பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்

periyar_marubakkamஈ.வே. ராமசாமி நாயக்கரை மிகைபடப் புகழ்கின்ற போதும், அவர் மீது கொண்ட பற்றினால் உண்மைக்கு மாறாக அளவுக்கு மீறி அறிமுகமும் விளம்பரமும் தொடரந்து கூறும் போதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யவைக்கிறது.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தொண்டர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியும்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்; ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்பொழுதும் முரண்பட்டு பேசியது கிடையாது என்றெல்லாம் பேசி, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உயர்ந்த ஒரு இடத்தை கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் உண்மை என்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் பல தடவை முரண்பட்டு பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல, வரலாற்றை திரித்தும் பேசியிருக்கிறார். ஆதாரம் இதோ!

முரண்பாடு: 1

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”
(விடுதலை 30-05-1967)

‘புத்தனுக்கு சிலை வேண்டாம்’ என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முன் என்ன சொன்னார் தெரியுமா? இதோ!

‘‘புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’
(விடுதலை 09-05-1953)

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

முரண்பாடு 2:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’
(குடியரசு 16-11-1930)

இப்படிச் சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’

முதலில் கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டும் மாறியது? கிறிஸ்தவ மதத்தில் காமக்களியாட்டத்திற்கு இடமில்லை என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போன்றதாகும். ஏனென்றால் கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்பதை கிறிஸ்தவ அறிஞர்களே விளக்கியிருக்கிறார்கள். அதனால் ஆபாசம் இல்லை என்ற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாதம் உண்மையில்லததாகும்.

முரண்பாடு: 3

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

budhdha‘‘மற்றெல்லா மதங்களைவிட புத்தமதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.
(குடியரசு 15-04-1928)

இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.
(விடுதலை 03-02-1954)

பவுத்தத்திற்கும், அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.
(விடுதலை 20-02-1955)

இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பவுத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை.
(குடியரசு 19-01-1936)

புத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.
(குடியரசு 31-05-1936)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:
‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.
(விடுதலை 06-01-1976)

நமக்கு புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

முரண்பாடு: 4

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மனித நேயம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் பிராமணர்களுடைய விஷயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய மனிதநேயம் எப்படிப்பட்டது தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்’’
(விடுதலை 29-01-1954)

‘‘எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக்கூடாது’’
(விடுதலை 20-10-1967)

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.
(விடுதலை 19-10-1958)

‘‘பெரியார் மாளிகைக்கு வந்தால் பார்ப்பன நிருபர்களை நெட்டித்தள்ளச் சொன்னார்’’
(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்
-வே. ஆனைமுத்து)

வீரமணி கூறுகிறார்:-

பெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.
(நூல்:- சங்கராச்சாரி யார்?)

‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
(நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)

‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும்’’.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தில் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.

‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’

“சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’

அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்யான மனிதநேயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் யாரை தங்களுடைய எதிரியாக நினைத்தாரோ- யாரை ஓழித்தால் சாதி ஓழியும் என்று சொன்னாரோ-அந்தப் பார்ப்பனரை தேர்தலிலே ஆதரிக்கவும் செய்திருக்கிறார். இது அவருடைய முரண்பாடுகளை அல்லது தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள செய்த தந்திரத்தைத்தான் காட்டுகிறதே ஒழிய மனிதநேயத்தைக் காட்டாது.
1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘காஞ்சிபுரத்தில் (அண்ணா போட்டியிட்ட இடம்) டாக்டர் சீனிவாச அய்யரையும், சென்னையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணாராவையும் ஆதரிக்கிறேன். பிராமணர்கள் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். காமராஜ் வெற்றி பெற்றால் பிராமணர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ‘‘
(நூல் : தேர்தல் அரசியல்-தி. சிகாமணி)

ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூறுகிறார்:- “தேர்தல் தினத்தன்று பிராமணர்கள் வாக்களிக்க வரக்கூடாது’’
(நூல் : தேர்தல் அரசியல்)

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! ஒரு முறை காமராசருக்கு ஓட்டுப்போடுமாறு வேண்டினார். பின்பு வாக்களிக்க வரக்கூடாது என்று மிரட்டுகிறார். 1957 ஆம் ஆண்டு பிராமணர்கள் உதவி வேண்டும். 1962 -வேண்டாம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய தந்திரம்.

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏ. பாலசுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணர்களையும் தேர்தலிலே ஆதரித்தார்.

பார்ப்பனர்களை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – பின் ஏன் பார்ப்பனர்களை தேர்தலிலே ஆதரிக்க வேண்டும்? இது ஒரு சந்தர்ப்பவாதமல்லவா?

— முரண்பாடுகள் தொடரும்…

22 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்”

  1. பயனுள்ள பல தகவல்கள். நன்றி வெங்கடேசன். ஆதாரமாக தந்துள்ள நூல்களின் பக்கங்களையும் குறிப்பிட்டிருக்கலாம். இருப்பினும் சிறந்த பணி.

  2. பல நல்ல தகவல்களுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

    நன்றியுடன்,

    சிற்றோடை

  3. இந்த புத்தகம் எல்லோரையும் சென்றடையச் செய்தல் வேண்டும்.

  4. அய்யா,

    பெரியார் என்று சில மூடர்களால் போற்றப்படும் ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதரின் வெற்றுக் கூச்சல்களையும், போலித் தத்துவங்களையும், சந்தர்ப்பவாத அரசியலையும் மிக அழகாக விளக்கி வருகிறீர்கள். அதற்கு எம் நன்றி!

    இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பவர் அதிகார வெறி, பணத்தாசை பிடித்தவர். பிராமணர்கள் அதிகாரப் பதவியில் இருப்பதால் அது கண்டு பொறாமல், முதலியார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார் என பிற ஜாதியினரைத் தூண்டி பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்கியவர். அவருக்கு தன் சொல் கேட்பவன், தனக்கு ஜால்ரா தட்டுபவன் தான் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் மேற்கொண்ட மலிவான தந்திரங்களும், பேச்சுக்களுமே பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத த்வேஷம் போன்றவை.

    ஜாதிவெறி பிடித்த அம் மனிதருக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் மீது எள்ளளவும் அக்கறையில்லை. அவர்கள் வாழ்வை உயர்த்த எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. பார்ப்பானை அதிகார பதவியில் இருந்து துரத்தி விட்டு அதில், தான் அல்லது தன்னைச் சேர்ந்தவர்கள் அமர வேண்டும் என்பது தான் அவரது லட்சியம். அதற்காகத் தான், மற்ற ஜாதியினரை பிரிவுபடுத்தத் தான் அவர் பார்ப்பன எதிர்ப்பையும், ராமன், கிருஷ்ணன், விநாயகர் போன்ற கடவுள்களையும் இழிவுபடுத்த ஆரம்பித்தார்.

    அவருக்கு தைரியமிருந்திருந்தால் ஒரு கருப்பசாமிக்கோ, அய்யனாருக்கோ, முனீஸ்வரனுக்கோ, சுடலைமாடனுக்கோ, அங்காள பரமேஸ்வரிக்கோ செருப்பு மாலை போட்டிருக்கலாமே, சிலைகளை உடைத்திருக்கலாமே? செய்தாரா? ஏன் இன்றைக்கும் கூட அவர்கள் இயக்கித்தனர் அதைச் செய்யலாமே, செய்வார்களா? செய்யமாட்டார்கள். ஏனென்றால் தமிழகத்து கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவார்கள். சிவனையோ, ராமனையோ, கிருஷ்ணனையோ, விநாயகரையோ இழிவுபடுத்தினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியம்தாம் இதற்கெல்லாம் காரணம். எனது ஆசான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டும் இன்னும் சிறிதுகாலம் வாழ்ந்திருந்தால் இந்த ஆசாமிகளது கொட்டமெல்லாம் அடங்கியிருக்கும். என் செய்வது, தமிழகத்தின் தவக்குறைவு அன்னார் சீக்கிரத்திலேயே காலமாகி விட்டார்கள்.

    பணத்தாசை கொண்டதால் தானே கையெழுத்துப் போடுவதற்கெல்லாம் காசு வசூலித்தார் ஈ.வே.ரா. அதுவும் 1 ரூ.கூட வாங்கியிருக்கிறார். அவரது கையெழுத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு?? தனது பத்திரிகையில் ’ராட்டை’ சின்னத்தை முகப்புப் பக்கத்தில் போட்டவர், சேரன்மாதேவி பிரச்சனையில் ’காந்தி’ தனக்காதரவாக இல்லை என்பதால் அதை எடுத்து விட்டாரே! என்ன சுயநலம்! காங்கிரஸ் உடைவதற்குக் காரணமாக இருந்த மாமேதை தானே அவர்.

    புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி நூலகத்திற்கு போனால் ஈ.வே.ராவின் அனைத்து நாளேடுகளின் தொகுப்பினையும் பார்க்கலாம். அவரது முரணான அரசியலையும், சந்தர்ப்பவாத நோக்கத்தையும் தெளிவுற அறிந்து கொள்ளலாம்.

    அன்பு, பாசம், நேசம், சகோதரத்துவம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் மீது எந்தவித நம்பிக்கையுமில்லாதவர் ஈ.வே.ரா. மனம் போனபடி, எந்தப் பொறுப்புமில்லாமல், சுகவாசியாக, சுயநலமாக வாழ்வதே தனது கொள்கையாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் கேவலமாகப் பேசியவர் எங்ஙனம் தமிழினத் தலைவர் ஆக இருக்க முடியும்?

    திருக்குறளின் கடவுள் வாழ்த்து குறித்து நாயக்கரின் கருத்து…

    ”வள்ளுவர் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய், இந்தப் படி கடவுள் என்று நாம் கருதுபவருக்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா?. மனிதன் எப்படி வாழவேண்டும் எனக் காட்டவே கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.”

    என்று ’வியாக்கியானம்’ அளித்திருக்கிறார்.

    ஆக, மனிதன் கடவுளை நம்ப வேண்டும் என்று வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். மனிதன் எப்படி வாழவேண்டும் என அவர் அதில் கூறியிருப்பதால் அது பின்பற்றத் தக்கது என்பதை ஈவெராவின் கருத்தாகக் கொள்ளலாமா?

    தனது வாழ்வின் இறுதி வரை சொல், செயல், சிந்தனை என அனைத்திலுமே முரண் மிக்கவராக வாழ்ந்த ஒருவர் தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பதில் சிஞ்சித்தும் ஐயமில்லை.

    பள்ளியில் படிக்கும் எமது பேரனுக்கு ஈ.வே.ரா பற்றி எள்ளளவும் தெரியாது. ஏன், ஆதித்யாவுக்கு, குணநிதிகளுக்கும், அறிவுநிதிகளுக்கும் கூட நிச்சயமாய்த் தெரியாது. என்ன கூப்பாடு போட்டாலும் வரப்போகும் எம் இளையதலைமுறை நீர்த்துப்போன அம்மனிதரின் கொள்கைகளுக்கும், அவரது இயக்கத்தினரின் கூப்பாடுகளுக்கும் செவிசாய்க்காது. ஆகையால் நாடு, மொழி, பண்பாடு, கலாசாரம் என்பதையெல்லாம் மறந்து விட்டு, புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு இனியும் இதுபோன்ற வறட்டுவாதம் பேசித் திரிபவர்களால் தமிழ்நாட்டுக்கோ, சமூகத்துக்கோ எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதே உண்மை!

    வாழ்க தமிழினம்! வளர்க தமிழர் தம் மாண்பு!

  5. இப்போதைய கால கட்டத்தில் ” பார்ப்பனர்” ஆக கூறப்படுபவர்களின் சிந்தனை, செயல்பாடு வேறு ! பாரதி, பாரதி தாசன்,EVR காலங்களில் ” பார்ப்பனர்” ஆக கூறப்பட்டவர்களின் சிந்தனை, செயல்பாடு வேறு! , புத்தர்,சங்கரர் காலங்களில் ” பார்ப்பனர்” ஆக கூறப்பட்டவர்களின் சிந்தனை, செயல் பாடு வேறு!! வள்ளுவர், இளங்கோ காலங்களில் ” பார்ப்பனர்” ஆக கூறப்பட்டவர்களின் சிந்தனை, செயல் பாடு வேறு!!!

    I request the author and all the gentle men as, you have the right to analse about E.V.R, at the same time, its more important that we use the criticism by E.V.R, to identify the pitfalls and improve us!

    Even before E.V.R joined in congrees, the anti- Bhramin mood was strong in tamil nadu!

    சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

    “சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.”

    “என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?”

    Thus even before EVR entered in to public life, (he joined in congress in 1919 and left congress by 1925), the Bhramins were attacked, this time the perpetrator was டி.எம்.நாயர்!

    Ihave cited the criticism on Bhramins by others , here below something from Bharthiyaar:

    ‘இந்தியா’ ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டயம் சீனிவாசன் கூறுகிறார்.

    “எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையாயிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய ‘பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம்’ முதல்பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது.

    ‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிரேன் என்றார்” எனப் பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.

    அதைப் போல ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்ற பாடல்.

    நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு – ஐயோ
    நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு
    பாயும் கடிநாய்ப் போலிசுக் – காரப்
    பார்ப்பனுக் குண்டிதிலே – பிழைப்பு

    பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
    பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
    யாரானாலும் கொடுமை இழைப்பான் – துரை
    இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

    முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்
    மூன்றுமழை பெய்யுமடா மாதம்
    இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் – இவர்
    ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார் (7)

    Also, Bhaarthiyaar gave a solution (as per his thinking):

    “ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கி விட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்.”

    EVR did hate camapaign against Bhramins, so we are criticising him.

    Before EVR, டி.எம்.நாயர் incited violance against Bhramins.

    Even Bharathiyaar has criticised Bhramins.

    Instead of attacking all these people, why dont we think to find out as what went wrong actually and to take remedial measures?

  6. எனக்குத் தெரிந்து, பி.ராமமூர்த்தி திராவிட இயக்கத்தைப் பற்றி எழுதிய புத்தகத்துக்கு மறுப்பாக வீரமணி ஒரு புத்தகமே எழுதினார். அவர் பதில் வாதங்களின் குணம் என்னவாக இருந்தாலும், மறுப்பு எழுதினார். அதை திராவிட இயக்க தொண்டர்கள் விரமணி என்ன எழுதினாலும் அதைப் பாராட்டக் கடமைப் பட்டவர்கள். அது போகட்டும். சில வருடங்களுக்கு முன் உங்கள் புத்தகத்தைத் தேடி திருவல்லிக்கேணி சென்றிருந்தேன். புத்தகத்தில் கொடுக்கப்பட்ட விலாசத்தில் உங்களையும் காணவில்லை. அங்கிருப்பாருக்கும் உங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லத் தெரியவில்லை. அப்படி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தது என்று நினைத்துக் கொண்டேன். அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது தான் வீரமணியின் பதிலா, அல்ல்து புத்தகமாக ஏதும் எழுதியிருக்கிறாரா, அல்லது மௌனம் காத்து பெரியாரைக் காப்பாற்றுகிறாரா?

  7. Dear Tiruchikkaaran, I appreciate your analysis of the status of brahmins during various periods. But when THE CREAM OF INTELLIGENTIA OF THE SOCIETY, that is THE BRAHMINS, collude with the East India Company and then the British administration, which tried to undermine EVERYTHING that is SWADESHI, the level of MISERY and AGONY faced by our society has NO KNOWN PARALLEL. THE IMPACT DURING THOSE DAYS CAN BE VISUALISED AND NOW WE ARE EXPERIENCING THE DAMAGE CAUSED TO OUR SOCIETY BY THOSE EDUCATED ELITE ADMINISTRATORS SHAPED THROUGH THE MACAULAYS SYSTEM OF ENGLISH EDUCATION. Psycological transformationa and basic change in the thinking process is the need of the hour. The policy of divide and rule followed by the British Regime, was helped by those who helped shape the administration in those days. Not withstanding exceptional personalities like Bal Gangadhara Thilak and Bharathiar, this crime squarely falls on the brahmins of those days.

  8. அதெல்லாம் ச‌ரி வ‌ர‌த‌ராஜ‌ன் அவ‌ர்க‌ளே,

    இப்பொதைக்கு முக்கிய‌ம் என்ன‌ என்றால், இன்திய‌ நாட்டின் எல்லா ச‌மூக‌ ம‌க்க‌ளின் உய‌ர்வுக்கு நாம் உழைக்க‌ வேன்டிய‌துதான் மிக‌ முக்கிய‌ம்.

    உய‌ர்வு என்றால் காசு ப‌ண‌ம், ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் அல்ல‌. ஆன்மீக‌ உய‌ர்வுக்கு நாம் உழைக்க‌ வேன்டிய‌தும் மிக‌ முக்கிய‌ம்!

  9. I’ve been reading the views of Tiruchikkaaran for quite some time and the reply by Varatharajan. His views are totally out of context and not related to the article that Ma Venkatesan is writing about EVR. EVR could not go beyond his “hate-brahmin’ campaign and added to this, his lack of education (which gives rise to jealousy and hatred against educated people in the society, who happened to be Brahmins, at that time) coupled with arrogance and the inability to analyse things from the right perspective made him a maniac. However, in Tamil Nadu, there has been a careful attempt to portray EVR as a ‘Sarva Roga Nivaarani’, which is what is wrong. EVR’s reaction when Dalits were burnt in Keezhvenmani in TN in 1969 is one classic example of his hypocrisy. Had a Brahmin Pannaiyaar burnt Dalits, this man would have jumped from earth to sky. EVR’s concept of ‘draavida naadu’ etc., was only a tool for Telugus / Kannadigas (like EVR) to do politics in Tamil Nadu.

    In today’s context, everybody is ready to do their might for the country. But, the realisation has to come from the followers of EVR (EVR himself told that he wanted only fools for his organisation, may be prompting people like Veeraman to join his bandwagon those days) for whom even today anything and everything bad in this world is because of Brahmins.

  10. The new Bhramin shall be ready to learn from anyone, more so in case it is useful.

    The new Bhramin is not ready to shut the door for any opinion without looking into the merit of that.

    We know well that EVR had vengence against Bhramins, he spite venom on Bhramins, he had full fledged hate camapaign against Bhramins. I am one of those affected. I stood First in School, but who were lower to me in the rank got admission in better colleages – never mind, they are my fiends, l was happy.

    Though I was victimised , without any fault on me, I was keen to find as how EVR was successful in his hate campaign, I found his most of his writings were aimed only at some fault on Hinduism and against Bhramins. But I also found some truth in his writting. After studying his writings, I thought, and derived few points, which can be useful for me and for the community and for Hinduism as well!

    Hence though I learnt 40% from Krishna, 20% from sanakara, 20% from Vivekaanatha, 10% from Thiyakaraasa, 9% from Pattinathaar and I learnt % from EVR also, I agree honestly- may be EVR good person or not – he had some thing I have to earn, I learnt it from him!

    So due to EVR, I got some setback in my life, but still I derived something out of it! An optimistic is the one who finds an opportunity even in Trouble! A pessimistic finds trouble even in opportunity!

    I dont know whether this point is in Context or out of cotext , but let me write- Ever since I learnt bagavath Geetha and showed interest on religious matters- More than for the past 15 years, I have been frankly conveying my inconvenience about the “fortune Billionaire mutts”. Not only the mutts in Tamil nadu, other parts if India alsothere are wetre quiet a view ” fortune Billionaire mutts”, which are increasing in number now!

    This looked like a very surprising and ugly development forme, because we had so far known about many saints who through away billions and became amonk- like Pattinathaar !

    We had also witnessed as how the empty handed penny less monks like Budhaa, Sankara had changed the Continents religious and spiritual History. Even Vivekaanatha roamed throughout as a penny less monk, and carried few currencies- only on the situataion when he had to go to abroad, where begging was forbidden!

    But the Bhramins of one Generataion before us, throw their full support behind the high profile, megha rich ” monks”! They used to tell us, ” Oh, you did not go and saw him? Even Prime minster came in Helicopter to see him yesterday”! Their yard stick was to see how much popular, powerful the so called “monk” was! They never bothered about spiritual enlightment of the monk, infact they did not have the skill to fathom the “monk”s spirtual power, if at all he had any thig.

    These people – the people during the period from 1960- 1990 had totally detoriated the situation, now when the inner wound has infected that much its bursting in the skin now- still they are supporting the disease and allow it spread further.

    Now older generation has passed the same disease to younger generataions also, we can see the effect in the young minds also.

    But let me tell you, this is the final chance for us, to change.This 2004 episode is a good wake up call, but if we wont listen, it may well become the final call.

    But we wont be intimated easily as we learnt spirtuality from Krishna, Buddhaa, Adi Sankara, Vivekaananathaa, Pattinathaar.. not from billionaire monks or those who were the poducer of thse monks and remained silent spectator for their escapades!

  11. I read the views of Tiruchikkaran today as I was out of station for a while. I am able to deduce two things.

    He has got an aversion to Kanchi Sankara Math (I also read his views on the other articles published in his website). Any way, that is his own opinion and he’s entitled to it.

    Second thing he repeatedly harps upon is that he’s willing to learn from anybody and has in fact learnt some thing from EVR also. This (attempting to find out anything useful from EVR’s speeches and writings) is like, in EVR’s own language, ‘malathil arisi porukkuvathu’.

    However, he should understand that the article by Ma Venkatesan is about a man called EVR whose followers are projecting him like a ‘new sankaracharya’. Tiruchikkaran is only worried about the billions of dollars stashed away in mutts (as per his version), but he’s not bothered about the crores of rupees stashed with the Dravidian Philosophy politicians in Tamil Nadu.

  12. //but he’s not bothered about the crores of rupees stashed with the Dravidian Philosophy politicians in Tamil Nadu//

    Dhravaitiann Philosophy politicians stashed trillions of Dollars. All the Public knows that well. அவர்களே ஒத்துக் கொண்டது போல ” தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? ” என்று கூறி தேனடை முழுவதும் குடிப்பார்கள்.

    தங்களின் சுயநலத்துக்காக எந்த வன்முறை, அராஜக செயலையும் செய்வது தவறு இல்லை என்று கருதுபவர்கள் அவர்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆசைப் பட்டு, ஆட்சியில் வைக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களை சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

    எந்த ஒரு “மடத்தையும்” நாம் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?- அதை அவர்கள் மடம் எப்படி நடத்தப் பட வேண்டுமோ, அப்படி நடத்துகிற வரையில்!

    //This (attempting to find out anything useful from EVR’s speeches and writings) is like, in EVR’s own language, ‘malathil arisi porukkuvathu’//

    பெரியார் எழுதியதைப் படியுங்கள் ” உபாத்தியார் பள்ளியிலே கிரகணம் எப்படி நடை பெறுகிறது, சூரியனும் சந்திரனும் பூமியும் நேர் கோட்டிலே வரும் போது சந்திரன், சூரியனை மறைப்பதால் சூரியனின் ஒளி நமக்குத் தெரியாமல் மறைக்கப் படுவதால், சூரியன் இருண்டது போல காட்சி ஏற்படுவது, சூரிய கிரகணம்! என்று தெளிவாக விளக்கி விட்டு, வீட்டிற்கு போய், ராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்குவதால் கிரகணம் உருவானதாக கற்பிதம் செய்து சடங்கு செய்து தலை முழுகுகிறார்கள்.”

    இதில் என்ன தவறு? இதைப் புரிந்து கொள்வது மலத்தில் அரிசி பொறுக்குவதா?

    ஒரு பக்கம் நவீன வானவியலுக்கு அடித்தளம் அமைத்ததாகக் கூறப்படும் விஞ்ஞானி சந்திரசேகர் , மற்றும் சி,வி. ராமன், ராமானுஜம் இவர்களையும் வைத்துக் கொண்டு இன்னொரு புறம் இந்த பாம்பு பல்லி கதை நமக்கு தேவையா?

    இந்த பாம்பு கதைகளை கூறியவர்களை, நாம் குறை கூறவில்லை. அவ்ர்கள் காலத்தில் தொலை நோக்கி கருவிகள் இல்லை. அவர்களுக்கு மனதில் தோன்றியதை கூறி விட்டனர். ஆனால் இப்போது நம் நிலை என்ன?

    இந்து மதம் உண்மையில் சூரியன் , பூமி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உருவாக்கப் பட்டது அல்ல.

    இந்து மதம் “மனிதனின் உயிர் ஏன் இயற்க்கைக்கு அடிமையாக இருந்து பல துன்பங்களை சந்திக்கிறது? துன்பங்களில் இருந்து ஒரே அடியாக விடுபட்டு , சுதந்திரமான, அழிவற்ற நிலையை அடைவது எப்படி?” என்பது போன்ற உயிர் ஆராய்ச்சியைத் தருவதே மதம்!

    எம‌னை நேரில் ச‌ந்த்தித‌தாக‌ கூற‌ப் படும் ந‌சிகேத‌ச் ,எம‌னிட‌ம் இற‌ந்த‌ பின் ம‌னித‌ உயிர் எங்கு செல்கிற‌து என்ர‌ உண்மையைக் கூறுமாறு கேட்டான். அதுதான் முக்கிய‌ம். நான் இற‌ந்த‌ பின் என் உயிர் எங்கே போகும் என்ன‌ ஆகும் என்தறா உண்மை அறிவ‌த‌ர்க்கே ஆன்மீக‌ம்.

    ஆன்மீக‌த்தை வைத்து பூமி சூரிய‌னை சுற்றுகிறி‌தா என்றா உண்மையை அறிய‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தில்லை.

    ஒன்று நீங்க‌ள் சிந்திக்கும் பாதைக்கு திரும்புங்க‌ள். இல்லையேல் எங்க‌ளையாவது சிந்திக்க‌ விடுங்க‌ள்!

    Swami Vivekaanathaa has told clearly that Hinduism has lot of truths to be given to the wesst, but please dont pass them your superstitions which you like very much!

    I dont accept any one , any oraganistaion which indulge in amassing wealth in the cover of Spirtuality.

    Let me ask one question. Who are called துற‌விக‌ள்?

    Money can do nothing in Spirtualism. Infact money can not help any one to save their life also!

    புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

    அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-‍இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

    தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?

    ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ முடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌ வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌ இருக்க‌ முடியும்?

    ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

    எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?

    இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகிற‌தே‍?

    பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?

    நான் உட‌ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன். ஆனால் இந்த‌ உல‌கில் ந‌ம‌க்கு கிடைக்கும் சிறு வெற்றிக‌ளை வைத்து நாம் வ‌லிமை உடைய‌வ‌ர் என்று எண்ணி ம‌ய‌ங்கி விடுகிறோம், என்ப‌தாக‌வே முடிவுக்கு வ‌ருகிரென்! என்னைப் பொருத்த‌ வ‌ரையில் இது ஒரு மிக‌ முக்கிய‌மான PROBLEM .

    இத‌ற்க்கு யாராவ‌து SOLUTION க‌ண்டுபிடித்தால் அவ‌ர்க‌ள் ஆதி ச‌ங்க‌ர‌ர், புத்த‌ர், விவேகான‌ந்த‌ர், “நாமார்க்கும் குடி அல்லோம்” அப்ப‌ர் வ‌ரிசையில் சேருவார்க‌ள்.

    கோவில்கள் என்பவை, அதில் வழிபாடு செய்யும் பக்தர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தினால் தான் ஆன்மீக வலிமை பெறுகின்றன.

    பழனி கோவிலின் மூல விக்கிரகம், போகர் என்னும் சித்தர் தானே உருவாக்கி வழிபட்டு வந்த விக்கிரகம்தான். போகருடைய சிறந்த பக்தியினால்தான் அந்த இடம் புனிதமாக கருதப் பட்டு பிற்காலத்தில் பெரிய கோவிலாக உருவாக்கப்பட்டது.

    காலஹஸ்தியில் உள்ள கோவில் கண்ணப்ப நாயனாரின் பக்தியின் சிறப்பு கருதி உருவாக்கப்பட்டது.

    போகரோ, கண்ணப்பரோ, 1500 கிலோ தங்கம் வைத்து, இலட்சக் கணக்கானவர் வந்து குமியும் கோவில் கட்டவில்லை. அவர்கள் ஒரே ஒரு சிலையை வைத்து காட்டிலே, மலையிலே தனிமையிலே ஆன்மீகத்திலே கவனம் செலுத்தினார்கள்.

    போகரைப் போல, கண்ணப்பரைப் போல, புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல ஆறுமுக சாமியாரோ, நீங்களோ, நானோ பக்தியில், ஆன்மீகத்தில் அர்ப்பணிப்பு காட்டி நாமே ஆன்மீகத்தில் உயர முடியும். அப்போது நாம் வழி பட்ட சிறிய இடம் பிறகு பெரிய கோவிலாகக்க கூடும்.

    ஆனால் அதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

    ஆதி ச‌ங்க‌ர‌ர் உருவாக்கிய‌ ம‌ட‌ங்க‌ளிலும் இப்பொது என்ன‌ பெரிய‌தாக சாதித்து விட்டார்க‌ள்? அப்படி அவ‌ர்க‌ள் ச‌ங்க‌ர‌ரின் க‌ருத்தை ம‌க்க‌ளிட‌ம் ச‌ரியாக‌
    ப‌ர‌ப்பியிருந்தால் ம‌க்க‌ள் எப்ப‌டி ஏமாறுவார்க‌ள்?

    ஆதி ச‌ங்க‌ரரின் முக்கிய‌ சிற‌ப்பு, அவ‌ர‌து த‌த்துவ‌ க‌ண்டு பிடிப்பு தான்.

    போகிற‌ போக்கில் சில மட‌ங்க‌ளையும் அமைத்து விட்டுப் போனார்.

    ஆதி ச‌ங்க‌ர‌ர் த‌ன்னுடைய‌ ஆன்மீக‌ ச‌க்தியை நாலாக‌ப் பிரித்து, நாலு ம‌ட‌ங்க‌ளிலும் கொஞ்ச‌ம் ஒட்டி வைத்து விட்டுப் போனாரா? அந்த‌ ச‌க்தி க‌திர் வீச்சாக‌ வ‌ருப‌வ‌ர் மீது பிர‌காசிக்கிறதா?

    நான் சொல்லுவ‌து என்னவென்றால் அத்வைத‌ ம‌ட‌மோ, க‌ட‌வுள் ம‌ட‌மோ‍ அதை உருவாக்கிய‌வ‌ர்க‌ள் ஆராய்ச்சிக‌ள் தொட‌ர்ந்து ந‌டை பெற‌ அமைப்புக‌ள உருவாக்குவார்க‌ள். ஆனால் பின்னே வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆராய்ச்சியை ப‌ர‌ணில் போட்டு விட்டு சொத்து குவிப்பு, சொகுசு என்று ஆக‌ வேண்டிய‌தைப் பார்ப்ப‌துதான் ந‌ட‌க்கிறது.

    I am not against mutts, but I am not for simply outsorcing all the spiritual experiments to the mutts and then blindly try to cover up things!

    I am for the correct Hinduism. Even people like Iranyan, Raavanaa were Hindus only. But Hinduism did not resort to Iranyaatchasan or Raavanaa to rescue it, though these people were powerful to establish Hinduism- RIGHT?

    Hinduism shall be only lead by People like Raama, Krishnaa – but won’t be handed over to the types of Raavanaa or Dhryothanaa!

    Its upto you to decide as, on whose side you shall be sided with!

    //Second thing he repeatedly harps upon is that he’s willing to learn from anybody//.

    Now I understood that even if I harp 100 times, there may not be much use :

    மூர்க்கனிகே புத்தி நூற்கால ஹேளிதரு
    கோர்க்கல்ல மேலே மளே ஹுயிதரே
    நீர்க்கொம்புதுந்தே ஸர்வக்ஞ.

    மூர்க்கனுக்கு புத்தி நூறுமுறை சொல்வது
    பெருங்கல் மேலே மழை விழுவது போல.
    நீர் தங்குமா அதில் சர்வக்ஞா?

    Thanks to சர்வக்ஞா and Jataayuji!

  13. //Tiruchikkaran is only worried about the billions of dollars stashed away in mutts (as per his version), but he’s not bothered about the crores of rupees stashed with the Dravidian Philosophy politicians in Tamil Nadu//

    Thiruchikaaraa, you did not blame “Dravidian Philosophy politicians” in Tamil Nadu, so you did not blame the head of our mutt also!

    This is a clear confession that the heads of some mutts of exactly equal to the “Dravidian Philosophy politicians” in Tamil Nadu!

    God save us!

  14. //He has got an aversion to Kanchi Sankara Math (I also read his views on the other articles published in his website). Any way, that is his own opinion and he’s entitled to it//

    இவர்கள் நாம் கூறியதில் உள்ள எத்தனையோ எல்லா விஷயங்களையும் விட்டு விட்டார்கள், இவர்களின் பிரதான கண்டு பிடிப்பு என்ன வென்றால் நாம் சிலரின் மீது “aversion” ஆக இருக்கிறோம் என்பதுதானாம்.

    நீங்கள் செய்த வேலைக்கு உங்களைக் கொஞ்சவா முடியும்? தலையில் வைத்துக் கொண்டு ஆடவா முடியும்?

    மொத்த ஜாதியும் கெட்டாலும் பரவாயில்லை- தாங்கள் இது வரை முட்டாள் தனமாக இருக்கவில்லை- என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும், அதற்க்கு ஒன்றுமே நடக்கவில்லை என்று சாதிக்க வேண்டும்!

    அதற்காக இந்து மதமே கெட்டாலும் பரவாயில்லை என்று செய்ய நினைக்கிறார்கள்.

    முட்டாளுக்கு மூணு இடத்திலே அசிங்கம் என்று சொல்வார்கள். காலிலே அசிங்கம் பட்டால், காலைக் கழுவுவதை விட்டு அதைக் கையிலே எடுத்துப் பார்த்தானாம். அதிலும் நம்பிக்கை விடாமல் மூக்கே முகர்ந்தும் பார்த்தானாம்.

    முதலில் சரியான ஆச்சாரியார்கள் கிடைக்காவிட்டால், பழைய சிறப்பான ஆச்சாரியார்களைப் படித்தே அந்த இடத்தை நிரப்பலாம். அத விட்டு ஆன்மீகத்திற்கு முன்னுரிமை குடுக்காமல், செல்வாக்கிற்கு முன்னுரிமை குடுத்து தேர்வு செய்தார்கள்.

    இரண்டாவது உண்மை வெளியே தெரிந்த போதாவது, கழுவும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் மூடி மறைத்து அசிங்கத்தை நிவேதனம் என்று சாதிக்கப் பார்க்கிறார்கள்.

    மூன்றாவது, நீ முகர்ந்து பார் என்று நமது மூக்கிலே ஈஷி விடப் பார்க்கிறார்கள்.

    இங்கே குறிப்பிட்ட அமைப்புக்கும் (Kanchi Sankara Math) நமக்கும் எந்த கொடுக்கல் வாங்கலோ, வருத்தமோ, விரோதமோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்கே கோவில் கட்டலாம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்தியாவின் பல பாகங்களில் பல அமைப்புகள் “அட்டகசாமாக” உள்ளன.

    மந்திரத்திலே, அந்தரத்திலே இருந்து மோதிரம் வரவளைப்பவர்கள் உள்ளனர். அந்த மோதிரம் அணிந்தால் நோயே வராதா? சாவே வராதா ?

    நம்முடைய aversion எல்லாம் தமிழ் நாட்டு பிராமணர்களின் மனதில் உள்ள அறியாமை, இருட்டு, ignorance, மூடத்தனம், தமோ குணம் இவைதான். இதை நீக்கி அவர்களின் மனதில் அறிவுக்கு இடம் குடுக்க செய்தால் (ஆன்மீக விசயத்தில் அறிவுக்கு இடம் குடுக்க செய்தால்), அந்த அறிவு, புல்லுருவிகளை சூரியனைக் கண்ட பனி போல காணாமல் அடித்து விடும்.

    அதற்காகத் தான் இங்கே எழுதுகிறோம்!

  15. Tiruchikkaran has assumed that I am a devotee of Kanchi Math. Let him be advised that I’m not. Tiruchikkaran is free to write a separate article exposing Kanchi Math and ways of removing ignorance etc., from the minds of Brahmins in Tamil Nadu. We’re also interested to read that. Coming and writing all that in response to an article by Venkatesan on EVR, a man who is being glorified in Tamil Nadu, is out of context.

  16. I dont know, honestly, as whether Mr. Subramaniam was a devotee of this mutt or that mutt- I have no reason or motive to worry about that. To be more precise I have nothing against Mr. Subramainam, I have nothing to worry about him, I wish all the best, long hale & healthy life for Mr. Subramanianm!

    My concerns are only about Hinduism / sanaathana Dharma.

    But Mr.Subramainam himself has projected two main things in the first lines itself

    “read the views of Tiruchikkaran today as I was out of station for a while. I am able to deduce two things.

    He has got an aversion to Kanchi Sankara Math (I also read his views on the other articles published in his website). Any way, that is his own opinion and he’s entitled to it”

    Thus Its Mr.Subramainam who put Thiruchikkaaran and his ‘aversion’ to Kanchi “matt” in the front- instead of writing about “an article by Mr. Venkatesan on EVR, a man who is being glorified in Tamil Nadu” !

    But whatever I had written is not out of context, its related to the context only.

    E.V.R.s hatred camapign was mainly against the Bhramins and the Hinduism.

    Bhramins of his period could not counter him effectively, as they were quiet away from other sections of the soceity- literally. Bhramins were not eating along with others ….etc were used by E.V.R. tactically. Infact even before Periyaar, Vivekaanathaa has advised/ reprimanded the Bhramins in
    a friendly manner.

    But it would take some time for bramins to leave the habits that they had been following for Thousand years.

    Meanwhile E.V.R. used it to elevate himself in the soceity and politics.

    Meanwhile the Bhramins changes a lot in the 100 years, but the hate camapign of E.V.R.s ‘disciples’ continues. The “changed” Bhramins chose “mutt” as their new face identity, philosophy to counter the “aethiest”s. Hence its really in context, to mention about “mutt”- especially when it ended up more damaging to the Bhramins!

    But the outcome is not ended up as a damage to Hinduism. Its really a boom for Hinduism to move in its true, pure path!

    For the Bhramins, yes, well it could be good for them also, if they are ready to listen to wake up call.

    The humilation for Bhramins, Hinduism started by E.V.R had been completed now by the Bhramins themselfes with their blind folded follow up. Hence its not out of context. Its in the context!

    Its upto us to get out from the hole which we put ourselves in!

  17. ஸ்ரீ.ஈ.வே.ரா. நிச்சயம் சர்ச்சைக்குரியவரே. அவரைத் தந்தை என்று அவரை வணங்குபவர்கள் அழைக்கிறார்கள்.
    பற்பல குற்றச்சாட்டுகள் அவரைப்பற்றிக் கூறப்படுகின்றன.
    தமிழர்களால் மன்னிக்கப்படமுடியாத ஒரு குற்றம், தமிழ் ஒரு
    காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறியது…்

  18. கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா?

    மக்களைப் பிரிப்பதே மதம்

    ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக் குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து, எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலை நாட்டவில்லை என்பதால்தான்.

    வேறு மதத்தவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக்கொள்ளத்தான் முடிகிறதேயொழிய, வேறென்ன இவைகளால் லாபம்.

    இந்து மதத்தை எடுத்துக்கொண்டால் இன்னும் மோசம். 4 அல்ல 400 அல்ல 4000-க்கும் மேற்பட்ட வகையாக மக்களைச் சாதி பேர் சொல்லி இந்து மதம் மக்களை ஒன்று சேரவொட்டாமல் பிரித்து வைத்திருக்கிறது. ஒரு மதத்திலேயே 1000 கணக்கான சாதிகள்-அதிலே ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நிலையென்றால் இது எப்படி நியாயம் ஆகும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

    இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பெயர் பிராமணன், மற்றவனுக்குச் சூத்திரன், கடைசியானவனுக்குப் பஞ்சமன் என்ற பட்டம் இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது, தொடக்கூடாது, பார்த்தால், தொட்டால் தீட்டு என்று எழுதி வைத்துக்கொண்டு இந்த 1950ஆம் ஆண்டிலேயும் அதையே நடைமுறையில் செய்கிறார்கள்.

    அதுபோலவே கிருஸ்துவ மதத்தை எடுத்துக் கொண்டாலும், நம் நாட்டைப் பொறுத்த வரையில் அது மோசமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை விட கிருஸ்துவ மதம் பல மடங்கு மேல் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்து மதத்தைப் போலவே பாப்பாரக்கிருஸ்துவன் என்பது போன்று பல சாதிப்பிரிவுகள் இருந்து கொண்டு, அவைகளின் பெயரால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டும் வருகின்றது.

    எவனாவது ஒருவன் இந்து மதத்தை விட்டு கிருஸ்துவமதத்திற்குப் போவானென்றால் இந்து மதத்திலே தனக்கிருக்கும் இழிநிலை, அவைகளிலே போதிக்கப்படும் மூடக் கருத்துக்கள் இவைகள் பிடிக்காமல், அறிவு, நாகரிகம், சமத்துவம் பெறவேண்டுமென்றுதானே கிருஸ்துவ மதத்திற்குப் போயிருப்பான். வேண்டுமானால் சில பார்ப்பனர்கள் இல்லை என்று கூறலாம்.

    பணம் கொடுத்து பாவையரைக் காட்டி நம்மவரை மயக்கினார்கள் என்று கூறுவார்கள். அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அந்தப்படி பணத்தைக் காட்டி, அவர்களை மதம் மாறும்படி செய்திருந்தால் இப்போதுள்ள கிருஸ்துவர்கள் பணக்காரர்களாய் இருக்க வேண்டும். அப்படி யாரும் பணக்காரர்களாய் இருப்பதாகவும் தெரிய வில்லை.

    அல்லது பெண்களைக் காட்டி ஏமாற்றினார்களென்றால் கிருஸ்தவத் தாய்மார்கள் வெள்ளைக்காரப் பெண்மணிகளாக இருக்க வேண்டும். அதுவும் இல்லை. பின் ஏன் கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள் என்று கேட்டால், இந்து மதத்திலே நமக்கு இருக்கும் இழிவு ஒழியும், அறிவு நாகரிகம் வளரும் என்பதால் தான். இன்னமும் நான் கூறுவேன், இந்த நாட்டிற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் கிருஸ்துவர்கள் தான் என்று.

    கிருஸ்துவ ஆங்கிலேயன் இங்கு வராதிருந்தால் நம் மக்கள் இன்றும் நாய்கள், பன்றிகள் நிலையிலேயேதான் காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள். அவனால் ஏதோ நமக்கு அறிவு சிறிது வளர்ந்து, இன்று ஓரளவு நாகரிகம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தக் கருத்தை எந்தப் பார்ப்பனரிடமும் வாதாடி அவைகளை ஒத்துக் கொள்ளும்படி செய்ய என்னால் முடியும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தில் தங்கள் நலன் கருதி இந்துக்கள் சேர்ந்தாலும், அதிலேயும் சாதிப்பிரிவு இருக்கிறது, ஆகவே தான் அதிலேயும் சீர்திருத்தம் வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

    அது போலவே முஸ்லீம் மதமும் இந்த நாட்டு மக்களை எவ்வளவோ சீர்திருத்தியிருக்கிறது. நம்முடைய நாட்டு மக்கள் அத்தனை பேரும் சமுதாயத்தில் ஒன்று என்று இல்லா விட்டாலும் கூட, முஸ்லீம்களைப் பொருத்த மட்டிலுமாவது, தங்களுக்குள் சாதி பேதம், உயர்வு, தாழ்வு என்பது இல்லாமல் செய்து விட்டார்கள். முஸ்லீம் என்று சொன்னால் அவர்கள் காரியத்திற்கு ஒன்றுபட்டு, கட்டுப்பாடாக இருந்து செயலாற்றும் பண்பு அவர்களுக்கு இருக்கிறது.

    ஆகவே கிருஸ்துவ, முகமதிய மதத்தை விட இந்து மதம் மட்டம் என்பதோடு மட்டுமல்ல, அவைகளில் இல்லாத பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் இந்து மதத்திலே இருக்கின்றன. ஏனென்றால் இதில்தான் பித்தலாட்டத்தையே போதிக்கும் வேத புராண, இதிகாசங்கள் நிறைந்திருக்கின்றன.

    அதுமட்டுமல்ல ஆயிரங்கடவுள்கள், அதன் பேரால் ஆபாசமான கற்பனைகள் நிறைந்திருக் கின்றன. அந்தக் கடவுள்கள் உருவ பேதம், குணபேதம், கொண்டு நம்மைவிட மோசமான நிலையிலிருக்கின்றன. பல பெண்டாட்டிகள் உடைய கடவுள், தேவடியாள் வீட்டுக்குச் செல்லும் கடவுள், ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்ளும் கடவுள்-ஆக இந்தப் பலரகக் கடவுள்கள் இந்து மதத்தில்தானே இருக்கின்றன.

    கிருஸ்தவ மதத்திலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. முஸ்லீம் மதத்திலும் ஜாதி பேதம், உருவக் கடவுள், ஆபாசக் கடவுள்கள் இல்லை என்றாலும் சில குறைபாடுகள் உண்டு. இல்லை என்று எந்த முஸ்லீமாவது மறுத்துக் கூற முடியுமா? நல்ல கடவுள்கள் என்றால் பணக்காரன் என்று ஒருவனும், பிச்சை யெடுத்து வாழவேண்டும். என்று மற்றொருவனும் என்று ஏழை பணக்காரனைக் கொண்ட எந்த மதமும்; கடவுளும் உண்மையான மதம் ஆகாது.

    ஒருவனுக்குப் பூமி இருக்க வேண்டுமானால் காடுவெட்டி கழனியாக்கிச் செய்திருந்தால் தான் முடியும். அப்படி ஏற்பட்ட சொத்துக்கள் தானே எல்லாவகையான அத்தனையும். அவை ஏன் ஒரு தனி மனிதனிடத்தில் 100 ஏக்கரா 50 ஏக்கரா என்று இருக்க வேண்டும். மற்றவன் வயிற்றுக்கு இல்லையே என்று வாடி இருக்கவேண்டும்.

    ஒருவனிடத்தில் ஏன் 2 அடுக்கு, 3 அடுக்கு மாடி வீடுகள் பல இருக்க வேண்டும்; மற்றொருவன் குந்தக் குடிலற்று கதறி அழும் நிலையில் இருப்பது. நாணயமான, யோக்கியமான கடவுள் என்றால் மக்களுக்கு இத்துறையில் இதுவரை செய்ததென்ன? இந்த நாட்டில் எத்தனை பேர் படிப்பற்றவர்கள்? படிக்க வசதியில்லாதவர்கள். இவர்களுக்கு இந்தக் கடவுள் சாதித்ததென்ன?

    ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம் எங்கள் கடவுள், எங்கள் மதம், எங்கள் சாஸ்திரம் என்று ஒவ்வொருவரும் கூறுவதும் அடிப்படையில் ஒன்றுதான், கலரில் தான் வித்தியாசம் இருக்கிறதென்று. ஏன் என்றால் அவைகள் அந்தக் காலத்திலே சரியாக இருக்கலாம். அந்தக்காலத்து மக்கள் அறிவுக்கேற்ற முறையில், அறிவுத்தெளிவு ஏற்படாத அந்தக் காலத்தில் இந்த மாதிரியான காரியங்கள் செய்தார்கள்.

    கடவுள்கள் அத்தனையும் நம்முடைய கற்பனைகளே. இந்துக் குழந்தைக்கு இந்துக் கடவுளரைப் பற்றியும், மகமதியக் குழந்தைக்கு மகமதிய கடவுளரைப்பற்றியும், கிருஸ்துவக் குழந்தைக்குக் கிருஸ்துவக் கடவுளைப் பற்றியும் அந்தந்த மதத்தவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் தெரிகிறதே தவிர, இயற்கை யிலேயே கடவுள் உணர்ச்சி அக்குழந்தை களுக்கு ஏற்படுவதில்லை.

    ——————————

    1.4.1950 அன்று வீரகலூர் பொதுக்கூட்டத்த்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து-விடுதலை, 4.4.1950

  19. “ஒருவனிடத்தில் ஏன் 2 அடுக்கு, 3 அடுக்கு மாடி வீடுகள் பல இருக்க வேண்டும்; மற்றொருவன் குந்தக் குடிலற்று கதறி அழும் நிலையில் இருப்பது. நாணயமான, யோக்கியமான கடவுள் என்றால் மக்களுக்கு இத்துறையில் இதுவரை செய்ததென்ன? இந்த நாட்டில் எத்தனை பேர் படிப்பற்றவர்கள்? படிக்க வசதியில்லாதவர்கள். இவர்களுக்கு இந்தக் கடவுள் சாதித்ததென்ன?”

    இந்த மொக்கை வியாக்கியானமெல்லாம் அரசியல்வாதிகள் பேசுவதற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் ஆன்ம ஞானம் பெற உதவாது. அதற்கு உண்மையான பகுத்தறிவோடு சிந்தித்தலும், உண்மையான ஈடுபாட்டோடு உழைத்தலும் வேண்டும். படிப்பற்றவன் அறிவு பெறுவது அவனின் முயற்சியிலும் இருக்கிறது. அறிவுள்ளவன் அரவணைத்துச் சென்றாலும் அறிவைப் பெற வேண்டும் என்று ஒவொவொரு தனி மனிதனும் விரும்பினால் மட்டுமே அதைப் பெற முடியும். மாறாக குறைசொல்லிக் கொண்டு திரிவதும், அறிவுச் செல்வத்தை அப்புறப்படுத்துவதும், அடிமைத்தனத்திற்கு வித்திடும்.

    2 அடுக்கு மடி குடியிருப்புக்கு உண்டான உழைப்பை அதன் சொந்தக்காரன் தான் அறிய முடியும். அதன் நெளிவு சுளிவுகளை, சரியான இடத்தில், சரியான விகிதத்தில், சரியான நபரிடத்தில் உங்கள் உழைப்பு சென்று சேர்ந்தால் சரியான பலன் கிட்டும் என்பதை சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அதை விடுத்து அவனுக்கு 2 அடுக்கு மாடியா? அவன் நாசமாய்ப் போக! அவனை எல்லாரும் அடித்து உதையுங்கள். நீங்கள் கீழேயே இருப்பதற்கு அவன் தான் காரணம். அவனுக்கு செருப்பு மாலை போடுங்கள். அவன் இல்லை, இல்லை இல்லவே இல்லை என்று பூனைக் கண்களை மூடிக் கொண்ட கதையாக பேசினால் இழப்பு பேசியவருக்கு இல்லை. அவரை மதித்து அந்தப் பேச்சைக் கேட்டு நடந்தவருக்கு தான். எனவே நீங்கள் கூறும் so called “பகுத்தறிவு” இங்கே அடிப்பட்டுப் போகிறது.

    அறிவே அடிபட்டுப் போன பிறகு மற்றதெல்லாம் என்ன? வயிற்றெரிச்சல் பாடல்கள் தான். ஒலம் தான். ஒப்பாரி தான். வையுங்கள். கேட்க தான் ஆளிருக்காது.

    “ஆகவே கிருஸ்துவ, முகமதிய மதத்தை விட இந்து மதம் மட்டம் என்பதோடு மட்டுமல்ல, அவைகளில் இல்லாத பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் இந்து மதத்திலே இருக்கின்றன.” – ஒப்பாரி என்று வந்து விட்ட பிறகு பித்தலாட்டங்கள் என்ன, அவை எவ்வாறு வெளிக்கொணரப்படவேண்டும் என்பதெல்லாம் தேவையா? கூட்டமா சேர்ந்து பார்ப்பானை, அவன் கும்பிடும் தெய்வத்தை அசிங்கப் படுத்துவோமைய்யா! யார் கேட்பது நம்மளை? நாம தான் மெஜாரிட்டி தமிழ்நாட்டுல! அப்புறம் என்ன? அவனுக்கு நெத்தில வர்றது தக்காளி சட்னி தான்! ரத்தமே வரல…. சத்தியமா திருப்பி அடிக்க மாட்டான்! நெஞ்சுலயே மிதி!

  20. அருமையான தகவல்கள். வாழ்த்துகின்றேன்.

  21. Sir, You had given that many are not true. You had given few reference numbers too. Do you have copies of those references. For eg. If you say that so and so News Page carries so and so News, do you have that News page with you?

    Please respond.

    Thank you.

    KAJO Thirusabai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *