நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது, ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றியது … தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி.
View More திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்Month: January 2010
இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4
பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால்.
View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3
முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் பெரிய அளவில் அது போன்ற நகரங்களில் குடியேறியுள்ளதால் தங்கள் கலாசார குறியீடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறினார். தவிர பெண்ணுரிமை, தங்கள் எண்ணத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமை (Freedom of Expression) போன்றவைகள் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்திற்கும் வேறுபட்டுள்ளதாலும் தங்கள் இனத்தின் வாழ்வாதாரங்களான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் விளக்கினார்.
View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3கம்பன் கண்ட சிவராம தரிசனம்
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?
View More கம்பன் கண்ட சிவராம தரிசனம்பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1
அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்… பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.
View More பக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.
View More அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்
திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.
View More அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!
திராவிட இயக்க வரலாறு குறித்த பல அரிய, சுவாரசியமான தகவல்களுடன் நமது தளத்தில் சுப்பு அவர்கள் எழுதி வந்த “போகப் போகத் தெரியும்” தொடர், மேலும் முழுமையாக செழுமைப் படுத்தப் பட்டு புத்தமாக வெளிவந்திருக்கிறது. ஜனவரி-29 முதல் தஞ்சாவூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் திரிசக்தி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.
View More ”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா
சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது?… இந்த அரைவேக்காடுகள் பழைய தமிழர் வரலாற்றை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப் படத்தைப் பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்…
View More ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமாஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2
சில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார்.
View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2