முகப்பு » அரசியல், பொது

ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை

September 6, 2009
-  
அச்சிட அச்சிட

ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். இந்த மாதிரியான கோர விபத்தில், அதுவும் அரசியல் வாழ்வின் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது, மரணம் எய்வதென்பது மிகவும் துக்ககரமான விஷயம். அன்னாருடைய குடும்பத்தாருக்கும், நண்பர் உறவினர்க்கும் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்கட்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அரசியல் வாழ்வு


முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலையே தொழிலாகக் கொண்டிருந்த ராஜசேகர ரெட்டி, கடப்பா தொகுதியிலிருந்து நான்கு முறை லோக்சபாவிற்கும், புலிவெந்துலா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்த ஒரு தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் திணறிக் கொண்டிருந்த போது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார் ரெட்டி. 1983லிருந்து 1985 வரையும், பின்னர் 1998லிருந்து 2000 வரையும் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பேற்ற ரெட்டி, 1980லிருந்து 1983 வரை மாநில அமைச்சராகவும் பணி புரிந்தார். தெலுகு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக முதலமைச்சராக (1999-2004) இருந்தபோது சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார் ரெட்டி.


2004-ல் நடக்கவிருந்த பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னால், 2003-ன் இறுதியில் மகா பாதயாத்திரை மேற்கொண்ட ராஜசேகர ரெட்டி, 1500 கிலோமீட்டருக்கும் மேல் மாநிலம் முழுவதும் பல கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்து, காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினார். தெலுகு தேசம் கட்சி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையே எதிர்பாராத அளவில் அமைந்தது அந்த வெற்றி. சட்டசபையில் 185 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை அடைந்து முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார் ராஜசேகர ரெட்டி.


சமீபத்தில் நடந்து முடிந்த 2009 தேர்தல்களில் “முன்னேற்றம் மற்றும் நம்பகத்தன்மை என்கிற கோட்பாட்டில் தேர்தல் களத்தைச் சந்தித்து, பாராளுமன்றத்தில் 33 இடங்களையும், சட்டசபையில் 156 இடங்களையும் பெற வழிசெய்து, மீண்டும் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரெட்டி. ஐந்து தினங்களுக்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும்போது, பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், பலத்த மழை காரணமாகவும், தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாகவும், மலையின் உச்சியில் மோதி நல்லமலா காட்டுப் பகுதியில் எரிந்து வீழ்ந்ததனால், மரணம் அடைந்தார்.


மக்கள் நலத் திட்டங்கள்


2004லிருந்து 2009 வரை ஆட்சி செய்யும்போது, தற்போது அனைத்து மாநிலங்களிலும் பழக்கத்திற்கு வந்துவிட்ட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, போன்ற இலவசத் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு பல நற்திட்டங்களும் செயல் படுத்தினார். “ஜலயக்ஞம்என்ற பெயரில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பெரிய, மத்திய, சிறிய நீர்பாசனத் திட்டங்கள், “ஆரோக்ய ஸ்ரீஎன்ற பெயரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், “பவல வட்டிஎன்ற பெயரில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், மற்ற ஏழை மக்களுக்கும் சுய வேலை (சுய வியாபார) ஏற்பாட்டிற்காக குறைந்த வட்டியில் (ஆண்டுக்கு 3 சதவிகிதம்) கடன் வசதி, இந்திரம்மா இல்லு என்ற பெயரில் கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டித் தருதல், போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்து செயல் படுத்தினார்.


மேற்சொன்ன திட்டங்கள் பெரும் வெற்றியடைந்தன என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட வகையில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தான் நடந்த ஊழல்கள் வெளி வரும் என்று எதிர்பார்ர்க்கப் படுகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் ஆட்சியில் இருப்போருக்கு “நல்ல வருவாய் தருவனவாக இருந்தால், அடுத்து வருகின்ற அரசாங்கத்தினாலும் அதே திட்டங்கள் வேறு பெயர்களில் செயல் படுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆயினும், நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் பெருமளவிற்கு குறைந்து போனது. எனவே, ஏழைகளின் பாதுகாவலனாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.


ஊழல் குற்றச்சாட்டுக்கள்


அவருடைய ஆட்சி காலத்தில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். எதிர் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ரெட்டியின் குடும்பம் “சந்தூர் பவர் நிறுவனம்”, ”ஜகதி பப்ளிகேஷன்ஸ், பாரதி சிமெண்ட் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு சட்டசபையில் பெரும் விவாதத்திற்குள்ளானதால், ராஜசேகர ரெட்டி வேம்பள்ளி மண்டல் என்ற பகுதியில் இருக்கும் தன்னுடைய இடுபுலபயா எஸ்டேட்டிலிருந்து, அரசாங்க மற்றும் வனத்துறைகளுக்குச் சொந்தாமான 614 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தார். இருந்தாலும் பல ஆண்டுகலாக அந்நிலத்தைச் சொந்தம் கொண்டாடியமைக்காக, ஆந்திரப் பிரதேச விவசாய நில உச்சவரம்பு சட்டம் 1973, ஆந்திரப் பிரதேச நில மாற்றம் தடுப்புச் சட்டம் 1977, ஆந்திரப் பிரதேச வனங்கள் சட்டம் 1967, ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம், என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் மாநில முதல் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?


நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய “சத்யம்நிறுவன ஊழலில் ராஜசேகர ரெட்டிக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஊடகங்களும், அனைத்து எதிர்கட்ச்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் சத்யம் குழுமத்தைச் சார்ந்த “மைதாஸ்நிறுவனத்திற்கும் ரெட்டி அரசு பல பணியொப்பந்தங்களை அளித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவை, அவர் சந்திரபாபு நாயுடுவின் நண்பர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரைக் குறி வைத்து பல வகைகளில் அவருக்கு பெரும் சங்கடங்கள் ஏற்படுத்தியதற்காகவும், அவரை பல விதங்களில் செயல் படமுடியாமல் செய்ததற்காகவும், சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானார் ராஜசேகர ரெட்டி. (மேலும் விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்).


ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், அனைத்து விதமான தவறான காரணங்களுக்காகவும், ஊடகங்களில் அடிபட்டது. தேவஸ்தானத் தலைவர் பதவிக்கு ஆள் தேர்ந்தெடுப்பது தொடங்கி, கணக்கு வழக்குகள் சரியில்லாமை, நகைகள் மற்றும் தங்கக் காசுகள் குறைவது, நிர்வாகத்தில் ஊழல்கள், நேர்மையில்லாமை, திருமலையில் கிறிஸ்துவ மதமாற்றப் பிரச்சாரங்கள், சமூக விரோத செயல்கள் வரை எல்லா வகையிலும் திருமலைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் அவரது ஆட்சி அமைந்தது. தேவஸ்தான நிர்வாகத்தை முழுமையாகக் கலைத்து விட்டு புதிய நேர்மையான நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று ஆகஸ்டு மாத இறுதியில் தான் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.

ராஜசேகர ரெட்டியின் ஊழலை விவரிக்கும் விதத்தில், , “தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதில் தலை சிறந்தவராக விளங்கும் அளவிற்கு, அவருடைய ஆட்சியில் ஊழல் பெருகிற்றுஎன்று செப்டம்பர் 4-ஆம் தேதி இதழில், “தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்கூறியுள்ளது. அன்பிற்குரிய “சாமுவேல்இல்லாதது சோனியாவிற்கு பேரிழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமோ! (ரெட்டியை சாமுவேல் என்று அன்புடன் அழைப்பது காங்கிரஸ் தலைவி சோனியாவின் வழக்கம் என்று பத்திரிகை வட்டாரங்களில் பேச்சு உண்டு).


மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலைமை


மாநிலத்தின் பாதுகாப்பைப் பொறுத்த அளவில் சாமுவேல் ரெட்டியின் ஆட்சி பல தவறுகளைச் செய்தது என்று சொல்லலாம். 2004 தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக இருந்த சூழ்நிலையோடு கூட, ரெட்டியார் நக்சலைட்டுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட சமரசமும், காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த சமரசத்தின் படி, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி அவர்களைப் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் ரெட்டி. இந்த அமைதிப் பேச்சு என்பது தீவிரவாத, மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தான் சாதகமாக இருக்குமேயன்றி, மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது. இந்த உண்மையை சென்ற கால அனுபவங்கள் நமக்குப் பலமுறை உணர்த்தியுள்ளன.


அதேபோல், நக்சலைட்டுகள் ரெட்டியின் அமைதிப் பேச்சு எனும் சடங்கைத் தங்களுக்கு ஏதுவாகப் பயன்படுத்தி, பேச்சை பல மாதங்கள் இழுத்தடித்து, இடைப் பட்ட காலத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுத் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். தங்கள் ஆள்பலத்தையும், ஆயுத பலத்தையும், கூட்டிக் கொண்டனர். அதன் விளைவாக, நேபாளத்திலிருந்து ஆந்திரம், ஏன் தமிழகம் வரை, பதினைந்து மாநிலங்களுக்கும் மேலாக தங்கள் இருப்பை விரிவு படுத்தி சிவப்பு அரண் ஏற்படுத்திக் கொண்டனர். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் ஒரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்த நக்சல்-மாவோயிஸ்டு பிரச்சனை ராஜசேகர ரெட்டியின் புண்ணியத்தில் மீண்டும் பெரிதும் வளர்ந்தது.


நக்சல்-மாவோயிஸ்டு கூட்டணியானது விடுதலைப் புலிகள் மற்றும் ஜிகாதிகள் ஆகியோருடனும் தங்கள் தொடர்பை விரிவு படுத்திக் கொண்டது. ஆந்திரா தமிழகத்திற்கு இடையிலே நடந்த ஆயுதக் கடத்தல்கள், தமிழகப் போலீசார் கைப்பற்றிய ஆயுதங்கள், கைது செய்த தீவிரவாதிகள், விடுதலைப் புலிகள், ஆகிய விவரங்கள் இந்தக் கூட்டணியை உறுதி செய்கின்றன. ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான், ஹைதராபாத்தில் மெக்கா மசூதி, லும்பினி பார்க் ஆகிய இடங்களில் பெரும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து, கொடிக்கணக்கான ரூபாய் அளவில் பொருள் சேதமும் விளைந்தது. அந்தக் குண்டு வெடிப்புகளின் விச்சாரணைகளில் இது வரை எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலமும் நக்சல் பீதியிலிருந்து மீளவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் கொலைகளாலும், மற்ற சமூக விரோத நிகழ்வுகளாலும் ஆந்திர மாநிலத்தில் பொதுவாக சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.


கிறிஸ்துவ மயமாக்கப் படும் ஆந்திரம்


2004-ல் ராஜசேகர ரெட்டி அரசு அமைந்ததிலிருந்து, கிறிஸ்துவ எவாங்கலிக்க குழுக்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக கிராமப் புறங்களில் கூட்டுகூட்டாக மக்கள் மதமாற்றம் செய்யப் படுகின்றனர். சர்ச்சுகளிடமும் கிறிஸ்துவ மிஷனரிகளிடமும் ரெட்டி பகிரங்கமாக மிகவும் நெருக்கமாகப் பழகுவதால், அவைகள் துணிச்சலுடன் செயல் படுகின்றன. இந்துக்களின் புனிதத் தலங்களான பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தி, போன்ற பல இடங்களில் எவாங்கலிக்கக் குழுக்கள் மதமாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்டன. அவர்கள் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை! ரெட்டி அவர்களும் அதற்குப் பல விதங்களிலும் மறைமுகமாக உதவி வந்திருக்கிறார்.


ysr1ஆகஸ்டு 22, 2006-ல் போட்ட அரசாணை எண் 21-ன் படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சர்ச்சுக்கும் செப்பனிடும் வேலைகளுக்காக 80,000 ரூபாயும், புதிதாகக் கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது. (CM Reddy okays public money for Churches – Deccan Chronicle dated 23rd August 2006). மாநிலத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருக்கும்போதும், அக்கோவில்களில் வேலை செய்யும் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அர்ச்சகர்கள் மாதம் வெறும் ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ருபாய் வரை மட்டுமே சம்பளம் பெற்று வந்த போதும், கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் வெறும் பதினைந்து சதவிகிதமே, கோவில்களின் பராமரிப்புக்கும், பணியாளர்களின் சம்பளத்திற்கும், திருப்பிக் கொடுக்கப் படும் போதும், இம்மாதிரி கிறிஸ்துவ மதத்தினருக்கு மட்டும் அரசாங்க சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. கோவில்களிலிருந்து வரும் மிச்சமுள்ள எண்பத்தைந்து சதவிகித வருவாயும், அரசின் மற்ற திட்டங்களுக்கும், சிறுபான்மையின சமுதாய நலத் திட்டங்களுக்கும் செலவழிக்கப் படுகின்றன. மேலும் சிம்மாசலத்தில் உள்ள நரசிம்ஹஸ்வாமியின் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் பசு மற்றும் கன்றுக்குட்டி தானங்களை சரிவர பராமரிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கசாப்பு ஆலைகள் வைத்துள்ளவருக்கு பசுக்கள் ஏலம் விடப் படுகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற அந்தக் கோவிலிலிருந்து வரும் நல்ல வருவாயைக் கொண்டு ஒரு கோ-சாலை (பசு மடம்) அமைக்கக் கூட மனமில்லை ரெட்டியின் அரசுக்கு. (மேலும் விவரங்கள் இங்கே).


ராஜசேகர ரெட்டியின் அரசாங்கம் கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்களை விற்று இருபதாயிரம் கோடி ருபாய் நிதி திரட்ட முடிவு செய்தது. பல இடங்களில் அந்நிலங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் சர்ச்சுகளுக்கும் மிஷனரிகளுக்கும் கொடுக்கப் பட்டதாகவும், சில இடங்களில் சர்ச்சுகளும், மசூதிகளும் கட்டப்ட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் க்றுஸ்துவர்களின் ஜனத்தொகைகுச் சற்றும் சம்பந்தமில்லாமல் ஆயிரக் கணக்கான சர்ச்சுகள் மாநிலம் முழுவதும் தோன்றின. ஆங்காங்கே பாதிரிமார்களும், எவாங்கலிக்கர்களும், தங்களுடைய “அறுவடையைச் செய்ய ஆரம்பித்தனர்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப் புரங்களில், கும்பல் கும்பலாக அப்பாவி மக்கள் மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் ஜனத்தொகை 1.5 சதவிகிதமே என்று அரசின் ஆவணங்கள் (2001 ஜனத்தொகை எடுப்பு) சொன்னாலும், பத்திலிருந்து பன்னிரண்டு சதவிகிதம் இருக்கலாம் என்று சர்ச்சுகளே நம்புகின்றன. பெருமளவில் செய்யப்படும் மதமாற்றங்களை எண்ணிப்பார்க்கும்போது, 12% சாத்தியமே! மதம் மாறிய பலர் அதை வெளியில் அறிவிப்பதில்லை. இந்து ஷெட்யூல்டு பிரிவினருக்கு மட்டுமே அரசு சலுகைகள் உண்டு என்பதால், மதம் மாறியவர்கள் அச்சலுகைகளை வெளியில் அனுபவித்துக் கொண்டே உள்ளுக்கு கிறீஸ்துவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் ரெட்டியின் அரசு சட்டமன்றத்தில் கிறிஸ்தவராக மற்றும் முஸ்லிமாக மதம் மாறிய ஷெட்யூல்டு வகுப்பினருக்கும், இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில், ஏழு கிறிஸ்துவருக்கு ஒரு சர்ச்சும், 40 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதியும், 350 இந்துக்களுக்கு ஒரு கோவிலுமாக வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சிறிய, நடுத்தர, பெரிய வழிபாட்டுத் தலங்களைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மாநிலத்தில் தற்போது 148,000 சர்ச்சுகளும், 176,000 மசூதிகளும், 190,000 கோவில்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).


சட்டத்திற்குப் புறம்பான தங்களுடைய செயல்களைக் கண்டுகொள்ளாமல் மறைமுக ஆதரவுடன் அரசு இருப்பதனால் துணிச்சல் அதிகம் பெற்ற சர்ச்சுகளும், மிஷனரிகளும், திருமலை திருப்பதியை மதமாற்றத் தாக்குதலுக்கு உள்ளாக்க தீர்மானித்தன. அதை ஊக்கப் படுத்தும் விதமாக, ரெட்டி, ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக்கொண்டு அவற்றை தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார். வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கட்டப் படும், மலை மேல் போக கேபிள் கார் வசதி செய்யப்படும் என்றும் சொன்னார். இந்துக்கள் அதிர்ந்து போயினர். நல்ல உள்ளம் கொண்ட, ஏழுமலையானின் பக்தர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம், ஏழு மலைகளும் பகவான் வெங்கடாஜலபதிக்கே சொந்தம் என்றும் அரசாணை செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. ரெட்டியும், பொங்கியெழுந்த இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து தன் எண்ணத்தைக் கைவிட்டார். {Judgment of a Division Bench of the Andhra Pradesh High Court1997 (2) ALD Page 59 (DB) – Tallapakam Koppu Raghavan Vs State of A.P}.


ஆனாலும், திருமலையிலும் திருப்பதியிலும் மிஷனரிகள் மதமாற்றச் செயல்களை நிறுத்துவதாக இல்லை. ஐதராபாத் சாரதா பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்வருபானந்தேந்திர ஸ்வாமிகள் புது தில்லியில் இந்து குருமார்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் ஆந்திராவில் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, உடுப்பி பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், மற்ற இந்து இயக்கங்களுடன் சேர்ந்து திருப்பதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பொதுவாக ஆந்திர மாநிலத்திலும், குறிப்பாக திருமலை திருப்பதியிலும் நடக்கும் கிறிஸ்துவ மிஷனரிகளின் சட்ட விரோத செயல்களுக்கும், மதமாற்றத்திற்கும், கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ஜி.பிக்‌ஷாபதி தலைமையில் “உண்மை கண்டறியும் குழுஒன்றை அமைத்தார். அக்குழுவில், மற்றொரு முன்னாள் நீதிபதி கே.பி.சித்தப்பா, முன்னாள் காவல்துறை இயக்குனர் ஜெனரல் திரு டி.எஸ். ராவ், ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயாவின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர்.பி.கீர்வாணி, குப்பம் திராவிட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஆர்.ஸ்ரீஹரி ஆகியோரும் அங்கத்தினர்களாக பொறுப்பேற்றனர். அவர்கள் 17-06-2006 அன்று ஐதராபாதில் கூடி ஆலோசனை செய்து, பின்னர் அதேமாதம் 21 மற்றும் 22 தேதிகளில் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் பொது விசாரணை செய்து, கிறிஸ்துவ மிஷனரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று உறுதி செய்து விசாரணையின் மூலம் அறிந்த அனைத்து உண்மைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிக்கையாக வெளியிட்டு அதை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து ரெட்டியின் அரசும் திருமலையில் எவாங்கலிக்க நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தது (தொடர்புடைய செய்திகள் இங்கே).


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலையத்திற்குத் தேவையான பொருட்களின் கொள்முதல் ஒப்பந்தமும் ஜெ.ஆர்.ஜி வெல்த் மெனேஜ்மெண்ட் என்கிற கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ நிறுவனத்திற்கே அளிக்கப்பட்டது. (”தி ஹிந்து பிஸினஸ்லைன் செய்தி)


ysr_rajshekar_reddy_20040524இந்து புனிதத் தலங்கள் அருகே மதமாற்ற நடவடிக்கைகளை ரெட்டி அரசாங்கம் நிறுத்தினாலும், மற்றபடி மாநிலம் முழுவதும் மதமாற்றம் நடத்த மிஷனரிகளுக்கு மறைமுக அனுமதி அளித்தது. ராஜசேகர ரெட்டியின் மருமகன் அனில் குமார் ஒரு தேர்ந்த எவாங்கலிக்கர்.  இந்துவாகப் பிறந்து வளர்ந்த இவர், பிறகு மதம் மாறி கிறிஸ்துவ மதபோதகராக வசதியான வாழ்க்கை வாழ்கிறார். ரெட்டியின் மகளைத் திருமணம் செய்த பிறகு ஆந்திர அரசு இவருக்குப் பல வகைகளில் உதவி செய்து வருகிறது. சகோதரர் அனில் குமார் சொந்தமான “ஊழிய அமைப்பு நடத்தி வருகிறார். தான் பரிசுத்த ஆவிகளால் தீண்டப் பட்ட மதபோதகர் என்றும், சக்தியும், ஆளுமையும் பெற்ற ஆசிரியர் என்றும், கிறிஸ்து ராஜ்ஜியத்தின் கொள்கைகளை வெளிக்கொணர்பவர் என்றும், மதப்பற்றுள்ள, மதத்தைக் காப்பாற்றும் வீரர் என்றும், அற்புதங்களின் மூலம் நோய்களைத் தீர்த்து சுகம் அளிப்பவர் என்றும், இயேசுபிரான் பெயரில் அதிசியங்கள் நிகழ்த்துபவர் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்.


பெங்களூருவில் சில வருடங்கள் முன்னால் (காங்கிரஸ் முதல்வர் தரம்சிங்கின் ஆட்சியின்போது) அமெரிக்க எவாங்கலிக்கர் பென்னி ஹின் நிகழ்த்திய பிரம்மாண்ட ஏமாற்றுக் கூட்டத்தைப் போல அனில் குமாரும் சென்ற ஆண்டு ஐதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்தார். அதற்கு ரெட்டியின் அரசு இயந்திரங்கள் பல விதங்களில் உபயோகப் படுத்தப் பட்டன. நகரமெங்கும் நூற்றுக் கணக்கான விளம்பர பானர்கள் வைக்கப் பட்டன. ராஜசேகர ரெட்டியும், அவர் மனைவியும், மகளும் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். எதிர்கட்சியினர் அரசு இயந்திரங்கள் பயன்பட்டதைக் கடுமையாகக் கண்டித்தன. அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதில் என்ன தவறு?என்று அலட்சியமாக கேட்டிருக்கிறார் முதல்வர். ஆந்திராவைச் சேர்ந்த, சுனாமியின் போது தமிழகக் கடலோர மீனவ குடும்பங்களை மதமாற்றம் செய்வதற்காக தனி விமானத்தில் வந்திறங்கிய, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் எவாங்கலிக்கர் கெ.எ.பால் என்பவரை கவிழ்த்து அனில்குமாரை வளரச் செய்யவே ரெட்டி அரசு முயல்வதாக அரசியல் வட்டாரங்களும் ஊடகங்களும் தெரிவித்தன.


இதில் முரணான விஷயம் என்னவென்றால், படித்தவர்களில் கூட பெரும்பாலானவர்களுக்கு ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதோ, அவர் மருமகன் ஒரு எவாங்கலிக்கர் என்பதோ சுத்தமாகத் தெரியாது. 2004-லும் சரி, 2009-லும் சரி, தேர்தலில் வெற்றி பெற்றவுடன், குடும்பத்துடன் கிறீஸ்துவப் புனிதத் தலமான பெத்லெஹம் பயணம் மேற்கொண்டார் ரெட்டி. அங்கும் மற்ற புனித இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனைகள் செய்து திரும்பினார். எனவே, முஸ்லிம்களுக்கான ஹஜ் யாத்திரை போல, அவர் க்றுஸ்துவர்களுக்காக ஜெருசலேம் யாத்திரைக்கு 2008-09 ஆம் ஆண்டுக்கு 2 கோடி ருபாயும், சர்ச்சுகளும், மசூதிகளும் செப்பனிடப்படுவதற்காக 5 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்ததில், ஆச்சரியமில்லையே!


2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் ராயலசீமா கிறீஸ்தவ சதஸ்என்ற அமைப்பின் கீழ் கூடி, கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ராயலசீமா திருச்சபையின் பேராயர் யேசு வரப்ரசாத், முன்னாள் பேராயர் சி.வி.எம்.ஃப்ரெட்ரிக் பாபு, பாதிரி சாம்சன், சி.எஸ்.ஐ சர்ச்சு பாஸ்டர் பென்ஹர் பாபு, சி.எஸ்.ஐ.சர்ச்சு செயலாளர் சாமுவேல் பாபு, ழையான் கல்லூரியைச் சேர்ந்த கே.ராஜரத்தினம் ஐசக் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ரெட்டியின் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பாராட்டி, மீண்டும் அவரின் ஆட்சி அமைந்தால் தான் மாநிலம் முன்னேறும் என்று கூறி க்றுஸ்துவ சமுதாயத்தினரை காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்குமாறு பணித்தனர். (பார்க்க: “தி இந்து” செய்தி )

.

இந்திய எவாங்கலிக்க கூட்டமைப்பு (Evangelical Fellowship of India - EFI) ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் சென்ற மாதம் ஆகஸ்டு 19-ஆம் தேதி அவர்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்துள்ளது. கல்வி, சுகாதார, சமூக துறைகளில் கிறிஸ்துவ சர்ச்சுகளின் பனிகள் போற்றுதலுக்குறியன. அப்பணிகள் அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கும் நாட்டில் அமைதி நிலைக்கவும் உதவி புரிகின்றன என்று முதல்வர் தங்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்து, அவருடைய குடும்பத்திற்காகவும், மற்றும் அவருடன் மரணம் எய்திய மற்ற நான்கு பேரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.


“இந்திய மாநிலத் தலைவர், கிறிஸ்தவர், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்(Head of Indian state, a Christian, killed in chopper crash) என்கிற கட்டுரையை லண்டனைச் சேர்ந்த “Religious Intelligence” என்ற தளம் பிரசுரம் செய்தது. அக்கட்டுரையை எழுதிய புது தில்லியைச் சேர்ந்த விஷால் அரோரா என்கிற பத்திரிகையாளர், “ராஜசேகர ரெட்டியின் தகப்பனார் ராஜா ரெட்டி பர்மா ராணுவத்தில் பணி புரியும்போதே கிறிஸ்துவராக மதம் மாறினார்என்றும் ராஜ சேகர ரெட்டியின் ஆட்சி மீது இந்து தேசியவாதிகள்வீண்பழி சுமத்தி, “ஏராளமானகிறிஸ்துவ பாதிரிகளையும், பணியாளர்களையும் “தாக்கிக் கொன்றுள்ளனர்என்று கொஞ்சம் கூட ஆதாரம் காட்டாமல் எழுதியுள்ளார்.


ராஜசேகர ரெட்டியின் இறுதிச் சடங்கினை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி சானல்கள், ரெட்டி குடும்பத்தின் வன்முறை மிக்க பாரம்பரியத்தை உறுதி செய்யும் விதமாக, “முதல்வரின் தந்தை ராஜா ரெட்டி 75 வயதில் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்என்று கூறின. அவர்களின் பாரம்பரியம் வன்முறை நிறைந்தது என்பதற்கு மற்றொரு சான்று ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த “பூமண்ண சகோதரர்கள் (பூமண்ண கருணாகர ரெட்டி, பூமண்ண சுப்ரமணிய ரெட்டி). அவர்கள் எழுபதுகளில் சமூக விரோத செயல்களுக்காக சிறை தண்டனை பெற்றவர்கள். (மேலும் விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).


மேலும் “ராயலசீமா பகுதிக்கென்றே உரிய வன்முறைக் கலாசாரம், ராஜசேகர ரெட்டி முதல்வரான பிறகு மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த “போராளிகள்மாநிலத் தலைநகரில் ஆட்சி செலுத்தினர்என்று தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்நாளிதழ் விவரிக்கின்றது.


கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அமைப்பை பூரணமாகக் கலைக்க வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேவஸ்தானத்திற்கு முப்பதாயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், நகைகளின் மதிப்பு (கிருஷ்ண தேவ ராயர் காலத்திற்கு முன்னிருந்து இருப்பதால்) கணக்கிட முடியாது என்றும் கூறிய நாயுடு, “திருமலை திருப்பதியில் பகவான் சன்னிதியில் நடக்கும் தீய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ராஜசேகர ரெட்டி வெங்கடாஜலபதி பகவானின் கோவத்தை சம்பாதிப்பார். பகவான் வெங்கடாஜலபதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிருபணம் செய்யப் பட்ட உண்மை. தவறிழைத்தவர்கள் நாளடைவில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்என்றும் எச்சரிக்கை விடுத்தார். வாதிகனுக்கு ஈடாக திருமலையை நிர்மாணிக்க வேண்டும் என்ற என்.டி.ராமராவின் ஆசையையும் நினைவு கூர்ந்தார்!

என்ன சொன்னாலும் என்ன செய்தாலும், ராஜசேகர ரெட்டி மக்களைக் கவர்ந்த, ஏழைப் பங்காளன் என்ற பெயர் பெற்ற தலைவர் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரின் மரணச் செய்தி கேட்டு பலர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டதிலிருந்தே இவ்வுண்மை புலப்படுகின்றது. தலைவருக்கு ஏதொ ஒன்று என்றால் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது திராவிட கட்சிகளுக்கே உரிய பாரம்பரியம்! ஆட்சியில் இருந்த போதும் சரி, இறந்த பின்பும் சரி, ராஜசேகர ரெட்டி அனைத்து விஷயங்களிலும் திராவிடக் கட்சித் தலைவர்களை ஒளிமங்கச் செய்துவிட்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அன்னாருக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழக முதல்வர் அவர்கள் அரசு விடுமுறை அறிவித்ததில் ஆச்சரியம் இல்லையே!

 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

 

174 மறுமொழிகள் ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை

  1. karurtoday on September 6, 2009 at 11:25 am

    i do not see any problem in converting someone from one religion to other. people are changing due to their wish,who are we to stop that? if Hinduism has done enough to attract people then why would they convert? Hinduism has been hijacked by few people and they wanted to control every one and i guess thats not going to happen. Unless people in hinduism change nothing is going to stop the conversion.

  2. ஜெயக்குமார் on September 6, 2009 at 12:34 pm

    தமிழ் ஹிந்து குழுவினருக்கு,

    உண்மை அறியும்குழுவின் அறிக்கை போல் உள்ளது பி.ஆர்.ஹரனின் கட்டுரை.

    ராஜசேகர ரெட்டிக்கு சாமுவேல் என்று ஒரு பெயரா?? இவ்வளவு மோசமாகவா அரசு கஜானாவை தனது மாறிய மதத்திற்கு செலவழித்திருக்கிறார்???

    அப்படியெனில் தனக்கு வாக்களித்த இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் ஏமாற்றி இருக்கிறார்..கோவில் வருமானம் கிறிஸ்தவர்களுக்கு சூறையாடப்பட்டுள்ளது. இவரது இறப்பு வருத்தமான விஷயம் என்றாலும் கிறிஸ்தவத்தின் ஊடுருவலை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.. கடவுள்தான் காப்பாற்றவேண்டும் இந்தியாவை…

    சோனியா சாமுவேல் என அழைப்பாராம்.. இது மதச்சார்பற்ற நாடாம்.. அதிலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லையாம்.. படிச்சவன் சூதும் வாதும் செஞ்சால் அய்யோனு போவான்.. அம்போன்னு போவான்னு சொன்னார் பாரதி.. அவன் வரகவி, தீர்க்கதரிசி.. பலிக்கும் என நம்புவோம்..

  3. RAMGOBAL on September 6, 2009 at 2:18 pm

    மதம் மாறுவது அவரவர் தனிப்பட்ட உரிமை. இது சுதந்திர இந்தியா இங்கு யாரையும் கட்டாய படுத்த முடியாது. மத மாற்றதை எதிர்த்து அவர்களை ஒடுக்க நினைக்கும் இவர்கள்தான் சகிப்புதன்மையுடை இந்துக்கள் என்று பிதற்றிகொள்கிறார் திருச்சிகாரர்.

  4. Valli on September 6, 2009 at 2:59 pm

    Very comprehensive and well written.
    One of the English channels referred to “Serai selam”[ the newsreader twisted his tongue over that I think] -was it Srisailam?
    Was it in error or have they changed the name of the place too?

  5. Kreshna on September 6, 2009 at 4:26 pm

    Hi Haran,
    Revealing Article!!! Good! Couple of months ago, Kumudam Jothidam AMR mentioned about this Rajasekar and the way he is dealing with Tirupathi Devasthanam. Muslims are crazy about taking over the land eg Pakistan, Bangladesh and Kashmir.
    Christians are after people for conversations. We hindus as usual ignornat of everything and watching tamil movies instead.

    Hindus must unite.

  6. Kreshna on September 6, 2009 at 4:44 pm

    To RAMGOBAL,

    Christians only have the gutss to do this conversions in India.Can you do this in a Arab or a islamic country? Will you Christians have the guts to stand outside the Mosque and preach about your Jesus? You will be beaten up and slain by the muslims. Hindu religion is a tolerant religion. But you Chrisitans are misusing it.Thats why we endure Christians, muslims, EVR and DMK. And remember this we are still SURVIVING AND WILL SURVIVE IN THE FUTURE. Stop your nonsense. If you don’t like this site, then buzz off from here.

  7. B. BASKAR on September 6, 2009 at 4:58 pm

    வணக்கம் ,
    அய்யா மதம் மாறுதல் என்பது அவரவர் விருப்பம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மதம் மாற்றுவது என்பது வேறு. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு இந்துக்கோயிலான திருப்பதிக்கு கிருத்துவ நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவும், இந்துக்கோவிலுக்கு அதிகாரிகளாக அதைப்பற்றி ஏதுமறியாத கிறிஸ்துவரை அதிகாரியாக நியமிப்பதும், மற்றும் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுளது. இதை எல்லாம் இத்துணை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்த இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள்தான். நண்பர் திருச்சிக்காரர் சொன்னதில் என்ன தவறு.

    எனக்கு கிறிஸ்துவம் பிடித்து உள்ளது, அதில் இணைகிறேன் என்று ஒருவர் விரும்பி மதம் மாறுவதே மதம் மாறுதல். அன்றி பல பொய்களையும் கட்டுக்கதைகளையும் சொல்லி பல நாடகமாடி ஏழை மக்களை க்ரிஸ்த்துவத்திர்க்கு இழுத்து இணைப்பது மதமாற்றம். முதலில் இதைத்தான் எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

  8. Athiravi on September 6, 2009 at 6:17 pm

    An eyeopener article from Haran.

    I pray that his son should not be the new CM and prefer a neuteral person as CM for Andra.

    It is also rumoured that YSR family collected money from Evangelists church by showing number of converts and construction cost of new churches but by constructing churches and making conversions by using Government funds.

    Let God save our nation.

    Athiravi

  9. Srinivasan on September 6, 2009 at 8:27 pm

    The contents of the article is truth and nothing but truth.
    The Indian media has made “YSR” a imminent person as oer the wishes of their masters, the christian western countries.

    It is shame on the part of Hindus even not knowing what is the background of “YSR”, the wholesale dealer of forced conversion.

    As noted by Veer Savarkar, Hindus shall learn militancy and that only could save Hindus in their own home land in future.

    Srinivasan TR

  10. kuppaandy on September 6, 2009 at 8:29 pm

    நீங்கள் சொல்வது போல் ஆசைவார்த்தைகளையும்,பொய்களையும் நம்பி மதம் மாறினால் எத்தனை நாட்களுக்கு அங்கே நீடிப்பார்? கட்டாய மதமாற்றம் என்பது மிகப்பெரிய காமெடி என்றால் ஆசைகாட்டி மதமாற்றம் என்பது அதை விட பெரிய காமெடி.சாதிக்கொடுமைகள்,தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக நீங்கள் ஒரு துரும்பை எடுத்து போடுங்கள்.பிய்த்து கொண்டு ஓடுபவர்களின் எண்ணிக்கை குறையும்.

  11. Nambi Narayanan on September 6, 2009 at 9:23 pm

    அற்புதம். ஹரனின் பணி தொடரட்டும்.

    திருவோண்ம் – பெருமாளின் பிறநத நட்சத்திரம். சாமுவேலின் இறந்த தினம்.
    அவர் ஹெலிக்காப்ட்டர் விழுந்த இடம் ‘நல்ல மலை.
    மோதிய குன்று ‘ ருத்ர குன்று ‘

    சந்திரபாபு நாயுடுவின் வார்த்தை மெய்யானது பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

  12. ஒகை நடராஜன் on September 6, 2009 at 10:07 pm

    பாரபட்சமற்ற முறையில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரை. ஹரன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

    மதமாற்ற முயற்சிகளை நியாயப் படுத்த முயல்பவர்களுக்கு:

    இயல்பாக இந்துமதத்தை விரும்பாமலோ அல்லது வெறுத்தோ மதம் மாறினால் அதை யாரும் விமர்சிக்கப் போவதில்லை. பலவிதமான யுத்திகளினால் மதமாற்றம் செய்யப்படும் போது கூட மதம் மாறியவர்களை யாரும் விமர்சனம் செய்வதில்லை. ஆனால் மதம் மாற்ற செய்யப்படும் உத்திகளையும் அதிகார மற்றும் அரசு இயந்திர துஷ்பிரயோகங்களையும் அரசு பணத்தை அதற்காக செலவிடுவதையுமே விமர்சனம் செய்கிறார்கள்.

    மதமாற்ற முயற்சிகளை நியாயப்படுத்த முயல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ஓகை நடராஜன்.

  13. Mischief Editor on September 6, 2009 at 11:02 pm

    அருமையான, ஆராய்ந்தெழுதிய கட்டுரை.

    யார் சொன்னதையும் பொருட்படுத்தாமல் ‘மோசமான வானிலை’யில் சென்றதை ‘arrogance of power’ என்பதைத் தவிர வேறு எதில் சேர்ப்பது?

    இவரோடு சேர்ந்த மரணமடைந்த அனைவரின் ஆன்மா(க்கள்) சாந்தியடைவதாக!

  14. திருச்சிக் காரன் on September 6, 2009 at 11:04 pm

    மதம் மாற்றுவேன், அது என் சுதந்திரம் என்கிறார்கள்.

    ஆனால் மதம் மாறிய பின் அவர்கள் செய்வது என்ன ?

    கையிலே கருப்பு உறைக்குள் பைபிளை எப்போதும் வைத்துக் கொள்கிறார்கள். அதில் தவறில்லை.

    அதை விட அவர்கள் முக்கியமாக செய்யும் வேலை பிற மதங்கள் பொய்யானவை என்றும், பிற மதக் கடவுள்கள் ஜீவனில்லாதவை என்றும், தங்கள் கடவுள் மட்டுமே ஜீவனுள்ளவை என்றும், என்னவோ இவர்கள் கடவுளிடம் கைக் குலுக்கி விட்டு வந்தது போல சரடு விடுவார்கள்.

    இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை தான், அசோகர், அக்பர், காந்தி…என எல்லோரையும் உருவாகிய இந்திய சமுதாயம் சகிப்புத் தன்மை உடைய சமுதாயம் தான்.

    இந்த 10,000 வருடத்துக்கும் முந்தைய சமுதாயத்தைப் பாழாக்கும் வகையிலே, என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்றும், என் கடவுள் மட்டுமே சர்வ வல்லமை உள்ள கடவுள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து இந்தியா முழுவதையும் பாலஸ்தீன் போல ஆகும் நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்கின்றனர்.

    இது நடக்காமல் தடுக்கப் போவது ஆண்டவன் தான்.

    என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், என் கடவுள் மட்டுமே சர்வ வல்லமை உள்ள கடவுள் என்றெல்லாம் கூறும் கொள்கையுடையவர் இந்த உலகையே சுடுகாடு ஆக்காமல் ஓய மாட்டார்கள்.

    எனவே இந்தியாவில் எந்த மதம் வேண்டுமானாலும் பரப்பப் படலாம். ஆனால் தன் மதம் மட்டுமே உண்மை , தன் கடவுளை மட்டுமே இந்த உலகம் முழுவதும் வணங்க வேண்டும் என்ற சர்வாதிகார கொடுங்கோல் மதங்களை, கல்லறைகளை உருவாக்கும் மதங்களை பரவ அனுமதிக்க முடியாது.

    உங்ககளை விட எங்களுக்கு தேவ குமாரனைப் பற்றி நன்றாகத் தெரியும். பலர் அவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். சிலர் வணங்கிக் கொண்டும் இருக்கின்றோம்.

    ஆனால் உங்களின் தேவை என்ன? இந்து மதக் கடவுள்களை இகழ வேண்டும், இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். பிறகு வெறி பிடித்த கொள்கை உடைய கூட்டங்கள் மட்டும் இருக்கும்- அவர்களும் அடித்துக் கொண்டு சாக வேண்டும்- இதற்க்கு பெயர் சுதந்திரமா?

    நீங்கள் ஏன் மத மாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டும்? தேவ‌ குமார‌னை வணங்க வேண்டும், அவ்வளவுதானே? நான் வருகிறேன், பலே பேரை கூட்டி வருகிறேன்!ஆனால் பிற‌ தெய்வ‌ங்க‌ளையும் ம‌ன‌மார‌ வணங்குவேன்!

    ஆனால் இவர்களுக்கு தேவ‌ குமார‌ன் பற்றி அதிக‌ அக்க‌றை இல்லை! கெச‌ட்டில் பெய‌ர் மாற்ற‌ம் செய்ய‌ வேண்டும், கணக்கு காட்டி வாழ்க்கையை வளமாக்க வேண்டும்! நான் தேவ‌ ‌ குமார‌னை வண‌ங்குவ‌து கூட‌ இவ‌ர்க‌ளுக்கு இர‌ண்டாம் ப‌ட்ச‌ம் தான். முதலீல் பிற‌ தெய்வங்க‌ளை இக‌ழ‌ வேண்டும்!

    ஆனால் கடவுள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருப்பார்!

    கடவுள் நல்லவங்களுக்கு பல கஷ்டத்தைக் குடுப்பான். ஆனால் கை விட மாட்டான்.

  15. ganesh on September 6, 2009 at 11:31 pm

    ராஜசேகர் ரெட்டியை பற்றி மற்றுமொரு நெருடலான விஷயம். சத்யம் (!?) கம்ப்யூட்டர்ஸ் ஊழலில், செய்தி வெளியாகி ஏறத்தாழ 20 நாட்கள் சென்ற பிறகே CBI விசாரணைக்கு உத்தரவிட்டார் ரெட்டி அவர்கள். மேலும் அவருக்கும் அதில் தொடர்பு உள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

  16. Narayanan M on September 7, 2009 at 10:02 am

    One thing I do not understand about the christian converts is that they still retain their hindu names. Is it out of deference to their mother religion or to fool the public, as YSR did in his life time. YSR’s wife name is Lakshmi. Had a huge chuckle when I see a Christian walking with the name Lakhshmi and a nice little red bindi to boot!! And these people make fun of our religion and customs!!!
    Also, why do Christians celebrate church festivals like the way it is done in Hindu temples (they call it 8 naal nonbu vizha etc..) . Should it be not done the way Vatican or whatever the new churches prescribe in the western world?
    Why do Christian converts seek reservation once they embrace Christianity? After all, Christianity is supposed to be a very noble religion that does not discriminate people based on language or wealth or origin or birth? Why do Dalit Christians have separate burial grounds from other CASTE (LOL) Christians?
    Christianity as usual poses a lot of questions rather than answers. No wonder, people in the west are getting disillusioned with Christianity.

  17. HAREESH on September 7, 2009 at 10:46 am

    Mathasakippu thanmai enpathu Hinduvukku mattum ulla oru vishayam illai.Anal inke Hindu ellam sakitthukkondu vazha vendiyullathu.Kristin muslim vote akal matha thalaivarkal chollum partikkuthan kidaikkum.Hindu vote…? Em mathathamum sammatham entu ettukkolla nankal ready, atupola chollikkolla avarkal munvaramattarkal. athuvarai en matham than sammatham

  18. ஜடாயு on September 7, 2009 at 11:49 am

    வாழ்க்கையின் பெரும் போராட்டங்களில் மிதந்து மாபெரும் மக்கள் தலைவராக
    உருவெடுத்த ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவத்தின் அதிகார உருவாக்க கண்ணியில் ஆந்திரப் பகடையாக மாறிவிட்டார் என்பது இந்த தேசத்தின், சமூகத்தின் துரதிர்ஷ்டம்,கேடு – வேறென்ன சொல்வது?

    நடுநிலையாக எழுதப் பட்ட சிறந்த கட்டுரை ஹரன். ஒவ்வொரு செய்தித் தகவலுக்கும் சுட்டிகளை அளித்திருப்பது கட்டுரையை காத்திரமாக்குகிறது.

    // Nambi Narayanan
    திருவோண்ம் – பெருமாளின் பிறநத நட்சத்திரம். சாமுவேலின் இறந்த தினம்.
    அவர் ஹெலிக்காப்ட்டர் விழுந்த இடம் ‘நல்ல மலை.
    மோதிய குன்று ‘ ருத்ர குன்று ‘

    சந்திரபாபு நாயுடுவின் வார்த்தை மெய்யானது பற்றி யாரும் குறிப்பிடவில்லை. //

    இத்தகைய பார்வை அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியது. சிறிதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. அப்போ ரெட்டி கூடச் சென்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?? அவர்களையும் பெருமாள் தண்டித்து கொன்று விட்டாரா??

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்காக மனித காரணங்களையும் (human errors), சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமலிருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நம்பி நாராயணன் போன்ற பெரியவர் இப்படி மூட நம்பிக்கை கலந்த குரூர திருப்தியை வெளிப்படுத்துவது வருத்தமளிக்கிறது.

  19. RAMGOBAL on September 7, 2009 at 12:08 pm

    திருச்சிகாரர்….
    ஆகமொத்தத்தில் யாருக்கும் சகிப்புதன்மை கிடையாது. பிதற்றுவது மற்ற மதத்தின் மீது வெறியை மட்டுமே தூண்டும். ஆசைகாட்டியும், கட்டாயபடுத்தியும் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் அவர் பேராசை பிடித்த மூடராக இருக்கவேண்டும் அல்லது உங்கள் மதத்தில் கட்டுகதைகளுக்கு இதுவே பரவாயில்லை என்று இருக்க வேண்டும். ஆனால் எவரையும் கட்டாய படுத்த முடியாது அவ்வாறு கட்டாய படுத்தினால் RSS, vhp கூட்டங்கள் சும்மா விட்டுவிடுமா… ஒரு மாதத்திற்கு முன்பு கிரிஸ்துவ மதத்திலிருந்து 200 பேர் கொண்ட ஒரு கிராமமே இந்து மதத்திற்கு மாறியது (DINAMALAR ). அதற்காக அவர் பொறாமையோ… கோபமோ… வெறி பிடித்தோ திரியவில்லை. உண்மையில் சொல்ல போனால் போலி சகிப்பு தன்மையுடையவரகளே இந்துக்கள் ஆனால் அனைவரும் அல்ல.

    (Edited and published – Tamilhindu Editorial.)

  20. Kannan on September 7, 2009 at 12:14 pm

    Y. Samuel Rajasekar Reddy was a crook. God is there to take care of the activities of such crooks. When thugs from Amma’s TN Police landed in Mahbood Nagar to arrest Kanchi Sankaracharya on false and imaginary cases, Samuel Reddy knew the story behind. However, this scoundrel kept quiet and cooperated with Amma’s police. Amma’s police spread the false message that Kanchi Acharya was planning to fly to Nepal in a helicopter. This man was a party to the conspiracy designed by Amma. He allowed the TN police to take Kanchi Acharya to be taken out of his state handcuffed. Samuel Reddy died on a Pradosham day on Rudrakonda hills.

    (Edited and published – Tamilhindu Editorial.)

  21. களிமிகு கணபதி on September 7, 2009 at 12:36 pm

    First class article.

    Shows the reality.

    Hope people get disillusioned.

    Please continue.

  22. Kannan on September 7, 2009 at 12:47 pm

    Many people ask why did other innocents die in the crash? No answer. Better stay away from crooks…else pay the penalty.

  23. RAMGOBAL on September 7, 2009 at 12:49 pm

    திருச்சகாரரே…

    இவர்கள் தான் சகிப்புதன்மையுடையவர்களா… சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

  24. ஜயராமன் on September 7, 2009 at 1:34 pm

    திருவாளர். சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் மதிப்பு அவர் காங்கிரஸூக்கு வாரி வழங்கிய பணமூட்டை சுரங்கங்களினால் ஏற்பட்டது. இன்று மன்மோகன் சிங்கின் அரசிற்கு பணத்தால் ரோடு போட்டு அதில் நிறைய்ய மண்டூக எம்மெல்லேக்களையும் அனுப்பித்தந்த பெருமையும் முக்கியத்துவமும் சாமுவேல் ரெட்டிகாருவுக்கு உண்டு.

    இதனாலேயே, சம்பவம் நடந்த உடனே மேடத்தின் அடிமையாகிய காங்கிரஸ் சர்க்காருக்கு எலும்பில் சுரம் வந்துவிட்டது. வரலாறு காணாத அளவிற்கு அனைத்துப் படைகளும் சாமுவேல் காருவின் சடலத்தை ராப்பகலாக தேடினார்கள்.

    திருப்பதி மலையை திருடப்பார்த்தவர் இந்த ரெட்டிகாரு. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கிருத்துவரே உப தலைவராக போடப்பட்டார், எல்லாரின் எதிர்ப்பையும் மீறி. பல முக்கிய கோயில் காண்டிராக்டுகள், பிரசாதம் உட்பட, கிருத்துவர்களின் கைகளுக்குப்போயின.

    சாமுவேல் ராஜசேகர ரெட்டிகாரு ஒரு மதமாற்ற கிருத்துவ வெறியர். அவர் தன்னைச்சுற்றி எல்லா துறைகளிலும் மதமாறிய கிருத்துவர்களையே வைத்துக்கொண்டார்.

    அவரோடு சேர்ந்து மறித்த சுப்ரமணியம், மற்றும் வெஸ்லி இருவரும் மதமாறிய கிருத்துவர்கள் என்பது அழகாக மறைக்கப்படுகிறது. சாமுவேல் ரெட்டிகாருவின் பெயரைக்கூட அழகாய் ஊடகங்கள் மறைக்கின்றன.

    ரெட்டிகாரு இரண்டாம் முறை பதவியேற்றபின் உடனே போய் வந்த புனிதயாத்திரை ஜெருசேலத்திற்கு. பிறகு, அனைத்து கிருத்துவர்களும் ஜெருசேலம் போக மானியம் வழங்க உத்தரவு போட்டார் இவர்.

    கிருத்துவத்தை வளர்ப்பது தப்பில்லை. ஆனால், முக்கிய மந்திரியாய் உட்கார்ந்து அதைச்செய்யக்கூடாது. அதிலும், இந்துக்களின் கோயில்களின் பணத்தை எடுத்து அதை செய்யக்கூடாது. அப்படி களவாடியவர் சாமுவேல் ரெட்டிகாரு.

    தெய்வம் நின்று கொல்லும். புராதனமான இந்து திருப்பதி மலையை கையாள முயற்சித்த ரெட்டிகாரு பிரதோச தினத்தற்கு சிவன்மலையில் (ருத்ரகோண்டா மலை) சிதறி எறிந்து மறைந்து போனது இறைவனின் இச்சை என்றே எனக்குத்தோன்றுகிறது.

    இப்போது அவர் மகன் ஸ்டீபன் ரெட்டிகாருவை முதன்மந்திரியாக்க ஜால்ராக்களின் ஓலம் எழுந்திருக்கிறது. ஸ்டீபன் ரெட்டிகாரு நடத்தும் டிவி மற்றும் பல பணமுதலை தொழில்கள் நிரந்தரமாக ஆந்திரத்தை சுரண்டவும், இத்தாலிய காங்கிரஸூக்கு பைனான்ஸ் செய்யவும் இந்த சதி செய்யப்படுகிறது. மனவாடுகள் இதற்கு மயங்கிவிடக்கூடாது.

    கடப்பா தாலுக்காவை ரெட்டிகாருவின் பெயரில் மாற்றப்போகிறார்களாம். கொடுமைடா சாமு, சாரி, சாமி!!!

    நன்றி

    ஜயராமன்

  25. திருச்சிக் கார‌ன் on September 7, 2009 at 1:44 pm

    ந‌ண்ப‌ர் ராம‌ கோபால்,

    என்ன‌ ச‌கிப்புத் த‌ன்மை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்க‌ள்?

    ர‌மலானீல் நோன்பு இருக்க‌ வேண்டுமா?

    என் த‌லைவ‌னைப் போல‌ வெறும‌னே கஞ்சி குடித்து க‌தை அளக்காம‌ல், காலை 4 ம‌ணி முத‌ல் மாலை 6 ம‌ணி வ‌ர‌ நீர் கூட‌ அருந்தாம‌ல் காற்றை ம‌ட்டும் சுவாசித்து நோன்பு இருக்கிறொம்.

    உல‌கின் எல்லா ம‌த‌ங்க‌லையும் புரிந்து கொண்டு வூக்குவிக்கும் ஒரே ம‌த‌மான‌ இந்து ம‌த‌ம் அழிந்து விடுமோ என்ற‌ அச்ச‌த்தினாலேயே, பல‌ இந்துக்க‌ள், அப்ப‌டி இந்து ம‌த‌ம் அழியா வ‌ண்ணம் காக்க பிற‌ ம‌த‌ங்க‌ளை எதிர்க்கிறார்க‌ள்.

    நாங்க‌ள் மத மாற்ற‌ம் செய்ய‌ மாட்டோம் என்று பிற‌ ம‌த‌த்த‌வ‌ர் கூறினால், அதை உண்மையாக‌க் க‌டை பிடித்தால், இந்துக்க‌ள் எல்லா ம‌த‌ங்க‌ளையும் மிக‌ சிற‌ப்பாக‌ பின் பற்றிக் காட்டுவார்க‌ள்‍!(நான் என்னையும், என் ந‌ண்ப‌ர்க‌ளையும் வைத்து இதைச் சொல்கிரேன். நான் இந்து ம‌த‌த்தின் பிர‌தி நிதி அல்ல‌. ந‌ம்பி, ராம‌, ஜ‌டாயு த‌ய‌வு செய்து ச‌ண்டைக்கு வ‌ர‌ வேண்டாம்)!

    இந்துவாக‌ இருந்தால் கோவிலுக்கும் போக‌லாம், ச‌ர்ச்சுக்கும் போக‌லாம், நோன்பும் இருக்க‌லாம், ம‌சூதிக்கும் போக‌லாம், க‌ட‌வுள் இல்லை என்றும் வாதாட‌லாம்!உண்மையை ஆராய‌லாம். அறிந்த‌ உண்மைக‌ள வெளிப் ப‌டுத்த‌லாம்!

    இதில் எதையும் இந்து ம‌த‌ம் த‌டை செய்ய‌வில்லை. எந்த‌ வ‌ழியில் வேண்டுமானாலும், உருவ‌த்திலோ, உருவ‌ம் இல்லாம‌லோ வ‌ண‌ங்க‌ த‌டை இல்லை. இந்து ம‌த‌ம் யாரையும், எந்த‌ மார்க்க‌த்த‌யும் வெறுக்க‌ கூற‌வில்லை.

    “அத்வேஷ்டா ( வெறுப்பில்லாத‌வ‌னாய்), ச‌ர்வ‌ பூதானாம் மைத்ர‌ (எல்லா உயிர்க‌ளுட‌னும் சினேக‌ பாவ‌த்துட‌ன்), க‌ருண‌ ஏவ‌ ச‌(க‌ருணையே உடைய‌வ‌னாய்)” -இப்ப‌டி இருப்ப‌வ‌னைத் தான் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்” என்று க‌ட‌வுள் சொல்லி இருக்கிறார்.
    இது இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டை- இதை நான் தைரிய‌மாக‌ச் சொல்கிரேன்! இது எல்லா இந்துக்க‌ளுக்குமான‌ க‌ருத்து!

    ஆனால் பிற‌ ம‌த‌ங்க‌ளை அழிக்க‌ வேண்டும்,குறிப்பாக‌ இந்து ம‌த‌த்தை அழிக்க‌ வேண்டும், என்று செய‌ல் ப‌டுவ‌தை “ச‌கிப்புத் த‌ன்மை” என்ற பெய‌ரில் அனும‌திக்க‌ முடியாது.

  26. திருச்சிக் கார‌ன் on September 7, 2009 at 1:49 pm

    //TN Police landed in Mahbood Nagar to arrest Kanchi Sankaracharya on false and imaginary cases, Samuel Reddy knew the story behind. However, this scoundrel kept quiet and cooperated with Amma’s police. Amma’s police spread the false message that Kanchi Acharya was planning to fly to Nepal in a helicopter. This man was a party to the conspiracy designed by Amma. He allowed the TN police to take Kanchi Acharya to be taken out of his state handcuffed//

    க‌ர்ம‌ம், க‌ர்ம‌ம், கிர‌ஹ‌ச்சார‌ம‌ய்யா! இவ்வ‌ளவு ந‌ட‌ந்தும் புத்தி லேது!

  27. திருச்சிக் கார‌ன் on September 7, 2009 at 1:56 pm

    அதாவது இயெசுவை ம‌திக்கிறேன், பாராட்டுகிரேன் என்றால், ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து.

    ஆனால் இந்து ம‌த‌த்தை சுவாஹா செய்ய‌ முய‌ன்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ப் ப‌ட்ட‌து என்று எழுதினாலும் ந‌ண்ப‌ர் ஜ‌டாயுவுக்கு க‌டும் சின‌ம் வ‌ருகிற‌து.

    அப்ப‌ ஜ‌டாயுவின் கொள்கைதான் என்ன?

    உண்மையிலேயே புரிய‌வில்லை!

  28. Palaniyappan on September 7, 2009 at 3:43 pm

    Wonderful article. The following article that appeared in thinnai site on 2005 provides all the details of the atrocities done by Y Samuel Rajasekhara Reddy and his ilk:

    முதல்வர் Y ஸாமுவேல் ராஜஸேகர ரெட்டியினால் ஆண்டியாக்கப்படும் அறநிலையத்துறை

    Friday September 2, 2005

    திண்ணை

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=80509021&format=html

  29. baskar on September 7, 2009 at 3:51 pm

    வணக்கம்,

    ஸ்ரீ ஜடாயு அய்யா சொல்வதை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஸ்ரீ நம்பி அவர்கள் சொன்னது போல் நாம் கருத்து எடுத்துக்கொண்டால் நமது கடவுளர்களும் சாதாரண மனிதர்கள் போல் பழி வாங்கும் மனமுடயர் என்பது போலல்லவா ஆகிவிடும்.

    நமது எதிர்ப்புகள் ராஜசேகர ரெட்டி என்பவர் மீதானது அல்ல. அவர் துர் மரணம் அடைந்தது உண்மையில் வருந்த தக்க விஷயம். ஆனால் நமது எதிர்ப்பு அவரது அதிகார துஷ்ப்ரயோகம், மதமாற்றும் வெறித்தனம், மற்றும் திருப்பதி என்ற இந்துக்கோயிலின் செல்வங்களால் தன்னை வளம் பெறசெய்த கிறிஸ்துவத்திற்கு நன்றிக்கடன் செய்ய முயன்றது போன்ற அவரது தகாத செயல்களைத்தான்.

    மோசமான வானிலை குறித்து எச்சரித்தும் அவர் பயணித்து உள்ளார் என்பதுவே அவரின் விதி முடிந்தது என்பதை கட்டுகிறது. ஏனெனில் விதியின் பாதையிலேதான் மதியின் பயணம் என்பதும் இந்துக்களின் தர்மமாகும். ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கிறிஸ்துவ தர்மம்.

    குப்பான்டிக்கு, அய்யா எதோ ஒரு காலத்தில் தொழில் சார்ந்து வகுக்கப்பட்ட வர்ணங்கள் பிற்காலத்தில் சாதி என்று மாறி பாடுபடுத்தியது, இன்றும் சில இடங்களில் பழமைவாதிகளால் சாதிக்கலவரங்கள் ஏற்ப்படுகிறது என்றால் பல காலங்களாக ஊறித்திளைத்தவர் திடீரென்று தங்களை மாற்றிக்கொள்வர் என்பது சிரமமே. நாங்களும் அதை மறுக்கவில்லை.
    ஆனால் இளைய தலைமுறையினர் அதை வெகுவாக மாற்றி உள்ளனர் என்பது கண்கூடான உண்மை அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு தலித் ஆனவர் தனது குலத்தொழிலை விட்டு கொஞ்சம் உயர் தொழில் செய்வாராகின் அவரை யாரும் ஒதுக்கி வைப்பது இல்லை. அவரின் தொழில் மாறிய போதே அவரின் வர்ணம் மாறுகின்றது. இதுவே இயல்பு.

    மேலும் தீண்டாமை என்று மீண்டும் மீண்டும் அரசியல் பண்ணவேண்டாம். எப்போதோ அதற்க்கு சாவு மணி அடிக்க தொடங்கியாயிற்று. இன்று மிக குறைந்து போயுள்ள தீண்டாமை நோயானது , மிக விரைவில் ஒருநாள் மரணம் அடையும்.

    ஸ்ரீ ராம் கோபால் அவர்களே, நாம் வீசும் வார்த்தைகள் மட்டுமே சுடும். ஏனெனில் இது வெறும் விவாதம் மட்டுமே. நமது கருத்துக்களை அள்ளி வீசுகிறோம். அதற்க்காக சகிப்பு தன்மை இல்லாதவர்கள் என்ற தங்களின் கருத்து பொய்யானது. உங்களின் வீடு அண்டை வீட்டாரால் ஆக்ரமிக்கப்ப்படும்போது நீங்கள் சகித்துக்கொண்டு இருப்பீர்களா,
    அவர்களின் வீட்டுக்குள் என்ன செய்தாலும் நீங்கள் கேட்கப்போவது இல்லை, ஆனால் உங்கள் காம்பவுண்டை தாண்டி உங்கள் எல்லைக்கு வந்து குழி தொண்டினால் அவர்கள் ரோஜா செடி வைப்பதாகவே இருப்பினும் நீங்கள் வேடிக்கை பார்க்கப்போவதில்லையே, அதுபோல்தான் எமது குரலும் என்பதை உணர்க.

  30. திருச்சிக் கார‌ன் on September 7, 2009 at 5:29 pm

    //எதோ ஒரு காலத்தில் தொழில் சார்ந்து வகுக்கப்பட்ட வர்ணங்கள் பிற்காலத்தில் சாதி என்று மாறி பாடுபடுத்தியது, இன்றும் சில இடங்களில் பழமைவாதிகளால் சாதிக்கலவரங்கள் ஏற்ப்படுகிறது என்றால் பல காலங்களாக ஊறித்திளைத்தவர் திடீரென்று தங்களை மாற்றிக்கொள்வர் என்பது சிரமமே. நாங்களும் அதை மறுக்கவில்லை.
    ஆனால் இளைய தலைமுறையினர் அதை வெகுவாக மாற்றி உள்ளனர் என்பது கண்கூடான உண்மை அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு தலித் ஆனவர் தனது குலத்தொழிலை விட்டு கொஞ்சம் உயர் தொழில் செய்வாராகின் அவரை யாரும் ஒதுக்கி வைப்பது இல்லை. அவரின் தொழில் மாறிய போதே அவரின் வர்ணம் மாறுகின்றது. இதுவே இயல்பு. //

    //மேலும் தீண்டாமை என்று மீண்டும் மீண்டும் அரசியல் பண்ணவேண்டாம். எப்போதோ அதற்க்கு சாவு மணி அடிக்க தொடங்கியாயிற்று. இன்று மிக குறைந்து போயுள்ள தீண்டாமை நோயானது , மிக விரைவில் ஒருநாள் மரணம் அடையும்//

    Great, Great!

    Baaskar Aiyaa Rocks!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.