Comments on: வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

By: வெற்றிச்செல்வன்
அருமையான புத்தக விமர்சனம்.. தனக்கு முந்தைய காலத்தின் ஆசிரியரின் இந்தியப் பார்வையை நமது பர்வையிலிருந்து பார்க்கிறார் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். நமது மதப் பார்வைகளும், அதை வெளிநாட்டான் பார்க்கும் விதத்தையும் நமக்கு சொல்கிறார். அவனது பார்வையின் கோளாருக்கு கோபப்படாமல் அவரது பார்வை அவருக்கு என சொல்லிச் செல்கிறார். நம்மை நாம் திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது இந்தப் புத்தகமும், அதை எப்படிப் பர்க்கவேண்டும் என சொல்லித்தருவதுபோலிருக்கிறது இந்த புத்தக விமர்சனம்.

நன்றி

By: maitreyan
ஒரு கட்டுரையில் இருந்து பகுதியை இங்கு பதிக்கிறேன்.

This is indeed a major disease. Let me describe it just a little bit more. The individual would be in contact with a case. He would get it from droplets expressed from the person he is talking with. Then he would inhale it and feel perfectly well for anywhere from a week to two weeks, seven to 14 days. Then he would come down with a high fever and be so sick and have head pain, chest pain, feeling absolutely miserable. At that point, after two or three days of this, a rash would begin. Until he developed the rash, he wouldn’t be able to communicate it to anybody—until the rash began. Then the rash would gradually emerge. It was a very ugly-looking rash, very painful. It’s like little pustules in the skin. They grew smaller and then they grew much larger.

(From Smallpox–the Death of a Disease: The Inside Story of Eradicating a Worldwide Killer

by D.A. Henderson, Devin T. Stewart/ A carnegie council Report)

இது அம்மை வியாதியை உலகெங்கும் பல நாடுகள் சேர்ந்து ஒத்துழைத்து, ஒழித்துக் கட்டியதைப் பற்றிய கட்டுரையில் ஒரு சிறு பகுதி.   இந்தியா 19ஆம் நூற்றாண்டில் இன்னும் நிறைய காடுகளும், விவசாயமே பிரதானமாகவும் இருந்த நாடு.  தொற்று நோய்கள் ஏகம். ஆண்களின் சராசரி மரிப்பு வயது நடு முப்பதுகள்.  பெண்களுக்கு இன்னும் குறைவு.

சிறிது அக்காலத்துக்கு நம் கற்பனையை இட்டுப் போனால், குடும்ப உறுப்பினர்கள் சமூகத்துடன் உறவாடி விட்டு வீட்டுக்கு வந்தால் என்னென்ன தொற்று நோய்களைக் கொண்டு வரக் கூடும், அவை என்னென்ன வடிவுகளில் வீட்டுக்குள் பரவும் என்பன பற்றிக் கறாரான அறிவியல் ஞானமோ, மருத்துவ அறிவோ பரவலாக இல்லாத ஒரு காலச் சூழலைப் பற்றி நம் கற்பனை நமக்கு நிறைய சொல்லும்.  அதற்கு முன் ஒரு 4 நூறாண்டுகள் இந்து சமுதாயம் பல விதமான படையெடுப்புகளில் ஏராளமான மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது.  ஒன்று அதில் திட்டமிட்ட தொழில் அறிவின் அழிப்பு.  புத்தக அழிப்பு, கல்வி முறை அழிப்பு.  நில உறவுகள், சமூக உறவுகளில் ஏற்பட்ட நெடிய சீர்குலைவு.

மக்களிடம் எஞ்சியது பாரம்பரிய அறிவு என்பதை விட பாரம்பரியம் பற்றிய ஹேஷ்யங்களும், அரை நினைவுகளும், குறைப் புரிதல்களும் என்று நான் கருதுவேன்.  நொறுக்கப் பட்ட ஒரு நாகரிகம், சிதைத்து ஒடுக்கப் பட்ட ஒரு மக்கள் என்ன விதத்தில் ஒருங்கிணைந்த அல்லது மிக ஆழமான தர்க்கம் கொண்ட நியதிகளோடு வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?  வில்கின்ஸ் போன்றார் நோயின் வேர்கள்.  அவர்கள் தாம் இந்தியாவில் கொணர்ந்த பேரழிவுககு ஒரு பொறுப்பும் எடுக்காமல் இந்திய நிலைகள் சாஸ்வதமானவை என்பது போலக் கருதி எழுதியதை நாம் தக்க விமர்சனம் இன்றி ஏற்பது நம் எதிர்காலத்துக்கு உலை வைப்பதாகும்.

இந்திய கர்ப்பிணிப் பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம், anti-biotics, தடுப்பூசிகள், பெரும் திரளுக்கு அவை கொடுக்கப் படுவது போன்ற 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த நோயெதிர்ப்பு முயற்சிகள் நடுவே இருந்து பார்த்தால் கொடுமையாகத் தெரியலாம்.

ஆனால் இன்று கூட H1N1 காய்ச்சலுக்கு ஒரு எளிய தடுப்பு முறையாகக் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டு நபர்கள் வெளியிலிருந்து வந்தால் அவர்களை அணுகாமல், அவர்களுடைய மூச்சு அல்லது மூக்கு/ வாய் திரவங்களோடு நெருக்கம் இன்றி இருப்பது நல்லது என்று மேலை நாடுகளில் அறிவுறுத்தப் பட்டது.  ஒரு காரணம் தடுப்பூசித் தட்டுப்பாடு.

அந்த விலக்கல் கொடுமை அல்ல, முன் ஜாக்கிரதை, நோய்க் குறைப்பு முயற்சி.

அமெரிக்கக் கண்டத்துக்கு அம்மை நோயைப் பரப்பி பல மிலியன் அமெரிக்கப் பூர்வ குடியினரின் மரணத்துக்குக் காரணமான யூரோப்பியர் வில்கின்ஸுக்குத் தம் இனத்தவரின் பேராசைகள் எத்தனை கோடி மக்களைக் கொன்றன என்பது நினைவு வராததில் அதிசயம் என்ன இருக்க முடியும்?

மைத்ரேயன்

By: அஞ்ஜனாசுதன்.
நாவிதர்கள் மருத்துவர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதை விட மருத்துவர்களே நாவிதர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அந்தச் சமூகத்திற்கு மதிப்பு கூடுமோ? பிரசவ வலி வந்துவிட்டால் “மருத்துவச்சியைக் கூப்பிடு” (நாவிதரின் மனைவி?) என்று தானே சொல்வதுண்டு! நாளடைவில் சம்பிரதாய அளவிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு, அல்லது சுத்தமாகவே மறந்து விட்டார்களோ? ஆங்கில மருத்துவத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கமும், சித்தம், ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகள் ஒரு பக்கமுமாக, மருத்துவத்தை அவர்களிடமிருந்து பிரித்து விட்டதோ?

எது எப்படியோ, இவர்கள் தங்களை “மங்கல சமூகத்தினர்” என்று கருதிக்கொண்டு நலச்சங்கம் அமைத்து அச்சங்கத்தின் மூலம் தங்கள் மக்களுக்குத் தொண்டு ஆற்றுகிறார்கள் என்கிற உண்மை மனதுக்கு இதமளிப்பதாக இருக்கிறது. “தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம்” நாளை மறுநாள் (17-11-09) தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலை முருகன் கல்யாண மண்டபத்தில், காஞ்சிப் பெரியவர் முன்னிலையில் அவரின் ஆசிகளுடன் “முப்பெரும் விழா” நடத்துகின்றனர். நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் அவர்களின் “மங்கல சமூகத்தினர் மாண்புமிகு வரலாறு” என்கிற புத்தகமும் வெளியிடப்பட்டு, சிறப்பு மிக்கவர்களுக்கு விருதுகள், மற்றும் நலிந்தோர்க்கு உதவிகள் வழங்கி விழா கொண்டாடப்படுகிறது.

நிற்க, குழந்தைகளைத் “தானம்” செய்வதைத் தான் “பலி” என்று ஜே.வில்கின்ஸ் குறிப்பிட்டுள்ளாரோ? அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுள்ள விஷயங்களைப் பொதுமைப்படுத்தி விட்டாரோ?

எனக்கென்னவோ வில்கின்ஸ் அவர்களின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஸன் டிவி “காசி” பற்றி காண்பித்த “நிஜம்” நிகழ்ச்சி போல் இருக்கும் என்று தோன்றுகிறது.

அருமையான கட்டுரை தந்தமைக்கு நன்றி ஐயா!

அன்புடன்

அஞ்ஜனாசுதன்.

By: கிரி
குழந்தைகள் ஆயிரக்கணக்கில் ‘பலி’ இடப்பட்டார்கள் என வில்கின்ஸ் எழுதியதைப் படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்பு ஹாரி மில்லேர் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மேலை நாட்டவர் பம்பாய் வந்துவிட்டுச் சென்றவர் அங்கே தினமும் காலையில் தெருக்களில் சடலங்கள் விழுந்து கிடப்பதாகவும் அவற்றை கார்ப்பரேஷன் அப்புரப்படுத்துவதாகவும் எழுதினாராம்.இது தவிர பல இடங்களில் ரத்தக் கரைகளைக் கண்டதாகவும் கூறினாராம். உண்மையில் அவர் கண்டது காலையில் தெரு  ஓரங்களில் முகத்தையும் சேர்த்து மூடிக்கொண்டு தூங்கும் மக்களையும் வெற்றிலை போட்டு துப்பிய கரைகளையும்தான் . மேல் நாட்டவர்கள் தூங்கும்போது முகத்தை மூடிக் கொள்வதில்லை.இறந்தவர்களின் முகத்தைத் தான் மூடுவார்கள். தன்னுடைய ‘அனுபவத்தை’ வைத்து அவர் முடிவு கட்டியது அப்படி! இந்த குழந்தைகளை ‘பலி’ இட்ட விஷயமும் அப்படி ஏதாவது இருக்கலாம்.இல்லையென்றால் இதைப் பற்றி மற்ற எவரும் எழுத வில்லையே. .தவிர, அப்படி நடந்திருந்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கொரு சட்டம் கொண்டு வந்திருப்பார்களே.