இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

(தொடர்ச்சி…)

பகுதி – 3 – நடக்கக்கூடும் என்று நான் அஞ்சுபவை

“உன்னைப்போல் ஒருவன்” திரைப்படத்தின் ஆரம்பத்தில் மோகன்லால் பேசும் வசனமிது– “சுனாமி போல் வந்தான். என் வாழ்க்கையை தலைகுப்புற புரட்டிப் போட்டுட்டு போய்ட்டான்”. இந்த பகுதியைப் படித்தபிறகு சிலரின் நிலையும் அப்படி மாறலாம். தாங்கள் சரி என்று நினைத்த கொள்கைகள் சரிதானா என்று மறுமுறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டி வரலாம். சிலருக்குக் கோபம் வரலாம். சிலர் இந்த கட்டுரையாளர் ஒரு கடும்போக்கு சிந்தனை கொண்டுள்ளவர் என்று முடிவெடுக்கலாம். சிலர் “இந்தியன்” திரைப்படத்தில் கதாநாயகி கூறுவதுபோல் “புத்திக்குப் புரிகிறது. ஆனால் மனதால் ஏற்க முடியவில்லை” என்று நினைக்கலாம். எது எப்படியெனினும் சிலரையாவது இன வேற்றுமை என்பதை இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரும் பிரச்சினையாக யோசிக்க வைத்தாலே பெரிய விஷயம் என்று எண்ணுகிறேன்.

இந்தப் பகுதியில் வட அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய நியூசிலாந்து நாடுகளின் கல்வி, சமூகம், பொருளாதாரம், கலாசாரம் போன்ற துறைகளில் குடியேறிகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, பெரும்பான்மை சமூகத்தினரின் திகைப்பு போன்றவைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் எழுத முயற்சிக்கிறேன். பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி பின்னர் “குடியேறியவர்களாக” அறிவிக்கப் படும் இஸ்லாமியர்களைப் போன்றே மேற்கத்திய நாடுகளின் குடியேறிகளுக்கும் அந்நாட்டு அரசுகள் ஜால்ரா போடுவதால் ஏற்படும் பிற்கால அபாயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இன ஒற்றுமை என்பது என்றுமே ஏற்படாது என்று நான் கூறவில்லை. கடந்த காலங்களில் நடந்த வன்முறைகள், நிகழ்காலத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கும் இன ரீதியான சுணக்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது மனிதன்
இயற்கையாகவே தன் இன மக்களுடனேயே வாழ விரும்புகிறான். மற்றும் ஊடகங்களும், தலைவர்களும் சிறுபான்மையினருக்கு சாமரம் வீசினால் அதைத் தன் இனத்துக்கு எதிரானதாகவே எடுத்துக்கொள்கிறான். சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது.

 

ஊடகங்களின் முக்கியத்துவம்

ஏற்கெனவே கூறியபடி இன ஒற்றுமை சாத்தியமே என்று உலகத் தலைவர்கள், புத்திஜீவிகள் திரும்பத் திரும்ப கூறினாலும் இவர்களின் கருத்துகள் ஊடகங்களின் மூலமாகவே பொதுஜனத்திற்குப் போய் சேருகிறது. “Manufacturing Consent” என்று கூறுவதுபோல் இவர்களால் எப்படிப்பட்ட தவறான அபிப்பிராயத்தையும் உண்மையென்று பெரும்பாலானவர்களை நம்ப வைக்க முடிகிறது. இதை அறிந்ததால்தானே தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல் இருக்கிறது.

 

இல்லாத இன ஒற்றுமையை உருவாக்க முயலும் ஊடகங்கள்

“State of Denial” என்ற ஒன்றை ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதாவது கண்முன்னே நடப்பவற்றைக்கூட நடக்காதது என்றும் நடக்காததை நடந்ததாகவும் நம்புவது. ஊடகங்கள் ஒரு படி மேலேசென்று தாங்கள் நம்ப விரும்புவதை மற்றவர்களுக்கும் பரப்புகிறார்கள். சில உதாரணங்கள்…

students-protest-in-aus(1) ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாகவே இந்திய மாணவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதைக் காண்கிறோம். ஒரு மாதத்திற்கு முன்வரை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதை இன ரீதியான வன்முறை என்று ஒப்புக்கொள்ளவில்லை. இந்திய மாணவர்கள் சாதாரணமாக அதிகப் பணத்தை கையில் வைத்திருப்பதால் சில ஆஸ்திரேலியத் திருடர்கள் அதை அபகரிக்கும்போது இந்தியர்களை தாக்குவதாக நம்ப வைத்தார்கள். இதை இந்திய ஊடகங்களும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வந்தன. ஆனால் கடைசியாக நடந்த தாக்குதல் இதை தவிடுபொடியாக்கியது. மெல்போர்ன் நகரின் ஒரு இரயில் நிலையத்திற்கு வெளியே மூன்று இந்திய மாணவர்களை ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இதில் வித்தியாசம் என்னவெனில் இந்தத் தாக்குதலில் 85 வெள்ளை ஆஸ்திரேலியர்கள் ஈடுபட்டார்கள். இவர்களில் சிலர் வெள்ளை ஆஸ்திரேலியப் பெண்கள். இதை விட முக்கியமான இன்னொரு விஷயம், இந்தத் தாக்குதலின்போது வெள்ளையர்கள் இந்திய மாணவர்களை நோக்கிக் கூறிய வார்த்தைகள். “Go Back, You Indian Dogs”. “திரும்பி போங்கள், இந்திய நாய்களே”. இந்த வாசகத்தை இந்திய ஊடகங்கள் “Go Back, You Indians” “திரும்பி போங்கள், இந்தியர்களே!” என்று மாற்றினார்கள். இந்திய அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு வாசகத்தை மாற்றச்சொல்லியிருக்காது. தொலைக்காட்சிகளே தங்கள் நேயர்கள் இதைத்தான் பார்க்க வேண்டும் (அல்லது) இதைத்தான் பார்க்க விரும்புவார்கள் என்று ஊகித்து ஒளிபரப்புகிறார்கள்.

(2) ஈராக் யுத்தத்தில் அமெரிக்கா கடந்த வருடங்களில் பல சறுக்கல்களைச் சந்திப்பதைப் பார்க்கிறோம். அமெரிக்கா இதைச் shia-and-sunniசரிசெய்ய மேலும் பல்லாயிரம் துருப்புகளை ஜார்ஷ் புஷ் அதிபராக இருந்தபோது அனுப்பியது. ஈராக் முழுவதும் அமைதி திரும்பவில்லையென்றாலும் தலைநகர் பாக்தாத்தில் மட்டுமாவது ஒரளவிற்கு அமைதியை ஏற்படுத்தியது. இதற்கு மிக முக்கிய காரணம், அதிகத் துருப்புகள் மட்டும் இல்லை என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? தங்களுக்குள்ளேயே தாக்கிக்கொள்ளும் ஷியா மற்றும் சுன்னி இனத்தவர்கள் இன்று பாக்தாத் நகரில் தனித்தனி இடங்களில் வசிக்கிறார்கள். இதைப்பற்றி எந்தத் தொலைக்காட்சியும் பேசாது. இவர்களின் “Cosmopolitan Culture”ன் கோஷம் குறைந்து விடுமே!

amarnath-land-transfer-controversy(3) சில மாதங்களுக்கு முன்னால் காஷ்மீரின் அமர்நாத்தில் நடந்ததை நம்மால் மறக்க முடியுமா? பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு அம்மாநில ஆளுநர் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார். இதன்படி அமர்நாத்திற்குப் போகும் யாத்திரிகர்ளின் வசதிக்காக சில ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்திற்குத் தலைமை வகித்த எதிர்க்கட்சி ஒன்று, இந்துக்களை காஷ்மீரில் குடியேற்ற நடக்கும் சதி என்று கூறியது. இவ்விஷயத்தை ஊடகங்கள் ஒளிபரப்பினாலும் இவ்விஷயத்தைப் பற்றி எந்த அரசியல்வாதியிடமும் கருத்துக் கேட்கவில்லை. அரசியல்வாதிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை என்று கூறவும் வேண்டுமா? தங்களுக்கோ அல்லது தங்களின் நேயர்களுக்கோ சங்கடம் ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்பும் எந்த விஷயத்தையும் இவர்கள் அலச மாட்டார்களே. இவர்களின் இன ஒற்றுமை தாகம் குறைந்து விடுமே.

k-p-sgill(4) K.P.S Gill (கில்) என்னும் பெரியவர். தேச பக்தி உள்ள எவரும் இவருடைய செயற்கரிய செயலை மறந்திருக்க முடியாது. பஞ்சாபில் தீவிரவாதம் தழைத்தோங்கிய காலத்தில் அம்மாநில போலீஸ் துறைக்கு தலைமை ஏற்று தீவீரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். சில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார். அவர் கூறிய இரண்டாவது விஷயத்தை, பேட்டி எடுப்பவரும் பெரிது படுத்தவில்லை; வேறு எந்தத் தொலைக்காட்சியும் பேசவில்லை.

(5) அக்டோபர் 21ம் தேதி CNNல் ஒளிபரப்பான செய்தி. ஒரு கதையுடன் இச்செய்தியை ஒளிபரப்பினார்கள். மெக்ஸிகோ நாட்டிலிருந்து இச்செய்தியின் கதாநாயகி, தான் 7 வயதாகும்போது தன்னுடைய பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியதாகக் கூறினார். இப்போது இவருக்கு வயது 26. அமெரிக்காவின் சட்டத்தின்படி அந்த நாட்டில் பிறந்தவர்தான் குடியுரிமை பெறமுடியும். [சட்டபூர்வமாக தொழில் துறையில் பல வருடங்கள் வேலை செய்தபிறகும் குடியுரிமை வழங்கப்படுகிறது.] இவர் அமெரிக்காவில் படித்துமுடித்து வேலைபார்த்து வந்தாலும் இவர் சட்டத்திற்குப் புறம்பாக வசிப்பவர் (Illegal immigrant) என்றே கருதப்படுவார். இவருக்கே ஒரு குழந்தையும் இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இவரின் குழந்தை அமெரிக்கக் குடியுரிமை உடையது. இவர் வசிக்கும் அரிசோனா மாகாணத்தின் நகரில் ஒரு ஷெரிப் (இவரை நம்மூர் இன்ஸ்பெக்டர் என்று வைத்துக்கொள்வோம்). இவர் பணியில் மிகவும் கெட்டி. அதனாலேயே இவரை அங்கிருக்கும் சட்டபூர்வமற்ற குடியேறிகளுக்குப் பிடிப்பதில்லை.சூப்பர் மார்க்கெட் போன்ற தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் இடங்களை திடீர் திடீரென்று சோதனை செய்து, சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறி வேலை செய்பவர்களை சிறையில் தள்ளுகிறார். நம் கதாநாயகி ஐந்து மாதம் சிறை தண்டணை அனுபவித்து முடித்து வெளியில் வந்திருக்கிறார். இவர் நீதிமன்றத்தில் தானும் தன்னுடைய சித்தி, மாமா போன்ற அனைத்து சொந்தங்களும் அமெரிக்காவிலேயே வாழ்வதாலும் மெக்ஸிகோவில் தனக்கு யாரும் இல்லையென்றும் வாதிடுகிறார். இவர் வாதத்தை நீதிமன்றம் மறுதலித்து இவரை உடனே மெக்ஸிகோவிற்குத் திரும்பிச்செல்லுமாறு உத்திரவிடுகிறது. இவர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

sheriff-joeஇனி கதையை விட்டு CNNன் அலசலுக்கு வருவோம். இந்த அலசலில் நம் ஷெரிப்பும் ஒரு அமைப்பின் தலைவியும் வருகிறார்கள். இந்தப் பெண்மணி நம் கதாநாயகிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். சட்டத்திற்குப் புறம்பாக இவர்கள் வேலை செய்தாலும் இவர்களை கருணையுடன் நடத்த வேண்டும் என்று வாதிடுகிறார். சட்டபூர்வமற்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் குடியேறிகளை ஒன்றிணைத்து, போராட்டம் நடத்துவதுடன் இந்த ஷெரிப்பின் உருவ பொம்மையின் தலையையும் அந்தப் போராட்டத்தில் வெட்டி எறிகிறார்கள். இனி நம் ஷெரிப்பின் பதில். தான் சட்டத்தின்படியே இவர்களை சிறையில் அடைப்பதாகக் கூறுகிறார். இங்கு ஒரு மிக முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இவர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டபூர்வமானவையே என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். இவ்விஷயத்தை அறிந்த அமெரிக்க மத்திய அரசு ஷெரிப்பிடம் இதைப் போன்ற நடவடிக்கைகள் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது. ஆனால் இவர் அமெரிக்க மத்திய அரசு கூறுவதை கேட்கப் போவதில்லை என்றும் தன்னுடைய நடவடிக்கைகள் சட்டபூர்வமானவையே என்பதால், தான் தொடர்ந்து அதையே செய்யப் போவதாகவும் கூறுகிறார். இவருக்கு அந்நகரில் இருக்கும் பெரும்பான்மை வெள்ளை இனத்தவரின் ஆதரவும் இருக்கிறது. நிதானமாக யோசித்து பாருங்கள், ஒரு அரசு அதிகாரி சட்டத்திற்கு உட்பட்ட வேலையைச் செய்ய மத்திய அரசு தடை போட விரும்புகிறது. சிறுபான்மை ஓட்டிற்காகவும் “இன ஒற்றுமை” கோஷத்திற்காகவும் அரசியல் சாசனத்தையே ஒரு அரசு குலைக்க முயலுகிறது.

இதைவிட முக்கியமாக ஷெரிப் கூறும் இன்னொரு விஷயம். ஏற்கெனவே அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை மெக்ஸிகோவினர் பறித்து விடுகின்றனர் என்றார். கடைசியாக நம் ஊடகப் பிரச்சினைக்கு வருவோம். செய்தியாளர் ஷெரிப்பிடம் கேட்ட கேள்வி இது– “நீங்கள் (ஷெரிப்) சட்டபூர்வமற்ற குடியேறிகளை சிறையில் தள்ளுவதனால் ஏதேனும் குற்றம் நடக்கும்போது இவர்களுக்கு ஏதேனும் துப்புத் தெரிந்தாலும் தைரியமாக எப்படி உங்களிடம் சாட்சியம் கூற முன்வருவார்கள்?” சட்டபூர்வமற்ற குடியேறிகள் சாட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை விட்டுவிட முடியுமா? ஊடகங்களின் உள்நோக்கம் புரிகிறதல்லவா? எப்படியேனும் நம் கதாநாயகியைப் போன்றோருக்கு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே ஷெரிப்பை மடக்க முயற்சி செய்பவர்களை என்ன செய்வது? இனி ஊடகங்களை விட்டு நம் நீதிக்கு வருவோம்.

இதைப் படிப்பவர்கள் உடனடியாக உங்கள் நீதியை வழங்கி விடாதீர்கள். அமெரிக்காவில் இந்தப் பெண்மணியைப் போன்று சட்டபூர்வமற்ற மெக்ஸிகோ குடியேறிகள் ஒன்றரைக் கோடி பேர். இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கினால் பிரச்சினை முடிந்துவிடும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். இன்னும் கோடிக்கணக்கானோர் மெக்ஸிகோவிலிருந்து வந்து குடியுரிமைக்காக வரிசையில் நிற்பார்கள். குடியுரிமை சம்பந்தமாக இன்னொரு விஷயம். இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இரண்டரை கோடிக்கும் அதிகமான பங்களாதேஷின் மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒன்றரை கோடி பேருக்கு இந்திய அரசால் குடியுரிமை வழங்கப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன. நம் அரசியல்வாதிகள் ஓட்டிற்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களாயிற்றே. எஞ்சியுள்ளவர்களுக்கும் வரும் ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமையை வழங்கி விடுவார்கள். நம்மில் பலர் இதை எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறேன். நமக்கு ஒரு நியாயம், அமெரிக்கர்களுக்கு ஒரு நியாயமா?

மேற்கூறிய செய்திகளிலிருந்து உலகம் முழுவதிலும் “Main Stream Media” என்ற வகையிலுள்ள ஊடகங்கள் மக்களுக்கு செய்திகளை உள்ளது உள்ளபடி ஒளிபரப்புவதில்லை என்பது புரியும்.

ஊடகங்களில் பேட்டி கொடுப்போர் சிலரின் உள்நோக்கமும் தரமும் முன்பே கூறியது போல; புத்திஜீவிகள் தங்கள் “இன ஒற்றுமை” என்னும் தாரக மந்திரத்திற்காக உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுகிறார்கள். அரசியல்வாதிகளோ சிறுபான்மை ஓட்டிற்காக நாளை வரவிருக்கும் பிரச்சினைகளை தங்கள் அடுத்தத் தலைமுறைக்கு தள்ளிவிட்டுச் செல்கிறார்கள்.

ஆனால் இவர்களைப்போல் அல்லாமல் உண்மையாக மனமுவந்தே “Cosmopolitan Culture”ஐ ஆதரிக்கும் ஒரு குழுவைப் பார்ப்போம். இவர்கள் 25 முதல் 40 வயது வரை உள்ள சில இளைஞர்கள். இவர்கள் 25 வயது முதலே இந்தியாவில் 40000, 50000 ரூபாயென்று சம்பாதிப்பவர்கள். ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று சம்பாதிப்பவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி லவலேசமும் கவலைப்படத் தேவை இல்லாதவர்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்பத்தின் மருத்துவ வசதிகள் போன்றவை இவர்களுக்காகக் காத்திருக்கின்றன. கொடூரம் என்னவெனில் இவர்கள் தங்கள் மூதாதையர்களின் கலாசாரத்தைப் பற்றி எள்ளளவும் கவலை இல்லாதவர்கள். முந்தைய தலைமுறையின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், மதச் சின்னங்கள் போன்றவைகளை அவசியம் இல்லாமலே கூட மாற்றிக் கொள்ளத் தயாரானவர்கள். இவர்களைப் போன்ற சில இளைஞர்கள் ஊடகங்களில் தோன்றும் போது “Cosmopolitan Culture”ஐப் புகழ்வார்கள். ஊடகங்களும் கிடைத்தான் ஒருவன் என்று பாரதி கூறியதைப் போல களிநடனம் புரிவார்கள்.

 

சினிமாவின் கூத்தாட்டங்கள்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன ஒற்றுமைப் பேயால் அடிக்கப்பட்டிருக்கும்போது சினிமாவால் மட்டும் சும்மா இருக்க முடியுமா? ஹாலிவுட் படங்களைப் பார்த்தவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். வெள்ளை இனக் கதாநாயகனுடன் பெரும்பாலான படங்களில் ஒரு கருப்புத் துணை கதாநாயகனும் இருப்பார். படத்தின் கடைசியில் கருப்பின நடிகர் தியாகம் செய்து உயிரை விடுவார். 70களில் அமெரிக்காவில் போலீஸ் உத்யோகத்தில் பெரும்பாலானவர்கள் வெள்ளை இனத்தினரே. ஆனால் சினிமாவிலோ வலுக்கட்டாயமாக கருப்பு போலீஸ்காரரை தியாகம் செய்ய வைத்து உயிரை விடச் செய்வர்.

unnai-pol-oruvanதமிழ் படங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இந்த வருடம் வெளியான “உன்னைப்போல் ஒருவன்” படம் வரையில் இவர்களின் இன ஒற்றுமை தாகம் அடங்கவில்லை. அப்படத்தில் மூன்று முஸ்லீம் தீவிரவாதிகளுடன் ஒரு தீவிரவாதி இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார். எல்லோரையும் முஸ்லீம்களாகக் காட்டினால் இவர்களின் “இன ஒற்றுமை” கோஷம் செத்துவிடுமே. இவர்கள் எடுத்துக்கொள்ளும் இன்னொரு அஸ்திரம் பிராமண இன எதிர்ப்பு. பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடிக்க வேண்டும் என்று திராவிடக் கட்சித் தலைவர்கள் கூறி 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. பார்ப்பானுக்கு விஷம் இருந்ததோ என்னவோ இவர்கள் கூறியபடி பார்ப்பானைக் கொன்றாகி விட்டது. ஆனாலும் செத்த பாம்பை அடிக்கும் கில்லாடிகளாயிற்றே இவர்கள். பிராமண இன எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை பொழுது போகவில்லையென்றால் எடுத்துக் கொள்வார்கள். ரஜினிகாந்த் நடித்த “வேலைக்காரன்” படக்கதைக்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லை. இதில் ஒரு பாடல் “மாமனுக்கு மைலாப்பூருதான்”. ஏன் “செட்டியாருக்கு காரைக்குடிதான்” என்று எழுதியிருக்கலாமே. இந்தப் படத்துக்கும் மாமன், மாமிக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் அன்று முதல் இன்று வரை பிராமணரை கிண்டல் செய்தால் நகைச்சுவை எடுபடும் என்று இவர்களே முடிவிற்கு வந்ததினால் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பிராமணரைக் கிண்டல் செய்வர். ஏன் செட்டியாரையோ, சைவ பிள்ளைமாரையோ, வன்னியரையோ, தேவரையோ, கவுண்டரையோ கிண்டல் செய்ய மாட்டார்கள். தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு விடுவார்களே!

இனி ஊடகங்களை விட்டு அடுத்த விஷயத்திற்குச் செல்வோம்.

 

அமெரிக்காவே குடியேறிகளின் நாடுதானே!

நியாயமான கோஷமாகத் தெரியும் இதைப் பற்றிச் சிந்திப்போம். சிகப்பு இந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கப்பட்டவர்களின் நாடுதான் அமெரிக்கா. ஆனால் வெள்ளையர்கள் அமெரிக்காவிற்குள் குடிபுகுந்ததும் சிகப்பு இந்தியர்கள் புதிய நோய்களாலும், வெள்ளையர்களாலும் அழிந்து விட்டார்கள். சிகப்பு இந்தியர்களில் இன்று எஞ்சியுள்ளவர்களும் வெள்ளையர்களுடன் திருமணத்தால் சேர்ந்து உருவானவர்களே!. மேலும் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வெள்ளை இனத்தாரின் முந்தைய மற்றும் இன்றைய தலைமுறைகளின் பங்களிப்பே இன்றுவரை நிலைபெற்றுள்ளது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்கள் பழங்குடியினரை அழித்திருக்கலாம். ஆனால் இன்றுள்ள நிலையில் அமெரிக்கா வெள்ளை இனத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்ற நடைமுறை யதார்த்தத்தை ஒப்புக்கொள்வோம். [சிகப்பு இந்தியர்களுக்கும், நம் போன்ற இந்தியர்களுக்கும் சம்பந்தமே இல்லை. கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தபோது அவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று அறிவோம். அவர் அமெரிக்காவில் இருந்த பழங்குடியினர்களை இந்தியர்கள் என்று அழைக்கப்போக இன்றுவரை அந்த அடைமொழி தொடர்கிறது.]

 

இடதுசாரிகளின் எல்லையில்லா உலகம்

பிரச்சினைகளே இல்லாத இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கும் இடதுசாரிகள், இதைப்போன்ற விஷயங்களை விட்டு விடுவார்களா!…..

(தொடரும்….)

9 Replies to “இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2”

  1. I wish to bring to the author’s notice about the genocide, conducted by the Vaticans during the 2nd world war. The Croatians, with the blessing/aid of the Vatican, massacared close to 1 million Serbs( also christians) My patient from Croatia, Serbian by birth, confirmed this story.Apparently, the Serbian population in Croatia stands at less than 5 % now

  2. பங்களாதேஷில் இருந்து முறைகேடாக குடியேறியவர்கள் வசிப்பது மேற்கு வங்காளம்.இவர்கள் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.இவர்களை நமது அரசு ஒன்றும் செய்வதில்லை காரணம் ஓட்டு.

  3. மிகவும் சரியான வார்த்தைகள். இந்த மீடியாகளின் கூத்தை அடக்கினால் மட்டுமே நாடு வுருபடும்.. இந்த ஜனநாயகத்தின் நாலு தூண்களும் வுழுத்து போன தூண்கள் தான்

  4. /// அன்று முதல் இன்று வரை பிராமணரை கிண்டல் செய்தால் நகைச்சுவை எடுபடும் என்று இவர்களே முடிவிற்கு வந்ததினால் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பிராமணரைக் கிண்டல் செய்வர். ஏன் செட்டியாரையோ, சைவ பிள்ளைமாரையோ, வன்னியரையோ, தேவரையோ, கவுண்டரையோ கிண்டல் செய்ய மாட்டார்கள். தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு விடுவார்களே///

    இதைத்தான் சார் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு வர்ரேன்.
    கொஞ்சம் இதையும் படிச்சு பாருங்களேன்…..தெரியும்…

    https://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

    https://hayyram.blogspot.com/2009/05/2.html

    https://hayyram.blogspot.com/2009/05/3.html

    நன்றி

  5. //ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார்//
    “அவர் சொன்னது ஞாயம் ………
    ஆனால் அரசாங்கம் சேயுமா????””

  6. அது என்ன “பார்ப்பான் ” .?????
    உங்களுக்கு தெரியுமா ????
    அவர்களும் மனுசன்கள் தானே …

  7. இந்த இந்து மத உணர்வும் ஒற்றுமையும் இலங்கை இந்து ஆலயங்கள் அழிவு குறித்து எதுவும் வெளிவர இல்லையே?. இலங்கை அரசும் புத்தர்களும் அரஜாகத்தில் ஆலயங்களை இடிக்கின்றார்களே?

  8. அன்பு உள்ளங்களே
    இலங்கையில் யுத்தத்தை முடித்துவிட்டோம் என்ற போர்வையில்
    மிஹப்பெரிய அநியாயம் நடக்கிறது. சிவபூமியாகிய தமிழர்கள் வாழும் பகுதியில் பௌத்த ஆலயங்களும் சிங்கள குடி ஏற்றங்களும் திட்டமிடப்பட்டு நடக்கின்றன. இதை எந்த நாடும் தட்டிக்கேட்கவில்லை. ஏன் சைவ ,வைணவ அடியார்களால் துரத்தப்பட்ட பௌத்த ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் பௌத்த விகாரை கட்ட அனுமதித்ததன் மூலமும் புத்தகயாவில் புத்த்விஹாரங்கள் கட்ட இடம் கொடுத்ததன் மூலமும் இந்தியாவில் இந்துக்களின் நிலை எப்படி இருக்கிறது தெளிவாக தெரிகிறது. இலங்கையின் விடயத்திலும் இது பொருந்தும். சைவ ஆதீனங்களும் இந்துமத மடாலயங்களும் இதற்க்கு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கின்றன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *