முகப்பு » சமூகம், பொது, வழிகாட்டிகள்

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

அச்சிட அச்சிட

இன்று, அக்டோபர்-2  காந்தி ஜயந்தி.

ஆண்டு 1872. காந்திக்கு வயது மூன்று. ராபர்ட் நைட் எனும் பிரிட்டிஷ் அதிகாரி எழுதினார்:

நம்முடைய அறுதியான நம்பிக்கை என்னவென்றால் இந்தியா தன்னுடைய வீழ்ச்சிக்கு காரணமான தன்னுடய பொய்யான மதத்தை இழந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும் வரை அதற்கு நாம் சுயராஜ்ஜியத்தை அளிக்க முடியாது.

ஒரு விதத்தில் காந்தியின் விடுதலைப் போராட்டமும் மதத்தில்தான் தொடங்கியது. இங்கிலாந்தில் காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் கிறிஸ்தவராக மதம் மாற பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார். அவர் அன்னை அவருக்கு அளித்த வைணவ மாலை ஒன்றை அவர் கழற்றிவிட வேண்டும் என்றும் ஒரு பண்பட்ட மனிதனுக்கு அத்தகைய மூடநம்பிக்கை அழகல்ல என்றும் ஒரு மிஷினரி கூறியபோது அவர் பெரும் மனவருத்தம் அடைந்தார். அந்தகால கட்டத்தில் அவருக்கு ஹிந்து தர்மத்தில் வேரூன்றி நிற்க பெரும் வலிமை அளித்தவர் ராஜ்சந்திரா என்கிற இளைஞர். gandhi-1891ஜைனரான இவர் காந்தியிடம் சனாதன தர்மத்தின் பெருமையை விளக்கினார். பின்னாட்களின் காந்தியின் வாழ்க்கை ராஜ்சந்திராவின் வாழ்க்கையையே பிரதி எடுத்தது. 1900 இல் தம் இளவயதில் ராஜ்சந்திரா இறந்துவிட்டார். உண்மை என்பது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல என்பதே மேற்கத்திய பண்பாட்டின் அடிநாதமாக விளங்கிய கிறிஸ்தவத்துக்கும் இந்திய பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் ஹிந்து தருமத்துக்குமான அடிப்படை வேறுபாடு என்பதை காந்தி உணர்ந்துகொண்டார். ஆனால் இதனை அவர் வெறும் தத்துவமாக உணராமல் ஒவ்வொரு வாழ்க்கை வெளிப்பாட்டிலும் அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் ராஜ்சந்திராவிடமே கண்டடைந்தார். பிரிட்டனில் இளைஞனாக கிறிஸ்தவ மிஷினரிகள் “நீ ஏன் இன்னும் ஹிந்துவாக இருக்கிறாய்?” என கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாமல் பெரும் மன வருத்ததுக்கு உள்ளான காந்தி பின்னாட்களில் எழுதினார்:

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். சித்தாந்த கட்டுப்பாடுகளிலிருந்து ஹிந்து தர்மம் தரும் சுதந்திரம் சுய வெளிப்பாட்டுக்கான மிகப்பெரிய வெளியை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால் ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல் அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான் ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச்சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

சூழலியல் சிந்தனை வட்டங்களில் இன்றைக்கு காந்திய கருத்துகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. பல சூழலியல் சிந்தனைகளின் முன்னோடித்தன்மையை காந்தியில் காணலாம். இதற்கு ஒரு முக்கிய காரணம் காந்தியின் உண்மையின் பன்மைத்தன்மை குறித்த அறிதலாகும். இந்த அறிதல் அவருக்கு ஆபிரகாமிய மதங்களின் ஒற்றைத்தன்மைக்கும் ஹிந்து ஞான மரபின் பன்மைத்தன்மைக்குமான போராட்டத்தை குறித்த அடிப்படையான அறிதலிலிருந்தே கிடைத்தது. ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால், பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை. இந்த விதத்தில் இன்றைய ஹிந்து சமுதாயத்துக்கு அவை இன்றியமையாதவை ஆகும்.

பார்க்க: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

சூழலியல் சிந்தனைக்கான காந்திய பங்களிப்பைக் குறித்து பேசும் எவரும் அவரது நகர்ப்புற நாகரிகத்துக்கான எதிர்ப்பு மற்றும் இயந்திரங்களுக்கான அவரது எதிர்ப்பு ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுவார்கள். மேற்கத்திய சூழலில் தொழில் புரட்சியின் காலகட்டத்தில் ஏற்பட்ட இயந்திர வெறுப்பு, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான உடோ ப்பிய கனவுகள் ஆகியவற்றுடன் காந்தியின் இயந்திர-வெறுப்பும் கிராமிய குடியரசுக்கான கனவும் இணைத்து பேசப்படும். 1904 களில் தென்னாப்பிரிக்காவில் டர்பனின் அருகே காந்தி அமைத்த ஆசிரமம் இதற்கான தொடக்கப்புள்ளியாக கருதப்படும். தென்னாப்பிரிக்காவில் காந்தி டால்ஸ்டாயின் போதனைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்ததைக் காணமுடியும். ஆனால் காந்தி இந்திய பாரம்பரிய ஆன்மிக மரபை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற செய்த முயற்சியின் வெளிப்பாடே அவரது டால்ஸ்டாய் பண்ணை. இந்தியா வந்து அவர் மேற்கொண்ட பெரும் இந்திய பயணத்திலிருந்தே அவரது சமுதாய-சூழலிய கோட்பாடுகளின் பரிணாமத்தை நாம் முழுமையாக காணமுடியும். காந்தி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முன்னேற்றத்தையும் மறுக்கவில்லை என்பதையும் ஒரு பழமையான வாழ்க்கைக்கு நம் தேசத்தை அழைத்து செல்லவும் அவர் விரும்பவில்லை என்பதையும் நாம் அவரது சிந்தனையோட்டத்தில் காணமுடியும்.

காந்தி பாரம்பரியத்தின் வலிமைகளைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். மேற்கத்திய முன்னேற்றமே முன்னேற்றத்துக்கான ஒரே மாதிரி என்பதை அவர் மறுத்தார். பொருளாதார சுகாதார ஆன்மிக மேம்பாட்டை மாற்றுவழிகளில் அடைய முடியும் என்பதை அவர் திட்டவட்டமாக உரைத்தார். உதாரணமாக பசு பாதுகாப்பு குறித்து அவர் பேசும் போது இந்தியாவெங்கும் மத நிறுவனங்களால் பாரம்பரியமாக நிர்வகிக்கப்படும் பசுக்களின் சரணாலயங்கள் (பசு மடங்கள்) கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்களாகவும் செயல்பட வேண்டும் எனக் கோரினார். இதன் மூலம் இந்தியாவின் பால் உற்பத்தியை அபரிமிதமாக அபிவிருத்தி செய்ய முடியுமென அவர் கருதினார், காந்திய சுதேசியின் ஒரு முக்கிய கோட்பாடாக அவர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தினார். ராட்டை ஒரு குவித்தன்மையற்ற தொழில்நுட்பத்தின் குறியீடாக அமைந்தது. அந்த ராட்டையின் செயல்திறமையை மேம்படுத்தும் மாதிரிகளுக்கான போட்டிகள் அவரால் நடத்தப்பட்டன. மில் துணிகள் இந்த தேசத்தின் இயற்கை வளம், தொழிலாளர்நலம் ஆகியவற்றின் மீது செலுத்தப்பட்ட காலனிய ஆக்கிரமிப்பு என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது ராட்டை எத்தகைய ஒரு தொழில்நுட்ப எதிர்ப்பு சின்னமாக விளங்கியது என்பது புரியும். சாண எரிவாயு, சூரிய ஒளி தொழில்நுட்பம் ஆகியவை காந்தியின் கனவுகளின் தொழில்நுட்ப வெளிப்பாடாகும்.

pic_6ஜேம்ஸ் லவ்லாக் இன்று ஒரு முக்கியமான உயிரியலாளராக கருதப்படுபவர். இந்த உலகின் புவியியல் மற்றும் உயிரியியல் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முழுமையான ஒரு அதி-உயிரித்தன்மையுடன் செயல்படுவதை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தார். இது Gaia என அழைக்கப்படுகிறது. இக்கருதுகோள் பலத்த சர்ச்சைக்குள்ளாயிற்று என்ற போதிலும் உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல புரிதல் சட்டகமாக இன்று விளங்குகிறது. இந்த கோட்பாட்டினை விளக்கும் அண்மை நூலில் லவ்லாக் இந்த புவி எனும் அதி-உயிரி இன்று எப்படி நோயடைந்திருக்கிறது என்பதையும் அந்த நோய்க்கு காரணம் மானுடத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள் என்பதையும் இதனால் பல இயற்கை பேரிடர்கள் மானுடத்துக்கு ஏற்படும் என்பதையும் விளக்குகிறார். இதற்கான தீர்வில் நாம் என்ன பங்களிக்க முடியும் எனும் கேள்விக்கு அவர் கூறுகிறார்:

நமது பங்கு நம் வாழ்க்கையின் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதே ஆகும். முழுக்க முழுக்க மானுட விஷயங்களில் அவ்வாறு வாழ்வது எப்படி என்பதை காந்தி நமக்குக் காட்டினார். நமது நவீன சூழலுக்கான காந்திய மாதிரிகள் ஆழ்-சூழலியல் இயக்கத்திலிருந்து வரக்கூடும்.

நியூ சயிண்டிஸ்ட் பத்திரிகை ஜேம்ஸ் லவ்லாக்கின் கோட்பாட்டை காந்தியின் தத்துவங்களுடன் ஒப்பிட்டது. அரசியலில் காந்தி கண்டடைந்ததைப் போலவே ஜேம்ஸ் லவ்லாக்கும் சூழலியல் உண்மைகளைக் கண்டடைந்திருப்பதாக அப்பத்திரிகை எழுதியது.

சூழலியல் மட்டுமல்ல வரலாறு மானுடவியல் ஆகியவற்றிலும் காந்தியின் உள்ளுணர்வு சார்ந்த சில கருத்தாக்கங்கள் -அன்றைய காலனிய சூழலில் அறிவியலுக்கு பொருந்தாதவை போல தெரிந்தவை- இன்று மிகப்பெரிய மாற்று உண்மைகளை நமக்கு காட்டும் ஒளிவிளக்குகளாகியுள்ளன. உதாரணமாக இந்தியாவின் கல்வியறிவு வெள்ளையரின் காலனியாதிக்கத்துக்கு முன்னால் எவ்வாறு இருந்தது என்பதனைக் குறித்த தரம்பாலின் விரிவான ஆராய்ச்சி இங்கிலாந்தில் காலனிய ஆட்சியாளர்களுக்கு காந்தி அளித்த பதிலின் குறிப்புகளிலிருந்தே தொடங்குகிறது.

வனவாசிகளுக்கும் ஏனைய ஹிந்து சமுதாயத்துக்குமான மறுக்கவியலாத உறgandhi_microscopeவை காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காலனிய மக்கட்தொகை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறுக்கப்பட்டு வந்த தொடர்பு அது. பின்னாட்களில் இந்தியா விடுதலை அடைந்தும் கூட ஆரிய இனவாத கோட்பாட்டு அறிதலின் அடிப்படையில் அந்த பிளவு பெரிதுபடுத்தப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மரபணுவியல் கோட்பாடுகளும். சமூகவியல் ஆராய்ச்சிகளும் காந்தியின் புரிதலின் சரித்தன்மையை உணர்த்துகின்றன. சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் சமுதாயத்தின் ஆகச்சிறந்த மாதிரியாகவும் காந்தி முன்வைத்த மற்றொரு உருவகம் பேராழி வட்டம் (Oceanic Circle) என்பதாகும். மேற்கத்திய மனம் எதையும் ஒரு கீழ் மேலான கூம்பு பிரமிடாகவே வகைப்படுத்துகிறது, சமுதாய உறவுகள் முதல் சூழலியல் மாதிரிகள் உளவியல் கருத்தாக்கங்கள் ஆகிய அனைத்துமே பிரமிடுகளாகவே அமைக்கப்படுகின்றன. அடித்தளத்தில் சக்தியற்ற பெரும்பான்மையும் மேலே சக்தி-அதிகாரம்-அதீத அனுபவித்தல் ஆகியவை கொண்ட சிறுபான்மையுமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அவை. காந்தி இக்கட்டுமானத்தை அடிப்படை அலகாகவும் ஆதார மாதிரியாகவும் கொள்ள மறுத்தார். பாரதப்பண்பாட்டின் உருவகங்களிலும் குறியீடுகளிலிமிருந்து பெறப்பட்ட அவரது பார்வை பின்வருமாறு:

இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கும். அவை விரிந்த படி இருக்கும் வட்டங்களாக இருக்குமேயன்றி ஒன்றின் மேல் ஒன்று ஏறுபவையாக இருக்காது. வாழ்க்கை என்பது அடிப்பகுதியால் தாங்கிப்பிடிக்கப்படும் உச்சிக் கூம்பு கொண்ட பிரமிடாக இருக்காது. ஆனால் அது ஒரு பேராழி வட்டமாக அமையும். அதன் மையமாக என்றென்றும் தனிமனிதன் இருப்பான். அவன் அவனைச் சுற்றி அமையும் கிராமத்துக்காகவும் ஒவ்வொரு கிராமமும் அக்கிராமங்களை சுற்றி அமையும் பிற கிராமங்களுக்காகவும் அமையும். இவ்வாறாக அனைத்தும் ஓருயிராக ஆணவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு இல்லாததாக தன்னடக்கதுடன் பேராழி வட்டத்தின் மகோன்னத்தத்தின் பங்காளிகளாக, அதன் இணைபிரியாத உறுப்புகளாக அமையும்

அப்துல் கலாமின் புரா (PURA) இந்த பேராழி வட்டத்தின் தொழில் நுட்ப பரிமாணமே. காந்தியின் இந்த பார்வை அவரது அனைத்துயிரையும் ஒன்றாக காணும் சனாதன ஹிந்துவின் பார்வையே. இன்றைக்கும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வளரும் நாட்டின் சமயமாக விளங்கும் ஹிந்து தருமத்தின் தொடர்ந்த ஜீவிதத்துக்கும், ஆக்கிரமிப்பு ஆங்கார இறையியல்களில் சிக்கித்தவிக்கும் மானுடத்தின் மீட்சிக்கும் காந்தியின் இந்த ஹிந்து தர்ம பார்வையை எல்லா துறைகளிலும் செயல்முறை படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

 

161 மறுமொழிகள் மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

  1. சொல்மண்டி இரா on October 2, 2009 at 5:15 pm

    ஏங்க, மகாத்மா காந்திதான் இந்து விரோத இந்தியாவுக்கு புள்ளையார் சுழி போட்டது என்று ராதாராசன் ஒரு புக் போட்டிருக்காங்களாமே! அதை எப்போ தமிழ்இந்துவில் மொழிபெயர்த்து போடுவீர்கள்?

  2. Daniel Thangappan on October 2, 2009 at 7:08 pm

    Gandhi was a fraud. Revelations speak of such people as false messiah. Pastor Prakash J. Mascarenhas exposes Gandhi who is he really. He says “The Bible teaches: “The gods of the pagans are devils.” The Bible teaches: “What the pagans sacrifice, they sacrifice to the devils.” It takes a great deal of HYPOCRISY to reduce Christianity solely to Christ’s Sermon on the Mount and to his instructions to the youngman, and negate and RUBBISH everything else – including, obviously, the Ten Commandments, the very foundation of Christianity, the First of which teaches us: “There is no other God besides Yahweh-Elohim….Gandhi, too, has taken Christ and emptied him of his true and essential message, reducing him to a empty, gutted shell, and makes a show of his admiration for this gutted outer form — Gandhi’s “little brass.”

    Two millennia ago, Christ asked his disciples what men thought of him. Simon replied, “You are the Christ, the Son of the living God.” And Jesus said, “Blessed are you, Simon, son of John, for it is not flesh and blood that has revealed this to you, but my father in heaven.” And two millennia latter, Gandhi pipes up: “You are a great soul, but not the unique son of God.” And claims that this is a “compliment.”

    But this is not Gandhi’s greatest compliment for Christ. That, his greatest compliment is this: “Your message is great and inspiring. But certainly the messages of my Baal, my Moloch, my Beelzebub, my Astarte, these are much more greater and inspiring that yours! They are much superior spiritual guides than you!” ” So Hindus renounce Gandhi and accept Jesus

  3. thirumadhuvazh marvan on October 3, 2009 at 2:28 pm

    காந்திக்கே இப்படி ஒரு பெயரா. காந்தி வழி நடக்கும் காங்கிரஸ் தலைவியே, அவர்களை ஆதரிக்கும் அய்யா தமிழரல்லாத வேற்று இன கருணாநிதியே. நீங்கள் எல்லோரும் ஆதரிக்கும் கிறுத்துவ அன்பு போர்வையில் இருக்கும் பாதிரிமார்கள் செய்யும் வேலயை பாத்துகோங்க.

    …. தம்பி டேனியல் தம்பி …. இந்தியாவுல தானே பொறந்தீங்க. இந்திய சோத்த இந்திய மண்ணுல வெளஞ்ச சோத்த தானே திங்கறீங்க. காந்தி நல்லவரு இல்ல சேரி . அவர் வாங்கி குடுத்த சுதந்திரம் மட்டும் வேணும் . சேரி வெள்ளக்காரங்க குடுத்த மதம் தானே கிறுத்துவம் . சுதந்திரத்துல உண்மை பற்றும் , நேசமும் இருந்தா வெள்ளக்காரன் கிட்ட அடிமைத்தனம் வேண்டாம்னா எதுக்கியா கிறிஸ்துவம் ?

    போர்த்துகீசியர்கள், பிரஞ்சு,ஆங்கிலேயருங்களுக்கு நம்ம இந்திய மண்ணுல வரதுக்கு முன்னாடி இந்த அருமையான, அற்புதமான, அன்பான கிருஸ்தவம் எங்க போயிருந்துச்சு ?

    ஆனா நம்ம சனாதன தர்மமும், சகிப்பு தன்மையும், உயிர்கள் இடத்துல அன்பு காட்டும் அறநெறி கொள்கையும் இந்தோனேசியா, சீன, கிரேக் வரைக்கும் அந்த நாட்கள்ல பிரபலமாவும் மேன்மையாவும் மதிச்சுருக்காங்களே?

    மெக்காலே துரை இங்க வந்துட்டு போன பிறகு என்ன சொன்னான். அத கேளு உங்க பிரகாசமானவரு கிட்ட ? இங்க பொழப்புக்கு வந்துட்டு, திருட்டு வேல செஞ்சு, அசிங்கமான வழில இந்தியாவ புடிச்சிகிட்டவங்க இந்த கிருஸ்தவ அன்பு மதத்தை சேர்ந்த பரங்கியர்கள். இப்போ இவனுங்கள்ட கூலிக்கும், சொத்துக்கும் பிச்சை எடுக்காத கொறைக்கு காசு வாங்கிட்டு இந்த மாறி வேற பிரச்சாரம். உங்க பிரசங்கம்,பூஜை இதல்லாம் அரசியல், சூது, மதமாற்றம் எப்டி செய்யலாம் இத பத்தி தான் நடக்குமா? . என்னவோ போ டேனியல்.

    (Comment edited & published)

  4. rama on October 3, 2009 at 2:32 pm

    We will ignore this Daniel Thangappan for the time being. His brain has been whitewashed, ironed and dried out by the Christian missionaries.
    Shri Aravindan Neelakandanji, I am a fan of your writings and I have the utmost regards and respect for your knowldge on Hinduisim. In my opinion you are one of the leading Kshatryas in defending our faith. I salute you Sir for your great work.
    I have very little regard for Gandhi and from what I have read about him, I consider he was the original cause of all our problems in India at present. He was egocentric and he only knew what was best for our nation.His appeasement of the Muslims at the expense of Hindus caused our nation to be divided.As Radhaji noted, for every succesful Jinnah, there is a Gandhi at the back.
    I am not sure whether you have had a chance to read the book “Eclipse of the Hindu nation” written by Radha Rajan. I consider Radhaji as the leading Hindu Dharmic activist,a true fighter for Hindu cause. May God bless her. If you have read the book, I would appreciate your views on Gandhi.
    Regards
    Rama

    (Comment edited)

  5. சொல்மண்டி இரா on October 3, 2009 at 5:59 pm

    டேனியல் சார்,

    //// obviously, the Ten Commandments, the very foundation of Christianity, the First of which teaches us: “There is no other God besides Yahweh-Elohim ///

    உங்கள் கிருத்துவ வெறி பார்த்து வாயால் மட்டும் சிரிக்க முடியவில்லை.

    டென் கமாண்மெண்ட்ஸ் குறித்து sam harris புத்தகம் letter to christian nation படித்திருக்கிறீர்களா!!

    இதுதான் கிருத்துவத்திற்கு அடிப்படை என்றால் எல்லா மதமும் இதைத்தானே சொல்கிறது. அதிலும் ஜைன மதமும், இந்து மதமும் இவற்றை இன்னும் அழகாகவே சொல்கின்றனவே. பாறையில் செதுக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமாக இதில் என்ன இருக்கிறது. அதிலும் முதல் 4 கட்டளைகள் உடாலங்கடிதான். அதில் morality எங்கே இருக்கிறது. இந்த கட்டளைகளை மீறினால் மரணம் என்கிற அளவுக்கு இதெல்லாம் முக்கியமா? இதைவிட முக்கியமான பிரச்சனைகள் இந்த உலகத்தில் கிடையாதா? பெற்றோர்களை பாதுகாக்க எல்லா பிராணிகளும்தான் செய்கின்றன. கிருத்துவர்கள் மதத்தின் பெயரால் எத்தனை கோடி மக்களை பல்வேறு காரணங்களினால் கொன்று குவித்திருக்கிறார்கள். அம்மாதிரி கொடுமைகளை இந்த பத்து கட்டளைகள் ஏன் தடுக்கவில்லை!!

    தூக்கிப்போடுங்கள் உபயோகமில்லாத கிருத்துவ மதத்தை. சிலுவையில் செத்துப்போன யூத இளைஞனின் கற்பனைக்கதையை விட்டு சச்சிதானந்தமாய் இருக்கும் உயர்ந்த பத்து கட்டளைகளைக்கொண்ட இந்து மதத்திற்கு வாருங்கள். இல்லையில்லை, பத்து கட்டளைகள் இல்லை. ஒரே கட்டளைதான். எல்லோரும் எல்லாமும் இறைவனே. இது புரிந்துவிட்டால் பின்னர் பாறையில் எழுதிய பத்து கட்டளைகள் எதற்கு?

    புரிந்ததா டேனியல் சார்???

  6. Malarmannan on October 3, 2009 at 7:18 pm

    I am known as Gandhi baiter and therefore I did NOT want to record my comments here. I made many blood boiling by writing in detail about the murder of Gandhi in the past. As for me, Gandhi was a very good strategist, and reading the innocent minds of HIndus who are stedfast in their faith, he very cleverly made use of it to take over national leadership by bringing in religion but to the total disadvantage of HIndu society. Since he wanted to represent the whole of Hindustan as her spokesman, he started appeasing Mohmedans at the cost of Hindu interest. I admit he had leadership qualities BUT even many undesirable persons had them. His calling himself a Hindu and speaking high on HInduism were only to have Hindus on his side at their own peril. He had no right to participate in the parleys for partition on the basis of HIndu-Mohmedan divisions because he did NOT claim as the represenataive of HIndus but both. The party he was supporting also did NOT claim to be the party of Hindus but all denominations. As such, the Congress also did NOT have moral right to hold discussions on partition on religious lines. Hindus of the time misearably failed to emphasise this and made RSS and Hindu Maha Sabha their bonafide reperesenattives. Sri Guruji and Sri Veer Savarkar should have been paricipated in the parleys. on behalf of Hindus
    MALARMANNAN

  7. Malarmannan on October 3, 2009 at 7:49 pm

    It was Sri Rama and his/her? reference to Smt Radha Rajan that forced me to record my comments here on Gandhi. I forgot to mention that in my previous posting.

    My best wishes to both Sri Rama and Radha Rajan, who is a fire brand Hindu activist As she is a thinker and does not compromise or adjust , it is dificult for her to get on with establishments. I am one of her admirers. She was the one who could NOT tolerate the rubbish of ‘ Sadhu’ Chellappa at my residence when a Hindu boy under his spell was brought to me for counselling. To our surprise, ‘Sadhu’ Chellappa also came along with the boy, probably to keep his hold on the boy! I had to be patient because I had the responsibility of putting that boy on the rigth track and corner Chellappa so that the self styled Sahdu could be exposed infront of the boy.
    MALARMANNAN

  8. இந்து மத ஆன்மீக மேதை விவேகானந்தர் புத்த பெருமானையும், ஏசு நாதரையும் உலகத்தின் உன்னத மனித நேய வழிகாட்டிகளாக மதிப்பிடுகிறார். அதுபோல் மகாத்மா காந்தியும் ஏசு நாதரின் மீது பெரு மதிப்பு வைத்திருந்தவர்.

    போப் ஆண்டவர் போற்றிய மகாத்மா காந்தியை நமது கிறித்துவ நண்பர்கள் ஏன் மதிப்பளிப்ப தில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

    சி. ஜெயபாரதன், கனடா

  9. அன்புள்ள ஆசிருயருக்கு,

    எனது மகாத்மா காந்தி கட்டுரையை என் முந்தையப் பதிலுடன் இணைக்கும்படி வேண்டுகிறேன்
    நன்றி.

    http://jayabarathan.wordpress.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

    சி. ஜெயபாரதன், கனடா

  10. Daniel Thangappa on October 4, 2009 at 11:12 am

    Mr. Jeyabharathan, We are true Christians. We do not worship Pope. But when Gandhi went to Italy and wanted to meet Pope, the Pope refused to meet Gandhi. Christianity Today magazine called Gandhi as a fiction by Attenborough. Brother Jeyabharathan it is not enough to accept some of Jesus and not all of Jesus. Only Satan does that to deceive people. Gandhi is an agent of Satan. He deceived his people. Jesus said ” He who is not with me is against me.” So either you are on Jesus side or on Gandhi side.

  11. தேவப்ரியா சாலமன் on October 4, 2009 at 2:31 pm

    இயேசு என ஒருவர் இருந்தாரா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி?

    அப்படியே இருந்திருந்தாலும் அவர் ரோமன் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஒரு யூதப் போராளியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் பெரும்பான்மையோர் ஏற்கும் முடிவு.

    ஏசுவைப் பற்றி பேசும் முதல் நூற்றாண்டின் புனையல்களான சுவிசேஷங்கள், ஜோசபஸ் எழுத்துக்கள், சாக்கடல் சுருள்கள் என மூன்றையும் ஒன்றிணைத்து ஒரு நேர்த்தியான ஆய்வின்பின் கிறிஸ்துவத்தை ஆரம்பித்தது ரோமன் அரசர் தான், கிறிஸ்து என்பது ரோமன் அரசர் டைடஸைத் தான் குறிக்கும் Caeser’s Messiah நூல் பெருத்த ஆதரவையும் எதிர் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

    அந்நூலிற்கும், அதன் ஆசிரியர் பேட்டிக்கும் கீழே தொடுப்புக்கள்.

    http://www.caesarsmessiah.com/

    Historical Jesus -was there One?

    How was Jesus story written-Analysing Gospels, Dead Sea Scrolls and Josephus in depth you can get about this book

    Joseph Atwill: Caesar’s Messiah, the Roman Origin of Christianity.

    http://www.esnips.com/doc/b67761f4-ecd2-423a-93a0-0ff2b9eb6149/Joseph-Atwill—Caesars-Messiah—The-Roman-Conspiracy-to-Invent-Jesus

    You can hear the Interview with Author with this link.

    http://www.esnips.com/doc/179d4284-b13b-4fcf-9948-691e9f5b0fb4/Interview

    You can read about this book in the website of author

    http://www.caesarsmessiah.com/summary.html

    Author runs Forums for questions.
    An One hour Interview with Joseph Atwill

    http://video.google.com/videoplay?docid=4177667410483454304&q=john+hudson&hl=en

    http://youtube.com/watch?v=dCNJf83bqjs

    ஒருவன் மரணதிர்கு முன் கடைசியாக உண்மை பேசுவான், என மரண வாக்குமூலம் என உல்கில் அனைது நாட்டு நீதிமன்றமும் ஏற்கின்ரன. புராணக்கதை நாயகர் ஏசு இரந்து 40 வருடம் பின் புனைப்பட்ட மாற்கு சுவியில் ஏசுவின் மரண ஓலம்.
    மாற்கு 15:34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘ என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?

    வரலாற்றில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலை வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லத ஒரு புரண கதை நாயகன் கொண்டு வரலாற்றில் வாழ்ந்த காந்தியை விமர்சிக்கும் அளவு உங்கள் மூளை சலவையின் ஆழம் தெரிகிறது.

  12. aravindan neelakandan on October 4, 2009 at 4:49 pm

    The book by Radha Rajan is a travesty of history. She tries to straight jacket history into her own ideological whims and fancies. She wants to demonize Gandhi and towards that end she finds faults with every contribution of history. Hinduthva as defined by Guruji Golwalkar, Nanaji Deshmukh and Pandit Deendayal Upadhyaya has no place for such narrow-minded distortion of history. Gandhi is an important and positive personality of Hindu history in the this and preceding century. Every RSS Swayam Sevak mentions his name along with other great sons and daughters of Mother India. Yes…he has done miscalculations with regard to Islamic fanaticism for which we have paid a heavy price. We can learn from his mistakes as well. H.V.Shesadri has done that analysis wonderfully in his Tragic story of partition without demonizing anyone. What Radha Rajan provides in the pages of her Eclipse of Hindu nation is neither history nor scholarship. It is ignorance peddled as perspective with an air of abject arrogance and nothing else. That is my view.

  13. B. பாஸ்கர். on October 4, 2009 at 7:59 pm

    வணக்கம்,

    ////இந்து மத ஆன்மீக மேதை விவேகானந்தர் புத்த பெருமானையும், ஏசு நாதரையும் உலகத்தின் உன்னத மனித நேய வழிகாட்டிகளாக மதிப்பிடுகிறார். அதுபோல் மகாத்மா காந்தியும் ஏசு நாதரின் மீது பெரு மதிப்பு வைத்திருந்தவர்.///

    இருக்கலாம், ஆனால் இன்று இந்த கிறிஸ்துவம் தான் வளந்த இடத்திலேயே தன் பலத்தை? இழந்து நிற்கிறது, கிறிஸ்தவத்தை சார்ந்த பல அறிஞர்களே பைபிளை ஆராய்ச்சி செய்து அது பல நபர்களால் புனையப்பட்ட கதை என்று நிரூபணம் செய்து விட்டார்கள். இந்த நிரூபணம் விவேகானந்தர், காந்தி, காலத்தில் நடந்து இருப்பின் இந்திய மக்களின் நலன் கருதி அவர்கள் இயேசுவின் மதத்தை புறந்தள்ளி இருப்பார்கள்.

    இன்றைக்கு இங்கே சொல் வீசும் கிறிஸ்துவ நண்பர்களின் மூதாதையர்கள் வெள்ளைக்காரனுக்கு பயந்து அவனிடம் ரேசன் வாங்க மதம் மாறிய கூட்டங்களாகவும் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிறப்பால் இந்துக்களாகவே இருந்திருப்பார்கள்.

    நம்மிடம் ஆயிரம் நல்ல கருத்துக்கள் இருப்பினும் அதையே வெள்ளைக்காரன் வாயிலிருந்து வந்தால்தான் அது வேத வாக்காக இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கும் சிலரின் பித்துக்குளி தனத்தால்தான் பல கமான்ட் மென்டுகளின் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இயேசுவின் மலை பிரசங்கமென்ன எந்த ஒரு பிரசங்கமும் சுவாமி விவேகானந்தா அவர்களின் ஒரு சாதாரண பிரசங்கத்துக்கு இணை வைக்க முடியாது. பாவம் தன் பலம அறியாது அவர் சன்னியாசியாகவே இருந்து விட்டார்.

  14. தேவப்ரியா சாலமன் on October 4, 2009 at 8:55 pm

    I quote from Mahatma Gandhiji.

    //My difficulties lay deeper. It was more than I could believe that Jesus was the only Incarnate son of God, and that only he who believed in Him would have everlasting life. If God could have sons, all of us were His sons. If Jesus was like god, or God Himself, then all men were like Goad and could be God Himself. My reason was not ready to believe literally that Jesus by his death and by his blood redeemed the sins of the world…//

    I must say in all humility that Hinduism, as I know, entirely satisfies my soul, fill my whole being, and I find solace in the Bhavad Gita and Upanishads that I miss even in the Sermon on the Mount.
    Mahatma Gandhiji.

  15. Anjanasudhan on October 4, 2009 at 8:58 pm

    Smt.Radha Rajan’s book is neither travesty of history nor narrow-minded distortion of it. Her book was based on the “Collected Works of Mahatma Gandhi” (CWMG) and she had thoroughly analysed Gandhi with “his own speeches and writings”. Her work is meticulous and extremely erudite. No other author has analysed the partition of India with such an exposition. Gandhi is indeed an “important” personality of “Hindu” history, but was certainly a “negative” one. Having paid (and still paying) a heavy price for his Muslim appeasement, how can we simply ignore it as “miscalculation”? Not acceptable!

    His politics has NOT helped this Hindu nation – Period. – This is my view.

  16. thirumadhuvazh marvan on October 4, 2009 at 9:01 pm

    வேதம்,புராணம் ஆகியவைகள் ஆஸ்திகம் நாஸ்திகம் இரண்டை பற்றியும் தெள்ள தெளிவாக விளக்கி கூறியுள்ளது. கிருஷ்ணன் இருவரையும் பாதுகாத்து கொண்டு தான் இருக்கிறார். தன்னுடன் பக்தி ச்நேதிதம் இல்லாதவர்கள் வேண்டா, இவன் எனக்கு எதிரி என்று தூக்கி எரிந்து விடவில்லை. சர்வே ஜனா சுகினோ பவந்து என்கிற நம் பண்பும் நற்குணமும் எங்கே? இந்த சுவிசேஷ சூதுக்களின் அற்புத மொழி எங்கே?

    இந்த டேனியல் போன்ற மக்களை தானே மைனோ விரும்பிகிறார். இத்தாலி-2 என்று இந்தியாவை கூறு போட துணை நிற்கும் அடிமைகள், மூளை சலவை செய்யப்பட்ட அடிமைகள். மைனோ க்கு தன கணவர் ராஜீவ் இறந்தது கூட பெருசு இல்லையே. இந்த வெறியர்களை தன் அடிமைகளாக்கி இந்தியாவை வித்துட்டு போய்விடலாம்ல. குடிசை குடிசையா போய் சீன் போடுவது எதுக்கு? இன்னும் எவ்ளோ எல்லைய வளைக்கலாம். காந்தி கிராமங்களை பெருமையாக நினைத்தார். ஆனா இவங்க வோட்டுக்கு தானே இந்த கூப்பாடு. காந்தி யோ அவரோட சிந்தனைகளோ நினைவில் இருந்தா இப்படி நடந்துபாங்களா? உண்மை முகம் கிழிய ரொம்ப நாள் ஆகாது

  17. சி. ஜெயபாரதன், கனடா on October 4, 2009 at 10:36 pm

    /////Daniel Thangappa
    4 October 2009 at 11:12 am

    Mr. Jeyabharathan, We are true Christians. We do not worship Pope. But when Gandhi went to Italy and wanted to meet Pope, the Pope refused to meet Gandhi. Christianity Today magazine called Gandhi as a fiction by Attenborough. Brother Jeyabharathan it is not enough to accept some of Jesus and not all of Jesus. Only Satan does that to deceive people. Gandhi is an agent of Satan. He deceived his people. Jesus said ” He who is not with me is against me.” So either you are on Jesus side or on Gandhi side.///

    நண்பர் டேனியல் தங்கப்பா,

    மகாத்மா காந்தி மாண்ட போது இத்தாலி வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், ‘கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார் ‘ என்று எழுதி யிருந்தார்.

    போப்பாண்டவர் சிலர் வெறுப்பார். சிலர் போற்றுவார்.

    ///” He who is not with me is against me.” So either you are on Jesus side or on Gandhi side.///

    காந்திஜி ஏசு நாதர் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார். நீங்கள்தான் உலகப் பொது மகான் ஏசு நாதரை அவமதிக்கிறீர்கள். எனக்கு ஏசு நாதரும் காந்திஜியும் மனித நேயமுடன் வாழ்ந்த இருபெரும் மகான்களாய்த் தெரிகிறார். விடுதலை இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பெருஞ் சாதனை செய்த சுதந்திரப் பிதா மீது இத்தகைய கீழான எண்ணம் கொண்டிருப்பது உங்கள் தாழ்ந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

    சி. ஜெயபாரதன்.

  18. rama on October 5, 2009 at 8:04 am

    I totally agree with Mr Anjansudan. Radhaji had done tremodrous research for her book and anybody who disagree with her need to counter it appropriately. I have lot of regards for Shri Aravind Neelakandaji but I feel, in my humble opinion,he has erred here reg Radhaji. We Hindus have been brain washed by the tales about Gandhi by the secularists.We need to study history again and Gandhi’s role in the freedom and partition of India.
    We need a united front to face the threats to our Hindu Dhrama
    Shri Malarmanan, i am a “He”!!

  19. Kreshna on October 5, 2009 at 8:29 am

    Gandhi has created more problems for india than anyone else. He advises peace and non viloence only to hindus. And he is scared of muslims. When sardar patel and k k munshi went to gandhi for reconstruction of somnath temple, gandhi refused to help iby providing funds and told them to get funds from the public. A very good hindu indeed.Gandhi and Nehru are over hyped politicians. Its time to move on from them and know about other freedom fighters like Chandrasekhar Azad, V.V.S Iyer, Vanjeenathan.

    Mr Aravindan, why not write about Vināyak Dāmodar Sāvarkar?

    (Comment edited & published)

  20. Daniel Thangappa on October 5, 2009 at 1:49 pm

    பிரதர் ஜெயபாரதன் ஒருவரது மரணத்தின் போது ஒருவரை பாராட்டி பேசுவது பண்பாடானவர்கள் செய்வது அதைத்தானே போப்பாண்டவர் செய்தார். இதனால் அவர் காந்தியை மகாத்மா என்றெல்லாம் ஏற்றுக்கொண்டாரா என்ன? “எனக்கு ஏசு நாதரும் காந்திஜியும் மனித நேயமுடன் வாழ்ந்த இருபெரும் மகான்களாய்த் தெரிகிறார்” என்கிறீர்களே இதுவே எனக்கு வேதனையை தருகிறது. காந்தி ஒரு மனிதர். ஏசு திரித்துவ தேவன். உம்மையும் என்னையும் காந்தியையும் படைத்த தேவன். அந்த வல்லமை பொருந்திய தேவகுமாரனை மனிதனுடன் ஒப்பிட்ட உம்மை மன்னிக்கும்படி நான் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களை காந்தி விரட்டியதால் என்ன ஆனது? ஆரியர்கள் நம்மை சுரண்டினார்கள். பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாக விடுதலை பெற்றிருக்கும் இந்த ஊழல் எல்லாம் இல்லாமல் நாம் நல்ல ஜனங்களாக தேவ ஆவியால் சுத்திகரிக்கப்பட்டிருப்போம். ஆனால் காந்தி பொய்யான தேவனான ராமனின் பெயரில் சுதந்திரம் பெற்றதாலே இந்த நாடு கஸ்டப்படுகிறது. என்ன ஆனாலும் தேவனின் மகிமையை பார்த்தீர்களா பிரதர் ஜெயபாரதன்? ஒரு விக்கிர ஆராதனை காந்தி செய்த தவறை ஒரு கத்தோலிக்க காந்தியான சோனியா காந்தியாலே ஏசு சொஸ்தப்படுத்திவிட்டார். இதோ காந்தியாலே ஏற்பட்ட பிசாசு சட்டங்களான மதமாற்ற எதிர்ப்பு சட்டங்கள் எல்லாம் விலகி இந்த தேசம் ஒரே உண்மையான தேவனாகிய கர்த்தாராலே ஆசிர்வாதப்படுத்தப்படுகிறது. ஏசுவையும் கிறிஸ்தவத்தையும் எதிர்த்த காந்தியின் காங்கிரசே இன்றைக்கு ஏசுவின் சபைகளிடம் கேட்டுத்தான் வாக்காளர்களை நிறுத்துகிறது. எப்படி பழைய ஏற்பாட்டிலே விக்கிர ஆராதனைக்காரர்களிடையே எஸ்தர் கர்த்தருக்கு அற்புத வலிமையை நிரூபித்தாளோ அப்படி சோனியா காந்தி இன்றைக்கு இந்து விக்கிர ஆராதனையாளர்களுக்கிடையே கிறிஸ்துவின் மகிமையை கொண்டு செல்கிறார். சோனியா காந்திதான் உண்மையான மகாத்மா அதாவது கர்த்தராகிய திரித்துவ தேவனின் பிள்ளையாகிய மகாத்மா. போலி மகாத்மா அல்ல. பிரதர், நான் உங்களுக்காகவும் உங்கள் தேசத்துக்காகவும் ஜெபிக்கிறேன். கர்த்தர் சர்வ வல்லமையுடனே உங்கள் கண்களை திறப்பார். காந்தி ஒரு வலு சர்ப்பத்தின் ஏவலாள் என்பதையும் ஏசு மட்டுமே உண்மையான தேவன் என்பதையும் நீங்கள் கனத்துடனே உணருவீர்கள். ஆண்டவரின் கூடாரமாக இந்த நாடு மாறும். அப்போது வாதை அந்த கூடாரத்தை அணுகாது.

  21. களிமிகு கணபதி on October 5, 2009 at 2:38 pm

    காந்தியை வெறுப்பது ஹிந்து மரபும் இல்லை, உண்மையைப் புரிந்து நலன் நாடுபவர் செய்யும் செயலும் இல்லை.

    காந்தியின் அனைத்து வெற்றிகளும் அவர் ஹிந்து மரபை நிலைநிறுத்த முயன்ற போது கிடைத்தன. காந்தியின் அனைத்துத் தோல்விகளும் அவர் தன்னை நிலைநிறுத்த முயன்ற போது கிடைத்தன.

    காந்தியின் வெற்றிகளைப் புறக்கணித்துவிட்டு ஹிந்து மரபு முன்னேறி விட முடியாது.

    இத்தகைய கட்டுரைகள் மொன்னையான அரைகுறை புரிதலில்/வெறுப்பில் இருந்து ஹிந்துக்களை விளக்கி தெளிவை அளிக்கும்.

    அவரை சரியான கோணத்தில் முன்வைக்கும் இது போன்ற கட்டுரைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட வேண்டும். ஏனெனில், மெக்காலே இந்தியர்கள் காந்தியையும் புரிந்துகொள்ளவில்லை, ஹிந்து தர்மத்தையும் புரிந்துகொள்ளவில்லை.

    காந்தியை விலக்கிவிட்டு இந்தியா மீண்டெழ முடியாது. அவரை விளக்கிவிட்டுத்தான் இந்தியா மீண்டெழ முடியும்.

    காந்தியைப் பற்றிய புரிதலை மலர்மன்னன் அவர்களும், அரவிந்தன் அவர்களும் அளிக்கிறார்கள். வாழ்க நீவிர் !!

  22. aravindan neelakandan on October 5, 2009 at 4:00 pm

    Dear Mr.Daniel,

    Are you serious? Do you really think India would have been better under British? Do you know about the economic drain that British caused in India? What about the massacres Christians did to Indians and native Americans? Did not Marin Luther King and other great international humanists admire and accept the greatness of Gandhi? Why cannot you see that if Jesus cannot be with someone like Gandhi then there should be something wrong with Jesus or at least the way in which you see Jesus.

    s. aravindan neelakandan

  23. M.Mannaaru on October 5, 2009 at 4:03 pm

    அலோஓ…டேனி தங்கம்! இன்னா ஸோகா எய்திகினே வாத்யாரே வஸனம்! ஐயோ…ஐயோ….படா டமாஸா கீது வாத்யாரே…

    காந்தி பேர ஸொல்லிகினு சோனியா காலாண்ட வுயுந்து கெடக்கறானுங்க பாரு…காங்கிரஸ் காரனுங்கோ….அவனுங்கள செருப்பால அட்ச்சுகிற வாத்யாரே நீ, அஆங்! ஸூப்பர்மா!

    சோனியா இன்னாத்துக்கு இந்தியாவுக்கு வந்துகறாங்கன்னு இவ்ளோ கரீட்டா இது வரெக்கும் ஆரும் ஸொல்லல தங்கம். நீதான் ஸொம்மா ஸொல்லி அடிக்கர ஸொல்லி, அஆங்!

    ஏஸ்து கிறுஸ்து திர்த்துவ தேவன்….சோனியா மவாத்துமா….
    அடேங்கப்பா…எவ்ளோ விஸயம் ஸொல்லிகிறே வாத்யாரே நீ!

    அலோ..மச்சிங்களா! அல்லாரும் நம்மாளு டேனி பத்தி தெர்ஞ்சுகினீங்க இல்ல? சும்மா வுடாதீங்க அவுர…புட்சுக்கங்க. நல்லா உஸ்புங்க…அப்போதான் இன்னும் ஸோகா வஸனம் எய்துவாரு…நம்ம அல்லாரும் நல்லா டமாஸ் என்ஸாய் பண்னலாம். இன்னா வர்டா…

    மன்னாரு.

  24. Mr. Daniel Thangappa,

    You are NOT a real Christian and you are NOT a patriotic Indian. Jesus Christ was a great Messenger of God like Buddha & Vivekananda. He was born as a Man, served for Man & died for man.

    S. Jayabarathan

  25. C.N.Muthukumaraswamy on October 5, 2009 at 6:14 pm

    பாட்டி கடைஞ்ச மசுருலே கீரையைக் கண்டது போல அபத்தக்களஞ்சியமான நயவஞ்சகக் கிறித்துவத்திலே காந்தியடிகள் போன்ற நல்ல உளம் படைத்தவ்ர்கள் ஏதோ சில நல்லதைக் காண முயன்றதன் பலன் நம் இந்தியா எனும் பாரதத் திருநாடு கிறித்துவர்களின் அறுவடை செய்யும் நன்செயாக மாறிவிட்டது. டேனியல் தங்கராஜ் போன்ற கிறித்துவர்கள் தேவன் என்றும் கர்த்தர் என்றும் கூறுபவ்ன் ,
    மடமைக்கும் முட்டாளதனத்துக்கும் அடிமையானவன்.
    செத்துப் பிறக்கின்ற மானுடப்பதர்
    புலாலும் மதுவும் விரும்பும் புல்லன்
    மனக்கொதிப்பு மிக்கவன்
    பொறாமையின் வைப்பு; வஞ்சகத்தின் இருப்பிடம்
    வீண்பேச்சுப்பேசும் பதடி
    சொல்லொன்று செயலொன்றாக நடக்கும் சிறியோன்
    அருளாளலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கொடியவர்களெனக் கூறும் கொடியோன்.
    இழிபண்புகளுக்கு இருப்பிடம்.

    தமிழ்இந்துக்கள் சமயநல்லிணக்கம் பெசி நம்முடைய பலத்தை நாமே இழந்து விடக் கூடாது. சமயநல்லிணக்கம் பேசுதல் ந்ம்முடைய போர்க்குணத்தை மழுங்கடித்துவிடும்.

  26. அஞ்ஜனாசுதன் on October 5, 2009 at 6:54 pm

    // தமிழ்இந்துக்கள் சமயநல்லிணக்கம் பெசி நம்முடைய பலத்தை நாமே இழந்து விடக் கூடாது. சமயநல்லிணக்கம் பேசுதல் ந்ம்முடைய போர்க்குணத்தை மழுங்கடித்துவிடும்.//

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஆப்ரஹாமியர்களிடம் மத நல்லிக்கணம் பேசுவது மடமையே.

    ”எம்மதமும் சம்மதம்” என்ற முட்டாள் தனத்தை விடுத்து ”எம்மதமே சம்மதம்” என்று கொள்ள வேண்டும்.

  27. ram on October 5, 2009 at 7:29 pm

    //”எம்மதமும் சம்மதம்” என்ற முட்டாள் தனத்தை விடுத்து ”எம்மதமே சம்மதம்” என்று கொள்ள வேண்டும்.//

    உண்மை நான் என் இந்து நண்பர்களுக்கு அதையே போதித்து வருகிறேன். ஏனெனில் காலம் அப்படி இருக்கிறது என்ன செய்ய. ஒரு சம்பவம் , நடந்து முடிந்த சரஸ்வதி பூஜையன்று எங்கள் நிறுவனத்திலும் பூஜை நடந்தது. சாமிப்படங்கள் எல்லாம் வைத்து பூஜை செய்ய எல்லோரும் நின்று வசதியாக கும்பிட ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த இடம் ஒரு மதம்மாறிய கிறுஸ்தவரின் இடம். அவர் இங்கே வைக்காமல் வேறு இடம் பார்க்ககூடாதா? என்று அதை ஏற்பாடு செய்பவரிடம் கேட்கிறார். இவ்வளவுக்கும் அது இந்து முதலாளியின் நிறுவனம். ஒரு நிறுவனத்திற்குள்ளேயே இப்படி செய்கிறார்கள் என்றால் வெளியில் என்னென்ன செய்வார்கள்?. அதனாலேயே இந்து தர்மம் தான் நமக்கு சம்மதம்.

  28. Daniel Thangappa on October 5, 2009 at 7:31 pm

    பிரதர் ஜெயபாரதன் என்னை நீங்கள் கிறிஸ்தவன் அல்ல என்று சொல்ல நீங்கள் யார்? கிறிஸ்தவ விசுவாசம் என்பது கிறிஸ்துவை மகானாக ஏற்றுக்கொள்வதில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் ஏசுவை மனிதர்களோடு சமமாக பேசுகிறீர்கள். பிரதர், காந்தியின் ரத்தமோ விவேகானந்தனின் ரத்தமோ ரட்சிப்பு கொடுக்காது. ரட்சிப்பு என்பது கர்த்தராகிய ஏசுவின் இரத்தத்திலேயே இருக்கிறது. நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு கர்த்தராகிய பிதாவின் பெயரிலும் ஆட்டுக்குட்டியாகி உங்கள் பாவங்களுக்காக சிலுவையில் அடிபட்டு மரியுண்ட ஏசுவின் பெயரிலும் நிந்தனை செய்யக்கூடாத பரிசுத்த ஆவியின் பெயரிலும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும். இதை சொன்னவர் ஏசு கிறிஸ்து. இப்படி சொல்லும் துணிவு உங்கள் காந்தியிடமோ விவேகானந்தனிடமோ உண்டா சொல்லுங்கள்? இதை சொல்லும் துணிவுள்ளவர் தேவ மைந்தனாக மட்டும்தானே இருக்கமுடியும்? இதை நீங்கள் புரிந்து கொண்டால் காந்திக்கு எந்த இடம் கொடுக்கவேண்டும் என்பதும் உன்னதங்களில் உன்னதமானவரும் உண்மையான அப்பமும் ஜீவனுள்ள தேவனுமான ஏசுவை எங்கு வைத்து வழிபட வேண்டும் என்பதும் தெரியும். மனுஷ குமாரனாகவும் தேவகுமாரனாகவும் இருக்கிறவரை மனுஷனோடே தூஷனை செய்யாதீர்கள். அது விக்கிர ஆராதனையை போலவே ஆண்டவனுக்கு பிரியமில்லாததாக இருக்கிறது.

  29. நண்பர் டேனியல் தங்கப்பா,

    கிறித்துவ மத ஆலயத்தை உலகெங்கும் ஓங்கி நிறுத்தி இருப்பது விக்கிர ஆராதனையின் ஆரம்ப கட்டம் ! அன்னை மேரி சிலையை, ஏசு நாதர் சிலையை வைத்து ஆலயத்தில் நீங்கள் வழிபடுவது முழு முழுக்க வடிவ வழிபாடு. சிலுவையைக் கழுத்தில் அணியாக அணிந்து கண்ணில் ஒற்றிக் கொள்வதும், சிலுவை ஆலயத்தில் நட்டு வணங்குவதும் வழிபாடு இல்லாமல் வேறென்ன ?

    மகாத்மா காந்தி இழையில் பரிந்து உங்கள் கிறித்துவ மதத்தைப் பரப்பாதீர்கள். இந்து மதத்தில் எல்லாத அறநெறிகளும் உள்ளன நண்பரே !

    ஜெயபாரதன்.

  30. C.N.Muthukumaraswamy on October 5, 2009 at 9:30 pm

    ஏசு பாவிகளை இரட்சிக்க வந்தான். அவர்களுக்காக இரத்தம் சிந்தினான். மனிதரின் பாவங்களுக்க்காக இரத்தம் சிந்தினான் என்று எல்லாம் கிறித்தவர்கள் ஆரவாரமாகப் பேசுவார்கள். இயேசுவின் தீவினைகளே அவ்னைச் சிலுவையில் ஏற்ரிக் குருதி சிந்த வைத்தன. அந்த இரத்தம் நாறும். நாறும் இயேசுவின் இரத்தத்தையும் உடலாகிய மாமிசத்தையும் மதுவாகவும் அப்பமாகவும் தின்று பழகிவிட்ட டேனியல் தங்கப்பா போன்ற கிறுத்துவர்களுக்குத் தமிழ் இந்து போதிக்கும் அறங்களுக் அருள்மொழிகளும் ஏறாமல் போவது ஆச்சரியமன்று.

    தப்பிலாக் க்ர்த்தனே ஏசு வடிவாய்ச்
    சகத்தில் அவதரித்தான் எனில் யூதரால்
    முப்பத்து மூன்றாம் வயதில் சிலுவையில்
    மொத்துண் டிறப்பானோ ஞானப்பெண்ணே

    ஓதும் சகல சாமர்த்தியம் ஞானமெய்
    உட்சுத்தம் ஏசுவுக்குள்ள தென்றாலவன்
    யூதர் பிடிப்பா ரென்றஞ்சிப் பதுங்கி
    ஒளித்துத் திரிந்ததென் ஞானப்பெண்ணே.

    மார்க்கத்தார் சாதியார் சேர்க்கக் கூடாமல்
    வதித்துக் கையாணி புதைத்திட்டுச் சந்தியில்
    பார்க்கட்டும் என்று சிலுவையிலேயிடப்
    பட்டவன் தேவனாம் ஞானப்பெண்ணே

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.