சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1

thuglak-cartoonதமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.

தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.

நம்முடையது மூத்தகுடி. அது எப்படிப்பட்டது என்பதை, “வழங்குவதுள் வீழ்ந்தக் கண்..” என்னும் ‘குடிமை‘ அதிகாரக் குறளுக்கு உரையாகப் பரிமேலழகர் கூறிகிறார். “தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட தமிழ்க்குடி என்பது படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிப் பெருமை உடையது என்று தெளிவுறுத்துகிறார். குடிமை என்பது, தம் மரபு விடாது, வழி வழியாக என்றென்றும் கடைபிடித்து வருதல் என்று பொருள். ஒரு செயல் வழக்கத்தில் உள்ளதென்றால் – அதிலும் அது என்று துவக்கப்பட்டது என்று அறியாத பழமை கொண்டதென்றால், அதை நம் முன்னோர் ஆய்ந்து, தெளிந்துதான் கடைபிடித்திருப்பர் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

கற்றதனால் ஆய பயன் என்னவென்றால், இறைவனின் நற்றாள் தொழுதல் என்னும் அடிப்படை வழக்கத்தைக்கூடக் கடைபிடிக்காதவர்கள், தமிழ்க் குடியின் வாழக்கை முறையை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்க முடியும்? ‘அபிதான சிந்தாமணி’ அளவில்தான் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நாம் சொல்லலாம்.

அபிதான சிந்தாமணியும் , நாரதரும்.

தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரையில் ஆரம்பிக்கக் கூடாது என்ற வாதத்தை வைப்பவர்கள், அதற்குக் காட்டும் காரணம் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ள, பிரபவ முதலான வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான்.

 ‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள் – இப்படிப்பட்ட ஆபாசக் கருத்து கொண்ட வழக்கம் நமக்குத் தேவையா என்றும், இது ஆரியத் திணிப்பு என்றும் இவர்கள் மேற்கோளிடும் அபிதான சிந்தாமணி, ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.

ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது.

மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் புரிந்துகொணடது வேறுவிதமாக என்றால், இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் தானே வேதவாக்காக இருக்க முடியும்? நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னால், இவர்கள் கண்ட கோணல் என்ன என்று பார்ப்போம்.

raas_leelaஎங்கு பார்த்தாலும், எல்லா கோபியரும், கண்ணனுடன் இருப்பதாகப் பார்க்கின்றார் நாரதர். நாரதர் போன்ற மூவுலக சஞ்சாரிகளுக்கு, மக்கள் மனதில் ஓடுவது என்ன என்று புரியும். அதனால் அவருக்கு அப்படித் தெரிகிறது.

நம்மையே எடுத்துக்கொண்டால், நம்மில் கோடிக்கணக்கானவர் கண்ணனைத் தொழுபவர்களாக இருப்போம். கண்ணனைத் தொழும் ஒவ்வொருவருக்கும் கண்ணன் பிரத்யேகக் கடவுள். (மற்ற தெய்வங்களும் அப்படியே). ஒரு கோடி மக்கள் கண்ணனை நினைத்தால், கண்ணனும் ஒரு கோடி உரு எடுத்து, ஒவ்வொருவரோடும் தனித் தனியே உறவாடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம் அழுகை, தம் சிரிப்பு, தம் கவலை, தம் பெருமை என்று எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் உறவாடும் கண்ணனுடன் பகிர்ந்து கொள்வர். இதில் நாம் கொள்ளும் பாவனை , பெண் என்னும் பாவனை. பிறந்த எல்லா உயிருமே பெண் பாவனையுடன் தான் அவனை அணுகுகின்றன. அறிவியல் கோணத்திலும், கரு உண்டாவது பெண் பாவனையில்தான், கருவுற்ற மூன்றாம் மாதம் தான் பால் மாறுபாடு உண்டாகிறது. அவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அணுகுகிற போது இந்த பாவனை உண்டாகிறது. இதையே நாரதருக்கும் காட்டி, ஒரு வாழ்நாள் சுற்று என்பது அறுபது வருடங்கள் என்று, பிரபவ முதலான அறுபது வருடங்கள், நாரதர் கண்ணனுடன் கூடி இருந்தார் என்று கூறும் தத்துவக் கதை இது. இதை ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!

narada-kundஇந்தக் கதையின் மூலம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.

இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம். அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது  – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.

இந்தக் கதையில் நாரதர் ஏன் மாட்டிக் கொண்டார் என்றால், நாரத என்றாலே ‘நாரம் தததி இதி நாரத’ என்று விரியும். ‘உயர்ந்த அறிவைத் தருவதால் இது நாரத என்றாயிற்று’ என்பது இதன் பொருள். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல நாரதர் கதையும் நல்லறிவைத் தரவேண்டும். அந்த எண்ணத்தில், நாரதரைக் கதாநாயகனாக வைத்து நம் முன்னோர்கள் சொன்னது, இப்படித் திரியும் என்று யார் கண்டார்கள்?

ஆண் வருடனும், ஆண் வருடியும்

இந்தக் கதை தொடர்பான மற்றொரு கோணல் விளக்கம், ஒரு ஆண் வருடனும், ஒரு ஆண் வருடியும் சேர்வதால் பிறக்கும் குழந்தையே புது வருடமாகும் என்பது. அதனால் இது தமிழ் வருடப் பிறப்பு ஆகாது என்று சொல்லும் இவர்கள், யார் இந்த வருடன், யார் இந்த வருடி என்று தெரிந்து சொல்கிறார்களா?

வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்று கூறலாம். வர்ஷா என்றால் ‘பொழிதல்‘ என்பது பொருள். அதன்படி இந்த வருடன், வருடி என்பவர்களெல்லாம் யார் என்றால், பொழிதல் என்னும் வினைப் பெயருக்கு உருவம் கொடுத்து உருவகப் படுத்தி சொல்லப்படுகிற கதை என்றாகிறது. அது குழந்தைகளுக்கும் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை. குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள் நம்பி விட்டார்கள்; குழந்தை மனம் படைத்தவர்கள் போலிருக்கிறது!!

தீர ஆராய்ந்தால், வருடம் என்னும் பெயருக்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வருடை என்னும் சொல், வருடம் என்று மருவியிருக்க வேண்டும்.

வருடை என்பது மேட ராசியின் பெயர். பாவை நோன்பை விளக்கும் பரிபாடல் 11-ஆம் பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும் நிலையை விவரிக்கையில், ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்று வருகிறது. செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேட ராசியை அடைந்தது என்று பொருள்.

varudaiவருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில், 

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.

வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு ‘வான வரம்பன்’ என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.

அது என்ன ஆடு- கோட்பாடு? இப்படியும் ஒரு பட்டப் பெயரா? கூவம் கொண்டான், ஒகேனக்கல் கொண்டான், மெரினா கொண்டான் என்றெல்லாம் சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆட்டை வைத்து என்ன இப்படி ஒரு பட்டப் பெயர் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.

இந்தச் சேர அரசன் சாதாரணன் அல்லன். பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து இவன் மீது பாடப் பட்டவைதான். காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்தின் பதிகத்தில், இந்த அரசன், தண்டகாரண்யத்திற்குச் சென்று அங்கிருந்த வருடையைப் பிடித்து, தொண்டி நகருக்குக் கொண்டு வந்தான், அதன் மூலம் வான வரம்பன் என்னும் பெயரும் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.

“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்”

தண்டகாரண்யம் என்பது விந்திய மலையின் தெற்குச் சரிவில் உள்ள காடு. (ராமர் வந்ததாக ராமாயணத்திலும் சொல்லப் படும் தண்டகாரண்யம் இதுவே). இந்தச் சேர மன்னன் தண்டகாரண்யம் சென்று வருடையைக் கொணர்ந்து, வான வரம்பன் என்றும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் பெயர் பெற்றான் என்றால், அவன் வானத்தையே முட்டுவது போன்ற விந்திய மலையை எட்டி, அதனால் வான வரம்பன் என்னும் பெயரையும் பெற்று, அங்கு திரிந்துக் கொண்டிருந்த வரையாடு என்னும், மலையாடு என்னும் வருடையைக் கொணர்ந்து, அதனால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் பட்டத்தையும் பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது.

இமயத்தை எட்டிய இவன் முன்னோன் “இமய வரம்பன்” என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக “வான வரம்பன்” என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?

வருடை என்பது மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணத்தின் ஆரம்பம் மேடம் ஆதலாலும், ஆரம்பம் என்பது ஒரு உயர்த்த இடமாக இருக்க வேண்டும் என்னும் விழைவை ஒட்டியும் இந்த மலையாட்டினைக் கொணர்ந்துள்ளான் என்று புலனாகிறது. இன்றும் இரவிக்குளம், மூணாறு பகுதியில் காணப்படும், அபூர்வ வகை வரையாடு இந்த வருடையே.

இந்த வருடையைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்பு வருகிறது. கண்ணகியின் கதையை சேரன் செங்குட்டுவன் தெரிந்துகொள்ளும் முன், மலைப்பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் “வரையாடு வருடையும்” பார்க்கிறான் என்று சிலம்பு கூறுகிறது. (காட்சிக் காதை) இதன் மூலம் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், சிலப்பதிகார காலத்திற்கு முன்னமே இருந்தவன் என்று தெரிகிறது. அந்நாளில் வருடைக்கு எத்துணை முக்கியத்துவம் இருந்திருந்தால், அதைக் கொண்டு வந்திருப்பான்?

நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள். மூணாறில் காணப்படும் வருடை (Nilgiri Tahr), இமயத்தில் காணப்படும் வருடை (Himalayan Tahr) வகையைச் சேர்ந்தது. இமயத்தில் காணப்படும் வரையாடு பொதியத்திலும் உலவ வேண்டும். சேரன் மலைநாட்டிலும் உலவ வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். இமயத்து வருடை வகை ஆடுகள் அந்நாளில் விந்திய மலையிலும் இருந்திருக்க வேண்டும். அவற்றை விந்தியத்திலிருந்து, சேரமான் கொண்டு வந்திருக்கிறான்.

vaniyalசூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை துவங்கும், மேட ராசியில் என்பதாலும், அவ்விராசி வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கலாம்.

இதில் வருடன், வருடி என்ற ஜோடி எப்படி வந்தது? இப்படி ஜோடியாக சொல்லப்பட்டு, அந்த ஜோடியிடமிருந்து வருடம் பிறந்தது என்பது ஆபாசம் அல்லவா என்பது நம் குழந்தைக் கதை கேட்பாளர்கள் கொண்ட கவலை.

மேடத்தில் ஜோடி உள்ளது. அதுவும் ஆணும், ஆணும் சேர்ந்த ஜோடி! இந்த ஜோடியை நம் முன்னோர்கள் தம் பாடல்களில் பதிந்துள்ளனர். இந்த ஜோடியைப் பற்றி பரிபாடலில் இரு இடங்களில் காணலாம்.

இந்த அண்டம் முழுவதும், அவனிடத்திலேயே தோன்றி, அவனிடத்திலேயே விரிந்தன என்று திருமால் பெருமையைப் பேசும் 3-ஆம் பாடலில், எவை எல்லாம் தொன்றுதொட்டு அவனால் துவங்கப் பட்டவை என்று பட்டியலிடுகையில், “தாமா இருவரும்” என்று அசுவினி குமாரர்களைப் பற்றி சொல்லப்படுகிறது. படைப்புக்காலம் தொடங்கி, சில விஷயங்கள் முன்னோடியாக உள்ளன. பிரமன் முதலான தேவர்கள், சூரியன் முதலான கிரகங்கள், அசுவினி தேவர்கள் முதலான விண்மீன்கள், ஐம்பொறிகள், வசுக்கள், ருத்திரர்கள் என்று இந்தப் பட்டியல் செல்கிறது.

செவ்வேள் பற்றிய பரிபாடல் 8 -ஆம் பாடலில், யார் யாரெல்லாம் பரம் குன்றத்தில் இருக்கும் குமரனைக் காண வந்துள்ளனர் என்னும் போதும், அவரவர் வகையில், முதன்மை பெற்றவர்களையே சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், “மருந்துரை இருவரும்” என்று இரட்டையரான அசுவினி சகோதரர்களைப் பற்றி சொல்லபடுகிறது.

ஞாயிறு தன் பயணத்தை ஆடு – தலையாகத் துவங்குகையில், இரட்டையரான அசுவினி தேவர்களிடமிருந்து தான் துவங்குகிறான். (சோதிடப்படி, சூர்யக் கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், மருத்துவக்குடி என்பதும் இந்த ஊரின் மற்றொரு பெயர் என்பது நினைவு கூறத் தக்கது. ஆடுதுறை மாசாத்தனார் என்னும் சங்கப் புலவரும் இருந்திருக்கிறார். ) மருத்துவர்களான இவர்கள் இருவரை முதலாகக் கொண்டு வருடம் பிறக்கிறது. ஆண் வருடன், ஆண் வருடி என்று இதை (யாரோ) உருவகப்படுத்தியதால், குழந்தைக் கதை கேட்பாளர்கள் அதையே பிடித்துக்கொண்டு விட்டனர்.

இவர்களுக்கு, நம் சங்கப் புலவர்கள், இன்னொரு அதிர்ச்சிக் கதை வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்டு, சங்கப் பாடல்களுக்கே முழுக்குப் போட்டு விடுவார்களோ நம் கதை விரும்பிகள்?

முன் கூறிய பரிபாடலில், தாமா என்று அசுவினி தேவர்களைக் குறித்துள்ளார்கள். தாமா என்றால் தாவும் குதிரை என்பது பொருள். அசுவினி தேவர்கள் குதிரையின் வயிற்றில் பிறந்தவர்கள். இதற்கு உரை கூறும் பரிமேலழகர், “உருப்பசி குதிரைப்பெட்டையாகியாளைக் கண்டு நயந்து, தானும் அவள்பாற் செல்கின்ற ஆதித்தியனுடைய நாசிகைத் துளைகளால் இரண்டு வீரிய விந்துகள் வீழ, அவர் அங்கே இரட்டைகளாய்த் தோன்றினர்” என்கிறார்.

இதை ஆபாசக் கதை என்பதா அல்லது ஆரியக் கதை என்பதா அல்லது ஆரியத் திணிப்பு என்பதா? ஆனால், சங்கப் புலவர் கடுவனிள வெயினனார் கூற, பரிமேலழகர் விளக்கியுள்ளாரே? இந்தக் கதைகள் எல்லாம் நம் தமிழ் முன்னோரும் ஏற்று, கையாண்டவையாக உள்ளனவே? ஆபாசம் என்றாலோ, அருவருப்பு என்றாலோ, அவர்கள் இவற்றை எழுதியிருப்பர்களா? நாம் சிந்திக்க வேண்டும்.

வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.

துவக்கம் என்பது அசுவினியிலிருந்துதான் என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

பரிபாடல் 19-இல், முருகன் எழுந்தருளியிருக்கும் திருப்பரம் குன்றத்தில் ஒரு ஓவிய மாடம் இருந்தது என்றும் அங்கே முதலாவதாக இருந்த ஓவியம், சூரியம் வலம் வரும் அசுவினி முதலாவதாகிய நாண்மீன்கள், மற்ற பிற மீன்கள் (நட்சத்திரங்கள்) கொண்ட காலச் சக்கரத்தை விளக்கும் ஓவியமாகும் என்கிறார் நப்பண்ணனார்.

“என்றூழ் உரைவரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்”

இங்கு சுடர் நேமி என்று ஞாயிறு மண்டலத்தை, சோதிடத்தில் கூறுவது போல, சக்கரம் என்கிறார். அந்தச் சக்கரத்தின் தலை மேடம் என்னும் ஆடு!

அசுவினி முதலான மீன்கள் தொட்டே திங்களும் வலம் வருகிறான். தன் மனைவியர் மற்றும் சுற்றத்தார் புடை சூழ, பாண்டிய மன்னன் பரம் குன்றத்தைச் சுற்றி வருவது, அசுவினி முதலான விண்மீன்கள் புடை சூழ, திங்களானவன் மேரு மலையைச் சுற்றி வருவதற்கு ஒப்பாகும் என்கிறது 19 – ஆம் பரிபாடல். “சுடரோடு சூழ் வரு தாரகை மேருப் புடை வரு சூழல்”

சூரியன் கதையில், ‘தாமா’வான அசுவினி, சந்திரன் கதையில், 27 மனைவிகளுள் முதன்மையான அசுவினி என்னும் பெண்ணாகி விடுகிறான்! ஆரியத் திணிப்பு, ஆபாசம் என்றெல்லாம் பெயர் சூட்டப்படும் இந்தக் கதைகளுக்குப் பின்னால் அறிவியல் உள்ளது என்று பகுத்தறிவுவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவியலை நம் முன்னோரும் தெரிந்து கொண்டுள்ளனர்.

ஞாயிறும், திங்களும், வானத்தைப் புணர்ந்தன – என்பது போன்ற சொற்றொடர்களை சங்கத் தமிழில் காணலாம். “வியல் விசும்பு விரிகதிர் மதியமொடு புணர்ப்ப” என்று ஆரம்பிக்கும் பரிபாடல் 11- ஐ விளக்கும் போது, “மேலவாய நாண்மீன்களைக் கீழாய மதி புணர்தலாவது:- அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின், அவற்றை ‘விசும்பு புணர்ப்ப’ என்றார்” என்று பரிமேலழகர் கூறுகிறார்.

திங்களானது தான் மணந்த மனைவியருள், ரோஹிணியிடம் அதிக அன்பு கொண்டிருந்தான் என்று கூறப்படுவதெல்லாம், அதன் சுற்றுப் பாதையிலேயே ரோஹிணி நட்சத்திரமும் அமையப் பெற்றதால்தான். வானப் பாதையில், சந்திரன் செல்லும்போது, மற்ற நட்சத்திரங்கள் அந்தப் பாதையிலிருந்து சற்று விலகியே உள்ளன. ரோஹிணி மட்டும்தான் பாதையிலேயே அமைத்துள்ளது. திங்கள் ரோஹிணியைக் கடக்கும் போது, அந்த நட்சத்திரத்துடன் ஓட்டிச் செல்வது போலக் காணப்படுவதால், அதை நினைவூட்டக் கதையாகக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.

வருடையும் சித்திரையும்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். சூரியன் மேடத்திலிருந்து பயணம் தொடங்குவது, 12 ராசிகளைப் பற்றியதாக இருக்கலாம். மேடம் என்பது ராசிகளுள் முதன்மையானது. வருடக் கணக்கு என்பது, சித்திரையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று இது எப்படி காட்டுகிறது? வேறு ஒரு மாதத்திலிருந்து கூட வருடம் ஆரம்பமாகியிருக்கலாமே என்று கேட்கலாம்.

தமிழ் சான்றோர் இந்தச் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. சூரிய மாதத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், மேடம் முதலான ராசிகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சோதிடக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ள பழைய நாடிச் சுவடிகளைப் பார்த்தால், சூரிய மாதங்களான சித்திரை போன்றவற்றை, அவற்றின் ராசியின் பெயர் அல்லது பிற தமிழ்ப் பெயர்களால் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சித்திரை மாதத்தை மேடம், மை, மறி, ஆடு, வருடை, கொறி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். சூடாமணி நிகண்டிலும் இவற்றைக் காணலாம்.

இரண்டு விதமான மாதக் குறிப்புகளை நாம் பின்பற்றி இருக்கிறோம். ஒன்று சூரிய மாதம், மற்றொன்று சந்திர மாதம். ராசிகளின் பெயரைக் குறித்தே சூரியன் சஞ்சரிக்கும் மாதங்கள் சொல்லப்பட்டன. சந்திரனைக் குறித்தே சித்திரை என்னும் மாதங்கள் சொல்லப்பட்டன.

மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.

சூடாமணி நிகண்டு தரும் சூத்திரப்படி, இன்றைய தமிழ் மாதப் பெயர்களை பௌர்ணமி வரும் நட்சத்திரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

பின்வருவன, பௌர்ணமி காணும் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள். அவையே, அந்த மாதப் பெயர்களாக ஏற்கப்பட்டுள்ளன.

சித்திரை – சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி.
வைகாசி – விசாகத்தின் மற்றொரு பெயர் வைகாசி
ஆனி – மூல நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆனி.
ஆடி – உத்திராட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆடி..
ஆவணி – அவிட்ட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆவணி.
புரட்டாசி – பூரட்டாதி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் புரட்டை
ஐப்பசி – அசுவினி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஐப்பசி.
கார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம்
மார்கழி – மிருக சீரிடத்தின் மற்றொரு பெயர் மார்கழி
தை – இது விதிவிலக்கு. தைப்பதால் அது தை. எதைத் தைக்கிறது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
மாசி – மகம் நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் மாசி.
பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி.

இந்த இரண்டு வகை மாதங்களையும் பின்பற்றி வந்தது குறித்து, பழம் தமிழ் இலக்கியங்களிலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

(தொடரும்…)

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

56 Replies to “சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1”

  1. // தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.//

    சரியாகச் சொன்னீர்கள்.

    // கற்றதனால் ஆய பயன் என்னவென்றால், இறைவனின் நற்றாள் தொழுதல் என்னும் அடிப்படை வழக்கத்தைக்கூடக் கடைபிடிக்காதவர்கள், தமிழ்க் குடியின் வாழக்கை முறையை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்க முடியும்? ‘அபிதான சிந்தாமணி’ அளவில்தான் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நாம் சொல்லலாம்.//

    ஆம். அது தான் உண்மை.

    // நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும்.//

    சபாஷ்!

    //… ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!//

    [(:-)))

    // கூவம் கொண்டான், ஒகேனக்கல் கொண்டான், மெரினா கொண்டான் என்றெல்லாம் சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆட்டை வைத்து என்ன இப்படி ஒரு பட்டப் பெயர் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?//

    பலே!

    // குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள் நம்பி விட்டார்கள்; குழந்தை மனம் படைத்தவர்கள் போலிருக்கிறது!!//

    [(:-)))

    நன்றாக ரசித்தேன். பாராட்டுக்கள்.

    அன்புடன்

    தமிழ்செல்வன்.

  2. நமது சிந்தனை எப்படி இருக்கிறதோ அதே போல் தான் நமது செயல்களும், பார்க்கும் பார்வைகளும் இருக்கும்.

    நமது தலைவர்களின் இந்து புராண பார்வை வக்கிரமாகவே இருந்து வருகிறது.

    இதற்கு காரணம் சொல்ல தேவையில்லை.

  3. பொங்கல் வாழ்த்துக்கள்..

    நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியமைக்கு வந்தனம் .. நன்றி.

  4. வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.i am not criticising ….heir any scientific evidence for this

  5. நாளைக்கு கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒரு முதழ்மந்த்ரி வரும்பொழுது டிசம்பர் மாதத்தை வர்ஷப்போறப்பாக கொண்டாடுவோமே என்று சொல்லுவார் .
    அதையும் கீட்டுகொள்ளவேண்டியதுதான் .தமிழனின் தலைவிதி அப்படித்தானே .
    எப்பொழுது தமிழன் சினிமா பைத்தியம் விட்டு ஒழிகறதோ ,அன்று தன சொயமாக சிந்தனை பண்ண தொடங்குவான்.கடவுள் தமிழனையும் தமிழ்நாட்டையும் காப்பாட்டட்டும் .
    ஹரிஹரக்ரிஷ்ணன்

  6. A thought provoking and fact-finding article
    Politicians are bold enough to touch anything and everything and change it to their benifits in the name of self-respect.

  7. நல்ல கட்டுரை ஜெயஸ்ரீ!

    இந்தத் தொகுப்பில் சில பிழைகள் உள்ளன. காட்டாக:

    “பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி”

    இது பல்குன் என்ற பூர்வபல்குனி (தமிழில் பூரம்) நட்சத்திரத்தில் நிறைமதி வருவதால்.

    பிற பின்னர் நேரம் கிட்டுகையில்..

  8. Namasthe,

    Today I saw an advertisement for the coming up show in Kalaignar TV. Which again going to hit once again on our traditional “Thali”.

    Karthu yuddham is the programme name which they are scheduled to air on Sunday 1.30

    What is the best way to stop this programme.
    I need your suggestions.

    Thanks.

  9. ஆய்வு நோக்கில் எழுதப் பட்ட இன்னொரு முத்தான கட்டுரை ஜெயஸ்ரீ. அப்பப்பா, எங்கெங்கிருந்தெல்லாம் இலக்கியச் சான்றுகள் அளிக்கிறீர்கள் ! அருமை.

    வேத இலக்கியத்தில் ஆண்டுகளைக் குறிக்கும் ’ஸம்வத்ஸரம்’ என்ற சொல் மேகங்கள், மழை மற்றும் காலச் சுழற்சியுடன் தொடர்புடையது. எனவே வருடம் என்பதும் வர்ஷம் (மழை) என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்தேன். அச்சொல்லை மேஷ ராசி மற்றும் வரையாடு என்ற தனித்துவமுள்ள விலங்குடன் இணைத்து நீங்கள் அளித்த விளக்கம் மிகவும் புதுமையாக இருந்தது.

  10. // தமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது. //

    தமிழர் திரிக்கவில்லை.. இப்போது ஆட்சியில் இருக்கும் கேடுகெட்ட அரசியல் கட்சியும், அதன் மாநில அரசுமே செய்த கலாசாரப் படுகொலை இது.

    இந்தத் திரிபும் விரைவில் அழியும்,

  11. திரு குமார் :-
    // “பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி”
    இது பல்குன் என்ற பூர்வபல்குனி (தமிழில் பூரம்) நட்சத்திரத்தில் நிறைமதி வருவதால். //

    தமிழில் பங்குனி – வட மொழியில் பால்குண நட்சத்திரங்கள் – இரண்டு. அவை பூர்வ பல்குனி, உத்திர பல்குனி ஆகும். பூர்வ பல்குனி பூரம் என்றும், உத்தர பல்குனி உத்திரம் என்றும் தமிழில் வழங்கப்படும்.

    சூடாமணி நிகண்டு 1-1-72 சூத்திரப்படி உத்திரம் தான் பங்குனி என்ற பெயருடன் வழங்கப்படுகிறது.

    சூத்திரம் 1-1-72 :-
    “பங்குனி கடையில் வந்து பற்றிய சனியினோடு
    செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரமென்றாகும்.”

    (பத உரை :- உத்தரத்தின் பெயர் – பங்குனி, கடை எழும் சனி, செங்கதிர் நாள் )

    இதற்கு முந்தின சூத்திரத்தில் பூரம் பற்றி வருகிறது

    சூத்திரம் 1-1-71 :-
    “இடை எழும் சனியே துர்க்கை எலி பகவதி நாளோடு
    கடிய நாவிதனே எய்யும் கணை இரு முப்பேர் பூரம்”.

    (பத உரை :- பூரத்தின் பெயர் :- இடை எழும் சனி, துர்க்கை, எலி, பகவதி நாள், நாவிதன், கணை என்னும் ஆறு பெயர்கள். )

    உத்தரத்தில்தான் நிறை மதி அமைகிறது.
    பங்குனி உத்தரத் திருநாள் வைணவ ஆலயங்களில் தாயார்- பெருமாள் கல்யாண நாள். பங்குனி உத்தரம் பற்றி கட்டுரையில் காணலாம்.

    முழுமதி அடையும் நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதப் பெயர்கள் தமிழிலும், வட மொழியிலும் மாதப் பெயர்களாக உள்ளன. அந்த வகையில் பார்த்தாலும், சூத்திரம் தெரியாதவர்கள் கூட பங்குனி மாதத்தில் பூரணமடையும் உத்தர நட்சத்திரத்தின் பெயரும் பங்குனியாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு விடலாம்.

    பால்குண நட்சத்திரங்களைப் போல, இரண்டு ஆஷாட நட்சத்திரங்களும், இரண்டு பாத்ரபத நட்சத்திரங்களும் உள்ளன.

    அவற்றுள், ஆஷாட என்னும் ஆடி மதத்திற்குப் பெயர் தருவது உத்தராடம் அலல்து உத்த்ராஷாட.

    பாத்ரபத என்னும் புரட்டாசி மாதத்திற்குப் பெயர் தருவது பூர்வ பாத்ரபத என்னும் பூரட்டாதி. பூரட்டாதி என்பது புரட்டை எனப்படும் என்கிறது சூத்திரம் 1-1-78

    தாங்கள் கண்ட பிற பிழைகள் எவை என்று அறிய ஆவலாக உள்ளேன்.

    – ஜெயஸ்ரீ

  12. நன்றி திரு ஜடாயு.

    ஜோதிடத்தை முறையாகப் பயின்றதனால், ஆண்டு மற்றும் யுகக் கணக்கை பற்றிய ஆதாரமான கொள்கைகள் பற்றி அறிந்துள்ளேன். வேதாங்க ஜோதிடத்தில், ஐந்து வருட யுகக் கணக்கில், சம்வத்சரம் என்று முடியும் ஐந்து வித பெயர்கள் உள்ளன. அவை பல்வேறு தொகுதிப் பெயர்களாக வந்துள்ளன. மேலும் சம்வத்சரம் என்பது அந்நாளில் சரத் மற்றும் ஹேமந்த ருதுக்களின் பொதுப் பெயராக இருந்தது. பிறகு ‘ருதுக்களின் யாத்திரை’ என்பது சம்வத்சரம் ஆயிற்று. (samvasanthi rituvaha yatra). தமிழ் நிகண்டுகளிலும், இந்தப் பொருள்தான் – அதாவது சம்வத்சரம் என்பது ‘இருதுக்கள் வசித்தலுடையது.” – என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் வர்ஷம் என்பது, ஆண்டு என்ற பொருளில் நிகண்டில் காணப்படவில்லை. அது மழைக்கு வேறு பெயராகத் தான் காணப்படுகிறது. வர்ஷம் என்னும் வருடம், “பூமியை நனைத்தலுடயது’ என்னும் பொருள் கொண்டது என்று உரை கூறுகிறது.

    மாறாக வருடம் என்பதே முதல் பெயராகவும், வர்சரம், ஆண்டு, சமை, ஆயனம் என்பவை அதன் பிற பெயர்களாகவும் சொல்லப்பட்டுள்ளன. இதனால் வருடம் என்பது தொன்மை வாய்ந்த சொல் என்று தெரிகிறது.

    வருடம் என்றால் ‘பிரீதி செய்யுதலுடயது” என்று கூறுகிறது நிகண்டு பத உரை. இந்த அர்த்தம் புதிதாக – புதிராக இருக்கவே, இதை ஏன் இப்படி சொல்லியிருக்கிறார்கள் என்ற குடைச்சல் இருந்து கொண்டே வந்தது.
    ஆனால் பதிற்றுப்பத்து படித்தபோது, அதன் பதிகத்தில், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் பெயர்க் காரணமாக அவன் வருடையைக் கொண்டு வந்த செய்தியைப் படித்தவுடன், பிற தொடர்புகள் தென்பட்டன. ஆடுகளைப் பற்றிய அங்க சாத்திரம் ஜோதிடத்தில் உண்டு. கார்க மகரிஷி சொன்னதாக வராஹா மிஹிரர், நான்கு வித ஆடுகளைக் கூறி, அவற்றின் உயர்வைச் சொல்கிறார். குட்டக, குடில, ஜடில, வாமன என்னும் நான்கு வகை ஆடுகளில், வாமன என்பதன் அங்க லட்சணம் Nigiri Tahr எனப்படும் வரயாடை ஒத்தது. இதை வருடை என்று தமிழில் கூறுவார். அந்த வருடை, மேடம் என்பது பரிபாடல் 11 -இன் மூலம் தெரிந்தது. அதனால் வருடை என்பதே வருடம் என்னும் சொல்லின் மூலமாக இருக்கலாம் என்பது என் கருத்து.

    ‘பிரீதி செய்யுதலுடயது” என்னும் பதப் பொருளும், இந்த ஆட்டு வர்க்கம் தரும் வளத்தை ஒட்டி, அனைவரும் விரும்பத்தக்கது என்று ஆகிறது. கார்க ரிஷி கூற்றுப் படி இந்த நான்கு ஆட்டு வர்கங்களும், திருமகளின் குழந்தைகள்.

  13. Another clarification.
    வத்சரம் என்பது, ருதுக்களைக் கொண்டது.
    வருடம் என்பது மாதங்களைக் கொண்டது.
    சூரிய மாதமும் , சந்திர மாதமும், நிலையான சுழற்சியைக் கொண்டவை. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நிழைவது அந்த மாதப் பிறப்பாகும்.
    அப்படி மகர ராசியில் நுழைவது மகர சங்கராந்தி (சங்கராந்தி என்னும் சொல் சங்கரமணம் என்னும் சொல்லிலிருந்து மருவியது. சங்கரமணம் என்றால் நுழைதல் என்று பொருள். ) வட அயனம் தனுர் ராசி 6 – ஆம் பாகையிலே ஆரம்பித்து விடுகிறது. அது மாத முதல் அல்ல. மகர ராசி பூஜ்யம் பாகை தான் தை மாத ஆரம்பம்.
    இந்த வகையில், சித்திரை முதல் மாதம். அதில் சூரியன் நுழையும் நேரம் வருடப் பிறப்பு.

  14. edwin

    //வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.i am not criticising ….heir any scientific evidence for this//

    Scientific evidence for what? All these are obvious truths of science.
    ஏழு குதிரைகள், ஏழு வர்ணங்கள்.
    சூர்ய்னே ஒரு குதிரையாகச் செல்லுதல் என்பது ஒரு வர்ணனை. சூரியனின் பிள்ளைகள் அசுவினி தேவர்கள்.
    இவர்கள் ஜோடியாகச் செல்வது மற்றொரு வர்ணனை.

    இதற்கு மேல் அசுவினி தேவர்களைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால், அதுவே ஒரு தனிக் கட்டுரையாக ஆகிவிடும்.

    சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.
    அச்வா என்றால் குதிரை.
    அச்வா என்னும் வட மொழிச் சொல்லிலிருந்து அஸ்வினி என்பது வந்தது. அதன் தமிழ்ப் பெயர்கள், நான் காட்டிய மேற்கோள்களில் காணலாம்,

    அஸ்வினி தேவர்கள் இரட்டையர்.
    ஓடும் குதிரையாக உருவகப்படுத்தப் படும் சூரியனின் மைந்தர்கள் இந்த அஸ்வினி தேவர்கள்.
    இருக்கு வேதத்தில் 12 இடங்களில் சொல்லப்படும் இவர்களைக் குறித்த வர்ணனைகள் மூலமும், புருஷ சூக்தத்தின் கடைசி பகுதி மூலமும், இவர்கள் எப்படி ஜோடியாக வருடத்தை அழைத்துச் செல்கிறார்கள் என்று புரியும்.

    பகல்- இரவு என்னும் ஜோடி,
    வானம்- பூமி என்னும் ஜோடி,
    நெருப்பும் – காற்றும் (solar radiation) என்னும் ஜோடி,
    பிராணன் – அபானன் என்னும் ஜோடி,
    ஈரத் தன்மை – ஒளி என்னும் ஜோடி,
    அவையெல்லாம் ‘அஸ்விநௌ வியாத்தம்’ என்று இரட்டைப் படையாக இருக்கும் அஸ்வினி தேவர்கள். இவை எல்லாம் வேதக் கருத்துக்கள்.

    ஓயாது ஓடும் சூரியனின் secondary product ( அதன் குழந்தைகள் என்று உருவகப்படுத்தப்படுகிறது) என்னும் படி, சூரியனின் பயணத்துடன் என்றென்றும் கூடவே வரும் பகலும், இரவும் அஸ்வினி தேவர்கள்.
    வானத்தையும் பூமியையும் இணைக்கும் சூரியனின் அம்சங்கள் அஸ்வினி தேவர்கள்.
    சூரியனது நெருப்பாகவும், அவனிடமிருந்து வரும் வெப்பக் காற்றாகவும் இருப்பவர் அஸ்வினி தேவர்கள்.
    உள்ளிழுக்கும் பிராணன், வெளியே விடும் அபானன் என்று, இரு வேறு விதமானவைகளை நிலை பெறச் செய்யும் சூரிய சக்தி அஸ்வினி தேவர்கள்.
    இவர்கள் நாசாத்யர்கள். அதாவது ந- அசத்யர்கள். அதாவது சத்யமானவர்கள்
    ஈரத் தன்மையாக ஒரு அஸ்வினி எல்லாவற்றிலும் ஊடுருவுகின்றான். மற்றொரு அஸ்வினி ஒளியாக ஊடுருவுகின்றான்
    சூரியனின் by-product- ஆக இரண்டிரண்டாக வரும் இவை வருடம் முழுவதும், சூரியன் என்னும் குதிரையைப் போலவே ஓடிக் கொண்டிருப்பவை.

    இவற்றின் தன்மைப் புரிந்து கொண்டால், மரணத்தை வென்றவன் ஆவாய். அதனால், இவர்கள் மருத்துவர்கள் எனப்படுகிறார்கள். வேதாந்தத்தை அறிந்தவனுக்கு இது தெரியும், இது புரியும்.
    இக்கட்டுரையில் மேற்கோள் காட்டிய பரிபாடல் எழுதிய பண்டைத் தமிழர் இதைப் புரிந்து கொண்ட வேதாந்திகள்.

    இக்காலத்தில் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேதம் படிக்கத் தேவையில்லை. பரிபாடல் போன்ற பழைய நூல்கள் சொல்லும் இறைக் கருத்துக்களைப் படியுங்கள்.
    ஆனால் இன்றைய திராவிட உரை ஆசிரியர்கள் எழுதிய உரை வைத்துப் படிக்காதீர்கள். பரிமேலழகர் போன்ற பண்டைய தமிழ் உரை ஆசிரியர்கள் எழுதியவற்றைப் படித்தாலே போதும். இந்தக் கேள்வி உங்களிடமிருந்து வராது.

  15. தங்களின் கட்டுரை மிக அருமையான ஆய்வுக்கட்டுரை. அடியேன் எழுதிய முந்தைய குறிப்பு சற்றே அவசரத்தில் ஏதோ பிழை காணும் தொனியில் வந்துவிட்டது. மன்னிக்கவும்.

    பிழைகள் என்று சொன்னதை மாற்றி ஐயங்கள் என்று கேட்கிறேன்.

    1 . பங்குனியில் பூரம் உத்திரம் இரண்டிலும் நிறைமதி வருவதால் பங்குனி அல்லவா?
    2. ஆனி மாதம் அனுஷத்தால் வருவதா அல்லது அல்லது மூலம் மூலமா?
    3. ஆவணிக்கு அவிட்டமா திருவோணமா?
    4. தை பூசத்திலிருந்து வருவதல்லவா?

    தெருட்ட வேண்டுகிறேன்.

  16. தெரிந்துக் கொள்ள எவ்வளவு இருக்கிறது என்று, நுனிப்புல் மேயும் என்னைப் போன்றவர்களுக்கு, உங்கள் கட்டுரை மூலம் புரிய வைத்து விட்டீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

  17. திரு குமார்
    //1 . பங்குனியில் பூரம் உத்திரம் இரண்டிலும் நிறைமதி வருவதால் பங்குனி அல்லவா?
    2. ஆனி மாதம் அனுஷத்தால் வருவதா அல்லது அல்லது மூலம் மூலமா?
    3. ஆவணிக்கு அவிட்டமா திருவோணமா?
    4. தை பூசத்திலிருந்து வருவதல்லவா? //

    கட்டுரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
    கடைசியில் சொல்லப்பட்டுள்ள நட்சத்திரங்களைக் கவனிக்கவும். அவற்றின் அடிப்படையில்தான் மாதப் பெயர்கள் அமைந்துள்ளன.
    இவற்றுள் தை விதி விலக்கு. இக்கட்டுரையின் 2 -ஆம் பகுதியில் விளக்கம் காணவும்.

    வானியல் விளக்கமாக, சந்திரன், சூரியனிலிருந்து 168-01 முதல் 180 பாகை வரை வரும் பொழுது பௌர்ணமி எனப்படும். கட்டுரையில் கூறியுள்ள நட்சத்திரங்களில் தான் பௌர்ணமி வரும். ஆனால், சூரிய, சந்திரன் வருடத்தின் கால அளவு மாறுபடுவதால், இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சந்திர வருடத்தில் ஒரு அதிக மாதம் வரும். அதனால், முன் பின்னான நட்சத்திரத்தில் சில சமயம் பௌர்ணமி ஆரம்பிக்கும், அல்லது முடியும். ஆனால் மேற்சொன்ன நட்சத்திரங்களில் அந்தந்த மாதங்களில் சூரியனும், சந்திரனும் எதிர் எதிராக வரும்.

    நீங்கள் கேட்ட கேள்விகள்
    1. மேற் சொன்ன காரணத்தின் படி, பூரத்தில் பௌர்ணமி ஆரம்பித்து, உத்திரத்தில் முடியலாம். அல்லது உத்தரத்தில் ஆரம்பித்து ஹஸ்தத்தில் முடியலாம். வால்மீகி ராமாயணத்தில், அனுமன் சீதையைக் கண்ட நற் செய்தியைக் கொண்டுவந்தவுடன், ராமர் உடனேயே போருக்குப் புறப்படலாம் என்று நாள் நட்சத்திரம் பற்றி கூறுகிறார். அவரது பிறந்த நட்சத்திரத்திலிருந்து, ஆறாவது நட்சத்திரமான உத்தரம் என்னும் சாதகத் தாரை (தாரா பலன் பற்றியது ) அன்று நடக்கிறது. மறுநாள் அந்த நட்சத்திரம் , ஹஸ்தத்தில் இணைகிறது, அதனால் உடனேயே புறப்படுவோம் என்கிறார்.
    ‘உத்தர நட்சத்திரம் நாளை ஹஸ்த நட்சத்திரத்துடன் சேருகிறது” என்கிறார் (வால்மீகி ராமாயணம் 6-4-5)

    சாதகத் தாரையான உத்தரத்தில் கிளம்புவது சிறந்தது, ஆனால் மறுநாள் ஹஸ்தம் வந்து விடுகிறது என்று சொல்லாமல், உத்தரம் ஹஸ்தத்தில் சேர்ந்து விடுகிறது என்றால், உத்தரத்தில் ஆரம்பித்த பௌர்ணமி, சூரிய உதயத்துன் போது ஹஸ்தத்தில் தொடர்கிறது என்று பொருள் கொள்வதாகிறது. சூரிய உதயத்தில் இருக்கும் நட்சத்திரம் தான் நாளினது நட்சத்திரம். அதனால் முதல் நாளே பௌர்ணமி + உத்தரம் இருக்கும் நேரத்தில் ராமர் கிளம்பினார்.

    2. ஆனியில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் மூலம். அல்லது கேட்டையிலும் துவங்கும். கேட்டை நட்சத்திரம் ஜ்யேஷ்டா என்று வடமொழியில் சொல்லப்படும். அதைகொண்டு வடமொழியில், ஆனி மாதம் ஜ்யேஷ்டா எனப்படும். அனுஷம் இன்னும் முன்னரே வருகிறது. பௌர்ணமி அப்பொழுது ஆரம்பிப்பது துர்லபம்.

    3. ஆவணிக்கு அவிட்டம். முன் பின்னாக இருந்தாலும், அவிட்டத்தில் தான் நேர் எதிரே வருகின்றன.

    4. வட மொழியில், பூசத்தில் பௌர்ணமி என்பதால், அது புஷ்ய மாதமாகிறது. தமிழில் தை என்பது சிறப்புப் பெயர். அது எவ்வாறு என்பதை அடுத்த பகுதியில் படிக்கலாம்.

  18. தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்ற அறிவிப்பை கேலி, கிண்டல் செய்வதா? கருணாநிதி கண்டனம்

    கடந்த கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட்டது-பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக அறிவித்து அந்நாள் முதல் நம்முடைய ஆண்டு கணக்கை மேற்கொள்வோம். இது நாம் கணித்தது அல்ல. பெரும்புலவர் மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி அன்றைக்கு பெரியார் போன்றோருடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்று அவர்கள் யாத்துத்தந்தது, வகுத்துத் தந்தது நம்முடைய தமிழ் வருட கணக்கு.

    நமக்கு இருக்கிற வருடங்கள் எல்லாம் வருடப்பிறப்பு என்றாலும் கூட- ஒரு ஆண் வருட, இன்னொரு ஆண் வருடி அதன் மூலமாக பிறந்த வருடப்பிறப்புகள்தான் அந்த வருடப்பிறப்புகள் என்ற காரணத்தால் நம்முடைய வருடப்பிறப்பு, தமிழனுடைய வருடப்பிறப்பு இதுதான் -வள்ளுவருடைய ஆண்டு தான் நாம் வருடப் பிறப்பாக ஆண்டுப் பிறப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறுதியிட்டு முடிவு செய்து அரசின் சார்பாக சட்டப்பேரவையிலே அனைவருடைய ஏகோபித்த கருத்தையும் பெற்று வெளியிடப்பட்ட அந்த செய்தியை இன்றைக்கு பத்திரிகைகளிலே பார்த்தால் கேலிக்குரியதாக, கிண்டலுக்குரியதாக, அவை எல்லாம் விமர்சிக்கப்படுகிற காட்சியை நாம் காண்கிறோம்.

    அவற்றை பார்க்கும்போது எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு ஒருவகையிலே இதில் மகிழ்ச்சிதான். நம்முடைய தமிழனை எப்படியாவது, யாராவது, கேலிசெய்து தூண்டிவிட்டால்தான் அவன் சொரணையோடு எழுந்து நடமாடுவான். அவன் உலகத்திற்காக செய்ய வேண்டிய, தமிழுக்காக ஆற்ற வேண்டிய காரியத்தை செய்வான் என்ற முறையிலே தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்கிற வீரம், இந்த மகிழ்ச்சியை நாமெல்லாம் இன்று பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் எல்லாம் சிந்திக்கும் வகையில் இந்த நாள் பயன்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

  19. நீங்கள் சொல்லும் தமிழ் வருடங்களுக்கு ஒன்று கூட தமிழ் பெயர் இல்லையே !அப்புறம் எப்படி ஐயா தமிழ் புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்? இடையில் வந்தவர்களுக்கு வடமொழி பெயரில் அறுபது ஆண்டுகளை தமிழகத்தில் திணிக்க உரிமை இருந்திருக்கிறது என்றால் இப்பொழுது மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?

  20. யார் யார் என்ன கூறினாலும் நாங்கள் எங்கள் பண்பாட்டை கேவலபடுத்தும் அந்நியர்களையும் அவர்களின் சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஏற்கவே மாட்டோம். அறிவியல் பார்வையில் வாழவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள்தான் எங்களை பற்றி முடிவு செய்யும் உரிமை கொண்டவர்கள். ஆரியர்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் நாங்கள் ஏன் எங்கள் பண்பாடாக எங்கள் தலை விதியாக கொள்ளவேண்டும்? எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்ளுவோம். எங்களுக்காக ஆரியர்களாகிய நீங்கள் எந்த கவலையும் அக்கறையையும் கொள்ளவேண்டாம். முதலில் நீங்கள் நேர்மையாக நாணயமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அது உங்களின் ரத்த ஓட்டத்துக்கு எதிரானது அல்லவா? புரிகிறது.

  21. //யாரோ
    17 January 2010 at 2:55 pm

    நீங்கள் சொல்லும் தமிழ் வருடங்களுக்கு ஒன்று கூட தமிழ் பெயர் இல்லையே !அப்புறம் எப்படி ஐயா தமிழ் புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்?//
    உங்களுக்கு பெயரில்தான் பிரச்சினை என்றால் மாதத்தில் ஏன் மாற்றம்?
    //ராஜேந்திரன்
    17 January 2010 at 3:13 pm
    யார் யார் என்ன கூறினாலும் நாங்கள் எங்கள் பண்பாட்டை கேவலபடுத்தும் அந்நியர்களையும் அவர்களின் சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஏற்கவே மாட்டோம்.//
    நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் சமஸ்கிருதம் மூலமாக தமிழ் பண்பாடு எவ்வாறு கேவலப்பட்டது என்று விளக்கினால் உங்கள் கோபம் எல்லோருக்கும் புரியும்.
    //அறிவியல் பார்வையில் வாழவே நாங்கள் விரும்புகிறோம்.//
    //எங்களுக்காக ஆரியர்களாகிய நீங்கள் எந்த கவலையும் அக்கறையையும் கொள்ளவேண்டாம்.//
    அறிவியலே தூக்கி எறிந்து விட்ட ஆரிய பொய் வாதத்தை இன்னும் ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

  22. வணக்கம் ராஜேந்திரன்.

    முதல்வர் விரும்பியவாறே சொரணையோடு நீங்கள் வீறு கொண்டு எழுந்து, ‘பண்பாட்டினை ‘ எழுத்தில் காண்பித்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் ரத்த ஓட்டத்தையே அலசிய அறிவையும், அறிவியலையும் பார்த்து வியக்கிறோம்.

    மரபணு ஆராய்ச்சியாளர்களும் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும், ஆரியர் என்பதும் ஆரியத் திணிப்பு என்பதும் இல்லை என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகிறார்களே, அவை தான் அறிவியல் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நீங்கள் வேறு எதோ சொல்கிறீர்களே! ஓஹோ இதுதான் ‘திராவிட மாயை’ என்பதோ? கிணற்றுக்குள்ளேயே உட்கார வைக்கும் திராவிட அறிவியல் என்பது இதுதானோ?

    பரவாயில்லை. நீங்கள் திராவிட அறிவியலிலேயே இருந்து கொள்ளுங்கள். எங்களுக்குத் தமிழ் அறிவு போதும். இந்தத் தமிழ் அறிவு அன்றைய தமிழர் கலாச்சாரத்தை எங்களுக்குக் காட்டுகிறது. ஆனால் உங்கள் திராவிட அறிவு, கதையைத் தாண்டி, கதை காட்டும் உள்ளறிவைக் கூடக் காண விடுவதில்லை. தை பிறந்தால் வழி பிறக்காதா? க- தை வழியாக உங்களுக்கும் அறிவு பிறக்காதா?

    இது இருக்கட்டும். என்னவோ சமஸ்க்ருதம், சமஸ்க்ருத ஆதிக்கம் என்கிறீர்களே, உங்கள் பெயர் ஏன் அப்படி இருக்கிறது? யாரேனும் சம்ஸ்க்ருத ஆதிக்கம் உங்கள் மீது செய்து விட்டார்களா? உங்கள் தலைவர் பெயரும் ஏன் அப்படி? அவர் பிள்ளையின் பெயர் எந்த மொழியின் ஆதிக்கத்தில்? ‘நவீன கால பாகீரதன்’ என்று அவரும் தன தந்தையை ஒகேனக்கல் வெற்றிக்குப் (?) பெயர் சூட்டினாரே, ஏன்? சம்ஸ்க்ருதமும், ஆரியமும் இந்த அளவுக்கா திராவிட அறிவில் கலந்துள்ளன?

    அது மட்டுமல்ல. திருவாலங்காடு செப்பேடுகள் என்று நூறு வருடங்களுக்கு முனனால் ராஜேந்திர சோழர் கால் செப்பேடுகள் கிடைத்துள்ளனவே, அவற்றிலும் சமஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளனவே? அப்பொழுதே சமஸ்க்ருதத் திணிப்பு செய்து விட்டார்களோ?

    அதற்கு முன்னாலேயே, தொல்காப்பியர் தொல்காப்பியர் என்று ஒருவர் இருந்தாரே. அவர் இயற் பெயர் “திரனதுமாக்கினி” என்ற சமஸ்க்ருதப் பெயர் என்றும் அவர் வடபால் ஜமதக்கினியின் மகன் என்றும் நச்சினார்க்கினியர், தொல்காப்பியப் பாயிர உரையில் கூறியுள்ளாரே, அப்பொழுதே சமஸ்க்ருதத் திணிப்பு ஆரம்பித்து விட்டதோ?

    தொல்காப்பியரும்
    “இயற் சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று
    அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”

    என்று செய்யுள் ஈட்டுவதிலும் வடசொல்லைப் புகுத்தி விட்டாரே?
    என்ன அநியாயம்?
    அது மட்டுமா?

    “வடசொல் கிளவி வடஎழுத்து ஓரி இ
    எழுத்தோடு புணர்ந்த சொல் ஆகும்மே”

    என்று வடமொழி எழுத்தை எப்படித் தமிழ்ப் படுத்தலாம் என்று வேறே சொல்லி விட்டார். திராவிடர்களாகிய உங்களுக்கு வேலை அதிகம் தான், தொல்காப்பியர் புகுத்திய சமஸ்க்ருத ஆதிக்கத்தைக் களைந்தெறிய வேண்டாமோ?

    அது மட்டுமா? ‘திருக்குறள் தேவர்’ – அவர்தான் வள்ளுவர் என்று நீங்கள் சொல்கிறீர்களே – அவரை அப்படிச் சொல்லக்கூடாது. அவரைத் தேவன் என்று சொல்ல வேண்டும். ‘மறந்தேயும் வள்ளுவன் என்பான் ஓர் பேதை, அவன் சொல் கொள்ளார் அறிவுடையார்” என்று மாமூலனார் சொன்னபடி வள்ளுவர் என்று சொல்லாமல், ‘திருக்குறள் தேவர் என்று சொன்னால்தானே பொருத்தமாக இருக்கும்? அவரது மனைவியின் பெயரும் ‘மாதானுபங்கி’ என்னும் சம்ஸ்க்ருதப் பெயர் என்று நேமி நாதர் (போச்சுடா இதுவும் சம்ஸ்க்ருதப் பெயர்) கூறியுள்ளாரே, ஆனால் அப்பெயரே அவரது இயற் பெயர் என்றும் திராவிடத்தார் கூறுகிறார்களே, இந்த அளவுக்கு சமஸ்க்ருத ஆதிக்கம் எந்த நாளிலோ ஆரம்பித்து விட்டதே, அந்தக் கலாசாரத்தைத் தானே திருக்குறள் தேவரும், தொல்காப்பியரும் தந்திருக்க வேண்டும்? அப்பொழுதிலிருந்தே நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்க வேண்டுமே?

    இதை எல்லாம் உங்கள் திராவிடத் தலைவர்கள் உங்களுக்குச் சொல்லவில்லையா? அறிவியல் பார்வை உங்களுக்குக் கிடைத்து விட்டதோ இல்லையோ, முதலில், சரித்திரத்தை – பழந்தமிழர் சரித்திரத்தை, அவர் வாழ்ந்த வேத வாழ்வைத் தெரிந்து கொள்ளுங்கள்.
    சிந்திக்கச் சொல்கிறார் இல்லையா தலைவர்? சுயமாகச் சிந்திக்க ஆரம்பியுங்கள். சீக்கிரம்…

  23. இன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்திலேயே, திராவிட வித்தகர்கள் காட்டும் வேடிக்கையை பார்த்து சிரிப்பு தாளவில்லை.

    திராவிடத் தலைவர் தர்மலிங்கத்தின் பேரன் பிரதீப்பின் திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர், திராவிட சிந்தனை கொண்ட தர்மலிங்கத்தின் பேரனுக்கு சம்ஸ்க்ருதப் பெயரா. இதோ நான் தரும் தமிழ்ப் பெயர் என்று ‘மதிவாணன்’ என்று பெயர் சூடி இருக்கிறார். வேதவழித் திருமணங்களில் ஜாத கர்மா, நாம கர்மா என்று திருமண நாள் அன்று மீண்டும் பெயர் சூட்டுவர். அந்தத் தொழிலையும் தன கையில் முதல்வர் எடுத்துக் கொண்டு விட்டார் போலிருக்கிறது!!

    பத்து மாதம் சுமந்து, கனவுகளுடன் பெற்றெடுத்தத் தன் குழந்தைக்கு பெயர் சூட்ட தாய்க்குத்தான் முதல் உரிமை. தாய்தான் தன் குழந்தையில் காதில் பெயரைச் சொல்லுவாள். ஐங்குரவர்களுள் முதன்மை இருவரான தாய் தந்தையாரது பெயர் சூட்டும் உரிமையில், பெற்ற பிள்ளைக்குக் கூட கை வைக்க உரிமை கிடையாது என்பது பகுத்தறிவு. இவர்களது திராவிடப் பகுத்தறிவு காட்டும் புதுமைப் பகுத்தறிவு இதுதான் போல..

    நிற்க,
    பெயர் சூட்டினவரின் பெயர் சம்ஸ்க்ருதப் பெயர்.
    யாருடை பேரன் என்றாரோ அவர் பெயரும் சம்ஸ்ருதப் பெயர் – தர்ம லிங்கம்.
    சூட்டப்பட்ட பெயர் ‘மதிவாணன்’
    மதி என்பது ‘மத்’ என்ற சமஸ்க்ருத வேரிலிருந்து வந்த, தமிழிலும் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்.

    மத் என்றால் ஆட்டுதல், குலுக்குதல், கடைதல் என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள்.
    கடையப்பட்டு அறிவு வருவதால், அறிவுக்கு மதி என்று பெயர்.
    கடையப்பட்டதால், மேருவுக்கு மந்தர மலை என்று பெயர் வந்தது.
    கடையும் கோல் ‘மத்து’ என்றாகியது.
    ‘உன்மத்தம்’ பிடித்து அலைந்தான் என்கிறோமே, அதிகமாக ‘ஆடுகிறான்’, ‘ஆட்டம் போடுகிறான்’ என்பதால், உன்’மத்தம்’ என்று சொல்லப்படுகிறது.

    அதே போல் வாணன்.
    இது வாணி என்பதன் ஆண் பால் பெயர்.
    ‘வா’ என்னும் சமஸ்க்ருத வேரிலிருந்து வரும் பல பெயர்களுள் இவையும் உண்டு.
    ‘வா; என்றால் வெல்லுதல்.
    ஒரு துறையில் வெல்லக்கூடிய திறமை ஒருவனுக்கு இருக்குமானால், அத்துறையில் ‘வாணன்’ என்னும் பெயர் பெறுகிறான்.
    மதிவாணன் என்றால் அறிவு மூலம் வெல்லக்கூடியவன் என்று பொருள்.
    வாணிகம், வாணிகன் என்பதெல்லாம் இந்த ‘வா’ என்னும் சமஸ்க்ருத வேரிலிருந்துதான் தோன்றின.

    எப்படிப்போனாலும், தமிழும், சம்ஸ்க்ருதமும் பிரிக்க முடியாத மொழிகள். காரணத்தை முந்தின மன்வந்தரத்திலிருந்தே தேட வேண்டும் என்பது என் கருத்து.
    சம்ஸ்க்ருதம் வேத பாஷையாக என்றும் உள்ளது.
    பேசும் மொழியாக, வேறு மொழிகள் இருந்திருக்கின்றன.

    பூமத்திய ரேகைக் பகுதி வரையில் பரவியிருந்த இந்த நாவலம் தீவு என்னும் ஜம்புத் தீவின் நாமிருக்கும் பகுதியின் பேசு மொழியாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் இருந்திருக்க வேண்டும். 10,000 ஆண்டுகளுக்கு முன், முதல் சங்கம் வந்த போது, தமிழுக்கு வரி வடிவம் கொடுத்தவர் அகத்தியர். அன்றிலிருந்து எழுத்து வடிவிலும், தமிழ் வந்திருக்கிறது.வேத மொழியாக சம்ஸ்க்ருதமும், பேச்சு மொழியாக தமிழும் இருக்கவே, அவற்றுள் ஒற்றுமை இருப்பதில் வியப்பில்லை.

    கொசுறு செய்தி:-

    சொல். குரல், பேச்சு போன்ற பல பொருள்கள் இருந்தாலும், வாணி என்பதற்கு ‘வேத ஒலி என்றும் பொருள் உண்டு.
    ஸ்ரீமத் பாகவதம் 11.12.18 -இல் ‘ததைவமே வ்யக்திர் இயம் ஹீ வாணி” என்று வேத ஒலி என்னும் பொருளில் வருகிறது.
    வாணன் என்பதன் பொருளை, இதை ஒட்டியும் அறிந்து கொள்ளலாம்.

  24. நம்ம கலிஞரு கீராறே….கலிஞரு; மஞ்சா துண்டுக்கு எவ்ளோ வெளக்கம் குட்துக்கறாருன்னு அல்லாத்துக்கும் தெரியும். அதுவும் அல்லா வெளக்கமும் ஒரே ”பகுத்தறிவு” மழ!

    அதே மாரி, நேத்து அன்பயகன் வூட்டு கண்ணாலத்துல “கருணாநிதி” பேருக்கு படா டமாஸா ஒரு வெளக்கம் குட்துக்குன்னாரு, அஆங்!

    முத்து, அயகிரி, கனிமொயி, ஸ்டாலின் ….ஒரு பெரிய லிஸ்டு போட்டு இன்னாத்துக்கு அப்டி பேர வச்சேன்னு அத வுட பெரிய வெளக்கம் குட்துட்டு, “கருணாநிதின்ற பேரு ஸம்ஸ்கிருதப் பேருன்னு அல்லாம் கிண்டல் பண்றாங்கோ; அப்டி கடியாது, அல்லா மத கடவுளுங்களுக்கும் உள்ள பொதுவான பேரு அது. அத்தொட்டு தான் அந்தப் பேர வச்சுக்கினேன்” அப்டீன்னு ஸோக்கா ஸொல்லிக்கினாரு கடவுள் நம்பிக்கையே இல்லாத இந்த மன்ஸன். நம்ம பாய்ங்க அல்லாவ “கருணாநிதி”ன்னா ஸொல்றாங்க? இல்ல நம்ம கிறுஸ்துங்க அல்லாம் ஏசுவ “கருணாநிதி”ன்னு ஸொல்றாங்களா? இன்னா புருடா இது, ஆ?

    துண்டு வெளக்கம் ஸூப்பர்னா…பேரு வெளக்கம் ஸூப்பரோ ஸூப்பர்!

    சரி, அத்தோட வுட்டாரா? ”பிரதீப்” அப்டீன்னு இருந்த கண்ணால மாப்ள பேர “மதிவாணன்” அப்டீன்னு மாத்திப்புட்டாருங்கோ! அன்பயகன் வூட்ல அல்லாரும் பேஜாராய்டாங்க. ஸொல்லவும் முட்ல; மெல்லவும் முட்ல. இன்னா செய்வாங்க? தானத் தலிவன், தமிழினத் தலிவன் இஸ்டமா செய்ய ஸொல்ல இன்னா செய்ய முடியும்?

    தன்னோட பேரனுக்கு ”ஆதித்யா”ன்னு பேரு கீதே, அத மாத்த தாவல? ஊரானுங்க வூட்ல வந்து குந்திக்குனு அவனுங்க வூட்டு பஸங்க பேரல்லாம் மாத்திக்கினு கீறாரே இந்த கலிஞரு?

    இதுல ஆரியன்…திராவிடன்…அப்டீன்னு ஓல்டாயிப்போன டுபாக்கூர் மேட்டர இன்னும் நம்பிக்கினு இருக்கானுங்க நறிய முட்டாப் பயலுங்க.

    இன்னாவோ போ! நல்ல தமிழ் வியாபாரம்!

    வெறுப்பா கீது நைனா…

    வர்டா…

    மன்னாரு

  25. அலோ…அல்லார்கிட்டயும் மன்னாப்பு ஸொல்லிக்கிறேன். ஒரு மேட்டர எயுத ஸொல்ல படிக்கிறவங்களுக்கு கொயப்பம் வராம ஸொல்லனும். ஆனாக்கா நா அப்டி இல்லாம ஒரு ஸ்மால் மிஷ்டேக் பண்டேம்பா.

    நா மேல ஸொல்லிக்கிற அன்பயகன் நம்ம மினிஷ்டரு அன்பயகன் இல்ல. பி.டபிள்யு.டி சீப் இஞ்ஜினீரு அன்பயகன். அதாவது பழைய தல தர்மலிங்கம் மகன் தான் இவுரு.

    ஓகேவா?!

    மன்னாரு

  26. யாரோ

    //மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?// உங்கள் மானம் உடலில் எங்கிருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக காட்டமுடியுமா? //மானமுள்ள தமிழனுக்கு// என்று நிரூபிக்க ஏதாவது சர்டிபிகேட் இருக்கா? நான் பகுத்தறிவு வாதிப்பா. சர்டிபிகேட் பாக்காம உங்க மானத்த நான் ஒத்துக்க மாட்டேன். சரியா!

  27. ஏம்மா இவங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன்னு நேரத்தை வீனடிக்கிரேங்க என்ன சொன்னாலும் இவங்க திருந்தபோவது இல்லை மூழ்கி முத்தெடுக்க எத்தனையோ விசயங்களா இல்லை நாங்களாவது அனுபவிப்போமே

  28. ஊரிலே yemara வாங்க இருக்கிற வரிலும் ematri கொண்டு irukkalame. இவங்க தொழில் நடத்துற atthani viyapramum திv utpada எல்லாமே இங்கிலீஷ் ஆதிக்கம் தான்.. சன் டிவி இலே ethanai tamil வார்த்தை வருddu, ஐயோ ஐயோ

  29. பிரமாதமான அலசல்.

    மறுமொழிகளும் பிரமாதம்

  30. ஜெயஸ்ரீ அவர்களின் தமிழ் ஜோதிடம் மற்றும் அறிவியல் அறிவாழத்தைக் கண்டு வியக்கிறேன்.அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

  31. ஜெயஸ்ரீ அய்யா,
    ///மரபணு ஆராய்ச்சியாளர்களும் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும், ஆரியர் என்பதும் ஆரியத் திணிப்பு என்பதும் இல்லை என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகிறார்களே,///
    மிகச் சரியாக சொன்னீர்கள் ஜெயஸ்ரீ அய்யா.ஆரியப் படையெடுப்பு என்ற திட்டமிட்டுப் பரப்பிய பொய் கதையை தமிழ் ஹிந்து தளத்தில் உங்களைப் போன்றோர் அம்பலப்படுத்த வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்.
    தனபால்

  32. சிலப்பதிகாரத்தில் ஒரு வாக்கியம்.

    “ஊழ்வினை வ்ந்து உறுத்துதும்”

    கருணாநிதி ….

    தம் கட்சித் தொண்டர்க்கெல்லாம் பேர்வைத்தார், தமிழில்.
    தமதருமை மகனுக்கோ பேர்வைத்தார் …
    ஸ்டாலின் என்றே.

    அம்மட்டோ?

    சமஸ்கிருதம் வடமொழி என்றார்.
    அதனால் ஸ், ஷ, ஹ, எழுத்தெல்லாம் தமிழில் இல்லை
    என்றே அரசாணை செய்தார்.

    அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும், அரசு ஊழியரும்
    தமிழில்தான் கோப்பில் கையொப்பம் இடவேண்டும் என்றே
    ஆணை செய்தார்,
    தமிழ் என்றும் எங்கும் வாழச் செய்தார்.

    அந்தோ ப‌ரிதாப‌ம்!

    அவ‌ர்த‌ம் அருமை ம‌க‌னோ
    அமைச்ச‌ர், துணைமுத‌ல்வ‌ர் என்றான‌ பின்ன‌ர்
    அர‌சுக்கோப்பில் த‌ன் பெய‌ரைத் த‌மிழில் கையொப்ப‌ம் செய்யும்போதெல்லாம்
    “ஸ்” என்ற‌ ஸ‌ம‌ஸ்கிருத‌ எழுத்தை முத‌லில் எழுதிக் கையொப்ப‌ம் செய்ய ……
    ஊழ்வினை அவ‌ரை ந‌கைப்புக்கே ஆளாக்கும் விந்தை காணீர்.

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……

  33. ஆன்றோரும் சான்றோரும் வளர்த்துக்காத்த தமிழை, கருணாநிதி காக்கிறார் என்று தமிழர்கள் நினைப்பதே, தமிழுக்கு எப்படிப்பட்ட கேவலமான நிலைமை என்பதை நன்கு விளக்கும்; தமிழனுக்கு இருந்த ஒரேஒரு அறிவு வளமைக்கு சான்று, வானவியலைச்சார்ந்த ஜோதிடக்கலை தான்; அதையும் தாறுமாறாகச் சின்னா பின்னமாகச் செய்வது தான் தமிழ்த் தொண்டு என்றால், தலைகுனிவு கருனாநிதிக்குத்தான்.

  34. தமிழ் தெய்வங்களே அனுப்பியவர் தான் திருவள்ளுவரம் திருக்குறளும்; ஒன்னே முக்கால் அடிக்கு மேலே, எழுதியதை புரிஞ்சிக்க முடியா தமிழர்கள் பின்னே வருவார்கள் என்று தெரிந்துதான் திருக்குறள் வர, மற்ற சங்ககால படைப்புக்களை
    விட்டுவிட்டு, கருணாநிதிக்கள் திருக்குறளை மட்டுமே, அதுவும், அரைகுறையாக பிடிததுக்கொண்டிருக்கிரார்கள். .

  35. தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். காலம் காலமாக பொருள் பொதிந்த விதத்தில் நம் முன்னோர் சித்திரையை முதல் மாதமாகக் கொண்டு நடத்திய வாழ்க்கையை திடீரென்று மாற்றிக்கொண்டு விட்டார்கள். மிகுந்த ஆராய்ச்சியுடன் எழுதப்பட்டுள்ள இந்தக் கடடுரையைப் படித்தால் அவர்கள் ஒரு வேளை மனம் மாறலாம். தன்னுடைய பழக்க வழக்கங்களை பிறருக்காக சட்டென்று மாற்றிக்கொள்ளும் மனப்பான்மை தமிழனுக்கு மட்டுமே உரித்தாகும் போலிருக்கிறது.

  36. திருக்குறள் 36 வது அத்தியாயம்,355 வது (குரல்) எப்பொருள் எத்தனம்ய்த்து ஆயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு எபபொருள் யார் யார் வாய் கியட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு நமது பாரம்பரியத்யையும் மரபுவழியயும் காப்பது நமதுகடமி

  37. திருமிகு இராஜேந்திரன் !

    தங்களின் மறுமொழியில், ” ‘ஆண் வருட, பெண் வருடி’ மூலம் பிறந்த வருடங்களே ‘பிரபவ’ முதலிய அறுபதும்” என்பதே முதன்மை வாதம்.

    உங்கள் மறுமொழிக்கு மூன்று நாட்கள் முன்னமேயே வந்துவிட்ட ஸ்ரீமதி ஜெயஸ்ரீ சாரனாதனின் கட்டுரையிலேயே இதற்கு பதில் இருக்க, தேவையே இல்லாமல், முதல்வரின் அபத்த மொழிகளுக்கு ஒத்து ஊதுகிறீர்களே!

    ஜெயஸ்ரீ சாரனாதனன் சொன்னால் என்ன, கருணாநிதி சொன்னால் என்ன? பகுத்தறிவு இருப்பது உண்மை தானே? பிரதானக் கட்டுரையே விளக்கம் தந்திருக்கிற ஆட்டுக் கதையைப் படிக்காமலேயே ‘ஆண் ஆடு, பெண் ஆடு’ என்றெல்லாம் விமரிசனம் செய்யலாமா?

    மேலும் தங்கள் மறுமொழியில் ஒரு வார்த்தை கூட உங்கள் எழுத்தால் அமையவில்லையே! அப்படியே ‘மேற்கோளா’க முதல்வருடையதையல்லவா போட்டிருக்கிறீர்கள்! அந்த மேற்கோளும் கட்டுரையையே படிக்காதவர் எழுதுவதாகவல்லவா அமைந்திருக்கிறது!

    நமக்குத் தெரிந்திராத ஒரு விஷயத்தில், நாம் தெளிவடைந்திராத ஒரு விஷயத்தில், ஐயம் தீர்த்துக்கொள்ள வினா எழுப்பலாமேயன்றி, விமரிசனங்கள் செய்வது உண்மையில் தமிழர் மரபாகாது. ஏன், எவர் மரபுமாகாது.

    காய்தல், உவத்தல் இன்றி உண்மையை உணர, “அறிவுக்கு வேலை கொடு, பகுத்தறிவுக்கு வேலை கொடு!” என்னும் தமிழ்த் தொடரை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

  38. பெருமதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ அவர்களுக்கு
    சித்திரையில் தமிழ் வருடப்பிறப்பு என்ற மிக நீண்ட கட்டுரையின் இரண்டு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்தேன்.அற்புதம். பவுர்ணமி ஒவ்வொரு மாதமும் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதனை அடிப்படையாக வைத்தே,மாதப்பெயர் உருவாக்கப்பட்டதாக தாங்கள் தெரிவித்தது சரியே. ஆனால் பூமி மற்றும் இதர கிரகங்களின் சுழற்சி வேகங்களில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேக மாறுதலினால், இன்றைய காலக்கட்டத்தில் பவுர்ணமி வரும் நட்சத்திரம் சிறிது மாறுபட்டுள்ளது. சித்திரை மாத பவுர்ணமி அஸ்தம்-சித்திரை ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    (வரும் கர வருடத்தில் வைகாசி மாதம் இரண்டு பவுர்ணமிகள் வருவதால்) ,
    வைகாசி மாத முதல் பவுர்ணமி சுவாதி-விசாகம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    இரண்டாம் பவுர்ணமி கேட்டை, மூலம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    ஆனி மாத பவுர்ணமி பூராடம், உத்திராடம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    ஆடி மாத பவுர்ணமி திருவோணம், அவிட்டம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    ஆவணி மாத பவுர்ணமி சதயம் பூரட்டாதி , ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    புரட்டாசி மாத பவுர்ணமி உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    ஐப்பசி மாத மாத பவுர்ணமி அஸ்வதி, பரணி ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    கார்த்திகை மாத பவுர்ணமி ரோகினி மிருகசீரிஷம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    மார்கழி மாத பவுர்ணமி திருவாதிரை, புனர்பூசம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    தை மாத பவுர்ணமி பூசம் ஆயில்யம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    மாசி மாத பவுர்ணமி மகம், பூரம் ஆகிய இரு நட்சத்திரங்களிலும் கலந்து வருகிறது.
    பங்குனி மாத பவுர்ணமி அஸ்தம் நட்சத்திரத்தில் வருகிறது. மாதங்கள் பன்னிரண்டு ஆனால் பவுர்ணமிகள் பெரும்பாலும் வருடத்திரு பதிமூன்று வரும். எனவே இந்த வித்தியாசம் இயல்பே. இந்திய அரசு பின்பற்றிவரும் சக ஆண்டின் மாதப்பெயர்களும் இதே அடிப்படையில் தான் அமைகின்றன. ஆனால் அவை சந்திர மாதங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் பஞ்சாங்கம் என்பது வானவியலை அடிப்படையாக கொண்ட அற்புதமான ஒரு விஞ்ஞானமே ஆகும். ஜோதிடமும் வானவியலை அடிப்படையாக கொண்ட ஒரு மிக பெரிய அறிவியலே. இதை அறியாமல் பொய் விமரிசனம் செய்யும் பொய்யர்களை என்ன சொல்ல ?

  39. Pingback: Indli.com
  40. புணர்சசி என்றால் கலவி அல்ல. கூட்டம் என பொருள்
    “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்”

    மதி= திங்கள்
    வாழ்நன் = வாணன் ( சோழநாடு =சோணாடு)

  41. கட்டுரை தொடக்கத்திலே பரிமேழலகர் வருகிறார். இடையிலும் வருகிறார். அவர் 13ம் நூற்றாண்டுக்காரர். காஞ்சிபுரத்துக்கு வைணவ பார்ப்பனர். அவரது நோக்கம் வள்ளுவர் பிராமணியத்தைப் போற்றினார் என்பதைக் காட்டுவதே. அதற்காக வள்ளுவரின் குறளுக்கு பிராமணியத்தின் வழியாக பொருள் காண்கிறார். அவருக்கு முன் பலர் திருக்குறளுக்கு உரையெழுதினர். ஆனால் பார்ப்பனர்களின் பிரச்சாரத்தால் பரிமேழலகர் முன் வைக்கப்பட்டார்.

    சன்னியாசம், நால்வகை வருணங்கள். பிராமணருக்கே மோட்சம், பிராமணருக்குத் தானம் என ஒரே பார்ப்பனீயப் பிரச்சாரம் வள்ளுவர் பண்ணியதாக பரிமேழலர் வெளுத்துக்கட்டுகிறார். அதற்காகவே அவரை பார்ப்பனர்கள் தலைமேல் வைத்தாடுகிறார்கள். வேறென்ன ? அவர்களுக்கு வேண்டியது தம் குலப்பெருமை. “பரிமேலழகரின் பார்ப்பனீயத் திணிப்பு” நூலைக் காண்க. (கண்ணம்மா பதிப்பகம், 250 தென் நெடுஞ்சாலை, திருப்பரங்குன்றம் மதுரை – 625005 என்ற நூலில் காண்க. ஆசிரியர் தமிழ்க்கூத்தன்.)

    தொல்காப்பியம் கி.மு ஒன்றில் எழுதப்பட்டிருக்கலாம். அல்லது கி.பி ஒன்றில். சங்க இலக்கியம் கி.பி 2லிருந்து 4 வரை. சிலப்பதிகாரம் சங்க இலக்கியமே இல்லை. அது சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டது. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் ஒன்று. கடைச்சங்கக் காலம்.

    தொல்காப்பியர் காலத்திற்குமுன்பே சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் நுழைந்த வடபார்ப்பனர்கள் கொண்டுவந்து விட்டார்கள்; வைதீகமதச்சடங்குகளோடு சமஸ்கிருதம் தொல்பழந்தமிழர் மதத்தையும் வாழ்க்கையையும் கீழே தள்ளி மேலேறியது. ஆதிக்கபலம், அரசுபலம் சேர்ந்ததனால். அவையில்லா தொல்தமிழர் அடிமைகளாயினர். அவர்கள் தாய்மொழி தமிழ் சமஸ்கிருதத்தால் ஊடுருவப்பட்டது. அவ்வடபார்ப்பனர்களே எழுத்தாளர்கள் ஆனார்கள். இலக்கியத்தையும் இலக்கணத்தையும் ஆண்டார்கள். சமஸ்கிருதம் ஊடுருவிய மொழியே வெற்றிநடை போட்டது.

    எனவே வியப்பென்ன? தொல்காப்பியர் வடமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவருக்குப்பின் சங்க இலக்கியத்தில் சிலவாக இருந்த வடசொற்கள், கடைச்சங்க நூலான திருக்குறளிலும் பின்னர் எழுந்த காப்பியமான சிலம்பிலும் மேலோங்கியது.

    அதுவே சாரநாதனாலும் ஜடாயு போன்றோராலும் பெருமையுடன் காட்டப்படுகிறது வடமொழியில்லாமல் தமிழில்லை என்ற நிலைநாட்டலுக்கு. தெற்கு தேய்ந்தது. வடக்கு வாழ்ந்தது.

    ஆனால் தொல்காப்பியருக்கு முன்னே நல்லிசைப்புலவர்கள் இருந்தார்கள் எனபதை தொல்காப்பியரே சொல்கிறார். அவர்கள் எழுதிய நூல்களை அடியொட்டிதான் தொல்காப்பியம் படைப்பதாக அவர் சொல்கிறார். எனவே தூய தமிழ் இருந்தது; தமிழர்கள் இருந்தார்கள்; அவர்களுக்கென்று சமயம் இருந்தது. பண்பாடு இருந்தது. அவற்றுக்கும் வடமொழி பார்ப்பனருக்கும் தொடர்பில்லை.

    அவர்கள் என்ன ஆனார்கள் ? எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் ?
    வடக்கில் பிறந்த ஒரு மொழி எப்படி தமிழ்மொழியை ஆதிக்கம் செய்தது? விடைகள் இல்லை. காண்பதும் அரிது. அன்னியரான வடபார்ப்பனர்களின் வழக்கங்களையே ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம். இப்போதும் கூட. இல்லையென்றால் சாரநாதன் “தொல்காப்பியரே வடமொழிபார்ப்பனர்” என்று சொல்லி தமிழர்கள் மூக்குகளை அறுத்து விடுவார். தமிழர்கள் என்றுமே வடபார்ப்பனர்கள் வழிவந்த பார்ப்பனர்களுக்கு அடிமைகள்தான். இதுவே நூற்றுக்கு நூறு உண்மை. சித்திரையே தமிழருக்கெல்லாம் புத்தாண்டு. ஏன்? வடபார்ப்பனர்கள் வழிவந்த பரம்பரை சொல்கிறது. நல்லவேளை! ஜெயலலிதா சித்திரையைப் புத்தாண்டு என்று மீண்டும் சொல்லி விட்டார்.

    சமஸ்கிருதம் வாழ்க. பிராமணர்கள். வாழ்க

  42. தொல்காப்பியத்திற்கு முன்பான நல்லிசை புலவர்கள் பாடிய பரி பாடல்கலயும் பாவம் இந்த வட மொழி பிராமணர்கள் விஷயம் தான் வருகிறது கூத்தன் – என்ன செய்வது.

    வட மொழி பிராமணர்கள் அணு குண்டு வைத்திருந்தார்கள். கத்தி கபடா சைக்கிள் செயின் சகிதம் கெட்ட வார்த்தை பேசிக்க கொண்டு வந்து தமிழ் மக்களை மிரட்டி அடிமை செய்தார்கள் – ச எவ்வளோ மோசம் இல்ல.

    பெருஞ்சொர்று உதியன் என்ற சேர மன்னரை பற்றி கேள்விப் பட்டதுண்டா . இவரை பற்றி ஒரு பரி பாடல் உண்டு அதில் இவர் பாண்டவ கௌரவ படைகளுக்கு mid day meals போட்டதாக செய்தி உண்டு.

    மகாபாரத போர் நடந்தது 3067 ஆம் ஆண்டு என்று தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த வட மொழி பிராமணர்கள் அப்போவே நுழஞ்சிட்டான்கப்பா

    தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கும் புராதன கலையான கரகாட்டம் என்பது முடன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணர் சிறை பிட்த்து செல்லப்பட்ட தனது மகனை காப்பற்ற வேடம் இட்டு இலயாட்டகா ஆடி மகனை மீட்டர் என்பது வரலாறு.

    கொண்டால் வண்ணா குடக் கூத்தா என்பது திவ்ய பிரபந்த பாசுரம். கிருஷ்ணருக்கு குடக் கூத்தன் என்று பெயர் உண்டு – குடம் கூத்து தான் கரகாட்டம் என்பது நான் சொல்லித் தெரியனுமோ

    நீங்க பேசும் வறட்டு பேச்செல்லாம் பெரியாரோட போச்சு – நீர் பேசறதை கேனயன் கூட கேக்க இப்ப ரெடியா இல்லை.c.i.t காலனி பக்கம் போங்க (ராத்திரி மட்டும்) சாவுகாசம மஞ்ச துண்டோட பேசிட்டு வாங்க

  43. \\\\அவர்கள் என்ன ஆனார்கள் ? எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் ?
    வடக்கில் பிறந்த ஒரு மொழி எப்படி தமிழ்மொழியை ஆதிக்கம் செய்தது? விடைகள் இல்லை. காண்பதும் அரிது.\\\\\

    அன்பர் கூத்தன், மேற்கண்ட வாசகப்படி ஸம்ஸ்க்ருதம் தமிழ்மொழியை ஆதிக்கம் செய்தது என்பதற்கு சரித்ரபூர்வ ஆதாரம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா? அப்படியானால்,

    \\\\\தொல்காப்பியர் காலத்திற்குமுன்பே சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் நுழைந்த வடபார்ப்பனர்கள் கொண்டுவந்து விட்டார்கள்; வைதீகமதச்சடங்குகளோடு சமஸ்கிருதம் தொல்பழந்தமிழர் மதத்தையும் வாழ்க்கையையும் கீழே தள்ளி மேலேறியது. \\\

    என்ற மேற்கண்ட வாசகமும் ஊகத்தினடிப்படையினாலானது என்பதே தகுமா?

    சித்திரை தான் தமிழரின் முதல் மாதம் என்பதற்கு தமிழ் நூற்களின் அடிப்படையில் மேலே ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் நீங்கள் எவற்றை மறுக்கிறீர்கள்? அல்லது தை தான் தமிழரின் முதல் மாதம் என்பதற்கு தொல் தமிழ் நூற்களின் படி தங்கள் ஆதாரங்கள் என்ன என்று பகிர்ந்தால் எல்லோருக்கும் பயனாயிருக்குமே மாற்றுக்கருத்தில் உள்ள கருத்தாழங்களை அறிய.

  44. அன்புள்ள கூத்தன்,

    தமிழர்களின் புத்தாண்டு கணக்குகள் வானவியலுடன் தொடர்புடையது. எனவே, சித்திரை ஒன்றாம் நாள் என்பதே இப்போதும் , எப்போதும் சரியானது. பல பொய்யர்களின் கருத்தினை படித்துவிட்டு, தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

    நீங்கள் கூறும் வடபார்ப்பனர்கள் எப்போது புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ? பார்ப்பனர்கள் புத்தாண்டு என்று ஒன்றும் கிடையாது.

    நமது அண்டை மாநிலமான ஆந்திரத்தில் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடும் சந்திரமானம் என்ற கணக்குப்படி , உகாதி என்ற புத்தாண்டு சுமார் மார்ச் மாதம் 21 அல்லது 22 தேதிகளில் ஆரம்பமாகிறது. அம்மாநிலமக்கள் முழுவதும் அந்த நாளையே புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். இது மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்.அந்த மாநில பார்ப்பனர்கள் அந்த புத்தாண்டையே கொண்டாடுகின்றனர்.

    பிற மாநிலங்களில், சூரியனை ( கதிரவனை) அடிப்படையாக வைத்து, சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், பஞ்சாப், அரியானா, ஒரிஸ்ஸா, டெல்லி, இமாச்சலப்பிரதேசம், ஆகிய பகுதிகளில் புத்தாண்டு சூரியனை அடிப்படையாக கொண்டதால், சவுரமானம் எனப்படும். இந்த மாநிலங்களில் வாழும் அனைத்து மக்களும், சித்திரை ஒன்றாம் நாளையே புத்தாண்டு தினமாக கொள்கின்றனர். இந்த மாநில பார்ப்பனர்களுக்கும் இதுவே புத்தாண்டு.

    நீங்கள் சொல்வது போல, வட பார்ப்பனர்கள் என்று ஒரு இனம் இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால், அவர்கள் இந்தியா முழுவதும் தனியான ஒரு புத்தாண்டை கொண்டாடி இருந்திருப்பார்கள். எனவே, இதுபோன்ற பொய்யர்களின் பொய் பிரச்சாரத்தை நம்பி ஏமாறாதீர்கள்.

    இராவணன் ஒரு கேடு கெட்ட பார்ப்பான். அந்த கேடு கெட்டவனை , அவன் பிராமண குலத்தை சேர்ந்தவன் என்பதால் , யாரும் அவனை சிறப்பிக்க மாட்டார்கள். அவன் பிறன் மனை கவர்ந்த ஒரு பேடி. அவனை, எந்த பார்ப்பானும் வணங்கமாட்டான். இராமன் ஒரு சத்திரியன். அவனையே எல்லோரும், ( பார்ப்பனர்களுட்பட ) தெய்வமாக கருதுகிறார்கள். ஏனெனில், இராமன் பிறன்மனை நோக்கா பெருந்தகையாளன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிக்கு உதாரணமாய் இருந்தவன்.

    எனவே, சாதிகளுக்கும், புத்தாண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. புத்தாண்டு என்பது, எல்லா சாதியினருக்கும் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்று தான். வட பார்ப்பனர்களுக்கோ, தென் பார்ப்பனர்களுக்கோ , தனியாக ஒரு புத்தாண்டு கிடையாது. ஏனெனில், பார்ப்பனர் என்பது ஒரு தனி இனமல்ல. நம்மில் வன்னியர், தேவர், செட்டியார் என்று இருப்பது போல அவர்களும் கூத்தனைப்போல ஒரு தமிழினத்தவரே.

  45. மிக்க நன்றி. இது போன்ற சிறந்த அறிவியல் தொடர் அளித்தமைக்கு தமிழ் இந்துவுக்கும் , கட்டுரைஆசிரியர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கும் உளங்கனிந்த பாராட்டுக்கள்.

    சமண முனிவர்கள் வைத்த ஆண்டுப்பெயர்களை வடமொழிப்பெயர் என்று பொய் சொல்லி திரியும் இந்த திருடர் கூட்டத்தை என்ன சொல்ல? மொத்தத்தில் இவர்கள் இழிபிறவிகளே.

  46. பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ..

    இந்த 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா ? தமிழில் பெயரே இல்லை?இது எப்படி தமிழ் புத்தாண்டு என்று ஏற்று கொள்வது??

  47. அன்புத்தம்பி கோபிநாத் அவர்களே,

    தங்கள் பெயர் தமிழா? இல்லை.
    பெயர்கள் ஒரு அடையாளத்திற்காக மட்டுமே. சன் டி வீ என்பது தமிழா? கருணாநிதி என்பது தமிழா? சு(ஸ்)டாலின் என்பது தமிழ்ப்பெயரா? எந்த உலகில் வாழ்கிறீர்கள் தம்பி ?

    உலகில் எல்லா மொழிகளும் ஆண்டுகள் செல்ல செல்ல மாறிவருகின்றன. இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் , ஷேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலத்தில் தற்போது நடத்தப்படுவதில்லை. நவீன கால ஆங்கிலத்தில் (modern english usage- H W FOWLER) தான் நடத்தப்படுகின்றன. இது போன்ற மாற்றங்கள் எல்லா மொழிகளிலும் தவிர்க்க முடியாதது. காலத்தின் கட்டாயம். இதே சுட்டியில் பல நண்பர்கள் தெரிவித்திருப்பதைப்போல , இந்த ஆண்டுகளின் பெயர்கள் சமண மதத்தவர்களால் சூட்டப்பட்டவை ஆகும். சமணர்கள் மஞ்சளாருக்கு வேண்டியவர்கள் தான். சித்திரை முதல் நாள் தான் தமிழர் புத்தாண்டு ஆகும்.

    உலகமே ஒரு குடும்பம் என்று ஆகி வருகிறது. இன்றைய தமிழன் சப்பானிலும், கொரியாவிலும், பாரிசிலும், லண்டனிலும், செருமனி , அமெரிக்கா , ஆஸ்திரேலியா என்று உலகின் பல மூலைகளிலும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பிறருடன் தொடர்பும் , பிற மொழிகளின் அறிவும் அவசியம். மஞ்சளாரின் பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் , உலகில் பல நாடுகளில் சென்று வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ளும் அளவுக்கு , பல்மொழி அறிவு பெற்று திகழ்கிறார்கள்.

    நீங்களே , தமிழில் புதியதாக இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர் சூட்டுங்களேன். வரவேற்போம். ஆனால், புத்தாண்டு என்பது, மேட ராசியில் கதிரவன் புகும் காலக்கணக்கு. இது அறிவியல் பூர்வமானது. நீங்கள் என்ன பெயரிட்டு அழைத்தாலும் இந்த நாள் மட்டும் மாறாது. பெயர்களை நாம் மாற்றிக்கொள்ளலாம். கணக்கு என்றும் மாறுவது கிடையாது.

  48. https://puthu.thinnai.com/?p=37190

    தமிழ் நண்பர்களே

    ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன
    இருமாங் கனிகள் !
    தைத் திங்கள் தமிழாண்டு
    தப்புத் தாளம் ஆனது !
    சித்திரை மாதத் தமிழாண்டு
    புத்துயிர் பெற்றது !
    ஆண்டு தோறும் நேரும்
    குருச்சேத்திர
    யுத்தம் ஓய்ந்திடுமா ?
    ++++++++++
    தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர், திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் நிகழும் தலைவலியாய் ஆகிவிட்டது. தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது. இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது. அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் ! அல்லது தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் !
    இந்த தீரா பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ?
    இரண்டு வழிகள் உள்ளன.

    சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு
    தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

    தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.

    இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான். இவற்றில் புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம்,
    நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம்.

    தமிழக நாட்காட்டிகள், 60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.

    ​தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு].

    திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம். ​ [என் ஊகிப்பு].

    இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி, தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும்.

    இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.

    யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.

    60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம்.

    எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை. ​

    ​கனிவுடன்,
    சி. ஜெயபாரதன், கனடா​

    ​++++++++++++++++​
    தகவல் :

    1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

    2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

    3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

    4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

    5. https://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

    6. https://en.wikipedia.org/wiki/Puthandu

    7. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    +++++++++++++++

    வரலாறு
    இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.

    எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]

    வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]

    தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
    தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]

    2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.

    +++++++++++++++

    தமிழர் அறுபதாண்டு அட்டவணை

    எண். பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) கிரகோரி ஆண்டு எண். பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) கிரகோரி ஆண்டு

    01. பிரபவ சங்க முதல்ஆண்டு Prabhava 1987–1988 31. ஹேவிளம்பி திவாகரர்ஆண்டு Hevilambi 2017–2018
    02. விபவ ஔவையார்ஆண்டு Vibhava 1988–1989 32. விளம்பி அருணகிரிஆண்டு Vilambi 2018–2019
    03. சுக்ல திருவள்ளுவர்ஆண்டு Sukla 1989–1990 33. விகாரி தியாகராஜர்ஆண்டு Vikari 2019–2020
    04. பிரமோதூத புத்தர்ஆண்டு Pramodoota 1990–1991 34. சார்வரி ஜி.யூ. போப்ஆண்டு Sarvari 2020–2021
    05. பிரசோற்பத்தி தொல்காப்பியர்ஆண்டு Prachorpaththi 1991–1992 35. பிலவ கட்டப் பொம்மன்ஆண்டு Plava 2021–2022
    06. ஆங்கீரச நக்கீரர்ஆண்டு Aangirasa 1992–1993 36. சுபகிருது வீரமாமுனிஆண்டு Subakrith 2022–2023
    07. ஸ்ரீமுக இளங்கோஆண்டு Srimukha 1993–1994 37. சோபகிருது கால்டுவெல்ஆண்டு Sobakrith 2023–2024
    08. பவ கண்ணகிஆண்டு Bhava 1994–1995 38. குரோதி தாயுமானர்ஆண்டு Krodhi 2024–2025
    09. யுவ மணிமேகலைஆண்டு Yuva 1995–1996 39. விசுவாசுவ நாயக்கர்ஆண்டு Visuvaasuva 2025–2026
    10. தாது சாத்தனார்ஆண்டு Dhaatu 1996–1997 40. பரபாவ குமர குருபரர்ஆண்டு Parabhaava 2026–2027
    11. ஈஸ்வர கம்பர்ஆண்டு Eesvara 1997–1998 41. பிலவங்க ஆறுமுக நாவலர் ஆண்டு Plavanga 2027–2028
    12. வெகுதானிய ஒட்டக்கூத்தர்ஆண்டு Bahudhanya 1998–1999 42. கீலக குமரிஆண்டு Keelaka 2028–2029
    13. பிரமாதி ஆழ்வார்கள்ஆண்டு Pramathi 1999–2000 43. சௌமிய திருத்தணிஆண்டு Saumya 2029–2030
    14. விக்கிரம சித்தர்கள்ஆண்டு Vikrama 2000–2001 44. சாதாரண காந்தியார்ஆண்டு Sadharana 2030–2031
    15. விஷு ஆண்டாள்ஆண்டு Vishu 2001–2002 45. விரோதகிருது காமராசர்ஆண்டு Virodhikrithu 2031–2032
    16. சித்திரபானு ஜெயங்கொண்டார்ஆண்டு Chitrabaanu 2002–2003 46. பரிதாபி இராஜாஜிஆண்டு Paridhaabi 2032–2033
    17. சுபானு பெருந்தேவனார்ஆண்டு Subhaanu 2003–2004 47. பிரமாதீச பரிதிமால்ஆண்டு Pramaadhisa 2033–2034
    18. தாரண திருத்தக்கர்ஆண்டு Dhaarana 2004–2005 48. ஆனந்த சிதம்பரனார்ஆண்டு Aanandha 2034–2035
    19. பார்த்திப வளையாபதிஆண்டு Paarthiba 2005–2006 49. ராட்சச பாரதியார்ஆண்டு Rakshasa 2035–2036
    20. விய சேக்கிழார்ஆண்டு Viya 2006–2007 50. நள பாரதிதாசன்ஆண்டு Nala 2036–2037
    21. சர்வசித்து பூங்குன்றனார்ஆண்டு Sarvajith 2007–2008 51. பிங்கள பெரியார்ஆண்டு Pingala 2037–2038
    22. சர்வதாரி நாலடியார்ஆண்டு Sarvadhari 2008–2009 52. காளயுக்தி அண்ணாதுரைஆண்டு Kalayukthi 2038–2039
    23. விரோதி முத்தொள்ளாயிரம்ஆண்டு Virodhi 2009–2010 53. சித்தார்த்தி வரதராசர்ஆண்டு Siddharthi 2039–2040
    24. விக்ருதி அப்பர்ஆண்டு Vikruthi 2010–2011 54. ரௌத்திரி மறைமலையார்ஆண்டு Raudhri 2040–2041
    25. கர சுந்தரர்ஆண்டு Kara 2011–2012 55. துன்மதி கல்யாண சுந்தரர் ஆண்டு Dunmathi 2041–2042
    26. நந்தன சம்பந்தர்ஆண்டு Nandhana 2012–2013 56. துந்துபி விசுவநாதம்ஆண்டு Dhundubhi 2042–2043
    27. விஜய வாசகர்ஆண்டு Vijaya 2013–2014 57. ருத்ரோத்காரி கண்ணதாசன்ஆண்டு Rudhrodhgaari 2043–2044
    28. ஜய வில்லிபத்தூரார்ஆண்டு Jaya 2014–2015 58. ரக்தாட்சி அப்துல் கலாம் ஆண்டு Raktakshi 2044–2045
    29. மன்மத புகழேந்திஆண்டு Manmatha 2015–2016 59. குரோதன இளையராசர்ஆண்டு Krodhana 2045–2046
    30. துன்முகி பட்டினத்தார்ஆண்டு Dhunmuki 2016–2017 60. அட்சய ரகுமான்ஆண்டு Akshaya 2046–2047

    தகவல் :

    1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

    2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

    3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

    4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

    5. https://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

    6. https://en.wikipedia.org/wiki/Puthandu

    7.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    +++++++++++++++

    நூலுதவி :

    தமிழ் இலக்கிய வரலாறு – டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய அக்காதெமி வெளியீடு [2003]
    தமிழ் இலக்கிய வரலாறு -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]

    +++++++++++++

  49. ///அன்பின் திரு. ஜெயபாரதன்,

    உங்கள் அண்மைக் கட்டுரையில் நான் கொடுத்துள்ள தகவல்கள் காணோம். எஸ். ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ இவர்கள் கட்டுரைக் கருத்துகளே உள்ளன.

    திமுக கட்சி எல்லாம் பிறப்பதற்கு முன்பே திருவள்ளுவர் ஆண்டு என பொங்கல் திருநாளை தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். இது பழைய வேத வழக்கத்திலும் உள்ளதுதான்.

    காட்டாக, உலகின் ஒரே ஹிந்து நாடாகிய நேப்பாளத்தில் தைப் பொங்கல் திருநாள் புத்தாண்டு தினம் என்ற வழக்கம் உண்டு.

    இதனையும் குறிப்பிட்டால் தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு தெளிவு கிடைக்கும்.

    தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் புத்தாண்டு. தமிழர்க்கு பிரபவ, விபவ, … என்னும் சுழல் ஆண்டும்,
    திருவள்ளுவர் ஆண்டு என்னும் தைத்திங்கள் தொடர் ஆண்டும் இருக்கின்றன.

    நா. கணேசன்////

    நண்பர் நா. கணேசன்,

    சித்திரை தமிழாண்டின் முதல் துவக்க மாதம். சங்க காலம் முதலாய், தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரை மாதமே தமிழாண்டின் துவக்கம்.

    அதற்கு ராக்கெட் சையன்ஸ் தேவையில்லை.

    தை மாதம் எந்த யுகத்திலும் தமிழாண்டின் துவக்க மாதமாய் வரலாற்று நூல்களில் எழுதப் படவே இல்லை. அப்படிப் பூர்வீகத் தமிழர் எப்போதும் பின்பற்றவும் இல்லை.

    இதற்கு மாறாய்த் தை மாதமே தமிழாண்டின் முதல் என்று உறுதிப் படுத்த நேபாளத்தைக் காட்டி ஒப்புதல் சொல்வது வேடிக்கையாய் உள்ளது.

    ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகச் சித்திரை மாதம் முதல் தேதி தமிழரின் தமிழாண்டு துவக்கம். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டு என்றும் பெயர் சொல்லலாம். அத்துடன் அறுபது ஆண்டு மீள்சுற்றில் எந்தப் பெயருடனும் வைக்கலாம்.

    அப்படிச் செய்தால் திமுக, அதிமுக அரசாங்கப் பதவி ஏற்கும் போது மாற்றி மாற்றி மோதி முட்டிக் கொள்ள வேண்டாம்.

    அமெரிக்காவில் சுகமாக இருந்து கொண்டு, தை மாதத் துவக்கத் தமிழாண்டைப் புகுத்தி, மீண்டும் ஆரிய -திராவிடர் பிளவுச் சண்டையைக் கிளரத் தூண்டாதீர். ஊழல் நிரம்பிய திமுக / அதிமுக அரசுகளுக்குக் கொம்பைக் கூர்மையாக்கக் கத்தியைத் தீட்டாதீர்.

    சித்திரை முதல் நாள் தமிழாண்டுப் பிறப்பு என்பது தமிழரிடையே ஒருமைப்பாட்டை என்றும் நிலைநாட்டும். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகக் கோயில்களில், வாடிக்கையாய்ப் பருவ கால விளைவு வாசிப்பைக் கேட்போர் 60% – 75% தமிழர் ஆண்டு தோறும் அரங்கேற்றி வருகிறார்.

    சி. ஜெயபாரதன்

  50. //தங்கள் பெயர் தமிழா? இல்லை.
    பெயர்கள் ஒரு அடையாளத்திற்காக மட்டுமே. சன் டி வீ என்பது தமிழா? கருணாநிதி என்பது தமிழா? சு(ஸ்)டாலின் என்பது தமிழ்ப்பெயரா? எந்த உலகில் வாழ்கிறீர்கள் தம்பி ?//

    அத்விகாவின் பதில் தொடர்பே இல்லாததது. அவர் கேட்டது ஆண்டுகள் பெயர்கள் ஏன் ஒன்றுகூட தமிழில் இல்லை?

    பதில்:
    ஸ்டாலின், கருநாநிதி இவர்கள் பெயர்கள் தமிழா? (அவர்களா வந்து இங்கு எழுதினார்கள்? கோபிநாத்தானே கேட்கிறார்?)

    கோபிநாத் என்றால் தமிழா? (தனக்குத்தானே ஒருவர் பெயர் சூட்டிக்கொள்ள முடியாது. அவர் பெயர் வேறுமொழியில் இருந்தால் அவருக்குத் தமிழ்ப்பற்று இருக்க கூடாதா?); சேக்ஸ்பியரின் ஆங்கிலம் எப்படி உருமாறியது. ஃபவுளர் என்ன சொன்னார்? புலம்பெயர்ந்தால் தமிழும் மாறவேண்டும். நீங்களே ஏன் ஆண்டுகளுக்குப் பெயர்களைச் சூட்டிக்கொள்ளக்கூடாது? இவையெல்லாம் பதிலா?

    ஏன் ஆண்டுகளுக்குப் பெயர்கள் தமிழில் இல்லை? என்ற கேள்விக்கு, உணர்ச்சிகரமான பதில் நேரவிரயம். அறிவுப்பூர்வமாக, ஆராயந்த பதிலைத் தாருங்கள்.

  51. தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது. அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.

    அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் “சித்தெறும்பும்” கூறும்.

    சி. ஜெயபாரதன்.

  52. தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2018

    இந்த பக்கம் தமிழ்நாட்டிற்கான 2018 வங்கி விடுமுறை நாட்களின் காலெண்டரைக் கொண்டுள்ளது.

    தேதி தினம் விடுமுறை

    1 ஜனவரி திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
    14 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
    15 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
    26 ஜனவரி வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
    18 மார்ச் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு
    29 மார்ச் வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
    30 மார்ச் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
    14 ஏப்ரல் சனிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
    14 ஏப்ரல் சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு
    1 மே செவ்வாய் மே தினம்
    15 ஜூன் வெள்ளிக்கிழமை ரம்ஜான்
    15 ஆகஸ்ட் புதன்கிழமை சுதந்திர தினம்
    22 ஆகஸ்ட் புதன்கிழமை பக்ரீத்
    3 செப்டம்பர் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
    13 செப்டம்பர் வியாழக்கிழமை விநாயக சதுர்த்தி
    21 செப்டம்பர் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை
    2 அக்டோபர் செவ்வாய்கிழமை காந்தி ஜெயந்தி
    18 அக்டோபர் வியாழக்கிழமை ஆயுத பூஜை
    19 அக்டோபர் வெள்ளிக்கிழமை விஜய தசமி
    6 நவம்பர் செவ்வாய்கிழமை தீபாவளி
    21 நவம்பர் புதன்கிழமை மீலாதுன் நபி
    25 டிசம்பர் செவ்வாய்கிழமை கிருஸ்துமஸ்

  53. திருவள்ளுவர் தொடராண்டு தைத்திங்கள் பொங்கல் புத்தாண்டாக பல ஆண்டுகளாய்ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இனி மாறாது.

    சித்திரைப் புத்தாண்டு சுழலாண்டு. ஜாதகம், ஜோசியம்,திருக்கோவில்கள், … இவற்றுடன் தொடர்புடையது. மாதங்களின் பெயர்களை விளக்கியவர்தொல்காப்பியர். அவரைப் பற்றிப் பொதுமக்கள் பலருக்கும் தெரியாது.

    இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வெளியே தொல்காப்பியரைப் பற்றிக் கேட்டவர்கள்மிகக் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். பொருள் இலக்கணம் சம்ஸ்கிருதத்தில்இல்லை, முதலில் தமிழில்தான் தொல்காப்பியர் எழுதினார். பின்னர் பல நூற்றாண்டு கழிந்தபின் ஆனந்தவர்தனரின் த்வன்யாலோகம் ஏற்படுகிறது.

    திருவள்ளுவர் தொடர்ஆண்டு தைப்பொங்கல் புத்தாண்டு என அறிஞர்கள்
    அறிமுகப்படுத்தி அரசும் செயல்படுத்திவருகிறது.

    தொல்காப்பியர் திருநாள் என சுழலாண்டு (60 வருஷ சுழற்சி) சித்திரைப் புத்தாண்டு தினத்தில் கொண்டாடலாம். அவர்தான் தமிழ் மாதப் பெயர்களை அறிமுகப்படுத்துகிறவர்.

    இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையை அனுப்புகிறேன்.இணையத்திலும் கிடைக்கும். திரு. பென்னேசுவரன் டில்லியில் நடத்திய வடக்குவாசல் இதழில் வெளியான கட்டுரை.

    நடைமுறையில் திருவள்ளுவர் தொடர்ஆண்டின் புத்தாண்டு தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு சுழலாண்டுக்காகவும் உள்ளது.

    நா. கணேசன், டெக்சஸ், யூ.எஸ்.ஏ

  54. S. Jayabarathan

    1:05 PM (2 minutes ago)

    to vallamai, மின்தமிழ், tamilmantram, vannan, vaiyavan

    It is an Academic & HISTORICAL insult, done by DMK & SOME OTHER TAMIL SCHOLARS to the Great Thiruvalluvar, USING HIS NAME FOR A FORGERY & CONTROVERSIAL THAI MONTH TAMIL YEAR which was not EVEN accepted by ADMK AND A LOT MORE TAMIL READERS IN THE WORLD.

    FORGERY THIRUVALLUVAR TAMIL YEAR was not at all a HONOUR TO THIRUVALLUVAR.

    S. Jayabarathan

  55. சூரியனின் சுற்றுப்பாதையில் மேடத்தில் நுழையும் நாளே வருட முதலாக வரவேண்டும் என்பதற்கும் , தை முதல் நாளில் ஏன் வரக்கூடாது? என்பதற்கும் அறிவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படவில்லை! இவ்வளவு பெரிய கட்டுரையும் வீண் என்றே தெரிகின்றது. தை முதல் நாளில் சூரியன் தெற்கு (பூமியிலிருந்து பார்க்கையில்) நோக்கிய நகர்வு முடிந்து அதாவது தட்சிணயனம் முடிந்து உத்தராயணம் ஆரம்பிக்கும் நாள். அந்த நாளில் முதல் வருடம் ஆரம்பித்தாலும் தவறில்லையே! மாதங்களின் பெயர்கள் சந்திர நகர்வை அனுசரித்துச் சூட்டப்பட்டவை! ஆனால் நமது தமிழ் மாதங்கள் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளை அடிப்படையாகக் கொண்டவை! சித்திரை முதல் நாள் புத்தாண்டு என்று வைக்கப் பட்டதற்குக் காரணம் அது ஒரு காலத்தில் சம இரவு நாளாக இருந்திருக்கக் கூடும் என்பதே உண்மை! ஆகச் சித்திரை முதல் நாள் எவ்வளவு முக்கியத்துவமோ? அதே அளவு முக்கியத்துவம் தை முதல் நாளுக்கும் உண்டு என்பது உண்மை! கட்டுரையின் நோக்கம் திராவிடக் கட்சிகளைத் தூற்றுவதில் குறியாக உள்ளது!தை முதல் நாளும் பரிசீலிக்கத் தக்கதே என்பதை எந்த இடத்திலும் கூறவில்லை! ஆகவே, கட்டுரையை நடு நிலையானது என்று எடுத்துக் கொள்ள இயலவில்லை! என் பெயர் தமிழ் பெயர்தான்! இதுவும் வடமொழி மூலத்தைக் கொண்டது என்று நிரூபிக்க முயல வேண்டாம்! அத்தோடு நான் திமுகக் காரனும் அல்ல! உண்மை தெரிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே கொண்டவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *