பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!
ஆசிரியர் குழு
30 Dec 2009 |
அச்சிட
இந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?
இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?
உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா?
ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் - இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா?
இந்தியாவிலிருந்து பௌத்தம் மறைந்ததற்கு யார் காரணம்?
சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா?
இராமனும், கண்ணனும் தமிழ்க் கடவுள்களா?
டார்வின், காந்தி, ஐன்ஸ்டின், விவேகானந்தர் – இவர்களுக்கிடையே என்ன தொடர்பு?
மேற்கத்திய கலாசாரம் கச்சிதமானது, இந்துக் கலாசாரம் குழப்படியானது – சரியா?
முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா?
இந்தியாவில் கலை சுதந்திரம் உள்ளதா?
திரைப் படம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா?
சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?
நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
பண்பாட்டைப் பேசுதல்
இந்து அறிவியக்கக் கட்டுரைகள்வெளியீடு:
தமிழ்ஹிந்து
441,கவிமணி நகர்,
நாகர்கோவில் - 629002.பக்கங்கள் : 256
விலை: ரூ. 120
சென்னை புத்தகக் கண்காட்சியில் (2010 ஜனவரி-1 முதல் ஜனவரி-10 வரை) விஜயபாரதம் கடையில் (ஸ்டால் எண்: 278 & 279) கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005.
(தொலைபேசி: 91763-68789)தபால் மூலம் பெற விரும்புபவர்கள், புத்தகத்தின் விலையுடன் தபால் செலவும் சேர்த்து ஆர்.எஸ்.நாராயணன் என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் (சென்னை) எடுத்து, தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு மேற்கண்ட விவேகானந்த கேந்திர முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். (தபால் செலவு - தமிழ்நாடு: ரூ. 25, வெளிமாநிலங்கள்: ரூ. 30, வெளிநாடுகள்: ரூ. 140)
இணையம் மூலம் (ஆன்லைன்) புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவை tamizh.hindu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்து அறிவியக்க சிந்தனைகள் இணைய வெளியைத் தாண்டி பலதரப்பட்ட தமிழ் மக்களையும் சென்றடைய இத்தகைய வெளியீடுகள் கண்டிப்பாக உதவும் என்பதனால், தமிழ்ஹிந்து இதில் முனைந்துள்ளது.
நமது தளத்தின் வாசகர்கள் காத்திரமான, சுவாரஸ்யமான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாசகர் வட்டங்கள் மற்றும் நூலகங்களுக்கும் இந்தப் புத்தகத்தை வாங்கி அளிக்கலாம்.
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: கட்டுரை, கட்டு்ரைத் தொகுப்பு, தமிழ்ஹிந்து, பண்பாட்டைப் பேசுதல், புத்தகக் கண்காட்சி, புத்தகப் பார்வை, புத்தகம், வெளியீடுகள்

தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
30 December 2009 at 8:04 am
256 பக்கத்திற்கு மிகவும் சகாயமான விலைதான். நாம் இதைப் பெரிய எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்; அதற்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
அட்டை கம்பீரமாக இருக்கிறது. கவரும் தோற்றம்.
கண்ணன், கும்பகோணம்.