இந்து தாலிபானியம்…? - ஒரு எதிர்வினை
ஓகை நடராஜன்
20 Nov 2009 |
அச்சிட
அன்மையில் ஜெயமோகன் அவர்களின் வலைப்பதிவில் படித்த ”எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்” என்று தலைப்பிடப்பட்ட பதிவின் விளைவே இந்தக் கட்டுரை.
ஓவியர் ஹுஸைன் தொடர்பான ஒரு கேள்விக்கான நீண்ட பதிலில் ஹுஸைன் இந்து கடவுள்களை வரைந்திருந்த முறைமையை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அதைக் கண்டிக்கும் செயலை இந்து தாலிபானியம் என்றும் வர்ணித்திருந்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. வழக்கமான இந்து நாத்திகர்களின் பரப்புரை போன்றதென்று நாம் ஜெயமோகனின் கருத்துகளை ஒதுக்கித் தள்ளிவிட இயலாது. இந்திய ஞானமரபில் ஆழ்ந்த நம்பிக்கையுடனான பலசெய்திகளை நமக்காக அவ்வப்போது தந்துகொண்டிருக்கும் அற்புதமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான ஒருவரின் கருத்து கூர்ந்து ஆராயத் தக்கதான ஒன்றாகவே கருதப்பட வேண்டும். ஆனால் இந்த்ப் பதிவு சொல்லும் செய்திகள் உடன்பட முடியாத எண்ண அலைகளைத் தோற்றுவிக்கின்றன.
கேள்வி கேட்ட கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவரை மதவெறியர் என்று அழைத்து, அவர்களின் மனம் எப்போதும் விரிவதில்லை என்ற அவநம்பிக்கையுடன் தன் பதிலை ஆரம்பிக்கிறார்.
இந்துமதத்தின் பன்முகத் தன்மையால் ஏற்பட்ட பல மரபுகளைப் பற்றிக் கூறி அவற்றில் சமீபத்திய ஒன்றாக இந்த ஓவிய முறைமையைச் சிலாகிக்கித்து அதற்கான பல ஆதாரங்களை அடுக்குகிறார்.
// இந்துமதம் என்று நாம் இன்று பொதுவாகக் காணும் படிமங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள்,நம்பிக்கைகள் போன்றவை அனைத்துமே இன்றைய தோற்றத்தை பக்தி இயக்கத்தின்போது உருவாக்கி கொண்டவை. ஆனால் இவை மட்டும் அல்ல இந்து மரபு. பக்தி இயக்கத்தால் வேற்றுப்பொருள் கொள்ளப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட பல ஞான மரபுகள் இந்து மரபில் உண்டு. பக்தி இயக்கத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்ட மரபுகளும் உண்டு. அவை இப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளன…… அதேபோன்றதே தாந்த்ரீக மரபும். இந்தியாவின் தாந்த்ரீக மரபு பக்தி இயக்கத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒன்று. தாந்த்ரீகத்தின் சடங்குகளும் ஆசாரங்களும் சாதாரணமான ஒரு ஆசார இந்துவுக்கு அதிர்ச்சியையும் கசப்பையும் அளிக்கக்கூடும். …….. இந்து ஞான மரபின் உள்வழிகளில் ஒன்றில் புனிதம் எனப்படுவது இன்னொன்றில் புனிதம் அல்ல. ஒன்றில் அபச்சாரம் எனப்படுவது இன்னொன்றில் ஓர் வழிபாட்டு முறையாகவே இருக்க முடியும் …//
இந்த அடிப்படையிலேயே ஜெயமோகன் இந்துக்களின் கண்டனங்களை இந்து தாலிபானியம் என்று வர்ணிக்கிறார். இந்து மதத்துக்குள்ளாகவே தோன்றிய சில மரபுகள் பக்தி இயக்கத்தினரால் முற்றாக நிராகரிக்கப்பட்ட செயலையும் இந்து தாலிபானியம் என்றா ஜெயமோகன் கூறுவார்? இந்த ஓவிய முறைமையை இந்து ஞான மரபில் ஒன்றாகக் கருத இயலுமா? இந்து மதத்தினரில் ஒரு பகுதியினர் வெறுத்து ஒதுக்குவதாலாயே இது இன்னொரு இந்து மரபு என்றே கொள்ளப் படவேண்டும் என்ற கருத்தாக்கம் புரிந்துகொள்ள இயலாததாயிருக்கிறது. இந்து ஞான மரபுகள் எத்தனை எத்தனை இருந்தாலும் அவை யாவும் இந்து மதத்துக்குட்பட்ட ஆன்மிகத் தேடலாகத்தானே இருக்க முடியும்? ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? உருவ ஓவியம் வரைவதையே தடை செய்யப்பட்ட ஒரு மதத்துக்கு உள்ளிருந்துகொண்டு ஹுஸைன் செய்யும் காரியம் அந்த மதத்தில் அவர் வேறு மரபை உருவாக்குகிறார் என்று கருத இடமிருக்கிருக்கிறதே தவிர இந்துமரபில் இன்னொன்றைச் செய்கிறார் என்று கொள்ளுவதற்கில்லை.
மேலும் கூறுகிறார்:
//பாலியல் இந்து மரபில் எக்காலத்திலும் அருவருப்பானதாக, ஆபாசமானதாக, ஏன் மறைக்கப்பட வேண்டியதாக க்கூட கருதப்பட்டதில்லை….. கோயில்களுக்குப் போய் கும்பிடுவதும், சோதிடம் பார்ப்பதும், பரிகாரங்கள் செய்வதும், சடங்குகளைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே அல்ல இந்து மதம். பக்தி நெகிழ்வு மட்டுமல்ல இந்து மதம். பிராமணச்சடங்குகள் மட்டுமல்ல இந்து மதம். அது பலலயிரமாண்டு காலமாக உருவாகிவந்த பலநூறு வழிபாட்டுமுறைகள் பலநூற்றாண்டுக்கால மகத்தான தத்துவ , மெய்ஞான விவாதம் மூலம் தொகுக்கப்பட்டு உருவானது. இதை பன்மையாக அணுகும் நோக்கு மட்டுமே இதை புரிந்துகொள்ள உதவும். இதில் புகுத்தப்படும் ஒற்றைமைய நோக்கு இதை அழிக்கும். இத்தனைநாள் இந்த மூர்க்கம் மூலம் நீங்கள் உருவாக்கிய பேரழிவுகள் போதும், இனியாவது இந்த மரபின் பன்மையை புரிந்துகொள்ள முயலுங்கள். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பன்மை மதமான இந்து மதத்தை வாழவிடுங்கள். இதையும் ஒற்றைப்படையான வழிபாட்டமைபபக ஆக்கி அழித்துவிடாதீர்கள்.//
கோயில் சிற்பங்களும் ஓவியங்களும் நம் தெய்வங்களை நிர்வாணமாகக் காட்டுவது நமக்குப் புதிதல்ல. அவை வரலாற்றுடனும் காலகட்டங்களின் பழக்க வெளிபாபாடுகளுடனும் கலை நோக்குடனும் பொருத்திப் பார்க்கத்தக்கவை. ஆனால் வியாபார நோக்குடனான அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட இந்துமதம் சார்ந்த எவ்வித நோக்குமற்ற ஹுஸைனின் இந்துக் கடவுளர் ஓவிய முறைமையை இந்துதெய்வங்களின் சிற்ப முறைமையோடு இணை வைப்பது தகாத செயல். இதைக் கண்டிப்பதன் மூலம் நாம் இன்னொரு பேரழிவைச் செய்வதாகவும் இந்து மதத்தை ஒற்றைப்படையான வழிபாட்டமைப்பாக மாற்றும் முயற்சியை செய்வதாகவும் ஜெயமோகன் நம் மீது சாட்டும் குற்றச்சாட்டு அபாண்டமானதும் அதீதமான கற்பனையுமாகும்.
//அதுவும் பாமர மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அந்த மக்களின் அளவுகோல்களைக் கொண்டு நுண்மையும் விரிவும் கொண்ட இந்து மரபை வரையறுக்கவும் மாறானதை அழிக்கவும் நினைக்கும் செயல் அப்பட்டமான ·பாஸிசம் மட்டுமே.//
நுண்மையும் விரிவும் கொண்ட இந்து மரபாக ஹுஸைனின் இந்துக் கடவுளர் ஓவிய முறைமையை எப்படி கூசாமல் கூற முடிகிறது என்று புரியவிலை. இந்துக்களின் கண்டனங்கள் விக்டோரிய யுகத்து தூய்மைவாத கிறித்தவர்கள் இங்கே கொண்டுவந்த ஒழுக்கவியலை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுவதாக ஜெயமோகன் கூறும் கருத்தும், இதை இந்து தாலிபானியம் என்று அவர் விவரிப்பதும் நாம் ஆபிரகாமிய மதக்காரர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றன. ஆனால் இந்து மதத்தில் காலங்காலமாக பல மரபுகள் தோன்றுவதையும் அவற்றில் சில வேறு சில இந்துக்களால் எதிர்க்க்கப்படுவதையும் இக்கட்டுரையிலே பதிவு செய்த அவர் இங்கு முரண்பட்டு இந்த கண்டனங்களுக்குப் புது நோக்கங்கள் கற்பிக்கிறார்.
இதை இந்து ஞான மரபின் ஒரு புத்தெழுச்சியாகப் பார்த்த ஜெயமோகன் அவரை சிறந்த கலைஞராகவும் சிலாகிக்கிறார்.
//ஹ¤செய்ன். தன் ஓவியங்களில் நவீன ஐரோப்பிய ஓவியங்களின் அழகையும் இந்தியக்கலையின் தனித்தன்மையையும் கலந்து இந்திய ஓவியங்களுக்கு சர்வதேச மரியாதையை உருவாக்கியவர். ஐயமின்றி இந்தியக் கலைமேதைகளில் ஒருவர்//,
என்று அவர் சொல்வதை கலை நோக்கில் சரியென்றே ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கண்டிக்கப்படும் அவரது ஓவியங்களால் அவரை ஒரு பொது நாகரிகமற்றவராகக் கருதவேண்டியிருக்கிறது. பொதுவில் வைக்க இயலாதததும், காணும் ஓர் இந்துமனம் துணுக்குற்றுப் போவதும், காலங்காலமாக வழிபட்ட தெய்வங்களை சிதைத்துச் சீரழித்தது போன்ற உணர்வு ஏற்படுத்துவதும், வணங்க இயலாததும், மற்ற மதத்தினருக்கு நம்மதத்தின் மீது மரியாதை எற்படுத்தாததுமான ஓவியங்களை கங்கணம் கட்டிக் கொண்டு வரைந்து தள்ளுவது நிச்சயம் பொது நாகரிகம் இல்லாத செயல். இந்த ஓவியங்கள் இந்துக்களைப் புண்படுத்தும் என்ற நினைவற்றவராவும் அதை சுட்டிக் காட்டிய பின்பும் உணரயிலாதவராகவும் இருக்கும் ஒரு மனிதர் நிச்சயம் நாகரிகமற்றவர்.
இந்து தெய்வங்களை ஏன் அப்படி வரைகிறார் என்றால் இந்து மதம் அதை அனுமதிக்கிறதென்றும் அவருடைய மதக் கடவுளை ஏன் வரையவில்லை யென்றால் அதற்கு அங்கு அனுமதியில்லை
என்றும் ஜெயமோகன் ஹுஸைனுக்கு பேராதரவு தருகிறார். இவர் சார்ந்திருக்கும் மதம் இந்து மதக் கடவுள்களை இப்படி வரையலாம் என்ற அனுமதியைத் தந்துவிடவில்லை என்பது சர்வ நிச்சயம். அங்கு இருக்கும் சிலவன்முறையாளர்களுக்கு இந்துமத இழிவில் ஆர்வம் இருக்கலாம். அதுவே தலிபானியர்களின் செயல்பாடு.
அதைத்தான் ஹுஸைன் பட்டவ்ர்த்தனமாகவும் விடப்பிடியாகவும் செய்துகொண்டிருக்கிறார். அதேநேரம் இந்துமதம் எந்த மதக் கடவுளரையும் நிர்வாணமாக வரைவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை.
இந்துமதம் தரும் இந்த கட்டற்ற சுதந்திரத்தை ஹுஸைன் மற்ற மதக் கடவுளர்களுக்கு பயன் படுத்தாமல் தன் மதக் கட்டுப்பாட்டுக்கு இணங்கி விடுகிறார். இதற்குத்தான் ஜெயமோகன் தன் அமோக ஆதரவைத் தந்து நியாயப்படுத்துகிறார்.
ஒரு கலைஞனுக்கு கட்டற்ற சுதந்திரத்தை இந்தியாவும் இந்து மதமும் வழங்குகின்றன. ஆனால் இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப் படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால்
சாதிப்பவராக இருக்க வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: இந்து மதம், இந்துமத அவமதிப்பு, இந்துமத மேன்மை, இஸ்லாம், உருவ வழிபாடு, எம்.எஃப்.ஹுசேன், ஓவியம், கருத்து சுதந்திரம், கலை, கலைஞர், ஜெயமோகன், தாந்திரீகம், தெய்வங்கள், மரபு
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
20 November 2009 at 6:59 am
SAIRAM. Congrats Mr. Ogai Natarajan. Very well written. It is absurd and rubbish to praise the acclaimed Artist Mr. MF Hussain’s depiction of Hindu Deities in a vulgar manner. He is no doubt an Artist of International Fame and Indias are proud about it. But, at the same time, he has defamed himself by such notorious acts and this should be condemned. As you say, India has given lots of freedom. Can Mr. Jaimohan influence Mr. MF hussain to dare to depict other Religion’s Deities and Prphets in an indecent manner and appreciate it? The sculptures and deities that are worshipped are carved with all reverence and according to norms prescribed in the Aagama Shastras and even when performing abhishekha, the deities are covered and thereafter, when the deities are dressed and beautified, a screen is placed from public view. Mr. Jaimohan please change your views and do not put a stamp of ‘Hindu Talibanism’. Let that brand be vested with the true owners. Because Hinduism is over-tolerant, anybody is talking and doing anything they like and unfortunately, authorities who are supposed to curb these acts, have different ideas for their own reasons.