ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். இந்த மாதிரியான கோர விபத்தில், அதுவும் அரசியல் வாழ்வின் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது, மரணம் எய்வதென்பது மிகவும் துக்ககரமான விஷயம். அன்னாருடைய குடும்பத்தாருக்கும், நண்பர் உறவினர்க்கும் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்கட்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் வாழ்வு
முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலையே தொழிலாகக் கொண்டிருந்த ராஜசேகர ரெட்டி, கடப்பா தொகுதியிலிருந்து நான்கு முறை லோக்சபாவிற்கும், புலிவெந்துலா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்த ஒரு தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் திணறிக் கொண்டிருந்த போது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார் ரெட்டி. 1983லிருந்து 1985 வரையும், பின்னர் 1998லிருந்து 2000 வரையும் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பேற்ற ரெட்டி, 1980லிருந்து 1983 வரை மாநில அமைச்சராகவும் பணி புரிந்தார். தெலுகு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக முதலமைச்சராக (1999-2004) இருந்தபோது சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார் ரெட்டி.
2004-ல் நடக்கவிருந்த பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னால், 2003-ன் இறுதியில் மகா பாதயாத்திரை மேற்கொண்ட ராஜசேகர ரெட்டி, 1500 கிலோமீட்டருக்கும் மேல் மாநிலம் முழுவதும் பல கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்து, காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினார். தெலுகு தேசம் கட்சி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையே எதிர்பாராத அளவில் அமைந்தது அந்த வெற்றி. சட்டசபையில் 185 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை அடைந்து முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார் ராஜசேகர ரெட்டி.
சமீபத்தில் நடந்து முடிந்த 2009 தேர்தல்களில் “முன்னேற்றம் மற்றும் நம்பகத்தன்மை” என்கிற கோட்பாட்டில் தேர்தல் களத்தைச் சந்தித்து, பாராளுமன்றத்தில் 33 இடங்களையும், சட்டசபையில் 156 இடங்களையும் பெற வழிசெய்து, மீண்டும் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரெட்டி. ஐந்து தினங்களுக்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும்போது, பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், பலத்த மழை காரணமாகவும், தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாகவும், மலையின் உச்சியில் மோதி நல்லமலா காட்டுப் பகுதியில் எரிந்து வீழ்ந்ததனால், மரணம் அடைந்தார்.
மக்கள் நலத் திட்டங்கள்
2004லிருந்து 2009 வரை ஆட்சி செய்யும்போது, தற்போது அனைத்து மாநிலங்களிலும் பழக்கத்திற்கு வந்துவிட்ட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, போன்ற இலவசத் திட்டங்கள் மட்டுமல்லாமல், வேறு பல நற்திட்டங்களும் செயல் படுத்தினார். “ஜலயக்ஞம்” என்ற பெயரில் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பெரிய, மத்திய, சிறிய நீர்பாசனத் திட்டங்கள், “ஆரோக்ய ஸ்ரீ” என்ற பெயரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், “பவல வட்டி” என்ற பெயரில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், மற்ற ஏழை மக்களுக்கும் சுய வேலை (சுய வியாபார) ஏற்பாட்டிற்காக குறைந்த வட்டியில் (ஆண்டுக்கு 3 சதவிகிதம்) கடன் வசதி, ”இந்திரம்மா இல்லு” என்ற பெயரில் கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டித் தருதல், போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்து செயல் படுத்தினார்.
மேற்சொன்ன திட்டங்கள் பெரும் வெற்றியடைந்தன என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட வகையில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தான் நடந்த ஊழல்கள் வெளி வரும் என்று எதிர்பார்ர்க்கப் படுகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் ஆட்சியில் இருப்போருக்கு “நல்ல வருவாய்” தருவனவாக இருந்தால், அடுத்து வருகின்ற அரசாங்கத்தினாலும் அதே திட்டங்கள் வேறு பெயர்களில் செயல் படுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ஆயினும், நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் பெருமளவிற்கு குறைந்து போனது. எனவே, ஏழைகளின் பாதுகாவலனாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள்
அவருடைய ஆட்சி காலத்தில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். எதிர் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ரெட்டியின் குடும்பம் “சந்தூர் பவர் நிறுவனம்”, ”ஜகதி பப்ளிகேஷன்ஸ்”, ”பாரதி சிமெண்ட் கார்பரேஷன்” ஆகிய நிறுவனங்களின் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு சட்டசபையில் பெரும் விவாதத்திற்குள்ளானதால், ராஜசேகர ரெட்டி வேம்பள்ளி மண்டல் என்ற பகுதியில் இருக்கும் தன்னுடைய இடுபுலபயா எஸ்டேட்டிலிருந்து, அரசாங்க மற்றும் வனத்துறைகளுக்குச் சொந்தாமான 614 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தார். இருந்தாலும் பல ஆண்டுகலாக அந்நிலத்தைச் சொந்தம் கொண்டாடியமைக்காக, ஆந்திரப் பிரதேச விவசாய நில உச்சவரம்பு சட்டம் 1973, ஆந்திரப் பிரதேச நில மாற்றம் தடுப்புச் சட்டம் 1977, ஆந்திரப் பிரதேச வனங்கள் சட்டம் 1967, ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம், என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் மாநில முதல் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?
நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய “சத்யம்” நிறுவன ஊழலில் ராஜசேகர ரெட்டிக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஊடகங்களும், அனைத்து எதிர்கட்ச்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் சத்யம் குழுமத்தைச் சார்ந்த “மைதாஸ்” நிறுவனத்திற்கும் ரெட்டி அரசு பல பணியொப்பந்தங்களை அளித்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ராமோஜி ராவை, அவர் சந்திரபாபு நாயுடுவின் நண்பர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரைக் குறி வைத்து பல வகைகளில் அவருக்கு பெரும் சங்கடங்கள் ஏற்படுத்தியதற்காகவும், அவரை பல விதங்களில் செயல் படமுடியாமல் செய்ததற்காகவும், சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானார் ராஜசேகர ரெட்டி. (மேலும் விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்).
ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், அனைத்து விதமான தவறான காரணங்களுக்காகவும், ஊடகங்களில் அடிபட்டது. தேவஸ்தானத் தலைவர் பதவிக்கு ஆள் தேர்ந்தெடுப்பது தொடங்கி, கணக்கு வழக்குகள் சரியில்லாமை, நகைகள் மற்றும் தங்கக் காசுகள் குறைவது, நிர்வாகத்தில் ஊழல்கள், நேர்மையில்லாமை, திருமலையில் கிறிஸ்துவ மதமாற்றப் பிரச்சாரங்கள், சமூக விரோத செயல்கள் வரை எல்லா வகையிலும் திருமலைக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் அவரது ஆட்சி அமைந்தது. தேவஸ்தான நிர்வாகத்தை முழுமையாகக் கலைத்து விட்டு புதிய நேர்மையான நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று ஆகஸ்டு மாத இறுதியில் தான் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.
ராஜசேகர ரெட்டியின் ஊழலை விவரிக்கும் விதத்தில், , “தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதில் தலை சிறந்தவராக விளங்கும் அளவிற்கு, அவருடைய ஆட்சியில் ஊழல் பெருகிற்று” என்று செப்டம்பர் 4-ஆம் தேதி இதழில், “தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்” கூறியுள்ளது. அன்பிற்குரிய “சாமுவேல்” இல்லாதது சோனியாவிற்கு பேரிழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமோ! (ரெட்டியை சாமுவேல் என்று அன்புடன் அழைப்பது காங்கிரஸ் தலைவி சோனியாவின் வழக்கம் என்று பத்திரிகை வட்டாரங்களில் பேச்சு உண்டு).
மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலைமை
மாநிலத்தின் பாதுகாப்பைப் பொறுத்த அளவில் சாமுவேல் ரெட்டியின் ஆட்சி பல தவறுகளைச் செய்தது என்று சொல்லலாம். 2004 தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக இருந்த சூழ்நிலையோடு கூட, ரெட்டியார் நக்சலைட்டுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட சமரசமும், காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த சமரசத்தின் படி, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி அவர்களைப் ”அமைதிப் பேச்சு வார்த்தை”க்கு அழைத்தார் ரெட்டி. இந்த அமைதிப் பேச்சு என்பது தீவிரவாத, மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தான் சாதகமாக இருக்குமேயன்றி, மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது. இந்த உண்மையை சென்ற கால அனுபவங்கள் நமக்குப் பலமுறை உணர்த்தியுள்ளன.
அதேபோல், நக்சலைட்டுகள் ரெட்டியின் அமைதிப் பேச்சு எனும் சடங்கைத் தங்களுக்கு ஏதுவாகப் பயன்படுத்தி, பேச்சை பல மாதங்கள் இழுத்தடித்து, இடைப் பட்ட காலத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மாவோயிஸ்டுத் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். தங்கள் ஆள்பலத்தையும், ஆயுத பலத்தையும், கூட்டிக் கொண்டனர். அதன் விளைவாக, நேபாளத்திலிருந்து ஆந்திரம், ஏன் தமிழகம் வரை, பதினைந்து மாநிலங்களுக்கும் மேலாக தங்கள் இருப்பை விரிவு படுத்தி ”சிவப்பு அரண்” ஏற்படுத்திக் கொண்டனர். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் ஒரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்த நக்சல்-மாவோயிஸ்டு பிரச்சனை ராஜசேகர ரெட்டியின் புண்ணியத்தில் மீண்டும் பெரிதும் வளர்ந்தது.
நக்சல்-மாவோயிஸ்டு கூட்டணியானது விடுதலைப் புலிகள் மற்றும் ஜிகாதிகள் ஆகியோருடனும் தங்கள் தொடர்பை விரிவு படுத்திக் கொண்டது. ஆந்திரா தமிழகத்திற்கு இடையிலே நடந்த ஆயுதக் கடத்தல்கள், தமிழகப் போலீசார் கைப்பற்றிய ஆயுதங்கள், கைது செய்த தீவிரவாதிகள், விடுதலைப் புலிகள், ஆகிய விவரங்கள் இந்தக் கூட்டணியை உறுதி செய்கின்றன. ரெட்டியின் ஆட்சி காலத்தில் தான், ஹைதராபாத்தில் மெக்கா மசூதி, லும்பினி பார்க் ஆகிய இடங்களில் பெரும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து, கொடிக்கணக்கான ரூபாய் அளவில் பொருள் சேதமும் விளைந்தது. அந்தக் குண்டு வெடிப்புகளின் விச்சாரணைகளில் இது வரை எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலமும் நக்சல் பீதியிலிருந்து மீளவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் கொலைகளாலும், மற்ற சமூக விரோத நிகழ்வுகளாலும் ஆந்திர மாநிலத்தில் பொதுவாக சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கிறிஸ்துவ மயமாக்கப் படும் ஆந்திரம்
2004-ல் ராஜசேகர ரெட்டி அரசு அமைந்ததிலிருந்து, கிறிஸ்துவ எவாங்கலிக்க குழுக்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக கிராமப் புறங்களில் கூட்டுகூட்டாக மக்கள் மதமாற்றம் செய்யப் படுகின்றனர். சர்ச்சுகளிடமும் கிறிஸ்துவ மிஷனரிகளிடமும் ரெட்டி பகிரங்கமாக மிகவும் நெருக்கமாகப் பழகுவதால், அவைகள் துணிச்சலுடன் செயல் படுகின்றன. இந்துக்களின் புனிதத் தலங்களான பத்ராசலம், சிம்மாசலம், ஸ்ரீசைலம், அஹோபிலம், மங்களகிரி, காளஹஸ்தி, போன்ற பல இடங்களில் எவாங்கலிக்கக் குழுக்கள் மதமாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்டன. அவர்கள் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை! ரெட்டி அவர்களும் அதற்குப் பல விதங்களிலும் மறைமுகமாக உதவி வந்திருக்கிறார்.
ஆகஸ்டு 22, 2006-ல் போட்ட அரசாணை எண் 21-ன் படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சர்ச்சுக்கும் செப்பனிடும் வேலைகளுக்காக 80,000 ரூபாயும், புதிதாகக் கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது. (”CM Reddy okays public money for Churches” – Deccan Chronicle dated 23rd August 2006). மாநிலத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் இருக்கும்போதும், அக்கோவில்களில் வேலை செய்யும் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அர்ச்சகர்கள் மாதம் வெறும் ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ருபாய் வரை மட்டுமே சம்பளம் பெற்று வந்த போதும், கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் வெறும் பதினைந்து சதவிகிதமே, கோவில்களின் பராமரிப்புக்கும், பணியாளர்களின் சம்பளத்திற்கும், திருப்பிக் கொடுக்கப் படும் போதும், இம்மாதிரி கிறிஸ்துவ மதத்தினருக்கு மட்டும் அரசாங்க சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. கோவில்களிலிருந்து வரும் மிச்சமுள்ள எண்பத்தைந்து சதவிகித வருவாயும், அரசின் மற்ற திட்டங்களுக்கும், சிறுபான்மையின சமுதாய நலத் திட்டங்களுக்கும் செலவழிக்கப் படுகின்றன. மேலும் சிம்மாசலத்தில் உள்ள நரசிம்ஹஸ்வாமியின் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் பசு மற்றும் கன்றுக்குட்டி தானங்களை சரிவர பராமரிப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கசாப்பு ஆலைகள் வைத்துள்ளவருக்கு பசுக்கள் ஏலம் விடப் படுகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற அந்தக் கோவிலிலிருந்து வரும் நல்ல வருவாயைக் கொண்டு ஒரு கோ-சாலை (பசு மடம்) அமைக்கக் கூட மனமில்லை ரெட்டியின் அரசுக்கு. (மேலும் விவரங்கள் இங்கே).
ராஜசேகர ரெட்டியின் அரசாங்கம் கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்களை விற்று இருபதாயிரம் கோடி ருபாய் நிதி திரட்ட முடிவு செய்தது. பல இடங்களில் அந்நிலங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் சர்ச்சுகளுக்கும் மிஷனரிகளுக்கும் கொடுக்கப் பட்டதாகவும், சில இடங்களில் சர்ச்சுகளும், மசூதிகளும் கட்டப்ட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் க்றுஸ்துவர்களின் ஜனத்தொகைகுச் சற்றும் சம்பந்தமில்லாமல் ஆயிரக் கணக்கான சர்ச்சுகள் மாநிலம் முழுவதும் தோன்றின. ஆங்காங்கே பாதிரிமார்களும், எவாங்கலிக்கர்களும், தங்களுடைய “அறுவடை”யைச் செய்ய ஆரம்பித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப் புரங்களில், கும்பல் கும்பலாக அப்பாவி மக்கள் மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் ஜனத்தொகை 1.5 சதவிகிதமே என்று அரசின் ஆவணங்கள் (2001 ஜனத்தொகை எடுப்பு) சொன்னாலும், பத்திலிருந்து பன்னிரண்டு சதவிகிதம் இருக்கலாம் என்று சர்ச்சுகளே நம்புகின்றன. பெருமளவில் செய்யப்படும் மதமாற்றங்களை எண்ணிப்பார்க்கும்போது, 12% சாத்தியமே! மதம் மாறிய பலர் அதை வெளியில் அறிவிப்பதில்லை. இந்து ஷெட்யூல்டு பிரிவினருக்கு மட்டுமே அரசு சலுகைகள் உண்டு என்பதால், மதம் மாறியவர்கள் அச்சலுகைகளை வெளியில் அனுபவித்துக் கொண்டே உள்ளுக்கு கிறீஸ்துவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மதம் மாறியவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் ரெட்டியின் அரசு சட்டமன்றத்தில் கிறிஸ்தவராக மற்றும் முஸ்லிமாக மதம் மாறிய ஷெட்யூல்டு வகுப்பினருக்கும், இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில், ஏழு கிறிஸ்துவருக்கு ஒரு சர்ச்சும், 40 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதியும், 350 இந்துக்களுக்கு ஒரு கோவிலுமாக வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சிறிய, நடுத்தர, பெரிய வழிபாட்டுத் தலங்களைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மாநிலத்தில் தற்போது 148,000 சர்ச்சுகளும், 176,000 மசூதிகளும், 190,000 கோவில்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).
சட்டத்திற்குப் புறம்பான தங்களுடைய செயல்களைக் கண்டுகொள்ளாமல் மறைமுக ஆதரவுடன் அரசு இருப்பதனால் துணிச்சல் அதிகம் பெற்ற சர்ச்சுகளும், மிஷனரிகளும், திருமலை திருப்பதியை மதமாற்றத் தாக்குதலுக்கு உள்ளாக்க தீர்மானித்தன. அதை ஊக்கப் படுத்தும் விதமாக, ரெட்டி, ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் (27.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக்கொண்டு அவற்றை தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார். வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கட்டப் படும், மலை மேல் போக கேபிள் கார் வசதி செய்யப்படும் என்றும் சொன்னார். இந்துக்கள் அதிர்ந்து போயினர். நல்ல உள்ளம் கொண்ட, ஏழுமலையானின் பக்தர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம், ஏழு மலைகளும் பகவான் வெங்கடாஜலபதிக்கே சொந்தம் என்றும் அரசாணை செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. ரெட்டியும், பொங்கியெழுந்த இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து தன் எண்ணத்தைக் கைவிட்டார். {Judgment of a Division Bench of the Andhra Pradesh High Court1997 (2) ALD Page 59 (DB) – Tallapakam Koppu Raghavan Vs State of A.P}.
ஆனாலும், திருமலையிலும் திருப்பதியிலும் மிஷனரிகள் மதமாற்றச் செயல்களை நிறுத்துவதாக இல்லை. ஐதராபாத் சாரதா பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்வருபானந்தேந்திர ஸ்வாமிகள் புது தில்லியில் இந்து குருமார்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் ஆந்திராவில் நடக்கும் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, உடுப்பி பெஜாவர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், மற்ற இந்து இயக்கங்களுடன் சேர்ந்து திருப்பதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பொதுவாக ஆந்திர மாநிலத்திலும், குறிப்பாக திருமலை திருப்பதியிலும் நடக்கும் கிறிஸ்துவ மிஷனரிகளின் சட்ட விரோத செயல்களுக்கும், மதமாற்றத்திற்கும், கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு ஜி.பிக்ஷாபதி தலைமையில் “உண்மை கண்டறியும் குழு” ஒன்றை அமைத்தார். அக்குழுவில், மற்றொரு முன்னாள் நீதிபதி கே.பி.சித்தப்பா, முன்னாள் காவல்துறை இயக்குனர் ஜெனரல் திரு டி.எஸ். ராவ், ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயாவின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர்.பி.கீர்வாணி, குப்பம் திராவிட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஆர்.ஸ்ரீஹரி ஆகியோரும் அங்கத்தினர்களாக பொறுப்பேற்றனர். அவர்கள் 17-06-2006 அன்று ஐதராபாதில் கூடி ஆலோசனை செய்து, பின்னர் அதேமாதம் 21 மற்றும் 22 தேதிகளில் திருப்பதி, திருமலை ஆகிய இடங்களில் பொது விசாரணை செய்து, கிறிஸ்துவ மிஷனரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்று உறுதி செய்து விசாரணையின் மூலம் அறிந்த அனைத்து உண்மைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிக்கையாக வெளியிட்டு அதை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து ரெட்டியின் அரசும் திருமலையில் எவாங்கலிக்க நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தது (தொடர்புடைய செய்திகள் இங்கே).
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலையத்திற்குத் தேவையான பொருட்களின் கொள்முதல் ஒப்பந்தமும் ”ஜெ.ஆர்.ஜி வெல்த் மெனேஜ்மெண்ட்” என்கிற கொச்சியைச் சேர்ந்த கிறிஸ்துவ நிறுவனத்திற்கே அளிக்கப்பட்டது. (”தி ஹிந்து பிஸினஸ்லைன் செய்தி”)
இந்து புனிதத் தலங்கள் அருகே மதமாற்ற நடவடிக்கைகளை ரெட்டி அரசாங்கம் நிறுத்தினாலும், மற்றபடி மாநிலம் முழுவதும் மதமாற்றம் நடத்த மிஷனரிகளுக்கு மறைமுக அனுமதி அளித்தது. ராஜசேகர ரெட்டியின் மருமகன் அனில் குமார் ஒரு தேர்ந்த எவாங்கலிக்கர். இந்துவாகப் பிறந்து வளர்ந்த இவர், பிறகு மதம் மாறி கிறிஸ்துவ மதபோதகராக வசதியான வாழ்க்கை வாழ்கிறார். ரெட்டியின் மகளைத் திருமணம் செய்த பிறகு ஆந்திர அரசு இவருக்குப் பல வகைகளில் உதவி செய்து வருகிறது. சகோதரர் அனில் குமார் சொந்தமான “ஊழிய” அமைப்பு நடத்தி வருகிறார். தான் பரிசுத்த ஆவிகளால் தீண்டப் பட்ட மதபோதகர் என்றும், சக்தியும், ஆளுமையும் பெற்ற ஆசிரியர் என்றும், கிறிஸ்து ராஜ்ஜியத்தின் கொள்கைகளை வெளிக்கொணர்பவர் என்றும், மதப்பற்றுள்ள, மதத்தைக் காப்பாற்றும் வீரர் என்றும், அற்புதங்களின் மூலம் நோய்களைத் தீர்த்து சுகம் அளிப்பவர் என்றும், இயேசுபிரான் பெயரில் அதிசியங்கள் நிகழ்த்துபவர் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்.
பெங்களூருவில் சில வருடங்கள் முன்னால் (காங்கிரஸ் முதல்வர் தரம்சிங்கின் ஆட்சியின்போது) அமெரிக்க எவாங்கலிக்கர் பென்னி ஹின் நிகழ்த்திய பிரம்மாண்ட ஏமாற்றுக் கூட்டத்தைப் போல அனில் குமாரும் சென்ற ஆண்டு ஐதராபாத்தில் நடத்த ஏற்பாடு செய்தார். அதற்கு ரெட்டியின் அரசு இயந்திரங்கள் பல விதங்களில் உபயோகப் படுத்தப் பட்டன. நகரமெங்கும் நூற்றுக் கணக்கான விளம்பர பானர்கள் வைக்கப் பட்டன. ராஜசேகர ரெட்டியும், அவர் மனைவியும், மகளும் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். எதிர்கட்சியினர் அரசு இயந்திரங்கள் பயன்பட்டதைக் கடுமையாகக் கண்டித்தன. அதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ”அதில் என்ன தவறு?” என்று அலட்சியமாக கேட்டிருக்கிறார் முதல்வர். ஆந்திராவைச் சேர்ந்த, சுனாமியின் போது தமிழகக் கடலோர மீனவ குடும்பங்களை மதமாற்றம் செய்வதற்காக தனி விமானத்தில் வந்திறங்கிய, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் எவாங்கலிக்கர் கெ.எ.பால் என்பவரை கவிழ்த்து அனில்குமாரை வளரச் செய்யவே ரெட்டி அரசு முயல்வதாக அரசியல் வட்டாரங்களும் ஊடகங்களும் தெரிவித்தன.
இதில் முரணான விஷயம் என்னவென்றால், படித்தவர்களில் கூட பெரும்பாலானவர்களுக்கு ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதோ, அவர் மருமகன் ஒரு எவாங்கலிக்கர் என்பதோ சுத்தமாகத் தெரியாது. 2004-லும் சரி, 2009-லும் சரி, தேர்தலில் வெற்றி பெற்றவுடன், குடும்பத்துடன் கிறீஸ்துவப் புனிதத் தலமான பெத்லெஹம் பயணம் மேற்கொண்டார் ரெட்டி. அங்கும் மற்ற புனித இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனைகள் செய்து திரும்பினார். எனவே, முஸ்லிம்களுக்கான ஹஜ் யாத்திரை போல, அவர் க்றுஸ்துவர்களுக்காக ஜெருசலேம் யாத்திரைக்கு 2008-09 –ஆம் ஆண்டுக்கு 2 கோடி ருபாயும், சர்ச்சுகளும், மசூதிகளும் செப்பனிடப்படுவதற்காக 5 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்ததில், ஆச்சரியமில்லையே!
2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் ”ராயலசீமா கிறீஸ்தவ சதஸ்” என்ற அமைப்பின் கீழ் கூடி, கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ராயலசீமா திருச்சபையின் பேராயர் யேசு வரப்ரசாத், முன்னாள் பேராயர் சி.வி.எம்.ஃப்ரெட்ரிக் பாபு, பாதிரி சாம்சன், சி.எஸ்.ஐ சர்ச்சு பாஸ்டர் பென்ஹர் பாபு, சி.எஸ்.ஐ.சர்ச்சு செயலாளர் சாமுவேல் பாபு, ழையான் கல்லூரியைச் சேர்ந்த கே.ராஜரத்தினம் ஐசக் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ரெட்டியின் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பாராட்டி, மீண்டும் அவரின் ஆட்சி அமைந்தால் தான் மாநிலம் முன்னேறும் என்று கூறி க்றுஸ்துவ சமுதாயத்தினரை காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்குமாறு பணித்தனர். (பார்க்க: “தி இந்து” செய்தி )
.
இந்திய எவாங்கலிக்க கூட்டமைப்பு (Evangelical Fellowship of India - EFI) ராஜசேகர் ரெட்டியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் சென்ற மாதம் ஆகஸ்டு 19-ஆம் தேதி அவர்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்துள்ளது. ”கல்வி, சுகாதார, சமூக துறைகளில் கிறிஸ்துவ சர்ச்சுகளின் பனிகள் போற்றுதலுக்குறியன. அப்பணிகள் அனைத்து சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கும் நாட்டில் அமைதி நிலைக்கவும் உதவி புரிகின்றன” என்று முதல்வர் தங்களுக்கு அனுப்பிய செய்தியை நினைவு கூர்ந்து, அவருடைய குடும்பத்திற்காகவும், மற்றும் அவருடன் மரணம் எய்திய மற்ற நான்கு பேரின் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.
“இந்திய மாநிலத் தலைவர், கிறிஸ்தவர், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்” (“Head of Indian state, a Christian, killed in chopper crash”) என்கிற கட்டுரையை லண்டனைச் சேர்ந்த “Religious Intelligence” என்ற தளம் பிரசுரம் செய்தது. அக்கட்டுரையை எழுதிய புது தில்லியைச் சேர்ந்த விஷால் அரோரா என்கிற பத்திரிகையாளர், “ராஜசேகர ரெட்டியின் தகப்பனார் ராஜா ரெட்டி பர்மா ராணுவத்தில் பணி புரியும்போதே கிறிஸ்துவராக மதம் மாறினார்” என்றும் ”ராஜ சேகர ரெட்டியின் ஆட்சி மீது ”இந்து தேசியவாதிகள்” வீண்பழி சுமத்தி, “ஏராளமான” கிறிஸ்துவ பாதிரிகளையும், பணியாளர்களையும் “தாக்கிக் கொன்றுள்ளனர்” என்று கொஞ்சம் கூட ஆதாரம் காட்டாமல் எழுதியுள்ளார்.
ராஜசேகர ரெட்டியின் இறுதிச் சடங்கினை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி சானல்கள், ரெட்டி குடும்பத்தின் வன்முறை மிக்க பாரம்பரியத்தை உறுதி செய்யும் விதமாக, “முதல்வரின் தந்தை ராஜா ரெட்டி 75 வயதில் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று கூறின. அவர்களின் பாரம்பரியம் வன்முறை நிறைந்தது என்பதற்கு மற்றொரு சான்று ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த “பூமண்ண சகோதரர்கள்” (பூமண்ண கருணாகர ரெட்டி, பூமண்ண சுப்ரமணிய ரெட்டி). அவர்கள் எழுபதுகளில் சமூக விரோத செயல்களுக்காக சிறை தண்டனை பெற்றவர்கள். (மேலும் விவரங்கள் இங்கே மற்றும் இங்கே).
மேலும் “ராயலசீமா பகுதிக்கென்றே உரிய வன்முறைக் கலாசாரம், ராஜசேகர ரெட்டி முதல்வரான பிறகு மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த “போராளிகள்” மாநிலத் தலைநகரில் ஆட்சி செலுத்தினர்” என்று ”தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்” நாளிதழ் விவரிக்கின்றது.
கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அமைப்பை பூரணமாகக் கலைக்க வேண்டும் என்றும் புதிய நிர்வாகிகளை பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேவஸ்தானத்திற்கு முப்பதாயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், நகைகளின் மதிப்பு (கிருஷ்ண தேவ ராயர் காலத்திற்கு முன்னிருந்து இருப்பதால்) கணக்கிட முடியாது என்றும் கூறிய நாயுடு, “திருமலை திருப்பதியில் பகவான் சன்னிதியில் நடக்கும் தீய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ராஜசேகர ரெட்டி வெங்கடாஜலபதி பகவானின் கோவத்தை சம்பாதிப்பார். பகவான் வெங்கடாஜலபதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிருபணம் செய்யப் பட்ட உண்மை. தவறிழைத்தவர்கள் நாளடைவில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார். வாதிகனுக்கு ஈடாக திருமலையை நிர்மாணிக்க வேண்டும் என்ற என்.டி.ராமராவின் ஆசையையும் நினைவு கூர்ந்தார்!
என்ன சொன்னாலும் என்ன செய்தாலும், ராஜசேகர ரெட்டி மக்களைக் கவர்ந்த, ஏழைப் பங்காளன் என்ற பெயர் பெற்ற தலைவர் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரின் மரணச் செய்தி கேட்டு பலர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டதிலிருந்தே இவ்வுண்மை புலப்படுகின்றது. தலைவருக்கு ஏதொ ஒன்று என்றால் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது திராவிட கட்சிகளுக்கே உரிய பாரம்பரியம்! ஆட்சியில் இருந்த போதும் சரி, இறந்த பின்பும் சரி, ராஜசேகர ரெட்டி அனைத்து விஷயங்களிலும் திராவிடக் கட்சித் தலைவர்களை ஒளிமங்கச் செய்துவிட்டார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அன்னாருக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழக முதல்வர் அவர்கள் அரசு விடுமுறை அறிவித்ததில் ஆச்சரியம் இல்லையே!

இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்
இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்![இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/agora4.jpg)
இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]![திருப்பலி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/jesus_vimanam.jpg)
திருப்பலி [சிறுகதை]
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?
இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?
ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!
திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள்
வீட்டிற்கு வந்த மதபோதகர்
ஏசுவுக்கான இந்து நரபலிகள்
அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்
Breaking India புத்தக வெளியீட்டு விழா![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? –
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? –
நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்



நானும் ஒரு காலத்தில் ஹிந்து கரப்பான் பூச்சியாக அறிவியலை எல்லாம் நம்பிக்கொண்டிருந்தேன்.
பைபிளை படித்துத்தான் அறிவியல் ஒரு பெரிய பொய் என்று அறிந்தேன். பிறகு பைபிளை மட்டுமே நம்புகிறேன். அறிவியலை சுத்தமாக நம்புவதில்லை. உதாரணமாக நோய்களெல்லாம் பேய் பிடிப்பதால்தான் வருகிறது என்று பைபிள் சொல்கிறது. அதற்கு மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்கக்கூடாது. கர்த்தரிடம் பிரார்த்தித்தால் பேய் ஓடிவிடும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரார்த்தனை மூலமாக பேயை ஓட்டி எவ்வளவு பேரை குணப்படுத்திருக்கிறார் என்று பைபிளில் படித்துப்பாருங்கள். அதனால்தான் சுவிசேஷ கூட்டங்களில் பேயோட்டுகிறார்கள். முடவன் நடப்பதும் குருடர் பார்ப்பதும் கர்த்தரின் நாமத்தினால், பேய்கள் ஓடுவதாலேயே! எக்ஸார்ஸிஸ்ட் பார்த்தீர்களா? பாவிகளே! அறிவியலை நம்பி மருத்துவர்களிடம் செல்லாதீர்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆதாம் ஏவாள் செய்த முதல் பாவத்திலிருந்து நான், அசோக் குமார் கணேசன், கிலாடி ஆகியோர் மீண்டது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொண்ட்தால்தான். எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கப்போகிறது.
உங்களுக்கு நரகம்தான்.
கர்த்தரை சந்தோஷப்படுத்த முன்னாளில் யூதர்கள் பலி கொடுத்தார்கள்.
எதனை பலி கொடுத்தார்கள்? ஆடுகளை பலிகொடுத்தார்கள்.
மனிதப்பலி கொடுத்தால், கர்த்தர் சந்தோஷமடைவார். அதிலும் மிக உயர்ந்த பலி எதுவாக இருக்கும்?
கர்த்தரே தன் மகனாக பிறந்து தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் பலியால்தான் கர்த்தர் மிகவும் சந்தோஷமடைவார். அதுதான் அல்டிமேட் பலி!
கர்த்தரே தன்னைத்தானே பலி கொடுத்து தன்னை சந்தோஷப்படுத்தியதால், உலகத்தின் பாவங்களை கர்த்தர் தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட பலியை ஒப்புக்கொள்கிறவர்களை ஆதாம் ஏவாள் செய்த பாவங்களிலிருந்து ரட்சித்து சொர்க்கம் தருவார்.
பாவிகளே மனந்திரும்புங்கள்.
ஹிந்து கரப்பான் பூச்சி is right in a way.
with Love,
Ashok
சகோதரர் பெர்னார்ட் அவர்களே,
//6000 ஆண்டுகளுக்கு முன்னர் கர்த்தரின் முன்னால் முதலாவதாக பாவம் செய்த ஆதாம் ஏவாளின் பாவங்கள் நம் ஒவ்வொருவர் மீதும் இருப்பதாலேயே நாம் எல்லோரும் பாவிகளாகிறோம்//
காட்டு மிராண்டிக் கருத்துக்களின் மொத்த உருவாக ஒரு மார்க்கத்தை உருவாக்கி, அதை இயேசுவின் மார்க்கமாக சித்தரித்து இயேசுவின் பெயாராலே திணித்து, அதை இயேசுவின் தலையிலே முள் முடியாக அடிக்கிறார்கள்.
ஆதாம் ஏவாள் செய்த பாவத்திற்கு கந்தசாமியும், குப்பு சாமியும், வனிதாவும், பாத்திமாவும், காரலினும் எப்படிப் பொறுப்பாக முடியும்?
வனிதாவின் அப்பா, தாத்தா செய்த குற்றத்துக்கு கூட வனிதா பொறுப்பாக முடியாது.
வனிதாவின் தாத்தா பல பெண்களை கர்ப்பழித்தவர் என்றால்- அதற்காக அந்த கர்ப்பழிக்கபட்ட பெண்களின் உறவினர்கள்,
வனிதாவின் தாத்தா இறந்து விட்டார் , அதனால் பேத்தியான வனிதாவை நாங்கள் கர்ப்பழிக்க எங்களுக்கு கோர்ட்டார் அனுமதி அளிக்க வேண்டும் என்று சைதை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால்
நீதிபதி, தாத்தாவின் கற்ப்பழிப்பு பாவம் வனிதாவின் மேல் உள்ளது,
எனவே கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற அடிப்படையில் கற்ப்பழிப்புக்கு , கற்ப்பழிப்பு செய்து கொள்ளுங்கள் என்று தீர்ப்பு வழங்க முடியுமா?
அந்த காட்டு மிராண்டிக் கற்ப்பழிப்பு அனுமதி வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் நேரத்தை வீணடித்ததற்கு பைன் போடுவார்.
சாதரண மனிதனாகிய நீதிபதியே நியாயமான தீர்ப்பு வழங்கும் போது எல்லோருக்கும் தந்தையான ஆண்டவன் எவ்வளவு நியாயமான நீதிபதியாக இருப்பார்?
நீ மீனைக் கேட்டால் உன் தகப்பன் பாம்பைக் குடுப்பானா? நீ அப்பத்தைக் கேட்டால் உன் தகப்பன் கல்லைக் குடுப்பானா? உன் தந்தையே இப்படி இருக்கும் போது எல்லோருக்கும் தந்தையானவர் எப்படி கருணையுடனும், நியாயமாகவும் இருப்பார்.
வனிதாவின் தாத்தா செய்த தவறுக்கு வனிதாவை தண்டனை அன்பவிக்க சொல்லுவாரா? ஆதாம் ஏவாள் செய்த தவறுக்கு ஆண்டவன் எல்லோரையும் பாவியாக பழி சுமத்துவரா?
“நீதிமான்களை அன்று பாவிகளையே இரட்சிக்க வந்தேன்” என்று இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறியுள்ளாரே.
இயேசு கிறிஸ்து இந்த உலகிலே பாவிகளும் உள்ளனர், நீதிமான்களும் உள்ளனர் என்று தானே தெளிவாகக் கூறியுள்ளார்.
ஆதாம் , ஏவாளின் பாவத்தை ஒரு இடத்திலும் இயேசு கிறிஸ்து நம் எல்லோரின் தலையிலும் இரக்கவில்லையே. ஆதாம் ஏவாள் கதையை பற்றி எந்த ஒரு இடத்திலும் இயேசு கிறிஸ்து கூறியதாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை!
இயேசு நீதிமான்களும் இருக்கிறார்கள், பாவிகளும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நீங்களோ இந்த உலகத்தில் எல்லோரும் பாவிகள் என்று பாவப் பழியை சுமத்துகிறீர்கள்.
இயேசு கிறிஸ்து “நீ மீனைக் கேட்டால் உன் தகப்பன் பாம்பைக் குடுப்பானா? நீ அப்பத்தைக் கேட்டால் உன் தகப்பன் கல்லைக் குடுப்பானா? உன் தந்தையே இப்படி இருக்கும் போது எல்லோருக்கும் தந்தையானவர் எப்படி கருணையுடனும், நியாயமாகவும் இருப்பார்” என்று கூறியதை மறுத்து, கடவுள் ஆதாம், ஏவாளின் பாவத்தை எல்லோர் தலையிலும் கட்டும் அநியாயக் காரர் என்று முள் கிரீடத்தை ஆழமாகப் பதியும்படி அடிக்கிறீர்கள்.
உங்களிடம் இருந்து இயேசு கிறிஸ்துவைக் காப்பாற்றுவதே எங்களுக்குப் பெரும் பாடாக இருக்கிறது.
இயேசு இந்த உலகத்திலே இருந்தார் எனவும், யூதர்கள் அவரி சிலுவையிலே அறைந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் இருந்திருந்தாலும், சிலுவையிலே அறையப் பட்டு இருந்தாலும், அவர் மேலே சென்று இருந்தாலும், அவரை விடாமல், எல்லாக் காட்டு மிராண்டிக் கருத்துக்களையும் , வெறுப்புக் கருத்துக்களையும் அவர் மேல் தினமும் ஆணியாக அடிக்கும் பாவத்தை, முள் முடியாக அவர் மேல் இரக்கும் பாவத்தை பல சுவிசெசகர்கள் செய்கின்றனர்.
அந்தப் பாவத்தில் பங்கெடுத்து இங்கெ வந்து சுத்த இரத்தத்தின் கரை உங்களின் கையிலே படும்படியாக இயேசு கிறிஸ்துவை துன்புறுத்துகிறீர்கள்.
அதை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்வோம். இயேசு கிறிஸ்துவுன் மீது நீங்கள் அடிக்கும் ஆணிகளை இந்துக்களாகிய நாங்கள் எங்கள் கையில் வாங்கி இயேசு கிறிஸ்துவைத் தாங்குவோம்.
உங்களுக்கு இயேசு கிறுஸ்துவைப் பற்றி சரியாகப் புரிதல் இல்லை. வெறுப்புக் கருத்துக்களும், காட்டு மிராண்டிக் கருத்துக்களாலும் உங்கள் இதயத்தை நிரப்பி அதை சாத்தானின் இருப்பிடமாக வைத்து உள்ள்ளீர்கள்.
அன்புக் கருத்துக்களும், உண்மையும், பகுத்தறிவும் உள்ள இந்து மதத்தால் மட்டுமே இயேசு கிருஸ்துவை புரிந்து கொள்ள முடியும்.
நாங்கள் அன்பின் பக்கம், உண்மையின் பக்கம் , நியாயத்தின் பக்கம் நிற்கிறோம்-கிரிஷ்ணர், புத்தர், இயேசு கிறிஸ்து எல்லோரும் இருக்கும் பக்கம் -இந்துக்களாகிய நாங்கள் இருக்கிறோம். கிரிஷ்ணர், புத்தர், இயேசு கிறிஸ்து எல்லோரும் எங்களோடுதான் இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் வெறுமனே இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லிக் கொண்டு எதிரணியில் நிற்கிறீர்கள். அது ஆண்டவனின் அணி அல்ல. அது சைத்தானின் அணி.
நீங்கள் எங்கள் பக்கம் வந்து விடுங்கள். பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது!
அல்லது குறைந்த பட்சம் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உளருவதையாவது நிறுத்துங்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாங்கள் சரியாகப் பிரச்சாரம் செய்து தருவோம்.
யப்பா அசோக் குமார் கணேஷா!
என் பேரு “ பெர்னார்ட்” நு ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலை எதுக்கு இவ்வளவு நிட்டி முழக்கி சிவாஜி ஸ்டைல்-la உணர்ச்சிகரமா வசனம் எழுதி சொல்லுriga .
இதுக்கு பதிலா நான் பிரபு ஸ்டைல்-la சொல்லனும்னா “என்ன கொடுமை , சரவணன் ”
வடிவேலு ஸ்டைல்-la சொல்லனும்னா “அய்யோ , அய்யோ ”
என் ஸ்டைல்-la சொல்லனும்னா “போடா டுபாகூறு”
ஆப்பிள் சாப்பிட்ட பாவம் பெருசுன்னா, உன் கர்த்தர் எவ்வளவு பெரிய “டுபாகூறு”
அந்த “டுபாகூறை” கும்பிட்டுதான் எனக்கு சொர்க்கம் கிடைக்கும்னா, அந்த “டுபாகூறு” சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்.
நாம் பகுத்தறிவு முறையிலே, அறிவியல் ரீதியிலே மார்க்கங்களை அணுகி நம்முடைய கருத்துக்களை வைக்கிறோம்.
இந்துக்களாகிய நாம் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி, அவற்றில் உள்ள நல்ல விசயங்களை நாமே எடுத்து விளக்கி வருகிறோம்.
பிற மார்க்கங்கள் தவறாகப் பிரச்சாரம் செய்யப் படுவதையும், வெறுப்புக் கருத்துக்களும், காட்டு மிராண்டிக் கருத்துக்களும் இந்திய சமூகத்தில்
SLOW POISON ஆக செலுத்தப் படுவதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறோம்.
ஆனால் பெர்னார்ட், அசோக் ஆகியோர் தொடர்ந்து யூதர்களின் காட்டு மிராண்டி கலாச்சாரத்தை தொடர்ந்து இங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
நம் முன்னே உள்ள ஆபத்து என்ன என்பதை இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.
இந்தியா முழுவதையும் பாலஸ்தீன் போல மத சண்டை இடும் போர்க்களமாக, சுடுகாடு ஆக ஆக்கி விட்டுத்தான் சுவிசெசகர்கள் ஓய்வார்கள் என்பதை, இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.
ஒரே கன்பூஷனா கீதுப்பா..
பெர்னார்ட், அசோக்கு, கிலாடி.. அல்லாரும் கொஞ்சம் விளக்குங்களேன்.
கர்த்தர் உலகத்தை படைத்தார்.
பிறகு ஆதாம் ஏவாளை படைத்தார் (ஓகே 6000 வருசத்துக்கு முன்னாடின்னே வச்சிக்குவோம்)
ஆதாம் ஏவாள் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி ஒரு மரத்தையும் படைச்சார். (சாப்பிடக்கூடாதுன்னா எதுக்கு மரத்தை படைச்சி தொலைக்கணும்?) அதுசரி ஆதாம் ஏவாள் சாப்பிடப்போறாங்கன்னு கர்த்தருக்கு தெரியாதா? உங்க கர்த்தர் முக்காலமும் அறிந்தவர் இல்லையா? முக்காலமும் அறிந்திருந்தால், ஆதாம் ஏவாள் சாப்பிட்டுடுவாங்கன்னு தெரிஞ்சி மரத்தை படைக்காமல் இருந்திருப்பாரே? அப்ப ஆதாம் ஏவாள் சாப்பிட்டதற்கு யார் பொறுப்பாளி? கர்த்தர்தானே? அப்ப கர்த்தரைத்தானே நரக நெருப்பில போட்டு கர்த்தர் வறுக்கணும்? இதெல்லாம் என்ன லூசுக்கதை? இதையும் மக்கள் நம்புகிறார்கள்!
சரி ஆதாம் ஏவாள் சாப்பிட்டால் பாவம் கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்னார். பாவம்னா, கர்த்தர் சொல்லுக்கு கீழ்படியாம இருக்கறது தானே?
கீழ்ப்படியாம இருந்தால், நரகத்தில் போட்டு கர்த்தர் சுடுவார். சொல்ற பேச்சை கேக்கலைன்னா கான்வெண்டில் டீச்சர் வெயில்ல முட்டி போட்டு நிக்க வைக்கிறமாதிரி. இங்க கொஞ்சம் ஜாஸ்தி, ஆளை எண்ணெய் கொப்பறையில போட்டு வறுத்து எடுத்துடுவானுங்க..
ஓகே ஆதாம் ஏவாளுக்கு கர்த்தர் பாவம் கொடுத்ததோட ம்னித குல்ம் மொத்தத்தையும் நரகத்தில சுடறதா கர்த்தர் ஒரு க்டுப்பில தீர்மானிச்சிக்கிறார்.
சரி நாம கோவிச்சிக்கிட்டோமேன்னு அவர் யோசிக்கிறார். சரி நாமளே கன்னி மேரி வயித்தில பொறந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நமக்குநாமே பலி கொடுப்போம். அப்போ நான் சந்தோஷமாயிடுவேன் (கர்த்தர் ஒரு மாதிரி மசோகிஸ்டுன்னு வச்சிக்குவோம்)
சரின்னு அவர் பொறக்கிறார். இயேசுதான் கர்த்தரோட புள்ளை, அப்புறம் கர்த்தரும் அவர்தான். கர்த்தரே அவரோட புள்ளையா பொறக்கிறார். கர்த்தரை சந்தோஷப்படுத்த கர்த்தரே கர்த்தருக்கு தன்னைத்தானே பலிகொடுத்து கர்த்தரை சந்தோச்படுத்துகிறார். (யம்மா.. சரியா?)
மேலே இருக்கிற குழப்பத்தை ஒத்துக்கிடலைன்னா மவனே உனக்கு நரகம்தான். இந்த குழப்பத்தை ஒத்துகிட்டயன்னா உனக்கு சொர்க்கம்.
…ஙே
என்ன யாருக்காச்சும் எதாவது பிரியுதா?
ஆமா,… எனனாங்கயா.. வெளாடறீங்களா?
பிரதீப் பெருமாள்,
There is no need for me to write in the name of Bernard. I have a good name given by my parents. You are doubting my integrity brother.
With Love,
Ashok
//ஆப்பிள் சாப்பிட்ட பாவம் பெருசுன்னா, உன் கர்த்தர் எவ்வளவு பெரிய “டுபாகூறு”//
Eating an apple is not a sin. But, disobediance to the word of GOD is sin.
In your eyes looks like a small act of simply eating a fruit. But in real,
They didn’t consider GOD’s godlyness.
They became theives by having something, which is not in their authority.
They became liers by breaking their promise with the GOD. When GOD told them not to eat the fruit, they agreed right.
They made the serpent (Satan) as Lord, by listening to satan and neglecting GOD’s word.
Ultimately Adam/Eve chose satan rather than choosing GOD. So they are destined to dwell in Satan’s place (Hell) and not in the GOD’s place (Heaven)
With Love,
Ashok
(Comment edited & published)
////முடவன் நடப்பதும் குருடர் பார்ப்பதும் கர்த்தரின் நாமத்தினால், பேய்கள் ஓடுவதாலேயே! எக்ஸார்ஸிஸ்ட் பார்த்தீர்களா? பாவிகளே! அறிவியலை நம்பி மருத்துவர்களிடம் செல்லாதீர்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.///
அட காட்டு மிராண்டி, 1952 ஆம் ஆண்டு மாஜிகல் ரெமெடீஸ் அண்ட் ட்ரக்ஸ் ஆக்ட் மூலம் இந்த மாதிரி ஜபம் செஞ்சு நோயை குணப்படுத்தினால் கைது செய்யலாம். உங்க கூட்டத்தையே இப்படி கைது செய்ய ஒருவன் வர வேண்டும். இந்த மாதிரி மூட நம்பிக்கை உள்ளவங்களை பற்றியெல்லாம் கிண்டல் பண்ணி படம் எடுக்க சத்யராஜுக்கும், மணிவண்ணன் பொன்றவங்களுக்கும் ஆண்மையே கிடையாது. பயந்தாங்கொள்ளிகள்.
////ஆதாம் ஏவாள் செய்த முதல் பாவத்திலிருந்து நான், அசோக் குமார் கணேசன், கிலாடி ஆகியோர் மீண்டது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொண்ட்தால்தான். எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கப்போகிறது.///
அட சைக்கோவே….நீ பாவி அதனால மீண்டதாய் நினைக்கிறாய். நாங்கல்லாம் பாவிங்க இல்லையே. நாங்க ஏன் அப்படி நினைக்கனும். மேலும் நாங்க இப்பவே சொர்கத்தில தான் இருக்கோம். அதை நீங்கல்லாம் சேர்ந்து நரகமாக மாத்தாம இருந்தா சரிதான். அதையே நீ இன்னும் புரிஞ்சிக்கல. இனிமே தான் உனக்கு சொர்கம் கிடைக்கப் போகுதான். மறுபடியும் சொல்றேன், நல்ல இந்து மனோவியல் டாக்டரைப் போய் பார்த்து புத்தி தெளிஞ்சிட்டு வாங்கப்பா. கடுப்பேத்தாதீங்க.
According to me all the religion is one…conversion is not required…..because if a man is convert from one religion to other…for some reason he/she will be converted to another religion and so on….his/her mind changes and won’t be stable in one religion,and one thought…
Religion does not brings anything to life…only self realization brings….
Religion and god is only for those people who is ignorant…make him fearful.. with set of rules….
People don’t fight for religion……All the religion and all the gurus is one and the same…
The differences is not with others…it is with people who contradict with it…
if you realized yourself…you have no contradictions….
Dear Ragu Sir,
“சரின்னு அவர் பொறக்கிறார். இயேசுதான் கர்த்தரோட புள்ளை, அப்புறம் கர்த்தரும் அவர்தான். கர்த்தரே அவரோட புள்ளையா பொறக்கிறார். கர்த்தரை சந்தோஷப்படுத்த கர்த்தரே கர்த்தருக்கு தன்னைத்தானே பலிகொடுத்து கர்த்தரை சந்தோச்படுத்துகிறார். (யம்மா.. சரியா?)”
(Comment edited & published)
ஆதாமின் பாவம் என்று ஒன்று கிடையவே கிடையாது.
எபிரெயர்கள் அப்படி ஒன்று பற்றி என்றுமே சிந்திததே இல்லை. இயேசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.
வர வேண்டிய கிறிஸ்து ஆதி பாவம் நீக்குவார் என்பது கிடையவே கிடையாது.
அவரவர் பாவம் மட்டுமே அவரவர்கட்கு என்பதை பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுகின்றன. கீழே காணலாம்.
ஆதாமின் பாவம் என்பது நாத்திகர்களையும்விட கடவுளை கேவலப் படுத்தும் கடவுள் விரோதக் கொள்கை வேறு இருக்க முடியாது.
உபாகமம்: 24: 16
பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்,பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
எரேமியா: 31:29பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
எசேக்கியேல்: 18:1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
எசேக்கியேல்: 18:20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்
ஏசாயா: 3:10. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
விரைவில் மேலும் காண்போம்.
For those of you who write in Samuel Reddy, I quote from Mahatma Gandhiji.
//My difficulties lay deeper. It was more than I could believe that Jesus was the only Incarnate son of God, and that only he who believed in Him would have everlasting life. If God could have sons, all of us were His sons. If Jesus was like god, or God Himself, then all men were like Goad and could be God Himself. My reason was not ready to believe literally that Jesus by his death and by his blood redeemed the sins of the world…//
This world is only 5770 years old, as per Bible Myths
http://devapriyaji.wordpress.com/
Our Pranams to Dr. T.Hanuman Chowdary for saving the taxpayers money and the revenue from Hindu Temples. – B.R.Haran.
Deccan Chronicle dated 08 October 2009.
No state money for churches
The Andhra Pradesh High Court on Monday made it clear that no government money can be spent to construct or repair churches and other Christian religious institutions in the state in pursuance of the GO Ms. No. 42, issued on December 19, 2001.
A division bench comprising Chief Justice Anil R. Dave and Justice C.V. Nagarjuna Reddy was dealing with a writ petition filed by one Dr Tripuraneni Hanuman Chowdary complaining that the state government was promoting a religion contrary to injunctions of the Constitution. The bench was clarifying its earlier orders of status quo in this regard.
The petitioner listed the various orders issued between December 2001 and March 2009 and complained that the state under the guise of welfare of SCs and STs was “promoting religious activity relating to Christians”.
The court had ordered on September 7 to maintain status quo on release of funds under the GO for maintenance, repair and construction of churches.
When the case came up for hearing, the counsel for the petitioner, Mr Challa Kodanda Ram, complained that the words status quo were being misinterpreted by the officers. The bench then said there shall be no spending of government money in pursuance to the various GOs issued by the government.
URL: – http://www.deccanchronicle.com/hyderabad/hc-refuses-entertain-media-reports-cm-924#
One thing should be changed at the end of the article. It has come to light that the relatives of dead people were lured by the congress to say that the deaths were suicide due to YSR’s death!
Maybe the ‘sin’ about which Christianity talks is the sin of incest. Otherwise how did the first two people multiplied into many!?
friend GLADY ..VALLUVAR ….a hinduuuuu…….
dear GLADY….//ஆபிரகாமின் மூன்றாம் மனைவியின் சந்ததியினரே இந்தியத் திராவிட இனம் என ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது;//i don’t accept this ….
திருமலை திருப்பதியில் பகவான் சன்னிதியில் நடக்கும் தீய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ராஜசேகர ரெட்டி வெங்கடாஜலபதி பகவானின் கோவத்தை சம்பாதிப்பார். பகவான் வெங்கடாஜலபதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது வரலாற்றுப் பூர்வமாக நிருபணம் செய்யப் பட்ட உண்மை. தவறிழைத்தவர்கள் நாளடைவில் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்”
நடந்துவிட்டது
ஜெய் ஸ்ரீராம்
Convension is violence
அன்புள்ள திரு அசோக்
கிறிஸ்துவை கடவுள என்று நாங்கள் நம்புகிறோம். அனால் அவர் ஒருவர்தான் கடவுள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்போது அவருக்கு முன்னால் கடவுளே இல்லையா? நம்பரே ஹிந்து மதம் ஒன்றுதான் எல்லா வழிகளும் இறைவனை நோக்கி என்று நம்புகிறது
அதுடன் உன்மையான செகுலர் மதம். ஆகவேதான் இயேசுவை மற்றும் அல்ல அணைத்து கடவுள்களையும் ஏற்று கொள்கிறது.
என் மதம் மட்டுமே உண்மை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
Sankar
(Edited and Published.)
பகவானுக்கு தெரியும் அரசன் முதல் சாதாரண மனிதன்வரை இவன் நல்லவனா கெட்டவன என்று கடவுளுக்கு மட்டும் தெரியும். அவன் (ரெட்டி) வினை அவனை சர்வநாசம் செய்துவிட்டது, நல்லவருக்கு ஒரு போதும் இப்படிப்பட்ட சாவு நேராது, ஆந்திரா பிழைத்தது
.
If ‘jesus heals’ ordinary people in ‘Suvishesha peruviza’ then why Theresa was treated by doctors and Dinakaran was admitted to Apollo Hospital where he died?
R.Sridharan
Dear Friends
What ever happened , happened, please let us concentrate for future, we will create unity between us and try to protect our interest and our religion, there are many people being a hindu not supporting hinduism and commenting on us and teasing us, we are strong beliver of god let us belive on god definetly he or she is there and he/she is watching everything and punishing according to their mistake/sin. please treat all hindus as hindus no communal difference and try to be united to keep or goals up. some thing can be destroyed some thing cannot, once we get cancer it can be treated for some time, but it cannot be cured. it will definetly kill. this is also like a cancer, we have to take care to avoid getting cancer otherwise we have to give treatment for some time but end is definite.
our religion can not be vanished by anybody even muhals could not able to do anything than what this people can do. this people never allow any country with peace and green they will spoil all the country atmosphere creat global warming and social warming. Be Indian by Indian Be hindu and being a hindu we will support our hindusim at the same time we will not critisize any other religion. we have faith on god he will take care for all of the mischieves.