முகப்பு » சமூகம், பொது, மகளிர்

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

November 8, 2009
-  
அச்சிட அச்சிட

1. நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது.

2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!

3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.

4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.

நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன? முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அருவருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. நம் தமிழகத்தில் தான். கண்ணகிக்கு சிலை வைக்கவில்லையென்றால் உயிரையும் கொடுப்பான் தமிழன் என்று மார்தட்டி கற்புக்கரசி சிலைக்காக போராட்டமெல்லாம் நடத்தினார்களே அதே தமிழகத்தில் தான் இத்தனை கேவலங்களும்.

கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?

cultural-deteriorationகலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்றால் இந்து மத அடையாளங்களென்றும், அவ்வாறான இந்து மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத பழம்பஞ்சாங்க விஷயம் அல்லது மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.

கலாச்சாரம் என்பது சமூகத்தை நல்வழியில் கொண்டுபோக உதவும் ஒரு வழிகாட்டும் முறையே ஆகும். வாழ்ந்து காட்டி வழிகாட்டும் முறை என்றால் மிகையில்லை. குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரிய குடும்பம். தனி மனிதர்கள் குடும்பத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதுவே சமூக விளைவாகப் பரவும். சமூகத்தில் பரவும் விளைவுகள் யாவும் ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கும். ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும் சமூகச் சங்கிலிக்குள்ளேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறான வாழ்க்கையில் மொத்த மனித கூட்டத்தையும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகளின் படி வழிவழியாக மக்கள் வாழ்வதையே கலாச்சாரம் என்றழைக்கிறோம்.

ஆதி மனிதன் உணர்ச்சிகளை முறைப்படுத்தி முறையாக வாழ்வதற்கு சரியான வழிதெரியாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து முட்டி மோதி துன்பங்களை அனுபவித்து போதும் போதும் என்று ஆகி, இந்தப்பாதை சரியில்லை இனிமேல் துன்பமின்றி வாழ இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு சரியான பாதையை வகுத்து, அதற்கான கட்டுப்பாட்டு முறைகளை உண்டாக்கி அதன் படி வாழ்ந்து நிம்மதி அடைந்தான். அவ்வாறு தனக்கு நிம்மதியையும் கொடுத்து மகிழ்ச்சியையும் அதிகரித்த நல்ல வழிமுறைகளை தங்களது சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுத்தான். அவற்றைப் பின் வரும் சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பாதை வழியாகவே பெரும் சமூகத்தை வழிநடத்தினான். அவ்வாறு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ பெரியோர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டு வழிவழியாகப் பின்பற்றப்படும் வாழ்க்கை முறையே கலாச்சாரம் என்றழைகப்படுகிறது.

இப்படி நம் தாத்தா சொல்ல அப்பாவும் அப்பா சொல்ல நாமும் நாம் சொல்ல நமது பிள்ளைகளும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழும் பொழுது, துன்பங்களை சந்தித்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லாமல் துன்பங்களை தவிர்த்து வாழ கற்றுக்கொள்கிறோம். இந்த வழி தவறு இந்த வழி சரி என்று முதலிலேயே சொல்லப்பட்டு விடுவதால் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்ததே தெரியாமல் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று விடுவோம். இப்படித்தான் கலாச்சாரம் காலம் காலமாக நம்மை வழிநடத்தி வருகிறது.

திருமணம் நமது கலாச்சாரத்தின் ஆணிவேர். கூட்டமாக மனிதன் வாழத்துவங்கியபோது உறவுகளின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. இவள் எனது மனைவி இனி வேறு ஆடவன் இவளை அணுகக்கூடாது என்று அறிவிக்க திருமணம் தேவைப்பட்டது. பெண்ணுக்கும் ஆடவன் மீதுள்ள உரிமையை நிலைநாட்ட திருமணம் உதவியது. திருமணம் செய்து கொண்டவர்களும் அந்த உறவுக்கு விரோதமாக நடக்க கூடாது என்றும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வில் வேறு மனிதர்கள் குறுக்கிட மாட்டார்கள். அப்படி வாழ்வது மணம் புரிந்து கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் நிம்மதியைத் தந்தது. இப்படிப்பட்ட அமைதியான வாழ்க்கையை தனித்தனிக் குடும்பங்களாக எல்லா மனிதர்களும் வாழ்ந்ததால் ஒரு சமூகமே அமைதியான் சமூகமாக நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிந்தது. இவ்வித கட்டுப்பாடுகளை மீறிவாழ்வது சமூக விரோதமாகவும், கேவலமான ஒன்றாகவும் கருதப்பட்டதால் அக்காலத்தில் அப்படி மீறுபவர்கள் சமூகத்திலிருந்தே விலக்கிவைக்கப்படுவதும் நடந்தது. எனவே சமூகத்தில் ஒரு அமைதி நிலவியது.

கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியவன் மனிதன் என்பதால் அவற்றை காகிதத்தில் அச்சடித்து வைக்காமல் மனிதனின் ஆழ்மனதில் அச்சடித்தார்கள். அதற்கு முன்னோர்கள் கடைபிடித்த உபாயம் போதனை செய்தல் மூலமும், இதிகாசக் கதைகளை அடிக்கடி மக்களிடம் சொல்வதன் மூலமும் தர்மங்களை மக்களின் மனதில் எழுதினார்கள்.

ஆண் பெண் உறவுகள் பற்றிச் சொல்லும்போது திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அரனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

பிறன் மனைவியை இச்சையுடன் பார்க்காத பேராண்மை, நல்லவர்களுக்கு அறன் போன்ற காவலாக இருப்பது மட்டுமல்ல அது மிகச்சிறந்த ஒழுக்கமாகும் என்று கூறுகிறார். ஆண்மை என்பது ஆண் தன்மையைக் குறிக்கும் வழக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வள்ளுவரோ பேராண்மை என்று குறிப்பிடுவதன் மூலம் ஆண்மையின் சிறப்பு ஒரு ஆண்மகனுக்கு கொடுக்கும் பெருமையை விட பிறருடைய மனைவியின் மீது ஆசைப்படாமல் வாழ்வதே பெருமை என்று ஆணுக்கு எடுத்துரைக்கிறார்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தீமைகளும் பிறர் மனைவிமீது ஆசைப்பட்டு நாடிச் செல்பவரை விட்டு எப்போதும் நீங்காது என்று கூறிகிறார் வள்ளுவப் பெருந்தகை. கட்டுரையின் ஆரம்பத்தை மீண்டும் படியுங்கள், வள்ளுவரின் வாக்கு சத்தியம் தான் என்பதை ஆழ உணர்வீர்கள்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்த்தொழுகு வார்.

சந்தேகப்படாமல் நல்லவர் என்று நம்பி வீட்டுக்குள் அனுமதித்தவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் என்கிறார் வள்ளுவர். அதாவது நம்பியவர் வீட்டிலேயே அவருக்கு துரோகம் செய்து அவரது மனைவியிடம் இச்சைகொள்ளும் ஆண் செத்த பிணத்திற்குச் சமம் என்கிறார். எப்படி வெளியில் இருந்து பிணத்தை வீட்டுக்குள் அழைத்து நாம் வைத்துக்கொள்வதில்லையோ அதே போல அத்தகைய துரோக குணம் கொண்ட ஆண்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்பதே இதன் பொருள்.

இவ்வாறு ஆணின் பேராண்மையை எடுத்துச் சொன்ன வள்ளுவர் பெண்ணின் கற்பு பற்றிய சிறப்பையும் எடுத்துச் சொல்லுகிறார்.

இதோ அவர் பெண்ணுக்குச் சொன்னவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்கவை உலகில் வேறென்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். கற்புடன் வாழ்வேன் என்ற உறுதியுள்ள பெண்ணே உலகில் வேறு எல்லா விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று வள்ளுவர் கற்புடன் வாழ்வதன் உயர்வை பெண்ணுக்குச் சொல்கிறார் வள்ளுவப்பெருந்தகை. இவ்வாறு இல்லறம் நிம்மதியாக நடைபெற வேண்டுமென்றால் பெண் கற்புடன் வாழ்வேண்டும் அதுவே உயர்ந்த வாழ்க்கை என்று பெரியோர்களால் வலியுறுத்தப்பட்டது.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.

தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

ஆனால் இவையெல்லாம் பள்ளிகூடப் படிப்பில் அதுவும் மனப்பாடப்பாடமாக வந்து மார்க் கொடுத்தால் படித்திருப்போம். அதற்குப் பின் வள்ளுவரை நினைவில் கொள்பவர் யார்? பள்ளிப்படிப்பை விட்டு வெளியே வந்தால் மக்களை அப்படியே ஆக்கிரமிப்பது வள்ளுவமா அல்லது மேலைநாட்டு நாகரீகமா என்றால் மேலை நாட்டு நாகரீகமே என்று அடித்துச் சொல்லலாம்.

கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!

கலாச்சாரத்தைக் காப்போம். குடும்பங்களைக் காப்போம்.

வள்ளுவர் கற்பு பற்றியும் பிறன்மனை நோக்கா பேராண்மை பற்றியும் ராவாக சொல்லியிருக்கும் விஷயங்களை மனதில் பதியும் விதமாக பல கற்புக்கரசி கதைகளைச் சொல்லியும், இதிகாசங்கள் மூலமும் மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்கின்றனர் நம் முன்னோர்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டுவரும் இதிகாசமே ராமாயணம்.

பொதுவாக மனிதர்கள் மத்தியில் நடக்கும் குற்றங்கள் பெண்ணுக்காக அல்லது பொருளுக்காக மட்டுமே நடக்கிறது. இதை மீறி குற்றங்களுக்கு வேறு காரணங்களை பொதுவாக பார்க்க முடியாது. மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் இவ்விரு உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

rama_sita_lakshmana_hanumanபிறன் மனைவி நோக்காப் பேராண்மையாளனாக ராமனையும், கற்புக்குச் சிறந்தவளாக சீதையும் கதாநாயகன் கதாநாயகியாக நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தோர்களாக எடுத்துச் சொல்லி அது போல் வாழவேண்டும் என்று மக்கள் மனதில் ஆழப்பதியச் செய்கின்றனர். தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.

இப்படி தங்களை பாதிக்கும் கதாநாயகனும் நாயகியும் ஏக பத்தினி விரதத்தைக் கொண்டவனாக இருந்தால், கதாநாயகி கற்புக்கரசியாக காட்சியளித்தால் இவர்களை உதாரணமாக வைத்து தாமும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டாவார்கள். ராமனைப் போல ஆண்களும் சீதையைப் போல பெண்களும் வாழ்வதே சிறந்த உயர்ந்த வாழ்க்கை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. கேட்பவர்களும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக தானும் இருக்கவேண்டும் என்ற உத்வேகம் கொள்வார்கள்.

ராமாயணத்திலிருந்து சில துளிகளை இப்போது பார்க்கலாம்…

சீதையை அடைய பல முயற்சிகள் செய்யும் ராவணனிடம் ஒரு யோசனை சொல்லப்பட்டது. நீ ராமனாகவே சென்று அவள் முன் நின்றால் அவள் ஏமாந்து உன்னிடம் வந்து விடுவாள் என்றார்கள். அதற்கு ராவணன் சொன்னான் “எவ்வளவோ செய்த எனக்கு இதைச் செய்ய முடியாதா? நானும் ராமனாக உருமாறிப்பார்த்தேன். ஆனால் நான் எப்போது ராமனாக மாறினேனோ அப்போதே அடுத்தவர் மனைவிமீது ஆசைப்படும் எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எனக்கு சீதை மீது ஆசையே வரவில்லையே! நான் என்ன செய்ய?” என்று புலம்பினான்.

அதாவது பிறன் மனை நோக்கும் இச்சை கொண்டவனே ராமனாக ஆனவுடன் அந்த ஆசை அற்றுப் போனது என்று சொல்லுமளவிற்கு ராமனின் ஏக பத்தினி விரதம் போற்றிச் சொல்லப்பட்டது. அவ்வாறு வாழ்வதே ஆண்களுக்குச் சிறப்பு என்றும் போதிக்கப் பட்டது. பின்னால் நாகரீகத்தைப் போற்றியவர்கள் என்ன செய்தார்கள்? ராமாயணம் மூட நம்பிக்கை என்றார்கள். ராமன் இன்ஜினியரா? அவன் தான் பாலம் கட்டினானா? என்றார்கள். ராமாயனத்திற்கு ஆதாரம் இல்லை என்று அறிவியல் கொண்டு ஆனியடித்தார்கள். இப்படி சிதைத்தவர்கள் ராம நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. அவர்கள் சிதைக்க முயற்சித்தது ராமனாக வாழ முடியும் என்கிற கலாச்சார நம்பிக்கையை.

இப்படி நாகரீகம் கலாச்சாரத்தின் அடிமரத்தை வெட்டிக்கொண்டே இருந்தது. மேலை நாட்டு நாகரீகமே சிறந்தது என்றும் பெருமை பேசப்பட்டது. கமலஹாசன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று பிரசாரம் செய்யவில்லை, அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார். இவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் இவர் பேசுவது மலை மேல் நின்று பேசுவது போல் பரவும் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் மேலை நாட்டு நாகரீகத்தை பரப்பி இந்திய கலாச்சாரத்தை முட்டாள் தனம் என்று தூற்றுவதை இவர்களைப் போன்றவர்கள் நிறுத்துவதில்லை.

ராமாயனத்தில் பெண்ணின் உயர்வைக்காட்டும் இன்னொரு இடம்..

காட்டில் சீதைக்காக மான் பிடிக்கச் சென்ற ராமன் வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. சீதை கவலையில் ஆழ்ந்தாள். அப்போது மாரீச்சனின் கபடக்குரல் ராமனின் குரலாகக் கேட்டது. “லக்ஷ்மனா…காப்பாற்று…!! லக்ஷ்மனா…காப்பாற்று…!!” என்று. இந்தக் குரலைக் கேட்ட சீதை கலங்கினாள். தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கலங்கினாள். உடனே சீதை லக்ஷனனைப் பார்த்து என்னவென்று கண்டுவரச் சொன்னாள். ஆனால் லஷ்மனனோ “அபயக்குரல் எழுப்பும் அளவிற்கு அண்ணன் ராமன் கோழையல்ல. அப்படி ஒரு ஆபத்து தன் அண்ணனைச் சூழப்போவதும் இல்லை அதனால் கலங்காமல் இருங்கள் என்று தாய் சீதையிடம் எடுத்துரைக்கிறார். தாயே என்று கூறி அழைக்கும் லக்ஷ்மனனை சீதை கோபமாகப் பார்க்கிறாள். “என் கணவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், நீ என்னை அடையலாம் என்று எண்ணுகிறாயா?” என்று சற்றும் எதிர் பார்க்காத வகையில் கேட்டுவிட லக்ஷ்மனன் உடனே ராமனைத் தேடி புறப்பட்டு விடுகிறான். பிறகு நடந்த கடத்தல் கதை நமக்குத் தெரியும்.

ஆனால் இங்கே உணர்த்தப்படுவது என்ன? கணவர் இல்லாத போது உடனிருப்பது அவரது தம்பியாக இருந்தாலும் அவன் நல்லவனாகவே இருந்தாலும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஒரு பெண்ணின் முதல் நினைவாக இருக்கவேண்டும் என்பதும் அதுவே தனது கணவனுக்கு உண்மையாக இருப்பதாகும் என்பதும் உணர்த்தப்படுகிறது. Perception (உள்ளுணர்வு) என்று சொல்வார்களே அதுதான்.

நாகரீகம் என்ற மாயத்தோற்றத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்தக்காலத்தில் அப்படி Perception னுடன் நடந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற நாகரீகம் இன்று கணவனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது. படுக்கையறையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் பெண்கள் ஒரே மாதிரியாகப் பழகுவதை சகஜமாகவே பார்க்க முடிகிறது. நாகரீகம் என்ற பெயரில் சீதையாக வாழ்வது பழம்பஞ்சாங்க நிலையென எள்ளி நகையாடப்படுகிறது. இந்த நிலை தான் தவறான உறவுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

hindu_women_paintingபெண்களும் தன்னுடன் பழகும் ஆண்களில் யாருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் சீதைக்கு இருந்த அந்த Perception இல்லாமல் பழகி தவறான உறவில் விழுந்து விடுகின்றனர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்பது நீண்டநாள் நீடிக்காது. காதல் அல்லது காமத்தில் விழாமல் ஆணும் பெண்ணும் பழக முடியாது என்பதே உண்மை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதே வேலையாகக் கொண்ட பலர் இந்த நட்பு நாகரீகத்தைப் பரப்பினார்கள். திரைப்படங்களும் ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியும் என்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து பணம் சம்பாதித்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கலாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றனர். பூனையும் எலியும் ஒன்றாய் உறங்கலாம் கடித்துக் கொள்ளாது என்றனர்.

பெற்றோராக இருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் இதை அப்படியே நம்பி விட்டார்கள். இதனால் தன் வீட்டுப் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் மணிக்கனக்கில் தொலைபேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதை தவறு என்று சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் புழு பூச்சி போல பார்க்கப்பட்டனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகளாக கண்டிக்கப்பட்டனர். பெண்ணை அடிமைப்படுத்துவதாக சித்தரித்தனர். போதாக்குறைக்கு பெண்ணியம் என்ற வேறு பூதம் கிளம்பி கலாச்சார கட்டுக்கோப்பை புரட்டிப்போட்டது. இந்த பெண்ணிய பூதத்தால் சமூக கட்டுபாடுகள் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. தான் செய்வதெல்லாம் சரி, ஆண் செய்வது மட்டும் தான் தவறு என்பது பெண்ணிய சித்தாந்தம்.

ஆண்களின் நிலைமை அதுவும் கணவன்மார்களின் நிலைமை மிகவும் பரித்தாபத்திற்குரிய்தாக மாறிப்போனது. தனக்கென்று ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அவளை தனக்காக தக்கவைத்துக் கொள்வது போதும் போதும் என்றானது. வேறு ஆண்மகனிடம் மனைவி எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாலும் யார் அவன் என்ற கேள்வியைக் கேட்கவே பயப்படும் ஆண்கள் தான் பலர். எங்கே தான் சந்தேகப்படுவதாக பெண்டாட்டி நினைத்துவிட்டால் குடும்ப உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. மீறி கேள்வி கேட்டு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? இதையெல்லாம் அலுவலகத்திலேயே பேசி முடித்துவிட வேண்டியது தானே என்று கேட்டுவிட்டால் போதும். அன்று முதல் அவனுக்கு வீட்டில் மரியாதை போய்விடும். குடும்பம் என்ற அமைப்பு கேள்விக்குறியாகிவிடும். இது நாகரீகத்தின் விளைவு.

அதுமட்டுமா? பெண்ணியப் பேச்சாளர்கள் கற்பு என்ன கடைச்சரக்கா? என்னவிலை என்றெல்லாம் கேள்வி கேட்க, குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி விமர்சித்து கண்டனங்கள் எதிர்கொண்டதும் நமக்குத் தெரிந்ததே. அதுமட்டுமா? உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பை குஷ்பு வரவேற்றார். இவர்களைப் போன்றவர்கள் தறிகெட்ட வாழ்க்கைக்கு அச்சாரம் தேடி அலைகிறார்கள் அல்லது அடுத்த தலைமுறையை சீரழிவுப்பாதைக்கு தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சினிமாக்களும் சீரியல்களும் தொடர்ந்து சந்தேகப்படும் ஆண்கள் அவமானப்படுத்தப் படுவார்கள். “சீ, கட்டின பொண்டாட்டியை சந்தேகப்படுகிறாயே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா” என்று வசனம் வைப்பார்கள். ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது.

பொது இடங்களில் ஆண்களுக்கும் மனக்கட்டுப்பாடு கட்டாயம் தேவை.  அலுவலகத்திலோ அல்லது பிற இடங்களிலோ திருமணமான பெண்ணிடம் பேசுகிறோம் என்று தெரிந்தும் தேவையில்லாமல் வலிய போய் சிரித்து பேசி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது.

தனக்கு உரிமை இல்லாத அதுவும் மணமான பெண்களின் உடை மற்றும் அழகை வர்ணித்தோ அல்லது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலோ பேசுவது நாகரீகமற்ற செயல் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் ராமனைப் போல வாழ்வதின் சிறப்பை மனதில் ஆழ்ப் பதிந்து கொள்ள வேண்டும்.

மணமான பெண்ணிடம் வழியும் ஆண்கள் தன் மனைவியிடம் வேறொருவர் அவ்வாறு நடந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்து வேறொரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்பதை கண்டிப்பாக மனதில் வைத்து விலகியிருக்க வேண்டும்.

தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த ஆண்பெண் நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்.

1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.
2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினே, என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.
3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.
5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.
6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.

அப்படியானால் ஆண்கள் ராமனாக இருக்கமாட்டார்கள், பெண்கள் மட்டும் சீதையாகவே இருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சுருக்கமாக ஒன்றைச் சொல்ல முடியும். இன்றைய இந்திய பீனல் கோட் இருக்கிறதே அது பெண்களுக்காகத்தானே ஒழிய ஆண்களுக்காக இல்லை.

பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது. ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ இரட்டை அர்த்த தொனியில் பேசினாலோ பெண்கள் உடனே (உண்மையாக) கண்டித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு ஆண் செல்வதை தடுக்க முடியும். அந்த வகைப் பேச்சுக்களுக்கு ஆசைப்பட்டு சீ, போ என்றெல்லாம் குழைந்தால் சிக்கிட்டாடா சீமாட்டி என்று அடுத்த அடியை எடுத்து வைக்க எந்த ஆணும் தயங்க மாட்டான். அதையும் மீறி துன்புறுத்துபவனா?, சமூக அச்சம் இல்லாமல் துனிகிறானா? இருக்கவே இருக்கு காவல் துறை லாடம் கட்ட.

இப்படி எல்லா விதமான பாதுகாப்பையும் சட்டதின் மூலம் செய்து கொடுத்த பின்னும் ஆண் நண்பர்கள் என்ற பெயரில் கணவனின் கண்ணில் மன்னைத்தூவி செல்லும் பெண்களும், ராமனாக வாழ்வது முட்டாள்தனம், கிடைக்குபொழுது அனுபவிப்பதே புத்திசாலித்தனம் என்று நினைத்து மாற்றான் மனைவி மீது மையல் கொள்ளும் ஆண்களுமே பின்னாட்களில் செய்திப்படங்களாகிறார்கள் என்பது உறுதி. நாகரீகத்தின் உச்சம் செய்தித் தாள்களில் சிரிக்கிறது?

சமீபத்தில் அனந்த லட்சுமி என்ற பெண்ணின் கொலைவழக்கைப் பற்றி செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இப்படி நிகழும் என்று? அந்தப் பெண் நள்ளிரவில் மணிக்கணக்கில் கணவர் அல்லாதானிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தவர்களோ அந்தப் பெண்ணா? அப்படியா? என்றே கேட்டிருப்பார்கள். காரணம் ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று வெளியே பழகத்துவங்கியது பின் அடி மேல் அடிவைத்து நள்ளிறவு அரட்டையாக மாறியிருக்கிறது. சீதையைப் போல் Perception அதாவது தவறு நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வு அந்தப்பெண்ணுக்கு கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா? விளைவு குடும்ப மானம் நாளிதழ்களில் பல்லைக்காட்டியது.

இந்தியக் கலாச்சாரம் என்பது இந்தியர்களாக வாழ்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு வேலியே ஆகும். பாதுகாப்பு வேலியைத் தாண்டி முள்வேலி மீது விழுந்தால் பாதிப்பு நமக்குத்தான் என்பதை கலாச்சாரத்தை கேலி செய்து நாகரீகத்தை உயர்த்திப் பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கலாச்சாரம் என்பது பழம்பஞ்சாங்கம், மேலை நாட்டு நாகரீகம் படி வாழ்வதே அறிவு என்று பரப்புவர்கள் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு!

கலாச்சாரத்தைக் காப்போம். குடும்பங்களைக் காப்போம். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

 

87 மறுமொழிகள் கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

  1. அஞ்சனாசுதன் on November 8, 2009 at 3:17 pm

    அருமையான கட்டுரை ராம்குமார். மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  2. திருச்சிக் கார‌ன் on November 8, 2009 at 3:24 pm

    நல்ல கட்டுரை. கட்டுரையாளர் கருத்துக்களை வழங்கும் விதமும், நடையும் சிறப்பாக உள்ளது.

    அதே நேரம் பெண்களை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன். ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்.

    ஆண் கையிலே காசு வந்து விட்டால், தன்னிடம் அதிகாரம் இருந்து விட்டால் எதுவும் செய்யலாம் என நினைக்கிறான்.

    ஆண்களை திருத்த முடியாது என முடிவு கட்டி பெண்களை பாதுகாக்கும் வழியிலே நாம் ஈடுபடுகிறோம்.

    இந்த ஆண்களை திருத்த முடியாதா?

    ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கள்ளக் காதல் செய்தால், அவளை அவன்தான் விபச்சாரி ஆக்குகிறான்.

    ஆண்களை சரிப் படுத்த ஆன்மீகமே சரியான வழி. சரியான ஆன்மீகத்தை ஆண், பெண் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். வெண்ணையைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்.

  3. Sarang on November 8, 2009 at 6:28 pm

    மிகவும் அற்புதமான அனைவரும் படித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டுரை

    //அதே நேரம் பெண்களை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன். ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்.

    – ஒருமுறை என்னுடிய மேலாளர் எங்களுடைய மேல்நாட்டு “Customer” மற்றும் எங்களையும் அவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளி (சிக்ஷா) விழாவிற்கு அழைத்து சென்றார் – அங்கே நடந்த கூத்தை கண்ட ஆண்ட மேலைநாட்டு மனிதர் ஆடிபோய் விட்டார் – நான் இந்திய ஒழுக்கமான நாடு என்று நினைத்தேன், இவ்வன்னமா உங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்

    ஒரு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பெண்களிடம் அதிகம் உள்ளது – பெண்கள் ஒழுக்கம் இல்லாமல் போனால் கலாச்சாரும் அழிந்துவிடும் – குழந்தைகளிடம் ஒரு தாயின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் – தாய் தரமில்லாமல் வாழ்ந்தால் அது குழந்தையை பாதிக்கும், இதுவே தான் எதிர்காலத்தில் கலாச்சாரத்தை கெடுக்கும்

    (Edited.)

  4. திருச்சிக் கார‌ன் on November 8, 2009 at 7:14 pm

    நண்பர் சாரங்கன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

    இப்போதைய பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் அதிக சுதந்திரமும், துணிச்சலும் உடையவர்களாக உள்ளனர். அதில் சிலர் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று கணக்கு இல்லாமல் செயல்படுவதும் உண்டு.

    சமுதாயத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது தான். நான் பெண்களை எப்படி வேண்டுமானாலும் இருங்கள் என்று சொல்லவில்லை. பெண்களே , உங்களை எங்கள் தாயாக நினைக்கிறோம், அந்த தாய்மை மேல் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் கேட்டுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு,

    எவ்வளவு ஆண்கள் உலகில் பெண்களைத் தாயாக நினைகிரார்களோ , அந்த அளவுக்கு சமுதாயம் சீர்படும் என்பதையும் கூறுகிறேன்.

    ஆண்கள் நியாயமாக நடந்தால் பெண்களும் திருந்துவார்கள் அல்லவா?

    //ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்//

    ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்.

  5. Mani on November 8, 2009 at 8:03 pm

    டைனமிக் மேரேஜ்

    தமிழ்நாட்டில் கிறிஸ்துவ திருமணங்களில் நடக்கும் கூத்து
    கண்டு களியுங்கள்
    http://www.youtube.com/watch?v=umojiUlVAso

  6. Ambai on November 8, 2009 at 10:36 pm

    This article reflects the normal male chauvinistic attitude of every society in the world. Even in America, they teach all this as is in Bible. I think there is nothing wrong in having friendships with the opposite sex. But once it becomes more than just a friendship, in our society we don’t have any process as to how to handle such things and same goes for the adult relationships too. We cannot make them go away by separating them. This sounds like the path of Talibans. Sri Rama is an ideal and looks like he was the only one like this even in his days. He is a symbol of perfect human being. Even his father had many many wives and Ravana lived in the same time too who kidnapped another man’s wife. It is basic instinct and nobody will be able to stop this. When Seetha fell in love at first sight why is it not right for my daughter or your daughter? I think we need to bring up our boys more like Rama and that should solve the problem.

  7. Sarang on November 9, 2009 at 12:20 am

    அம்பை அவர்களுக்கு – இந்த கட்டுரையில் “male chauvinism” எங்கு கண்டீர்கள் ஆசிரியர் காதலை பற்றி தவறாக ஏதும் எழுதவில்லையே மாறாக, கள்ளகாதல் செய்யும் வேலையைத்தான் சுட்டிக்காட்டி உள்ளார்.

    - என் மகனோ/மகளோ காதலிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை – கள்ளக் காதல், வேண்டாத உறவு கொண்டால் பிரச்சினையே

    அவர் ஆண் பெண் நட்பு வேண்டாம் என்று கூறியதாக எனக்கு தோன்றவில்லை – மாறாக வேண்டாத நிலையில் அந்த உறவை வைக்காதீர்கள் என்று கூறியதாகவே எனக்கு படுகிறது – எல்லாவற்றிற்குமே ஒரு வரையறை தேவை – ஆண் ஆண் உறவாகட்டும், பெண் பெண் உறவாகட்டும், ஆண் பெண் உறவாகட்டும் – மனம் சம்பாந்தபட்ட வரை ஓகே – உடல் சம்பாந்தம் ஏற்பட ஆரம்பித்தால் சீர்கேடு தான்.

    நடு ராத்திரியில் ஒரு ஆணும் பெண்ணும் நாலு மணி நேரம் அடிக்கடி பேசிக்கொள்வது தேவை இல்லாத ஒன்றே – ஏன் ஆணும் ஆணும் அப்படி பேசிக்கொள்வதே தேவை இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்

    //Sri Rama is an ideal and looks like he was the only one like this even in his days

    தசரதர் கள்ளக் காதல் கொள்ளவில்லையே – ராமன் மட்டும் அல்ல – பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன்,ஜனகர், சுக்ரீவன்…. அனேகமாக எல்லோருமே யோக்கியமனவர்களாகவே காட்டப்படுகிறார்கள்

    ராமாயணத்தில் ஒன்று பார்த்திர்களா கள்ள காதல் கொண்ட அனைவருமே தண்டிக்க படுகிறார்கள் – வாலி, ராவணன், சூர்பனகை, அஹல்யை :-)

    //I think we need to bring up our boys more like Rama and that should solve the problem.

    முற்றிலும் உண்மை

  8. B.பாஸ்கர். on November 9, 2009 at 12:35 am

    வணக்கம்,

    ஆண்குழந்தைகளுக்கு ராமனைக் காட்டுங்கள், வீட்டில் பிரச்சினை இருக்காது
    பெண்குழந்தைகளுக்கு சீதையை காட்டுங்கள் சமுதாயமே பிரச்சினை இன்றி இருக்கும்.

    எனது பின்னூட்டம் கொஞ்சம் பரியது ஆகிவிட்டமையால் எனது வலை பூவில் …..
    http://sivayogam.blogspot.com/2009/11/blog-post.html

  9. glady on November 9, 2009 at 1:45 am

    பிறந்ததிலிருந்தே ஆண் பெண் உறவுக்கு மிஞ்சி எதுவும் இல்லையென்பது போல கட்டுப்பாடு முதல் கொண்டாட்டம் வரை சமூகம் நடந்துகொள்வதால் ஏற்படும் ஆர்வ கோளாறே அனைத்துக்கும் காரணமாகிறது;

    “பொன் மேனி உருகுதே” என ஆறு வயது சிறுமியை ஆடவிட்டு ரசித்து சிரித்து ஊக்குவிக்கும் சமுதாயம் அதே சிறுமி பதினாறு வயதில் அதே பாட்டைப் பாடினால் முகத்தைச் சுளிக்கும்;

    குடும்பம் குடும்பமாக வாழுவதில் விலங்குகளே முன்னுதாரணமாக இருக்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே சொல்லி வளர்க்கப்பட்ட இந்த சமுதாயத்தில் முறை தவறும் உறவுகளுக்குக் காரணம் என்று யாரைச் சொல்லுவோம்?

    முதலாவது தெய்வ பயம் இல்லாததே காரணம்; நான் யோசிக்கும், பேசும், கேட்கும், செய்யும் அனைத்தும் எனக்கு மேலானதொரு விண்ணுலக அமைப்பினால் கண்காணிக்கப்படுகிறது எனும் அச்ச உணர்வு மாத்திரமே மனிதனுக்கு காப்பாக இருக்கமுடியுமே தவிர அவன் தனக்குத் தானே கட்டிக்கொள்ளும் காப்பு காப்பாக இருக்கமுடியாது; “தீட்டு” தோஷமாகும் எனும் “பயம்” >பரிகாரம் செய்தால் போச்சு< எனும் பொய்ப் போதகத்தால் மாற்றப்படுகிறது;

    இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல;

    மனிதன் தனது பெலவீனத்துக்கு பொருத்தமான தெய்வத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்; தன் பெலவீனத்தையெல்லாம் அந்த தெய்வத்தின் மீது சாட்டிவிட்டு தன் செயல்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது மாற்றிக்கொள்ளமுடியாமல் தொடர்ந்து தவறுகளைத் தொடருகிறான்; அவரா அவர் ரொம்ப உக்கிரமானவர் அவர் நமக்கு சரியாக வராது இவர் போதும் என தெய்வத்தை மனிதன் தேர்ந்தெடுக்கும் தன்மையே மனம் மாறுதலடையாமல் சமூக சீர்கேட்டுக்கும் காரணமாக இருக்கிறது;

    மற்றபடி சில “ஊர்க்காரர்கள்” சொல்வது போல காமமும் கள்ளக்காதலும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மட்டும் உரியதல்ல; ஆண் கள்ளக் காதலை நாடும் போது அவனுடன் தொடர்பு கொள்ளும் பெண் செய்வதும் கள்ளக் காதல்தானே; ஆண்கள் பணம் கொடுத்து மயக்கி பத்தினிகளை விபச்சாரியாக்குகிறதில்லை; ஒரு பெண்ணின் துணையோ தூண்டுதலோ இல்லாமல் மற்றொரு பெண் முறைதவறிய உறவுகளில் விழுகிறதில்லை; ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அனுபவங்களை கேட்டே மனதளவில் ஆயத்தமாகிறாள்; பிறகு எதிர்பார்த்திருந்த வாய்ப்பு வரும்போது காரியத்தை சாதிக்கிறாள்; அப்பீல் பண்ணுவது (இயற்கை..!) ஆணாக இருப்பினும் சம்மதிப்பது பெண்ணே என்ற அளவில் இதில் பெண்ணின் பங்கே அதிகம்; இதில் ஆணின் பங்கு மிகக் குறைவு என்பது என் கருத்து;

  10. Sarang on November 9, 2009 at 8:21 am

    நண்பர் கிலாடியாரே – சில நல்ல கருத்துக்களை சொல்வதை பொல சொல்லி – இடை இடையில் ஹின்துக்கலை ஏலனம் செய்துல்லிர்
    //
    இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல;

    மனிதன் தனது பெலவீனத்துக்கு பொருத்தமான தெய்வத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்; தன் பெலவீனத்தையெல்லாம் அந்த தெய்வத்தின் மீது சாட்டிவிட்டு தன் செயல்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது
    //

    இது மனிதன் செய்வது இல்லை – இதில் உங்களின் தனிப்பட்ட கருத்தையே காண்கிறேன்

    // இராமன் தெய்வமானது இன்று
    இல்லை அன்றே – அகல்யா விமோசனம் – விபீஷணன் சரணாகதி – ஹனுமாரின் சரணாகதி – இவை எல்லாமே ராமாயண காலத்திலேயே நடந்தவையே – இவர்கள் அனைவரும் ராமன் கடவுள் என்றே நினைத்தவர்கள்

    //
    மனிதன் தனது பெலவீனத்துக்கு பொருத்தமான தெய்வத்தை அவனே தேர்ந்தெடுக்கிறான்; தன் பெலவீனத்தையெல்லாம் அந்த தெய்வத்தின் மீது சாட்டிவிட்டு தன் செயல்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது மாற்றிக்கொள்ளமுடியாமல் தொடர்ந்து தவறுகளைத் தொடருகிறான்; அவரா அவர் ரொம்ப உக்கிரமானவர் அவர் நமக்கு சரியாக வராது இவர் போதும் என தெய்வத்தை மனிதன் தேர்ந்தெடுக்கும் தன்மையே மனம் மாறுதலடையாமல் சமூக சீர்கேட்டுக்கும் காரணமாக இருக்கிறது;
    //

    நீங்கள் சுற்றி சுற்றி எங்கே வருகிறீர்கள் என்று புரியாமலா இருப்போம் :-)

    அதாவது ஹிந்துக்கள் எல்லாம் இஷ்டம் போல கடவுளை கும்பிடுகிறார்கள் என்று தானே ஒரு தவறான முடிவுக்கு வந்துல்லிர்கள் :-)

    உங்காளால் மட்டும் எப்படி இப்படி யோசிக்க முடியுது !!

    நீங்கள் சொல்லும்படி பார்த்தல் காசு வாங்கிகிட்டு மதம் மாடுபாவர்கள் எல்லாம் காசுக்காக கர்த்தரை தேர்ந்து எடுத்தார் என்குறீர்கள் ?

    என்ன தப்பு பந்னாலும் சேரி (கொலை, கொள்ளை, பெண் ஆசை, பொன் ஆசை …) எதை செய்தாலும் கடைசியில் பாவ மன்னிப்பு கேட்டுகிட்ட போதும் எல்லாம் சரியாகிடும்னு தானே மதம் மாறுகிறார்கள் என்று சொல்றீங்கா?

    நான் ஒரு பாவி, அசிங்கம் புடிச்சவன் – ஆனா கர்த்தர் என் பாவத்தை ஏற்பார் – அவர் தான் எனக்கு வசிடியான சாமி என்று தேர்ந்து எடுத்ததாக சொல்றீங்களா?

    ஏன் இப்படி உங்கள் சகோதரர்களை தூஷணை செய்கிறிர்கள் – ஓ பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற தைரியமா?

    அய்யா – ஹிந்துக்கள் யாரும் இந்த சாமி தான் நான் செய்கிறா தவறை மன்னிப்பார் என்று தேர்ந்தேடுப்படில்லை –
    ராமனை பிடித்திருக்க பலருக்கு பல காரங்கள் இருக்கும் – அது அவர் ஏக பத்தினி விரதன் என்பதால் மட்டுமே அல்ல
    நரசிம்மர் உக்கிரமானவர் என்று சிலர் விடுவதில்லை – அவரை உபாசிக்க சில நிபந்தனைகள் உள்ளன – அதை கடைபிடிக்க இயலாமலெ நரச்மிம்மர் விக்ரகாங்களை சிலர் வீட்டில் வைத்து உபாசிப்பதில்லை

    அதனால் நரசிம்மரை கும்பிடுகிரவர்கள் உயர்தவரொ மற்றவர்கள் தாழ்ன்தவரொ ஆகிவிடுவது இல்லை

    //முதலாவது தெய்வ பயம் இல்லாததே காரணம்; நான் யோசிக்கும், பேசும், கேட்கும், செய்யும் அனைத்தும் எனக்கு மேலானதொரு விண்ணுலக அமைப்பினால் கண்காணிக்கப்படுகிறது எனும் அச்ச உணர்வு மாத்திரமே மனிதனுக்கு காப்பாக இருக்கமுடியுமே தவிர அவன் தனக்குத் தானே கட்டிக்கொள்ளும் காப்பு காப்பாக இருக்கமுடியாது

    - தெய்வ பயம் தேவை இல்லை – இஸ்லாமியரை விட தெய்வதிருக்கு பயந்தவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன் – அப்படி பயந்தவர்கள் லூட்டி அடிக்கவில்லையா –
    தெய்வம் நின்று கொள்ளும் தன்மையை கொண்டமையால் – யார்க்கும் கடவுள் தண்டிப்பார் என்ற உணர்வு மிஞ்சுவதே இல்லை

    தான் யார், தன் நிலை என்று உணர்ந்து இருப்பவனால் மட்டுமே கட்டுப்பாட்டுடன் இருக்கமுடியும்

  11. ram on November 9, 2009 at 8:55 am

    ////இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல; //// கிளாடி சந்தடி சாக்கில் ஸ்ரீ ராமரை வம்புக்கிழுத்து விட்டார். ஏசு கூடத்தான் தான் கடவுள் என்னை துதியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக வானத்தைப் பார்த்து பிதாவே கிளாடி போன்றவர்களை மன்னியுங்கள் என்று சொன்னார். இன்று ஏசுவை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் எங்கள் மீதும் தினிக்கப்பார்க்கிறீர்கள். இதில் ஏது சரி என்று நீங்களே சொல்லுங்கள்?

    ///Ambai
    8 November 2009 at 10:36 pm
    This article reflects the normal male chauvinistic attitude of every society in the world. Even in America, they teach all this as is in Bible. I think there is nothing wrong in having friendships with the opposite sex. But once it becomes more than just a friendship, in our society we don’t have any process as to how to handle such things and same goes for the adult relationships too. We cannot make them go away by separating them. This sounds like the path of Talibans////

    அம்பை அவர்களே!

    இந்தக் கட்டுரையில் ஆணாதிக்க மனோபாவம் எங்குமேஇல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே தான் வாழும் வழிமுறை எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் சமூகத்தில் தன்னை மறந்த நிலையில் விழுந்து விடாமல் இருக்க சில யோசானைகள் மூத்தோர் ஆலோசனைப் படி சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். தாலிபானின் பாதை தொனிப்பதாகக் கூறுகிறீர்கள். அது முற்றிலும் தவறு. ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு என்று எங்குமே சோல்லவில்லை. அதில் இருக்க வேண்டிய அளவுகோல் பற்றி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வளவே. அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையே ஆகும்.

    ///I think there is nothing wrong in having friendships with the opposite sex. But once it becomes more than just a friendship, in our society we don’t have any process as to how to handle such things ///

    அதைப்பற்றி தான் இந்த விவாதிப்பதற்கும் வழிகாட்டவும் தான் இந்தக் கட்டுரையே. அதை அவசரமாக நீங்கள் தாலிபான்களோடு ஒப்பிட்டுவிட்டால் என்ன அர்த்தம். பொறுமையாக படித்துப்பாருங்கள். பல விஷயம் புரியவரும்.

    அன்புடன்
    ராம்

  12. Mani on November 9, 2009 at 9:00 am

    //இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல; //

    இயேசு?

  13. ram on November 9, 2009 at 9:01 am

    //////ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்/////

    சகோதரர் திருச்சிக்காரரின் இந்த கூற்று ஏற்புடையதாக இல்லை. ஆண் அப்ரோச்சிங் சைட் ஜெண்டராகவே இருப்பதால் பெண் ஆணை கற்பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண் ஜாடையே போதும். காதல் கைக் கொள்வது பெண்களுக்கு ஆண்களை விட இயற்கையிலேயே எளிது, அதிகம் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலேயே எல்லா சமூகத்திலும் பெண்களின் மீது அதன் பொறுப்பு அதிகம் சுமத்தப்படுகிறது. அதனால் அது போன்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

    நன்றி
    அன்புடன்
    ராம்குமார்

  14. திருச்சிக் காரன் on November 9, 2009 at 9:41 am

    ஆண் பல வகையிலும் பெண்ணுக்கு நெருக்குதல் தர முடிகிற இடத்தில் இருக்கிரான். அலவலகத்தில் வேலையை சரியாக செய்யவில்லை என்று பொய்க் குற்றம் கூறி தொல்லை செய்து அழுத்தம் குடுக்க முடியும். அதே போல வீட்டிலும் கணவனுக்கு மாமன், நண்பன் என்று அதட்டல் மிரட்டல் போடுபவர்களும் இருக்கிறார்கள்.

    //ஆண்கள் பணம் கொடுத்து மயக்கி பத்தினிகளை விபச்சாரியாக்குகிறதில்லை;// இது தவறு.

    ஆண்கள் பணம் கொடுத்து மயக்கி பத்தினிகளை விபச்சாரியாக்குகின்றனர்.

    பெண்களுக்கு சில சமயம் பணத் தேவைகள் வருகின்றன. கணவனின் சம்பளம் அந்த தேவையை நிறைவு செய்ய இயலாததை பயன்படுத்தி காமுகன் பணத்தை துருப்பு சீட்டாக்கி பெண்களை கெடுக்கிறான்.

    இது அனைவரும் அறிந்ததே.

    //ஒரு பெண்ணின் துணையோ தூண்டுதலோ இல்லாமல் மற்றொரு பெண் முறைதவறிய உறவுகளில் விழுகிறதில்லை; ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அனுபவங்களை கேட்டே மனதளவில் ஆயத்தமாகிறாள்; பிறகு எதிர்பார்த்திருந்த வாய்ப்பு வரும்போது காரியத்தை சாதிக்கிறாள்; //

    “ஒரு பெண்தான் இன்னொரு பெண்ணை கள்ள உறவுக்கு தூண்டுகிறாள்”, என்பதை கேட்கும் போது படிக்கும் எல்லோருக்கும் என்ன தோன்றுகிறது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். என்னைப் பொறுத்தவரையில் இப்படியான ஒரு காரணி நான் இது வரையில் கேட்டு இராதது.

    ஆனால் இது போன்ற காரணி ஒரு 5% முதல் 10% வரை இருக்கக் கூடுமோ என்னவோ.

    ————

    சமுதாயத்தைச் சீர் திருத்த வேண்டிய பொறுப்பு இந்தக் கால கட்டத்தில் ஆணுக்கே அதிக அளவில் உள்ளது என நான் நினைக்கிறேன். ஆண் கள்ள உறவுக்கு தயாராக் இல்லாத போது, பெண்கள் ஆண்களைக் கர்ப்பழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆயிரம் கட்டளைகளைப் போடும் ஆணினமே , எடுத்ததற்கு எல்லாம் வள்ளுவரை மேற்க்கோள் காட்டும் நீங்கள், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பத் தயங்குவது ஏன்?

  15. திருச்சிக் காரன் on November 9, 2009 at 9:53 am

    அன்புள்ள ஸ்ரீ ராம் குமார் அவர்களே,

    //////ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்/////

    //சகோதரர் திருச்சிக்காரரின் இந்த கூற்று ஏற்புடையதாக இல்லை. ஆண் அப்ரோச்சிங் சைட் ஜெண்டராகவே இருப்பதால் பெண் ஆணை கற்பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண் ஜாடையே போதும். காதல் கைக் கொள்வது பெண்களுக்கு ஆண்களை விட இயற்கையிலேயே எளிது//

    ஆண் ஏன் ஜாடைக்கு பணிய வேண்டும்?

    கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு -என்பதை ஆண் எடுத்து சொல்லலாமே? கள்ளக் காதல் குறைந்தால் நாட்டிலே கிரிமினல் சம்பவங்கள் குறையும் அல்லவா?

    பெண் கள்ள உறவுக்கு மறுத்தால் ஆண் பலவந்தம் செய்வது நடக்கக் கூடும். ஆனால் ஆண் மறுத்தால் பெண் அதிக பட்சமாக என்ன செய்யப் போகிறாள்? இகழ்ச்சியாகப் பேசப் போகிறார் – அவ்வளவுதானே?

  16. C.N.Muthukumaraswamy on November 9, 2009 at 10:08 am

    காலத்துக்கேற்ற அருமையான கட்டுரை. அறிவு பூர்வமாக உணர்ச்சிகரமாக எழுதப்பட்டது. ஆணுக்குக் குடும்பப் பெருமையும் தன்மானமும் பெண்ணுக்கு அச்சமும் நாணும் மடனும் பாலுணர்வால் ஒருவர் தவறு செய்துவிடாமல் காக்கின்ற கவசங்கள் என தொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்திலேயே எழுதிவைத்துள்ளார். தொல்காப்பியத்திற்குப் பேருரை கண்ட பகுத்தறிவாளர் காலத்திலேயே இந்த வரையறைகள் எல்லாம் பத்தாம் பசலிக் கருத்துக்களாக ‘முற்போக்காளர்?’களால் இளைஞர் மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டன. இனி இந்த அசிங்கமே விதியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் இவையெல்லாம் அவர்கள் நோக்கில் ‘இந்துத்துவா’க் கொள்கைகள் அல்லவா?

  17. Francis on November 9, 2009 at 11:51 am

    #
    Mani
    9 November 2009 at 9:00 am

    //இராமன் தெய்வமானது இன்று; அவர் வாழ்ந்த நாளில் அவர் தான் தெய்வம் என்றோ என்னை எல்லோரும் வணங்குங்கள் என்றோ சொன்னாரா? அதுபோல எந்த மகானும் சொன்னதில்லை அல்லது அப்படி சொல்லுபவர் மகானுமல்ல; //

    இயேசு?

    Jesus never claimed Divinity in First 3 Gospels called Synoptic.

  18. ram on November 9, 2009 at 12:24 pm

    /////திருச்சிக் காரன்
    9 November 2009 at 9:53 am
    அன்புள்ள ஸ்ரீ ராம் குமார் அவர்களே,

    //////ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்/////

    //சகோதரர் திருச்சிக்காரரின் இந்த கூற்று ஏற்புடையதாக இல்லை. ஆண் அப்ரோச்சிங் சைட் ஜெண்டராகவே இருப்பதால் பெண் ஆணை கற்பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண் ஜாடையே போதும். காதல் கைக் கொள்வது பெண்களுக்கு ஆண்களை விட இயற்கையிலேயே எளிது//

    ஆண் ஏன் ஜாடைக்கு பணிய வேண்டும்?

    கள்ளக் காதல்- வீட்டுக்கு, நாட்டுக்கு, குடுமபத்துக்கு, குழைந்தைகளுக்கு கேடு -என்பதை ஆண் எடுத்து சொல்லலாமே? கள்ளக் காதல் குறைந்தால் நாட்டிலே கிரிமினல் சம்பவங்கள் குறையும் அல்லவா?

    பெண் கள்ள உறவுக்கு மறுத்தால் ஆண் பலவந்தம் செய்வது நடக்கக் கூடும். ஆனால் ஆண் மறுத்தால் பெண் அதிக பட்சமாக என்ன செய்யப் போகிறாள்? இகழ்ச்சியாகப் பேசப் போகிறார் – அவ்வளவுதானே?//////
    சகோதரர் திருச்சி அவர்களே! நான் ஆண்கள் தவறான உறவுக்கு செல்லலாம் என்று ஆதரிக்கவே இல்லை. ஆணோ பெண்ணோ, கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொள்வது இரு பாலருக்கும் ஏற்புடையதல்ல. நான் சொல்ல வந்தது பெண்ணுக்கு இவை எளிதில் கிடைக்கும் என்பதை எடுத்தியம்பினேன். நீங்கள் கூறுவதைப்போல சூர்ப்பனகைக்கு மறுப்பு தெரிவித்த ராமனாக ஆண்களும் இருக்க வேண்டியது அவசியமே. அந்த பொறுப்பு ஆண்களையும் சாரும். கண்டிப்பாக ஆண்கள் பிறன் மனை நோக்கா பேறாண்மையாளனாக இருப்பது அவனுக்கும் சமூகத்திற்கும் என்றும் நன்மை பயக்ககூடியதே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

  19. V. Ramaswamy on November 9, 2009 at 12:40 pm

    SAIRAM. Congrats Mr. Ramkumar. Very well written. Indeed, there is absolutely no concern for the Society. The so-called freedom of speech, as exploited by everyone, including Cinema, more particularly the TV media through its serials have done more damage than good to the Society. The word காதல் is over-glorified and over-emphasized as if there is nothing for the younger generation except to be after Kaadhal. Even the dialogues between family members are depicted in such a manner as to fan hatred between husband-wife, mother-in-law & daughter-in-law and other relations with avoidable and unwanted argumentary speeches etc. Youngsters misunderstand that their main aim of going to Colleges (now adays it is in Schools also) is to make merry with girls, exchange letters with meaningless poems, spend the hard-earned money of parents towards such ‘infatuations’ and spoil their education, career and life. May be some fructify into successful marriages but, most end in disappointments, unsuccessful and unhappy marriages, divorces and sometimes suicides. May wiser counsel prevail on younger generation through such articles. Thanks and Regards – V.Ramaswamy

  20. அன்புள்ள கட்டுரையாசிரியர் அவர்களுக்கு,

    மிகவும் நல்ல (தைரியமான) கட்டுரை. நீங்கள் சொல்லும் கருத்துக்கள், பெண்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

    இருப்பினும் ஆண்மக்களை பெற்றவர்களுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ எவ்வித அறிவுரையும் இல்லை என்பது நெருடலாக உள்ளது. ஊசி நுழைய இடம் கொடுத்தால் போன்ற வாக்கியங்கள் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றன. கட்டுரையின் தரத்தையும் குறைக்கின்றன.

    இருபாலருக்கும் கலாச்சாரத்தை காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் கவனமாக இருந்தால் மட்டும் கலாச்சாரத்தை காப்பாற்றிவிட முடியுமா என்ன? ஆண் வர்க்கம் முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் கொண்டதாக இருந்தால் (இருகிறது என்பது உண்மை), பெண் கவனமாக இருந்தும் பலனிருக்காதே?

    ஆண் வர்க்கத்தை (அனைத்து வயதினரையும்) மனக்கட்டுப்பாடு கொண்டவர்களாக மாற்றி, பெண்களும் பொறுப்பாக இருந்தால் மட்டுமே கலாச்சாரம் காப்பாற்றப்படும்.

    So என்னைப் பொறுத்தவரை கட்டுரை இன்னமும் முடியவில்லையென்று நினைக்கிறேன். :)

  21. வள்ளுவன் on November 9, 2009 at 4:22 pm

    நல்ல கட்டுரை ஆசிரியர் அய்யா அவர்களே! இந்த காலத்துக்கு ஏற்ற கட்டுரை…

    ‘சகோதரர் க்லாடிக்கு’ நான் ஒன்றை மட்டுமே சொல்லிக்கொள்கிறேன், ஏனெனில் மற்றவை தோழர்களால் ஏற்கனவே உறைக்கும்படி சொல்லப்பட்டுவிட்டது!

    //முதலாவது தெய்வ பயம் இல்லாததே காரணம்; நான் யோசிக்கும், பேசும், கேட்கும், செய்யும் அனைத்தும் எனக்கு மேலானதொரு விண்ணுலக அமைப்பினால் கண்காணிக்கப்படுகிறது எனும் அச்ச உணர்வு மாத்திரமே மனிதனுக்கு காப்பாக இருக்கமுடியுமே தவிர அவன் தனக்குத் தானே கட்டிக்கொள்ளும் காப்பு காப்பாக இருக்கமுடியாது; //

    அப்படியானால், கழுத்தில் அணியும் சிலுவையை கழட்டிவிடுவது தானே! புத்தரைப்போல உடம்பில் எதையும் அணியாமலே கூட மனக்கட்டுப்பாடுடன் இருக்கலாம்…

    //“தீட்டு” தோஷமாகும் எனும் “பயம்” >பரிகாரம் செய்தால் போச்சு< எனும் பொய்ப் போதகத்தால் மாற்றப்படுகிறது;//

    பரிகாரம் என்பது தெரியாமல் செய்யும் குற்றத்திர்க்குதான்.. எந்த நல்லதையோ, கேட்டதயோ செய்தாலும் கர்மவினைகள் தொடரும், கர்மவினைகள் எல்லாம் தீரும்போதுதான் எந்த உயிரும் (உங்களைப்போல மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா என்ற போதனைக்கு இங்கு இடமில்லை, அனைத்து ஜீவன்களும் ஒன்றே!) மோட்சமடையும்… உங்களைப்போல பல்வேறு இனப்படுகொலை, களவு, இன்னும் சொல்லவே நாவுகூசும் செயல்களை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் சென்று பாதிரியாரிடம் ‘பாவமன்னிப்பு’ கேட்டால் முடிந்துவிடும் என்று எங்குமே சொல்லப்படவில்லை!

    இறைவனே ஆனாலும், பூமிக்குவந்தால் கருமவினகளை அனுசரித்து நடக்கவேண்டும் என்பதுதான் உண்மை. அதனால்தான் வேதங்களையும், வேள்விகளையும் நிராகரித்த புத்தரும் மகாவீரரும்கூட கருமம் என்ற கருத்தை நிராகரிக்கவில்லை. இன்னும் ஒருபடி மேலாக, திருமணம் செய்து பிள்ளை ஈன்றால்கூட கருமவினை தொடரும் என்று இம்மார்கங்கள் போதிக்கின்றன!
    எனவே உங்கள் “evangelist idea” கள் எங்களுக்குத்தேவயில்லை…

  22. Srinivasan TR on November 9, 2009 at 5:26 pm

    அருமையான கட்டுரை

    மிகவும் பயனுள்ள விஷயம் சொல்லபட்டுள்ளது.

    மீடியாக்கள் தான் இந்த அவல நிலைக்கு வெகுவான காரணம் என்பது
    தெளிவு.

    மீடியா திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படவேண்டும். நன்றி

  23. ஹரன் பிரசன்னா on November 9, 2009 at 6:49 pm

    பெண்களை ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்துகிறது இக்கட்டுரை. உலகம் இன்று இருக்கும் நிலையில் நிறைய பிற்போக்குக் கருத்துகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. காமம், கற்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களை மிக உயர்வாக்கி அவர்களை மட்டுமே பொறுப்பாக்குவது காலம் காலமாக நடந்துவரும் உத்திதான். அதுவேதான் இங்கேயும் செய்யப்படுகிறது என்று தோன்றுகிறது.

    அதற்குக் கீழே உள்ள உளறல்களே எடுத்துக்காட்டு.

    //1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.
    2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினே, என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.
    3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
    4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.
    5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.
    6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

    இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.//

    ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழையும் என்பதெல்லாம் எத்தனை மேம்போக்கான, கிறுக்குத்தனமான வாக்கியம்? இதையெல்லாம் ஒரு பெண் சொல்கிறார் என்றால், பழங்கருத்துகளில் ஊறிப் போயிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆண்கள் என்றால் முயற்சி செய்யத்தான் செய்வார்கள் என்றெல்லாம் ஒருவித உரிமையை அளிப்பதெல்லாம் சரியல்ல. கற்பு என்பது ஆண்களுக்கும் சேர்த்தே.

    ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினாலே காதல் வந்துவிடும் என்று மேலே உள்ள பெண்மணி நம்பினால் அவரைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

  24. திருச்சிக் காரன் on November 9, 2009 at 7:11 pm

    ஆண் , பெண் இருவருமே கையிலே காசு வந்தவுடன் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆகி, இந்த உலகம் இன்ப மயமானது, இந்த உலகத்திலே எவ்வளவு இன்பமாக இருக்க முடியுமோ அவ்வளவு இன்பமாக இருக்க வேண்டும் என்றும்,

    வித விதமாக உடை உடுத்துவதிலும், வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வதிலும், மாலையிலே பெரிய ஹோட்டல்களில் உயர் ரக மது பானங்களை அருந்தி மகிழ்வதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

    விலங்குகளைப் போல இன்றைக்கு இந்தக் கணம் எப்படி தன் இரையை அடைய முடியும் என்பது போல – தன்னை எப்படி மகிழ்வித்துக் கொள்ள முடியும் என்ற சிந்தனை இருக்கும் போது கலாச்சாரம் கண்ணுக்குத் தெரியாது. சும்மா மாசம் ஒரு லட்சம் சமபளம் வாங்கிற பயலுவலும், பொண்டுகளும் துள்ளுராங்க.

    600 கோடி பொன்னை விட்டு விட்டு பட்டினத்தார் ஏன் சென்றார். அவர் என்ன கேனையனா? புத்தர் எதற்கு குடும்பத்தையும் ஆட்சியையும் விட்டு காட்டுக்குப் போனார்.

    நான் எல்லோரையும் சந்நியாசி ஆகச் சொல்லவில்லை. வாழ்க்கையின் அடிப்படைகள் என்ன? எத்தனை நாளைக்குத் துள்ள முடியும்-துன்பமே வராது என்று நினைக்கிறார்கள். -துன்பமே வராமல் இருந்தாலும், வயதாவைதையோ, நோய் வருவதையோ, மரணம் வருவதையோ தடுக்க முடியுமா? – இதை சொல்லி கொடுங்கள்- இதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை. அவர்கள் சன்யாசம் வாங்க வேண்டாம், ஆனால் சரியான வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

    பெற்றோர்கள் காசுதான் வாழ்க்கை என்று வாழ்ந்தால், குழந்தைகள் வாழ்க்கையை எப்படி சரியாகக் கற்றுக் கொள்ளும்?

    தகப்பனே கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கினால், பிள்ளை என்ன பிரகலாதனாகவா வளருவான் – அவனுக்கு சொல்லிக் கொடுக்க நாரதரும் இல்லாத நிலையில்!

    ஆன்மீக வாதி என்று சொல்லிக் கொள்ளுபவரும் சொத்துக் குவிக்கிறாங்க.

    இதை சொன்னால் நம்மை வைய ஆரம்பித்து விடுவார்கள்.

    சரியான ஆன்மீகத்தை புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்யுங்கள்.

    இந்திய சமூகத்தை அவ்வவப் போது சரியான பாதையில் கொண்டு சென்றது ஆன்மிகம் தான்.

    உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஆன்மிகம் தான் – வேறு என்ன வாய்ப்பு உள்ளது- சட்டமா கொண்டு வர முடியும்? அது தான் சொல்லி விட்டதே , வயதுக்கு வந்தவர்கள் திருமணம் ஆகாதவர்கள் ( பாலத்காரம் செய்யாத நிலையில்) சட்டம் அவர்களை எப்படி, எதற்காக தண்டிக்க முடியும்?

    ஆனால் ஆன்மீகத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் சரியான் ஆத்மீகம் எது என்று நமக்கு தெரியவில்லை.

  25. ஜடாயு on November 9, 2009 at 7:42 pm

    கலாசார சீரழிவு பற்றித் தன் ஆதங்கத்தை ஒரு பொறுப்புணர்வுடன் கூடிய பார்வையில் இருந்து எழுதியிருக்கிறார் ராம்குமார். சுதந்திர எண்ணம் கொண்ட எல்லா இந்துக்களுக்கும் கவலை தரும் விஷயம் தான் இது. இது பிற்போக்குத் தனம் அல்ல. ஆனால் ஓவராக பெண்களுக்குப் புத்தி சொல்லாமல், நடுநிலைமையுடன், tactful ஆக, இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் அவர் எழுதியிருக்கலாம்.

    தமிழ்ஹிந்து தளம் கலாசாரம் பற்றிய விவாதத்தின் எல்லா கண்ணோட்டங்களையும் முன்வைத்து வருகிறது. இது ஆரோக்கியமானது.

    ”அட, இதுதான் இந்திய கலாச்சாரமா தோழர்களே? இந்தியக் கலாச்சாரம் என்றால் என்ன? அதன் பிரதிபலிப்பாகப் பெண்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ‘பப்’ போன்ற இடங்களில் பெண்கள் செல்வது இந்திய கலாச்சாரத்துக்கு இழுக்கு என்றால் அங்கு ஆண்கள் செல்வது…

    இதுவரை எத்தனை ஆண்களை இதற்காக நீங்கள் தாக்கியுள்ளீர்கள்? அதற்கு தைரியமிருக்கிறதா? ஆண்களிடம் காட்டமுடியாத உங்களது வீரத்தைப் பெண்களிடம் காட்டியுள்ளீர்களா?”

    - இதே தளத்தில் முன்பு வந்திருக்கும் மற்றொரு கட்டுரையில் இருந்து

  26. B.பாஸ்கர். on November 9, 2009 at 8:29 pm

    வணக்கம்,

    ///ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழையும் என்பதெல்லாம் எத்தனை மேம்போக்கான, கிறுக்குத்தனமான வாக்கியம்? இதையெல்லாம் ஒரு பெண் சொல்கிறார் என்றால், பழங்கருத்துகளில் ஊறிப் போயிருக்கிறார்///

    நண்பர் ஸ்ரீ ஹசன் அவர்களே இது கிறுக்கத்தனமான வாக்கியம் என்று ஒரு வாதத்துக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், கட்டுப்பாடுகள் என்பதில் ஒரு சிலவனவற்றை இந்த அம்மையார் கூறி உள்ளார்கள் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆண்களை பற்றி சொன்னீர்கள், அவர்களுக்கும் கற்பு நெறிகள் உள்ளது, அவர்களையும் தறி கேட்டு போக நமது கலாசாரம் அனுமதிக்க வில்லை. கற்பு நெறி தவறாமல் இருந்த காரணத்தால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ராமன் கடவுளாக மதிக்கப் பட்டான்.

    அந்த அம்மையார் பலபெண்களின் அனுபவத்தை சேகரித்து வைத்தே இக்கருத்துகளை கூறியுள்ளார் என்றே நான் நினைக்கிறேன், அதுமட்டுமல்ல இந்த விஷயத்தில் எனக்கு என் நண்பர்கள், சுற்றுவட்டதாரிடம் இருந்து ஏராளமான அனுபவங்கள் உள்ளன, ஒரே ஒரு வார்த்தை என்னவென்றால் நாம் பெண்களை தெய்வங்களாய் மதிப்பது உண்மையே, ஆனால் பக்தனாகிய நம்மை அந்த தெய்வங்கள் (பெண்கள்) சோதனைக்கு உட்படுத்தும் பொழுது நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா? எனக்கு நிறைய உண்டு.

    மேலும் பல விஷயங்கள் என்னால் சொல்ல முடியும் ஆனால் இந்த பின்னூட்டம் புதிரா புனிதமா என்ற மொக்கையாகி விடக்கூடாது.

    (comment edited & published)

  27. திருச்சிக் கார‌ன் on November 9, 2009 at 8:40 pm

    சகோதரர் ஸ்ரீ ராம் குமார்,

    நீங்கள் மிக முக்கியமான ஒரு பொருளை, சரியான நேரத்திலே எல்லோருக்கும் நினைவு படுத்தி “வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூரு போலக் கெடும்” என்ற வகையிலே உங்கள் கட்டுரையை வெளியிட்டு உள்ளீர்கள்.

    கட்டுரை மிக முக்கியமானது. உங்கள் நடையும் சிறப்பாக உள்ளது. ஆண்களும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவரின் பல குறள்களுடன் ஆரம்பத்திலேயே விளக்கி உள்ளீர்கள்.

    நான் சொல்ல வந்தது, இனி ஒழுக்கத்தைக் காப்பதில் ஆண்களும் சம பொறுப்பை வகிக்க வேண்டும், என்பதைத் தான்.

    நீங்கள் ஆண்களை விட்டு விட்டீர்கள் என்று நான் கூறவில்லை.

    நான் //ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்// என்று எழுதியது நண்பர் சாரங்கனின் கருத்துக்கு பதில் கருத்தாகத் தான்.

    Kindly Refer,
    //Sarang
    8 November 2009 at 6:28 pm

    மிகவும் அற்புதமான அனைவரும் படித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டுரை

    //அதே நேரம் பெண்களை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன். ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்.

    - ஒருமுறை என்னுடிய மேலாளர் எங்களுடைய மேல்நாட்டு “Customer” மற்றும் எங்களையும் அவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளி (சிக்ஷா) விழாவிற்கு அழைத்து சென்றார் – அங்கே நடந்த கூத்தை கண்ட ஆண்ட மேலைநாட்டு மனிதர் ஆடிபோய் விட்டார் – நான் இந்திய ஒழுக்கமான நாடு என்று நினைத்தேன், இவ்வன்னமா உங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்

    ஒரு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பெண்களிடம் அதிகம் உள்ளது – பெண்கள் ஒழுக்கம் இல்லாமல் போனால் கலாச்சாரும் அழிந்துவிடும் – குழந்தைகளிடம் ஒரு தாயின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் – தாய் தரமில்லாமல் வாழ்ந்தால் அது குழந்தையை பாதிக்கும், இதுவே தான் எதிர்காலத்தில் கலாச்சாரத்தை கெடுக்கும்//

    and my reply referring Mr. Sarang

    //திருச்சிக் கார‌ன்
    8 November 2009 at 7:14 pm
    நண்பர் சாரங்கன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

    இப்போதைய பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் அதிக சுதந்திரமும், துணிச்சலும் உடையவர்களாக உள்ளனர். அதில் சிலர் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று கணக்கு இல்லாமல் செயல்படுவதும் உண்டு.

    சமுதாயத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது தான். நான் பெண்களை எப்படி வேண்டுமானாலும் இருங்கள் என்று சொல்லவில்லை. பெண்களே , உங்களை எங்கள் தாயாக நினைக்கிறோம், அந்த தாய்மை மேல் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் கேட்டுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு,

    எவ்வளவு ஆண்கள் உலகில் பெண்களைத் தாயாக நினைகிரார்களோ , அந்த அளவுக்கு சமுதாயம் சீர்படும் என்பதையும் கூறுகிறேன்.

    ஆண்கள் நியாயமாக நடந்தால் பெண்களும் திருந்துவார்கள் அல்லவா?

    //ஆண், பெண் இவர்களில் கள்ளக் காதலுக்கு அதிக ஆர்வம் காட்டுவது ஆணே என்று நினைக்கிறேன்//

    ஒரு பெண், எந்த ஒரு ஆணையும் கர்ப்பளித்ததாக இது வரையில் செய்தி வரவில்லை என்றே நினைக்கிறேன்.//

    This was my reaction to the opinions of Mr. Sarang.

    நன்றி.

    திருச்சிக்காரன்.

  28. B.பாஸ்கர். on November 9, 2009 at 9:16 pm

    வணக்கம்,

    டைனமிக் திருமணம். இதை விட ஒரு கேவலம் நமது நாட்டுக்கு இருக்காது.

    அந்த புதுமைக் கிறுக்கன் சினேகன் சொல்வது ” கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது மனிதர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம், பாசப் பிணைப்பு”

    உண்மைதான் அந்த பாசம் பக்தி, காதல், அன்பு, நட்பு எல்லாமே ஒரே உணர்ச்சியின் பல்வேறு பரிமாணங்கள். எதை எங்கே காட்ட வேண்டும் என்பதே கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்பது கூட தெரியாமல் இப்படி வடிகட்டிய முட்டாள் தனமாக இக்கல்யானத்தை ஏற்பாடு செய்து இருக்கும் இவர்கள் வெளிப்படையாக நாகரிக உடையணிந்து இருப்பினும் நிஜத்தில் காட்டுமிராண்டிகளே.

    இந்த கல்யாணத்தில் கவனித்து பார்த்ததில் பங்கேற்ற அநேகர் கிறிஸ்துவர்களே. நண்பர் திருச்சிக்காரர் அடிக்கடி இங்கே எழுதும் போது கிறிஸ்துவர்களை நோக்கி உங்கள் காட்டு மிராண்டிக் கருத்துகள் இங்கே வேண்டாம் என்று எழுதுவார். சில சமயம் நான் அவரை மனதிற்குள் திட்டியது கூட உண்டு. அதற்காக இப்போது அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆமாம் அவர் எழுதிய கருத்து உண்மை என்று உணர்த்தியது இந்த கல்யாணம்.

    தக்க சமயத்தில் இந்த நிகழ்ச்சியை இங்கு சுட்டிக் காட்டிய ஸ்ரீ மணி அவர்களுக்கு நன்றி.

  29. ram on November 9, 2009 at 10:34 pm

    அன்பான நண்பர்களுக்கு,

    இருபாலருக்கும் சேர்ந்ததாகவே எழுதப்பட்ட இந்த கட்டுரை ஓர் ஆணாதிக்க மனோபாவத்துடன் இருப்பதாக அதிகம் விமர்சிக்கப்படுவதாக உணர்கிறேன். பெண்கள் குறித்த ஓரிரு விஷயங்கள் அதிகமானதால் அப்படி ஒரு தொனி கட்டுரைக்கு உண்டாயிருக்கலாம் என்று நினைக்கிறேன். கட்டுரையின் மூலக்கருவான கலாச்சாரம் பற்றிய செய்தியையும் ராமயணத்தையும்
    விட்டுவிட்டு விவாதம் ஆணாதிக்கம் நோக்கி திசை திரும்புவதை நினைத்து வருந்துகிறேன்.

    அதற்கான காரணத்தையும் விளக்குகிறேன். கட்டுரையை எழுதிய நேரத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களையும் அப்போது வெளியான செய்தியையும் கட்டுரையின் மையக்கருத்தை விளக்க அப்படியே கையாண்டேன் என்பதும் அதுவே பெண்களுக்கான பகுதி மிகுதியானது என்ற தோற்றம் உண்டாகவும் காரணமாக அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். அதனால் கட்டுரை ஒரு ஆணாதிக்க மனோபாவ கட்டுரையாக வெளிப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.

    மேலும் கட்டுரையின் வீச்சு காரணமாக படிக்கும் போது வரும் வேகம் அப்படியே பெண்களை சாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதும் அடியேன் கருத்து. உண்மையென்றுணர்பவர்கள் சொல்லுங்கள்.

    ஹரன் பிரசன்னா என்பவர் பெண்களுக்காக பெண்ணால் சொல்லப்பட்ட சில யோசனைகளை உளரல்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது பெண்கள் ஒரு வரை முறையை வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்வது எப்படி உளறல்களாகும்? என் அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு முறை எனது அலுவலகத்தில் வங்கி அதிகாரியான பெண் 38 லிருந்து 45 க்குள் வயதுள்ளவராக தென்படுபடுபவர் என்னைக்காண வந்திருந்தார். மார்கெட்டிங் டிவிஷனில் இருப்பவர். என்னைப் பார்த்தவுடன்
    கை கொடுத்தார். நானும் கை கொடுத்தேன். அவர் நான்கு விரல்களை தான் முன்னே நீட்டினார். நானும் அவரது விரல்களை எனது விரல்களால் பற்றி ஹலோ என்று சொல்லிவிட்டு அடுத்த கட்ட பேச்சுக்கு நகர்ந்தோம். ஆனால் அந்தப் பெண் ஏன் எல்லோரையும் போல உள்ளங்கை பதிய கை கொடுக்கவில்லை என்று தோன்றியது. அவரிடம் கேட்டே விட்டேன்.அதற்கு அவரோ அலுவல் ரீதியாக ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு வரையரை இருக்கிறது. நான் அதன் படி ஒரு அளவுடன் என்னை
    வெளிப்படுத்திக் கொள்வேன். அதன் வெளிப்படு தான் இது என்றார்.இப்படி ஒரு கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும் என்று வரையரை வைத்திருக்கும் பெண்கள் அவர்களாக சொன்ன சில விஷயங்களை பெண்களின் நலன் கருதி எழுதுவது உளறல்களா?

    கொலையான பெண்ணை உதாரணமாக எடுத்துக் கூறியது கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு இல்லாமல் இப்படி ஒரு பெண் தன்னுயிரையும் இழந்து தன் மகனுக்கும் எமனாகவும் நிற்கிறாளே என்று பரிதாபப்பட்டு அப்படிப்பட்ட நிலையை மற்ற பெண்கள் அடைந்து விடக்கூடாது என்று விழிப்புணர்வுக்காக எழுதுவது ஆணாதிக்கமா?

    ஜெயில் கைதியுடன் தகாத உறவு வைத்திருந்த பெண் போலீஸ் கொலையான செய்தி நாளிதழில் வந்தால் அந்தப் பெண்ணின் நடத்தையை சுட்டிக் காட்டினால் ஆணாதிக்கமா? மேலே குறிப்பிட்டது போல இந்த பெண் ஒரு வரையரையுடன் ஆண்களிடம் பழகியிருந்தால் இப்படி கொலையாகியிருப்பாளா என்று பெண்களை சிந்திக்கத் தூண்டுவது ஆணாதிக்கமா?

    இந்தக் கட்டுரையை ராம்குமார் எழுதியதாக நினைக்காமல் ஒரு பத்மாலக்ஷ்மியோ, ஒரு சுப்புலக்ஷ்மியோ அல்லது ஒரு மாதர்சங்க தலைவியோ எழுதியதாக உருவகித்து மீண்டும் படித்துப் பாருங்கள். கட்டுரை பெண்களுக்கு நல்லதையே சொல்லியிருக்கும். ஆண்களுக்கும் சேர்த்தே.
    அன்புடன்
    ராம்

  30. Malar on November 9, 2009 at 10:36 pm

    Being a woman, i see this article as a half baked attempt to enforce what a woman should behave.

    This is no better than a Taliban mindset.

    Please read Raguvamsa by Kalidasa.

    In the final chapters of Ragu vamsam, Queen of Agni Varman becomes the ruler of the country.

    How is she going to rule if she keeps up with your rules for the woman?

    Man and woman have the responsibilities as have duties. Both are important for the family. Man should feel reponsible to the family as much as the woman. women have responsibilty to the society as men.

    These kind of rules dictated here are good for keeping the woman for the family and man for the society.

    Dont fall prey to the mores of the christianity and islam where the oppression of woman is dictated based on the theological grounds. There are no theological grounds in Hinduism. Sita does not obey Rama when Rama insists that she should stay in Ayodya. Urmila does obey Lakshman when Lakshman tells her to stay in Ayodya. It just indicates the woman is a human being who can take decision on her own.

    Surpanaka wants to get married to an already married man and proposes to Rama and gets ill treated. The same goes to Ravana who wants to marry Sita who is already married to Rama.

    No difference to man or woman!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.