்பது இனங்களல்ல. ஆரியம் என்றால் நாகரீகமானவர் என்று பொருள். திராவிடன் தெற்கே வாழும் ஆரியன்.

    அனாரியம் என்றால் அனாகரீகமானவன் என்று பொருள்! ஆரிய சமாஜ் என்பது போல் இவர்கள் அனாரிய சமாஜ் என்கிறார்கள். தமிழர் இந்த சதியில் விழக்கூடாது.
    இப்படிதான் கோமாளித்தனமாக கீமாயணம் என்றான். இன்று பல மூடர்கள் இதை நம்பி இராவணனை நல்லவன் என்றும் இராமனை தீயவன் என்கிறார்கள். பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்பது ஈவேரா கொள்கை. ராவணன் உறவினர் ஜோத்பூரில் உள்ளது உண்மை தேவ பிராம்மணர் என்பதும் பெயர்

    இதையெல்லாம் தமிழருக்கு விளக்க வேண்டும்

    கட்டுரை ஆசிரியருக்கு மிக நன்றி

  10. kumar
    3 January 2010 at 12:36 am
    sanar or naadars belong to the Srillanka.they brought as slaves by the Cholars.///

    intha comedy ah na enga poi sola :D:D:D

  11. Dear all,
    Kalaingar Karunanidhi (CM) wrote the history of Ponner and Shankar (90 % the imaginary history + 10 % the real history).

    The Real history of Ponner and Shankar (Everyone should know the real face of Kalaingar Karunanidhi (CM) ).

    வரலாற்று ஆய்வாளர் திரு. இல. பரணர் அவர்களால் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல சிரமங்களுகிடையே இந்நூல் வெளியிடப்படுகிறது.

    500 பக்கங்கள் 50 வண்ணப்படங்கள் 70 கருப்பு வெள்ளைப் படங்கள் விலை ரூ 350 /-

    Address:

    திரு. இல. பரணன் 9/349, யாசிக்கா இல்லம், சக்தி இல்லம், சி. ஆ. கோ. ஸ்டேட் பேங்க் காலனி கரூர் – 639 001 அலை பேசி – 94436 73252.

  12. Dear all,
    Val Vil Ori,Adhiyaman,Pari,Nannan and so on belong to VETTUVA clan.

    Cheran,Chozhan and Pandian belong to VETTUVA clan.

    Chera dynasty belong to VETTUVA clan ( Reference: “பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்”).

    With Regards,
    P.Anandakumar.

  13. Kali Devi (Vettuvar’s Mother god)

    Vettuvar (Vettuva Gounder) belongs to Gurukula Vamsa Kshatriyar

    Pandavars and kauravars (Mahabharatham) came from Gurukula Vamsam

    The Literature,Inscriptions and Copper plates tell that Vettuvar came from Gurukula Vamsam (Mahabhratham)

    Gurukula kings are called “Chandra kula kings”

    Vettuva gods are Murugan and Kali Devi

    (No one can deny the above statements)
    Reference:

    “History of Gurukulam” Written by Velsamy Kavirayar.
    “Vettuva Samuga Avanamgal” Written by Pulavar s.Rasu.
    “Kongu nattu Gounders” Written by Viyaaram.

    Kongu nadu was Vettuvars’soil and Vettuvar has “Titles” Devan,Naiyakar and Gounder (Kancipuram Copper plate tells about this statements)

    (That was why many small kings were in kongu nadu)

    …………..

    Vettuvar’s enemies destroyed and hid many copper plates ,Inscriptions and Vettuva literature.

    With Regards

    Member of Kali (Kali Devi) Senai Organization

  14. \\\\இரகு வம்சத்துத் தலைவன் இராகவன் (இராமன்) தங்கள் குல முன்னவன் என்று க்ஷத்திரியச் சான்றோர் மரபினர் தங்கள் செப்புப் பட்டயங்களில் பதிந்து வைத்திருப்பதை அனாரிய சமாஜத்தார் உணர வேண்டும்.\\\\\\சான்றோர் சமூகத்தவர்களை இழிவுபடுத்தி எழுதிய கால்டுவெல்லை ஞானத் தந்தை என்று கூச்சமில்லாமல் உரிமை கோருபவர்களுக்கு இராமன் எங்கள் குல முன்னோன் என்று சொல்லிக் கொள்பவர்களைப் பார்த்தால் வெறுப்பாகத்தான் இருக்கும்\\\\\\\\\

    தண்ணியில் போட்டால் படகாக மாறுவேன் எண்ணையில் போட்டால் போண்டாவாக மாறுவேன் என்றெல்லாம் தமிழர் தலையில் குல்லா போடுபவர் சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார். ஆங்கே திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று படமெடுக்கத்துடிக்கும் கும்பல் கடாரம் கொண்டான் கங்கை கொண்டான் ஏன்ற பட்டமெல்லாம் பெற்ற அரசர்களையெல்லாம் தோற்கடிக்கும் வகையில் மேட்டுக்குடியையோ சாத்துக்குடியையோ கொண்டவர் என்ற பட்டமேற்ற தமிழை ஏகபோகமாக குத்தகைக்கு எடுத்துள்ள செம்மொழிக்காவலருக்கு சாண்டாக்ளவுசின் குல்லாவைப் போட்டு கேக் ஊட்டி அமர்க்களம் செய்துள்ளது. தமிழைத்தவிர குரளை வேறு குத்தகைக்கு எடுத்தவர் நன்றி மறப்பரா?ராஜராஜனின் கல்லறை காணப்பெறாதவர் பரங்கிப்பாதிரி வாழ்ந்த வீட்டைக்கண்டு பிடித்து விட்டாராம். இப்படியெல்லாம் கண்ணியமிக்க பாசத்தலைவனுக்கு விழா எடுப்பதே தம் வாழ்க்கையின் கடமையாய்க்கொண்ட கட்டுப்பாடுள்ள கழகக்கண்மணிகள் சும்மா இருப்பார்களா. ஹிந்து சான்றோர்களை இழிவுபடுத்திய பரங்கிபாதிரி வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக அர்பணிக்க விழா எடுக்க போவதாய் தொல்லை காட்சியில் முரசரிந்து உள்ளார்கள்.

    எங்கேயோ தீ பிடித்ததாம். எவனோ பிடில் வாசித்தானாம். அதுபோல் தமிழகத்தில் வெள்ளமாம் 176000 கோடி எங்கே எங்கே என்று தேடுகிறார்களாம் அதையெல்லாம் விட்டு விட்டு எவனோ பரங்கிப்பாதிரி தமிழில் தப்புத்தப்பாய் பொஸ்தகம் போட்டானாம். அவன் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக ஆக்கப்போகிறார்களாம்.

    தமிழ்த்தாய் கண் திறக்க வேண்டும்.

  15. From Avalpunthurai copper plates

    Gounder Title belongs to VETTUVAR only

    Maavali Vaanan belongs to VETTUVAR only and So on.
    …………………………………………………………
    Vettuvar built Aru nattar( Vettuvar) hill Murugan temple.

    Saandha Padai VETTUVA clan(One of the vettuva clans) Kula Deivam is Aru nattar( Vettuvar) hill Murugan temple (Karur,Velayatham palayam).

    From sangam literature period to till date,VETTUVAR have been dominating around Aru nattar( Vettuvar) hill Murugan temple.

    Reference:

    History of Gurukulam Written by Velsamy Kavirayar.

    Kongu Nattu Gounders Written by Viyaarem.

    Vettuva Samuga Avanamgal Written by Pular S.Raju

    பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்

    The above books are available in Connemara Public Library,Chennai

  16. Dear all,
    Kalaingar Karunanidhi (CM) wrote the history of Ponner and Shankar (90 % the imaginary history + 10 % the real history) for vote bank of Vellalar.

    The Real history of Ponner and Shankar:

    Thalaiyur kali mannan (Vettuvar, Lineage of thaliya nadu Sundra Pandya Vallal) won the war.
    Inscriptions tell that Vellalar(Ponner and Shankar) commited suicide in vala nadu.
    Reference:
    பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல் written by L.Bharanan,Published in june-2010

  17. கண்ணப்பர் வழி வந்த மக்கள் ஐந்து சாதியினர். அவர்கள் வேடன், வேட்டுவர்( வேட்டுவ கவுண்டர்),மாவலர்( முத்தரையர்), காவலன் (காவிலி கவுண்டர்), பூலுவர் (பூலுவ கவுண்டர்) போன்ற இந்த ஐந்து சாதியினரும் இணைய முயற்சி செய்யுங்கள். தமிழ் நாட்டின் பெரும்பான்மை இனமாக இருப்பீர்கள்…

  18. dear anandakumar,
    Thanks for vettuvar information.one thing i want to share that is hunter tribes are divided into 5 clans they are vedar ,vettuvar, mavilan, poovilan and kavilan. these five clans exists today with different castr names/titles. vedars are kuravars,vettuvars are vettuva gounders, mavilan are maviliars who lives in coorge, poovilans are pooluva gounders surroundings of coimbatore and pollachi and kavilans are kavakkars or otherwise called as muthurajas or muttaraiyars around trichy. these five clans are called as anchi sathiyar(five caste) as like Mukkulathor(Agamudaiyar,kallar and Maravar). thse five caste origin is same . all these five caste will have connection regarding their kulams where Lord Murugan is sole diety of them.Kannapa nayanar is from hunting community. All these five kulams will have kannapp kulam.one thing you have to understand is all these five caste are interlinked and inter connected by thaier origin.
    these five caste are the original and ancient community before sangam age. the kings and velirs came from these communities. particularly cheras belong to these communities. i have done many studies regarding this. if you want to clarify. u contact me.

  19. சேரர், சோழன் and பாண்டியர் dynasty belongs to வேட்டுவ குலம் .

    Reference:
    “மூவேந்தர் வேட்டுவ குல வரலாறு”

    மூவேந்தர் வேட்டுவ குல வரலாறு book is available in

    Roja Muthiah Research Libarary
    3rd Cross Road
    CPT Campus
    Taramani
    Chennai 600 113
    Ph: 2254 2551 / 52

    AND

    Connemara Public Library,Chennai.

    Regards,
    சாந்தப்படை வேட்டுவர் ப.ஆனந்தகுமார்

  20. Dear all,
    I agree with paneerselvam and kandasamy.vettuva kulam have five clan vedar(kuravar or otherwise called as koravars) vettuvan(vettuva goundar) mavelian(maveli goundar) poovilian(pooluva goundar)kavelian(kavakkarar or otherwise called as muthuraja or mutharaiar).these as pancha jathiar.all belong to kanappa nayanar kulan.Great cheras emerged from this clan.please refer book by srinivasa sastri.we all should unite together to show our strength.

  21. சவுதி அரேபியாவிற்குச் சென்ற பாரதப்பிரதமா் மோடி அவர்கள் ஒரு பொருந்தாத காாியத்தை செய்திருப்பதாக அறிந்தேன்.சவுதி மன்னருக்கு இந்தியாவின் முதல் பள்ளிவாசல் என்ற ஒரு கட்டடத்தின் மாதிாியை பாிசளித்துள்ளது பொருத்தமானதல்ல. ஒரு இந்து மன்னா் முஹம்மதுவின் காலத்தில் அவரைச் சந்தித்து இசுலாமியராக மாறி பின் வரும் வழியில் இறந்து போனதாகவும் அவரது காலத்தில் கேரளத்தில் ஒரு மசுதி கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது.அதாவது முஹம்மதின் காலத்தில் இந்தியாவிற்கு அரேபிய வல்லாதிக்க கொள்கையான இசுலாம் வந்து விட்டது என்று சுவனப்பிாியன் எழுதியுள்ளாா்.

    அரேபிய வாஹாபியத்தை ஆதாித்து பயங்கரவாத செய்கைகளுக்கு ஆதரவ அளிக்கும் ஒரு அரசு சவுதி அரேபிய அரசு.

    இந்தியரான மோடி அவர்கள் ஒரு திருக்குறளையோ பகவத்கீதையையோ யோக சுத்திரம் போன்ற ஒரு நுலையோ நினைவு பாிசாக வழங்கினால் அது இந்தியா்களுக்கு பெருமைதருவாதாக அமையும்.

    மோடி சற்று சறுக்கியிருப்பதாகவே நான் உணருகின்றேன்.

  22. Dear all
    According to my research .there are five tribal clans since ancient period.they are vettuvan,vedan,maavelian .poovelian,kaavelian.Vettuvan refers to vettuva gounder,vedan refers to kuravar (not nari kuravar ,they are wandering gypsies),maavelian refers to meveli tribes of kerala,poovilian refers to pooluva gounder,kaavelian refers to Mutharaiyars(muthu rajas). a detailed study were conducted on all these clans and castes.it is found that all these castes origin are same and have many simlarities.these fives castes are called as PANCHA JAATHIYAR (PANCHA KULATHOR) AS LIKE MUKKULATHOR.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *