நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்

taj-hotel-on-fireநவம்பர் 26, 2008 இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான நாள்.

பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மும்பை மாநகரத்தை நிலைகுலைய வைக்க முடிந்த நாள்.

நாட்டின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என பொதுமக்கள் தெரிந்துகொண்ட நாள்.

அவசரகாலத்தில் மாநிலப் போலிஸாரின் திறமை / சக்தி எவ்வளவு என மும்பை மக்கள் தெரிந்துகொண்ட நாள்.

அரசு எந்திரம் எவ்வளவு மெத்தனமானது என பொதுமக்கள் விளங்கிக் கொண்ட நாள்.

நமது உயிர் எவ்வளவு மலிவானது மற்றும் எவ்வளவு பாதுகாப்பாய் நாமிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்ட மற்றொரு நாள்.

நாம் எவ்வளவு மோசமாய் தீவிரவாதிகளின் இலக்காய் இருக்கிறோம் என பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நமக்கு உணர்த்திய நாள்.

இயந்திரத் துப்பாகி வைத்திருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை வழக்கம்போல ஹைதரலிகாலத்து துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கும் மும்பை போலிஸாரை வைத்து பயங்கரவாதிகளை அடக்க அனுப்பப்பட்டு அதன்மூலம் அதிகபட்ச உயிர்ச்சேதம் நிகழ்ந்து, விளைவு மோசமானதும் கமாண்டோ படையினர் இறக்கப்பட்டு ஒரே ஒரு தீவிரவாதியை மட்டும் பிடித்து கிட்டத்தட்ட 172 பேரை பலி கொடுத்து மும்பையை மீட்டது கமாண்டோ படை.

ஓராண்டு கழிந்த பின்பு சற்று திரும்பிப் பார்த்தால் தீவிரவாதத்தை அடக்க இந்திய அரசு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்த்தால் நம்மைக் கடவுளைத்தவிர வேறுயாரும் காப்பாற்ற முடியாது, மாட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.

CORRECTION Pakistan Militant Patronsஉயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்பை பாதுக்காத்த வகையில் செலவு என 30 கோடிக்கும் மேலாக  என்று கணக்கு சொல்லப் படுகிறது.  அவன்தான் கொலையாளி எனத் தெரிந்த பின்னும் ஏன் தூக்கில் தொங்கவிடாமல் இழுத்தடிக்கப் படுகிறது என்று  ஜனநாயக, நீதிமன்ற, ராஜதந்திர நடைமுறைகள் மீது சாமானியனுக்கு வெறுப்பும், எரிச்சலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தைத் தாக்கிய அஃப்சல்குருவையே இன்னும் தூக்கில் தொங்க விடாத அரசு நம் அரசு. அவனுக்குக் கருணை மனு, அதற்குச் சப்பைகட்டு கட்ட மனித உரிமைகள் கோஷ்டிகளும், போலி மதச்சார்பற்ற கூட்டங்களும்..

தற்போது அஃப்சல் குரு தியாகியாகவும், மாவீரனாகவும் தெரிவான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், இந்திய விரோத சக்திகளுக்கும்.

afsalguruமும்பைத் தாக்குதலில் நேரடித்தொடர்புகொண்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாகத் திரிய இந்தியா விரல்சூப்பிக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். அமெரிக்காவிடம்  முறையீடு செய்வதும், அமெரிக்காவிடம் இவன் என்னை நுள்ளுறான் சார் என சொல்லிக்கொண்டிருப்பதுமாகக் கழிந்து கொண்டிருக்கும்  நாட்கள்.  பாகிஸ்தான் நாளொரு பொய்யும், நேரத்திற்கொரு அறிக்கையும் விட்டு உலகத்தையும், இந்தியாவையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா ஏமாந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என யாருக்குத் தெரியாது?? இந்தியா இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறதோ??

மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை வார்த்தைகளால் எச்சரிக்காமல் ஒருமுறையாவது சாத்தினால் தான் கொட்டம் அடங்கும் என்று உரத்துச் சொல்லும் குரல்கள் பலவற்றை நமது செய்தி ஊடகங்களில் இப்போது நிறையவே கேட்க முடிகிறது.

இந்தியா ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில்தானே பங்களாதேஷ் ராணுவம் இந்திய எல்லைக் காவல்படையினரை நாய், நரிகளைத் தூக்கிச் செல்வதுப்போல தூக்கிக் கொண்டுவந்து போட்டது? அதைப்பார்த்த ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது.. ஆனால் பங்களாதேசுக்கு எச்சரிக்கை விட்டதுடன் நம்மை ஆள்பவர்கள் நிறுத்திக்கொண்டனர். இறந்தது அவர்களது மகவுகள் அல்லவே !

இந்திய மீனவர்கள் ஒவ்வொருநாளும் இலங்கை கடற்படையினரிடம் செத்துக் கொண்டிருப்பது எதனால்?? இந்திய அரசு ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தினால்தானே இத்துனூண்டு இலங்கைக்கூட திமிர் வருகிறது?

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இஸ்ரேலியர்களிடம் பாடம் கற்கவேண்டும் இந்தியா. பாலஸ்தீனியர்கள் கல்லெறிந்தால் இஸ்ரேலியர்கள் குண்டுமழை பொழிவார்கள். அப்படிப்பட்ட அநியாயமான பதிலடி கொடுக்காவிட்டாலும், வாங்கிய அடிக்குக் கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்பது என்ன வகையான ராஜ தந்திரமோ என்று மக்கள் சலிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தினம் மன்மோகன்சிங், ஒபாமா கொடுத்த சிவப்புக்கம்பள வரவேற்பில் மயங்கி,  இந்தியாவில் அமுல்படுத்த வேண்டி ஒபாமா இடும் உத்தரவுகளை வாங்கிக்கொண்டிருக்கிறாரோ  என்ற ஐயம் ஏற்படுகிறது.

நாளை மன்மோகன் சிங் பாகிஸ்தான் காந்திய கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு அஹிம்சைவாதிகளின் நாடு என அறிக்கை விட்டாலும் விடலாம்.  இந்தியர்களாகிய நாம்தான் எந்தவிதமான அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறோமே!

பிரதீபா பாட்டில் என்ற நமது நாட்டின் முதல் குடிமகளுக்கு போன ஆண்டு அவரது சக-பிரஜைகள் 172 பேர் இறந்த தினம் என்ற ஞாபகமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சம்பிரதாய அஞ்சலி கூட செலுத்துவதற்கு  அவருக்கு நேரமும், மனமும் இல்லை போலிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்படும் நம்மை ஆளுவோர்களுக்கு புதிது புதிதாய் ஊழல் செய்வதுபற்றியே சிந்தனை. இறந்த பொதுமக்களுக்கோ, அதிகாரிகளுக்கோ இரங்கல் தெரிவிக்கக்கூட யாருமில்லாத அளவு பொதுமக்களும், நாட்டுக்காக போராடிய கமாண்டோக்களும், போலிசாரும் அனாதைகளாக்கப்பட்ட அவலம்.

india-shooting-2008-11-27-7-33-50எத்தனை தூரம் தான் மக்கள் கஷ்டங்களையும், பாதுகாப்பின்மையையும் மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும், மீண்டும் திரும்புவார்கள்?

ஒருநாள் மக்கள் மொத்தமாய் பொங்கி எழுந்தால்.. ? தனது பாதுகாப்பை தானே உறுதிசெய்துகொள்வதற்காக சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தால்.. ?

இதையெல்லாம் தனது மக்கள் மீது அக்கறைகொண்ட நலம்சார் அரசாய் இருந்திருந்தால் கவனத்தில் கொண்டு இந்த கொடுங்குற்றத்தை இழைத்தவர்களையும், அதற்கு உடந்தையாய் இருந்தவர்களையும் தண்டித்திருக்கும். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம்  தனது நலனையும், தனது குடும்ப வாரிசுகளின் நலனையும் மட்டுமே கருத்தில் கொள்ளும் அரசியல்வாதிகள்.

வாக்கு வங்கிகளுக்காக நாட்டின் பாதுகாப்பையே அடகுவைக்கத் துணியும் அரசியல்வாதிகள்.

யார் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன, தான் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டுப் பொறுக்க எந்த தேசத்துரோகத்தையும் சாமர்த்தியமாக மறைக்கும், அல்லது அதை தேசத்துரோகமே இல்லை என சாதிக்கும் அவலம் செய்யும் அரசியல்வாதிகள்.

நாட்டுக்காக உயிரைவிட்ட அதிகாரிகளின் மனைவிமார்கள் தங்களது கனவர்களுக்கு கிடைத்த பதக்கங்களை அரசாங்கத்திடமே திருப்பி அளித்த பின்னும்கூட ரோஷம் வராத முரட்டுத்தோல் கொண்ட அரசியல்வாதிகள்.

பாதுகாப்புப்டையினரின் பாதுகாப்புக் கவசங்களில்கூட ஊழல்புரிந்து சில அதிகாரிகளை இழக்கும் அளவு ஊழல் புரையோடிப்போன அரசியல்வாதிகள்

இத்தனைமுறை நமது நாட்டுக்கெதிராக வன்முறையைத் தூண்டிவிடும் பாகிஸ்தானை ஒருமுறையாவது பதிலடி கொடுக்காமல், மீண்டும், மீண்டும் தனது மக்களையே பலிகொடுத்துக்கொண்டிருக்க தொடர்ந்து வரும் அரசாங்கங்கள்.

”வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த
பாரத மாதாவின் பதமலர்க்கே.. “

என்று பாரதி பாடிய வீரத்தாய் இவ்வளவு மோசடியும் பேடித்தனமும் கொண்ட குழந்தைகளையா பெற்றெடுத்தாள்?

20 Replies to “நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்”

  1. எளிமையான பதிவு தான். ஆனால், இந்தக் கறுப்பு தினத்தில் ஒரு சராசரி தேசபக்த இந்திய மனதில் தோன்றும் உணர்ச்சிகளைக் கொட்டுகிறது.

    அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த நாம் தயங்கவோ, வெட்கப் படவோ தேவையில்லை என்று நினைக்கிறேன். இதை உணர்த்தியதற்கு நன்றி வெற்றிச் செல்வன்.

    டைம்ஸ் நியூ டிவி ஒரு பொருள் பொதிந்த வாசகத்தை இந்தத் தருணத்தில் தினமும் போட்டு வருகிறது –

    மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை.
    Didn’t forget. Didn’t forgive.

    இந்தத் தீ கனன்று கொண்டிருக்கட்டும். நம் தேசவிரோதிகளைக் கருவறுக்க நமக்கு உத்வேகம் அளித்துக் கொண்டே இருக்கட்டும்.

  2. எமோஷனலாக இருக்கிறது என்று படிக்க ஆரம்பிக்கும்போது நினைத்தேன். ஆனால், கடைசி வரி என்னை எமோஷனலாக்கிவிட்டது.

    மறதி என்னும் சாராயத்தைக் கொடுத்து நமது உடம்பை ஆபிரகாமியம் அறுத்துக்கொண்டிருக்கிறது. வலியில் இருந்து தப்பிக்க நாமும் சாராயத்தையே எளிய தீர்வாக கண்டடைகிறோம்.

    காப்பதற்குக் கண்ணன் வரவேண்டும் என பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

    கண்ணன் வரும்வரை கட்டுரைகள் எழுதுவோம். அதுதான் நமது பிரார்த்தனை.

  3. //இத்தனைமுறை நமது நாட்டுக்கெதிராக வன்முறையைத் தூண்டிவிடும் பாகிஸ்தானை ஒருமுறையாவது பதிலடி கொடுக்காமல், மீண்டும், மீண்டும் தனது மக்களையே பலிகொடுத்துக்கொண்டிருக்க தொடர்ந்து வரும் அரசாங்கங்கள்.//

    இது இந்தியனின் மனப்பதிவு அல்ல. ஆனால் இந்தியனின் மனப்பதிவு இதுவாக இருக்கவேண்டும் என்று விரும்பும் ஒரு சிலரின் மனப்பதிவு மட்டுமே. ஒரு நாட்டைத் தாக்குவது மிக எளிதாக திண்ணைப் பேச்சில்தான் நடக்கமுடியும். இந்தக் கட்டுரையும் திண்ணைப் பேச்சையே முன்வைக்கிறது. நாம் பேடிகளாக இருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் ஒருவித மனத் திருப்தியை இந்திய ஆதரவாளர்களுக்குத் தரமுயலும் மேடைப் பேச்சை ஒத்திருக்கிறது இப்பதிவு. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது என்று பேசுவதே மேம்போக்கானது. மாறாக இந்தியப் பாதுகாப்பில் அரசு சார்ந்த ஆழமான கவனத்தை ஏற்படுத்துவதே உடனடி நிதர்சன மருந்து. இந்தக் கட்டுரையோ வானத்தை வளைக்க முயல்கிறது. இது சராசரி இந்தியனின் சிந்தனை அல்ல. ஓர் இந்தியனின் சராசரி சிந்தனை மட்டுமே.

  4. அருமை! ஜடாயு அவர்களின் கருத்து மிகச்சரியானது! இந்த தீ கனன்று கொண்டிருக்கும்!

  5. நமது படையோ போர் விமானங்களோ தம் எல்லையைக் கடந்தால் அணு ஆயுதத்தை உபயோகப்படுத்தலாம் என்பது பாகிஸ்தானின் கொள்கையாக இருக்கும் போது அவ்வளவு எளிதாக ‘சாத்த’ முடியாது என்பது உண்மைதான். குறைந்தபட்சம் அங்கு தங்கியுள்ள தீவிரவாதிகளை உயிரோடோ பிடித்தாலோ அல்லது கொன்றாலோ 50 இலட்சம் பரிசு என்று அறிவித்தால் யார் குறை கூற முடியும். பாகிஸ்தான் கூட சில மாதங்களுக்கு முன் தன் வடமேற்கு பகுதியில் நடவடிக்கை எடுத்தபோது சில தீவிரவாதிகளின் தலைக்கு விலை அறிவித்ததே! தலைக்கு 50 இலட்சம் என்று அறிவித்து ஏதாவது உருப்படியாக நடந்தால் கசாபை காப்பாற்ற செலவான 30 கோடியில் 60 தீவிரவாதத் தலைவர்களைக் கொல்ல முடியாதா?! போர் என்று வெளிப்படையாக அறிவிக்காமல் பாகிஸ்தான் செய்வதைக் கூடக் காப்பி அடிக்க முடியாதா?!
    அதே நேரம் சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட ஓட்டு போட வராத மும்பைவாசிகளை என்னவென்று சொல்வது! நாம் நம் ஆயுதத்தை(ஓட்டை) உபயோகிக்காமல் கரன்சிக்கும், கட்டிங்கிற்க்கும், சாதிக்கும், மதத்திற்கும், TV, இத்தியாதிகளுக்கும் விலை போன ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது திண்ணைப் பேச்சை விடக்கூட உபயோகமற்றது??!!
    //நாம் பேடிகளாக இருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் ஒருவித மனத் திருப்தியை இந்திய ஆதரவாளர்களுக்குத் தரமுயலும் மேடைப் பேச்சை ஒத்திருக்கிறது இப்பதிவு// Maybe we are a masochistic society? இப்படி ஒரு மறுமொழி கொடுப்பதும் கூட masochismதானோ?

  6. வன்முறை தீவிர வாதத்தி்ற்கு முக்கிய மூல காரணம், இஸ்லாமிய புனித நூல்களால் பேதிக்கப்படும் ஜிஹாத், தக்கியா போன்ற அபத்தங்கள்.

    இஸ்லாமைப்பற்றி விளம்பரப்படுத்தும் ஜிகினாஇஸ்லாமைப்பற்றித் தான் (முக்கியமாக) நம் தமிழ் மக்களுக்குத் தெரியும்.
    அதைக் களைய இஸ்லாமின் சுய ஸ்வரூபத்தை விளக்கும் கட்டுரைகள் இன்று மிக மிகத் தேவை. இன்று நம் இந்தியாவின் முதல் எதிரி, தீவிர வன்முறை வாதம் என மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும்.

    தீவிர வன்முறை வாதத்தை உண்டாக்குவது இஸ்லாம் என்ற மரபு இயக்கம். ஜிஹாத், தக்கியாவைப் பற்றி ஆங்கில உலகில் காணப்படும் விழிப்புணர்ச்சி நம் தமிழ் மக்களிடையே இல்லையே. எப்போது வரும்????

    இக்கட்டுரையின் கடைசி வார்த்தைகளின் உண்மை அர்த்தத்தை பேடிகளால் உணரமுடியாது.

  7. // மறதி என்னும் சாராயத்தைக் கொடுத்து நமது உடம்பை ஆபிரகாமியம் அறுத்துக்கொண்டிருக்கிறது. வலியில் இருந்து தப்பிக்க நாமும் சாராயத்தையே எளிய தீர்வாக கண்டடைகிறோம் //

    இந்த கட்டுரைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் “ஆபிரகாமியம்” என்று எதைச் சொல்லுகிறீர்கள்?

    அமெரிக்காவின் வர்த்தக மையம் 9/11 அன்று தரைமட்டமாக்கப்பட்டதற்கும் ஆபிரகாமியம் தான் காரணமா?

    ஈராக் குவைத்’தை ஆக்கிரமித்துவிட்டு சம்பந்தமில்லாமல் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்’வில் குண்டு போட்டதற்கும் ஆபிரகாமியம் தான் காரணமா?

    இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு இந்துக்கள் மட்டுமே பலியாகின்றனரா?

    தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்கள்..!

  8. மிக அண்மைய செய்தி:
    அமெரிக்காவில் பிடிபட்ட அந்த படுபாவி சூத்திரதாரி சில மாதங்களாகவே கேரளாவின் மூணாரில் நம்ம ஊரு நடிகைகளுடன் குலாவியிருக்கிறான்;

    அவன் தங்கியிருந்த தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் ஏதோ உள்நோக்கத்துடன் உள்ளூர் போலீஸுக்குக் கூட அவனைக் குறித்த தகவலைத் தெரிவிக்கவில்லை;

    இப்படி இது போன்ற காரியங்களில் எல்லாம் நம்ம ஆட்கள் (பணத்துக்காக..?) மதசார்பற்றவர்களாக இருக்கக்கூடாது;

    “லம்ப்” பாக ஏதோ பணம் கிடைக்கிறது என்றுதான் சைத்தான்களுக்கு வசதி பண்ணிக் கொடுக்கிறார்கள்,சில கருங்காலிகள்..!

  9. கட்டுரையாளரின் கருத்து மிகச் சரியானதே! திவீரவாதத்திற்கு, திவீரவாதம் என்ற மொழியின் மூலமே பதில் தரப்பட வேண்டும், அஹிம்சைக்கு அங்கே இடமில்லை. க்குப் பிறகு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கிஸ்தான் நமது நாட்டுக்குக் கொடுத்த அடிக்கு ஒருமுறைகூட சரியான பதிலடி கொடுக்கப் படவில்லை.இதுவே அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. தலைவர்களோ பேச்சில் காட்டும் வீரத்தை செயலில் காட்ட முயற்சிப்பது கூட இல்லை.

    தனிமனிதன் அவனது வீட்டின் பாதுகாப்புக்காகச் செய்யும் நடவடிக்கைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட நமது நாட்டின் பாதுகாப்பிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை நம்மை ஆள்பவர்கள் செய்யவில்லை. மும்பைச் சம்பவம் இதையே நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.

    வருமுன் காப்பது வீரத்தனம், வந்தபின் அலறுவது வீணத்தனம்.
    திவீரவாதத்திற்கு வெற்றி மேல் வெற்றி, ஜனநாயகத்திற்கு அடி மேல் அடி..

    ஆட்சியாளர்கள் கவனமாயிருந்தால், ஒரு சொறிநாய் கூட இந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. மக்கள் விழிப்புடன் இருந்தால், நாட்டைப் பாதுகாப்பவர்களை மட்டுமே ஆட்சியில் அமர்த்த முடியும்.

    அடிப்படையில் இதற்கு நாமே (மக்கள்) பொறுப்பு.

  10. சில கசப்பான உண்மைகள் :
    பெரும்பான மக்கள் விரும்புவது போரையோ அல்லது நடவடிக்கையையோ அல்ல. பங்குச்சந்தையில் முன்னேற்றம், கிரிக்கெட் வெற்றி, அசின் பற்றிய குருவியாரின் பதில். அவ்வளவுதான்.

    இந்த மும்பைக் கொலைகள் நடந்துகொண்டிருந்த போது நான் உடற்பயிற்சிக் கூடத்தில், சென்னையைச் சேர்ந்த நான், ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு மும்பைப் பெண்மணியும் ஓடிக்கொண்டு இருந்தார் . அங்கிருந்த டிவியில் பிபிசியில் ‘இன்னும்கூட இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று சொல்லிப்பின் ஜர்தாரியின் பெட்டியைக் ஒளிபரப்பினார்கள். அவர் ‘ஆளும் கட்சியின் தலைவியே என்னுடன் பேசும்போது பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை என்று ஒப்புக்கொண்டார். இது அவர்களின் உள்நாட்டுப் பிரச்னை’ என்றார். ‘ச்சே .. மோசம்.. இதனால் எத்தனை தாய்கள் பெற்ற மகனை இழந்திருப்பர்?’ என்றேன். மு.பெ வோ , “அதை விடுங்கள், பங்குச்சந்தை என்னவாகும்? சுட்டுக்கொண்டிருக்கும் இந்தத் தெருக்கள் எல்லாம் நான் தினமும் செல்லும் இடங்களே..அதோ அந்த இடத்தில்தான் நான் பஸ் ஏறுவேன்” என்றார். “இல்லை உயிர்களையே இழந்துவிட்டோம்.. பங்குச்சந்தையைப் போல்இல்லாமல் குறியீடு மதிப்பற்றவை உயிர்கள்.. நாம் பாகிஸ்தான் மீது படைஎயடுக்க வேண்டும்” என்றேன். அவரோ “அது முட்டாள்தனம், இலாபமற்றது… ‘நடந்து முடிந்த’ விஷயத்துக்காக பழிவாங்குவதா? அதனால் பங்குகள் விலை குறையும், பொருளாதாரம் பாதிக்கப்படும்” என்றார். “இன்னும் முடியவில்லையே? சுட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்?” என்றேன். அவர் “முடிந்துவிடும்.. இன்னும் அதிக பட்சம் ஒரு இருநூறு பேரைச் சுட்டுவிடுவார்களா? இதற்காகப் போர் எதற்கு? ஆக்கச் சிந்தனையும் பொருளாதார முன்னேற்றமும் தேவை” என்று சொல்லி ட்ரெட் மில்லில் இருந்து இறங்கினார்.

    நானும் ட்ரெட் மில்லில் இருந்து இறங்கினேன். சென்னையைச் சேர்ந்த நான் தொப்பலாக வியர்வையில் நனைந்து இருந்தேன். சற்றும் வியர்வையில்லாமல் இறங்கிச் சென்றார் மும்பைப் பெண்மணி.

  11. குற்றவாளிகள் இன்னும் தண்டனைக்கு உள்ளாக்கப் படாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம். விரைவில் நீதி கிடைக்கும் என நம்புவோம்.

  12. அருமையான கட்டுரை

    //ஒருநாள் மக்கள் மொத்தமாய் பொங்கி எழுந்தால்.. ? தனது பாதுகாப்பை தானே உறுதிசெய்துகொள்வதற்காக சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தால்.. ?//

    ஆரம்பித்தால் செக்யுலரிஸ்ட் சித்தாந்தம் அந்த மக்களுக்கே கேடு விளைவிக்கும் உதாரணம் குஜராத்.

  13. @ chillsam

    hi chillsam,

    ஆம். ஆபிரகாமியம் அடுத்தவர்களை மட்டுமல்ல தன்னையும் அழித்துக்கொள்ளும் இயல்பு உடையது.

    இந்த வைரஸிலிருந்து தப்பிக்க எந்த பாதுகாப்பும் செய்துகொள்ளாத ஹிந்துக்கள் முதலில் அழியும் சாத்தியம் அதிகம்.

  14. How about those, black cats, know typically some of them going to be killed, inspite them went cherryfully attaked these Muslim terrorists.

    There is point beliving govt.(Still from Gandhi they will all support Muslims, hoping that they will extend the same respect instead, they would not even respected just because they were/are muslims), these politicians, does not care about anything keeping storing cash in foreign assets and bank accounts :-),

    These Black cats are “Madhura Veeran Samigal” not much come about them, instead these politicans coming and ruling us, why not their sons/daughters come and rule us, people just think about them, they walked to the death bed for these teenage muslims terriost, none of the muslim organisation did any sort of condem, when there is cartoon in Denmark, the whole world, went in a rampage.

    (Edited and Published)

  15. கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு:
    அதுவல்லாது முக்கியமாக ஒன்று…இந்த கட்டுரையில்,இந்தியாவின் கையாளாகாத தனத்துக்கு,அவர்கள் இஸ்ரேலிடம் பாடம் கற்க வேண்டும் என்று,சொல்லியுல்லீர்கள்,பாலஸ்தீனர்களை பயங்கரவாதிகளாக்கிவிட்டீர்கள்…

    நல்ல வரலாற்று திரிபு…உலகம் முழுதும் அடித்து விரட்டப்பட்ட யூதர்களை வரவேற்று,இடமளித்த பாலஸ்தீனர்கள்,அவர்களது நிலத்திற்கு போராடுவது பயங்கரவாதம்,என்றும்,அப்பாவிகளின் நிலங்களை அபகரிப்பவனிடம் பாடம் கற்க்கவேண்டும் என்பது தங்களின் கருத்தாக இருக்குமானால்…

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

    (Edited and Published)

  16. சகோதரர்களே….
    இந்த கட்டுரை,சம்பவ்ம் நடந்து முடிந்து ஓராண்டுக்கு பின்னும்,சம்பந்தப்பட்ட தீவிரவாதிக்கு,தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பது,நமது நாட்டின் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளையும்,ஓட்டுக்காக மலிவான அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும்,திரும்ப ஒருமுறை படம் பிடித்து காட்டுகிறது.
    ஆனால் இந்த சம்பவம்,அன்னிய அல்லது உள்நாட்டு பயங்கரவாத சக்திகளினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு,விடுக்கப்பட்ட சவாலாகும்.இதை இந்த கண்ணோட்டத்திலே எதிர்நோக்க முடியும்….ஏனெனில்,சம்பவம் நடந்த இடங்கள்,அனைத்தும் பொது இடங்களே,அங்கு,வந்து தாக்குதல் நடத்தியவன்,ஹிந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு பார்க்கவில்லை….பயங்கரவாதி முஸ்லிம் பெயர்தாங்கியாக இருப்பதால்,அவனை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதினிதியாக நோக்குவது அறிவீனம்.அவ்னை ஏவியது முஸ்லிம்களா?..அல்லது கசாபுக்கு இந்திய முஸ்லிம் எவனாவது ஆதரவு அளித்தான?..இஸ்லாமிய சட்டம் இருந்தால்,இன்னேரம் அவன் தலை அவன் உடம்பில் இருந்து எடுக்கப்பட்டு ஓராண்டு ஆகி இருக்கும்…

    //ஆரம்பித்தால் செக்யுலரிஸ்ட் சித்தாந்தம் அந்த மக்களுக்கே கேடு விளைவிக்கும் உதாரணம் குஜராத்.//
    காசி அவர்களின் இந்த வாதத்தில் அர்த்தம் என்று ஒன்று இருப்பதாக தோன்றவில்லை…பாக்கிஸ்தான்காரன் வந்து இந்தியாவில் குண்டுவைக்கிறான் என்றால்,இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை கொன்று பேலன்ஸ் செய்வேன் என்கிறார்.ம்ம்ம் அவனது நோக்கமும் அதுதான்…முஸ்லிம்களை கொன்றுவிட்டால்,அப்ப்டியே கண்ணீர்விட்டு கதரி,பயங்கரவாதத்தை விட்டுவிடுவானா?அவனுக்கு தேவை இந்தியாவின் அமைதியை குலைத்து வளர்ச்சியை தடுப்பது….அடையாளம் காணப்படுபவன் முஸ்லிமாக இருப்பதால்,
    இது ஹிந்துக்களுக்கு எதிரான சதி என்று,இயல்பாகவே எண்ணத்தோன்றும்..அதுவல்லாது,நமது நாட்டில் உள்ள சந்தர்ப்பவாத மதவாத அரசியல் பிழைப்புவாதிகளும்,மலிவான ஒருசார்புடைய பத்திரிக்கைகளும்,அதையே பிரதானப்படுத்துகின்றன…..
    அதற்கு இந்திய முஸ்லிம்கள் எந்த விதத்தில் பொருப்பாக முடியும்?எனக்கு விளங்கவில்லை.
    ///////
    chillsam
    28 November 2009 at 6:35 am
    // மறதி என்னும் சாராயத்தைக் கொடுத்து நமது உடம்பை ஆபிரகாமியம் அறுத்துக்கொண்டிருக்கிறது. வலியில் இருந்து தப்பிக்க நாமும் சாராயத்தையே எளிய தீர்வாக கண்டடைகிறோம் //

    இந்த கட்டுரைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் “ஆபிரகாமியம்” என்று எதைச் சொல்லுகிறீர்கள்?

    அமெரிக்காவின் வர்த்தக மையம் 9/11 அன்று தரைமட்டமாக்கப்பட்டதற்கும் ஆபிரகாமியம் தான் காரணமா?

    ஈராக் குவைத்’தை ஆக்கிரமித்துவிட்டு சம்பந்தமில்லாமல் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்’வில் குண்டு போட்டதற்கும் ஆபிரகாமியம் தான் காரணமா?

    இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு இந்துக்கள் மட்டுமே பலியாகின்றனரா?

    தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்கள்..//////////

    ச்சில்சாம் அவர்களின் இந்த கேள்வி எனக்குள்ளும் எழுந்த ஒன்று….

    ///S. Rajagopalan
    28 November 2009 at 6:33 am
    வன்முறை தீவிர வாதத்தி்ற்கு முக்கிய மூல காரணம், இஸ்லாமிய புனித நூல்களால் பேதிக்கப்படும் ஜிஹாத், தக்கியா போன்ற அபத்தங்கள்.
    இஸ்லாமைப்பற்றி விளம்பரப்படுத்தும் ஜிகினாஇஸ்லாமைப்பற்றித் தான் (முக்கியமாக) நம் தமிழ் மக்களுக்குத் தெரியும்.
    அதைக் களைய இஸ்லாமின் சுய ஸ்வரூபத்தை விளக்கும் கட்டுரைகள் இன்று மிக மிகத் தேவை. இன்று நம் இந்தியாவின் முதல் எதிரி, தீவிர வன்முறை வாதம் என மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும்.
    தீவிர வன்முறை வாதத்தை உண்டாக்குவது இஸ்லாம் என்ற மரபு இயக்கம். ஜிஹாத், தக்கியாவைப் பற்றி ஆங்கில உலகில் காணப்படும் விழிப்புணர்ச்சி நம் தமிழ் மக்களிடையே இல்லையே. எப்போது வரும்???////

    ஐயா ராஜகோபால்,இஸ்லாம் பற்றி ஏதும் அறியாது,சும்மா அவன் சொல்ரான் இவன் சொல்ரான்கிற்தால,நீங்களும் கூட்டத்துல கோவிந்தா போடாதீங்க…
    உலகம் பூரா சொல்ரங்களே…ஜிகாத்,ஜிகாத்ன்னு,அத குரான் போதிக்கிதுன்னு,,,
    ஒரு தடவையாவது,அதபத்தி விமர்சிக்கும் முன்னர்,தெளிவா தெரிஞ்சு,பின்னாடி என்னவேனாலும் எழுதுங்கள்…..

    //இஸ்லாமின் சுய ஸ்வரூபத்தை விளக்கும் கட்டுரைகள் இன்று மிக மிகத் தேவை. //

    அப்பரோம் இது தமிழ்”ஹிந்து” தளம்கிறத மரந்துட்டீங்களா?…இங்க இஸ்லாம் பத்தி கட்டுரைகளை கேக்குரீங்க….
    ஒருவர் தான் சார்ந்து இருக்கும் மதம் பற்றி என்னவேனும்னாலும் பேச்லாம்..உரிமையுண்டு..பிற மதங்களை பற்றி விமர்சிக்கலாம்,எப்போது தெரியுமா?ஒரு செய்தி அது உண்மை என உறுதி செய்யப்பட்ட பிறகு….
    சும்மா காதுவழி செய்தி,மற்றும் ஏதாவது,ப்லாக்கில் படித்ததை வைத்து,இங்கு விவாதிப்பது….ஆரோகியமான விஷயம் அல்லவே…..

    நன்றி

    அன்புடன்
    ரஜின்

    (மட்டுறுத்தப்பட்டுள்ளது)

  17. நண்பர் ரஜின்,

    //சும்மா காதுவழி செய்தி,மற்றும் ஏதாவது,ப்லாக்கில் படித்ததை வைத்து,இங்கு விவாதிப்பது….ஆரோகியமான விஷயம் அல்லவே…..//

    நான் 20௦ வருஷம் உங்க இஸ்லாமிய நடைமுறைகளையும்,இஸ்லாமியரின் பேசும், வாழும் முறையையும் கூர்ந்து பார்த்து வருகிறேன்.நான் விமர்சனம் வைக்கலாமா?. எனக்கு என்னவோ முஸ்லிம் தப்பு பண்ணா அது உங்க மதம் சரின்னு சொன்னதால செய்யுற மாதிரி தான் தோணுது .ஏன் என்றால் கேட்டவனுக்கு கூட முஸ்லிம் என்றால் நீங்க தரும் பாதுகாப்பே அப்படி நினைக்கவைகுதுன்னு நெனைக்கிறேன். ஊரோடு சேர்ந்து வாழ என்று எல்லாம் உங்கள் மதம் சொல்லி தரவில்லையே! உங்களோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே மற்றவர் வாழமுடியும் என்றே சொல்லி தந்து வருகிறது இல்லையா?. இது ஒன்று போதுமே உங்களை உலகில் உள்ள அனைவரும் குறை காண.

    அப்பிடி ஒன்னும் கம்ப சுட்ரம தெரியலை உங்க குரான். நல்லதோ கேட்டதோ அது தெளிவா தான் சொல்லி இருக்குது. என்ன ஒன்னு சில கேட்டதை கூட நல்லது என்று சொல்லி இருப்பதே குறை. ஆனா நீங்க புடிக்கிற அடம் இருக்கே, அந்த கேட்டது கூட நல்லது தான் என்று. அதன் பிரதிபலிப்பே தலிபான், அல்கைதா எல்லாம்.அப்புறமா எப்பிடி நண்பா உங்களை குறை சொல்லாம இருக்க முடியும்.

    நாங்க முதல்ல தப்பா புரிஞ்சிகிநோம இல்ல உங்க ஆளுங்கலிலேயே ரொம்ப பேர் தப்பா புரிஞ்சினு இருக்காங்களா என்று நீங்கள் ஆராயவும் . உலகம் புரா முஸ்லிம் ஆகணும்,எல்லாரும் அரபி தான் பேசணும், உலகத்துல இருக்கிற எல்லாரும் அரேபியாயாவுள இருக்கிற இடத்தைதான் புனிதமானதா நினைக்கணும். இதெல்லாம் நான் உங்க புத்தகத்தை படிச்சி தெரிஞ்சு புரிஞ்சிகளை நண்பா. உங்க ஆளுங்க நெறைய பேர் பேசனதுல தெரிஞ்சிகினது.
    சுத்த ஹம்பக்கா இல்லை இதெல்லாம்.

  18. ரஜின்

    நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொன்னீங்களே – நாங்க ஒண்ணுமே பண்ணல – ஜிகாத் அப்படின்னு ஒன்னு இல்லவே இல்ல – இத படிங்க – உங்காளு எழுதின புக் – இஸ்லாமியருக்கு இஸ்லாமை தவிர எல்லாமே டுபாகூர் மேடம் – மத்தவங்க எல்லாம் காபிர்ஸ் – இதையும் இல்லவே இல்லேன்னு சொல்ல போறீங்களா

    In 1855, Amir Ali Amethawi led a Jihad (Islamic religious war) for the recapture of Hanuman Garhi, situated a few hundred yards from the Babri Masjid which at that time was in the possession of Hindus. This Jihad took place during the reign of Nawab Wajid Ali Shah. It endned in failure. A Muslim writer, one Mirza Jan, was a participant in that failed Jihad. His book Hadiqah-i-Shuhada was published in 1856, i.e. the year following the attempted Jihad. Miza Jan tells us:

    …wherever they found magnificent temples of the Hindus ever since the establishment of Sayyid Salar Mas’ud Ghazi’s rule, the Muslim rulers in India built mosques, monasteries, and inns, appointed mu’azzins, teachers and store-stewards, spread Islam vigorously, and vanquished the Kafirs. Likewise they cleared up Faizabad and Avadh, too from the filth of reprobation (infidelity), because it was a great centre of worship and capital of Rama’s father. Where there stood a great temple (of Ramajanmasthan), there they built a big mosque, … Hence what a lofty mosque was built there by king Babar in 923 A.H. (1528 A.D.), under the patronage of Musa Ashiqqan! (Harsh Narain: p 105)

  19. There should more done to those who got killed as “Commandos:” — All these politicians statue need to be replaced with theirs — even though they belongs to Military — the have to exposed to more public and give more importance to these peoples families.

  20. //உலகம் முழுதும் அடித்து விரட்டப்பட்ட யூதர்களை வரவேற்று,இடமளித்த பாலஸ்தீனர்கள்,//

    வரலாற்றை வெச்சு காமெரி கீமெடி பண்ணலயே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *