முகப்பு » ஆன்மிகம், பிறமதங்கள்

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

அச்சிட அச்சிட

ஜி.யு.போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும்,  Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போலவும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார்.

போப் தாமும் தம்முடன் இருந்து மணிவாசகரும் கண்டு புத்துணர்வு பெற்றதாகக் கூறும் ஓவியங்களுள் கிறித்துவின் பிலாக்கணம் அல்லது ஒப்பாரி என்னும் இந்த ஓவியமும் ஒன்று. இதில் இயேசுகிறிஸ்து பிணமாகக் கிடக்கிறார்

img_6719_-_milano_-_s__giorgio_al_palazzo_-_b__luini_-_cappella_ss__sacramento_1516_-_foto_giovanni_dallorto_-_8-mar-2007சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசுகிறித்துவின் உடல் தரையில் கிடத்தப்பட்டுள்ளது. அவருடைய மரணத்துக்குத் துக்கப்படுவோர் ஒருவித நம்பமுடியாத குழப்பமான மனநிலையில் உள்ளனர். ஸ்நானகன் யோவான் தன் செயலற்ற நிலையில் கைகளை பரப்பி விரித்துக்கொண்டு நிற்கிறார். தாயாகிய கன்னி மேரி பிணமாகியுள்ள தன் மகனின் தலையை மடியில் கிடத்தி உயிரின் மிச்சம் ஏதேனும் உள்ளதா என மார்பைத் தடவிப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். மாகதலனா மேரி இயேசுவின் பாதங்களை வருடித் தேய்த்துக் கொண்டுள்ளாள் இந்த ஓவியம் ChapeLல் உள்ள கூக்குரல் மிக்க(most auditory) காட்சிகளில் ஒன்று. துக்கிப்பவர்களின் ஓலம் அந்த நிலப்பரப்பு முழுவதும் பரவுகின்றது. அந்த அவலப் புலம்பல் ஆகாயத்தில் சூழ்ந்துள்ள தேவதைகளின் கூக்குரலையும் ஊடுருவிச் சிதைக்கின்றது.

இந்த ஓவியத்தைப் போல இயேசு கிறித்துவின் மரணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பல உள்ளன.

இந்த ஓவியம் அன்புடையவர் ஒருவரை இழப்பதினால் நேரிடும் அவலத்தின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் அற்புதக் கலைப்படைப்பாக இருக்கலாம். ஓவியத்தில் உள்ள அவல உணர்வு அதனை ஒன்றிக் காணுவோரின் உள்ளத்திலும் தொற்றிப் படருகின்றது என்பதும் உண்மை எனலாம். அந்த ஓவியத்தில் உள்ளோர் போடுகின்ற கூக்குரல் நம்முடைய செவிக்கும் எட்டுகின்றது என்பதும் உண்மையே.

ஆனால் இந்த ஓவியத்தால் ஒருவன் அடையக் கூடிய ஆன்மலாபம் என்ன? இதனை மனத்திலிருத்திக் காண்பவருக்கு அவல உணர்வால் மனச்சோர்வும் திகைப்பும் உண்டாகுமே அன்றி ஆன்மநெறிக்கு வேண்டிய உறுதியும் மன எழுச்சியும் தோன்றாது. மணிவாசகர் மானசீகமாகத் தம்மோடு இருந்து இந்த ஓவியத்தை கண்டு மெய்யுணர்வு பெற்றார் எனப் போப் கருதுவது விந்தையாக உள்ளது. அந்தமில்லா ஆனந்தம் பெற்ற மணிவாசகப் பெருமானை இழிவு செய்வதாகவே தோன்றுகிறது.

நம்முடைய பெரியோர்கள் எத்தகைய மரணம் ஆகாதெனக் கூறினரோ அத்தகைய மரணத்தையே இயேசு கிறிஸ்து சந்தித்துள்ளார்.

தமிழ் இந்துக்கள் பாராயணம் செய்யும் சிறுநூல்களில் ஒன்று அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி. அதில், அருணகிரிப் பெருமான்,

“விண்ணுலகிற்குத் தலைவனாக இருக்கின்ற பெருமானே, என்னுடைய மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தார் ஒன்று சேர்ந்து கூ கா என்று ஓலமிட்டு அழும்படி, (இந்தப் பருவுடலை விட்டு எமனாலே எனது உயிர் பிரிக்கப்பட்டு) நான் சாகாமல் இருக்கும்படி எனக்கு மெய்யறிவை உபதேசித்தவனே! உனக்கு வணக்கம்.” எனப் பாடுகின்றார். அதாவது முருகனோடு அத்துவிதமாகக் கலத்தலினால் உண்டாகின்ற மெய்யறிவு பெற்றவர்கள் நமனுக்கு அஞ்சார், ஆளாகார் என்பது கருத்து.

“கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவி
த்யாகா சுரலோ கசிகா மணியே”

இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்.

‘அறிவு அழியவும் , மயக்கம் பெருகவும், பேச்சு அடங்கவும் தாயும்  (ஓவியத்தில் கன்னிமேரி) மனைவியும் (மக்தலேன்மேரி – இயேசுவுடன் இந்த உறவு உண்டு எனக் கூறப்படுகிறது) பக்கத்திலேயே இருந்து அச்சமுற்று அழ, உறவினரும் அழ, நெருப்புக்கு ஒப்பான யமன் என்னை அழையாதபடி— உன் திருவடியில் அணுக எனக்கு வரம் தந்தருளுவாயாக!

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக            அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ உறவுமழ
அழலினிகர் மறலியெனை  யழையாதே

- பழநித்திருப்புகழ்

சிவஞானியர்களின் அந்திமக் காலத்தில் அவர்களுடைய உயிரை அழைத்துச் செல்ல சிவகணங்களே வருவர், எமதூதர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.

“நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணமே”

எனத் திருமூலநாயனார் திருமந்திரம் 2968ஆவது பாடலில் கூறியருளியுள்ளார்.

மெய்ஞ்ஞானியர் சிவமே ஆனவர்கள். சிவம் எல்லா உயிர்களுடனும் கலந்து எங்கும் நிறைந்து (வியாபகமாக) உள்ளது. அதனால் சிவமேயான மெய்ஞ்ஞானியர்கள் அனைத்துயிருமாகவும் இருப்பார்கள். இந்தநிலை பாவனைக்கு எட்டாதது. இதனை, அருணகிரிநாதர்,

“எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீதம் அருள்வாயே”

எனக் குகப்பெருமானிடம் வேண்டுகிறார். இதனையே நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில், முருகப்பெருமானின் திருவருள் பெறுவதற்குப் பக்குவப்பட்ட தொண்டனை நோக்கி ‘உலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசில்” இதனை நீ பெறுவாய் என ஆற்றுப்படுத்தினார்.

‘எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதயபாவ னாதீதத்தை’ப் பற்றி இயேசுவும் அறிந்திருக்கக் கூடும். அதனால் தான், ‘அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்’ ((யோவான் 6:56) எனக் கூறினார் போலும். ஆனால் அந்த நிலையை அவர் எய்தவில்லை.

எல்லா உயிர்களிலும் கலக்கும் நிலையைப் பெற்றிருந்தால் உடலை விட்டு அவருயிர் நீங்கி இறையுடன் கலக்கும்போது, இன்பானுபவம் இன்னதென்றறியா வகையில் எல்லா உயிர்களும் அனுபவித்திருக்கும். இது தமிழ் இந்து உணர்த்தும் உண்மை.

சைவசமயாசாரியர் நால்வரில் திருநாவுக்கரசர் பெருமான் தம் முதுமைக் காலம் வரை வாழ்ந்தவர்;. சிவமாகவே திகழ்ந்தார். தம்முடைய 85ஆம் அகவையில், “புண்ணியா ! உன்னடிக்கே போதுகின்றேன்” எனப் புகன்று உடலை நீத்து,”நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டவரசு அமர்ந்திருந்தார்” இதுதான் சைவம் கூறும் பரமுத்தி. அப்பரடிகள் இவ்வாறு பரமுத்தி இன்பப்பேறு அடையவே, “ விரிஞ்சன் முதல் யோனிகளா யினவெல்லாம் உள்நிறைந்த பெருமகிழ்ச்சி தானிறைந்த”ன என்று கூறுகிறார், சேக்கிழார் பெருமான்.

யோனிகள் என்றது எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் என சைவ சாத்திரங்களில் வகுக்கப்பட்ட யோனி பேதங்களை உடைய உயிர்களை. யோனிகள் என்றது வகைகளையும் எல்லாம் என்றது தொகைகளையும் குறித்தன.

மெய்ஞ்ஞானியர் சிவத்தொடு கலக்கும்போது உயிர்களுக்குத் தோன்றும் இன்ன தென்றறிய வரா இன்பநிலையைச் சிவக்கவிமணி பின் வருமாறு விளக்குகின்றார்:

‘நீர் நிறைந்த வாவிக்குள் பல உயிர்களும் வாழ்வனவாக , அந்நீர் நிலையினுள் ஒரு முட்டை வெடிக்குமாயின், அதனால் நீர் அசைவுபெற, அந்த அசைவு கலந்து, அலை உருவமாக நீர்பரப்பு முழுமையும் உழக்க, அதனால் அங்குத் தங்கும் ஏனை உயிர்கள் யாவும் தாக்கப்படுதல் போல, நாயனார் சிவநிறைவுக்குள் எய்த, அதனால் அந்நிறைவினுட் கிடந்த எல்லா யோனிகளும் தாக்கப்பட்டு ஆனந்தம் அடைந்தன என்பதாம்.’

இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே. 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , ,

 

134 மறுமொழிகள் கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

  1. Christian on October 28, 2009 at 11:30 am

    //ஸ்நானகன் யோவான் தன் செயலற்ற நிலையில் கைகளை பரப்பி விரித்துக்கொண்டு நிற்கிறார்.//
    ஸ்நானகன் யோவான் ஏசுவுக்கு முன்பே இறந்தது தெரியாதா? ஸ்நானகன் யோவானுக்கும், சீடன் யோவானுக்கும் வித்தியாசம் தெரியாத இவர் கட்டுரையை எதைக்கொண்டு பாராட்டுவது?

    (Comment edited & published)

  2. திருச்சிக் கார‌ன் on October 28, 2009 at 2:28 pm

    “ஆலையில்லா வூருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்பதை போல,

    மனித இனத்தையே அழிக்கும் அளவுக்கு காட்டு மிராண்டிக் கருத்துக்களையும், வெறுப்புக் கருத்துக்களையும் உருவாக்கிய பாலைவன பிரதேசத்தில், ஓரளவுக்கு நாகரீகக் கருத்துக்களை அறிமுகப் படுத்த முயன்றவர் என்ற வகையிலே தான் இயேசு கிறிஸ்துவை நோக்குகிரோமே அல்லாது அவர் பெரிய அளவிலே ஆன்மீக விடுதலைக்கான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    இயெசுவின் க‌ருத்துக்க‌ள் எல்லாம், மனித‌ன் அன்றாட‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டிய‌தைக் குறித்த‌ அறிவுரைக‌ள். ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளியில் முத‌ல் வ‌குப்பில் சேர்ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஆசிரியை, “ப‌க்க‌த்தில் இருக்கும் மாண‌வ‌னைக் கிள்ள‌க் கூடாது, தின‌மும் காலையில் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌தும் ஆசிரிய‌ருக்கு வ‌ண்க்க‌ம் செலுத்த‌ வேண்டும்” என்ப‌து போன்ற‌ அறிவுரைக‌ள்!

    பெரிய‌ ஆன்மீக‌ க‌ருத்துக்களை வெளிப்ப‌டுத்துத‌ற்க்கான‌ த‌ளம் அவ‌ருக்கு கிடைக்க‌வில்லை. புத்தர் வெளியிட்ட ஆன்மீக உண்மைகளோடு ஒப்பிட்டால், இயேசு கிறிஸ்து ஆன்மீகத்திலே ஒரு கருத்தும் கூறவில்லை என்றே கூற லாம்.

    ஆனாலும் எப்போதும் ஒற்றை இலக்க மதிப் பெண் எடுக்கும் மாணவன் ஜஸ்ட் பாஸ் மார்க்கு வாங்கி பாஸ் ஆனவுடன் துள்ளுவதைப் போல, சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் உலகெங்கும் ஜல்லி அடிக்க ஆரம்பித்தனர்.

    நியூ யார்க் டயம்ஸ் விவேகானந்தர் சிக்காகோவில் பேசியவுடன் இவ்வளவு சிறந்த அறிங்கர்கள் நிறைந்த நாட்டுக்கு, மதப் பிரச்சாரகரை அனுப்பவது எவ்வளவு மூடத் தனம் என்று எழுதியது.

    இதைப் பார்த்தும் வெட்கம் வரவில்லை சுவிசேஷ சூழ்ச்சியாளருக்கு, புத்தியும் வரவில்லை.

  3. Lenin on October 28, 2009 at 4:17 pm

    மக்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கும் இடங்களில் முக்கியமானது வழிபாட்டுத் தலங்கள். அங்கே மக்கள் காணும் காட்சிகள் அவ நம்பிக்கையத் தரும் எனில் அது சுடுகாட்டிற்கு ஒப்பானதே. இக்கருத்தை கட்டுரை ஆசிரியர் மிக மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    கட்டுரையின் கருத்தே எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. கட்டுரைக்காக காட்டப் பட்டுள்ள படத்தில் உள்ள ஒருவன் சீடனா, ஸ்நாநகநா என்பது ஒன்றுக்கும் உதவாத ஒரு விஷயம்.

    லெனின் .

  4. மன்னாரு on October 28, 2009 at 6:07 pm

    ஐய…தோடா! அலோ, கிறிஸ்டியன்! ஏஸ்து கிறுஸ்துவே டுபாகூர் பார்டின்றப்போ ஸ்நானன் ஆரா இர்ந்தா இன்னா? சப்ப மேட்டர ஸொல்ல வன்டியே! ஆருக்கு வேனும் கிறுஸ்துங்க பாராட்டு? உங்க பாராட்ட தூக்கி குப்பைல போடு, அஆங்!

    முனைவரு ஸோக்கா ஸொல்லிகராரு பாரு மேட்டரு, அதுக்கு பதில் ஸொல்லு வாத்யாரே!

    பதில் ஸொல்ல தாவல….அப்பாலிகா இன்னா பேச்சு? ஸொம்மா போவியா…
    வண்டாரு… பேசிகினு.

  5. krishna on October 28, 2009 at 7:14 pm

    எவ்வளவு நேர்த்தியான கட்டுரை .. ஆசிரியர் ஐயா அவர்கள் வாழ்வாங்கு வாழ அந்த முருகனை வேண்டுகிறேன்.

  6. Satish on October 28, 2009 at 9:47 pm

    Wonderful Article Sir. Thanks for sharing such things and enlightening us.

  7. வள்ளுவன் on October 28, 2009 at 10:52 pm

    அருணகிரிநாதர், மணிவாசகர், அப்பர் பெருமான் போன்ற அடியார்களின் பாடல்களை தந்த ஆசிரியர்களுக்கு நன்றி. ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை. மேலும், நாமும் கிறிஸ்தவ/முகமதியர்களைப்போன்று மற்ற மதங்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் உள்ளது? சற்றே சிந்தியுங்கள்! திருவள்ளுவரோ, நாயன்மார்களோ, ஆழ்வார்களோ நம்மை அடுத்தவர்களை கேவலப்படுத்தும்படி சொல்லவில்லை!

    நமச்சிவாய வாழ்க!!

  8. Christian on October 28, 2009 at 11:53 pm

    //–கட்டுரையின் கருத்தே எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. கட்டுரைக்காக காட்டப் பட்டுள்ள படத்தில் உள்ள ஒருவன் சீடனா, ஸ்நாநகநா என்பது ஒன்றுக்கும் உதவாத ஒரு விஷயம்.–//
    நண்பர்களே,
    ஒரு கட்டுரையை, ஒருவர் பதிக்கும்போது அந்த துறையில், ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் தேவை. யோவான் ஸ்நானகன், சீடன் யோவான் இருவரும் பைபிளில் மிக முக்கியமானவர்கள். இது கூட தெரியாமல் இவர் எப்படி இதை போல் விமர்சிக்கலாம் என்பதே என் கேள்வி.
    இதை தவிர, இயேசுவின் கொடூரமான மரணமும், உயிர்த்தெழுதலும்தான், கிறிஸ்துவத்தின் அடித்தளம். அந்த ஓவியம் சித்தரிப்பதைவிட, இயேசுவின் மரணம் கொடூரமானது. ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்.
    நாட்டை காப்பாற்றும் ஒரு வீரன், குண்டு வெடித்து உடல் கருகி இறந்து, அவன் குடும்பத்தார் கதறி அழுவதை இப்படி விமர்சிப்பீர்களா? கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, இயேசு மக்களுக்காய் கோர மரணமடைந்தவர்.
    கட்டுரை ஆசிரியர் கூறும் சித்தர்கள் இத்தகைய மரணம் தனக்கு வேண்டாம் என்று விரும்பி இருக்கலாம். யாருமே இந்த கோர சாவினை அடைய விரும்ப மாட்டார்கள். அதற்காக, அவரின் மரணத்தை கொச்சை படுத்தலாமா? அவருக்கும் மகதலேனா மரியாளுக்கும் இருக்கும் உறவையும் கொச்சை படுத்தலாமா? ஒரு குரு சிஷ்ய உறவை, சில புரளிகளின் காரணமாக கணவன் மனைவி உறவென கூறலாமா? சில நூறு சுவிசேஷகர்கள் உங்களை புன்படுத்துவதினால், பல கோடி கிறிஸ்துவர்களை நீங்கள் புண் படுத்த வேண்டுமா?
    நீங்கள் வாழ்வாங்கு வாழ அந்த இயேசுவை வேண்டுகிறேன்.

  9. பிரதீப் பெருமாள் on October 28, 2009 at 11:55 pm

    மதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் அவர்களே,

    எனக்கு கோவம் கோவமா வருது திராவிடம் பேசி தமிழை தவிட்டுக்கு வித்தவனுங்களை பாத்து! கருணாநிதி மட்டும் என் எதிரில் வந்தார் அப்பிடின்ன நான் ஒன்னே ஒன்னு கேக்கணும் அவர் கிட்ட,அது என்னனா, “ஏன் ஐயா எனககு தமிழை ஒழுங்கா பள்ளியில் கற்று கொடுக்க சரியான நடவடிக்கை எடுக்கலை”.என்று!

    என்னை மன்னிச்சுடுங்க ஐயா ! எனககு ரொம்ப விஷயம் நீங்க எழுதனது படிக்க முடிஞ்சது ஆனா புரிஞ்சிக்க முடியலை! அடுத்த முறை எழுதும் போது விளக்க உரையும் சேர்த்து எழுதிடுங்க ஐயா, தயவு செய்து ! இப்போதைக்கு இந்த கட்டுரையை முழுமையா புரிஞ்சிக்கரவரைக்கும் நான் 100 முறையாவது படிக்க போறேன்!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  10. ram on October 29, 2009 at 6:30 am

    //மன்னாரு
    28 October 2009 at 6:07 pm//
    ஆகா மன்னாரு வந்திட்டீங்களா, எங்க ஆளக்கானோமேன்னு பாத்தேன்.

    ////வள்ளுவன்
    28 October 2009 at 10:52 pm
    ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை. மேலும், நாமும் கிறிஸ்தவ/முகமதியர்களைப்போன்று மற்ற மதங்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் உள்ளது? சற்றே சிந்தியுங்கள்! திருவள்ளுவரோ, நாயன்மார்களோ, ஆழ்வார்களோ நம்மை அடுத்தவர்களை கேவலப்படுத்தும்படி சொல்லவில்லை!

    நமச்சிவாய வாழ்க!///

    வள்ளுவன் அவர்கள் சரியாகச் சொல்கிறார். நாம் தூற்றுபவர்களுக்கு புரியவைக்கலாம். கட்டுரைகளும் இந்து தர்மத்தை இதிகாசத்தை விளக்கும் வகையிலேயே தொடர்ந்து அமைந்தால் இன்னும் நலமாக இருக்கும்.

    (Edited.)

  11. திருச்சிக் காரன் on October 29, 2009 at 9:26 am

    இங்கே நண்பர்கள் வள்ளுவன், ram ஆகியோர் எழுதியதை முனைவர் ஐயா, தயவு செய்து பரிசீலிக்கவும்.

    அத்வேஷ்டா என்பது இந்துக்களின் மனதில் ஆழமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

    இந்துக்கள் இந்து மத வழியை பின்பற்றுவதே சிறந்தது. நாம் சுவிசேசக சூழ்சியாளரைப் போல , அவர்களின் வழியை பின் பற்ற முடியுமா?

  12. திருச்சிக் காரன் on October 29, 2009 at 9:36 am

    இந்து மதம் விவேகனந்தர், அப்பர், சங்கரர், கிருட்டினர் போன்றவர்களாலேயே வழி நடத்தப் பட்டு வந்துள்ளது.

    திடீரென்று இந்து மதம் சோடா புட்டி வீசும், குவார்ட்டர் கோவிந்தர்களின் கையில் சிக்கி விட்டதோ எனத் தோன்றுகிறது.
    இந்து மதத்தை சாக்கடையில் கொண்டு போய் சேர்த்து விடாதீர்கள் ஐயா!

    (Comment edited & published)

  13. Somu on October 29, 2009 at 3:19 pm

    /அருணகிரிநாதர், மணிவாசகர், அப்பர் பெருமான் போன்ற அடியார்களின் பாடல்களை தந்த ஆசிரியர்களுக்கு நன்றி. ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை./
    Dear Editor and Author,
    I fully accept the views of Valluvan statement. Shaivam is religion of tolerance. Kindly post more article on our Thirumurai’s and Saivasidhantham.

    Somasundaram

    (Comment edited & published)

  14. Lenin on October 29, 2009 at 4:36 pm

    //இயேசுவின் கொடூரமான மரணமும், உயிர்த்தெழுதலும்தான், கிறிஸ்துவத்தின் அடித்தளம். அந்த ஓவியம் சித்தரிப்பதைவிட, இயேசுவின் மரணம் கொடூரமானது.//

    தேவ குமாரனுக்கே, நேர்ந்தது துர் மரணம்! – என்பது சாமானியன் முதல் சகலமும் அறிந்தோர்க்கும் அவ நம்பிக்கையை மட்டுமே தரும் விஷயம். அவ நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட ……………..

    //ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்// – கோளாறு எங்கே உள்ளது என்பதை முதலில் கண்டறிவது அவசியம். .

    //கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, இயேசு மக்களுக்காய் கோர மரணமடைந்தவர்//

    எந்த நாட்டு மக்களுக்காக? எந்த நாட்டின் சார்பில் ? எந்த நாட்டுடன் போர் புரிந்து மாண்டார்?

    //அவருக்கும் மகதலேனா மரியாளுக்கும் இருக்கும் உறவையும் கொச்சை படுத்தலாமா? ஒரு குரு சிஷ்ய உறவை, சில புரளிகளின் காரணமாக கணவன் மனைவி உறவென கூறலாமா?//

    எந்த நாட்டில் இருந்து கிறிஸ்துவ மதம் பரப்பப் பட்டதோ, அதே நாட்டில் இருந்துதான் நீங்கள் புரளி என்று சொல்லப் பட்ட விஷயமும் வந்தது. ஒன்றுக்கு முக்கியத்துவமும் மற்றொன்றை வசதியாக புரளி என்றும் உம் போன்றோர் கூறலாமா?

    இரண்டாம் நூற்றாண்டில் இஸ்ரேலில் இருந்த ஒரு படை வீரனையே பைபிளில் இயேசு என்று சித்தரிக்கப் பட்டுள்ளது என்று இதாலிய கிறிஸ்துவர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததை நீர் அறிவீரா?

    //சில நூறு சுவிசேஷகர்கள் உங்களை புன்படுத்துவதினால், பல கோடி கிறிஸ்துவர்களை நீங்கள் புண் படுத்த வேண்டுமா?// –

    சுவிசேஷகர்கள் எதற்காக விலைக்கு வாங்கப் பட்டார்களோ அதை (கூலிக்கு மாரடிப்பது) செய்கிறார்கள். எஜமான் விசுவாசத்தில் தவறில்லை. ஆனால் அவர்கள் உம் போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மூளை மழுங்கச் செய்வதே எம் போன்றோரைப் புண் படச் செய்கிறது.

    //நீங்கள் வாழ்வாங்கு வாழ அந்த இயேசுவை வேண்டுகிறேன்// –
    இந்த லோள்ளுதான வேண்டாங்கறது.

    லெனின்

  15. C.N.Muthukumaraswamy on October 29, 2009 at 5:17 pm

    //இயேசுவின் மரணம் கொடூரமானது. ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்.//

    1)”அறுவகைச் சமயத்தோர்க்கும் அவரவர் பொருளாய்” ஒரே இறைவன்தான் அவரவர் வழிபடும் வடிவில் அருள்புரிகின்றான் என்பது சைவசித்தாந்தம். கட்டுரையில் சுட்டப்பட ஓவியத்தின் வழி கிறித்துவர்கள் பயன் பெறுகின்றார்கள், இதில் நம்பிக்கை பெறுகின்றார்கள் என்பது உண்மையே. அதனால் இந்து மதத்தினரை உருவ வழிபாட்டினர் என ஏசும் தகுதி அவர்களுக்கு இல்லை.
    2) மாணிக்கவாசகர் சிவனைத் தவிர வேறு பிறப்பிறப்பில் சிக்குண்ட மனிதர்களைத் தெய்வமென வணங்கினாரல்லர்.
    “உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லால் எங்கள் உத்தமனே” என்றும்,
    “மற்றும் ஓர்தெய்வம் தன்னை உண்டுஎன நினைந்து எம்மாற்கு
    அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்றும் தம்முடைய இறைக் கொள்கையை மணிவாசகர் தெளிவாகக் கூறுகின்றார். சிவனைத் தவிர வேறு தெய்வம் உண்டு என நினைந்து வழிபடுவோரைக் கண்டு அஞ்சுவதாகக் கூறும் மணிவாசகரை, போப் , கட்டுரையில் கூறிய இத்தாலிய சர்ச்சில், கூறிய ஓவியங்களுக்கு முன் மண்டியிட்டுத் தம்முடன் வழிபட்டதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். ?இப்படிக் கூறுவதில் surreptitious, covert , subtle evangelisation இருப்பதாக நான் கருதுகின்றேன். இது தமிழ்இந்து நண்பர்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படும் எனவே கருதுகின்றேன்.

    3. போப் கிறித்துவ மிஷனரிகளில் சற்று வேறுபட்டவர். தமிழ்க் காதலும் சைவக்காதலும் அவரிடம் நிறையவே இருந்தது. ஜே. எம் நல்லுசாமி பிள்ளை முதலிய சைவசித்தாந்தப் பேரறிஞர்களிடம் நெருங்கிய நட்பும் அன்பும் அவருக்கு இருந்தது. இவற்றின் காரணமாக அடிப்படைவாதக் கிறித்துவர்களின் மனக்கசப்பையும் பெற்றிருந்தார். “Actually one wonders if Manikkavacakar had almost succeeded in breaking the Reverend(G.U.Pope) from his chiristian moorings at times. Well, that is Pope’s outlook, not ours” -Hephzibah Jesudasan.
    4. போப்பின் தமிழ்ப் பற்று , சைவத்தின் மேல் மதிப்பு இரண்டையும் மிஷனரிப் பண்பு அழுத்திவிட்டது. அது இயற்கையே. “Pope was a child of his times, and his comments and translation do not transcend his Victorian and missionery biases … ” என ஓரறிஞர் கூறிய கருத்தே என் கருத்தும்.

    5. சைவசித்தாந்தத்தை இளஞர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். தெய்வ நம்பிக்கை உடைய. தெய்வபக்தியை வலியுறுத்துகின்ற சமயங்கள் த்ம்முள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. திருவாசகத்தை கஸ்பர் , தெய்வநாயகம் போன்ற மிஷனரிகள் முன்னெடுத்துச் செல்வதை பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டுவதும் கடமையாகும்.
    6. இறை அனுபவம் சமயங்கடந்தது. சமயங்கள் எல்லாம் இறையனுபவத்துக்குப் பெரியோர் அமைத்துக் கொடுத்த பாதைகளே. அந்த உண்மைமேல் நாட்டம் உடையவர்கள் எம்மததினராக இருந்தாலும் போற்றுதற்கு உரியவர்களே. அறுபத்து மூன்று சைவநாயன்மார்களில் சாக்கியநாயனார் என்பவர் ஒருவர். சமயநூல்கள் எல்லாம் கற்றுத் தேர்ந்தார். சமயப் பொதுமையினைச் சைவத்தில் தெளிவாகக் கண்டார். தம்முடைய மதத்தை மாற்றிக் கொள்ளாமல், புறக்கோலத்தை மாற்றிக் கொள்ளாமல் சைவத்தின் வழி நின்றார். பேறு பெற்றார். நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகின்றார்.
    7. இறை அனுபவத்தை விரும்பும் கிறித்துவ அன்பர்கள் மதமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். எண்ணிக்கையைப் பெருக்குவது ஆதிக்க உணர்வையே காட்டுகின்றது.
    8.தமிழ், வடமொழி வேறுபாடு கற்பித்து, பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் காழ்ப்பினைத் தூண்டிவிட்டுத் தமிழுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் கேடு விளைக்கும் அனுகூல சத்துருக்களின் அடையாளத்தையும் அறிய வேண்டும்.

  16. C.N.Muthukumaraswamy on October 29, 2009 at 5:25 pm

    ‘சாக்கிய நாயனார் பெளத்த சமயத்தினர். ‘ இதனை 6ஆவது பாராவில் இரிய இடத்தில் சேர்த்து வாசிக்கவும்

  17. திருச்சிக் காரன் on October 29, 2009 at 6:48 pm

    நாம் முக்கிய‌மாக‌ அம்ப‌ல‌ப் ப‌டுத்த‌ வேண்டியது பைபிளைத் தான்.

    பைபிள் ஒரு காட்டுமிராண்டி க‌ட்டுக் க‌தை என்ப‌தை எளிதாக‌ நிரூபிக்க‌ முடியும்.

    பைபிளுக்கு எந்த‌ ஒரு வ‌ர‌லாற்று ஆதார‌மும் கிடையாது. அறிவிய‌லுக்கு எதிராக‌ க‌ட‌லே இர‌ண்டாக‌ப் பிள‌ந்து நீர் சுவ‌ர் போல‌ நின்ற‌தாக, சிரிப்புக் க‌தைக‌ள் பல‌ உண்டு.

    இந்த உலகத்தயே சுடு காடு ஆக்கும் விசக் கருத்துக்களை உருவாக்கி அதை பைபிள் என்ற பெயரிலே அமைத்து விட்டார்கள். இந்த பைபிளின் அடிப் படையிலே யூதர்கள் தங்கள் மதத்தை அமைத்தனர்.

    அதக் காப்பி அண்ட் பேஸ்ட் செய்து, அதே விசக் கருத்துக்களை, தங்கள் மதத்திற்கும் அடிப் படையாக வைத்தன, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள்.

    பைபிளின் காட்டு மிராண்டிக் கருத்துக்களாவன:

    1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

    2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
    தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே

    3) சிந்த‌னையைத் த‌டை செய்து அடிமை ஆக்குத‌ல்: யாரோ ஒருவர் கடவுளைப் பார்த்ததாக கதையை விட்டு, இந்த உலகிலே யாரும் கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சி செய்வதை தடை போட்டது பைபிளே!

    4)க‌ட‌வுளுக்கே ஆப்பு: ஒரு உயிர் ஒரே முறைதான் பிறக்கிறது என்று கதை கட்டி, அப்படியானால் ஒரே ஒரு முறை பிறக்கும் உயிரை கடவுள் எதற்கு குருடனாகப் பிறக்க வைக்க வேண்டும், கடவுள் தவறே செய்யாத உயிரை தண்டிக்கும் கல் நெஞ்சனா என்ற வ‌கையிலே க‌ட‌வுளையெ ஒரு கொடுமையான‌வ‌ன் போல‌ சித்த‌ரித்தது,

    இத‌ன் மூல‌ம் பைபிள் என்ப‌து காட்டு மிராண்டிகளின் க‌ற்ப‌னையில் உருவான‌து என்ப‌தை நாக‌ரீக‌ம் தெரிந்த‌ எந்த‌ ம‌னித‌னும் புரிந்து கொள்வான்.

    தும்பை விட்டு வாலைப் பிடிப்ப‌து போல‌ பைபிளை விட்டு யோவான பிடித்து என்ன‌ ப‌ல‌ன்.

    ம‌னித‌த்துக்கு எதிரான‌ விசக் கருத்துக்களை அம்‌ப‌ல‌ப் ப‌டுத்த தேவையான‌ அருமையான‌ க‌ருத்துக்க‌ள் ந‌ம்மிட‌ம் உள்ளன‌.

    சூரிய‌னைக் கையிலே வைத்துக் கொண்டு, டார்ச் லைட்டை தேடி அலைவ‌து போல‌ உள்ள‌து.

    இ ந்து ம‌த‌த்தையும் ப‌ற்றி எல்லொரும் த‌வ‌றாக‌க் க‌ருதும்ப‌டி நாம் செய‌ல் ப‌ட‌ வேண்டிய‌தில்லை.

    Will be continued…….

  18. Mani on October 29, 2009 at 7:05 pm

    வள்ளுவன் சொன்னதை மறுக்கிறேன்.

    இந்த கட்டுரை கிறிஸ்துவர்களுக்கு எழுதப்பட்டதல்ல. இந்துக்களுக்கு எழுதப்பட்டது. போப் எழுதியதை படித்து, மாணிக்கவாசகரும் இயேசுவை அடிபணிந்தார் என்று இந்துக்களாலேயே திரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் துர்மரணம் அடைந்த இயேசு போல மரணம் அடைவது சரிதான் என்றும், அது போற்றத்தக்கதே என்றும் ஒரு சாதாரண இந்து நினைக்க வாய்புள்ளது.

    இந்துக்களுக்கு விளக்கம் கொடுக்கவே இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றனவே அன்றி, கிறிஸ்துவர்களுக்கு புரியவைக்க அல்ல.

    இது போன்ற கட்டுரைகள் ஏராளம் தமிழ் இந்து தளத்தில் வெளிவர வேண்டும்.

    இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற தவறான மார்க்கங்களை சரி என்று நினைப்பது சாதாரணமாக எல்லா இந்துக்களும் நினைப்பது. அவற்றை பற்றி விளக்கங்கள் இந்துக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

  19. திருச்சிக் காரன் on October 29, 2009 at 10:34 pm

    மாணிக்க வாசகர் தன்னுடன் சேர்ந்து மண்டியிட்டு வணங்கியது போல தோன்றியதாக புரூடா விட்டதைக் கண்டித்தது நியாயமே, அவசியமே. இதற்காக முனைவர் அய்யாவுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

    ஆனால் முனைவர் ஐயா, வேறு ஒரு இடத்திலே கொஞ்சம் வேகமாக எழுதி விட்டாரோ என்று அச்சப் படுகிறேன்.

    முனைவர் ஐயாவின் சில வார்த்தைகள் கட்டுரையின் முக்கியக் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட்டது போல ஆகி விட்டதோ, எனத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

    இந்து நேர்மையானவன், பண்புள்ளவன், வெறுப்புக் கருத்துக்கள் இல்லாதவன்.

    இங்கெ பலரும் ஆதரிக்கிறேன் என்று எழுதுவது, அவர்கள் உண்மையில் ஆதரிப்பது எதை?

    தமிழ் நாட்டிலே இரு கழகங்களும், மேடை போட்டு மாற்றுக் கட்சித் தலைவரை தாக்கிப் பேசுவது போல ஒரு இந்து, மத விசயத்திலே பேசுவது சரியல்ல. ஆபிரகாமிய மத பிரசாரகர் என்ன வேண்டுமமனாலும் பேசுவார்கள் , செய்வார்கள். நாம் அப்படி அல்ல. ஆயிரம் ஆனாலும் இந்து, இந்துவாகத் தான் இருப்பான். .

    நான் முனைவர் ஐயா முன்பு எழுதிய சிறந்த கருத்துக்களை இங்கெ மீண்டும் மேற்க்கோள் இடுகிறேன்.

    //C.N.Muthukumaraswamy
    5 October 2009 at 6:14 pm
    பாட்டி கடைஞ்ச மசுருலே கீரையைக் கண்டது போல அபத்தக்களஞ்சியமான நயவஞ்சகக் கிறித்துவத்திலே காந்தியடிகள் போன்ற நல்ல உளம் படைத்தவ்ர்கள் ஏதோ சில நல்லதைக் காண முயன்றதன் பலன் நம் இந்தியா எனும் பாரதத் திருநாடு கிறித்துவர்களின் அறுவடை செய்யும் நன்செயாக மாறிவிட்டது. டேனியல் தங்கராஜ் போன்ற கிறித்துவர்கள் தேவன் என்றும் கர்த்தர் என்றும் கூறுபவ்ன் ,
    மடமைக்கும் முட்டாளதனத்துக்கும் அடிமையானவன்.
    செத்துப் பிறக்கின்ற மானுடப்பதர்
    புலாலும் மதுவும் விரும்பும் புல்லன்
    மனக்கொதிப்பு மிக்கவன்
    பொறாமையின் வைப்பு; வஞ்சகத்தின் இருப்பிடம்
    வீண்பேச்சுப்பேசும் பதடி
    சொல்லொன்று செயலொன்றாக நடக்கும் சிறியோன்
    அருளாளலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கொடியவர்களெனக் கூறும் கொடியோன்.
    இழிபண்புகளுக்கு இருப்பிடம்.//

    இதற்க்கு நான் //அடேயப்பா சும்மா சொல்லக் கூடாது – பெரும்பாலும் உண்மைதான்!// என்று எழுதினேன்

    இங்கெ பின்னோட்டம் இடும் சென்னை செந்தமிழ்களே, இந்தப் பட்டங்களை எல்லாம், இந்துக்களுக்கும் வாங்கிக் கொடுக்காதீர்கள்.

  20. B.பாஸ்கர். on October 29, 2009 at 11:30 pm

    வணக்கம்,

    நண்பர் வள்ளுவனார், மற்றும் திருச்சிக்காரர் என்று பல நண்பர்களின் மறுமொழிகளைக் கண்டு நான் மீண்டும் சிலமுறை இக்கட்டுரையை வாசிக்க வேண்டி வந்தது, ஒரு நல்ல கட்டுரையை பலமுறை வாசிக்க வைத்த நண்பர்கட்கு நன்றிகள் முதலில்.
    ————————————————-
    ///ஜி.யு.போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போலவும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார்.///

    ////மணிவாசகர் மானசீகமாகத் தம்மோடு இருந்து இந்த ஓவியத்தை கண்டு மெய்யுணர்வு பெற்றார் எனப் போப் கருதுவது விந்தையாக உள்ளது. அந்தமில்லா ஆனந்தம் பெற்ற மணிவாசகப் பெருமானை இழிவு செய்வதாகவே தோன்றுகிறது.///
    ——————————————————————————-

    இவைகளே இக்கட்டுரையின் ஆராய்ச்சிக்கான கருத்துக்கள், இக்கருத்தினை போப் அவர்கள் சொல்லப்போகத்தான் இந்த ஓவியத்தின் மீது நமது ஆய்வுக் கண்ணோட்டம் ஏற்பட்டது. ஆசிரியருக்கும் அவ்வாறே,

    போப் அவர்களின் இந்த தவறான கருத்தினால் கூட சிலர் மதி மயங்கிப் போகக் கூடும், அந்த தவறினை சுட்டிக் காட்டும் விளக்காகவே இக்கட்டுரை, மற்றபடி அவர்களை வலியச்சென்று கட்டுரை ஆசிரியர் குறை சொல்லவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து,

    இந்து தர்மத்தில் ஆன்மாவை அறிந்து, அதனை பரமாத்மாவோடு இணைப்பதுவே மானுடத்தின் இலக்கு என்பது எல்லோரும் அறிந்திருக்கும் பொழுது, பெரும் ஞானியான மணிவாசகர் சவமான இயேசுவின் ஓவியத்தைக் கண்டு மெய்யுணர்வு பெற்றார் என்று போப் அவர்கள் கட்டுக் கதை கூறுவதை பொய் என்று உணர்த்துவது நமது கடமையாகிறது, அதை ஆசிரியர் செவ்வனே செய்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி.

    ஓரளவு தெளிவு பெற்ற நமக்கே சுவிசெஷர்கள் தண்ணி காட்டி விடுகிறார்கள், இதை தெளிவு படுத்தா விட்டால் போப்பின் இக்கருத்து உண்மை என நம்பி படித்த பாமரர்களே ஏமாந்து விடுவார்கள். எனவே இக்கட்டுரை இந்துக்களுக்கு முக்கியமானது என்பது நான் சொல்லவேண்டுவது இல்லை என நினைக்கிறேன். இன்னொரு இந்து நண்பரின் மனதில் தோன்றும் மணிவாசகரின் மெய்யுணர்வு பற்றிய சந்தேகத்தையாவது தீர்க்க நமக்கு உதவும்.

  21. வள்ளுவன் on October 30, 2009 at 12:15 am

    ஆசிரியர் அய்யாவிற்கு வணக்கம்,
    நீங்கள் சைவ சித்தாந்தத்தை பின்பற்றும் தமிழ் சைவர் என்று நான் அறிகிறேன். அதனால் இதை கேட்கிறேன். நான் சைவ சித்தாந்தத்தை பின்பற்றாவிட்டாலும், அம்மார்க்கத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் பற்றுடையவன்.

    மறைமலை அடிகளாருக்கு உங்கள் மார்கத்தில் இருக்கும் மதிப்பு எவ்வளவு? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அவர் ஒரு சைவத்துறவி ஆக இருந்தாலும், ஈ.வே.ராமசாமி நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தார் அல்லவா? மேலும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் வைணவர்களின் வேலை என்றும், சைவர்களை ‘மதமாற்றம்’ செய்ய நடக்கும் சூழ்ச்சி என்றும் மறைமலை அடிகளார் பேசினார், அல்லவா??

    “The leader of the Self-respect movement is a Vaishnavite; his brother too, we come to understand, is a Vaishnavite who has converted many gullible Saivites to Vaishnavism. Their accomplices too are Vaishnavites. Some of the Justice Party leaders too are Vaishnavites. Moreover, not only are they Vaishnavites, they are also Telugu-speakers.”

    http://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal

    ஈ.வே.ரா வைனவராக இருந்திருந்தால் ஏன் இராமன், இலக்குவன், கிருஷ்ணன் படங்களை காலனிகளால் அடித்தார்?? ஏன் எப்பொழுதும் அன்னை சீதையைப் பற்றி அவதூறாகவும், ஒரு பெண்ணை எவ்வளவுதூரம் கேவலப்படுத்த முடியுமோ, அதற்க்கு ஒரு படி மேலாகவும் பேசினார்? இதெல்லாம் மறை மலை அடிகலாருக்குத் தெரியாதா?

    மேலும், இளவழகனார் என்ற மறைமலை அடிகளின் சீடர் கூறியது:-

    “Saivism is not one iota different from the primary aim of the Self-respect movement. The Self-respect movement arose to dispel the illusion of Brahmanism form the Tamil people and infuse self-respect into them. Saivism also does the same. The Self-respect Movement detests the Aryan Brahmins. Saivism too doesn’t like the Aryan Brahmins one bit… The Self-respect movement wishes to uplift the depressed classes. That is also the basic idea of Saivism…. The Self-respect movement is against caste differences among the Tamil people. Saivism too emphasis the same point… when there are so many commonalities, why should Saivism and Saivite apostles be deprecated and condemned [by the Self-respect movement].”

    http://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal ….

    திராவிட இயக்கத்தைப் போலவே, சைவமும் அந்தணர்களை எதிர்ததாம்? அப்போ, ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப்பெருமான், நம்பியாண்டார் நம்பி இவர்களெல்லாம் யார் அய்யா? மேலும், மறைமலை அடிகளுக்காகவாவுது நாயக்கர் சைவத்தை கேவலப்படுத்தாமல் இருந்தாரா? ஏன் இராம, இலக்குவன் படங்களை காலனிகளால் அடித்ததுபோல விநாயகரின் படத்தையும் அடித்தார்? அப்பொழுது ஏன் மறைமலை அடிகள் தடுக்கவில்லை? விநாயகர் தமிழ் கடவுள் இல்லை எனும் ஆதாரமற்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! ஏன் எனில், அவ்வையாரில் தொடங்கி, நக்கீரர், நாயன்மார்கள் வழியாக, சமீப காலத்தில் வாழ்ந்த திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் வரை எவரும் விநாயகரை புறக்கணிக்கவில்லை!! அதோடு நில்லாது, சிதம்பரம் நடராஜர், ஸ்ரீரங்கம் அரங்கன் சிலைகள் என்று தூள் தூளாகுமோ அன்று தான் ‘திராவிடர்களுக்கு’ உண்மையில் விடுதலை என்று நாயக்கர் பேசியபொழுது, ஏன் மறை மலை அடிகள் கண்டிக்கவில்லை???

    மேலும், மறை மலை அடிகள் உண்மையான இந்துத் துறவியாக இருந்திருந்தால் ஏன் ஈ.வே.ரா கேட்டவுடன் அரும் பொக்கிஷமான இராமாயணத்தை அவதூறாக பெரியாருக்கு எழுதித் தந்தார்??? இப்படி எழுதி விட்டு பிறகு முருகனை துதித்தால், எப்படி அவன் அருள் புரிவான்?? தன் மாமனைப் பற்றி தரக்குறைவாக பேசிவிட்டு முருகனை வணங்கினால், அவன் மகிழ்ச்சி அடைவானா? அதுசரி, முருகன், சிவன் திராவிட கடவுள்கள், திருமால் ஆரியனின் சூழ்ச்சி என்று பேசுபவர்களிடம் என்னவென்று கூறுவது? இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் என்ன கூறுகிறார்? முருகனை எப்படி வர்ணிக்கிறார்??

    “முருகனே, செந்தில் முதல்வனே,
    மாயோன் மருகனே, ஈசன் மகனே ..
    ஒருகைமுகன் தம்பியே,
    நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான். ”

    நக்கீரருக்கு, அவ்வய்யாருக்கு, நாயன்மார்களுக்கு, கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு, மற்றும் வேதகால மகரிஷிக்களுக்குத் தெரியாததுவா மறைமலை அடிகளுக்குத் தெரிந்து விட்டது?????????

    சைவ சித்தந்தம் மட்டும்தான் சைவத்தின் ஒரே மார்க்கம் என்று நமது மக்கள் தவறாக நினைக்கிறார்கள். மிகப்பழமையான சைவம் குஜராத் மாநிலத்தில் தோன்றிய “பசுபதாயம்” ஆகும். இதுபோலவே காஷ்மீர் சைவம் (சொல்லப்போனால், காஷ்மீரில் சிவனைத்தவிர வேறு எந்த கடவுளையும் வழிபட்டதாக கேள்வி பட்டதுகூட இல்லை), சித்த சித்தாந்தம், சைவ அத்வைதம் போன்ற பல மார்கங்கள் உள்ளன. ஆனால், சைவத்தை இந்து சமூகத்திலிருந்து பிரிக்க நினைக்கும் கூட்டம் சொல்வது என்ன தெரியுமா:- “வீரசைவம் என்றழைக்கப்படும் லிங்காயதம் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே அவர்கள் இந்துக்களே அல்ல” என்பது. அவர்கள் வேதங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால், அம்மார்கத்தை தோற்றுவித்த ஸ்ரீ பாசவண்ணரே ‘ஸ்மார்த்த கம்மே’ அந்தண சமூகத்தில் பிறந்து, சாதிகளினால் வெறுப்புற்ற சாதியற்ற மார்கத்தை தோற்றுவித்தார் என்று வரலாறு கூறுகிறது. இராமானுஜர், இராமானந்தர், சைதன்யா போன்றவர்கள்கூட தீண்டாமை, சாதிக்கொடுமையை எதிர்த்து போராடினார்கள். அதற்காக, அவர்கள் அந்தணர்கலையே எதிர்த்தார்கள், வெறுக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி??

    இந்துக்கள் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே வெற்றி இல்லை, வாழக்கூட முடியும். எனவே, நமக்குள் இருக்கும் இப்படியான பேதங்களை நாம் களையவில்லை என்றால், என்ன நடக்கும்??

    இறைவன்தான் அறிவான்!!!!!

  22. ந.உமாசங்கர் on October 30, 2009 at 12:57 am

    ///ஒரு கட்டுரையை, ஒருவர் பதிக்கும்போது அந்த துறையில், ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் தேவை. யோவான் ஸ்நானகன், சீடன் யோவான் இருவரும் பைபிளில் மிக முக்கியமானவர்கள். இது கூட தெரியாமல் இவர் எப்படி இதை போல் விமர்சிக்கலாம் என்பதே என் கேள்வி.///

    க‌ட்டுரை ஆசிரிய‌ரின் நோக்க‌ம் ம‌க்ட‌ல‌னா மேரியோ அல்ல‌து யோவானோ என்ன செய்தார்கள் என்பது அல்ல. ஆனால், “மாணிக்கவாசகப் பெருமான் மண்டியிட்டு ஏசுவை தன்னுடன் சேர்ந்து வணங்குவதாக எனக்குத் தோற்றம் வந்தது” என்று ஜி.யு.போப் எழுதியதை அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவதே ஆகும். இதே போல‌, முக‌ம‌து ந‌பி என்னோடு முழ‌ங்காலிட்டு ஏசுவை வண‌ங்குவ‌து போன்ற‌ காட்சி க‌ண்டேன் என்று எவ‌ராவ‌து எழுத‌வோ, சொல்ல‌வோ முடியுமா? அல்ல‌து திருமயிலை அறுப‌த்து மூவ‌ர் உலா வ‌ரும்போது
    ஏசு என்னோடு சேர்ந்து கை கூப்பி, மாணிக்கவாச‌க‌ப் பெருமானை வ‌ண‌ங்குவ‌து போல‌ என‌க்குத் தோற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌து என்று யாராவ‌து கூறினால், சும்மா விட்டுவிடுவார்க‌ளா கிறித்துவ‌ர்க‌ளும், ப‌குத்த‌றிவுவாத, போலி ம‌த‌ச்சார்பின்மை அர‌சிய‌லாரும்?

    இங்கே ம‌றுமொழியிட்ட‌ ப‌ல‌ அன்ப‌ர்க‌ள், பார‌த‌த்தின் (இந்து மதத்தினரின்) ச‌கிப்புத் த‌ன்மை எவ்வ‌ள‌வுக்குத் த‌ன‌து பாதுகாப்பையும் மீறிய‌தாய், பிற‌ன் ம‌ன‌ம் நோகாப் பேராண்மை மிக்க‌தாய் இருக்கிற‌து என்ப‌த‌ற்கு எடுத்துக்காட்டாய் இருந்தாலும், இந்த‌ப் பெருந்த‌ன்மையைத்தான், ஜி.யு.போப் போன்ற‌ பிறமத அடிப்படைவாதிக‌ள், ப‌சுத்தோல் போர்த்திய‌ புலிக‌ள், பார‌த‌த்திற்கே கேடு விளைக்கும் வ‌ண்ண‌ம் தத்தம் காரியத்தை, மத மாற்றத்தை, பாரதப்பண்பாட்டு அழிப்பை ந‌டத்திக்கொள்ள‌ ஏதுவாகிற‌து.

    ///இந்துக்களுக்கு விளக்கம் கொடுக்கவே இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றனவே அன்றி, கிறிஸ்துவர்களுக்கு புரியவைக்க அல்ல.///

    இது ஒரு பொதுத்த‌ள‌ம். இந்துக்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, அகில‌ உல‌குக்கும் ஜி.யு. போப்பின் இந்தக் க‌ப‌ட‌த்தைப் ப‌றைசாற்றும் வ‌கையில் இக்கட்டுரை அவ‌சிய‌மான‌தே. இனியும் நாங்க‌ள் வாய் மூடி, கை க‌ட்டி வாளாவிருக்க‌ மாட்டோம் என்ப‌தைப் ப‌றை சாற்றித்தான் ஆக‌ வேண்டும். குறைந்த‌ ப‌ட்ச‌ம், க‌ட்டுரைக‌ளாவ‌து எழுதுவோம், பொதுக் க‌ருத்தை உருவாக்குவோம், எழுச்சியை உருவாக்குவோம் என்ப‌து தெரிந்தால்தான் இனியும் இப்ப‌டி இன்னுமொரு போப் எழுத‌மாட்டார். ஒரு கிறித்துவ‌ர், ஸ்னான‌க‌ன் யோவான் என்றும் சீட‌ன் யோவான் என்றும் எப்ப‌டி ஒரு ம‌றுத‌லிப்பை உட‌னே செய்கிறார் என்ப‌தை அன்பர்கள் வ‌ள்ளுவ‌ன், திருச்சிக்கார‌ன் போன்றோர் க‌வ‌னிக்க‌ வேண்டும். இது போல‌வே இக்க‌ட்டுரையும் போப்பின் விஷ‌ம‌த்த‌ன‌மான வேலைக‌ளுக்கு ஒரு ம‌றுப்பாக‌ச் ச‌ரித்திர‌த்தில் இட‌ம் பெற‌வேண்டும்.

  23. ந.உமாசங்கர் on October 30, 2009 at 1:14 am

    ///இதை தவிர, இயேசுவின் கொடூரமான மரணமும், உயிர்த்தெழுதலும்தான், கிறிஸ்துவத்தின் அடித்தளம். அந்த ஓவியம் சித்தரிப்பதைவிட, இயேசுவின் மரணம் கொடூரமானது. ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்.
    நாட்டை காப்பாற்றும் ஒரு வீரன், குண்டு வெடித்து உடல் கருகி இறந்து, அவன் குடும்பத்தார் கதறி அழுவதை இப்படி விமர்சிப்பீர்களா? கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, இயேசு மக்களுக்காய் கோர மரணமடைந்தவர்.///

    எம்.ஜி.ஆரின் குண்ட‌டி ப‌ட்ட‌ ப‌டங்க‌ள் கொண்ட போஸ்டர்கள் 1967 தேர்த‌லில் பிர‌ப‌ல‌மான‌வை. ஓட்டு வாங்க‌ப் பெரிதும் உத‌வின‌. இதேபோல, ‘கூலி உய‌ர்வு கேட்ட‌ அத்தான் குண்ட‌டி ப‌ட்டு செத்தான்’ என்ற‌ ப‌ட‌மும், வாச‌கமும் உள்ள போஸ்ட‌ர்க‌ளும் ஓட்டுப் பெற‌ உத‌வின‌.

    எம்.ஜி. ஆரின் அமெரிக்க‌ப் ப‌டுக்கைப் ப‌ட‌ம் கொண்ட‌ போஸ்ட‌ர்க‌ள் 1984 தேர்த‌லில் ந‌ல்ல‌ வ‌சூலைக் குவித்த‌ன‌.

    ராஜீவ் காந்தியின் ம‌ர‌ண‌ப் போஸ்ட‌ரின் ம‌கிமை 1991 தேர்த‌லில் பார்த்தோம்.

    அண்மையில் சாமுவேல் ராஜசேக‌ர‌ ரெட்டியின் ம‌ர‌ண‌மும் ஆந்திராவில் காங்கிரசுக்கு‌ வ‌ழியைத் த‌ந்திருக்கிற‌து, அடுத்த‌ தேர்த‌லுக்கு உத‌வும்.

    இப்ப‌டியெல்லாம் ஏதோ ஒருவர் படுத்த படுக்கையிலோ, ம‌ர‌ண‌த்திலோ லாப‌ம் பார்ப்ப‌து எப்ப‌டி என்ப‌தை அர‌சிய‌லாருக்கு எப்ப‌டித் தெரிந்த‌து என்ப‌து இப்போது புரிகிற‌து.

  24. திருச்சிக் காரன் on October 30, 2009 at 1:35 am

    //சிவனைத் தவிர வேறு தெய்வம் உண்டு என நினைந்து வழிபடுவோரைக் கண்டு அஞ்சுவதாகக் கூறும் மணிவாசகரை, போப் , கட்டுரையில் கூறிய இத்தாலிய சர்ச்சில், கூறிய ஓவியங்களுக்கு முன் மண்டியிட்டுத் தம்முடன் வழிபட்டதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். ?இப்படிக் கூறுவதில் surreptitious, covert , subtle evangelisation இருப்பதாக நான் கருதுகின்றேன். இது தமிழ்இந்து நண்பர்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படும் எனவே கருதுகின்றேன்//

    இது சரியான கருத்தே.

    எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எவ்வளவு நல்ல புத்தகங்களை படித்து இருந்தாலும், சுவிசேஷ காரருக்கு இந்த மத மாற்ற, ஆள் பிடிக்கும் அசிங்க புத்தி போகாது.

    விட்டால், சிவ கணங்கள், நந்தி எல்லாம் என் பக்கத்தில வந்து குந்தி உக்காந்து கும்பிட்டுதுனு சொன்னாலும் சொல்வாங்க.

    என‌க்கு என்னவோ மார்க்கண்டேயன் கதைதான் நினைவுக்கு வருது. சிலுவையில் அடிக்கும் போது சிவனை நினைத்து இருந்தால், காப்பற்றப் பட்டு இருப்பார். காலனையே காலால் உதைத்து மார்க்கண்டேயனைக் காத்தவர் ப‌ர‌மேஸ்வ‌ர‌ன்.

    ஜி.யு. போப் கொஞ்சம் முன்னால பிற‌ந்து த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து
    சிவ‌ பெருமானைப் ப‌ற்றி அறிந்து கொண்டு போய், இயெசு கிரிஸ்துவிட‌ம் சொல்லி இருக்க‌லாம்.

    கை விட்ட‌ தேவ‌னைக் கூப்பிடும் முன், காக்க‌ வ‌ரும் ‌ இறைவ‌னை கூப்பிட்டு இருக்கக‌லாம்.

  25. chillsam on October 30, 2009 at 7:49 am

    // 1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

    2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
    தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே

    3) சிந்த‌னையைத் த‌டை செய்து அடிமை ஆக்குத‌ல்: யாரோ ஒருவர் கடவுளைப் பார்த்ததாக கதையை விட்டு, இந்த உலகிலே யாரும் கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சி செய்வதை தடை போட்டது பைபிளே! //

    நண்பர் திருச்சிக்காரன் அவர்கள், பைபிள்தான் உலகத்தின் ஆதி வேதம் என்பதை ஒப்புக்கொள்வது போல கருத்து கூறுகிறார்;

    தன் சொந்த சகோதரனை பகைத்து கொலை செய்தவனையே முதல் கொலைகாரனாக பைபிள் பதிவு செய்கிறது; அப்படியானால் முன்னரே கொலை என்பது முன்னரே நடந்திருக்கிறது; ஏனெனில் அவனைக் கடவுள் துரத்திவிடும் போது தன்னைக் காணும் ‘எவனும் கொன்று போடுவானே’ என்று கூறுகிறான்;

    சாதுவான ஒருவனை மிரட்டி இது தங்கள் முன்னோர்களின் கிணறு என்று வம்பு சண்டைக்கு வந்தோரைக் கூட பதிவு பைபிள் செய்கிறது;

    எங்குமே ஆக்கிரமிப்பையும் ஆதிக்க உணர்வையும் போதிக்கவில்லை;
    காண்கிற சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களையோ கடல் வாழ் ஜீவராசிகளையோ பறவைகளையோ மிருகங்களையோ ஆணையோ பெண்ணையோ அல்லது மற்ற எந்த சிருஷ்டியையோ நமஸ்கரிக்காமல் அவற்றைப் படைத்தவரை ஆராய்ச்சி செய்யும் சுதந்தரத்தை வழங்கியிருக்கிறது.

  26. தேவப்ரியா சாலமன் on October 30, 2009 at 8:05 am

    சிலுவை வழிபாடு

    இயேசுவின் படங்கள் அல்லது சர்ச்ச்னுள், வெளியில் சிலுவைகள் வைத்தல் என்பது உருவ பொம்மை வழிபாடுகளின் உச்சக் கட்டம்.

    வரலாற்று ரீதியில் ரோமன் தண்டனை முறையில் துக்குமரம் என்பது சாரம் கட்டி உயரமான சாரத்தில் ரோம் ஆட்சிக்கு எதிரான போராளிகளை நிர்வாணமாக தொங்க விடுவர். விசாரணையின் போதான காயங்கள், பசி, கழுகு போன்ற தொந்தரவுகளில் கதறி கதறி 5-6 நாள் கழித்தே மரணம் வரும்.

    நிர்வாணமாக குற்றவாளி படும் வேதனை கண்டு பொது மக்கள் ரோம் ஆட்சியை எதிர்க்க பயப்பட வேண்டும் என்பது இதன் அடிப்படை.

    குற்றவாளி இறந்தாலும் அவருடைய கழுத்தெலும்பு உடைந்து மண்டை ஓடு விழும் வரை பிண உடல்கள் தொங்கும். அதாவது தூக்குமரத்தில் மரண தண்டனை குடுக்குமிடம் கபாலதலம்- மண்டைஓடு புரளுமிடம் எனப்படும். இட்தண்டனையில் மரணம் ந்ன்பது சம்பவிக்க 2லிருந்து 10 நாள் வரை ஆகும்.

    சர்ச் நடை முறையில் சிலுவைகள் தோன்றக் காரணம்- 4ம் நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தன் படைக் குழுவினருக்கு பெயர் எழுதுகையில் கிறுஸ்துவர் என எழுதியதின் சுருக்கம் கிரேக்கத்தில் சி-ரோ- இரண்டும் இணைய இன்றைய வடிவம் பெற்றது 6 அல்லது 7ம் நூற்றாண்டில் தான்.

    ஆரம்பத்தில் சிரோ சிலுவை அருகில் ஆடு போடப் பட்டது, பின் இறக்கும் வாலிபன், பின் வாலிபன் சிலுவை மேல் வர இன்றைய வடிவம் பெற்றது. பரவலாக சர்ச்கள் சிலுவை பயன்பாடு 14-15ம் நூற்றாண்டு வாக்கில் தான்.

  27. chillsam on October 30, 2009 at 11:49 am

    // என‌க்கு என்னவோ மார்க்கண்டேயன் கதைதான் நினைவுக்கு வருது. சிலுவையில் அடிக்கும் போது சிவனை நினைத்து இருந்தால், காப்பற்றப் பட்டு இருப்பார்…//

    மற்றவருடைய நம்பிக்கைகளை தகர்த்து இன்னொன்றை ஸ்தாபிக்கவே முடியாது; இதனை நான் பொதுவான கருத்தாகவே சொல்லுகிறேன்..!

    (Comment edited & published)

  28. திருச்சிக் காரன் on October 30, 2009 at 1:15 pm

    அருமை சகோதரர் chillsam அவர்களே,

    சுவிசேஷ சூழ்சியாளர் களின் தகிடு தத்த வேலைகைளை நீங்களும் செய்ய வேண்டுமா?

    //நண்பர் திருச்சிக்காரன் அவர்கள், பைபிள்தான் உலகத்தின் ஆதி வேதம் என்பதை ஒப்புக்கொள்வது போல கருத்து கூறுகிறார்//

    உண்மையில் நான் கூறியது என்ன?

    //பைபிளின் காட்டு மிராண்டிக் கருத்துக்களாவன:

    1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

    2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
    தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே//

    விசக் கருத்துகளின் முதல் வூற்றுக் க‌ண்ணாக பைபிள்‌ விள‌ங்கிய‌து, என்று தெளிவாக‌ நான் எழுதிய‌தை,

    அப்ப‌டியே நைசாக‌ மாற்றி

    //பைபிள்தான் உலகத்தின் ஆதி வேதம் என்பதை ஒப்புக்கொள்வது போல கருத்து கூறுகிறார்// என்று ப‌ச்சைப் பொய்யை பாலிஷாக‌ எழுதுவது ச‌ரியா?

    இதே பாணியில் தானே ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ விச‌க் க‌ருத்துக்க‌ளை பைபிள் என்ற‌ பெய‌ரிலே உல‌க‌ம் முழுதும் ப‌ரப்பி வ‌ந்தார்க‌ள்.

    அந்த‌ அழிவுச் செய‌லை நீங்க‌ளும் தொட‌ர‌ வேண்டுமா?

  29. திருச்சிக் காரன் on October 30, 2009 at 2:38 pm

    உமா சங்கர் , உங்களின் கருத்துகள் சிறப்பாக உள்ளன!

  30. திருச்சிக் காரன் on October 30, 2009 at 3:58 pm

    ச‌கோத‌ர‌ர் வ‌ள்ளுவ‌ர் அவ‌ர்க‌ளே,

    சைவ‌ , வைண‌வ‌ பிண‌க்கு எல்லாம் ஃப்ர‌ண்ட்லி மேட்ச் போல‌ தான்.

    இப்போது புதிதாக‌ வ‌ருகிர‌ கோவில்க‌ள் எல்லாம்,

    “சிவா விஷ்னு டெம்பிள்”

    “ர‌ஜினி ராஜா ஆல‌ய‌ம்”

    என்று ட‌பில் பேர‌ல் க‌ன்னாக‌ க‌ல‌க்குகின்ர‌ன‌.

    மறைம‌லை அடிக‌ளை ம‌திக்கிறோம். பெரியாரின் க‌ருத்துக்க‌ளிலும் இந்து ம‌த‌த்தை செம்மை செய்ய‌ தேவையான‌தை எடுத்துக் கொள்ளுவொம்.

    அதே நேர‌ம் இன்றைய‌ இந்து எதிர்கால‌த்தை நோக்கி ப‌ய‌ணிக்கிரான்.

    மறை ம‌லை அடிக‌ள் சொன்ன‌த‌ற்க்கும், செய்தத‌ற்க்கும் முனைவ‌ர் ஐயா, விள‌க்க‌ம் கூற‌ வேன்டூம் என்று எதிர்பார்ப்ப‌து ச‌ரியா?

    இப்போது உள்ள‌ புதிய‌ இந்து ஒரு பேத‌மும் பார்ப்ப‌து இல்லை.

    இராம‌ரையும் ம‌ரியாதை செய்து ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ வ‌ழி படுவான். சிவ‌ பெருமானையும் வ‌ழிப‌டுவான்.

    ஐத‌ராபாத்தில் பிலிம் சிட்யடியிலெ ப‌ஞ்சாரா ஹில்ஸ் பகுதி ஒரு சிற‌ப்பான‌ புதிய‌ கோவில் உள்ள‌து. அங்கே இந்து ம‌த‌த்தின் எல்லா க‌ட‌வுள்களுக்கும், த‌னித் த‌னி ச‌ன்னிதி உள்ள‌து.

    இன்றைய‌ இந்துவுக்கு, இது போல‌ ச‌ர்ச்சையில் ஈடுப‌ட‌ நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌தை விட‌, வ‌ழிபாட்டில் அதிக‌ நேர‌ம் செல‌வ‌ழிப்பான்!
    ‍ ‍
    இந்துக்க‌ளிடையே இனி பேத‌ம் இருக்க‌ வாய்ப்பே இல்லா. யாராவ‌து உருவாக்க‌ நினைத்தாலும் இய‌லாது.

    அதே நேர‌ம், எல்லா பிரிவுக‌ளின் த‌னித் த‌ன்மை அப்ப‌டியே சிற‌ப்பாக‌ இருக்க‌ட்டும். அதையும் பாதுகாப்போம்.

    நீங்க‌ள் சிறப்பாக‌ எழுதுகிறீர்க‌ள். ஆனாலும் இது விட‌ய‌த்திலே நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமி விவேகான‌ந்த‌ர் கூறிய‌தை சிந்த‌னை செய்யுங்க‌ள் என‌ கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.