முகப்பு » அரசியல், தொடர்

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

அச்சிட அச்சிட

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய புளுகுகளையும் வரலாற்றுப் பிழைகளையும், முரண்பாடுகளையும் நாம் பார்த்தோம். இனி அவருடைய வாரிசு மணியம்மையாரின் புளுகுகளையும் மணியம்மையினுடைய மூடநம்பிக்கையையும் ஆராயலாம்.

மணியம்மை கூறுகிறார்:-
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
(விடுதலை 6-1-1976)

அம்பேத்கர் முஸ்லீம் மதத்தில் சேரப்போவதாகச் சொன்னார் என்று சொல்கிறாரே மணியம்மை- இது உண்மையா?

drambedkarஒரு பொழுதும் உண்மையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்தபோது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை.

அம்பேத்கர் கூறுகிறார்:-
”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
(நூல் :- Ambedkar – A Critical study)

முஸ்லீமாக மாறினால் நாடே சீரழிந்து இருக்கும் என்று சொன்ன அம்பேத்கரா முஸ்லீம் மதத்தில் மாறப்போவதாக சொன்னார்? அம்பேத்கர் அப்படி சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு மற்றொரு ஆதாரம்–

அ. மார்க்ஸ் என்பவர், ”பெரியார்?” என்ற நூலில் கூறுகிறார்: ”அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய போது நீங்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியலாக இருக்கும் என (பெரியார்) அவருக்கு அறிவுரைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.”

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதை அம்பேத்கர் கூறியது என்று சொல்வதுதான் பகுத்தறிவா? அ.மார்க்ஸ் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் ஆரம்பித்திலிருந்தே ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியானதாகும்,’ என்று பல தடவை கூறியிருக்கிறார்.

இதையும் நம்பாதவர்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே பதில் சொல்கிறார்–

”நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்போது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டி, “போடு கையெழுத்தை; நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம்” என்றார். நான் சம்மதிக்கவில்லை.”
(விடுதலை 16-2-1959)

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்றிலிருந்து, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறவேண்டும் என்று சொன்னாரே தவிர இஸ்லாமுக்கு அல்ல என்பது தெளிவாகும். மணியம்மையின் இந்தப் புளுகை எதில் சேர்ப்பது? இதுதான் ஒரு தலைவிக்கு அழகா?

இதைக்கூட விட்டுவிடுவோம். இவர்கள் எதை மூடநம்பிக்கை என்று சொல்லிவந்தார்களோ, அதையே இவர்கள் நம்பினதுதான் வேடிக்கை.

maniammaiyarமணியம்மை கூறுகிறார்:-
”என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும் என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து விடுகிறேன். உடனே அய்யாவின், அந்தப் புன்னதை முகம் என் கண்முன்தோன்றி, ”பைத்தியக்காரி இவ்வளவு தானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்துச் சொல்லி வந்த கருத்துகளை உன்னிடத்திலே காணமுடியவில்லையே!

நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைபிடிப்பவளாய் இருக்கப்போகிறாயோ! சாதாரணப் பெண்கள் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்க வேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப் படுத்திவைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே! என்று சொல்வதுபோல் தோற்றம் அளிக்கும்”.

உடனே நான் ”இல்லை-இல்லை-மன்னித்துவிடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல, என்றுமே நடக்கமாட்டேன்” என்று மனதால் நினைத்துக்கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக்கொண்டு என் உள்ளத்தை இரும்பைப்போல் கடினமாக ஆக்கிவிடுவேன் அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்”.
(விடுதலை 4-1-1974)

பகுத்தறிவுவாதியான மணியம்மை கூறுகின்ற இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இந்துமதப் புராணங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அசரிரீ என்ற பெயரில் ஒரு குரல் கேட்கும். அந்த அசரிரீக் குரல், எச்சரிக்கைக் குரலாகவும், அறிவுரைக் குரலாகவும் அல்லது பாராட்டுக் குரலாகவும் இருக்கும். இப்படி அசரிரீ கேட்கும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையும் கூட.

ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை அல்லது கருத்து என்ன?

அசரிரீக் குரல் தானாகவே கேட்காது. அதுவும் மனிதன் யாருமே இல்லாமல், எந்தவிதக் கருவியும் இல்லாமல் மனிதனைப் போல் பேசுவது என்பது பகுத்தறிவுக்கு முரணானது. இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இப்படி பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை என்ன கூறுகிறார்?

தான் சோர்ந்து இருக்கும் சில சமயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தனக்கு ஆறுதல் கூறுவதுபோல் தோற்றம் அளிக்கும் என்கிறார் மணியம்மை. இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி தோற்றம் அளிப்பார்? அப்படியே தோற்றம் அளித்தாலும் பேசுகின்ற மாதிரி குரலுடன் தோற்றமளிக்க முடியுமா? ஒருவர் இறந்தாலும் கூட அவரை நினைக்கும்போது அவருடைய தோற்றம் நம் மனதில் எழும் என்று சொல்லலாம். அது வெறும் எண்ணமே தவிர உண்மை அல்ல என்றும் சொல்லலாம். அப்படியென்றால் உண்மையில்லாத இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், தோற்றத்திற்கு அல்லது எண்ணத்திற்கு எதற்காக மன்னித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டும்? மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன்னித்துவிடுமா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் ஆறுதல் சொல்லியவுடன்தான் மணியம்மைக்கு மனதில் அமைதியும், நிறைவும் பெறும் என்பதுதான் பகுத்தறிவா? எவ்வளவோ ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோழர்கள் மன அமைதியும் நிறைவும் இல்லாமல் திராவிடர்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்தார்கள். அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றி மன அமைதியைக் கொடுத்திருக்கலாமே- ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றவில்லை? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன அமைதியை கொடுத்துவிட முடியுமா?

இந்தத் தோற்றமே நம்மால்தான் ஏற்படுகிறது என்று சொல்வார்களானால் அதற்காக மன்னிப்பு எதற்கு? தோற்றமே நம்மால் தான் ஏற்படுகிறது என்கின்றபோது அதற்காக ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் மன அமைதி பெறுகிறது என்று சொல்வது எதற்காக? இதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று சொல்வது! அதாவது பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை.

அடுத்து-

மணியம்மை கூறுகிறார் :-
”அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்துவிட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடமாட்டேன்.. என்று கூறி அவரை மகிழ்வித்தேன்”
(விடுதலை 4-1-1974)

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று மணியம்மை கூறுகிறாரே? இதுவாவது பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

இராமர் ஒரு காரணத்திற்காக (இராவணனை கொல்ல) இப்பூமியில் பிறந்தார். கிருஷ்ணர் ஒரு காரணத்திற்காக (கம்சனைக் கொல்ல) பிறந்தார் என்று இந்துக்கள் சொல்லும் போது அதைப் பகுத்தறிவுவாதிகள் கேலி பேசினார்கள்… விமர்சித்தார்கள்… மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்னார்கள்.

இப்படிச் சொன்ன பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று சொன்னால் அதுவும் இவர்களின் மூடநம்பிக்கைத்தானேநதான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்றால் இறப்பதும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். (இது ஆத்திகர்களைப் பொருத்தவரை நம்பிக்கை. ஆனால் பகுத்தறிவுவாதிகளைப் பொருத்தவரை மூடநம்பிக்கை) அப்படியென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரும், மணியம்மையும் இறந்தது எந்தக் காரணத்திற்காக? மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொன்னால் அந்தக் காரணம் என்ன என்று விளக்க வேண்டாமா?

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொல்லும்போது, ஏதோ ஒரு செயல் புரிவதற்காக, சாகக் கிடந்த நான் மறுபடியும் பிழைத்திருக்கிறேன் என்று பொருள்படுகிறது. ஆனால் இதே கருத்தைத்தானே இந்துக்களும் கர்மா என்ற பெயரில் சொல்கின்றனர்! மக்கள் (தங்கள் வினைப்படி) ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிறக்கின்றனர். தங்கள் கர்மங்களை ஆற்றுகின்றனர். பின்பு இறக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கர்மக் கொள்கையை எதிர்க்கின்ற மணியம்மைதான் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிழைத்ததாகச் சொல்லி மறைமுகமாக கர்மா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏன் இந்த முரண்பாடு? இதுதான் இவர்களுடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை.

மேலும் மணியம்மை கூறுகிறார்:-
(பெரியார்) அமைதியுடன் நாம் இனி எப்படி நடந்து கொள்கிறோம். கட்டுக்குலையாமல் என்றும் போல் கட்டுப்பாடு, ஒழுக்கம் – உண்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான் நமது செயலைப்பார்த்துகொண்டு தான் இருப்பார்.
(விடுதலை 4-1-1974)

மணியம்மையினுடைய இந்தப் பேச்சு அவர்களுடைய பகுத்தறிவுப்படி மூடநம்பிக்கையா, இல்லையா?

1973-ல் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி 1974-ல் ஓய்வுடன் இருப்பார்? எப்படி கவனித்துக்கொள்வார்?

இறந்தவர்களின் ஆத்மா இவ்வுலகில் இருக்கும். ஒருவருடைய அப்பா அல்லது அம்மா அல்லது வேறு உறவினர்கள் போன்றவர்கள் இறந்தால் அவர்கள் நம்மோடு இருப்பார்கள். நம்மை கவனித்துக் கொள்வார்கள் – என்பது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆனால் இதை மூடநம்பிக்கை என்று சொல்லுகின்ற மணியம்மையார் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஓய்வுடன் இருக்கிறார். அவர் கவனிப்பார் என்று சொல்லுகிறாரே? அப்படியானால் இதுவும் மூடநம்பிக்கைத்தானே!

இப்படி இவருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு ஏராளமான சான்றுகளைத் தந்துகொண்டே போகலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு சமாதி வைத்தது, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நினைவுநாள் கொண்டாடுவது போன்ற இவர்களுடைய பகுத்தறிவுக்கு முரணான வகையில் மணியம்மையார் நடந்து கொண்டதை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்களே கண்டித்திருக்கிறார்கள் என்றால் மணியம்மையாருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த அளவுக்கு மூடநம்பிக்கை கொண்டிருந்த மணியம்மையாரும் அவருடைய சீடர்களும் ஆத்திகர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சொல்ல தகுதி இருக்கிறதா?

-தொடரும்… 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , ,

 

51 மறுமொழிகள் பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

  1. திருச்சிக் காரன் on October 29, 2009 at 10:51 pm

    இப்ப முக்கிய விடயம் பெரியாரைப் பற்றி சிந்தனையாளர் ம. வெங்கடேசன் எழுதியது பற்றி.

    இந்த இராவணன், மூதேவி இதை எல்லாம் பேசி அப்பிடியே மேட்டரை ஹைஜாக் செய்வது ஏன்? அதை தனியா பொருத்தமான இடத்திலே அது பத்தி டிஸ்கஸ் பண்ணுங்க நண்பர்களே!

    ம. வெங்கடேசன் எழுதியது உண்மையா இல்லையா,

    இங்கெ சிந்தனையாளர் ம. வெங்கடேசன் ஆதாரங்களோடும் , புள்ளி விவரங்களோடும் நடந்தவற்றை விளக்குகிறார். அவர் பெரியாரை இகழ்ச்சியாக எதுவும் எழுதவில்லை.

    அதற்க்கு இங்கெ சிலர் குய்யோ, முறையோ என்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

    பெரியாரோ சகட்டு மேனிக்கு வள்ளுவர் , கம்பர் , காந்தி என எல்லோரையும் சிறுமைப் படுத்தி எழுத தயங்கவில்லை. அவர் எழுதியதை ரசித்து படித்து விட்டு இங்கெ வந்து ஒப்பாரி வைப்பது ஏன்?

    பெரியாரின் கருத்துக்களில் சில முக்கியமானவைதான். அவை நமக்கு உபயோகப் படும்.

    பெரியாருக்கு தமிழாக வரலாற்றிலே ஒரு இடம் உண்டு அதை குடுப்போம். ஆனால் பெரியாரை ஒரு சித்தர் போலவோ, புத்தர் போலவோ ஒரு ஒளி வட்டத்தைப் போடாமலேயே ஆனால் போட்ட ரேஞ்சுக்கு சித்தரிப்பது நடக்கிறது.

    //தமிழ் ஓவியா பெரியாரை சுற்றி ஒரு ஒளி வட்டம் எழுப்பப் பார்க்கிறார். இந்த தளம் opposite extreme-க்கு போகிறதோ என்று தோன்றுகிறது.//

    சரிதான், அப்பத்தான் இரண்டும் நியூட்டரலைஸ் ஆகி மக்களுக்கு ஓரளவு சரியான உண்மை கருத்து உருவாகும்.

  2. Mani on October 29, 2009 at 11:31 pm

    ராமாயணத்தில் இராவணன் பிராம்மணனே என்பது திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. பிராம்மணனை கொன்றதால் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் போக்க ராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டான் இராமன். இதுவும் இராமாயணமே

    திக திமுக பொய்யர்களுக்கு மட்டுமே இராவணன் சூத்திரன்

    நரகாசுரனையும் சூத்திரன் என்று சொல்லி தீபாவளியை கொண்டாடக்கூடாது என்பார்கள்.

    நரகாசுரனும் பிராம்மணனே.

    புராணங்களின் படி நரகாசுரன் ஹிரண்யாக்‌ஷனின் மகன். ஹிரண்யாக்‌ஷன் காஷ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்ததால் ஹிரண்யாக்‌ஷனும் பிராம்மணனே.
    ஆகவே நரகாசுரனும் பிராம்மணனே

    அசுரன் என்பவன் தீக்குணங்கள் கொண்டவன். அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதர்ம வழியில் நடப்பவன் அனைவரும் அசுரர்களே.

    .

  3. RV on October 30, 2009 at 1:34 am

    வள்ளுவன்,

    நீங்க பெரிய அறிவாளிங்க. இந்திரன் கொன்றது விரோசனன் இல்லையே, விருத்திராசுரனை சொல்றீங்களா என்று கேட்டிருந்தேன். ஆமாம் விருத்திராசுரந்தான்னு நிறைய சொல்றீங்க. நான் எதை உருப்படியா கேள்விப்பட்டிருக்கேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த தளத்தில தான் என்ன எழுதி இருக்கோம், அடுத்தவங்க என்ன எழுதறாங்க அப்படின்றதை முதல்லே புரிஞ்சுக்கங்க, அதுக்கப்புறம் எழுத வாங்க. புல்லரிக்க வைக்கறீங்களே!

    போன முறை விரோசனன் மழை பெய்யாமல் தடுத்தான். இந்த முறை விருத்திராசுரன் ஆறு ஓடாமல் பனி அணையாக இருக்கிறான். மழைக்கும் பனி அணைக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா? நாளைக்கு என்ன? விருகோதரன் கபினி அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட மறுக்கிறானா? ஆளை விடுங்கப்பா!

    மற்றவர்களுக்காக: விரோசனன் பிரஹலாதநிந் பிள்ளை, மகாபலியின் அப்பா.

  4. kargil Jay on October 30, 2009 at 8:55 am

    திரு. வள்ளுவன் அவர்களுக்கு வந்தனம். அருமையான விளக்கம் அளித்துள்ளிர். நன்றி

    திரு RV, உம்மிடம் ஒப்புக்கொள்ளும் குணம் இல்லை போலும். என்
    நேரத்தை மேலும் செலவிட விருப்பமில்லை

  5. வள்ளுவன் on October 30, 2009 at 3:07 pm

    RV அவர்களே,
    நான்தான் தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இந்திரன் மழை பெய்யாமல் தடுத்த விர்த்ராசுரனை (Vrtra) கொன்றான். இது ரிக் வேதம். ஆனால், சந்தோக்ய உபநிடதம் வரும் சாம வேதத்தில், இந்திரனும் விரோச்சணனும் பிரஜாபதியிடம் சென்று ஆன்மாவைப்பற்றிய விளக்கத்தைக் கேட்கிறார்கள். இங்கு மறுமொழி எழும்பொழுது இரண்டையும் படித்துக் கொண்டிருந்ததால், ஒரு பிழை ஏற்ப்பட்டு விட்டது. என்னை மன்னிக்கவும்! ஆனால், விர்த்ராசுரன் விரோசனன் இருவருமே அசுரர்கள்தான். நான் எழுதியது தவறுதான்!

    //மற்றவர்களுக்காக: விரோசனன் பிரஹலாதநிந் பிள்ளை, மகாபலியின் அப்பா.//

    இது உண்மை, ஆனால், நான் சொன்ன விரோச்சணனும் மகாபலியின் தந்தையான விரோச்சணனும் ஒன்றா என்ற தகவல் கிடைக்கவில்லை!

    //போன முறை விரோசனன் மழை பெய்யாமல் தடுத்தான். இந்த முறை விருத்திராசுரன் ஆறு ஓடாமல் பனி அணையாக இருக்கிறான். மழைக்கும் பனி அணைக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா? நாளைக்கு என்ன? விருகோதரன் கபினி அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட மறுக்கிறானா? ஆளை விடுங்கப்பா!//

    பனி அணையைப் பற்றி நான் குறிப்பிடவே இல்லையே, நீங்களா யூகித்துக் கொண்டீர்களா?? நான் எழுதிய பெயரில் மட்டும்தான் தவறு இருந்தது. சொன்ன செய்தி உண்மைதான்! நான் எழுதியதை இன்னொரு முறை படிக்கவும்:-

    “An example of such distorted interpretation is made of the following verse:

    The body lay in the midst of waters that are neither still nor flowing. The waters press against the secret opening of the Vrtra (the coverer) who lay in deep darkness whose enemy is Indra. Mastered by the enemy, the waters held back like cattle restrained by a trader. Indra crushed the vrtra and broke open the withholding outlet of the river. (Rig Veda, I.32.10-11)”.

    அதாவது, ஆற்றைப் பற்றிப்பேசும் இவ்வரிகள் மழையைப் பற்றிப்பேசிய வரிகளைத் தொடர்ந்து வருகின்றன! மேகமான விர்த்தாசுரனை பிழிந்து மழை பெய்ய வைத்தான் இந்திரன், என்பது சென்ற வரிகள். இவ்வரிகள் கூறுபவை, ஆறு சுதந்திரமாக ஓடத் தடையாக இருந்த விர்த்ராசுரனை அகற்றி ஆற்றின் நீர் ஓட வழிவகுத்தான் இந்திரன் என்று கூறுகின்றன. அதாவது, இந்திரனும் விர்த்ராசுரனும் எதற்கு ஒப்பிடப்படுகின்றனர் என்பதுதான் இங்கு முக்கியம்.

    முதலில், நீங்கள் முழுவதுமாக படித்து விட்டுக் கண்டியுங்கள், எனக்கு சரியென்று பட்டால் ஒப்புக் கொள்கிறேன்.

    //புராணங்களின் படி நரகாசுரன் ஹிரண்யாக்‌ஷனின் மகன். ஹிரண்யாக்‌ஷன் காஷ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்ததால் ஹிரண்யாக்‌ஷனும் பிராம்மணனே.
    ஆகவே நரகாசுரனும் பிராம்மணனே//

    மணி அவர்களே, நரகாசுரன் ஹிரன்யக்ஷனின் பிள்ளை அல்ல. திருமாலின் பிள்ளை ஆவான். வராக அவதாரத்தின்போது பிறந்தான், அவனை திருமாலே கொல்லவேண்டும் என்று பூமித்தாய் வரம் பெற்றதால், திருமால் கண்ணனாக பிறந்தபோது நரகாசுரனை கொல்கிறான்.

    எல்லா தேவர்களும் அசுரர்களும் சகோதரர்களே. திதி, அதிதி என்று இரண்டு சகோதரிகள். இருவரும் காஷ்யப முனிவரை மணக்கின்றனர். அம்முநிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் தைத்யர்கள் (அசுரர்கள்). முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் ஆதித்யர்கள் (தேவர்கள்). அவர்கள் திராவிடர்கள், இவர்கள் ஆரியர்கள் எனும் வாதம் எங்குமே இல்லை!!

    //திரு. வள்ளுவன் அவர்களுக்கு வந்தனம். அருமையான விளக்கம் அளித்துள்ளிர். நன்றி//

    நன்றி, ஆனால் பெயரை மாற்றி எழுதியதால் பழி வந்து விட்டதே!

  6. kargil Jay on November 1, 2009 at 2:19 am

    அட போங்க திருவள்ளுவரே தெரியாம இருநதிருக்கார்.. திரு. வள்ளுவன் ஏதோ மத்தி சொன்னா என்ன? சற்றே பிழறினால் கடைசியில் உம்மிடம் ஏதோ அல்ப குறை கண்டு மயிர் பிளக்கிறார் RV .. மயிர் பிளப்பது கூடாது என்றவர் :-) .. ஆமாம் தவறை ஒப்பௌக்கொள்கிறீர்களே!!! இது அபாயகரமானது அலுவலக வாழ்க்கையில் முன்னேற தடையாக இருக்குமே?

  7. bharathiraja on November 1, 2009 at 4:09 am

    வள்ளுவன் அவர்களே,
    தங்களின் பதில்களில் பொதிந்துள்ள பல அறிய விஷயங்கள் மிகவும் அருமை. தங்களின் விளக்கங்கள் மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  8. வள்ளுவன் on November 2, 2009 at 3:06 pm

    பாரதிராஜா அவர்களே, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    கார்கில் ஜெய் அவர்களே, நான் மனிதன், அதனால்தான் செய்த தவறை ஒப்புக்கொண்டேன்! மனசாட்சியை அந்நியரிடம் காசுக்கு விற்றுவிட்டு, தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் நடக்க நான் கருப்புசட்டைக்காரன் அல்லவே!!

    //இது அபாயகரமானது அலுவலக வாழ்க்கையில் முன்னேற தடையாக இருக்குமே?//

    உண்மைதான். காலத்திற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்! தங்கள் அன்பிற்கு நன்றி!!

  9. அம்பேத்கர் கூறுகிறார்:-
    ”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
    (நூல் :- Ambedkar – A Critical study)

    அம்பேத்கர் ஏன் ஹிந்துமதத்தை விட்டார்?
    அவர் தால்தபட்ட மக்களை காப்பாற்ற?
    இஸ்லாத்தில் சேர்ந்து இருந்தால் எப்படி
    தால்தபட்ட மக்கலுக்கு குரல் கொடுக்கமுடியும்.

  10. வள்ளுவன் on November 12, 2009 at 12:51 pm

    சின்னமணி ashraf ali அவர்களே, பதினெட்டாம் பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எங்கே??

  11. வள்ளுவன்

    சின்னமணி ashraf ali அவர்களே, பதினெட்டாம் பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எங்கே??

    எங்கே கேள்வி கேட்டீற்கலோ அங்கேதான் போய்பாற்கவேண்டும்.
    பதில்கிடைக்கும்..

  12. வள்ளுவன் on November 13, 2009 at 5:21 pm

    சார், விடை காணோமே, சரி பரவாயில்லை, இன்னொருமுறை கேட்கிறேன்…

    முகமதீயர்கள் அரபுநாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் அல்ல என்கிறீர்கள்! அதே சமயம் வார்த்தைக்கு வார்த்தை “உங்கள் முன்னோர்”, “உங்கள் முன்னோர்” என்கிறீர்கள். இந்தியா ஒருகாலத்தில் இந்துனாடாகத் தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள், அப்படியென்றால் உங்கள் முன்னோர்களும் இந்துக்கள்தானே! அவர்களும் நீங்கள் சொல்லும் சாதிக்கொடுமைகளை செய்திரிக்க மாட்டார்களா? நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உங்கள் வம்சமே நபிகள் நாயகத்திற்குப் பிறகுதான் தோன்றியது என்பதுபோல உள்ளது!

    இதுதான் என் கேள்வி, முடிந்தால் விடையளிக்கவும்!! நீங்கள் சொல்வது ஒப்புக் கொள்ளும்படி இருந்தால், நான் ஒப்புக்கொள்கிறேன்….

  13. chandrasekar on March 17, 2010 at 12:15 pm

    e v ramaswamy naikarin marupakathi ulagam arithida seivavandum he is not only man in behind off british goverment,u.s agent,and pope all force act,because their motto spilt hindu religion and covert all in to cristien.

  14. daityas on March 30, 2010 at 6:31 pm

    [...] [...]

  15. செந்தில் on June 4, 2010 at 5:42 pm

    ஈரோட்டில் இருந்து ராமசாமி நாயக்கர் வந்துருக்கேன் “கடவுள் இல்லை ” நு சொல்றேன் யாரும் ஏத்துக்கணும் ஒருநாளும் தந்தை பெரியார் ஒருபோதும் சொன்னது இல்லை.உன் பகுத்தறிவை கொண்டு யோசி என்று தான் சொன்னார் என் பாட்டனும் முப்பாட்டனும் இடுப்பில் கட்டிய துண்டை தோலில் போடா வைத்தவர் தந்தை பெரியார். பெரியார் நிறைய இடங்களில் முரண்பட்டு தான் பேசி இருக்கிறார் ஒன்று இரண்டு அல்ல பல தமிழனையே காடு மிராண்டி கூட்டம் என்றவர் எதற்காக ஏன் முரண்பட்டு பேசினார் என்பது பெரியாரியல் படித்தவர்களால் தான் முடியும் உங்களை போல நுனி புல் மேயும் கத்துக்குட்டியும் அவர் இல்லை ஆக பகுத்தறிவை கொண்டு காலத்துக்கு தகுந்தார் போல வாழ என் இனத்திற்கு கற்றுக்கொடுத்தவர் தந்தை பெரியார்.அதனால் கையில் கணினி இருக்கிறது என்று கண்டதையும் உங்கள் மன போக்கையும் எழுதாதீர்கள்.இன்று வரை பார்பான் தான் எங்களை இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறான் அவன் கொண்டு வந்த இந்த கேவலமான ஹிந்து மதத்தையும் குறிப்பாய் உங்கள் தமிழ் ஹிந்து மதத்தில் எப்படி எல்ல தமிழனும் பூணூல் pottukkolallama இல்லை பார்பனர்களுக்கு மட்டும் தானா…இவளவு பேசும் உங்களுக்கு தமிழனின் மதம் ஹிந்து என்று உங்களுக்கு யார் சொல்லிகொடுத்தார்கள்…விளக்கம் சொல்லுங்கள் .

  16. rsk on June 23, 2010 at 1:46 pm

    Senthil,

    Your post shows how the seeds of hatred speard by EVR has posioned this socierty. He blamed all the evil in the world on brahmins. Today, if TN society is severely fractured along caste lines, it is thanks to EVR.

  17. vedamgopal on June 24, 2010 at 7:42 am

    M.K.Gandhi

    Do you think you will gain anything by becoming non-Hindus, he told them, do not think you will gain anything by abusing, Brahmins or burning their homes. “Who were Tilak, Gokhale, Ranade and Agarkar?” he asked them. They were Brahmins, they were in the forefront of every nationalist struggle, they served the cause of non-Brahmins at the greatest cost to themselves, it is in many cases through the work of Brahmins that the non-Brahmins have been made aware of their rights, he told them. It is the Brahmins who exert for the uplift of the depressed classes, more than anybody else. Lokmanya Tilak is revered by all classes for his services to the country. The late Mr. Gokhale, Mr. Ranade and the Hon’ble Mr. Sastri have all done splendid work for the regeneration of the backward classes. You complain of the Brahmin bureaucracy. But let us compare it with the British bureaucracy. The latter follow the ‘divide and rule policy’ and maintains its authority by the power of the sword, whereas, the Brahmins have never restored to the force of arms and they have established their superiority by sheer force of their intellect, self-sacrifice, and penance. I appeal to my non-Brahmins brethren not to hate the Brahmin and not to be victims of the snares of the bureaucracy…”

    “By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak and others,” he told the non-Brahmins, “it is impossible that you can rise.” By looking to the British for help you will sink deeper into slavery. ”

    I have not a shadow of doubts,” he declared, “that Hinduism owes its all to the great traditions that the Brahmins have left for Hinduism. They have left a legacy for India, for which every nation, no matter to what varna he may belong owes a deep gratitude. Having studied the history of almost every religion in the world it is my settled conviction that there is no class in the world that has accepted poverty and self-effacement as its lot. ”

    By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak, and others”, he told the non-Brahmins, it is impossible that you can rise.”

  18. erottaan on October 3, 2010 at 1:24 am

    மூட நம்பிக்கை மணியம்மையிடம் மட்டும்மல்ல .திராவிட இயக்கத்தை சேர்ந்த அத்தனைபெரும் இன்று என்ன செய்கிறார்கள் ,தலைவனுக்கு சிலை வைத்து மாலை போட்டு கும்பிடுகிறார்கள் —இது உருவ வழிபாடல்லவா? தலைவன் செத்தநாளில் அவனுக்கு /சிலைக்கு /படத்துக்கு மாலை போட்டு ஊதுபத்தி கொளுத்தி கும்பிடுகிறார்கள் —இதுபித்ரு வழிபாடல்லவா /?இதையே மற்றவர் செய்தால் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள் .

  19. Vidhya on October 31, 2011 at 5:16 pm

    நீங்கள் கண்ணால் பார்த்திராத கடவுளை நம்பும் போது ,தன்னுடன் பல வருடங்கள் வாழ்ந்த பெரியார் இந்த சூழ்நிலையில் எப்படி தன்னை ஆறுதல் படுத்துவார் என்று மணியம்மை எண்ணி பார்த்ததில் என்ன தவறு??? “மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்” உங்கள் தலைப்பிலேயே என்ன குரூரம்.

  20. Guru on November 22, 2011 at 8:13 pm

    திராவிடம் என்றால் என்ன அதை பற்றியான கேள்வி பதிலை வெப்சைட் இடவும்

  21. Guru on November 22, 2011 at 8:17 pm

    ஏசு இந்தியாவுக்கு வந்ததாகவும் ௧௧௨ வயது முடிய வாழ்ந்ததாகவும் BBC டாகுமெண்டரி இல் பார்த்தேன். அதற்க்கு நம்மிடம் வரலாற்று சான்றுகள் உண்டா

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.