Monthly Archives: October 2009

அரசியல், தொடர்

போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

October 30, 2009
-
போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன. -பக்.283/திராவிட இயக்க வரலாறு”

மேலும் »

ஆன்மிகம், பிறமதங்கள்

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

... இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.

மேலும் »

அரசியல், தொடர்

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

''1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.''

மேலும் »

ஆன்மிகம்

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

நேற்று சூரசம்ஹாரம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹாரம் என்பது தீமையை புனிதம் வெல்லும் ஒரு திருநாள். இத்திருநாள் நமக்கு அளிக்கும் நம்பிக்கை சொல்லில் அடங்காதது. இத்தினத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்வதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சி அடைகிறது.

மேலும் »

புத்தக விமர்சனம், பொது

நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி

நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி

ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது. ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.

மேலும் »

அரசியல், கலைகள், தொடர்

போகப் போகத் தெரியும் – 38

October 18, 2009
-
போகப் போகத் தெரியும் – 38

பாலாமணி நடித்த தாரா சசாங்கம் என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். காட்சியின் விசேஷம், தாரையின் உடலில் துணி இருக்காது.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில்

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3

(சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூலிலிருந்து): நந்துதல் என்றால் முடிவுறுதல் எனப் பொருள்படுகிறது. எது நந்தாது இருக்கிறதோ அதற்கு முடிவில்லை. சந்திரனுடைய வெளிச்சம் அமாவாசையன்று முடிவுறுகின்றது. சூரியப் பிரகாசம் அத்தகையதன்று. அது ஓயாது பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது... உள்ளிருக்கும் அந்தராத்மா புறத்திலிருக்கும் சூரியன் போன்று யாண்டும் சுயம் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மப் பிரகாசத்திற்கு உதயமில்லை, அஸ்தமனமிலை, மறைத்தலில்லை, புதியதாகக் காட்சிக்குக் கொண்டு வருதல் என்பதும் இல்லை. நந்தா விளக்காக சர்வகாலமும் அது ஜொலித்துக் கொண்டிருக்கிறது...தூண்டப் படுவதாலேயே உயிர்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. பொரித்த குஞ்சு, போட்ட குட்டி, பிறந்த சிசு ஆகியவைகள் முதலில் பசியால்...

மேலும் »

அரசியல், பிறமதங்கள்

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சேவை செய்வதே எங்கள் உய்ர்மூச்சு என்றெல்லாம் நாடகம் ஆடும், “தமிழ்” அரசியல்வாதிகளில் ஒருவர் கூட மதானியின் விடுதலைக்கு எதிராகவோ, அல்லது அவன் குண்டு வைத்ததனால் பாதிக்கப் பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஆதரவாகவோ, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்து தமிழ் மக்களை அவமரியாதை செய்தனர்.

மேலும் »

அரசியல், பயங்கரவாதம்

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

ஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான்.

மேலும் »

சினிமா

நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது...

மேலும் »