மதமாற்றத்திலிருந்து தப்பிய தமிழ் அறிஞர்

aragavanநுண்கலைக் செல்வர் அ.ராகவன் நெல்லை மாவட்டம் சாத்தான்குளத்தைக் சேர்ந்தவர். பரம்பரைக் சைவக்குடும்பத்தைச் சேர்ந்த அவர் கிறிஸ்தவ மதமாற்றத்திலிருந்து தப்பிய கதையை தமது “இறைவனின் எண்வகை வடிவங்கள் ” என்ற நூலின் முகவுரையில் எழுதியுள்ளார்.
நான் என் பத்து வயதில் – பள்ளிப் பருவத்தில் சாத்தான்குளம் சி.எம்.எஸ் . உயர்தரப் பாடசாலைக்கு ஆங்கிலக் கல்வி பயில்வதற்கு என் பெற்றோர்களால் அனுப்பப் பெற்றேன். அங்கு ” கர்த்தாவே எங்கள் நல்வேந்தனைக் காப்பாற்றுமே” என்ற – ஆங்கில கிறிஸ்தவ ஆட்சியைக் காப்பாற்றுமே என்ற – ராச வாழ்த்தும், அப்பால் ” பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே எங்களைக் காப்பாற்றுமே ” என்ற கிறிஸ்து நாதரை வழிபடும் ஜெபமும் கற்பிக்கப்பட்டன. அங்கு ஆசிரியர் என்னை அஞ்ஞானப் பிள்ளை என்றே கூறுவார். என்னை அவ்வாறு கூறுமாறும் கற்பித்தார். அப்பால் பைபிள் பாடம் ஆரம்பிப்பார். சிவபெருமான் நிந்திக்கப்படுவார். உமாதேவி இழித்துரைக்கப் படுவார். அங்கு நெற்றியில் திருநீறு பூசியிருக்கும் மாணவர்கள் சாம்பலில் புரண்டு வந்திருக்கும் கழுதை போல்வர் என்று கூறப்படும். கிறித்துவ மறையின் பலபகுதிகள், பாராமல், ஒப்புவிக்குமாறு கட்டாயப் படுத்தப்பட்டது.
நாளடைவில் நானும் என்னோடு பயின்ற கிறிஸ்தவரல்லாத சைவப் பிள்ளைகளும் கிறிஸ்துவை காலை, மாலை வழிபடத் துவங்கினோம். கோயிலுக்கும் போனோம். கிறிஸ்தவ சமய பாடப் பரீட்சையில் கிறிஸ்தவப் பிள்ளைகளைவிட நன்கு பயின்று அதிகமான தேர்வு எண்கள் பெற்று பரிசும் பெற்று வந்தோம். காலம் சிந்திக்கத் தூண்டியது. நான் பயின்றிருந்த சிற்ப அறிவு இந்நூலை எழுத பக்கபலமாக, எனது பள்ளித் தோழர் முன்னாள் கலெக்டர் அமரர் தொ.மு . பாஸ்கரத் தொண்டமான் பல அட்டமூர்த்தியின் நிழலுருவப் படங்களைத் தந்து எனது நன்முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார்.

நான் எனது இளவயதில் கிறிஸ்தவப் பள்ளியில் பயின்று வந்தேன். அங்கு நான் கிறிஸ்தவ சமயத்தை அறிந்தேன். ஹிந்து சமய உணர்வை இழக்குமாறு செய்யப் பெற்றேன். நான் பெயரளவில் ஹிந்து என்று அழைக்கப் பெற்றாலும், உள்ளம் கிறிஸ்தவ சமய உணர்வைப் பெற்று விட்டது.

நான் 1922 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று, பின்னர் கமாலியா முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்பொழுது இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றியறியும் வாய்ப்பைப் பெற்றேன்.

நான் 1923 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் பயிலும் பொழுது சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தோடு தொடர்பு கொண்டேன். அப்பொழுது திருவாளர்கள் கா.சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தர முதலியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலியவர்களின் நட்பைப் பெற்றேன். இக்காலத்தில் எனக்குத் தமிழ் பயிலும் ஆர்வமும், ஓவியம் எழுதும் உணர்ச்சியும் எழுந்தன. சிவதீட்சையும் பெற்றுக் கொண்டேன்.

சைவ நெறியை உதறித் தள்ளிய என் போன்றவர்கள் – கிறிஸ்தவ சமய உணர்ச்சியும் இஸ்லாமிய சமயப் பற்றும், பௌத்த மத பக்தியும் கொண்டவர்கள் – மீண்டும் நாட்டுப் பற்றும் சைவ சமய உணர்வும், சிவபக்தியும் கொண்டு, தமிழர் நெறி, மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியவைகளை வளர்க்க – பேணிக்காக்க நான் பெற்ற பிற சமய ஆராய்ச்சியும், நாத்திக அறிவும் பயன்படும் நிலைக்கு மாறியுள்ளது. இது நமது மொழியின், சமயத்தின், பாரம்பரியத்தின் வலுவையும், ஒளியையும் காட்டுவதாகும் என்று உங்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி: விஜயபாரதம் (10.07.2009 இதழ்)

Tags: , , , , ,

 

13 மறுமொழிகள் மதமாற்றத்திலிருந்து தப்பிய தமிழ் அறிஞர்

 1. ராம்குமரன் on August 11, 2009 at 7:16 am

  See the attached photo of a banner affixed to the Advent Christian Church, in Thiruvanmiyur, Chennai.
  According to it an organisation called ‘Christian Brahmana Seva Samithi’ (sic) is arranging a ‘Kathakalakshepam’ by ‘Pujyashri Bhagavathar Vedachalam Sastrigal’ (sic)..
  It is understood that some of the public lodged a complaint with the local Police Authorities stating that the poster offended the feelings of a section of the people and that the offending banner was removed by the Police.

  Kalyana Sundaram in yahoo group

  http://picasaweb.google.com/ramkumaran/Conspiracy#

 2. கோ.ந.முத்துக்குமாரசுவாமி on August 11, 2009 at 9:49 am

  என்னுடைய நண்பர் ஒருவர் இங்குள்ள இந்துசமயச் சார்புள்ள கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்தார். அவர் திரு இராகவனைப்போலத் திருநெல்வேலிச் சைவப்பிள்ளை. தாம் பிறந்த குடிக்கு ஏற்ப எப்பொழுதும் தூய வெள்ளைக் கதராடையுடனும் நெற்ரியில் திருநீற்றுப் பொலிவுடனும் திகழுவார். திருமுறைகளிலும் ஓரளவு பயிற்சி உண்டு. இங்குள்ள சைவமடங்களில் அவருக்கு நல்ல மரியாதையுண்டு. சைவம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவருடைய சொற்பொழிவுகளும் நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து போனார். அவர் சிவபதம் அடைந்தார் என்று என்ன் சொல்லவில்லை என்று உங்களுக்கு ஐயம் எழக்கூடும். காரனம் சொல்லுகின்றேன்.

  சைவக்குடியில், சைவக்குடும்பத்தில் பிறந்து சைவராக வாழ்ந்து மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தவும் இறுதித்ச் சடங்கைத் திருவாசகம் ஓதி நடத்தவும் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. வெள்ளை ஆடை அணிந்த பெந்தகொஸ்தேக்கள் தங்களுடைய கருப்பு நிற புத்தகத்தை வைத்து என்னவோ உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தன. விசாரித்ததில், மேற்படிப் பேராசிரியரின் மகன் என்னவோ வியாபாரம் செய்தாராம். பெரிய இழப்பு ஏற்பட்டதாம். சைவம் அவருக்குப் பொருளுதவி செய்யவில்லையாம். பெந்தகொஸ்தேதான் இறுதிக் காலத்தில் அவருக்குப் பொருளுதவி செய்து இந்த உலகத்திலும் காப்பாற்றி இயேசு ராச்சியத்திற்கும் செல்ல உதவியதாம். வாய்பேசாது நாங்கள் திரும்பிவிட்டோம். இப்பொழுது அந்தப் பேரசிரியரின் குடும்பம் மட்டுமன்றி அவருடைய உறவினர் சிலரின் குடும்பங்களும் இயேசுவினால் ரட்சிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகி உள்ளனவாம்.

  பணம் பாதாளம் மட்டுமென்ன சைவக்குடும்பங்களுக்குள்ளும் பாயும்.

 3. Srikanth on August 11, 2009 at 9:06 pm

  //
  அங்கு ” கர்த்தாவே எங்கள் நல்வேந்தனைக் காப்பாற்றுமே” என்ற – ஆங்கில கிறிஸ்தவ ஆட்சியைக் காப்பாற்றுமே என்ற – ராச வாழ்த்தும், அப்பால் ” பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே எங்களைக் காப்பாற்றுமே ” என்ற கிறிஸ்து நாதரை வழிபடும் ஜெபமும் கற்பிக்கப்பட்டன. அங்கு ஆசிரியர் என்னை அஞ்ஞானப் பிள்ளை என்றே கூறுவார். என்னை அவ்வாறு கூறுமாறும் கற்பித்தார். அப்பால் பைபிள் பாடம் ஆரம்பிப்பார். சிவபெருமான் நிந்திக்கப்படுவார். உமாதேவி இழித்துரைக்கப் படுவார்.
  //

  Reminds the story “Swami and his friends” by RK Narayan. He also mentions a similar situation where a christian teacher spits his hatred on hinduism. Times haven’t much changed even now.

 4. Kreshna on August 11, 2009 at 9:16 pm

  I would appreciate very much if anyone could tell me about this magazine vijayabharatham. (விஜயபாரதம்). Where can I read it? Or how to get it?
  Anyone can tell me about it?
  Thak you.

 5. கண்ணன் கும்பகோணம் on August 13, 2009 at 6:29 pm

  வணக்கம் க்ருஷ்ணா,

  கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்.

  விஜயபாரதம்(தேசீய வார இதழ்)
  12 எம். வி. நாயுடு தெரு,
  பன்சவடி, சேத்துபட்டு, சென்னை-600 031.
  தொலை பேசி 044-28362271

  ஆண்டு சந்தா ரூ.300/= இன்றே அனுப்புங்கள் கிருஷ்ணா.

 6. Kreshna on August 13, 2009 at 8:45 pm

  Very much Thank you Sir. Send draft to whom? Sorry I am from Singapore.Never being to Tamil Nadu. Can you translate in english the above address? Or can I send them an email? U have their email address?

 7. kannan, kumbakonam on August 14, 2009 at 8:42 am

  VIJAYABHARATHAM(Nationalist Weekly)
  12 M.V. Naidu Street,
  Panchavati
  Chetpat
  Chennai-600 031
  Phone: 044-28362271

  DD INFAVOUR OF VIJAYABHARATHAM Rs.300/=

 8. Kreshna on August 21, 2009 at 6:51 pm

  Thank you Mr Kannnan. I will surely subscribe it. I will send my draft by first week of September.

  Thanks.

 9. kavitah on October 8, 2009 at 1:11 am

  hai iam in chennai pls post this book

 10. raj on March 25, 2010 at 5:21 pm

  சமீபத்தில் பள்ளிதேர்வைஒட்டி செய்தி தாள்களில் வெளியிட்ட புகைப்படம் ஜெப வழிபாட்டினை தேர்விற்கு முன்னர் மேற்கொள்வதை உணர்த்துகிறது. அதில் பெரும்பான்மை கண்டிப்பாக இந்து பிள்ளைகள் என்பதில் சந்தேகம் இல்லை. மேல்லோட்டமாக பார்த்தால் ஒரு செய்தியாக மட்டும்தெரியும் அனல் ஒரு புண்பட்ட இந்து கண்ணோட்டத்தில் இளைய சமுதாயத்தை எதிர் காலத்தில் சந்தர்பம் வாய்க்கும் பொது கிருதவர்களாக மற்றம்கொள்ள தேவையான முன்னேற்படுள்ளவர்களாக செய்யும் முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. என் அனுபவத்தில் இவ்வாறு மதம் மாறியவர் எண்ணற்றோர். பள்ளியில் பெரும்பான்மையாக வேறு மத பிள்ளைகள் படிக்கும் இடத்தில குறிப்பிட்ட மத வழி பாடு எதற்கு.

 11. R.Sridharan on June 12, 2010 at 4:08 pm

  கிரித்துவமே பணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகிறது
  எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம்
  கணவன் சினிமாத் துறையில் ஸ்டில் போடோக்கள் எடுப்பவர்
  மனைவி நடனம் பயின்றவர்.
  அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை.
  வருமானம் போதவில்லை
  thi கடன் ஏற்பட்டது.
  அந்தப் பெண்மணி மனச் சுமையை போக்கிக் கொள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் போவர்கள்
  எப்படியோ மிஷ நரிகள் அவளது துன்பத்தை மோப்பம் பிடித்து விட்டன.
  ‘ஹிந்துக் கடவுள் உனது கஷ்டத்தைப் போக்கவில்லை .கடனையும் தீர்க்கவில்லை; என்று சொல்லி மெதுவே அப்பெண்ணை கிறித்தவ மதத்துக்கு மாற்றினர்.
  கொஞ்சம் பணமும் கை மாறியதாகக் கேள்வி.
  இப்போது அப்பெண்மணி அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வேலை செய்யும் ஏழைப் பெண்களை ஏமாற்றி ‘பிடித்து வந்து’ ஜெபம் செய்ய வைக்கிறாள் .
  கமிஷன் எவ்வளவோ தெரியாது!
  இதுதான் கிறித்தவத்தின் அருவருக்கத்தக்க முகம்!

  இரா.ஸ்ரீதரன்

 12. karnan on August 2, 2010 at 7:33 pm

  இப்படி நடந்ததா என்று யாருக்க்மே தெரியாது. மேலும் கிருஸ்துவ பள்ளிகளில் மற்ற மத கடவுள்களை இந்த அளவுக்கு யாரும் கேலி செய்ய மாட்டார்கள். வீணாக எதையாவது எழுதி வைக்க வேண்டாம். இந்த கட்டுரையின் உண்மைத்தன்மை சந்தேகத்துக்கு உரியது.

 13. R.Sridharan on August 4, 2010 at 5:14 pm

  அதை நம்ப முடியாவிட்டால் இதை நம்புங்கள்
  கொஞ்ச காலம் முன்பு எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தது இது:
  ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் சுற்றுலா அழைத்துப் போவதாகக் கூறி ஒரு பேருந்தில் மாணவர்களை அழைத்துச் சென்றனர்.
  ஆனால் அவ்வாறு செல்லாமல் வேறு ஒரு ஊருக்குச் சென்று அந்தக் குழந்தைகளிடம் கிறிஸ்தவ மதப் பிரசார நோடீசுகளைக் கொடுத்து வீடு வீடாகக் கொடுக்கச் செய்தனர்.

  திரும்பி வந்ததும் குழந்தைகள் இதைப் பெற்றோரிடம் கூறினார்
  செய்தித் தாள்களிலும் வந்தது
  இவ்வளவு கிராதகத் தனமும், மத வெறியும் உள்ளவர்கள் எதுதான் செய்ய மாட்டார்கள்

  இரா.ஸ்ரீதரன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*