காசி மஹாத்மியம்
வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை என்று நம் பாரத தேசமே ஒரு புண்ணிய பூமியாக இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியின் நடுவே இருக்கிறது புண்ணிய நதியாம் கங்கை பிரவாஹமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காசி மாநகரம்.
“ஸாதாரணமாக எந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும் ‘இது காசிக்குச் சமமானது; அல்லது காசியை விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்ரத்தை மற்ற எந்த க்ஷேத்ரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்ரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசி தான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமால், அந்தந்த நதியைப் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்று தான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கை தான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது”. (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி – பக்கம் 832)
வடமாநிலங்களில் உள்ளவர்கள் தென் பகுதிகளுக்கும், தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடப் பகுதிகளுக்கும் க்ஷேத்ராடனம் போவது நம் தேசத்தில் தொன்று தொட்டு வரும் ஆன்மீகக் மரபு. இந்த கலாசாரமே பல மொழிகள் பேசும், பல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கும் நம் தேச மக்களின் ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக விளங்குகிறது. உதாரணமாக ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்த (கடல்)மண்ணை எடுத்துச் சென்று பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்து, பின்னர் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, காசி ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை செய்து முடித்த பின்னரே காசி-ராமேஸ்வர க்ஷேத்ராடனம் பூர்த்தியடைகிறது. இவ்வாறு ஆன்மீகத்திலும் கலாசாரத்திலும் பின்னிப்பிணைந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதே இந்து மதம் என்கிற சனாதன தர்மம்.
பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே – தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம்- குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)
முதல் இரண்டு அடிகளில், ஏடவிழ்க்கும் (இதழ் விரிக்கும்) அலர்களையும் (பூக்களையும்), தங்கள் ஏடவிழ்க்கும் (சுவடிகளைத் திறக்கும்) நாவலர்களையும் குறிக்குமாறு இரு பொருள்பட அமைந்த அழகிய பாடல் இது. தென் தமிழ் நாட்டில் பிறந்த குமரகுருபரர் காசி சென்று சைவ மடம் அமைத்தார்.
காசித் தலத்தின் பெருமைகளைக் கூறும் காசிக் கலம்பகம் என்ற அழகிய நூலையும் எழுதினார்.
காசி க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும், தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் கங்கை நதியில் கலக்கின்றதால் “வாரணாசி” என்றும் அழைக்கபடுகிறது. பகவான் மஹாதேவர் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்று நம்பப் படுகிறது. ஆகையால் எந்த ஜந்துவும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம்.
மேலும் பகவான் ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம். அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும் பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது இந்தத் தலத்தில் தான்! அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!
பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் : சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது
ஆன்மீகத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் நம் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப் படுவதற்கு காசி-காஞ்சி நகரங்களின் தொடர்பும், கங்கை-காவிரி நதிகளின் தொடர்பும் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.
“காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூரணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்ஷி ஆலயத்தில் கர்ப்ப கிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது. அதன் விமானத்தில் தக்ஷிண தேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டிக் காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில் கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?” – (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – பக்கம் 745-746)
காசியின் பெருமைகள்
மேற்கண்ட பழம்பெருமை வாய்ந்த புராண மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகளும் இடங்களும் காசி நகரத்திற்கு உண்டு. காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில், விசாலாக்ஷி கோவில், துர்கை கோவில், சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில், துளசிமனாஸ் மந்திர், பாரத மாதா கோவில், கிரி ஸ்வாமி பாஸ்கரானந்த் சமாதி, என்று பல ஆலயங்கள் உள்ளன. மேலும் புண்ணிய நதியாம் கங்கையும் அதன் கரையில் உள்ள ஹரிசந்திர கட்டம், சிந்தா கட்டம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், ஆகிய கட்டங்களும், கங்கை நதியைப் பூஜை செய்து வழிபடும் அற்புதமான ‘ஆரத்தி’ வழிபாடும் மிக முக்கியமானவை.
திருத்தசாங்கம் என்று ஒரு சிற்றிலக்கிய பிரபந்த வகை உண்டு.. ஒரு தலத்தின் இறைவனை (அல்லது ஒரு நாட்டின் மன்னனை/அரசியை) முன்வைத்து அவனது நாமம், நாடு, நகர், கொடி, மலை, ஆறு என்று பத்து அம்சங்களைச் சிறப்பித்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் வகை. இந்தப் பாடல் வகையில் பாரதமாதாவை முன்வைத்து மகாகவி பாரதி “பாரத தேவியின் திருத்தசாங்கம்” என்று பாடியிருக்கிறார். அதில், பாரத தேவியின் நகராகவும், ஆறாகவும் எவற்றைக் கூறுகிறார் தெரியுமா?
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? – சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! – நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.
மேலும், காசி மன்னரின் அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனாரஸ் பல்கலையில் உள்ள கோவில், சாரநாத் நகரம், சாரநாத் புத்தர் கோவில், தாமெக் ஸ்தூபி, அருங்காட்சியகம், இலங்கை ஆளுனர் ஜப்பானிய முறைப்படி கட்டிய முல்காஞ் குடி விஹார், அதனருகில் அசோகச் சக்ரவர்த்தி புத்த கயாவிலிருந்து அனுப்பிய போதி மரம், 23-வது தீர்த்தங்கரரான பர்ஸ்வனாத் பிறந்த இடத்தில் உள்ள ஜெயின் கோவில், சீனர் கோவில் மற்றும் சாரநாத் மஹாதேவர் கோவில் ஆகியவையும் இருக்கின்றன.
தமிழ் இந்துக்களின் அறியாமை
நம் தமிழ் இந்துக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் “காசி யாத்திரை” என்று கேள்விப் பட்டிருப்பார்களேயன்றி, காசி நகரத்தின் மஹாத்மியத்தைப்பற்றிப் பலர் அறிந்திலர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சொல்லப்போனால் சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, நாத்திகம் தலைதூக்க ஆரம்பித்ததிலிருந்து, திராவிட இனவெறியாளர்கள் தங்கள் விஷப் பிரசாரத்தினால் தமிழ் இந்துக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லை தாண்டினால் தமிழனுக்கு மதிப்பில்லாமல் செய்துவிட்டார்கள். ஆரிய-திராவிட கட்டுக்கதை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு, வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுடனும் சண்டை சச்சரவுகள் என்று தமிழர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக, கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கின்றார்கள்.இதன் பயன் பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் இந்து மதத்தின் பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும் தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இம்மாதிரியன சூழலில் அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ் மக்களை நல்ல வழியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நடத்திச் செல்லும் பொறுப்பு இருக்கின்றது. ஊடகங்களுக்கும் அப்பொறுப்பு உண்டு. தேசப்பற்றும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் உள்ள ஊடகங்களாக இருந்தால் அவ்வாறு தான் செய்யும். ஆனால் தமிழகத்து ஊடகங்களில் பெரும்பான்மையானவை நாத்திக, இடது சாரி சிந்தனைகள் உடையவையாக இருக்கின்ற காரணத்தால், இந்து கலாசாரத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களின் அத்தகைய செயல்பாட்டிற்கு உதாரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சொந்தங்களினால் (மாறன் குடும்பத்தினர்) நடத்தப்படும் “சன் டிவி” நிறுவனத்தைச் சொல்லலாம்.
சன் டிவி முன் நிறுத்திய காசி
“சன் நியூஸ்” தொலைக்காட்சியில் “நிஜம்” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக இந்து ஆன்மீக, கலாசார, பழக்கவழக்கங்களை கேவலமாகச் சித்தரித்து, பார்வையாளர்கள் மனதில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, இந்து மதத்தின் உன்னதமான கலாசாரத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது சன் டிவி. கிராமங்களிலும், வனவாசிகளிடத்திலும் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளை தூற்றி, எள்ளிநகையாடி, மூடநம்பிக்கைகள் என்று ஏளனம் செய்து, இந்து மதம் அறிவியல் கோட்பாடுகளுக்கு சற்றும் ஒத்துவராத மதம் என்று பார்வையாளர்கள் மனதில் குழப்பங்கள் விளைவித்து வருகின்றது இந்நிறுவனம்.
இதன் தொடர்ச்சியாகவே சென்ற மாதம் தொடர்ந்து நான்கு பகுதிகளாக காசி நகரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது சன் டிவி. “நிஜம் – காசி நகரத்தின் உண்மையான முகம்” என்று சன் நியூஸ் சானலில் அந்நிகழ்ச்சியை முன்நிறுத்தியது. அதே நிகழ்ச்சியை தற்போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஒரு மாதத்திற்குள்ளாக அந்நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஒளிபரப்பு செய்வதிலிருந்தே சன் நிறுவனத்தின் தீய நோக்கம் தெளிவாகிறது. சென்னையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு ஒரு படக்குழுவினரை அனுப்பிய சன் டிவி, அங்கே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து தமிழர்களுக்குப் பின்வருமாறு அவதூறு செய்து காசிநகரத்தைக் காட்டியது.
- நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.
- கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.
- கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.
- காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.
- புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சன் டிவி காட்டாமல் மறைத்த விஷயங்கள்
கங்கைக் கரையில் கட்டங்கள் பல இருப்பதை நாம் மேலே பார்த்தோம். அவற்றில் ஹரிச்சந்திர கட்டம் என்பது உண்மையிலேயே பிணங்கள் எரிக்கப்படும் இடம் தான். இங்கு தான் ஹரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கும் போது அவன் மனைவி சந்திரமதி இறந்து போன அவர்களின் மகனுக்கு ஈமக் கிரியைகள் செய்ய வருகிறாள். எனவே தான் அந்த இடத்திற்கு ஹரிச்சந்திர கட்டம் என்று பெயர் வந்தது. இந்து மத சாஸ்த்திரப்படியே இறந்தவர்களின் உடலை எரித்த பின்னர் அவர்களின் அஸ்தியை கடலிலோ, நதியிலோ கரைப்பது வழக்கம். மேலும் கங்கை பாவங்களைப் போக்கும் புண்ணிய நதி என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு வந்து பிணங்களை எரித்து அஸ்தியைக் கரைப்பதென்பது சாதாரணமான விஷயம். இதை ஏதோ ஒரு கேவலமான விஷயம் போல சித்தரித்தது சன் டிவி. கங்கைக்கரையில் நடத்தப்படும் புண்ணியம் மிகுந்த பித்ரு காரியங்களையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ சன் டிவி காட்டவில்லை.
அதற்கு நேர்மாறாக நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல. சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.
காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பக்கம் தப்பித் தவறி கூட படப்பிடிப்புக் குழு செல்லவில்லை. கங்கையில் நடக்கும் பூஜை வழிபாடுகளைக் காண்பிக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காட்டவில்லை. காசி நகரம் எவ்வளவு சிறந்த கல்விச்சாலையாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. பாரத தேசத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லவில்லை. அங்கு உள்ள விஸாலாட்சி கோவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்களால் அருமையாக நிர்வாகம் செய்யப் படுகின்ற நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லை சன் டிவி.
முகலாயர்கள் எவ்வாறு காசி நகரத்தை அழித்தார்கள் என்றும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. இன்றும் விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதே முகலாயர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி என்பதைச் சொல்லவில்லை.
காலம் சென்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லவில்லை. அம்மத நல்லிணக்கத்தை உடைகும் விதமாக, சங்கடங்களைத் தீர்த்து மோட்சம் அளிக்கும் சங்கட் மோட்சன் ஹனுமான் கோவிலிலும், காசி ரெயில் நிலையத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு குண்டு வைத்துத் தாக்கினர் என்று காட்டவில்லை.
தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.
கங்கை நதியின் அசுத்தத்திற்கு ஏதோ இந்துக்கள் தான் காரனம் என்பது போன்று சித்தரிக்கிறது சன் டிவி. அங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அரசாங்கம் செய்து தரவில்லை என்பதைச் சொல்லவில்லை. கங்கைக் கரையை ஒட்டியுள்ள பனாரஸ் பட்டுத் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சாயக்கழிவுகளை கங்கை நதியில் கலக்கவிடுவதைக் காட்டவில்லை. கரையில் உள்ள விடுதிகளிலிருந்து கழிவுகளும் நதியில் கலப்பதைக் காட்டவில்லை. கங்கையைச் சுத்தம் செய்வதற்காக அரசு செலவிடும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் வாதிகளின் வங்கிகளை நிறப்புவதைப் பற்றிச் சொல்லவில்லை.
சாரநாத் சென்று அங்கே தழைத்தோங்கிய புத்த மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கேயுள்ள சைவ, பௌத்த, ஜைன ஆலயங்களைக் காட்டவில்லை. புத்த கயாவிலிருக்கும் அதே போதி மரம் அங்கும் இருப்பதைக் காட்டவில்லை. சீனக் கோவில்களைக் காண்பிக்கவில்லை.
சன் டிவியின் ரகசிய குறிக்கோள்
வெறும் பிணங்கள் எரிவதையும், பிச்சைக்காரர்களைச் சாமியார்களாகவும், அந்திம காலத்தில் நிம்மதியாக இறைசேவை செய்பவர்களை மரணத்தைத் தேடி வந்தவர்களாகவும், சித்தரித்து இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே சன் டிவி ஒரு குழுவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு அனுப்பியுள்ளது. புண்ணிய ஸ்தலமான காசியையும், புண்ணிய நதியான கங்கையையும், சிறுமைப் படுத்தி, அவற்றைப் பார்வையாளர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மீண்டும் மீண்டும் பிணங்களையும், போதை ஏற்றும் பிச்சைக்காரர்களையுமே காட்டி, அது தான் உண்மையான காசியின் நிஜ முகம் என்று மக்களை ஏமாற்ற முயன்றுள்ளது சன் டிவி நிறுவனம். அயோக்கியத்தனமான அம்முயற்சியில் ஹிந்துக்களின் ஆன்மீக, கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது இந்த அழுக்கு நிறுவனம். இது மிகக்கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயம்.
சன் டிவியிடம் சில கேள்விகள்
* இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பு செய்து அவற்றைப் பற்றி அவதூறாக சித்தரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைப் போல் மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களையும், அராஜகங்களையும் ஏன் நிஜம் நிகழ்ச்சியில் காண்பிப்பதில்லை?
* காசி நகரத்தின் மறு பக்கம் என்று காண்பிப்பதைப்போல், நாகூரின் மறுபக்கம் என்றோ வேளாங்கன்னியின் நிஜ முகம் என்றோ காண்பிக்கத் தைரியம் இருக்கிறதா?
* ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்குச் சென்று படம்பிடித்த மாதிரி, இதோ சில நூறு மைல்களே தள்ளியுள்ள கேரளத்திற்குச் சென்று அங்கு உள்ள சர்ச்சுகளில் பாதிரிமார்கள் நடத்தும் லீலாவினோதங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த தைரியம் இருக்கிறதா?
* ஒரு கன்னியா ஸ்த்ரீயே எழுதியுள்ள “ஆமென்” என்ற புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளைப் படம் பிடித்து ஒளிபரப்பலாமே? கத்தோலிக்க சர்ச்சின் நிஜ முகம் அல்லது கத்தோலிக்க மதகுருமார்களின் மறு பக்கம் என்று காண்பிக்கலாமே?
* அதே கேரளம் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதைப் பற்றி ஒரு ‘நிஜம்’ நிகழ்ச்சி காட்டலாமே? மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கத் தைரியம் இருக்கிறதா?
* அம்மாநிலத்தில் நடக்கும் ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பல வாரங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யலாமே? அதற்குத் தைரியம் இருக்கிறதா?
* ஏன் கேரளத்திற்குச் செல்ல வேண்டும்? சென்னையிலேயே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான கிறுத்துவ அனாதைக் குழந்தை விடுதிகளிலும், பெண்கள் காப்பகத்திலும் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா? அங்கு நடக்கும் ஊழல்களையும், அங்கு வந்து தங்கும் வெளிநாட்டினர் அந்த அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் எவ்வாறு சித்திரவதை செய்கின்றனர் என்று காட்டலாமே?
* யோபு சரவணன் போன்ற, அப்பாவி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய, பாதிரிகளைப் பற்றி ஒரு நிஜம் நிகழ்ச்சி செய்யலாமே?
* காசியின் மறுபக்கத்தைப் போல் மதுரையின் மறுபக்கத்தைக் காட்டத் தைரியம் இருக்கிறதா? மதுரையில் நடக்கும் அரசியல் அராஜகங்களைக் காட்ட வேண்டியது தானே? தங்களின் நிறுவன அலுவலகத்தையே கொளுத்தி மூன்று அப்பாவிகளைக் கொன்றார்களே! பேருக்கு சி.பி.ஐ. விசாரணை என்று சொல்லி ஒரே மாதத்திற்குள் ஜாமினில் வெளிவந்து, இப்போது அனைவரும் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் உலவுகிறார்களே! இவர்கள் அந்த மூன்று அப்பாவிகளை ஏன் கொன்றார்கள்? யார் சொல்லிக் கொன்றார்கள்? சாட்சிகள் ஏன் மனம் மாறினார்கள்? அவர்கள் மிரட்டப் பட்டார்களா? இதையெல்லாம் ‘மதுரையின் நிஜ முகம்’ என்று காண்பிக்க வேண்டியது தானே? தாக்கப் பட்டது சன் டிவி அலுவலகம் தானே? இறந்து போனவர்கள் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள் தானே? கொலைகாரர்கள் விடுதலையானவுடன் உயர் நீதி மன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதையெல்லாம் பற்றி நிஜம் நிகழ்ச்சி நடத்துவது தானே?
கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்
விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சியிலும், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியிலும் எவ்வாறு ஹிந்துக்களைப் புண்படுத்துகிறார்களோ, அதே போல் தான் சன் டிவி மற்றும் ஏனைய சானல்களிலும் செய்கிறார்கள். விஜய் டிவிக்கு எதிராக வலுவான கண்டனம் பதிவு செய்யப் பட்டது. அதே போல் சன் டிவிக்கு எதிராகவும் கண்டனம் பதிவு செய்யப் பட வேண்டும். நிஜம் போன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை விளம்பரம் மூலம் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இத்தகைய எச்சரிக்கைகள் பயனளிக்காவிட்டால் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் மடல்கள் மூலமும் தொலை பேசி மூலமும் தெரிவிக்க வேண்டும்.
சன் டிவியின் முகவரியும், தொலைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Sun Network Corporate Office
4, Norton Road,
Mandaveli, Chennai-28
Tamil Nadu, India.
Phone No: 044-24648181
Fax: 044-24648282 Fax us at: 91-44-24648250email: queries@sunnetwork.in, queries@sunnetwork.in
மேலும் “கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் ரூல்ஸ், 1994” – இன் படி கொடுக்கப்பட்டுள்ள “நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதி-6” – இன் கீழ் சொல்லப்பட்டுள்ள நெறிகளை மீறுவதாக இந்த நிகழ்ச்சி இருப்பதால், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு நாம் புகார் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரிகள்:
mib.inb@sb.nic.in , psmib.inb@sb.nic.in , msib.inb@sb.nic.in , psmsib.inb@sb.nic.in
மேலும் அமைச்சகத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே.
ஹிந்துக்களைப் புண்படுத்துவதையே தலையாய கடமையாகச் செய்துகொண்டிருக்கும் ஊடகங்களை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சகித்துக் கொண்டு அமைதி காப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. நாளைய தலைமுறை நமது கலாசாரத்தையே இழந்து அந்நிய கலாசாரத்தில் உழன்று அழிந்து போவதைத் தடுக்கவேண்டும் என்றால் இன்றைய தலைமுறை விழித்து எழவேண்டும்!

மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது
இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை
நான் கடவுள்: பட விமர்சனம்
தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்
வேதம் புனிதமடைந்தது!
வீட்டிற்கு வந்த மதபோதகர்
சிலுவையில் இந்தியக் கல்வி?![இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/agora4.jpg)
இறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]
நீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02
பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01![தாண்டவம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/dancing-shiva.jpg)
தாண்டவம் [சிறுகதை]
வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்![திருப்பலி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/jesus_vimanam.jpg)
திருப்பலி [சிறுகதை]
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?![சுமைதாங்கி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/sumaithaangi-isakki-amman1.jpg)
சுமைதாங்கி [சிறுகதை]![சாட்சி [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/old-begger.jpg)
சாட்சி [சிறுகதை]
இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்
Breaking India புத்தக வெளியீட்டு விழா
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்![தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]](http://www.tamilhindu.com/wp-content/uploads/tholseelai-kalagam-cover.jpg)
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?
மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?














Very good article. Every Tamil Hindu person should come with sharp words against Sun TV and Vijay TV for such programmes.
ஐயா!… நான் இறப்பாலும், வளர்ப்பாலும் ஹிந்துவாக இருக்கிறேன். இருப்பினும் உங்களுடைய இந்த ’என் குறையை சொல்லக்கூடாது’ என்ற மனப்பான்மையை வெறுக்கிறேன். ஹிந்துவாக இருப்பது முக்கியமல்ல… முதலில் நல்ல மனிதராக இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
[edited and published]
/////இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை//////
மேலே குறிப்பிடப்பட்டிருப்பது யாருக்கும் தெரிந்திருக்க முடியாத மிக பயங்கரமான உண்மை. இந்துக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
திருவான்மயூரில் நடைபெற்று வரும் இந்து சமய கண்காட்சியில் இதை ப்ரிண்ட் செய்து விநியோகித்தால் ஒரு பலன் கிடைக்கும்.
என்னால் முடிந்தது 28 பேருக்கு இது வரை இந்த தகவலை அளித்திருக்கிறேன். இந்துக்களின் எழுச்சி அழுத்தமாகவும் வேகமாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த கட்டுரை வலியுறுத்துகிறது.
Thank you for the wake up call contained in the above article. I too felt strongly about
this mudslinging exercise of the Sun TV. As usual, the mainstream media never even bother to point out this act of hurting the sentiments of the vast majority of Hindus. I will shortly
send my complaint to the Minister of I&B as suggested by you. But I doubt very much if any
corrective action would be taken.
My humble request to all visitors to this website is please encourage Jaya TV. It is the only tv channel that does not hurt sentiments and feelings of any religion. Vijay and Kalaignar TV are pro christian and it is onlyJaya tv that gives carnatic music kutcheris and magazhi season’s best viewed and rated concerts. So, please encourage the channel to do more service.
திருச்சிற்றம்பலம்
இன்ன்னிகழ்சி பற்றிய விளம்பரமே என் மனதைப் புண்படுத்திவிட்டது. இவ்வாறு வெளிப்படியாகவே நிகழ்ச்சியி பெயரை வைத்து விளம்பரம் செய்து நிகைசியை ஒளிபரப்பும் வகையில் இத்தகைய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடம் கொடுத்துக்கொண்டு மக்கள் இருக்கும் வரை இவர்களைத் தடுக்க எவரும் இல்லை.
நான் என் கண்டனத்தை அத்தொலைக்காட்சி நிறுவத்திற்கும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டேன்.
நீங்கள்?
திருச்சிற்றம்பலம்.
என்ன தான் எதிர்ப்புகள் வந்தாலும், மட்டமாக விமர்சித்தாலும், யாரும் உயர்த்தி பிடிக்காமல் இருந்தாலும்….இந்து மதத்தின் பெருமை வளர்ந்து கொண்டே தான் செல்கிறது, கொஞ்சம் கூட குறைந்ததை போல தெரியவில்லை.
யாரும் வளர்க்காமலே தானாகவே உயரும் மதம் இந்து மதம் தான்.
சன் டிவி போன்றவர்கள் தலைகீழாக நின்றாலும் இதன் பெருமையை எக்காலத்திலும் குலைக்க முடியாது.
நீங்கள் அவர்களிடம் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இருக்காது.
நான் இந்து வெறியன் இல்லை என்றாலும் அவசியமில்லாமல் இவ்வாறு தூற்றும் போது கோவம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இது சன் டிவி மட்டும் அல்லாமல் வேறு பலரும் சம்பந்த பட்டுள்ள சதி சில நாட்களுக்கு முன்பு காசியின் உண்மை முகம் என்று ஒரு மின்னஞ்சல் பரப்பப்பட்டு வந்தது அதிலும் காசியில் எரியும் பிணங்களின் படத்தை போடு காசியை பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக முயன்றனர்
மனம் கொதித்துப் போக வைத்த நிகழ்ச்சி. நாங்களும் காசிக்குச் சென்று பத்துநாட்கள் தங்கி இருந்திருக்கிறோம். வழிகாட்டி யாருமில்லாமல் தனியாகவே பல இடங்களுக்குச் சுற்றி அலைந்து பார்த்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு எடுக்கப் பட்ட ஒன்று என்பதையும் அறிய முடிகிறது. . ஆனாலும் எங்கள் உறவினரே இதை நம்பிக்கொண்டு என்னிடம் வந்து இதைப் பற்றி விசாரித்ததில் இருந்து இதன் தாக்கம் மிகவும் மோசமாக மக்களிடம் சென்றிருக்கிறது என்பதும் புரிய வருகிறது. என்னைப் பொறுத்த வரையிலும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்காமலே தவிர்த்துவிடுவேன். ஆனால் இவற்றைப் பார்த்தால் தான் உண்மை தெரியும் எனச் சிலர் நம்புகிறார்களே???? அதை நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது. தனியார் தொலைக்காட்சிகள் வந்ததுக்கு அப்புறமாவே நம்முடைய கலாசாரம், பண்பாடு, சகிப்புத் தன்மை, நன்னடத்தை அனைத்திலும் மாற்றங்கள், மாற்றங்கள், மாற்றங்கள். அந்த ஆண்டவன் தான் காப்பாற்றணும்:(((((((((((
இருபது வருடங்களாக கிறிஸ்தவராக இருந்து தாய் மதம் திரும்பிய ஒரு இளைஞரின் பெருமூச்சும் சுதந்திர காற்றும் இந்த வீடியோவில் காணலாம்.
http://www.youtube.com/watch?v=dkvdtzk1pbo
அன்புடன்.
ராம்
இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிகள் பல. முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிக ள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள்.
இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு
Now Dravidian Politicians and their TV does the same.
There are more than 3000 branches in Christianity and growing every day.
Actually I have an Idea and would like to propose this to the TamilHindu editors.. To make Hindus vigilant and aware of whats happening around them, is it possible that you do like a exhibition something like what Mr Francois Gautier does. It is called Fact-India. We can set up this kind of exhibitions in temples. So that anyone who comes to temple, have the chance to spot and read articles like this and know what is happening around them. Can you get any support from Hindu Organisation from Tamil Nadu for funding? Or you need Donations? I find Mr Francois Gautier Fact-India a very effective way to let hindus know whats happening. Its not necessary that this exhibitions must have alot of drawings like those on Mr Francois Gautier. We can’t just keep talking and discussing on the internet. WE HAVE TO DO SOMETHING.Just think about it the temple is the only place where alot of people come including ladies and uncles…. So this kind of exhibitions will definitely catches their attention and they will read it…… Come on guys, we have to do the something…..
Does anyone have any other suggestions? You can check these site of Mr Francois Gautier here……
http://www.fact-india.com/
நாம் மறுமொழிகளாக மட்டும் நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் கட்டினால் போதாது.. இதற்கும் அப்பாற்பட்ட ஊடகங்கள் வழியாகவும் நாம் நம் கண்டனத்தையும் இத்தகைய நிறுவனங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்..
இக்கட்டுரையைப் பார்த்தவர்கள் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் தங்கள் கண்டனத்தை இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராகத் தெரிவிக்க ஒரு ஊடகம் மற்றும் வாய்ப்பு வேண்டும்..
திருச்சிற்றம்பலம்.
I WELCOME THIS ARTICLE AS REAL HINDU,WHATEVER YOU HAVE GIVEN IS CENT PERCENT CORRECT,THE SUN TV AND VIJAY TV SHOULD CHANGE THEIR STYLE OF PROGRAMS.THESE TV’S JUST THEY HURT THE FEELINGS OF HINDU’S ONLY.SINCE THE HINDU CULTURE ONLY HAVE THE FREEDOM TO TELL ANYTHING,IF WE LOOK INTO REST OF THE RELIGION THEY VERY NARROW AND NEVER ALLOWS THIS TYPE OF COMMENTS.THESE TV’S THEY WORK FOR THE POLITICAN’S INDIRECTLY LIKE DMK.THESE TV’S DON’T HAVE THE GUTS TO COMMENT ANY CHISTIAN OR MUSLIM RELIGIONS.YESTERDAY IN A MEETING THE KARNATAKA CHIEF MINISTER HAS GIVEN ONE MESSAGE THAT” ALL OF THE HINDU RELIGION SHOULD COME UNDER ONE ROOF WHICH WILL UNIT THIS NATION AS ONE .” WE HAVE TO FORM ONE ORGANISATION LIKE THIS TO SECURE OUR RELIGION AND NATION AS SOON AS POSSIBLE.I HATE SUN TV AND VIJAY TV.WE HAVE TO DO SOMETHING VERY URGENT TO CREATE SOME AWARENESS IN THE PUBLIC,AS MR.KRESHNA SAID WE HAVE TO WORK URGENTLY TO EXPLAIN THE PEOPLE WHAT IS GOING AROUND US?. JAI HIND………………….
`முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
முன் ஏரின் கோணல் வழிக்கு ஓர் எடுத்துக்காட்டு:
`தொடர்ந்து பரப்பப்படும் பச்சைப்பொய்…!’
http://nanavuhal.wordpress.com/
//ஆரிய-திராவிட கட்டுக்கதை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு, வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுடனும் சண்டை சச்சரவுகள் என்று தமிழர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக, கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கின்றார்கள்.இதன் பயன் பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் இந்து மதத்தின் பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும் தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்//
அருமையான நிதர்சனமான தமிழ் ஹிந்துக்களின் உண்மை நிலையை எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி
மேலும் இது போன்ற ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்களை கூடுதல் மக்கள் அறியும்படி செய்ய வேண்டும். அதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.
மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்,
விஜய் டிவி மேலெ குறிப்பிட்ட நிகழ்ச்சியில்,
நடந்தது என்ன என்று சொல்லி விட்டு, ஒரு யோகா பயிற்சியில் இருப்பவரை
பேட்டி எடுத்து அவரது நம்பிக்கையை கேலி செய்வது போல் கேள்விகள்
கேட்கப்படுகிறது. மேலும் எல்லா விளம்பரமும் நடந்தது என்ன (குற்றமும் அதன் பின்னனியும்)
என்றே சொல்கிறது, பெரும்பாலானவை நம்பிக்கையை குறி வைத்தெ செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வரின் நம்பிக்கையை குற்றம் என்று சொல்ல இவர்கள் யார்?
எல்லாரும் விழிப்பாக செயல்பட வேண்டிய நேரம் இது.
நன்றி,
சஹ்ரிதயன்
We cannot keep any exibition in temples because they are with Government.
Secondly we should oppose the Tamil Magazines also.
1. Kumudam:
It has 3 publications. Kumudam Bhakthii and Jyodidam will glorify Hinduism and Kumudam Reporter will degrade Hinduism
2. Vigadan: same – Sakthi Vigadan for Hinduism and Junior Vigadan for Hindu hate.
Shameless groups. They take pride in their heritage.
We should also condemn this publication prostitution.
regards
திரு கிருஷ்ணன் அவர்கள் கூறியது மிகவும் சரி. அணைத்து கோவில்களிலும் நுழைவாயில் அருகில் இதை போன்று ஒரு ஏற்பாடு செய்ய பட வேண்டும். இதனை யார் செய்வது? இது மிகவம் அவசரம் மற்றும் அவசியம். இந்துக்கள் நாம் யாரிடமும் வம்புக்கு செல்ல வேண்டாம். ஆனால் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
ராம்நாத்
Very good article.
It is really the pot calling the kettle black!! When the channel bosses are in government, directly or indirectly, and they have not been able to clean up the Couum, Buckingham Canal or many water bodies make the cremation grounds all over the city and state clean and pleasant places, they are talking about the known most ancient in civilization, Kasi that has washed many a sin of such people. As long as there is positive journalism, it is welcome. When it become slandering then it is deplorable.
The Hindus have been taking the heap of slander about their lives, religion and beliefs lying low for many years now. It is indeed shameful that the majority population with an ancient and cultured past are being gradually marginalised in this country. It is indeed commendable that you have publicised this matter.
Padmini Natarajan
இந்த கட்டுரையை படிக்கும் போது ஏற்கனவே சன் டிவி ஒளிபரப்பிய நிஜம் நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயிலை படம் பிடித்துக்காட்டி ஆண்டு தோறும் மாசி மாத திருவிழாவின் போது இடுகாட்டில் இறந்தவர்களின் சாம்பல் திருநீறாக தரப்படுகிறது என்று சொன்னதோடு நிற்காமல், கிண்டலாக மற்றும் ஏளனமாக “ஒவ்வொரு திருவிழாவுக்கு முன்பாக யாரவது ஒருவர் சாகடிக்கப் படுகிறார் என்றும், மேல்மலையனூர் மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்டமே காத்திருக்கிறது இறந்தவர்களின் திருநீற்றைப் பூசிக்கொள்ள” என்று ஒளிபரப்பினார்கள்.
இதுபோல் இந்துக்களின் புனிதத்தலமான காசியைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. அர்த்தமுள்ள இந்துமதத்தினை படைத்திட்ட கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த மண்ணில் இது போன்ற வூடகங்கள் அவதூறான செய்திகளை ஒளிபரப்புவது வெட்கப்படவேண்டிய நேரம். இந்த வூடகங்கள்
முஸ்லிம், சீக்கிய, கிருஸ்துவ மத தலங்களை பற்றி வர்ணித்தார்களேயானால் பின் விளைவுகள் என்ன என்பதை புரிந்து கொள்வார்கள்.
இக்பாலுடன் இனியபயணமாய்
காசிக்கு…
கிருஸ்துமஸ் விடுமுறையில்!
என்று மத நல்லிணக்கத்திற்காக ஒரு ஹைக்கூ கவிதையை எழுதிய எனது பேனா முனைகள் தங்கள் கட்டுரையை படித்தபோது மனம் பதரிப்போனது.
இந்து தர்மம் பன்னெடுங்காலமாக வேரூன்றியது. மனிதத்தின் வாழ்வியல் கோட்பாடுகளில் எழுதப்பட்ட ஆன்மீகப் பாடல்கள், இதிகாசங்கள், புராணங்கள்
இன்றும் அர்த்தமுள்ளவையாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
சக்தி வாய்ந்த வூடகங்கள் அதுவும் சன் தொலைகாட்சி போன்ற வூடகங்கள் இனிமேலும் இந்துக்களின் மனம் புண்படும்படியாக நிகழ்சிகளை ஒளிபரப்பாதீர்கள். இதிகாசம், புராணங்கள் மனிதவள மேம்பாடுகள் அடங்கிய, சரித்திர சான்றுகள் அடங்கிய, என்றும் வாழக்கூடிய புத்தகங்கள் என்று சொல்வதைவிட அவை பொக்கிஷங்கள் என்றே கூறலாம்.
புதிய தலைமுறைகள் இன்றைய அவசர, இயந்திர உலகில் தங்கள் மதத்தின் புனிதத்தையும், வரலாற்றையும் அறிந்துகொல்லாத நிலையில் இருக்கும் போது, இம்மாதிரி தவறான கருத்துக்களை அவர்கள் மனதில் விதைக்காது, நல்வழியில் நல்ல எண்ணங்களோடு வாழ வழிநடத்துங்கள்
என்று சன் தொலைக்காட்சியினரை கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
இந்தக் கட்டுரையின் ஆசிரியர் தமிழ்செல்வன். ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பதிப்பிக்கையில் ”தமிழ்இந்து.காம் நிர்வாகம் & ஆசிரியர் குழு” என்று வந்து விட்டது.
இப்போது தவறு சரிசெய்யப் பட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.
Sir,
This article is very good. i Welcome such kind of articles to enlighten the HINDUS.
The Sun network is not telecasting the HINDU SANKARA Channel which is also
a free channel. This channel is a devotional one. We made a several requests
to the Sun network. But it all gone to the deaf ear of the network.
We must condem such attitude. One of the readers view is very correct.
They wont dare to telecast other religion’s nature. We hindu must unite!
A timely mail to one and all making awareness about the atrocity committed to Hindus and Hindu Religion. Hope WE ALL HINDUS STAND WITH UNITY AND INTEGRITY TO FIGHT AGAINST THEM AND GET JUSTICE TO OUR SANADHANA DHARMA.
Can you please make an English translation and circulate it as the readership will dramatically increase. Many Hindus will not be able to read this article in Tamizh. The protests can then be sent to Sun TV all through the year and force them to rethink their stand.
In all probability the material is sourced from Christian supported media like NDTV, CNN etc. I doubt whether they sent their camerapersons. I do not view the program as a narrow propaganda against only the Tamilians. It is aimed against the entire Hindu community.
Prof N Natarajan
It is really a very good article & info. every Hindu should know and object such media telecasts. I too strongly object Suntv & vijai tv for telecasting such programmes & record my objection. sivakumaran
என்னுடைய கட்டுரையில் ஸ்ரீ குமரகுருபரர் ஸ்வாமிகளின் காசிக்கலம்பகப் பாடலையும், மஹாகவி பாரதியாரின் பாரததேவியின் திருத்தசாங்கம் பாடலையும் சேர்த்து, மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவையும் இணைத்து பெருமை சேர்த்த தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள், பாராட்டுகள்.
மேலும் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மறுமொழி தந்துள்ள, தரப்போகின்ற, அனைவருக்கும் நன்றி. இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பதிவு இரண்டு பகுதியாக விஜய்வாணி ( http://www.vijayvaani.com ) தளத்தில் உள்ளது. அவற்றிற்கான இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1003
‘NIJAM’ (TRUTH): The true face of SUN TV-I
http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1004
‘NIJAM’ (TRUTH) – The true face of SUN TV-II
Thamizhchelvan
அனைவரும் தங்கள் எதிர்ப்பை சன் டிவி நிறுவனத்திற்குத் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி, அன்புடன்
தமிழ்செல்வன்.
ஊடகங்களின் இந்த வெட்கங்கெட்டத்தனம் பலருக்குப் புதியதாய் இருக்கலாம். 1998ம் ஆண்டு பொதுததேர்தலின் போது பத்திரிக்கை நிருபரான நண்பருடன் ஜனதாகட்சித் தலைவர் திரு சுப்ரமண்யம் ஸ்வாமியின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு சென்றிருந்தேன். மிகவும் சுவராஸ்யமான சந்திப்பு. மிகத் திறமையான “பொருளாதார மேதையும்(! ?) தற்போதைய” தெலுங்கான புகழ்” உள்துறையமைச்சருமான ப. சிதம்பரம அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட அதைப்பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டார். திரு ஸ்வாமி அவர்கள் அவருக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார். அன்று மாலை வெளிவந்த ஒரு மாலைப்பத்திரிக்கையில் “சிதம்பரம் ஒரு முட்டாள்” சுப்ரமண்யம் ஸ்வாமி காட்டமானத் தாக்கு” என்று செய்தி வெளியிட்டது. இரண்டொரு நாட்கள் கழித்து அந்தப் பத்திரிக்கையின் நிருபர் திரு ஸ்வாமியின் கூட்டத்துக்கு வந்தார். ஸ்வாமியும் அந்த நிருபரை அழைத்து செய்தி வெளியிட்டவிதம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். பரபரப்புக்காக அவ்வாறு வெளியிட்டதாக நிருபர் தெரிவித்தார். அடிப்படைப் பண்புகள் இல்லாமல் மனம் போனப் போக்கில் செய்தி வெளியிடுவது சரியல்ல என்று திரு ஸ்வாமி சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கூட்டத்தைத் தொடர்ந்தார். இந்தப் பத்து வருடங்களில் பல “முன்னேற்றங்கள்” ஊடகத்துறையில் வந்துவிட்டன. ஒழுக்கக் கேடுகளையும் கலாச்சார சீரழிவுகளையும் “நவ நாகரிகம்” எனக்காட்டி காசு பொறுக்கும் கும்பல்கள் “மீடியா மாபியா “கள் தான் நமது கலாச்சாரக் காவலர்கள். என்ன செய்வது? காலம் கலி காலம் .
Kasi was sought to be belittled by film industry!!
“They come with foreign money to make a film which shows India in poor light because that is what sells in the west.”
But they sell it even India. Shame on us.
———————————————————————-
The day before filming was due to begin, the crew was informed that there were a few complications with gaining location permits. The following day we were greeted with the news that 2,000 protesters had stormed the ghats, destroying the main film set, burning and throwing it into the holy river. Protesters burnt effigies of Deepa Mehta, and threats to her life began. There were three main political/religious parties leading the angry mob: the BJP( Bharatiya Janata Party), the VHU (Vishwa Hindu Parishad), both well established groups within the state of Uttar Pradesh; and the KSRSS (Kashi Sanskrit Raksha Sangharsh Samiti), a party formed overnight from the RSS (Raksha Sangharsh Samiti) specifically targeting Deepa Mehta. The KSRSS claimed their role was as the guardians of the culture of Varanasi and came forward with threats of violence against her. The head of the RSS approaching press with statements to support this:
“Breaking up the sets was far too mild an act, the people involved with the film should have been beaten black and blue. They come with foreign money to make a film which shows India in poor light because that is what sells in the west. The west refuses to acknowledge our achievements in any sphere, but is only interested in our snake charmers and child brides. And people like Deepa Mehta pander to them.” (The Week magazine, India, Feb 13th, 2000
http://www.brightlightsfilm.com/28/water.html
Hi All,
We all feel shame but SUN TV will feel Good bcos their main aim is to make the youngsters NOT TO BELEIVE IN GOD who go to temple regularly & worship God. It’s also their parties aim but their own family ladies will go to these temples & pray GOD for the welfare of their family persons & OWN WEALTH. They make people முட்டாள்.
Please all HINDUS bcom ONE & UNITE overselves to make those people முட்டாள்.