அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி
ஆசிரியர் குழு
7 Jan 2010 |
அச்சிட
இந்து தருமம் அழியாத சனாதன தர்மம் என்கிறோம். அப்படி அழியாத தர்மமாக அது வாழ்வதற்கு காரணம் அதனால் வாழ்க்கையில் மங்கல ஒளி பெற்றவர்கள் அதனைக் காப்பாற்ற செய்யும் தியாகங்களினால்தான். நீங்கள் படிக்க போவது வெறும் செய்தியல்ல. ஒரு அரசின் மதவெறிக்கு எதிராக போராடும் ஒரு இளம் பெண்ணின் உண்மைக் கதை.
பங்காரம்மா…. தமிழ் ஹிந்துக்களின் வரலாறு எழுதப்படும் போது, ஹிந்துக்கள் உலகெங்கிலும் மகோன்னத வாழ்வு வாழும் நல்ல சூழல் ஏற்படும் போது, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு பெயராக விளங்கப் போகிறது.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசை ஒலிக்க ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் காதல் கணவனை கைப்பிடித்தார் பங்காரம்மா…ஆனால் மலேசிய அரசின் இஸ்லாமிய நீதி மன்றமும் ஆவணங்களும் பங்காரம்மாவை ஒரு இஸ்லாமியர் என கூறுகின்றன.
ஏன்?
பெரும்பாலான இந்து தமிழர்கள் மலேசியாவில் அனுபவிக்கும் ஒரு கொடுமையின் பெயர் வறுமை. அந்த வறுமையின் காரணமாக ஐந்து வயதே ஆகியிருந்த பங்காரம்மாவை மாணவர் சேவை விடுதியொன்றில் தங்கிப் படிக்கச்செய்தார் அவரது தந்தை. 1989 இல் - அதாவது பங்காரம்மாவுக்கு ஏழு வயதில் அவரது மதத்தை இஸ்லாம் என பதியவைத்தார்கள் இந்த ‘சேவை’ விடுதியினர். 16 வயதில் பங்காரம்மா இந்த விடுதியை விட்டு வெளியேறினார். பின்னர் சில ஆண்டுகளில் திருமணம் செய்தார். அவரது கணவர் சொக்கலிங்கம். திருமணம் ஹிந்து கோவிலில் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தேசிய ஆவண நிலையத்தில் தங்கள் திருமணத்தை பதியச் சென்ற போதுதான் பங்காரம்மா முஸ்லீமாக அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டார்கள்.
எப்படி ஒரு ஏழு வயது குழந்தை இஸ்லாமுக்கு சுய அறிவுடன் மதம் மாறியிருக்க முடியும்? இந்த மதமாற்றம் குறித்த நினைவு கூட தமக்கு இல்லை என்கிறார் பங்காரம்மா. ஆனால் இவரை நிர்பந்தித்து முஸ்லீம் ஆக்குவது என முடிவு செய்துவிட்ட மலேசிய அரசு துறைகளோ பங்காரம்மாவின் தந்தையே இவர்களை இஸ்லாமியராக்கி விட்டதாக ஒரு புறம் சொல்கிறது. அப்படியானால் ஏற்கனவே இஸ்லாமியராகிவிட்ட ஒருவரை ஏன் ஏழு வயதில் மீண்டும் இஸ்லாமியராக மதம் மாற்ற வேண்டும் என்கிற கேள்விக்கோ ஏதொரு பதிலும் அவர்களால் கூற முடியவில்லை. அரசுதுறையின் சார்பில் ஆதாரமாக கொடுக்கப்பட்ட சான்றிதழில் பங்காரம்மாவுடன் சேர்ந்து அவரது சகோதரியும் இஸ்லாமியராக மாறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆண்டு அவரது சகோதரி பிறக்கவேயில்லை என சுட்டிக்காட்டுகிறார் பங்காரம்மா. இந்த கொடுமையின் உச்ச கட்டம் என்னவென்றால் பங்காரம்மா-சொக்கலிங்கம் தம்பதியினருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளின் சான்றிதழ் பதிவில் அவர்களின் மதம் என்னும் இடத்தில் “போதிய தரவுகள் இல்லை” என்றும் தந்தை என்னும் இடத்தில் எந்த பெயரும் கொடுக்காமல் வைத்திருக்கும் அவலம்தான். மதவெறி நீதி பரிபாலனம் செய்யும் போது எளிய ஹிந்துக்களுக்கு கிடைக்கும் நீதி இதுதான் போலும்.
மலேசியாவில் இரட்டை நீதி முறை உள்ளது. இஸ்லாமியரல்லாதவர்களுக்கு சிவில் நீதி மன்றங்களும் இஸ்லாமியருக்கு ஷரியா நீதி மன்றங்களும் இயங்குகின்றன. முஸ்லீம் - முஸ்லீமல்லாதவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் ஷரியா நீதி மன்றத் தீர்ப்பே இறுதியாக அமைவதே நிலையாக உள்ளது. இத்தகைய நிலை 8 விழுக்காடு வாழும் தமிழ் இந்துக்களுக்கு தங்களுக்கு நீதி மறுக்கப்படும் என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ளது. பங்காரம்மா இஸ்லாமியர் என ஷரியா நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் அவர் ஹிந்துவானது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்து இஸ்லாமிய சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவார். பலவித மன-சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ரேவதி எனும் ஹிந்து பெண்ணின் நிலையை உலகமே கண்டு அதிர்ச்சி அடைந்தது.
ரேவதியின் கதையும் பங்காரம்மா போன்றதுதான். ரேவதி தமது 26 வயதில் காதலித்து கரம் பற்றிய கணவர் சுரேஷ். கரம் பற்றி வேள்வித்தீ சுற்றி திருமணம் செய்த கணவருடன் சகதர்மிணியாக நடத்திய இல்லற அன்பின் விளைவு திவ்வியதர்ஷனி. தமிழ் பண்பாட்டில் பொங்கலும் கார்த்திகையும் கொண்டாடி வளர்ந்த ரேவதியின் பெயர் அதிகார ஆவணங்களில் தொடர்பேயில்லாமல் என இருந்தது. சிதிபாத்திமா!
ஏனெனில் ரேவதியின் பெற்றோர் ஒரு கட்டத்தில் இஸ்லாமியராக மாறினராம். ஆனால் ரேவதி வளர்ந்ததோ தன் பாட்டியிடம். அவரோ தமிழர் பண்பாட்டில் தோய்ந்தவர். திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் என தொடங்கி தாயுமானவ சுவாமிகளும் வள்ளலாருமென வாழையடி வாழையாக வந்த தமிழ் பண்பில் வாழ்ந்தவர். நெறி தப்பி செல்லாமல் நல்தமிழர் வாழ்நெறியை தன் சந்ததிக்குப் புகட்டினார் அவர். இந்நிலையில் ஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார்.
முதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்’ ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள். இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் - குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள்.
ரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது. என்ற போதிலும் சில மணிநேரங்கள் தனது காரில் சென்று அந்த இஸ்லாமிய இல்லத்தின் முன்னர் நிற்பார் சுரேஷ். அங்கு கம்பிகளுக்கு நடுவில் பிரிந்தவர் காண்பர் ஒரு சில நிமிடத்துளிகள். இந்த உணர்ச்சிபூர்வமான கண்ணீர் வரவழைக்கும் காட்சியை அல்ஜஸீரா தொலைக்காட்சி காட்டியது.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள கம்பிக்கதவுகளில் அடைப்புகள் வைக்கப்பட்டு வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை காணமுடியாமல் ஆக்கப்பட்டது. சுரேஷ் மனம் தளர்ந்துவிடவில்லை. இந்த இஸ்லாமிய அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்தார். ‘மனிதரை கொண்டு வந்து நிறுத்தும்’ அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக இஸ்லாமிய அதிகாரிகள் தந்திரமாக ரேவதியை விடுதலை செய்து அவர் தனது இஸ்லாமிய பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விதித்தனர்.29 வயதான ஒரு பெண்மணி தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் தனது கணவரிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை என்னவென்று சொல்வது?
இந்நிலையில் ஆறுமாதங்கள் 180 நாட்கள் தாம் சிறை போன்ற அந்த ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லத்தில்’ நடந்த சித்திரவதைகளை மனரீதியிலான கொடுமைகளை விவரித்துள்ளார் ரேவதி. தலையில் முக்காடு அணிந்திட வற்புறுத்தப்பட்ட ரேவதி பசுமாமிசம் உண்ணும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். அதைவிடக் கொடுமை “நீ முஸ்லீமாக மாறாவிட்டால் உன் குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிடுவோம். உன்னால் பார்க்கவே முடியாது.” என மனரீதியில் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர் மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள். ஆனால் ரேவதி கூறுகிறார்: “என் கணவர் எனக்காக வெளியே காத்திருப்பதை நான் காண்பேன், அவர் நிற்கும் இடத்துக்கு ஓடுவேன் ஆனால் அவர்கள் என்னை பிடித்து இழுத்து சென்றுவிடுவார்கள். அந்த இல்லத்திலிருந்து பலரும் தாங்கமுடியாமல் ஓடிவிடுகிறார்கள். ஆனால் நான் ஓடவில்லை. நான் இந்து தருமத்தின் நற்பெயரை காட்டவே ஓடி ஒளியாமல் அங்கு (கொடுமைகளை)எதிர் கொண்டு பொறுத்திருந்தேன்….என் பெயர் ரேவதியாகவே இருக்கும் இறுதிவரை….”
தமிழ் பண்பாட்டுக்காக தான் அணியும் திலகத்துக்காக தன் கணவருடன் இணைவதற்காக போராடும் ஒரு வீர தமிழ் பெண்மணியின் வாழ்க்கை ரேவதியுடையது. தன் திருமணத்தை நிலைநிறுத்தவும் தன் குழந்தைகளுக்கு தானும் தன் கணவரும் பெற்றோராகவும் தனது தாய் மதத்தின் பாரம்பரியம் கிடைக்கவும் போராடும் தாயின் போராட்டமே பங்காரம்மாவுடையது.
உலகின் மிக தொன்மையானதும் இன்றும் வாழக்கூடியதுமான அழிவற்ற என்றைக்கும் வாழும் அறமான இந்து தருமத்தினை காப்பாற்ற ஒற்றைப் பெண்களாகக் குரல் கொடுக்கும் இத்தகைய வீரப் பெண்மணிகளாலேயே நம் தருமம் வாழ்கிறது. இவர்களுக்கு நம்மால் என்ன கைமாறு செய்ய முடியும்? பங்காரம்மா போராடுவது அவருக்காக மட்டுமல்ல உங்களுக்கும் எனக்கும்தான் நம் ஒவ்வொருவருடைய நாளைய தலைமுறையும் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை உணர வேண்டும்.
தமிழ் ஹிந்து வாசகர்களை பங்காரம்மாவுக்கு உதவ இந்த இணைய கோரிக்கையில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவில் உள்ளோர் டெல்லியில் உள்ள மலேசிய இந்திய தூதரகத்துக்கு பின்வரும் கடிதத்தை பிரதியெடுத்து உங்கள் கையெழுத்தை இட்டு தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் சென்னையில் உள்ள மலேசிய ஹை கமிஷனுக்கு கீழ்க்காணும் கோரிக்கையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
டெல்லி மலேசிய தூதரக முகவரி:
His Excellency Malaysian High Commissioner to India
50-M, Satya Marg
110021
Chanakyapuri
New Delhi
IndiaEmail: maldelhi@kln.gov.my
சென்னை மலேசிய ஹை கமிஷன் முகவரி:
Mr. Anuar Kasman
Consul General
No. 44, Tank Bund Road
Nungambakkam
Chennai-600034
E-mail : malchennai@kln.gov.myதயவு செய்து எவ்வித கடுமையான அல்லது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திவிட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம். நமது நோக்கம் நம் சக-தமிழ் ஹிந்து
சகோதரியான பங்காரம்மாவுக்கு ஹிந்துவாக வாழும் உரிமையை ஏற்படுத்திக்
கொடுப்பதுதான் என்பதை நினைவில் கொண்டு அதற்கு ஏற்ப பொறுப்புணர்வுடன்
நடந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.From
[தங்கள் முகவரி]
To
[டெல்லி மலேசிய தூதரக முகவரி] அல்லது [சென்னை மலேசிய ஹை கமிஷன் முகவரி]
Your Excellency,
I recently read the news about Bangaramma, a 27 year old Tamil Hindu woman who being converted unethically to Islam when she was a child is now fighting for her right to live as a Hindu. She is also the wife of a Hindu husband and mother of two children. As a Hindu and as a Tamil I am pained to see her agony in her battle for her right to live as a Hindu. As Hindus we value the innate spirituality of all religions and at the same time we also claim our right to live and practice our age old traditions, which form an integral part of one of the oldest and richest spiritual
traditions in the history of humanity.Forced to lose that tradition is a traumatic event for a Hindu and almost a soul-death for a Hindu mother. Hence we request you to understand the Hindu feelings and ensure that Bangaramma is allowed to practice her ancestral faith and allow the children of this Hindu couple to be registered as Hindus in the government records.
I thank your excellency for your time and patience,
Yours truly,
[தங்கள் பெயர்]
Date:
Station:
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
7 January 2010 at 7:13 am
Bangaramma is suffering in an alien country. As Swami Vivekananda told,even if one hindu suffers from such avoidable problems, all Hindus should wake and give their moral support through letters to the respective authorities.
What has happened to our High-Class shouting Pseudo-Secularists who are shouting from the roof-top for justice for I ndian minorities (Popular Media also).
will the popular media will take up these cases of harassement by the Majority muslim population of Malasia.
Let us all join in this crusade.
Hariharakrishnan.