முகப்பு » சமூகம், பிறமதங்கள், வீடியோ

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்

அச்சிட அச்சிட

மதமாற்றமே குறிக்கோள்

conversionagenda2உலகெங்கும் தங்கள் மதத்தைப் பரப்பி தங்கள் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே கிறுஸ்துவர்களின் தலையாய குறிக்கோள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த போப் ஜான் பால் நம் மண்ணில் நின்றுகொண்டே நம் பூமியை கிறுஸ்துவ பூமியாக மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். பின்னர் அமெரிக்காவில் வலதுசாரிக் குடியரசுக் கட்சியின் ஆட்சியில் அதிபர் ஜார்ஜ் புஷ் “ஜோஷுவா ப்ராஜக்ட்” மூலம் இந்தியாவில் மதமாற்றத்திற்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாத்திகனின் அபிமான புத்ரியான திருமதி சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு நம் நாட்டில் மதமாற்றங்கள் பெருமளவில் நடைபெறத் துவங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக ஆந்திரத்திலும் தமிழகத்திலும் கிறுஸ்துவ மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

பெரும்பாலும் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழை எளிய மக்களைக் குறிவைத்து மதமாற்றம் செய்வதோடு மட்டுமில்லாமல், மிஷனரிகள் உயர் மட்டத்தில் உள்ளவர்களையும் விட்டு வைப்பதில்லை. பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்கள், வெள்ளித் திரை / சின்னத் திரை உலகத்தில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் மதமாற்றும் நோக்கத்துடன் அணுகுகிறார்கள். இது தொடர்பான ஒரு சமீபத்திய சம்பவத்தைப் பற்றி இந்தப் பதிவு.

பிராம்மணர்களை மதமாற்றும் முயற்சி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே அட்வெண்ட் சர்ச் ஒன்று இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் சிறிய பிரார்த்தனை கூடமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடம் இன்று பிரம்மாண்ட தேவாலயமாக எழுப்பப் பட்டிருக்கிறது. ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியன்று இதன் மதில்சுவர் மேல் கண்ணைக் கவரும் விதத்தில் ஒரு விளம்பரத் தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகால‌ஷேபம் சனிக்கிழமை 8-ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும், அனுமதி இலவசம்” என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. இவ்விளம்பரத்தைப் பார்த்த திருவான்மியூர் வாழும் இந்துக்களில் சிலர் அதிர்ந்து போயினர்.

conversionagenda1தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது. மேலும் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும்போது “இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம்” என்று சொல்லும் மதப்பிரசாரகர்களும் பாதிரிகளும் காரியம் முடிந்தவுடன் தங்கள் கண்களையும் மூடிக்கொண்டு விடுவார்கள். மாற்றப்பட்ட நம் மக்கள் தாங்கள் கும்பிடும் சாமியையும், கும்பிடும் முறையையும் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் காணார்கள்!

ஆனாலும் பிராம்மணர்கள் என்ற சமூகத்தினரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு விளம்பரம் செய்த ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற அமைப்பின் பெயர் அதிர்ச்சியைத் தந்தது உண்மை. அமைப்பு புதியதாக இருந்தாலும், அதனை ஆரம்பித்து செயல்படுத்தும் “சாது செல்லப்பா” என்னும் மதப்பிரசாரகர் “அறுவடை” செய்வதில் பெயர் போனவர்தான். திருவான்மியூர் நிகழ்வுகளைப் பார்ப்ப்தற்கு முன்னால் இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது முக்கியம்.

சூது செய்யும் சாது

தென்தமிழகத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்து, கோயில் சூழ்நிலையில் வளந்த இவர் சிறு வயதிலேயே இதிஹாச புராணங்களை நன்கு கற்றவராம்! தினமும் கோயில் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் இவரின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கோயில் குருக்களும் அங்கிருந்த மற்ற ”பண்டிதர்களும்” சரியாக விளக்கங்கள் கொடுக்க இயலாத நிலையில், மனம் வெறுத்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள எத்தனித்த போது, எங்கோ ஒரு தேவாலயத்திலிருந்து காற்றில் மிதந்து வந்த விவிலிய உரை ஒன்று வெதும்பியிருந்த இவர் மனத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாம்! அடுத்த ரயில் நிலையத்திலேயே இறங்கி அந்தத் தேவாலயத்தை அடைந்து அங்கே இயேசுவைக் கண்டு தெளிவுபெற்று மனம்மாறி கிறுஸ்துவராக மாறி விட்டாராம்! அன்றைய தினம் ’மே’ மாதம் 14-ம் தேதி, 1967-ம் வருடமாம்! (இந்த விவரங்களைத் தருவதும் கிறிஸ்தவ பிரசார இலக்கியமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்).

இனி சில உண்மையான தகவல்கள். இயேசுவின் ஆணைப்படி கிறுஸ்துவ மதத்தைப்sadhu-chellappa பரப்புவதையே தொழிலாகக் கொண்ட இவர், குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து கணிசமான அளவில் இந்துக்களை மதம்மாற்றி சர்ச்சுகளில் இணைத்துள்ளார்ர். 1974-ல் முழு நேர எவாங்கலிக்க ஊழியரான இவர் ”அக்னி ஊழியங்கள்” (Agni Ministries) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார். 1982-ல் “அக்னி” என்ற மாதாந்திரத் தமிழ் பத்திரிகையை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக(!?) ஆரம்பித்து, நடத்தி வருகிறார். (Agni (fire) monthly magazine in Tamil).

1995-ல் இயேசு இவருக்கு, புதிய சர்ச்சுகள் நடவு செய்யச்சொல்லி உத்தரவு இட, அன்றிலிருந்து இன்றுவரை 27 சர்ச்சுகள் நடவு செய்து, அவற்றுக்கு 27 பங்குத் தந்தைகளும் நியமனம் செய்து, அறுவடைக்கு வழிசெய்துள்ளார். 28 தமிழ் புத்தகங்களையும் 2 ஆங்கிலப் புத்தகங்களையும் எழுதியுள்ளாராம். பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள மதப் பிரசாரகர்களைச் சந்தித்திருக்கிறார். அந்த மாதிரியான வெளிநாட்டுப் பயணங்களில் ஆங்காங்கேயுள்ள இலங்கைத் தமிழ் இந்துக்களில் சிலரையும் கிறுஸ்துவர்களாக மதம்மாற்றி மாபெரும் ஊழியம் புரிந்துள்ளார் என்கிற விஷயத்தை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். (இவரைப் பற்றிய விபரங்கள்: http://www.agniministries.org/ மற்றும்
http://www.agniministries.org/Testimony.aspx ஆகிய தளங்களில் கிடைக்கும்).

இவருடைய அக்னி ஊழிய மையம், “இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு” (“Evangelical Action Team of India”) என்ற இயக்கத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் சர்ச்சுகள் நடவு செய்து அறுவடைகள் செய்வதோடல்லாமல், எவாங்கலிக்க வகுப்புகளும் நடத்தி, பங்குத்தந்தைகளுக்கு எவாங்கலிக்கப் பயிற்சிகளும் கொடுத்து வருகிறது. இந்திய மதங்களை (இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய மதங்கள்) பற்றிய விவரங்களையும், அவற்றின் மத நூல்களையும், கோட்பாடுகளையும் எப்படி திரித்துக் கூறி மதமாற்றம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் விவிலிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த மையம் கற்றுத் தருகிறது. ஆங்காங்கே சிறு பிரார்த்தனைக் குழுக்கள் (Prayer Cells) அமைத்து அவற்றின் உதவியுடன் சர்ச்சுகள் நடுவது, இந்துமதக் கோட்பாடுகளை கிறுஸ்துவ மதக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, அதற்கேற்றார் போல் அவற்றைத் திரித்து எழுதுவது, திரித்து எழுதப்பட்டவற்றைச் சொல்லி இந்துக்களை மதம்மாற்றுவது, இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளைச் சொல்லி (நிதி திரட்டுவதற்காக) வெளி நாட்டு இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுகிறது (http://www.agniministries.org/AboutUs.aspx ).

saadhu-chellappa-vcd“இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு”, 1980-ல் கோயமுத்தூரில், சாது செல்லப்பாவால் தொடங்கப்பட்டது. இவரே 20 இயக்குனர்கள் கொண்ட நிர்வாகக் குழுவின் தலைமை இயக்குனராகவும் இருக்கிறார். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சேவை என்கிற பெயரில் மதப் பிரசாரம் செய்வதும், மதமாற்றம் செய்வதும் இந்த இயக்கத்தின் பிரதான வேலை (http://www.agniministries.org/EATI.aspx). தீபாவளித் திருநாள் கிறுஸ்துவப் பண்டிகை என்றும், கடவுளர்க்கு பலி கொடுக்கும் வழக்கம் கிறுஸ்துவப் பழக்கம் என்றும், காயத்ரி மந்திரம் உண்மையில் இயேசுவைப் பற்றியதே என்றும் திரித்துக் கூறும் இந்த ”சாது”, ‘சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது. இந்திய மக்களின் (இந்துக்களின்) வேதத் தேடுதலை முழுமையாக நிறைவேற்றவே இயேசு அவதரித்தார், ஏனென்றால், இறைதூதரின் வருகையால் எப்படி ’பழைய ஏற்பாடு’ முழுமையடைந்ததோ, அதே போல் இயேசு இல்லாமல் வேதங்கள் முழுமையடையாது’ என்று பகிரங்கமாக வெட்கமில்லாமல் முழங்குகிறார்.

மேலும், “இந்துமதம் விவிலியத்திலிருந்து தோன்றியதே” என்று பத்து பாகங்களில் இந்த ”யூ டியூப்” சானலில் இந்துமதக் கோட்பாடுகளை பலவாறாகத் திரித்துக் கூறி மிக வெளிப்படையாக அப்பட்டமான மோசடியைச் செய்து வருகிறார்.

திருவான்மியூர் நிகழ்வுகள்

சூது செய்யும் “சாது”வைப் பற்றியும் அவர் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றியும் புரிந்துகொண்டீர்கள் அல்லவா! இனி திருவான்மியூரில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

விஜில் இணைய தளத்தின் (www.vigilonline.com) ஆசிரியர் ராதா ராஜன், கட்டுரையாளர் பி.ஆர்.ஹரன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஆகியோர் திருவான்மியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வேறு சில காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை மற்றும் உள்துறைச் செயலகங்கள் மற்றும் மாநகரக் காவல் துறை கமிஷனர் ஆகியோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்கிற மதமாற்ற மோசடி பற்றிப் புகார் அளித்துள்ளனர்.

அதோடு, வியாழக் கிழமை ஆறாம் தேதி மாலை முன்னாள் இஆப (IAS) அதிகாரி வி.சுந்தரம், ஹரன், மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த சமூகத் தொண்டர்கள் சிலர் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் செய்ததன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் சர்ச்சிற்குச் சென்று அங்கிருந்த இரண்டு விளம்பர பானர்களையும் அகற்றி பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயக சாஸ்த்ரிகளின் கதாகால‌ஷேபம் என்று சொல்லப்படுகிற அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். காவல் துறையினர் முன்னிலையில் அந்த சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப் படுவதை கீழ்க் கண்ட வீடியோவில் காணலாம்.

Vedanayagam Sastriar with son Clement Vedanayagam Sastriarவேதநாயக சாஸ்திரி, மகனுடன்

ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை வெறுமனே இருந்த சர்ச்சில், எட்டாம் தேதி காலை இரண்டு பானர்களும் மீண்டும் தலை தூக்கியுள்ளன. ஆனால் பானர்களின் தலைப்பில் இருந்த “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற வார்த்தைகள் மட்டும் ஒரு துணியால் மறைக்கப் பட்டிருந்தன. பூஜ்ய ஸ்ரீ, பாகவதர், சாஸ்த்ரிகள் போன்ற வார்த்தைகளோ, கதாகால‌ஷேபம் என்ற வார்த்தையோ நீக்கப் படவில்லை. மேலும் சர்ச் வாயிலில் பந்தல் போடப்பட்டு பெரிய வாழை மரங்களும் இளநீர் கொத்துகளும் பந்தலின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு சர்ச்சுக்கே ஒரு ஹிந்து மண்டபத்தின் சாயல் அளிக்கப் பட்டிருந்தது. ஒரு இந்துப் பண்டிகை கொண்டாடும் இடம் எப்படியிருக்குமோ அப்படி இருந்திருக்கிறது சர்ச்.

அந்த மற்ற வார்த்தைகளை பானர்களிலிருந்து நீக்கச்சொல்லி செய்யப் பட்ட தொலைபேசி மற்றும் நேரடிப் புகார்களுக்கு திருவான்மியூர் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களின் பாதுகாப்புடன் ”பூஜ்ய ஸ்ரீ பாகவதர் ”வேதநாயகம்
“சாஸ்த்ரி”களின் ”கதாகால‌ஷேபம்” நடைபெற்று முடிந்திருக்கிறது. பானரில் ஒரு பகுதியை மட்டும் நீக்கியதன் மூலமும், நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்தியதன் மூலமும், காவல் துறை ஏதோ நடுநிலையாக நடந்து கொண்டுவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறு.

கடுமையான தண்டனை தேவை

சர்ச்சில் நடந்து முடிந்த நிகழ்ச்சி சட்டத்திற்கு புறம்பானது. கிறுஸ்துவ மதத்திற்கும் கதாகால‌ஷேபத்திற்கும் என்ன சம்பந்தம்? கிறுஸ்துவ மதப் பிரசாரகர்கள் தங்களை சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், என்றெல்லாம் எவ்வாறு அழைத்துக் கொள்ளலாம்? ’பூஜ்ய ஸ்ரீ’ என்ற பட்டங்களை எவ்வாறு போட்டுக் கொள்ளலாம்? இவை வெட்கங்கெட்ட செயல் மட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பானவை அல்லவா? தங்களிடையே ஜாதிகளே இல்லையென்றும், ஜாதி வேற்றுமைகள் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும் பீற்றிக்கொள்ளும் ஒரு மதத்தினர், பிராம்மணப் பிரிவு ஒன்றை எவ்வாறு துவக்கலாம்?

கிறுஸ்துவத்திற்கும் பிராம்மணத்திற்கும் என்ன சம்பந்தம்? வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், ஆகியவை இந்து மதத்தின் ஆன்மிகப் பொக்கிஷங்கள். சனாதன தர்மத்தை இந்துக்களுக்கு விளக்கும் புனித நூல்கள். இவற்றை உபயோகித்து தங்கள் கடவுளையும், மதத்தையும், கிறுஸ்துவ மதப்பிரசாரகர்கள் வியாபாரம் செய்வது மானங்கெட்டத்தனம் மட்டுமல்லாமல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியதாகும். இந்து மதக் கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்தால் என்ன அர்த்தம்? கிறுஸ்துவத்திலோ, இயேசுவிடமோ, சொல்லிக்கொள்வதற்கு உருப்படியான விஷயங்கள் ஏதும் இல்லை என்று தானே அர்த்தம்? செல்லப்பா, வேதநாயகம், மற்றும் அவர்களைப் போன்றவர்கள் அனைவரும் இ.பி.கோ. 153எ, 295எ, 298 மற்றும் பல பிரிவுகளின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியவர்கள்.

எவாங்கலிக்கர்கள் விற்பனைப் பிரதிநிதிகள் போல. விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் சரக்கை விற்பதற்கு எப்படி அடுத்த நிறுவனத்தின் சரக்குகளின் குணநலன்களை உபயோகப்படுத்த முடியாதோ, அதே போல் எவாங்கலிக்கர்கள் இந்து மத கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அவ்வாறு செய்வது ஒருவிதத்தில் இயேசுவுக்குச் செய்யப்படும் அவமதிப்பும் துரோகமுமே ஆகும் அல்லவா? இந்தப் பாவத்திற்கு மன்னிப்பு உண்டா என்பது பற்றி கிறிஸ்துவ விசுவாசிகள் தான் சொல்லவேண்டும்!

இயேசு மீது விசுவாசம் கொண்ட, கிறுஸ்துவத்தின் மீதுஅந்த மதத்தின் அடிப்படையிலேயே நியாயமான ஈடுபாடு கொண்ட, உண்மையான கிறுஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விரைவில் விழிப்படைந்து செல்லப்பாக்களையும், வேதநாயகர்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப் படும்; சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும்; அமைதி கெடும். இது பல மதத்தவர்களும் கூடி வாழும் நம் தேசத்திற்கு சிறிதும் நன்மை பயக்காது.

மொத்தத்தில் கிறுஸ்துவர்கள் மதப் பிரச்சாரத்தையும், மத மாற்றச் சூழ்ச்சிகளையும், கீழ்த்தரமான ஆள்சேர்ப்பு யுக்திகளையும் முற்றிலுமாக நிறுத்துவதே அமைதிக்கு வழி. 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

 

530 மறுமொழிகள் சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்

  1. ந.உமாசங்கர் on October 25, 2009 at 6:06 pm

    அன்பர் அருண் அவர்களே

    ///மரணமில்லாப் பெரு வாழ்வு என்று அவர் கூறியது என்ன?///

    ஸ்வாமி வேதாத்திரி மஹரிஷி அவர்கள் இறப்பில்லாப் பெருவாழ்வு என்று கூறினாரா? அல்லது பிறப்பில்லாப் பெருவாழ்வு என்று கூறினாரா?

    அவர் இறப்பில்லாப் பெருவாழ்வு என்று கூறியிருப்பார் என்று தோன்றவில்லை.

    அவ‌ர‌து காய‌ க‌ல்ப‌ வ‌ழிமுறை நீண்ட‌ ஆயுளுக்கும், நோய‌ற்ற‌ வாழ்வுக்கும் வ‌ழிவ‌குக்கும் என்றாரே அன்றி இற‌ப்பில்லாப் பெருவாழ்வை அளிக்கும் என்று சொல்ல‌வில்லை.

    இந்து மதம் பிறப்பில்லாப் பெருவாழ்வு வாய்க்கும் என்றுதான் கூறுகிறது. ஜீவன் முக்தி வெகு சில மஹான்களுக்கே வாய்த்திருக்கிறது. அப்படி ஜீவசமாதி அடையாதோர் மஹான்களல்ல என்று பொருளல்ல.

  2. Sarang on November 4, 2009 at 12:15 am

    // இந்து மதம் பிறப்பில்லாப் பெருவாழ்வு வாய்க்கும் என்றுதான் கூறுகிறது. ஜீவன் முக்தி வெகு சில மஹான்களுக்கே வாய்த்திருக்கிறது. அப்படி ஜீவசமாதி அடையாதோர் மஹான்களல்ல என்று பொருளல்ல.
    //

    Well said Thiru Umashankar – Dasaratha despite being so true to Dharma did not get Jiva mukthi – he only went to heaven, whereas a simpleton pot maker called Thathi pandan (during krishna avataram) who did even know what dharma is got Jiva mukthi – God sets no rules to offer Mukti to anyone

  3. Chidambaram on November 7, 2009 at 7:47 pm

    நான் உண்மையில் இஸ்லாமை விரும்புகிறேன்! லாஸ்ட் இயர் நான் குர்ரான் படித்தேன்! உண்மையில் ‘குர்ரான்’ உண்மையின் மொழி! எடிட்டர் நீங்களும் படியுங்கள்! ‘குர்ரான்’ நாட் ஒன்லி போர் முஸ்லிம் பீப்பல், அது ஒரு உலக பொது மொழிய உள்ளது! ட்ரை பனுங்கோ! என்நேனாவமோ இருக்கு! உண்மையிலே சிலை வழிபாட்டுக்கு மனசு பயபுடுது! நாம எநோமோ தப்பு செயரோமொனு தோணுது! நான் மனசார சிந்திக்கிறேன்,

  4. M. Suresh Babu on November 9, 2009 at 2:43 pm

    Even when prophet Mohammad started Islam, there were more than 350 gods in Arabia. Read the history of Arabia, so Muslims should not insult Hindus like what they are doing now.

  5. dhanabal on November 19, 2009 at 11:54 pm

    ///நான் உண்மையில் இஸ்லாமை விரும்புகிறேன்! லாஸ்ட் இயர் நான் குர்ரான் படித்தேன்! உண்மையில் ‘குர்ரான்’ உண்மையின் மொழி! எடிட்டர் நீங்களும் படியுங்கள்! ‘குர்ரான்’ நாட் ஒன்லி போர் முஸ்லிம் பீப்பல், அது ஒரு உலக பொது மொழிய உள்ளது! ட்ரை பனுங்கோ! என்நேனாவமோ இருக்கு! உண்மையிலே சிலை வழிபாட்டுக்கு மனசு பயபுடுது! நாம எநோமோ தப்பு செயரோமொனு தோணுது! நான் மனசார சிந்திக்கிறே///
    திரு சிதம்பரம் அவர்களே,
    பகவத் கீதையோ ,உபநிசத்தோ அல்லது விவேகனந்தரின் ஞான தீபங்களையோ,அல்லது வேறு சித்தர்கள்,மகான்கள் ,போன்றோர்களது புத்தகங்களை யோ நீங்கள் படிக்க வில்லையென்று நினைக்கிறேன்.சிலை வழிபாட்டிற்கும்,மெக்காவில் உள்ள புனிதக் கல் இருக்கும் திசைஏய் நோக்கி வழிபாடு செய்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது.”அனைத்து மதங்களும்,அனைத்து வழிகளும்,நம்மை கடவுளிடமே கொண்டு வந்து சேர்க்கிறது ” என்று அனுபவத்தில் கண்டு கூறிய,சிலை வழிபாட்டின் மூலம் கடவுளைக் கண்ட, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளைப் படிக்கவில்லையா? இறைவன் மிகப்பெரியவன் என்றால் அந்த இறைவனாக நீங்கள் எதை நினைப்பீர்கள்,அகண்ட வானத்தையும், பரந்த நிலப்பரப்பையும்,அல்லது கடலையும், அல்லது பல கோள்கள் ,நட்சத்திரங்கள்,நிறைந்த இந்த பிரபஞ்சத்தையும் தான் நினைக்க முடியும்.இதில் கடவுளை எங்கே நினைகிறீர்கள்??மெக்காவில் உள்ள புனிதக் கல் ஒரு உருவமாக தெரியவில்லையா?நீங்கள் தாராளமாக இஸ்லாமை பின்பற்றுங்கள்,ஆனால் இந்து மதத்தைக் குறை கூறாதீர்கள்.

  6. sankaranarayanan on November 30, 2009 at 10:49 pm

    What Christianity achieved?

    1. The family values are destroyed all across the West

    2. People lost faith on God

    3. The Asian Chrsitian countries have become beggers ( Philipines, South Korea)

    4. Become the appendix of US

    5. Crime rate increased

    6. Great cultures like Mayan, Inka and Aztec are now only in books. They were not converted but killed.

    7.4 Million Jews killed

    8. Black people are untouchables

    Compare this with Hindu/Bhuddist countries.

    Christianity is not a religion. That is a corporate and Power center. In fact they dont even believe Jesus. Have you seen the picture of Jesus in their posters. Only their photos will be there.

    I recoomend you all to read the article ” Ahimsa Soldiers required ” in deivathin kural, volume 2.

  7. sankaranarayanan on December 24, 2009 at 11:02 pm

    what? Christians are word wide? How many people follow christianity in west? churches are empty.

    Compare the people of oriental religion like Hinduism and Budhism with other religions.

    what you have? divorce, drug abuse, pre martial sex, child sex , terrorism.

    If christians are so great then why africans are still violent?

    After spoiling eurpoe, america, africa noe these christians have targetting South asia.

    There is no relationship between christ and christians.

    If Christianity is religion of love then why you treat blacks untouchable. You are giving a lecture on untouchability.

    The current pope himself is a nazi. they killed 40 lakh jews.

  8. chillsam on December 25, 2009 at 1:35 pm

    sankaranarayanan
    30 November 2009 at 10:49 pm
    Christianity is not a religion. That is a corporate and Power center. In fact they dont even believe Jesus. Have you seen the picture of Jesus in their posters. Only their photos will be there….4 Million Jews killed

    sankaranarayanan
    24 December 2009 at 11:02 pm
    There is no relationship between christ and christians.
    If Christianity is religion of love then why you treat blacks untouchable. You are giving a lecture on untouchability;The current pope himself is a nazi. they killed 40 lakh jews.

    அற்புதம்,ஆரவாரம்,அமர்க்களம்…எப்படி புகழ்வதென்றே தெரியவில்லை;
    நண்பர் சங்கரநாராயணன் அவர்களுக்கு நவரத்தின மோதிரம் போடவேண்டும் போலிருக்கிறது; நாங்கள் சர்ச்சுக்குள்ளிருந்து போராடுகிறோம்; நீங்கள் வெளியிலிருந்து போராடுகிறீர்கள்; அதுமட்டுமே வித்தியாசம்;

    கிறிஸ்தவர்கள் வேறு, யூதர்கள் வேறு; இன்றைய கிறிஸ்தவத்துக்கும் கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அப்படியிருந்தால் அவர்கள் படங்களில் இயேசுவும் இருக்கவேண்டுமே என்ற வரிகள் கோடி பெறும்;
    நன்றி நண்பரே..!

  9. Arockiya Sundar Raj on January 2, 2010 at 7:38 am

    Hi every body this website is really cool. I’m christian of RCand doing my BE final yr in ECE,I lov philosophy and ve passion to kno more abt each religion.I’m only 21 yrs old. I accept wat U all told abt todays christianity. I ve also experianced the same with some protestants trying us to become them not an RC.But my small and pity request is that it is well known,that religions are made based on the atmosphere and environtment the man lived. If u take our christianity our God and Angels used to wear Jews dress bcoz its Basic is Judaism.and Ur Hindhu Gods used to wear Indian Dress and as India is a diversed nation U can See one Godess ve Lion as her vahana in south or in region where lions are found most and in Rajasthan Godess have Camel as Her Vahana . In south Godess Parvathi and Other Godess wear sari as Tamil women wor while in north they wore the dress as those women. so we can say lot of example like this wat my Humble request Pls try to enrich Ur Hindhu Youngsters with Ur faith but at the same time dont put vengence in their mind abt other religion as U say U r Hindhus with MOTHER Like behaviour .
    Once again I feel sorry for those who Spoils the Name of Jesus and I delebrately ask sorry and ask ur pardon for their hurts.One more thing I delibrately not like the preaching of our religion with quoting of Hindhu myths coz I know there are lot to quote from our religion itself.
    I wish to have tamil name for my future generation but some body told usage of certain names are Hindhus and Double game, my kind request is that we r tamils in the name of Chriatians so we also have rights to use tamil words for our preaching and family .
    with Love
    Jasr
    Note: I just want to shorten my name as Sundar and dont say its Hindhu name acccording to tamil literature Sundaran= Handsome man, Smart man: So that only Great Tamil poet Kambar Used the Word SUNDARAN to quote Hanuman and Named a kandam as “SUNDARA KANDAM” i HOPE SO… If its wrong Kindly qoute the mistake and Im ready to accept it………

  10. Hari on January 2, 2010 at 8:26 pm

    நண்பர்களே, தமிழ்செல்வன் எழுதிய இந்த கட்டுரை இன்று நடக்கும் மத மாற்ற நடவடிக்கைகளை தோலுரித்து காட்டுகிறது. மத மாற்றத்துக்கு அயல் நாடுகளில் இருந்து பணம் பட்டு வாடா பண்ணபடுகிறது.

    சைவ, வைணவ மதங்கள் மிகவும் தொன்மையானவை. புத்த மதம் இந்தியாவில் தோன்றி அற்று போனது – புத்த துறவிகள் இதே மாதிரியான மத மாற்றத்தை அரசர்கள் மூலம் செய்தார்கள். மற்ற இந்து மதங்கள் மீது காழ்புணர்ச்சி கட்டினார்கள். விளைவு எந்த மண்ணில் buddha மதம் பிறந்ததோ அந்த மண்ணில் தழிக்க முடியவில்லை. சகிப்பு தன்மை இல்லாத எந்த மதமும் இந்து மதங்களுக்கு மாற்றாக, போட்டியாக வளர முடியாது.

    கிருஸ்துவ மதம் ஐரோப்பியா, அமெரிக்க நாடுகளில் தனது மதிப்பை இழந்து, பெரும்பாலானவர்கள் இதனை வெறுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    இந்து மதங்களை எதிர்த்து எந்த மதமும் வளர்ந்ததாக சரித்திரம் கிடையாது. மாறாக எதிர்பாளர்களுக்கு அழிவு நிச்சயம். இந்து மதம் சக்தி வாய்ந்தது.

    இந்து மதங்களின் மூலாதாரம் மற்றும் தொன்மை தெரியாதவர்கள் தான், இந்து மதந்தை துவேஷம் பண்ணுகிறார்கள். திருமுறைகள் ஒன்று போதும் நம் மதம் எப்பேர்பட்டது என்று.

    வாழ்க, வளர்க

  11. armchaircritic on January 6, 2010 at 11:16 am

    Each Friday night after work, Sardar would fire up his outdoor grill and cook a tandoori chicken and some meat kebabs. But, all of his neighbors were strict Catholics … and since it was Lent, they were forbidden from eating chicken and meat on a Friday.

    The delicious aroma from the grilled meats was causing such a problem for the Catholic faithful that they finally talked to their Priest. The Priest came to visit Sardar and suggested that he become a Catholic. After several classes and much study, Sardar attended Mass… and as the priest sprinkled holy water over him, he said, You were born a Sikh, and raised a Sikh, but now, you are a Catholic.”

    Sardar’s neighbors were greatly relieved, until Friday night arrived. The wonderful aroma of tandoori chicken and meat kebabs filled the neighborhood. The Priest was called immediately by the neighbors and, as he rushed into Sardar’s backyard, clutching a rosary and prepared to scold him, he stopped and watched in amazement.

    There stood Sardar, holding a small bottle of holy water which he carefully sprinkled over the grilling meats and chanted: “Oye, you were born a chicken, and you were born a lamb, you were raised a chicken and you were raised a lamb but now you are a potato and tomato”

  12. vedamgopal on January 14, 2010 at 3:38 pm

    The aim & spread of Christianity by developed countries to dominated all the under developed countries and stop their progress further otherwise their survival is difficult & it is a big question mark? Their war field arms sales are the only boost for their economic survival. Christianity ruined old cultured people throughout the world by genocide. The latest genocide took place in Sri Lanka by slow poisoning of converting Tamil & Shingle. The same way slow poisoning being attempted in India for several decades & it is very worst in Tamil Nadu (poisoning done by separating Davidian/Ariyan, Tamil/Sanskrit Brahmin/non-Brahmin etc) Funds flows into all the Dravidian parties through Christian Missionary . Pl note that it started from the day when Justice Party arrived. The mind set of Dravidian parties should change (Instead of working under white people co-operate with Hindu and & they are your real ancestors). Save the Nation and stop shaving attempts by collaborating with Christian. Muslim looted India for 700 years, Britishers looted India for 150 years but you hate your own brethren Hindu believing all false notions created by foreigner. Leave a peaceful Nation to your younger generation. Other wise we have to face the same situation like Sri Lanka. Now Christian domination is taking place in larger scale in Kanyakumari & Rameswaram, Muslim domination in Kerela.
    Already boarder areas of India are eaten away by Christian/Muslim – Nagaland, Mizoram, Arunachal Pradesh & , Kashmir. India do not have a proper control over these states.
    Given below the recent happening of Christian domination & control around us (Captured these countries and making their puppet government & their troops are still there)
    Syria, Somalia, Afghanistan, Iraq – plans are in full swing to capture these countries also – Pakistan, Iran, Yemen & India/ V.Gopal
    Note:- Request to put the new comments first & it is easy to browse instead of scrolling the entire page

  13. SATHIYARAJ on February 14, 2010 at 2:46 pm

    வெறும் வாதமாக இல்லாமல் ..ஆதாரபூர்வ கூற்றுகளோடு ஹிந்து விழிப்புணர்வு பணி செய்யும் தமிழ் ஹிந்து குழுவினருக்கு நன்றி ……

  14. karuppasamy on February 16, 2010 at 9:28 pm

    ratham kothikaratu
    baratha matha vai arrikkum kirumikal
    intha nachu kirumikalukku udanadi marana dandanai kodukka vendum
    paralokathirku anuppa vendum

  15. desamitran on February 17, 2010 at 7:08 pm

    As per Mahabaratha Prajapathi means caretaker of 14 worlds and they are the first beings created by Brhama.

    Mahabaratha mentions following as names of Prajapathi.

    Daksha, Prachetas, Pulaha, Marichi, Kasyapa, Bhrigu, Atri, Vasistha, Gautama, Angiras, Pulastya, Kratu, Prahlada and Kardama.

    Out of these name one is the “AATUKUTTIANA PRAJAPATHI”. Might be he is the one referred by Chellapa.

  16. desamitran on February 17, 2010 at 7:17 pm

    Daksha Prajapathi because of his EGO developed hatred towards the GOD and insulted HIM and because of that he lost his life but all merciful god RESTORED HIS LIFE but with the head of the GOAT. This is the story of AATUKUTTIANA PRAJAPATHI.

    So AATUKUTTIANA PRAJAPATHI is the one who had hatred towards GOD.

    Might be he is the PRAJAPATHI referred by SUDHU CHELLAPA.

  17. R.Sridharan on February 24, 2010 at 11:24 pm

    A friend of mine who is a manager in a bank narrated this to me
    One day the lady sweeper in his branch brought her son’s 10th standard school leaving certificate to him
    On going through it he found that her son’s religion was mentioned as ‘christianity’
    He asked the lady whether she was a christian.
    To that she replied in the negative and said that she was very much a Hindu
    Then he pointed out the entry in the certificate
    The poor illiterate lady recollected the day that she took her son to the school to get him admitted in standard one.
    Because she was unlettered she had asked the Headmistress ( a christian) to fill up the application form for her
    Would a true christian let go of such a golden opportunity?
    The HM had promptly entered the boy’s religion as christianity
    The headmistress has not so far complied with the poor mother’s request to change the entry in the certificate.
    I read somewhere that this is one of the strategies of the church to increase it’s flock!
    So let the joes and others of his ilk tell their cock and bull stories to someone else.

    R.sridharan

  18. Amirtharaj on February 26, 2010 at 7:51 pm

    பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழைகளும் தான் Christian-ஆகா மாறுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டால் அவர்கள் தன்னிறைவு, தன்னம்பிக்கை பெற்று, தம் மதத்தில் பெருமை பெற்று இதில் நிலைத்திருக்க அதிகமான சாத்தியகூறுகள் உள்ளன. மற்றவரால் தான் கீழாக பார்க்க படும் பொழுது, அதிலிருந்து வெளியேறுவது மனிதர் இயல்பு.

  19. R.Sridharan on March 7, 2010 at 9:27 pm

    One christian gentleman has said that ‘sadhu’ Pujya sri’ etc are Tamil words and can be used by any one.
    Then why is the need for a different religion when it does not have any uniqueness?

    Why is the Bible called ‘Viviliam’, Jesus is called ‘Yesu’, John is called ‘yovan’ in Tamil?
    Similarly in every other language they are called differently!
    Is there any other religion or philosophy which adopts such tactics?

    Is there any different name for Lord Rama in English?
    Is Bhagwat Gita called by any other name in French or Russian?

    So the only conclusion is that the Church wants to convert people in different lands to christianity by cheating and deceiving them by using their familiar idioms and usages.
    It is the most sinister and fraudulent game!
    R.Sridharan

  20. R.Sridharan on March 8, 2010 at 7:57 pm

    It is not true to say that mostly the socalled backward class people convert to christianity.

    Amazingly as compared to many wealthy and the socalled higher classes these people have more self respect and are more faithful to their ancient traditions

    During the tsunami in Nagapattinam the missionaroies distributed relief materials tro the surivivors.Next day these Misha ‘naries’ came to their homes and started to pray in their houses.

    But the people resisted it saying that they were Hindus
    On this the Misha naries demanded that they return the relief materials given by them
    The poor people did not hesitate even for a minute.

    Saying that their customs are more important to them than the cheap plastic buckets and mats they immediately returned them

    The Misha naries had their faces blackened
    But I know some people belonging to the so called higher class converting because they received money from the church to square their personal debts etc.

    R.Sridharan

  21. glady on March 9, 2010 at 1:30 am

    // Then he pointed out the entry in the certificate
    The poor illiterate lady recollected the day that she took her son to the school to get him admitted in standard one.
    Because she was unlettered she had asked the Headmistress ( a christian) to fill up the application form for her
    Would a true christian let go of such a golden opportunity?
    The HM had promptly entered the boy’s religion as christianity
    //

    சிறுபிள்ளைத்தனமானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,நண்பர் “சிரிதர்”.

    இதுபோல எங்குமே நடைபெறமுடியாது;ஏனெனில் தகப்பனாருடைய சான்றிதழை வைத்தே சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது;

    சாதிச் சான்றிதழ் என்பது சலுகைக்காகவே எனில் அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்;

    சான்றிதழில் மட்டுமே கிறித்தவன் என்று குறிப்பிட்டு பாவியாகவே வாழும் எத்தனையோ கிறித்தவர்கள் உண்டு; எனவே இது முழுக்க முழுக்க பெலவீனமான வாதமாகும்..!

    (edited and published)

  22. i regret ho Glady wants to refute regular errors done by Church and church run schools.

    One of Friend gave me a True Incident.

    Student studying in 9th was an average student in a Hindu run scholl, failed the Student.
    Parent met the Correspondent and Principal and requested to promote the Student and give him TC, so that the School Results would be good.. They showed the Student’ answer papers and suggested that it would do good to the student and refused the TC. The Parents agreed. However a Relative who was working in Educational Department, took it to a Missionary run school, records were made as if that Student was studying in that school and got TC with 9th Pass, and joined another school.

    The boy later learnt lesson and studied well and has become a software professional. I know the original School, later where the boy completed the 10+th and +2 etc.,, and being a known person I am not giving the details.

    Missionaries and churches misuse every power they have.

  23. R.Sridharan on March 9, 2010 at 7:34 pm

    Nothing is impossible for the church, the Missionaries and the christians because of the enormous clout they enjoy due to money power.They just purchase everyone – the police, politicians,administrators. Even the judiciary seems to favor the christians and the muslims.
    So entering the religion of the child in the certificate is child’s play for them.
    Especially in our country where anything is possible because of the corruption at every level and there being no respect for law and absence of Rule of law.
    The church makes use of it very well.

    R.Sridharan

  24. R.Sridharan on March 12, 2010 at 9:49 am

    One friend ‘Kalaignani’ kamahassan’s experiece in Rajasthan – regarding caste differences.
    It seems kamal lectured about ‘EVR. Did they not wonder why he did not follow EVR’s lectures about ‘women’s Rights’ when he drove away his two wives unfairly?
    R.Sridharan

  25. desamitran on March 19, 2010 at 1:59 pm

    Pleae read Editorial in this week ‘Kumudam Jothidam’ to know about latest trick of Soodhu Chellapa

  26. R.Sridharan on March 19, 2010 at 7:05 pm

    Recently I read in a a Tamil Magazine ( Hindu Mitran) the following:
    A boy was converted by missionaries by getting him a job in a company run by a christian.
    After some time the boy’s father expired.As per the Hindu custom he was to light his father’s pyre.
    But the boy refused saying that he had converted to christianity.

    His relatives pleaded with him saying’Anyway You are his son; is it not your duty to perform his last rites?’
    But the boy was adamant and went away .

    Then the unthinkable happened.
    His 17 year old younger sister offered to perform the last rites for her father.
    But her Mother told her not to do so saying that in that case she may have to get her head shaved.

    But the young girl replied that for the sake of her beloved father who had brought her up all these years she will do it.

    Let us ask why such things happen in the society?
    All because of conversions.
    This is what the church wants- shake the foundations of the Hindu family and destroy it so that their job of conversion becomes easier.
    They are so perverted, sadistic and ruthless!

    R.Sridharan

  27. CM ரகு on March 21, 2010 at 6:12 pm

    அனைவருக்கும் வணக்கம்.
    எனக்கும் இதே (கிருத்தவர்களின் பொய் கூறி/கட்டாய மதமாற்றம் குறித்த) ஆதங்கம் வெகு நாளாய் இருந்தது…..
    இங்கு மறுமொழிகளை (விவாதங்களை) பார்த்து நிறைய தெரிந்துகொண்டேன்.
    நன்றிகள் பல.
    எனது கருத்து யாதெனில் -
    நமது நாட்டில் இருப்பது மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக பேசுவதும் , செயல்படுவதும் தான்.
    போலி மதச்சார்பின்மை கட்சிகளான congress,dmk திருந்தும் வரை இப்படிதான்.
    அதிலும் கருணாநிதி இந்துக்களை விமர்சிப்பார்,
    ஆனால் முஸ்லிம் நோன்பில் கலந்து கொள்வார்.
    கிருத்தவ விழாக்களில் கலந்து கொள்வார்.
    இதுதான் நாத்திகமா?
    கிண்டல் செய்வதற்கு இந்துக்கள்,
    வோட்டுக்கு முஸ்லிம்,கிருத்தவர்கள்.
    போலி மதச்சார்பின்மை/நாத்திகர்களால் ஏமாற்றப்படும் மக்களை
    யார் காப்பாற்றுவது?
    நமது இந்துக்கள் மட்டும் தான் மதநல்லிணக்கம் என்று மௌனமாகவே இருக்கிறோம் (நமது ஒவ்வொரு பாரம்பரியமும்(கலாச்சாரமும்) அழிக்கப்படும்போதும்).
    கடவுள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுவோம்.

    நன்றியுடன்
    அன்பன் CM ரகு

  28. armchaircritic on April 5, 2010 at 12:08 pm

    http://www.twocircles.net/2010mar27/all_dalits_should_be_equal_law.html?t=1270448023#comment-107676
    Please follow the above link to see the way of christian misinformation campaign!

  29. //Majority of a seven-judge bench of the High Court yesterday quashed the quota saying it is religion specific and will encourage conversion.//

    Indian Constitution does not allow reservation based on religion and also
    reservation above 49%

    Tamilnadu and Karnataka has more than above.

    This must be first stopped, now SC uses this illegal thing to justify muslim reservation in Andhra.

  30. பாலச்சந்திரன் on May 3, 2010 at 4:03 pm

    வாழ்த்துக்கள்,

    தங்களது தகவல்கள்களுக்கு நன்றி,
    இந்து மதம் அழியாதது, அழிக்கமுடியாதது,உண்மையானது.

    யார் வேண்டுமானாலும் முயற்சிக்கட்டுமே!
    மலை மீது மோதட்டுமே!

    எப்படியோ, இந்தியத் திருநாட்டின் கொள்ளையடிக்கப்பட்ட செல்வம் மீண்டும் திரும்பி வரட்டும்! ஏழை மக்கள் வாழவேண்டும்!

    (edited and published)
    நன்றி.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.