ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்!
சோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?
வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….
சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.
வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?
சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்
வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?
வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?
சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…
வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?
சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.
வீரமணி: நாங்கள்தான் தெளிவாகச் சொல்கிறோமே இதன்மூலம் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டையை உண்டாக்கிவிட உங்களால் முடியுமா என்ன? இதில் நாங்கள் ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும் எங்கள் கருத்து இதுதான். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் ‘நாத்திகர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள், அப்படிபட்டவர்கள்’ என்று சொல்கிறார்கள்.
-பக் 87, 88, 89 இவர்களைத் தெரிந்துகொள்வோம் / சோ / பரந்தாமன் பதிப்பகம்
விடாக்கண்டன் சோ-வின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காத கி. வீரமணியின் பதில்கள் இவை.
‘கடவுள் இல்லை’ என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசிவரை முஸ்லிம், கிறிஸ்துவக் கடவுள்களைத் தாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் வீரமணி.
கி. வீரமணி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். பத்திரிகைப் பேட்டியில் அவர் குறிப்பிடும் வார்த்தைகள் நிச்சயமாக அந்த இயக்கத்தின் கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள்
திராவிடர் கழகத்தின் நிறுவனரான ஈ. வெ. ரா, இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது.
- குடி அரசு. ஆக. 23, 1931.
ஈ. வெ. ரா இஸ்லாத்தை பகுத்தறிவு மார்கமென்கிறார், அவரது சீடரோ இஸ்லாமியக் கடவுளும் தேவையில்லை என்கிறார்.
இதில் எது கொள்கை? எது சுயமரியாதை? எது பகுத்தறிவு?
இது விஷயமாக நடந்த கொள்கைக்கூத்தின் முழு விவரங்களைப் பிறகு பார்க்கலாம்.
இப்போது சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப கட்டமான 1926-க்குப் போகலாம்.
1926 நவம்பர் 8 ஆம் நாளில் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் கைப்பற்றினர். நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட பனகல் அரசர் மட்டும் வெற்றிபெற்றார். மற்ற தலைவர்களான திரு. கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர். சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியடைந்தனர்.
சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பாக எஸ். சீனிவாச ஐய்யங்காரும், எஸ். சத்தியமூர்த்தியும் நடத்திய பிரசாரத்தின் விளைவு இது.
தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பெற்றுவிட முடியும் என்ற மிதப்பில் இருந்தனர் நீதிக்கட்சியினர். சுயராஜ்ஜியக் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணி செய்தனர். அவர்களுடைய பிரசாரம் மக்களைக் கவரும் விதத்தில் இருந்தது. கோகலே மண்டபம் போன்ற கட்டடங்களைவிட்டு வெளியேறிய அவர்கள் கடற்கரையில் பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தினர். தெரு முனைகளில் கூட்டம் போட்டனர். நீதிக்கட்சியினர் வழக்கம்போல் சரிகைத் தலைப்பாகையோடு ஆளில்லாத மண்டபங்களை அலங்கரித்தனர்.
இந்தத் தேர்தலில் நீதிக்கட்சிக்கு ஈ. வெ. ரா கொடுத்த ஆதரவால் எந்தப் பயனும் இல்லை.
டாக்டர். பி. சுப்பராயன்எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர். பி. சுப்பராயன் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. டாக்டர். பி. சுப்பராயன் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார்.
1926, டிசம்பரில் பதவியேற்ற சுப்பராயன் அமைச்சரவை 1930 அக்டோபர் வரை நீடித்தது.
டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியாரும் எம். ஆர். சேதுரத்தினம் ஐயரும் அமைச்சர்களாக இருந்தனர். இந்த அமைச்சரவையின் காலத்தில்தான் அரசு வேலைவாய்ப்பில் வகுப்புரிமைக்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது. இது நீதிக்கட்சியின் ஆட்சி அல்ல என்பதையும், அதில் ஒரு பிராமணர் அமைச்சராக இருந்தார் என்பதையும் வாசகர்கள் குறித்துக் கொள்ளவேண்டும்.
தேர்தல் பிரசாரத்தால் எதுவும் தேறவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார் ஈ. வெ. ரா; அவரது கவனம் சுயமரியாதைத் திருமணங்களின் பக்கம் திரும்பியது.
இந்த ஆரம்பகாலத் திருமணங்களைபற்றி அவர்கள் தரப்பில் சொல்வதைக் கேட்போமா?
1928-ம் வருடத்தில் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்கா சுக்கல நத்தம் கிராமத்தில் நடந்த திருமணங்களைப் பற்றி எழுதுகிறார் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி.
காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பிறகு பெரியார் காங்கிரசைவிட்டு விலகி வந்து காங்கிரஸ் எப்படி ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கிறது என்று பிரசாரம் செய்தபோது சுப்பா ரெட்டியார் காங்கிரஸ் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்….
சுக்கல நத்தத்தைச் சுற்றியுள்ள 116 கிராமங்களில் ‘குடி அரசு’ பத்திரிகையை வரவழைக்கச் செய்து பாமர மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் சுப்பா ரெட்டியார்….
சுப்பா ரெட்டியார் பக்கத்து வீட்டுப் பெரியவர்களான மு. அழகர்சாமி ரெட்டியாரையும். மு.சி. சீனிவாச ரெட்டியாரையும் தனித்தனியாக அனுகி, ‘என் பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர விருப்பமா’ என்று கேட்டார். இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு ‘என் பெண்ணைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள்….. அப்பாக்கள் இப்படி சுப்பா ரெட்டியார் வீட்டில் சம்பந்தம் கொள்ள போட்டி போட்டபோது அவர்களது பெண்களோ வேறுவிதமாக அதிசயக்கத் தக்க வகையில் சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அழகர்சாமி ரெட்டியாரின் மகள் நாகம்மாளும், ஸ்ரீ நிவாச ரெட்டியாரின் புதல்வி ரத்தினத் தாயம்மாளும் இளம்வயது முதல் இணைபிரியாத தோழிகள்!
அவர்கள் இருவரும் ‘மணந்தால் ரெட்டியாரின் மகன் அரங்கசாமியையே இரண்டுபேருமே திருமணம் செய்து கொள்வது. இல்லாவிட்டால் இரண்டு பேருமே கடைசி வரையில் திருமணமே செய்துகொள்வதில்லை’ என்று சூளுரை செய்துவிட்டார்கள்
பெற்றோருக்குத் தங்களது பெண்ணின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஏற்பாட்டை மாப்பிள்ளை ஒப்புக்கொள்ள வேண்டுமே! மனம் கலங்கி நின்றார்கள்.
ஆனால் இந்தச் செய்தியை கேள்விப்பட்ட அரங்கசாமியோ ‘குடி அரசு படித்து குடி அரசின் பெண்களாகவே சொல்லப்படும் இந்த இரு பெண்களையுமே திருமணம் செய்து கொள்ள நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். பெண்ணைப் பெற்றவர்கள் மண்ணுலகம் முழுவதுமே தங்கள் கைவசப்பட்டுப் போனதுபோல மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்கள்.
தந்தைப் பெரியார் அவர்களுக்கு விவரங்களை எழுதி திருமண நிகழ்ச்சிக்குத் தேதி கேட்டார்கள். 28-05-1928 திருமணத்தை நடத்திவைக்க அய்யா மனமுவந்து ஒப்புதல் அளித்தார்.
- பக் 106, 107 : புதையல் / சின்னக்குத்தூசி / நக்கீரன் வெளியீடு.
சுப்பா ரெட்டியாரின் மகனுக்கு மட்டுமல்ல, அவருடைய உறவினர் ஒருவருடைய மகனுக்கும் அதே நாளில் ஈ. வெ. ரா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்திலும் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள்தான்.
சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.
ஆனால் இந்தத் தகவல்களை இப்போதைய கழக வீரர்கள் அறிவதில்லை.
அவர்கள் ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.
திருநெல்வெலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஈ. வெ. ரா வொடு பாரதியாரை ஒப்பீடு செய்திருக்கிறார். (16. 12. 2007)
‘கவிதையில் பெண்ணியத்தைத் தூக்கிப்பிடித்த பாரதி கூட தனது கட்டுரையில் தடம்புரண்டு இருக்கிறார். பாரதியை விஞ்சும் வகையில் உண்மையான பெண்ணியத்தை அதிகம் பேசியவர் பெரியார்’ என்கிறார் அவர்.
அவருக்கு அரசியல் அறிவும் அனுபவமும் குறைவு என்பதால் வார்த்தைகள் அதிகமாக வெளிப்பட்டிருக்கின்றன. இரட்டை மணப்பெண்கள் விவகாரத்தை இவர் இருட்டடிப்பு செய்துவிட்டார்.
பதவி தரும் பாதுகாப்பு இப்படியெல்லாம் பேசவைத்திருக்கிறது. பாரதியார் மீதே பழி சொல்லத் துணிந்துவிட்டார். தமிழ் மக்கள் எண்ணத்திலும் எழுச்சியிலும் பாரதியின் பாடல்கள் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. ஆனால் அதைத் தடை செய்த பிரிட்டீஷ் ஆட்சி காணாமல் போய்விட்டது. இதை அவரும் அவருக்கு பின்புலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களும் அறியவேண்டும்.
மேற்கோள் மேடை:
‘சுயமரியாதை இயக்கம்’ என ஓரியக்கம் சென்ற ஆண்டில் நம் தென்னாட்டில் தோன்றியது. அவ்வியக்கத்தைச் சார்ந்த சிலர் பழையனவற்றைப் பழித்தலைப் பேரறமாக மேற்கொண்டனர். திருக்குறளோ பழையனவற்றில் எல்லாம் பழையதாக அவர்கள் எதிர் நின்றது.
- தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் / 05. 03. 1930
– தொடரும்…

போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி
போகப் போகத் தெரியும் – 30
போகப் போகத் தெரியும் 29
போகப் போகத் தெரியும் – 27
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 11 : முரண்பாடுகளும், திரிபுகளும்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 9 (பெரியார் திடல் கொள்கைக்காக
போகப் போகத் தெரியும் – 23
நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01![பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்](http://www.tamilhindu.com/wp-content/uploads/veeramani.jpg)
பெரியாரின் மறுபக்கம்- 20[இறுதிப் பாகம்]: வீரமணியின் முரண்பாடுகளும் மூடநம்பிக்கைகளும்
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்
போகப் போகத் தெரியும் – 33
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி
போகப் போகத் தெரியும் – 32
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த
போகப் போகத் தெரியும் – 26
பெரியாரின் மறுபக்கம் – பாகம் 10
பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் –
போகப் போகத் தெரியும் – 22
பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)
வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு
பெரியார் யாருக்குப் பெரியார்?
போகப் போகத் தெரியும் – 45
போகப் போகத் தெரியும் – 43
போகப் போகத் தெரியும் – 42


சோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?










Sir,
Thanks for the juice.
It is frightening to know the depth & ramifications of this DK venom.
Thank God.
God saved the society.
Eagerly awaiting to read further enlightening episodes.
Good wishes for the forthcoming November publication.
God Bless.
anbudan,
srinivasan.
great… we expect your next article about the 1:5 ratio marriage of Mahabharata.
சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை — பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!!
திராவிடக் கட்சிகள் மறுபெயரே, முரண்பாடுதானே. பெரியார், அண்ணா திட்டாத காந்தியா? அவர்கள் வழித்தோன்றல் முக வுக்கு இன்று காந்தி, உத்தமர் அண்ணல் காந்தி!! பார்த்துக்கொண்டே இருங்கள். ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேசரையும் தரி்சித்து,பட்டை நாமமும் சாத்திக்கொண்டு, நமக்கும் சாத்திவிட்டுச் செல்வார்கள். அந்தர் பல்டி அடித்து இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அரசியல் சாசனத்தை எரிப்பார்கள். அதை கோர்டில் வெறும் கடுதாசியைத்தான் எரித்தேன் என்பார்கள். ”அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடென்பார்கள், அந்த முழக்கத்தை மறந்து, அந்த கொள்கையை காற்றோடு பறக்கவிட்டு, ஏதும் நடக்காததுபோல நடிப்பார்கள். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பார்கள், அவர்கள் கேணியம்மன் கோவிலில் பூஜை செய்து, கல்பூரார்தியை செய்து கண்ணிலொற்றிக்கொள்வார்கள். மேலும் சத்ய சாய் பாபாவை வீட்டிற்கே வரவழைப்பார்கள். சமீபத்தில் உடுப்பி கிருஷ்ணரையும் ராமேச்வரத்தில், குடும்ப சகிதம் பூஜை, புமஸ்காரம் செய்வார்கள். வள்ளுவர் ஏதோ இவர்களுக்கு மாத்திரம் சொந்தம் போல, அவர் வாரிசென்பார்கள், மைனஸ் கடவுள் என்பார்கள். இவர்களுக்கு “செலெக்டிவ் அம்னீசியா” வியாதி அடிக்கடி வரும், போகும். அவர்களுக்கு கீழே தான் உமிழ்ந்த எதையும் மறுபடியும் உண்பதென்பது ஆகிவந்தகலை. எதையும் சமயோசிதமாகக் கையாள்வார்கள். கெட்டிகாரர்கள். இவர்கள் புளுகுகள் எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிக்குமோ!! இந்த மரமண்டை திராவிடப்பெருங்குடி மக்கள் என்று விழிப்பார்களோ! தெரியவில்லையே!!!.
வீரமணி அவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறார்.சங்கராச்சாரியர் சொல்லித்தான் வீரமணியிடம் சோ கேள்வி கேட்டிருக்கிறார். இந்து மதத்தை எதிர்ப்பது ஏன் என்பது பற்றி கீழ் கண்ட விளக்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும். முழுமையாக அறிந்து கொள்ள அந்நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
தற்போது அந்நூலிலிருந்து ஒரு சில பகுதிகள்:
”
காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடிவருகிறார்கள். “அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பதுவருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது” என்று கல்கி இதழ் எழுதுகிறது.
ஒருவர்துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில் அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு துறவியின் தண்டத்தைப்போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப் போனவர் அவர். பிறகு திரும்பிவந்து தொடர்ந்து துறவியாக இருப்பது கொண்டாட்டத்துக்குஉரியதுதானே! கல்கி வர்ணிக்கிற ‘அரசியல் பாணி துறவறம்’ எப்படிப்பட்டது என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ ‘சாம்பிள்! 1983ல் ஜயேந்திரர்அழைத்ததன் பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும் ‘எதிரொலி’யில் எழுதிய கட்டுரைகள், அதற்கு ‘சோ’வின் மறுப்பு,மறுப்புக்கு மறுப்பை வெளியிட மறுப்பு முதலியவை இதோ:
‘தவறாமல் விடுதலை படிக்கிறேன்’
- சின்னக்குத்தூசி கட்டுரை
“ஆச்சார்ய ஸ்வாமிகள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன். நமக்கு அதிசயமாக இருந்தது.
கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார். அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின்அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள். வசந்த மண்டபத்தின் வாயிலில்நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.
கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார். உடனடியாக நாங்கள் சுவாமிகள்தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ சமுக்காளமோவிரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.
இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார். நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம். ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்துஅமர்ந்தார். ஒரு ஊழியர் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் ஸ்வாமிகளும் மட்டுமேஇருந்தோம்.
“என்ன இதெல்லாம்” என்றார்.
“இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன”என்றோம்.
“இதெல்லாம் எதற்காக?” என்றார் ஸ்வாமிகள்.
“சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறானமனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்”என்றோம்.
ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.
பின்னர்,
“நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் ‘விடுதலை’ பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு,
“என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே…” என்றார்.
சின்னக்குத்தூசி: “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல”
ஸ்வாமிகள்: “ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடிகாட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்.”
சி.கு.: “தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர,தனிப்பட்ட முறையில் இருக்காது.”
—-நூல்:-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?
தொடர்ச்சி…
”
ஸ்வாமிகள்: “திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப்பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.”
சி.கு.: “தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால்,அதையெல்லாம் வைத்துக்கொண்டு, “எல்லாமும் வன்முறைதான்” என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லாஇயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன.சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறைஇயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?”
நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச்சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒருபிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது.தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.
அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரியவிஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்தஉயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.
ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி, இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகுஎத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு,புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.
இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் கலவரங்கள் மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும்நடந்ததில்லை..”
——நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?
தொடர்ச்சி..
“பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,
“பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே” என்று கேட்டார்.
நண்பர் ஞாநி சொன்னார்:
“எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றுகாட்டுகிறோம்.
‘வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்’ என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்.”
ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானேஇருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே” என்றார்.
சி.கு.: “ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்.”
ஸ்வாமிகள்: “இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம்சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.
‘சோ’வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்.”
சி.கு.: “தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.
மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.
எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்துஎன்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே;இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.
கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும்ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்துமுற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்.”
—நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?
//ஈ. வெ. ரா என்பவர் பெண்களுக்காக உலகத்தைப் புரட்டிப் போட்டவர் //
இதிலொன்றும் உங்களுக்கு அய்யம் வேண்டாம். உண்மை இதுதான். மேலும் அதிகமான தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன்ம் வெளியிட்டுள்ள பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை தொகுதி – 5,6,22,23,24 ஆகிய நூல்களை படிக்க வேண்டுகிறேன். அதோடு வீரமணி அவர்கள் எழுதியுள்ள “சுயமரியாதை திருமணம்-தத்துவம்” நூலைப் படியுங்கள். உங்களின் அனைத்து அய்யங்களுக்கும் விடை கிடைக்கும்.
தற்போது உங்கள் பார்வைக்கு ஒரு சில சான்றுகள்
”
1929-இல் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது என்றால், இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற இடம் ஈரோடுதான் (10.5.1930) எம்.ஆர். ஜெயகர் தலைமையில் நடை பெற்ற அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று நினைத்தாலும் மலைப்பாகவே இருக்கும்.
வருணாசிரமக் கொள்கையும் ஜாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூலகாரண மென்று இம்மாநாடு கருதுகிறது. பிரிவினையால் ஏற்றத் தாழ்வு – ஏற்படுமென்னும் கொள்கையை இம் மாநாடு மறுப்பதுடன், அக்கொள்கையை வெளியிடும் வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.
ஜாதி, வகுப்பு வித்தியாசங்களின்றி ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்ள அனுமதிக்கத்தக்க சிவில் விவாகச் சட்டமொன்று இயற்றப்பட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், குறிப்பாக ஆரம்பக் கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது. எந்தப் பொதுக் கூட்டத்திலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்களின் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இன்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன் இத்தகு தீர்மானங்கள் ஈரோட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
புரட்சி கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் காலத்தையும், உண்மையான புரட்சிப் பூகம்பம் நிகழ்த் தப்பட்ட அந்தக் காலத்தையும் கருத்துடன் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.”
————-நன்றி “விடுதலை” 16-8-2009
பெரியார் பெண்களுக்காக உலகத்தையையே புரட்டிபோட்டவதான். அதனால்தான் 1938 இல் தாம் பெண்கள் மாநாடு கூட்டி ஈ.வெ.ரா வுக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ல அத்தனை விசயங்களுக்கும் நான் மேற்குறிப்பிட்ட நூல்களில் விடை கிடைக்கும் .அருள் கூர்ந்து அவைகளைப் படியுங்கள்.
நன்றி … விவாதிப்போம்
தமிழ் ஓவியா ,ராமசாமி நாயக்கர் ஒரு ஆம்பளைக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டி வெச்சதை பத்தி ஒன்னுமே சொல்லலையே! உங்களுக்கு வசதியான விஷயத்தை மட்டும் தான் எடுத்து பேசுவீகளொ?
veeramani pathilkal sutha poiee evarkal ellum manitha periyaa theriyam iruthal mutra reglion patri pesu solluilkal mudiyatha ovar oru mannithan nijieel theriyam iruthal pesu sollu
Dear Tamil Ovia,
Please continue to provide your side.
But, the one you have provided here does not have anything to refuse the main argument posted by Sri. Subbuji, except:
சி.கு.: “தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.
And you think that it is enough of an answer. This answer is as good as the answer given by Sri. Veeramani. Translation of a book against western christianity can never equal the practices in Tamilnadu. So, not only in the quantity, but also in terms of quality your sincerity is appalling.
Subbuji is asking if there is any book by EVR or by DK that criticizes Islam (or Muhammad). You have not answered that.
Will you please?
என்னவோ பெரும் சொத்துக்களை விட்டு விட்டு துறவியான பட்டினத்தாரும், தஞ்சை மன்னர் கொடுத்த பொன்னை மறுத்து ‘பொருளை வேண்டனு நீ வாடனு’ என்று கடவுளைப் பார்த்து பாடிய தியாகராசரும் சந்தித்து உரையாடியதைப் போல பெரிய முக்கியத்துவம் குடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஒருவர் கடவுள் இல்லை என்று கூறியே பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டவர். இன்னொருவர் கடவுள் இருக்கிறார் என்று இரண்டாவது அத்தாரிட்டி போல எழுதியே பல நூறு கோடிகளை தன் கணக்குக்கு சேர்த்து விட்டார்.
ஒருவர் நேற்றைக்கு உள்ளூர் தலைவி, இன்றைக்கு தங்கத் தலைவர், பிறகு ஒரு நாள் மையத் தலைவி என்று, கன கச்சிதமாக மாறி மாறி ஜால்ரா அடித்தவர்.
இன்னொருவர் தங்கத் தலைவர் எப்போது மருத்துவ மனைக்குப் போவார் என்று காத்து இருந்து, அவர் வீடு திரும்பியவுடன் முதல் ஆளாக சென்று பல்லைக் காட்டி விமரிசங்களுக்கு மீறிய நட்பை உறுதி செய்பவர். ஒரு கட்சியினர் செய்த செயலைக் கண்டித்து ஒரு நாள் கறுப்பு அட்டையை கவர் பேஜில் போடுவார். பிறகு அதே கட்சி தயவில் நியமன உறுப்பினர் ஆவார்.
இவர்களைப் போன்றவர்கள் சேர்ந்து கடவுள் ஆராய்ச்சி செய்தால் எப்படி இருக்கும்? கவுண்டமணி, செந்திலே பெட்டர் என்ற அளவுக்குத் தான் இருக்கும்.
நல்லது கடவுள் இருக்கிறாரா என்று கேட்க ஆரம்பிப்பதில் இருந்துதான் ஆன்மீக ஆர்ய்சியே தொடங்குகிறது.
பெரியார் கொஞ்சம் அப்படி இப்படி தான். ஆனால் அவர் கேட்ட சில கேள்விகள் உபயோகமானவை. சரியான இந்து மதத்தை மீட்டெடுக்க உதவக் கூடியவை. அதை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
(தொடர்ந்து எழுதுவோம்)
//இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.//
காமெடியாக இல்லை. ஈவெரா நல்ல தொலைநோக்கு சிந்தனையாளன்தான் போல. இளைஞர்களுக்கு விதவைகள். சொத்து விவகாரங்களுக்காக கலியாணம் செய்யும் கிழவன்களுக்கு விதவையாகாத இளங்குமரிகள்…பேஷ் பேஷ் ரொம்ப நல்லாத்தான் இருக்கு பகுத்தறிவு…அய்யா கேள்வி சங்கராச்சாரியார் எழுதிக்கொடுத்தால் என்ன அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி கொடுத்தால் என்ன…தைரியமிருந்தால் உண்மையிருந்தால் பதில் சொல்ல வேண்டியதுதானே…
மாநாடுகளில் தீர்மானங்கள் போடுவதெல்லாம் பிரச்சினைக்கு தீர்வாகாது.
தீர்மானங்கள் படி திராவிடர் கழகமோ, பெரியாரோ நடந்து கொண்டார்களா என்பதுதான் முக்கியம்.
இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.
அப்படியென்னால் எத்தனை திக்கார ர்கள் விதவைகளை திருமணம் புரிந்துகொண்டார்கள் என்பதை தெரியப்படுத்துவீர்களா?
பெரியார் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது கழக விதவைகளையோ,அல்லது யாரோ ஒரு விதவையையோ திருமணம் செய்து கொள்ளவில்லையே ஏன்? சரி வீரமணிகூட விதவையை திருமணம் செய்துகொள்ளவில்லையே ஏன்?
பெரியார் உண்மையிலேயே பெண்களுக்கு பாடுபட்டவர் என்றால் அந்த தீர்மானத்தில் என்ன இருந்திருக்க வேண்டும்?
சுயமரியாதை இயக்கத்தில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் விதவைகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி சேர்த்திருந்தால் இன்னும் புரட்சியாக இருந்திருக்குமே!
இயக்கத்தில் சேர பல விதிகளை நிர்ணயம் செய்யும் திக இதையும் ஒரு விதியாக செய்திருக்கலாம் அல்லவா?
பெண்களுக்காக உலகத்தையே புரட்டிப்போட்டவர் பெரியார்.
எந்த உலகத்தை?
தான் நடத்தி வந்த பத்திரிகையில் மட்டும்!
திருமணம் ஆனவுடன் பெண்கள் தங்கள் பெயருக்கு பின் ஆண்கள் பெயரை சேர்ப்பதையே பெண்ண டிமை என்று கூறுகிறார்கள்.
ஆனால் மணியம்மைக்கும் பெரியாருக்கும் திருமணம் நடைபெற்ற பின் பெரியார் சொன்னது என்ன தெரியுமா?
இனி மணியம்மை என்று கூப்பிடக்கூடாது. ஈவேரா மணியம்மை என்று தம் பெயரையும் சேர்த்து கூப்பிட வேண்டும் என்பதுதான்.
இதுதான் பெண்களுக்காக உலகத்தையே புரட்டி போட்ட பெரியாரின் தொண்டு.
சுயமரியாதை திருமணம் என்பதே ஒரு காமடிதான்.அது ஒரு சீரியஸான விஷயம் அல்ல. ஏனென்றால் பெரியாரே சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம் தான் செய்துகொண்டார்.
திக கார ர்கள் திருமணத்தன்று மேடையில் வெறும் மாலைகளை மாற்றிக்கொள்வார்கள். பிறகு எல்லோரும் போனவுட னோ அல்லது மறுநாளோ தாலி கட்டிக்கொள்வார்கள். இது நான் நேரில் கண்டது.என்னால் நிரூபிக்க முடியும். எங்கள் பகுதியில் திக மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் இப்படிதான் செய்தார். வீரமணி முன்னிலையில்தான் சுயமரியாதை திருமணம் நடந்த்து. ஆனால் இன்றும் அவர் மனையின் கழுத்தில் தாலி தொங்குகிறது. இதுதான் அவர்களின் சுயமரியாதை திருமணம். இது காமடிதானே!
I read with interest your article.These guys have nothing else to do,but have to compulsorily hang on to views which have no basis.The guy called (a)gnani puts a big show as an intellectual,but ends up acting as a greater fool than what he really is
thika vuku hindu madham thita vendum avalavuthan. athan mulamaka avarkal christ , muslim mathathukku velai parkiravarkal.
(Comment edited and published. – Tamilhindu Editorial.)
குரானோ குரான் என்ற நூல் உள்ளது . இன்னொரு தகவல். பெரியார் நடத்திய மாநாடுகளில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் போல் பன்றிக்கறி சாப்பிடுவதையும் போராட்டமாக அறிவித்து நடை முறைப் படுத்தினார். பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக கருதுவது எவ்வளவு மூடநம்பிக்கையோ அதேபால் முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பதும் மூடநம்பிக்கையே.
—–விவாதிப்போம்
//தமிழ் ஓவியா ,ராமசாமி நாயக்கர் ஒரு ஆம்பளைக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டி வெச்சதை பத்தி ஒன்னுமே சொல்லலையே! உங்களுக்கு வசதியான விஷயத்தை மட்டும் தான் எடுத்து பேசுவீகளொ?//
ஏன் அப்படி நடந்தது என்பது பற்றி பெரியார் விரிவாக விளக்கி உள்ளார். அருள்கூர்ந்து சுயமரியாதை திருமணம்-தத்துவம் நூலை படிக்கவும். உங்களின் அய்யம் நீங்கும்.
//அப்படியென்னால் எத்தனை திக்கார ர்கள் விதவைகளை திருமணம் புரிந்துகொண்டார்கள் என்பதை தெரியப்படுத்துவீர்களா?//
வெங்கடேசன் உங்க நண்பர்கள் இது குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவில்லையா?
அது குறித்த பட்டியலை குடிஅரசு இதழ் வெளியிட்டு வந்தது. தேடிப் படியுங்கள். உங்கள் நூலுக்கான மறுப்பு விரைவில் வெளிவரும். தமிழ் ஓவியா வலைப்பூவில் கட்டுரை வந்துள்ளது பார்க்கவும். பல் வேறு பணிச்சுமையினால் உடனுக்குடன் பதி எழுத முடியவில்லை. எப்படியும் விரைவில் எழுதுவேன்.
மாட்டுக்கறியையும் பன்றிக்கறியையும் சாப்பிடும் புரட்சியாளர்களின் நாகரிகமும் பண்பாடும் மனிதத்தன்மையும் அசுரத்தனமாகத்தான் இருக்கும். “கொல்லான் புலாலை மறுத்தானை எல்லாவுயிரும் கைகூப்பித் தொழும்” என்னும் தெய்வப்புலவரையும், உன்வயிற்றை விலங்குகளின் புதைகுழி ஆக்காதே” என்னும் புத்ததேவனையும் பற்றி இந்த அசுரகுணம் உடையோர் பேசுவது விந்தையே.
Periyaar nallavaraa kettavaraa? oh lord, pl answer my prayer.
“இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்”
I hear this arguement quite often. Is there any history in any part of the world, that a minority group, which is hardly 2-3% of the total population, enslaved and suppressed the remaining 97% of the population? Forget instances where it had happened for short time of period. The british did that but they were thrown out in a couple of hundred years. I am asking is it logically possible for such thing to happen in any part of the world?
So if really the 2% brahmins tried to enslave the 98% people, dont you think the brahmins would have been crushed if not in a couple of hundred, atleast in a couple of 1000 years? But the proof is it never happened in the known 5000 years of Indian history.
Nowhere in the history of the world, we can see that a minority group suppressed and ruled the majority for 1000′s of years. And this is enough proof that these arguements are baseless.
//மாட்டுக்கறியையும் பன்றிக்கறியையும் சாப்பிடும் புரட்சியாளர்களின் நாகரிகமும் பண்பாடும் மனிதத்தன்மையும் அசுரத்தனமாகத்தான் இருக்கும்.//
அருமையான கண்டுபிடிப்பு. இந்த ஆண்டு நோபல் பரிசு முத்துகுமாரசாமிக்கே .கே. கே. கே.
“yaaro”
நாட்டில் பிரிவினைகளை உருவாக்கி நாட்டை துண்டாக்க பெரியார் கிருஸ்தவ மிசனரிகளால் உருவாக்கப்பட்ட ஏஜென்ட்.இன்றும் இவரது கட்சிகள் பாதிரிகளுடன் இயங்கும் உபகுழுவாகவே இருக்கு.இவர் தான் பிராமண எதிர்ப்பு எனும் போர்வையில் தமிழ்நாட்டில் பல ஜாதிகட்சிகளை தோற்றிவித்து பல சாதிகலவரங்களை நடத்தும் குழு .பெண்களுக்கு கற்பு தேவையில்லை நாலு ஆண்களுடனும் படுக்கலாம் என சொன்ன பெண்ணியவாதி.வெள்ளையர்கள் கலாசாரத்தில் வெறி கொண்டவர்.தான் சொல்லுவதுக்கு தலையாட்டுபவர்களுக்கு பகுத்தறிவுவாதி சேர்டிபிகேட் கிடைக்கும் .எதிர்த்து கேள்வி கேட்டால் மதவெறியன் ,சாதிவெறியன் ,மூடநம்பிக்கையாளன் என பல பட்டங்கள் சூட்டப்படும்.மேலும் விவாதம் செய்தால் பதில் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கதக்கதகும் இருக்கும் (உன் தாயை கூட ஆபாசமாக வர்ணிப்பார் பொறுத்துக்கொள்ள வேண்டும் )
hello suppu how to donate by paypal
please create paypal account it’s easy to donate from europe
இரண்டு “பெரிய” மேதைகள் – ஒருவர் ஆத்தீக “இமயம்”, இன்னொருவர் நாத்தீக “எவரெஸ்ட்” – இவர்கள் வாதத்தில் ஈடுபடும் போது எப்படிப் பட்ட கேள்விகள் முன் வைக்கப் பட வேண்டும்?
ஆத்தீக “இமயம்” கேள்வி- ” கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா? ”
நாத்தீக “எவரெஸ்ட்” பதிலைப் பாருங்கள்- “மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….”
மறந்து போய் கூட ஆத்தீக வாதி இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கவில்லை – “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”
இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிங்கரிடம் முன் வைத்தாரா?
அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக இருந்தாரா?
“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!
உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.
ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தேவை.
இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?
ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?
நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?
அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?
ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?
பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.
ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.
இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ(pbuh), ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!
மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!
எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!
மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!
நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!! கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!
கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!
ஆனால் எதுவானாலும் அதை ஆராயாமல், உணராமல், குருட்டுத் தனமாக ஒரு முடிவுக்கு வர முடியுமா?
ஆனால் நண்பர்களே நாம் அபாயத்தில் இருக்கிறோம், எந்த நோயோ அல்லது துன்பமோ நம்மையோ, நமது நெருங்கிய உறவினரையோ தாக்கினால் அதைத் தடுத்து நம்மை காத்துக் கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா?
இதில் பிராமணர்களாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன? ஒரு பிராமணரின் கை இரண்டு துண்டு ஆனால், அதை எடுத்து சேர்த்து வைத்தால் உடனே ஒட்டிக் கொண்டு சரியாகி விடுகிறதா? கொத்தடிமைகளாக இருக்கும் நமக்குள் இந்த சண்டை ஒரு கேடா?
நண்பர்களே, மிகச் சிக்கலான நிலையிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனவே, கஷ்டத்திலும் காமெடி தேவைதான் என்பதால் இங்கே இந்த விடாக்கண்டன்,பிடிகொடுக்காத கொடாக் கண்டன், ஸ்வாமிகள் நடத்திய காமெடியை ரசிக்கலாம்.
ஆனால் நாம் முழுவதும் காமெடி பீசாக ஆகி விட நேர்ந்தால் அது இன்னும் அதிக சிக்கலில் நம்மை சேர்க்கும்.
எனவே நான் நம்முடைய ஆத்தீக நண்பர்கள், நாத்தீக நண்பர்கள் இரு தரப்பாரையும் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் நாம் அனைவரும் உண்மையான ஆன்மீக ஆராய்சச்சியில் ஈடுபடுவோம்!
இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!
ஏன் எனில் உண்மை யாருக்காகவும் வளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் படையில் தேர்ந்து எடுக்கப் படுவதில்லை.
உலகில் எல்லொரும் உலகம் தட்டை என்று நினைத்தாலும், ஒருவன் மட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
Because Truth can never be defeated- it is the property of the truth!
Truth shall prevail! No body can defeat the Truth.
Hence let us all strive to find the truth.
Let us leave the comedy piece!
Dear Thiruchikkaaran, Please read the books ‘Many lives Many Masters’ and ‘Same soul Many bodies’ by Dr. Brian L. Weiss, M.D. You may be astonished by the experiences of a psychiatrist with his patient.
Dear Thamizh Oviar, You have converted the discussion into a propoganda forum for your SUYAMARIYADAI ideas. You have not dared to refute the fact that DK or any of the offshoots and front organisations of DK are anywhere near the basic requirements of condemning the millions of superstitions of CHRISTIANS AND MUSLIMS and the various religious dictums of both the faiths. True that our society has problems like untouchability, discrimination on the basis of caste and sex etc. But remember these were planted, nurtured and progated by the Britishers. It is really sad that you believe in theories which are proved to be false!!
தமிழ் ஓவியாவே! கீ வீரமனி ஏன் தன் பெயரில் நியூமராலஜிபடி இன்ஷியல் சேத்துக்கொண்டார் என்பதை விளக்கவும்
//காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடிவருகிறார்கள். “அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பது வருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது” என்று கல்கி இதழ் எழுதுகிறது.//
திராவிட இயக்கங்களிடம் (குறிப்பாக தி மு க விடம்) விலை போன கல்கி அவ்வாறு எழுதியதில் வியப்பொன்றுமில்லை. மு க வைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கல்கி ஆட ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
மேலும் பராமாச்சாரியரிடம் பக்தியாக இருந்த பல “பிரபலங்கள்” (தாங்கள் எல்லாம் ஏதோ பத்தரை மாத்துத் தங்கம் போல்) இன்றைய காஞ்சிப் பெரியவரிடம் இல்லாத குறைகள் கண்டு ஒதுங்கிய “வேஷதாரிகள்” தாம். மேலும் ஜெயலலிதாவின் அராஜகத்திற்குப் பிறகு வேஷதாரிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிப்போனது நிதர்சனம். இந்த வேஷதாரிகளின் பேச்சுக்களாலும் செயல்களாலும் இவர்களின் வேஷங்கள் தான் கலைந்தனவேயன்று காஞ்சிப் பெரியவருக்கு எந்தக் குறையும் இல்லை. மேலும் அவரைப் பற்றி எழுதுவதற்குக் கல்கிக்கு அறுகதையும் இல்லை; தகுதியும் இல்லை. அதன் எழுத்துக்கள் குப்பைத் தொட்டிக்கு!
அதே போல் அவர் துறவறத்தை விட்டுபோனதாகச் சொல்லப் பட்டதும் மீண்டும் வந்ததும்….அவருக்கும் பரமாச்சாரியாருக்கும் இடைப் பட்ட விஷயம். இவ்விஷயத்தில் வாயைக் கிழிக்க நம் யாவருக்கும் யோக்கியதை இல்லை. பரமாச்சாரியார் மேல் பக்தியுள்ளவர்கள் அவரால் தேர்ந்தேடுக்கப்பட்டவரின் மீதும் பக்தி கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் அவர்கள் வேஷதாரிகள் என்று அறிந்து கொள்க.
சரி…விஷயத்திற்கு வருவோம். ஆச்சார்ய சுவாமிகள் தாமாகவே இவர்களைப் பார்க்க விரும்பவதாகவும், ‘சோ’வைத் தாம் தான் வீரமணியைப் பேட்டி எடுக்கச்சொன்னதாகச் சொன்னதும்…இவர்களாக எழுதுவது தானே. இவர்கள் எழுதுவதையெல்லாம் மறுத்துக் கொண்டிருக்க அவர் என்ன இவர்களைப் போல் வெட்டி அரசியல் பன்னுகிறவரா என்ன? மேலும் அப்போது, தன்னை “ஞானி” என்று சொல்லிக் கொள்ளும் இந்த “அறிவு ஜீவி”யின் சமூக அந்தஸ்தும், எழுத்துலகில் அவருக்கு இருந்த ஸ்தானமும் என்ன? ஏதோ குத்தூசி அருகே ஒட்டிக் கொண்டிருந்ததால் அவருடன் சென்று விட்டு, ஏதோ தனக்கும் சேர்த்து அழைப்பு வந்தது போல ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிகிறார். சரி….பெரியவர் அழைத்து இவர்கள் சந்தித்ததாகவே வைத்துக் கொள்வோம்.
திராவிட இயக்கங்கள் வன்முறையே செய்ததில்லை என்பது போலவும் ஆபாசப் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஈடு பட்டதில்லை என்பது போலவும் இவர்கள் அவரிடம் சாதித்திருப்பது வடி கட்டிய பொய். தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரத்தையும் ஆபாசப் பேச்சுகள்-எழுத்துக்களையும் ஆரம்பித்து வளர்த்து வருகிறவர்கள் இவர்கள் தான். சைக்கிள் செயின்…சோடா பாட்டில் என்று ஆரம்பித்து கத்தி, அரிவாள், உருளுக் கட்டை என்று பரிணமித்து இன்று துப்பாக்கி, குண்டுகள் என்று அசுரத்தனமாக வன்முறைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் ஸ்தாபித்தப் பெருமை இவர்களையே சேரும். அன்றிலுருந்து இன்று வரை காஞ்சிபுரத்தில் மடத்திற்கு நேர் எதிராக வாரவாரம் தெரு முனைக் கூட்டம் போட்டு பிராம்மணர்களை வசவு பாடிக் கொண்டிருக்கும் அழுக்குக் கூட்டம் அல்லவா இது? ‘விடுதலை’ப் பத்திரிகையின் எழுத்துக்களில் இல்லாத வன்முறையும் ஆபாசமும் வேறு எதில் இருக்கிறது?
காஞ்சிப் பெரியவரிடம் காண்பித்த இவர்களின் “பகுத்தறிவு”ப் பிரச்சார நூல்களையும், ஈவேராவின் புத்தகங்களையும், எப்போதாவது ஒரு முறையாவது எஸ்ரா சர்குணத்திடமோ….அல்லது அப்துல் ரகுமானிடமோ…. காட்டிப் பேசியதுண்டா? அவர்களிடம் இல்லாவிட்டாலும் வேறு யாரவது கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத் தலைவர்களிடம் காட்டி விவாதித்ததுண்டா? அப்படி இவர்கள் காண்பித்து விவாதித்தது உண்டென்றால்..தமிழ் ஓவியா அவர்கள் அந்தப் பட்டியலை இங்கே வெளியிட முடியுமா?
திருச்சி ரங்கநாதனையும்…தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு தூளாக்க வீரம் பேசிய இந்தக் கோழைகள் ஏன் எந்தச் சர்ச்சையும் மசூதியையும் தகர்க்க வீரம் பேசவில்லை? இந்துக் கோவில்களின் எதிரே ஈவேராவின் சிலைகளை, பக்தர்களின் “அர்ச்சனை” அவர் மீது சதா சர்வ காலமும் விழுமாறு, வைத்து அழகு பார்த்தவர்கள், ஏன் எந்த சர்ச்சு முன்னாலும் அல்லது மசூதி முன்னாலும் ஈவேராவின் சிலை வைத்து அழகு பார்க்கவில்லை?
திராவிட இன வெறி இயக்கங்களுக்கும் சிறுபான்மையின நிறுவனங்களுக்கும் இடையே உள்ள விஷ உறவு எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்களின் கைக்கூலிகளாகத் தான் திராவிடம் பேசும் “வீரர்கள்” திகழ்கிறார்கள் என்பதும் நாம் அறிந்தது தான்.
ஜெயலலிதாவின் காலிலும் கருணாநிதியின் காலிலும் மாறி மாறி வீழ்ந்து கிடக்கும், கோடிக்கணக்கான சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலவாதி வீரமணியின் யோக்கியதையும் நமக்குத் தெரிந்தது தான்.
நெல்லை ஜெபமணி அவர்களின் “கண்டுகொள்வோம் கழகங்களை” புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்க முடியாத இவர்கள் வெங்கடேசனின் நூலுக்கு மறுப்பு நூல் வெளியிடப்போவதாகச் சொல்வது நல்ல தமாஷ்! அம்முயர்ச்சிக்கு நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
//நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். //
இது உச்சக் கட்ட தமாஷ்! இந்தப் புளுகை இன்னும் எத்தனை ஆண்டு காலம் சொல்லிக் கொண்டு திரியப் போகிறீர்கள்? கருஞ்சட்டை எலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதை நீங்கள் உணரவில்லையோ?
//அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்//
இதெல்லாம் சும்மாப் பேச்சு. தமிழ், தமிழர், என்கிற பெயரில் நம் மக்களை “இந்து” என்கிற கட்டமைப்பிலிருந்து பிரிப்பதற்காக சிறுபான்மையின (குறிப்பாக கிறிஸ்துவ) நிறுவனங்களின் கூலிகளாகச் செயல் படுபவர்கள் அல்லவா நீங்கள்! அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று இந்து ஆன்மீக வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. திராவிட இயக்கங்களின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டது. சொல்லப் போனால்
எம் ஜி ஆர் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. வீரமணி-கருணாநிதிக்கு அடுத்த படியாக ஆள் இல்லை. கருணாநிதி காலத்தோடு முடிவடைந்து விடும். அதன் பிறகு தன சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ளவே வீரமணிக்கு நேரம் சரியாக இருக்கும். (:-))
//குரானோ குரான் என்ற நூல் உள்ளது //
உள்ளது…அவ்வளவு தான். ஆனால் மூச்சு பேச்சு கிடையாது. (:-))
//பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக கருதுவது எவ்வளவு மூடநம்பிக்கையோ அதேபால் முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பதும் மூடநம்பிக்கையே. //
பக்ரீத் விருந்திற்குப் பசுக்களை கொல்லும் முஸ்லீம்களிடம் பன்றிகளைக் கொன்று சாப்பிடச் சொல்வது தானே? அவர்கள் ஊற்றும் ரம்ஜான் கஞ்சிக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போகிறீர்களே….அப்போது நீங்கள் சமைத்த பன்றிக் கறியைக் கொண்டு போய் அவர்களுக்குக் கொடுப்பது தானே?
ஆரிய திராவிடக் கட்டுக் கதைகளையும் பகுத்தறிவுப் பழங்கஞ்சிகளையும் தூர எறிந்து விட்டு மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முயலுங்கள். வாழ்த்துக்கள்!
Dear Tamil Oviya,
Thanks for the answers.
I want to read the book “குரானோ குரான்”.
Please inform me how to order for that book.
Many thanks once again.