ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது.
ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.
பெல்ஜிய இந்தியவியலாளரான டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்ட் எழுதிய ‘ Asterisk in Bharopiyasthan’ எனும் நூல் 2007 இல் புது டெல்லியைச் சார்ந்த வாய்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு ஆதரவாக வைக்கப்படும் ஆதாரங்களில் இருக்கும் ஓட்டைகள் மற்றும் இந்த கோட்பாடு குறித்து அண்மையில் அறிவுலகில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய்ந்து அவர் பல ஊடகங்களிலும் ஆராய்ச்சி இதழ்களிலும் எழுதியுள்ள ஏழு கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் ஆகும். சரஸ்வதி நதி ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாந்த் நதியே ஆகும் எனும் ராஜேஷ் கோச்சாரின் நூல், ஹரப்பாவாசிகளின் எழுத்துருக்கள் உண்மையில் எழுத்துருக்களே அல்ல அவை சித்திர வரைவுகள் மட்டுமே – அவர்கள் எழுத்தறிவற்றவர்கள் எனும் ஸ்டீவ் ஃபார்மரின் கோட்பாடு, வேத இலக்கியங்களிலிருந்து பெறப்படும் வானவியல் தரவுகள் ஆகிய பல விஷயங்களையும் அவை ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளையும் எல்ஸ்ட் இந்த நூலில் விவரித்துள்ளார்.
வேத இலக்கியங்களின் கால வரையறையில் தொடக்ககாலம் முதல் இருந்த பிரச்சனைகள் மேற்கத்திய இந்தியவியலாளர்களுக்கு இருந்த மனத்தடைகள் ஆகியவற்றை எல்ஸ்ட் பட்டியலிடுவது சுவாரசியமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக 1790 இல் ஸ்காட்டிஷ் கணிதவியலாளர் ஜான் ப்ளேஃபேர் ஹிந்து ஜோதிட கால அட்டவணைகளின் தொடக்க புள்ளி கிமு 4300 ஆக இருந்திருக்க வேண்டும் என கணித்தார். இந்த முடிவினை அந்த காலத்தினைச் சார்ந்த எந்த வானவியல் வல்லுனரோ அல்லது கணிதவியலாளரோ எதிர்க்கவில்லை என்ற போதிலும் வானவியல் அல்லது கணித பயிற்சியற்ற பிற அறிஞர்கள் இது இறை-நிந்தனை என எதிர்த்தனர். ஃபேர்பேளையை எதிர்த்தவர்களுள் முக்கியமானவர் ஜான் பெந்த்லே என்பவர்.
1825 இல் இவர் எழுதிய பதிலில் “ஹிந்து நூல்களின் பழமையை நிலைநிறுத்திட கருதும் ஃபேர்பேளியின் செயலானது அந்நூல்களில் காணப்படும் பொய்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு வழி கோலும். ஆனால் அவரது நோக்கம் அதைவிட மோசமானது நமது மதத்தில் உள்ள மோசேயின் வரலாற்று கற்பிதங்களை தவறெனக் காட்டி நம் மதத்தின் அடிப்படையையே இல்லாமல் ஆக்குவது ஆகும். ஏனெனில் நாம் ஃபேர்பேளே சொல்வது போல ஹிந்து நூல்களின் பழமையை ஏற்றுக்கொண்டால் பைபிளை வெறும் கதை என்றே கருதவேண்டியது ஆகும்.” இந்த அடிப்படையில் ஹிந்து நூல்களுக்கு ஒரு புதிய கால வரையறையை ஏற்படுத்த பெந்த்லே ஒரு முயற்சியை மேற்கொண்டார். அது மிகவும் நகைப்புக்கு இடமானது ஆயிற்று. இந்த காலக் கணக்கின்படி வராஹமிகிரர் (கிபி 510-587) மொகலாய மன்னர் அக்பரின் (1556-1605) சமகாலத்தவர் ஆவார். மேலும் இத்தகைய எதிர்ப்புக்ளில் இருக்கும் அபத்தத்தை ப்ளேஃபேர் சுட்டிக்காட்டி ஒரு கேள்வியை எழுப்பினார்: ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து அந்த காலத்தை விட மிக பழமையான காலகட்டத்தை வானியல் ரீதியாக கணக்கிடக்கூடிய அளவுக்கு வேதகாலத்தவர்களுக்கு கணிதமும் நவீன வானவியல் அறிவும் இருந்திருக்குமா? (பக். 181) ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அத்தகைய எதிர்ப்புகள் இந்த நூற்றாண்டின் மேற்கத்திய இந்தியவியலாளர்களின் மனப்போக்கில் ஏற்பட்டு விட்டதுதான் அதிசயமான விஷயமாகும். இருந்த போதிலும் ஹெர்மான் ஜெக்கோபி காலம் முதல் அண்மையில் நர்சிங் ஆச்சார் வரை வானவியல் அறிஞர்கள் மிகவும் கட்டுறுதியான தரவுகளை முன்வைப்பதை
எல்ஸ்ட் சுட்டிக்காட்டி அதனை ஆரியப் படையெடுப்பு/புலப்பெயர்வு கோட்பாட்டாளர்களால் புறக்கணிக்கமட்டுமே முடிந்துள்ளதேயன்றி அதனை மறுதலிக்க முடியவில்லை என சொல்கிறார்.
இத்தகைய வானியல் தரவுகள் எல்லாம் வேதங்களை இயற்றியவர்களின் தொல்பழம் முன்னோர்களால் (இந்தியாவுக்கு வெளியே) காணப்பட்டு அவை வேதங்களை இயற்றியவர்களால் பாதுகாக்கப்பட்டு (இந்தியாவுக்குள்) மீள் பாடப்பட்டது எனும் ரொமிலா தாப்பர் போன்றவர்களின் வாதங்களை “ஏற்கமுடியாத அதீத வாதம்” என நிராகரிக்கும் எல்ஸ்ட் “எனில் வேதங்களை இயற்றியவர்கள் தங்களது சொந்த வானியல் தரவுகளை சில இடங்களில் மட்டும் பதிவு செய்து கொண்டு, சில இடங்களில் மட்டும் பழமையான தரவுகளை பதிவு செய்து கொண்டர்கள் என நம்பவேண்டுமா?” என வினவுகிறார் (பக்.194) மேலும் வடதுருவ நட்சத்திரன் அருகில் ஆல்பா டிராகோனிஸ் (யமா அல்லது தூபன்) எனும் விண்மீனின் இருக்கையை வேத இலக்கியம் பதிவு செய்கிறது ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டாளர்களால் வேதம் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் காலகட்டத்தில் (கிமு 1200) அந்த விண்மீன் அந்த இடத்தில் (பூமியின் பம்பர சுழற்சியின் விளைவால்) இருக்கவே இல்லை. இந்த விண்மீன் குறிப்பிடப்படும் வேத இலக்கியம் வேதங்களில் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். இந்த மிகவும் பிற்பட்ட கால வேத இலக்கியத்துக்கு ஜெக்கோபி ஊகிக்கும் காலகட்டம் கிமு 2780 +/- 500 ஆண்டுகள் ஆகும். இத்தகைய தரவுகள் இன்னமும் மறுதலிக்கப்படவில்லை என்பதனை ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டினால் விளக்கமுடியாத தரவுகளாக எல்ஸ்ட் முன்வைக்கிறார்.
Asterisk in Bharopiyasthan,
கொயன்ராட் எல்ஸ்ட்,
Voice of India, 2007
பக்கங்கள்: 207
விலை: ரூ 200

கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு
திராவிட இனம் – வரலாற்று உண்மையா?
தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்
செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்
சோமபானம் என்னும் மர்மம்
ஹிந்து என்னும் சொல்
வெ.சா என்னும் சத்திய தரிசி
மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..
அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை
வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1
ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’


Asterisk in Bharopiyasthan,

இன்னொரு அறிவுப் பெட்டகத்தை திறந்து வைத்திருக்கிறார் அரவிந்தன்.நண்பர் அரவிந்தனுக்கு ஒரு வேண்டுகோள். இந்திய வரலாற்றியல்,தொன்மவியல் போன்ற துறைகளில் வெளிவரும் புத்தகங்களை அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். எழுதும்போது அது தொடர்பாக தமிழில் வெளிவந்திருக்கும் புத்தகங்களைப் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் எழுதலாம்.
let us go on a voyage through the articles and books.
அன்புடன்
சுப்பு
உலகின் பழைமையான நாகரீகத் தொட்டில்கள் நான்கு.
அவை
1) “சிந்து சமவெளி நாகரீகம்” எனப் பெயரிடப் பட்ட இந்திய நாகரீகம்.
2) நைல் ஆற்று நாகரீகம்- எகிப்திய அராபியர் நாகரீகம்.
3)சுமேரிய நாகரீகம்- அதாவது இன்றைய இராக்கிய அராபியர் நாகரீகம்.
4) மஞ்சள் ஆற்று நாகரீகம் – சீனர்களினுடையது.
இதில் நைல், சுமேரிய, மஞ்சள் ஆற்று நாகரீகம் இந்த மூன்றிலும் வாழ்ந்தவர்கள் அதே வூரிலே முளைத்து வளர்ந்தவர்களாம்.
ஆனால் இந்த நாகரீகங்களில் எல்லாம் பழைமை வாய்ந்த பாரத நாகரீகத்தை வளர்த்தவர்கள் மட்டும், சுவிட்சர்லாந்தில்ரிந்து காலையிலே ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கிளம்பி ஆடுகளை சூ, சூ என்று ஓட்டிக் கொண்டே மாலையிலே கங்கை ஆற்றுக்கு வந்து சேர்ந்து விட்டனராம்.
இதை உலகின் மிகச் சிறந்த வரலாற்று அறிங்கர் ட்ரிக்ஸ் கார்ளர் (Tirichs kaarlar) அவர்களுடனேயே நடந்து போய் பார்த்து பதிவு செய்து வைத்து இருக்கிறார்.
இதை சேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திலே மாணவர்களுக்கு விளக்கினார்.
நேற்று கூட ஒரு சொற்பொழிவு நடத்தி உள்ளார்.
——–
இதை ஒத்துக் கொள்ளுபவர்கள் பகுத்தறிவு வாதிகள்,
மனித நேயமுள்ள முற்போக்கு சிந்தனையாளர் என்ற பட்டமும் அவர்களுக்கு வழங்கப்படும்.
—————
இது ஒரு கேனத்தனமான கருத்து என்று சொல்லுபவர்கள், பாசிச, இரத்த வெறி பிடித்த, இன வெறி பிடித்த, மத வெறி பிடித்த, மக்கள் விரோத, சமுக விரோத, பிற்போக்கு சக்திகள் என்கிற அடை மொழிக்கே உரியவர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற்போக்கு, பாசிச சக்திகளின் கொட்டத்தை அடக்குவோம் என்று சூளுரைக்கிறேன்!
Aravinda,
You simply rock. what is the meaning of “Bharopiyasthan”.
hmm….I remember reading Francois Gauiter’s comment that ‘The only race in the whole world, who do not take pride in thier past is, Indians’. How true? We Indians are brainswashed by the europeans to think that, whatever the white skin says is true and whatever we had all along is blind faith and myth. People like Romila Tapar are of this genre who always try to put India’s past in bad light and these pseudo seculars want to prove that anything in India is not as ancient as we think. This has led to the state where Indians started thinking that Ramayana and Mahabaratha are mere stories and not our histories.
People with sense will realise that, our ancestors clearly demarcated History and other stories as ‘Ithihas’ (history – Ramayana and Mahabaratha are called Ithihas) and ‘Puranas’ (old ones – history blended with a bit of myth).How great they were?
Was it Eienstein, who said ‘we owe a lot to Indians, who invented zero’ ? Even the western intellectuals appreciate India’s past, but not we Indians. What a shame? All the mathematical treaties and anstronomical facts have been recorded by our ancestors 1000′s of years before even the westerners started dressing.
Thanks Mr.Aravind and Tamilhindu team, for bringing out such wonderful articles.
வணக்கம்,
///மோசேயின் வரலாற்று கற்பிதங்களை தவறெனக் காட்டி நம் மதத்தின் அடிப்படையையே இல்லாமல் ஆக்குவது ஆகும். ஏனெனில் நாம் ஃபேர்பேளே சொல்வது போல ஹிந்து நூல்களின் பழமையை ஏற்றுக்கொண்டால் பைபிளை வெறும் கதை என்றே கருதவேண்டியது ஆகும்.”////
அப்படியென்றால் அதற்காகத்தான் நமது வேதங்களை இயேசுவின் ஆதாரத்தளம் ஆக்கி நமது வேதங்களை தமதாக்கிக் கொள்ள அரும்பாடு படுகிறார்கள், ஆக இது இப்போது ஆரம்பித்த பிரச்சினை இல்லை.
நன்றி நண்பர் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்களே. கட்டுரை மிகவும் அருமை.
// பிற்போக்கு, பாசிச சக்திகளின் கொட்டத்தை அடக்குவோம் என்று சூளுரைக்கிறேன்! //
ஐயா, உங்கள் வீரம் புல்லரிக்கவைக்கிறது; சரி, இதனை எப்படி சாதிக்கப் போகிறீர்கள் என்று சொல்லவில்லையே..!
ஆக்கிரமிப்பு கருத்துக்களை வெறுப்புடன் திணித்த ஐரோப்பியர்களைத் தடுமாறச் செய்யுமளவுக்கு இன்று நம்மிடமும் வசதிகள் இருக்கிறதே, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நம்மிடமிருக்கும் ஆதாரங்களையெல்லாம் அள்ளிவிடலாமே..?
அதாவது இந்தியர்களில் ஆதி குடிமக்கள் யார்,அவர்களில் முதன்முதலாக நாகரீகம் அடைந்த குடியினர் யார் போன்ற தகவல்களை (ஆதாரத்துடன்…) இங்கே பதிவு செய்யலாமே..!
உதாரணமாக யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளில் கலாச்சாரத்தில் (இந்துக்கள் என்று யாராவது இருந்திருந்தால்…) அவர்களைப் பற்றி ஏதாவது இருந்திருக்க வேண்டும்; அதே போல யூதர்களைப் பற்றி இங்கே…
இப்படி ஒவ்வொரு மக்கள் குழுவையும் அவர்கள் காலத்தினையும் இருக்கும் தகவல்களைக் கொண்டே ஆராய்ந்தால்..?
Dear Shri Aravindan Nilakandan, Your review of the latest book by Koenraad Elst is excellent. Please note that he has written another book ‘Indigenous Indians – Agasthya to Ambedkar’ which has dealt with the Aryan Invasion theory and its baseless assumptions which are the very basis of the social problems in Tamilnadu and in many parts of our country. In that book he has also tried to exposed the nefarious designs of the Christian Missionaries in promoting the differences among the various constituents of our Hindu society for religious conversions and social unrest. Nowadays politicians like Karunanidhi, Thirumavalavan, Vaiko, Nedumaran and many dravidian party bigwigs and their followers have fallen a prey to the evil designs of anti-national Christian Missions.
//ஆனால் இந்த நாகரீகங்களில் எல்லாம் பழைமை வாய்ந்த பாரத நாகரீகத்தை வளர்த்தவர்கள் மட்டும், சுவிட்சர்லாந்தில்ரிந்து காலையிலே ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கிளம்பி ஆடுகளை சூ, சூ என்று ஓட்டிக் கொண்டே மாலையிலே கங்கை ஆற்றுக்கு வந்து சேர்ந்து விட்டனராம்.//
You won’t believe this. But one the comments on a news item in the expressindia.com says -
//I am not a Hindu. I am a Mulniwasi a direct desendant of the Origial inhabitant of the land. Hindus/Aryans came from Eurasia! They are the original terrosist . SC/ST/OBC are NOT Hindus. These homless Aryans occupied our land and now we are low caste and slaves to them!//
This is called ‘sickular’ brainwashing.
சகோதரர் கிலாடியார் அவர்களே,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
//உதாரணமாக யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளில் கலாச்சாரத்தில் (இந்துக்கள் என்று யாராவது இருந்திருந்தால்…) அவர்களைப் பற்றி ஏதாவது இருந்திருக்க வேண்டும்; //
யூதர்கள் குறிப்பிலே இந்துக்களைப் (அதாவது இந்தியர்கள் )பற்றி ஏன் இல்லை என்று கேட்க வருகிறீர்களா?
யூதர்கள் குறிப்பிலே மத்தியக் கிழக்கு ஆசியாவிலே வசித்தவர்களைப் பற்றி, யூதர்கள் யாருக்கு அடிமையாக இருந்தார்கள், எந்த இனத்தை எல்லாம் அழிக்க கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்தார் என்பதாக பல பதிவுகள் உள்ளன. அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் எழுதி வைத்தனர்.
யூதர்கள் சீனரைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளனரா? அப்ப சீனர்களும் கிடையாதா?
இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு ஐந்து நூற்றான்டுகள் முன்பே புத்தர் பிறந்து வாழ்ந்து தன கருத்துக்களைப் பரப்பி இருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவுக்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதோ இல்லையோ, புத்தருக்கு வரலாற்று ஆதாரங்கள் செம்மையாக உள்ளன. ஆனால் யூதரின் குறிப்பிலே புத்தரைப் பற்றிய பதிவுகள் இல்லை.
எனவே,
“புத்தர் என்று என்று யாராவது இருந்திருந்தால்……..
(அவரைப் பற்றி யூதர்கள் குறிப்பில் இல்லை), என்ற உங்களின் நியாயப் படி , புத்தரை வரலாற்றின் குறிப்புகளில் இருந்து எடுக்க வேண்டும் என்று அதிரடி கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கப் போகிறீர்களா?
//You won’t believe this. But one the comments on a news item in the expressindia.com says -
//I am not a Hindu. I am a Mulniwasi a direct desendant of the Origial inhabitant of the land. Hindus/Aryans came from Eurasia! They are the original terrosist . SC/ST/OBC are NOT Hindus. These homless Aryans occupied our land and now we are low caste and slaves to them!//
This is called ’sickular’ brainwashing.//
Dear Armchaircritic, these people will never change even if Max Muller comes back to life and say that it was only a myth propagated by the British, and he just framed a story. So do not give much importance to them…
நண்பரே தங்கள் புரட்சி திட்டத்தினைக் குறித்து கேட்டிருந்தேன்;
ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல்..?
சரி,விஷயத்துக்கு வருகிறேன்;
என்னிடம் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஆதாரமும் போதிய ஞானமும் இல்லாததால் தங்களிடம் விவரம் கேட்டேன்; நீங்களோ மிகவும் சாமர்த்தியமாக என்னையே கேள்வி கேட்கிறீர்கள்;
யூதர் என்பது அதிகமாக விவாதிக்கப்பட்ட மக்கள் குழு (People Group) என்ற அளவிலேயே உதாரணத்துக்காகக் குறிப்பிட்டேன்; மற்றபடி நான் எதிர்பார்த்தது விவரங்களே; செவ்விந்தியரை (Red Indians in America) எடுத்துக் கொள்ளுவோம் அல்லது ஆஸ்திரேலிய பழங்குடிகளை எடுத்துக் கொள்ளுவோம்; அங்கே நடந்தது எதுவோ அதுவே இங்கேயும் நடந்திருக்க வேண்டும்; காரணம் இயல்பிலேயே மனிதன் தான் வாழுமிடத்திலிருந்து மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்று ஆக்கிரமிக்கிறவனாக இருக்கிறான்; இந்தியாவிலுள்ள ஆதிக்க வர்க்கத்தினர் மட்டும் நல்ல பிள்ளை போல “இந்த பூனையும் பால் குடிக்குமோ” என வேடிக்கை பார்த்தால்..?
எனவே விஞ்ஞானமும் வரலாறும் அகழ்வாராய்ச்சிகளும் கேட்கும் விவரங்களை ஆதாரத்துடன் பதித்து விட்டால் ஒப்பிட்டுப் பார்த்து வரும் சந்ததியினர் தெளிவடைய ஏதுவாக இருக்குமே;
சரியான குறிப்புகள் ஆதாரத்துடன் இல்லாததால்தானே ஐரோப்பியன் மயக்கி ஏமாற்றுகிறான்..?
armchaircritic :
// You won’t believe this. But one the comments on a news item in the expressindia.com says -
“I am not a Hindu. I am a Mulniwasi a direct desendant of the Origial inhabitant of the land. Hindus/Aryans came from Eurasia! They are the original terrosist . SC/ST/OBC are NOT Hindus. These homless Aryans occupied our land and now we are low caste and slaves to them!”
This is called ’sickular’ brainwashing. //
“ப்ரெய்ன்” மட்டுமல்ல, எது அழுக்காக இருந்தாலும் வாஷ் பண்ணுவதுதானே ஆரோக்கியமானது..?
//பிற்போக்கு, பாசிச சக்திகளின் கொட்டத்தை அடக்குவோம் என்று சூளுரைக்கிறேன்!// TRICHYKARRAR good shot…………….
Dear Mr. Sathish,
//Was it Eienstein, who said ‘we owe a lot to Indians, who invented zero’ ? Even the western intellectuals appreciate India’s past, but not we Indians.//
————-
Well, I dont know what is Mr. Einstiens exact observation’s in this regard,
but let me quote from a very important Mathematician, Mr. Marquis de Laplace, a french , Whose Laplace Transformations are very useful in solving equations of higher order.
——————-
“Its India that gave us the ingenious method of expressing all numbers by menas of ten
symbols, each symbol receiving a value of position as well as an absolute value; a profound and importanat idea which appears so simple to us now that we ignore its true merit”
Marquis de Laplace
———–
The above was mentioned in the preface of the chapter 2, Number Systems in the book , “Digital Computer Fundementals” written by Thomas c. Bartee, Professor ,Harvard university.
—–
The crux of the matter is the number system, specifically Decimal number system
As an example
3582 , on seeing this number any one can easily tell that it is Three Thousands Five Hundreds Eighty two. Means they know that this number has 3 Thousands , 5 hundreds, 8 tens and 2 ones!
Thousands Hundreds Tens Ones
3 5 8 2
Before we present this system to the world, they were using number systems like Roman number systems.
We know how to write 8 in Roman number system.
Its VIII.
v + III
One 5 and3 ones. We have to add the five with three ones – just to get a simple 8.
—–
Shall we try how to write the number Eighty Eight in Roman number system?
LXXXVIII this is Eighty Eight in Roman nuber system.
L + X + X + X + V + I + I + I
To find the value of a number, one has to do addition sum seven times, Just to get the number 88!
Now readers can try to write the number 3582 in roman system!
—————-
Moreover addition and substraction are Very convenient in Decimal number System.
But we have to pull your hairs to do addition and substraction in Roman system.
————-
இந்தியாவிலே பிறந்து வளர்ந்தும், இந்தியாவை சிறுமைப் படுத்தி இகழ்வதில் மகிழ்ச்சி அடையும் பாலூட்டிகளே (I mean mammal),
உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு!
Thiru Trichykaaran
your choo-choo comment is very funny, keep it up!
The Aryan Dravidian theory is interesting fiction really.But it has become a laughing stock now.
Historians are really His-her -story-ans. They are now like mega serial script writers looking for some silly excuses to keep their sorry story going.
Thank you Thiru Aravindan for Dr Elst’s article.We need more such articles.
வணக்கம்,
///அதாவது இந்தியர்களில் ஆதி குடிமக்கள் யார்,அவர்களில் முதன்முதலாக நாகரீகம் அடைந்த குடியினர் யார் போன்ற தகவல்களை (ஆதாரத்துடன்…) இங்கே பதிவு செய்யலாமே..!
உதாரணமாக யூதர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது வரலாற்றுக் குறிப்புகளில் கலாச்சாரத்தில் (இந்துக்கள் என்று யாராவது இருந்திருந்தால்…) அவர்களைப் பற்றி ஏதாவது இருந்திருக்க வேண்டும்; அதே போல யூதர்களைப் பற்றி இங்கே…//
இங்கே நான் எழுதும் காரணத்தால் என்னை எல்லோருக்கும், குறிப்பாக, கிளாடிக்கு தெரியும். ஆனால் எனது நண்பர் கண்ணன் என்பவரைப் பற்றி கிலாடியின் குறிப்பில் இல்லை என்பதனால் கண்ணன் என்பவரே இல்லை என்பது போல் இருக்கிறது நண்பர் ஸ்ரீ கிலாடியின் வாதம்.
சரிதான், இப்போதைய D.N.A. ஆய்வின்படி முதல் மனித அரங்கேற்றம் ஆப்பிரிக்காவில்தான் என்கிறது ஆராய்ச்சி, அப்படியானால் யூதர்களும் தன சொந்த நாடு என்று சொல்லிக்கொள்ளும் தேசத்தை சார்ந்தவர்கள் அல்லவே, இதற்க்கு என்ன செய்யலாம்.
உண்மையிலேயே சகோதரர் கிலாடியாருக்கு நாம் அனைவரும் ஒரு வகையிலே நன்றி தெரிவிக்க வேண்டும்.
அவர் இந்த மேலை நாட்டு “ஆரியர் இடம் பெயர்தல்” கொள்கையாளரின் மன நிலையை சரியாகப் படம் பிடித்துக் காட்டி விட்டார். அவர்களின் சீடர் அல்லவா?
//யூதர் என்பது அதிகமாக விவாதிக்கப்பட்ட மக்கள் குழு (People Group) என்ற அளவிலேயே உதாரணத்துக்காகக் குறிப்பிட்டேன்; மற்றபடி நான் எதிர்பார்த்தது விவரங்களே; செவ்விந்தியரை (Red Indians in America) எடுத்துக் கொள்ளுவோம் அல்லது ஆஸ்திரேலிய பழங்குடிகளை எடுத்துக் கொள்ளுவோம்; அங்கே நடந்தது எதுவோ அதுவே இங்கேயும் நடந்திருக்க வேண்டும்; காரணம் இயல்பிலேயே மனிதன் தான் வாழுமிடத்திலிருந்து மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்று ஆக்கிரமிக்கிறவனாக இருக்கிறான்; இந்தியாவிலுள்ள ஆதிக்க வர்க்கத்தினர் மட்டும் நல்ல பிள்ளை போல “இந்த பூனையும் பால் குடிக்குமோ” என வேடிக்கை பார்த்தால்..?//
மேலை நாட்டவர் எப்படி அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் போய் அங்கே இருந்த பழங்ககுடி மக்களை எல்லாம் அழித்து விட்டோ, தள்ளி விட்டோ தாங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்களோ, இந்தியாவில் இப்போது இருப்பவர்களும் அப்படித் தான் செய்து இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி விட்டார் கிலாடியார்.
வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை. எத்தனை பேர் நாடு பிடித்து, கொள்ளை அடைத்து, கொலை செய்து காலனியாக்கிக் கொண்டானோ அப்படித்தான்யா நீங்களும் செஞ்சீங்கனு தீர்ப்பு சொல்லி, வெத்திலை எச்சலையையும் துப்பி விட்டார் கிலாடியார்.
அட, இந்த ஒலகத்திலே நல்லவனாவே எவனும் இருக்க மாட்டானையா?
அவன் அவன் இருக்கற இடத்துல வாழ்ந்து, இருக்கறதைப் பகிர்ந்து வாழ்ந்து அடுததவனைக் கொள்ளையடிக்காமா, கொலை பண்ணாம, அடுத்தவன் இடத்தைப் பிடிக்காம இருக்கவே முடியாதா ஐயா?
கிலாடியாரின் கருத்தோ, முடியவே முடியாது , எல்லாரும் கெட்டவன் தான். நம்ப முன்னோர்கள் எல்லோரும் கெட்டவனாதாண்டா இருந்திருப்பான் என்ற ரீதியிலே //காரணம் இயல்பிலேயே மனிதன் தான் வாழுமிடத்திலிருந்து மற்ற பகுதிக்கு நகர்ந்து சென்று ஆக்கிரமிக்கிறவனாக இருக்கிறான்;//என்று கூறுகிறார்.
காந்தியைத் தந்த, விவேகானந்தரைத் தந்த, அரிச்சந்திரனைத் தந்த, புறாவுக்காக தன் வூனை அளித்த சிபிச் சோழனைத் தந்த, இந்த தியாக இனம்,
அடியை வாங்கிக் கொண்டு அஹிம்சைப் புன்முறுவலைப் பரிசாகத் தந்த இந்த இந்திய இனம்,
நாடு பிடிக்கும் கூட்டமாம், இனம் அழிக்கும் கூட்டமாம், இடம் பிடுங்கும் கூட்டமாம்.
எலும்பு வளைய உழைத்து, கால் வயிருக் கஞ்சி குடித்தாலும், மானத்தோடும், நியாயத்தோடும் வாழ்ந்த நம் முன்னொர்கள் ஆதிக்க சக்தியாம், ஆக்கிரமிப்பு சக்தியாம், இடம் பிடிக்க வந்தோமாம்!
சகோதரர் கிலாடியாரே, தொடரட்டும் உங்கள் பணி, இகழுங்கள், காரி உமிழுங்கள், எங்கள் கன்னத்தில் அறியுங்கள், மறு கன்னத்தைக் காட்டுவதோடு நிற்க மாட்டோம், உங்களுக்கு இன்னும் நல்லதையே நினைப்போம்.
யூதர்களின் கற்பனைக்கு மூளைச் சலவை செய்து கொண்டீர்கள். இந்தியா என்றால் இளப்பமாகத் தான் இருக்கும்!
உங்களைக் கூறி குற்றமில்லை.
கடவுளின் பெயராலேயே நச்சுக் கருத்துக்களை உங்கள் மூளையிலே வைத்துத் தைத்து விட்டர்கள்
//மோசசிடம் “கர்த்தர்” கூறியது:
“எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”
யோசுவாவிடம் “கர்த்தர்” கூறியது:
யோசுவா, அதிகாரம் 6,
2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!
21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//
கர்த்தரின் “ஆசீர்வாதம்” இன்னும் பல உள்ளது.
இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்கப் பட்ட இனம் பல பிற இனங்களை முழுவதியும் அழித்துப் போடு, இரக்கம் காட்டாதே என்று கூறியிருப்பது தெளிவாக இருக்கிறது//
கடவுளின் பெயராலேயே நச்சுக் கருத்துக்களை உங்கள் மூளையிலே வைத்துத் தைத்து விட்டர்கள்
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
உங்களைக் கூறி குற்றமில்லை.
யுவான் சுவாங் எனும் சீனப் பயணியைக் குறித்து பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறேன்; அவர் பயணம் செய்த தேசங்களில் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறித்து தனது பயணக் கட்டுரையில் எழுதி வைத்திருப்பார்; அதனைக் கொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சில விவரங்களை உறுதி செய்திருப்பார்கள்.
இதேபோல இந்தியாவின் பூர்வ குடிகள் குறித்தும் அவர்களது பழக்கவழக்கங்கள் குறித்தும் உண்மையான நம்பகமான குறிப்புகள் இருக்குமல்லவா,அவற்றை இங்கே பதிவு செய்தால் உபயோகமாக இருக்கும்; மற்றபடி வாதத்தை திசை திருப்புவது போல “அந்த மாமா என்னைக் கிள்ளிட்டாரு” என சிறு குழந்தையைப் போல எதையோ புலம்பிவிட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை;
திருச்சிக் காரன்
25 October 2009 at 1:00 am
// எலும்பு வளைய உழைத்து, கால் வயிருக் கஞ்சி குடித்தாலும், மானத்தோடும், நியாயத்தோடும் வாழ்ந்த நம் முன்னொர்கள் ஆதிக்க சக்தியாம், ஆக்கிரமிப்பு சக்தியாம், இடம் பிடிக்க வந்தோமாம் //
ஆக்கிரமிப்பின் நிறங்களும் வகைகளும் உங்களுக்குத் தெரியுமா?
“தாங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற் போகுமட்டும் வீட்டோடே வீட்டைச் சேர்த்து வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ” (ஏசாயா.5:8)
இதுவும் நீங்கள் அதிகமாக விரும்பி வாசிக்கும் யூதர்களின் வேதாகமத்தில்தான் எழுதப்பட்டுள்ளது; கிறிஸ்தவர்களை விடுங்கள்,அவர்கள் சிலுவையில் செத்துப்போன பிணத்தை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள்;
“இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே நாம் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்ததில்லையா?
இன்றைக்கு மகாராஷ்டிராவில் நடப்பது என்ன, ‘மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே சொந்தம்’ என்று முழங்குபவர்கள் தேர்தல் முடிவின் போக்கையே நிர்ணயிக்கிறார்கள்;
இங்கே நீங்கள் குறிப்பிட்டது போல ஏழை எளியோரின் கூலியையும் தாலியையும் கொள்ளையடித்து மாடிவீடு கட்டும் மார்வாடிகள் செய்வது ஆக்கிரமிப்பு இல்லையா?
காந்தியைத் தந்த அதே குஜராத் எனும் புண்ணிய பூமியிலிருந்து வந்த இவர்கள் அத்துணை பேரும் புண்ணியவான்களா?
காந்திஜியையும் விவேகானந்தரையும் புகழ்வது தவறல்ல,அவர்தம் கொள்கைகளை கொள்ளையடிக்கவும் வெள்ளையடிக்கவும் பயன்படுத்திவிட்டு அதனை செயலபடுத்தாமல் விட்டு விட்டால் என்ன பயன்?
வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்ற கோஷம் வெளிப்பட யார் காரணம்?
நான் இதுவரை இங்கே கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் ஏதுவும் செய்யவில்லை; நான் எந்த மதத்தையும் சார்ந்தவனுமல்ல; என்னுடைய நம்பிக்கைகளை முன்னரே சொல்லியிருக்கிறேன்; என்மீது எந்த முத்திரையும் யாரும் குத்த முடியாது;
நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை பரிதாபமாகச் சொன்னது போல (அவர் மராட்டியராம்,கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவராம், தமிழ்நாட்டில் தான் அதிகம் சம்பாதித்தாராம்;அவர் மராட்டியரா?கன்னடரா? தமிழரா?) என்னை யாருமே ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது என் தவறல்ல; இதனால் நான் அடையாளமில்லாதவனுமல்ல, அடையமுடியாதவனுமல்ல;
என்னைவிட நீங்கள்தான் அதிகம் பைபிளைப் பற்றிப் பேசுகிறீர்கள்; அதற்குக் காரணம் நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது அதைக் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்துடனோ வாசிக்காமல் பைபிள் ஒரு மதத்தின் புத்தகத்தைப் போலவும் அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்; இப்படி கெட்ட எண்ணத்துடன் எந்த புத்தகத்தை வாசித்தாலும் அதனால் ஒரு பயனும் இராது; ஆனால் அது தனது தவறான பக்கத்தையே எடுத்துக் காட்டும்;
உதாரணத்துக்கு “டெலிபோன் டைரக்டரி” யினை எடுத்துக் கொள்ளுவோம்;
அது அத்தனைப் பெரியதாக கனமாக இருந்தாலும் ஒரு வருடத்துக்குமேல் அது பயன்படாது; அதில் தேடுகிறோம்; போதிய விவரம் கிடைக்கும் வரை தேடுகிறோம்; அதிலுள்ள விவரங்கள் மாற்றப்படமுடியாது; திருத்தப்படமுடியாது; யாரையும் குறைசொல்லவும் முடியாது; நியாயம் கேட்கவும் முடியாது; ஆனால் தேடும் முறையினை -தன்மையினை மாற்றலாம்; கிடைக்கும்வரை தேடலாம்; மீண்டும் வேறொரு சமயம் வேறொரு காரணத்துக்காகத் தேடவேண்டியும் வரலாம்; நாம் தேடிய விவரம் கிடைத்தாலும் கூட தொடர்பு கிடைக்காமலும் போகலாம்; அதற்கும் பல காரணங்களிருக்கலாம்; மேற்கண்ட அனைத்தும் “டெலிபோன் டைரக்டரி” யை பற்றியது மட்டுமே மற்றும் ஒரு புத்தக்த்தை எப்படி அணுகவேண்டும் என்ற தன்மையைக் குறித்த எனது தனிப்பட்ட கருத்தாகும்.
B.பாஸ்கர்.
24 October 2009 at 11:10 pm
// இங்கே நான் எழுதும் காரணத்தால் என்னை எல்லோருக்கும், குறிப்பாக, கிளாடிக்கு தெரியும். ஆனால் எனது நண்பர் கண்ணன் என்பவரைப் பற்றி கிலாடியின் குறிப்பில் இல்லை என்பதனால் கண்ணன் என்பவரே இல்லை என்பது போல் இருக்கிறது நண்பர் ஸ்ரீ கிலாடியின் வாதம் //
நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; இதோ நீங்களும் நானும் தொடர்பு கொண்டிருப்பதால் கண்ணனைக் குறித்து உங்கள் மூலம் அறிந்துகொண்டேனே; அவரைக் குறித்து இன்னும் கொஞ்சம் சொன்னால் எனது நண்பர்களிடம் அவரைக் குறித்து சொல்லுவேன்; அப்படி சொல்லிக் கொள்ளும்படியான சாதனையாளராக இருந்தால் இன்னும் புகழ்ந்து சொல்லுவேன்;
ஆனாலும் கூட நான் குறிப்பிட்டது தனிப்பட்ட நபர்களைக் குறித்து அல்ல; மக்கள் குழுக்களை(People Groups)க் குறித்தே; அதாவது தமிழர் என்பது மிகப் பெரிய குழுவானால் அவர்களில் சமுதாய ரீதியாக கலாச்சார ரீதியாக பல உட்பிரிவுகளிருக்கும்; அதிலும் குடும்ப சம்பந்தமான பிரிவுகளிருக்கும்;(ரெட்டியார்,செட்டியார்..இப்படி)
இன்றைக்கு ஈராக் எனப்படுவது அக்கால பாபிலோன் நகரம்; அது ஒரு பெரிய சாம்ராஜ்யமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது; அந்த சாம்ராஜ்யத்தின் கீழ் இந்தியாவும் இருந்துள்ளது; காலப்போக்கில் பெயர்கள் வழக்கொழிந்து போயிருக்கலாம்; மாறியிருக்கலாம்; கல்கத்தா கொல்கதா என்றும் பம்பாய் மும்பை என்றும் பெங்களூர் பெங்களூரு என்றும் மெட்ராஸ் சென்னை என்றும் மாற்றப்பட்டதைப் போல மக்கள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருக்கலாம்; இன்றைக்கு அது மாறியிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம்; அந்த விவரத்தைக் கொண்டு உண்மையான வரலாற்றை ஆய்ந்தறிந்து பதிக்க வேண்டுமே தவிர வெறுமனே மறுத்துக் கொண்டிருந்தால் அதனால் யாருக்குப் பயன்?
நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,
புத்தரைக் குறித்து யூதர் அறிந்திருந்தாலும் அல்லது ஏதாவது எழுதியிருந்தாலும் அது அவர்கள் புத்தகத்தில் இல்லை; அதாவது நீங்கள் எதிர்பார்ப்பது போல பைபிளில் இல்லை; அதற்குக் காரணம்,”மல்கியா” எனும் புத்தகத்துடன் பழைய ஏற்பாடு முடிகிறது; அதுவரை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட வேதமாகும்; அதன் பிறகு இயேசுகிறிஸ்துவின் காலம் வரை சுமார் 500 வருடம் யூதர்களின் “இருண்ட காலம்” என்று சொல்லப்படுகிறது; இந்த காலக் கட்டத்தில்தான் புத்தர் வாழ்ந்தார்; அவருடைய போதனைகள் மட்டுமல்ல, இன்னும் பல அறிஞர்களின் போதனைகளும் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது; அதைக் குறித்த விமர்சனத்தை பெயர் குறிப்பிடாத பொதுவான அபிப்ராயமாக பவுல் எனும் கிறிஸ்தவத் தலைவர் அதிகம் எழுதியிருக்கிறார்; அதுவே புதிய ஏற்பாடு ஆயிற்று; ஆனாலும் இவை தொகுக்கப்படும் முன்னர் தனித்தனி புத்தகங்களாகவே இருந்துள்ளது;
எனவே புத்தர் போன்ற ஞானிகளை யாராலும் மறுக்கமுடியாது; ஆனாலும் அவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று நீங்களும் நானும் ஒப்புக்கொண்டாலும் அவரது சீடர்கள் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; அவர்கள் ஒப்புக்கொண்டதாக நீங்கள் நிரூபித்தால் நானும் ஒரு இந்து தான், அம்பேத்கரும் ஒரு இந்து தான் என்று நீங்கள் சொன்னது போலாகும்;
ஒரு இந்தியன் இந்துவாக இருக்கலாம்;ஆனால் ஒரு இந்து இந்தியனாக மட்டுமே இருக்கமுடியாது; இதனை நீங்கள் எதிர்த்தால் எனது பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிவரலாம்;
கருத்துக்கள் எழுதிய நண்பர்களுக்கு நன்றி. திரு சுப்பு அவர்கள் சொன்னபடி என்னால் முயன்ற அளவு நான் படித்த நூல்களை பகிர்ந்து கொள்கிறேன். திருச்சிக்காரன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்திய பண்பாட்டின் தொன்மையும் நிலைத்த தன்மையும் முக்கியமானவை. அவற்றை நம் அகழ்வாராய்ச்சியாளர்களும் மரபணுவியலாளர்களும் நிரூபித்து வருகிறார்கள். ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டை ஏற்கனவே அண்ணல் அம்பேத்கரும் மகரிஷி ஸ்ரீ அரவிந்தரும் நிராகரித்துள்ளனர். Bharopiyasthan என்பது ஆரியர்களின் பூர்விக இடம் என்பதாக மொழியியலாளர்கள் தேடும் பகுதிக்கு வேடிக்கையாக எல்ஸ்ட் கொடுக்கும் பெயர். தொல்-இந்தோ-ஐரோப்பிய மொழி புழங்கும் இடமாம். Urheimat என்றும் சொல்லுவார்கள். இந்தோ ஐரோப்பிய என்பதைத்தான் பாரத+ஐரோப்பிய என்பதை பாரோப்பியஸ்தான் என வேடிக்கையாக சொல்லுகிறார் எல்ஸ்ட்.
கிலாடி, மானுடவியலில், தொல் வரலாற்றில், மானுட பரிணாமத்தில் எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் 18 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய இனவாத – விவிலிய அடிப்படைவாதி போல உளறுகிறீர்கள். கடுமையான வார்த்தைக்கு மன்னியுங்கள். நீங்கள் செய்வதை விளக்க மிக மென்மையான வார்த்தை நீங்கள் அறிவில்லாமல் உளறுகிறீர்கள் என்பதுதான். விவிலியம் என்பது வரலாற்று தரவுகள் கொண்ட ஐதீக நூல்தான். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஒரு திருக்குறளோ அல்லது சுபாஷிதமோ சொல்லும் மேலான மானுட அறங்களை விவிலியத்தில் நீங்கள் காணமுடியாது. உபநிடதங்களில் உள்ள உண்மைத்தேடலை நீங்கள் காணமுடியாது. மலைப்பிரசங்கத்தை விவிலிய சட்டகத்தில் பொருத்தும் போது “ஏக இறைவன் மீதான நம்பிக்கையே” அங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதிலுள்ள மானுட அறம் அல்ல. பாரத-ஹிந்து ஞான மரபில் அவ்வாறல்ல. இங்கு அறமும் உண்மைத்தேடலும் பண்பாட்டின் அடிப்படை. மற்றனைத்து பண்பாட்டு வெளிப்படுதலும் அந்த அடிப்படைகளுக்கு முன் வணங்கியாகவேண்டும். இறைநம்பிக்கை உட்பட. இந்த முதல் பாடத்தை பாரதப்பண்பாட்டை குறித்து உணராமல் நீங்கள் உளறுவது குறித்தும் உங்கள் கிறிஸ்தவ அறியாமை மற்றும் அகந்தை குறித்தும் ஹிந்துக்களாகிய நாங்கள் உங்களிடம் பரிதாபப்பட மட்டுமே முடியும். என்றாலும்…உங்கள் பித்தம் தெளிய மருந்தொன்றிருக்கிறது. முயலகன் மீதிருக்கும் திருவடிகள் உங்கள் ஆபிரகாமிய அறியாமையையும் அகற்றட்டும்.
//திருச்சிக் காரன்
25 October 2009 at 1:00 am//
என்னடா ரொம்பநாளா ஆளக்கனமேன்னு பாத்தேன்.
////The crux of the matter is the number system, specifically Decimal number system
As an example
3582 , on seeing this number any one can easily tell that it is Three Thousands Five Hundreds Eighty two. Means they know that this number has 3 Thousands , 5 hundreds, 8 tens and 2 ones!
Thousands Hundreds Tens Ones
3 5 8 2
Before we present this system to the world, they were using number systems like Roman number systems.
We know how to write 8 in Roman number system.
Its VIII.
v + III
One 5 and3 ones. We have to add the five with three ones – just to get a simple 8.
—–
Shall we try how to write the number Eighty Eight in Roman number system?
LXXXVIII this is Eighty Eight in Roman nuber system.
L + X + X + X + V + I + I + I
To find the value of a number, one has to do addition sum seven times, Just to get the number 88!
Now readers can try to write the number 3582 in roman system!//////////
இப்படியெல்லாம் உங்களைத் தவிர டியூஷன் எடுக்கற மாதிரி சொல்லித்தர யார் இருக்காங்க? அடிக்கடி இங்க வாங்க சார்!
அன்புடன்
ராம்
///என்னைவிட நீங்கள்தான் அதிகம் பைபிளைப் பற்றிப் பேசுகிறீர்கள்; அதற்குக் காரணம் நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்துடனோ அல்லது அதைக் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கத்துடனோ வாசிக்காமல் பைபிள் ஒரு மதத்தின் புத்தகத்தைப் போலவும் அதிலுள்ள குறைகளை எடுத்துச் சொல்லி அதன் நம்பிக்கையாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் வாசிக்கிறீர்கள்; இப்படி கெட்ட எண்ணத்துடன் எந்த புத்தகத்தை வாசித்தாலும் அதனால் ஒரு பயனும் இராது; ஆனால் அது தனது தவறான பக்கத்தையே எடுத்துக் காட்டும்///
gladdy சார்,
நாங்களாவது. பைபிள் ளை கேட்ட எண்ணதுடனாவது வாசிக்க முடிகிறது.அனால் உங்களுக்கு எங்கள் மத புத்தகத்தை தொட முடியாத அளவுக்கு உங்களிடம் வெறுப்பும் அருவருப்பும் உள்ளது.
யுவான் சிங் வந்தது ஹர்ஷர் காலத்தில்.
ஹரஷருக்கு முன் குப்தர்கள்.
குப்தருக்கு முன் மவுரியர்கள். மவுரியருக்கு முன் போரஸ் எனப்படும் புருசோத்தமன் அலேக்சாண்டாரால் தோற்கடிக்கப் பட்டார்.
அலெக்சாண்டருக்கு முன் இந்தியாவுக்கு பேரும் புகழும் உள்ள வெளி நாட்டுப் பயணிகள் யாரும் வரவில்லை என்றால், அல்லது அவர்கள எழுதிய குறிப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்க்கு இந்தியர்கள் என்ன செய்ய முடியும்?
நான் கேட்கிறேன், இந்தியர்கள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்தார் கள் என்பதற்கு என்ன ஆதாரம்.
நான் திருச்சிராப் பள்ளியை சேர்ந்தவன். என் முன்னோர்கள் திருச்சியில் தான் பண்டு தொட்டு வாழ்ந்து வந்தார்கள்.
இன்றைக்கு ஒரு ஐரோப்பியர் வந்து, நீ இலங்கையில் இருந்து வந்தவன் என்றால், அதற்கு என்ன ஆதாரம்?
ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது நீங்கள் தான்.
நான் கேட்கிறேன், இந்தியர்கள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
சும்மா, நம் நாட்டின் பெருமையைக் கெடுக்க கதை விடுகிறீர்கள் என்று சொல்கிறேன்.
//இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே நாம் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டும் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்ததில்லையா?//
மன்னர்கள் தங்களுக்குள் சணடையிட்டுக் கொண்டார்களே தவிர மக்களை அழிக்கவில்லை.
நாட்டைக் கைப்பற்றியதுண்டு. ஆனால் எந்த ஒரு இந்திய மன்னனாவது ஒரு நாட்டைக் கைப்பற்றிய பின் அங்கே இருந்த மக்களை கொன்று குவித்ததாக வரலாறு உண்டா?
பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள் என்று வரலாறு உண்டா?
போரிலே வீரர்கள் இறந்ததைக் கண்டே வருத்தப் பட்டு மனம் மாறினான் அசோகன்.
இவ்வளவு சிறப்புடைய நாடு இந் நாடு. அவ்வளவு சிறப்பான சமூகம் நமது இந்திய சமூகம். ஆனால் அதை சீர் கெட்டதாக சித்தரித்துக் காட்டத் துடிக்கிறீர்கள்.
அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் (author) கட்டுரையாசிரியருக்கு,
25 October 2009 at 12:13 pm
// இங்கு அறமும் உண்மைத்தேடலும் பண்பாட்டின் அடிப்படை. //
தேடுங்க,தேடுங்க,தேடிக்கிட்டே இருங்க..!
“பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்;புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்” என்று நீதிமொழிகள்(14:6) கூறுகிறது.
நான் எனது அறிவை பிரபலப்படுத்தும் எண்ணத்துடன் எதையுமே எழுதவில்லை; ஆனால் நிறைய தகவல்களை எதிர்பார்த்து பொதுவான ஐயங்களை மட்டுமே எழுப்பினேன்;அதுவும் யாரையும் புண்படுத்தாமல்..! இது இப்படித்தான் என நான் குறிப்பாக எதையுமே சொல்லாதபோது அவசரப்பட்டு நான் அறிவில் ஆதவன் என்றும் புத்தியில் ஆதவன் என்றும் மறைமுகமாக புகழுகிறீர்களே..!
கிளாடி அவர்களே,
///பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்;புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்” என்று நீதிமொழிகள்(14:6) கூறுகிறது.///
ஏசு கிறிஸ்து சொன்னது எல்லாம் அவரது “விசுவாசிகளுக்கு மட்டுமே” அவரது “ஆசீர்வாதம்”, அவரது “தியாகம்”, அவரது “மரணம்” அனைத்துமே அவரது விசுவாசிகளுக்கு மட்டுமே அல்லாது, உலகின் எல்லா உயிருக்கும் அல்ல. அதனால்தான் எமது முன்னோர்களுக்கும், ஏன் எங்களில் சிலருக்கும் தேடியவுடனே கிடைக்கும் ஞானமும், இறையுணர்வும், ஏசுவின் விசுவாசிகளுக்கு வருவதில்லை. அறிவும் லேசாய் வருவதில்லை. மேலும் சொல்லப்போனால், எமது மூதாதையர்களான ரிஷிகளும், முனி சிரேஷ்டர்களும் தங்களுக்குள்ளேயே தேடிக் கண்ட ஞானம், இறையறிவே ஆகும். இதைத்தான் ஆதி சங்கரரும், திருமூலரும், ரமண மஹரிஷியும், இன்னும் எத்தனையோ மஹான்களும் நமது மனித சமுதாயத்துக்குப் பொதுவில் அதாவது விசுவாசிகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பொதுவில் சொன்னார்கள்.
உங்களுக்கு இது விளங்காததன் காரணம் நீங்கள் மேற்கோள் காட்டிய ஏசுவின் வாக்கிலிருந்து நான் இப்போது புரிந்து கொண்டேன்.
///நான் எனது அறிவை பிரபலப்படுத்தும் எண்ணத்துடன் எதையுமே எழுதவில்லை; ஆனால் நிறைய தகவல்களை எதிர்பார்த்து பொதுவான ஐயங்களை மட்டுமே எழுப்பினேன்;அதுவும் யாரையும் புண்படுத்தாமல்..! இது இப்படித்தான் என நான் குறிப்பாக எதையுமே சொல்லாதபோது அவசரப்பட்டு நான் அறிவில் ஆதவன் என்றும் புத்தியில் ஆதவன் என்றும் மறைமுகமாக புகழுகிறீர்களே..!///
ஏசுவின் சொல்படி, “பரியாசக்காரனாய் இராதீரும்”. உங்களை அறிவில்லாதவன் என்று எங்குமே, யாருமே குறிப்பிட்டுச் சொல்லாத போது ஏன் உங்களுக்கு இப்படி ஓர் ஆசை? தற்புகழ்ச்சி எல்லாம்?
//நான் இதுவரை இங்கே கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் ஏதுவும் செய்யவில்லை; நான் எந்த மதத்தையும் சார்ந்தவனுமல்ல; என்னுடைய நம்பிக்கைகளை முன்னரே சொல்லியிருக்கிறேன்; என்மீது எந்த முத்திரையும் யாரும் குத்த முடியாது;//
இதைப் பற்றி நான் என்ன சொல்வது? நீங்கள் உங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் ஒன்றும் சொல்வதற்க்கில்லை!
ஆனால் உங்களின் பதிவை நகல் எடுத்து மேற்க்கோள் காட்ட நான் கர்சரை உங்கள் பதிவின் மீது வைத்த போது, ” glady ” என்ற எழுத்துக்களின் மீது கர்சரை வைத்த போது, அது ஒரு புதிய வலைத் தளத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.
ChristianBrahmin
அங்கே கீழ்க் கண்டவாறு குறிப்பு இருந்தது.
——–
ChristianBrahmin
“I am a new Creation in Christ..!” “கிறிஸ்துவில் புது சிருஷ்டியாக..!”
//About Me
christianbrahmin
நான் பிராமணக் குடும்பப் பின்னணியிலிருந்து கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று சமூகப் பணியாற்றுகிறேன்; வாழ்க்கையில் மனச் சோர்வினால் துவண்டு போனவர்களுக்கு இறை ஒளியினை ஏற்றும் ஆலோசனைப் பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறேன்//
——–
“பிராமணக் குடும்பப் பின்னணியிலிருந்து” என்பது என்ன?
அலுவலகத்தில் உங்களின் இருக்கைக்குப் பினனால் உள்ள இருக்கையில் அமர்ந்து பணி செய்பவர் பிராமண வகுப்பை சேர்ந்தவரா?
அல்லது உங்களின் வீட்டின் பின்னால் உள்ள வீட்டில் குடி இருப்பவர் பிராமண வகுப்பை சேர்ந்தவரா, எப்படி நீங்கள் பிராமண குடும்பப் பின்னணி உள்ளவர் என்பது பற்றி எல்லாம் நீங்கள் மேலதிக விவரங்களை வாசகர்களுக்கு தருவதும் தராததும் உங்கள் விருப்பம்.
நான் கருத்துக்கள் பற்றி விவாதிப்பவன்!
ஆனால் “கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று” என்று உங்கள் தளத்திலே நீங்களே உங்களை பற்றி விளக்கி விட்டு இங்கெ வந்து
“நான் எந்த மதத்தையும் சார்ந்தவனுமல்ல; என்னுடைய நம்பிக்கைகளை முன்னரே சொல்லியிருக்கிறேன்; என்மீது எந்த முத்திரையும் யாரும் குத்த முடியாது”
“கிறிஸ்தவ மார்க்கத்தின் வழிமுறைகளை ஏற்று” என்ற முத்திரையை இட்டுக் கொண்டது யார்? நீங்கள் தானே?
//“இந்தியா” எனும் புண்ணிய பூமியில் இது ஒரு தேசமாக உருவாகும் முன்னரே //
இன்றல்ல, நேற்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக இந்திய மக்கள் எல்லோரும் ஒன்றாகவே, இந்தியராகவே இருந்துள்ளனர்.
குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு எப்பொழுதும் ஒன்றாகத் தான் இருந்தது.
வெவ் வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சில இந்திய அரசியல் வாதிகாளை குறிப்பிட விரும்புகிறேன்.
மனு சோழன்: தான் மகன் ஒரு கன்றை விபத்திலே கொன்றதற்க்காக, தன் மகனையே, தேரை யெற்றி மரணம் அடைய வைத்த- நீதி தவறாத மன்னன் – வேறு எங்காவது உண்டா?
கரிகாலன்: மக்கள் வரிப் பணத்தை வைத்து , மாட மாளிகை , கூட கோபுரம் என்று தனக்கு வசதி செய்து கொள்ளும் மன்னர்களி ன் நடுவில், தன் கரூவூலப் பணத்தை எடுத்து காவிரியில் மக்கள் நன்மைக்கு ஆக ஆணை கட்டிய மாமன்னனின் கருணை- உலகில் பிற நாடுகளில் காண்பது அரிது!
அசோகர்- மாவீரன் அலெக்சாண்டர் மறைவுக்குப் பின், இந்தியா உலக அரங்கில் ஒரு பெரிய வல்லரசாக உருவாக்கும் சூழல் இருந்தது. அதே நோக்குடன் தான் கலிங்கப் போரை நடத்தி வெற்றியும் கண்டான். வேறு யாராக இருந்தாலும், அந்தப் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல படை எடுப்புகள் போர்கள் , என மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் முனைப்பு காட்டி இருப்பான். ஆனால் அடுத்தவருக்கு துன்பம் தர விரும்பாத இந்தியனின் மன உணர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளியே வந்து , பிறகு நடந்ததும் ஒரு சரித்திரம் தான்!
அக்பர்: தீவிரமான கட்டுப்பாடு உடைய ஒரு மதத்தைச் சேர்ந்தவர்! அவருடைய பாட்டனார் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர், அப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணி உடைய அக்பர், இந்திய மக்களின் சகிப்புத் தன்மை, அமைதி கருத்துக்களை தன் நல்ல உள்ளத்தில் பிரதி பலிக்கச் செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.
இப்படியே இன்னும் பல இந்திய அரசர்களை குறிப்பிடலாம். நேரம் இல்லாததால் அவர்களை குறிப்பிட இயலாததற்கு, அவர்களிடம் மன்னி ப்பு கோருகிறேன்.
இதோடு இன்னும் காந்தி, காமராசர், கக்கன்,ஜீவா… இப்படி பல சமீப கால தலைவர்களையும் சொல்ல முடியும்!
இவர்கள் எல்லாம் இப்படி தன்னலம் இல்லா தியாகியாக வாழும்படிக்கான கருத்துக்கள், இந்தியாவில் உள்ள எல்லா மக்களின் மனக் கருத்துக்கள் தான்!
அசோகர், அக்பர் எல்லோரின் கருத்தும் , எண்ணமும் 8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் கருத்துக்கள் தான்.
எனவே அரசர்கள் யார் ஆண்டாலும், ஆட்சி மாறினாலும், சோழர் ஆண்டாலும், மௌரீயர் ஆண்டாலும், முகலாயர் ஆண்டாலும் , ஆங்கிலேயர் ஆண்டாலும் குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு ஒன்றாகத் தான் இருந்தது.
அந்த மக்களின் எண்ணம் தான் காந்தியை, அக்பரை, அசோகரை, கரிகாலனை உருவாக்கியது.
கரிகாலன், அசோகர், அக்பர், காந்தி, விவேகானந்தர் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பண்பாடு, குண நலன் இவைதான், அவர்களின் மனதில் தியாக எண்ணங்களை உருவாக்கியது.
இந்த அப்பாவி மக்களின், நல்ல சனத்தின் நன்மைக்காகவே, அவர்கள் சுய நலத்தை விட்டு தியாக வாழ்க்கை மேற்கொண்டனர்.
அப்படிப்பட்ட மக்கள் சன நாயக அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கிய போது, அது இந்தியாவாகத் தானே உருவாகும்?
எனவே வெறும் பொருளாதார, பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் இந்திய மக்கள் இணைந்து வாழ வில்லை. இது ஒரே எண்ணம், உணர்வு உடைய மக்களின் இணைப்பு என்றே நான் கருதுகிறேன்!
இந்தியாவின் ஒற்றுமை, 115 கோடி இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது.
சில ஐக்கியங்கள் ( Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன.
ஆனால் இந்தியாவோ, ஒரே பூனை ஈன்ற வெவ்வேறு நிறமுள்ள பூனைக் குட்டிகளைப் போன்றவையாதலால்,
உலகிலேயே வெவ் வேறு மொழி பேசும், ஒத்த சிந்தனையுள்ள மக்கள் ஒன்று பட்டு வாழும் அதிசயமாக உள்ளது.
இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் 115 கோடி மக்கள்தான்!
இன்றல்ல, நேற்றல்ல, அம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக இந்திய மக்கள் எல்லோரும் ஒன்றாகவே இந்தியராகவே இருந்துள்ளனர்.
இவ்வளவு சிறப்புடைய நாடு இந் நாடு. அவ்வளவு சிறப்பான சமூகம் நமது இந்திய சமூகம். ஆனால் அதை சீர் கெட்டதாக சித்தரித்துக் காட்டத் துடிக்கிறீர்கள்.
//இன்றைக்கு ஈராக் எனப்படுவது அக்கால பாபிலோன் நகரம்; அது ஒரு பெரிய சாம்ராஜ்யமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது; அந்த சாம்ராஜ்யத்தின் கீழ் இந்தியாவும் இருந்துள்ளது;//
எந்த ஆதாரமும் இல்லாத பச்சைப் பொய்யை வாய்க் கூசாமால் சொல்லுகிறார். மதக் காழ்ப்புணர்ச்சிக்கு எல்லையே இல்லையா?
Back with a bang Glady..
a) India was under Babylon.. Amazing History Knowledge
b) Talking about yuan chwang.. ( This guy came to India during 6th Century Ad).. Buddha was born atleast 700 years before that.
c)Even if glady care to read some of the articles of Arvindan and Jatayu, it has debicted how Vasudhava Sthanmbam was erected By Babylonian / Greek general around 260 BC.
d) The greatest constraint Max Mueller and his cronies had was to put every thing they saw in India after 4000 BC.. We all know why ?
e) What is the key Historical evidence of Aryan Invasion ? Glady can enlighten us. The cronies changed the Aryan Invasion to Aryan Migration theory.
f) There are collective fables ( Not a Myth Glady) within red Indian People group about their eradication by Gods Messangers. There is no single collective fable about Aryan Invasion even in the remotest so called Dravidian Land.. Oh My god did I give out something, the new GU Popes and Caldwels under the auspices of Glady will create such fables and call then Fifth Veda.
g) You have already given the evidence, when the messangers of God invaded a land they chronicled the people of that place. What we are saying, there is no Race called Aryans. It is in the minds of Maxmueller and his Cronies. Dont come back saying the term Aryan was used in Indian literature before Max Mueller. Do some research and you will identify the context of that word.
h) The Chinese ( also made of many languages ) history can be got only from their Literature/ Epics etc. Greeks History can be got only from Greeks Literature/Epics etc.. Why then you are looking for Indian history outside India. Vedas depict Saraswati river, talk about a vast land ( because of our overdoing dharma we lost most of them — read Prithivarj history and the blunder he made in 1192), talk about many different kinds of people ( no race my friend) living under different kingdoms, beautifully picturising the astronomical evidences about the time ( if time permits and your religion permit read David Frawleys– here I could have suggested Indian authour because you will be pleased I am suggesting Frawley)..
Regards
S Baskar
//ஆனாலும் கூட நான் குறிப்பிட்டது தனிப்பட்ட நபர்களைக் குறித்து அல்ல; மக்கள் குழுக்களை(People Groups)க் குறித்தே; அதாவது தமிழர் என்பது மிகப் பெரிய குழுவானால் அவர்களில் சமுதாய ரீதியாக கலாச்சார ரீதியாக பல உட்பிரிவுகளிருக்கும்; அதிலும் குடும்ப சம்பந்தமான பிரிவுகளிருக்கும்;(ரெட்டியார்,செட்டியார்..இப்படி) //
ஆனால் பெரும்பாலாக எல்லோருக்கும் ஒரே வகையான கலாச்சாரம்தான். குழந்தை பிறந்தவுடன் தொட்டில் போடுவார்கள். பிறகு ஏதாவது ஒரு கோவிலிலே முடி இறக்குவார்கள். பிறகு ஒரு வருடம் ஆனவுடன் அதற்கு முதல் வருட ஆண்டு நிறைவும், காதணி அணிவித்தல்,பிறகு பள்ளிக்கு அனுப்புதல், வயதானவுடன் திருமணம் முடித்தல், பெரும்பாலான திருமணங்கள் சாகும் வரை கணவன், மனைவி பிரியாத குடும்ப வாழ்க்கை வாழ்தல் –
இதுதான் ரெட்டியார், செட்டியார், முதலியார்….. , ஆகியோருக்கு மட்டும் அல்ல யாதவ், குர்மி, கவுடே ஆகிய இந்தியாவில் உள்ள எல்லா சாதியினருக்கும் கலாச்சாரம் ஒன்றுதான். சடங்கு முறைகள் சிறிது வேறுபடும்.
இதில் முதலியார்கள் குடும்ப வாழ்க்கை, பிருகிபார்கள் டேட்டிங் வாழ்க்கை என்று இல்லை.
பெரும்பான்மையான பெண்கள் – அவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும்- கண்ணகியைப் போல, சீதையைப் போலவே வாழ்பவர்கள்!
எனவே இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை கண்ணகி, சீதை, நளாயினி, தமயந்தி… போன்ற எண்ணற்ற கற்புக் கரசிகள்தான். இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெண்களின் வாழ்க்கைக்கான அடிப்படை தத்துவம் கண்ணகியும் , சீதையும் தான்.
எனவே இங்கெ யாரும் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும், இந்தியாவில் விபாச்சாரக் கலாச்சாரத்தை வாழ்க்கை முறையாக்க முடியாது.
இந்தியர்கள் பல பிரிவாக இருப்பராகள். ஆனாலும் அடிப்படை ஒன்றுதான். எப்போது சேர வேண்டுமோ அப்போது சேருவார்கள்.
இந்தியாவிலேயே பிறந்தும், இந்தியாவை அறியாமல்,
குளத்திலே தாமரைப் பூவுக்கு அருகில் வாழும் தவளை, தாமரைப் பூவின் சிறப்பை அறியாமல் வாழ்வது போல வாழக் கூடாது.
//நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை பரிதாபமாகச் சொன்னது போல (அவர் மராட்டியராம்,கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவராம், தமிழ்நாட்டில் தான் அதிகம் சம்பாதித்தாராம்;அவர் மராட்டியரா?கன்னடரா? தமிழரா?) என்னை யாருமே ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது என் தவறல்ல; இதனால் நான் அடையாளமில்லாதவனுமல்ல, அடையமுடியாதவனுமல்ல;//
ரஜினி காந்த், கமல ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா,மாதவன், சேரன், ஜெயம் ரவி,தனுஷ், பரத், சிம்பு, வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, சந்தானம், ….. ,
நமீதா, சினேகா, திரிஷா, தமன்னா, அசீன் , நயன தாரா, மீரா ஜாஸ்மின், பாவனா, பத்ம பிரியா, கோபிகா, குஸ்பூ, சிம்ரன், ஜோதிகா……..
இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள நலம் பல பெற்று வாழட்டும்.
ஆனால் இந்தியாவின் அடிப்படை இவர்கள் அல்ல.
காந்தி, கலாம் போன்றவர்கள் தான் இந்தியாவின் அடிப்படை. அவர்கள் கூறியுள்ளதைப் படியுங்கள். அப்போதுதான் இந்தியாவை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
பொதுவாகவே ஒன்னு சொல்லுறேன், கேளுங்க. பணக்காரன் எங்க இருந்தாலும் அவன் பணத்தை பிடுங்க பலர் முயற்சி செய்வாங்க. அதுக்காக அவனை பலதும் சொல்லி மிரட்டுவாங்க. அதிலேரிந்து அவன் தப்பி தன்னையும், தன பணத்தையும் காப்பாத்திக்கனும்னா பலருக்கும், ஜால்ரா போட்டு, கூழைக் கும்பிடு போட்டு தான் ஆகணும்.
எங் கையிலே பணம் இல்லை. நான் கலைங்கர் முதல் சோனியா வரைக்கும் காய்ச்சி எடுப்பேன். நானே நாளைக்கு நிறைய பணம் உள்ளவனா, எல்லோருக்கும் தெரியற அளவுக்கு பணம் உள்ளவனா ஆயிட்டா, அந்தப் பணத்தைக் காப்பத்த நாலு பேரு கிட்ட பல்லைக் காட்டித்தான் ஆகணும்.
எனக்கு பல ஷாப்பிங் காம்பிலேக்ஸ் மும்பையிலே இருந்தா, அங்க இருக்கிற அரசியல் வாதி கிட்ட பல்லைக் காட்டி பணம் குடுக்கோணும், அவன் இன்னும் அதிகமா பணம் கேட்பான். கொடுக்கலைனா, டேய் நீ தமிழ் காரன்னு சொல்லி உன்னை கட்டம் கட்டுவேன் பான்,
தெரு ரவுடி முதல் ஸ்டேட் ரவுடி வரை,
போலீசு, அதிகாரி என்று எல்லோருக்கும் கப்பம் கட்டிதான் வாழா முடியும். பணம் அதிகமா கேக்குரானுகளேனு மனசு வருத்தப் படும் போது புலம்பல் வரத்தானே செய்யும்.
கப்பம் கட்டினா, எட்டப்பன், சேதுபதி போல இருக்கலாம்.
எதிர்த்துக் கேட்டா கட்ட பொம்மன் போல இறக்கலாம்.
இதை எல்லாம் சரி செய்யத்தான் காந்தி, கலாம், பட்டினத்தார், அசோகர், ஆதி சங்கரர், விவேகானந்தர் , தியாகராசர், பாரதி, வ.வு.சி….. இவர்களைப் பத்தி எல்லாம் அடிக்கடி எழுதுனா,…. நம்பளை திட்டுராங்க.
எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கு!
ஆனா உங் கூட மாரடிக்கவே நேரம் சரியா இருக்கு!