கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்
ஆசிரியர் குழு
13 Nov 2009 |
அச்சிட
நவம்பர் 10, புதுதில்லி: இன்னும் மூன்றே மாதங்களில், மேல்விஷாரம் ஊராட்சியிலிருந்து பிரித்து, கீஷ்விஷாரம் கிராம மக்கள் கேட்டுக் கொண்டபடி கீழ்விஷாரம் தனி ஊராட்சியாக செயல்பட ஆவன செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இங்கே.
இப்படி ஒரு தீர்வுக்காகப் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏன் கீழ்விஷாரம் மக்களுக்கு வந்தது என்பதைப் பார்க்கலாம்.
.
… அந்த நகரில் உள்ள நீண்ட கடைவீதியில் கடைகளின் பெயர்ப் பலகைகள் உருது மொழியில் மின்னுகிறது. தெருக்களின் பெயர்களும் அரசு அலுவலகங்கள், வங்கிகளின் பெயர்களும் உருது மொழியிலே எழுதப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஒரே நூலகத்தில் குல்லா அணிந்த இஸ்லாமிய இளைஞர்கள் உருது பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் உருது மொழியிலேயே பேசுகிறார்கள். அங்கு உள்ள பள்ளிக்கூடங்களில் உருதுதான் முக்கிய பாடம்… இந்த சிறு நகரில் இத்தனை மசூதிகளா? என்று நாம் ஆச்சரியப்பட்டு கேட்டால், உலகத்திலேயே ஐந்தாவது பெரிய மசூதி இங்குதான் இருக்கிறது என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்!
… அந்த அதிர்ச்சி நகரத்தின் பெயர் மேல்விஷாரம். வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் ஆற்காட்டிற்கு அருகே இருக்கிறது இந்த நகரம்… இந்த மேல்விஷாரம் நகராட்சியில் 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விஷாரம் என்ற ஊரும், 10,000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரம் (கீழ்விஷாரம்) என்ற ஊரும் இருக்கிறது.
… மேல்விஷாரம் நகராட்சியில் கட்டடத் திறப்புவிழா போன்ற முக்கிய விழாக்களில் முஸ்லிம் ஜமாத் தலைவர்கள்தான் கலந்து கொள்வார்கள். அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை. .. அங்கு மெக்காவிலிருந்து ஒரு இமாம் அடிக்கடி வந்து போகிறார். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பல தோல் தொழிற்சாலை அதிபர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். ..
- தமிழகத்தில் ஒரு பாகிஸ்தான்! (ஜனவரி 17, 2007) ரிப்போர்டிலிருந்து,
1996ல் கீழ்விஷாரத்தின் தண்ணீர்வளத்தை அபகரிக்க முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேல்விஷார பஞ்சாயத்துடன் கீழ்விஷாரத்தையும் இனைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். அதன் பின்விளைவுகள் தான் இவை.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்துவாழும் தமிழகத்தின் ஒரு பஞ்சாயத்து முழுவதும் பஞ்சாயத்து தலைவர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய ஜமாத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?? ஊராட்சி ஒன்றியத்தின் நிலத்தின் மதிப்பை தீர்மானிப்பது மார்க்கெட் நிலவரம் அல்ல, ஜமாத். போலிஸ் ஸ்டேஷன் கூடாதென ஜமாத் சொல்லிவிட்டதால் காவல்நிலையம் கிடையாது - இஸ்லாமிய ஜமாத் எனும் கட்டைப்பஞ்சாயத்துதான் தீர்ப்பு. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என ஜமாத் பிறப்பிக்கும் கட்டளைப்படிதான் வாக்களிக்கப்படவேண்டும். இல்லையெனில் ஜமாத்தின் தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும். எல்லாமே ஜமாத் என்ற அளவில் தான் நடைமுறையில் மேல்விஷாரம் நகராட்சி நடந்து வந்தது.
மேல் விஷாரம் சொர்க்கம் என்றால், இராசாத்துபுரம் நரகம் (பார்க்க: சொர்க்கமும், நரகமும், ஜனவரி 2007 நேரடி ரிப்போர்ட்) இராசாத்துபுரத்தில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாக்கடை பாயும் தெருக்களையும், புழுதி பறக்கும் வீதிகளையும் தான் அங்கு பார்க்க முடியும். தோல் தொழிற்சாலை கழிவுநீர் இராசாத்துபுரத்து வழியாகச் சென்றுதான் பாலாற்றில் கலக்கிறது. இராசாத்துபுரத்தின் நிலத்தடி நீர் முழுதும் விஷமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராசாத்துபுரத்தின் விவசாயமான வெற்றிலை விவசாயம் அடியோடு ஒழிக்கப்பட்டு இன்று பீடி சுற்றும் நிலைமைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
“மேல்விஷாரத்தில் முன்பு நூற்றுக்கும் அதிகமான இந்துக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை பத்தாகக் குறைந்துவிட்டது. அதுபோல இராசாத்துபுரத்திலும் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து முஸ்லிம்மயமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களைத் திட்டமிட்டு குடியமர்த்தி வருகிறார்கள். திடீர், திடீரென மசூதி கட்டுகிறார்கள். எங்களை விரட்டுவதற்காக பல கொடுமைகளை எங்களுக்கு இழைத்து வருகிறார்கள்” என்று 70 வயதைக் கடந்த பல பெரியவர்கள் நம்மிடம் துக்கத்தோடு கூறினார்கள். …
… வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் பணிபுரியும் பிரபல பத்திரிகைகளின் நிருபர்களிடம் மேல்விஷாரத்திற்கு சென்று வந்தோம் என்றால், ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். அங்கே எப்படி சென்றீர்கள்? நாங்கள் சில விஷயங்களை அவர்களிடம் சொன்னபோது அப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அதிர்ச்சியுடன் கேட்டார்கள். மேல்விஷாரம் பற்றியும், இராசாத்துபுரம் பற்றியும் செய்திகள் வெளிவந்தால் அந்த பத்திரிகைகளை புறக்கணிக்குமாறு ஜமாத் கட்டுப்பாடு விதித்துள்ளதாம்.
… இராசாத்துபுரம் தனி ஊராட்சி ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்துக் கொள்வோம். எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நாங்களே செய்துகொள்வோம். யாரிடமும் கையேந்த வேண்டி இருக்காது. இந்த முறை இராசாத்துபுரத்தை தனிஊராட்சியாக அறிவிக்க வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்று ஊரின் முகப்பில் இந்துக்கள் பேனர் வைத்துள்ளனர்.
- சொந்த மண்ணில் கொத்தடிமைகளாய் ஹிந்துக்கள்! (ஜனவரி 2007 ரிப்போர்ட்)
தனி ஊராட்சி வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கைவைத்தும், இதே கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் தொடர்ச்சியாக ஊர்மக்கள் ஊராட்சித் தேர்தல்களைப் புறக்கணித்து, தனி ஊராட்சி வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
… இங்கு பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகவும் காணும் பொங்கல் கொண்டாடும் இடமாகவும் இருந்த இந்த முந்திரித் தோப்பின் மீது முஸ்லிம்களின் பார்வை விழுந்தது. இந்த முந்திரித் தோப்பில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்ட மிட்டனர். இதற்காக மேல்விஷாரம் நகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நகராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்மானம் எளிதாக நிறைவேறியது. ஆனாலும் இராசாத்துபுரம் இந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்களால் அமைக்க முடியவில்லை.
இதனால் திட்டமிட்டு படிப்படியாக அங்கிருந்த 7,000 முந்திரி மரங்களையும் வெட்டி, அந்த முந்திரித் தோப்பை இன்று வெறும் மைதானமாக மாற்றிவிட்டார்கள். இப்படி கொள்ளை போன முந்திரி மரங்களின் மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்று உள்ளூர் மக்கள் மதிப்பிடுகிறார்கள்.- வழிபாட்டு நிலத்தைக் காப்பாற்ற போராடும் ஹிந்துக்கள்! ரிப்போர்ட்
அரிஜன சுடுகாட்டை முஸ்லிம் குடியிருப்பாய் சட்டத்திற்குப் புறம்பாய் மாற்றியது, இந்துக்களின் நிலங்களை ஜமாத்/ந்கராட்சி அச்சுறுத்தல்கள் மூலம் அபகரிப்பது, மதமாற்றத்திற்கு வலைவீசுவது என்று மேல்விஷாரத்தில் நடக்கும் கொடுமைகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் டாக்டர்.சுப்பிரமணியன்சாமி இந்த பிரச்சினையை கையில் எடுத்து கீழ்விஷாரத்தை தனி பஞ்சாயத்தாக பிரிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்துக்களுக்கு எதிரான சிறுபான்மையினரின் அநியாயங்களை மூடிமறைக்கும் அல்லது துணைபோகும் அரசு நடக்கும் மாநிலத்தில், இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் படி முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஃபிர்கள் மூன்றாந்தர குடிமக்களாக அடக்கி, ஒடுக்கி, கொத்தடிமைகளாக, “திம்மிகளாக” நடத்தப் பட வேண்டியவர்கள்; மேல்விஷாரத்தின் ஒட்டுமொத்த முஸ்லிம் ஆதிக்கவாதிகளும் இதைத் தான் செய்யத் துடித்தனர். ஆனால் திம்மிகளாக வாழ மறுத்து சட்டரீதியாகவும், ஜனநாயக முறையிலும் உறுதியாகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றனர் கீழ்விஷாரம் இந்துக்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!
இந்தப் பிரசினையை வெளிச்சம் போட்டுக் காட்டிய மேற்குறிப்பிட்ட ரிப்போர்ட்கள் விஜயபாரதம் இதழில் வெளிவந்தவை - வழக்கின் போது இவை முக்கிய ஆதாரமாகக் காட்டப் பட்டன. விஜயபாரதம் இதழுக்கும் , டாக்டர் சுவாமிக்கும் நமது பாராட்டுக்கள்.
சத்யமேவ ஜயதே. வாய்மையே வெல்லும்.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: அரசாட்சி, அரசியல் கட்சிகள், இந்து உரிமைகள், இஸ்லாம், கிராமம், செய்தி, தமிழகத்தில் ஜிகாத், தமிழகம், நீதிமன்றம், போராடும் இந்துத்துவம், மனிதஉரிமை, வறுமை


தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
13 November 2009 at 5:03 am
மேல்விஷாரம் மக்களும் மீண்டும் இந்துக்களாக ஆவதற்கு இது ஒரு பிள்ளையார் சுழியாக இருக்கட்டும்.