கம்பன் கண்ட சிவராம தரிசனம்

அன்று மிதிலையின் வரலாற்றில் ஒரு பொன்னாளாக ஆகப் போகிறது.

முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு போல நிற்கும் அந்த சிவதனுசு என்னும் வில்லை உடைக்கவேண்டும், பாற்கடல் பள்ளியில் பிரிந்த தெய்வ தம்பதியர் ஒன்று சேரவேண்டும் – அது ஒன்றுதான் பாக்கி. அண்ணலின் நெஞ்சிலும் அவளே நீக்கமற நிறைந்து விட்டாள். இரவு முழுவதும் அவளையே எண்ணி, எப்போது நிலவு மறையும், கதிரவன் உதிப்பான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் இராமன்.

பொழுது புலரத் தொடங்குகிறது. அதைக் கம்பன் இப்படி விவரிக்கிறான் –

ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம்
மயல் உழந்து, தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடருடைய செங்கமலம்
முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர்முக யா-
னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
விழியே போல், உதயம் செய்தான்.
(மிதிலைக் காட்சிப் படலம், 150)

[ததையும் மலர்த் தார் அண்ணல் – மலர்கள் அடர்ந்த மாலையணிந்த இராமன்; மயல் உழந்து – மயங்கி; தளரும் ஏல்வை – தளரும் காலத்தில்; செய்ய வெய்யோன் – இளஞ்சிவப்பாக எழும் சூரியன்; புகர்முக யானை – புள்ளிகளுடைய முகத்தயுடைய யானை; உரிவை – உரித்த தோல்; நுதல் – நெற்றி]

இருளைக் கிழித்துக் கொண்டு உதயகிரி மீது இளஞ்சூரியன் எழுகிறான். அது எப்படியிருக்கிறது? புதையிருள் வடிவம் கொண்ட கரிய யானையின் (கஜாசுரனின்) தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்ட மாமலையாகிய மகாதேவனின் நெற்றிக் கண் திறப்பது போல் இருக்கிறதாம்!

சுடரோன் எழுந்து விட்டான். அவனது கதிர்கள் நாற்புறமும் பரவுகின்றன. அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும்
கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர, வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(மிதிலைக் காட்சிப் படலம், 153).

[மறை – வேதம்; கின்னரர்கள் – குதிரை முகமும் மனித உடலும் கொண்டு பறந்து கொண்டே இசை பாடும் தேவ வர்க்கத்தினர்; வேலை – கடல்; மண்ணும் மணி முழவு – மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட அழகிய மிருதங்கம்; வாள் இரவி – ஒளி பொருந்திய சூரியன்; கண்ணுதல் வானவன் – நெற்றிக் கண்ணுடைய சிவபிரான்]

ravivarma_rama_breaking_bowதேவரும், முனிவரும், மனிதரும் புகழ்ந்தேத்த, ஆர்ப்பரிக்கும் அலைகடலே மிருதங்கமாக ஒலிக்க, அந்த வான் அரங்கில் சிவ நடனம் நிகழ்கிறது. ஆடும் கூத்தனின் செஞ்சடை விரிவது போன்று கதிர்கள் விரிந்து உலகனைத்தையும் தீண்டுகின்றன.

இப்படி, சீதா கல்யாணம் நடக்கும் அந்த சீரிய நாளின் உதயத்தை சிவனது திருக்காட்சியாகக் கம்பன் வர்ணித்திருக்கிறான். சிவதனுசை முறிக்கப் போகும் மாவீரனின் பெருமைக்கு அந்த நாளின் உதயமே கட்டியம் கூறுகிறது என்பதைக் குறிக்கத் தானோ?

சபை கூடிவிட்டது. அரசகுமாரர்களை விசுவாமித்திர முனிவர் ஜனக மகாராஜனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ”குழந்தாய் ராமா, இந்த வில்லைப் பாரேன்” (”வத்ஸ ராம, தனு: பஷ்ய” – வால்மீகி) என்று குறிப்புணர்த்துகிறார் முனிவர். முனிவரின் நினைப்பைப் புரிந்து கொண்ட இராமன் எழுகிறான். அதைக் கம்பன் பாடும் அழகு தான் என்னே!

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்;
“அழிந்தது வில்” என வானவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்;
(கார்முகப் படலம், 26)

[கொழுங்கனல் – கொழுந்து விட்டெரியும் தீ; முப்பகை வென்றார் – காமம், கோபம், மயக்கம் முதலாகிய மூன்று பகைகளையும் வென்ற முனிவர்கள்]

வேள்வியின் முடிவில் பூர்ணாகுதியாக சொரிந்த நெய் முழுதும் வழிய, வேள்வித் தீ ஜுவாலையாகக் கொழுந்து விட்டு விண்ணை நோக்கி எழுவது போல, இராமன் எழுந்தானாம்! கார்மேக வண்ணனைத் தீவண்ணனாக இங்கே கவி சித்தரிக்கிறார். (”செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே” – அப்பர் தேவாரம்)

இந்த உவமை மிகவும் அழகானது. வேட்டல் என்றால் விரும்புதல். வேள்வி என்ற சொல் அதிலிருந்து வருகிறது. தெய்வீக சங்கல்பமே இச்சையாக மாறி வேள்வியாக உருக்கொள்கிறது. வேள்வியின் விளைவான பலன் நெருங்கப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் தீ எழுவது போன்று, சீதா ராமர் திருமணம் நடக்க வேண்டும் என்ற தெய்வ சங்கல்பத்தின் உருவாக ராமன் வில்லுடைக்க எழுகிறான்.

சூரிய, சந்திரரை திருமாலின் கண்களாகக் கூறுவது மரபு. ”திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல், அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்” என்பது திருப்பாவை. அதே போன்று சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றையும் சிவனது முக்கண்களாகக் கூறுவார்கள். மூன்றாவதாகிய நெற்றிக் கண் அக்னி வடிவானது. நாளின் உதயத்திலேயே ராமனைத் தீண்டிய செங்கதிரின் உள்ளுறை பொருளான அந்த அக்னி வடிவமாக இங்கே ராமன் வில்லுடைக்க எழுகிறான் என்றும் கொள்ள இடமிருக்கிறது. ”பொறுமையில் பூமிக்கு நிகரானவன், அறத்திற்காகக் கோபமுறும் தருணத்திலோ காலாக்னிக்கு நிகரானவன்” (காலாக்னி ஸத்ருச: க்ரோதே, க்ஷமயா ப்ருத்வீ ஸம:) என்றல்லவோ வால்மீகி முனிவர் ராமனின் குணாதிசயங்களைப் பட்டியலிடுவார்!

’கங்கை வார் சடை’

ravivarma_gangadharaஅயோத்தியா காண்டத்தில் மற்றொரு காட்சி.

நகரை விட்டு நீங்கி ராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வனத்துக்குள் நுழைகிறார்கள். கங்கைக் கரையை அடைந்து முனிவர்களின் உபசாரத்தை ஏற்று, கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை. கம்பனின் கவிதை இதைக் காட்சியாக விரிக்கிறது –

வெங்கண் நாகக் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
(கங்கைப் படலம், 18)

[வெங்கண் நாகக் கரத்தினன் – வெம்மையான கண்களைக் கொண்ட நாகங்களைக் கரத்தில் ஆபரணமாக அணிந்த சிவன்; சிறிய கண்களைக் கொண்ட யானையின் துதிக்கை போன்ற கம்பீரமான கரங்களைக் கொண்ட இராமன்; வகிர்த் திங்கள் – பிறை நிலா]

தில்லை அம்பலத்திலே உமையவள் மகிழ்ந்து காண கௌரி தாண்டவம் ஆடிய கங்காதரனின் திருவுருவை ஸ்ரீராமனின் கங்கை நீராட்டத்தில் இணைத்துக் காட்டுகிறது கம்பன் கவி. வைணவத்தையும், சைவத்தையும் மட்டுமல்ல, வடக்கையும், தெற்கையும் கூட இணைக்கிறது.

காசி ராமேஸ்வரம்:

வால்மீகி ராமாயணத்தில் சேதுக் கரையில் ஸ்ரீராமன் சிவபூஜை செய்ததாக வரும் பிரசங்கம் இல்லை. ஆனால் கம்பராமாயணத்தில் உள்ளது.

இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பும்போது சீதைக்கு சேதுவைக் காட்டி அதன் மகிமையை விரிவாக இராமன் விளக்குகிறான். சேதுக் கரையில் இறங்கி திருவணையை வாய் கீறி, அந்த அணைக்குத் தெய்வங்களைக் காவலாக நிறுத்துகிறான். அகத்தியர் அப்போது அங்கு வந்து ராமனைச் சந்தித்து, சிவபூஜை செய்யுமாறு கூறுகிறார். கங்கையிலிருந்து சிவலிங்கம் கொண்டுவர அனுமன் போய் வரத் தாமதமாகிறது. அப்போது –

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே
‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

[ஆலம் – ஆலகால விஷம்; ஞாலம் உண்டவர் – பிரளய காலத்தில் உலகனைத்தையும் தன் வயிற்றில் ஒடுக்கும் மகாவிஷ்ணுவாகிய ராமன்]

’முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண்மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்

[முகுத்தம் – முகூர்த்தம்]

ஒத்தபூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப.

(யுத்தகாண்டம், மீட்சிப் படலம், 34-36. கம்பன் கழகப் பதிப்பு, பக்-1678)

கம்பன் வாழ்ந்த காலகட்ட்த்தில் (11-ஆம் நூற்றாண்டு) இராமேஸ்வரம் பற்றிய இந்தப் புராண ஐதிகம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களிலேயே இராமேஸ்வரம் குறிப்பிடப் படுகிறது.

தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி
ஏவிய வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை..

[வவ்விய – கவர்ந்து சென்ற; வாட்டி – அழித்து; வெஞ்சிலை – வெம்மை தரும் வில்]

கம்பனுக்கு முன்பே ஸ்ரீராமனை அண்ணல் என்று அழைத்திருக்கிறார் சம்பந்தர்!

ramalinga_pujaதமிழகம் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் மைசூர்ப் பகுதியில் காவிரி சங்கமத்தில் ராமநாதபுரா என்ற ஊரில் இதே ஐதிகத்துடன் கூடிய பழமையான கோயில் உள்ளது. ஆந்திராவில் வாரங்கலுக்கு வடக்கே “ராமப்பா குடி” என்றே ஒரு ஊரும், அதில் காகதீயர் காலத்திய ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலும் உள்ளது. மிக அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஒரு மாபெரும் சிற்ப அற்புதம் இந்தக் கோயில். எனவே ராமேஸ்வரம் பற்றிய ஐதிகமும் ஒரு தொன்மை மரபு தான் என்பதில் ஐயமில்லை.

வால்மீகியின் ராமன் “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று தன்னை மனிதனாகவே கூறிக் கொள்பவன். அந்த இலக்கணத்தின் படியே பெரியோர்களையும், தேவதைகளையும், முனிவர்களையும் அவன் வணங்கிச் செல்வதாக நெடுகிலும் வால்மீகி முனிவர் சொல்லிச் செல்கிறார். உலக அன்னையாகிய சீதாதேவி படகில் கங்கை நதியைக் கடக்கையில் (இன்றைக்கும் இந்துத் தாய்மார்கள் செய்வது போன்று) தங்கள் குடும்பத்தையும், குலத்தையும் காக்கவேண்டும் என்று கங்கையையும், யமுனையையும் வேண்டிக் கொள்கிறாள், நேர்த்திக் கடன் செலுத்துவதாகவும் பிரார்த்தனை செய்கிறாள்! கானகத்தில் புனித விருட்சங்களை ராமரும், சீதையும் வணங்குவதாகவும் வருகிறது.

இதனால் இராமன் பரம்பொருளின் அவதாரம் என்ற கருத்து ஒரு மட்டுக் குறைகிறது என்று சில சமயவாதிகள் எண்ணினால் அது அறியாமையும், ஸ்ரீராமனின் அவதார ரகசியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுமே ஆகும். போரில் இறந்த வானரர்கள் அனைவரையும் உயிர்ப்பித்த ராமன் ஜடாயு இறந்தபோது கதறி அழுகிறான். அதற்கு எப்படி தர்க்கபூர்வமாக விளக்கம் கொடுக்க முடியும்? இவையனைத்தும் அவனது அலகிலா விளையாட்டு, “நடையின் நின்றுயர் நாயகனின்” தெய்வலீலையில் ஒரு அங்கம் என்று தான் கொள்ளவேண்டும். அவனது சிவபூஜையும் அவ்வாறே என்றே கருதிக் கம்பன் தன் காவியத்தில் அதனைச் சேர்த்திருக்க வேண்டும்.

ravivarma_rama_sita_lakshmana_smallஅதோடு, பிரம்மஹத்தி (அல்லது வீரஹத்தி) தோஷம் அகல்வதற்காக ராமன் சிவபூஜை செய்தான் என்றும் சொல்லப் படுகிறது. அதர்மத்தை அழித்தொழித்த ஸ்ரீராமனின் செய்கை எப்படி பாவமாகவும், தோஷமாகவும் ஆகக் கூடும்? ராமாயணத்தின் மையத் தத்துவத்திற்கே முரணாக அல்லவா இருக்கிறது இது! இந்த ஐதிகம் சாதிய, ஜோதிட, பரிகார வெறியர்களால் ஒரு கட்ட்த்தில் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரசங்கத்தை மட்டுமல்ல, இதிகாச புராணங்களின் எல்லா நிகழ்வுகளையுமே நாள்கள் கோள்களின் பலன்களாகவும், விதிப் பயன்களாகவுமே சித்தரிக்கும் ஒருவித இயந்திரத் தனத்தின் விளைவு அது. (உதாரணமாக: ஏன் ராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது என்றால் அவன் ஜாதகத்தில் அப்படி இருந்தது, சீதையின் ஜாதகமும் அப்படி இருந்த்து; வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்குக் குறித்த நாள் சரியில்லை.. இப்படியாக அது போய்க் கொண்டிருக்கும்). இத்தகைய ஒரு கண்ணோட்டம் ஜோதிடப் பிரியர்களான ஒரு சிறு கூட்டத்தாருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் இதிகாச, புராண நிகழ்வுகளில் அற்புதமாக இழையோடும் ரசானுபவத்தையும், அவற்றின் இயல்புத் தன்மையையும், பல சமயங்களில் அவற்றின் தெய்வீக, தத்துவ பரிமாணங்களையுமே குலைப்பதாக இருக்கிறது. எனவே இந்த “தோஷ நிவாரண” ஐதிகத்தை நிராகரித்து, தெய்வலீலையின் ஒரு அங்கமாக மட்டுமே ராமனின் சிவபூஜையைக் கருதவேண்டும்.

ராமேஸ்வர: என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சமத்காரமாக மூன்று விதங்களில் பொருள் கொள்ளலாம். ராமனாகிய ஈஸ்வரன் (ராம: ஈஸ்வரஸ்ச), ராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவன் (ராமஸ்ய ஈஸ்வர: ), ராமனைத் தனக்கு ஈஸ்வரனாகக் கொண்ட சிவன் (ராம: யஸ்ய ஈஸ்வர: ) !

ராமேஸ்வரத்தின் ஐதிகத்திற்கு இணையாக, காசியில் சிவன் எப்போதும் ராம நாம தியானத்தில் இருக்கிறார் என்றும், இறக்கும் உயிர்களின் காதில் தாரக மந்திரமான ராமநாமத்தை உபதேசித்து அவைகளைக் கரையேற்றுகிறார் என்றும் ஒரு தொன்மை மரபு உள்ளது.

அதையும் கம்பன் சொல்லியிருக்கிறான்.

வாலிவதம் நிகழ்ந்தவுடன், ராமன் வாலிக்கு முன்னே தோன்றுகிறான். நீண்ட விவாத்த்திற்குப் பின், வாலி ஸ்ரீராமனது அவதார ரகசியத்தை உணர்கிறான். தன் உயிர் போகும் தறுவாயில் பலவாறு பரம்பொருளான ராமனைத் துதிக்கிறான். இந்தத் துதிப் பாடல்கள் அனைத்துமே மிக அழகானவை.

ஏவுகூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ; முதல்வன் நீ; முற்றும் நீ; மற்றும் நீ;
பாவம் நீ; தருமம் நீ; பகையும் நீ; உறவும் நீ;
(வாலிவதைப் படலம், 129)

[ஏவுகூர் வாளியால் – விரைந்துசெல்லக் கூடிய கூரிய அம்பால், வேலைவாய் – வேளையில்]

மாவலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர்வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப்பொருளை யான்
தேவ நிற்கண்ட எற்கு அரிது எனோ தேரினே!
(வாலி வதைப் படலம், 128-1, கம்பன் கழகப் பதிப்பு பக்-744).

[மாவலச் சூலியார் – பெரிய வலியுமையுடைய சூலத்தை ஏந்தியவரான சிவபிரான்; வாழ்த்துநர்க்கு – தம்மைப் போற்றுபவர்களுக்கு; ஓவலற்று உதவல் – குறைவில்லாமல் அருளுதல்; ஆவலிப்பு உடைமை – பெருமித உணர்வு கொண்டமை; தேவ – தேவனே; தேரினே – எண்ணிப் பார்க்கையில்; நிற்கண்ட எற்கு அரிது எனோ – அப்பேர்ப்பட்ட உன்னையே கண்ட எனக்கு கிடைத்தற்கரியது என்று இனி என்ன உள்ளது?]

சிவபிரான் தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவது ராம நாம மகிமையினாலேயே என்று இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.

வாலி ஒரு சிறந்த சிவபக்தன். இது கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. நாள் தவறாமல் சிவபூஜை செய்து வருபவன் வாலி என்ற குறிப்பு தாரை புலம்பலில் வருகிறது (“அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று, உணங்கா நாள்மலர் தூய் உள் அன்பினால் …. வணங்காது இத்துணை வைக வல்லையோ?”). அத்தகைய வாலி, தன் இறுதிக் காலத்தில் ஸ்ரீராமதரிசனமும் மோட்சமும் கிடைத்த பாக்கியத்தை இப்பாடலில் வியந்து போற்றுகிறான். வாலியின் சிவ வழிபாட்டின் பலனாக, அவனுக்கு இறுதிக் காலத்தில் ராமபக்தி சித்தித்தது என்று இதன்மூலம் குறிப்புணர்த்தப் படுகிறது என்றும் கொள்ளலாம்.

அனுமன் அருள்நடம்:

கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு காட்சி.

பிரம்மசாரி உருவில் சென்று ராமலட்சுமணர்களை சந்தித்துப் பின்னர் அவர்களுக்குத் தனது உண்மையுருக் காட்டியதன் பின், அதனை அறிவிக்க சுக்கிரீவனிடம் ஓடோடி வருகிறான் அனுமன். ”சுக்ரீவா, நமது துன்பக் கடலைக் கடந்து விடுவோம், அளவற்ற வலிமையுடைய வாலியின் உயிரைக் கவர காலன் வந்துவிட்டான்” என்று அறிவிக்கிறான்!

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் – ‘விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்’ எனா
ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம் புரிகுவான்.
(நட்புக் கோட் படலம், 2)

[விரை செய் தார் வாலி – மலர்களால் செய்த மாலை அணிந்த வாலி; வலியினான் – வலிமையுடையவன்; உயிர் தெற – உயிரைக் கவர]

அப்படி அறிவித்த்தோடு, ராமனைச் சந்தித்த மகிழ்ச்சியில் நடனமும் ஆடுகிறானாம் அனுமன்! எத்தகைய நடனம்? “ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம்” என்கிறான் கம்பன்.

அனுமன் ராமலட்சுமணர்களை சந்திக்கும் கட்டத்தில் வரும் அற்புதமான பாடல்களிலேயே கம்பன் இந்த அருள்வடிவத்தை நமக்குக் கோடி காட்டி விடுகிறான். அனுமன் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை, ஆனால் அவனது சுருக்கமான முகமன் மற்றும் கேள்விகள் முடிந்ததுமே, ராமன் லஷ்மணனிடம் கூறுகிறான் –

ravivarma_hanumanஇல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே! யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்லார்தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவலானோ?
(அனுமப் படலம், 18)

[இசைகள் கூர – புகழ்ச்சிகள் விளங்க; காட்சி – அறிவு; விரிஞ்சனோ – பிரமனோ; விடைவலானோ – ரிஷபவாகனன் ஆகிய சிவனோ]

லக்ஷ்மணா! இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ? “வில்லார்தோள் இளையவீர” – இவ்வளவு பெரிய வில்லைக் கையில் வைத்திருக்கிறாய் எல்லாம் சரிதான், ஆனால் இது கூடப் புரியலையா உனக்கு?

பிறகு மேலும் விளக்கிச் சொல்லுகிறான் –

மாணி ஆம் படிவம் அன்று மற்றிவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ்வுலகுக்கு எல்லாம் என்னலாம்..

[மாணி – பிரமசாரி; படிவம் – உருவம்]

இது ஏதோ சாதாரணப் பிரமசாரி என்று நினைத்து விடாதே. உலகிற்கெல்லாம் ஆதாரமான பொருளின் வடிவம் தம்பி!

ராமனின் பரம பக்தனான அனுமன் சிவாம்சம், சிவஸ்வரூபம் என்றே ராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது, அவதார நோக்கத்திற்கு உதவ அனைத்து தெய்வங்களும் வெவ்வேறு உருவங்களில் அவதரிக்கின்றனர். (”அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின் என்றான்” – திருஅவதாரப் படலம், 25). அனுமன் வாயு மற்றும் சிவபிரான் ஆகிய இருவரது அம்சங்களும் ஒன்றிணைந்து அவதரிக்கிறார் –

வாயு ’மற்று எனது கூறு மாருதி’ எனலும், மற்றோர்
’காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம்’ என்றார்; புராரி ‘மற்று யானும் காற்றின்
சேய்’ எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ?
(திருஅவதாரப் படலம், 27)

[மற்கடங்கள் – குரங்குகள்; காசினி – உலகம்; புராரி – சிவபெருமான்; திசையுளோர் – தேவர்கள்; அவதி – எல்லை]

ஆஞ்சநேய அஷ்டோத்திரத்தில் “ருத்ர வீர்ய ஸமுத்பவ:” என்ற நாமம் உள்ளது. துளசிதாசர் எழுதிய ஹனுமான் சாலீஸா என்ற அனுமன் துதிப் பாடல் பாரத்த்தின் பல பகுதிகளிலும் பிரபலமானது. இதில் ஒரு பாடலில் “சங்கர ஸுவன பவானீ நந்தன” என்று துளசிதாசர் அனுமனை சிவனின் புதல்வனாகவே போற்றுகிறார். அவரது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண நூலிலும், “சங்கட மோசன்” என்னும் மற்றொரு துதிப் பாடலிலும் பல இடங்களில் அனுமனை சிவஸ்வரூபமாகப் போற்றும் வரிகள் உள்ளன. வடபாரதத்தில் எல்லா அனுமன் கோவிலிலும் சிவலிங்கம் உண்டு. எல்லா சிவன் கோவில்களிலும் அனுமன் சன்னிதியும் உண்டு! தென்னகத்திலும் எல்லா பழமையான சிவன் கோயில்களிலும் தூண்களில் அனுமார் திருவுருவம் இருக்கும்.

பல ராமாயண நூல்களிலும் தெளிவாகவே பேசப் படும் இந்தக் கருத்தை ஒருமுறை சொன்னபோது, ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் ஒரு சிலருக்கு இது பெரும் எரிச்சலை உண்டுபண்ணியது. ஸ்ரீராமனின் பரமபக்தன் என்ற ஸ்தானத்தில் கூட இப்படி சிவனை ஏற்றுக் கொள்ளவேண்டி வருகிறதே என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அனுமன் சிவாம்சம் என்பதே இடைச் செருகல் என்று கூறத் தொடங்கினர்! அந்த அளவிற்கு இறுக்கமான சமயவாதம் போலும் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் பெரும்பாலான தெய்வ பக்தியுள்ள இந்துக்களுக்கு இத்தகைய சமயவாத பிரசினைகள் இல்லை என்பதே உண்மை.

சிவ-விஷ்ணு ஐக்கியம்:

kambar_stampகம்பனுக்கும் இத்தகைய பிரசினைகள் ஏதும் இருக்கவில்லை.

ஒரு மழைக்கால நாள். சோழவள நாட்டிலே, பசுமை அலையடிக்கும் நெல்வயல்கள் சூழ்ந்த ஒரு காவிரி வாய்க்கால் கரையில் உட்கார்ந்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி. கடவுள் வாழ்த்து முடித்துத் தன் அமர காவியத்தை எழுத ஆரம்பித்திருக்கிறான். முதலில் பாடவேண்டியது கோசல நாட்டு வளம். காவிரிக் கரையில் அமர்ந்த கவிமனம் சரயு நதியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டது.

“… கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்” என்று நிறுத்தி வானத்தை நிமிர்ந்து பார்க்கிறான்.

காலையில் கண்ட வெண்மேகக் கூட்டங்கள் எல்லாம் கடலுக்குப் போய் மேய்ந்து விட்டுக் கருமேகமாகித் திரண்டு வந்து விட்டன. சில கணங்களில் மழை பொழிய ஆரம்பித்து விட்டது. இந்தக் வெண்மேக-கருமேக விளையாட்டைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். நல்லவேளை அவனுக்கு ஆரிய-திராவிட இனவாதமோ, அல்லது கருப்புப் பணத்தை மறுபடி வெள்ளைப் பணமாக்குவது பற்றிய பொருளாதார நுட்பங்களோ மனதுக்கு வரவில்லை. கொடுத்து வைத்தவன் தெய்வீகக் கவிஞன். பாடுகிறான் –

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
(ஆற்றுப் படலம், 2)

அந்த வெண்மேகம் நீறு அணிந்த கடவுள். அது தலையில் “ஆறு அணிந்து” சென்று அலைகடலை முகந்து எடுத்து, கார்மேகக் கடவுளாகத் திரும்பி வருகிறது. செல்வத் திருமகளையே மார்பில் அணிந்த அந்தக் கார்மேகம், உலக உயிர்கள் சகல செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டி மழையாகப் பொழிகிறதாம்!

காவியத் தொடக்கத்திலேயே சிவனையும் திருமாலையும் இணைத்து ஹரி-ஹர வந்தனமாக இந்த அருமையான பாடலைச் செதுக்கிய கம்பனின் கவிதா விலாசத்தை என்னவென்று புகழ்வது!

இன்னொரு காட்சி.

சீதா தேவியைத் தேடுவதற்காக நாற்புறமும் சேனைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறான் சுக்ரீவன். தென்திசைக்கு அங்கதனையும், அனுமனையும் தலைவர்களாகக் கொண்ட சேனை புறப்பட்த் தயாராக நின்று கொண்டிருக்கிறது. அப்போது சேனைத் தலைவர்களுக்கு வழிகூறுவது போல அமைந்த பாடல்களில் பாரத பூமியின் பல்வேறு பிரதேசங்களின் சிறப்புக்களையும் பெருமிதத்துடன் எடுத்தோதி வருகிறான் சோழநாட்டுக் கவி.

கோதாவரி நதிக்கப்பால் கொங்கணத்தைக் கடந்தபின் வருவது அருந்ததி மலை. எவ்வளவு பெரிய மலை தெரியுமா?

’அரன் பெரியவன், அரி பெரியவன்’ என்று சண்டை போட்டுக் கொள்ளும் அறிவிலிகள் பரகதியைச் சென்று அடைவதற்கு எப்படிச் சாத்தியம் இல்லவே இல்லையோ, அது போன்றே யாராலும் சென்றடைய முடியாத மலை அது! வானத்தைத் தொடும் முகடுகள் கொண்ட அந்த மலையைத் தொழுது வணங்கி அப்பால் செல்லுங்கள் வானரர்களே!

“அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்”
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய்க் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால் ..
(நாடவிட்ட படலம், 24)

[அதிகன் – பெரியவன்; அடைவு – அடைதல்; பரிசே போல் – தன்மையதாக இருப்பது போல்; புகல் அரிய பண்பிற்று ஆம் – சென்றடைய முடியாத தன்மையை உடையது; சுரநதி – தேவகங்கை; வரன் – வரம்]

tulsidas_stampகம்பனைப் போன்றே, மகாபக்தரும் ஞானியுமான துளசிதாசரும் தமது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண காவியத்தில் சைவ-வைஷ்ணவ சமரசத்தை இன்னும் அழுத்தமாகப் பேசுகிறார்.
ஸ்ரீராமன் கூறுகிறான் –

”சிவத்ரோஹீ மம தாஸ கஹாவா
தே நர ஸபனேஹும் மோஹி ந பாவா”

என்னுடைய தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் எவனோ, அந்த மனிதன் கனவில் கூட என்னை வந்தடைய மாட்டான்.

”சங்கரப்ரிய மம த்ரோஹீ, சிவத்ரோஹீ மம தாஸ
தே நர கரஹி கல்ப பரி, கோர நரக மஹூ வாஸ”

சங்கரனின் அன்பன் என்ற பெயரில் என்னை துவேஷிப்பவன், என் தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் – இவர்கள் இருவருமே கல்பகாலம் முழுவதும் கோர நரகத்தில் வாசம் செய்யும் நிலைக்கு ஆளாவார்கள்.

கம்பன் ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பீடமான திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த தன் இராமவாதார காவியத்தை, சைவத்தின் தலைமைப் பதியான சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் முன்னிலையில் மீண்டும் அரங்கேற்றுகிறான். இரு சாராரும் அவனது அமர காவியத்தைப் புகழ்ந்தேத்திப் பாராட்டினர் என்பது வழக்கு.

துளசிதாசர் பண்டிதர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தை விடுத்துப் பொதுமக்களின் மொழியான “அவதீ” (லக்னோ பகுதி ஹிந்தி மொழி வடிவம்) என்ற பாஷையில் தனது ராமகாவியத்தைப் படைக்கிறார். இதனைப் பண்டிதர்கள் யாரும் அங்கீகரிக்காமல் போக, மனம் நொந்த துளசிதாசர், அன்றிரவு காசி விசுவநாதர் கருவறையில் வேத,புராண ஏடுகளுக்கெல்லாம் கீழே தனது நூலை வைத்து இது உனக்கே சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். மறுநாள் காலை வந்து பார்க்கையில், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றெல்லா நூல்களுக்கும் மேலாக வந்தமர்ந்திருந்ததாம்! பண்டிதர்கள் விசுவநாதரின் திருவுள்ளமாக்க் கருதி துளசிதாசரின் நூலை அங்கீகரித்தனர் என்பது வழக்கு.

தென்தமிழ் நாட்டைச் சேர்ந்த குமரகுருபரர் காசி வரை சென்று அங்கு மடம் அமைத்து தர்ம நெறியைப் பரப்பிய வரலாறு அனைவரும் நன்கறிந்தது. குமரகுருபரர் காசியில் வாழ்ந்த காலத்தில் தமது மடத்தில் தினந்தோறும் கம்ப ராமாயணச் சொற்பொழிகள் செய்ததாகவும், அவற்றைத் தவறாமல் கேட்டு வந்த துளசிதாசர், அதனாலேயே தமது காவியத்தில் கம்பராமாயணத்தில் உள்ளது போன்று சில இடங்களை அமைத்தார் என்றும் ஒரு வழக்கு உள்ளதாம். காசி மடத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் கூறிய தகவல் இது.

இவ்வாறாக, தன் காவியம் முழுவதிலும் சிவ-விஷ்ணு ஐக்கியத்தைப் பல்வேறு விதங்களில் எடுத்துரைக்கிறான் கம்பன். தமிழகத்தில் சமயப் பூசல்கள் அவ்வப்போது தலைதூக்கி வந்த காலகட்டத்தில் வாழ்ந்த கம்பன் ஒரு இலக்கியகர்த்தாவாக தன் காவியமெங்கும் சமய சமரசத்தை வலியுறுத்திக் கொண்டே செல்கிறான். இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாகவே கம்பன் திகழ்கிறான் எனலாம்.

90 Replies to “கம்பன் கண்ட சிவராம தரிசனம்”

  1. சிவ விஷ்ணு ஐக்கியம் அவசியம் என்று குறிப்பிடும் கட்டுரையாளர் தன்னுடைய எழுத்தால் புதிய வேற்றுமைகளை உண்டாக்குகிறார்.போகிற போக்கில் வைணவர்களையும் ஜோதிடர்களையும் போட்டுத் தாக்குகிறார். அவருக்கு நிதானம் அவசியம். ஜோதிடம் குறித்து ராமாயணம் என்ன சொல்கிறது என்பதை நண்பர் அறிவாரா?

  2. ஆகா, இலக்கியச் சுவை ததும்பும் அழகான கட்டுரை. பல தகவல்களை ஒரு மாலையாகக் கோர்த்து அளித்திருக்கிறார். ஜடாயு என்ற பெயருக்கு ஏற்றமாதிரியே, ராமாயணத்தில் முழுகியவர் என்று தெரிகிறது.

    மிக்க நன்றி ஜடாயு அவர்களே.

    // ramanujam
    28 January 2010 at 6:38 am

    சிவ விஷ்ணு ஐக்கியம் அவசியம் என்று குறிப்பிடும் கட்டுரையாளர் தன்னுடைய எழுத்தால் புதிய வேற்றுமைகளை உண்டாக்குகிறார்.போகிற போக்கில் வைணவர்களையும் ஜோதிடர்களையும் போட்டுத் தாக்குகிறார்.//

    ராமானுஜம் சார், இரண்டு முறை படித்து விட்டேன். நீங்கள் சொல்வது மாதிரி இல்லை. ராமன் சிவபூசை செய்வது மட்டும் அல்ல, சிவன் ராமநாமம் ஜபிப்பதையும் மறக்காமல் சொல்லித் தான் எழுதியிருக்கிறார் இல்லையா? ”ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் ஒரு சிலருக்கு” என்று தெளிவாகவே குறிப்பிட்ட பிறகு, வைணவர்களைப் போட்டுத் தாக்குகிறார் என்று சொல்வது சரியாகுமா?

    நான் புரிந்து கொண்ட வகையில், புராணக் கதைகளில் வரும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஜோதிட ரீதியில் மட்டுமே பார்ப்பது தவறு என்றும் அதில் உள்ள ரசத்தைக் குறைக்கிறது என்றும் தான் சொல்கிறார். ஜோதிடர்களைத் தாக்குவது என்று இதைக் கருதலாமா என்று தெரியவில்லை.

  3. அன்புக்குரிய ஜடாயுஜி அவர்களுக்கு,

    தக்க நேரத்திலே இந்தக் கட்டுரையை அளித்து இருக்கிறீர்கள்.

    உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.

    இராமர் தனித்துவ குணாதிசயங்களைக் கொண்டவர்.

    மற்றவர் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் அனுபவிக்கத் தயங்காதவர். தான் எவ்வளவு துன்பம் அனுபவித்த நிலையிலும் அவர் மனதில் கருணை அன்பு வெள்ளமாகப் பிறக்கிறது.

    சாதிய கட்டுகளை உடைத்து அன்பு வெள்ளத்தை பாய விட்டவர்.

    விலங்கு இனத்துடனும் ஒன்றுபட்டு குழு பணி செய்து வெற்றி கண்டவர்.

    காழ்ப்புனர்ச்சிக்கோ , வெறுப்புக்கோ அவர் மனதில் இடமே இல்லை. அவர் சிவனை வழிபாட்டார் என்று சொல்லியதற்கு எத்தனை ஆரவாரம்? இராமரைப் பற்றி படித்த பின்னும் யார் மனதிலாவது மதமாச்சரியங்கள் வருமா? .

  4. ராமேஸ்வரம் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கவே கட்டுரை ஆசிரியர் கடுமையாக எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    வேறு எதை வேண்டுமானாலும் ரசானுபாவத்திற்காக எழுதப்பட்டது என்று சொல்லி விடலாம், ஆனால் இதிஹாச ராமாயணமான வால்மீகி ராமாயணம் அப்படிப்பட்டதல்ல. ரசானுபாவங்கள் அதில் காணப்பட்டாலும், அது ‘சத்யம்’ – அதில் காணப்படுவது எல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை.

    ஏனெனில், ‘பரம புருஷன் தசரதருக்கு மகனாகப் பிறந்த பொழுது, வேத புருஷனும், ப்ராசேதஸ் எனப்படும் வால்மீகியிடம் ராமாயணமாகப் பிறந்தான்’ என்று பொருள் படும்

    ‘வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசராத்மஜே /
    வேத ப்ராசேதசாத் தாசீத் சாக்ஷாத் ரமாயனாத் மனஹ //

    என்னும் ஸ்லோகத்தை ஸ்மார்த்த, வைணவ, மத்வ என்னும் எல்லா வழியினரும் சொல்லித்தான் ராமாயணத்தை வாசிப்பார்.

    காரணம், வேதங்கள் என்றும் அந்த பரமாத்மனைப் பார்த்துக்கொண்டே, அவனைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கின்றன. அந்த பரமாத்மன் மனுஷ்ய அவதாரம் எடுத்தால், வேத புருஷனும் அவனுடன் இப்பூவுலகில் அவதாரம் எடுக்க வேண்டும், அந்த பரமாத்மன் ராமனாகப் பிறந்த போது, வேதமும் ராமாயணமாகப் பிறந்தது. அதில் ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அது சத்யம். அது வேதப் பிரமாணம். ஒரு விஷயம் சொல்லப்படாமல் – ஆனால் அப்படி ஒரு விஷயம், வழக்கில் பல காலம் வழங்கி வந்தால், காரணத்தை வால்மீகி ராமாயணத்திலேயே கண்டு பிடித்து விடலாம்.

    அதன் படி ராமன், ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யவில்லை. ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் வரவில்லை. போருக்கு முன், அகத்தியர் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த போது, இந்திரனிடமிருந்து தான் பெற்ற பிரமாஸ்திரத்தை, அகத்தியர் ராமனுக்குத் தருகிறார். அதைக் கொண்டு தான் ராமன் ராவணனை வதைக்கிறார். அதனால் அவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் வரவில்லை. மாறாக, பாரதத்தில், ‘நிமித்த்ரம் மாதரம் பவ’ என்று அர்ஜுனனை ‘தன் கருவியாக மட்டுமே செயல் படு’ என்று கண்ணன் சொன்னாலும், அவனுக்கும், பாண்டவர்களுக்கும் பிரம்மா ஹத்தி தோஷம் ஏற்பட்டு , ருத்ர கங்கையில் பிராயச்சித்தம் செய்தனர். காரணம், அவர்கள் உபயோகித்த அஸ்திரங்கள், பிரமாஸ்திரங்கள் அல்ல.

    இப்பொழுது மூல விஷயத்திற்கு வருவோம். இலங்கையிலிருந்து திரும்பும்போது ஆகாய மார்கமாக, ராமனும், சீதையும் புஷ்பக விமானத்தில் திரும்புகின்றனர்.
    ராமேஸ்வரத்தில் இறங்கவில்லை. ஆனால் சேதுவை சீதைக்கு காட்டும் போது, ஒரு முக்கிய செய்தியை ராமன் கூறுகின்றான்.

    “ஏதத் பவித்ரம் பரமம் மகாபாதக நாசனம் ”

    (இந்த இடம் பவித்திரமானதும், மகா பாபங்களை நீக்குவதும் ஆனது.)

    “அத்ர பூர்வம் மகாதேவா பிரசாதம் அகரோத் பிரபு :”

    (ஆதி காலத்தில் இங்கே மகாதேவப் பிரபு பிரசாதம் (அருள் அல்லது ஆசீர்வாதங்கள்) அருளினார்.)

    இந்த ஸ்லோகத்தைக் கொண்டுதான் ராமன் அங்கே லிங்க பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்னும் கருத்தும் எழுந்தது. இந்த ஸ்லோகம் தான் ராமேஸ்வரத்தின் மகிமை என்ன, அங்கே என்ன நடந்தது என்று காட்டுவது. ராமாயணம் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

    அத்ர பூர்வம், என்று சொன்னதன் மூலம், முன் காலத்திலிருந்தே அங்கே மகாதேவன் குடி கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. ராமன் கடலைக் கடக்க அங்கு வந்த போதே, அங்கே மகாதேவன் கோயில் கொண்டிருக்க வேண்டும்.

    ராமனே அங்கு லிங்க பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் என்றால், அது நடந்திருக்காது. ஏனென்றால், மனைவி பக்கத்தில் இல்லாமல் ராமனால் தெய்வப் பிரதிஷ்டை செய்திருக்க இயலாது.
    ஆனால், ராமன் அங்கு வந்த போது, மகாதேவன் கோயில் கொண்டிருந்தால் நிச்சயம் வழிபட்டிருப்பான். ஆரண்ய காண்டத்திலேயே அவன் செய்த வழிபாடுகள் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மனைவி பக்கத்தில் இல்லாமல், ராமேஸ்வரத்தில் கிராமமான பூஜைகள் செய்திருக்க இயலாது.

    அவர் அங்கு வந்து சேர்ந்தது பௌர்ணமிக்கு முதல் நாள். மறுநாள் பௌர்ணமி திதி. பௌர்ணமியில் கடலில் நீராடி, அங்கு உள்ள மூர்த்தியான சிவனை வெறுமனே வழிபட்டிருப்பார்.

    முன்னாளில் மகாதேவன் அருளிய இடம் என்று சொல்லவே, அங்கே ராமன் வரும் போதே லிங்கம் இருந்திருக்க வேண்டும் என்றாகிறது.

    அது எப்படி என்றால், வேத புருஷனான வால்மீகி ராமாயணம் அந்த முன் கதையையும் கோடிக் காட்டுகிறது.

    அந்தக் கதை நம் தமிழ் மக்களுக்கு, ஏன் அனைவருக்குமே புதியதாக இருக்கும். ஆனால், வால்மீகி ராமாயணத்தை அலசினால் கிடைக்கும் முக்கியக் கதை இது. இன்றைய சூழலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை இது.

    இந்தக் கதை கங்கை பிறந்த கதை.
    அஸ்வமேத குதிரையைத் தேடி ராமனின் முன்னோனான சகர மன்னரின் 60,000 மகன்கள், நிலத்தைத் தோண்டிக் கொண்டு வருகின்றனர். கடைசியில் கபில முனிவரின் ஆஷ்ரமத்தில் அதைப் பார்த்து விட்டு, கபிலரை ஏசுகின்றனர். கபிலர் எழுப்பிய ஒரு ஹூங்- காரத்தில் அவர்கள் அனைவரும் சாம்பலாகி விடுகின்றனர். அகால மரணம் சம்பவிக்கவே அந்த உயிர்கள், இறந்த பின் போக வேண்டிய உலகங்களை அடைய முடியாமல் அங்கேயே சிறைப் பட்டாற்போல் இருந்துவிட்டன.

    ஒருவர் அகால் மரணம் அடைந்தோ அல்லது, இறப்புக்குப் பின் அடைய வேண்டிய நிலையை அடையாமலே இருந்தால், அவர்களது சந்ததியினருக்கு ‘பிரேத தோஷம்’ வரும். இது ஜோதிடம் சொல்வது என்று அலட்சியப் படுத்துபவர்கள் அலட்சியப் படுத்தட்டும். ஆனால் இப்படித்த்தான் இயற்கை இயங்குகிறது என்பதை வேத மதத்தினர் உணர்ந்திருந்தனர். அதை உணர்ந்த கபிலர், பின்னாளில் சகரர் மகன்களைத் தேடி வந்த அவர்களது சந்ததியான பாகீரதனிடம் இதைக் கூறி, இதிலிருந்து நிவர்த்தி அடைய கங்கை வர வேண்டும், அவள் தண்ணீரில் இவர்கள் அஸ்தி கரைந்தால்தான் இவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய உலகங்களுக்குச் செல்ல முடியும் என்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் இயற்கை equilibrium – சமன்பாடு அடைய செய்ய வேண்டியவை.

    அதன் படி பாகீரதன் கங்கையை வருவிக்க அவள் அவனைப் பின் தொடர்ந்து, சகரர்கள் தோண்டிக் கொண்டு சென்ற வழியே வருகிறாள். அந்தத் தோண்டல் முடிந்த இடத்தில், மலையெனக் குவிந்து கிடந்த அஸ்தியைக் கரைக்கிறாள். எங்கே கங்கை அஸ்தியைக் கரைத்து மேலுலகத்திற்குச் செல்ல உதவுகிறாளோ, அங்கே சிவனும் குடி இருப்பார். அழித்தலுக்குத் தேவனான அவர் அனுமதியுடன்தான் உயிர்கள் நற் கதியை அடைய முடியும். இது பிரேத தோஷ நிவர்தியின் அம்சமும் கூட. எனவே அங்கே பாகீரதன், முதல் லிங்கமான ஜ்யோதிர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து, தன முன்னோரை விடுவித்து, தானும் பிரேத சாபத்திலிருந்து விடுபடுகிறான்.

    இது நடந்த இடம் ராமேஸ்வரம்.
    சகரரால் தோண்டப்பட்ட இடம், நவ நதிகளும் கலக்கும் வங்காள விரி குடா என்று இன்று சொல்லப் பட்டும் – ‘கங்கா சாகர்’ என்று அந்நாளில் சொல்லப்பட்ட நமக்குக் கிழக்கே இருக்கும் கடல்தான்.

    இந்தக் கடல் சகர மகன்களால் தோண்டப்பட்டது என்று வால்மீகி ராமாயணத்தில் மூன்று இடங்களிலும் (சமுத்திர ராஜன், மைனாக மலை கூறுவதாக சுந்தர காண்டத்திலும், விபீஷணன் சொல்வதாக யுத்த காண்டத்திலும், ) மற்றும் ‘வடாது’ எனத் தொடங்கும் புறநானூறின் ஆறாவது பாடலின் பழைய உரை (டா. உ. வே. சா கண்டெடுத்தது) யிலும், காணப் படுகிறது. தோண்டப் பட்டதால் இந்தக் கடல் ‘தொடு கடல்’ என்று தமிழில் வழங்கப்படுகிறது என்று பிற பழைய உரைகளிலும் காணலாம்.

    இந்த இடம், கங்கை செய்த முதல் பாவ நிவர்த்தி இடம். இந்த இடத்தை நன்கு பந்தப்படுத்தி, ஓடி வரும் நீர் இந்தியக் கடலில் கலக்காமல் தடுப்பது சேது என்னும் அணை. சேதுவில் ஆரம்பித்துத் தான் கங்கையின் புகழ், அவள் பாய்ந்தோடும் வட மாநிலங்கள் என்று அவள் பூமியில் இறங்கும் இமயத்தின் அடிவாரம் வரை பின்னாளில் வரவே, ‘ஆ சேது ஹிமாச்சலா’ என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

    வங்காள விரிகுடாக் கடலின், அடிவாரத்தைக் காட்டும் படங்களில், இந்தியக் கடலோரப் பகுதியை ஒட்டி, channels காணலாம்.

    எனவே ராமேஸ்வரத்தில் உள்ள சிவன், ராமன் சொல்வது போல் முன்னாளில், அவன் முன்னோனான பாகீரதனுக்கு அருளிய இடம். காசி பின்னாளில் வந்தது. ராமேஸ்வரத்திலிருந்து பிடி மண்ணை எடுத்துக்கொண்டு, காசியில் கரைத்தவுடன்தான், தீர்த்த யாத்திரை முடியும். இதன் தாத்பரியம், முதன் முதலில் கங்கை கரைத்த அஸ்தியான சகர மகன்களது அஸ்தியைக் காசியில் ஒவ்வொருவரும் சேர்த்து, கங்கைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதாக இருக்கலாம்.

    சீதைக்கு சேதுவைக் காட்டும் ராமன் மேலும் சொல்கிறார்.

    “எதத்து திருஷ்யதே தீர்த்தம் சாகரச்ய மகாத்மான :

    சேது பந்த இதி க்யாதம் த்ரைலோகஎநபி பூஜிதம் //”

    (இதோ தெரிகிறதே இந்தத் தீர்த்தம் சகரரது மாகாத்மியத்தால் உண்டானது. சேது பந்தம் என்னும் இது மூன்று உலகங்களிலும் பூஜிக்கப்படுவது. )

    இதன் மூலம் சேதுவின் முக்கியத்துவமும் விளங்கும், பித்ரு அல்லது, பிரேத தோஷ நிவர்த்தியிலும், செய்ய வேண்டிய சிவ பூஜையும் அங்கு செய்யப்படுகிறது என்றும் விளங்கும்.

    இதுதான் வேத புருஷனான வால்மீகி ராமாயணம் கூறும் உண்மை.
    மற்றவையெல்லாம், காலப் போக்கில், உருமாறிய கதைகள்.

    ராமேஸ்வரத்திற்கும், சேது தீர்த்தத்திற்கும், உள்ள முக்கியத்துவத்தை ஜோதிடம் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும்.
    ‘ஜோதிடம் வேத புருஷனின் கண்’ என்று யார் சொன்னார்கள் என்று தெரியாத காலம் தொட்டு சொல்லப்படுகிறது.
    அதன் படி, பிரேத தோஷம், மற்றும் பித்ரு தோஷம், மற்றும், அகால மரணம் அடைந்தவர்களுக்கு செய்யும் தர்ப்பணம் என்பவை எல்லாம், ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை வழிபாட்டு அங்கே செய்யப்பட வேண்டும்.

    மாத்ரு தோஷம் அல்லது சந்திர தோஷம் உள்ளவர்கள் சேதுவில் நீராடி அங்குள்ள மூர்த்திகளை வழிபட வேண்டும். இது பராசர ரிஷி எழுதியுள்ளது. மாத்ரு தோஷத்தால் பீடிக்கப்பட்ட ராமனே, சேதுவில் (அப்பொழுது தான் கட்டப்பட்டது) நீராடவே, இழந்த மனைவி, நாடு, செல்வம் எல்லாம் பெற்றான் என்று உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

    ராமன் பெற்ற மாத்ரு சாபம், பரசுராமனாக, தந்தை சொல் கேட்டு, பெற்ற தாயை வதைத்தது. ராமன் கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், மனித ரூபம் எடுக்கும் போது, மனித வாழ்க்கையின் விதிகளுக்கு உட்பட்டுத் தான் உதாரண புருஷராக வாழ்ந்து காட்டினார். ப்ரமேயமாக அவர் எடுத்துக் கொண்ட மாத்ரு சாபம், கைகேயியின் மூலம் அவரை வந்தடைந்தது.

    இவ்வளவு விஷயங்கள் – இவை கை அளவே – இருக்கும் போது, நாம் அறியாத விஷயங்கள் கடலளவு இருக்கும் போது, இவற்றைக் கவனத்துடன் கையாள வேண்டும். அப்படிச் செய்யாமல் பல காலம் வந்திருக்கவேதான், இன்று இந்த சர்ச்சைகள்.

  5. //அவர் சிவனை வழிபாட்டார் என்று சொல்லியதற்கு எத்தனை ஆரவாரம்?

    நண்பரே – ஆரவாரம் இல்லவே இல்லை – அது உங்களது மனதிருக்கு பட்டது மட்டுமே – சாரங் என்ற வைஷ்ணவ பேரை பார்த்தவுடன் – காழ்புனற்சிகொண்டுதான் எழுதுவான் என்று கொள்வது எங்கனே – நான் எழுதும் போது ராமர் சமுத்ரராஜனை பணித்தார் சுக்ரீவனை பணித்தார் என்றும் எழுதினேனே – அதை ஏன் விட்டு விட்டீர்கள்.

    இப்படி பிரமாணத்தில் இல்லத்தை எல்லாம் பரப்பி என்ன சாதிக்கிறோம் – நாளைக்கு சிலர் இயேசு காவியம் படைத்தது – அதில் நாராயணனும், சிவனும் ஏசுவுக்கு அப்பம் படைத்து வழிபட்டனர் என்று சொல்வார் -அதையும் நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டே நாம் வாழ கடவோம்

    ஆரவாரம் என்ற ஐயம் உங்கள் மனதில் எழுந்ததால் சொல்கிறேன் – அப்படி படும் படி எழுதியமைக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்

    ராமர் மனுஷ்யானாக நடக்க பெரும் முயற்சி கொள்கிறார், நடந்தும் காட்டுகிறார் – அது தவறுவது ஒரு சில இடங்களில் மட்டுமே

    – ஜடாயு இறந்தவுடன் – அழுது புலம்புவது, மற்றும் அவருக்கு நேரே மோக்ஷம் கொடுப்பது
    – லக்ஷ்மணனை நீ என்னை விட்டு பிரிந்து செல் என்று சொல்லமுடியாமல் தவிப்பது அழுவது, சௌமித்ரி என்று கதறுவது, தர்மத்தின் தலையான ராமன் லக்ஷ்மணனை பிரிவதற்க்கு மட்டும் ரிஷிகளிடம் ஆலோசனை கேட்பது
    ….

  6. திரு ஜெயஸ்ரீ அவர்களுக்கு.,
    வந்தனம். பாராட்டுக்கள்

  7. //
    அத்ர பூர்வம் மகாதேவா பிரசாதம் அகரோத் பிரபு
    //

    இதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாமே – இங்கே தான் அன்று மகாதேவனான வருணன் (சமுத்ர ராஜன் ) எனக்கு அருள் புரிந்தான்

    எப்படி பொருள் கொண்டாலும் லிங்கப்ரதிச்தைக்கு வாய்ப்பு இல்லாமல் போகும் – மகாதேவன் சிவன் என்று கொண்டால் கோவில் அங்கு முன்னதாக இருந்ததாக படும் ஆனால் வழக்கில் சேர்த்துகொண்டதோ ராமர் இலங்கையில் இருந்து திரும்புகையில் பிரதிஷ்டை செய்ததாகவே உள்ளன

  8. திரு ஜடாயு,

    சிவ விஷ்ணு தத்துவங்கள் சிறப்பாக சொல்லப்பட்டிருகின்றன. கம்பன் முதலிலேயே சரயு நதியின் மேலாக சிவனுக்கு உகந்த வெண்மை நிறமாக புறப்பட்ட வெண்மேகங்கள் கடலில் மூழ்கி கடல்வண்ணன் நிறத்தோடு வெளிவந்து மழையாகப் பொழிகின்றன என வர்ணிப்பார். பல இடங்களில் சிவனை பரம்பொருளாகவும், விஷ்ணுவை ப்ரம்பொருளாகவும் வர்ணிப்பார்.

    உண்மையை உணர்த்தும் இம்மாதிரி கட்டுரைகள் காலத்தின் தேவை.

    போஸ்டல் ஸ்டாம்பில் கம்பரின் காலம் 9 ஆம் நூற்றாண்டு எனப் போடப்பட்டுள்ளது. உங்கள் கட்டுரையில் 11 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். சரித்திர ஆய்வாளர்கள் 13ஆம் நூற்றாண்டு எனக் கொள்கிறார்கள். கம்பரின் காவியத்துக்கு எந்த நூற்றாண்டாக இருந்தாலும் சரி என்றாலும் – ஒரு ஆவல், – அவர் எந்த நூற்றாண்டு காலத்தவர்?

    திவாகர்

  9. சாமிமார்களே! சிவனை கும்பிட்டா என்ன விஷ்னுவை கும்பிட்டா என்ன! எல்லாம் இந்துக்களாகிய நம்ம சாமிகளே! விஷ்னு சிவனை சாத்தான் என்று சொல்லவில்லை. சிவன் விஷ்னுவைச் சாத்தான் என்று சொல்லவில்லை. தாசாவதாரத்தின் மூலம் கமலஹாஸன் எதைச் செய்ய ஆசைப்பட்டாரோ அது இங்கே நடக்கிறது போல இருக்கே!

  10. அன்புள்ள ஜெயஸ்ரீஜி,

    தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. முழுவதும் உடன்படாவிட்டாலும், இந்து தர்ம நூல்களிலும், மரபுகளிலும் தங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த புலமைக்குத் தலை வணங்குகிறேன். தாங்கள் இவற்றைப் பொறுமையாக விளக்கிய விதமும் மிகச் சிறப்பாக இருந்தது.

    // இவ்வளவு விஷயங்கள் – இவை கை அளவே – இருக்கும் போது, நாம் அறியாத விஷயங்கள் கடலளவு இருக்கும் போது, இவற்றைக் கவனத்துடன் கையாள வேண்டும். அப்படிச் செய்யாமல் பல காலம் வந்திருக்கவேதான், இன்று இந்த சர்ச்சைகள் //

    ”ராமன் பெற்ற மாத்ரு சாபம், தோஷம்” என்ற போன்ற கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை. ராமபக்தி காரணமாக இருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், இந்த தோஷம்-பரிகாரம் சுழல் மனித மனத்தை சுதந்திரத்தை நோக்கி அல்லாமல், rewards, punishments, guilt, atonement ஆகியவற்றை நோக்கியே மீண்டும் மீண்டும் இட்டுச் செல்வதாக எனக்குப் படுகிறது.. எனது ஆதர்சங்களில், சுவாமி விவேகானந்தர் அதீத ஜோதிட ஈடுபாடு மனித உள்ளத்தை பலவீனப் படுத்துவது என்று வேதாந்த அடிப்படையில் உறுதியாகச் சொல்லியிருக்கிறார் (உதாரணமாக, Man is the maker of his destiny என்ற உரை). மகாகவி பாரதி “சோதிடம் தனை இகழ்” என்றே கூறுகிறார் (அதே ஆத்திச்சூடியில் ”ஞாயிறு போற்று” என்றும் ‘வானநூல் பயிற்சி கொள்’ என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்). அந்தக் கடுமையான வரிகள் ஆழ்மனதில் இருந்த இந்தக் கருத்துக்கள் மூலம் வந்திருக்கலாம்.

    எழுத்துக்களில் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்ற உங்கள் அறிவுரையைப் பணிந்து ஏற்றுக் கொள்கிறேன். என்னை விட வயதிலும் நீங்கள் பெரியவர்கள் என்றே நினைக்கிறேன் (என் வயது 35).

    அன்புடன்,
    ஜடாயு

  11. // Dhivakar

    போஸ்டல் ஸ்டாம்பில் கம்பரின் காலம் 9 ஆம் நூற்றாண்டு எனப் போடப்பட்டுள்ளது. உங்கள் கட்டுரையில் 11 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். சரித்திர ஆய்வாளர்கள் 13ஆம் நூற்றாண்டு எனக் கொள்கிறார்கள். கம்பரின் காவியத்துக்கு எந்த நூற்றாண்டாக இருந்தாலும் சரி என்றாலும் – ஒரு ஆவல், – அவர் எந்த நூற்றாண்டு காலத்தவர்?

    திவாகர் //

    நன்றி திவாகர் ஐயா.

    9-ஆம் நூற்றாண்டு என்று கொண்டது திருவரங்கத்தில் மண்டபத்தில் அரங்கேற்றீயதாக உள்ள குறிப்பை வைத்து என்று படித்திருக்கிறேன் – அஞ்சல்துறைக் காரர்கள் அதை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. சோழ அரசர்களுடனான தொடர்பை (முதலாம் குலோத்துங்கன்???) வைத்து 11-ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. 13-ஆம் நூற்றாண்டு என்பது மிகவும் பிந்தைய காலமாகத் தெரிகிறது.

  12. நன்றி திரு ஜடாயு,

    நான் தந்த மறுமொழியில் உங்களுக்கு உடன்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், கொடுக்கப்பட எல்லா விஷயங்களுக்கும் ஆதாரம் இருக்கிறது. அவற்றையும் ஆங்காங்கே சுட்டியிருக்கிறேன்.

    மாத்ரு சாபம் என்பது ராமாயணத்தில் சொல்லப் பட வில்லை. ஆனால் ராமாயணத்தை ஆராய்ந்து, அதில் காணப்படும் பல தர்மங்களைப் பெரியோர் கூறி வந்துள்ளனர். கைகேயி உட்பட ஒவ்வொருவரும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்று ஆராயப் பட்டுள்ளது. இன்றும், ஆராய்ந்து வருகிறோம். அப்படி வந்தது தான், இந்த மாத்ரு சாபம். ‘கடலில் வானரர்கள் கட்டிய அணை அருகே நீராடுவது இதிலிருந்து விமோசந்த்திற்கு வழி’ என்று (மட்டுமே) பராசரர் கூறியுள்ளார். அது எதற்கு என்று ஆராய்ந்த உரையில்தான் இப்படி அலசப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.

    Commercial ஆக இன்று ஜோதிடம் பயன்படுத்தப்படுவதால், அதன் மீது சிலருக்கு – சிலருக்குதான்- வெறுப்பு உண்டு. வாழ்க்கையில் அடிபட அடிபட, ஜோதிட நம்பிக்கை வருகிறதோ இல்லையோ, ஜோதிடம் காட்டும் பாதையை நிச்சயம் பின்பற்றுவர். அந்தப் பாதை Introspection.

    Introspection இல்லாத பரிகாரம் பயன் அளிக்காது.
    பரிகாரம் என்பதும் எல்லா விஷயங்களிலும், எல்லா மனிதர்களுக்குமே ஒரே மாதிரி கிடையாது. ஏனெனில், ஜோதிடம், தர்மத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒருவன் சரியான விதத்தில் ஜோதிடக் கருத்தை சொல்ல வேண்டும் என்றால், அவன் தர்ம சாத்திரத்தையும் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். தர்ம தேவன் எப்படி இயங்குகிறான் என்பதும் ஜோதிடம் காட்டும் ஒரு பாடம்.

    ஆனால், ஜோதிடம் என்பது பரிகாரம், predictions பற்றியது மட்டுமல்ல. அது மிக மிக மிக விரிந்த ஒரு science.
    ஆம். அது science.
    அதன அடிப்படைகளையும், வீச்சினையும், வேதாந்தந்தின்படி மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும். அது வேதாங்கங்களில் ஒன்று. வேத புருஷனின் கண்ணென அதை அறிபவர்களுக்கு, அது தான் முதல் science என்பது புரியும். அந்த சயின்ஸ் அடிப்படையில்தான் நான் எழுதிய பிரபஞ்ச தியரியும், இனி அதை ஒட்டி எழுதப் போகும் மற்ற இரு கட்டுரைகளும்.
    இது எப்படி இருக்கு??

    *******
    வயதுக்கு வணங்குவது உங்கள் வளர்ப்பைக் காட்டுகிறது.
    ஆனால், சொல்லப் பட்ட கருத்துக்காக நீங்கள் வணங்கினால், உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆகும்.

    *****
    My interview in hindu-blog might put in perspective the issue on Gods. It can be accessed at
    https://www.hindu-blog.com/2010/01/interview-with-jayasree-saranathan.html

  13. //
    9-ஆம் நூற்றாண்டு என்று கொண்டது திருவரங்கத்தில் மண்டபத்தில் அரங்கேற்றீயதாக உள்ள குறிப்பை வைத்து என்று படித்திருக்கிறேன்
    //

    கம்ப ராமாயணத்தில் வைணவ ஆசார்யரான நாதமுனிகள் (824 CE பிறப்பு) மிகவும் லயித்ததாக சான்று உள்ளது – எனவே 9-ஆம் நூற்றாண்டு என்று கொள்வது சரியாக இருக்கும்

    மேலும் பெரியவாச்சான் பிள்ளை (1167 – 1265) ராமாயண தனிஸ்லோகம் என்று ராமாயணத்தில் வரும் சில ஸ்லோகங்களை எடுத்துகொண்டு இயற்றியுள்ளார் – இவரும் கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி உள்ளார் – எனவே 13 அம் நூற்றாண்டு என்றிருக்க வாய்ப்பில்லை

  14. திவாகர் ஐயா,

    கம்பர் காலம் பற்றிய இரு கருத்துக்கள்… நன்றி : விக்கிபீடியா

    1) 9-ஆம் நூற்றாண்டு (https://ta.wikipedia.org/wiki/திருவரங்கம்)

    கம்பர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் என்பதற்கு ஆதாரம் பாயிரத்தில் உள்ள இந்தப் பாடல் –

    எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
    நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
    பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்
    கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே

    2) 12-ஆம் நூற்றாண்டு (11 என்று நான் கூறியது தவறு) – https://ta.wikipedia.org/wiki/கம்பர்

    ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.
    —–
    மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது.

  15. இங்கு அனைவர் கவனத்தையும் ஈர்க்கவில்ல ஒரு செய்தி உள்ளது. https://tamilvu.org/library/libindex.htm என்ற தளத்தில் உள்ள “காப்பியங்கள்” பகுதியின் கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில், மீட்சிப் படலத்தில் ஜடாயு அவர்கள் குறிப்பிட்டுள்ள 34 முதலான சுலோகங்கள் முற்றிலும் வேறுபட்டவையாகக் காணப்படுகிறது. நான் சுட்டியுள்ள தளத்தில் இராமேசுவரம் பற்றிய செய்தியே இல்லை.

  16. Dear Brother Sarang,

    I request your attention to the comment posted by you few days ago, mentioning that Rama worshipping Shiva was not mentioned in Kamba Raamayanam.

    //Sarang
    21 January 2010 at 5:19 pm
    //இராம‌ர் சிவ‌னை வ‌ணங்க‌வில்லையா?

    யார் பெரியவர், ராமர் சிவனை ஏன் வணங்க கூடாது ? என்ன குடியா முழுகி போகிடும்? சிவனா விஷ்ணுவா இல்லை ஏசுவா என்ற எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இதை சொல்கிறேன்

    நாம் எப்பொழுதுமே தகுந்த முன்னோர்கலளால் எடுக்கப்பட்ட மேற்கோள்களை மட்டுமே எடுக்க வேண்டும்

    ராமர் சமுத்ரா அரசனிடம் சரணாகதி பண்ணுகிறார், சுக்ரிவனுக்கு பனி செய்கிறேன் என்கிறார் – இதெல்லாம் ராமாயணத்தில் உண்மையில் இடம் பெறுகின்றன

    இந்த லிங்க பிரதிச்டைக்கு ஆதாரம் கிடையாது – இது மூலமான வால்மீகி ராமாயனத்திலும் இல்லை, அதற்கு அடுத்து கூறப்படும் கம்ப ராமாயனத்திலும் இல்லை

    லிங்க பிரதிஷ்டை முதலில் கையாண்டவர் துளசி தாசரே – அவர் அத்வாததின் சிறப்பை சொல்வதற்காக இந்த கதையை அனுபவ பூர்வமாகவே சேர்த்திருக்க வேண்டும் .//

    With Mr. Jataayus article,

    காலம் சென்றது எனக் கருதி, கையால்
    கோலமான மணலினைக் கூட்டியே
    ‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
    ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

    I hope you might have understood that it is mentioned in Kamba Ramaaan. I request you to use your experience and knowledge to create haramony, and to avoid hasty conclusions which may lead to animosity, this is only a request.

  17. இன்னொரு விஷயம்:

    “உலகம் யாவையும் தாம் உளவாக்களும்” என்ற கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அடுத்த பாடலில் கம்பர் “எண்ணிய மூன்றினுள் முற்குனத்தவரே முதலானவர்” என்று திருமாலே மும்மூர்த்திகளுள் முதலானவர் என்றும், ஆரணிய காண்டம் விராதன் வதைப்படலத்தில் 59-வது வேண்பாவவிலும் “மும்மூர்த்திகளுள் பரம்பொருள் நாரணனே” என்று கூறியுள்ளார். அப்படி இருக்க அவரைச் “சமரச வாதி” என்று கூறுவது தவறு. காப்பியங்களிலும் பல இடைச்செருகல்கள் உள்ளமையை இதிலிருந்து காண்கிறோம் – இதுவும் கலியின் தாண்டவமாகத் தான் இருக்க வேண்டும். ஆக, கம்பன் சுத்த வைணவ நெறியையே கடைபிடித்ததற்குச் சான்றுகள் உண்டு.

    அது சரி, சைவரான அருணாசலக் கவிராயர் கூட கம்பராமாயணத்தை ஒட்டியே “ராம நாடக கீர்த்தனைகள்” பாடியுள்ளாரே, அவர் பாடலில் எங்கேயும் “ராமன் சிவனுக்கு ராமேசுவரத்தில் பூஜை பண்ணினார்” என்று கூறவில்லையே?

  18. ‘கம்பன் வைணவன்; சமரசவாதி அல்ல’ என்று பறைசாற்றுகிறார்கள் உ. வே. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் உள்ளிட்ட சிலர். அச்சுவடியை இங்கு பதிவிறக்கம் செய்யலாம் – https://www.tamilheritage.org/old/text/ebook/kamban.pdf

  19. நண்பர் திருச்சிகாரரே

    //I hope you might have understood that it is mentioned in Kamba Ramaaan. I request you to use your experience and knowledge to create haramony, and to avoid hasty conclusions which may lead to animosity, this is only a request.
    //

    அவசரப்பட்டு எழுதவில்லை

    நண்பர் கந்தர்வன் கூறிய வலைதளத்தை சென்று பாருங்கள்

    கம்பர் கூறியது மீட்சிப்படலத்தில் வருவது இதுவே

    “பாதகம் அனைத்தும் வந்து நோக்கிய பொழுதே நூருஞ் சேதுவை நீயும் நோக்காய்” இது வால்மீகி கூறியதை அப்படியே தழுவி எழுதப்பட்டது

    அடியேன் ஒன்றும் சாதி அடிப்படையில் இதை எழுதவில்லை – தேவையே இல்லாமல் இல்லாததை சொல்லி நல்லிணக்கத்தை வழக்கின் என்ற பேரில் அதை கெடுக்கவேண்டாம் என்ற காரணமே”

    நான் நீங்கள் அவசரபட்டோ படாமலோ சொன்ன பலவற்றை எடுத்துக்கூறிய பிறகும் என்னை ஒரு முகவவே பேசுவதால் என்ன பயன் – அடியேனுக்கு இது மகிழ்ச்சியே

    நீங்கள் ஒரு முகமாக எழுதியவை உங்கள் பார்வைக்கு 🙂

    // நான் அவசரப்பட்டு எழுதுபவன்
    // ஆரவாரம் செய்பவன்
    // ராமர் கூடவே இருந்தது போல் பேசுபவன்
    // சிலர் சொன்னதை வைத்துகொண்டு உண்மைபோல் பேசுபவன்
    // ராமாயணத்தை அடி முதல் கடை வரை கரைத்து குடித்ததுபோல் பேசுபவன்

    இதெல்லாம் “animosity” வளர்க்காதா 🙂 – பூருவர் செய்த புண்ணியம், ஆச்சர்ய கிருபை எனக்கு உண்மையாகவே வளர்க்கவில்லை

  20. // கந்தர்வன்
    28 January 2010 at 5:48 pm
    இங்கு அனைவர் கவனத்தையும் ஈர்க்கவில்ல ஒரு செய்தி உள்ளது.
    //

    அன்புள்ள கந்தர்வன்,

    என் பள்ளிக் காலம் முதல் நாம் கம்பனைக் கற்று வருகிறேன். கல்லூரிக் காலங்களில் கம்பன் கழக மேடைகளில் பேசியும் இருக்கிறேன்.

    கம்பராமாயணத்தில் பாடபேதங்கள் உண்டு. பதிப்புகள் வேறுபடுதலும் உண்டு. தமிழ் மரபிலக்கிய உலகில் நெடுங்காலமாக இது பற்றிச் சர்ச்சை நடந்து வருகிறது. ஆதாரபூர்வமாக மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு வந்தபின் இது பெருமளவு அடங்கியது எனினும் ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. ரசிகமணி டி.கேசி. கம்பனின் முத்திரை உள்ள பாடல்கள் என்று குறிப்பிட்டவற்றை மட்டும் காட்டி, மற்றதெல்லாம் இடைச் செருகல் என்றார் – அதைப் பெரும்பாலர் ஏற்றுக் கொள்ளவில்லை. (கம்பன் கழகப் பதிப்புகளில் இன்று வரை இந்தப் பாடல்களில் * போட்டுக் குறிப்பும் கொடுத்திருப்பார்கள்). அது போக, சுவடிகளில் மாறுபட்டுக் காணப் படும் பாடல்களை ”மிகைப் பாடல்கள்” என்று கம்பன் கழகப் பதிப்பிலேயே குறிப்பிட்டுக் கொடுத்திருக்கிறார்கள் – இதன் பொருள் சுவடிகள் தொடர்பான தெளிவின்மை மட்டுமே தவிர இப்பாடல்கள் ஆதாரத் தன்மை பற்றியது அல்ல, இவை கம்பன் பாடல்களாகவே இருக்க முழு சாத்தியம் உள்ளது என்ற குறிப்பும் கூடவே கொடுக்கப் பட்டிருக்கும்.

    இங்கு நான் சுட்டியிருக்கும் ராமேஸ்வரம் பற்றிய பாடல்கள், சிவன் ராமஜபம் செய்வது பற்றீய “மாவலச் சூலியார்” பாடல் – இவை இரண்டுமே மிகைப் பாடல்களாக கம்பன் கழகப் பதிப்பில் உள்ளன. அவற்றுக்கான பக்கங்களையும் அளித்திருக்கிறேன்.

    அது இருக்கட்டும். உங்கள் நோக்கம் தான் என்ன? கம்பன் பாடல்களை மோசடியாக நான் மேற்கோள் காட்டுகிறேன் என்று நிறுவுவதா? அல்லது உறைந்து போன 15-ஆம் நூற்றாண்டு மனநிலையில் நின்று கொண்டு medieval தனமாக சமயப் பூசல்களை வளர்ப்பதா? தமிழகமும், இந்தியாவும் அந்தப் பூசல்களைவிட்டு வெகுதூரம் வந்து விட்டன. மேலும், கம்பனே கண்டித்திருக்கும் வெற்று சமயவாத சிடுக்குகளில் எனக்கு ஆர்வமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  21. // கந்தர்வன்
    28 January 2010 at 6:20 pm
    கம்பர் “எண்ணிய மூன்றினுள் முற்குனத்தவரே முதலானவர்” என்று திருமாலே மும்மூர்த்திகளுள் முதலானவர் என்றும் //

    அன்புள்ள கந்தர்வன், பாடலில் இருந்து ஒரு வரியை உருவி எடுத்து, அதற்குப் பிழையாகப் பொருள் கூறுவது கம்பன் என்னும் மாமேதைக்குச் செய்யும் அவமரியாதை. இந்தப் பாடலை முழுதாகப் படித்தால் அதன் பொருளே வேறு –

    சிற்குணத்தர் தெரிவுஅரு நல்நிலை
    எற்கு உணர்த்த அரிது; என்ணிய மூன்றினுள்
    முற்குணத்தவரே முதலோர்; அவர்
    நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ.

    சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் கடந்த ஞானியர் நிலையை என்னால் உணர்த்த முடியாது; இவற்றுள் முதலாவதான சத்துவகுணத்தின் முழு உருவமாகத் தோன்றிய ஸ்ரீராமனுடைய நற்குணங்களாகிய கடலில் மூழ்குவதே நன்று.

    As a co incidence, இந்தக் கருத்தையே மையமாக வைத்து இரண்டு வருடம் முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்:

    நற்குணக் கடல்: ராம தரிசனம் – https://jataayu.blogspot.com/2007/03/blog-post_29.html

    கம்பன் கவியில் மேலும் திளைக்க விரும்புபவர்கள் அதைப் படிக்கலாம்.

  22. மதிர்புக்குரிய ஜடாயு அவர்களே

    நான் உங்களை விட வயதிலும், மதியிலும், பக்தியிலும் மிக சிறியவன் – என் நெஞ்சே தோன்றியாதாக இதை கொண்டு பிழை பொருத்தருள வேண்டுகிறேன்

    //
    அல்லது உறைந்து போன 15-ஆம் நூற்றாண்டு மனநிலையில் நின்று கொண்டு medieval தனமாக சமயப் பூசல்களை வளர்ப்பதா? தமிழகமும், இந்தியாவும் அந்தப் பூசல்களைவிட்டு வெகுதூரம் வந்து விட்டன.
    //

    எனக்கு அப்படி தோன்றவில்லை – உண்மையான ஒன்றை மேற்கோள் காட்டினால் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது – நாம் ராமர் சிவனை வழிபட்டார் என்றோ, சிவன் விஷ்ணுவை வழிபட்டார் என்றோ கூறுவதன் மூலமே நல்லிணக்கம் வராது -மாறாக அது பூசலையே பெரிதுபடுத்தும் – இதற்குதான் மூலமான ஒன்றை வைத்து அதில் உள்ளதை மேற்கோள் காட்டினால் பிரச்சனையை இராது

    இங்கு யார்ய்ம் வழிய சென்று ஒருவரை ஒருவர் தவறு கூறவில்லை – உதாரனத்திற்க்கு கந்தர்வன் அவர்கள் தானாகவே சைவ சித்தாந்தத்தில் உள்ள ஒன்றை எடுத்து அது எப்படி அப்படி சொல்லலாம் என்று கூறவில்லையே?

    இங்கு சொள்ளப்படதர்க்கு ஆதாரம் காட்டி பதில் எழுதுவதில் தவறேதும் இல்லை – இங்கு சிலர் கிட்டத்தட்ட கந்தர்வன் சொல்லும் கருத்திருக்கு ஒப்பவே சொல்கின்றனர் கட்டுரை எழுதுகின்றனர் , ஆனால் தீர ஆராய்ந்த பின்னர். அவர்களுக்கு மரியாதையுடன் பதில் எழுதும் நாம் கந்தர்வன் அவர்களுக்கும் ஏன் அப்படியே எழுதக்கூடாது – அவரது கருத்தில் மெய் இல்லையேல் எடுத்துகூரலாமே –

    சிலர் எழுதினால் நான் உங்களது கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்றும் சிலர் எழுதினால் காழ்புனற்சி என்றும் கொள்ளாமல் சொன்ன விஷயத்தை பற்றி பேசினாலே பாதி பிரச்சனையை ஒய்ந்து விடும் என்பது எனது தாழ்மையான கருத்து

  23. // சிலர் எழுதினால் நான் உங்களது கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்றும் சிலர் எழுதினால் காழ்புனற்சி என்றும் கொள்ளாமல் சொன்ன விஷயத்தை பற்றி பேசினாலே பாதி பிரச்சனையை ஒய்ந்து விடும் என்பது எனது தாழ்மையான கருத்து //

    அன்புள்ள சாரங்க், உண்மையில் திரு. கந்தர்வன் மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. சில சமயங்களில் இப்படி வெட்டிக் கேள்வி கேட்பது ஒரு ஸ்டைலாக ஆகி விட்டது – தமிழ் வலைப்பதிவுகள் தந்த பழக்க தோஷம். அவ்வளவே.

    மேலும், சமரசப் புள்ளியை நோக்கி இட்டுச் செல்லும் கருத்தை மனம் பணிவுடன் ஏற்கிறது. சவடால் விடும் போக்கில் உள்ள கருத்தை அதே வகையில் எதிர்கொள்கிறது – இல்லையா?

  24. உங்கள் எல்லோருக்கும் இருக்கும் அளவுக்கு எனக்கு வேத, புராண, இதிகாச, சங்க இலக்கிய ஞானம் இல்லை. எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கு எழுதுகிறேன், தவறாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

    இராவணனை கொன்றபிறகு ஸ்ரீ இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கவில்லை! இதை துவைத சமய மகானான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளே விளக்கியுள்ளார். ஆனால் இராமனக்குக்காகவே போரிட்டிருந்தாலும் அனுமான் உள்ளிட்ட அனைத்து வானர வீரர்களுக்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து மீள அவ்வீரர்கள் கண்டகி நதியில் நீராடி சாளக்ராமத்திர்க்கு பூஜை செய்தனர் (ஆதாரம்:- திரு.அம்மன் சத்தியநாதன் எழுதிய “ராகவேந்திர மகிமை”).

    இராமர் லிங்க பிரதிஷ்டை செய்தாரோ இல்லையோ, ஆனால் மதிற்பிற்குரிய ஜெயஸ்ரீ மேடம் கூறியதுபோல, இராமர் சிவனை வணங்கினார் என்று புலப்படுகிறது. நிற்க, இதனால் சிவன் இராமனைவிட உயர்ந்தவர் என்று பொருளில்லை. விஷ்ணுவின் ரேஞ்சுக்கு அவதாரமெடுத்து வந்து இராவணனை வதைக்கவேண்டும் என்றில்லை. வைகுண்டத்திலமர்ந்த படியாகவே முடித்திருக்கலாம்.. ஆனால் மனிதர்களுக்கு ‘முன்னுதாரணமாக’ திகழவேண்டும் என்பதற்காக அப்படி செய்தான். அப்படியிருக்கையில், சிவனின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், இராமேஸ்வரத்தின் மகிமையை தெரியபடுத்தவும் ஏன் இராமர் இராமனாதச்வாமியை வணங்கியிருக்க முடியாது???

    விட்டுக் கொடுப்பது மனித இயல்பு மட்டுமில்லை, தெய்வங்களும் செய்துள்ளனர். மாகாபாரதத்தில் பதிமூன்றாம் பர்வமான அனுசான பர்வத்தில், கிருஷ்ணன் ‘சிவ சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். சிவன் பத்ம புராணத்தில் ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை’ பாடுகிறான். நம் ஆராதனைக்குரிய தெய்வங்களே போட்டி, பொறாமையில்லாமல் விட்டுக் கொடுத்துக் கொள்ளும்போழுது, அவர்கள் பெயர்களில் நாம் போட்டி போடுவது மகாபாதகம் இல்லையா?

  25. Dear Brother Sarang,

    I never say some thing authoritatively, those things which I am not sure of!

    So, when you say //Ram worshipping Shiva // is not mentioned in Vaalmiki Raamayan, I did not counter and say that it is mentioned in Vaalmiki Raamayan, only requested tamilhindu to clarify.

    On seeing the reference given by Mr. armchair critic, I came out open acknowledging what I observed!

    Now Regarding Kamba Raamayan, Mr. Sarang, what is your stance? – Are the verses quoted by Sri Jataayuji are in Kamaba Raamayan or not?

    Can you come out with your stance about wehether //Ram worshipping Shiva // mentioned in Kamba Raamayan now?

    Again Mr. Sarang, if you are younger to Sri Jattayuji, I feel a real brutal shock for me.

    I never expect this much animosity for Shiva (though not direct but obvios) from young People. I thought that the younger generation, especaillay younger generation hindus, to be more tolerant, more liberal, more rational, with more kindness, more courteous and with lesser hatredness.

    But if the younger generation posseses this much dogmatism and animosity, I feel a head spin, this is a danger for the world, danger for India and a danger for hinduism as well.

    But I dont blame you, this much venemous content was passed on to younger generation by the elder generation. These old people pass on the fanatic venom as if it is the true religion, because that is the religion what they know!

    Please excuse me, I have a habit of reacting strongly
    1) whenever I find tactic approval or support for Casteism

    2) whenever I find obvious or hidden promotion of religious fanaticism.

    I think that both are aginst the civilised soceity and detorious to the survival of mankind.

    I can say without hesitation that, any one who have religious hatredness in his heart, he is a Jihaadhi- irrespective of whether a person taunts a weapon or not!
    Any one who has hatredness for the gods worshipped by others, is a Jihadhist, may be we can call them soft Jihadist, if they dont hold any weapon.

    I wish you all success and all the Best .

    Thiruchchikkaaran.

    (edited and published)

  26. சைவர்கள் வெங்கடேச சுப்ரபாதத்தை பக்தியுடன் தினமும் கேட்கின்றனர். அதில் ‘விதி சங்கரேந்த்ர வனிதாபி ரர்ச்சிதே’ என்று வருகிறது. அதாவது ‘பிரம்மா, சிவன், இந்திரன் ஆகியோரின் மனைவியர் உனக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.. மகாலக்ஷ்மி துயிலெழுக!!’ என்று ஆகிறது. இதைக் கண்டு சைவர் யாரும் வருத்தப்படுவது இல்லை.

    ஆனால் எத்தனையோ வைணவர்கள், குஜராத்தியர் சிவன் சன்னதிக்கு வருவதை தவிர்க்கின்றனர். சில சமயம் ஏக வசனத்திலும் குறிப்பிடுவதுண்டு.

    எனவே மிகப் பெரிய அறிவாளிகளான ராஜாஜி, ராமானுஜன் இன்னும் எண்ணற்ற மேதைகளைக் கொடுத்த வைணவர்கள், அவர்களின் உயர்தன்மைக்கேற்ப சற்றே அனுசரணையுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து சைவர்களையும், சிவனையும் மதித்து நடத்தல் நன்று.

  27. திரு ஜடாயு அவர்களே,

    நான் ஒன்றும் வெட்டிக் கேள்வி கேட்கவில்லை. ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களுடைய புத்தகத்தை முழுவதும் வாசித்துப் பாருங்கள். அவருடைய தகப்பனாரும், அவரும் இராமாயணத்திற்கு மிக பிரம்மாண்டமான உரை ஒன்றை எழுதியுள்ளதை முன்பே சுட்டினேன். இதை இங்கு பதிவிறக்கம் செய்யவும்: https://www.tamilheritage.org/old/text/ebook/kamban.pdf . ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஒன்றும் “ஸ்டைலுக்காக” வெட்டிக் கேள்வி கேட்கவில்லை. நம் வேத-வேதாந்த நூல்கள், ஆழ்வார் பாசுரம், கம்பராமாயணம் இவற்றிற்கு 50 ஆண்டு காலமாகத் தொண்டு புரிந்துள்ள 80-ஐயும் தாண்டிய வயோதிகர்; பரம பண்டிதர். தர்க்கத்திலும் வாதத்திலும் புலி.

    சுருக்கமாக, “அரன் பெரியான்; உலகு அளந்த அறி பெரியான்” என்ற வெண்பாவிற்கு கம்பர் கூறிய மற்ற வேண்பாக்களுடன் முரன்படாதபடி தான் அர்த்தம் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நான் கூட அவ்வேன்பாவிற்கு “இங்கு கம்பர் என்ன சொல்கிறார் என்றால், பிரமன் தான் அரி, அரனை விடப் பெரியவன் என்று” என்று அர்த்தம் கொள்ள முடியும். தனியே அவ்வேன்பாவிற்கு நான் இப்பொழுது சொன்ன பொருள் கொண்டால் எந்த வித முரண்பாடும் இருக்கும் போலத் தெரியாது. பல இடங்களில் கம்பர் ‘மும்மூர்த்திகளில் உயர்ந்தவன் திருமால்; அத்திருமாலே இவ்விராமன்’ என்று முழங்குகிறார். விராதன் வதைப் படலம், ஜடாயு வதைப் படலம் இவற்றில் பல இடங்களிலும் “சிவன், பிரமனை விடப் பெரியோன் திருமால்” என்று தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார். விராதன் வதைப் படலத்தில், “மற்ற தேவதைகள் தவம முதலியவற்றை பாப புண்ணிய வசத்தில் இருந்து வீடுபெறச் செய்பவை; திருமாலோ இவற்றின் வசப்படாமல் யோகா நித்திரையில் ஆழ்ந்து உலக சம்ரக்ஷனம் பண்ணுபவர்” என்றும், “இதை அறியாது மற்ற தெய்வங்களை பரம்போருளாகக் கூறும் மற்ற சமயங்கள் தத்துவத்திற்கு முரனனானவை” என்று முழங்கியுள்ளார். இவரை எப்படி “சமரசவாதி” என்று சொல்ல முடியும்? “அரன் பெரியான்…” வெண்பாவிற்கு நீங்கள் சொல்லியுள்ள விளக்கம் உண்மையானால், கம்பன் தன்னையும், விராதனையும், ஜடாயுவையும் “அறிவிலிகள்; வீடுபேறு அடையமாட்டார்கள்” என்று சொல்லலாகுமே! ஆக “அரன் பெரியான்…” என்ற செய்யுளில் “கம்பர் சிவனையும் திருமாலையும் ஒப்பாக நினைப்பவர்களோ, இவற்றில் யார் பெரியவர் என்றோ தெளியாது மயங்குபவர்க்கு வீடுபேறு கிட்டுவது அரிது” என்று கொள்வதே மற்ற பாகங்களுக்கு முரண்பாடற்றது!

    “சமய நல்லிணக்கம்” என்ற பெயரில் நீங்கள் சொல்லியிருப்பது வைணவ மரபைச் சாடுவதைப் போலுள்ளது. ஏனெனில் “ஆழ்வா,ர் பூர்வாச்சாரியார்க்ள், வைணவப் பெருமக்கள், ராமானுஜர், மத்வர், சங்கரர், இவர்கள் நாள்களில் ‘சிவனை விடப் பெரியோன் திருமாலே; திருமால் தான் பரம்பொருள்; மற்ற தெய்வங்கள் ஜீவர்களே’ என்று சொல்லியுள்ளதால், அந்நூல்களை ஆதரித்தால் நரகமே” என்ற விபரீத அர்த்தத்திற்கு கொண்டு சென்று விடுமே! தயவு செய்து நான் சொன்ன பாயிண்ட்-களை ஆராய்ந்து விட்டு, நான் என்ன எதற்குச் சொன்னேன் என்பதை முடிவு பண்ணுங்கள்!

    ஆகையால் ‘ஸ்டைல்-க்காக எழுதுகிறேன்’ என்று நீங்கள் சாடியதற்கு, நீங்கள் மன்னிப்புக் கேட்டே தீர வேண்டும்!!!! X-(

  28. அன்புள்ள கந்தர்வன்,

    என் வாக்கிய அமைப்பு சரியாக வரவில்லை.. அதனால் உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டது, அதற்காக வருந்துகிறேன்.

    இதில் வெட்டி என்பதற்கு “கத்தியால் வெட்டி” என்பது போலப் பொருள் கொள்ளவும். மேலும், ”வெட்டிக் கேள்வி கேட்கும் ஸ்டைல்” பழக்க தோஷம் *எனக்கு* ஏற்பட்டு விட்டது என்று சொல்லிக் கொள்ளவே விழைந்தேன் – ”அதிருக்கட்டும். உங்கள் நோக்கம் தான் என்ன?” என்ற எனது கேள்வியைக் குறித்தது அது.

    மற்றபடி உங்கள் கேள்விகள் வெட்டி (useless) என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

    கம்பனை “சமரசவாதி அல்ல சமய வெறியன்” என்று காட்டுவதற்கு ஒருவர் *பாடுபட்டு* உழைத்திருக்கிறார் என்றால் அந்த முயற்சி முழுவதும் வீணானது, தேவையில்லாதது, பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இந்தப் பாண்டித்யத்தை வேறு நல்ல வழிகளில் செலவழித்திருக்கலாம்.

    பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே…
    ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் ..
    அலங்கலில் தோன்றூம் பொய்மை அரவு என..
    ஒன்றே என்னில் ஒன்றேயாம் பலவென்றுரைக்கில் பலவேயாம் ..

    எத்தனை எத்தனை பாடல்கள்!! தத்துவ அளவில் கம்பன் ஒரு வேதாந்தி, சமய சமரசம் கொண்டவன் என்று *பல* மரியாதைக்குரிய கம்பராமாயண அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அது எதுவுமே உங்கள் கண்ணில் படவில்லையா அல்லது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

    கம்பன் தமிழ்மண் படைத்த மாபெரும் கவிஞன். அவன் *சமயவாதி* அல்ல, அவனது பெருங்காவியம் *வைஷ்ணவ* நூலும் அல்ல (வைஷ்ணவர்களின் சமய நூல் பட்டியல் எதிலும் அது சேர்க்கப் படவும் இல்லை). அவனது மகோன்னதமான கவிதாவிலாசமும், மேதமையும் இந்து ஞான மரபின், கவிதா மரபின் உச்சம்.

    அதோடு கூட, அவன் இயற்றிய இராமகாதை உலகளாவிய பெரும் காவியம். அவன் உலகக் கவிஞன். “உலகம் யாவையும்” என்று தன் காவியத்தைத் தொடங்கியதே அதற்குக் கட்டியம் கூறுகிறது.

    அப்பேர்ப்பட்ட கவிஞனை சமயவாதக் குப்பிக்குள் அடைப்பது அவனைப் பெருமைப் படுத்தவில்லை, சிறுமைப் படுத்துகிறது; அவனை மட்டுமல்ல, அப்படிச் செய்பவர்களையும் தான்.

  29. திரு. கந்தர்வன் அவர்களே,

    நமஸ்காரம்.

    நல்லிணக்க அடிப்படையிலே, நான் பெருமாள் (திருமால்) , சிவ பெருமான் ஆகிய இருவரையும் வழிபாடு செய்ய தயார், அங்க பிரதக்ஷணம் செய்யவும் தயார். வேண்டுமானால் திருமாலுக்கு ஒரு சுற்று அதிகமாகவும் சுற்றுகிறேன்.

    ஆனால் உங்களின் கருத்துக்களைப் படிக்கும் போது

    //ஆக “அரன் பெரியான்…” என்ற செய்யுளில் “கம்பர் சிவனையும் திருமாலையும் ஒப்பாக நினைப்பவர்களோ, இவற்றில் யார் பெரியவர் என்றோ தெளியாது மயங்குபவர்க்கு வீடுபேறு கிட்டுவது அரிது” என்று கொள்வதே மற்ற பாகங்களுக்கு முரண்பாடற்றது!//

    அதில் பிடிவாதமான மத வெறி இருப்பதாகவே உணர்கிறேன் என்பதை, மிக வருத்தத்துடன் தெரிவுக்கிறேன்.

    யார் பெரியவன் என்கிற காட்டா குஸ்தி முறை சிந்தனையில் ஈடுபட்டால், நீங்க அல்லாஹ் தான் பெரிய கடவுள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இசுலாமியர் தான் இந்தியாவின் மீது படை எடுத்து அதை ஆண்டனர். இந்தியர்கள் ஒரு போதும் சவூதி அரேபியாவை ஆளவில்லை. அதே காட்டா குஸ்தி முறை சிந்தனையில் ஜெஹோவாதன் அல்லாஹ்வை விடப் பெரிய கடவுள், ஏனெனில் இஸ்ரேயர் பாலஸ்தீனியரை விரட்டி விட்டனர்- இது போல காட்டு மிராண்டிக் கற்பனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

    யார் வல்லவனோ, பெரியவனோ அவன் தான் கடவுள், என்பது காட்டு மிராண்டிக் கற்பனை.

    யார் நல்லவனோ அவனைக் கடவுளாக கருதலாம் என்பதே- வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – என்பதே நாகரீக சமுதாயத்தின் சிந்தனை.

    இந்து மதமோ அறிவைத் தூண்டும் மதம், //என் அறிவைத் தூண்டும்//

    //தியோ யோ ந : ப்ரசோதயாத்//

    என்று தானே கூறுகிறார்கள்.

    காட்டு மிராண்டிப் பாதையை விடுத்து பகுத்தறிவும் பாதைக்கு வந்து, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

  30. Wonderful article .
    our beloved Bharathi said ” Pugazh Kamban pirantha Tamizhnadu ” -one Bhaktha Kavi understands another .
    btw, the last thing we need is this sort of internal divisions. Kamalhasan must be smiling at this.Pls avoid this.
    “Ariyum Sivanum onnu-ariyathavan vayil mannu “-Grandmothers say this -they are cent perecent right.
    Srimathi Jayasree’s articles and comments are educative and a delight to read.
    We look forward to more articles by Srimathi Jayasree and Thiru Jatayu.
    Thanks many for tamilhindu site.Those of us who have recently taken up reading Tamil literature are very thankful to this efforts.
    Also another thing-there are a million things we can say abt Saiva-Vaishnava unity-i read somewhere to this day a garland of flowers are sent from Srirangam temple to Samayapuram temple on occasions.
    My favorite dark skinned God sends gifts to his beloved sister [also dark skinned] in Madurai too.
    Those who entertain divisive thoughts stop the flow of divine love in their hearts.
    I know only TV serial Mahabharat and Rajajai’s Vyasar virundhu-what abt the Pasupatha astra episode?
    Arjun who is Narayana’s friend and BHaktan is embraced by the lord of Pasus-jivas and then gifted with the astra he wanted.
    Wasnt he Krishna himself in another form?-or vice versa depending on where you stand -Siva bhakthi or Vishnu Bhakthi?

  31. நண்பர் திருசிக்காரரே

    நான் எதையும் தீரானமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் – தெரிந்த பிறகே எழுத முயற்சிப்பவன்

    ஜடாயு அவர்களே கம்ப ராமாயணத்தில் ஊடுருவல் உள்ளது என்று பதில் எழுதி விட்டார் – கந்தர்வன் அனுப்பிய வலை தளம் அரசு சார்ந்த ஒரு “online library” – அதில் கம்பன் ராமன் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் என்பதாக இல்லவே இல்லை [அவர் சுட்டிக்காட்டிய பாடல்களும் இல்லை] – இருக்கோ இல்லையோ, இதை நான் தர்க்க ரீதியில் ஏன் அவ்வாறு இருக்க முடியாது என்று எழுத தயார் – தர்க்கம் என்றால் தவறாக என்ன வேண்டாம் அது லாஜிக் தான் – அறிவு சார்ந்தது, உணர்ச்சி சார்ந்தது அல்ல – நான் உணர்ச்சிவசப்படாமல் எனக்கு தெரிந்த தர்க்க முறையை கொண்டே எழுதினேன் (என்ன புர்வபக்ஷின், பதில், சித்தாந்தம் என்றெல்லாம் முகவுரை போடவில்லை) – நான் எழுதியதை வெறும் லாஜிக் முறையில் படிதிதுப் பார்த்தல் உங்களுக்கு புரியும் என் உள்மனது – மேலும் நான் மீண்டும் மீண்டும் கூறியது – ராமர் சமுத்ரராஜனை (வருணன்) பணித்தார், சுக்ரீவனை பணித்தார் –

    வருணனை பணித்த ராமர் அவசியம் இருந்தால் சிவனையும் வணங்கி இருப்பார்

    இதை நான் பல முறை எடுத்துக்காட்டிய பிறகும் என் மேல் ஏன் இப்படி ஒரு சமயவாத பழி -)

    எனக்கு தெரிந்து நான் இரண்டு முறை இந்த கருத்தையும் எழுதிவிட்டேன் – “Worship Yours Respect others”. இதை ஏன் நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை – நீங்கள் “Worship all it is ok if you do not respect all” என்று தான் தாத்பர்யம் அதை பின்பற்ற வில்லை என்றால் சமவாதி என்றால் நான் என்ன செய்வது

    ராமர் லிங்கப்ரதிஷ்டை செய்யவில்லை அதற்க்கு சான்று பல உண்டு என்று சொன்னால் அது சமயவாதம் ஆகிவிடுமா – நான் எங்காவது தேவதக்களை தாறுமாறாக பேசி உள்ளேனா – அகந்தை உள்ளவர் என்று கூறினேனா?

    சாரங் என்று ராமருடைய பெயரை விரும்பி வைத்துகொண்ட எனக்கு ராமரை தூஷிக்கும் என்னமா இருக்கும்

    தயவு செய்து நீங்கலாக நான் ஒரு சமயவாதி என்று முடிவு கட்ட வேண்டாம் – எல்லாம் எனக்கு OK என்று கூறினால் தான் அவன் பரந்த மனப்பாலன் என்றில்லை – நீங்கலாக என்னுள் விடம் கலந்டிருப்படாக தீர்மானம் செய்ய வேண்டாம் – நான் ஆதாரங்களை காட்டி தான் சொன்னேன் – உகல்லுக்கு அது ஏனோ தவறாகவே படுகிறது – அமைதியாக இரு என்று அறிவுரை கூறும் நீங்கள் என்னைத்தான் எத்ததனை தூஷனை செய்தீர்கள் – இவை யாவும் நீங்கள் தேவை இல்லாமல் நான் ஒரு வித உள்நோக்குடன் எழுதுவதாக கற்பனை செய்ததே – நீங்கள் பட்ட கொவதஎல்லாம் மறந்துவிட்டு, தேவையே இல்லாமல் என்னை தவறு செய்தவன் போல் சுட்டிக்காட்டுவது சரியல்ல

    //
    Please excuse me, I have a habit of reacting strongly
    1) whenever I find tactic approval or support for Casteism

    2) whenever I find obvious or hidden promotion of religious fanaticism.
    //

    இதற்க்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் எங்கே – நீங்களோ என்னை பார்த்தது கூட கிடையாது, எனது நடவடிக்கைகள் என்ன என்று கூட உங்களுக்கு தெரியாது – உணர்ச்சி ரீதியில் மட்டுமே முடிவு கட்டுவது தான் “dogmatism”

    ராமர் சிவனை வணங்கவில்லை என்று ஆதாரத்துடன் கூறினால் அது “fanatism, castesim” ஆகாது – உண்மையை திரிப்பதே “fanatism, casteism” – நமது தர்மத்தில் விசேஷமாக கூறப்படுவது “சத்யம் வத”, “தர்மம் சர” – அசதோமா சத்கமய

    எனது பெயர் மட்டும் ஒரு சைவ பெயராக இருந்தால் உங்களுக்கு என் மீது உள்ள இந்த தவறான கருத்துக்கள் தோன்றியே இருக்காது – எனது உண்மையான பெயர் ஈஸ்வர சப்தத்தில் தான் முடியும் – சாரங் என்பது “IIT madras” நடத்தும் ஒரு விழாவே

    //
    Again Mr. Sarang, if you are younger to Sri Jattayuji, I feel a real brutal shock for me.
    //
    ஏன் சிறியவர்கள் உண்மை பேசக்கூடாதா

    //
    I never expect this much animosity for Shiva
    //

    என்னுள் animosity for shiva – எங்கே கண்டீர்கள் – நான் சொன்ன உண்மை கருத்தை உங்கள் கற்பனையால் பின்னி இவ்வண்ணம் எழுதுவது சரி இல்லையே – எனக்கு உண்மையில் யாரிடமும் த்வேஷம் கிடையாது – எல்லாமே உங்கள் மனதின் கல்பிதம் – நீங்களே ஒன்றை உருவாக்கிவிட்டு அது தான் சரி என்று நிற்பது ஏன்

    //
    I can say without hesitation that, any one who have religious hatredness in his heart, he is a Jihaadhi- irrespective of whether a person taunts a weapon or not!
    Any one who has hatredness for the gods worshipped by others, is a Jihadhist, may be we can call them soft Jihadist, if they dont hold any weapon.
    //

    இதெல்லாம் தேவியே இல்லாத பெரிய தடித்த வார்த்தைகள் – இங்கு யாருமே வெருப்புக்கருதுக்கள் சொல்லவில்லை – வாதம் தான் செய்கிறார்கள். வாதம் செய்யும் பொது இங்கு ஒரு சிலருக்கு மட்டுமே கோவம் வந்து மற்றவர்களை ஒருமுகமாக எழுதுகிறார்கள் –
    கருத்துக்களை வாதிடாமல் இருதால் அது முழுமை பெறாத அறிவாகவே இருக்கும் – சங்கரர் வாதிடாவிட்டால் புத்தம் தான் தலை ஓங்கி இருக்கும் – அதற்காக இந்த அல்பனை சங்கரருடன் ஒப்பிடவில்லை – சங்கரருக்கு முன்பே என்னை போன்ற அல்பர்கள் சூன்யவாதம் தவறு என்று வாதிட்டு வந்துதான் இருப்பார்கள் – சங்கரர் தனது மகத்தான அறிவு கொர்மையல் சூன்ய வாதத்தை விரட்டி அடித்தார்

    //
    But if the younger generation posseses this much dogmatism and animosity, I feel a head spin, this is a danger for the world, danger for India and a danger for hinduism as well.

    But I dont blame you,
    //

    நீங்கள் என்னை எவ்வளவோ சாடிவிட்டு – நான் சொன்ன ஆதாரங்களை எல்லாம் ஏற்கமாட்டேன் யாரோ வந்து சொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறிவிட்டு இளைய சமுதாயத்தின் மீது ஒட்டு மொத்த பழியையும் போட்டால் அது சரி என்று எனக்கு படவில்லை

    உண்மையை சொல்ல அரவது வயது ஆகவேண்டும் என்று அவசியம் இல்லை, ராமனை பரி உண்மை கருத்தை சொல்ல ராம பக்தனாக இருக்க கூததேன்ற அவசியமும் அல்ல – உண்மை சொல்லியும் ஏற்காதோரை நான் என்ன சொல்ல
    நான் நிறைய எழுதிவிட்டேன் இவ்வளோ சொன்ன பிறகும் உங்கள் கருத்திலேயே நிர்ப்பீர்கள் என்றால் நான் உங்களுக்கு அனேக தெண்டன் சமர்ப்பித்து பணிவன்புடனும் புன்முரவளுடனும் விடை சொல்லிக்கொள்கிறேன் – இனி நீங்கள் என்னை இந்த விஷயம் தொடர்பாக என்ன சொன்னாலும் பதில் எழுதமாட்டேன் – எல்லாவற்றையும் என்குரைகலாகவே கொள்வேன்

    சாந்தி சாந்தி சாந்தி – வாய்மையே வெல்லும்

  32. kargiljay avargale

    //சைவர்கள் வெங்கடேச சுப்ரபாதத்தை பக்தியுடன் தினமும் கேட்கின்றனர். அதில் ‘விதி சங்கரேந்த்ர வனிதாபி ரர்ச்சிதே’ என்று வருகிறது. அதாவது ‘பிரம்மா, சிவன், இந்திரன் ஆகியோரின் மனைவியர் உனக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.. மகாலக்ஷ்மி துயிலெழுக!!’ என்று ஆகிறது. இதைக் கண்டு சைவர் யாரும் வருத்தப்படுவது இல்லை.
    //

    நீங்கள் சைவர்கள் என்று அத்வைதிகளை சொல்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது – எனக்கு தெரிந்து அரியிடம் வைணவர்களுக்கு எத்தனை பிடிப்பு உள்ளதோ அரனிடம் உண்மையான சைவர்களுக்கு அததனை பிடிப்பு உள்ளது – புரன்தொழாமை ஒன்றும் தவறில்லை – அது கணவனே கண்கண்ட தெய்வம் என்று இருப்பது போன்ற நிலை – அப்படி இருப்பவர்களுக்கு தான் அந்த அருமை புரியும் (புற த்வேஷமும் தான் தவறு) – உண்ணும் சோறு, பருகும் நீர், வெற்றிலை இப்படை எல்லாவுமே அறி என்றார் ஆழ்வார்

    ராமர் – ராமானி சமணமேவரு என்று பாட – கோபாலக்ருஷ்ண பாரதி “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” என்று பாடினார் (இது த்வேஷம் இல்லை) – கோபாலக்ரிஷ்ணர் நந்தியே அவர் சிவனை தரிசிக்க வழிவிட்ட பரம பக்தர் (சற்று விலகிடும் பிள்ளாய் சன்னிதானம் மறைக்குதாம் பாடல் ) –

    எவ்வளோவோ வைணவர்கள் சிவன் கோவிலுக்கு,முருகன் கோவிலுக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள் – பார்க்கப்போனால் பெரும் பாலான வைஷ்வவ குடும்பத்தில் பிறந்தவர்கள் புறம் தோழா மாந்தர்களாக இருப்பது இல்லை

  33. திரு ஜடாயு அவர்களுக்கு வந்தனம்.

    நீங்கள் சொன்ன சிலவற்றைத் தப்பாகப் புரிந்து கொண்டு சினந்து எழுதியது தவறு என்று ஒத்துக் கொண்டு க்ஷமித்து அருளுமாறு வேண்டுகிறேன்.

    ஆயினும், நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏன் தவறு என்று யாம் எண்ணுவதை மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கு முன்பு, ஒரு கேள்வி: கம்பன் தூய வைணவராக இருந்திருந்தால் என்ன கேடு? ஒருவர் “வைணவர்” என்றாலே “சமயப்பூசலை உண்டாக்குபவர்” என்று ஆகி விடமாட்டாரே! சான்றுகளைச் சரியாக ஆராய்ந்து வாதம் செய்வதே நன்று. நான் இப்பொழுது கூறும் கருத்துக்களை நீங்கள் ஆராய்ந்து, விடை கூறுங்கள். இவாதத்தின் தீர்வு என்னவாக இருக்கிறதோ, அதை அனைவரும் ஏற்ப்போம். ஆராய்ந்து தெளிவதால் எந்த வித பூசளுக்கும் இடம்கொடுப்பதாக ஆகிவிடாது. மாறாக, வாதங்களுக்கு விடை கூறாமல் “நாங்கள் என்ன சொல்கிறோமோ அது தான் சரி” என்று சொன்னால் அது சனாதன தருமத்திற்கு நாம் செய்யும் பெரிய கேடு. தக்க கேள்விகளுக்குத் தக்க பதில் அளித்து தெளிந்து வந்தால் தான் இளைஞர்கள் நாத்திகத்தைத் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்கள்.

    (1) முதலில், நான் முந்தைய பதிவில் ஆழ்வார், வைணவ ஆச்சாரியார்கள் குறித்துத் தகுந்த கேள்வி ஒன்றை விடுத்திருந்தேன். அதற்கு நீங்கள் விடையளிக்கவில்லை. சரி, அக்கேள்வியை keyboard-இல் தட்டும்போது ஒரு பிழை செய்திருந்தேன். அதைத் திருத்தி அக்கேள்வியை உங்களுக்கு மறுபடியும் இங்கு இடுகிறேன்:

    “ஆழ்வா,ர் பூர்வாச்சாரியார்க்ள், வைணவப் பெருமக்கள், ராமானுஜர், மத்வர், இவர்கள் நூல்களில் ‘சிவனை, பிரமனை விடப் பெரியோன் சங்க-சக்ர-கதா தாரியாக, ஸ்ரீவைகுண்டத்தில் சேவை சாதிக்கும் திருமகள் கள்வன் திருமாலே; திருமால் தான் பரம்பொருள்; பிரமன், சிவன், முதலிய மற்ற தெய்வங்கள் ஜீவர்களே; மற்ற தெய்வங்களைப் பரம்பொருள் என்று கூறுவது தவறு’ என்று சொல்லியுள்ளதால், அவ்வைணவப் பூர்வாசாரியார்களைப் பின்பற்றினால் நரகமே என்பது கம்பனுடைய கருத்து” என்பது உங்கள் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவையிலிருந்து விளையும் தீர்மானம் இது! சமைய நல்லிணக்கத்தின் பேரில் ‘வைணவ ஆச்சாரியார்கள் கூறியவற்றைத் தள்ளுங்கள்’ என்று கூறுவதாக விளையுமே?

    (2) நீங்கள் சொல்லும் “அனைவரும் அனைத்துத் தேவதைகளையும் பரம்போருளாகப் பாவித்தே தீர வேண்டும்” என்பது எதற்கு என்பது இன்னும் புரியவில்லை. நான் https://tamilhindu.com/2010/01/lingodbhava-a-saiva-siddhanta-view/#comments அடியில் 28 January 2010 at 3:37 pm என்ற நேரத்தில் செய்துள்ள மறுமொழியில் முதலிரண்டு பாராக்களைப் படியுங்கள். ‘பரம்பொருள் யார்?’ என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவரவர் அவரவர் வழியில் அமைதியாக வணங்கட்டுமே? ‘இதனால் இந்துக்கள் பிரிந்துவிடுவர்’ என்பதி எப்படி சரியாகும்? என்ன, ஷியா-சுன்னி சண்டையைப் போன்று வெட்டும் குத்துமா நடக்கும், அவரவர் இஷ்டப்படி வழிபட்டால்? “தனித்தனியே சித்தாந்தங்கள் இருந்தால் மத மாற்றங்களைச் செய்யும் மிஷனரிக்களுக்கும், இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் நாம் சுலபத்தில் இரையாகிவிடுவோம்” என்கிறீர்களா? என்ன ஆதாரத்தை வைத்து? என்ன காரணத்தைக் கொண்டு? இதன் லாஜிக் எனக்குப் புரியவில்லை!

    (3) ‘கம்பராமாயணம் வைணவ நூல் அல்ல’ என்று எழுதினீர்கள். அடுத்த பாராவில் இதை கண்டுகொள்வோம். சரி, முன்பு இங்கு Sarang என்னும் ஸ்ரீவைஷ்ணவர் (நான் ஸ்ரீவைஷ்னவன் அல்லன்; சங்கர சம்பிரதாயத்தை அடியொற்றி வந்த அத்வைத குலத்தவன்) “இராமாயண தனி சுலோகம்” என்னும் வைணவ நூலில் கம்பராமாயணம் மேற்கோள் எடுக்கப்பட்டதைக் காட்டியுள்ளார். “மறந்தும் புறந்தோழா” மரபினர் வழியில் வந்த ஆசாரியர் “சிவ-நாரண ஐக்கியம் கற்பித்தார்” என்று நீங்கள் கூறும் கம்பனை என்றும் மேற்கோள் எடுக்க மாட்டார் என்பது தெளிவு அல்லவா?

    (4) இப்பொழுது கம்பராமாயனத்திற்கு specific-ஆன விஷயங்களுக்கு வருவோம்.

    4.1 . ஆரணிய காண்டம் விராதன் வதைப் படலத்தில் (https://tamilvu.org/library/libindex.htm இல் 55-ஆக வரும்) செய்யுள் இது:

    ” ‘பன்னல் ஆம் ‘என்று உலகம்,
    பலபலவும் நினையுமால்;
    உன் அலால் பெருந்தெய்வம்
    உயர்ந்துளோர் ஒழுக்கன்றே;
    அன்னவூர்தியை முதலாம்
    அந்தணர்மாட்டு அருந்தெய்வம்
    நின் அலால் இல்லாமை
    நெறி நின்றார் நினையாரோ. ”

    இதன் விளக்கம்: உலகம் – உலகமக்கள்; “பன்னல் ஆம்” என்று – துதிக்கலாம் என்று;
    பலபலவும் நினையும் – பல்வேறு தெய்வங்களை நினைப்பர்; (ஆனால்);
    உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர்ஒழுக்கு அன்றே –
    உன்னைத் தவிர வேறு பெரிய கடவுள் உண்டெனக் கருதல் உயர்ந்த
    ஞானியரின்செயல் அன்று; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்
    மாட்டு – அன்ன வாகனமுடைய பிரமனைமுதலாகக் கொண்ட
    அந்தணர்களால்; அருந்தெய்வம் நின் அலால் இல்லாமை – வழிபடும்
    அரிய கடவுள் உன்னை அல்லாமல் வேறு இல்லா உண்மையை;
    நெறிநின்றார் நினையாரோ? – பலசமய நெறி நின்றவர்கள் எண்ணிப்
    பாராரோ? (பிறநெறியில் சென்று உண்மை அறியாது உள்ளனர்என்ற
    குறிப்பைப் புலப்படுத்தும்)

    அடுத்த பாடலிலேயே:

    பொரு அரிய சமயங்கள்
    புகல்கின்ற புத்தேளிர்
    இரு வினையும் உடையார்போல்,அருந்தவம்
    நின்று இயற்றுவார்
    திரு உறையும் மணி மார்ப! நினக்கு
    என்னை செயற்பால?
    ஒரு வினையும் இல்லார்போல்
    உறங்குதியால்-உறங்காதாய்!

    திரு உறையும் மணிமார்ப! – திருமகள் தங்கிய அழகிய மார்பை
    உடையவனே!; பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்-
    ஒப்பில்லாத பிறமதங்கள் சிறப்பித்துக் கூறும் தெய்வங்கள்; இருவினையும்
    உடையார்போல் – நல்வினை தீவினை என்பவற்றைக் கொண்ட எளிய
    மக்கள் போல; அருந்தவம்நின்று இயற்றுவார் – செயற்கரிய தவம்
    செய்கின்றவர் ஆவார்; நினக்கு என்னைசெயற்பால? – உனக்குச் செய்ய
    வேண்டிய தவம் என்ன உள்ளது? (ஒன்றுமில்லை) (ஆயினும்); உறங்காதாய்-
    தூக்கமின்றி விழிப்பு நிலையில் உள்ளவனே!; ஒரு வினையும் இல்லார்
    போல் உறங்குதியால் – எந்த ஒரு செயலும் இல்லாதவர் போலத்
    தூங்குகிறாய். ஆல்ஈரிடத்தும் அசை.

    இதற்கும் அடுத்த பாடலில் திருமாலைப் பலவிதமாகத் துதி செய்து, அதற்கும் அடுத்த பாடலில்,

    ‘மெய்யைத் தான் சிறிது உணர்ந்து, நீ
    விதித்த மன்னுயிர்கள்
    உய்யத்தான் ஆகாதோ? உனக்கு என்ன
    குறை உண்டோ?
    வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு
    அன்று அளித்த
    ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும்
    உளர்; ஐயா!

    ஐயா! – தலைவனே!; நீ விதித்த மன்னுயிர்கள் – நீ படைத்த நிலை
    பெற்ற உயிர்கள்; மெய்யைத்தான்சிறிது உணர்ந்து – நீயே பரம்பொருள்
    என்ற உண்மையை ஒரளவு தெரிந்து; உய்யத் தான்ஆகாதோ – நற்கதி
    அடைவது என்பது தான் முடியாதோ?; உனக்கு என்ன குறை உண்டோ –
    (அவ்வாறு அவை உய்தி பெற்றால்) அதனால் உனக்கு எக்குறை ஏற்படும்?;
    மழுவாளிக்கு அன்றளித்தஐயத்தால் – கோடரிப் படையைக் கொண்ட
    சிவனுக்கு முன்னர் இட்ட பிச்சையால்; வையத்தார் வானத்தார் சிறிது
    ஐயம் தவிர்ந்தாரும் உளர் – மானிடரும் தேவரும்பரம்பொருள் யார்
    என்று எண்ணிய சிறிது சந்தேகத்தையும் நீக்கினவர்களும் உண்டு.

    மேற்கூறிய உரையை நான் எழுதவில்லை, சுட்டியில் உள்ளவர்ரைத் தான் இங்கு cut-paste பண்ணியுள்ளேன். மேலும் சில செய்யுட்களைக் காண்போம்:

    [4.2] ஆரணிய காண்டம் ஜடாயு வதைப் படலத்தில், (மேற்கூறிய தளத்தில் நூறாவது பாடலில்)

    “முத் தேவரில் மூல முதல் பொருள் ஆம்
    அத்தேவர் இம் மானிடர்; ஆதலினால்
    எத்தேவரொடு எண்ணுவது? எண்ணம் இலாய்!
    பித்து ஏறினை ஆதல் பிழைத்தனையால். “

    என்று தெளிவாக “மும்மூர்த்திகளில் மனிதனாக அவதரித்துள்ள இவனே முதல்வன்” என உரைக்கிறார் கம்பர்!

    அதே படலத்தின் 195-வது பாடலில்,

    ‘அலக்கணும் இன்பமும்
    அணுகும் நாள், அவை
    விலக்குவம் என்பது
    மெய்யிற்று ஆகுமோ?
    இலக்கு முப்புரங்களை
    எய்த வில்லியார்,
    தலைக் கலத்து, இரந்தது
    தவத்தின் பாலதோ?

    அலக்கணும் இன்பமும் – துன்பமும் இன்பமும்; அணுகும் நாள் –
    வரும் காலத்து; அவை – அந்த இன்ப துன்பங்களை; விலக்குவம் என்பது
    – (நாம் வராமல்) தடுத்து விடுவோம் என்பது; மெய்யிற்று ஆகுமோ –
    உண்மை உடையதாகுமா? (ஆகாது); முப்புரங்களை – முப்புரத்தை; இலக்கு
    எய்த – இலக்காக்கித் தொடுத்து (அழித்த); வில்லியார் – வில்லை
    ஏந்தியவரான சிவபெருமான்; தலைக்கலத்து இரந்தது – பிரமனது மண்டை
    ஓட்டில் பிச்சை எடுத்தது; தவத்தின் பாலதோ – தவச் செயலுக்கு
    உரியதோ? (அன்று)

    (இன்னும் பல பாடல்களை ஸ்ரீ உ.வே. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் அவர்கள் தம் புத்தகத்தில் காட்டியுள்ளார்.)

    [4.3] இப்பொழுது காட்டப்பட்ட https://tamilvu.org/library/libindex.htm – இலிருந்து cut-paste செய்யப்பட விளக்கங்களை எழுதியவன் நான் அன்று; எந்த ‘வைணவ வெறியனும்’ அன்று. இப்பாடல்களுக்கு நீங்கள் தரும் விளக்கம் என்ன? வேறு ஏதாவது பொருள் உரைப்பீர்களா இவற்றிற்கு? இந்த பாடல்களையும் ‘சிவா-விஷ்ணு ஐக்கியத்திற்கு பிரதிகூலமானவை’, ‘பூசலை உண்டாக்குபவை’ எனும் பெயரில் அவற்றை வருங்காலத்தவர்களுக்கு கற்பிக்காமல் விட்டு விடலாமா? சொல்லுங்கள்!

    சரி, நீங்கள் சொன்ன பாடல்களுக்கு வருவோம்:

    //அவன் உலகக் கவிஞன். “உலகம் யாவையும்” என்று தன் காவியத்தைத் தொடங்கியதே அதற்குக் கட்டியம் கூறுகிறது. //

    இதுவா கம்பன் சொன்ன கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்து? “உலகம் யாவற்றையும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அலகு இலாத விளையாட்டுடைய திருமால்” என்று கூறுகிறார் கம்பர். இதில் சாரமான கருத்து ஒன்று உள்ளது. “பிரமன் படைக்கின்றான், திருமால் காத்தல் தொழில் செய்பவர், சிவன் சம்ஹாரம் பண்ணுபவர்” என்று லோகத்தில் வழங்கப்பட்டாலும், ‘திருமாலே பிரமனையும் சிவனையும் கருவியாகக் கொண்டு (அதாவது, அவர்களுக்கு உள்ளுறையும் அந்தர்யாமியாகக் இருந்து கொண்டு), தானே படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்பவன் என்பது விஷயம் அறிந்தோர் ஒப்புக்கொள்வது. இதைச் சங்கரர் பிரம்ம சூத்திர பாஷ்யத்திலும் சஹஸ்ரநாம பாஷ்யத்திலும் தெளிவுற உரைத்துள்ளார். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    //பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே…
    ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் ..
    அலங்கலில் தோன்றூம் பொய்மை அரவு என..
    ஒன்றே என்னில் ஒன்றேயாம் பலவென்றுரைக்கில் பலவேயாம் .. //

    “பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே…”:
    இதிலிருந்து சிவ-விஷ்ணு ஐக்கியம் கற்பிக்கப்பட்டது என்று சொல்ல இயலாது. மேற்கூறிய பாடல்களின் அர்த்தங்களை நினைவிற்கொண்டு முன்னுக்குப் பின் முரண்படாத ஒரே அர்த்தம் இது தான்: பல சமயங்களும் பரம்பொருளை ‘மிகப்பெரியவன் (பிரம்மம்), சர்வ வியாபி, சர்வாந்தர்யாமி, ஈரேழு புவனங்களையும், தேவர் மனிதர் உட்பட அனைத்து ஜங்கமாஜங்கங்களையும் திருமேனியாகக் கொண்டவர்’ என்று சொல்கின்றன; இதில் வேறுபாடு இல்லை. அது போல, சரயு நதி பிரும்மாண்டமாக நீண்டும் வளைந்தும் பிரிந்தும் காணப்படுகின்றது என்பதே பொருள். மாறாக ‘சிவனும் விஷ்ணுவும் ஒன்று’ என்று சொன்னால், நான் இப்பொழுது காட்டிய மற்ற பாடல்களுக்கு முரண்பட்டு விடும். இன்னோக்கிலேயே மற்ற செய்யுட்களை விளக்குகிறார் சுதர்சனம் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஐயங்கார் அவர்கள்.

    “ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்…”:
    இதில் சொல்லப்பட்டது, “சர்வவியாபியான நாராயணன் ஆலிலையில் இருப்பவன்; அவனே தாமரைப் பூவினுள் பிறந்த பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமி. இவ்வந்தர்யாமியாகிய நாரணன் இராமனாகப் பிறந்தான் என்பதே. தைத்திரீய நாராயண சூக்தத்தில் சர்வாந்தர்யாமித்வம் : “स ब्रह्मा स शिवः सेन्द्रस्सोक्षर” என்று வருவதைத் தான் கம்பர் கூறுகிறார். நம்மாழ்வார் “அயனாய்ச் சிவனுமானான்” என்று சொன்னதால் சிலர் “அவரும் சமரசவாதியே” என்று கூறத் தொடங்கினர். இவர்கள், ஆழ்வார் அதற்குச் சற்றுமுன் “நீராய் நெருப்பாய் நிலனாய்த் தீயாய்” என்று நாராயணனின் சர்வவியாபித்துவத்தையே புகழ்ந்தமையை கண்டுகொள்ளாமல் இவ்வாறு அர்த்தம் சொன்னதை நினைவூட்டுகிறது.

    “அலங்கலில் தோன்றூம் பொய்மை அரவு என…”:
    இப்பாடலில் “வேதாந்த வேத்யனான எவனுடைய காட்சி ஞானிகளுக்கு ஐந்து பூதங்களினால் ஆன உடலானது, ‘இது கயிறு’ என்று தெரிந்தவுடன் கயிற்றின் மேல் தெரியும் பாம்பு எப்படி மறைகிறதோ அப்படியே மறைந்து, அவர்க்கு மோட்சம் அளிக்குமோ, அவனே கொதண்டத்தை ஏந்திய இராமன்” என்று பாடியதால் கம்பர் “இராமன் மோட்சம் அளிப்பவன்” என்று கூறுகிறார். இதில் என்ன சிவ-விஷ்ணு ஐக்கியம் உள்ளது?

    “ஒன்றே என்னில் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பல ஏ ஆம்…”:
    உபநிடதங்களில் “ஸ எகதா பவதி”, “த்ரிதா பவதி” என்றபடி பரம்பொருளானவர் ஒருவராக இருந்தாலும், அவர் பல ஒரே சமயத்தில் உருவங்களாகத் தோற்றமளிக்கும் சக்தியை உடையவர் (கண்ணன் ராசக் கிரீடை பண்ணிய பொழுது பல பல திருமேநிகளைத் தன்னிச்சையாலே எடுத்துக்கொண்டான் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டது), இதையே ‘வியூஹம்’ என்பர். ‘அன்றே என்னில் அன்றேயாம்’: இறைவன் தனக்கு வேண்டுமானால் அருவமாகவும் தோற்றமளிக்கும் சக்தி படைத்தவன் என்று பொருள்.

    “நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்…”:
    முன்னமே “அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்” என்பதற்கு விளக்கம் தந்தேன். பால காண்ட ஆற்றுப் படலத்தில் வரும் பாட்டொன்றில் “சிவன் போன்ற வெண்மேகம், திருமால் போன்ற கருத்த மேகமாய்த் திரும்பி வந்தது” என்ற பொருள் உள்ள பாடலை “ஹரி ஹர வந்தனம்” என்று கூறினீர். இதில் யாரையும் வந்தனம் பன்னவில்லையே? வெறும் உவமைகளைத் தான் கூறுகிறார்! “சின்ன வயதில் டெண்டுல்கர் போல இருந்தான், இப்பொழுது ஜாகீர்கான் போல இருக்கிறான்” என்று சொல்லியதால் டெண்டுல்கரும் ஜாகீர்கானும் ஒன்றாகிவிடுவார்களா?

    (5) ‘விஷ்ணு தான் பரம்பொருள்’ என்று ஒருவர் கூறுவதால் என்ன பூசல் வந்து விடும்? ‘பரம்பொருள் விஷ்ணுவானதால், சிவன் கோயில்களை இடித்து விடுங்கள்; சைவர்கள் சாத்தானை வழிபடுபவர்கள். அவர்களுக்கு ஒரு நாளும் உதவி பண்ணாதீர்கள்’ என்று எந்த வைணவரும் கூறமாட்டார்! மாறாக, சிவனைச் சிறந்த பாகவதராக எற்றுக்கொண்டவர்கள்தாம் வைணவர்கள்; பாகவத புராணத்தில் ‘வைஷ்ணவானாம் சம்புஹு’ என்று கூறப்படுவதிலிருந்து சிவனும் ஒரு வைணவரே என்று வைணவர்கள் ஏற்றுள்ளார்கள். ‘அனுமனும் சிவன் அம்சமே’ என்பதை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஐயங்காரும் அவர் புத்தகத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலு)ம், “ஏழு ஜன்மம் சிவ பக்தனாய் இருந்து, இறுதியில் சிவபெருமான் அருளால் ஞானம் பெற்று வைணவனாகி மோட்சத்துக்குப் போகிறான்” சைவர்களையும் சகோதரர்களாகத் தான் வைணவர்கள் ஏற்க வேண்டும் என்று வைணவப் புராணங்களில் உள்ளன.

    குஜராத்தி மொழியில், ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று வரும் பாடலில் “தன்னை வைனவனாகச் சொல்லிக் கொள்பவன், யாருக்குத் தீங்கு வந்தாலும் அதைத் தனக்கு வந்த இடராகவே பாவித்து ஓடிப்போய் உதவி பண்ண வேண்டும்” என்று முழங்கியதை இன்றளவில் “வைணவ சூப்பர்-ஸ்டார்” என்று சொல்லக் கூடிய ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உட்பட பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஒன்றும் சமரச வாதி அல்ல; பல உபன்னியாசங்களில் “விஷ்ணுவே பரம்பொருள்; சிவனிடமோ பிற தேய்வங்களிடமோ கையேந்தி நிற்காதீர், ஆனால் பிற தெய்வங்களை நிந்திக்காதீர், அவர்களுக்கு மரியாதையை செலுத்தி அவர்களுடன் சேர்ந்து பரம்பொருளான திருமாலை வணங்குங்கள்” என்று தைரியமாகக் கூறியுள்ளார்! அவர் என்ன பூசலையா உண்டாக்குகிறார்?

  34. ராமன் என்ற கடவுள் மனிதனாக வந்ததைச் சொல்வது ராமாயணம்.ராமாயணத்தை சமயவாதக் குப்பிக்குள் அடைப்பது தவறு என்று எழுதுகிறார் ஜடாயு. இது மார்க்சிய வாதம் போல ஒலிக்கிறது.சமயம் இல்லாமல் ராமாயணம் ஏது?ராமாயணம் இல்லாமல் ஹிந்து சமயம் ஏது.ஜடாயு பொருள் அறிந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  35. Sri. Sarang,
    True. Most don’t. But few do.

    Within Tamilnadu, there are several times more fanatic vaishnavites than fanatic shivaites. There is nothing to be proud in “புறன்தொழாமை”. Some may even call it as mere narrow mindedness. It may be a shade of same colour called ‘intolerence’.

    with regards,
    Jay

  36. கந்தர்வன், அயற்சியூட்டும் உங்கள் நீண்ட cut paste மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. Same beaten track.

    இந்த சின்னவயதில் அமுதகலசம் போன்ற கம்பன் காவியத்தைக் கற்று அதிலுள்ள அற்புத சுவைகளையும், ரசானுபவத்தையும் துய்க்காமல், ஒரு மூடிய மனநிலை கொண்ட சமயவாதியின் கண்கொண்டு ஒரு பேரிலக்கியத்தை அணுகி, இயந்திரத் தனமாக அதைப் பிய்த்துப் போட்டு ஆகா வைணவத்தைக் கண்டேன் என்று கொக்கரிப்பதைப் பார்த்தால் எனக்கு உண்மையிலேயே பரிதாபம் தான் ஏற்படுகிறது.. எனக்கு இத்தகைய சமயவாத சமாசாரங்களில் ஆர்வமில்லை என்று பலமுறை கூறிவிட்டேன். உங்களுக்கு ஒரு சஜெஷன் – கொஞ்ச காலம் கிருஷ்ணசாமி அய்யங்காரை அந்தப் பக்கம் வைத்து விட்டு, கம்பனை அவன் வழியாகவே அணுகிப் படியுங்கள். அது உள்ளத்துக்கும், உணர்வுக்கும் நல்லது.

    // ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஒன்றும் சமரச வாதி அல்ல… அவர் என்ன பூசலையா உண்டாக்குகிறார்? //

    பூசலுக்கான, பிளவுக்கான மனநிலையை விதைக்கிறார். அதில் என்ன சந்தேகம்? இத்தகைய இறுக்கமான, மூடிய சமயவாத மனநிலை இந்து தர்மத்தின் மைய நீரோட்டத்திற்கே எதிரானது.. ஆபிரகாமியத்தை இந்து மரபுக்குள் நகல் எடுப்பது போன்ற செயல் அது. ”people of the eternal truth” ஆக இருக்கும் மக்களை “people of the book” ஆக்கும் ஒரு retrograde செயல்பாடு அது – டிவியில் வந்து வசீகரமாகப் பேசுவதாலேயே அது சரியானதாகி விடாது.

    சாதி வெறியர்கள் இந்து ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிப்பது போலவே சமய வெறியர்களும் குந்தகம் விளைவிப்பவர்கள் தான்.. ஏன் அது பெரிய அபாயமாக ஆவதில்லை என்றால் நீங்கள் இங்கே பீற்றிக் கொள்வது போல “மறந்தும் புறந்தொழா” ஆட்கள் இந்து சமயத்திலும், சமுதாயத்திலும் ஒரு மிகச் சிறிய fringe, என்பதால் தான் (ஆனால் இந்த fringe ஏதோ தாங்கள் தான் தங்களது சமயவர்க்கத்தின் பிரதிநிதி என்பது போலப் பேசித் திரிவது தான் வினோதம்!)

    ”அடிமுடி தேடிய புராணம் – ஒரு விளக்கம்” பதிவில் போட்ட ஒரு மறுமொழியின் ஒரு பகுதியை இங்கும் இடுகிறேன்..

    // தமிழகத்தின் தத்துவ ஞானிகளும், மன்னர்களும், கவிஞர்களும், சிற்பிகளும் நூற்றாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் அற்புதமான சமய சமரசச் செயல்களைக் கண்டுகொள்ளாதிருப்பது மட்டுமல்ல, அதைக் குலைக்கும் வகையில் உங்கள் கரட்டு வாதங்கள் அமைந்திருக்கின்றன. அதனாலேயே அவற்றைக் கண்டிக்கிறேன்.

    கண்முன்னால் தெரியும் பிரத்யட்ச உண்மைகளைக் கணக்கில் கொள்ளாமல் “பிரமாணங்களை” வீசும் வாதங்கள் பொய்மை வாதங்களே. “தீ சுடாது” என்று நூறு தடவை சுருதி சொன்னாலும், அது நிராகரிக்கப் படவேண்டியது என்று சொன்ன ஆதிசங்கரரின் ஞான மொழி இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டியது. //

  37. அன்புள்ள நாகராஜன்,

    சமயம் என்பது religion & spirituality.
    சமயவாதம் என்பது theism, theology (and eventually leads to theocracy).

    இப்போது வித்தியாசம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    இதில் இரண்டாவதான “சமயவாதம்” என்பதை உயர்ந்த நிலையிலுள்ள நமது தத்துவ ஞானிகளும், அருளாளர்களும், கவிஞர்களும், சிந்தனையாளர்களூம் கண்டித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கம்பன் காவியத்தில் சமயம் கண்டிப்பாக இருக்கிறது..அதனாலேயே அவன் சமய*வாதி* அல்ல..

    கந்தர்வர் லாஜிக் படி பார்த்தால் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகனைக் கூட சமயவாதி என்று அழைக்கலாம்.. அவர் போகிற வேகத்தைப் பார்த்தால் அடுத்ததாக ஜெயமோகனின் *விஷ்ணு*புரம் ஒரு முழுமையான வைணவப் பிரதி என்ற ஒரு நீளமான் போஸ்டை எதிர்பார்க்கலாம் :)) (ஆனால் அதற்கு முன்பு அவர் விஷ்ணுபுரத்தைப் படித்து முடிக்க வேண்டும், அது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது).

  38. // ஜடாயு அவர்களே கம்ப ராமாயணத்தில் ஊடுருவல் உள்ளது என்று பதில் எழுதி விட்டார் //

    சாரங், நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் எழுதியதை இன்னொரு முறை படிக்கவும். “மிகைப் பாடல்கள்” என்று கம்பன் கழகப் பதிப்பில் கொடுத்திருப்பவை பற்றி மட்டுமே கூறினேன்.

    கம்பராமாயணத்தில் இடைச் செருகல்கள் கண்டிப்பாக இருந்திருக்கும் – ஆனால் அது பற்றிய முடிவுகள் ஆய்வாளர்களது domain. குறிப்பிட்ட பாடல் இடைச் செருகலா இருக்க சாத்தியம் உள்ளதா என்று அவர்கள் மட்டுமே கூற முடியும்.

  39. sri.velukkudi krishnan is devout vaishnavite and a scholar of repute.it is unfortunate that jatayu is trying to denigrate a pious man with chosen phrases from jatayu lexicon of bad words. definetely there are better ways to serve the hindu cause.

    (edited and published)

  40. ஹிந்து என்ற மரத்தில் ஒரு கிளையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் வேறொரு கிளையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் இடையில் பூசல் நாங்கள்தான் வேர் என்று! இந்த பூசலில் வேறு யாரும் நுழைந்து வேரை வெட்டாமல் பார்த்துக் கொண்டால் சரி.

  41. Dear kargil jay

    Within Tamilnadu, there are several times more fanatic vaishnavites than fanatic shivaites.

    புறம் தொழாமையே “fanatism” என்றால் தன் கணவனே கண்கண்ட தெய்வம் என்று என்னும் பெண்களும் “fanatist” என்று கொள்வீர்களா

    There is nothing to be proud in “புறன்தொழாமை”. Some may even call it as mere narrow mindedness. It may be a shade of same colour called ‘intolerence’.

    this is almost akin to Congress’s pseudo secularism – “புறன்தொழாமை” has never created intolerance – only tarnishing other faiths creates intolerance – by saying everything should be OK for you – what are we trying to do – just create a new Dogma and a new utopian cult – we all know utopia isn’t பிரக்டிகல் please read “இனவாதமும் இனபடுகோளைகளும் 3” – the author succintly describes what problems this so called universal hood can lead to.

    had there been intolerance you must be reading in news – Vaishnava-Saiva fight erupts in so and so village – 3 injured and 1 critical 🙂

    “புறன்தொழாமை” is a state of mind/heart filled with immense bhakti and the ultimate state of surrender to one [i am not sure how can one surrender to many for it would cease to be a surrender] –
    if you say Bhakta meera had been intolerant, azhvars, nayanmaars had been intolerant, Talapakka Annamayya had been intolerant, Ramanuja, Madva, chaitanya had been intolerant what can i say 🙂

  42. Dear Sri Gandharvan,

    ////“விஷ்ணுவே பரம்பொருள்; சிவனிடமோ பிற தேய்வங்களிடமோ கையேந்தி நிற்காதீர், ஆனால் பிற தெய்வங்களை நிந்திக்காதீர், அவர்களுக்கு மரியாதையை செலுத்தி அவர்களுடன் சேர்ந்து பரம்பொருளான திருமாலை வணங்குங்கள்” என்று தைரியமாகக் கூறியுள்ளார்! அவர் என்ன பூசலையா உண்டாக்குகிறார்?////

    The statement given above, stated by whosoever he may be, will cause a friction between Vaishanavites and Saivites. This statement is no different from the religious philosophy of the Christians and the Muslims , who claim that their God is the only true one and that their Religion is the only righteous way to attain God. This type of attitude of the Christians and the Muslims have resulted in a lot of bloodshed , in the name of ” THE CRUSADES” and “JIHAD”. We are also seeing day to day how Hinduism and anything Hindu is demeaned by the Chrisitian Missionaries , Islamic Fundamentalists and the so called ‘secular’ Politicians , all because of this attitude .

    Moreover the above statement doesnot tally with the general Hindu Religious Philosophy of ” all paths, however divergent they may be , lead to the same destination” . what I have understood from the statements of Jattayu is that we donot want any further divide in the Hindu community , which has already suffered enough. Learned people , like you and Sri. Sarang, who have contributed some wonderful insights on the subject, must take the overall intention of Jattayu ( mentioned above) and leave the subject as it is .
    Namaste

  43. Mr. Sridhar,

    //
    The statement given above, stated by whosoever he may be, will cause a friction between Vaishanavites and Saivites. This statement is no different from the religious philosophy of the Christians and the Muslims , who claim that their God is the only true one and that their Religion is the only righteous way to attain God. This type of attitude of the Christians and the Muslims have resulted in a lot of bloodshed , in the name of ” THE CRUSADES” and “JIHAD”.
    //

    You are casting a severe aspersion on a great scholar. Vaishnavism never says that they have to fight a crusade against Saivites. This is unlike Islamists and crusaders. Vaishnavism only asks Vaishnavites to worship Vishnu only, and to do good to all creatures – men, animals, plants, trees, insects. Have you not read the song “Vaishnava Janato”?

    (1) In Gita Krishna does not say that worshipping other deities leads to sin or hell. He says that one can worship all Vedic Divinities according to Vedic injunctions, and that these Divinities do bestow their blessings upon their votaries.

    (2) He then says that those who surrender everything to the Him (Gita 18.66 says “maam ekam sharanam vraja”) can reach the permanent goal – of reaching the Highest Abode of Vishnu.

    (3) The same Lord in Vishnudharmottara says “Even if one calls himself a Vaishnavite, I never consider him my devotee unless he acts as per the dharma sastras.” (in sanskrit: “shruti smritir mamaiva aagyaa… “). So a person who starts bloodshed and violence against non-Vaishnavites is not a Vaishnavite by definition, since smriti says non-violence, compassion, and charity are to be followed.

    For further clarification, kindly read the commentary on Gita 7.17-7.23, Gita 9.23-9.26, Gita 13.10, Gita 11.43, 6.47, by Adi Sankaracharya. You can read the English translation of the commentary for free in this page:

    https://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/n7/mode/2up

    Kind Regards,
    Gandharva

    (edited and published)

  44. காயேன வாசா மனசேந்திரியைர்வா புத்யாத்மனாவ ப்ரக்ருதே ஸ்வபாவாத்
    கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

    என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியில் வரும்.

    காயத்தால் – (உடலால்) மனசால், இந்திரியங்களால் புத்தியால் ஆன்மாவால் நான் செய்யும் ஒவ்வொன்றும் நாராயணனுக்கே சமர்பணம்.

    இந்த மந்திரம் ஒவ்வொரு செயல் – மந்திர ஜபம், யாகம், ஹோமம் மற்றும் எந்த வித காரியங்களின் இறுதியில் கூறப்படுவது. இப்பொருளை கற்றுணர்ந்தவன் தெளிவாகவே இருப்பான்.

    ஜடாயு, தயவு செய்து விவாதத்தை வளர்க்க வேண்டாம். கட்டுரையின் மையவிசையை தங்களுடைய விவாதம் மாற்றுகிறது. கம்பராமாயணம் துளசி ராமாயணம் ஆகியவை மிகுந்த கட்டுக்கதைகளைக் கொண்டு புணையப் பெற்றவை.

    ஆன்றோர்களே, தயவு செய்து கட்டுரையில் உள்ள தமிழமுதைப் பருகி, அல்லனவற்றை தவிர்த்து தளம் மேலும் வளர வாழ்த்துங்கள்.

  45. இந்தப் பதிவில் சர்ச்சைகள் சூடாக இருப்பதைக் காண்கிறேன். சில இடங்கள் சுவையாக இருக்கின்றன. கம்பராமாயணத்தைக் காப்பியமாகச் சுவைக்க வேண்டும். ஸ்ரீ வைஷ்ணவர்கள் கம்பனுக்குத் தங்கள் சம்பிரதாயத்தில் எந்த இடத்தைக் கொடுத்துள்ளனரோ தெரியவில்லை. கம்பனே இராமனைக் கடவுள் நிலைக்கு உயர்த்துப் பேசியவன் என்று தமிழறிஞர்கள் கூறுவர்.

    தமிழில் ‘மாப்பிள்ளை நியாயம்’ என்றொரு வழ்க்கு உண்டு. திருமணத்தில் எல்லாச் சிறப்புக்களும் மணமகனுக்குத்தான் நடைபெறும். கலெக்டர் ஒருவர் தம்முடைய பியூனின் திருமணத்துக்குச் சென்றால், அங்கு தம்மைவிட மணமகனுக்கு மரியாதை தருவதைக் கண்டு கோபித்துக் கொள்ள மாட்டார். அது போலத்தான் இந்தக் காப்பியத்திலும்.

    இது இராமகாதை. இந்தக் காதையில் இராமனுக்கே எல்லாச் சிறப்புக்களும் ஓதப்படும். சில இடங்களில் மிகைப்படுத்தியும் கூறப்படும். பரம்பொருள் எந்தத் தாய் வயிற்றிலும் இருந்து கருவாதனைப் படாது. பிறப்பிறப்பிற் படாத பரம்பொருள் என்பதை ஏற்றுக் கொண்டால் இராமாயணம் வெறும் கற்பனையே. மண்ணில் வாழ்வாங்கு வாழ்த அறவோன் ஒருவ்ன் தன் சீரிய ஒழுக்கத்தால் வானுறையும் தெய்வ நிலைக்கு உயர்ந்தான் என்பதை ஏற்றுக் கொண்டால், கொலைப் பாவம் நீங்க இராமேசுவரத்தில் முழுமுதற் பொருளை வழிபட்டுப் பரிகாரம் செய்தான் என்பதில் தவறொன்றும் இல்லை.

    // ராமர் மனுஷ்யானாக நடக்க பெரும் முயற்சி கொள்கிறார், நடந்தும் காட்டுகிறார் – அது தவறுவது ஒரு சில இடங்களில் மட்டுமே //

    ஆரண்யகாண்டத்தில், சூர்ப்பணகைப் படலத்தில் இராமன் வஞ்சமகளுடன் நிகழ்த்தும் உரையாடல்களைக் கம்பன் வழிக் காண்க. வேதமுதலாகிய இராமன் ,”ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி யுண்டோ? ” என வஞ்ச அழகியுடன் உரையாடலில் நீட்டித்து ஈடுபட்டதும் ,”அகத்துறு நகையின் வெள்ளைக், குருத்து எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் ” கொண்டு, தான் திருமனம் ஆனவன் என்பதை அரக்கிக்கு உரைக்காமல், “வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல், நங்கை! பொருத்தம் அன்று” என அவளைத் தான் மணம் புரிந்து கொள்ள இயலாமைக்குப் பொய்யான காரணம் காட்டி ‘உண்டாட்டம்'” கொண்டதும் மானிட இயல்புதானே.

    கம்பன் காட்டும் இராமனை மானிடன் என்று கொண்டால் தான் காப்பியச் சுவை சிறக்கும்.

    (edited and published)

  46. மதிர்பிக்குரிய முனைவர் அய்யா

    //
    தமிழில் ‘மாப்பிள்ளை நியாயம்’ என்றொரு வழ்க்கு உண்டு. திருமணத்தில் எல்லாச் சிறப்புக்களும் மணமகனுக்குத்தான் நடைபெறும். கலெக்டர் ஒருவர் தம்முடைய பியூனின் திருமணத்துக்குச் சென்றால், அங்கு தம்மைவிட மணமகனுக்கு மரியாதை தருவதைக் கண்டு கோபித்துக் கொள்ள மாட்டார். அது போலத்தான் இந்தக் காப்பியத்திலும்.
    //

    நீங்கள் வால்மீகி ராமாயணத்தையும் சேர்த்து படிக்க வேண்டுகிறேன் – உயர்ந்த முனிவர்களான வால்மீகி, வசிஷ்டர் விஸ்வமிரர் எல்லாம் சும்மா கதை சிறக்க வேண்டும் என்று ராமனை பரம் பொருளுக்கு ஒப்பிட மாட்டார்கள்

    //

    வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல், நங்கை! பொருத்தம் அன்று” என அவளைத் தான் மணம் புரிந்து கொள்ள இயலாமைக்குப் பொய்யான காரணம் காட்டி ‘உண்டாட்டம்’” கொண்டதும் மானிட இயல்புதானே.

    ///

    இப்படியெல்லாம் தாங்கள் அர்த்தம் புரிந்து கொண்டது சரியல்ல என்றே படுகிறது – ராமன் தர்மத்தில் வல்லவன்

    க்ஷத்ரியர்கள்,… பொதுவாக மானிடர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டார்கள் ஒரே சமயத்தில் பல மனைவிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பது திண்ணம்

    ராமன் நான் திருமணம் ஆனவன் என்று சொல்லி இருந்தால் – சூர்பனகை சற்றே ஏளனமாக சிரித்துவிட்டு தசரதனின் புத்திரன் தானே நீ என்று கேட்டிருப்பாள் – அவருக்கு அறுபது ஆயிரம் மனைவியர் – உனக்கு இரண்டே சலிக்கிறதோ என்றல்லவா கேட்டிருப்பாள்

    அறிவில் சிறந்த ராமன் ஒரு தேர்ந்த, தர்மத்தை ஒட்டிய கருத்தை கூறி ஒரே வரியில் சூற்பனகையின் வாயை அடைத்து விட்டான் – இது போன்ற விஷயங்களை நீங்கள் ராமாயண நெடுக காணலாம்

    //
    பரம்பொருள் எந்தத் தாய் வயிற்றிலும் இருந்து கருவாதனைப் படாது. பிறப்பிறப்பிற் படாத பரம்பொருள் என்பதை ஏற்றுக் கொண்டால் இராமாயணம் வெறும் கற்பனையே.//

    இப்படியும் அர்த்தம் கொள்வது சரியல்ல – இதில் எக்க சக்க சிக்கல் வரும் – நீங்கள் பேசும் சிவ பரத்வமும் அடிபடும்

    பரம் பொருளை – சர்வஜித் என்றும் கரணம், காரணம் கர்த்தா என்றும் வேதம் கூறுகிறது – எல்லாமும் வல்ல அவனுக்கு எல்லாமும் அவனது காரியமாக இருக்கையில் ஒரு தாயின் கற்பதில் தரிப்பது இழிவும் அல்ல, இயலாததும் அல்ல

    தாய் வயிற்றில் அவதார நோக்கம் கொண்டு பிறந்தால் அவன் பரம் பொருள் அல்லன் என்ற வாதம் சரியானதே அல்ல (சிவனாருக்கு அவதாரங்கள் இல்லை என்பதால் மட்டுமே இந்த கருத்தை முன்வைப்பது சரி அல்ல) – இதற்கு மேலும் விவரங்கள் தர இயலும் – அதை பிறகு பாப்போம்

    மேலும் ரிக் வேத சம்ஹிதையில் (உபநிஷத் அல்ல) வருபவை இவை

    நாராயணாத் பிரம்ம ஜாயதே – நாராயணிடம் இருந்து பிரம்மன் தோன்றினான்
    நாராயணாத் ருத்ர ஜாயதே – நாராயணிடம் இருந்து ருத்ரன் தோன்றினான்

    என்பது திண்ணம் – பிறப்பு இங்கு சங்கல்பத்தால் உண்டாகிறது – இங்கு நாராயணன் என்பது ரூடி சப்தம் ஒருவரையே குறிக்கும் குணத்தை குறித்து அந்த குணத்தால் மற்றவரை குறிக்காது (இங்கு நாராயணத் என்பது பரம் பொருளை குறிக்கும் ஒரு சொல்லாக கொள்ளக் கூடாது)

    மேலும் பல பிரமாணங்கள் உள்ளன – இதை இத்தோடு நிறுத்தி கொள்கிறேன்

  47. // பரம்பொருள் எந்தத் தாய் வயிற்றிலும் இருந்து கருவாதனைப் படாது. பிறப்பிறப்பிற் படாத பரம்பொருள் என்பதை ஏற்றுக் கொண்டால் இராமாயணம் வெறும் கற்பனையே //

    இது ஒரு தர்க்கபூர்வமான tehnical point, ஆனால் ஆன்மிக ரீதியாக பொருளற்றது என்பது என் தாழ்மையான எண்ணம். பரம்பொருள் உலகின் (அல்லது பக்தரின்) துயர் தீர்க்கவும், கடைத்தேற்றவும் இறங்கி வருவது அவதாரம். இந்தக் கருத்து வைஷ்ணவத்தில் சிறப்பாகப் பேசப் படுகிறது. சைவத்தில் இல்லை என்று கூறப் படுகிறது (ஆயினும், கந்தபுராணத்தில் “திருஅவதாரப் படலம்” இருக்கிறது, “தீதகன்று உலகம் உய்யத் திருஅவதாரம் செய்தார்” என்று சம்பந்தர் பிறப்பைப் பெரியபுராணம் விவரிக்கிறது).

    திருவாசகத்தில் “மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாகிடிலே”, “மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவான் மொத்துண்டு, புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்” ஆகிய வரிகளில் உள்ளது போன்று பற்பல பாடல்களில் சிவபெருமான் மானுட உருத் தாங்கி வந்து அருள்புரிந்த தன்மை பேசப் படுகிறது.. சித்தாந்த ரீதியாக இது சுத்த சிவமான பரம்பொருள் அல்ல, அதன் வடிவமான “அபர” (??) சிவம் என்று விளக்கம் தரப் படும் என்று நினைக்கிறேன் (சம்பந்தர் முருகக் கடவுளின் அவதாரமா என்ற கேள்விக்கு கிருபானந்தவாரியார் சுவாமிகள் பதிலளிக்கையில் இது சுத்தசிவமான சுப்பிரமணிய வடிவமல்ல, உலகைக் காக்க வேண்டி அவதரித்த ‘அபர சுப்பிரமணியரின்’ வடிவம்’ என்று சொல்லியிருக்கிறார்).

    இதே போன்றதொரு விளக்கத்தை இராமாவதாரத்திற்கும் (திருமாலின் மற்ற அவதாரங்களுக்கும்) அளிக்கலாம் அல்லவா? .”என்னை நானே பிறப்பித்துக் கொள்கிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) என்று பரம்பொருளின் மொழியாக கீதை சொல்கிறது. ஜீவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “அதனை சிருஷ்டித்து அதனுள்ளே புகுந்தார்” (தம் ஸ்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிஷத்) என்று ஐதரேய உபநிஷத் கூறுகிறது. விஷ்ணுவின் அம்சத்தில் பாதியாக (”விஷ்ணோரர்த்தம் மஹாபாகம்”) ஸ்ரீராமன் அவதரித்தான் என்றுதான் வால்மீகியும் கூறுகிறார்.

    எனவே, பரம்பொருளான இறை வடிவம் தாங்கி வருதல் என்பது சைவம், வைஷ்ணவம் இரண்டிலுமே உள்ளது. அவற்றிற்கு அளிக்கப் படும் விளக்கங்கள் மட்டுமே வேறுபடுகின்றன. ஆன்மிக ரீதியாக இரண்டு விளக்கங்களுமே நிறைவானதாகவே எனக்குப் படுகிறது.

  48. முனைவர் ஐயா,

    உங்கள் கட்டுரைகள் சிறப்பாக இருக்கும். உங்களிடம் இருந்து பல விடயங்களை அறிந்த மாணவன் நான். ஆனாலும் ஒரு சிறு கருத்து சொல்ல விரும்பிகிறேன்.

    பேராற்றல் , பெருங்கருணையின் சின்னம் என்று மக்களின் நன்மைக்காக ஆலகால விடத்தை உண்டவர் என்று சிவனின் தியாகத்தை, மக்களைக் கைக்குப் பொறுப்பை தெளிவாக வெளிக்காட்டி இருந்தீர்கள்.

    வானத்திலே இருப்பதாகக் கூறப் படும் நிரூபிக்கப் படாத கடவுள்களை இந்தியர்கள் நிந்திக்கவும் இல்லை, அவர்களைப் பற்றிக் கவலைப் படவும் இல்லை.

    மேலே இருக்கிறாராம் க‌ட‌வுள். ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ராம். நாம ப‌ர்த்த‌து இல்லை. ஆனால் ப‌ல‌ரும் ந‌ம்புறாங்க‌. அவர் தான் ந‌ம்மை எல்லாம் ப‌டைக்கிறாராம். ச‌ரி ஐயா, மேலே இருக்கிறாரு, ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ரு, ஆனால் அவ‌ர் நெஞ்சிலே க‌ருணை என்ப‌தே இல்லையா? அப்படி க‌ருணை இருந்தா எதுக்கு ஒரு குழ‌ந்தையை குருடாக‌வும், ஒரு குழ‌ந்தையை முட‌மாக‌வும் ப‌டைக்க‌ வேண்டும்?
    எத‌ற்க்கு ஒரு குழ‌ந்தையை ஒரு கோடீச்வ‌ர‌ சீமான் வீட்டிலும், ஒரு குழ‌ந்தையை தெருவிலும் ப‌டைக்க‌ வேண்டும்? ஒரு நூறு வ‌ருட‌ம் க‌ண்ணில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து சாதார‌ணக் கொடுமையா?

    இப்ப‌டிப் ப‌ட்ட‌ கொடுமையை உருவாக்கிய‌ ஒரு ந‌ப‌ர் எப்ப‌டிக் க‌ட‌வுள் என்று அழைக்க‌ப் ப‌ட‌ முடியும்.
    நான் அழைக்க‌ மாட்டேன். கொடுமைக்கார‌னின் த‌ண்ட‌னைக்கு ப‌ய‌ந்து, அவ‌னிட‌ம் ம‌ண்டியிட்டு வ‌ணங்கி சுக‌ வாழ்வு வாழ்வ‌தை விட‌, வ‌ண‌ங்க‌ ம‌றுப்ப‌தே என் ம‌ன‌சாட்சிக்கு நியாய‌மான‌ செய‌ல்.

    என்ன‌ த‌ண்டனை த‌ரப்ப‌டுமா? ஆயிர‌ம் முறை நெருப்புக் குழியில் விழ‌த் த‌யார்! கொடுமைக்கு அஞ்சுவ‌தில்லை.

    நான் யாரைக் க‌ட‌வுளாக வ‌ணங்குவேன் என்ப‌தை நான் தான் தீர்மானிக்க‌ வேண்டும். என்னைப் பொருத்த‌ வ‌ரையில் என் ம‌ன‌சாட்சிக்கு க‌ட‌வுள் என்று அழைக்க‌ப்ப‌ட‌த் த‌குதி உடைய‌வ‌ர்க‌ள் அனும‌ன் போன்ற‌வ‌ர்க‌ள்தான். அனும‌ன் ம‌ட்டும் அல்லாது அங்க‌த‌ன், குமுத‌ன், நீல‌ன், ந‌ள‌ன், தார‌ன் ஜாம்ப‌வான், ஜடாயு, ச‌ம்பாதி, குக‌ன் ஆகிய‌வ‌ரை எல்லாம் மரியாதை செய்து வ‌ண‌ங்கிய‌ பின் தான், நான் இராம‌னையே மரியாதை செய்து வ‌ண‌ங்குவேன். இது கொள்கையின் அடிப்படியிலான மரியாதை ஆகும்.

    இராமன் தோள் வலிமையும், வில் வலிமையும் உடைய சிறந்த வீரன், மிகப் பெரிய ஒரு இராச்சியத்தின் இளவரசன், மக்களிடம் இணையற்ற செல்வாக்கும் மக்களின் அன்பையும் பெற்றவன், தன்னுடைய தந்தையின் சொல் காக்க, சிறிய தாயின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த விதமான தயக்குமோ, முணுமுணுப்போ இல்லாமல் 14 வருடம் காடு செல்கிறார்.

    இராமருக்காவது- தந்தையின் சொல், சிறிய தாயின் விருப்பம்- இந்தக் காரணங்களுக்காக காடு செல்கிறார்.

    எந்த கட்டாயமும் இல்லாமல் தன் தமையன், தியாகக் செம்மலுக்கு உண்டான இன்னலைக் கண்டு அவரைக் காக்க தானும் வனம் செல்கிறார் இலக்குவன்!

    தன்னுடைய கணவனின் கஷ்டத்தில் பங்கெடுத்து உதவி செய்ய, காட்டின் கடுமைகளை உதாசீனம் செய்து கணவனுடன் செல்கிறார் சீதை அம்மையார்!!

    தன் தமையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு கலங்கி அவரிடம் இராச்சியத்தை ஒப்படைக்க ஓடுகிறார் பரதன்!!!

    இப்படிப்பட்ட நல்லவர்களை, வணங்காவிட்டால் வேறு யாரை வணங்க முடியும்?

    இப்படிப்பட்ட நல்லவர்களைக் கூட , பட்ட கஷ்டங்கள் போதாது என்று இன்னும் பல இன்னல்களை தருகின்றனர் இராவணனைப் போன்ற அயோக்கியர்கள்.

    அதனால் அவர்கள் மேலும் கடும் துயருக்கு ஆளாவது கண்டு, இத்தனை நல்லவர், தோள் வலிமையும், வில் வலிமையும் உடைய சிறந்த வீரன், இவ்வளவு தூரம் கடும் துயரில் சிக்கி, மனைவியையும் இழைந்தது கண்டு, அவருக்கு உதவி செய்யும் பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் அமைச்சர் பதவியையோ, வாரியத் தலைவர் பதவியையோ, பணத்தையோ, பொன்னையோ எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை.

    சீதை அம்மையாரின் துயர நிலையைக் கண்டவுடன், இராவணனின் இடுப்பொடித்து, அம்மையாரின் துயரம் தீர்க்க வேண்டும் என்ற அனுமனின் நோக்கம் இன்னும் உறுதியானது.

    எந்த ஒரு சன்மானத்தையும் அனுமன் இராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. காட்டிலே இருக்கும் கனிகளையும் , கிழங்குகளையும் உண்டு உலகிலே யாருமே செய்யாத அரும் பெரும் செயல்களை செய்து விட்டனர், அனுமனும் அவனது சகாக்களும்.

    அனுமன் குரங்காகவோ , கரடியாகவோ இருக்கட்டும்! ஆனால் அனுமன் கடவுள் இல்லை என்றால் இந்த உலகிலே , வானத்திலே வேறு எங்குமே, யாருமே கடவுள் என்று அழைக்கப் படத் தகுதியுள்ளவர்களா, என்று எனக்கு தோன்றியது.

    வானத்திலே இருந்து கட்டளைகளை போடுவதாகக் கூறப் படும் கான்செப்டை வைத்து, “அவர்களை”யே , (நாம் இங்கெ பூமியிலே துயர் அடைவதைப் பார்த்துக் கொண்டு) கடவுள் என்று அழைக்கும் போது-

    அநியாயத்தை தட்டிக் கேட்ட , சுயநலம் சிறிதும் இல்லாமல் உழைத்த கொள்கை வீரன், குணாளன், கர்மயோகி, அனுமனைக் கடவுள் என்று கூறுவது கூட குறைவான‌ ம‌திப்பீடு, அனுமன் அதற்கும் மேலே! ஆனால் கடவுளுக்கு மேலே வேறு எதுவும் இல்லாததால் அனுமனையும் கடவுள் ஸ்தானத்திலே வைக்கும் படியான நிலை உள்ளது.

    அனுமன் கடவுள் என்று சொன்னால், அது கடவுள் என்ற ஸ்தானத்துக்குத் தான் பெருமை.

    இந்த‌ மேலே இருக்கும் க‌ட‌வுள்- அப்படி ஒருவர் இருந்தால் – இராம‌ராக‌வோ, அல்ல‌து அவ‌ர் அளவுக்கு துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்த‌வ‌ராக‌வோ, அவ‌தார‌ம் எடுத்து இருந்தால் அந்த‌க் க‌ட‌வுளுக்கு ம‌ரியாதை செலுத்துவோம், வ‌ண‌ங்குவோம்.

    மேலே “இருக்கும்” ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌ “க‌ட‌வுள்”, இப்ப‌டி அவ‌தாரமாக‌ ந‌ம்முட‌ன் வாழ்ந்து சுக‌ துக்க‌ங்க‌ளில் ப‌ங்கு எடுக்காம‌ல் – வெறும‌னே மேலே இருந்து கொண்டு ப‌ல க‌ஷ்ட‌ங்க‌ளையும் கொடுத்துக் கொண்டும், “என்னை வ‌ண‌ங்க‌வில்லை என்றால் உன்னைத் த‌ண்டிப்பேன்” என்று மிர‌ட்டிக் கொண்டும் ம‌ட்டும் இருப்ப‌வ‌ராயின், நான் அவ‌ரை வ‌ண‌ங்க‌ போவ‌தில்லை.

    அத‌ற்க்காக‌த் த‌ர‌ப் ப‌டும் எந்த‌ த‌ண்ட‌னைக்கும் நான் த‌யார்.

    (edited and published)

  49. // இது ஒரு தர்க்கபூர்வமான tehnical point, ஆனால்

    ஜடாயு அவர்களே – இது தர்க்க ரீதியிலும் செல்லாது – பரம் பொருளானவன் சர்வஜித், பராச்ச சக்திஹி, அவனால் ஆகாத காரியம் என்று ஒன்றில்லை, எல்லா செயல்களும் அவனாலேயே நடக்கின்றன என்றெல்லாம் வேதம் “repeat” பண்ணிக்கொண்டே இருக்கிறது

    பரமாத்மா ஆத்மாவை விட அணுவானது – அதனாலேயே பரமத்மாவல் ஆத்மாவினுள் பிரவேசிக்க முடிகிறது – கர்பத்திலே பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் பரமாத்மா பிரவேசிக்கிறது [இது வேத வாக்கியம் ஆகையால் உண்மை ] இப்படி சரிரமான உடலை கர்ப்பம் மூலம் பிறந்து எடுக்கும் ஆத்மாவினுள் புகும் பரமாத்மா கர்பதினுள் புகுந்து பிறக்க இயலாதது பிரக்கதது என்றால் அபாவம் ஏற்படும் இதன் மூலம் பரமாத்மாவினுடைய எந்த காரியத்தையும் முடிக்கும் தன்மை நிருபிக்கபட்கிறது

    கர்பத்தில் பிறப்பது ஏன் கேவலம் என்று கொள்ளபடுகிறது – அது அழிந்து போகும் உடல் சம்பந்தம் ஏற்படுவதாலா அல்லது புணருதல் மூலம் உண்டாவதாலா ? எப்படியாக இருப்பினும் – பகவான் கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் அந்த சிசுவின் சரிரத்தில் புகுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது [ஆத்மாவினுள் பிரவேசிக்கிறான் என்று வைத்துகொண்டாலும் சரி] – எப்படியாக இருப்பினும் பகவான் ஒரு தாயின் கற்பதில் புகுந்தே தீருகிறான் (இது எல்லா சித்தாந்ததிற்கும் பொது) – இதானால் அசிங்கம் இல்லாமையும் நிரூபிக்கபடுகிறது. பகவானானவன் தானே ஹிரன்யகர்பனாக [cosmic egg] உள்ளான் என்று வேடம் கூறுகிறது இப்படி இருக்கையில் கர்ப்பம் என்பது கேவலமான விஷயம் அல்ல.

    புண்ய புன்யஹா – இந்த ஆத்மாவானது கர்மபலனுக்கேர்ப்ப புண்ய உடலையோ பாவ உடலையோ பெறுகிறது (இது வேத வாக்கியம்) – இப்படி சாஸ்திரமே உடல் எடுப்பது புன்யமேன்ர உயர்ந்ததே என்று கூறுகையில் அதை தவறேனக்கொள்வது எங்கனே

    (edited and published)

  50. sarang,
    It is very unfortuanate that you are wasting time of others by pseudo relevant comparison despite you have very good talent to argue in a fair manner. Also you seem to compare people who belive in both Siva and Vishnu with not a good ‘கணவனே கண்கண்ட தெய்வம் ‘ person. Please don’t bring apples to orange comparisons.

    1) A lady who solely adores her husband can be devotee of several Gods.

    2) A lady who solely adores her husband (கணவனே கண்கண்ட தெய்வம் ) can adore her children, mother in law, sister in law. She need to let everyone in her home except her husband to starve and die.

    3) A god is not husband or dedicated to one wife or person. It does not look as a nice comparison.

    there is no point to compare vaishnavaite’s intolerance with Azhavar, ramanujar etc. Those people who leave everything for attaining salvation unto vishnu is not the same as others who are extremely greedy of materials and still claim themselves as ‘vishnu only’. show them money and material things, they will run behind leaving vishnu in corner.

    sorry, i have no more time.

  51. Sarang
    you are displaying your self by writing these things:

    //
    மேலும் ரிக் வேத சம்ஹிதையில் (உபநிஷத் அல்ல) வருபவை இவை

    நாராயணாத் பிரம்ம ஜாயதே – நாராயணிடம் இருந்து பிரம்மன் தோன்றினான்
    நாராயணாத் ருத்ர ஜாயதே – நாராயணிடம் இருந்து ருத்ரன் தோன்றினான்
    //

    and mentioning smileys to giggle at others arguments. typical intolerane.

  52. ராகம்: சங்கராபரணம், தாளம்: ரூபகம்

    சம்போ சிவா சங்கர குரு அம்போ ருஹா நயன
    1) தரணீதர வர பூஷண ஸுர ஸேவித சரண
    2) தருணாருணா கிரணாபா ஸூ சரணா ஹூர ஹரணா……
    …………..
    7) மதபேத பதித மானவ மத சந்தத பங்க 8) ஸூத போதன ஹித கர பாலித த்யாக ராஜ (சம்)

    வைணவ சம்பிரதாய பாரம்பரியத்திலிருந்து வந்த நிலையிலும்,

    சம்போ சிவ என்று சிவனையும் மனப் பூர்வமாக வணங்கி,

    மத பேத, மத துவேஷம் தேவை இல்லாதது கண்டிக்கப் பட தக்கது என்ற வகையிலும் எழுதி இருக்கிறார் தியாக ராஜர்.

    சமரசக் கருத்துக்களை பரப்பிய இவர் அல்லவோ மகான்.

  53. /புண்ய புன்யஹா – இந்த ஆத்மாவானது கர்மபலனுக்கேர்ப்ப புண்ய உடலையோ பாவ உடலையோ பெறுகிறது (இது வேத வாக்கியம்) – இப்படி சாஸ்திரமே உடல் எடுப்பது புன்யமேன்ர உயர்ந்ததே என்று கூறுகையில் அதை தவறேனக்கொள்வது எங்கனே /

    இப்படி உடலை எடுப்பது சீவான்மாவே யன்றிப் பரமான்மாவன்று. ஆத்மாய நம்: ஆத்மலிங்காயநம்: என வேதம் கூறுவது உயிருக்குயிராக இருந்து பரம்பொருள் உயிரின் இச்சாஞானக் கிரியைகளை ஊக்குவித்தலைக் குரிக்குமேயன்றி பரம்பொருளே கர்ப்பவாசம் செய்தலைக் குறிக்காது. மேலும் நீங்கள் காட்டிய தொடரிலேயே கர்மபலனுக்கேற்ப உடல்வரும் என்றால் பிறவி எடுக்க இராமன் செய்த கன்மம் என்ன?
    . கர்ப்பவசம் இனிது என ஆழ்வார் பெருமக்களோ அல்லது பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் போன்ற வைணவப் பெருங்கவிகளோ ஏன் வேத வாக்கியமோ உண்டோ? அதனைப் போக்கிக் கொள்ள அல்லவோ இறைவனின் அருள் வேண்டி பக்தனும் பாகவதனும் நிற்கின்றனர்?

    :அல்லலாந் தொழில்ப டைத்தே யடிக்கடி யுருவெ டுத்தே
    மல்லன்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னின்
    தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திடா திருணீங் காது
    நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும்”

    ஜடாயு அவர்கள் தம்முடைய பெயருக்குப் பொருத்தமாக இந்தக் கட்டுரையை ந்யம்பட எழுதியுள்ளார். ஜடாயு எப்படி இராமனுக்கு அன்பரோ அப்படியே சிவத்துக்கும் அன்பர். திருஞானசம்பந்த்ர் தம்முடைய திருப்புள்ளிருக்குவேளூர்ப் பதிகத்தில், “ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண் , போகாமே பொருதழித்தான்” என்று ஜடாயுவின் வீரத்தைப் புகந்தது போல் , “யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே, பூசனைசெய் தினிதிருந்தான்” என்று அவர் சிதிருந்த சிவ்வழிபாட்டினையும் போற்றுகின்றார்.

    இருகண்களும் ஒருநோக்குடையன. அவ்வாறே இந்துதருமத்திற்ககுச் சைவமும் வைணவமும். இரண்டையும் சமமாகநோக்கும் திறம் உடைய ஜடாயுவின் கட்டுரையுமத்தகையதே. இந்தப் பார்வை உடையவரே கம்பநாட்டாழ்வரும். கவிச்சக்ரவர்த்தியின் கவியுள்ளம் அறிந்து எழுதப்பட்ட கட்டுரை இது. மாறுபடுவோர் படுக. ஜடாயுவின் பணி தொடருக.

  54. // C.N.Muthukkumaraswamy
    2 February 2010 at 12:24 pm

    கவிச்சக்ரவர்த்தியின் கவியுள்ளம் அறிந்து எழுதப்பட்ட கட்டுரை இது. மாறுபடுவோர் படுக. ஜடாயுவின் பணி தொடருக. //

    அன்புள்ள ஐயா, தங்கள் ஆசி மொழிகளுக்கு மிக்க நன்றி, வந்தனங்கள். சம்பந்தர் தேவாரத்திலிருந்து ராமாயண ஜடாயு பற்றிய குறிப்புகளைத் தந்ததற்கும் மிக்க நன்றி.

    திரு. சிவகுமார் கூறியதை ஏற்கிறேன். நான் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. இனியும் சமயவாத எதிர்க்கருத்துக்கள் வந்தால், அதற்கு எதிர்வினை செய்யப் போவதுமில்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

    கட்டுரை குறித்து பாராட்டுக்கள், கருத்துக்கள் தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி.

  55. மதிப்பிற்கு உரிய முனைவர் அய்யா

    //இப்படி உடலை எடுப்பது சீவான்மாவே யன்றிப் பரமான்மாவன்று. ஆத்மாய நம்: ஆத்மலிங்காயநம்: என வேதம் கூறுவது உயிருக்குயிராக
    //

    இப்படி கேள்வி வரும் என்று எதிர்பார்த்த பின்பு தான் அதை எழுதினேன் – அது எழுதியதன் காரணம் – உடல் எடுப்பதும் புண்ணியமே என்று சுட்டிக் காட்டவே – தர்க்க முறையிலே வாதம் மேற்கொள்ளும் பொழுது எதையும் தவிர்க்காமலும் எழுதியதன் காரணம் எதையும் மறைக்க வேண்டாம் என்று எண்ணியே

    மேலும் ஆழ்வாரும் பெரும் துயரிடும் பயில் பிறந்து என்று தனது பிறவியை நொந்து கொள்கிறார் – அதே ஆழ்வார்கள் கண்ணனின் (கர்பவாச) பிறப்பை ஏராளமான இடத்தில பாடியுள்ளார்

    ஐந்தாவது வேதம் என்று போற்றப்படும் மகாபாரதத்தில் கண்ணனின் பிறப்பை ஏராளமாக கொண்டாட பெறுகிறது – ரகுவச்மம் ஒரு விசேஷமான விஷயம்

    உலகு தன்னுள்ளே பிரத்தி, பிறந்தவாறும் வளர்ந்தவாரும், வண்ண மாடங்கள் சூழ் திருகோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தமை (கேசவன் என்ற பதத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தல் உலர்தம் புரியும்), “ஏர் ஆர்ந்த கன்னி யசோதை இளம் சிங்கம், நந்தகோபன் குமரன் நாராயணனே நமக்கே பறை தருவான்”, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை

    சந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணனை பற்றிய விசேஷமான விவரணம் உள்ளது –

    ஓம் கிருஷ்நோவை சத்சிதானந்தா கனாக கிருஷ்ணா ஆதி புருஷஹா
    – ரிக் வேதத்தில் உள்ள கிருஷ்ண உபநிஷத்

    பிரம்மன்யோ தேவகிபுத்ரோ, பிரம்மன்யோ மதுசுடனாஹா – அதர்வசிரஸ்

    உலகமே ஹிரண்யகர்பனின் கர்ப வசத்தில் இருந்துதான் தோன்றுகிறது என்பது வேத வாக்கியம். கர்பவாசம் இனிது என்று புராண கோட்பாடுகளும் உண்டு. கோவில்களில் மூல விக்ரகம் உள்ள இடத்தை கடவுளின் கருவறை (கர்ப கிரகம் என்றே நாம் கூறுகிறோம்).

    ப்ரிஹுதாரன்யாக உபநிஷத்தின் படி – புவியானது கந்தர்வ லோகத்தை காட்டிலும், பிரம்மலோகத்தை காட்டிலும் கீழானதே – இதை யஞ்யவல்கரே சொல்லிவிடுகிறார் – இங்ஙனம் இருக்க இந்த கீழான புவியில் தானே சிவா பெருஆணும் தோன்றி திருவிளையாடல் நடத்தினார், முருகப் பெருமானும் இங்கே தானே தோன்றினார்

    தன்னில் ஒரு அங்கமென இருக்கும் உமையாளை சிவா பெருமான் கர்பாவசதில் தோன்றிய மீனாக்ஷி அம்மனை அல்லவே திருமண செய்து கொள்கிறார் தானாகவே கொள்கிறார்

    சன்யாச தர்மமே உத்தம தர்மமாக சொல்லப்பட்டுள்ளது – க்ரிஹச்தானம் சற்றே குறைவே – அப்படி இருக்கையில் நமது கடவுள்களின் திருமணங்களை நாம் விசேஷமாக கொண்டாடுகிறோம் –

    பர பிரம்மமானது தானாகவே இருந்தது, பல வாக ஆனது, பர பிரம்மமானது சர்வ காமஹா (தேவைகளே இல்லாதது), மகாதோ மகீயனா … இப்படி எல்லாம் இருக்கையில், திருமணம் என்ற ஒன்று பர பிரம்மத்திற்கு தேவையா – நாம் நாரயனன்கட்டும் சரி, சிவா பெருமானாகட்டும் சரி, முர்கனாகட்டும் சரி தீர்மானம் செய்துகொண்டு திருமண கோலத்துடன் இருப்பதையே காண்கிறோம் – நீங்கள் சொல்வது சரி என்றால் இதுவும் பர பிரம்ம லக்ஷணம் அன்றே

    தாழ்மையுடன் அடியேன் கூறுவது யாதெனில் – நான் மாறுபட்டு இதை கூறவில்லை. உங்களின் வேறுபட்ட கர்பாவாச கருத்தை எதிர் கொள்ளவே எழுத நேர்ந்தது

  56. நண்பர் திருச்சிகாரரே

    அடியேன் சொள்ளவருவதி நீங்கள் சுத்தமாக புரிந்துகொள்ளவில்லை அல்லது நான் புரியும் படி எழுதவில்லை என்றே கொள்ள வேண்டும்

    //
    ராகம்: சங்கராபரணம், தாளம்: ரூபகம்

    சம்போ சிவா சங்கர குரு அம்போ ருஹா நயன
    1) தரணீதர வர பூஷண ஸுர ஸேவித சரண
    2) தருணாருணா கிரணாபா ஸூ சரணா ஹூர ஹரணா……
    …………..
    7) மதபேத பதித மானவ மத சந்தத பங்க ஸூத போதன ஹித கர பாலித த்யாக ராஜ (சம்)

    வைணவ சம்பிரதாய பாரம்பரியத்திலிருந்து வந்த நிலையிலும்,

    சம்போ சிவ என்று சிவனையும் மனப் பூர்வமாக வணங்கி,

    மத பேத, மத துவேஷம் தேவை இல்லாதது கண்டிக்கப் பட தக்கது என்ற வகையிலும் எழுதி இருக்கிறார் தியாக ராஜர்.

    சமரசக் கருத்துக்களை பரப்பிய இவர் அல்லவோ மகான்.
    //

    எனக்கு ஒன்றும் வைஷ்ணவமே சிறந்தது, த்யஜராஜர் வைஷ்ணவரே, கம்பன் வைஷ்ணவரே என்று கொள்ளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது, அது அவசியமற்றதும் கூட

    இப்படி இருக்க நான் ஒப்புக்கொலாதது உங்களின் கருத்தான “எல்லாமும் ஓகே வாக இருந்தால் தான் அவன் சமவாதி அல்லன், அப்படி இல்லாவிடில் அவன் காட்டுமிராண்டி” என்ற கருத்தையும் ஒரு தெய்வத்தை உயர்த்தி கூறுவது காட்டுமிராண்டி தனம் என்பதையும் தான்

    இதை விளக்கவே இவ்வளவு பிரயத்தனப் பட்டேன் உங்களுடன் பல பழ சொற்களை வாங்கி கட்டிகொண்டேன்

    நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியாமல் இல்லை – ஆனான்ல் நீங்கள் சொல்ல வரும் தாத்பரியத்திளிர்ந்து நீங்களே முரண் படுகிறீர்கள்

    இத்துடன் இந்த விஷயாமாக உங்களிடம் விவாதிப்பதில் இருந்து புண் முறுவலுடன் தலை கட்டுகிறேன்

  57. கார்கில் ஜெய் அவர்களே

    //
    Sarang
    you are displaying your self by writing these things:

    //
    மேலும் ரிக் வேத சம்ஹிதையில் (உபநிஷத் அல்ல) வருபவை இவை

    நாராயணாத் பிரம்ம ஜாயதே – நாராயணிடம் இருந்து பிரம்மன் தோன்றினான்
    நாராயணாத் ருத்ர ஜாயதே – நாராயணிடம் இருந்து ருத்ரன் தோன்றினான்
    //

    and mentioning smileys to giggle at others arguments. typical intolerane.
    //

    முனைவர் அய்யா பிறப்பு என்பது ஒரு கீழ்நிலயானது என்று சொன்னார் – அதை எதிர் கொள்ளவே ஜாயதே (பிறப்பு) என்று வரும் வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டினேன். அவர் சிவா பெருமானையே பரம் பொருளாக கொண்டாலும், இப்படி பிறந்தவர் என்று வேத வாக்கியம் கூறுகிறது ஆதலால் பிறப்பும் சிறந்ததே என்று சுட்டிக் காட்டவே – என் பதிலின் மையக் கருத்தே பிறப்பை உயர்த்தி சொல்லவே தான் – பிறப்பதனால் பரம் பொருள் இல்லாமல் ஆவது இல்லை – (அவனே எல்லா காரணமாகவும் [நிமித்த காரணம், உபதாறன காரணம்] இருக்கலாம் அல்லவா –

    நான் சொல்லவந்ததை சரியான முறையில் சொல்லாமல் பிறர் புண்படும் படி சொல்லி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்

  58. கார்கில் ஜெய் அவர்களே

    //
    sarang,
    It is very unfortuanate that you are wasting time of others by pseudo relevant comparison despite you have very good talent to argue in a fair manner. Also you seem to compare people who belive in both Siva and Vishnu with not a good ‘கணவனே கண்கண்ட தெய்வம் ‘ person. Please don’t bring apples to orange comparisons.

    1) A lady who solely adores her husband can be devotee of several Gods.

    2) A lady who solely adores her husband (கணவனே கண்கண்ட தெய்வம் ) can adore her children, mother in law, sister in law. She need to let everyone in her home except her husband to starve and die.

    3) A god is not husband or dedicated to one wife or person. It does not look as a nice comparison.

    there is no point to compare vaishnavaite’s intolerance with Azhavar, ramanujar etc. Those people who leave everything for attaining salvation unto vishnu is not the same as others who are extremely greedy of materials and still claim themselves as ‘vishnu only’. show them money and material things, they will run behind leaving vishnu in corner.

    sorry, i have no more time.
    //

    நான் காட்டின இந்த மேற்கோள் தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்

    ஆனால் அது “pseudo relevant” உவமானம் அல்ல – புறம் தோழமையும் ஒரு சிறந்த வழியே என்பதை மட்டுமே சுட்டிக் காட்ட நினைத்தேன், அதற்காக எல்லோரும் அப்படி தான் இருக்க வேண்டும் நான் சொல்லவே இல்லை

    இந்த உவமையை இப்படி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் – எப்படி ஒரு உண்மையான மனைவி மற்ற ஆண்களை குறைவாக எண்ணாமல், தனது கணவனின் சேவையில் மட்டுமே ஆழ்ந்திருப்பாலோ அவ்வண்ணமே புறன் தொழாதவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தில் ஆழ்ந்து இருப்பர். உவமானம் இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும்
    உவமனத்தின் பயனே ஒரு சொல்லவந்த ஒரு விஷயத்தை விரைந்து புரிவதற்காகவே – அந்த உவமானத்தை அவ்வாறே நோக்க வேண்டுமே தவிர அதன் அப்பாற்பட்டு ஆராய்ச்சி செய்தால் எந்த உவமானமும் சிறக்காது – ஒரு உதாரணத்திற்கு “உடுக்கை இழந்தவன் கை போல —- இடுக்கண் களைவதாம் நட்பு” – இங்கு சொல்லப்படுவது நண்பன் என்பவன் உதவி என்று கேட்காமலேயே தானே புரிந்து கொண்டு ஆபத்திலிருந்தும் காப்பவன் என்பதே…. இந்த அர்த்தத்தை கொள்ளாமல் , கை என்பது வலது கையா, இடது கையா… உடைகளை அணிவதற்கு உதவும் கை தான் ஆடை களையவும் உதவுகிறது ஆகையால் நண்பனை கையோட ஒப்பிட கூடாது , கையால் தான் மற்றவரை அடிக்கிறோம் ஆகையால் நண்பனை கையோட ஒப்பிட கூடாது, நாம் கையால் தான் வணக்கம் சொல்கிறோம், நட்பு என்பது வணக்கத்திற்கு அப்பாற்பட்டது ஆகையால் ஆகையால் நண்பனை கையோட ஒப்பிட கூடாது என்று சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் அது உவமானத்திற்கு சிறப்பன்று

    நிற்க, எனக்கு ஒரு விஷயத்தை முறையே எல்லோருக்கும் புரியும் படி எழுத தெரியாது ஆகையால் குறையுடனே தான் எழுதுகிறேன் – பிழை பொருத்தருள வேண்டுகிறேன்.

    நீங்கள் சொல்வது போல உவமானம் மோசமானதாக இருக்கலாம் ஆனால் நான் சொல்லவந்த கருத்தை சொல்லிவிட்டேன் – யாரையும் குறை கொண்டு பார்க்க வேண்டும் என்பது எனது எண்ணம் அல்ல, நான் ஒரு பாதையில் நிறைவு பெறமுடியுமா என முயற்சி செய்கிறேன் அவ்வளவே

    குறைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

  59. முனைவர் அவர்களுக்கு வணக்கம்

    ///இப்படி உடலை எடுப்பது சீவான்மாவே யன்றிப் பரமான்மாவன்று. ஆத்மாய நம்: ஆத்மலிங்காயநம்: என வேதம் கூறுவது உயிருக்குயிராக இருந்து பரம்பொருள் உயிரின் இச்சாஞானக் கிரியைகளை ஊக்குவித்தலைக் குரிக்குமேயன்றி பரம்பொருளே கர்ப்பவாசம் செய்தலைக் குறிக்காது. மேலும் நீங்கள் காட்டிய தொடரிலேயே கர்மபலனுக்கேற்ப உடல்வரும் என்றால் பிறவி எடுக்க இராமன் செய்த கன்மம் என்ன?
    . கர்ப்பவசம் இனிது என ஆழ்வார் பெருமக்களோ அல்லது பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் போன்ற வைணவப் பெருங்கவிகளோ ஏன் வேத வாக்கியமோ உண்டோ? அதனைப் போக்கிக் கொள்ள அல்லவோ இறைவனின் அருள் வேண்டி பக்தனும் பாகவதனும் நிற்கின்றனர்?///

    சித்தாந்த‌த்தைச் சிற‌ப்பாக‌ விள‌க்கியுள்ள‌மைக்கு ந‌ன்றி. நான் முன்ன‌மே கூறிய‌து போல‌, வேதங்களையும், சித்தாந்தத்தையும் முறையே ப‌யிலாம‌ல், வேத‌ப் பிர‌மாண‌ம் காட்டி வாத‌ம் செய்தால் வ‌ரும் சித்தாந்த‌க் கோளாறை அருமையாக‌ப் ப‌ட‌ம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்க‌ள்.

    பிறத்தல், விருத்தியாதல், பிராணமடைதல், குறைதல், அழிதல், இறத்தல் என்ற‌ ஆறு விகாரங்கள் இல்லாமை சிவனின் ப‌ர‌த்துவ‌த்தைப் ப‌றைசாற்றுவ‌து என்ற‌ சித்தாந்தத்தையும் ஹரதத‌‌ரின் பஞ்ச‌ர‌த்ன‌ ஸ்லோக‌ம் கூறுகிற‌து. அதை அழகான தமிழ்ப் பதிகங்களாக‌‌திருவையாறு அண்ணாசாமி ஸ்ரௌதிக‌ள் அவ‌ர்க‌ள் மாற்றியிருக்கிறார்.

    “பிறப்பிறப் பாதி யுயிர்க்குண மின்மையிற்
    பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவு
    ளும்பர்க ளெவர்க்கு முயர்ந்தோ
    னென்பது தெளிக வியல்புணர்ந் தோரே.”

    முழுமையான ஸ்லோகத்துக்கும், பதிகங்களுக்கும் இந்த நிரலியைப் பாருங்கள்.
    ஹரதத்த‌ரின் நூல்கள் வேதங்களை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டன.
    https://www.shaivam.org/tamil/sta_pancharatna_slokangal.htm

  60. //மேலே இருக்கிறாராம் க‌ட‌வுள். ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ராம். நாம ப‌ர்த்த‌து இல்லை. ஆனால் ப‌ல‌ரும் ந‌ம்புறாங்க‌. அவர் தான் ந‌ம்மை எல்லாம் ப‌டைக்கிறாராம். ச‌ரி ஐயா, மேலே இருக்கிறாரு, ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ரு, ஆனால் அவ‌ர் நெஞ்சிலே க‌ருணை என்ப‌தே இல்லையா? அப்படி க‌ருணை இருந்தா எதுக்கு ஒரு குழ‌ந்தையை குருடாக‌வும், ஒரு குழ‌ந்தையை முட‌மாக‌வும் ப‌டைக்க‌ வேண்டும்?
    எத‌ற்க்கு ஒரு குழ‌ந்தையை ஒரு கோடீச்வ‌ர‌ சீமான் வீட்டிலும், ஒரு குழ‌ந்தையை தெருவிலும் ப‌டைக்க‌ வேண்டும்?//
    இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் மற்ற மதங்களில் பதில் இல்லை. ஏன் என்றால் நம் இந்து மதம் கூறும் பூர்வ ஜன்ம புண்ணியம், பாவம், பலன், மறுபிறவி concepts மற்ற மதங்களில் இல்லை என்று படித்திருக்கிறேன்.

  61. பாலா காண்டம் – வால்மீகி ராமாயணம்

    ராமாயணத்திலேயே இந்த கார்ப பிரச்சனைக்கு நன்கு விளக்கம் உள்ளது

    இது கௌசல்யா கருவுற்ற பின் சொல்வது (பகவன் காட்சி தருகிறார் ….)
    dheva dheva namasthe asthu Sankhachakragadhaadhara
    paramaathmaa achyutho ananthaH poornasthvam purushotthamaH

    thvameva maayayaa viSvam srjasi avasi hyamsi cha
    satthvaadhiguNasamyukthaH thurya eva amalah sadhaa (Bala.3.22)

    பகவான் செய்வதை தூய மனத்தவர்கள் அறிவர் – எல்லா உலகத்திற்கும் பிறப்பிடமான நீ என்னுள் வந்து பிறப்பது ஒரு உண்மையே என

    இதில் இருந்து அவதார நோக்கம் பொருட்டு பிறப்பெடுப்பது உத்தமமே, பர பிரம்ம ஸ்வரூபமே என்பது திண்ணம்

    கடவுள் என்ன செய்வார் என்றே நாம் அறியாத போது எங்கனம் பரம் பொருள் இனி வரும் காலங்களில் கர்பத்தில் பிறக்க மாட்டார் என்று அறுதி இட்டு கூற முடியும்

    (edited and published)

  62. Dear Mr. Armchair Critic,

    //இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் மற்ற மதங்களில் பதில் இல்லை. ஏன் என்றால் நம் இந்து மதம் கூறும் பூர்வ ஜன்ம புண்ணியம், பாவம், பலன், மறுபிறவி concepts மற்ற மதங்களில் இல்லை என்று படித்திருக்கிறேன்.//

    Now let us assume that the sufferings in a birth is due to the mistakes or sins in the previous birth, in that sense you have a better logic defending the “God”.

    Now let me ask you one more question, why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.

    Can you explain this as well?

  63. சிவனுக்குப் பிறப்பு உண்டு என்று சதபத பிராம்மணம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணத்திலும் இக்கதை உண்டு.

    பிறப்பு என்பது நாராயணானாகிய பரம புருஷன் தானாக விழைந்து எடுப்பது, இது நம் பிறப்பைப் போன்றதன்று என்று முன்பே கீதை சுலோகத்தில் கூறியிருந்தேன். புருஷ சூக்தமும் “பிறப்பில்லாதவன் பல படியாகப் பிறக்கிறான்” என்று ஓதுகிறது. இதன் அர்த்தம், “கர்ம வசப்பட்டு பிராக்ருதமான பிறப்பை எடுக்காத பரம புருஷன் தன்னிச்சையாக பல அவதாரங்களை எடுக்கிறான்” என்பது. ஆகையால் “பிறப்பு எடுப்பதால் விஷ்ணு பரதெய்வம் ஆகா” என்று கூற இயலாது.

    (edited and published)

  64. நண்பரே
    //
    Now let us assume that the sufferings in a birth is due to the mistakes or sins in the previous birth, in that sense you have a better logic defending the “God”.
    Now let me ask you one more question, why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.
    Can you explain this as well?
    //
    இதற்கு விளக்கம் உள்ளது என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கே பதில் கிடைக்கும்
    தர்க்கமே இல்லாமால் சாஸ்திர ரீதியாக எனக்கு கற்று கொடுத்ததை எழுத முயல்கிறேன் – குறை போருக்க வேண்டுகிறேன்
    முதலில் – இந்த பிறப்பிற்கு பகவானின் மீது பழி போடுவதே தவறு – விதி என்பது பகவான் நமக்கு விதித்தது அல்ல
    — ஆத்மா அணித்யன் [நிதா நித்யானாம்] என்பதன் முலம் இந்த துயரம் சந்தோஷம், குளிர் சூடு இவை எல்லாம் உடலுக்கே என்றும் மாறும், தன்மை உள்ளது என்றும் அறிய வேண்டும். உடலுக்கே என்று ஆகிவிட்டபடியால், உடலின் அதிபதி மனச ஆகிறது, நம் மனம் போல் செய்யும் காரியமே சுக துக்கமாக விளைகிறது குருடனாய் பிறப்பதும், பாதியில் முடமாவதும், நாம் செய்யும் காரியங்களால் மட்டுமே
    — எப்படி குழந்தை பருவம், இளமை, வயோதிகம் என்று உடல் மாருபடுகிறதோ, அவ்வாறே ஆன்மாவானது பல உடல்களை எடுக்கிறது — ஆன்மா மாறுவதே இல்லை, இதன் மூலம் அறிவது யாதெனில், பிறவி என்பது ஆன்மாவின் நெடுந்தூர சுழல் பயணத்தில் ஒரு பகுதியே. ஜெயஸ்ரீ அவர்கள் இதை [] நன்கு விளக்கி உள்ளார். எப்படி ஒருவன் தீர்மானாமாக ஒரு தவறையோ, நல்லதையோ செய்துவிட்டு பலனை அனுபவிக்கிறானோ [குடிக்கிறான், அதனால் பல வருடங்கள் கழித்து குடல் வெந்து முடிவு வருகிறது, இன்று வங்கியில் பணம் முதலீடு செய்தவிட்டு பத்து வருடம் கழித்து அதை பெருக்கி நன்மை அடைகிறான் ] இவ்வண்ணமே நாம் செய்யும் காரியங்கள் பல வருடங்களோ பல பிறவிகளோ கழித்து பலன் தருகிறது, இதையே தான்
    – நானே தான் ஆகிடுக
    – தன்னை நிலை நிறுத்தி கொள்வானும்
    – விதியை மதியால் வெல்லலாம் [தான் செய்த தவறை ஞானம் பெற்று திருத்திக்கொண்டால் செய்த தவறானது சரியாகிவிடுகிறது – எப்படி குடி பழக்கமுள்ளவன் குடியை விட்டு மருந்து உட்கொண்டு நலம் அடைகிறானோ அது போல]

    இதிலிருந்து பகவான் வலியவந்து நம்மை புதிது புதிதாக பிறக்க வைப்பதில்லை என்றும் நாம் கொள்ளலாம் – மேலும் பகவான் ஆதியில் செய்த ஒரே காரியம், ஒன்றை இருந்து பலவானது தான் – ஹிரன்யகர்பனானவன் விராட் ஆனது தான் [ஏன் அப்படி ஆனார் என்ற கேள்விக்கு யஞ்யவல்கரே பதில் சொல்லவில்லை (கேள்வி கேட்கப்படவும் இல்லை]
    – கிருஷ்ணர் ஸ்திதப் பிரஜ்யன் யார் என்று இரண்டாம் அத்யாயத்தில் கூறுகிறார் – ஜீவ சமாதியில் இருக்கும் இவர்களுக்கு ஆத்மா பாவம் நன்கு விளங்கியமையால் சுகமும் துக்கமும் இவர்களை பாதிப்பதில்லை (இவர்களை அண்டுவதில்லை) – இவர்களுக்கு விதி என்பது எதுவுமே இல்லை. இதிலிருந்து இவர்கள் பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் ஜெயஸ்ரீ அவர்கள் விஞ்ஞான முறையில் விளக்கியதை போல் சுழன்று சுழன்று அதலிருந்து விடுபட தெரிந்து கொண்டவர்கள் – கால சக்கரத்தின் அப்பாற்பட்டவர்கள்
    – ஆத்மா ஸ்வதந்திரன் என்பதின் மூலமும், தானே விளங்கவள்ளது என்பதன் மூலமும் நாமே நமக்கு நல்லது போலவும், தீங்கு போவும் செய்து கொள்கிறோம். பகவத் கீதா வாக்கியம் – நீயே உனது நண்பன் உனது விரோதியும் கூட. மேலும் அவினாஷி தத் வித்தி என்ற கீதையில் ஆத்மாவை அழிக்க முடியாது ஆத்மா இந்த பிரகிருதியை அழிக்கவல்லது என்று கூரபட்டுலதால் ஆத்மா இயற்கையில் சர்வ வல்லமையும் படைத்தது என்று அறியலாம் [ஜெயஸ்ரீ அவர்கள் சுட்டிக்காட்டிய விஞ்ஞானமயம்]

    – த்வா சுபர்ண சாயுச சகாய சமானம் வ்ரிக்ஷம் பரிசாஷ்வ ஜடே தயோர் அன்யாஹ் பிப்பலம் ஸ்வாத் வட்டி அனச்னான் அனா அபி சக
    (முண்டக உபநிஷத்)
    என்பதன் மூலம் ஜீவாத்மா கர்மாவின் பலனை அனுபவிக்கிறான், பரமாத்மா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறான் (மரக்கிளையில் இரு பறவைகள், ஒன்று பழங்களை (பலன்களை) தின்கிறது, மற்றொன்று பார்த்துக்கொண்டிருக்கின்றது]

    நான் இதெல்லாம் கேக்கவே இல்லியே “simple question” தானே ஏன் நீட்டி மொழக்கி எழுதணும் என்று கேட்டால் – எனக்கு வேறு வழி தெரியவில்லை [ஞானாம் இல்லாத காரணத்தால்] என்று தான் கூறத்தோன்றுகிறது
    மேலும் தர்க்க ரீதியிலும் இதை ஆராய்ந்து நிரூபிக்கக் கூடும் – அதை அப்புறம் பாப்போம்
    பிழை போருக்க வேண்டும் என்று மறுபடியும் வேண்டிக்கொள்கிறேன்

  65. //why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.//
    Let us search for the answer. But I sincerely believe and accept that I don’t have the means to understand the meaning of HIS ways.

  66. Sarang அவர்களே, நன்றி. ஆதாரபூர்வமாக எழுதியுள்ளீர்கள். இதற்கு நான் ஒரு சில எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள ஆசை.

    திரு. திருச்சிகாரர் அவர்களுக்கு:

    //
    Now let us assume that the sufferings in a birth is due to the mistakes or sins in the previous birth, in that sense you have a better logic defending the “God”.
    Now let me ask you one more question, why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.
    Can you explain this as well?
    //
    பகவானுடைய அங்கமாகத் தான் அனைத்து ஆன்மாக்களும், அசித் தத்துவங்களாகிய உயிரில்லா பொருள்களும் உள்ளன. ஆன்மாக்கள் அநாதி, கர்மாவும் அநாதி. ஆன்மாக்கள் சிருஷ்டிக்கப்பட்டவை அல்ல; பகவத் தத்துவத்தின் ஒரு இன்றியமையா அம்சம், அவனுடைய உடைமைகள். ஜீவ ஆன்மாக்கள் எண்ணிலடங்காதவை. இவை எல்லாம் அவனுக்கு அங்கங்களாக இருப்பதால், அவனை “அனந்தன்” (மைத்ராயனீய உபநிஷத்) என்று வேதம் அழைக்கிறது.

    சிருஷ்டி என்பது முக்தி அடையாத ஜீவன்கள் தங்கள் சஞ்சிதகர்மாவுக்கு ஏற்ப பஞ்ச பூதங்களால் ஆன உடலை எடுக்கச் செய்வது தான். பகவான் ஆனவன், மூட்டை மூடையாக சேர்த்து வைத்திருக்கும் சஞ்சித கர்மாவிளிருந்து ஒரு கையலவை எடுத்து, “இந்தா, இதை அனுபவி” என்று பிராப்த கர்மாவாக அவற்றை பிறக்கும் பொழுது நம்முடன் அனுப்புகிறான். “பிராப்த கர்மா” என்பதற்கு, “பலன் தருவதைத் தொடங்கியுள்ள கர்மாக்கள்” என்று பொருள். “பகவான் ஏன் சிருஷ்டிக்கிறான்?” என்று கேட்டால், அது அவனுடைய ஒரு விளையாட்டே என்பது. “அவனுடைய விளையாட்டு” என்று கூறியதால், “ஏன் அனைவரையும் இந்த கணமே முக்திக்கு அழைத்துச் செல்லக் கூடாது?” என்று கேட்பதற்கு இடமில்லை. “அப்படி பகவான் கருணையே இல்லாமல் விளையாடுவானா?” என்றால், அவனுடைய விளையாட்டின் rules and regulations-ஐப் பாரபட்சம் இல்லாமல், அனாவசிய துன்புறுத்தல் இல்லாமல், கருணையுடன் பண்ணியிருக்கிறான் என்பதே.

    ஆதி சங்கரர் கீதா பாஷ்யத்தில் ஒரு நல்ல உவமை சொல்கிறார்: குளிர்காய்வதற்காக உள்ள நெருப்புக்கு அருகில் இருந்தவன், அன்நேருப்பை விட்டு விலகிச் சென்று, “எனக்கு மட்டும் இந்த கொடிய நெருப்பு குளிரிலிருந்து விடுதலை தர மாட்டேன் என்கிறதே!” என்று கூறுவது எப்படி பொருந்தாதோ, அப்படியே பகானை நம் துன்பங்களுக்குக் குறை கூற இடமில்லை என்கிறார்.

    நமக்கு ஒரு துயரை அவன் தடுக்காமல் நடக்க விடுகிறான் என்றால், “எப்படி மருத்துவன் சிகிச்சைக்காக நம் உடலை வருத்துகிராரோ, அப்படியே கருமம் என்ற நோய்க்குக் கருணையுடன் பகவான் மருந்து தருகிறான்” என்பதே.

    மேற்கூறியதை வைத்துக் கொண்டு அந்நிய மதத்து மூடர்கள் சிலர், “கர்மாவை நம்பும் இந்துக்கள் சமூகத்திற்குத் தொண்டு செய்ய மாட்டார்கள், ஏனெனில் அவ்வாறு மற்றவர்களுக்கு உதவினால் அவர்களுடைய கர்மாவைக் குலைக்கின்றனர்” என்று தவறாக அபிப்பிராயம் கொண்டு பிரச்சாரங்களை நடத்துவர். இங்கு நாம் கூறவேண்டியது ஒன்று உள்ளது. அது பின்வருமாறு.

    வேதங்களும், சாஸ்திரங்களும், துன்பப்படுபவனுக்கு உதவி பண்ணாதே என்று சொல்லவில்லை; அப்படித் துன்பப்படுபவர்களுக்கு கண்டிப்பாக உதவி பண்ணு என்றே சொல்கிறது. கர்மாவைத் தொலைக்க, எளிதான பக்தி-சரணாகதி முறையை தொன்று தொட்டு நம் நாட்டு முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர். உதாரணமாக, ஜடாயுவும், சபரியும் பக்தியும் பகவத் கைங்கரியமும் பண்ணி வீடுபேறு பெற்றனர். ஆண்டாலும், “வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கத் தூமலர் தூவித் தொழுதால், நம் போய பிழையும் (சஞ்சித கர்மாவும்) புகுதருவான் நின்றனவும் (பிராப்த கர்மாவும்) தீயினில் தூசாகும்” என்கிறாள். ஆகையால், துன்பப்படும் ஒருவருக்கு நல்ல முறையில் உதவி பண்ணி, அவர்களை பக்தியில் ஈடுபடுத்துவதே பகவானின் உள்ளத்திற்கு உகந்தது.

    இன்னும் ஒரு கேள்வி எழும்: “ஏன் நம்மை அப்படித் தீங்கு பண்ண வைக்கிறான்? ஏன் நம்மை நல்லது மாத்திரம் பண்ண வைக்கும் புத்தியைக் கொடுக்கவில்லை?” என்றால், தீமை செய்வதற்கு free will (சங்கல்ப சக்தி) தேவை; நன்மைகளை மட்டும் செய்யவிடட்டுமே என்றால், நம்முடைய சங்கல்ப சக்தியை அபஹரித்துக் கொண்டு போனால் தான் முடியும்; அப்படிப் பண்ணினால், அறிவுள்ள ஆன்மாக்கலாகிய நமக்கும் அறிவில்லா ஜடங்களாகிய அசித்துக்கும் வித்தியாசமே இல்லை என்றாகிவிடும்.

  67. //ஆகையால், துன்பப்படும் ஒருவருக்கு நல்ல முறையில் உதவி பண்ணி, அவர்களை பக்தியில் ஈடுபடுத்துவதே பகவானின் உள்ளத்திற்கு உகந்தது.//
    evangelism இப்படியும் அறுவடை செய்கிறது ஆனால் அறுவடை செய்யப்பட்ட ஆன்மாவுக்கு judgement dayயில்தான் result தெரியும் passஆ failஆ அதாவது சொர்க்கமா நரகமா என்று!
    இந்து philosophyயில் சொர்க்கமோ நரகமோ destination கிடையாது மோட்சம்தான் பகவானையே நினைத்து பகவானிடமே சேருவது.
    ஒரு இந்துவுக்கு தன் செயலால்தான் நற்பேறு. Debit Credit நடந்துக் கொண்டே இருக்கிறது.
    மற்றவருக்கோ அவர்கள் வணங்கும் கடவுளின் நாமத்தை சொன்னாலும் பரப்பினாலுமே(by any means) நற்பேறு.
    Some take the easy way out.

  68. மதிப்பிற்குரிய உமாசங்கர் அவர்களே

    //
    சித்தாந்த‌த்தைச் சிற‌ப்பாக‌ விள‌க்கியுள்ள‌மைக்கு ந‌ன்றி. நான் முன்ன‌மே கூறிய‌து போல‌, வேதங்களையும், சித்தாந்தத்தையும் முறையே ப‌யிலாம‌ல், வேத‌ப் பிர‌மாண‌ம் காட்டி வாத‌ம் செய்தால் வ‌ரும் சித்தாந்த‌க் கோளாறை அருமையாக‌ப் ப‌ட‌ம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்க‌ள்.

    பிறத்தல், விருத்தியாதல், பிராணமடைதல், குறைதல், அழிதல், இறத்தல் என்ற‌ ஆறு விகாரங்கள் இல்லாமை சிவனின் ப‌ர‌த்துவ‌த்தைப் ப‌றைசாற்றுவ‌து என்ற‌ சித்தாந்தத்தையும் ஹரதத‌‌ரின் பஞ்ச‌ர‌த்ன‌ ஸ்லோக‌ம் கூறுகிற‌து. அதை அழகான தமிழ்ப் பதிகங்களாக‌‌திருவையாறு அண்ணாசாமி ஸ்ரௌதிக‌ள் அவ‌ர்க‌ள் மாற்றியிருக்கிறார்.
    //

    முதலில் ஆண்ட ஆறு லக்ஷணங்களை பற்றி பாப்போம் – நீங்கள் சொன்ன அந்த ஆறும் [பிறத்தல், விருத்தியாதல், பிராணமடைதல், குறைதல், அழிதல், இறத்தல்] வேதத்தில் அப்படியே உள்ளது – ஆனால் இவை யாவும் ஆன்மாவின் லக்ஷனமாக சொல்லப்பட்டுள்ளன –

    ” நித்யச்ய உக்தா சரிரினஹா அனாஷினோ அப்ப்ரமேயஸ்ய ” – கீதை [சரிரீ எனப்படும் ஆத்மாவானது நித்தியமானது அழிக்கமுடியாதது, அசேதனத்திலிருந்து வேறுபட்டு அனுபவிப்பனாக உள்ளது]

    சர்வம் இடம் ததம் வினாஷாம் அவ்யயஸ் யாச்ய ந கச்சித் கர்த்தும் அர்ஹதி – இங்கு உள்ள எந்த ஆத்மாவையும் எந்தப் பொருளும் அழிக்க முடியாது
    [ந கச்சித் கர்த்தும்] – ஏன்டா ஒரு பொருளும் அழிக்க முடியாது, நித்யஸ்ய – என்றுமே நிலையானது, அனாஷினோ – அழிவே இல்லாதது, அப்ரமேயஸ்ய – அழியக்கூடிய பொருளில் இருந்து வேறுபட்டு உள்ளது

    இப்படி கூறியதன் மூலம் ஆத்மாவிற்கு இந்த ஆறு லக்ஷணங்கள் பொருந்தும் என்பது திண்ணம்

    இப்போ விஷயத்திற்கு வருவோம் – நீங்கள் சொன்ன லக்ஷணத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்த விஷயங்களை எழுதிகிறேன் – யார் பெரியவர் என்ற வாதம் என்று இதை கொள்ளவேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

    ஆத்மாவிற்கு இந்த ஆறு லக்ஷணம் இருக்கே – ஆத்மா பிறப்பு எடுக்கிறதே – நீங்கள் கூறிய சித்தாந்த வேதாந்த கருத்து அடிபடுகிறதே

    இந்த ஆறு லக்ஷணங்கள் கொண்டவர் சிவா பெருமான் என்று கூறுவதன் மூலம் சிவா பெருமான் ஒரு ஜீவன் என்று பொருள் வருமே – நீங்கள் கூறிய சித்தாந்த வேதாந்த கருத்து அடிபடுகிறதே

    சர்வம் இதம் ததம் என்று கூறியதன் மூலம் ஆத்மாவும் எங்கும் பரவக் கூடியது என்று ஆகுமே – நீங்கள் சொன்ன சிவ பரத்வத்தை இதன் மூலம் கண்டால் வ்ருத்தி ஏற்படுகிறதே

    பரமாத்வாவனவனுக்கு இந்த லக்ஷணங்கள் மட்டும் பொருந்தாது – பரமாத்மா என்று கூறிய பிறகு, அவன் வளர்வதில்லை, அழிவதில்லை என்றெல்லாம் கூறுவது “tautology” ஆகும் – இதற்கும் ஒரு படி மேல் சென்று பரமாத்மா அநோரநியனா என்று ஆத்மாவில் உள்ளும் வியாபிக்கும் தன்மை உள்ளவன் என்று கூறி அவனது உண்மையான பரத்வத்தை நிலை நாடியாயிர்றே

    இப்படி சாஸ்திர ரூபமாகவும் தர்க்க ரூபமாகவும் நிருபணம் ஆயின பின்னும் பரமாத்மா பிறவி எடுக்கக் கூடாது என்று நாம் கூறுவது சரியானது அல்ல
    எனவே வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றி கூறுவதே அன்றி நீங்கள் எழுதியதை போல் மாறுபடவில்லை

    பிறவி எடுக்கும் ஆத்மாவே மாறது என்பது இதன் மூலம் அறிகிறோம் – இவ்வண்ணம் இருக்க பரமாத்மா கர்மவசப்படாமல் சங்கல்பத்தாலே பிறவி எடுத்தால் பரமாத்மா குணமும் லக்ஷங்களும் மாறவே போவதில்லை

    உங்களது அடுத்த கூற்றான – “சும்மா வலை தளத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறோம் என்பது”

    அப்ரமேயஸ்ய என்பதற்கு நீங்கள் வலைத்தளத்தில் எவ்வளவு தேடினாலும் “அசேதனத்திலிருந்து வேறுபட்டு அணைபவிப்பனாக உள்ளது” என்ற விளக்கம் இருக்காது, அறிய முடியாதது என்றே விளக்கம் இருக்கும். அறியமுடியாதது என்று கொள்ளாமல் ஆத்மா தானாகவே விளங்கவள்ளது என்ற வேத வாகியதிர்க்கு மாறாமல் அசேதனத்திலிருந்து வேறுபட்டு அனுபவிப்பனாக உள்ளது என்ற வண்ணம் அர்த்தம் கூறியது குருவே.

    இரண்டு விஷயம் சமர்பிக்க விரும்புகிறேன்

    என்னை அறிவிலி என்று கூற உங்களுக்கு உரிமை உண்டு அதற்க்கான தகுதியும் எனக்கு உண்டு. முறைப்படி கற்கவில்லை என்று கூறினால் இங்கு பல பேருக்கு இருக்கும் குருவையும் சேர்த்து தவறு கூறுவது போல் ஆகும் – இது வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்

    உண்மையிலேயே முறைப்படி பயின்றார்கள இல்லையா என்று நாம் அறிய வல்லோம் – அப்படி இருக்க நாம் மற்றவர் மீது இந்த குறையை சுமத்துவதை தவிர்க்கலாம்

  69. // துன்பப்படும் ஒருவருக்கு நல்ல முறையில் உதவி பண்ணி, அவர்களை பக்தியில் ஈடுபடுத்துவதே பகவானின் உள்ளத்திற்கு உகந்தது//

    ஸ்ரீ கந்தர்வன், நல்ல விஷயம்.

    ஸ்ரீ. சாரங், திருச்சிக்காரர் கேட்டதற்கு நீங்கள் சொல்லியது கச்சிதமான பதிலாகத் தெரியவில்லையே. முண்டக உபநிஷதம் படித்திருக்கிறீர்களா?

    (edited and published)

  70. திரு. க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

    //நமக்கு ஒரு துயரை அவன் தடுக்காமல் நடக்க விடுகிறான் என்றால், “எப்படி மருத்துவன் சிகிச்சைக்காக நம் உடலை வருத்துகிராரோ, அப்படியே கருமம் என்ற நோய்க்குக் கருணையுடன் பகவான் மருந்து தருகிறான்” என்பதே. //

    //வேதங்களும், சாஸ்திரங்களும், துன்பப்படுபவனுக்கு உதவி பண்ணாதே என்று சொல்லவில்லை; அப்படித் துன்பப்படுபவர்களுக்கு கண்டிப்பாக உதவி பண்ணு என்றே சொல்கிறது.//

    இதெல்லாம் ச‌ரி. ஆனால் என்னுடைய‌ கேள்விக்கு இவை எல்லாம் ப‌திலாகுமா?

    என்னுடைய‌ கேள்வி மிக‌வும் எளிமையான‌து. துன்ப‌ம் நிறைந்த‌ வாழ‌க்கையில் நான் அல்ல‌ல் ப‌டும் வ‌ண்ணம் , அப்ப‌டிப் ப‌ட்ட‌ நிலையிலே ந‌ம்மை எத‌ற்க்கு வைக்க‌ வேண்டும், அப்ப‌டிப்ப‌ட்ட‌
    நிலையிலே ந‌ம்மைப் “ப‌டைத்த‌வ‌ர்” தான், “க‌ட‌வுள்” என்றால் அவ‌ரை எப்ப‌டி ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ண‌ங்க‌ முடியும்? என்னை நெருப்புக்குள்ளே போட்டு விட்டு, ஏன் நெருப்பிலெ இருக்கிறாய் , எழுந்து ஓடு என்று சொல்வ‌து ஏன் என்றுதான் கேட்கிறேன்!

  71. ////armchaircritic
    3 February 2010 at 2:10 pm
    //why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.//
    Let us search for the answer. But I sincerely believe and accept that I don’t have the means to understand the meaning of HIS ways ////

    I appreciate this reply. Atleast this reply is honest and striaght forward!

  72. திருச்சிக்காரன் அவர்களே,

    உங்கள் கேள்விக்கு பதில் கூறும் முன் ஒரே ஒரு விஷயம்: கடவுளை நம் வேதங்கள் ஆன்மாக்களைப் “படைத்தவராகச்” சொன்னதே இல்லை. ஆன்மாக்கள் நித்தியம். அதாவது, “நீங்கள்”, “நான்” என்ற பதத்திற்குப் பொருளாகும் ஆன்மாக்கள் (அதாவது முறையே நானும் நீங்களும்) “இல்லை” என்று சொல்லும்படியான ஒரு கணமும் இருந்ததில்லை. ஆங்கிலத்தில் கூறுகிறேன்: There was never a time when you and I did not exist. In other words, for any time “T” that you pick in the past (say, T = 500,000,000 BC or before), we were all there at that time “T”. இதை கீதையின் இரண்டாம் அத்தியாத்தில் கண்ணன் தெளிவாக விளக்கியுள்ளான். கடவுள் பண்ணும் சிருஷ்டியானது, “நான்”, “நீங்கள்” என்று சொல்லக்கூடிய ஆன்மாக்களுக்கு கரும பலனுக்கு ஏற்ப அந்த அந்த உடல்களை தருகிறான்.

    நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னுடைய பதில்: நாமாகவே (முன்ஜென்ம கருமத்தால்) தீயில் குதித்துவிட்டு, பகவானிடம் போய் “என்னை ஏன் தீயில் தள்ளி விட்டாய்?” என்று கேட்பதில் நியாயமே இல்லை. எப்படி ஒரு குழந்தை நெருப்போடு விளையாடிவிட்டுக் கையைச் சுட்டுக் கொண்டதற்கு, தாயை சினந்து கொள்ளுவது அசட்டுத் தனமோ, அப்படியே.

    இன்னொரு விஷயமும் உண்டு. பகவான் தன் கிருபையாலே, அறியாமை என்னும் இருளில் தவிக்கும் நம் பிறவிப் பிணியை விரைவில் தீர்ப்பதற்காக சில சிகிச்சைகளைச் செய்கிறான். அப்பொழுது சில துன்பங்கள் வாழ்க்கையில் வந்து கொண்டு தான் இருக்கும். அப்படி வந்தாலும், “நம் நலனுக்கே” என்று கருதி, நம் கடமைகளை விட்டுவிடாமல் செய்து கொண்டு, பக்தியும் கீர்த்தனமும் பண்ணி, திருப்தியாக இருப்பதே வைராக்யத்தின் உச்சிக் கட்டம். இதன் காரணமாகவே பரம வைராக்ய நிஷ்டர்கள் தேவை இல்லாமல் பகவானிடம் இது அது கேட்டு வேண்டுதல், நேர்த்தி, ராசிபலன் போன்ற வழிகளில் செல்வதில்லை.

  73. திருச்சிகாரர் அவர்களே

    //
    என்னுடைய‌ கேள்வி மிக‌வும் எளிமையான‌து. துன்ப‌ம் நிறைந்த‌ வாழ‌க்கையில் நான் அல்ல‌ல் ப‌டும் வ‌ண்ணம் , அப்ப‌டிப் ப‌ட்ட‌ நிலையிலே ந‌ம்மை எத‌ற்க்கு வைக்க‌ வேண்டும், அப்ப‌டிப்ப‌ட்ட‌
    நிலையிலே ந‌ம்மைப் “ப‌டைத்த‌வ‌ர்” தான், “க‌ட‌வுள்” என்றால் அவ‌ரை எப்ப‌டி ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ண‌ங்க‌ முடியும்? என்னை நெருப்புக்குள்ளே போட்டு விட்டு, ஏன் நெருப்பிலெ இருக்கிறாய் , எழுந்து ஓடு என்று சொல்வ‌து ஏன் என்றுதான் கேட்கிறேன்!
    //

    நம்முடைய இந்த என்னமானதே தவறு – நம்மை ஒன்றும் இன்னல்களில் பகவான் வைக்க வில்லை – இன்னல் படும் போது நாம் செய்த காரியத்திற்கு பகவன் மீது பழி போடுகிறோம் – விதி என்பது அவன் நமக்கு விதித்ததில்லை – நாமே நமக்கு விதிதுக்கொண்டது அப்படி இல்லையேல் விதியை (நன்) மதியால் வெல்லலாம் என்பது எப்படி சாத்தியமாகும் – மேலும் உங்களின் கேள்விக்கு விடையை என்னுடைய பதிலில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் (அது வெறும் சாஸ்த்ரா பூர்வமானது) – அதை நம்ப வேண்டும் என்றால் ஆத்மா நித்யம் என்பதை நம்பி ஆகா வேண்டி உள்ளது. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை வேறு பதில் இருக்கிறதா என்றால் இருக்கிறது – ஆதி சங்கர பகவத் பாதல் சூன்ய வாதத்தை நிராகரிக்கும் பொருட்டு [ந அசதோ வித்யதே பாவ என்ற கீதைக்கு ] அருமையான தர்க்கம் சார்ந்த வாதத்தை வைக்கிறார் – அதை கொஞ்சம் மாற்றி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாக கொள்ளலாம் – வேண்டும் என்றால் நாம் அதை பாப்போம் [கொஞ்சம் நீளமான வாதம் ஒரு பெரிய கட்டுரை அளவு வரும் – எனக்கு அது புரிவதற்கே சிரமமாக இருந்தது – இப்படி புரிந்ததை எழுதுவதை பாரி கேட்கவே வேண்டாம் – சிரமம் தான் ]

  74. Sarang அவர்களே! வணக்கம்!!

    //
    கொஞ்சம் நீளமான வாதம் ஒரு பெரிய கட்டுரை அளவு வரும் – எனக்கு அது புரிவதற்கே சிரமமாக இருந்தது – இப்படி புரிந்ததை எழுதுவதை பாரி கேட்கவே வேண்டாம் – சிரமம் தான்
    //

    கண்டிப்பாக எழுதுங்கள். அனைவர்க்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். Bring it on… You have one person to count as audience :-)) :-))

  75. திரு. க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

    //உங்கள் கேள்விக்கு பதில் கூறும் முன் ஒரே ஒரு விஷயம்: கடவுளை நம் வேதங்கள் ஆன்மாக்களைப் “படைத்தவராகச்” சொன்னதே இல்லை. ஆன்மாக்கள் நித்தியம். அதாவது, “நீங்கள்”, “நான்” என்ற பதத்திற்குப் பொருளாகும் ஆன்மாக்கள் (அதாவது முறையே நானும் நீங்களும்) “இல்லை” என்று சொல்லும்படியான ஒரு கணமும் இருந்ததில்லை. //

    படைத்தல் என்று ஒன்று இல்லை, ஆத்மா நித்தியமாக இருக்கிறது, எப்போதுமே இருக்கிறது என்கிற கான்செப்டை முன்
    வைக்கிறீர்கள்.

    சரி அப்படி நித்தியமாக , எப்போதும் இருக்கிற ஆத்மாவை பல துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது யார், தள்ளியது ஏன்?

    துன்பத்திலே சிக்கித் தவிக்கும் உயிர்கள் சார்பாக, நாங்கள் நியாயம் கேட்கிறோம்; நித்தியமாக இருக்கும் எங்களை இவ்வளவு துன்பத்திலே தவிக்கும் நிலைக்கு தள்ளியது யார் என்று சொல்லுங்கள் என நியாயம் கேட்கிறேன். இந்தக் கேள்வியில் நியாயம் இல்லையா?

    //நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னுடைய பதில்: நாமாகவே (முன்ஜென்ம கருமத்தால்) தீயில் குதித்துவிட்டு, பகவானிடம் போய் “என்னை ஏன் தீயில் தள்ளி விட்டாய்?” என்று கேட்பதில் நியாயமே இல்லை.

    Let me repeat my original question

    //
    Now let us assume that the sufferings in a birth is due to the mistakes or sins in the previous birth, in that sense you have a better logic defending the “God”.
    Now let me ask you one more question, why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.
    Can you explain this as well?
    //

    முன் ஜென்ம கருமம் அதனால் பின் ஜென்மத்தில் கஷ்டம் வருகிறது என்கிறது சரி. முதல் ஜென்மத்தை உருவாக்கியது யார்? முதலில் ஒரு ஜென்மத்தை நாங்கள் எடுக்கும் படி செய்ததால் தானே அதுல நல்லது, கெட்டது…. அடுத்த ஜென்மம் அதுல இன்பம் , துன்பம்…. இப்படி போய் கிட்டே இருப்பதாக சொல்கிறீர்கள்.

    முதல் ஜென்மத்தை எங்களை எடுக்க வைத்தது யார்? இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் தானே, இல்லை நாமாக போய் கடையில் சாமான் வாங்குவது போல, நித்தியமாக உள்ள ஆத்மாக்கள் தாங்களாக தங்களுக்கு ஜென்மம் வேண்டும் என்று கேட்டு முதல் ஜென்மத்தை எடுத்துக் கொண்டாதா?

    இப்படி நித்தியமாக சொல்லப் படும் ஆத்மா, நித்யமாக இருந்தது போல எங்களுக்குத் தெரியவில்லையே….! நினைவு தெரிந்த நாள் முதல்…. என்று எல்லோரும் சொல்கிறார்களே அப்படி நினைவு தெரிந்த நாளுக்கு முன்னாள் நாங்கள் ஆத்மாவைக் இருந்தது உண்மையானால், அந்த ஆத்மா நினைவை எங்களுக்கு வரவிடமால் மறைத்தது, மறக்கும்படி செய்தது யார்? மாயை என்று சொல்லப் படும் கான்செப்ட் மறைக்கிறதா ? அந்த மாயையை உருவாக்கியது யார்? அதுவும் இந்தக் கடவுள் என்று தானே சொல்லப் படுகிறது ?

    அப்படிப்பட்டவரை, துன்பத்தில் தள்ளியவரை – எப்படி துன்பத்தில் தவிப்பவன் எப்படி வணங்க இயலும்?

    இப்படி எல்லாவற்றையும் செய்து விட்டு அவரு ரொம்ப நல்லவரு, அவரைப் போய் குறை சொல்வது நியாயமா என்று கேட்கிறீர்களே!

    My Original question still remains unanswered:

    //
    Now let us assume that the sufferings in a birth is due to the mistakes or sins in the previous birth, in that sense you have a better logic defending the “God”.
    Now let me ask you one more question, why the God had , first of all gives births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.
    Can you explain this as well?
    //

  76. திரு. சாரங் அவ‌ர்க‌ளே,

    நான் கேட்பது ஒன்று, நீங்கள் சொல்வது வேறொன்று.

    முன் ஜென்ம வினை என்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.

    இந்த “ஜென்மம்” என்பதையே எங்களுக்கு குடுத்து ஏன் என்றுதான் கேட்கிறேன்.

    Mr. armchaircritic நான் கேட்ட கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டார்.
    திரு. கார்கில் ஜெய் யும் புரிந்து கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன். திரு. கந்தர்வனாவது ஒரு வகையாக விளக்கம் தர முயற்ச்சி செய்கிறார். நீங்கள் எதை எதையோ சொல்கிறீர்கள்.

    உங்களுக்கு என்னுடைய கேள்வியை விளங்க வைக்க முடியாத ஜென்மமாக நான் இருக்கிறேன்.

  77. திருசிகாரர் அவர்களே

    நீங்கள் கேட்ட இதே கேள்வியை நன்கு புரிந்து கொண்டேன் – புரியும் படி பதில் எழுதினேனா என்று எனக்கு தெரியாது

    //
    முன் ஜென்ம வினை என்பதை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.

    இந்த “ஜென்மம்” என்பதையே எங்களுக்கு குடுத்து ஏன் என்றுதான் கேட்கிறேன்
    //

    முன் ஜன்ம வினை என்று நான் சொல்லவில்லை – எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இல்லை [அது வழக்கில் பேசுவதற்குத்தான் ஹேதுவாக இருக்கும், உண்மையில் அப்படி இல்லை ]

    இந்த முன் ஜன்ம வினை என்பதெல்லாம் பகவான் குடுததுமில்லை – இந்த ஜன்மம் என்பதும் பகவான் சிரமேற்கொண்டு கொடுப்பதுமில்லை – ஆத்மா நித்யம் என்று கூறியபின்னர் ஜன்மம் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பரிமாணமே, ஜென்மத்தை ஏற்படுத்திகொல்வதே நாம் தான் – எப்படி குடிகாரனான ஒருவன் குடல் வேகுவதற்கு தானே காரனமாகிரனோ அது போலவே நமது ஜன்மத்துக்கும் நாமே முக்கிய காரணமாகிறோம். ஆத்மா ஞானமயமானது என்கிறோம், ஆத்மா வல்லமை கொண்டது என்கிறோம் இப்படி இருக்க இந்த ஜன்மம் வராமால் அதனால் பார்த்துக்கொள்ள முடியாதா என்றால் முடியும் என்று தான் ஆகிறது

    கடுவுளாக பார்த்து இந்தா பத்து ஜன்மம் பிடி கழ்டப்படு, கூத்தாடு, இழ்டப்படி பேசு என்றெல்லாம் செய்வதில்லை – நாமே காரணமாகிறோம், காரியம் விளைகிறது அனுபவிக்கிறோம் அவ்வளவு தான்

    ஒன்றாய் இருந்த கடவுள் பலவானான் என்றால், ஒன்றாய் விளங்கும் பலவானான் என்று கொள்ள வேண்டும் – இப்படி இருக்கயஈல் வேறுபாடு என்பது உண்டானதற்கு கடவுள் முக்கிய காரணம் இல்லை, வேறுபாட்டிற்கு நாமே காரணம் – இந்த வேறுபாடு தான் [நல்ல செயல் அல்லது தீய செயல், அல்லது இவ்விரண்டுமே இல்லாத தன்மை] இதற்கேற்ப காரியம் விளைகிறது [effect]. அந்த காரியத்தை நீங்கள் ஜன்மம் என்றும், வினை என்றும் கூறினால் என்ன செய்வது

    ஒருவன் எப்படி பாலானாக இருக்கிறான், பிறகு வாளிபனாகம் பொது பாலானாக இருந்தபோது செய்த பலவற்றை மறக்கிறான் [12th சரியாக படிக்கவில்லை, சரியான மேற்படிப்பு படிக்க முடியவில்லை, வேலை சரியாக கிடைக்கவில்லை – என்ன செய்கிறான் தானே அதற்க்கு காரன் என்பதை மறந்து – என்ன படிச்சு என்ன பிரயோஜனம் வேலையே கிடைக்கல, இந்தியாவுல என்னதான் பண்றது என்று சலித்து கொள்கிறான் 🙂 ]. இப்படி விரக்தி ஏற்படுகிறது, கோவம் வருகிறது, தவறு செய்கிறான், தவறு வளர்கிறது, விரக்தியை மறைக்க குடிக்கிறான் . பிறகு வயோதிகத்தில் குடல் வேந்துபோகிறது – இதக்கு தனது குயட்ப்பழகத்தை எவ்வளவு பேர் காரணம் சொல்கிறார்கள் – ஐயோ குடல் வந்ததே சாப்பாடு சுத்தம் இல்லை, இந்தியாவிலே தண்ணி சுத்தம் இல்லை, காற்று சுத்தம் இல்லை ]

    இதில் சிலர் தனது தவறை உணர்ந்து திருண்டுகிரார்கள் – இளமையில் கழ்டப்பட்டு 12th இல் சரியாக படிக்கததர்க்கு ஈடு கட்டுகிறார்கள், குடிபழக்கம் தவேரன் உணர்த்து அதை விட்டு விட்டு மருந்து எடுத்துகொள்கிறார்கள் முதுமையில் நிம்மதியாக இருக்கிறார்கள்

    இது போலத்தான் ஆன்மாவின் பயணமும் – பகவானே எல்லாத்துக்கும் காரணம் என்பது உண்மை – பகவான் சாதாரண காரணம் தான் [அதாவது நான் இந்த பதில் எழுதுகிறேன் அதற்க்கு நான் காரணம், நான் வர காரணம் எனது பெற்றோர், அவர்கள் இந்த பதிலுக்கு காரணம் அவார்களா மாட்டார்கள்] அது போலதான் ஈஸ்வரன் இல்லாமல் எதுவும் இல்லை அனால் அவனை குறை கூறுவது நமது அறியாமையின் எல்லை

    நாம் பல இடத்தில் ஜன்மாந்திரப் பாவம், பாவ மூட்டை, பகவான் தண்டனை தருகிறான் என்றெல்லாம் படிக்கிறோம் – இதெயெல்லாம் சற்றே தள்ளி வைத்துவிட்டு கொஞ்சமாக காரண காரிய லக்ஷ்ணத்தின் படி {cause and effect therory] “logical” ஆகா யோசித்தால் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் – பதில் கிடைக்கும் என்று நம்பினால் தான் கிடைக்கும் – ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம்

    ஏதேதோ எழுதி உங்கள் நேரத்தை வீனடித்திருந்தால் மன்னிக்கவும் – எனக்கு எழுடத்தேரின்தது அவ்வளவே

  78. நண்பர் திருச்சிகரரே
    //
    படைத்தல் என்று ஒன்று இல்லை, ஆத்மா நித்தியமாக இருக்கிறது, எப்போதுமே இருக்கிறது என்கிற கான்செப்டை முன்
    வைக்கிறீர்கள்.

    சரி அப்படி நித்தியமாக , எப்போதும் இருக்கிற ஆத்மாவை பல துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது யார், தள்ளியது ஏன்?
    //

    யாரும் வலியவந்து தள்ளவில்லை – தானே தன்னை தள்ளிக்கொண்டதனால் ஏற்படும் விளைவே. ஆத்மா நித்யமானது என்று மட்டும் சொல்லவில்லை அனஷினோ என்றும் சேர்த்தே சொல்லபடுகிறது

    “நித்யஹ உக்தா சரிரின அனஷினஹா அப்ரமேயஹா” என்று சேதுதான் கண்ணன் சொல்கிறான்

    இங்கு அனஷினோ என்பதற்கு வேறொன்று அழிவை ஏற்படுத்தவல்லாதது என்று பொருள், அப்ரமேயஹா என்பதற்கு தானே அனுபவிப்பவனாக உள்ளது என்று பொருள் – இப்படி நித்யமாவும், வேறொன்றால் வினாஷம் இல்லாததுமான ஆத்மா தானே அனுபவிக்கும் தன்மையையும் கொண்டமையால் – தானே காரணமாகி தானே பலனை அனுபவிக்கிறது

    ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது – ஆருயிரான ஒன்றை யாரவது சரமம் கொடுத்துது வேடிக்கை பார்பார்களா மாட்டார்கள் அதனால் பகவான் நமக்கு தானாக வந்து துன்பம் தருவதில்லை என்பது உண்மை

    //
    துன்பத்திலே சிக்கித் தவிக்கும் உயிர்கள் சார்பாக, நாங்கள் நியாயம் கேட்கிறோம்; நித்தியமாக இருக்கும் எங்களை இவ்வளவு துன்பத்திலே தவிக்கும் நிலைக்கு தள்ளியது யார் என்று சொல்லுங்கள் என நியாயம் கேட்கிறேன். இந்தக் கேள்வியில் நியாயம் இல்லையா?

    //
    நமது மனசை பார்த்து தான் நாம் ஞாயம் கேட்க வேண்டும் -ஏன் இப்படி தள்ளினாய் என்று – யோகிகள் உணவு ஏதும் இல்லாமல், வெயில் மழை என்ற உணர்வு ல்லாமல் [குளிர் சுடு என்ற கஷ்டங்கள் இல்லாமல்] பல ஆண்டு காலம் எப்படி யோகா நிலையில் இருக்கிறார்கள் – அவகளுக்கு பசி, கண் தெரியாமை, உடல் நோவு என்பது ஏதும் இல்லையே

    கடைசியாக – உடல் வலி உள்ளவன் தூங்கிவிடுகிறான் – பகவான் கொடுத்த துன்பம் என்றால் தூங்கும் பொழுதும் வலிக்க வேண்டுமே – அப்படி தூங்கும் பொது வலி தெரியவில்லையே [வலி தெரிந்தால் தூங்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்] – குருடனாய் இருப்பவனுக்கு தூங்கும் பொது நன்கு கண் தெரிகிறதே – கண் தெரியும் ஒருவனுக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பொது கலர் கலராக கனவு வருகிறது, இருட்டில் தூங்கும் பொது வெளிச்சமாக தேவதை தெரிகிறாள் – இதெல்லாம் எப்படி

    நாம் தூங்கும் போது ஞாயம் கேட்பதில்லையே – விழித்துகொண்டிருகும் பொது தானே கேட்கிறோம் -சற்றே யோசியுங்கள், உங்களுக்க் பதில் நிச்சயம் கிடைக்கும்

  79. திருச்சிக் காரர் அவர்களே,

    //
    முதல் ஜென்மத்தை உருவாக்கியது யார்? முதலில் ஒரு ஜென்மத்தை நாங்கள் எடுக்கும் படி செய்ததால் தானே அதுல நல்லது,
    //

    //
    முதல் ஜென்மத்தை எங்களை எடுக்க வைத்தது யார்? இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் தானே, இல்லை நாமாக போய் கடையில் சாமான் வாங்குவது போல, நித்தியமாக உள்ள ஆத்மாக்கள் தாங்களாக தங்களுக்கு ஜென்மம் வேண்டும் என்று கேட்டு முதல் ஜென்மத்தை எடுத்துக் கொண்டாதா?
    //

    ‘முதல் ஜன்மம்’ என்று ஒன்று கிடையாது. எப்படி ஆன்மாக்கள் நித்தியமா, அப்படியே ஜென்மங்களும் அநாதி. அதாவது, எந்த ஒரு ஜென்மத்தை எடுத்துப் பார்த்தாலும், அதற்கு முன்பு ஜென்மங்கள் உண்டு. ஆங்கிலத்தில் ad infinitum என்று சொல்லப்படும்.

    //
    இப்படி நித்தியமாக சொல்லப் படும் ஆத்மா, நித்யமாக இருந்தது போல எங்களுக்குத் தெரியவில்லையே….! நினைவு தெரிந்த நாள் முதல்…. என்று எல்லோரும் சொல்கிறார்களே அப்படி நினைவு தெரிந்த நாளுக்கு முன்னாள் நாங்கள் ஆத்மாவைக் இருந்தது உண்மையானால், அந்த ஆத்மா நினைவை எங்களுக்கு வரவிடமால் மறைத்தது, மறக்கும்படி செய்தது யார்?
    //

    கடவுள் தான் நம் பிறப்பின் பொழுது (அதாவது during delivery) முன்ஜென ஞாபகத்தை மறக்கும்படி செய்துள்ளார். இல்லையெனில், நமது முன் ஜென்ம பாபங்கள் ஞாபகம் வந்தால், அனைவரும் ‘இப்படிச் செய்தேனே’ என்று சதா துக்கத்துடன் இருப்பார்கள்… வாழ்க்கை நடக்காது.

    மீண்டும் சொல்கிறேன்: ஜென்மத்தை யாரும் தரவில்லை; நாம் எப்பொழுதும் ஜன்மத்தில் தான் இருந்து வந்துள்ளோம். ஜன்மத்தில் நாம் தவிப்பதற்கு கடவுள் காரணம் இல்லை, முன்ஜென்ம கர்மா தான். முதல் ஜன்மம் என்று ஒன்று கிடையவே கிடையாது.

  80. க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளே,

    //கடவுள் தான் நம் பிறப்பின் பொழுது (அதாவது during delivery) முன்ஜென ஞாபகத்தை மறக்கும்படி செய்துள்ளார். இல்லையெனில், நமது முன் ஜென்ம பாபங்கள் ஞாபகம் வந்தால், அனைவரும் ‘இப்படிச் செய்தேனே’ என்று சதா துக்கத்துடன் இருப்பார்கள்… வாழ்க்கை நடக்காது.

    மீண்டும் சொல்கிறேன்: ஜென்மத்தை யாரும் தரவில்லை; நாம் எப்பொழுதும் ஜன்மத்தில் தான் இருந்து வந்துள்ளோம். ஜன்மத்தில் நாம் தவிப்பதற்கு கடவுள் காரணம் இல்லை, முன்ஜென்ம கர்மா தான். முதல் ஜன்மம் என்று ஒன்று கிடையவே கிடையாது//

    உங்களது கருத்துப் படி நாங்கள் எல்லோரும் ஆரம்பயில்லாமல் ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

    முன் ஜென்மத்தின் நினைவும் மறைக்கப் படுகிறது. காரணம் கேட்டால் பழைய துன்பங்களை நினைத்து சதா துக்கத்துடன் இருப்போம், அதனால் நமக்கு நல்லது செய்ய ரொம்ப நல்லவரான கடவுள் நம்ப பழைய ஜென்ம நினைவுகளை மறக்க வைத்து விடுகிறார், என்பது உங்கள் கருத்து.

    முன் ஜன்ம துக்கங்கள் நினைவுக்கு வந்தால் அந்த அனுபவத்தில் நாம் நம்மை திருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது அல்லவா? Leraning from experience என்று சொல்கிறோம் அல்லவா?

    எப்படியோ உங்கள் கருத்துப் படி நாம் ஆரம்பமேயில்லாமல் பல ஜென்மங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறோம், ஒவ்வொரு ஜென்மத்திலும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம், அதற்கு காரணம் நம் முன் வினை தான்.

    ஆனால் இந்த கடவுள் என்று சொல்லப் படுபவர் மட்டும், அவருடைய விருப்பம் போல , அவருக்கு விருப்பமான நேரத்தில் மட்டும் ஜன்மம் (அதாவது அவதாரம் ) எடுத்துக் கொள்வார்.

    ஆனால் நாங்கள் எல்லோரும் எங்கள் விருப்பம் போல , விருப்பமான நேரத்தில் மட்டும் ஜென்மம் எடுக்கும் சுதந்திரமோ, வலிமையோ இல்லாத நிலையில் இருக்கிறோம் .

    இப்படி தான் மட்டும் சுதந்திரமான நிலைமையில் இருந்து கொண்டு எங்களை எல்லாம் சுதந்திரம் இல்லாத அடிமை நிலையில் வைத்தவரை நாங்கள் எப்படி மரியாதை செய்யவோ, பக்தி செய்யவோ முடியும்?

    உண்மையில் அப்படிப் பட்ட நிலையில் எங்களை வைத்த “கடவுள்” மீது கோவம் தானே வரும்! கோவம் வருவது இயற்க்கை தானே, நியாயம் தானே?

  81. திரு. சாரங் அவர்க‌ளே,

    உங்க‌ளுக்கு உங்க‌ளின் ந‌ம்பிக்கையை எப்ப‌டியாவ‌து பிற‌ரை ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ வேண்டும் என்கிற‌ துடிப்பும், ஆர்வ‌மும் இருக்கிர‌து‍ – அது ம‌ட்டும் தான் இருக்கிற‌து.

    நான் கேட்கும் கேள்வியை த‌ய‌வு செய்து புரிந்து கொள்ளுங்க‌ள். அந்தக் கேள்விக்கு சரியான பதில் இருந்தால் தரவும். அதை விட்டு விட்டு ந‌ம்புங்க‌ள், ந‌ம்புங்க‌ள் என்கிறீர்க‌ள்.

    //ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது – ஆருயிரான ஒன்றை யாரவது சரமம் கொடுத்துது வேடிக்கை பார்பார்களா மாட்டார்கள் அதனால் பகவான் நமக்கு தானாக வந்து துன்பம் தருவதில்லை என்பது உண்மை//

    நான் எதையுமே ஆதாரம் இல்லாமலோ, அல்லது நானே நேரில் கண்டு உணராமலோ வெறுமனே நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மாத்திரமே. எல்லா நம்பிக்கையும் உண்மையாகத் தான் இருக்க முடியும் என்று சொல்ல இயலாது.

    நேரிலே பார்த்தாலோ, உணர்ந்தாலோ , அனுபவித்தாலோ அதை வைத்து தான் முடிவுக்கு வர முடியுமே தவிர வெறும் நம்பிக்கையை வைத்து நான் முடிவுக்கு வர இயலாது. மற்றபடி வாக்குவாதங்கள் ஒரு விடயத்தை அனுமானிக்க உதவும் – அது வெறும் அனுமானம் மாத்திரமே.

    ஆன்மா அழியாதது என்கிற ஒரு கான்செப்டை முன் வைத்து armchaircritic அவர்களும், கந்தர்வன் அவர்களும் எனக்கு பதில் அளிக்க முயற்ச்சி செய்கின்றனர். அந்த கான்செப்டின் அடிப்படையில் கூட – இப்படி ஆன்மாவை பல்வேறு ஜென்மங்களை தொடர்ச்சியாக எடுக்கும் படியான நிலையில் வைத்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது, கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்ட் ஆக இருக்கிறதே – என்கிற கேள்வியை தெளிவாக முன் வைக்கிறோம்.

    //கடைசியாக – உடல் வலி உள்ளவன் தூங்கிவிடுகிறான் – பகவான் கொடுத்த துன்பம் என்றால் தூங்கும் பொழுதும் வலிக்க வேண்டுமே – அப்படி தூங்கும் பொது வலி தெரியவில்லையே [வலி தெரிந்தால் தூங்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்] – குருடனாய் இருப்பவனுக்கு தூங்கும் பொது நன்கு கண் தெரிகிறதே – கண் தெரியும் ஒருவனுக்கு கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் பொது கலர் கலராக கனவு வருகிறது, இருட்டில் தூங்கும் பொது வெளிச்சமாக தேவதை தெரிகிறாள் – இதெல்லாம் எப்படி

    நாம் தூங்கும் போது ஞாயம் கேட்பதில்லையே – விழித்துகொண்டிருகும் பொது தானே கேட்கிறோம் -சற்றே யோசியுங்கள், உங்களுக்க் பதில் நிச்சயம் கிடைக்கும்//

    தூங்குகிற நேரத்திலே நம்மை மறக்கிறோம். எல்லாவற்றையும் மறக்கிறோம். அதனால் துன்பங்கள் சிறிது காலத்திற்கு, சில மணி நேரத்திற்கு தெரியாமல் இருக்கிறது. திரும்பி விழிப்பு நிலை வந்தவுடன் மீண்டும் துன்ப உணர்வு வருகிறதா இல்லையா?

    தந்தையார் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. உடனே விமானம் மூலம் வூருக்கு விரைகிறோம். விமானத்தில் சிறிது நேரம் தூங்கி விடுகிறோம். அப்போது தந்தை இறந்தது நினைவில் இல்லை. விமானம் தரை இறங்கும் போது மீண்டும் விழிப்பு வருகிறது. அப்போது துன்பம் இல்லாமல் போய் விடுகிறதா?

    சாரங், நீங்க‌ள் நூல்களில் எழுதி வைத்துள்ளதை கேட்டு விட்டு , அதை அப்படியே ஒத்துக் கொண்டு வந்து , இங்கே எங்களிடமும் அதை ஒத்துக் கொள்ளுங்கள் , நம்புங்கள் என்று சொன்னால், எல்லோரும் அப்படி ஒத்துக் கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள். அதற்க்கு பதில் அளிக்க வேண்டுமானால் சிந்திக்க வேண்டும். எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிப்பது என்றால், கிளி கூடத்தான் அந்த வேலையை செய்யும்.

    அப்படி எழுதி வைத்திருப்ப‌தை மேற்கோள் காட்டுவதிலாவது நமக்கு தேவையான பதில் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. எதையொ எழுதி என்ன‌ ப‌ல‌ன்?

    நம்பிக்கை வையுங்கள் என்றால், இசுலாமியர் குரானை நம்ப சொல்கிறார்கள். அல்லாதான் முழு முதல் கடவுள் ஒரே கடவுள் என்று நம்ப வேண்டும் என்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பைபிளை நம்ப சொல்கிறார்கள். யார் சொல்வதை நம்புவது? யாரிடமும் ஆதாரம் இல்லை, ஆனால் என் நம்பிக்கை ம ட்டுமே சரி என்று, சண்டை போட்டு இரத்த ஆறு ஓடும் நிலை உருவாகிறது.

    பகுத்தறிவு அடிப்படையிலே சிந்திந்தால், உண்மையை ஓரளவு அனுமானிக்க இயலும்- அதுவும் அனுமானம் மாத்திரமே- அதில் லாஜிக் இருக்கும், ஆனால் அதிலும் ஆதாரம் இல்லை. உண்மையை நேருக்கு நேர் காண்பதுதான், உணர்வதுதான் சரியான முடிவுக்கு அழைத்து செல்லும்.

    இந்து மதமே பகுத்தறிவு அடிப்படையிலான மதம் தான். படிக்க வேண்டும், படித்ததை சிந்திக்க வேண்டும், கேள்விகள் கேட்கப் பட வேண்டும், விவாதிக்கப் பட வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையை நேருக்கு நேர் அறிய வேண்டும் – இதுதான் இந்து மதம்.

    நீங்கள் அவசரப் பட்டு நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று சொல்வது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது. இப்படி நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மற்றவரிடம் திணிக்க முயல்வது ஆபிராகாமியகாரரின் வழியே.

  82. நண்பர் திருச்சிகாரரே

    நீங்கள் சொவதில் எத்தனை முரண் பாடுகள் உள்ளன சற்றே அதை பாப்போம்
    //
    உங்க‌ளுக்கு உங்க‌ளின் ந‌ம்பிக்கையை எப்ப‌டியாவ‌து பிற‌ரை ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ வேண்டும் என்கிற‌ துடிப்பும், ஆர்வ‌மும் இருக்கிர‌து‍ – அது ம‌ட்டும் தான் இருக்கிற‌து.
    //
    என்று சொல்லும் நீங்கள்
    //நான் எதையுமே ஆதாரம் இல்லாமலோ, அல்லது நானே நேரில் கண்டு உணராமலோ வெறுமனே நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மாத்திரமே. எல்லா நம்பிக்கையும் உண்மையாகத் தான் இருக்க முடியும் என்று சொல்ல இயலாது. //

    என்றும் சொல்கிறீர்கள் – இப்படி என்றால் உங்களுக்கு சில கேள்விகள்
    எனக்கு பிறரை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்ற துடிப்பு மட்டும் தான் உள்ளதாக எவ்விதம் நிர்ணயம் செய்தீர்கள் – நீங்களோ என்னை பார்த்ததை கூட கிடையாது, எனது உண்மையான பெயர் கூட தெரியாது – என்னை பார்க்காமல், எனக்கு இது தான் எண்ணம் என்று உங்களால் என்ன ஆதாரத்தை கொண்டு சொல்ல முடிகிறது – நம்ப தயாராக இல்லாத போது, இதை மட்டும் எப்படி நம்பி எழுதுகிறீர்கள்
    உங்களுக்கு இணக்கமான விஷயம் எழுதாவிட்டால் இப்படி எல்லாம் நீங்கள் முடிவு கட்டிவிட வேண்டிய அவசியம் என்ன – நான் முதலில் இந்த பதிலை எழுதும் பொது, எனக்கு தெரிந்ததை எழுத முயல்கிறேன் தவறு இருந்தால் பொருக்கவேன்டும் என்று சேர்த்து தானே எழுதினேன், உங்களுக்கு பதில் சரியாக தோன்றவில்லை என்றால் சரியான முறையில் மறுப்பு எழுதலாமே, அதை விடுத்து ஏக வசனங்களில் எழுதுவது எவீதம் பயன் தரும்

    இப்போது விஷயத்திருக்கு வருவோம்
    //
    ஆன்மா அழியாதது என்கிற ஒரு கான்செப்டை முன் வைத்து armchaircritic அவர்களும், கந்தர்வன் அவர்களும் எனக்கு பதில் அளிக்க முயற்ச்சி செய்கின்றனர். அந்த கான்செப்டின் அடிப்படையில் கூட – இப்படி ஆன்மாவை பல்வேறு ஜென்மங்களை தொடர்ச்சியாக எடுக்கும் படியான நிலையில் வைத்து அதனால் துன்பங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளியது, கடவுள் என்று சொல்லப் படும் கான்செப்ட் ஆக இருக்கிறதே – என்கிற கேள்வியை தெளிவாக முன் வைக்கிறோம்.
    //
    ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகிறீர்களா? உண்டு என்றால் எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் அணுவான அதை பார்த்ததுண்டா? “scientific” ஆகா நிர்ணயம் செய்ய முடியுமா? இல்லை என்றால்? கடவுளும் இல்லை என்றே ஆகிவிடும்! ஆத்மாவே இல்லாத பொது பரமாத்மா ஏது!
    இந்த பிரச்சனைக்கு பதில் கண்டால் உங்களுக்கு பாதி தெளிவு கிடைத்த மாதிரி!

    சரி நீங்கள் ஆத்மா உண்டென்று (என்ற concept ) எப்படியோ நம்புவதாக வைத்துக்கொள்வோம் – அதை ஏன் கடவுள் தான் படுகுழியில் தள்ளினார்? ஜன்மம் எடுக்க வைத்தார் என்று நம்புகிறீர்கள்? இதற்க்கு ஏதாவது அத்தாட்சி உண்டா? கடவுளை பார்த்தே இராத நீங்கள்? அவர் ஏன் இந்த கொடுமையை செய்தாதாக நம்ப வேண்டும்? எங்களையும் நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும்? உங்களை மட்டுமே புரிந்து கொண்டு உங்களை மட்டுமே பூரணமாக நம்பும் நீங்கள் உங்களை மட்டும் தானே காரணமாக கொள்ள வேண்டும்? கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள்?
    என்னுடைய கடவுள் நம்பிக்கையானது “sceintific deduction” என்பது இல்லாமல் வேறு விதமாக வந்தது – நான் எல்லாவற்றிற்குமே கண்ணால் பார்த்து தான் ஒத்துக்கொள்வேன் என்று கூற மாட்டேன்? வெய்யில் இருக்க இல்லையா என்று சொல்ல கண் வேண்டாம், தொடு ஏதொவெல்லாம் சொல்கிரார்கள் நான் அதை பார்ததே இல்லை ஆனலும் நம்புகிரேன் – யாரயும் நீ என்னக்கு அரிவியல் முரயில் புரிய வை எண்று கூரியதில்லை.
    உனக்கு எப்படி தெரியும் நேரில் பார்தாயா எண்றால் – ஆமாம் என்பேன் ஆனால் அதயும் உஙலால் நம்ப முடியாது ஏன் எண்றால் நீங்கல் பார்தால் தானே நீங்கல் நம்ப முடியும்
    இந்தியாவின் முதல் ப்ரதமர் யார் எண்றால் – நான் பார்ததில்லை என்பதெ உங்லின் சரியான பதிலாக இருக்கும் -புத்தகத்தை மட்டுமெ நம்பும் நானோ நேரு எண்று தவராக சொல்லிவிடுவேன்
    அனைதயும் நமது ஐந்து புலன் கொன்டு மட்டுமெ நம்புதல் என்பது இயலாத காரியம் – அங்கு தான் லாஜிக் உதவுகிரது – இந்த அடிப்படயில் தான் நாம் நமது அன்னை யார் தந்தை யார் எண்றே அறிகிரோம். குழாந்தை பிறந்தவுடனெ அம்மா இறந்துவிட்டால் அந்த குழாந்தைக்கு தான் யாரும் இல்லாமல் பிறந்தேன் என்று நினைக்க வேன்டும் ஏன் எண்றால் தாயை பார்ததே இல்லை எண்றால் அதை கேட்க எனக்கு ஆச்சரியமகவே இருக்கும்

    //
    சாரங், நீங்க‌ள் நூல்களில் எழுதி வைத்துள்ளதை கேட்டு விட்டு , அதை அப்படியே ஒத்துக் கொண்டு வந்து , இங்கே எங்களிடமும் அதை ஒத்துக் கொள்ளுங்கள் , நம்புங்கள் என்று சொன்னால், எல்லோரும் அப்படி ஒத்துக் கொள்ள மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள். அதற்க்கு பதில் அளிக்க வேண்டுமானால் சிந்திக்க வேண்டும். எழுதி இருப்பதை அப்படியே ஒப்பிப்பது என்றால், கிளி கூடத்தான் அந்த வேலையை செய்யும்.
    //

    இதை நீங்கல் எப்படி உர்ஜிதம் செய்திர்கல் – நான் புத்தகத்தில் மேர்கொல் கானும்பொது என் உடன் இருன்தீர்கலா – இல்லை நான் சொன்னது அப்படியே வரிக்கு வரி புத்தகத்தில் உல்லதா – எந்த புததகம் எண்றாவது சொல்ல முடியுமா – இல்லை நீங்கல் மட்டும் தான் இங்கு யொசனை செய்வது – நாங்கள் செய்வதில்லை எண்ற தீர்மானமா
    அதாவது நன்பரெ நீங்கல் சொல்வது போல் புத்தகம் வாசித்து மட்டுமெ வந்ததில்லை இக்கருத்து – யோசனயின் பால் வந்ததே இவை – எல்லாதுக்கும் கடவுலை வீனே பழி போட என்மனம் ஒப்பவில்லை –

    நீங்கள் கடவுலை பற்றி அவருக்கு இல்லாத ஒரு குனத்தை அவர் மேல் இட்டு கேட்ட கேல்விக்கு யோசித்து பதில் சொல்வதயே நீங்கல் ஒத்துக்கொல்லவில்லை, நான் கூருவதை யாரும் அப்படியே ஏர்க்க மட்டார்கல் எண்றெல்லாம் சொல்கிறீர்கள்

    நான் ஒன்னும் உங்கலை ஒத்துக்கொள்ள சொல்லவில்லை – முடின்தால் ஏக வசனங்கலை தவிர்து பதிலை புரிந்து கொன்டு தவரை சுட்டிக்காட்டுஙல் பனிவுடன் ஏர்கிரேன்

    //
    அப்படி எழுதி வைத்திருப்ப‌தை மேற்கோள் காட்டுவதிலாவது நமக்கு தேவையான பதில் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. எதையொ எழுதி என்ன‌ ப‌ல‌ன்?
    //

    உங்கள் கேள்விக்கு பதில் எழுதி இருந்தேன் என்றே நான் நம்புகிறேன் – பயன் உள்ளதா இல்லையா என்று நீங்கள் முடிவு செய்வது ஒவ்வருவரின் தனிப்பட்ட விருப்பு – நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகா வேண்டும் என்று நான் சொல்லவில்லையே – எதை எதையோ எழுதவில்லை – உங்களுக்கு புரியும் என்று நம்பி சாஸ்திர மேற்கோள்கள் காட்டி – ஏன் கடவுள் மீது வீண் பழி சும்மதுவது சரியல்ல என்று தான் எழுதி இருந்தேன்

    தூக்கம் என்ற விஷயத்திற்கு வருவோம்

    //
    தூங்குகிற நேரத்திலே நம்மை மறக்கிறோம். எல்லாவற்றையும் மறக்கிறோம். அதனால் துன்பங்கள் சிறிது காலத்திற்கு, சில மணி நேரத்திற்கு தெரியாமல் இருக்கிறது. திரும்பி விழிப்பு நிலை வந்தவுடன் மீண்டும் துன்ப உணர்வு வருகிறதா இல்லையா?
    //

    தூங்கும் பொது நம்மை மறக்கிறோம் என்கிறீர்கள் – நீங்களாகவே சுய நினைவுடன் மறக்கிரீர்களா இல்லை மராத்தி தானாகவே ஏற்படுகிறத – முதாலவது இராது ஏன் என்றால் யாரும் சுய நினைவுடன் மறக்க முடியாது

    தூங்கிய பிரகு உங்கல் அருகில் வந்து உஙலை யாரவது அழைத்தால் முழித்து கொல்கிரீர்கள் – தூங்கிய பிரகு காது எப்படி கேட்கிரது – உங்கள் பேரை தான் சொல்லி அழைதார்கள் எண்று எப்படி அரின்தீர்கள். தூஙி எழு ந்த பிரகு நன்றாக தூங்கினேன் எண்று சொல்கிரொம் – நன்ராக தூங்கிய பின் எப்படி தூங்கிய நினைவு இருக்கிரது? மரப்பது தானெ தூக்கம்
    இதை பற்றி ஆழமாக யோசனை செய்தாலே பதில் கிட்டும்.

    இதை விடுவொம் நான் ஒன்னும் தூக்கம் பற்றி கட்டுரை எழுதர்காக இத்தனையும் சொல்ல வில்லை – தூக்கம் என்பது எப்படி உயிரின் உயிரான தன்தையாரின் மரனைத்தையே மரக்கிரோம் – வாழ்வு என்பது ஆன்மவின் தன்மையை மறந்து இருப்பதே ஆகும் – தூங்கினது என்னவோ நாம், மறந்தது என்னவோ நாம் ஆனால் – யே கடவுலே எனது தந்தயாரின் துக்கத்தை என்னிடம் இருந்து ஏன் பிரித்தாய் எண்று பழி பொடுகிரோம் – கடவுலா நம் முன் தோன்றி – தூங்கு, மரனத்தை மர என்றார் இல்லையே – பழி மட்டும் ஏன் அங்கே என்பது எனது கேல்வி
    மேலே சொன்னது போல – ஆன்மாவின் பயனம் என்பது தூக்கம் விழிப்பு போல – விழிதிருக்கும் பொது மனது மர்ரும் புலஙல் ஆன்மாவை அரிய விடாமல் செய்கின்றன – கனவுடன் தூங்கும் போது, நமதுமனது நம் புலன் கலின் வேலையை சேய்து கொன்டு ஆன்மவினை மறைக்கிறது – முழுமையான உரக்கதின் போது ஆன்மவின் தன்மை அப்படியெ வெலிப்படுகிறது அதனால் தான் நன்றாக தூங்கினது போல் உல்லது.
    எப்படி தோங்க்ய பின்விழித்துக்கொன்டால் துக்கம் மருபடி ஆட்கொள்கிறதோ அப்படியே தான் நமது வாழ்வில் துயரம் நம்மை ஆட்கொள்கிறது – தூங்கும் பொழுது எப்படி துயர் இல்லயோ அப்படிதான் ஞ்யானிகளும் விடுதலை பெற்றவற்கலும் துன்பம் அனுபவிப்பதில்லை நீங்கலே கூரும் இதற்க்கு அர்தம் தான் என்ன

    //But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from the clutches of sorrow, nature, fate….. whatever it is.

    Even Buddha claimed that he attained liberation
    //

    விடுதலை என்பது துன்பங்கலை (இன்பங்கலயும்) மறப்பது
    அல்லது அப்படி ஒன்ருமே இல்லை எண்ற நிலயை அடைவது தானே
    புத்தரை மேர்கோல் காட்டின நீங்கல் – அவர் சொன்ன முக்கியமான ஒண்றயும் நினைவில் கொல்ல வேன்டும் – அவர் கடவுல் இருக்கிறார் எண்று எங்குமே ஒப்புக்கொல்லதவர், இந்த இன்பம் துன்பம் எல்லாம் பொய், நாம் கொன்ட மயத்திரை எண்கிரார் – அவர் கடவுல் தான் காரனம் அதனால் புதுசா ஒரு மார்கம் அரம்ப்க்கிரேன் எண்று சொல்லவில்லை

    //
    நீங்கள் அவசரப் பட்டு நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று சொல்வது உங்கள் அவசரத்தையே காட்டுகிறது. இப்படி நம்பிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மற்றவரிடம் திணிக்க முயல்வது ஆபிராகாமியகாரரின் வழியே.
    //

    நம்புஙல் எண்று சொன்னது உங்கலின் கேல்விக்கு பதில் உல்லது என்பதை தான் – பதிலெ இல்லாத எண்ற் கேள்வி எனது எண்று முடிவு செய்துவிட்டால் பதில் கிட்டவே கிட்டாது. நான் பல முரை எனது குருவிடம் இந்த கேல்விக்கு பதில் இருக்காது எண்று நினைது கேட்காமலெ விடுவேன் – வேரொருவர் அதே கேல்வியை கேட்பார் அதர்க்கு மிக ஆழமான பதிலும் குருவிடமிருன்து வரும்

    இதற்கு மேல் பதில் எழுதுவது என்பது என்னால் ஆகாத காரியம் – தலை கட்டுகிறேன் – பிழைகலுடன் உல்ல எனது பதிலை படித்த்தற்க்கு நன்றி

  83. திரு. சார‌ங்க‌ன் அவ‌ர்க‌ளே,

    த‌ய‌வு செய்து நான் எழுதிய‌தைப் ப‌டியுங்க‌ள்.

    ஆத்மா என்ற‌ கான்செப்ட் இருப்ப‌தாக‌ நான் “ந‌ம்ப‌” வில்லை. இதை நான் எத்த‌னை முறை எழுத‌ வேண்டும் என்று சொல்லுங்க‌ள்.

    ஆத்மா என்று ஒன்று பல‌ ஜென்ம‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ ஒரு க‌ருத்தாக்க‌த்தை முன் வைக்கின்றன‌ர் திரு. க‌ந்த‌ர்வ‌னும், திரு. armchaircritic அவ‌ர்க‌ளும் முன் வைக்கிறார்க‌ள். நான் அந்த‌க் க‌ருத்தாக்க‌த்தை -if Athma were there and supposedly taking multiple births… – என்று வைத்துக் கொண்டு தொட‌ர்ந்து விவாதிக்கிறேன்.

    நில‌வில் ம‌க்க‌ள்ம‌க்க‌ள் வாழ்ந்தால்… என்று விவாதித்தால் நில‌வில் ம‌க்க‌ள் வாழ்கிறார்க‌ள் என்று நான் ந‌ம்புவ‌தாக‌ அர்த்த‌மா?

    ஆத்மா என்று ப‌ல‌ ஜென‌ம‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ ஒரு அனுமான‌த்தை வைத்து . அது ந‌ம்பிக்கையாக‌ க‌ருத‌ப் ப‌ட‌ கூடாது. அது ந‌ம்பிக்கை அல்ல‌.

    க‌ட‌வுள் இருக்கிறார் என்று நான் சாட்சி கொடுக்க‌வில்லையே. க‌ட‌வுள் இருக்கிரார், அவ‌ர்தான் உல‌க‌த்தைப் ப‌டைத்தார் என்று சொல்ப‌வ‌ர்க‌ளிட‌ம், அவ‌ர்க‌ள் சொல்வ‌து உண்மையானால், அந்த‌க் க‌ட‌வுள் தான் இந்த க‌ஷ்ட‌ங்க‌ளுக்கு கார‌ண‌ம் என்று சுட்டிக் காட்டுகிரோம்.

    இதில் ஒரு முர‌ண்பாடும் இல்லை. இந்த‌ க‌ட‌வுள் கான்செப்டில் உள்ள‌ முர‌ண்ப‌ட்டை‍ அவ‌ரு ரொம்ப‌ க‌ருணையான‌வ‌ர்‍ ஆனா இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்திலே ந‌ம்மை த‌ள்ளிய‌வ‌ர் என்கிற‌ வ‌கையிலே இந்த‌ க‌ட‌வுள் கான்செப்ட் முர‌ண்பாடுக‌ளுட‌ன், த‌வ‌றாக‌ உருவாக்க‌ப் ப‌ட்டுள்ள‌தை சுட்டிக் காட்டுகிரோம்.

    //புத்தரை மேர்கோல் காட்டின நீங்கல் – அவர் சொன்ன முக்கியமான ஒண்றயும் நினைவில் கொல்ல வேன்டும் – அவர் கடவுல் இருக்கிறார் எண்று எங்குமே ஒப்புக்கொல்லதவர், இந்த இன்பம் துன்பம் எல்லாம் பொய், நாம் கொன்ட மயத்திரை எண்கிரார் – அவர் கடவுல் தான் காரனம் அதனால் புதுசா ஒரு மார்கம் அரம்ப்க்கிரேன் எண்று சொல்லவில்லை //

    புத்த‌ர் கடவுல் தான் காரனம் எண்று சொல்லவில்லை. ஆனால் என‌க்கு எழும் ச‌ந்தேக‌த்தை நான் எழுப்புகிறேன். இதில் என்ன‌ த‌வ‌று?

    //நம்புஙல் எண்று சொன்னது உங்கலின் கேல்விக்கு பதில் உல்லது என்பதை தான் – //

    உண்மையில் நீங்க‌ள் ந‌ம்ப‌ சொன்ன‌து எதை என்று நீங்க‌ளே ப்டித்துப் பாருங்க‌ள். உங்க‌ளின் வார்த்தைக‌லையே, கீழே மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

    //ஆன்மா என்று ஒன்று உண்டு என்று நம்பும் நீங்கள் அதே ஆன்மாவிற்கு ஆருயிராய் பகவன் இருக்கறான் என்று வேடம் சொல்வதையும் நீங்கள் நம்ப வேண்டி உள்ளது – //

    ப‌திலே இல்லாத‌து என் கேள்வி என‌ நான் கூற‌வில்லையே. ச‌ரியான‌ ப‌திலை தாருங்க‌ள் என்றுதான் கேட்கிறேன்.

    நான் உங்க‌ளைக் குறித்து எந்த‌ ஏக‌ வ‌ச‌ன‌மும் உபயோக‌ம் செய்ய‌வில்லை என்றே நினைக்கிறேன்.

  84. அன்புடையீர்! தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் பாரதி இலக்கியங்களையும், கம்ப ராமாயணம் மற்றும் சில பொதுவான கட்டுரைகளையும் கீழ்கண்ட பிளாக்கில் ஏற்றியிருக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை, விமரிசனங்களை எழுங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக தியாகிகளைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். படியுங்கள். நன்றி.
    My blogspots
    https://www.ilakkiyapayilagam.blogspot.com
    https://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
    https://www.privarsh.blogspot.com

  85. கம்பர் ஒரு தீவிர வைஷ்ணவர். ஆநால் அவர் சிவா நிந்தனை பண்ண வில்லை. பகவான் ரமணர் கூறுவார் ராமன் ஒரு சிவ ஞானி. சிவன்
    ஒரு முகுந்த பிரியன். சிவம் என்றால் ஆத்மாதான். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா இருக்கிறது. ராமனிடதிலும் கூட. பிரபலமான ஒரு உபன்யாசகர் ஒருவர் ஒரு தீவிர வைஷ்ணவர். சிவ நிந்தை பண்ணுவது அவர்
    தொழில். ஒருமுறை அவர் “பிடித்து வைத்ததெலாம் கடவுள் என்று எப்படி சொல்வது என்று பிள்ளையாரை கேலி பண்ணினார். அது முதல் அவர் சொற்பொழிவை டிவி இல் கேட்பதை நான் நிறுத்தி விட்டேன். கம்பன் காலம் ௯ ஆம் நூற்றாண்டு. கம்ப ராமாயநதிற்கு பின் சேக்கிழார் பெரிய புராணம் எழுதினார். சேக்கிழார் காலம் ௧௦ ஆம் நூற்றாண்டு. சோழ ராஜாக்கள் சைவராய் இருந்தும் வைஷ்ணவ கோவில்களை பாதுகாத்தார்கள். அந்த காலத்தில் ஜைன மதம் தான் எதிரியாக கருத பட்டது.

    நமஸ்காரம்,

    சுப்ரமணியன். இரா.

    [Edited and Published]

  86. இந்த உணர்வுகளையும் அதன் துளிகளையும் படிக்க, இத்தனை பேர் ஆன்ம உண்மையை அறிய முயற்கின்றார்கள் என்று எண்ணும் பொது மகிழ்வே! புலன்கள் ஐந்தும் அறிவு ஆறும் போதுமோ இறைவனை அறியவே! இரமன் சிவா பூஜை செய்வதற்காகவே தென்னகம் நோக்கி வந்தார். இரமாயணம் ஒரு சிவா புராணம். அரி செய்த அவதாரங்கள் அனைத்தும் இறுதியில் சிவனை அடைவதே சிறப்பு. பாதி சிங்கம் முழு சிங்கத்தை அடைவதில் தவறு என்? நாதி சிவம் என்று உணராது இராமன் நீதி ஒன்றே போதும் என்று வாழ்ந்தது அயோத்தியில். சோதி நான் என்று வீதி வழி வந்தது தேவி வடிவில் விதி. ஓதி உணராத இராமன் தன் பாதியை இழந்து தவித்த பொது, துணை என்று வந்தவன் தான் அந்த வானவன். அவன் சிவபூஜை செய்தது திருச்சியிலே. தாயுமானவரும் தன் இரேசப கோடி விட்டு அனுமன் கோடி ஏற்றது இன்றும் காணலாமே! இராமனுக்கு சிவனை உபதேசித்தது தெய்வ குரங்குகளே! சிவா தீட்சை தந்தது அகத்தியர். பச்சை நாயகி உரை பட்டி ஈஸ்வரம், மறை படிய கதவுகள் கொண்ட மறைக்காடு, சடாயு பூசைசெய் வைதீச்வரம் என்று தளங்கள் ஆயிரம் கண்டான் தமிழகத்திலே அந்த அயோத்தி மைந்தன். இராமன் கட்டிய கோயில் என்று சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடல்கள் பல பட, அவைகள் நமக்கு இன்றும் இறுக்க, வீண் வாதம் ஏன்? நாவுக்கரசர், மலைகளை கொண்டு இராமேஸ்வரம் எண்ணும் தீவு அமைத்தது குறித்து படியும் நாம், மறுக்க என்ன இருகின்றது. உமை இல்லது உருவம் இல்லை என்று திருவையாற்றில் அன்னை நானே நாராயணன் என்று நிற்கும் பொது ஏற்க எந்த மனம் மறுக்கும். இராவணனும் சிவ பூசை செய்ய, இந்திரனும் சிவபூசை செய்ய இருவர்க்கும் அருள் செய்தவன் இறைவன். இதை சுந்தர மூர்த்தி நாயனார் சொல்லவிலைய! கமலாலயம் என்னும் திரு ஆரூர், இலக்குமி பறவை நாட்சியாரக பிறந்து இறை பூசை செய்தது, திருமால் ஆரூரராக நாவல் ஊரில் பிறந்து, திரு ஆரூர் அடைந்து அவள் கைத்தலம் பற்ற இறைவன் அருள் செய்ய…

    செய்த koil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *