முகப்பு » அரசியல், சமூகம், பொது

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

September 12, 2009
-  
அச்சிட அச்சிட

shah-alam-cow-aug28Courtesy: The Malaysian Insider

மூலம்: தருண் விஜய் (கட்டுரை : Abandoned)
தமிழில்: ஜடாயு

அவர்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள்.  வெட்டப் பட்ட பசுமாட்டின் தலையைக்  கோயில் வாசலில் எறிந்து தங்கள் மிரட்டலின் தீவிரத்தை வெளிப்படுத்தினார்கள் – “இந்தப் பகுதியில் கோயிலேயே இருக்கக் கூடாது” என்ற மிரட்டல்.  ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக்  கூட்டத்தினர் ஜும்மா நமாஸ் முடிந்தவுடன்  மதவெறி கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அவர்கள் தலைவரான ஹாஜி சொன்னார் – “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்”.

உடனடியாக அரசு கோயில் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு ஆணையிட்டது.

கோயிலை எதிர்க்கக் காரணம்?  ”மலேசியா இன்சைடர்” இதழில் செய்தியாளர் ஷாஜ்வான் முஸ்தபா கமால் எழுதுகிறார் -  “செக்‌ஷன் 23 பகுதி வாசிகளான  மலாய் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள், இந்தப் பகுதிகள்  இந்துக் கோயில் அமைவதை  அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் இங்கு ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 90% மலாய் முஸ்லிம்கள் வசிக்கும் அந்தப் பகுதியில்  இந்துக் கோயில் கட்டப் படுவது  அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் செய்யப் படும் செயல் என்றும் கோயிலில் நடக்கும் விஷயங்கள்  அவர்களது வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படுத்தும்  என்றும் அவர்கள் கூறினர்.  ’கோயிலில் இருந்து வரும் சத்தங்கள் எஙக்ள் தொழுகையைத் தொந்தரவு செய்யும்,  எங்களால்  முழுமையான, ஒழுங்கான முஸ்லிம்களாக வாழ முடியாத நிலை ஏற்படும்’ என்றும் அவர்கள் முறையிட்டனர்.”

“மலேஷியா  ட்ரூலி ஏஷியா”  (Malaysia-truly Asia) என்று தன்னைப் பற்றிப் பெருமை பீற்றிக் கொண்டு ,  பெரும்பான்மையினராக இந்துக்களைக் கொண்ட இந்திய சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்க விளம்பரம் செய்யும் நாட்டின்  லட்சணம் இது !

shah-alam-cowmarch-aug28Courtesy: The Malaysian Insider

இந்துப் பணம் வேண்டும், அதை வரவேற்போம்,  ஆனால் அவர்களது மதத்தை அவமதிப்போம்! -  இதுதான் கல்வியறிவு பெற்ற, பணம் படைத்த,  நவீன முகம் கொண்ட முஸ்லிம்-பெரும்பான்மை நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிற  இந்த நாட்டின் “ட்ரூலி ஏஷியா”  செய்தியின் சாராம்சம்.

ஆனால்  மலேசிய அரசே திட்டமிட்டு இந்துக்களை நசுக்குகிற இந்த அப்பட்டமான  அராஜகததை எதிர்த்து  உலகின்  மிகப் பெரிய இந்துப் பெரும்பான்மை தேசத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்ததோ?

டென்மார்க் முகமது நபி கார்ட்டூன்களையும்,  கனடா இளைஞர்கள் செய்யும்  மத அவதூறுகளையும் பற்றி  இந்தியாவில் அங்கலாய்ப்பவர்கள்  மலேசியாவிலும்,  மற்ற இடங்களிலும்  இந்துக்கள் மீது தொடர்ந்து நடக்கும் அடக்குமுறைகள் விஷயத்தில் மொத்தமாக மௌன விரதம் பூண்டு விடுகிறார்கள்!

இம்ரான் ஹஷ்மியின்  பச்சைப் பொய்களை  தார்மீக ஆர்வத்துடன் ஊதிப் பெருக்கும் ஊடகங்களுக்கு,  வெட்டப் பட்ட பசுமாட்டுத் தலையைக் காட்டி இந்துக்கள்  மிரட்டப் படும் உண்மைத் தகவல் ஒரு சின்ன செய்தி கூட அல்ல!  கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை,  காட்மாண்டு முதல் ஜெட்டா வரை  ஏன் எல்லா இடங்களிலும்  கொத்துக் கொத்தாக இந்துக்கள்  படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர் என்று பிரைம்டைம் அல்லாத நேரத்தில் ஒரு சின்ன உரையாடல் நடத்தக் கூட அவைகளுக்குத் தோன்றுவதில்லை.

அரசியல் சட்டத்தின் படி தன்னை இந்து  நாடாக சமீபகாலம் வரை அறிவித்திருந்த ஒரு நாடு, தனது  தேசத் தலைவரான மன்னரின் அரண்மனை முன்பு  அந்த நாட்டின் மிகப் பெரிய மசூதியைக் கட்ட அனுமதி அளித்திருந்தது;  மதமாற்றங்களையும் அனுமதித்திருந்தது.  ஆயினும் மதச்சார்பின்மை பிரகடன கோலாகலங்களுடன் அதன் வீழ்ச்சி  துல்லியமாகத் திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டது..  இப்போது நாம்  பசுபதிநாதர் ஆலயத்தின் இந்து பூசாரிகள்  வெறித்தனமாக அடித்துத் தாக்கப் படுவதையும் காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த அறுபதாண்டுகளாக,  “இந்துக்களாக” இந்துக்களின் அரசியல் சக்தியும், பெருமிதமும் தொடர்ச்சியாக வீழ்ந்து வருகின்றது.  இந்துக்களை  ’அறுவடை செய்தல்’ அமோகமாக நடந்துவருகிறது என்று ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்  தான் அதைப் பற்றி  அலசவேண்டியும் இருக்கிறது.

ஒரு பறவைப் பார்வையாக, உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் – இது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?  தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், காபூல் முதல் ராவல்பிண்டி வரை,  கராச்சி முதல் லாஹூர் வரை ஒவ்வொரு இடத்திலிருந்தும் இந்துக்கள் துரத்தப்  பட்டிருக்கிறார்கள்.  முதலில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தீர்மானித்து,   ஜின்னாவின்  நேரடித் தாக்குதல்  (direction action)  படுகொலைகளால் பெரும் பீதியடைந்திருந்த  காந்தி உள்ளிட்ட தலைவர்களால்  ஒப்புக் கொள்ளப் பட்ட  தேசப் பிரிவினையின் காரணமாக. பிரிவினைக்குப் பின்னும்  இந்துக்கள் காஷ்மீரில் மிகக் குரூரமான இன ஒழிப்புக்கு ஆளானார்கள்.  ஐந்து லட்சம் இந்துக்கள்  தங்கள் முன்னோர்களின் புராதன பூமியையும், வீடுகளையும், கோயில்களையும், சோலைகளையும், ஏன் தங்கள் உலகமாயிருந்த வாழ்க்கை முழுவதையுமே விட்டு விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

புதிதாக உருவான பாகிஸ்தானில் வாழலாம் என்று தீர்மானித்த இந்துக்கள் தினந்தோறும் அவமதிப்பைச் சகிக்க வேண்டி,  வேலைவாய்ப்புகளும் அரசியல் உரிமைகளும் முற்றிலுமாக மறுக்கப் பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறார்கள்.

bheels_pak_hindus_185_20060123Pakistani Hindu Bheel community show photos of girls who have been kidnapped and converted

அவர்களது பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், பலவந்தமாகத் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். அவர்களது கோயில்கள் இடிக்கப் படுகின்றன, பண்டிகைகள் தடை செய்யப் படுகின்றன, மயான பூமி கூட மறுக்கப் படுகிறது.  இந்து அமெரிக்க ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு  வெளியிட்டிருக்கும்  2008ம் ஆண்டிற்கான  இந்து மனித உரிமைகள்  பற்றிய அறிக்கையின் முன்னுரை கூறுகிறது – “பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் கூட, வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலேயே கொலை, வன்புணர்வு, கோயில் இடிப்புகள் என்று 270 சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பாகிஸ்தானில் பெருமளவில் இந்துக்களைக் கொத்தடிமைகளாகப் பிடித்தல், இந்துப் பெண்களைக் கடத்தி பலவந்தமாக இஸ்லாமுக்கு மதமாற்றுதல் ஆகியவை  தொடர்ந்து  அதிகரித்து வருகின்றன.  இந்துக்களின் மீதான வன்முறை கலந்த அடக்குமுறைக்காக உலக அளவில் மலேசியா  கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.  முதல்முறையாக  ரஷ்யாவும் இந்துக்களுக்கெதிரான செயல்பாடுகளுக்காக பட்டியலில் இடம் பெறுகிறது.  1947ல் பங்களாதேஷ் மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருந்த இந்துக்கள்,  இன்று 10 சதவீதத்திற்கும்  குறைவாக உள்ளனர்.  1991ல்,  2 கோடி இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து  “மறைந்து விட்டதாக” அந்த நாட்டின் சென்சஸ் சொல்லிற்று.”

அவர்கள் இப்பேர்ப் பட்ட குரூரங்களுக்கு ஆட்படுத்தப் படுவதற்கு ஒரே காரணம்  அவர்கள் இந்துக்களாக இருப்பது.  அவர்களது இந்துத் தன்மை,  அதாவது  இந்துத்துவம் (Hinduness). அது தான், அது மட்டுமே தான் ஐயா.  பன்முக வாழ்க்கையைக் கற்றுத் தரும் இந்துத்துவம்.  ஜனநாயகத்தை  சாத்தியமாக்கி, நிலைநிறுத்தும் இந்துத்துவம். கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் தனிமனித சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் தரும் இந்துத்துவம்!

article_imageஇந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இலங்கை, சவுதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், ஃபிஜித் தீவுகள், மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் (டிரினிடாட் & டொபாகோ)  ஆகிய நாடுகளில் இந்துக்கள் மீதான  அத்துமீறல்கள் பற்றிய பல விவரங்களை அந்த அறிக்கை அளிக்கிறது.   இதில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அடக்கம்.    இன அழிப்புகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள்,  படுகொலைகள், கோயில் அழிப்புக்கள்,  அரசியல்-சமூக புறக்கணிப்புக்கள்,  வாக்குரிமை பறிப்புக்கள்,  பாரபட்சமான நடத்தை மற்றும் பலவந்தமான மதமாற்றங்கள்  உள்ளிட்ட எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள  இந்து சமூகங்கள் ஆட்படுத்தப் படுகின்றன.  மிகச் சோகம் தரும் விஷயம்.

ஆனால் அதை விட சோகம் தரும் விஷயம்  இந்துக்களின் காயங்களையும், வலிகளையும் காண்பிப்பதற்குக் கூட இடம் இல்லை என்பது தான்.  இந்து-அல்லாதவராக இருந்தால்  தான் ஊடகங்களின்  விசாரிப்பையும்,  கவனிப்பையும்  பெறமுடியும் என்ற நிலை உள்ளது.

காலவெள்ளத்தின் ஓட்டத்தில் மானுட சுதந்திரத்தையும், பன்முகத் தன்மையையும் காப்பாற்றி  வரும் மத வரையறைகளைக் கடந்த பழம்பெரும் அறநெறி, தர்மவழி,  உலகெங்கும் அரசு அதிகாரங்களும், வெறுப்பியல் பிரசாகரர்களும் தொடுக்கும்  ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் மட்டுமல்ல;  அதன் காயங்கள் கூட  பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே  கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன;  இதற்கு என்ன காரணம்? அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

லட்சுமி நிவாசம் செய்யும் மிட்டல்களும்,  அம்பானிகளும்  கோடிக்கணக்கில் செல்வம் கொழிக்கும் இந்துக்கள்.  ஆயினும் அவர்கள் இந்து நோக்கத்திற்கும், நலன்களுக்கும் உதவக் கூடும் என்ற எண்ணம்  அவர்களே உட்பட யாருக்கும் தோன்றுவதில்லை. இங்கு ஒரு ஷாருக்கான் தனது மத உணர்வை நெஞ்சில் சுமக்க முடியும், ஈராக்கில் முஸ்லிம்கள் சாவது குறித்து தன் வேதனையை வெளிப்படுத்த முடியும்,  அது  பாராட்டுக்குரிய விஷயமாகிறது!  ஆனால் ஒரு சச்சினோ, அமிதாப் பச்சனோ  வடகிழக்கு இந்தியாவிலோ அல்லது வேறெங்கோ  இந்துக்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து ஆதங்கமும் வருத்தமும் தெரிவித்து கேட்டிருக்கிறீர்களா?  அது இங்கே நிகழக் கூடுமா?  எப்படி  நிகழும்?  தங்களது  மதச்சார்பின்மைக்கு  பங்கம் வரும் என்றல்லவா அவர்கள் முதலில் யோசிப்பார்கள்!

ஆனால் அது எப்படி என்று தான் புரியவில்லை.  மதச்சார்பின்பைக்கு எப்போது பங்கம் வரும்? ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினரைத் தூண்டிவிடும்போது. ஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழும் தர்மத்தை, அதை உயிராகக் கொண்டு அமைந்த விலைமதிப்பற்ற உங்களது சொந்த வாழ்க்கை நெறியை  முன்நிறுத்துவதும், அதைப் பாதுகாப்பதும்  பெருமைக்குரிய விஷயம் அல்லவா? அது எப்போது வெட்கப் படும் விஷயம் ஆனது?

இந்து சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவர்களே  இந்து வாழ்வுரிமையையும், நலன்களையும் கண்டுகொள்ளாமல் கைவிடுவது  என்பது  மிக மோசமான விஷயம்.  எந்த அளவுக்கு என்றால், இந்துக்களின் வலிகளையும், காயங்களையும்  முன்னிறுத்தி அரசியல் ரீதியாக எடுத்துச் செல்லும் அமைப்புகளின், தலைவர்களின் மனநிலையையும் இது பாதிக்கிறது.  இந்த “நவீன மதச்சார்பின்மை” தரும் அழுத்தங்கள் அவர்களது  முடிவுகளிலும், நிலைப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.  மேலும்,  பொதுத் தளத்தில் சில செயல்பாடுகள் காரணமாக, இந்த பிரசினைகளை மக்களிடம் எடுத்துச் சென்று பொதுஜன ஆதரவை முடுக்கித் திரட்டுவதற்கான தார்மீக உரிமையையும்,  நம்பகத் தனமையையும் கூட அந்த அரசியல் தலைமைகள் இழந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தெற்காசியா முழுவதும்,  மக்கள் தொகையிலும், அரசியல் அதிகாரத்திலும் இந்துக்கள் தொடர்ந்து தேய்ந்து வருவது பற்றிய கவலை  யாருக்கும் இல்லை; அதைப் பற்றிப் பேசினால் உடனே செக்யுலரிச சாட்டையை எடுத்து விளாசுகிறார்கள்.  அரசியல் தலைவர்கள்  இந்து உரிமைகளையும், நலன்களையும் வலியுறுத்தும் பொறுப்பை ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்களோ?   ஒரு அரசியல் கட்சி  இந்து அடையாளத்தை முன்னிறுத்துவது  என்பது  போலி மதச்சார்பின்மையில் ஊறிய சமூக சக்திகளும் மற்றும் அரசு அதிகாரமும்  அதைத் தீண்டத் தகாததாகக் கருத அழைப்பிதழ் விடுப்பதாகும் என்ற ஒரு கருத்தாக்கத்தை இவர்களே உருவாக்கி உலாவ விடுகிறார்கள்!

மலேசிய இந்துக்களின் இடர்ப்பாடுகள் இந்து அரசியல் அதிகார உரிமைகள் உலகெங்கும் அழிந்து வருவதற்கு ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.  சோழ, பாண்டிய, ஸ்ரீவிஜய, விஜயநகர பேரரசுகளின் மகோன்னதத்திற்கும், சிவாஜியின் இந்து ராஜ்யத்திற்கும் பின்வரும் காலங்களில்,  மலேசியாவிலும், நேபாளத்திலும் இந்துக்கள் அடித்து  நொறுக்கப் படுவதையும், அவர்களது புனித நூல்கள் ஜெட்டா விமான நிலையத்தில் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடப் படுவதையும் தான் நாம் காண வேண்டுமா?

இப்போது,  இந்து சமூகத்தின் அரசியல் சாராத சக்தி மையங்களும் திரண்டெழ வேண்டும்.  மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிக்கும் பழம்பெரும்  தர்ம நெறியைக் கட்டிக் காப்பதற்காக,  உண்மையான  இந்து அரசியல் சக்திகள் மீண்டும் விழித்தெழ அவை உதவ வேண்டும். அதுவே இப்போது செய்யவேண்டிய பணியாகும்.

tarun_vijayபிரபல பத்திரிகையாளரும், கட்டுரையாசிரியருமான  தருண் விஜய்,  உலகெங்கும் உள்ள இந்துக்களின்  சமூக அரசியல் பிரசினைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். புதுதில்லியில் இயங்கும்  “டாக்டர் சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின்”  இயக்குனரும் ஆவார்.

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

 

90 மறுமொழிகள் கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

  1. g ranganathan on September 12, 2009 at 8:15 am

    இந்துக்கள் தமது சொந்த நாட்டிலேயே கைவிடப்பட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. திரு ராம கோபாலன், அர்ஜூன் சம்பத் போன்றோர்(தமிழகத்தைப் பொறுத்த வரையில்)குரல் கொடுப்பது ஓரளவு ஆறுதல் தருகிறது. ஆனாலும் ஆட்சி அதிகாரம் “பகுத்தறிவாளர்” கையில் அல்லவோ உள்ளது. ரம்ஜான் கஞ்சி குடிப்போரும், கிறிஸ்துமஸ் வாழ்த்து “மட்டும்” தெரிவிக்கும் கழ(ல)கம் மாநிலத்தை ஆள்கிறது. மதமாற்ற மோசடியை ஏசு தான் வந்து தடுக்கவேண்டும்.”அமைதியை போதிக்கும் இஸ்லாம்” வன்முறை முல்லாக்களாலும் பின் லேடன்களாலும் நடத்தப்படுகிறது. எங்கள் அலுவலகத்தில் அகில இந்திய அளவில் பயிற்சி வகுப்புகள் நடை பெறுவது வழக்கம். 1995 அல்லது 96 என்று ஞாபகம். சாதாரணமாக வகுப்புகள் 7 நாட்கள் அல்லது 15 நாட்கள் வரை நடைபெறும். அந்த வருடம் 40 நாட்கள் ஒரு வகுப்பு நடைப்பெற்றது.
    ஹிமாச்சலபிரதேசத்திலிருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் வந்திருந்தனர். எனது அனுபவத்தில் அவர்களைப்போல் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டவர்கள் மிகச்சிலரே. ஒரு குறிப்பிடவேண்டிய விஷயம் அவர்கள் இருவரும் காஷ்மீரிகள். பயிற்சியின் நிறைவு நாளுக்கு முன்னதாக ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பாடங்களை நடத்திய அதிகாரி சுவராஸ்யமானவர்.அவர் சகோதரத்துவம் பற்றியும் தேசத்தின் நிலைமைப்பற்றியும் ச்ற்று நேரம் பேசினார். மதச்சார்பின்மை பற்றி புகழ்ந்துரைத்தார். ஹிமாசலப்ரதேசத்துக்காரர்(காஷ்மீரி) ஆவேசமாய் எழுந்தார். ஐயா நிறுத்துங்கள்! உஙகள் ‘செக்குலரிசம்” போற்றிப் புகழ் மாலையை. இருபத்தைந்து வருட பணி மூப்பினைக்கைவிட்டு உயிர் பிழைக்க ஹிமாசலப்ரதேசத்துக்கு ஓடி வந்திருக்கிறேன். எனது தாய் மண்ணில் எனது சொந்த பந்தங்களெல்லாம் சுட்டுப்பொசுக்கப்பட்டனர். நாங்கள் கண்ட காட்சிகள் இன்னும் எங்கள் உறக்கத்தைப் ப்றிக்கின்றன என்று கண்ணீர் பெருக்கி நின்றார். தேசத்தின் கடைக்கோடியில் நின்று அமைதியான ஓரு மாநிலத்தில் இருந்துகொண்டு பேசுவது சுலபம், முஸ்லிம் தீவிரவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்தால்தான் புரியும் என்றார். அவர் விவரித்த சில நிகழ்வுகள் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. அந்த தீவிர வாதத்தின் பயங்கர முகம் 1998ல் கோவையில் தனது தீ நாக்குகளை சுழற்றியது அதன் விளைவுகளும் நாம் அறிந்ததே.

  2. அஞ்ஜனாசுதன் on September 12, 2009 at 10:27 am

    //ஐயா நிறுத்துங்கள்! உஙகள் ‘செக்குலரிசம்” போற்றிப் புகழ் மாலையை. இருபத்தைந்து வருட பணி மூப்பினைக்கைவிட்டு உயிர் பிழைக்க ஹிமாசலப்ரதேசத்துக்கு ஓடி வந்திருக்கிறேன். எனது தாய் மண்ணில் எனது சொந்த பந்தங்களெல்லாம் சுட்டுப்பொசுக்கப்பட்டனர். நாங்கள் கண்ட காட்சிகள் இன்னும் எங்கள் உறக்கத்தைப் ப்றிக்கின்றன என்று கண்ணீர் பெருக்கி நின்றார். தேசத்தின் கடைக்கோடியில் நின்று அமைதியான ஓரு மாநிலத்தில் இருந்துகொண்டு பேசுவது சுலபம், முஸ்லிம் தீவிரவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்தால்தான் புரியும் என்றார்.//

    சத்தியமான வார்த்தை. காஷ்மீர் பண்டிட்கள் அனுபவித்த கொடுமைகள் பயங்கரமானவை. குறிப்பாக அச்சமூகத்துப் பெண்கள். அவர்கள் சொல்லிக் கேட்டால் நம் கண்களில் குறுதி பெருகும். என் சகோதரியின் அலுவலகத்தில் வேலை செய்யும் அவரின் தோழி காஷ்மீர் பண்டிட். இஸ்லாமியப் பயங்கரவாதத்தினால் புலம் பெயர்ந்த குடும்பங்களுள் அவரது குடும்பமும் ஒன்று. அவர் மூலம் கேட்ட சம்பவங்கள் பல நாட்கள் என் உறக்கத்தைப் பறித்துள்ளன……இன்றும் கூட…..

    சொந்த மண், சொந்த நிலம், சொந்த வீடு, சொந்த ஆலயங்கள்….என்று அனைத்து சொந்தங்களையும் விட்டுவிட்டு தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஊர் ஊராகச் சென்று வாழும் நம் காஷ்மீர சகோதர சகோதரிகள் நிலைமை…..நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் கொதிக்கின்றது.

    காஷ்மீரத்தில் ஆரம்பித்த இஸ்லாமியப் பயங்கரவாதம் இன்று கன்யாகுமரி வரைப் படர்ந்துள்ளது. வருடத்திற்கு ஒருநாள் நம் அன்புத் தெய்வம் பிள்ளையாரின் விக்ரஹங்களைக் கூட நம் சொந்த பூமியில் ஊர்வலம் எடுத்துச் செல்ல முடியவில்லை. பெரும்பான்மையான இந்துக்களாகிய நாம் நம் சொந்த தேசத்திலேயெ இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறோம். இஸ்லாமிய கிறுத்துவ ஓட்டு வங்கிகளைக் கணக்கிட்டு, அவர்களுக்குக் காவடி தூக்கி சாமரம் வீசி, நம்மைக் காலில் போட்டு மிதிக்கும், மானம் கெட்ட அரசியல் கட்சிகள்.

    என்ன கொடுமை இது? என்று தீர்வு இதற்கு?

    மதச்சார்பின்மையாம்….மதச்சார்பின்மை…..மண்ணாங்கட்டி.

  3. B.R.ஹரன் on September 12, 2009 at 10:37 am

    தருண் விஜையின் அருமையான கட்டுரைக்கு நல்லமுறையில் தமிழாக்கம் செய்துள்ள ஜடாயுவிற்குப் பாராட்டுகள்.

    வெளிநாடுகள் மட்டுமல்லாமல் நம் சொந்த இந்தியாவிலேயே கூட நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறோம் என்பதை என்று இந்துக்கள் உணர்கிறார்களோ, அன்று தான் நற்பொழுது விடியும். நம் காலுக்கடியில் நம் கண் முன்பே நம் பூமியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்து பூமி என்கிற நிலப்பரப்பு மிக வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட….. உறக்கத்தில் இருக்கிறோம்…..

    விழித்தால் தான் விடியல்….அதற்கு மீண்டும் ஒரு விவேகானந்தன் தேவை என்று எதிர்பார்ர்கத் தேவையில்லை. சென்ற விவேகானந்தனை நினைத்துப் பார்த்தலே போதும்.

  4. Tha.Ramasamy on September 12, 2009 at 10:57 am

    நல்ல கட்டுரை. இனிமேல் இது மாதிரி மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது ஆசிரியர் பெயராக ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடுங்கள். உள்ளே உங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை “தமிழில்: ஜடாயு” என்று போட்டுக்கொள்ளலாம். ஆசிரியர் பெயரையும் ஜடாயு என்று போடுவது is highly misleading.

  5. ram on September 12, 2009 at 11:14 am

    ///Tha.Ramasamy
    12 September 2009 at 10:57 am
    நல்ல கட்டுரை. இனிமேல் இது மாதிரி மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது ஆசிரியர் பெயராக ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடுங்கள். உள்ளே உங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை “தமிழில்: ஜடாயு” என்று போட்டுக்கொள்ளலாம். ஆசிரியர் பெயரையும் ஜடாயு என்று போடுவது is highly misleading.////

    நண்பரே அதுதான் விளக்கமாக போட்டுவிட்டார்களே. இதற்கு மேல் என்ன வேண்டும்.

    ////மூலம்: தருண் விஜய் (கட்டுரை : Abandoned)
    தமிழில்: ஜடாயு////

  6. glady on September 12, 2009 at 11:14 am

    அஞ்ஜனாசுதன்:
    // வருடத்திற்கு ஒருநாள் நம் அன்புத் தெய்வம் பிள்ளையாரின் விக்ரஹங்களைக் கூட நம் சொந்த பூமியில் ஊர்வலம் எடுத்துச் செல்ல முடியவில்லை. //

    நம்முடைய முன்னோர்கள் யாரும் இதுபோல ஊர்வலம் எடுத்துச் சென்று மதப் பதட்டத்தை உண்டாக்கினரா?

    உயிருள்ள ராஜாக்கள் மக்களுக்கு தரிசனம் தர நகர்வலம் வருவர்;
    நவீன காலத்தில் அரசியல்வாதிகள் ஊர்வலம் போகிறார்கள்;

    தெய்வம் என்பது வள்ளலார் சொன்னதுபோல உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மையானால் அருட்பெருஞ்சோதி வடிவானால்
    தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியமென்ன‌?

    அதனை பிசைந்து, மிதித்து, உருவாக்கி‍ -அசைந்து விழுந்து உடைந்துவிடாமல் கட்டிவைத்து பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் மின்சாரக் கம்பங்களில் கொக்கியடித்து மின்சாரத்தைத் திருடி (மன்னிக்கவும்) விளக்கு அலங்காரங்கள் செய்து……….இதெல்லாம் செய்யச் சொன்னது அந்த தெய்வமா?

    தெய்வம் நம்மிடம் விரும்புவது அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறையினைக் கடைப்பதைத் தானே தவிர அவரை விழுந்து விழுந்து தொழுவதையல்ல‌;

    மாணவன் தனது ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவது தேவையானது தான்; அதன் நோக்கம் ஆசிரியர் மூலம் கற்பிக்கப்படுவதை கற்றுத் தேருவதுதானே; தினமும் ஆசிரியரை விழுந்து வணங்கி,ஊர்வலம் எடுத்துச் செல்லுவதால் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியுமா?

  7. ச.திருமலை on September 12, 2009 at 12:03 pm

    ஜடாயு

    அருமையான உணர்ச்சிபூர்வமான உண்மையான மொழி பெயர்ப்பு. தருண் விஜய் அவர்களுக்கும் உங்களுக்கும் தமிழ் இந்துவிற்கும் பாதிக்கப் பட்டு வரும் ஒவ்வொரு இந்துவும் கடமைப் பட்டுள்ளோம். நாம் பிற மதங்களை வெறுப்பதில்லை. பிற மதத்தினரைப் பாவிகளே என்று விளித்து அழைப்பதில்லை, மதமாற்றம் செய்வதில்லை, எல்லாக் கடவுள்களும் எல்லா மார்க்கங்களும் ஒரே பாதையில்தான் நம்மைக் கொண்டு செல்கின்றன என்று பரந்த மனப்பான்மை கொண்டுள்ளோம், இருந்த பொழுதிலும் நம் சொந்த தேசம் முதல் மலேசியா போன்ற தேசங்கள் வரை அழிக்கப் பட்டும் கொல்லப் பட்டும் அவமானப் படுத்தப் பட்டும் வருகிறோம், நமக்காகக் குரல் எழுப்ப நம் மதத்தினர்களே வெட்கப் படுகிறார்கள் அதைக் குற்றமாக எண்ணுகிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது இப்படி அழிவதுதான் நமக்கு விதிக்கப் பட்டிருக்கும் விதியோ என்று எண்ணத் தோன்றுகிறது. காஷ்மீர் பண்டிட்களுக்காக நாம் கண்ணீர் வடிக்கிறோம் ஆனால் அதே காஷ்மீரப் பண்டிட்கள் செய்வது என்ன அவர்களை அழித்தவர்களுக்குத் துணை போகும் காங்கிரசை அல்லவா ஆதரிக்கிறார்கள்? ஜம்முவில் இத்தனை நடந்த பின்னும் மீண்டும் காங்கிரசுக்கல்லவா ஓட்டுப் போடுகிறார்கள். இப்படி இந்தியா முழுவதுமே தங்களது ரத்தம் குடிக்கும் காட்டேறிகளுக்கு அல்லவா ஆதரவு தெரிவிக்கிறார்கள். இப்படி நமது அழிவிற்கான காரணம் கூடத் தெரியாமல் இருக்கும் இவர்களுக்குக் கடவுள் கூட வழி காண்பிக்கப் போவதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிப்படையாக இந்து அழிப்பில் ஈடுபட்டுள்ள கருணாநிதிக்களும், ராஜசேகர ரெட்டிக்களும், சோனியாக்களும் மட்டுமே அதே பாதிக்கப் படும் இந்துக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார்கள். நம் அழிவின் காரணத்தை உணர்ந்து கொள்ளக் கூட மறுக்கும் இந்துக்களுக்கு வேறு கதிமோட்சமே கிடையாது என்பது மட்டும் உறுதி. விழிப்புணர்வு வராத வரை இந்த கொடுமைகளுக்கு முடிவு கிடையாது. ஏதோ ஒரு ஓரத்தில் இணையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் தமிழ் இந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். நம்மால் முடிந்ததைச் செய்வோம்

    அன்புடன்
    ச.திருமலை

  8. ஆசிரியர் குழு on September 12, 2009 at 12:05 pm

    // Tha.Ramasamy
    12 September 2009 at 10:57 am edit
    நல்ல கட்டுரை. இனிமேல் இது மாதிரி மொழிபெயர்ப்புகளை வெளியிடும்போது ஆசிரியர் பெயராக ஒரிஜினலாக எழுதியவர் பெயரைப் போடுங்கள். உள்ளே உங்கள் மொழிபெயர்ப்பாளர் பெயரை “தமிழில்: ஜடாயு” என்று போட்டுக்கொள்ளலாம். ஆசிரியர் பெயரையும் ஜடாயு என்று போடுவது is highly misleading. //

    மொழிபெயர்க்கப் படும் ஒவ்வொரு எழுத்தாளர் பெயரிலும் id உருவாக்கி நிர்வகிப்பது நடைமுறையில் சாத்தியம் அல்ல. பிறகு அரவிந்தர், சீதாராம் கோயல், கொய்ன்ராட் எல்ஸ்ட் என்று இவர்கள் பெயரில் எல்லாம் கூட id உருவாக்க வேண்டும் :) )

    மொழியாக்கம் என்றால், கட்டுரைச் சுருக்கத்திலும் (excerpt) அதன் முதல் வரியிலும் மூலம் எது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறோம்.

    இதில் misleading எதுவும் இல்லை.

  9. ஜடாயு on September 12, 2009 at 12:29 pm

    // தெய்வம் என்பது வள்ளலார் சொன்னதுபோல உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மையானால் அருட்பெருஞ்சோதி வடிவானால்
    தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியமென்ன‌? //

    glady, இது ஒரு குறுக்கல் வாதம். இந்துக்கள் தங்கள் உரிமைகள் பற்றி பேசினால் உடனே இப்படி நிறைய தத்துவ உபதேசங்கள் அவர்களுக்கு வந்து விழும். வழக்கமாக நடப்பது தான்.

    சுதந்திர வீரர் திலகர் நம் சமீபத்திய முன்னோர் தானே? அவர் சமூக வினாயகர் விழா கொண்டாடி வழிகாட்டியிருக்கிறார்.

    கேள்வி பிள்ளையார் ஊர்வலம் சரியா, தவறா என்பதோ பழைய முன்னோர்கள் அதை செய்தார்களா என்பதோ அல்ல. இதை இப்படியே நீட்டிக் கொண்டு போனால் கோவில் அவசியமா? வழிபாடு அவசியமா? தெய்வம் அதைச் செய்யச் சொன்னதா என்றெல்லாம் அபத்தக் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்.

    வள்ளலார் மேற்கோள் கோயிலும், விழாவும் கூடாது சொல்லவில்லை. வள்ளலாருக்கு 15 நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்து அவரால் குரு என்று போற்றப் பட்ட திருஞானசம்பந்தர் மயிலையில் பன்னிரண்டு மாதங்களும் நடந்த திருவிழாக்களையும், கோலாகலங்களையும் தமது தேவாரத்தில் பாடியுள்ளார். அதற்கும் சில நூற்றாண்டுகள் முன்பு சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் இந்துத் திருவிழாக்கள் பற்றிக் கூறீயுள்ளன. அவ்வளவு தொன்மையான பாரம்பரியம் அது.

    கேள்வி அடிப்படை மத உரிமைகள், சமூக உரிமைகள் பற்றியது. இந்த சுதந்திர தேசத்தில் இந்துக்கள் தங்கள் விழா ஒன்றைப் பொதுவில் கொண்டாடும்போது பாதுகாப்பு அபாயங்கள், இடர்ப்பாடுகள், தாக்குதல்கள் பிற மதத்தவரிடம் இருந்து வருகிறது. அது தான் பிரசினை. திரிபுரா போன்ற மாநிலங்களில் இந்துக்கள் தங்கள் பண்டிகளைக் கொண்டாடவே முடியாது என்ற நிலை உள்ளது.

    அது தான் மையமான பிரசினை. பிள்ளையார் ஊர்வலம் பற்றிய ஆன்மிக, தத்துவ விவாதம் அல்ல.

    தயவு செய்து திசைதிருப்பாதீர்கள்.

  10. joseph on September 12, 2009 at 12:52 pm

    இது போன்ற மிரட்டல்கள் (பசுவின் தலையை கொய்து கொண்டு செல்வது) தவறு தான், அதேபோல் காஷ்மீர இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

  11. திருச்சிக் கார‌ன் on September 12, 2009 at 1:30 pm

    I appricaite the author.

    The author has eloborately explained the PROBLEMS.

    Fine. What is the SOLUTION?

    He spared Just two lines to write about as what could be the remedy / SOLUTION!

    இதற்க்கான‌ தீர்வு குறித்து ஆராய்வ‌து அவ‌சிய‌ம்.

    இந்தியா எந்த‌ அள‌வுக்கு வ‌லிமையும், செல்வ‌மும் உடைய‌ நாடாக‌ இருக்கிற‌தோ, அந்த‌ அளவுக்கு இந்துக்க‌ளுக்கு பாதுகாப்பும், அமைதியும் கிடைக்கும். உல‌கில் உள்ள எல்லா ம‌க்க‌ளுக்கும் அமைதியும் பாதுகாப்பும் கிடைக்கும்.

    என‌வே இந்தியாவை வ‌லிமையும், வ‌ளமும் உள்ள நாடாக‌ உருவாகக்க‌ப் பாடுப‌டுவோம்.

    (ஈழத் த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌லைப் போக்க‌ நாம் வேண்டிய‌ ந‌ட‌வ‌டிக்கை எதுவும் எடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் முள் கம்பிக்கு ந‌டுவே அடை ப‌ட்டு உள்ளன‌ர். மிருக‌மாய் பிற‌ந்திருந்தால் கூட‌ இவ்வ‌ள‌வு துன்ப‌ம் இருந்திருக்காது.

    வ‌லிமையும், வ‌ளமும் உள்ள நாடாக‌ இந்தியா உருவாகும் போது, செய‌ல் பாட்டில் காந்தியின், அசோக‌ரின், அரிச் ச‌ந்திர‌னின், இராம‌ரின் கொள்கைக‌ளை விட்டு விட‌க் கூடாது!)

    நாம் சுய‌ன‌ல‌ வாதியாக‌ இருக்கும் வ‌ரைக்கும், க‌ள்ள‌ வ‌ழியிலே செல்வ‌ம் குவிப்ப‌தை பொறுத்துக் கொள்ளும் வ‌ரைக்கும் இந்தியாவின் முன்னேற்ற‌ம் த‌டை ப‌ட‌வே செல்லும்.

    இந்தியாவில் உள்ள மக்க‌ள் அனைவ‌ரும் ந‌ல்ல‌ க‌ல்வி பெற்று, எல்லொரும் உழைக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தினால் இந்தியா முன்னேறும். உழைத்து பிழைக்க‌ வேண்டும் என்ற‌ ம‌ன‌ நிலையை ம‌க்க‌ளிட‌ம் உருவாக்க‌ வேண்டும். எல்லொரும் ப‌ண‌த்தை முத‌லீடு செய்து விட்டு, அது ப‌ல‌ ம‌ட‌ங்காக‌த் திரும்பி வ‌ரும் என்று நினைத்தால் இந்தியா முன்னேற‌ முடியாது.

    புதிய‌ இந்தியா விவாசியிக‌ளிட‌ம் இருந்து, கால‌ணி சீர‌மைப்புத் தொழிலாளிக‌ளிட‌ம் இருந்து, துப்புர‌வுத் தொழிலாளிக‌ளிட‌ம் இருந்து, மென் பொருள் தொழிலாளிக‌ளிட‌ம் இருந்து….. ந‌ம் எல்லொரிட‌ம் இருந்தும் உருவாக‌ வேண்டும்.

    Swami Vivekaanathaji had given a clear blue print for this- but still not accomplished!

    இத‌ற்க்கு ச‌ரியான‌ தீர்வு என்ன‌ வென்றால் உல‌கில் உள்ள எல்லா ம‌க்க‌ளின் ம‌ன‌தில் உள்ள‌ காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை நீக்கி அவ‌ர்க‌ளை நாகரீக‌ ம‌னித‌ர் ஆக்குவ‌துதான்.

    அடிப்ப‌டையில் இந்து என்ப‌வ‌ன் க‌ருணை வ‌டிவான‌வ‌ன். உல‌கில் யார் தாக்க‌ப் ப‌ட்டாலும், யாருக்கு அநியாய‌ம் இழைக்க‌ப் ப‌ட்டாலும் ம‌ன‌ம் வ‌ருந்துப‌வ‌ன்.

  12. அஞ்ஜனாசுதன் on September 12, 2009 at 1:43 pm

    // நம்முடைய முன்னோர்கள் யாரும் இதுபோல ஊர்வலம் எடுத்துச் சென்று மதப் பதட்டத்தை உண்டாக்கினரா? //

    அடடே! எவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி! மண்ணில் பிள்ளையார் செய்து வழிபடுவதும், பூஜைகள் முடிந்த பின்னர் அந்த விக்ரஹத்தை ஏதாவது நீர் நிலையில் கொண்டு கரைப்பதும் பழங்காலம் முதல் தொன்று தொட்டு வரும் இந்து ஆன்மீகப் பாரம்பரியம். அவரவர்கள் இல்லத்திலிருந்தும், ஆலயத்திலிருந்தும் செய்து வந்தது, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக நம் ஒற்றுமையையும் சக்தியையும் காண்பிக்குமாறு ஊர் கூடி கொண்டாடும் விழாவாக திலகர் அவர்களால் மாற்றப்பட்டு இன்று வரைக் கடப்பிடிக்கப் பட்டு வருகிறது. ஹரன் அவர்கள் பிள்ளையார் தேசத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா என்று எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.

    நாங்கள் எங்கள் தேசத்தில் எங்கள் தெய்வத்தை எங்கள் வழிபாட்டு முறையில் பூஜித்து பக்தி செலுத்துவது மதப் பதட்டத்தை உண்டாக்குவதா? என்ன ஒரு ஆணவம், அகம்பாவம், உமது கேள்வியில்? யார் கொடுத்தது இந்த திமிர்? உங்களது ஓட்டுக்களைப் பிச்சை ஏந்தும் மானம் கெட்ட அரசியல் கட்சிகள் தானே? நாங்கள் எங்கள் தெய்வங்களை வணங்குவது உங்களுக்கு ஏன் பதட்டத்தை உண்டாக்குகிறது?

    // அதனை பிசைந்து, மிதித்து, உருவாக்கி‍ -அசைந்து விழுந்து உடைந்துவிடாமல் கட்டிவைத்து பிடித்துக்கொண்டு அரசாங்கத்தின் மின்சாரக் கம்பங்களில் கொக்கியடித்து மின்சாரத்தைத் திருடி (மன்னிக்கவும்) விளக்கு அலங்காரங்கள் செய்து……….இதெல்லாம் செய்யச் சொன்னது அந்த தெய்வமா?//

    இது அடுத்த புத்திசாலித்தனமான கேள்வி. விக்ரஹங்கள் வடிப்பதும், அவற்றிற்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்வதும் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்மீகக் கலாசாரம். ஆகம விதிகளிலும், வழிபாட்டு முறைகளிலும் இவைகள் சொல்லப் பட்டுள்ளன. உற்சவங்கள் என்பதே அது தான்.
    அந்தக் கால அரசர்கள் மாபெரும் ஆலயம் எழுப்பினார்கள் என்றால், ஆண்டவன் சொல்லியா எழுப்பினார்கள் என்றா கேட்பது? தங்கள் பக்தியின் மகத்துவத்தை வெளிப்படுத்தினார்கள். ஆலயங்கள் கட்டுவதும், அவற்றுக்குப் பொன்கூரை வேய்வதும்….அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்துவதும், திருவிழாக்கள் எடுப்பதும், நாட்டில் மக்கள் பக்தியுடன் நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்காகவும் தான். ஆலயங்கள் சார்ந்த தொழில்களும் வளரவேண்டும், தொழிலாளர்களும் வளர வேண்டும் என்பவையெல்லாம் கூட காரணங்கள் தான்.

    ஊர் கூடி விழா எடுக்கும்போது மின்விளக்குகளால் அலங்காரம் செய்வதில் குற்றமில்லை. திருடப் படுகிறதா இல்லையா என்பதை அரசு இயந்திரங்கள் கவனித்துத் தண்டிக்கும்.

    அது சரி….வேளாங்கன்னி செய்யச் சொல்லியா தேர் பவனி எடுத்துச் செல்கிறீர்கள்? இங்கே பெசண்ட் நகர் சர்ச்சு வந்து பாருங்கள்….மின்சாரம் திருடுவது மட்டுமல்லாமல் தேர் செல்வதற்காக சாலையில் உள்ள நிழல் தரும் மரங்கள் வெட்டப்படுவதும் தெரியும்.

    //தெய்வம் என்பது வள்ளலார் சொன்னதுபோல உள்ளத்தில் உறைந்திருப்பது உண்மையானால் அருட்பெருஞ்சோதி வடிவானால் தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியமென்ன‌?//

    இதோ..அடுத்த புத்திசாலித்தனமான கேள்வி. ஜோதி மயமான இறைவனை எடுத்தவுடனேயே அடைந்து விட முடியாது. நம் மனதில் உள்ள அழுக்குகள் மறைய வேண்டும். அதற்கு பக்தி செலுத்துதல் முக்கியம். ஆலயம் செல்வது, விக்ரஹ ஆராதனை செய்வது, பூஜைகள் செய்வது, நாம சங்கீர்த்தனம் செய்வது பொன்ற பல முறைகளில் மனத்தை சுத்தப் படுத்தி அதன் பிறகு த்யானம், யோகம் முதலியவை மூலம் ஜோதிமயமான இறைவனை நம்முள் தரிசனம் செய்ய இயலும்.

    வள்ளலார் காண்பித்தது இந்து மதத்தில் உள்ள இறைவனைத் தரிசிக்கும் பல முறைகளில் ஒன்று. அவ்வளவே.

    //தெய்வம் நம்மிடம் விரும்புவது அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை முறையினைக் கடைப்பதைத் தானே தவிர அவரை விழுந்து விழுந்து தொழுவதையல்ல‌//

    அடா…அடா….அடா….என்னே தங்கள் புத்திசாலித்தனம்! தெய்வத்தைத் தொழுவது தெய்வத்திற்காக அல்ல. தெய்வத்தைத் தொழுவது, தெய்வம் நமக்கு அளித்த வாழ்கைக்கு நன்றி செலுத்துவதற்காகவும், நம் வாழ்க்கையைப் பண் படுத்துவதற்காகவும், நம் மனதில் தீய எண்ணங்கள் குடிபுகாமல் இருப்பதற்காகவும், தேசம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்….என்று பல விஷயங்கள் இருக்கின்றன.

    அது சரி….நீங்கள் ஏன் சர்ச்சுகளில் தொழுகை நடத்துகிறீர்கள்?

    //மாணவன் தனது ஆசிரியருக்கு மரியாதை செலுத்துவது தேவையானது தான்; அதன் நோக்கம் ஆசிரியர் மூலம் கற்பிக்கப்படுவதை கற்றுத் தேருவதுதானே; தினமும் ஆசிரியரை விழுந்து வணங்கி,ஊர்வலம் எடுத்துச் செல்லுவதால் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியுமா?//

    புல்லரிக்கின்றது போங்கள், உங்கள் புத்திசாலித்தனம்! எங்கும் யாரும் ஆசிரியரை ஊர்வலம் எடுத்துப் போவதில்லை. கல்விச் செல்வம் தரும் ஆசிரியரைத் தினமும் வணங்குவதில் என்ன தவறு? இந்து கலசாரத்தில், தெய்வத்திற்கு முந்தைய ஸ்தானம் ஆசிரியருக்கு (குருவிற்கு) கொடுக்கப் பட்டிருக்கிறது. தாய், தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் ஆசிரியர். அதற்குப் பின்னர் தான் நாலாவது ஸ்தானத்தில் தெய்வம். ஆசிரியரை வணங்குவது என்பது பண்பாடு. தேர்ச்சி பெறுவது என்பது திறமையைப் பொருத்தது. இரண்டிற்கும் முடிச்சு போடாதீர்கள்.

  13. glady on September 12, 2009 at 2:02 pm

    அன்பு நண்பர் ஜடாயு அவர்களுக்கு,
    நான் முன்னோர் எனக் குறிப்பிட்டது ஆதி சங்கரர் போன்ற பெரியவர்களை.., மற்றும் திருவிழா பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டு வந்தது;

    திருவிழாக்கள் நடத்தப்பட்ட நோக்கம் செல்வம் ஒரு இடத்தில் குவியாமல் பரவலாக்கப்படுவதற்காகவே என சொல்வார்கள்;

    ஆனாலும் தற்கால நடைமுறைகளின்படி அவை நடத்தப்பட்டதா? பக்தி இரண்டாம் பட்சமாகி நீயா,நானா என்ற மனப்பான்மைதானே மேலோங்கியுள்ளது;

    சமூகரீதியிலான பதட்டங்கள் ஒருபுறமிருக்க, மாற்று இனத்தவரின் வழிபாட்டுத் தலங்களை தாக்கிய துணிகரத்தினை முதன்முதலில் அரங்கேற்றியது யார்?

    இறுதியாக பிள்ளையாரே இந்துக்களின் ஏகக் கடவுள் என ஏற்றுக் கொண்டாலும் அவர் பிறப்பிடம் எது?

    எங்கிருந்து அல்லது யாருடன் இங்கு வந்தார் என்ற ஒரு வரலாறு இருக்குமல்லவா?
    அவருக்கு ஆனைமுகம் வந்த வரலாறு என்ன‌?
    சாதாரண மனிதர்களைப் போல ஆசாபாசங்களும் பிள்ளைப் பேறும் கணவன் மனைவி சண்டையும் அண்ணன் தம்பி சண்டையும் தெய்வங்களுக்குள் உண்டா?
    குடும்பப் பிரச்சினையில் “தலை வாங்கப்பட்டவரை” எப்படி தெய்வம் என ஏற்பது?
    அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?
    அவற்றைச் சொன்னால் எல்லோரும் அவரை வழிபட ஏதுவாயிருக்கும்..!

  14. glady on September 12, 2009 at 2:09 pm

    இந்த விஞ்ஞான உலகில் “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற ஒன்று பன்மடங்காகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பது, “பாபர் மசூதி” இடிப்புக்குப் பிறகு தான் எனும் கருத்தினை யாராவது மறுக்கமுடியுமா?

  15. Edwin on September 12, 2009 at 4:30 pm

    after babri demolition oly indian islam terrorism spreaded all over india also wat ever article u write y u comment about christianity just for the name of convertion hindu terrorist killed lot of christian preachers saudhi is not republic country they dont allow any other religious books they tear bible throwing cross for the sake of money our people going there so dont blame them .but holding culled animals head in hand to threaten people also nonsense

  16. திருச்சிக் கார‌ன் on September 12, 2009 at 5:25 pm

    //அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?//

    பாச‌த்துக்குரிய‌ அருமை அண்ணான் கிளாடியார் அவ‌ர்க‌ளே,

    இயேசுவின் பெயரை வைத்தே இந்த உலகிலே- முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையிலான மக்களைக் கொன்று குவித்து விட்டீர்கள்- சிலுவைப் போர்கள் என்னும் பெயரில்.

    இயேசுவைக் கொன்றார்கள் என்று கூறி பாதி யூதரைப் பரிதாபமாகக் கொன்று விட்டீர்கள்.

    பைபிளில் ஆதாரம் இருக்கிரது என்று கூறி பாலஸ்தீநியரை அடித்து விரட்ட பிளான் போட்டுக் கொடுத்து அதை நிறைவேற்றியும் விட்டீர்கள்.

    பைபிள் ஆதாரம் காட்டுவதால், பாலஸ்தீனிலும், மத்தியக் கிழக்கு முழுவதும் பைபிள் இருக்கும் வரை அமைதி நிலவ முடியுமா என்று ஆயாசமாக உள்ளது.

    நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் பொய்யானவை என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து அடுத்த போருக்குத் தயார் செய்கிறீர்கள்.

    உங்களிடம் இருந்து அமைதியை காக்க பாடாத பாடு பட வேண்டியுள்ளது.

    ஆன்மீக‌ ஆராய்ச்சியில் சிற‌ந்து விள‌ங்கிய இ ந்தியாவில் வ‌ந்து இப்படிக் காட்டுமிராண்டித் த‌ன‌மும், பைத்திய‌க்கார‌த் த‌ன‌மும் நிறைந்த‌ க‌ல‌க்க‌ல் ச‌ர‌க்கை திணிப்ப‌து ஏன்?

  17. ஜடாயு on September 12, 2009 at 5:48 pm

    கிளாடி,

    நான் சொன்ன திசைதிருப்பல் பற்றி பேச்சைக் காணோம். என்னவோ பேசிக் கொண்டு போகிறீர்கள்.

    // திருவிழாக்கள் நடத்தப்பட்ட நோக்கம் செல்வம் ஒரு இடத்தில் குவியாமல் பரவலாக்கப்படுவதற்காகவே என சொல்வார்கள்; //

    தவறு. இந்து தர்மம் போன்றே இந்துத் திருவிழாக்களிலும் பல அம்சங்கள் உண்டு -ஆன்மிகம், தத்துவம், புராண நிகழ்வு (தீமையை நன்மையை வெல்வது), இயற்கை நிகழ்வுகள் (உதா: பருவகால மாற்றங்கள்), குடும்ப கோலாகலம், சமூக ஒருங்கிணைப்பு இப்படி.. ஒரு மாபெரும் கலாசார அம்சத்தை இப்படி ஒரு வரியில் குறுக்குவதே அபத்தம்.

    // குடும்பப் பிரச்சினையில் “தலை வாங்கப்பட்டவரை” எப்படி தெய்வம் என ஏற்பது?
    அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?
    அவற்றைச் சொன்னால் எல்லோரும் அவரை வழிபட ஏதுவாயிருக்கும்..! //

    இது போன்று கிறுக்குத் தனமான கேள்விகளைக் கேட்பதை நிறுத்துங்கள்.

    ஒரு லோக்கல் குற்றத்துக்குத் தரப்பட்ட மரணதண்டனை “உலக சமாதானம்” ஆகிவிட்டதா, அடேயப்பா! நோபல் பரிசு ஒன்றுதான் பாக்கி. நூற்றாண்டுகள் ஆனாலும் பரவாயில்லை – அதையும் உங்க அடியாட்களை விட்டுக் கொடுக்கச் சொல்லிடுங்க.

    பிள்ளையார் என்பது பிரபஞ்சம் அளாவிய ஆன்மிகத் தத்துவத்தின் அழகிய குறியீட்டு வடிவம். பிள்ளையார் என்பவர் சாதாரண மனிதர் அல்ல. அவரது தோற்றம், ஆயுதங்கள், புராணக் கதைகள் எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தமான உட்பொருள் உள்ளது. அத்தகைய பற்பல புராணக் கதைகளில் ஒன்று மனிதமுகம் மறைந்து ஆனைமுகம் தோன்றுவதாகச் சொல்லப் படும் ஒரு கதை.

    விநாயகரைப் பற்றி அதி அற்புதமான துதிகள் ஏராளம் பல இந்திய மொழிகளில் உள்ளன – அதில் எங்காவது “குடும்பச் சண்டையில் தலை வெட்டப் பட்டவரே” என்று வருகிறதா?” ஏதோ நீங்கள் முட்டாள்தனமாகப் புரிந்து கொண்டதை புராணத்தில் உள்ளது என்பது மாதிரி எழுதுகிறீர்களே?

    ஏசு சிலுவையில் செத்தார் என்ற ஒரே கொலைக் கதையை வைத்துக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டு கிறீஸ்தவம் ஜல்லியடிப்பது போல, இந்த ஒரு புராணக் கதை தான் ஏதோ பிள்ளையார் வழிபாட்டின் ஆதார சுருதி என்பது போல வந்து பேசுகிறீர்கள். இது உங்கள் ஆபிரகாமிய மன இருளின் விளைவு! கேள்வி கேட்பதில் politeness மட்டும் இருந்தால் போதாது – கொஞ்சம் ஆழமும் சிந்தனையும் கூட இருக்க வேண்டும்.

    கட்டுரையின் மையக் கருத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், இப்படி வரும் மறுமொழிகளை வெளியிடுவதால் என்ன பயன்? இதனை மனதில் கொண்டு விவாதத்திற்குத் தொடர்ச்சி தரும் உருப்படியான கருத்துக்கள் உள்ள மறுமொழிகளை மட்டுமே தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

  18. நேசகுமார் on September 12, 2009 at 10:36 pm

    கட்டுரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வார்த்தையில் ஈழ இந்துக்களை குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறது. நமது கண் முன்னால், நம் தலைமுறையில் இந்துக்கள் சந்தித்த பேரழிவு இன்று இலங்கையில்/ஈழத்தில் நிகழ்ந்திருப்பது.

    புலிகளுக்கு நாம் யாரும் ஆதரவாளர் கிடையாது. ஆனால், அதை சாக்காக வைத்து இன்று இந்த அளவுக்கு ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, குறைந்தது ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே அகதிகளாக்கி ஒரு பெரும் ஹிந்து ஹோலோகாஸ்டை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள-பவுத்த பேரினவாத அரசு. அந்த இந்துக்களின் அழிவை, தொடர்ந்து இந்துக்கள் அழிக்கப்பட்டு இன்று இலங்கையில் முஸ்லீம்களை விட சிறுபான்மையினமாக இந்த முப்பதாண்டுகளில் மாற்றப்பட்டுவிட்ட கோரத்தை – ஆப்ரிக்காவில் நிகழ்ந்தது, அன்று யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்தது என்று படித்து மட்டுமே அறிந்திருந்த ஒரு பேரழிவை தமிழ் இந்துக்களின் மீது நிகழ்த்திவிட்டு அந்த குருதி காயும் முன், குழந்தைகள் – சிறுவர்கள் – வயோதிகர்கள் என தமிழ் மக்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச மரக்கிளையுடன் திருமதி ராஜபக்ஷே யாழ்ப்பாணம் செல்வதும், பிரபாகரனை வெற்றி கொண்ட ராஜபக்சேவை துத்தகாமனுவுடன் ஒப்பிடுவதும், யக்கர்கள் ஒழிந்தார்கள் என்று பெருமிதம் கொள்வதும், ஜஸ்டிஸ் அமைச்சகத்திற்கு ஆலோசகர்களாக தேரர்கள் நியமிக்கப்பட்டு பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும், குரூரத்தையும் ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சொல்லியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    மற்றபடி நல்ல கட்டுரை. மொழிபெயர்த்து வெளியிட்டதற்கு நன்றி ஜடாயு.

  19. ஒகை நடராஜன் on September 13, 2009 at 12:13 am

    ஜடாயு, அருமையான மொழிபெயர்ப்புக்கு நன்றி.

    கிலாடி சார், பசுவின் தலையை வெட்டி ஆலயத்தின் முன்பாகப் போட்டு இந்துக்களை அவமதித்துப் போராடுவது குறித்தான பதிவு சார் இது! இங்கு எதிர்மறை கருத்துகளை வைக்கும் நீங்கள் இதையா ஆதரிக்கிறீர்கள்? எதிரிக்கு எதிரி நண்பனா சார்?

    //இந்த விஞ்ஞான உலகில் “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற ஒன்று பன்மடங்காகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பது, “பாபர் மசூதி” இடிப்புக்குப் பிறகு தான் எனும் கருத்தினை யாராவது மறுக்கமுடியுமா?//

    உங்கள் கருத்துப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்பு கஜினி சோமனாதபுரத்துக்கு தீர்த்த யாத்திரையாகவா வந்திருக்கிறார்?. அதுவும் 17 தடவை? சரித்திரம் உங்களுக்கு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறதா?

  20. bheemaa on September 13, 2009 at 2:25 am

    இந்த நிகழ்வின் மூலமாக நாம் ஹிந்துக்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களின் தீவிரத்தை உணரலாம். ஆனால் ஒரு வகையில் நம்முடைய பிரச்சினைக்கு நாமும் ஒரு மூல காரணம். பொதுவாக இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தாங்கள் நம்புகின்ற விஷயங்களை ஒற்றுமையுடன் செய்கின்றனர், அது எவ்வளவு எதிர்ப்புகளை சம்பாதித்தாலும்… உதாரணம் ராஜ சேகர ரெட்டி. ஆனால் நாமோ பிரச்சினை வந்தால் கவலைப் படுகிறோம் , அந்த கவலையை சக மக்களுடன் பகிர்ந்து விட்டு வேலையைப் பார்க்க சென்று விடுகிறோம். என்ன ஒரு கொடுமை இது…..

  21. bheemaa on September 13, 2009 at 2:28 am

    இனி செய்ய வேண்டியது என்னவென்றால் செயல் செயல் மட்டுமே. புலம்புவதோ, அடுத்தவர்களை குறை சொல்வதோ அல்ல. நாமும் ஒரு அமைப்பில் இணைவோம். இணைந்து போராடுவோம்.

  22. திருச்சிக் காரன் on September 13, 2009 at 3:08 am

    //இந்த விஞ்ஞான உலகில் “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்ற ஒன்று பன்மடங்காகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பது, “பாபர் மசூதி” இடிப்புக்குப் பிறகு தான் எனும் கருத்தினை யாராவது மறுக்கமுடியுமா?//

    இதனால்தான் இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை கொண்டு போய் மோதினார்களா?

    உங்களின் பல்லாயிரம் வருட பரம்பரை சண்டையை மறைக்க இங்கெ வந்து காது குத்துகிறீர்களா?

  23. Varatharaajan on September 13, 2009 at 5:57 am

    Dear Glady, I am astonished to learn your ignorance regarding thousands of riots perpetrated by fundamentalist muslims in Independant India as well as in undivided India during the British rule. For example ‘Ethnic cleansing’ of Kashmiri Hindus from the Kashmir Valley happened well before “Babri Masjid Demolition” in 1992. Your ignorance about Hindu-Muslim riots following the ‘Kilafat Movement’ during the 1920s and the riots following the ‘Direct action’ call given by Muhammed Ali Jinnah in 1942 continued well after our independance in 1947. Please understand that Babri Masjid was never a functioning mosque. Do you know that Hindus wanted to renovate the old and dilapidated building resembling a mosque, where Rama lalla was worshipped uninterruptedly for at least more than five decades and the courts have also sanctioned and confirmed the right of Hindus and restricted the Muslims not to disturb the temple. Can you show one Muslim who has performed namaz in Babri Masjid?

  24. ram on September 13, 2009 at 7:20 am

    ////கஜினி சோமனாதபுரத்துக்கு தீர்த்த யாத்திரையாகவா வந்திருக்கிறார்?. அதுவும் 17 தடவை? சரித்திரம் உங்களுக்கு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறதா?///// அற்புதமான வாதம். எடுத்தாண்டதற்கு நன்றி ஒகை நடராஜன் அவர்களே. அதுவும் வரலாற்றுப்படி அந்தரத்தில் தொங்கிய வடிவில் இருக்கும் சிவலிங்கமாம். அதைத்தான் கஜினி தன் புத்திசாலித்தனத்தால் சிந்தித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தினான் என்பது வரலாறு. எங்கே போய் முட்டிக்கொள்வது சொல்லுங்கள்.

    சிவ சிவா.

  25. ram on September 13, 2009 at 7:33 am

    // குடும்பப் பிரச்சினையில் “தலை வாங்கப்பட்டவரை” எப்படி தெய்வம் என ஏற்பது?
    அவர் இயேசுகிறிஸ்துவைப் போல உலக சமாதானத்துக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தாரா?
    அவற்றைச் சொன்னால் எல்லோரும் அவரை வழிபட ஏதுவாயிருக்கும்..! /////

    திரு கிளாடி அவர்களே, விளம்பரப்படுத்த இந்த தளத்தை உபயோகிக்காதீர்கள். வேண்டுமானால் தனியே தளம் அமைத்து உங்கள் மதமாற்றப் பிரச்சாரத்தை செய்யுங்கள். இந்து நாட்டிலே வந்து அவர்கள் கடவுளர்களையே சாத்தான்கள் என்று சொல்லும் உங்கள் அயோக்கியத்தனமான மதமாற்ற சித்தாந்தத்தை இந்தத் தளத்திலும் பிரயோகிக்கிறீர்கள். வழக்கம் போல சகிப்புத்தன்மையுடனும் மதிப்புடனும் இதற்கும் இந்துக்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே இது தான் இந்து தர்மத்தின் சிறப்பு என்பதை இனியாவது புத்தியில் உறைக்கப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் துப்பிக்கொண்டே இருக்க இத்திருத்தளம் வாஷ்பேசின் அல்ல.

    வரப்போகும் சுவிசேஷம் –

    “நிறுத்துங்கள், அல்லது நிறுத்தப்படுவீர்கள்” – ராம், எதேச்சாதிகாரம்.

    (Edited and Published – Tamilhindu Editorial.)

  26. reality on September 13, 2009 at 8:59 am

    Hindoo religion need not re-expand itself in outside present India areas. But hindoos should be allowed to live with freedom and dignity within India, which has been denied so far even by the sucessive post-political-independence governments. The politicl chief outfit of india is so treacherous, even some rich hindoos cannot openly exhibit pro-hindoo feelings; the are lying low, as they are surrounded by many non-hindoo rich, who act as informers.

  27. reality on September 13, 2009 at 9:12 am

    Pillayyar has to be worshiped first for removing obstacles as Pillayaar has been given powers to remove obstacles as per the boon given by Lord Siva, after the incident that led to the slain head; but Pillayaar is not head-removed, but head-replaced! Even for that, one has an explanation; Pillayaar obstructed the path of Lord Shiva, so when the boon is given Pillayaar has been designated to remove obstacles; and the head of the very first life seen after the incident can fit in his body; it is also another boon ;see the beauty of logic in such ancient wisdom.

  28. Malarmannan on September 13, 2009 at 9:35 am

    To Sri Edwin:
    First of all, try to learn Babri structure was NOT NOT a mosque but a memorial to commemorate the victory of Babur, an alien, by one of his commanders namked Mir Baqui, who was appointed as goevrnor to the region of Ayodhya (Oudh, they called it). The war between the invader Babur and the local sultan Ibrahim Lodi was faught at Panipat, which is now in Haryana, near Dlhi. And the Sultan Ibrahim was ruling from Delhi. If at all a memorial for victory had to be built, it should have been either at Panipat or in Delhi. Why was it built in Ayodhya? It was only to humiliate Hindus, because Ayodhya has been one of the seven holiest places of Hindus even before Marayada Purushottam Sri Ramachandra Prabhu was born there. And that the Babri memorial was built particularly at the locality known as Janmastan since time immemorial. All revenue records of previous centuries refer that locality as Janmastan only. Even there is a sub post office in that locality named Janmastan Sub P.O., Ayodhya. Apply your mind to guess as to whose Janmastan it could be. It is a faith of Hindus that Maryada Purushottam was born in that particular site and nobody can question a matter of faith.

    Now, since Babri memorial was bulit to commemorate the victory of an alien over Hindustan ruled at that time by a Mohmedan sultan, even Mohmedans of Hindustan should have supported the demolition of the national shame called Babri memorial that was cunningly referred as mosque later on (Hindus started worshipping Sri Ram Lalla – Baby Sri Ram – at the outer walls of the memorial and therefore, Mohmedans started praying inside the memorial to establish their right over the place and over a period of time, they started calling it Babri Masjid. SORRY, even many sympathisers like L K Advani do NOT know this and write some rubbish as if they know the facts! I wrote a very strong letter to him but till date I have not received any reply from him, though he knows me personally!)

    As Colonel Neil’s statue was removed, as it was a national shame, the Babri memorial was also removed ( Colonel Neil was the one who hanged hundreds of innocent civilians and burnt village after village during 1857. His statue was erected in Chennai to honour him. It was removed owing to public agitation).

    Whoever has basic self respect should have supported demolition of Babri Memorial that wws a national shame. Mohmedans dispute not because of the demolition of Babri structure but because the site is a real estate value for them. Try to understand the politics in this. They have made it a civil suit. I have made a thorough study on Babri memorial, staying at Ayodhya for about six months. And I have no hesitation to declare here that I am one of the fortunate Hindustanis who had the opportunity to remove that national shame.
    MALARMANNAN

  29. Malarmannan on September 13, 2009 at 9:53 am

    NOW, somebody has asked what is the solution to the sufferings of Hindus all over the world including in their own homeland.

    Whenever Hindus retaliate when they are attacked in their own homeland that is Hindustan, there has been hue and cry all over the world condemning Hindustan as unsafe for minorities. The Pope isues a strong worded statement and the heads of US and UK warn the governmwent of Hindustan.
    When Hindus retaliate to Mohmedans’ rowdism, all Mohmedan countries including Pakistan and Bangladesh cry foul. In Pakistan and Bangladesh, Hindus are avenged for the retalitaion at Hindustan. Read Taslima Nasreen’s novel Lajja to know the sufferings of Hindus even before the demolition of the national shame Babri Memorial.

    Instead of telling them forthright that it was our interanl matter, our rulers like spineles Manmohan apologise!

    Hindus in Hindustan should bring pressure on the govt of Hindustan to take up the matter to the UNO in respect of Hindus’sufferings wherever they live and are subjected to sufferings.

    Only sheep are sacrificed at the altar. Not the lions or tigers. Hindus should stop behaving like sheep, hiding under the cover of tolerance, the myth called nonviolence, peace etc. As long as they behave like sheep, there can be no solution. It is only cowardice and fear to speak for tolerance, nonviolence which is a myth and peace when you are attacked.

    MALARMANNAN

  30. Malarmannan on September 13, 2009 at 10:18 am

    All Hindu NRIs and domicilled Hindus abroad should write to the PM and the President of Hindustan that they are making Hindustan rich and proud by their hard work/contribution abroad and therefore the govt of Hindustan is morally bound to raise the issue at UNO wherever Hindus are subjected to any kind of suffering. Hindustan is the only original homeland of Hindus and therefore the govt of Hindustan, established by majority Hindus has the moral duty to safeguard the interests of Hindus wherever they live. Let TamilHindu take up the initiative and spread the message to other nonTamil Hindus living abroad.
    MALARMANNAN

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.