நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

achchan_urangatha_veedu01எப்பொழுது ஒரு மதமோ, கொள்கையோ, தத்துவமோ, தலைவரோ, நிறுவனப்படுத்தப் படுகிறதோ, சொத்துக்கள் சேருகின்றனவோ அப்பொழுது அந்த இடத்தில் பிரச்சினைகள் துவங்குகின்றன. ஊழல்கள் ஏற்படுகின்றன. சகலவிதமான பாவங்களுக்கும் அந்த நிறுவனத்தின் அபரிதமான பணமும், அதிகாரமும் இட்டுச் செல்கின்றன. இதற்கு இந்து மதத்தின் சில மடங்களும் கூட விலக்கில்லை. குறிப்பாக நிறுவனப் படுத்தப்படும் மத அமைப்புக்களின் மீதும் அதன் நிர்வாகிகள் மதத் தலைவர்கள் மீதும் பல்வேறு விதமான குற்றசாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டே வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஏராளமான சர்ச்சுக்களில் சிறுவர்கள் மீது அந்த சர்ச்சுக்களின் பாதிரியார்கள் பாலியல் வன்முறை செய்தார்கள் என்ற குற்றசாட்டு வைக்கப்பட்டு பல பாதிரியார்களின் குற்றங்கள் நிரூபணமாகி பாதிக்கப் பட்டவர்களுக்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு ஏராளமான சர்ச்சுக்கள் இன்று திவாலாகி வருகின்றன. வாடிக்கன் வரை இந்தப் பிரச்சினை அலசப்படுகிறது. இருந்தாலும் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும், கற்பழிப்புக்களும் சர்ச்களில் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இந்திய சர்ச்சுகளும் இந்தப் பிரச்சினைக்குத் தப்பவில்லை.

கேரள மாநிலம் இந்தியாவில் மிக அதிகமான கன்யாஸ்திரீகளையும், பாதிரியார்களையும் உருவாக்குகின்றது. அந்த மாநிலத்தில்தான் இளம் கன்யாஸ்த்ரீகள் மீதும் சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வரும் சிறுவர்கள், சிறுமிகள் மீதும் சர்ச் பாதிரியார்களாலும், கன்யாஸ்த்தீர்களாலும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த வக்கிரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சமீபத்தில் ஜெஸ்மின் என்றொரு கன்யாஸ்த்ரீ எழுதிய உண்மை அனுபவங்கள் “ஆமென், ஒரு கன்யாஸ்த்தீரீயின் கதா” என்ற பரபரப்பான புத்தகமாக வெளிவந்து பல பதிப்புக்கள் கண்டும், இன்றும் கேரளாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த கன்யாஸ்த்ரீ ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். கேரள மாநிலத்தின் மிகப் பெரும் பணக்கார சர்ச்சான மலபார் சர்ச் நடத்தும் கல்லூரியில் பணியாற்றியவர். கத்தோலிக்க சர்ச்சுக்களில் நடக்கும் ஊழல்களையும், பெண்கள் மீது நடத்தப் படும் பாலியல் வன்முறைகளையும் கண்டித்ததால் இந்த கன்யாஸ்த்ரீக்கு மனநோய் என்று பொய்யான குற்றம் சாட்டப்பட்டு சபையில் இருந்து விலக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார். தன் கதையை தான் கண்ட அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டு கத்தோலிக்க சர்ச்சுக்களின் கோர முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். புதிதாகச் சேரும் கன்யாஸ்திரீகளை மூத்த கன்யாஸ்தீரீகள் தங்கள் ஓரினச் சேர்க்கைக்குப் பலியாடாக்குவதையும், ஆண் பாதிரியார்கள், இளம் பெண்களை கட்டயாப் படுத்திக் கற்பழித்ததையும் அங்கு நிலவும் மோசமான ஊழல்களையும் இந்த சகோதரி அம்பலப் படுத்தியுள்ளார்.

புனிதமான இறைப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படும் பாதிரியார்களும், கன்யாஸ்திரீகளும், பிறரது பாவங்களையெல்லாம் வாங்கி அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்க ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாகக் கூறும் இவர்கள் சாதாரண மனிதர்கள் சிந்திக்கக் கூடத் தயங்கும் கொடும் பாவங்களை எவ்வித மனசாட்சியும் இன்றி தொடர்ந்து செய்து வருகின்றனர். சரி கிறிஸ்துவ மதத்தின் நிறுவனங்களில் நிகழும் ஊழல்களையும், கற்பழிப்புக்களையும் குறை கூற, பேச இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று எந்த ஒரு கிறிஸ்துவரும் கேள்வி எழுப்பலாம். புட்டபர்த்தி சாய்பாபா மடம் உட்பட பல்வேறு இந்து மடங்கள் மீதும் இது போன்ற குற்றசாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பணம் குவியும் இடத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களால் பாவம் சேர்க்கப்படுகிறது. உண்மைதான். இந்துச் சாமியார்களிலும் போலிச்சாமியார்களும் மதுரை ஆதீனம் போன்ற கோமாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இந்துக் கோவில்களில் பணிபுரியும் ஒரு சில அர்ச்சகர்களும் கூட கோவிலுக்குள்ளேயே அசிங்கமாக நடக்கும் சம்பவங்கள் கூட அவ்வப் பொழுது நடக்கின்றனதான். இதில் ஒரு மதத்தை மட்டும் குறிப்பாகக் குற்றம் சாட்ட முடியாதுதான் இருந்தாலும், நிறுவனப்படுத்தப் பட்ட மதங்களைச் சேர்ந்த வழிபாட்டு நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கும் இந்து மதத்தைச் சார்ந்த மத நிறுவனங்களுக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன.

முதலில் இந்து மத மடாலயங்களும், ஆதீனங்களும், சபைகளும், மிஷன்களும் ஒட்டு மொத்த இந்துக்களைக் கட்டுப் படுத்துவதில்லை. இந்து மதம் என்பதே யாராலும் கட்டுப் படுத்தப் படாத இயல்பான ஒரு மதமாகும். இங்கு எந்த ஒரு பூசாரிகளும், சாய்பாபாப்க்களும், சங்கராச்சாரியார்களும், ஜீயர்களும் இந்த மத பக்தர்கள் மீது யாதொரு கட்டுப்பாடும் கொள்ள முடியாது. இங்கு இந்தக் கிழமை சர்ச்சுக்குப் போக வேண்டும் இந்த கிழமை நோன்பு இருக்க வேண்டும் இந்த திசை பார்த்துத்தான் வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை யார் மீதும் திணிக்க முடியாது. இந்து பக்தர்கள் இந்த மடாலயங்களின் தலைவர்களுக்கும் துறவிகளுக்கும் மதிப்பளிக்கிறார்கள் ஆனால் ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்த இந்து மதத்தினரும் யாதொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் விதி முறைகளுக்குள்ளும் அடங்காதவர்கள். மடாலயங்களின் நிர்வாக வசதிக்காக அந்தந்த மடங்களுக்குள்ளே பலத்த கட்டுப்பாடுகளும் நியமங்களும் சாஸ்திரங்களும் சடங்குகளும் இருந்த போதிலும் மடத்துக்கு வெளியே, கோவில்களுக்கு வெளியே இந்து மதத்தினர் முழு சுதந்திரத்துடனேயே தங்கள் வழிபாடுகளையும் அன்றாட வாழ்க்கை முறைகளையும் நிகழ்த்தி வருகிறார்கள். ஒரு இந்து வெள்ளிக் கிழமை கோவிலுக்குப் போகா விட்டால் அவருக்கு எந்தவொரு பூசாரியும் தண்டனை கொடுப்பதில்லை. ஏனென்றால் இந்து மதம் நிறுவனப் படுத்தப்பட்ட மதம் அல்ல. ஒரு மடத்திற்கு அபிமானம் உள்ள சீடர்களைக் கூட அந்த மடத் தலைவர் கட்டுப் படுத்துவதில்லை. அறிவுரைகளையும், விதிமுறைகளையும் சொல்வார்களே ஒழிய யாரையும் யாரும் நிர்ப்பந்தப் படுத்துவதில்லை. அதனால்தான் இயல்பாக இருத்தலே இந்து மதம் என்று அறியப் படுகிறது. ஒரு வைணவர் தங்கள் குடும்ப வழக்கப் படி ஒரு ஜீயர் மடத்திற்குச் சென்று வணங்கலாம், அந்த ஜீயரைக் குருவாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனாலும் அந்த ஜீயர் அந்த வைணவரின் குடும்ப விவகாரத்திலோ அவர் அன்றாடம் என்ன செய்கிறார் என்ன செய்ய வேண்டும் என்றோ அவர் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்றோ என்று எப்படி கோவிலுக்குப் போக வேண்டும் என்பதையோ வற்புறுத்துவதில்லை, திணிப்பதில்லை. மத சம்பிரதாயங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறாரே அன்றி யாரையும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு நிர்ப்பதித்து சட்டம் போட்டு தன் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரவே முடியாது. இது சங்கர மடங்களுக்கும், மேல்மருவத்தூருக்கும், அமிர்தானந்த மாயி அம்மாவுக்கும், சாய்பாபாவுக்கும் எந்தவொரு இந்து மடத்துக்கும் பெரிய மடத்தின் பெரிய குருபீடங்களில் இருந்து சாதாரண சாலையோரக் கோவில் பூசாரிகள் வரை பொருந்தும். இந்து மத அமைப்புகள் இந்துக்களின் சொந்த விவகாரங்களில் தலையிடுவது ஒரு எல்லையுடன் நின்று விடுகின்றது.

ஒரு இந்து நாத்திகனாக இருக்க விருப்பப்பட்டால் தாராளமாக இருந்து கொள்ளலாம். அதனால் அவனைக் கோவிலுக்குள் நுழையாதே என்று எந்தப் பூசாரியும் சொல்லி விட முடியாது. தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டு திரிந்த ஈ வெ ராமசாமி நாயக்கரைக் கூட, அவர் ராமர் விக்ரகங்களையும், விநாயகர் சிலைகளையும் செருப்பால் அடித்த பின்னரும் கூட எந்தவொரு இந்து மதத் தலைவரும், மடமும், கோவிலும், பூசாரியும் அவரை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கச் சொல்லவில்லை விலக்கவும் முடியாது. சமுதாயப் பகிஷ்கரிப்பும் நடப்பதில்லை. அனைவரும் இந்து மதத்திற்குள் அடக்கம் என்பதுதான் இந்து மதத்தின் பலமும் பலவீனமூமாக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருகின்றது. கோவிலுக்குப் போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, சடங்குகளை அனுசரித்தாலும் சரி அனுசரிக்கா விட்டாலும் சரி, பக்தி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மத குருமார்களை மதித்தாலும் சரி, மதிக்காவிட்டாலும் சரி, கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி எல்லோருமே இந்துக்கள்தான். கிராமங்களில் பஞ்சாயத்துக்கள், ஜாதி அமைப்புக்கள் போன்ற மதம் அல்லாத சமுதாய அமைப்புக்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எவையுமே ஒரு சில விதிவிலக்குகள் தவிர மதம் சார்ந்தோ கோவில் சார்ந்தோ அமைவதில்லை. மதத்தின் பெயரைச் சொல்லி இந்து மதத்தில் யாரையும் சாதி விலக்கமோ, மத விலக்கமோ, கிராம விலக்கமோ செய்யப் படுவதில்லை. மதத்தின் பெயரால் எவரும் தண்டிக்கப் படுவதும் இல்லை. சாதிக் கொடுமைகள் என்பதும் ஆதிக்க சாதியின் அடக்கு முறைகளும் கூட சாதியினரின் பலத்தின் பாற்பட்டு வருவதே அன்றி இந்து மதத்தின் பெயரால் வருவதல்ல. சாதிக் கட்டுப்பாடுகள் கூட அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரிடம் மட்டும்தான் செல்லுபடியாகுமே தவிர ஒட்டு மொத்த இந்துக்களையும் கட்டுப் படுத்தாது. தீண்டாமைக் கொடுமைகளும் அழிய வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஏராளமான சீர்திருத்தங்களை மதத்தின் பெயரால் எதிர்ப்பு இல்லாமல் அமுல் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க ஜாதிகளின் தீண்டாமைக் கொடுமை மட்டும் அழிக்கப்பட்டு விட்டால் இந்து மதத்தில் இருக்கும் ஒரு பெரிய குறையும் அகன்று விடும். அதுதான் இந்து மதத்தின் இன்றைய நிலமை. இந்துக்கள் பெரும்பாலும் தங்கள் மத குருமார்களாலோ, கோவில்களாலோ கட்டுப்படுத்தப் படுவது கிடையாது.

மாறாக கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மதத்தின் பெயரால் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப் படுத்தப் படுகிறார்கள். ஜமாத்தினாலும், சர்ச்சுகளினாலும், பாதிரியார்களினாலும் முல்லாக்களாலும் அவர்களின் சுதந்திரம் பெரிதும் கட்டுப் படுத்தப் படுகின்றன. உதாரணமாக பல ஊர்களிலும் சர்ச்சுக்கு ஒழுங்காக வராத கிறிஸ்துவர்கள் பெருத்த தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஒருவர் சர்ச்சுக்குப் போகாமல் தன் மகளின் திருமணத்தை நடத்த மட்டும் சர்ச்சுக்குப் போவாரேயானால் அவர் அந்தச் சர்ச்சுக்கு லட்ச ரூபாயையும் தாண்டும் பெரிய அபராதத்தைக் கட்டினால் மட்டுமே அவரை அந்தச் சமூகத்திற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். மேலும் கிறிஸ்துவர்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதையும் சர்ச்சுக்களும் பாதிரியார்களுமே தீர்மானம் செய்கிறார்கள். சமீபத்தில் நடந்த நாடாளுமனறத் தேர்தலில் ஒரே ஒரு இந்து மட்டும் பி ஜே பி சார்பாக நிற்கிறார் என்பதற்காக அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து பங்குகளும், சர்ச்சுக்களும், பாதிரியார்களும் ஒருமித்துச் சேர்ந்து அனைத்து கிறிஸ்துவர்களும் தி மு க வேட்பாளருக்கே ஓட்டளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். தங்களுக்கு மதம் இல்லை ஜாதி இல்லை என்று வெளியில் போலியாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் மார்க்ஸிஸ்டு கம்னியுஸ்டு கட்சியினர் கூட தங்கள் மார்க்ஸிஸ்டு வேட்ப்பாளருக்கு ஓட்டுப் போடாமல் தங்கள் சர்ச்சுக்கள் கட்டளையிட்ட தி மு க வேட்பாளருக்கே ஓட்டுப் போட்டார்கள். ஏன் அந்த மார்க்கிஸ்டு கட்சி வேட்பாளரே கூட தனக்கு ஓட்டுப் போட்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆக ஒவ்வொரு கிறிஸ்துவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிப்பட்ட சுதந்திரத்திலும் தனிப்பட்ட குடும்ப தீர்மானங்களிலும் கூட மத அமைப்புகள் தலையிடுகின்றன. யார் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும், யார் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், யார் யாருடன் பேச வேண்டும், யார் என்றைக்கு எந்த சர்ச்சுக்குப் போக வேண்டும், என்பது முதல் தங்கள் சர்ச்சுகளைச் சேர்ந்த ஒருவர் எந்தவிட உள்ளாடை அணிய வேண்டும் என்பது வரை சர்ச்சுக்களும் அதன் பாதிரியார்களும் தீர்மானம் செய்கின்றார்கள். அந்த அளவுக்கு நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுடைய தனி மனித சுதந்திரத்திற்குள் அமைப்புகள் மூக்கை நுழைத்து அவர்களைத் தங்களது சர்வாதிகாரமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஒரு கோவில் அர்ச்சகரோ அல்லது ஒரு சங்கராச்சாரியாரோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் நாலு பேர் கூட கேட்க்க மாட்டான். ஆனால் ஒரு சர்ச்சின் பிஷப் இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கட்டளையிடும் பொழுது பெரும்பாலான கிறிஸ்துவர்கள் தங்கள் கட்சி அபிமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்ச்சின் கட்டளைக்கு அடிபணிகிறார்கள் என்பதை கேரளாவிலும், சமீபத்தில் கன்யாகுமரி தொகுதியிலும் கண்டோம். அதைப் போலவே முஸ்லிம்களின் தனி வாழ்வு முதல் அரசியல் முடிவுகள் வரை அவர்கள் மதத்தின், மத குருமார்களின், மத அமைப்புகளின் கட்டளையின்படியே தீர்மானிக்கப் படுகின்றன. ஒரு சில விதி விலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

உதாரணமாக அமெரிக்காவில் மிட் ராம்னி என்று ஒருவர் ரிபப்ளிகன் ஜனாதிபதி அபேட்ச்சகராக சென்ற ஜனாதிபதி ப்ரைமரி தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஒரு தீவீர மார்மான் (https://www.whymormonism.org/) நம்பிக்கையாளர், கிறிஸ்துவத்தில் ஒரு பிரிவான மார்மோன் சர்ச்சைச் சேர்ந்தவர். இவர் தான் ஜீசஸ் கடவுளின் பிள்ளை என்பதை நம்புவதாகவும் அதே சமயத்தில் தீவீரமான மார்மோன் என்றும் அறிவித்துள்ளார். மார்மோன் சர்ச் கொஞ்சம் மொகமதின் சாயல் கொண்டது. கடவுள் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரிடம் வந்து காதுக்குள் குசு குசுவேன்று பேசுவதாக நம்புவதுதான் முக்கியமான மார்மோன் நம்பிக்கை. இவர்களுக்கு யேசுவை விட தங்கள் சர்ச்சின் பாதிரியார்தான் முக்கியமானவர் அவர்தான் கடவுள் கூட செல்ஃபோனிலோ அல்லது ஹாட்லைனிலோ பேசும் வல்லமை படைத்தவர், அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அப்படிப் பட்ட மார்மோன் ஒருவர் நாளைக்கு ஜனாதிபதியானால் கடவுளுடன் ஹாட்லைனில் பேசும் தன் சர்ச் பாதிரி சொல்வதைக் கேட்ப்பாரா அமெரிக்க கான்ஸிடிடியுஷனைக் கேட்ப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவர் என்னமோ எனக்கு அமெரிக்காவின் அரசிலமைப்புச் சட்டம்தான் முக்கியம் என்கிறார், நம்புவார்தான் யாரும் இல்லை ஏன் நம்ப மாட்டேன் என்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. மார்மோன்களுக்கு எல்லாமே சர்ச்தான், குடும்பம், பிள்ளை, குட்டி, கல்யாணம் எல்லாம் சர்ச் சொல்வது படிதான் நடக்க வேண்டும், சர்ச்தான் அவர்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது. உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் அவர்கள் டவுசருக்குள் போட்டுக் கொள்ளும் உள்ளாடைகளளக் கூட சர்ச்தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிரிக்காதீர்கள் தன் பக்தர்களுக்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட அந்த உள்ளாடைகளுப் பெயர் “புனித ஜட்டிகள்” சர்ச் செய்து விற்கும் மந்திரிக்கப்பட்ட அந்தப் புனிதமான அண்டர் கார்மெண்டுகளைத்தான் அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அப்படியாகப் பட்ட சர்ச்சினால் ஆசீர்வதிக்கப் பட்ட உள்ளாடைகளை அணிந்துகொண்டு வரும் ஒரு ஜனாதிபதி நாளைக்கு எப்படியாகப்பட்ட சட்ட திட்டங்களை வகுப்பார் என்று யோசனை செய்த தீவீர ரிபப்ளிக்கன்கள் கூட அவரை நிராகரித்துவிட்டார்கள். மார்மோன்கள் நிரம்ப வேடிக்கையானவர்கள், அவர்கள் சர்ச்சுக்கு மேலே விமானம் பறக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் யாரும் மது அருந்தக் கூடாது என்று ஒரு சட்டம் இருப்பதாகச் சொல்வார்கள். இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எப்பொழுது செய்து கொள்ளலாம், எப்பொழுது முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம் சர்ச்தான் தீர்மானம் செய்யும். இப்படிப் பட்ட கடும் மத நிறுவனத்தின் பிடியில் சிக்கி தம் சுதந்திரத்தை இழந்தவர்கள்தான் இந்துக்களையும் பிற மதத்தினரையும் பார்த்துக் காட்டுமிரரண்டிகள் என்றும் பாவிகள் என்றும் ஏசித் திரிகிறார்கள். உலகமெங்கும் இப்படி நிறுவனப் படுத்தப் பட்ட மத நிறுவனங்களும் அதன் தலைவர்களும் மதத்தின் பெயரால் தனி நபர்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட கட்டாயப் படுத்தப்பட்ட நிர்ப்பந்தங்கள் இல்லாத சுதந்திரம் கொண்டது இந்து மதம்.

taslima-nasrin முஸ்லிம் மதத்திலும் இதைப் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. இந்தியா பாக்கிஸ்தான் போர் வந்தால் பாக்கிஸ்தானை ஆதரிக்கச் சொல்லியும், கிரிக்கெட் மேட்சுகளுக்குக் கூட பாக்கிஸ்தானின் வெற்றிக்குப் பிரார்த்திக்கச் சொல்லியும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றியும் மசூதிகளும் முல்லாக்களும் நிர்ப்பந்திக்கின்றனர். இப்பொழுது இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கல்யாணம் செய்யச் சொல்லும் லவ் ஜிகாதைக் கூட மத நிலையங்கள் அறிவிக்கின்றன. காஃபீர்களின் மீதான வெறுப்பும், தாக்குதலுக்கான கட்டளைகளும் கூட மதத் தொழுகையின் பொழுது அறிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் சொந்த விவாகரங்கள் கூட முல்லாக்களால்தான் தீர்வு செய்யப்படுகின்றன. அங்கு நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை. ஒரு சில அடிப்படைவாத மதக் கொள்கைகளை விமர்சித்த கவிஞர் ரசூல் என்பவர் இன்று வரை மத விலக்கம் செய்யப்பட்டு எண்ணற்ற மன உளைச்சல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார். ஒரு தஸ்லீமா நஸ்ஸ்ரீன் உயிருக்குப் பயந்து நாடு நாடாய் அகதியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

இந்த நிறுவனப் படுத்த மதங்கள் அந்த மதத் தலைவர்களுக்குத் தரும் அளவற்ற சர்வாதிகாரமும், அதிகாரமும், பண பலமும், ஆதிக்கமும் அந்த மதத் தலைவர்களின் ஊழல்களுக்கும் பிற குற்றங்களுக்கும் வித்திடுகின்றன. ஒரு சர்ச் பாதிரியார் என்பவர் யாராலும் கேள்வி கேட்க்கப் பட முடியாதவர், அவர் கட்டளையின் படிதான் அவருக்குக் கீழே உள்ள சர்ச்சின் உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்ற அளவற்ற அதிகாரம் காரணமாக அவரால் துணிந்து கற்பழிப்பு கொலைகள் பிற வன்முறைகளைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட முடிகிறது. ஆக நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் கட்டுப்பாடில்லாத அதிகார வெறி பல்வேறு குற்றங்களுக்கு வழிகோலுகின்றன. இவற்றை பற்றி தமிழ் இந்து ஏன் கவலைப் பட வேண்டும் அது அவர்களது உள் மத வி(வ)காரங்கள் அல்லவா என்று முற்போக்காளர்கள் சிலர் கேள்வி எழுப்பலாம். அதற்கான பதிலைத் தனியாகப் பார்க்கலாம். முதலில் இப்படி சர்ச்சுக்களின் அதிகார வெறிக்குப் பலியான, சர்ச்சுக்களின் அதிகார வெறியால் சீரழிக்கப் பட்ட ஒரு சிறுமியின் உண்மைக் கதை ஒன்று மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது வந்துள்ளதா? இப்பொழுது கமலஹாசன் அளித்துள்ள உன்னைப் போல் ஒருவன் ஒரு அதிசய வரவு. ஒரு துணிவான முயற்சிதான். நமது இயக்குனர்கள் ஒரு சொப்பன வாழ்வில் வாழ்பவர்கள், நடக்க முடியாத சாத்தியம் இல்லாத மிகைப்படுத்தப் பட்ட ஃபாண்டசிகள் எடுப்பதில் மட்டுமே குறியானவர்கள். இவர்களுக்கு நல்ல படங்களும் எடுக்கத் தெரியாது, சமூகப் பிரச்சினைகளை மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்லவும் தெரியாது.. மீண்டும் மீண்டும் காதல், பார்த்துக் காதல், பார்க்காமலேயே காதல், கேட்டுக் காதல், கேட்க்காமலேயே காதல் அல்லது வன்முறை – இதைத் தவிர தமிழ் நாட்டுச் சினீமாக்காரர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருப்பதே தெரியாது. அப்படியே வேறு பிரச்சினைகளளத் தொட்டாலும் அவையும் யதார்த்தத்துக்குத் தொடர்பில்லாத அபத்தக் குப்பைகளாகவே அமைகின்றன. அபூர்வமாக எப்பொழுதாவது வரும் யதார்த்தப் படங்கள் கூட நிகழ்காலப் பிரச்சினைகளைத் தொடத் துணிவதேயில்லை. கேரளத்தில் தற்காலப் பிரச்சினைகளை துணிந்து தொடர்ந்து தொடுகிறார்கள். ஈநாடு என்ற படம் கேரளத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே படத்தில் ஒட்டு மொத்தமாக அணுக முயன்றது. அதன் பின்னால் எமர்ஜென்சியின் பொழுது நடந்த கோழிக்கோடு ஆர்.இ.சி மாணவனான ராஜன் கொலை வழக்கு சினிமாவாகியது. எத்தனையோ சமகால வழக்குகள் திரைப்படக் கருவாகி மக்களிடம் பிரச்சினையின் ஆழத்தைக்கொண்டு சென்று அவர்களை அலச வைத்தது. எனக்குத் தெரிந்து 94ல் நடந்த இஸ்ரோ நம்பி நாராயணன் கேஸ் மட்டும் தான் இன்னும் திரைப்படமாக வரவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தைக் கலக்கிய கொடூரமான வழக்குகளில் ஒன்று சூரிய நெல்லி பள்ளி மாணவி கடத்தலும், விபச்சாரத்துக்கு உட்படுத்தப்பட்டதும். அதில் பல பிரபலங்களின் பெயர்கள் கைதானார்காள். ஒருவரைத் தவிர அனனவரும் விடுவிக்கப் பட்டனர். நெஞ்சைப் பதற வைக்கக் கூடிய அந்தக் கொடூரத்தை இப்பொழுது சினிமாவாக்கியிருக்கிறார் லால் ஜோஸ் என்ற இயக்குனர். இந்தப் படம் கேரளத்தின் சமூக அவலங்கள் பலவற்றையும் தொட்டுச் செல்கிறது. பெண்களைப் பெற்றோரின் வயிறைக் கலங்க அடிக்கிறது. ரத்தக் கண்ணீர் வரவழைத்துள்ளது. பிரச்சினையைத் தானே சொல்லுகிறோம் என்று ஏனோ தானோவென்று ஒரு பிரச்சாரப் படமாக எடுத்து விடவில்லை. ஒரு அற்புதமான சினிமாவகவும் எடுத்துள்ளார்கள். பல நாட்களுக்கு நம்மைத் தூக்கம் வராமல் செய்யக் கூடிய ஒரு படம் அச்சன் உறங்காத வீடு.

சூரியநெல்லி கேஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1996 செப்டம்பரில் கேரளத்தின் மலைகள் நிறைந்த அடர்வன மாநிலமான இடுக்கி மாவட்டத்தில் ஒரு பள்ளிச் சிறுமியையை காதலிப்பது போல் ஆசை காட்டி ஒரு பஸ் கண்டக்டர் தன்னுடன் கடத்திச் சென்று தான் அனுபவித்த பின் அச்சிறுமியைப் போகப் பொருளாக கேரளத்தின் வெகுமானப் பட்ட கனவான்களுக்கு விற்றிருக்கிறான்., கேரளா முழுக்க அந்தப் பெண்ணை மிரட்டி ஒரு டூர்கொண்டு போய் ஊர் ஊராகப் போய் பெரிய மனுஷாளுக்குப் படைத்திருக்கிறான். 40 நாட்கள் கேரளத்தின் முக்கியப் பிரதானிகளால் சக்கையாகப் பிழீயப்பட்ட அந்தச் சிறுமியை மிரட்டி வெளியே விட்டிருக்கிறார்கள்., விஷயம் வெளியே கசிந்து பின் வழக்காக மாறியது. மொத்தம் 43 பேர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து 35 பேர்களுக்கு கீழ்க்கோர்ட் தண்டனை வழங்கியது. ஹைகோர்ர்ட் ஒரே ஒருவனை மட்டும் தண்டித்துவிட்டு பிறரை விடுதலை செய்துவிட்டது. கேரள அரசு வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு இப்பொழுது எடுத்துச் சென்றுள்ளது. ஆனால் சூரியநெல்லி கேரள மக்களின் மனசாட்சியை எந்தவிதத்திலும் பாதித்து விடவில்லை. அதன் பிறகு விதுரர என்ற ஒரு கேசும், அப்புறம் இன்னொரு கேசுமாகக் கேரளத்தில் பள்ளிச் சிறுமிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு பெரிய மனுஷாளுக்கு சதை விருந்து படைப்பது தொடர்ந்து நடை பெறுகிறது. கேரளத்தின் மந்திரிமார்களும், போலீஸ்மார்களும், நடிகர்களும் கூட இதில் கூட்டாளிகள். நீலலோகிதசநாடார்,, ஜோசஃப் என்று தொடர்ந்து மந்திரிகள் பதவி விலகினாலும் கூட இதுவரை ஒருவர் கூட தண்டனை அடைந்தது இல்லை. அந்தச் சூரியநெல்லி கேஸ் கடந்த வருடம் திரைப்படமாக எடுக்கப்பட்டு மக்களின் மனசாட்சியைக் கடுமையாக உலுக்கி விட்டது. படம் நம் மனசாட்சியை உலுக்கி பல நாட்களுக்கு நம்மை கலங்க அடிக்க வைப்பது. ஒரு நல்ல சினிமாவால் லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கலங்க அடிக்க முடியும், சிந்திக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தச் சிறந்த படம் ஒரு உதாரணம். படம் கேஸ் பற்றியது மட்டும் அல்ல, அதையும் தாண்டி, கிறிஸ்துவ சர்ச்சுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மதம் மாறிய மலையாளிகளின் நிலை, பணக்காரர்களின் விளையாட்டுக்கள், பள்ளிகள் மாணவர்கள் மேல் திணிக்கும் சைக்காலஜிக்கலான அழுத்தம், பெற்றோர் பிள்ளைகளின் மீது திணிக்கும் அழுத்தம், குழந்தைகள் மீது கவனமின்மை, அரசின் அலட்சியம், போலீஸின் பாரபட்சம், மீடியாக்களின் கருணையில்லாத பரபரப்பு, பெண்ணப் பெற்றவர்களின் அவல நிலை என்று ஏராளமான பிரச்சினைகளை மிக அழுத்தமாகத் தொட்டுச் சென்று காண்போரைக் கலங்க அடிக்கிறது அச்சன் உறங்காத வீடு.

சினிமா மிக மிக பவர்ஃபுல் மீடியா அதை அபத்தக் களஞ்சியங்களுக்கு வீணடிக்கக் கூடாது என்பது இது போன்ற படங்களளப் பார்த்தால் புரியும்., இது எந்த விதத்திலும் ஒரு பிரச்சாரப் படம் அல்ல. நீதி போதனைப் படம் அல்ல, இப்படி இப்படி சமூகம் இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அது காண்போரிடம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காண்போரை மனசாட்சிக்குப் பயந்து நடக்க வைக்கிறது. மிகவும் யதார்த்தமான முறையில் இயல்பான நடிப்பு, சிறப்பான காமிரா, இசை என்று மிகச் சிறந்த ஒரு சினிமாவாக பரிமளிக்கிறது அச்சன் உறங்காத வீடு.

அச்சன் உறங்காத வீடு, மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு சமுதாயத்த்தில் படாத துயர் படும், சிறு வயதிலேயே மனைவியை இழந்த ஒரு அச்சன் உறங்க முடியாமல் போன வீட்டின் கதை. கேரளத்தின் மிக அழகிய மலைப் பிரதேசமான பீர்மேட்டில் எலக்டிரிசிட்டி போர்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண அரசு ஊழியரின் வீட்டில் விதி விளையாடச் சின்னாப் பின்னமாகிறது அவரது வாழ்க்கை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைநாட்டில் சில மனித மிருகங்களின் வக்கிரம் அவரது வாழ்க்கையை நிரந்தரமாக நிர்மூலமாக்கி விடுகிறது. கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மணம் மாறி கிறிஸ்துவ மதத்திற்குப் போய் சாமுவேலாகி விடும் பிரபாகரனை கிறிஸ்துவ மதமும் ஏற்கவில்லை, சொந்த பந்தமும் விலக்கி விடுகிறது. அடைக்கலம் கொடுத்த பெந்த கோஸ்தே சர்ச்சில் விசுவாசமான கிறிஸ்துவனாக மாறி விடுகிறார் சாமுவேல். மூன்று பெண்களை ஈன்ற பின் மனைவி மறைந்து விட தனியாளாய் நின்று கனவுகளுடன் பெண்களை வளர்க்கிறார். கனவுகள் ஒவ்வொன்றாக சிதைய ஆரம்பிக்க கடைசிப் பெண்ணான லில்லியிடம் தன் நம்பிக்கையை வைக்கிறார், அவளை ஒரு டாக்டாருக்குவது அவரது லட்சியமாகிறது. பெந்தேகோஸ்தேயின் வெறி பிடித்த பஜனைகள், தன் பெண்கள், அழகிய மலைச் சூழல் என்று அமைதியான நதியாகப் போகும் வாழ்வில் சூறாவளி வீசுகிறது. பள்ளிக்குப் படிக்கப் போன லில்லி கடைசி பஸ்ஸில் கூட வீடு வந்து சேர்வதில்லை. அதன் பிறகு அவளைத் தேடுகிறார். விதி கொடூரமாக விளையாடுகிறது, 40 நாள் கழித்து சின்னா பின்னமாகி வீடு வந்து சேரும் லில்லியய சாமுவேலும் அவரது குடும்பமும் எப்படி எதிர் கொள்வதும். ஈவு இரக்கமற்ற சமுதாயமும் அவர் அன்று வரை வெறித்தனமாக நம்பிக்கை வைத்த பெந்தகோஸ்தே சர்ச்சும், அரசாங்க அமமப்புகளும் நீதித்துறையும் அவரையும் அவர் குடும்பத்தையும் கடித்துக் குதறிச் சின்னா பின்னப் படுத்தித் தற்கொலைக்குத் தள்ளும் வரை செல்கிறது.

படம் பலரது பார்வைகளில் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் இறுதியில் அனைத்துப் புள்ளிகளும் இயல்பாக இணைகின்றன. படம் “சியோன் மணவாளன், ஏசு மஹராஜன்” என்ற வெறித்தனமான பெந்தகோஸ்தே பஜனைப் பாடலுடன் தொடங்குகிறது. வேகமும் விறு விறுப்பும் நிறைந்த பஜனைப் பாடல் காட்சி. அப்படி ஒரு காமிரா கோணமும் விறுவிறுப்பும் நிறைந்த உக்கிரமான காட்சியுடன் படம் துவங்குகிறது. பின்பு அதே பஜனைக் காட்ச்சி சாமுவேல் மனம் வெந்து சர்ச்சினால் கைவிடப்பட்ட பொழுது கலங்கிய மனநிலையுடைய சாமுவேலின் கண்களில் ஃபிஷ் ஐ காட்சியாக விரிவது அபாரம். காமராமேனும் எடிட்டரும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சிகளை எடுத்துள்ளார்கள். படம் முழுவதும் இடுக்கி/கோட்டடயம் மாவட்டத்தின் அடர் பச்சைக் கண்னைக் கவருகிறது. ஆனாலும் அதை ரசிக்கும் மனநிலையைக் கதை நமக்கு அளிப்பதில்லை, காட்சிகளின் விறுவிறுப்பும் கதையும், இசையும் நம் மனதைப் படபடப்பில் ஆழ்த்துகிறது. பலஹீனமான மிருதுவான, இரக்க மனம் உள்ளவர்களை பல நாட்களுக்குத் தூக்கம் வராமல் செய்யக் கூடிய உண்மைச் சம்பவம் இந்தத் திரைப்படம்.

வசனங்கள் மிகக் கூர்மையாக வைக்கப்பட்டுள்ளன. வெறித்தனமான பஜனை முடிந்து ஆபீசுக்கும் வரும் சாமுவேல் எதிர்த்த சீட் அம்மணியைக் காட்டி அவர்கள் எல்லாம் வெளுப்புத் தோல் கிறிஸ்துவர்கள் நாங்கள் எல்லாம் கருப்புத் தோல் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதில் தொடங்கி, தொடர்ந்து மலையாளத்தின் சர்ச்சுகளின் கோரப் பிடிகளில் சிக்கித் திணறும் மதம் மாறிய கிறிஸ்துவர்களின் நிலைமை சாடப் படுகிறது. தான் நம்பி விசுவாசமாக நடந்து கொண்ட அதே சர்ச், தன் பெண்ணைக் கடத்திக் கற்பழித்து வீதியில் விற்ற கொடூரன் மதம் மாறி அதே சர்ச்சில் சேர்ந்த ஒரே காரணாத்தினால் மன்னித்து விடச் சொல்கிறது. சாமுவேலின் மத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அந்த சர்ச் சந்தர்ப்பவாதமாகப் பயன் படுத்திக்கொண்டு அவரை நட்டாற்றில் விடுகிறது. எந்தக் கயவன் பெண்ணைக் கடத்தினானோ அவன் அதே சர்ச்சில் சேர்ந்துகொண்டு பாதிரியுடன் சாமுவேலின் குடும்பத்தில் அமைதி நிலவப் பாட்டுப் பாடுகிறான். மத மாற்றம் ஒன்றே குறி என்று பெந்தகோஸ்தே சர்ச்சுகள் வெறித்தனமாக நீதி நியாயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுகின்றன. சாமுவேல் நம்பிய சர்ச்சும் கை விட்ட நிலையில் கலங்கித் தவிக்கிறார். அந்தப் பாதிரியாரிடம் சாமுவேலின் இந்து நண்பர், அரசியல் கட்சிகள் பிரியாணி கொடுத்து ஆட்களைச் சேர்ப்பது போல ஒரு மதத்திற்கு மதமாற்றம் செய்து ஆட்களைச் சேர்க்கும் நீங்கள் எல்லாம் புனிதர்கள்தானா என்று சாடுகிறார். கிறிஸ்துவர்கள் நிறைந்த மலையாளத்தில் இப்படி மதமாற்றத்தை எதிர்த்து ஒரு சினிமா சாடுவது குறிப்பிடத் தக்கது. பெந்தகோஸ்தே சர்ச்சுகள் தீவீர மதமாற்றதில் குறியாக இருக்கும் பொழுது பிற பிரிவு சர்ச்சுகள் தீவீரமான ஜாதி வெறியையை சமுதாய ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றன என்பதையும் படம் சொல்கிறது. மொத்தத்தில் சர்ச்சுகள் கேரள கிறிஸ்துவர்கள் வாழ்விலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக ஒழுக்கங்களிலும் தலையிட்டு அளவற்ற தீமைகளைக் கொணர்வது படத்தில் மிகத் தெளிவாய்ச் சொல்லப்படுவது, சிக்குலார் வியாதி பிடித்த கம்னியுச கேரளாவில் ஒரு ஆச்சரியகரமான நிகழ்வே. சாமுவேலின் இரண்டவது மகளைத் திருமணம் செய்ய தன் மதம் மாறாத இந்துவானச் சொந்தச் சகோதரியின் மகனே விரும்பிய பொழுதும் சர்ச் தலையிட்டுத் தடுத்து விடுகிறது. பெண்ணைக் கடத்திக்கொண்டு போன பஸ் உரிமையாளரின் பையனுக்கு உயர்ஜாதி சர்ச் உறுதுணையாக இருக்கிறது. இப்படி கேரளாவின் அன்றாட அரசியலிலும் சொந்தக் குடும்ப வாழ்விலும் சர்ச்களின் அதிகாரத் தலையீடுகள் பலமாக இருப்பதை இந்தப் படம் அப்பட்டமாகக் காண்பிக்கின்றது. அதனால்தான் அண்டர்வேரில் கூட சர்ச் தலையிடும் அமெரிக்க மார்மோன் உதாரணத்தை உதாரணமாகச் சொல்லி இந்தப் படத்தின் விளக்க ஆரம்பித்தேன்.

மூத்த பெண்கள் இருவருக்கும் படிப்பு வராத காரணத்தினால் தன் நம்பிக்கையை தன் கடைசி மகள் மீது வைக்கும் சாமுவேல் மிகுந்த அழுத்தத்தை கடைசி மகள் மீது செலுத்துகிறார். அந்த பளு அவரது மகளிடம் அளவு கடந்த மன உளளச்சலையும் பயத்ததயும் உருவாக்குகிறது. உயர் தரப் பள்ளியில் 80 மார்க்குகள் பெற்ற பின்னரும் கூட மார்க் போதாது என்று சொல்லி பெற்றோரை அழைத்து வரச் சொல்லும் பள்ளிக் கூடங்களும் பிள்ளைகள் மீது அளவற்ற சுமையை வைக்கின்றன. அந்த அழுத்தம் தாங்காமல் பயந்து நடுங்கிய பெண் தனக்கு லவ் லெட்டர் கொடுத்தவனை நம்பி சென்று விட அவள் வாழ்க்கைச் சூறையாடப் படுகிறது. தவறு அதிக அழுத்தம் கொடுத்த பெற்றொரின் பக்கமா, 100 சதம் வாங்கச் சொல்லி நெருக்குதல் கொடுக்கும் பள்ளிக்கூடம் மீதா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் கொடுத்த அதிர்ச்சி நிச்சயம் பெற்றோரரயும் பள்ளிக் கூடங்களையும் ஒரு கணமாவது யோசிக்க வைத்திருக்கும். போலீஸின் அதிகார மீறல்கள், பத்திரிகை டி விக்களின் பேராசைகள் எல்லாம் சேர்ந்து பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியத்துக்கு இடம் இல்லாமல் செய்து விடுவதும் மிகத் தீவீரமாகப் படத்தில் காட்டப் ப்டுகிறது. போலீஸின் அலட்சியத்தால் அப்பாவி ஒருவரும் இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் சிக்க நேர்ந்து அவரது வாழ்வும் நாசமாகிறது. சர்ச்களின் அரசியல் விளையாட்டுக்கு சாமுவேல் பகடையாகிறார். அரசியல்வாதிகளும் சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். சர்ச்சின் ஆதரவு பெற முயலும் தன் எதிரியையை எம் எல் ஏ இந்தக் கேசில் சிக்க வைக்க முயல்கிறார். ஒரு அபலைச் சிறுமியின் பரிதாபத்தில் சர்ச்சும், அரசியலும் மீடியாக்களும் குளிர்காய முயல்கின்றன

saleem_kumarபடத்தின் முழுப் பலமுமே அச்சனாக வரும் சலீம் குமாரின் அபாரமான நடிப்புத்தான். மலையாளப் படவுலகின் ஒரு சாதாரரண காமெடியனாக இருந்த சலீம்குமாரை மிகவும் கனமான ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்து அவார்ட் வாங்க வைத்திருக்கிறார் இயக்குனர். அற்புதமான நடிப்பு. வெகு யதார்த்தமாகச் செய்திருக்கிறார். ”ஜட்ஜ் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்று அர்த்தம் அதனால்தான் ஜட்ஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று மனநிலை கலங்கி அவர் சொல்லும் இடத்தில் நம் கண்ணீரைத் தவிர்க்கவே முடிவதில்லை. ’இந்திரா கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்க 10 வருடம் எடுத்துக் கொண்டனர். ஆனால் எனக்கு உடனடியாக தண்டனை கொடுத்துவிட்டார்கள். நான் பாக்யவான்’ என்று நீதித்துறையை மிக யதார்த்தமாகச் சாடுகிறார். இப்படி படம் நெடுக இவரது வெகு யதார்த்த நடிப்பு கண்டு அசந்து போனேன். இந்தப் படம் சிறந்த நடிகருக்கான விருதினை மோகன்லாலுடன் இணைந்து சலீம் குமாருக்கும் வாங்கிக் கொடுத்துள்ளது.

மலையாளப் பட உலகின் ஹீரோக்களில் ஒருவரான ப்ரித்விராஜ் இதில் விதிவசத்தில் கேசில் மாட்டிக் கொள்ளும் அப்பாவி இளைஞனாக வருகிறார். அவரது கால்ஷீட் கிடைத்து விட்டது என்பதற்காக பீர்மேடு பகுதியின் இயற்கை எழிலைக் காண்பிக்க அவருக்கு ஒரு பாடலல வைத்தது படத்தின் விநியோயகஸ்தர்களின் வணிக நிர்ப்பந்தமாக இருந்திருக்க வேண்டும். படம் ஒரு கேங்க் ரேப் பற்றியதாக இருந்த பொழுதிலும் கூட ஒரு இடத்தில் கூட ஒரு கட்டில் காட்சியோ, கற்பழிப்பு என்ற சொல்லோ, அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த கோர நிகழ்வுகளோ காட்டப் படுவது கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. எந்த வி்த அபத்தமும், ஆபாசமும், கண்யக் குறைவும் இன்றி இப்படி ஒரு சிக்கலான கேஸ் பற்றிய படத்தை எடுக்க முடியும் என்பது ஆச்சரியமானதொரு விஷயம். பாடல்களும் படத்தில் இருந்து விலகாமல் (ஒரு பாடல் தவிர) பிண்ணனியில் மட்டுமே மிருதுவாகவும் சோகமாகவும் வருகின்றன. அருமையான பாடல்கள்.

படம் பார்த்த பின் சொல்ல முடியாத மன வேதனைக்கும், அழுத்தத்துக்கும் உள்ளானேன். மனம் மிகவும் கனத்துக் கிடந்தது. ஏராளமான கேள்விகளையும் பாடங்களையும் தரும் மிக முக்கியமான ஒரு சினிமா அச்சன் உறங்காத வீடு. அந்த அச்சனை மட்டும் அல்ல படம் பார்க்கும் பெண்ணைப் பெற்ற அச்சன் எவரையுமே பல இரவுகள் உறக்கம் வராமல் அடிக்கக் கூடிய வலுவான திரைப்படம். அவசியம் பார்க்கப் பட வேண்டிய ஒரு திரைப்படம்.

அச்சன் என்ற சொல் ஆண்டவனையும் குறிக்கும், பாதிரியாரையும் குறிக்கும். அச்சனின் பெயரால் அச்சன்கள் போடும் ஆட்டத்தில் அப்பாவி அச்சன்கள் உறங்க முடியாத நிம்மதியற்ற நிலை உருவாவதை அச்சன் உறங்காத வீடு காட்டுகிறது. ஆண்டவனின் பெயரால் மத சாம்ராஜ்யங்கள் நடத்தும் பாதிரியார்கள் பலரும் இப்படி மத வெறியினாலும், அளவற்ற பண பலத்தாலும், அதிகாரக் குவியலினாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் சர்ச்சுக்களில் உறுப்பினர்களின் வாழ்க்கையைச் சின்னா பின்னப் படுத்துகிறார்கள் என்பதை இந்த சினிமா மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளது. கேரள சர்ச்சுக்களில் எப்படி பாதிரியார்கள் இளம் பெண்களைச் சூறையாடுகிறார்கள் என்பதை சின் என்ற ஒரு மலையாள வாடை அடிக்கும் ஆங்கிலப் படம் ஒன்றும் காட்டியுள்ளது. மத மாற்றம், ஊழல், அப்பட்டமான வன்முறைகள், கொலைகள் என்று அனைத்துக் கொடுமைகளையும் இந்த நிறுவனப் படுத்தப் பட்ட மதங்கள் அதன் குருமார்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்குகின்றன என்பதை இந்த சினிமா தெளிவாக விளக்குகிறது. நிறுவனப் பட்ட மத அமைப்புகள் எவ்வாறு அந்த அமைப்பின் உறுப்பினர்களான சாமான்யர்கள் வாழ்வைக் குலைக்க முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு தெளிவான சாட்சி. அவசியம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இந்து மதத்தில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் அருமையை இந்தப் படம் விளக்குகிறது.

108 Replies to “நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்”

  1. மிகச்சிறப்பான விமர்சனம்.

    இதனை கமலஹாசன் தமிழில் எடுக்காதிருக்கவேண்டும்!

    கிறிஸ்துவ மதம் ஒரு மன்நோய். மனநோயாளிகளையும் மன அழுத்தத்தில் சிக்கியவர்களையுமே அது பற்றுகிறது.

  2. பட விமர்சனம் நன்றாக உள்ளது. தமிழிலும் இத்தகைய படங்கள் வரவேண்டும். ஆனால், இங்கேயும் கிறிஸ்துவ தூஷணம் செய்வதற்காக எழுதப்பட்டது போல் உள்ளது. மொர்மொன்கள் கிறிஸ்துவர்கள் அல்ல. அவர்கள் பைபிளை கூட நம்பாதவர்கள். அவர்கள் நம்புவது “the book of mormon”. அவர்களுடைய வழிபாடு தளத்தை “The Church of Christ” என்றும் அவர்கள் தங்களை Later Day Saints (LDS) என்றும் அழைத்துக்கொள்வார்கள். பல கடவுள் உண்டென்றும், அவர்களும் கடவுள் ஆக முடியும் என்றும் நம்புபவர்கள். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். அவர்கள் கிறிஸ்துவர்களா?
    நான் மொர்மொன்களின் தலைநகரான salt lake நகரத்தில் வாழ்ந்தவன். அங்கே நான் பழகிய 75% மக்கள் மொர்மோன் மதத்தை சேர்ந்தவர்கள். டீ, காப்பி கூட பருகமாட்டார்கள். விவாகரத்து என்பது மிகவும் அரிது அங்கே. எனென்றால் விவாகரத்து செய்தால் நரகம் என்பது அவர்கள் நம்பிக்கை.
    நீங்கள் சொன்ன மற்ற பல விஷயங்களும் அவர்களுக்கு பொருந்தும் (உள்ளாடை உட்பட). அவர்கள் அந்த உள்ளாடையை ஒரு கவசமாக கருதுகிறார்கள்.
    இந்தியாவில் கிறிஸ்துவர்கள் சபைனால் காட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை இல்லை. நான் பல மாதங்களாக ஆலயம் செல்லாமல் இருந்து இருக்கிறேன், என்னை யாரும் விளக்கி வைக்கவில்லை.
    நீங்கள் சொல்வதைப்பார்த்தால், கிறிஸ்துவர்கள் எல்லாம் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதை போல் உள்ளது. சொந்த தகப்பன் சொன்ன கட்சிக்குகூட நாம் வோட்டு போடுவதில்லை, அப்படி இருக்கையில் பாஸ்டர் சொன்னா கேட்பாங்களா? அவ்வளவு அடக்கமானவர்களா கிறிஸ்த்துவர்கள்?
    இப்போது எழுத போதுமான நேரமில்லை. தொடருவோம்.
    அன்புடன்,
    அசோக்

  3. Anbarasan,
    அமென். In the village I lived, daughter of pastor told me that her father is a rogue and use to womenize teacher in his convent shcool.

  4. சத்தியமான உண்மை..!

    ஆனால் சில வருடமுன்பு திருச்சியின் பிரபல டிவி ஷோரூம் அதிபர் தனது மகளின் தீராத வியாதி காரணமாக மனம் உடைந்து அவளது மரணத்தைக் காண தைரியமில்லாது புட்டபர்த்தியில் “சாமி” கும்பிட்டுவிட்டு குடும்பத்துடன் (அதாவது பாதிக்கப்பட்ட மகளுடன்) தற்கொலை செய்து கொண்டார்..!

    (Edited.)

  5. அருமையான விமரிசனம் விஸ்வாமித்ரா. பாராட்டுக்கள்!

    நிறுவனப்பட்ட மதங்கள் வளர வளர அவை மக்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு கேரளம் ஒரு சிறந்த உதாரணம். ஒரு பக்கம் கிறுஸ்துவம், ஒரு பக்கம் இஸ்லாம் என இரண்டு பக்கமும் நடந்துகொண்டிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, “கடவுளின் சொந்த பூமி” என்று அழைக்கப்பட்ட அந்த புண்னிய பூமியின் கலாசாரத்தையும், தெய்வீகத்தையும், மொத்தத்தில் அதன் ஹிந்துத் தன்மையையே இழக்கச் செய்துள்ளது.

    கிறுஸ்துவ இஸ்லாமியர்கள் சேர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலாக ஜனத்தொகை அதிகமாக, அதனால் சிறுபான்மையினராக ஆகிவிட்ட ஹிந்துக்கள் மேலும் எண்ணிக்கையில் குறைந்துகொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச ஹிந்துக்களும் ஒரு விழிப்புணர்ச்சியும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் கம்ம்யூனிசக் கட்சிகளிலும் குப்பை கொட்டிக்கொண்டு, மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மடையர்களாக இருப்பது மிகப்பெரிய வேதனை.

    சமூக விழிப்புணர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்கள் நிறைய மலையாளத்தில் எடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது என்னமோ உண்மை தான். நானும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அனாலும் யதார்த்தத்தில் கேரள மக்கள் எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே! இந்தியாவில் மதமாற்றத்தில் ஈடுபடும் பெரும்பான்மையான பாதிரிமார்களும், கன்யாஸ்த்ரீகளும் கேரளத்திலிருந்து தான் புற்றீசல் போலக் கிளம்புகிறார்கள். எத்தனை ”அச்சன் உறங்காத வீடுகள்” திரைப்படங்கள் வந்தாலும், எத்தனை “ஆமென்” புத்தகங்கள் விற்றாலும், பிரயோஜனம் இல்லை போலிருக்கிறதே.

    அதே போல, இந்தியா முழுவதும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய ஜிகாதிகளும் கேரள மண்ணிலிருந்து தான் கிளம்புகிறார்கள்; அங்கு தான் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே தானே “லவ் ஜிகாத்” கூட பயங்கரமான அளவில், கிறுஸ்துவ-ஹிந்து இயக்கங்களை ஒன்று சேர்க்கின்ற அளவிற்கு நடந்துகொண்டிருக்கிறது. மற்றொரு இயக்குனர் நாளை லவ் ஜிஹாத் பற்றிக் கூடப் படம் எடுக்கலாம். நீங்களும் அற்புதமான ஒரு விமரிசனம் எழுதலாம். ஆனால் அதனால் பயன் இருக்குமா?

    கேரள ஹிந்துக்கள் விழிப்பார்களா? கேரளத்தைப் பார்த்து பாரதத்தின் மற்ற பகுதிகளில் உள்ள ஹிந்துக்கள் முன் ஜாக்கிரதையாக இருப்பார்களா? ஜாதி வெறியிலும், மொழி வெறியிலும், அசிங்க அரசியலில் ஈடுபட்டுக்கொண்டு, ஒற்றுமையில்லாமல், எப்பேர்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறார்களே!

    நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. பாரதம் மீண்டும் தன் மகோன்னதத்தை அடையும் என்கிற நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறது. வேதனையும், விரக்தியும், நாள்பட நாள்பட அதிகமாகத்தான் ஆகிறதேயொழிய குறைவதாகத் தெரியவில்லை.

    ஆகட்டும்…..ஆண்டவன் விட்ட வழி.

  6. /////glady
    14 October 2009 at 7:34 am
    சத்தியமான உண்மை..!

    ஆனால் சில வருடமுன்பு திருச்சியின் பிரபல டிவி ஷோரூம் அதிபர் தனது மகளின் தீராத வியாதி காரணமாக மனம் உடைந்து அவளது மரணத்தைக் காண தைரியமில்லாது புட்டபர்த்தியில் “சாமி” கும்பிட்டுவிட்டு குடும்பத்துடன் (அதாவது பாதிக்கப்பட்ட மகளுடன்) தற்கொலை செய்து கொண்டார்/////

    ஆம், ஊருக்கெல்லாம் வியாதியை ஜபத்திலேயே குணப்படுத்திவிட்டு குணப்படுத்த முடியாத வியாதியில் படுத்த படுக்கையாக இருந்து செத்துப்போன திருட்டு தினகரனை கிளாடியார் ஞியாகபகப்படுத்துகிறார் போலிருக்கிறது.

  7. //முஸ்லிம் மதத்திலும் இதைப் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.//

    அன்பு சகோதரர்களே…
    இஸ்லாத்தில் கட்டுப்பாடுகள்!…….
    இது இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே, அவர்க்ள்,அதன்படி வாழ இறைவன் கடமையாக்கியவை….அவை கட்டுப்பாடுகள் அல்ல…. கடமைக்கும்,கட்டுப்பாடுக்கும்,பாரிய வேறுபாடு உண்டு…
    உதாரணமாக:கடமை என்பது,ஒருவன்,ஒரு மளிகை கடை வைத்துள்ளான், என்றால்,அதில்,அவன் பொருள்களை,பதுக்காமல்,அதிக விலை இல்லாமல், எடை குறைப்பு செய்யாமல்,கலப்படம் செய்யாமல்,வாடிக்கையாளரிடம், நேர்மையாக நடந்து கொள்வது,அவனது கடமையாகிறது….
    இது,கட்டுப்பாடு அல்ல…..இல்லை,இது கட்டுப்பாடு,என்று எண்ணி,அதை அவன் உடைத்தெறிவானேயானால்,அவன்,அவனது தொழிலுக்கும்,மக்களுக்கும், துரோகம் இழைக்கிறான்…..இதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்…அல்லவா?
    ஒரு முஸ்லிமின் நிலை,மேற்சொன்ன மளிகை கடைக்காரனின் நிலையை ஒத்தது…இஸ்லாத்தில்,ஒரு முஸ்லிமுக்கு சில கடமைகள் இருக்கிறது…அதை செய்தால் தான் அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,மளிகைகாரன், செய்யவேண்டிய,நியாயங்களை,கடைபிடித்தால்,மட்டுமே,அவன் பெயர், வியாபாரி,இல்லயேல்,அவன் சுரண்டல்காரன்.அல்லவா?
    அது போல,அந்த கடமைகளில் இருந்து முஸ்லிம் தவரும் போது,அவன் முஸ்லிமாக இருப்பதில்லை…..
    ஒரு முஸ்லிம்,அவனது தண்டனைக்குரிய குற்றத்திற்க்கே தவிர (கொலை,கொள்ளை,போன்ற பெரிய,சிறிய),மற்ற அனைத்தின் விசாரனையும்,(அவனது கடமை சம்பந்தப்பட்டது)அல்லாஹ்விடமே,என நபி(ஸல்) கூரிய்ள்ளார்கள்…..
    கடமை தவருவது,அவனுக்கும்,இறைவனுக்கு இடையில் உள்ளது…..
    அவ்வளவு தான்……

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

  8. விமர்சனம் கட்டாறு வெள்ளமென உணர்ச்சிகளைக் கொட்டி எழுதப்பட்டிருக்கிறது. எழுதலாம். ஆனால் அதை விமர்சனம் எனச்சொல்வது கடினம். தனிமனிதர் ஒருவரின் உணர்ச்சிக்குவியல் என்று மட்டுமே சொல்லலாம்.

    Justice should not only be done; but should seem to be done also. இதைப்போலவே, film criticism should not only be done; but should seem to be done also. எப்படி? அஃதை உங்கள் மொழிநடை சொல்லும். Be moderate.

    திரைப்படங்கள் தற்காலத்தில் கலை ஊடகம் அல்ல. வியாபாரமே. இதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே, நீங்கள் நினைப்பது போல படங்கள் தமிழில் வாரா. கோடிகளைக்கொட்டி கோடிகளை அள்ளுவதே இங்கு முதலும் கடைசியுமான குறிக்கோள். இத்தொழிலுக்குப்பின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் வயிற்றைக்கழுவுகின்றன. நாலே நாலுபேர் வந்து படம் பார்த்துவிட்டு, இப்படி, ”படம் பார்த்த பின் சொல்ல முடியாத மன வேதனைக்கும், அழுத்தத்துக்கும் உள்ளானேன். மனம் மிகவும் கனத்துக் கிடந்தது.” என எழுதுவர் என்று இருந்தால் எப்படி அவர்கள் வாழமுடியும்? Therefore, please be realistic.

    இப்படி மதம் என்ற போர்வையில் நடக்கும் அட்டுழியங்களை தோலுரித்துக்காட்டி மக்களை சிந்திக்க வைக்க வேண்டுமெனில், அதற்கு வேறு ஊடகங்களுக்குத்தான் போகவேண்டும். திரையில்தான் என்றால், documentaries are good.

    மலையாளிகளுக்கும் தமிழர்களுக்குமிடையில் நிறைய வேறுபாடுகள் உள. அதன்படியே படங்களும் வரும்.

    சினிமா நடிகன் தெய்வமல்ல அங்கு.
    ஆனால், அவனே தெய்வம் இங்கு. அவன் இறந்தால், தமிழர்கள் தற்கொலை பண்ணிக்கொள்வார்கள். இருப்பினும், தமிழில் சிலபடங்கள் வந்தன. கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’

    அஞ்ஜனாசுதன்’s response is realistic.

    As I said, a typical malayaali thinking is far superior to that of a typical Tamilian thinking. Still, how comes they have become as explained by அஞ்ஜனாசுதன்?

    The reason is, as I see it, they are a people who conveniently keep aside their thinking cap, when they deal with religion. In other words, they allow themselves to be swept off their feet.

    So, on the one side, they are ‘thinkers” and on the other side, ‘lap-dogs’. For an onlooker, it will strike bizarre.

    No wonder, Swami Vivekananda called Kerala ‘a mad house’!

  9. Fantastic writing on a film. Reality is shown in its all ugly regal bearings. The author has rendered a great service to all the parents.

    Not only the article talks about the story line, but also educates the readers on its back ground.

    Sadly, this much of detailed background information is not required to be given in the Western readers, where the evangelical atrocities are always open for the people to know. Thanks to their far more honest media and independent justice system.

    But, in India, we do not hear about the people killed and tortured at a christian institute in Kerala. Neither we hear about the atrocities committed against young children by the Indian churches; those atrocities are protected and propagated by the church.

    So, the author of this article had to take a lot of pains to explain the background to the readers.

    And he had clearly stated the difference that happens when such an atrocity is done by a christian over a hindu.

    If such a depressing cruelty is done to the children by a hindu, at least the hindu society is free to question and make the necessary legal activities and get justice.

    But, if the institute is christian or islamic, not only the christians and muslims, the hindus also cannot even question. That is the sad state of affairs in India.

    The article clearly shows not only what atrocities happen in the churches, but also how the churches support such atrocities and protect the criminals.

    Any one who has a son or daughter must read this article before exposing the children into the educational and religious institutions of the christians and muslims. A parent must forward this article to another parent.

    The article has taken the horse to the pond, and also has made elaborate explanations to make the horse understand the necessity of drinking the healthy water.

    But, would the Indian horses prove their intelligence? or

    Would they just continue to remain asses ? and

    Feed their children to a gory life?

    I have heard from reliable sources that as the legal proceedings are harsh and employed in the West (unlike India), the priests and nuns of those countries visit India (and other third world countries) to get all those pervert pleasures in a medically and legally safe way from the orphanages, homes and their other institutions.

    What India need to resolve almost all of these problems is a strong judiciary system that can act independently and in accordance with constitution and not as per our politicians and powerful religious leaders.

  10. //இந்தியா பாக்கிஸ்தான் போர் வந்தால் பாக்கிஸ்தானை ஆதரிக்கச் சொல்லியும், கிரிக்கெட் மேட்சுகளுக்குக் கூட பாக்கிஸ்தானின் வெற்றிக்குப் பிரார்த்திக்கச் சொல்லியும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றியும் மசூதிகளும் முல்லாக்களும் நிர்ப்பந்திக்கின்றனர்.//

    சகோதரர்களே…
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…

    கிரிக்கெட் மேச்,,…இத பத்தி,பேசவே எனக்கு தோணல….இதுக்கெல்லாம், பிரார்தனை செய்ய சொல்பவன்,பள்ளியின் ஹஸ்ரத்தாக இருந்தாலும்,அறிவுகெட்டவனே….

    (முல்லா என்று,நீங்கள் ஹஸரத்களை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்…)

    எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும்,என்பது தனி மனித உரிமை….கட்சிகளை பற்றி அறியாதவர்களுக்கு,அதை விளக்கலாமே தவிர,இவருக்கு ஓட்டு போடுங்கள்,என சொல்ல,அவர்களுக்கும்,உரிமை இல்லை…அதை கேட்க்க வேண்டிய அவசியமும்,முஸ்லிம்களுக்கு இல்லை.

    // இப்பொழுது இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கல்யாணம் செய்யச் சொல்லும் லவ் ஜிகாதைக் கூட மத நிலையங்கள் அறிவிக்கின்றன.//

    லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
    முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…
    ஒரு வேலை,அதை இஸ்லாத்தின் சாயம் பூசி,மத நிலையங்கள் செய்யுமேயானால்,அதைவிட ஒரு பெரிய கேடு அவர்களுக்கு தேவை இல்லை…

    இஸ்லாத்தின் பேரால்,குர் ஆனிலும்,என்னுடைய வழிமுறையிலும் இல்லாத ஒன்று வழி கேடாகும்,அனைத்து வழிகேடுகளும்,நரகத்திற்கு இட்டுச்செல்லக் கூடியது.என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்..
    இதை அறிந்த எவனும் இதை செய்ய துணிய மாட்டான்….

    //காஃபீர்களின் மீதான வெறுப்பும், தாக்குதலுக்கான கட்டளைகளும் கூட மதத் தொழுகையின் பொழுது அறிவிக்கப்படுகின்றன.//

    இல்லங்க…இஸ்லாம் அப்படி சொல்லவே இல்ல..இத உன்னை போல் ஒருவன் படவிமர்சனத்தில் உள்ள எனது பின்னூட்டத்தில் தெளிவாக விளக்கிஉள்ளேன்…

    //முஸ்லிம்களின் சொந்த விவாகரங்கள் கூட முல்லாக்களால்தான் தீர்வு செய்யப்படுகின்றன. அங்கு நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை.//

    இஸ்லாத்தில்,நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை.உண்மை தான்….

    //ஒரு சில அடிப்படைவாத மதக் கொள்கைகளை விமர்சித்த கவிஞர் ரசூல் என்பவர் இன்று வரை மத விலக்கம் செய்யப்பட்டு எண்ணற்ற மன உளைச்சல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார். ஒரு தஸ்லீமா நஸ்ஸ்ரீன் உயிருக்குப் பயந்து நாடு நாடாய் அகதியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.//

    இவர்கள்,எதை விமர்சித்தார்கள்,என எனக்கு தெரியாது…இஸ்லாத்திலும்,பல மூடநம்பிக்கைகள்,இடை செருகப்பட்டன,அதை விமர்சித்து இருந்தால்,அதை நான் ஆதரிக்கிறேன்….அது தவிர இஸ்லாமிய சட்டங்கள்,விமர்சனத்துக்கு அப்பார்பட்டது அல்ல….
    ஆனால்,அதை விமர்சிக்கும் முன்,நன்கு அறிந்து இருக்கவேண்டும்….இது அனைவருக்கும் பொருந்தும் அல்லவா?….
    அப்படி விமர்சனங்களை,எதிர்கொள்ளும் போது,அதை,விளக்க வேண்டிய பொறுப்பு,பெரியவர்களுக்கு உண்டு…
    —————-
    இது போன்ற பைத்தியக்காரன்,மொத்த முஸ்லிம்களிலும்,1% கூட இருக்க மாட்டான். போக,எங்களைப் போன்றவர்கள் 99% இருக்கோமே,,,எங்கள முஸ்லிமா கன்சிடர் பன்னவே மாட்டேங்குரீங்களே!……….

    நன்றி…

    அன்புடன்
    ரஜின்

  11. Rajin,

    ///இது போன்ற பைத்தியக்காரன்,மொத்த முஸ்லிம்களிலும்,1% கூட இருக்க மாட்டான். போக,எங்களைப் போன்றவர்கள் 99% இருக்கோமே,,,எங்கள முஸ்லிமா கன்சிடர் பன்னவே மாட்டேங்குரீங்களே!///

    Yours is the voice of many of my muslim friends who in their heart and act still continue to follow the Indian ethos instead of islamic theology.

    But, sir, such honorable voices are now losing their power or raised only to cover up the atrocities of Islam.

    If you consider others opinions and religions as important and true as yours, then, sir, you are a Hindu, albeit being a muslim.

  12. ////சகோதரர்களே…
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…///

    ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

    ///லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
    முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…///

    ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

    இப்படி அவன் முஸ்லீம் அல்ல என்று கூறிவிடுவது சூப்பர் எஸ்கேபிஸம் தவிர வேறில்லை.

    அப்படி முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏன் நீங்கள் மதத்தில் வைத்திருக்கிறீர்கள். கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!

    இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், அதற்கு அவர் கிறிஸ்து அவனுக்குள் இருந்திருந்தால் அப்படி செய்திருக்கமாட்டான். கிறிஸ்துவாக புஷ் இல்லை என்று சொல்லிவிட்டார்.

    உங்களைப் பொறுத்தவரை ஜிகாத் என்ற பெயரில் குண்டுவைப்பவன் முஸ்லீம் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரை கொலைபாதகன் கிறிஸ்துவன் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். உங்களுக்கு இடையில் இந்துக்கள் சாக வேண்டும்.

    அதர்மம் செய்பவனுக்கு தர்மப்படியான போர் சரிப்பட்டு வராது என்று துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்த சொல்லிக்குடுத்த கிருஷ்ணனின் வழியே சிறந்தது இந்தக்காலத்திற்கு என்று இந்துவுக்கு படுகிறது. அப்படி செய்துவிட்டால் இந்துத்தீவிரவாதம் என்று சொல்லி இன்னும் எங்களை ஏறி மிதிப்பீர்கள்.

    மத்தளமானது இந்து மதம். மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

  13. சகோதரர் ராம் அவர்களே.
    அவன் செய்தானே,அவனை என்ன செய்யப் போகிறீர்கள்,….இந்த கேள்வி நீங்கள் இந்திய அரசை பார்த்து கேட்டால் பொருத்தமாக இருக்கும்,நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..
    ஒருவன் தவறு செய்தால்,அவனை ஒட்டுமொத்த சமுதாயத்தின்,தார்மீக பொருப்பு கொண்ட பிரதிநிதியாக பார்க்கும்,தங்களது பார்வை,தவறானது….

    // ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன்//

    என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?

    அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
    அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?

    தனி ஒருவனின் செயல்பாடு,முழுமதத்தின்,பிரதிபலிப்பும் அல்ல,அவனது செயல்களுக்கு,மதத்தையும் பொருப்பாக்க முடியாது…..

    இல்லை.மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

    நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
    https://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
    இந்த நியூச படிங்க……
    இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா? அல்லது சகஹிந்து எனும் ரீதியில், தாங்கள் தான் பொறுப்பேற்று கொள்வீர்களா?….இல்லை அவர்களை நீங்கள் என்னசெய்ய போகிறீர்கள் என்று,நான் தங்களை நோக்கி கேட்டால்,தங்கள் பதில் என்னவாக இருக்கும்,சகோதரரே?

    இதே நிலை இஸ்லாத்துக்கும்,இஸ்லாமியர்களான எங்களுக்கும், பொருந்தும்,

    ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
    மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல….

    சகோதரரே,இத்தனை விஷயங்களும்,நான் இங்கு,பதிந்ததற்கான காரணம்,இஸ்லாமிய பெயர்தாங்கிகளால்,செய்யப்படும்,வன்முறையை ஒரு போதும் நியாயப்படுத்த அல்ல…..
    குற்றம் யார் செய்தாலும்,தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்கப் பட வேண்டும்.
    இது தான் எனது நிலைப்பாடு,நான் சார்ந்துள்ள மார்க்கமும் ,அதையே சொல்கிறது….

    யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…

    நாம்,நமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் அவ்வளவே…..

    நன்றி..

    அன்புடன்
    ரஜின்

  14. நண்பர் ராம் அவர்களே,

    முஸ்லிம்களுக்கு தலிபான், ஜிஹாத் ஜெயிச்சு இருந்தா அவங்க முஸ்லிம் ஆயுருபங்க, தோத்துட்டு இருக்கிறதாலே அவங்கள முஸ்லிம் இல்லை என்று சொல்லுராங்க. கிறிஸ்தவன்க இந்தியாவுல கம்மிய இருக்கிறதாலே புஷ் கிறிஸ்தவர் இல்லை என்று சொல்லுராங்க. ஆனா ஒன்னு,இவங்க இப்பிடியே பண்ணிட்டு இருந்தா நாமளும் ஒரு நாள் சொல்ல வேண்டி இருக்கும், கொஞ்ச பேரை ஹிந்துவே இல்லைன்னு, அவங்க ஸ்டைல்ல.

  15. கள்ளபிரான் அவர்களுக்கு

    நன்றி. இதை விமர்சனம் என்று எங்குமே நான் குறிப்பிடவில்லையே. அப்புறம் நீங்கள் இதை எப்படி விமர்சனம் என்று கருதினீர்கள் என்பது தெரியவில்லை. எனக்கு சினிமா விமர்சனத்திற்கும் ஒரு சினிமாவைப் பற்றி வேறு கோணத்தில் அலசுவதற்கும் வித்யாசம் தெரியும். இது ஒரு அலசல் அவ்வளவே. நான் அந்தப் படத்தின் டெக்னிக்கல் பகுதிகளுக்குள் போகவில்லை. ஒரு உண்மைச் சமபவம் சினிமாவாக எடுக்கப் பட்டுள்ளது அதற்கும் கேரளத்திலும் உலகம் முழுவதிலும் நிகழும் நிறுவனப் படுத்தப் பட்ட மதங்கள் செய்யும் அக்கிரமத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி இங்கு பேசியுள்ளேன். அவ்வாறு அலசிய வேகத்தில் உணர்ச்சிவயமான சில வார்த்தைகளும், க்ளிஷேக்களும் இருக்கலாம். அவற்றைத் தவிர்க்க முயல்கிறேன். மற்றபடி நீங்கள் நினைப்பது போல இது விமர்சனம் அல்ல.

    கேரளத்தில் அடிக்கடி இது போன்ற தற்கால அரசியல்/சமூக பிரச்சினைகள் சார்ந்த சினிமாக்கள் எடுக்கப் படுகின்றன ஆனால் தமிழில் அந்த அக்கறை இருப்பதில்லை என்றுதான் சொல்லியுள்ளேன் மற்றபடி தமிழில் எப்பொழுதும் இது போன்ற படங்களை மட்டுமே எடுத்து ஓட்டாண்டியாக வேண்டும் என்று சொல்லவில்லை. இவை போன்ற படங்கள் நஷ்டப் படும் என்பது அவசியமில்லை. ஈநாடு, சி பி ஐ டைரிக்குறிப்பு போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்ற படங்களே. சமூகப் பிரச்சினைகளையும் இந்தப் படம் போல நன்கு எடுத்தால் நிச்சயம் அவையும் மக்களால் காணப் படும். இந்தப் படம் டாக்குமெண்டரி அல்ல. மிகவும் விறுவிறுப்பான ஒரு சினிமாவே. இப்பொழுது வெளி வந்திருககும் உன்னைப் போல ஒருவன் கூட ஒரு விதத்தில் தற்கால தீவீரவாதப் பிரச்சினையைத் தொடுவதே, அது ஓடவில்லையா என்ன? தண்ணீர் தண்ணீர் படம் வெற்றிகரமாக ஓடியதே? தமிழ் நாட்டு அரசியல் சூழலில் அது போன்ற படங்கள் எடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.

    மற்றபடி நான் இங்கு எழுதுபவை எல்லாம் சினிமா விமர்சனங்கள் அல்ல. அவை வெளி வந்த சினிமாவை சற்று வேறு கோணத்தில் அலசும் ஒரு பார்வை மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டு மேலே அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ரஜின் , அஷோக் மற்றும் பிற நண்பர்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன்

    நன்றி
    விஸ்வாமித்ரா

  16. While reading the review I was reminded of a film ‘Mahanadhi’ by Kamalhasan which upset me. It also showed the plight of a father whose daughter was sold off to prostitution. But then I don’t think that film was a hit! As someone above said films are not produced in Tamil for nice reviews but only money. Maybe this says something about the mentality of Tamils. Stage plays are a thing of the past in Tamil nadu, a state with the maximum number of regional TVs and theater activity is also taken up by a very few dedicated which are followed by dedicated fewer! People losing themselves in dream worlds not wanting to see the harsh realities shows that they have lost confidence in everything including themselves. Very sad indeed.

  17. சுசெந்திரன் ,

    //நாமளும் ஒரு நாள் சொல்ல வேண்டி இருக்கும், கொஞ்ச பேரை ஹிந்துவே இல்லைன்னு, அவங்க ஸ்டைல்ல//

    முஸ்லிம்முங்க மாதிரி தானே?

    சொல்லிகோங்கோ!!

  18. //சகோதரர்களே…
    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…//

    Dear Mr.Rajin,
    I am sorry to say, this is just ignorance and nothing else. I support Kalimigu Ganapathy’s words on this.
    When I was doing my B.Sc in Loyola college,I had a muslim friend in our class. One day while having lunch, we all friends started talking about the ongoing India-Pakistan Criket match. One of my friend asked our Muslim friend, ‘Nayimudeen, I heard most muslims support pak in the cricket match. Whom do you support?’.He started blushing and could not answer directly and said ‘heehehee…my parents and elders at home support Pakistan, but I support only India’…This happend 15 years back.

    One of my friend studied in SIET college, Chennai. She used to tell me how crazy the girls (majority muslims as SIET is a Muslim college) will rejoice when Pakistan wins a cricket match and how horribly the girls will curse and scold India when India wins. Again this happened 15 years back. I have heard this not from one but many girls who have studied in SIET (my neighbours, my sisters friends, my friends).

    My father who retired from a bank in the prime location in Chennai is a first hand witness of what happens in the mosque. His office toilet had a window, which is open towards the side where a mosque is (its a strip mall shopping complex, with shops outside and the mosque inside. My fathers office was at the first floor and so they shared common wall with the mosque). During friday afternoon prayers, the maulvi or whoever it is, in the mosque will address the gathering on a loud speaker and shout all sort of hatred words against Hindus and will tell the gathering that Hindus are our enemies and instigate them against Hindus. My father used to say, if you are not a hindu you will surely be brain washed by those words . Again this happened nearly 10 years ago.

    We are seeing that things have worsened and not bettered in the last decade.

    I am in the US now. I have a colleague who is a tamil christian. He is 40 yrs and I am ony 33 yrs. We are working in the clients place. In every oppurtunity (or he creates his own oppurtunity) he criticizes India and Indians saying that India is bad and all Indians (hindus) are bad because they killed christians in Orissa and Bihar. This he says even to the Americans. At this age, he dont even have the basic brains to think that he is talking to a foreigner and talking bad about his own country (he got his Green card and will get US citizenship shortly..so he thinks he is an american). he talks this to even the clients. What impression will the american have about Indians and Hindus? This happened even yesterday and he told allnonsense to the clients yesterday evening. My friends who is a telungu guy, got so much frustrated that he could not control and I took great pains to console him.

    These are the teachings christianity and Islam preches to their religious members. And as Ram said, your words are nothing but escapism. Sorry for being harsh…your words are good, your intentions are good. but what about your fellow Muslim and christians in india?

    This article appread in todays Rediff – https://news.rediff.com/report/2009/oct/14/is-love-jihad-terrors-new-mantra.htm

    I was surprised how our Indian ‘Sickular’ media publishes this. Then reading it I realized that its voicing its concerns for the Christians who complained and not for the Hindus. 🙂

    Regards,
    Satish

    (Edited.)

  19. //இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், //
    கிறிஸ்துவனை நம்பி கிறிஸ்துவம் இல்லை.
    கிறிஸ்துவை நம்பியே கிறிஸ்துவம் உள்ளது.
    பிரேமானந்தா போன்றவர்கள் தப்பு செய்தார்கள், அதற்காக ஹிந்துத்துவம் தோற்றுவிட்டது என்று ஒத்துக்கொள்வீர்களா?

    அன்புடன்,
    அசோக்

  20. //மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?
    //

    அருமையான வரிகள்.

    இந்து அடிவாங்க வேண்டும்.
    ஆனால் அவன் திருப்பி அடித்தால் அது பயங்கரவாதம்.

    டெல்லி தீபாவளி கூட்டத்தில் குண்டு வைப்பவன் முஸ்லீம். ஆனால், அவன் முஸ்லீம் இல்லை என்று இங்கு வந்து சொல்வார்கள்.

    காஷ்மீர் மசூதிகளில் இந்துக்கள் எல்லாம் வெளியேறவேண்டும் இலலையேல் கொல்லப்படுவார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பார்கள். அதனை கேட்டு வெளியேற வேண்டும்.

    அப்படி அறிவிப்பவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று இங்கே வந்து சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆனால் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பணம் வசூல் பண்ணி சப்பொர்ட் செய்வார்கள்.

    இதெல்லாம் பார்த்துகொண்டுதானே இருக்கிறோம்.

  21. //படம் “சியோன் மணவாளன், ஏசு மஹராஜன்” என்ற வெறித்தனமான பெந்தகோஸ்தே பஜனைப் பாடலுடன் தொடங்குகிறது.//
    திரு.விஸ்வாமித்ராவுக்கு கிறிஸ்துவர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை. இது வெறி என்றால், காலி கோவிலில் பெண்கள் அருள் (?) வந்து ஆடுவது என்ன??
    வெறி பிடித்த ஒரு கதாபாத்திரத்தை நாயகனாக கொண்ட “நான் கடவுள்” விமர்சனத்தை படித்தேன். அங்கே யாருமே எந்த ஒரு வெறித்தனத்தையும் பற்றி பேசவில்லை. ஒரு ஒருவர் மட்டும், வெறி என்ற வார்த்தையை உபாயோகப்படுத்தி இருந்தார். அவர் நமது விஸ்வாமித்ரா தான். அய்யா விஸ்வாமித்ரா, உங்களுக்கு ஏன் “வெறி” இவ்வளவு பிடித்து இருக்கு?

    அன்புடன்,
    அசோக்

  22. சகோதரர்களே,
    //கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!//
    இதை போன்ற அறியாமையின் வாதங்கள் இங்கே நிறைய பார்க்க முடிகிறது.
    மதம் என்பதும் மார்க்கம் என்பதும், நாம் இறைவனை நோக்கி செல்ல நாம் தேர்ந்தெடுக்கும் பாதை. ஒருவர் ஒரே நேரத்தில் பல பாதைகளில் நடக்க முடியாது. நம்முடன் நமது பாதையில் பயணம் செய்த ஒருவன் பாதையை விட்டு விலகி சென்று (அதாவது தவறுகள் செய்து) மீண்டும் தன்னுடைய பழைய பாதைக்கு வரும்போதும், அவன் வழி தவறி சென்றான் என்ற காரணத்துக்காக விரட்டி விட முடியுமா. அதேபோல் ஒருவரை ஒரு மார்க்கத்தில் இருந்து தள்ளிவைக்க யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல் வழி தெரியாமல் இருப்பவர்களை நாம் செல்லும் பாதையில் (அவர்கள் அனுமதியுடன்) அழைத்து செல்வதும் தப்பில்லை. நம் வழியில் நாம் பிறரை சந்திக்க நேரும்போது, நாம் கடந்து வந்த பாதையை சொல்வதும் தப்பில்லை, நாம் செல்லும் பாதை எங்கு போகிறது என்று சொல்வதும் தப்பில்லை. ஒருவர் கேட்டுக்கு செல்லும் பாதையில் சென்றால், அவரை எச்சரிப்பதும் தப்பில்லை. ஆகமொத்தத்தில், சுவிசேஷம் தப்பில்லை.
    நன்றி,
    அசோக்

  23. ரஜ்னி

    ///என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?

    அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
    அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?///

    விவாதிக்கும் முன் விஷயத்தை நன்றாக ஆராயுங்கள். புஷ் ஒரு தனி மனிதன் அல்ல. ஒரு நாட்டில் வாழும் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்களின் பிரதிநிதி. அவன் கொலைபாதகம் செய்கிறான் என்றால் அந்தக் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாகத்தான் , அவர்களுக்காகத்தான் செய்திருக்கிறான் என்பது தான் பொருள். அவ்வாறு செய்யும் போது அந்தக் கோடிக்கணக்கானவர்கள் வாயை மூடி வீரம் பேசினார்கள். எங்கள் நாடு அடக்கி ஆள்கிறது என்று பெருமை கொள்கிறார்கள். ஒரு தனி மனிதனின் செயலை ஒரு மார்கத்தின் செயலாகக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு மார்கத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்களின் சார்பாக ஒரு பாதகம் செய்யப்பட்டு அதை அந்த மார்கத்தவர் மார்தட்டி வரவேற்கும் போது அது மார்கத்தின் குற்றமே ஒழிய தனி மனிதனின் குற்றம் அன்று. கிறிஸ்தவம் தோற்றது என்பது உண்மையே.

    ///மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?////

    அவர்கள் செய்தது நியாயம் தான் என்று ஒவ்வொரு இந்துவும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அவ்வாறு ஒத்துக் கொள்வேன். ஆனால் அதர்ம வழியும் கொலை பாதகமும் இந்துக்களால் என்றுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல.

    கோட்சேவை கைது செய்து தூக்கிலிட்ட போதும் விடுதலை செய்யச்சொல்லி அரசாங்கத்தை மிரட்டியவர்கள் கிடையாது. பிரக்யா சிங் ஆகட்டும் பிரேமானந்தா ஆகட்டும் இந்து என்ற பெயரில் தவறிழைப்பவர்களை தண்டிப்பதை எந்த ஹிந்துவும் கண்டிப்பதில்லை. ஆக இந்து மதம் தோற்கவில்லை. தோற்காது.

    ஆனால் கோயம்புத்தூரில் குண்டு வைத்த மதானியை விடுதலை செய்து டாட்டா காட்டி தாத்தா அனுப்பி வைத்தாரே, அப்போது நீங்கள் எங்கே போனீர்கள். குற்றம் நிரூபிக்கப்பட்ட முஸ்லீம் குற்றவாளிகள் அரசியல் வாதிகள் பிறந்தநாள் காரணம் சொல்லி விடுதலை செய்யப்பட்டார்களே, அப்போது நீங்கள் எங்கே போனீர்கள், முஸ்லீம் அமைப்புக்கள் ஒன்றுகூடி அவர்களை விடுதலை செய்யக்கூடாது , அவர்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் என்று ஏன் சொல்லவில்லை. எந்த முஸ்லீமும் சொல்லவில்லை. ஏனென்றால் அரசாங்கம் மூலமாக கொலைகாரர்களுக்கு ஆதரவு தேடுகிறீர்கள். உங்கள் மார்கத்தவரின் ஓட்டுக்காக கொலைகள் கண்டிக்கபடுவதில்லை. அதை நீங்கள் வரவேற்கிறீர்கள். அப்போது அதற்கு உங்கள் மார்கம் தான் பொறுப்பு.

    ஒரு வேளை நாளை ஸ்டாலின் பிறந்தநாளுக்காக பிரேமானந்தா விடுதலை என்றால் ஒட்டு மொத்த இந்துக்களும் காரித்துப்புவார்கள். அப்படி நீங்கள் உங்கள் மார்கத்தவரின் குற்றத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிபீர்களா?

    //யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…///

    உங்கள் மதத்தின் பெயராலும் ஆதிக்க உணர்வாலுமே இந்த கொலைபாதங்கள் நடக்கும் போது அதற்கு நீங்கள் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தப்பித்துக் கொள்வது முறையல்ல. காஷ்மீரில் மூன்று லட்ஷம் அப்பாவி இந்து பண்டிட் குடும்பங்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் மதத்தின் பெயரால் சூரையாடப்பட்ட போது ஒட்டு மொத்த இந்திய முஸ்லீம்களும் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டீர்களே? எங்கே போனது உங்கள் தேசிய ஒருமைப்பாடு??

    ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், இந்தியாவில் கண்டபடி குண்டு வெடிக்கும் போது வேடிக்கைபார்த்த முஸ்லீம்களும் முஸ்லீம் நாடுகளும் அமெரிக்கா பொங்கி எழுந்து போர் என்று அறிவித்து ஆப்கனை அழிக்க துவங்கிய போதுதான், இஸ்லாம் அமைதிமார்கம் இங்கே கொலைகாரர்களுக்கு இடமில்லை என்று வாய்க்கு வாய் பிரசாரம் செய்யவே துவங்கினார்கள். அதுவரை இஸ்லாம் அமைதி மார்கம் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்தது ஏனோ?

  24. அசோக்
    ///பிரேமானந்தா போன்றவர்கள் தப்பு செய்தார்கள், அதற்காக ஹிந்துத்துவம் தோற்றுவிட்டது என்று ஒத்துக்கொள்வீர்களா?////

    ஆனால் அவன் ஹிந்துவே இல்லை என்று எந்த் ஹிந்துவும் தப்பிக்கப்பார்க்கவில்லை. அவன் தர்மத்தின் வழியில் இருந்து தவறிசென்று விட்ட குற்றவாளி அவன் தண்டிக்கப்படவேண்டும் மற்றும் தண்டனையை அனுபத்துக் கொண்டிருக்கிறான். அதனை எல்லா ஹிந்துவும் வரவேற்கிறார்கள். அதர்மவாதிகளை மதம் என்ற காரணத்தால் ஒரு போதும் ஹிந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள். மனிதனை மனிதானாகப் பார்ப்பது மட்டுமே ஹிந்துத்துவத்தின் முதல் சிறப்பு. ஆதலால் மனிதனின் நல்லவன் கெட்டவன் என்று மட்டுமே முதலில் பிரித்துப்பார்க்கிறான் ஒரு நல்ல ஹிந்து. அதற்குப் பிறகுதான் மதம் ஜாதி எல்லாம். இது கண்கூடாக தெரிந்த விஷயம் தான்.

    ஆனால் ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி சர்ச் களில் நடக்கும் ஓரினச்சேர்க்கை பற்றியும், கொலைகள் பற்றியும் கொள்ளைகள் பற்றியும் கற்பழிப்புக்கள் பற்றியும் வெளியிடும் போது உங்கள் மிஷனரிகள் எல்லாம் அதனை முடிந்த அளவு மறைக்கப் பார்க்கிறீர்கள். மதம் தான் முக்கியம் அதனால் அதனை மறைத்து விடு என்று சொல்லப்பார்க்கிறார்கள். தனியார் தொலைக்காட்சியில் இது பற்றி நடந்தது என்ன என்று காட்டும் நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த ஒரு பிஷப்பிடம் கருத்து கேட்கிறார்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா “ஏதாவது சிறிய அளவில் நடந்திருக்கலாம், அதை அந்தம்மா ரொம்ப பெரிசா சொல்றாங்க. மிகைப்படுத்தப் பட்டிருக்கு சார். என்றார். அதாவது சிறிய அளவில் நடந்துருக்காம். அதை ஒத்துக் கொள்கிறார். அது தவறு என்று சீரியஸாக எடுத்துக் கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    கிறிஸ்துவை நம்பி கிறிஸ்தவம் இல்லை. மிஷனரிகளையும் அவற்றின் பணத்தையும் நம்பி தான் கிறிஸ்தவம் இருக்கிறது என்பது உண்மை. நிதர்சன உண்மை.

  25. //அய்யா விஸ்வாமித்ரா, உங்களுக்கு ஏன் “வெறி” இவ்வளவு பிடித்து இருக்கு?//
    மதம் மாற்று வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கும் வெறி வேறு யாருக்கும் இல்லையே. அதைச் சொல்ல வேண்டாமா? சுட்டிக் காட்ட வேண்டாமா? அது தவறா?
    //திரு.விஸ்வாமித்ராவுக்கு கிறிஸ்துவர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை. இது வெறி என்றால், காலி கோவிலில் பெண்கள் அருள் (?) வந்து ஆடுவது என்ன??///

    காளி கோவிலில் சாமி வந்து ஆடும் பெண்கள் கடவுள் மேல் உள்ள சொந்த பரவசத்தில் ஆடுகிறார்களே ஒழிய ஆத்தா சொல்லிட்டா எல்லோரும் இந்து மதத்திற்கு மாறிடுங்க என்று சொல்வதற்கில்லை. அதை புரிந்து கொள்ளுங்கள்.

    ஆனால் கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் வெறி பிடித்த பிரசாரத்தில் மதம் மாற்றும் பணி நடக்கிறதே. அதைத்தான் விஸ்வாமித்திரர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    மேலும் சாமியாடும் பெண்கள் இந்து மதத்தில் இல்லாவிட்டால் நீங்கள் ரத்தம் கக்கிச் சாவீர்கள் என்று சபிப்பதில்லை. இந்து மதத்தை நேரடியாக எந்த மதத்தோடும் அவசரமாக ஒப்பிட்டு விடாதீர்கள். அதற்கு கொஞ்சமாவது அருகதை வேண்டும்.

    (Edited.)

  26. ரஜின்
    //ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
    மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல…..//

    ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் இந்து மதத்தைச் சார்ந்து இல்லை. இந்து என்பது நாங்கள் வாழும் வழிமுறை. அது ஒரு வாழ்வியல் தர்மம். வாழ்க்கைக்கான ஃபார்முலா. நாங்கள் அதைச் சார்ந்து வாழவில்லை, அப்படியே வாழ்கிறோம். உங்களைப் போன்றவர்கள் தான் குறிப்பிட்ட மார்கத்திற்கு மதம் மாறி அல்லது மாறிய மதத்தைப் பின்பற்றி அதைச் சார்ந்து வாழ்கிறீர்கள்.

    அதைச் சாராமல் வாழ உங்களால் முடியாது. இந்து நாத்திகனாகியும் அவன் இந்து தான். அதாவது இந்துவாக வாழாமலும் ஒருவனால் இந்துவாக இருக்க முடியும். உங்களால் இஸ்லாமியனாக இருக்கப்போவதில்லை ஆனால் இஸ்லாத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?

    சந்தடி சாக்கில் இந்துக்கள் ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனி மதத்தை சார்ந்து வாழ்வது போல பேசிவிட்டீர்கள்.

    தேசப்பற்று ஒருமைப்பாட்டில் குறைந்தவர்கள் இல்லை என்று பசப்பு வார்த்தை பேசுகிறீர்களே, இமாலயத்தில் இந்துக்கள் பனிலிங்கத்தை தரிசிக்க போவார்களே, அங்கே அவர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்க குத்தகைக்கு நிலம் கொடுத்ததற்கே முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கலவரமே நடந்ததே! எங்கே உங்கள் தேசிய ஒருமைப்பாடு.

    அப்படி எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்களை நீங்கள் கண்டித்தீரா? சென்னை இமாம் கண்டித்தாரா? மதானி கண்டித்தானா? எந்த முஸ்லீமாவது வெளிப்படையாக அறிக்கை விட்டு இந்துக்களுக்கு ஆதரவாக பேசினீர்களா? எங்கே போனது உங்கள் தேசிய ஒருமைப்பாடு. புடலங்காய் பேச்சு பேசுகிறீர்களே!

    (Edited.)

  27. Dear Brother Mr. Razin

    //ஸகாத்.
    இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று…
    ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.//

    That means if a citizen is not a very rich person but a Muslim he need not pay Shaath.

    But all tne non- muslims have to pay jisiyaa tax whether ordinaru man or rich man.

    That means ordinary man who is already struggling to take care of his family expenses will obviously forced (indirectly) to follow islam!

    //இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.//

    This is discriminataion based on Religion. Are not the Muslims get protected? They are not paying protection money. If a ruler wants to protect some citizens without taxing them, and to protect other citizens only after taxing them, why does he rule that country?

  28. //நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..///

    ரஜின் நீங்கள் காமன் மேன் தான் ஒத்துக் கொள்கிறேன், நானும் அப்படியே உங்கள் நம்பிக்கை வீனாகாது. ஆனால் கமலை இதில் இழுக்காதீர்கள். கமல் ஒரு சந்தர்ப்பவாதி என்பது என் கருத்து. குஜராதில் முஸ்லீம் பெண்ணின் கருவழிப்பு பற்றி (ராமன் கிருஷ்னன் என்ற பெயரைஎல்லாம் வம்புக்கிழுத்து) உருக்கமாக விவரிக்கும் கமல் அதற்கும் முன் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பில் எரிந்து துடித்து கரியாய் போன இந்துப் பெண்ணுக்காக ஏன் கண்ணீர் விடவில்லை. நடுநிலைமை என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு சொரிந்து விட்டு இந்துக்களை கிள்ளி விடும் வேலையைத்தான் கமல் செய்திருக்கிறார்.

    இப்படித்தான் எல்லோரும் ஆளுக்கொரு காலை வைத்து இந்துக்களின் குறள்வலையை மிதித்துக்கொண்டிருக்கிறீர்கள். மூச்சுத்திணறி உடல் துடித்தால் கூட எவ்வளவு திமிர் பார் நம்மை எதிர்க்கிறான் என்கிறீர்கள்.
    நியாயமா?

  29. பாதி இங்கெ ,

    //நம் வழியில் நாம் பிறரை சந்திக்க நேரும்போது, நாம் கடந்து வந்த பாதையை சொல்வதும் தப்பில்லை, நாம் செல்லும் பாதை எங்கு போகிறது என்று சொல்வதும் தப்பில்லை. ஒருவர் கேட்டுக்கு செல்லும் பாதையில் சென்றால், அவரை எச்சரிப்பதும் தப்பில்லை. ஆகமொத்தத்தில், சுவிசேஷம் தப்பில்லை.
    நன்றி,
    //

    மீதி இங்கெ

    ஆகமொத்தத்தில், சுவிசேஷம் தப்பில்லை.

    சுவிசேசத்தை அவர் ஏற்க வேண்டுமாறு வற்புறுத்துவது தவறு இல்லை.

    தான் இது வரை காணாத ஆனால் தான் இருப்பதாகக் கருதும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள் பொய்யானவை என்று அளப்பது தவறு இல்லை.

    பிற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை என்று வெறுப்பைத் தூண்டுவது தவறு இல்லை.

    இப்படியாக அவர்கள் நம்மை விட அதிக பாவியாகும் படி செய்வது தவறு இல்லை.

    வெறுப்பு கருத்துக்களை பரப்பும் போது மார்க்கங்களை பின்பற்றுபவர்களுக்கு இடையே மோதல் உருவாகும் சாத்தியம் பற்றிக் கவலை இல்லை.

    ஆகமொத்தத்தில் சாதுக்களாய் சூழ்ச்சி செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்கக்களைப் பரப்பி , சிந்தனை சுதந்திரத்தை தடை செய்து, அறிவியலுக்கு மாறாக நம்பக் கூறி மனித குலத்தை மயக்கப் பாதையில் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்வது- சுவிசேஷ சூழ்ச்சிப் பிரச்சாரம் செய்வது – தவறு இல்லை.

  30. “விஸ்வாமித்ரா”வின் இந்த கட்டுரைக்கு தனிப்பட்ட முறையில் அதாவது இன மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்; ஓரளவுக்கு நடுநிலையுடனே எழுதியிருக்கிறார்; இது சினிமா விமர்சன சாயலில் ஒரு அலசல் அவ்வளவே;

    இது இந்து இணையமாக இருப்பதால் கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் படத்தை அலசுகிறார்கள்; அது தவறல்ல; இது உண்மை சம்பவமும் அல்ல; காரணம் படத்தில் வரும் அத்துணை சம்பவங்களும் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்வில் நடந்திருக்க முடியாது; உதாரணமாக தாயில்லாத பெண்,மதம் மாறிய “அச்சன்” இவையெல்லாம் சினிமாவுக்கே உரிய கற்பனையாகும்; அதே போல “பெந்தெகொஸ்தெ” சபைப் பின்னணியின் காரணம் மற்ற சபைகளில் யார் வேண்டுமானாலும் போகலாம் வரலாம்; இதனால் குறிப்பிட்ட மாற்றமோ அடையாளமோ பாதிப்போ சமுகத்தில் ஏற்படாது;

    தவறு செய்தவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே சபையில் இணைவது அதீத கற்பனை போலிருந்தாலும் அது இறைவனைப் பொறுத்தவரையில் உண்மை தானே? இறைவனுக்கு முன்பாக இருவரும் சென்று சேரும் போது இருவரையும் சமமாகவே இறைவன் நடத்துகிறான்; ஏனெனில் பாதிக்கப்பட்டவனை கடவுள் வேறு வகையில் ஆறுதல்படுத்தி விடுகிறார்; தவறு இழைத்தவனையோ மன்னிக்கிறார்; அதற்குக் காரணமாக தவறு செய்தவன் மனம் வ(தி)ருந்தியிருக்க வேண்டும்; இது கிறிஸ்தவ உள்வட்ட நம்பிக்கையாகும்;

    ஆனால் சமூகப் பார்வை என்பது வேறு; உதாரணமாக, “ஒரு கைதியின் டைரி” படம் வந்த பிறகு தொண்டர்கள் தெளிவு பெற்றார்களா? “இந்தியன்” படத்துக்குப் பிறகு லஞ்சம் ஒழிந்துவிட்டதா? “ரோஜா” படத்துக்குப் பிறகு தீவிரவாதம் ஒழிந்துவிட்டதா? “விதி” படத்துக்குப் பிறகு இளம்பெண்கள் ஏமாற்றப்படவில்லையா?

    இவையெல்லாம் நல்ல சப்ஜெக்ட் உள்ள படம் என்ற அளவில் பெயரெடுத்தாலும் சமூக அவலங்களை அவர்கள் காசாக்கி விட்டார்கள் அவ்வளவே; மேலும் இது போன்ற சினிமாக்களும் ஊடகங்களும் புதிய குற்றவாளிகளையும் உருவாக்கிக் கொண்டிருப்பதையும் மறுக்கமுடியாது;

    இந்து மார்க்கத்தில் கட்டுப்பாடு கிடையாது என்பது அடிப்படையற்ற வெற்று கருத்தாகும்; ஒரு வேளை அதன் ஆழம் அப்படியிருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை; சொந்த பந்தங்களின் சுயநலப் போக்கை கண்டு மனம் வெதும்பியே வேறு மார்க்க ஈர்ப்பு ஒரு மனிதனுக்கு வருகிறது; அங்கு போனபிறகே இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெரியவரும்;

    கிறிஸ்தவ மார்க்கத்திலும் கூட ஆளை யாரும் தேடுவதோ தண்டிப்பதோ இல்லை; அவருடைய சந்தா கவர் அங்கே சேர்க்கப்பட்டாலே போதும்; தனிப்பட்ட முறையில் அவர் எப்படியும் வாழலாம்; ஆனாலும் கூட இதை கிறிஸ்தவத்தின் தோல்வி என்றோ பைபிளின் தோல்வி என்றோ சொல்லமுடியாது; பைபிளை ஒரு சட்டப் புத்தகம் என்பார்கள்; நமது தேசத்துக்கும் சட்டபுத்தகம் இருக்கிறது; ஆனாலும் குற்றங்கள் நடக்கிறதே; அப்படியானால் சட்டங்கள் தோற்றுவிட்டதா? காவல் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் மூடிவிடலாமா?

    கட்டுப்பாடான இந்து மார்க்கத்திலும் முகமதிய மார்க்கத்திலும் குற்றங்கள் நடைபெறுவது போலவே இங்கும் நடைபெறுகிறது; காரணம் மனிதனே தவிர இறைவன் அல்ல; மனிதன் இயல்பாகவே தவறு இழைக்கும் குணத்துடனே பிறக்கிறான்; மறுமை குறித்த அச்சத்தாலேயே அநேகர் தவறு செய்யாமலிருக்கிறார்கள்; அது உண்மையான இறை அச்சமல்ல;

    “தன்னை அறிதல்” என்பது தன்னுள் உறைந்திருக்கும் இறைவனுக்கு இகழ்ச்சியுண்டாக்காதிருத்தல்; அது சீருடை அணிந்த ஒரு காவல் அதிகாரி தன் தோற்றத்துக்கேற்ற மாண்பைக் காக்கவேண்டியதைப் போன்றது;

    நண்பர் அசோக் போன்றவர்கள் எத்தனை தான் சமாளித்தாலும் கிறிஸ்தவ அதிகாரப் பீடங்களில் மன்னிக்க முடியாத தவறுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மறுக்கமுடியாது; அதேபோல வெளியிலிருந்து பார்ப்பவருக்கு சபை வேறுபாடுகள் போதனைகள் பற்றித் தெரியாது; எனவே அவர்கள் செய்யும் தவறு சுட்டிக்காட்டப்படும் போது அவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என தட்டிக்கழிக்க முடியாது;

    இது எதுவரைக்கும் வரும் தெரியுமா, “பெந்தெகொஸ்தே”யிலேயே பல‌ பிரிவுகளுண்டு; அதாவது பெந்தெகொஸ்தே மிகப் பெரிய மூன்றாவது பிரிவு; அதிலும் உட்பிரிவுகளுண்டு; அந்த சபைகள் மீதும் குற்றச்சாட்டு(களுண்டு..!) வரும்போது இதே போல “அவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” எனத் தப்பிக்க முடியும்;

  31. //படம் வெற்றிகரமாக ஓடியதே//

    உண்மைதான். ஆனால், தயாரிப்பாளர்கள்தானே பணம் போடவேண்டும்? அவர்கள் risk எடுக்க விரும்புவதில்லை.

    நிச்சயமாக, அல்லது ஓரளவு நிச்சயமாக இலாபம் தரும் என்றால்தான் நம்பி இயக்குனருக்குப் பணம் தருவர். இதில் ஒன்று கவனிக்கவேண்டும். தயாரிப்பாளரே கந்து வட்டிக்குப் பணம் வாங்கித்தான் கொடுக்கிறார். risk எடுக்கமுடியுமா?

    ஜி வெங்கடேஸ்வரன் தற்கொலை பண்ணியது நினைவருக்கல்லவா? கந்துவட்டிக்கு வாங்கி படம் தயாரித்து நட்டத்தில் மூழ்க, பணத்தைத்திருப்பிக் கொடுக்க முடியாமல் தன்னை மாய்த்துக்கொண்டார்.

    //தமிழ் நாட்டு அரசியல் சூழலில் அது போன்ற படங்கள் எடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.//

    இது சரிதான். தண்ணீர் தண்ணீர் படத்தை நிறுத்த அன்னாள் முதல்வர் MGR எவ்வளவோ முயன்றார். கடைசியில் வந்தது.

    அரசியல்வாதிகளை, குறிப்பாக பதவியில் இருப்பவர்களை, வெறுப்பேற்றி வாழமுடியாது. குறிப்பாக சினிமாக்காரர்கள். நாமுந்தான்!

    மாஞ்சோலைத் தொழிலாளர்கள் விசயத்தில் பலதலித்துக்கள் திருனெல்வேலி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சுட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் கீழே குதித்து மாண்டனர். அரசின் அராஜயகம். போலீசால் தலித்துகள் மேல் கட்டவிழ்க்கப்பட்டது.

    அதை அப்பட்டமாகக் காட்டிய ஒரு குறும்படம் (documentary) தமிழ்நாட்டில் திரையிட கருனானிதி மறுத்துவிட்டார். இரகசியமாக ரிப்போர்ட்டர்களுக்கு போட்டுக்காண்பிக்கப்பட்டது. நான் பார்த்தேன். ஏதோ நீலப்படம் பார்க்க பயந்தமாதிரி பெரிய பீடிகை போட்டு ஒவ்வொருவராக செக் பண்ணித்தான் உள்ளே விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு பயம்.

  32. “நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
    https://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
    இந்த நியூச படிங்க……
    இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா? அல்லது சகஹிந்து எனும் ரீதியில், தாங்கள் தான் பொறுப்பேற்று கொள்வீர்களா?….இல்லை அவர்களை நீங்கள் என்னசெய்ய போகிறீர்கள் என்று,நான் தங்களை நோக்கி கேட்டால்,தங்கள் பதில் என்னவாக இருக்கும்,சகோதரரே?”

    ரஜின் அவர்களே நச்சளைடுகள் யாரும் தங்களை ஹிந்து என்று சொல்லிகொல்வதில்லை. தங்களுக்கு மதம் இல்லை என்று சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை கொன்றுகுவிக்கும் வேலையை பார்துகொண்டிருகிறார்கள். ஆதலால் தான் அவர்களை ஹிந்து பயங்கரவாதிகள் என்று யாரும் சொல்வதில்லை. அனால் இஸ்லாமிய கிருஸ்தவ பயங்கரவாதிகளோ தாங்கள் வணங்கும் கடவுளின் பெயரால் தான் அப்பாவி மக்களை கொள்கிறார்கள். எனவே அதற்கு அந்த அந்த மதங்களே பொருப்பெடுக்கவேண்டும். புரிகிறதா. ஏன் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று மதத்தின் பெயருடன் அவர்களை சொல்கிறோம் என்று.

    நாரதர்

  33. “இந்து மார்க்கத்தில் கட்டுப்பாடு கிடையாது என்பது அடிப்படையற்ற வெற்று கருத்தாகும்; ஒரு வேளை அதன் ஆழம் அப்படியிருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை; சொந்த பந்தங்களின் சுயநலப் போக்கை கண்டு மனம் வெதும்பியே வேறு மார்க்க ஈர்ப்பு ஒரு மனிதனுக்கு வருகிறது; அங்கு போனபிறகே இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெரியவரும்”

    சொந்த பந்தங்களின் சுயநலப் போக்கை கண்டு மனம் வெதும்பியே வேறு மார்க்க ஈர்ப்பு ஒரு மனிதனுக்கு வருகிறது —

    Glady,
    I think it is the money power that makes people move to YOUR religion Hinudism gives immense freedom whereas YOUR religion especiallay pentacostal scuttle evry freedom. Please do not talk wrongly about Hinduism in this forum, If you want from JOSHUA Project create some more money and create Probaganda Material.

    Rajin,

    I wish what you say is correct but please read the following

    https://www.sanatan.org/marathi/dainik/news.php?dt=2009-10-12&action=fullnews&catid=1&id=24858

    Regards
    S baskar

  34. நண்பர் ராம்,
    //ஆனால் ஜெஸ்மி என்ற கன்னியாஸ்திரி சர்ச் களில் நடக்கும் ஓரினச்சேர்க்கை பற்றியும், கொலைகள் பற்றியும் கொள்ளைகள் பற்றியும் கற்பழிப்புக்கள் பற்றியும் வெளியிடும் போது உங்கள் மிஷனரிகள் எல்லாம் அதனை முடிந்த அளவு மறைக்கப் பார்க்கிறீர்கள். //
    நீங்கள் சொல்வது ஓரளவு சரியே. நிறைய பேர் இத்தகைய விஷயங்களை மறைக்க பார்க்கிறார்கள். ஆனாலும், அனைவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. தனியொரு மனிதனது செயலைக்கொண்டு ஒரு சமூகத்தையே நீங்கள் குறை கூறினீர்கள் என்றே எடுத்துக்காட்டினேன். மேலும் பிரேமானந்தா மேல்கூட எனக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. சொல்லப்போனால் அவர் பெயரை இங்கு உபயோகப்படுத்தியதற்கு வருந்துகிறேன். இப்போது தண்டனைக்கு பிறகு அவர் மனம் மாறி இருக்கலாம். என்னை விடவும் பல விஷயங்களில் சிறந்திருக்கலாம்.

    //கிறிஸ்துவை நம்பி கிறிஸ்தவம் இல்லை. மிஷனரிகளையும் அவற்றின் பணத்தையும் நம்பி தான் கிறிஸ்தவம் இருக்கிறது என்பது உண்மை. நிதர்சன உண்மை.//
    இதை ஒத்துக்கொள்ள முடியாது ஐயா. நீங்கள் பண ஆசை பிடித்த பல மிஷினரிகளை சந்தித்த வேதனையில் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். Whatever you define as Christianity need not to be true. எப்படியெனில் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதுதான் திருமணம். பல ஸ்திரீலோலர்களை நாம் இப்போது அன்றாட வாழ்க்கையில் பார்ப்பதால் we cannot change the definition of marriage. Hope you are getting my point. Irrespective of bad christians, bad ivangelists, bad pastors, Christianity is based on Jesus Christ not on people.

    Dear Viswamitra,
    //அய்யா விஸ்வாமித்ரா, உங்களுக்கு ஏன் “வெறி” இவ்வளவு பிடித்து இருக்கு?//
    அகந்தையினால் பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

    Thanks,
    Ashok

  35. ஹலோ ரஜின் !!

    //நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
    https://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
    இந்த நியூச படிங்க……
    இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா?//

    அவங்க ஹிந்து மதத்துக்காக போரடலை பிரதர்!, அதை தான் உயர்ந்த மதம் ன்னு சொல்லி போரடலை நண்பா!!. எல்லோரும் ராமனை கிருஷ்ணனை தூக்கி தலைல வைத்துக்கொண்டு ஆடுவோம் சொல்லி போரடலை பிரதர்!

    தலிபானும், ஜிஹாதிகளும் தெளிவா சொல்றாங்க பிரதர்! நாங்க இஸ்லாமுக்காக போராடுரோம், அல்லாஹுக்காக போரடுரோமுன்னு ! கரகோஷம் போட்டு கொலைகள் செய்யுறாங்க பிரதர்!. முஹம்மத் என்ற அருள் (வஹி) வந்து ஆடிய சாமியார் தான் சூப்பர் தூதன், அவர் வழிக்காக போராடுரோம் என்று சத்தம் போட்டு சொல்றாங்க பிரதர் !

    நீங்க ஒரே அடிய முஸ்லிம் மதத்துக்காக போரடறவன் எல்லாம் முஸ்லிமே இல்லைன்னு சொன்ன அந்த காட்டுமிராண்டி(பதுவி) முஹம்மத்(ஸல்) கூட முஸ்லிம் இல்லையே பிரதர்! அந்த ஆள் கூட தலிபான் மாதிரி போராடி தான் முஸ்லிம் மதத்தை வளர்த்தார் அப்பிடின்னு உங்க புக்குங்கோ சொல்லுது பிரதர்.

    முழு பூசணிகாயை சோத்துல மறைக்க என்ன தெளிவா தமிழை பயன் படுத்துரிங்க!! ஹ்ம்ம்..

    கேக்கறவன் கேனைன இருந்த சவுதி-ல அரிசியும் கோதுமையும் டன் டன்னா விளையுதுன்னு கூட சொல்விங்க போல!

    நீங்க ரொம்ப முட்டாள் தனமான comparison பண்ணி இருக்கீங்க நண்பா!?.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  36. நண்பர் திருச்சிக்காரன்,
    பாதி இங்கே, மீதி இங்கே என்று நன்றாக எதுகை மோனையோடு பேசுகிறீர்கள். ஆனால் பேச்சில் உண்மைதான் இல்லை. கட்டாய மதமாற்றத்தை பற்றி நான் எதுவும் சொல்லவில்லையே. சொல்லப்போனால் கட்டாய மதமாற்றத்துக்கு நான் எதிரி. இயேசு கிறிஸ்து கூட கட்டாய மதமாற்றத்தை விரும்ப மாட்டார். அவர் மனுஷனாய் வாழ்ந்த நாட்க்களில் கூட அவர் யாரையும் தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தியது இல்லை. தன்னிடம் வந்தவர்களை தள்ளிவிடவும் இல்லை.

    திருச்சிக்காரரே, நான் எழுதாத விஷயங்களை நான் எழுதியதாக நீங்கள் எப்படி யூகிக்கலாம்? இங்கே கருத்து பரிமாற்றதிற்க்காகவே, இந்த தளம் அனைவருக்கும் எழுத இடம் தருகிறது. நான் எழுதியதை நீங்கள் ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யலாம். நான் கிறிஸ்துவத்தை பற்றி எழுதுவதை போல நீங்கள் இந்துத்துவத்தை பற்றி எழுதலாம். எனக்கு தெரிந்தவரை நீங்கள் இங்கே செய்ததெல்லாம், உங்கள் சுயபெருமை பேசுவது, உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை மற்றவர் மேல திணிப்பது ( சில மதமாற்றக்காரர்கள் போல்), யாரும் சொல்லாத விஷயங்களை சொல்லியது போல தோன்ற செய்வது. அவ்வளவுதான். நண்பர் ராம் கூட, சில விஷங்களை ஆக்ரோஷமாக எழுதி இருந்தாலும், பொதுப்படையாக எழுதி இருந்தாலும், அவருடைய சொந்த அனுபவத்தில் கண்ட உண்மைகளைக்கொண்டு எழுதி இருக்கிறார். ஆனால் நீங்கள் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள். இத்தகைய செய்கைகள் இங்குள்ளவர்கள் மத்தியில் உங்களுக்குள்ள மரியாதையையும் குறைக்கலாம்.

    நன்றி,
    அசோக்

  37. அமெரிக்க அதிபரான ஒபாமா, வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுகிறார்.

    இந்தியாவில் பிறந்து, சிறந்த இந்தியக் கலாச்சாரத்தால் வளர்ந்த இந்தியர்கள் எல்லோரும் தங்கள் வெறுப்புக் கருத்துக்களைக் கை விட்டு, மகிழ்ச்ச்யுடன் தீபாவளி கொண்டாட வேண்டும்.

  38. அருமையான கட்டுரை அலசல். நன்றி விசுவாமித்திரரே.
    மதத்தை ஒரு உயிரியல் நிகழ்வாக நோக்க வேண்டும். பாரத ஆன்மிக மரபுகளில் மத அனுபவங்கள் பல நிலைகளில் ஏற்படும். அவற்றை கடந்து செல்லவேண்டுமே ஒழிய நம்பிக்கைகளை ஏற்படுத்திவிட்டு நின்றுவிடலாகாது. ஆனால் நம்பிக்கை ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவை. எனவே நம்பிக்கைக்கான உருவாக்கங்களையும் தந்தார்கள். இந்த உருவாக்கங்கள் ஹிந்து தர்மத்தில் ஆன்மிக சாதனை ஆழமாக ஆழமாக கரைந்து போகக்கூடியவை. கிறிஸ்தவத்தில் இந்த தன்மை இல்லை. காலம், வெளி, பிரபஞ்ச பிரம்மாண்டம் ஆகியவைக்குறித்த அறிவோ ஏன் உலகின் மானுட பண்பாட்டுப்பன்மை குறித்த அறிவோ இல்லாமல் தான் கண்ட அனுபவமே இறுதி இறை அனுபவம் என்கிற உறைநிலையே கிறிஸ்தவம். அது ஒரு ஆன்மிக பிறழ்ச்சி. ஒரு பிறழ்ச்சி இயல்பாகவே இப்படி சமூக அளவிலும் தனிமனித ஆன்மிக அளவிலும் பிரச்சனைகளையும் சோகவியல் நிகழ்வுகளையும்தான் உண்டு பண்ணும். கண்டங்கள் அளாவிய அடிமை விற்பனை, அதனை நியாயப்படுத்தும் ஒரு இறையியல், இலாபம் கண்ட பிறகு அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுப்பது போல ஒரு நடிப்பு, உலகெங்கிலும் இனவாத வெறுப்பை தூண்டிவிட்டமை இதையெல்லாம் செய்து கொழுத்த கிறிஸ்தவ இறையியல் அதற்கு நம் இரத்தத்தின் மூலம் கிடைத்த உபரியில் தெரசாக்களை படி அளக்கிறது. பெந்தகோஸ்தேக்களையும் இதர காலாவதியான பிற்போக்கு மத சிந்தனைகளையும் இங்கு வியாதியென கொழுத்த பணக்கொழுப்பால் பரப்புகிறது. இந்த மதவெறி பிரச்சாரம் எய்ட்ஸ் நோயை விட மோசமானது. சும்மாவா சொன்னார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் “ஏசு என்பவர் பிறக்கவில்லை என்றிருந்திருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும்.”

  39. நண்பர் ராம்,
    //விவாதிக்கும் முன் விஷயத்தை நன்றாக ஆராயுங்கள். புஷ் ஒரு தனி மனிதன் அல்ல. ஒரு நாட்டில் வாழும் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்களின் பிரதிநிதி. அவன் கொலைபாதகம் செய்கிறான் என்றால் அந்தக் கோடிக்கனக்கான கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாகத்தான் , அவர்களுக்காகத்தான் செய்திருக்கிறான் என்பது தான் பொருள். //
    இந்தியாவின் பிரதமரோ ஜனாதிபதியோ எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களோ, அல்லது பெரும்பான்மையினரான இந்துக்களோ பொறுப்பேற்க முடியுமா?

    அன்புடன்,
    அசோக்

  40. திரு, விஸ்வாமித்ரா,
    //மற்றபடி நான் இங்கு எழுதுபவை எல்லாம் சினிமா விமர்சனங்கள் அல்ல. அவை வெளி வந்த சினிமாவை சற்று வேறு கோணத்தில் அலசும் ஒரு பார்வை மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டு மேலே அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்//
    இது விமர்சனம் இல்லாமல் வேறு என்ன? பார்வை என்பது ஒரு நிகழ்வை உள்வாங்கி, நம் புத்திக்கு கொண்டு செல்வது. அப்படி உள்வாங்கியதை, வார்த்தைகளாக வெளிப்படுத்தினால், அது விமர்சனமே.
    நன்றி,
    அசோக்

  41. //திருச்சிக்காரரே, நான் எழுதாத விஷயங்களை நான் எழுதியதாக நீங்கள் எப்படி யூகிக்கலாம்? இங்கே கருத்து பரிமாற்றதிற்க்காகவே, இந்த தளம் அனைவருக்கும் எழுத இடம் தருகிறது. நான் எழுதியதை நீங்கள் ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யலாம். நான் கிறிஸ்துவத்தை பற்றி எழுதுவதை போல நீங்கள் இந்துத்துவத்தை பற்றி எழுதலாம். //

    //ஆகமொத்தத்தில், சுவிசேஷம் தப்பில்லை.
    நன்றி//

    சுவிசேசம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யப் படுவது கீழ்க்காணும் கருத்துக்கள் தான். இந்தக் கருத்துக்களை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

    //தான் இது வரை காணாத ஆனால் தான் இருப்பதாகக் கருதும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள் பொய்யானவை என்று அளப்பது தவறு இல்லை. //-

    பிற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை என்று வெறுப்பைத் தூண்டுவது தவறு இல்லை.

    இப்படியாக அவர்கள் நம்மை விட அதிக பாவியாகும் படி செய்வது தவறு இல்லை.

    வெறுப்பு கருத்துக்களை பரப்பும் போது மார்க்கங்களை பின்பற்றுபவர்களுக்கு இடையே மோதல் உருவாகும் சாத்தியம் பற்றிக் கவலை இல்லை.

    ஆகமொத்தத்தில் சாதுக்களாய் சூழ்ச்சி செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்கக்களைப் பரப்பி , சிந்தனை சுதந்திரத்தை தடை செய்து, அறிவியலுக்கு மாறாக நம்பக் கூறி மனித குலத்தை மயக்கப் பாதையில் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்வது- சுவிசேஷ சூழ்ச்சிப் பிரச்சாரம் செய்வது – தவறு இல்லை.//- இந்தக் கருத்துக்களை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

    நீங்கள் “நான் வணங்கும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று சொல்ல வில்லை, பிற மார்க்கத்தவர் வாங்கும் கடவுள்களும் ஜீவனுள்ள கடவுள்களாக இருக்கலாம்! பிற மார்க்கங்களும் உண்மையானதாக இருக்கக் கூடும். பிற மார்க்கங்களை வெறுக்காதீர்கள் !” என்ற கொள்கையை நீங்கள் வைத்து இருக்கிறீர்களா? இதை உறுதிப் படுத்துங்கள்.

    நீங்கள் இதை உறுதிப் படுத்தி “நான் வணங்கும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று சொல்ல வில்லை, பிற மார்க்கத்தவர் வாங்கும் கடவுள்களும் ஜீவனுள்ள கடவுள்களாக இருக்கலாம்! பிற மார்க்கங்களும் உண்மையானதாக இருக்கக் கூடும். பிற மார்க்கங்களை வெறுக்காதீர்கள்! ” என்று நீங்கள் கூறினால்- அப்போது நான் உங்களிடம் மகிழ்ச்சியுடன் மன்னிப்புக் கேட்பேன்!

    நான் மன்னிப்புக் கேட்கத் தயார்- நீங்கள், “நான் வணங்கும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று சொல்ல வில்லை, பிற மார்க்கத்தவர் வணங்கும் கடவுள்களும் ஜீவனுள்ள கடவுள்களாக இருக்கலாம்! பிற மார்க்கங்களும் உண்மையானதாக இருக்கக் கூடும். பிற மார்க்கங்களை வெறுக்காதீர்கள்!” என்று சொல்லத் தயாரா?

  42. //எனக்கு தெரிந்தவரை நீங்கள் இங்கே செய்ததெல்லாம், உங்கள் சுயபெருமை பேசுவது, உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை மற்றவர் மேல திணிப்பது ( சில மதமாற்றக்காரர்கள் போல்), யாரும் சொல்லாத விஷயங்களை சொல்லியது போல தோன்ற செய்வது. அவ்வளவுதான்.//

    திணிப்பது என்பது எல்லாம் கிடையாது. நான் கூறுவதை கேட்டு, சிந்த்தித்து அது சரியா என்று சோதனை செய்யுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சிந்தனையாளர்கள் வர வேண்டும் என்பதுதான் என் அவா. நான் சாதரணமானவன். என் பெயரைக் கூட வெளிப் படுத்தவில்லை.

  43. //நண்பர் ராம் கூட, சில விஷங்களை ஆக்ரோஷமாக எழுதி இருந்தாலும், பொதுப்படையாக எழுதி இருந்தாலும், அவருடைய சொந்த அனுபவத்தில் கண்ட உண்மைகளைக்கொண்டு எழுதி இருக்கிறார். //

    இது ராம்க்கு நல்லதற்கா அல்லது கொக்கு தலையில் வெண்ணையா என்று தெரியவில்லை.

  44. //ஆனால் நீங்கள் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள். இத்தகைய செய்கைகள் இங்குள்ளவர்கள் மத்தியில் உங்களுக்குள்ள மரியாதையையும் குறைக்கலாம்//

    வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

    இங்கெ சுவிசேசத்தை திணிக்க பலரும் படும் பாட்டை, எல்லோரும் பார்த்துக் கொண்டு தானே உள்ளனர்?

  45. // இயேசு கிறிஸ்து கூட கட்டாய மதமாற்றத்தை விரும்ப மாட்டார்//

    These words are from Jebus fellow.

    6:11 And whosoever shall not receive you, nor hear you, when ye depart thence, shake off the dust under your feet for a testimony against them. Verily I say unto you, It shall be more tolerable for Sodom and Gomorrha in the day of judgment, than for that city.

    Get a life

  46. “But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.”
    In the parable of the talents, Jesus says that God takes what is not rightly his, and reaps what he didn’t sow. The parable ends with the words: “bring them [those who preferred not to be ruled by him] hither, and slay them before me.”

    This Jebus is cruel and intolerant character

  47. //இத்தகைய செய்கைகள் இங்குள்ளவர்கள் மத்தியில் உங்களுக்குள்ள மரியாதையையும் குறைக்கலாம்//

    மாலை , ம‌ரியாதையை எதிர்பார்த்து இங்கே வ‌ர‌வில்லை.

    ஊரைக் கெடுக்கும் சுவிசெச‌ சூழ்ச்சியை அம்ப‌ல‌ப் ப‌டுத்த‌வே, இங்கு எழுதுகிறோம்!

  48. வணக்கம்

    //இந்தியாவின் பிரதமரோ ஜனாதிபதியோ எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களோ, அல்லது பெரும்பான்மையினரான இந்துக்களோ பொறுப்பேற்க முடியுமா? //

    நண்பரே இந்தியா ஜனநாயக நாடு, அமேரிக்கா ஒரு கிறிஸ்துவ நாடு இல்லை என்று சொல்கிறீர்களா?

    /////நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
    https://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
    இந்த நியூச படிங்க……
    இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா?//

    பொறுப்பேற்காது நண்பர் ஸ்ரீ ரஜின், நக்சலைட்டுகள் என்பவர்கள் எந்த மதத்தையும் கொண்டவர்கள் அல்ல, மேலும் அவர்கள் செய்யும் பயங்கரவாதம் இந்து மதமே சிறந்த மார்க்கம், அதை தழுவாதவர்கள் காபீர்கள் என்று சொல்லி பயங்கரவாதத்தை அவர்கள் எங்கும் அரங்கேற்றவில்லை, மாறாக இந்து தர்மத்தில் ஒரு மனிதன் இறைவனை அடைய எத்துணை வழிகள் உள்ளதுவோ அத்துணை வழிகளையும், உலக வாழ்விற்கான வழிமுறைகளையும்,
    இவை அனைத்திற்கும் மேலாக ‘ஆருயிர்க்கெல்லாம் நாம் அன்பு செயல் வேண்டும் ‘ என்பதையுமே போதிக்கிறது, எனவே அது என்றுமே வன்முறையை நாடியது இல்லை. எனவே பொறுப்பேற்பது சாத்தியமில்லை.

    நண்பரே நீங்கள் ஒரு உண்மையை வெறுத்தாலும் கூட இஸ்லாம் என்பது படையெடுப்புகளினால் வளர்ந்த மதமே. ஒரு வேளை நீங்கள் இப்படியும் இருக்கலாம் என்று வரலாற்று நிகழ்ச்சிகளை கற்பனை செய்கிறீர்களோ? என்று நினைக்கிறேன்.

  49. வணக்கம்
    நண்பர் ஸ்ரீ கிலாடியாரே,

    ///ஏனெனில் பாதிக்கப்பட்டவனை கடவுள் வேறு வகையில் ஆறுதல்படுத்தி விடுகிறார்; தவறு இழைத்தவனையோ மன்னிக்கிறார்; அதற்குக் காரணமாக தவறு செய்தவன் மனம் வ(தி)ருந்தியிருக்க வேண்டும்; இது கிறிஸ்தவ உள்வட்ட நம்பிக்கையாகும்;///

    பாதிக்கப் பட்டவனை கடவுள் வேறுவகையில் ஆறுதல் படுத்தி விடுவார் பிறகென்ன யார்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எவ்வகையிலும் பதிக்கப் படலாம், அதாவது ஒருவர் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பை உண்டாக்கலாம்,

    தவறு இழைத்தவனை கடவுள் மன்னிக்கிறார், நல்லது, பாதிப்பை உண்டாக்க மேலும் வலுவான அனுமதி கடவுளிடம் கிடைத்தாயிற்று,

    மன்னிப்பு என்று வந்தபின்னர் ஒரு மனிதன் எத்தனை முறை வேண்டுமானாலும் தான் திருந்த சந்தர்ப்பத்தை கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருப்பான். எங்கே இருக்கிறது இதிலே நீதி.

    //“ஒரு கைதியின் டைரி” படம் வந்த பிறகு தொண்டர்கள் தெளிவு பெற்றார்களா? “இந்தியன்” படத்துக்குப் பிறகு லஞ்சம் ஒழிந்துவிட்டதா? “ரோஜா” படத்துக்குப் பிறகு தீவிரவாதம் ஒழிந்துவிட்டதா? “விதி” படத்துக்குப் பிறகு இளம்பெண்கள் ஏமாற்றப்படவில்லையா?//

    இப்படியும் இருக்கிறது எனவே மக்களே உஷார் என்பதுதான் திரைப்படம் சொல்லும் செய்தி, அதன் பின்னர் யாரும் தொண்டர்கள் பின்னேயும், அரசு அலுவலகத்திலும், கன்னிப் பெண்களின் பின்னாலேயும் மெனக்கெட்டுப் பொய் இந்த மாதிரி நான் படம் எடுத்து விட்டேன் நீங்கள் திருந்துங்கள், மக்களே நீங்கள் ஜாக்கிரதை என்று சொல்லமுடியாது.

    இயல், இசை, நாடகம், என்று கலைகளின் மூலமே பல சரித்திரக் கதைகளை சொல்லித்தான் நமது நாட்டில் பக்தி, தேசபக்தி, என்று அனைத்தையும் வளர்த்தார்கள், காரணம் கலையின் மகத்துவம் இந்தியர்களுக்கு தெரியும். நூற்றுக்கு முப்பது நபர்களாவது உஷாராய் இருப்பார்கள், நாடகத்தின் பரிணாம வளர்ச்சியே சினிமா.

    ///இந்து மார்க்கத்தில் கட்டுப்பாடு கிடையாது என்பது அடிப்படையற்ற வெற்று கருத்தாகும்; ஒரு வேளை அதன் ஆழம் அப்படியிருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை; சொந்த பந்தங்களின் சுயநலப் போக்கை கண்டு மனம் வெதும்பியே வேறு மார்க்க ஈர்ப்பு ஒரு மனிதனுக்கு வருகிறது; அங்கு போனபிறகே இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெரியவரும்;///

    இந்து தர்மத்தில் என்னென்ன கட்டுப்பாடுகளை உங்களால் சொல்லமுடியும், இந்து தர்மத்தில் பலவிஷயங்கள் செய்யக்கூடாது என்று சொல்லப் பட்டிருக்கலாம், ஆனால் அவைகள் கட்டுப்பாடுகள் அல்ல, ஒன்றுமே பெரிதாக சொல்ல தேவை இல்லை, ஒரு பள்ளிவாசல் நோன்புக் கஞ்சியை ஒரு இந்து தாராளமாக வாங்கி குடிக்கிறான், உங்கள் சர்ச்சுக்கும் வந்து வணங்குகிறான், எங்கே உங்களில் எத்தனை நபர்கள் உள்ளீர்கள்? இருந்தாலும் நான் குறிப்பிட்ட இந்துக்களின் எண்ணிக்கையை விடவும் நூற்றில் ஒரு பங்குதான் இருப்பார்கள்.

    //“தன்னை அறிதல்” என்பது தன்னுள் உறைந்திருக்கும் இறைவனுக்கு இகழ்ச்சியுண்டாக்காதிருத்தல்; அது சீருடை அணிந்த ஒரு காவல் அதிகாரி தன் தோற்றத்துக்கேற்ற மாண்பைக் காக்கவேண்டியதைப் போன்றது;///

    தன்னை அறிதல் என்பதன் அர்த்தம் வேறு, நீங்கள் சொல்வது கிறிஸ்துவக் கண்ணோட்டம், அப்போதும் சீருடை அணிந்த காவலர் என்ற உதாரணத்தின் மூலம் இறைவன் வெளியில் இருப்பதை உணர்த்துகிறீர்கள்,

    தன்னை அறிதலென்பது பிரம்மத்தை உணர்வதாகும், பிரம்மத்தை உணர்ந்த ஒருவன் ஒரு மனிதனுக்கு கூட இகழ்ச்சி உண்டாக்க மாட்டன்.

  50. ///இந்தியாவின் பிரதமரோ ஜனாதிபதியோ எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களோ, அல்லது பெரும்பான்மையினரான இந்துக்களோ பொறுப்பேற்க முடியுமா?///

    பொறுப்பேற்க முடியாவிட்டாலும் எதிர்ப்பை கண்டிப்புடன் தெரிவித்து நிகழ்வதை தடுப்பது நமது கடமை. குறைந்த பட்சம் அதை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
    ராமர் பால விஷயத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான் அதை இடிக்க முடிவெடுத்தார்கள். மிகப்பெரிய எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டதால் குறைந்தபட்சம் நிறுத்தியாவது வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். உங்கள் கிறிஸ்தவர்கள் அப்படி போரை தற்காலிகமாக நிறுத்தியாவது உயிர்களைக் காப்பாற்றாமல் போனது கிறிஸ்தவம் தோற்றதற்குச் சமம் தானே!

  51. /நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
    https://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
    இந்த நியூச படிங்க……
    இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா?//
    ஐயா எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள். நக்ஸல்களும் , மாவோயிஸ்டுகளும் பணத்திற்காக கிறிஸ்தவ மிஷனரிகளின் கூலிப்படைகளாகி பல ஆண்டுகள் ஆகிறது. இவர்களில் யாரும் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதுமில்லை. கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஆனால் அவர்கள் மிஷனரிகளின் கூலிப்படைகள் என்பதை மட்டும் நினைவு கொள்ளுங்கள்.

  52. /////திருச்சிக் காரன்
    16 October 2009 at 1:14 am
    //நண்பர் ராம் கூட, சில விஷங்களை ஆக்ரோஷமாக எழுதி இருந்தாலும், பொதுப்படையாக எழுதி இருந்தாலும், அவருடைய சொந்த அனுபவத்தில் கண்ட உண்மைகளைக்கொண்டு எழுதி இருக்கிறார். //

    இது ராம்க்கு நல்லதற்கா அல்லது கொக்கு தலையில் வெண்ணையா என்று தெரியவில்லை.///////

    என்னமோ இருந்துவிட்டுப் போகட்டும் , நம்முடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்துக்களை சீண்டுவதை சிலர் கைவிட்டால் அதுவே சமூகத்தின் பெரிய மாற்றமாகக் கருதப்படும். அதற்குத்தானே போராடுகிறோம்.

  53. ///thiruchchik kaaran
    15 October 2009 at 8:48 pm
    அமெரிக்க அதிபரான ஒபாமா, வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுகிறார்.

    இந்தியாவில் பிறந்து, சிறந்த இந்தியக் கலாச்சாரத்தால் வளர்ந்த இந்தியர்கள் எல்லோரும் தங்கள் வெறுப்புக் கருத்துக்களைக் கை விட்டு, மகிழ்ச்ச்யுடன் தீபாவளி கொண்டாட வேண்டும்///

    திருச்சி சார், கருனாநிதி மற்ற மத விஷேஷ சுவிஷேசங்களுக்கெல்லாம் வாழ்த்து தெரிவிப்பாராம், இந்து பண்டிகைக்கு வாழ்த்த மாட்டாராம். இப்படி மதப்பிரிவினைவாத, மதவாத தலைவர்கள் இருக்கும் வரை வெறுப்புக்கருத்துக்கள் வளரவே செய்யும். வெறுப்பு நமக்குள் இல்லை. அது சுயநல அரசியல் வாதிகளால் ஊட்டப்படுகிறது. தொடர்ந்து போராடுவது நமது வேலையாகிவிட்டது.

  54. // உங்கள் கிறிஸ்தவர்கள் அப்படி போரை தற்காலிகமாக நிறுத்தியாவது உயிர்களைக் காப்பாற்றாமல் போனது கிறிஸ்தவம் தோற்றதற்குச் சமம் தானே? //

    நண்பர் ராம் அவர்களே,
    ஆப்கனிலும் ஈராக்கிலும் நடந்த போர்களுக்குக் கிறிஸ்தவம் காரணமல்ல; மதரீதியிலான காரணங்களுக்காக அமெரிக்கா போராடியதில்லை; அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான காரணங்களே இதன் பின்னால் இருக்கிறது;
    தாலிபன்கள் இன்றைக்கு இந்தியாவையும் மிரட்டுகிறார்கள்; அவர்களது பிற்போக்கான காட்டாட்சியினையும் அதன் பாதிப்புகளையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

    இந்தியாவை ” ஜிகாத் ” பாதிப்பதாக எப்படி கூறுகிறீர்களோ அப்படியே அமெரிக்காவை அது பாதித்தது; அவர்களிடம் மிருக பலமும் அதிகாரமும் இருப்பதால் தாக்கினார்கள்; தீவிரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த போரில் இந்தியா கூட்டுப்படைகளுடன் கலந்துகொள்ளவில்லை; தற்போதும் ஈரான் (எரிவாயு குழாய் போன்ற‌)
    நாட்டுடனான வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா (அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக ) தடுமாறிக் கொண்டிருக்கிறது;

    கிறிஸ்தவத்தை தாராளமாக விமர்சிக்கலாம், தாக்கலாம்; கேட்பதற்கு ஆளில்லை; ஆனாலும் குறை (பொய்..?) சொன்னாலும் பொருந்த சொல்லணுமல்லவா?

    முதலில் அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல என்பதையும் மற்றும் கிறிஸ்தவ அபிமானமும் ஆதி கிறிஸ்தவ நடைமுறைகளைக் கடைபிடிக்கும் கொள்கையும் கொண்ட நாடல்ல என்பதையும் தாங்கள் தயவாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்; அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி அது எந்த மதத்தையும் சார்ந்ததல்ல; தலைவர்கள் கிறிஸ்தவ அபிமானம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தனியாக எந்த முடிவும் எடுத்துவிட முடியாது; செனட்டர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இன்னும் பல அமைப்புகள் வழியே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது;

    ஓரளவு அடிப்படைக் கல்வியாவது கற்றவர்களே இங்கே வந்து விவாதிக்கிறோம்; எனவே நமது விவாதத்தில் குறுகிய மனப்பான்மையினை விட்டு உலக நடைமுறைகளையும் (உண்மையான‌..!) மதசார்பற்றோருடைய கூற்றுகளையும் வரலாறுகளையும் அனுசரித்து நமது முதிர்ச்சியினைக் காட்டும் வண்ணமாக விவாதிக்கலாமே?

    இந்த பின்னூட்டம் பதிக்கப்ப‌டுமானால் அதனைத் தொடர்ந்து திரு.பாஸ்கர் அவர்களுக்கும் நல்லதொரு பதிலைத் தர விரும்புகிறேன்.

    உள்ளங்கள் கந்தகத்தாலல்ல,அன்பினால் வெடிக்கட்டும்;
    ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்கக் கட்டித் தழுவட்டும்..!
    அதன் ஒளி எங்கும் பரவட்டும்;
    அந்த வெளிச்சத்தில் ஞாலமெல்லாம் சிறக்கட்டும்..!
    HAPPY DIWALI TO EVERYBODY..!

  55. //நண்பரே இந்தியா ஜனநாயக நாடு, அமேரிக்கா ஒரு கிறிஸ்துவ நாடு இல்லை என்று சொல்கிறீர்களா?//
    அமெரிக்க ஒரு கிறிஸ்துவ நாடு கிடையாது. இந்தியாவை போல் ஒரு ஜனநாயக நாடு. பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் பாஸ்கர்.
    அன்புடன்,
    அசோக்

  56. //நண்பரே இந்தியா ஜனநாயக நாடு, அமேரிக்கா ஒரு கிறிஸ்துவ நாடு இல்லை என்று சொல்கிறீர்களா?//
    இப்போது இங்கே கிறிஸ்துவர்களுக்கு எதிராக மல்லுக்கு நிற்பவர்களின் நிலைமை தெரிகிறது. போதுமான பொது அறிவு இல்லாமல் மற்றவர்கள் சொல்வதையும் முரட்டுத்தனமாக எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பரதாப படவே முடிகிறது.
    அன்புடன்,
    அசோக்

  57. Ashok is the epitome of Knowledge.. To him Christianity never probagated throug forrce.. May be he is right :

    a) Spanish inquisition is more than Buddhas Ahimsa
    b) Crusade is nothing but Gandhis Satyagraha where christian warriors went without any weapons and allowed themselves to be slayed.
    c) The removal of indigenous civilization in South America is by Prayers and more than Thirthankaras self inflicting pains.

    Every president of USA take Oath by Bible. That is Wnat B. Baskar meant. I have been to USA and most of the hotels will have Bible in the room along with Telephone Directory. So eventhough technically USA is not a christian country it could be construed as Christian Country. To enlighten already englightend Gladys and Ashoks there was a very big debate about Abortion in USA. if they care to dig up few articles they can understand the Genesis of such debates and who is behind that and how powerful they are.

    wishing every Hindu, Jain and Sikhs a very Happy and Prosperous Deepavali.

    Regards
    S Baskar

  58. அன்புள்ள அஷோக் அவர்களுக்கு

    மன்னிப்பு எல்லாம் எதற்கு? நீங்கள் ஏதும் தவறாகச் சொல்லவில்லையே? “வெறித்தனம்” என்ற வார்த்தைப் பயன்பாடு என் மதக் காழ்ப்பால் வந்திருப்பதாக நினைக்கிறீர்கள். அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியமைக்கு வருந்துகிறேன். எனக்கு எந்த மதம் மீதும் காழ்ப்பு கிடையாது ஆனால் சில விஷயங்களின் மீது கடுமையான விமர்சனம் உண்டு. நான் இங்கு சொன்ன வெறித்தனம் என்பது கட்டுப்பாடில்லாத, கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கையை மட்டுமே. உதாரணமாக தமிழ் நடிகர்கள் பலருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம் அல்லவா? அது போன்ற ஒரு வெறித்தனம். தமிழில் நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வெறித்தனமான ரசிகர்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அப்படி கண்மூடித்தனமான பக்தி இருக்கும் பொழுது எதிர் நடிகரையும், தலைவர்களையும் எதிரிகளாக எண்ணி வசைபாடுகிறார்கள் அல்லவா அது போன்ற ஒரு மனநிலையில் இருக்கும் பெந்தகோஸ்தேக்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது அது.

    எனக்கு கிறிஸ்துவம் மீது எந்த விதக் காழ்ப்போ வெறுப்போ கிடையாது. நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை. கடவுள் என்பவர் இந்துவுக்கும், கிறிஸ்துவருக்கும், முஸ்லீமுக்கும் தனித்தனியாக இருக்க முடியாது. அது போலவே என் கடவுள்தான் உசத்தி, உருவ வழிபாடு பண்ணுபவர்களும், என் கடவுளை ஏற்காதவர்களும் சாத்தான்கள், பாவிகள், நாசமாகப் போவார்கள், நரகத்தில் உழல்வார்கள் என்று சொல்பவர்களின் மீது எனக்கு கோபமும், வருத்தமும் உண்டு. நிச்சயமாக மதமாற்றம் செய்ய வருபவர்கள் மீதும் அதே கோபம் உண்டு. பெந்தகோஸ்தேக்களிடம் அப்படியான எண்ணம் வெறித்தனமாக இருக்கிறது. மாரியம்மனைக் கும்பிடுப்வர்கள் சாத்தான்கள் என்று அவர்கள் ஏசி நான் பலமுறை கேட்டதுண்டு. அது போன்ற வெறித்தனமும், பிற மத நம்பிக்கையாளர்களை பாவிகள் என்று நினைக்கும் எண்ணமும் தவறானவை. அது இல்லாத கிறிஸ்தவர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது. அந்த எண்ணப் போக்கு அடிப்படைவாதக் கிறிஸ்துவர்களிடம் மாற வேண்டும்.

    நீங்கள் குறிப்பிட்டது போல சாமி வந்து ஆடுவதும், குறி சொல்வதும், உச்ச கட்ட தவ நிலையில் ஆடுவதும் தன்னை மீறியதொரு பக்தி வெளிப்பாடாகவே இருந்தாலும் அவர்கள் பிற நம்பிக்கையாளர்களை என்றும் பாவிகள் என்றோ சாத்தான்கள் என்றோ சொல்வது கிடையாது. அப்படிச் சொல்வது மத வெறி. அப்படிச் சொல்லாமல் வெறியுடன் தன் நம்பிக்கைப் படி வழிபடுவதில் தவறில்லை. அது விதமான பக்தி நிலை, டிரான்ஸ் என்று எடுத்துக் கொள்ளலாம். மத நம்பிக்கையும், பக்தியும் எந்த மதமானாலும் இருக்கலாம் ஆனால் அது வெறியாகி தன் நம்பிக்கையை ஏற்காதவர்களை பாவிகள், சாத்தான்கள் என்று இகழும் இடத்தில்தான் நம்பிக்கை வெறியாக மாறி விடுகிறது. அந்த வெறித்தனத்தை நான் நிச்சயமாகக் கண்டிக்கிறேன். நான் எங்கள் பகுதியில் இது போன்ற சகிப்பில்லாத வெறி பிடித்த மத மாற்ற வெறியர்களை அன்றாடம் சந்திக்க நேருகிறது. இப்பொழுது அவர்கள் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிகமாக ஆகியுள்ளது. இதை உங்களைப் போன்ற சமத்துவ எண்ணம் உடைய உண்மையான கிறிஸ்துவர்களே மாற்ற முடியும். நாங்கள் சொன்னால் மதப் பிரச்சினையாக்கப் பட்டு விடுகிறது.

    நான் எழுதுவதை விமர்சனமாகக் கருதுவதில்லை. விமர்சனம் என்பதற்கு இலக்கணங்கள் உண்டு. வெங்கட் சுவாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்கள் இலக்கியத்தில் செய்வது விமர்சனம். சேதுபதி அருணாச்சலம் போன்றவர்கள் சினிமாவை அலசும் பொழுது செய்பவை விமர்சனம். சினிமா விமர்சனம் என்பது நம் வலைப்பதிவர்கள் நினைப்பது போல கதை சொல்வது அல்ல. நடிப்பு, காமிரா கோணங்கள், இசை, வெளிச்சம், குறியீடுகள், இயக்குனரின் அழகியல் கோணங்கள், ஆழ்மனத்தைத் தூண்டும் , தொடும் தருணங்கள், காட்சிபூர்வமாக கதை சொல்லல், என்று எண்ணற்ற விஷயங்களை ஒரு சினிமாவில் நுட்பமாக கவனித்து அதைத் துல்லியமாகச் சொல்வதே விமர்சனம் ஆகும். இங்கு நான் சொன்னவற்றில் விமர்சனத்தின் சாயல் ஒன்றிரண்டு இருப்பினும் இது முற்றிலுமான விமர்சனம் அல்ல. ஒரு சினிமா ஒரு சமூக நிகழ்வைச் சொல்லியிருக்கிறது என்பதை மட்டுமே நான் இங்கு சொல்லி படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறேன். அப்படிச் சொல்லும் பொழுது நடிப்பு வசனம் குறித்து ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம் அதனாலேயே அது விமர்சனம் ஆகி விடாது. நல்ல சினிமா விமர்சனம் தமிழ் சூழலில் மிக அரிதாகவே படிக்கக் கிடைக்கின்றது.

    மற்றபடி உங்கள் பிற கேள்விகளுக்கு பின்னர் வருகிறேன். அலைச்சல்களின் நடுவே இணையத் தொடர்போ எழுத நேரமோ கிடைப்பதில்லை. மீண்டும் நேரம் கிட்டும் பொழுது க்ளாடிஸ், ரஜின் ஆகிய நண்பர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதுகிறேன். மன்னித்துக் கொள்ளவும்

    விஸ்வாமித்ரா

  59. இங்கே வந்து எழுதற கிறிஸ்டியன்களுக்கு( ஹிந்து முறை) நன்றி!!

    எப்பிடியோ அமெரிக்க கிறிஸ்தவ நாடு இல்லை-நு இங்கே தெளிவு ஆனது.அது வரை சந்தோசம் தான். இன்னும் என்ன அதை ஹிந்து பெரும்பான்மையினர் வாழும் மத சார்பற்ற ஜனநாயக நாடு என்று சொல்ல வேண்டியது தான் பாக்கி. அதுவும் இன்னும் ஒரு 15 வருஷத்துல சொல்லலாம்-நு நெனைக்கிறேன். வேகமா ஹிந்து மத வாழ்கை முறை அமெரிக்காவுல வளந்துட்டு இருக்கிறதை யாரும் மறுக்கமுடியாது நண்பர்களே!

    எவ்வளவு நாளைக்கு தான் லாஜிக் இல்லாத கிறிஸ்தவத்தை வச்சிகினு காலத்தை ஓட்டுறதுன்னு என்னோட UK நண்பன் மார்க் போவ்லேர் கேக்குறார். அவரே சொன்னாரு ஹிந்து மதம் லாஜிக்கும் அறிவியலும் கலந்து இருக்கிறதால நான் ஹிந்துவாக வாழபோறேன்னு.

    இப்பிடி அவங்க சொல்லுறப்போ, நம்ம அசோகுகளையும் கிளடிகளையும் பக்குரபோ ரொம்ப வேதனைய கீது ப !

  60. //ram
    16 October 2009 at 7:06 am
    ///thiruchchik kaaran
    15 October 2009 at 8:48 pm
    அமெரிக்க அதிபரான ஒபாமா, வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுகிறார்.

    இந்தியாவில் பிறந்து, சிறந்த இந்தியக் கலாச்சாரத்தால் வளர்ந்த இந்தியர்கள் எல்லோரும் தங்கள் வெறுப்புக் கருத்துக்களைக் கை விட்டு, மகிழ்ச்ச்யுடன் தீபாவளி கொண்டாட வேண்டும்///

    திருச்சி சார், கருனாநிதி மற்ற மத விஷேஷ சுவிஷேசங்களுக்கெல்லாம் வாழ்த்து தெரிவிப்பாராம், இந்து பண்டிகைக்கு வாழ்த்த மாட்டாராம். இப்படி மதப்பிரிவினைவாத, மதவாத தலைவர்கள் இருக்கும் வரை வெறுப்புக்கருத்துக்கள் வளரவே செய்யும். வெறுப்பு நமக்குள் இல்லை. அது சுயநல அரசியல் வாதிகளால் ஊட்டப்படுகிறது. தொடர்ந்து போராடுவது நமது வேலையாகிவிட்டது.//

    ராம்,

    நான் ஒபாமாவைப் பற்றிக் குறிப்பிட்டது எதற்கு என்றால் வேறு நாட்டை சேர்ந்தவரே இவ்வளவு பரந்த மனப் பான்மையுடன் இருக்கும் போது, நமது நாட்டில் உள்ள, நம்முடன் வாழும் பிற மதங்களை பின்பற்றும் சகோதரர்கள் அதை புரிந்து கொண்டு நல்லிணக்கப் பாதைக்கு வாருங்கள் என்பதுதான்.

    நாம் கருணாநிதியைப் பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்முடைய உழைப்பும் நேரமும் வீணாகும்.

    சரியான ஆன்மீகத்தைப் பிடியுங்கள். அந்த பாதையில் உங்களை ஆன்மிக முன்னேற்றம் செய்து கொண்டு, எல்லா மக்களையும் ஆன்மீக நிலையில் உயர்த்தப் பாருங்கள். அதுவே சிறந்த வழி.

    ஆதி சங்கரர் அரசர்களிடம் சென்று ” பெரும்பான்மையானவர் இந்து மதத்தை பின் பற்றும் நாடாக இந்தியாவை” அறிவிக்கச் சொல்லிக் கேட்கவில்லையே!
    அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரிடம் இருந்தது. கிட்டத் தட்ட ஒரே ஆளாக, ஒரு சிறிய டீமை வுருவாக்கி தன் பணியை அவர் செவ்வனே செய்து முடித்து விட்டார்.

  61. டியர் பிரதர் கிலாடி,

    //உள்ளங்கள் கந்தகத்தாலல்ல,அன்பினால் வெடிக்கட்டும்;
    ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்கக் கட்டித் தழுவட்டும்..!
    அதன் ஒளி எங்கும் பரவட்டும்;
    அந்த வெளிச்சத்தில் ஞாலமெல்லாம் சிறக்கட்டும்..!
    HAPPY DIWALI TO EVERYBODY..!//

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  62. திரு.கிளாடி

    ///ஆப்கனிலும் ஈராக்கிலும் நடந்த போர்களுக்குக் கிறிஸ்தவம் காரணமல்ல; மதரீதியிலான காரணங்களுக்காக அமெரிக்கா போராடியதில்லை; அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான காரணங்களே இதன் பின்னால் இருக்கிறது;////

    கொலைபாதகத்திற்கு காரணம் கற்பித்து நியாயப்படுத்துகிறீர்கள். இதை ஏசுவே ஒத்துக்கொள்ள மாட்டார். அரசியல் காரணம் என்றாலே அதில் வாழும் மக்களின் மதம், சமூகம் மற்றும் பொருளாதாரம் எல்லாமே உள்ளடக்கியதே! இதைப்பிரித்துப் பேசி பசப்பக்கூடாது. நியாயமாகப் பார்க்கப் போனால் ரெட்டை கோபுரத்தை இடித்தவர்களுக்கு நீங்கள் இன்னொரு ரெட்டை கோபுரம் கட்டி அதை இடிக்கும் நாளையும் குறித்து கொடுத்திருக்க வேண்டும். அப்படித்தானே ஏசு சொன்னார். அரசியல் காரணங்கள் இருந்தால் எதிரியை கொலை செய்யலாம் என்று ஏசு சொன்னாரா?

    //முதலில் அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல என்பதையும் மற்றும் கிறிஸ்தவ அபிமானமும் ஆதி கிறிஸ்தவ நடைமுறைகளைக் கடைபிடிக்கும் கொள்கையும் கொண்ட நாடல்ல என்பதையும் தாங்கள் தயவாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்//

    நீங்கள் சொல்லி விட்டால் அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல என்றாகிவிடுமா? கூகுளில் நாடுகளை மதரீதியாக குறிப்பிடும் வரைபடத்தைத் தேடுங்கள். கிறிஸ்தவ நாடு, இஸ்லாம் நாடு, புத்த நாடு , யூத நாடு என்று ஒவ்வொரு நாடும் எந்த மதத்தைச் சார்ந்தது என்று பல வண்ணங்களுடன் வரைபடத்தைக் காட்டும். இந்தியாவைக் காட்டும் போது மட்டும் பல வண்ணங்கள் இருக்கும். ஏனெனில் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் ரீதியாகவே அறிவிக்கப்பட்டது. சட்டப்பூர்வமாக வரைபடங்களும் அவ்வாறே தயாரிக்கப்படுகிறது.

    ஆனால் அமெரிக்கா கிறிஸ்தவ நாட்டு குறியீட்டுடனேயே இருக்கும். அதை ஏன் அந்நாட்டு அரசாங்கம் கண்டிக்கவில்லை? அமெரிக்க அதிபர் சார்பாக நீங்கள் விளக்குவீர்களோ?

    //தலைவர்கள் கிறிஸ்தவ அபிமானம் கொண்டவர்களாக இருந்தாலும் ..//

    அது என்ன இருந்தாலும் என்று இழுக்கிறீர்கள், அபிமானம் கொண்டவர்கள் அதை ஏன் நடைமுறைப்படுத்துவதில்லை. ஏசு சொல்வதை நடைமுறையில் செயல்படுத்த அவர்களால் முடியாது என்பது தானே அர்த்தம். அப்படியானால் கிறிஸ்தவம் தோற்றது. ஏசுவின் போதனைகள் புறக்கணிக்கப்படுகிறது. தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நீங்கள் சமாளிக்கப்பார்க்கிறீர்கள்.

    ///ஓரளவு அடிப்படைக் கல்வியாவது கற்றவர்களே இங்கே வந்து விவாதிக்கிறோம்///

    நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? உங்களால் ஓரளவிற்கு மேல் விவாதிக்க முடியாமல் போனால் இவன் கல்வியறிவு இல்லாதவன். இவனோடு விவாதிக்க நான் தயாரில்லை என்று சொல்லி என்னை ஏளனம் செய்து நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள் போலிருக்கிறதே! எனக்கு ஓரளவுக்குக் கூட அடிப்படைக் கல்வி கிடையாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் நான் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உணரக்கூட முடியாத அளவிற்கு ஜடப்பொருள் கிடையாது. அதனால் விவாதிக்கவே செய்வேன். குழப்பமற்ற முறையில் தெளிவாகவே தான் கேட்கிறேன். இதில் குறுகிய மனப்பான்மை எங்கிருந்து வந்தது. ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு கல்வியறிவு அற்றவர்கள் தானே தேவை! யோசிக்க திரானியற்றவர்கள் தானே தேவை. நான் அப்படிப்பட்ட ஹிந்து தான். என்னிடம் முயற்சி செய்யுங்கள். நான் ஒரு மனிதானாகப் பிறந்து ஹிந்துவாக வளர்ந்து ஹிந்துவாகவே சாவதில் பெருமைப்படுகிறேன்.

    உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

  63. நண்பர்கள் ராம் & S. பாஸ்கர் பல வெடிகளை கொளுத்திப் போட்டு, இங்கெ தீபாவளி கொண்டாடுகிறார்கள். எப்படியாவது வெறுப்புக் கருத்துக்கள் உடைந்து, உண்மைகள் ஒளி விட்டுப் பிராகசிப்பது நல்லதுதான்.

  64. ///ஆதி சங்கரர் அரசர்களிடம் சென்று ” பெரும்பான்மையானவர் இந்து மதத்தை பின் பற்றும் நாடாக இந்தியாவை” அறிவிக்கச் சொல்லிக் கேட்கவில்லையே!
    அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரிடம் இருந்தது. கிட்டத் தட்ட ஒரே ஆளாக, ஒரு சிறிய டீமை வுருவாக்கி தன் பணியை அவர் செவ்வனே செய்து முடித்து விட்டார்///

    திருச்சி சார்,

    நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை இத்தருணத்தில் உணரவேண்டும். சங்கரர் வாழ்ந்த காலத்தில் இரு மார்கத்தவர் விவாதித்தால் அதில் யார் பக்கம் மறுக்க முடியாத உண்மை தென்படுகிறதோ அவர்கள் மார்கத்தை வாதிட்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பின்னால் அதுவே ஏற்றுக்கொண்டவர்களின் மார்கமும் ஆகும். அதில் கண்மூடித்தனம் இருந்ததில்லை. அந்த காலத்து ஆட்சியாளர்களும் அதில் தலையிட்டதில்லை. தற்காலத்தில் அப்படியில்லை. உண்மையான மார்க்கம் எதுவானாலும் பரவாயில்லை, அவற்றை இல்லாமல் செய்து விட்டு தன்மார்கமே உண்மையானது என்று பரப்புவோம் என்பதே இன்றைய வெளிநாட்டு மதங்களின் குறிக்கோள். ஆட்சியாளர்களும் அதில் அதிகமாக தலையிடுவது மட்டுமல்லாது அவற்றை வழிநடத்திப் பிழைக்கவும் செய்கிறார்கள். அதனால் ஆத்மவிசாரம் செய்து ஆன்மீகவழியில் முன்னேறும் அதே நேரத்தில் கருனாநிதி போன்றவர்களைப் பற்றி கவலைப்படுவதும் நமது தற்காப்புத் தேவையே ஆகும்.

    உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  65. ///ஆப்கனிலும் ஈராக்கிலும் நடந்த போர்களுக்குக் கிறிஸ்தவம் காரணமல்ல; மதரீதியிலான காரணங்களுக்காக அமெரிக்கா போராடியதில்லை; அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான காரணங்களே இதன் பின்னால் இருக்கிறது;////

    Glady,

    In the GOD television they are not saying what you are saying. There they are saying that after the dictator Saddam is thrown out, the lord’s messages are reaching many people. Then they showed a television tower exclusively allocated for the telecast of the missionary channel.

    Now tell us. Whom to believe?

    Should we believe your taqiya or the official evangelical anouncement?

  66. வணக்கம்,

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  67. //நீங்கள் சொல்லி விட்டால் அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல என்றாகிவிடுமா? கூகுளில் நாடுகளை மதரீதியாக குறிப்பிடும் வரைபடத்தைத் தேடுங்கள். //
    ஓஹோ, கூகிள்தான் ஒரு நாடு ஜனநாயக நாடு என்று சொல்லும் அதிகாரம் பெற்றதா? அமெரிக்காவில் பள்ளிகளில்கூட கிறிஸ்துவ வழிபாடு கிடையாது. ஏனென்றால், அது உங்களை போன்றவர்களை புண்படுத்துகிறதாம். வாதம் செய்கிறதற்காக, நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதீர்கள்.

    //சங்கரர் வாழ்ந்த காலத்தில் இரு மார்கத்தவர் விவாதித்தால் அதில் யார் பக்கம் மறுக்க முடியாத உண்மை தென்படுகிறதோ அவர்கள் மார்கத்தை வாதிட்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். //
    இந்த காலத்தில் எங்கள் வாதங்களை நீங்கள் காதிலேயே வாங்கிககொள்வதில்லையே.

    //அந்த காலத்து ஆட்சியாளர்களும் அதில் தலையிட்டதில்லை. தற்காலத்தில் அப்படியில்லை. உண்மையான மார்க்கம் எதுவானாலும் பரவாயில்லை, அவற்றை இல்லாமல் செய்து விட்டு தன்மார்கமே உண்மையானது என்று பரப்புவோம் என்பதே இன்றைய வெளிநாட்டு மதங்களின் குறிக்கோள். //
    சைவத்தின் பெயரால் நடந்த படுகொலைகளில் அரசர்கள் சம்பதபடவில்லையா?

    //எவ்வளவு நாளைக்கு தான் லாஜிக் இல்லாத கிறிஸ்தவத்தை வச்சிகினு காலத்தை ஓட்டுறதுன்னு என்னோட UK நண்பன் மார்க் போவ்லேர் கேக்குறார். அவரே சொன்னாரு ஹிந்து மதம் லாஜிக்கும் அறிவியலும் கலந்து இருக்கிறதால நான் ஹிந்துவாக வாழபோறேன்னு. //
    உங்கள் UK நண்பன் இந்துவாக மாறுகிற அந்த நேரத்தில் 100 இந்தியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். எத்தனை காலத்திற்குத்தான் வெள்ளைக்காரன் செய்வதே சரி என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள். அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாங்க சார்.

    //ஹிந்துவாகவே சாவதில் பெருமைப்படுகிறேன். //
    இந்த பெருமைதான் சார், மனிதனின் அறிவுக்கண்ணை அவ்வப்போது மறைத்துவிடுகிறது.

    இருள் மறைத்து ஒளி பெருக, இந்த தீபாவளி நாளில் வாழ்த்துகிறேன்.

    அன்புடன்,
    அசோக்

  68. //தற்காலத்தில் அப்படியில்லை. உண்மையான மார்க்கம் எதுவானாலும் பரவாயில்லை, அவற்றை இல்லாமல் செய்து விட்டு தன்மார்கமே உண்மையானது என்று பரப்புவோம் என்பதே இன்றைய வெளிநாட்டு மதங்களின் குறிக்கோள். ஆட்சியாளர்களும் அதில் அதிகமாக தலையிடுவது மட்டுமல்லாது அவற்றை வழிநடத்திப் பிழைக்கவும் செய்கிறார்கள். அதனால் ஆத்மவிசாரம் செய்து ஆன்மீகவழியில் முன்னேறும் அதே நேரத்தில் கருனாநிதி போன்றவர்களைப் பற்றி கவலைப்படுவதும் நமது தற்காப்புத் தேவையே ஆகும்//.

    உண்மை, ஆனால் க‌ருணானிதியார் ம‌ன‌ம் திருந்தும் வாய்ப்பு மிக‌வும் குறைவு. என‌வே நாம் இந்து ம‌த‌த்தின் அடிப்ப‌டைக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்தினால் ந‌ல்ல‌து. க‌ருணானிதியின் இந்து ம‌த‌ எதிர்ப்பை க‌ண்டிக்க‌ ப‌ல‌ர் உள்ள‌ன‌ர். என‌வெ ந‌ம்மில் சிலராவ‌து ஆதி ச‌ங்க‌ர‌ர் பாணியில் செய‌ல் ப‌டுவ‌து அவ‌சிய‌ம் என்றே நினைக்கிரென்.

    இந்துக்க‌ளில் எத்த‌னை பேர் இந்து ம‌த‌த்தின் ஒளியை ச‌ரியாக‌ப் புரிந்து கொள்கிரார்க‌ளோ, அந்த‌ அள‌வுக்கு, க‌திர‌வ‌னைக் க‌ண்ட‌ பனி போல‌, க‌திர‌வ‌ன் பெய‌ரைக் கூறி ம‌க்க‌ளை ஏமாற்றுப‌வ‌ர்களின் வ‌லிமை – க‌திர‌வ‌னைக் க‌ண்ட‌ பனி போல‌ குறையும்.

  69. Dear பாஸ்கர் ஜி,

    உங்கள் மெயில் ஐ. டி . யை அறியத் thara இயலுமா?

  70. சகோதரர் விஸ்வாமித்ரா,
    மிக எதார்த்தமாக, காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இருக்கிறது உங்கள் பதில். உங்களை போலவே மற்ற அனைவரும் இந்த பண்பை கடைபிடித்தால் நலமாயிருக்கும்.
    //கடவுள் என்பவர் இந்துவுக்கும், கிறிஸ்துவருக்கும், முஸ்லீமுக்கும் தனித்தனியாக இருக்க முடியாது. //
    மிகச்சரியான உண்மை. இதைத்தான் நானும் கூறுகிறேன். கடவுள் நம்மை இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, வேறு எந்த மததினனாகவோ நம்மை படைக்கவில்லை. மனிதனாகவே படைத்தார்.
    //என் கடவுள்தான் உசத்தி, உருவ வழிபாடு பண்ணுபவர்களும், என் கடவுளை ஏற்காதவர்களும் சாத்தான்கள், பாவிகள், நாசமாகப் போவார்கள், நரகத்தில் உழல்வார்கள் என்று சொல்பவர்களின் மீது எனக்கு கோபமும், வருத்தமும் உண்டு. //
    ஒரே கடவுள் என்று வரும்போது என் கடவுள் உன் கடவுள் என்ற பேச்சே இல்லைதானே. வெறுப்பு கொண்டு தன சகோதரனை மூடன் என்று சொல்பவனையே பைபிள் எச்சரிக்கிறது. இன்னொரு மனிதனை சாத்தான் என்று சொல்வது பாவம். பாவம் செய்யாத பாவமில்லாத யாருமே பாவிகள் இல்லை.
    எந்த ஒரு மனிதனது தவறுக்கும் அவன் வணங்கும் தேவனையோ அவன் மார்க்கதையோ குறை சொல்ல்வது தவறு. அந்த மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கும் பட்சத்தில், அந்த தவறுக்கான முடிவை அவனே எடுக்கிறான், பிறகு கடவுளோ மதமோ எப்படி காரணமாகும்.

    //மற்றபடி உங்கள் பிற கேள்விகளுக்கு பின்னர் வருகிறேன். அலைச்சல்களின் நடுவே இணையத் தொடர்போ எழுத நேரமோ கிடைப்பதில்லை. மீண்டும் நேரம் கிட்டும் பொழுது க்ளாடிஸ், ரஜின் ஆகிய நண்பர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதுகிறேன். மன்னித்துக் கொள்ளவும் //
    You are a genuine gentle man. GOD bless you.
    Ashok

    (Edited.)

  71. //I have been to USA and most of the hotels will have Bible in the room along with Telephone Directory. So eventhough technically USA is not a christian country it could be construed as Christian Country. //
    How many hotels you have been sir? Might be 50 hotels??? I have been to much more hotels and I am living here. Keeping a Bible in Hotels is not a law in USA. It is just based on the hotel management’s interest. Just like the TV, DVDs, Magazines, they have kept Bible also.
    If a country is keeping the religious laws as the country law, then you can say that country is based on that religion. USA is getting doomed, moving away from GOD, it is legally accepting gay marriages and other things which is not at all biblically right. How can you say USA is a Christian country?

    Thanks,
    Ashok

  72. //நீங்கள் சொல்லி விட்டால் அமெரிக்கா கிறிஸ்தவ நாடல்ல என்றாகிவிடுமா? கூகுளில் நாடுகளை மதரீதியாக குறிப்பிடும் வரைபடத்தைத் தேடுங்கள். //
    ஓஹோ, கூகிள்தான் ஒரு நாடு ஜனநாயக நாடு என்று சொல்லும் அதிகாரம் பெற்றதா? அமெரிக்காவில் பள்ளிகளில்கூட கிறிஸ்துவ வழிபாடு கிடையாது. ஏனென்றால், அது உங்களை போன்றவர்களை புண்படுத்துகிறதாம். வாதம் செய்கிறதற்காக, நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதீர்கள்.
    when u people need u ll say usa is christian country wen not u ll say most of the churches r empty there even in christmas if vajpayee radvani celebrate christmas u shd also accept that in this same mood then u can say u r so patient and secular
    where u found christian terrorist dont use that word we r not allowed to kill any body as our bible teach even our enemies

  73. ///உங்கள் UK நண்பன் இந்துவாக மாறுகிற அந்த நேரத்தில் 100 இந்தியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்///

    அதைத் தானே உங்களைப் போன்றவர்கள் விரும்புகிறீர்கள். இந்த டார்கெட்டெட் மார்கெட்டிகைத் தானே நாங்கள் எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம்.

    ///ஹிந்துவாகவே சாவதில் பெருமைப்படுகிறேன். //
    இந்த பெருமைதான் சார், மனிதனின் அறிவுக்கண்ணை அவ்வப்போது மறைத்துவிடுகிறது.///

    சத்தியமாக இல்லை. இந்த பெருமை தான் கொஞ்சமேனும் எங்களைக் காத்துக்கொள்ளும் உந்துதலையே தருகிறது. இல்லையேல் உங்கள் ஆசை எப்போதோ இந்தியாவில் நிறைவேறியிருக்குமே.

  74. Oh,

    I did not know that I should travel to every Hotel of america before I make a statement that we have Bible in most of the hotels. If you have seen my points I only said It could be Construed as Christian country.. Please read it again. Please read Wikepedia if you can and understand how many churces say gay marriages are illegal and how many say they are not.. If you think you would call a country a christian country only if Bible is made the constitution then it is your problem. Since you are leaving there you know what a WASP mean and how they have dominated every walk of life in USA.

    Any how enjoy your stay there :

    //எவ்வளவு நாளைக்கு தான் லாஜிக் இல்லாத கிறிஸ்தவத்தை வச்சிகினு காலத்தை ஓட்டுறதுன்னு என்னோட UK நண்பன் மார்க் போவ்லேர் கேக்குறார். அவரே சொன்னாரு ஹிந்து மதம் லாஜிக்கும் அறிவியலும் கலந்து இருக்கிறதால நான் ஹிந்துவாக வாழபோறேன்னு. //

    — உங்கள் UK நண்பன் இந்துவாக மாறுகிற அந்த நேரத்தில் 100 இந்தியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். எத்தனை காலத்திற்குத்தான் வெள்ளைக்காரன் செய்வதே சரி என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள். அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாங்க சார்.–

    Now I understand you are living in USA to prove that you are not a slave to a White man and if possible you can enslave them.. Enjoy enslaving.

    Regards
    S Baskar

  75. அன்பர் அசோக்குமார் Gi !

    ///ஹிந்துவாகவே சாவதில் பெருமைப்படுகிறேன். //
    இந்த பெருமைதான் சார், மனிதனின் அறிவுக்கண்ணை அவ்வப்போது மறைத்துவிடுகிறது.///

    திராவிட மாயையின் பிறழ்ந்த மனப்பான்மையின் ஒரு அங்கம் நீங்கள் என்பதை மேலே கூறிய வார்த்தைகளின் முலம் நிருபித்து விட்டிர்கள்.

    அப்படி என்றால் கிறிஸ்டியனவோ, முஸ்லிமாகவோ சாவேன் என்பது மட்டும் மனிதனின் அறிவு கண்ணை தெறந்துடுமா?!

    ஒரு புத்தகத்தில் இறைவனை அடக்க நினைக்கும் உங்களை…..?! நீங்க பெரிய அறிவாளி தான் போங்க!!!

    இந்த 14 கோடி பால்வெளிகளையும் (Galaxies ), 14 பிரபஞ்ச கூறுகளையும் படைத்தது மேலும் மேலும் அதனை பரிணாம வளர்ச்சி காண வைத்து கொண்டு இருக்கும் என் ஏகனும், அநேகனும் ஆன சிவன், அந்த ஓரிரு புத்தகத்தில் அடங்க மாட்டான் என்று நாங்கள் தெளிவு அடைந்து இருப்பதாலேயே ஹிந்துவாக சாவதில் பெருமை படுகிறோம் என்று சொல்கிறோம் நண்பர்களே!

    (மேலும் நம்முடைய சூரிய குடும்பத்தின் அறிவியலை ஆராய்ந்து இன்னும் தற்கால அறிவியலால் கண்டு பிடித்து சொல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வராக உபநிஷதம் படியுங்கள் ஒரு முறை, உங்கள் அறிவு கண்ணை நல்லா தெறந்து வைத்துகொண்டு)

    நான் ஹிந்துவாகவே பிறந்தேன் ஹிந்துவாகவே சாவேன் என்பது என் சுயமரியாதை, அதையே கேலியாக நினைக்கும் உங்களை எந்த ஏசுவும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  76. Mr Ashok Kumar Ganesan, recently I went around USA, from La to Dallas to New york, Washington, Boston, and ended in Las Vegas. In every hotel where I stayed there was a Bible in the room. Australia is supposed to be a secular country but the parliment session starts with ” Lords prayer:. If you say Australia is not a Christian country,( Google says it is a Christian country, I believe) I am sorry to say that you are ignorant of the fact. The local councill meeting here where I had to attend started with ” Oh Lord in heaven, etc” I could not believe it or stomach it. As matter of courtesy, I also stood up during the prayer. The councill was forcing Christianity to all and sundry, whether one was a Christian or not..
    Pray tell me, what the Missionaries are doing in India? You say you are against conversion. Good to hear that. Have you written to your Bishop about it? Have you stood up in your church and proclaimed loudly against conversion? When you convert someone to Christianity,you need to assert your ( assumed, I must say) superiority of your religion against the other religion. What sort right is this assuming superiority about your beliefs? WHERE IS THE NEED TO CONVERT ANYONE TO ANY OTHER RELIGION in the first place? If you believe in Christianity,good luck to you.In the same way, respect other people’s beliefs and let them practice their religion without interference.
    No point in saying that you do not believe in conversion. Your action against conversion should speak louder than empty words.

  77. Ashok
    ///எத்தனை காலத்திற்குத்தான் வெள்ளைக்காரன் செய்வதே சரி என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள். அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாங்க சார்.///

    வெள்ளைக்காரன் துப்பிவிட்டுப் போன மத அடையாளங்களை அப்படியே ஏற்று நிரந்தர அடிமைகளானவர்கள் மத்தியில் சொந்த மன்னின் தொன்மைவாய்ந்த அற்புத மார்கத்தில் வாழும் இந்துக்கள் ஒரு நாளும் ஆத்மார்த்தமாக வெள்ளையனின் அடிமைகள் கிடையாது.

    அமெரிக்க அதிபர் கூட சொல்லாத ஒரு விஷயத்தை அதாவது அமெரிக்கா கிறிஸ்தவ நாடு இல்லை என்று நீங்களே தீர்ப்பு கூறி கிறிஸ்தவம் தோற்றது என்பதை மறைத்து வாதிடும் அளவிற்கு உங்களை ப்ரெயின் வாஷ் செய்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் பரிதாபத்திற்குறியவர். அமெரிக்க அதிபரே கூட செய்ய நினைத்திராத எஸ்கேபிஸம். அமெரிக்கா கிறிஸ்தவ நாடில்லை என்று சத்தம் போட்டு சொல்லிவிடாதீர்கள். பயந்து போய் போப் தற்கொலை செய்து கொள்ளப்போகிறார். அமெரிக்கா என்ற பலம் வாய்ந்த ரவுடியை வைத்து தான் அவர்கள் பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதில் மன்னைப் போட்டு விடாதீர்கள். சரியா!

  78. அய்யா ஸ்ரீ கிளாடி,

    //இந்தியாவை ” ஜிகாத் ” பாதிப்பதாக எப்படி கூறுகிறீர்களோ//

    What is your vision on Jihad in India?
    Is it not affecting India?
    What that Nonsense ‘கூறுகிறீர்களோ’?
    It is open secret that jihad affecting each and every corner of india and also the extra in india is ‘christian aggression’,which is not there in any other part of world!

  79. ///அமெரிக்க ஒரு கிறிஸ்துவ நாடு கிடையாது. இந்தியாவை போல் ஒரு ஜனநாயக நாடு. பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் பாஸ்கர்.///

    ச‌ரியாக‌ச் சொன்னீர்க‌ள். கிறிஸ்துவ‌ நாடு என்றால் அது ஜ‌ன‌நாய‌க‌ நாடு அல்ல‌ என்ப‌தை.

    ஆனால், த‌வ‌றுத‌லாக‌ இப்ப‌டிச்சொல்லிவிட்டேன், அமெரிக்கா ஒரு “செக்குல‌ர்” ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ நாடு என்று சொல்வீர்க‌ளானால், கூகுளுக்கு இது ப‌ற்றி “பொது அறிவு” அல்ல‌து அதிகார‌ம் இல்லை என்பீர்க‌ளானால், அசோக்குமார் க‌ணேச‌ன், இதைப்பாருங்க‌ள். நான் கூகிளைக்காட்டவில்லை. அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ தளத்தைக் காட்டுகிறேன். அமெரிக்க‌ நாட்டின் முத்திரை அல்ல‌து இல‌ச்சை இறைந‌ம்பிக்கை கொண்ட‌ நாடென‌ நிலைநிறுத்துகிற‌து. Eye of the Providence என்ப‌து கிறித்துவ‌ம் சார்ந்த‌தே.

    https://www.state.gov/documents/organization/27807.pdf

    In his design of the seal’s reverse, Thomson retained the pyramid with
    the Eye of Providence in a triangle at the zenith and, as products of his
    Latin scholarship, introduced the mottos Annuit Coeptis (He [God] has
    favored our undertakings) over the eye and Novus Ordo Seclorum (A new
    order of the ages) beneath the pyramid.

    இதையும் பாருங்க‌ள்: அமெரிக்கக் காசுக‌ளிலும் க‌ர‌ன்சி நோட்டுக‌ளிலும், In god we Trust என்றிருப்ப‌தையும் அத‌ன் கார‌ண‌ம் கிறித்துவ‌மே என்ப‌தும் தெளிவு.

    https://www.ustreas.gov/education/fact-sheets/currency/in-god-we-trust.shtml

    History of ‘In God We Trust’
    The motto IN GOD WE TRUST was placed on United States coins largely because of the increased religious sentiment existing during the Civil War. Secretary of the Treasury Salmon P. Chase received many appeals from devout persons throughout the country, urging that the United States recognize the Deity on United States coins. From Treasury Department records, it appears that the first such appeal came in a letter dated November 13, 1861. It was written to Secretary Chase by Rev. M. R. Watkinson, Minister of the Gospel from Ridleyville, Pennsylvania, and read:

    Dear Sir: You are about to submit your annual report to the Congress respecting the affairs of the national finances.
    One fact touching our currency has hitherto been seriously overlooked. I mean the recognition of the Almighty God in some form on our coins.

    You are probably a Christian. What if our Republic were not shattered beyond reconstruction? Would not the antiquaries of succeeding centuries rightly reason from our past that we were a heathen nation? What I propose is that instead of the goddess of liberty we shall have next inside the 13 stars a ring inscribed with the words PERPETUAL UNION; within the ring the allseeing eye, crowned with a halo; beneath this eye the American flag, bearing in its field stars equal to the number of the States united; in the folds of the bars the words GOD, LIBERTY, LAW.

    This would make a beautiful coin, to which no possible citizen could object. This would relieve us from the ignominy of heathenism. This would place us openly under the Divine protection we have personally claimed. From my hearth I have felt our national shame in disowning God as not the least of our present national disasters.

    To you first I address a subject that must be agitated.

    As a result, Secretary Chase instructed James Pollock, Director of the Mint at Philadelphia, to prepare a motto, in a letter dated November 20, 1861:
    Dear Sir: No nation can be strong except in the strength of God, or safe except in His defense. The trust of our people in God should be declared on our national coins.
    You will cause a device to be prepared without unnecessary delay with a motto expressing in the fewest and tersest words possible this national recognition.

    அமெரிக்கா இந்தியாவைப்போன்ற‌ ம‌த‌சார்ப‌ற்ற‌ நாட‌ல்ல‌. ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி. ம‌த‌ச்சார்பின்மை போர்த்திய‌ கிறித்துவ‌ நாடு. இங்கே பாருங்க‌ள்:

    https://en.wikipedia.org/wiki/USA#Religion

    இந்தியாவைப் போல‌லாது 16 ச‌த் ம‌க்க‌ள் தாம் எந்த‌ ம‌த‌த்தையும் சார‌வில்லை என்றோ, நாத்திக‌ர் என்றோ கூறுகிறார்க‌ள், என்றாலும் அர‌சு இறைந‌ம்பிக்கையைப் ப‌றை சாற்றுகிற‌து. இந்தியாவிலோ கிட்ட‌த்தட்ட‌ நூறு ச‌த‌மும் இறைந‌ம்பிக்கை கொண்ட‌வ‌ர்க‌ள், ஆனால் அர‌சோ இறைந‌ம்பிக்கை கொண்ட‌து என்று சொல்வ‌து கிரிமின‌ல் குற்றம் என‌, இங்குள்ள‌ சிறுப‌ன்மையின‌ரால் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகிற‌து. இத‌ன் கார‌ண‌ம் அர‌சு இறை‌ந‌ம்பிக்கையை அறிவித்தால், இந்துக்க‌ள் 80 ச‌த‌மாக‌ இருப்ப‌தால், நாடும் இந்து நாடாக‌ ஆகிவிடுமோ, அப்ப‌டி ஆகிவிட்டால், மேலும் மேலும் ம‌த‌மாற்ற‌ம் செய்ய‌ முடியாதே என்ப‌துவே.

    தமிழ்ஹிந்து தளத்தினர் எனது cut copy paste ஐப் பொறுத்தருள்க. உண்மையை நிலை செய்ய அவசியம் எனப்பட்டது.

  80. //////சங்கரர் வாழ்ந்த காலத்தில் இரு மார்கத்தவர் விவாதித்தால் அதில் யார் பக்கம் மறுக்க முடியாத உண்மை தென்படுகிறதோ அவர்கள் மார்கத்தை வாதிட்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். //
    இந்த காலத்தில் எங்கள் வாதங்களை நீங்கள் காதிலேயே வாங்கிககொள்வதில்லையே.
    ////

    இந்தியாவில் ஆதிச‌ங்க‌ர‌ர் வாழ்ந்த‌ 2500 ஆண்டுக்கு முன்ன‌ர் ம‌ட்டும‌ல்ல. 340 ஆண்டுக்கு முன்னர் ஸ்ரீ ராக‌வேந்திர‌ ஸ்வாமி கால‌த்தில் கூட‌ வாத‌ப் பிர‌திவாத‌ங்க‌ளால் தத்துவ‌ஞான‌ம் ஒருவ‌ரிட‌மிருந்து ம‌ற்ற‌வ‌ருக்குப் பெற‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அந்த‌ ஞானிய‌ர் எல்லாரும் தாம் வென்ற‌தாக‌ நினைத்த‌வ‌ர் இல்ல‌ர். அவ‌ர்க‌ள் அனைவ‌ருமே “நான்” என்ற‌ அக‌ந்தை இல்லாத‌ ம‌ஹான்க‌ளே. மிக அண்மையில்கூட‌ 1893 செப்டம்பர் 11 ஆம் தேதி சிகாகோவில் நிகழ்த்திய‌ பேருரையும் அத‌ன் வெளிப்பாடும் இத்த‌க் வாத‌த்தின் தொட‌ர் நிக‌ழ்வே.

    உங்க‌ள் வாத‌த்தில் உள்ள‌ “எம் இறைவ‌ன்தான் இறைவ‌ன், ம‌ற்றெல்லாம் சாத்தான்” என்ற‌ அடிநாத‌மே உங்க‌ள் வாத‌ங்க‌ளை ஏனையோர் க‌வ‌னிக்க‌க் கூட‌ இய‌லாத‌ நிலையை உருவாக்குகிற‌து. உங்க‌ள் ப‌ல்வேறு உட்பிரிவுக‌ளைச் (ஹிந்தும‌த‌ம் என்றால் இதைச் சாதி பிரிவினை என்பீர்க‌ள்) சேர்ந்த‌ குருமார்க‌ள் ஒன்றுகூடி இந்த‌ப் பேருண்மையை, பிற‌ம‌த‌த்தை ம‌திக்கும் பேராண்மையை ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவிக்க‌ச் செய்ய‌ நீங்க‌ள் தயாரா? அப்ப‌டிச் செய்துவிட்டு வாருங்க‌ள். நாம் வாத‌ம் செய்வோம், எங்கு வேண்டுமான‌லும், என்று வேண்டுமான‌லும்.

    மாற்றுக் கருத்தை மதித்துக்கேட்காத மரபு பாரதத்தில் நுழைந்ததே இஸ்லாமியரும் கிறித்தவரும் இங்கே வந்து கால் பதித்த பின்புதான்.

  81. ///மிகச்சரியான உண்மை. இதைத்தான் நானும் கூறுகிறேன். கடவுள் நம்மை இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, வேறு எந்த மததினனாகவோ நம்மை படைக்கவில்லை. மனிதனாகவே படைத்தார்.
    ///

    அசோக்குமார் கணேசன் என்ன அருமையாக இடைச்செருகல் செய்கிறீர்கள்! அதாவது நீங்கள் ஹிந்துவாகப் பிறக்கவில்லை. நீங்கள் கிறித்துவத்தை நீங்களாகவே தேர்ந்தெடுத்தீர்கள். உங்களை யாரும் மத மாற்றம் செய்யவில்லை. அது சரி. அப்படியானால், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்னானம் செய்விக்காமல் வளர்த்து அது 18 வயதான பின்பு தானாகவே ஏதொ ஒரு மதத்தைச் சார வழி செய்வீர்கள். அப்படித்தான் ஒவ்வொரு கிறித்துவரும் செய்கிறான். இனிமேலும் செய்வான். நம்பமுடியவில்லை.

    இந்துப் பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்துவே. இந்துவாய் பிறக்க அதுவும் பாரதத்தில் பிறக்க முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கிறிஸ்து ஏசு சொன்னது போல கிறிஸ்துவனுக்குப் பாவத்தின் சம்பளம் மரணம். அவனும் கூடப் புண்ணியம் செய்தால் அதன் பலனாக பாரதத்தில் மறு பிறவியில் இந்துவாய்ப் பிறப்பான்.

  82. இந்து மதம் உண்மையின் அடிப்படையில், உண்மையை அறிய முயற்சி செய்ய உதவும் வகையில், அதனைப் பின்பற்றுவோர் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று சுத‌ந்திர‌மான‌ நிலையை, அடிமைத் தலையிருந்து விடுபட்டு முழு விடுதலை பெற்ற நிலையை அடைய உத‌வுகிற‌து.

    அடிப்ப‌டையில் இந்து ம‌த‌ம் ஒரு ப‌குத்த‌றிவு ம‌த‌ம். உண்மைதான் இந்து ம‌த‌த்தின் உன்ன‌த‌ நிலையில் வைக்க‌ப் ப‌ட்டு உள்ளது. உண்மையை அறிய யூக்தி (logic), விவாத‌ம் (debate), ஆராய்ச்சி(Research like meditataion, self questioning) எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ அனுப‌வ‌ம் (Realisation- Realising the truth actually) இவை க‌ருவிக‌ளாக‌ உபயொக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டு உண்மை அறிய‌ப் படுகிற‌து.

    இந்து ம‌த‌ம் த‌ன் ஆராய்ச்சியின் அடிப்ப‌டையில் க‌ட‌வுள் ஏன்று ஒருவ‌ர் இருப்ப‌தை உறுதி செய்கிற‌து.

    என‌வே க‌ட‌வுள் ந‌ம்பிக்கையை இத‌ய‌த்திலும், ப‌குத்தறிவு ஆராய்ச்சியை மூளையிலும் வைத்து இந்து செய‌ல் ப‌டுகிறான்.

    இந்து ம‌த‌ம் முழுக்க‌ முழுக்க‌ யுக்தி, ப‌குத்த‌றிவு அறிவிய‌ல் அனுப‌வ‌ம் ஆகிய‌வ‌ற்றின் அடிப்ப‌டியில் க‌ட்ட‌மைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

    உதார‌ண‌மாக‌ ”ஒரு குழ‌ந்தை பிற‌க்கும் போதே ஏன் கடவுள் குருடாகப் படைக்கிறார்?” என்றால், அத‌ற்க்கு இந்துவின் ப‌தில், “அந்த‌ உயிர் முந்தைய‌‌ பிற‌வியில் ஒருவ‌ரின் க‌ண்க‌ளையொ, சில‌ரின் க‌ண்க‌ளையோ குருட‌க்கி இருக்கும், எனவே தான் செய்த‌ முன்வினையின் ப‌ய‌னை அனுப‌விக்கிற‌து” என‌க் கூறுவ‌ர்.

    ஆனால் ஆபிர‌காமிய‌ ம‌த‌த்த‌வ‌ர் ச‌ரியான ப‌தில் த‌ர‌ முடியாது. ‘”அவ‌ரின் த‌ந்தை தாயார் செய்த பாவ‌ம் அந்த‌க் குழ‌ந்தையின் த‌லையில்” என்று கூறுவார்க‌ள்.
    த‌ந்தை என்ப‌து வேறு உயிர். அந்த‌ உயிர் செய்த த‌வறுக்கு இன்னோரு உயிர் எப்ப‌டிப் பொருப்பாகும், என்று கேட்டால், ”இப்ப குருடாக இருந்தால் சொர்க்கத்திலே சுகமாக இருக்கலாம்” என்று இன்சென்டிவ் பேக்கேஜ் குடுப்பார்கள்.

    ‘”பலர் இங்கேயும் கண் பார்வையுடன் வாழ்ந்து சொர்க்கத்துக்கும் போகிறார்களே” என்று கூறினால், “கடவுளின் விருப்பம் அப்படி” என்பார்கள்.

    அப்ப கடவுள் எந்தக் காரணமும் இல்லாமல், ஒருவரின் கண்ணில் வெண்ணையும், இன்னொரு குழ்ந்தையின் கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்பவரா- என்றால் அதான் சொர்க்கம் தருகிறோமே என்று திரும்பவும் பேக்கேஜ் ஆபெர் குடுப்பார்கள்.

    நம்முடைய மதம் அறிவியல் பூர்வமானது. முதலில் நீர்வாழ்வன, பிறகு நீர்நிலவாழ்வன, பிறகு பாலூட்டி , பிறகு மிருகமும் மனிதனும் கலந்தது , பிறகு மனிதன் – இப்படியாக மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம் என்று டார்வினுக்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே பரிணாம அறிவியலின் படியே நமது கடவுள் அவதாரங்களும் இருந்தன.

    ஆனால் அபிரகாமியருக்கோ, பகுத்தறிவு, அறிவியல் என்றால் மூச்சுத் திணறல் வந்து விடும். கடல் நீர் இரண்டாகப் பிளந்து, நீர் இரு பக்கமும் சுவர் போல நிற்க நடுவிலே நடந்து போனதாக கதை விட வேண்டும். அதற்க்கு அறிவியல் ஒத்து வராது.

    நாமோ அழகாக பாலம் அமைத்து சென்ன்றவர்கள். பாலத்தை உடைக்க முயன்ற இயந்திரம் கூட உடையும் அளவுக்கு வலுவான் பாலம்.

    எனவே அவர்களின் தத்துவமும் ஓட்டை, செயல்பாடும் காட்டு மிராண்டித் தனம். எனவே அவர்களின் கையில் இருக்கும் ஒரே வாய்ப்பு, நம்பிக்கை. நீ நம்பு என்று கூறி ஜல்லியடிப்பது மட்டுமே அவர்களால் செய்யக் கூடும்.

    ஆனால் நாம் வெளிப் படையாக யுக்தி, கேள்வி, பகுத்தறிவு, நிதர்சனம் ஆகியவற்றை எடுத்து வைக்க வேண்டும். கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சியில் ஈடுபடுவோம் என்று கூறினால் ஆபிரகாமையருக்கு ஜன்னி கண்டு விடும்.

    கடவுள் இல்லை என்ற கருத்தை – கடவுள் ஆராய்ச்சியின் முதல் படியாக – முன் வைக்கவும், கடவுள் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பு அளிக்கும் ஒரே மதம் இந்து மதம். இந்த இரண்டும் நம் கையில் உள்ள சிறப்பான அறிவாயுதங்கள்.

    Note : I mentioned: கடவுள் இல்லை என்ற கருத்தை – கடவுள் ஆராய்ச்சியின் முதல் படியாக- முன் வைக்கவும். Dont make wrong interpretation.

    எனவே நாம் பகுத்தறிவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, வெறுமனே நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன் என்றால்

    அது ஆபிரகாமியருக்கு நல்ல வாய்ப்பாகும், நானும் நம்புகிறேன் என்பார், ஒரே கடவுள் , நேற்றுதான் பார்த்தேன், நானே சாட்சி என்பார், ஆதாம் ஏவாள் பாவம் உன் தலையில் என்பார்கள், எல்லாக் காட்டு மிராண்டித் தனத்தையும் உன் தலையிலே கட்டி,

    நீங்கள் ஒத்துக் கொள்ள மறுத்தால், வாளை எடு, யார் உயிரோடு இருக்கிறானோ அவன் நம்பிக்கை தான் உண்மையானது என்று தீர்மானிக்கலாம் என்ற அவர்களின் நிலைக்கு உங்களையும் கொண்டு வருவார்கள். அதாவது நாமும் ஆபிரகாமையாராக்கப் படுவோம்!

    நாம் வெளிப் படையாக யுக்தி, கேள்வி, பகுத்தறிவு, நிதர்சனம் ஆகியவற்றை எடுத்து வைக்க வேண்டும். க‌ட‌வுள் ந‌ம்பிக்கையை இத‌ய‌த்திலும், ப‌குத்தறிவு ஆராய்ச்சியை மூளையிலும் வைத்து செய‌ல் படுவோம்!

  83. “நீரடித்து நீர் விலகா”தென்பார்;
    “இந்திய எனது தாய்நாடு இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்” எனும் உயர் தத்துவத்தில் வளர்க்கப்பட்ட நான் மதமெனும் மாயாவில் சிக்கி மதியிழந்து போவேனோ?

    எனது தனி மனித சுதந்தரத்தைக் கேள்விக் குறியாக்கும் மார்க்கபேதங்களை எண்ணி மனம் பேதலித்துப் போவேனோ?

    இந்திய இறையாண்மையில் எனது சுதந்தர சுயாதீனத்தினைக் கேள்விக் குறியாக்கும் வாதங்கள் இங்கே எழும்பி என்னை அச்சுறுத்துமோ?

  84. ///இந்தியாவை ” ஜிகாத் ” பாதிப்பதாக எப்படி கூறுகிறீர்களோ அப்படியே அமெரிக்காவை அது பாதித்தது; அவர்களிடம் மிருக பலமும் அதிகாரமும் இருப்பதால் தாக்கினார்கள்; தீவிரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த போரில் இந்தியா கூட்டுப்படைகளுடன் கலந்துகொள்ளவில்லை; தற்போதும் ஈரான் (எரிவாயு குழாய் போன்ற‌)
    நாட்டுடனான வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா (அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக ) தடுமாறிக் கொண்டிருக்கிறது;///

    கிளாடி அவ‌ர்க‌ளே, அமெரிக்கா என்ற‌ ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி, ம‌த‌ச்சார்பின்மை போர்த்திய‌ கிறித்துவ‌ நாட்டிட‌ம் இருப்ப‌து மிருக‌ப‌ல‌ம் என்று ஒப்புக்கொண்ட‌த‌ற்கு ந‌ன்றி. இந்த‌ மிருக‌ப‌ல‌த்தை, அதிகார‌ம், வ‌ணிக‌ம், ப‌ண‌ம், படை, சூழ்ச்சி, போர் ஆகிய‌வ‌ற்றால் வ‌ந்த‌ மிருக‌ப‌ல‌த்தை வைத்துக்கொண்டுதான்
    கிறித்துவம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் கரங்களைப் பரப்பிவந்திருக்கிறது. மூன்றுக்கும் மேற்பட்ட சிலுவைப்போர்களைச்செய்துதான் ஐரோப்பாவையும் மேற்கு ஆசியாவையும் கிறித்துவம் கைப்பற்றியது. இப்போதும் இதே மிருகபலத்தால் 21 ஆம் நூற்றாண்டில் ஆசியாவையும் கைப்பற்றுவோம் என்று போப்பே அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் முதல் கட்டத்தில் நீங்கள், அசோக்குமார் கணேசன் போன்றவர்கள் ஏற்கனவே “வெல்லப் பட்டு” விட்டீர்கள். ஒருவேளை உங்களைப் போன்றோர் early birs என்று பெருமிதம் கொள்ளலாம்.

    ஆனால் பாரதமோ, தனது ஆன்மபலம் காரணமாக, தொன்றுதொட்டு இந்த நாட்டில் தழைத்தோங்கும், பகுத்தறிவின் பாற்பட்ட, சகிப்புத்தன்மையை உள்ளடக்கிய, எல்லா உயிர்க்கும் இறைத்தன்மை உண்டென்ற உயரியகோட்பாட்டில் ஊறிய பண்பாட்டின் காரணமாக வந்த ஆன்மபலம் காரணமாக இத்தகு போர்களில் இடுபடாமல், தடுமாறாமல், தடம் மாறாமல் அமைதிப்பாதையில் பயணிக்கிறது.

    ரோமன் கத்தோலிக்கச்சாதியினரின் குருவான போப்பும், இன்னபிற கிறித்துவச் சாதிகளின் தலைமைக்குருமார்களும் தத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட‌ கிறித்துவ நாடுகளையும், ஷியா, சுன்னி, ஃபக்டூன், பத்தாண், தாலிபான், ஸுஃபி உள்ளிட்ட‌ பல்வேறு இஸ்லாமியச் சாதிகளின் தலைமை மதகுருமார்கள் தத்தம் கட்டுப்பட்டிலிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய‌ நாடுகளையும் இந்தியாவைப்போல மதச்சார்பற்ற நாடு என்று முதலில் அறிவிக்கச் செய்யட்டும். இதற்கான இயக்கத்தில் உங்களைப்போன்றவர்கள் சேரத்தயாரா? உங்கள் மதகுருமார்களிடம் இது குறித்து எடுத்துச் சொல்ல, வலியுறுத்த நீங்கள் தயாரா?

    வாத்திக‌ன், சௌதி அராபியா உள்ளிட்ட‌ ம‌த‌ அடிப்ப‌டை வாத‌ அர‌சுக‌ள் த‌த்த‌ம் நாடுக‌ளில் பிற‌ம‌த‌த்த‌வ‌ர் கோவில் அமைத்து சுத‌ந்திர‌மாக‌ வ‌ழிபாடு செய்ய‌ வ‌ச‌தி செய்து த‌ர‌வேண்டும் என‌க் கோருகிறேன், என்னுட‌ன் சேர்ந்து கோரிக்கை வைப்பீர்க‌ளா? அவ‌ர்க‌ள்தான் அவ்வாறு செய்வார்க‌ளா?

  85. //இந்திய இறையாண்மையில் எனது சுதந்தர சுயாதீனத்தினைக் கேள்விக் குறியாக்கும் வாதங்கள் இங்கே எழும்பி என்னை அச்சுறுத்துமோ?//
    No one questions your right to practice your religion. It is your ‘holier than thou’ attitude which makes you think that you are trying to rescue us from our ‘inferior’ gods is being criticized here.
    But showing that they are more faithful than the original followers themselves is what sustains the ‘harvested’ to get over their disappointment/disillusionment which sets in after some time. After knowing that only their names changed not status.
    If you want to convert with the wisdom of your god why not convert murderers, rapists, child abusers, terrorists, politicians, selfish and others into good citizens/people and don’t say that if they convert to christianity they automatically become good!

  86. /////glady
    18 October 2009 at 8:01 am
    “நீரடித்து நீர் விலகா”தென்பார்;
    “இந்திய எனது தாய்நாடு இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தவர்” எனும் உயர் தத்துவத்தில் வளர்க்கப்பட்ட நான் மதமெனும் மாயாவில் சிக்கி மதியிழந்து போவேனோ?

    எனது தனி மனித சுதந்தரத்தைக் கேள்விக் குறியாக்கும் மார்க்கபேதங்களை எண்ணி மனம் பேதலித்துப் போவேனோ?

    இந்திய இறையாண்மையில் எனது சுதந்தர சுயாதீனத்தினைக் கேள்விக் குறியாக்கும் வாதங்கள் இங்கே எழும்பி என்னை அச்சுறுத்துமோ?/////

    என்னதான் சொல்லவறீங்க?

  87. வணக்கம்,

    அதாவது நண்பர் கிலாடி சொல்வது என்னவெனில், இந்தியர் அனைவரும் உடன் பிறந்தவர் என்று எண்ணியே வளர்ந்த இவர் (இந்து) மதம் என்னும் மாயையில் சிக்கி மதியிழந்து போகமாட்டாராம்.

    இவரது தனிமனித சுதந்திரமான கிறிஸ்துவ பிரச்சாரத்தை தடுத்து கேள்விக்குறியாகும் இந்து மார்க்க பேதம் கண்டு மனம் பேதலித்து போக மாட்டாராம்.

    நண்பர் கிலாடி அவர்களே, இந்தியர்கள் அனைவரும் உடன் பிறப்புகள் என்ற எண்ணம் நன்றாக உள்ளது, நீங்கள் கிறிஸ்துவர் என்பதால் இந்தியர்கள் அனைவரும் உங்கள் உடன் பிறப்புகள் அதனால் அனைவரும் கிறிஸ்துவர் என்று கற்ப்பனை செய்து கொள்வது தவறு. தவிர கிறிஸ்துவத்தை பற்றி பேசி பேசி நீங்கள் எழுதிய பதிவுகள் இங்கே ஏராளம், பிறகெப்படி மதமென்னும் மாயாவில் சிக்கி நீங்கள் மதி இழந்து போவேனோ? என்று கேட்பது,உங்கள் கருத்துப்படி கிறிஸ்துவம் மதமல்ல, அப்படியெனில்,

    மதம் என்று நீங்கள் சொல்வது இந்து தர்மத்தை, அதன் மாயாவில் சிக்காதீர்கள் என்று நீங்கள் மறைமுகமாக சொல்வது தெரிகிறது, அதாவது உங்களுக்கு நீங்களே சொல்வது போல் ஒரு கவிதை!? தெரியும் நண்பரே இதுவும் ஒரு மன சிகிட்சை என்பது.
    இது மட்டுமல்ல உளவியல் ரீதியாக நீங்கள் இங்கே பலரை குழப்புவதை நான் நன்றாகவே அறிவேன். இவைகளை அல்லேலுயா மேடைகளில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கிறிஸ்துவத்தை பரப்பும் கொள்கை உமது தனி மனித சுதந்திரம் என்பதும் அறிந்ததுதான், இதில் உங்களை யார் அச்சுறுத்தினர், இன்னமும் நீங்கள் சொல்வது உங்கள் கொஞ்சமும் ஆன்மீகமற்ற வியாபார, நிறுவன கிறிஸ்துவத்தை நாங்கள் எல்லோரும் ஏற்று தலையை மேலும் கீழும் ஆமென் என்று ஆட்டிக் கொண்டால் இங்கே யாருக்கும் மார்க்க பேதம் இருக்காது. இல்லையா?

    உமக்கு வேண்டுமானால் உமது அறிவுக்கெட்டிய ஒரு தேவனை தூக்கி தலையில் வைத்துக் கொள்ளுங்கள், முயலுக்கு மூன்று கால் என்று இங்கு வந்து இப்படி முராரி பாடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள்.

    இங்கே கேள்விக்குறி ஆனது நீங்கள்தான், நண்பரே நீங்கள் ரொம்பவும் பாதிக்கப் பட்டுள்ளீர்கள், முதலில் மானுடப் பிறப்பின் நோக்கம் என்ன என்பதை முழுதாக அறிந்து கொண்டு, அதற்கான ஒரு நல்ல வழி எது என அறிந்து கொள்ளுங்கள்.

  88. //அப்படியானால், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்னானம் செய்விக்காமல் வளர்த்து அது 18 வயதான பின்பு தானாகவே ஏதொ ஒரு மதத்தைச் சார வழி செய்வீர்கள். அப்படித்தான் ஒவ்வொரு கிறித்துவரும் செய்கிறான். இனிமேலும் செய்வான். நம்பமுடியவில்லை.//
    உண்மையில் ஒருவன் சுயமாக முடிவு எடுக்கும் வயதில் தான் ஞானஸ்நானம் தரவேண்டும். நீங்கள், ஏதாவது ஒரு பெந்தேகோஸ்தே சபையில் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் தருகிறார்கள் என்று நிருபியும் பார்க்கலாம்.
    சில பாரம்பர்ய சபைகளில் தான் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் தருகிறார்கள்.
    ஆராய்ச்சி செய்யாமல் நம்ப முடியவில்லை என்று சொல்வது சோம்பலின் அறிகுறி.
    அன்புடன்,
    Ashok

  89. இங்கெ சூழ்ச்சியாளர்கள் உண்மையில் பரப்புவது பிற மதங்களின் மீது வெறுப்புக் கருத்துக்களை.

    பிற கடவுள்கள் எல்லாம் பொய்யான கடவுள்கள், அவைகளை, பிற மதங்களை வெறுக்க வேண்டும் என்று மூளையைத் தாக்கி வெறி பிடிக்க வைக்கும் ரேபிஸ் வைரஸ்களை விட மோசமான கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள்.

    இந்த நோயை சரியான பிரச்சாரம் மூலம் முறியடிக்க வேண்டும்.

  90. //கேக்கறவன் கேனைன இருந்த சவுதி-ல அரிசியும் கோதுமையும் டன் டன்னா விளையுதுன்னு கூட சொல்விங்க போல//
    PRADEEP perumal ……how can think only for you………..

  91. I really appreciate the cinema director for took the film honestly, because in tamilnadu not a single director give importane to the social event. They only give importance to the love and sex.

  92. உலக பயங்கரவாதத்திற்கு எப்படி உலகின் எண்ணைய் வளங்களை ஆக்ரமிக்க போர் தொடுத்த,ஈராக் மற்றும் குவைத்தை அழிக்க பின்லேடனை வளர்த்த ஜார்ஜ் H W புஷ்-ம் அதன் பிறகு அந்த பின்லேடனே அவர்களுக்கு எதிரியாய் அமைய வழி வகுத்த ஜார்ஜ் W புஷ்-ம் காரணமோ அதே போல் இந்திய தீவிரவாதத்திற்கு என்ன தான் அரசியல் வாதிகளின் மேம்போக்குத் தன்மையாலும்,மெத்தனத்தாலும் வழி வகுத்த 1947 (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை)காரணமாக இருந்தாலும்,அதை மறுபடியும் தோண்டி எடுத்து அது மேலும் வளர காரணமாக இருந்தது 1992 திசம்பர் 6 தான்.
    எப்படி உலக பயங்கரவாதத்திற்கு ஜார்ஜ் H W புஷ் மற்றும் ஜார்ஜ் W புஷ் காரணமோ அவ்விதமே இந்திய தீவிரவாத்திற்கு காரணம் அத்வானி,ஜோஷி மற்றும் மோடி போன்றவர்களே என்பதை மறுக்க,மறைக்க முடியாது.
    நாங்கள் இப்போது உள்ள பயங்கரவாதத்திற்கும்,தீவிரவாத்திற்கும் ஆதரவானவர்கள் அல்ல,அதே சமயம் அதற்கு காரண,காரியமானவர்களையும் இன்றைக்கு அந்த பயங்கரவாதத்திற்கும்,தீவிரவாத்திற்கும் தீர்வானவர்களை கண்டறிவதும் அவசியமானதே…..வரலாறு மிகவும் முக்கியம் அன்பர்களே தெரிந்து கொள்வதற்கும் சரி,தீர்விற்கும் சரி

  93. “வரலாறு மிகவும் முக்கியம் அன்பர்களே தெரிந்து கொள்வதற்கும் சரி,தீர்விற்கும் சரி”

    We are also saying the same thing Subavee Thasan. History should not be biased and is very important. Can you point out any other mosque or church (in use) destroyed by any Hindu? Babri masjid was not a place of worship. It was an abandoned place.

    Ok..forget those things…lets assume thats the reason for all the trouble now and whatever you say is correct.

    In Chennai – Pallavaram Hill – there is a mosque today, which actually is (was) a Shiva temple. In fact, its more important than a shiva temple. Its more important for Indian history than Hindu worship. Its one of the 7 ‘kudavarai’ (cave temple) constructed by the great Pallava King Mahendra varman in 7AD. One of the first rock construction of Tamil Nadu (South India). A historical mile stone for India. There are (were) ‘kalvettu’s (inscriptions) in the cave temple proving these facts. But the muslims captured it, converted it into mosque and even have covered all those historical facts with tiles and there is no trace of history. Even ASI, knowing all this is not able to act, because of politicians ‘pseudo securlarism’.

    Everyone knows that Santhom Church is the actual Kapali Koil. The basement of Santhom Church, even today is the basement of Kapali koil. The basement had inscriptions depicting this. In 2006, inthe name of renovation, these proofs were cemented and the history burried for ever.

    Have you heard about ‘Ananda Rangan Diary Kurippu’? Ananda Ranga, the French Dubashi during 1730’s has documented his daily activities for 25 years. In that, he describes how the French destroyed a Shiva Temple in Pondichery, stone by stone.

    These are tip of the iceberg. How many Hindus took arms and terrorism to avenge these? If we want to mourn for every temple, forget every temple, one day for 10 temples, destroyed by Christians and Muslims, it will take atleast 10 years to mour again for the first 10 temples. If Hindus wanted to take revenge for all these attrocities, belive me, there will be no single Christian or Muslims in India. But you very well know what the fact is and Hindus never indulge is such foolish acts.

    Dont talk like the sickular media and politicians and try to justify terrorism. NOTHING CAN JUSTIFY THE TERRORISM INDIA IS FACING. Its a mere religious fanatism and nothing else.

    Quoting Babri Masji, they are blasting bombs for almost 20 years. How many time one will avenge for Babri Masjid? The entire life time of the country?

  94. சதீஷ்,
    நீங்கள் சொல்கின்ற அத்தனையையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.
    உங்களிடம் நாங்கள் கேட்கப்படவேண்டிய கேள்விகளை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர உள்ளேன்.தயவு செய்து காத்திருங்கள்.

  95. I do not agree the comment about Advani and others.. Subavee Thasan can go back to history ( History after Independence ) and can understand who is behind all those Religious flareups.. Just because some media create the probaganda it cannot be taken as History.. Satish has clearly pointed out certain facts.. if Subavee can also point out why Advani and others are considered as such..

    There is a small ( Since it happenned to hindus I am putting it as small) correction.. During 1990 there came an annoucement that Hindus should leave the Srinagar Valley and they were given very very little time. Now we all know there are ZERO hindus in Srinagar.. I think 1990 is before 1992 ( Ist correct Subavee ?)

    Any how I always feel it is wate aruing because the collective Hindu Psyche is of defeatist and I am only hoping ( i know I am not ) a Vivekananda to come and give us some Rajas and remove our Tamas.. This last Paragraph is not inteneded for Subavee.. Let him start his Goeballistic Preaching..

    Regards
    S Baskar

  96. சுபவீதாசன்
    //நீங்கள் சொல்கின்ற அத்தனையையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.
    //
    ஒத்துக்கொள்வது சரி, அதற்காக என்ன செய்யப்போகிறீர்கள்?

  97. //please change urname “ashok kumar ganesan”//
    Mr.Kapil,
    What is your problem brother? Don’t you think that you are crossing your limits.

    God Bless You,
    Ashok

  98. தமிழகத்தை சேர்ந்த பாதிரியார்கள் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மற்றும் ப்ரென்சிஸ் நெல்சன் என்ற இருவன் அமெரிக்கவில் குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக தேடப்படுகிறார்கள்.

    பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து (116)-
    https://devapriyaji.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/
    நித்ய ஆனந்தம் பெறும் பலான கிளு கிளு செக்ஸ் பாதிரிகள்-https://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=34454994
    ஆனால் இங்கே அவர்களைப் போன்ற பல தவறுகள் முதலில் சிறு செய்தியாஇ வந்தவைப் பல இங்கே. ஆனால் தொடர் நடவடிக்கைகள் காணோம்.

    இது போன்ற படங்கள் தமிழில் வருமா?

  99. ஒரு நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக ஆனால் அதனால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
    ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்ன,ஒரு பத்து அல்லது இருபது விழுக்காடு ஆனாலே பிடித்தது தலை வலி
    ஷரியா சட்டம் என்பார்கள்,முணுக்கென்றால் தங்கள் மத உணர்வு புண்பட்டது என்று அமர்க்களம் செய்வார்கள். அவன் தலைக்கு ஒரு கோடி ,இவன் தலைக்குபத்து கோடி என்று பத்வா விடுவார்கள்.

    எந்த சட்டமும் துச்சம் என்பார்கள். இஸ்லாமிய ஷரியா தான் சட்டம் என்பார்கள். ஜமாத்தே கோர்ட் என்பார்கள் .
    மசூதி வழியாக ஹிந்துக்கள் சாமியோ,சவமோ சென்றால் மேளம் ,தாளம் கூடாது என்பார்கள்.
    சினிமா கூடாது, டிராமா கூடாது,சங்கீதம் கூடாது,தாய் நாட்டை மதிக்கும் பாடல் கூடாது,
    ஆனால் இஸ்லாம் ஒரு அன்பு மதம் , அமைதி மதம் என்பார்கள்.

    பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்று சமாளிப்பார்கள் .ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டு வைத்துவிட்டு அனுப்பும் இமெயிலில் கூட முதலில் ‘அல்லா ஒ அக்பர்’ என்று இருப்பதைப் பார்த்து அவர்கள் இஸ்லாமுக்காகத்தானே போராடுகிறார்கள்என்றால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

    பயங்கரவாதி இமாம் அலி உடல் புதைக்கப்பட்ட போது ‘புரட்சியாளர்கள் புதைக்கப் படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள்’ என்று அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண் பெண்கள் கோஷமிட்டனர்.
    ஆனால் பயங்கரவாதிக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு தராது என்பார்கள்.

    காஷ்மீரில் நன்கு லட்சம் ஹிந்துக்கள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டனர்
    பலர் கொலை செய்யப் பட்டனர்
    பாகிஸ்தானில் அது உருவான போது பதினோரு சதமாக இருந்த ஹிந்துக்கள் தொகை இன்று ஒரு சதத்துக்கும் கீழே வந்து விட்டது
    அங்கு ஹிந்துக்கள் எந்த உரிமையும் இல்லாமல் வாழ்கிறார்கள்
    சமீபத்தில் கூட பாரதம் வந்த இரண்டு குடும்பங்கள் எப்படி எல்லாம் அவர்கள் மதம் மாற வற்புறுத்தப் படுகிறார்கள் என்பதை விளக்கினர்.
    சில மாதங்களுக்கு முன் அங்கு ‘ஜிசியா’ என்ற முஸ்லிம் அல்லாதாருக்கான கொடுங்கோல் வரி செலுத்த மறுத்த இரண்டு சீக்கியர்களின் தலை வெட்டப் பட்டு அவை ஒரு குருத்வாராவுக்கு பார்சல் செய்யப் பட்டது.
    இதே நிலைதான் பங்களாதேஷிலும்,சவுதி அரேபியாவிலும்,மலேசியாவிலும் .
    ‘ஐம்பது ஆறு நாடுகள் சேர்ந்து ‘இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு’ என்று வைத்திருக்கிறார்கள்.
    ஆனால் ஒரு நாடு கூட ஹிந்து நாடாக இருக்கக் கூடாதா?
    அது கூட வேண்டாம்.ஹிந்துக்களின் உணர்வுகளையாவது மதிக்க வேண்டாமா?

    ‘பூ விழுந்தால் நான் ஜெயித்தேன், தலை விழுந்தால் நீ தோற்றாய் என்று எப்போதும் தாங்களே ஜெயித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சரியா்?
    நீ அரிசி கொண்டு வா, நான் தவிடு கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்றானாம் ஒருவன் .அது போலத்தான் இருக்கிறது முஸ்லிம்களின் நடத்தை.

    தனிப்பட்ட முஸ்லிம்கள் நல்லவர்களாக இருந்து பிரயோஜனம் இல்லை
    இஸ்லாம் என்ற மார்க்கம் உண்மையில் எதை போதிக்கிறது என்பதும் முக்கியமில்லை .
    ஆனால் முஸ்லிம் சமுதாயம் உலகம் பூராவும் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பது தான் முக்கியம்
    அதனால் இனி ஹிந்துக்கள் தங்கள் சந்ததியினரின் நலனுக்காகவாவது விழித்துக் கொள்வது அவசியம் என்று நினைக்கின்றனர்
    அவர்கள் விழிக்கும் போது சில நல்ல முஸ்லிம்கள் அவர்கள் பார்வையை குறை சொல்லாமல் உள் முகமாய்த் திரும்பி தங்கள் சமூகத்தின் குறைகளை எவ்வாறு களைவது என்று யோசித்து செயல் படுத்துதல் நலம்.

    இரா.ஸ்ரீதரன்

  100. அமேரிக்கா கிறிஸ்தவ நாடு இல்லையாம்!
    யார் சொன்னது – புஷ் ஜூனியர் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வெளிப்படையாகவே கிறித்தவர்களின் மற்றும் சர்ச்சின் ஆதரவை விழைந்தார்.
    பல சர்ச் குழுக்கள் அவருக்காக வெளிப்படையாகவே வேலை செய்தன
    ஆபரேஷன்ஜோஷுவா என்ற திட்டத்தின் மூலம் பாரதத்தில் பெரும் அளவில் கிறித்தவ மத மாற்றங்களைச் செய்ய திட்டம் தீட்டி அதன் மூல கர்த்தாவாகஅவர் இருந்தார்
    மேலும் ஒபாமா பதவி ஏற்ற போது எப்படி ஆரவாரமாக சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்தார் என்று உலகமே டீவீயில் பார்த்தது
    மேலும் அமெரிக்கா ஒரு ப்ராடஸ்டன்ட் நாடு என்பதும் அங்கே கத்தோலிக்கர்கள் ஜனாதிபதி பதவிக்கு வருவது கடினம் என்றும் சில ஆண்டுகளுக்கு முன் வரை கூறப்பட்டு வந்துள்ளது
    அதனால்தான் கதொலிக்கரான கென்னெடி ஜனாதிபதியாவது சந்தேகமாக இருந்தது
    எனவே அமெரிக்கா சந்தேகமில்லாமல் ஒரு கிறித்தவ நாடே.

    இரா.ஸ்ரீதரன்

  101. ‘கட்டுப்பாடுகள் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கே’
    இது நல்ல ஹாஸ்யம்!
    இஸ்லாத்தை ஏற்காத மக்கள் இஸ்லாமியர்களுக்கு நடுவே முதலில் வாழ முடியுமா?
    அப்படியே வாழ்ந்தாலும் அவர்கள் கதி என்ன என்பதை நாம் காஷ்மீரிலும்,பாகிஸ்தானிலும்,பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும், சவுதி அரேபியாவிலும் , மலேசியாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    நான் கேள்விப்பட்டது என்னவென்றால் ஒரு ஹிந்து சில இஸ்லாமிய நாடுகளில் ரம்ஜானின் போது நாலு பேர் பார்க்க தண்ணீர் கூட குடிக்க முடியாது என்பது. ஏனென்றால் முஸ்லிம்கள் அப்போது நோன்பு இருப்பதால் .
    மேலும் ஒரு ஹிந்து சவுதி அரேபியாவில் செத்தால் கூட எரிக்க முடியாதாம்!
    ஏன், இங்கேயே மசூதி வாசலில் ஹிந்து சாமி,சாவுக்கு மேளம் ,தாளம் அடிக்கக் கூடாது என்பது என்னவாம்?
    ஆகவே கட்டுப்பாடுகள் முஸ்லிம்களுக்கு மட்டுமே என்பது கட்டுக்கதை !

    இரா.ஸ்ரீதரன்

  102. //நான் கேள்விப்பட்டது என்னவென்றால் ஒரு ஹிந்து சில இஸ்லாமிய நாடுகளில் ரம்ஜானின் போது நாலு பேர் பார்க்க தண்ணீர் கூட குடிக்க முடியாது என்பது. ஏனென்றால் முஸ்லிம்கள் அப்போது நோன்பு இருப்பதால் .//
    சரியாக சொன்னீர்கள் நண்பர் ஸ்ரீதரன் அவர்களே,
    எல்லா வளைகுடா நாடுகளிலும் அப்படித்தான்,உணவகங்கள் யாவும் மாலை நேரத்தில் தான் நோன்பு முடிந்த பிறகு தான் திறந்திருக்கும்.பொது இடங்களில் உணவோ நீரோ அருந்தினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.வெள்ளிகிழமையில் தொழுகை நேரத்தில் கூட எந்த கடையும் திறந்திருக்க கூடாது.அதில் வருத்தம் என்னவென்றால் நம்ம ஊர நண்பர்கள் தான் அரபிகளைவிட இந்த விசயங்களில் அதிக கொள்கை பிடிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *