முகப்பு » அரசியல்

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

அச்சிட அச்சிட

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை முரண்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிக்கக்கூடாது. அது நாகரிகமும் அல்ல என்று சிலரால் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணம், விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற பல விஷயங்களில் அறிவுரை கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிற ஈ.வே. ராமசாமி நாயக்கர், அந்த அறிவுரைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா, இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஊருக்கு மட்டும்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே என்று சொன்னால் அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.

இந்த அடிப்படையில்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் அவருடைய கொள்கைத் தவறிய திருமணத்தையும் நாம் விமர்சிக்கிறோம்.

13 வயதுப் பெண்ணை திருமணம் செய்த ஈ.வே.ரா!

periyar001ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது. முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13. ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர். அப்படியானால் 13 வயதுப் பெண்ணை – குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?

அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தவை. இவை தவறு என்று நினைக்கப்படவில்லை. காந்தி முதல் பல தலைவர்கள் சிறுவயதுப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குப் பொருந்தாது. ஏனென்றால் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த பலவற்றைக் கண்டித்து பகுத்தறிவுத்தனமாக முற்போக்குத்தனமாக நடந்து கொண்டவர். சிறுவயதிலேயே மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர் என்றெல்லாம் ஈ வே. ராமசாமி நாயக்கருக்கு புகழ்மாலையைச் சூட்டுகின்றனர்.

அப்படியானால் சிறு வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்றால் ஏன் 13 வயதுப் பெண்ணை மணக்கமாட்டேன் என்று சொல்லவில்லை? இந்தத் திருமணம் பிற்போக்குத்தனமானது என்று ஏன் சொல்லவில்லை? பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்று சொல்லலாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்றால் 19 வயதுப் பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாமே! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்காதவர்.

இதை ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், ”தமிழர் தலைவர்” என்ற நூலில் கூறுகிறார்:-

”(ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு) மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச்செய்தியை அறிந்தார் இராமசாமி. நான் நாகம்மையையே மணப்பேன். வேறொரு பெண்ணை மணக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். தாய் தந்தையர் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்கவேண்டும்?”

பெற்றோருக்குக் கட்டுப்படாத இவர் – மூடநம்பிக்கையை எதிர்த்த இவர் – கொள்கையில் உறுதியான பிடிப்பிருக்கும் இவர் நாகம்மையாருக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் திருமணம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? சிறுவயதிலேயே திருமணம் நடக்கும் அக்காலத்தில் வயது முதிர்ந்தவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாகம்மையாரைத் திருமணம் செய்திருந்தால் அதுதானே பகுத்தறிவு! அது தானே மூடநம்பிக்கை எதிர்ப்பு! அதை விட்டுவிட்டு 13 வயதுப் பெண்ணை மணப்பதுதான் பகுத்தறிவா? இது தான் மூடநம்பிக்கை ஒழிப்பா? ஆனால் சிறு வயதிலியே திருமணம் செய்ய வேறொரு முக்கியக் காரணம் உண்டு.

அது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் நடத்தையே!

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே.ரா!

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் விஷயத்தில் படுவீக்காக 19 வயதிலேயே இருந்தார். அது தான் அந்த இள வயதுத் திருமணத்திற்கு முக்கிய காரணம். அது பற்றி, சாமி சிதம்பரனார் கூறுகிறார்:-

”ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப் பருவம்; விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்.”
(நூல் :- தமிழர் தலைவர்)

இதே கருத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கரும் கூறுகிறார்:-

”நான் சுயநல் வாழ்வில் மைனராய்; காலியாய்; சீமானாய் இருந்த காலத்திலும் …” (நூல் :- தமிழர் தலைவர்)

(தமிழர் தலைவர் என்ற இந்த நூல் சாமி சிதம்பரனரால் எழுதப்பட்டு ஈ.வே. ராமசாமி நாயக்கரால் சரிபார்க்கப்பட்டு பின்பு வெளியிடப்பட்டது. அதனால் இதில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஒழுக்கங்கெட்ட நடவடிக்கை காரணமாகவே அவருக்குப் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து ஒழுக்கமானவராக, நாணயமானவராக ஈ.வே. ராமசாமி நாயக்கரை முன்னிலைப்படுத்துகின்றனர் அவரது அடியார்கள்.

இங்கே ஒன்றை யோசித்துப்பார்க்கலாம். கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை – கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை; அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர்தானே! உங்கள் அகராதியில்!

9 வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே! – இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்துக்குமுன் (விலைமாதர்களிடம்) – விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பார்த்தோம். சரி அது இளமைப்பருவத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்துவிட்ட தவறு என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகாவது ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஒழுக்கமாக நடந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.

அதையும் சாமி சிதம்பரமே கூறுகிறார்:-

இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய ”மைனராய்” விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார். அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர். நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது. ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும்.
(நூல்:- தமிழர் தலைவர்)

இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம்! இப்படிப்பட்ட ஈ. வே. ராமசாமி நாயக்கர் தனிமனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொல்லத் தகுதி இருக்கிறதா என்ற எண்ணமல்லவா நம் மனதில் எழுகிறது!

இங்கே ஒரு எண்ணம் இயற்கையாகவே எழும். அதாவது தாசி வீட்டிற்கு கணவனைத் தூக்கிச் சென்ற நளாயினிக்கும் தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை உணவை ஆக்கிக் கொடுத்த நாகம்மையாருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. பகுத்தறிவாளர்களுக்காவது இதில் வேறுபாடு தெரிந்தால் சொல்லலாமே!

அதுமட்டுமல்ல.

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார். ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர்.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ. வே. ராமசாமி நாயக்கரைக் காணவில்லை என்று சொன்னவுடன் உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளியூர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார் என்று சொல்லும்பொழுது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

BOX NEWS
நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா.
பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப்போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.

”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004)

நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ரா!

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசி” என்று தன் நண்பர்களிடம் சொன்னதுதான். அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்:-

நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.
(நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, periyar003புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா?

திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்! 

தொடர்புடைய பதிவுகள்

 

55 மறுமொழிகள் பெரியாரின் மறுபக்கம் – பாகம் 13: விலைமாதர் இல்லங்களில் பெரியார்

  1. Krishna Dass on August 21, 2009 at 7:10 am

    you have said: கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை

    But, at the time Krishna’s age is not more than 3 or 4.

  2. ram on August 21, 2009 at 7:14 am

    ஐயா உங்களைப் போல ஆள் இல்லாமல் தான் தவித்துக் கொண்டிருந்தோம் ஐயா! இந்த அயோக்கியர்களுக்கு எதிராக அவர்கள் முகத்திரையைக் கிழிக்க சரியான பதிலடி கொடுக்க இப்படி அங்கங்கே யாரேனும் வந்துதவினால் எங்களுக்கு பெரிய பாக்கியம். தொடருங்கள் ஐயா தொடருங்கள். இது புத்தகமாக வந்தால் குறைந்த பட்சம் இரண்டு பேருக்கு நான் வாங்கிக் கொடுப்பேன்.

    நன்றியுடன்

    ராம்.

  3. Venkat Swaminathan on August 21, 2009 at 11:16 am

    பெரியாரின் நாத்திக வாதமெல்லாம், பிராம்மண துவேஷத்துடன் ஒட்டிக்கொண்ட ஒன்று தான். அவர் பிராம்மண துவேஷத்தையும் நாத்திக வேஷத்தையும் (அதுவும் பிராம்மண கடவுள் என்று அவர் சலித்தெடுத்துக்கொண்ட கடவுள்களை மாத்திரமே – கிராமத்து சிறு தெய்வங்கள் எனச் சொல்லப்பட்ட எதையும், மற்ற மதத்தினர் எவரது வழிபாட்டையும் அவர் தொட்டதில்லை. அதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இயேசுவை நிராகரித்தாவது தப்பித்துக்கொள்ளலாம், வசை மாத்திரமே கிடைத்திருக்கும். அல்லாவைப் பற்றி ஒரு சிறு முனகல் இருந்திருந்தால் கூட அவர் உயிர் வாழ்ந்திருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்) – ஆக இவ்விரு கொள்கைகளையும் அவர் மேற்கொண்டது, அவரது 46-வது வயதுக்குப் பிறகு தான். அதற்கு முந்திய அவர் நடத்திய குடியரசு இதழ்களில், அவர் எழுதியது வேறு. குடியரசு இதழைத் தொடங்கி வைத்தது ஒரு சாமியார், பெயர் மறந்து விட்டது.

    இதெல்லாம் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத் தான் வீரமணி (சாரங்கபாணிக் கோனார் – இந்த செய்திக்கு நான் ராஜனுக்கு கட்மைப் பட்டிருக்கிறேன்) ஈ.வே. ரா. வின் எழுத்துக்களை வேறு யாரும் தொட அனுமதிப்பதில்லை. கருநாநிதியும் அவ்வாறே,

    சாமி சிதம்பரனார், அவர் அறிந்த ஈ.வே. ரா. வைப் பற்றி அவர் மனதுக்கு நேர்மையாகவே எழுதியிருக்கிறார். வீரமணி, கருநாநிதி போன்றாரின் பொய்மை அவரிடத்தில் இல்லை. சிறு வயதில் நாகம்மையைத் தான் மணப்பேன் என்று சொன்னதில் பகுத்தறிவு என்கிற மசாலாவைக்கண்டது சாமி சிதம்பரனாரின் தவறே தவிர, பொய்ம்மையில்லை. ஈ.வே.ரா. வின் வாலிப விளையாட்டு வினோதங்களையெல்லாம் ஒளிவு மறைவு இன்றி எழுதியிருக்கிறாரே, அந்த நேர்மையை வீரமணியிடமோ கருநாநிதியிடமோ காணமுடியாது.

    சிறுவயதில் பழகியதால் வந்த மோகத்தில் தான் நாகம்மையைத் தேர்ந்த காரணம் காணவேண்டும். இது சாதாரணமாக நிகழும் ஒன்று. அதற்குப் பகுத்தறிவுச் சாயம் ஏன் சாமி சிதம்பரனார் பூசினார் என்பது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

    வாலிப விளையாட்டு எந்த குணத்தில் இருந்ததோ அந்த குணத்தில் தான் அவரது அரசியல், சமூக, இன்னும்மற்ற விஷயங்களில் அவர் அடிக்கடி மாறும் நிலைப்பாடுகளும் இருந்தன. அடிப்படையில் முரடர். தன் மனத்தில் அவ்வப்போது நினைத்ததை, என்ன பல்டியாக இருந்தாலும் அதை கொள்கை என்னும் சாதிக்கும் முரட்டு சுபாவம் அவரது. மற்றபடி, மென்மை, கனிவு, இன்னொருவரைப் புரிந்து கொள்ளுதன் போன்ற குணங்கள் அவரிடம் அறவே இல்லாதவை.

    அடிக்கடி அவர் வெளிப்படையாகச் சொல்வது, எனக்கும் முட்டாள்கள் தான் தேவை.
    அவருக்கு அப்படியே அவர் விரும்பிய படியே முட்டாள்களாகத் தான் கிடைத்தார்கள்
    அதனால் தான் அவர் விரும்பிய படியே கழகத்தில் கேள்வி எழுப்பாது எல்லாம் நடந்தது. ஒரே செம்மறியாட்டு மந்தைகள்.

  4. Venkat Swaminathan on August 21, 2009 at 11:19 am

    அந்த ஆரம்ப குடியரசு இதழ்களில் அவர் எழுதியது தெரியவேண்டுமெனில், அவரது நாத்திகக் கொள்கைகளின் ரூபம் தெரியவேண்டுமெனில், அவை விவாதங்கள், விமர்சனங்கள், சர்சைகள்” என்னும் என் புத்தகத்தின் ஒரு கட்டுரையில் காணலாம்.

  5. திருச்சிக் காரன் on August 21, 2009 at 11:32 am

    தன்னுடைய மனைவியைத் தவிர பிற பெண்களிடம் உறவு வைத்து இருப்பவர்கள் , தம் மனைவிக்கு ஏதாவது மரியாதை கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

    தன்னுடைய மனைவியைத் தவிர பிற பெண்களிடம் உறவு வைத்து இருப்பவர்கள் , தம் மனைவிக்கு ஏதாவது மரியாதை கொடுப்பார்களா என்பது சந்தேகமே.
    ஈ.வே. ரா தான் எப்படிப் பட்டவர் என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார்.

    இப்படிப்பட்டவர் இந்து மதத்தை கண்டித்து பேசும் நிலை எப்படி வந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
    இந்து மதத்தை வலிமை உடையதாக்க வேண்டும். எங்கே சீர் திருத்தம் தேவையோ அங்கே சீர் திருத்த வேண்டும்.

    ரேபிஸ் நோய்க்கு மருந்தாக லூயி பாஸ்டர் எதை உபயோகப் படுத்தினார் என்று சிந்தியுங்கள்.

  6. antony bastin on August 21, 2009 at 11:37 am

    padithen arumai arumai thodaratum ungal savai engaluku thavai.

  7. s'ankaranarayanan on August 21, 2009 at 1:19 pm

    பெரியாரை ப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் தான் அவரை கொண்டாடுகிறார்கள். இதை எல்லாருக்கும் உங்கள் கட்டுரை மூலமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி!

  8. Subramaniam on August 21, 2009 at 2:12 pm

    Keep up the good work Venkatesan and the tamilhindu.com team. I’ve already ready the entire book when it was released, but reading once again is no doubt interesting.

  9. s.rajkumar on August 21, 2009 at 5:51 pm

    thank you for your information

  10. கார்கில் ஜெய் on August 22, 2009 at 3:22 am

    பெரியார் செய்தது திருமணமல்ல. பெண் சிசுவதை.

    (Edited and Published – Tamilhindu Editorial.)

  11. Seshadri Rajagopalan on August 22, 2009 at 5:22 am

    திராவிடக் கட்சியின் பெயரில் ”திராவிடம்” என்னும் சொல் பண்டைக்காலத் தமிழிலக்கியங்களில் உள்ளதா? இல்லையா? எனக்குத் தெரிந்தவரை (அவர்கள் பரிபாஷையில்), “இல்லை, இல்லை, இல்லவே இல்லை” என அபிப்பிராயம். ஆரியர்கள் இலக்கியங்களில் தென் தேசங்களைக்குறிக்கும் சொல், ’திராவிடம்’ என்னும் சொல் இருக்கிறது. அது, தெற்கிலுள்ள நாடுகளான, தமிழ் நாடு, கேரளம், கர்னாடகம், ஆந்திரா என்பவைகளைக் குறிக்கிறது. இருப்பினும், ”திராவிடம்” என்னும் சொல் “வடமொழி”ச் சொல்லை தங்களுக்குச் சூட்டிக்கொள்ளவும் அதைப்பற்றி பீற்றிக்கொள்ளும், திராவிடக் கட்சித் தொண்டர் யாராவதோ அல்லது அவர்களின் தற்போதய தலைவர் எனது கேள்விக்கு விளக்கம் தருவார்களா? இப்படி வடமொழிச்சொல்லை தனக்கு இட்டுக்கொண்டு வடமொழியை எதிர்த்தால் என்ன சொல்வது? ”உரே சொல்லட்டும் போ”

  12. Anjanasudhan on August 22, 2009 at 1:18 pm

    அடடா…எப்பேர்பட்ட ஸ்த்ரீலோலன்! இந்த ஸ்த்ரீலோலன் “கற்பு” பற்றி பேசியதும், தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ரவிக்கை அணிவதால் தான் துணியின் விலை ஏறிப்போனது என்று சொன்னதும் தான் நமக்குத் தெரியுமே! இவரைத்தான் பெண்ணியவாதி என்று போற்றுகின்றனர் கழகக் கண்மணிகள்.

    நாகம்மை கோவில் செல்வதைத் தடுப்பதற்காக இவர் அரங்கேற்றிய அசிங்க நாடகத்தை இவர் பெயரில் சினிமா எடுத்தவர்கள் எவ்வாறு திரித்து வெளியிட்டனர் என்பது இதைப் படிப்பவர்களுக்குப் புரியும்.

    தொடரட்டும் தங்கள் சேவை. தமிழ் இந்துவிற்கு நன்றி.

  13. Malarmannan on August 22, 2009 at 1:47 pm

    Sami Chidampaarm revealed very many darker side of EVR. BUt the first edition has been very cleverly edited. For instance, to mention a widow he would say “Aruttuk katti.” And EVR is hailed as a staunch crusader of women’s rights and a feminist!

    Anna has also recorded in one of his writings about EVR referring widows as Aruttuk Kattiyatu!

    Once EVR and Samai Chidamparam were travelling in a train. there was lot of crowd in every compartment and they had to travel in diferent compartments. When the train stopped in a station, chitamparam came to EVR’s compartment to make enquiries about his comfort. EVR wanted him to get coffee and gave his Gooja. While handing over , he told Chitamparam to empty it and wash properly. When asked what it contained, EVR said he had to pass his urine in it and the gooja contained his urine! He said he was not able to go the toilet because of the crowd.

    This paragraph has been carefully omitted in the following editions. Probably, we can try the first and original version of samai chitamapram’s book at Gnanaalaya of Pudukkottai!
    MALARMANNAN

  14. கரிகாலன் (Karikaalan) on August 23, 2009 at 9:41 am

    சாதுர்யமாக மறைக்கப்பட்ட பல விஷயங்களை அற்புதமாக அம்பலப்படுத்துகின்றீர். தொடரட்டும் உங்கள் சீரிய பணி. இன்றைய, நாளைய சமுதாயம் இவர்களது இருண்ட பக்கங்களையும் அறியட்டும். மணியம்மை குறித்த (விரிவான) பகுதியை எதிர் நோக்குகின்றேன். எழுதிய ம. வெங்கடேசன் அவர்களுக்கு எமது நன்றி மற்றும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  15. Malarmannan on August 23, 2009 at 9:35 pm

    In his early days, EVR had many Brahmins in his friends circle. His hatred toward Brhamins began from his personal vendatta against ceratin Brahmin colleagues in the Congress. EVR wanted Gongress adopt a resolution demanding reservation on the basis of communities. The leaders of the Congres, including non-Brahmins did NOT want to support EVR’s proposal because they knew it would divide Hindu Society and create animosity among various castes. Caste consciousness was already strong in the society and they did NOT want further strngthening of it. It was only Dalits who deserved such support because they were supresed by all other communities, was their stand. EVR took it as prestige issue and started creating problem in the camera meetings of Congress. Since Brahmins were in the forefront in the Congress those days, EVR’s hatred turned mainly toward Brahmins. Like Christian proselytisers, EVR also felt thwt it was Brahmin Communuty that was the foundation of Hindu faith, since it was the preastly community. His hatred thus turned on Hindu faith too grsadually. EVR was already a non-believer; he ahd never had any moral values from his early days. When he ran away from home in his youth, he stayed in a Mutt in Khasi as a servant for a living. The mutt was very strict in following cleanliness because that is the first criterion for godlines. EVR was to pluck flowers form the Mut garden for daily pooja. But he should yake his bath before doing that service. EVr never liked to take bath and in the Ganga of Khasi, he neevr felt comfortable in taking bath in cold water. He pretended having taken bath and one day it was found out that he had been cheating all along. He was immediately removed from service and he had to live the life of a beggar in the streets of Khasi. This would have also planted hatred toward Hinduism in his young mind. For some, it is an inborn tendency to react to everything negatively, seeing things upside down for the pleasure of giving shock to others. EVR belonged this category. EVR’s intention was never reforming Hindu society with sincerity. His intention was to totally destrioy Hindu faith. Giving him credibilty and starting to probe as to what sort of ills Hidnu faith and society have to receive such harsh and uncivilisised condemnation from EVR willl be foolhardy. We ahve had very many great reformers, more revolutionary than EVR, who could achieve timely reforms in the Hindu society with good intention, positive thinking. If any one recommends to consider EVR’s criticism simply reject such recommendation. EVR was anti-Hindu. A true and knoeledgeable Hindu will never consider EVR to be a healthy critic and take his words for perusal.

    In 1954, DMK was still considered an anti-Hindu and atheist party. AT that time Kannadsan was also in DMK. He wrote a song for a movie named Mangayar Tilakam. The song was in praise of Sri Tulasi Madha, a devotional song to be sung while performing Tulasi Pooja. There was hue and cry in the party. Karunanidhi, who was always envious of Kannnadsan made it a very big issue. He complained that Kannadasan had acted aginst the policies of DMK. The matter went to Annna for disposal. Anna called Kannadasan and said:
    “I myself do NOT subscribe to the ideology of denouncoing GOD. Do whatever you feel rigth.”
    Kannadasan has recorded this incident in his small book entitled ‘ Unnaiyey Nee Arivaai.’ This was published by Kannadasan Pathippagam, Chennai 600 017. See page 17 to verify my information. The song Kannadasan wrote was:
    Engal Kula Devi Neeyey Sri Tulasi Amma, Anput Taayey.

    Since I was very close to Anna and knew Kannadsan also very well, I am aware fo this incident. Anna encouraged Kannadasan, telling him to simply ignore such silly complaints against him; if he had faith in Hindu way of belief in Gods with variuous manifestations, he can very well nurture that belief, was Anna’s final word. Anna had adviised MGR also, saying if he had faith in God, he should NOT hide it.

    During 1962 elections, Congress garnered support from people by offering Rs. 5/- per voter. But they were taking oath from the voters showing the portrait of Sri Venkatachalapathy of Tirumala to the effect that they would vote for Congress candidate only. “Oru punitam vaainta deivattai oru saamaaniya manitanaana en mun, enakku etiraaka niruttuvatu perum paavam allavaa?” was Anna’s reaction to that.
    MALARMANNAN

  16. Subramaniam on August 24, 2009 at 10:50 am

    I think Malarmannanji’s clarifications are an eye-opener to youngsters like me to differentiate between the original social reformers and duplicates like EVR.

  17. kaLimiku Ganapathi on August 24, 2009 at 2:38 pm

    Respected TamilHindu,

    Along with the series of articles, also please give us the name of the publication that published such a wonderful work.

    People who want to buy such a valuable books will benefit.

  18. va.mu.murali on August 24, 2009 at 5:34 pm

    Super article. May god give more strength to ma.venkatesan for his intellectual fight.
    -va.mu.murali, tirupur.

  19. Chinna payian on September 17, 2009 at 2:08 pm

    திராவிடம் திராவிடம் என்று கூறியே தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு செய்யும் இந்நாள் தலைவர்களும் சரி…அந்த நாள் தலைவர்களும் சரி(அண்ணாவை தவிர) அடிப்படையில் தமிழர்கள் அல்ல.அதை மறைக்கத்தான் திராவிடம் என்ற கருவியை கையில் எடுத்தனர்.விளைவு இன்று தமிழன் தன அடையாளத்தை மறந்து நிற்கின்றான். இவர்களுக்கு தமிழ் உணர்வு என்றும் இருந்தது இல்லை…..எல்லா வகையில் தமிழர்களை கொடுமை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

  20. punjab Ravi on October 16, 2009 at 2:22 pm

    It is really nice to read about these scoundrels who are glorified,..

    Please keep on exposing these people,..

  21. Nallathambi on October 27, 2009 at 12:07 am

    iyya,
    miha miha

    mattamaana vimarsanam ithuuuuuuuuuuuuuuuuuuu

    Nallathambi,

  22. anand on October 27, 2009 at 4:46 pm

    அய்யா சாமி,

    உங்கள மாதிரி ஆளுகளை தான் தேடிட்டு இருக்கிறேன்.

    என்னால டைப் பண்ண நேரம் மற்றும் சூழ்நிலை ஒத்து வருவது இல்லை. ( வீட்டில் computer மற்றும் internet connection இல்லை ).

    summa வேல vetti இல்லாம Indu சமயத்தை பத்தி தப்பு thappaa pesuravangalai சும்மா வெளுத்து வாங்குங்க.

    நாங்க இருக்குறோம்.

    இவிங்களை ஒன்னே ஒன்னு kekkiren.

    Kadvule illaiya
    iila
    Indu kadavul illaiya

    thairiyama solla mudiyuma ?

    Jai hind

    Anand

  23. Hari hara krishnan on November 18, 2009 at 9:43 pm

    அய்யா உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. இந்துகளுக்காக இம்மாதிரி உண்மைகளை தொளுரிதுகாட்ட ஆள் இல்லை என்று நினைத்தேன். ஆண்டவா! நல்ல வழி காட்டி விட்டாய். அய்யா உங்கள் தொண்டு தொடரட்டும். வாழ்க! வளர்க!

  24. vaideeswaran on December 2, 2009 at 2:55 pm

    Great Work!!! Congratulations and Good Luck!!

  25. chovisiri on January 4, 2010 at 8:42 am

    great work…..
    please continue.
    I learnt quite a few new things (even though they may be very old by age)
    Chovisiri

  26. ராஜேந்திரன் on January 5, 2010 at 8:50 pm

    எனது தாழ்மையான கருத்து என்னவென்றால், கடவுள் இல்லை என்று ஈ வே ராமசாமி ஆணித்தரமாகவே கூறி இருக்கிறார். கடவுள் என்று அவர் கூறியது ஹிந்து கடவுளை மட்டும் அல்ல எல்லா மதக்கடவுளையும்தான். ஆனால் அவர் ஹிந்து கடவுளை அதிகமாக விமர்சனம் செய்து இருக்கிறார். மற்ற மத கடவுள்களை விமர்சனம் செய்யவில்லை. இந்த இடத்தில் உற்று கவனித்தால் ஒன்று புரியும். அவர் கடவுள் கூடாது என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்றுதான் கூறியிருக்கிறார். கடவுள் இல்லை என்று அவருக்கு முன்பே கூறிய முன்னோடிகள் மிக குறிப்பாக கௌதம புத்தரும் அப்படித்தான் கூறி இருக்கிறார்கள். ஆகா கடவுள் இல்லை என்பது ஈ வே ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட தனிஒரு ஆராய்ச்சி முடிவு அல்ல. ஈ வே ராமசாமி ஹிந்து கடவுள்களை ஏன் அதிகம் விமர்சனம் செய்தார்? ஏனென்றால் இந்திய அரசு சட்டங்களும் பெருவாரியான இந்திய மக்களும் ஹிந்து தரும சாஸ்திரம் சார்ந்து இருப்பதால். குறிப்பாக இந்திய மக்களின் பலப்பல கஷ்டங்களுக்கு அவர்களின் ஹிந்து தரும சாஸ்திரங்களே காரணமாக முன்னேற்ற தடையாக இருப்பதாக பலப்பல ஹிந்து அறிஞர்களே எழுதியும் கூறியும் வந்திருக்கிறார்கள். இந்த சூழ் நிலையில்தான் ஈ வே ராமசாமியும் ஹிந்து கடவுள்களையும் அதன் சாஸ்திரங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். அம்பேத்காரும் அப்படிதானே. நாம் எல்லோரும் தேச பக்தராக கருதும் பகத் சிங் கூட கடவுள் இல்லை என்றுதானே கூறி இருக்கிறார்! ஆக கடவுள் இல்லை என்று ஈ வே ராமசாமி நாயக்கர் மட்டும் கூறவில்லை.

    சாமி சிதம்பரனார் ஈ வே ராமசாமியின் ஒழுக்கமற்ற தன்மையை தமது தமிழர் தலைவர் புத்தகத்தில் மிக நேர்மையுடன் வெளிகாட்டி உள்ளார் என்று நண்பர் ஒருவர் இங்கே குறிப்பிடுகிறார். அந்த புத்தகத்தை சரி பார்த்தவர் யார் ஈ வே ராமசாமிதானே? அப்படி என்றால் அவரிடம் நேர்மை இல்லையா?

    பகுத்தறிவு பேச ஈ வே ராமசாமிக்கு தகுதி இல்லை என்று இங்கே கூறப்படுகிறது. சரி பகுத்தறிவு பேச உலகத்தில் யாருக்கு சரியான தகுதி இருக்கிறது என்று கூறமுடியுமா? பகுத்தறிவை நீங்கள் பேசலாம் நான் பேசலாம் என்று பேசிட முடியுமா? உங்கள் கருத்தை சரியாக சொல்லுங்கள். பகுத்தறிவு கூடாதா அல்லது பகுத்தறிவை பேசவே கூடாதா? பகுத்தறிவு பேசலாம் என்றால் அது நம்முடைய ஜாதி மத கடவுள் சாஸ்திரங்களை ஆராய்ச்சிக்கு கொண்டுவந்துவிடும் அல்லவா? ஆராய்ச்சி செய்வது நமது மதத்துக்கு எதிரானது அல்லவா? ஆக பகுத்தறிவை பேசுகிறவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் முரண்பாடுகளும் இருக்கத்தானே செய்கிறது. ஈ வே ராமசாமி பேச தொடங்கும் போது தான் கூறுகிற கருத்துக்களை சீர்தூக்கி பார்த்து சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்றுதான் தொடங்குவார். அந்த அடிப்படையில் சீர்தூக்கி பாருங்கள் சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். அதன் தத்துவம் என்ன? ராமாயணம் இயற்றிய வால்மீகி யார்? ராமாயணம் இயற்ற அவருக்கு தகுதி உண்டா இல்லையா? அட காவியம் இயற்றவும் பகுத்தறிவு கூறவும் தகுதி பார்த்தால் உலகில் யாரும் மிஞ்ச மாட்டார்கள் நண்பர்களே! பகுத்தறிவை பேசுவதை காட்டிலும் அதை புரிந்து வாழ்தலே சரியாக இருக்கும். ஈ வே ராமசாமி நாயக்கர் “தமக்கு பின் வரும் சமுதாயம் என்னைக்கூட பிற்போக்கு வாதி என்று கூறலாம்” என்று கூறி இருக்கிறார். . நமது கிரிஷ்னரை போல நமது ராமரை போல விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல ஈ வே ராமசாமி நாயக்கர்.ஆகையால் நீங்கள் தாராளமாக அவரை விமர்சனம் செய்து சீரிய முறையில் மக்களுக்கு வழி காட்டுங்கள்.

    ஈ வே ராமசாமி நாயக்கர் தமிழர் அல்ல ஆனால் தம்மை என்றும் எப்போதும் தூயத்தமிழன் என்று கூறி எவரையும் ஏமாற்றியதே இல்லை. ஈ வே ராமசாமிக்கு “பெரியார்” என்கிற பட்டத்தை பெண்கள் மாநாட்டில் பெண்களால் கொடுக்கப்பட்டது. நீங்கள் அவரை பெரியார் என்று கட்டாயம் கூறித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை. முதுபெரும் பிராமணர் ஸ்ரீ ராஜகோபலச்சாரியார் ஈ வே ராமசாமியின் உற்ற நண்பர் என்பதை நீங்கள் உணரவேண்டும். இனம் இனத்துடந்தான் சேரும் என்பார்கள். அந்த வகையில் ஒழுக்கம் அற்ற ராமசாமி ஒழுக்கம் அற்ற ராஜகோபாலச்சாரியாரிடம் நட்பு கொண்டார் என்று கூறுவீர்களா.

    உங்கள் விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது. நண்பர்களே என் கருத்தை விமர்சனம் செய்து எழுதுங்கள்.- ராஜேந்திரன்.

  27. ram on January 5, 2010 at 10:31 pm

    //பகுத்தறிவு பேச ஈ வே ராமசாமிக்கு தகுதி இல்லை என்று இங்கே கூறப்படுகிறது. சரி பகுத்தறிவு பேச உலகத்தில் யாருக்கு சரியான தகுதி இருக்கிறது என்று கூறமுடியுமா? பகுத்தறிவை நீங்கள் பேசலாம் நான் பேசலாம் என்று பேசிட முடியுமா?//

    நண்பர் ராஜேந்திரன் அவர்களே, மிகவும் பொறுமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் நிதானம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    பகுத்தறிவு பேச ராமசாமிக்குத் தகுதி இருக்கிறது. ஆனால் அதில் அவர் உண்மையாக இல்லை என்பதே அநேகரின் குற்றச்சாட்டு. கடவுள் இல்லை என்பது தான் பகுத்தறிவா ? கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையால் பல நன்மைகள் இருக்கிறது என்றல் அதையும் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லி அதை அளவோடு வைத்திருக்க கற்றும் கொடுத்திருந்தால் அது தன உண்மையான பகுத்தறிவு .

    கடவுள் நம்பிக்கையாலும் பாவம் புண்ணியம் என்ற நம்பிக்கையில் கட்டுப்பட்டதாலுமே இன்றும் மக்கள் ஆயிரம் கஷ்டத்திலும் ஒரு அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . அதைப் பற்றி ராமசாமி உணராதது ஏன்?

    அதை விட்டு சாமி இல்லை என்று சொல்வதும, சாமி அதுவும் இந்து சாமி சிலைகளை மட்டும் உடைத்து வீரம் காண்பித்ததும் தான் பகுத்தறிவா ?

    நான் விளையாட்டாகச் சொல்லுவேன் குப்பை பொறுக்குபவன் கூட பகுத்தறிவு வாதி தான் என்று. எதைப் பொறுக்கலாம் எதைப் பொறுக்க வேண்டாம் என்று பகுத்தறிந்து போருக்குகிரானே அதனால் என்று. எனவே பகுத்தறிவு என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தம் போல சிலர் கூத்தாடுவது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்தத்தொடர் பயன்படுகிறது . வெறும் விமர்சனம் அல்ல. இது ஒரு விழிப்புணர்ச்சித் தொடர். முழுவதும் படித்துவிட்டு பிறகு பதில் சொல்லலாமே. ஒரு பத்தியை மட்டும் படித்துவிட்டு அவசரம் வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன் .

    //கடவுள் என்று அவர் கூறியது ஹிந்து கடவுளை மட்டும் அல்ல எல்லா மதக்கடவுளையும்தான்// அப்படி அவர் வெளிப்படையாக இல்லை என்பது இந்த தொடரில் பல இடங்களில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. முழுவதும் படியுங்கள். நன்றி ராஜேந்திரன்
    அன்புடன்
    ராம்

  28. திருச்சிக் காரன் on January 6, 2010 at 9:34 am

    இங்கெ சிந்தனையாளர் ம. வெங்கடேசன் ஆதாரங்களோடும் , புள்ளி விவரங்களோடும் நடந்தவற்றை விளக்குகிறார். அவர் பெரியாரை இகழ்ச்சியாக எதுவும் எழுதவில்லை.

    அதற்க்கு இங்கெ சிலர் குய்யோ, முறையோ என்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

    பெரியாரோ சகட்டு மேனிக்கு வள்ளுவர், கம்பர் , காந்தி என எல்லோரையும் சிறுமைப் படுத்தி எழுத தயங்கவில்லை. அவர் எழுதியதை ரசித்து படித்து விட்டு இங்கெ வந்து ஒப்பாரி வைப்பது ஏன்?

    பெரியாரின் கருத்துக்களில் சில முக்கியமானவைதான். அவை நமக்கு உபயோகப் படும்.

    பெரியாருக்கு தமிழாக வரலாற்றிலே ஒரு இடம் உண்டு அதை குடுப்போம். ஆனால் பெரியாரை ஒரு சித்தர் போலவோ, புத்தர் போலவோ ஒரு ஒளி வட்டத்தைப் போடாமலேயே ஆனால் போட்ட ரேஞ்சுக்கு சித்தரிப்பது நடக்கிறது.

    அவர் பேரை வைத்து சிலர் பில்லியனர் ஆகி விட்டனர்.

    பெரியார் பேரை வைத்து இன்னும் சொத்து குவிக்க அவருக்கு எக்ஸ்ட்ரா பில்டப் குடுத்துப் பார்க்கின்றனர்.

    அதே போல பெரியாரைக் கேடயமாக வைத்து மதமாற்ற வேலையைக் கச்சிதமாக செய்து வயிறு வளர்க்கும் கூட்டமும் உள்ளது.

    அய்யோ எங்க பெரியார் என்பார்கள்.. ஆனால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியுமா என்றால், பின் வாங்குவார்கள், ஒரே கடவுள் என்பார்கள், அவர் மட்டும் தான் ஜீவனுள்ள கடவுள் என்பார்கள், நேற்றுதான் பார்த்தேன் என்பார்கள், நான் சாட்சி குடுக்கிறேன் என்பார்கள்.

    இந்த ரவுசுக்காகத்தான் பெரியார் கடைசி வரை வேறு மதங்களுக்கு தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ இல்லை.

    பகுத்தறிவு என்று வார்த்தைக்கு இடம் கொடுக்கும் ஒரே மார்க்கம் எது என்று பெரியாருக்கு நன்றாகத் தெரியும். தன கையிலிருக்கும் சரக்கை பகுத்தறிவு லேபில் ஒட்டி விற்க வாய்ப்பு அளிக்கும் மார்க்கம் எது எனபதை அவர் அறிந்து இருந்தார்.

    “கடவுள் இல்லை” என்று கூறினால், கழுத்தை அறுத்து மரண தண்டனை வழங்க வேண்டும், என்று நீதி மன்றத்திலே நீதிபதிகளே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு, காட்டு மிராண்டி முறைகள் இந்த உலகத்தில் இருப்பது பெரியாருக்கு தெரியும்.

    அதனால் தான் தன்னை இழுக்கப் பார்த்த பலருக்கும் டாட்டா காட்டி விட்டார் பெரியார்.

  29. senthilkumar on January 6, 2010 at 5:49 pm

    Dear Mr. Rajendran,

    first of all sorry for writing in English as my system does not have the Tamil software. I am not arguing with your views. But Ramasamy was more or less confused personality. Being a kannadiga did not want to criticise Tamil and Tamilians hence, he took a word “Dravidan” from birtish. So, it will give edge to criticise a Tamil as a “Barbaric language” but Tamils have to call him as Tamil leader. Some of his opinions are ” marriage is a bonding, hence marriage system should be abolished” but he married twice!

    “Women should not prefer the pregnancy – because it leads them to slavery” – I wonder then how was he born?

    ” women should not wear the differenciating dress from men, they also should wear lungi, dhoti that too without inner garments” ( may be a social revolution in his kind!!!) –

    “Women should not be limited themself with only one man – many male companions can be prefered” ( what AIDS???) – is he precticed the same in his life?

    Rajaji said several things to EVR but he listened and implemented his second marriage advise only!

    EVR is the totally confused personality, but every isolated person there will be one good thing. The EVR used to call even a small kid also with respect .. I think this is the one HINDHU concept EVR was following unknowingly. Our scriptures say the Athma is same in every body (that is the reason we say “vanakkam or namaste” and not good morning evening night and all) the age is for the physical body. Hencce EVR was unkonwingly respecting every “Athma”

    -T. Senthilkumar

  30. mahendrakumar on January 16, 2010 at 12:40 am

    miha miha arumaiyana vathi,pirathi vathi alasalkal nantri tamilhindu

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.